சிறீலங்கா அரசு
த
மிழ் மக்களுக்கு எதிராக மேற்கொண்டுவரும் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) நடைப்பயணம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மூன்று மைல் தூரம் மேற்கொள்ளப்பட்ட இந்த நடைப்பயணத்தில் 500 இற்கு மேற்பட்ட மக்கள்
கலந்து
கொண்டிருந்தனர். இனப்படுகொலையில் இருந்து தப்பியவர்களை சந்திக்கவும், அவர்களின் கதைகளை கேட்பதற்குமான ஏற்பாடுகளையும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் மேற்கொண்டிருந்தனர். டாபர் பகுதிக்கான கூட்டமைப்பு, போதும் திட்ட அமைப்பு, இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன இந்த நிகழ்வில் முக்கிய பங்கு வகித்திருந்தன. புதிய அமெரிக்க அமைப்பை சேர்ந்த றெபேக்கா ஹமில்ட்டன், போதும் திட்டஅமைப்பின் ஆலோசகர் ஓமார் இஸ்மயில் ஆகியோர் அங்கு முக்கிய உரையாற்றியிருந்தனர். டாபர், சிறீலங்கா, சாட் ஆகிய நாடுகளில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள் தொடர்பில் அதிக கவனங்கள் செலுத்தவேண்டும் என ஹமில்ட்டன் தனது உரையில் தெரிவித்துள்ளார். இனப்படுகொலைக்கு எதிரான அமைப்பின் சார்பாக 25 தமிழ் மக்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். சிறீலங்காவின் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் காங்கிரஸ் சபை நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என கோரி நடைப்பயணத்தின்போது கையெழுத்துக்களும் சேகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.