பக்கங்கள்

31 ஜூலை 2014

கத்தி வெளிவர தமிழ்த் தலைவர்களை சந்திக்கும் முருகதாஸ்!

கத்தி படம் சுமூகமாக வெளிவர வேண்டும் என்று கோரி தமிழ் இயக்கத் தலைவர்கள் நெடுமாறன், வைகோ, சீமான், திருமாவளவன் போன்றவர்களைச் சந்தித்து சமரசம் பேசி வருகிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். விஜய் நடிக்கும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அவர்களுக்கு துணையாக அய்ங்கரன் நிறுவனம் செயல்படுகிறது. லைக்கா நிறுவனத்துக்கு இது முதல் தமிழ்ப் படம் கிடையாது. ஏற்கெனவே வேறு பெயரில் பிரிவோம் சந்திப்போம் என்று படமெடுத்தார்கள். கரு பழனியப்பன், சேரன் போன்றவர்கள் அதற்கு உதவியாக இருந்தார்கள்.இப்போது நேரடியாக லைக்கா புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் படமெடுக்க ஆரம்பித்துள்ளனர். லைக்கா நிறுவனம் இலங்கை அதிபரும் பல்லாயிரம் தமிழர்களைக் கொன்றழித்தவருமான மகிந்த ராஜபக்சேவுடன் மிக நெருக்கமாக செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் விமான சேவைக்கு ராஜபக்சேதான் அனுமதி அளித்தார். ராஜபக்சேவின் மருமகன் இந்த நிறுவனத்தின் முக்கிய பங்குதாரர். இப்படிப்பட்ட தொடர்புகளைக் கொண்ட லைக்கா நிறுவனத்தின் படத்தில், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறிக் கொள்ளும் விஜய் நடிப்பதாக செய்தி வெளியானதுமே கடும் எதிர்ப்புகள் கிளம்பின. தமிழ் உணர்வாளர்கள், தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். படத்தை வெளியிடக் கூடாது என்றும், மீறி வெளியிட்டால் பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும், திரையரங்குகள் முன் போராட்டம் நடத்துவோம் என்றெல்லாம் மாணவர் அமைப்புகள் எச்சரித்துள்ளன. தயாரிப்பாளர் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம் போன்ற அமைப்புகளுக்கு கடிதங்களும் அளித்துள்ளன. இப்போது கத்தி படம் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகிறது. ஆனால் இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் படத்தை வெளியிட விநியோகஸ்தர்களும், திரையரங்குகளும் தயக்கம் காட்ட ஆரம்பித்துள்ளன. இதனால் படத்தை வெளியிட சுமூகமான சூழலை உருவாக்கும் வேலையில் மும்முரமாகியுள்ளார் முருகதாஸ். அவரும் அய்ங்கரன் கருணாவும் சேர்ந்து தமிழ் இயக்கத் தலைவர்களைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.சமீபத்தில் பழ நெடுமாறன், திருமாவளவன் மற்றும் சீமானைச் சந்தித்துப் பேசியுள்ளனர். அடுத்து வைகோவைச் சந்திக்கப் போவதாகக் கூறியுள்ளனர். லைக்கா நிறுவனத்துக்கும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தத் தலைவர்களிடம் விளக்கி வரும் முருகதாஸும் கருணாவும், படம் தீபாவளிக்கு சிக்கலின்றி வெளிவர உதவுமாறு கோரி வருகின்றனர்.

மனைவியை படுகொலை செய்து தானும் தற்கொலை!

குடும்பத் தகராறு காரணமாகத் தனது மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற ஒருவர் தனது மாமன் மாமியையும் வெட்டிக் காயப்படுத்திவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் வவனியா மாகாரம்பைக்குளத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் ரா.அமுதா (வயது-38) என்பவர் வெட்டிப் படுகொலை செய்ப்பட்டுள்ளார். இவரது சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வீ.வெள்ளைச்சாமி (வயது-65), இவரது மனைவியான வெ.கிருஸ்ணவேணி(வயது-55) ஆகிய இருவரும் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதேவேளை தனது மனைவியை கோடரியால் வெட்டி படுகொலை செய்து, மாமன் மாமியையும் படுகாயப்படுத்தினார் என்று சந்தேகிக்கப்படுபவரான செ.ராசேந்திரன் (வயது-45) என்பவர் தனது வீட்டுக்கு மூன்று கிலோ மீற்றர் தொலைவில் காத்தார் சின்னக்குளம் பகுதியில் மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். சடலத்தை வவுனியா பொலிஸார் மீட்க நடவடிக்கை எடுத்துவருகின்றனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் நடத்திவருகின்றனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

30 ஜூலை 2014

சுன்னாகத்தில் வர்த்தகர் மீது வாள்வெட்டு!

சன நடமாட்டம் மிக்க சுன்னாகம் நகரப் பகுதியில் வர்த்தகர் ஒருவர் இனந்தெரியாதோரால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டார். இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்றது. சம்பவத்தில் இளவாலை பொலிஸ் நிலைய வீதியைச் சேர்ந்த இராஜரத்தினம் இராஜகுமார்(வயது - 37) என்பவரே படுகாயமடைந்து தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- சுன்னாகம் நகர்ப் பகுதியில் வர்த்தக நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் தனது கடையைப் பூட்டிவிட்டு நேற்று இரவு 9 மணியளவில் காங்கேசன்துறை வீதியில் நடந்து சென்றுள்ளார். இதன்போது முகத்தை துணியால் மூடிக் கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், அவரை வாளால் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றுள்ளனர். சுன்னாகத்தில் உள்ள சிறீலங்கா பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

29 ஜூலை 2014

தீவகத்தில் சிறுவர்கள் மீது பொலிஸ் தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் திருட்டுக் குற்றச்சாட்டில் கைதான இரு சிறுவர்கள் காவல்துறையின் தாக்குதலுக்கு இலக்காகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் குறித்த இரு சிறுவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நயினாதீவுப்பகுதியில் வைத்து காணாமல்போன பொருள் ஒன்றைத் திருடியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களுகம் யாழ். சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் ஊடாக சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்டு காவல்துறை கண்காணிப்பினில் வைக்கப்பட்டபோது இரு சிறுவர்களும் கடுமையாகத் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாகவும் அதனால் ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு சிகிச்சை பெறுவதற்காகவே இவர்களை வைத்தியசாலையில் சேர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நயினாதீவினில் அடாவடி செய்து வரும் நாகவிகாரையின் பிக்குவின் புகாரிலேயே சிறுவர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

ஐ.நா.வில் "கெலும் மேக்றே"சாட்சியமளிப்பார்!

இலங்கையில் மெக்ரே
இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் ஆவணப்படங்களை வெளியிட்டு இலங்கைக்கு அனைத்துலக மட்டத்தில் கடும் நெருக்கடிகளை ஏற்படுத்திய சனல் - 4 தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடகவியலாளர் கெலும் மெக்ரே, ஐ.நா. விசாரணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கவுள்ளார் என்று நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது என ஊடகச் செய்திகள் தகவல் வெளியிட்டன. இலங்கை மீதான விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் விசாரணைக்குழு தற்போது ஜெனீவாவில் சாட்சியங்களைத் திரட்டி வருகின்றது. இதன்போதே மெக்ரே சாட்சியமளிக்கவுள்ளார் எனவும் இதற்காக லண்டனிலிருந்து அவர் ஜெனீவா செல்லவுள்ளார் எனவும் தெரியவருகின்றது. தமது நிறுவனம் (சனல் - 4) வெளியிட்ட போர்க்குற்ற ஆதாரங்களின் நம்பகத்தன்மை, அதன் பின்னணி உட்பட மேலும் பல விடயங்களை ஐ.நா. விசாரணைக் குழுவின் முன்னிலையில் கெலும் மெக்ரே தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. 'இலங்கையின் கொலைக் களம்', 'யுத்த சூனிய வலயம்' உள்ளிட்ட ஆவணப்படங்கள் மூலம் போர்க்குற்ற ஆதாரங்களை வெளிப்படுத்திய சனல் - 4 குழுவினர், கடந்த நவம்பர் மாதம் பொதுநலவாய மாநாட்டில் செய்தி சேகரிக்க வந்து வடக்குக்குச் சென்ற சமயம், அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டமையால் அவர்களது பயணம் இடைநடுவில் கைவிடப்பட்டது. மேலும் பல ஆதாரப் படங்கள் வெளியிடப்படும் என கெலும் மெக்ரே அப்போதுதெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, போர்க்காலத்தில் இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதான முயற்சிகளுக்கான அனுசரணையாளராகப் செயற்பட்ட எரிக் சொல்ஹெய்மும் ஐ.நா. குழுவின் முன் சாட்சியமளிக்கத் தயாராகி வருகின்றார். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸில் கூட்டத்தொடரில் கடந்த மார்ச் மாதம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் கடந்த 15ஆம் திகதி முதல் இலங்கை மீதான விசாரணையை ஐ.நா. குழு ஒஸ்லோவில் ஆரம்பித்தது. தற்போது இரண்டாம் கட்டமாக அநத விசாரணை ஜெனீவாவில் நடைபெறுகின்றது. குறிப்பாக, யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் வெள்ளைக்கொடி ஏந்தியபடி சரணடைய வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கூறப்படும் விவகாரம் பற்றி சாட்சியம் திரட்டுவதில் குறித்த குழு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

28 ஜூலை 2014

யாழ். பல்கலை வவுனியா வளாகத்தில் மாணவரிடையே மோதல்!

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் 2ஆம், 3ஆம் வருட மாணவர்களுக்கிடையே இன்று திங்கட்கிழமை காலை மோதல் ஏற்பட்டது. இரு மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட இந்த மோதலைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவருவதற்காக அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மோதல் சம்பவத்தில் மாணவி உட்பட மூவர் காயமடைந்தனர். இவர்கள் வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

27 ஜூலை 2014

இலங்கைப் பெண் கணவரால் குத்திக் கொலை!

குவைத்தில் இலங்கைப் பெண் ஒருவரை அவரது கணவர் பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். தனது கணவருக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்புள்ளதை அறிந்துகொண்டதை அடுத்தே குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து அந்த இடத்துக்கு பொலிஸார் விரைந்து சென்றுள்ளனர். அங்கு கொலையான பெண் இரத்த வௌ்ளத்தில் கிடந்ததை கண்ணுற்ற அவர்கள் கணவரிடம் வினவிய போது, யாரோ ஒரு பெண் அவரைக் கொலை செய்து விட்டதாகக் கூறியுள்ளார். பின்னர் இடம்பெற்ற தீவிர விசாரணைகளின் போது, தனக்கு பிறிதொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதை அறிந்த பின், தனது மனைவியுடன் முரண்பாடு ஏற்பட்டதை அடுத்து அவரைக் குத்திக் கொன்றதாக அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.

26 ஜூலை 2014

"மாறுதடம்"திரைப்படத்தை இடை நிறுத்தினர் பொலிசார்!

யாழ்.நகரிலுள்ள ராஜா திரையரங்கில் நேற்று மாலை 4.00 மணிக்கு காண்பிக்கப்பட்ட 'மாறுதடம்' திரைப்படம் இடைநடுவில் பொலிஸாரால் நிறுத்தப்பட்டுள்ளது. சினிமா திரையரங்கில் இவ்வாறான படங்களை காண்பிக்க முடியாது என்று தெரிவித்து படத்தை இடைநடுவில் பொலிஸார் நிறுத்தினர் என்று அந்தப் படத்தின் இயக்குநர் ரமணன் தெரிவித்ததாக செய்திகள் வெளி வந்துள்ளது. 'மாறுதடம்' திரைப்படம் புலம்பெயர் வாழ். மக்களின் பிரச்சினைகளையும் இலங்கையில் ஒற்றுமையையும் சமாதானத்தையும் மட்டுமே வலியுறுத்துகின்றது என்றும் அதில் எந்தவிதமான அரசியலும் புகுத்தப்படவில்லை என்றும் ரமணன் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்த நிலையில் உண்மையான காரணங்களின்றி திரையரங்கில் திரைப்படம் காண்பிக்க ஆரம்பித்த சமயம் அங்கு வந்த பொலிஸார் படத்துக்குத் தடை விதித்துள்ளனர்.இது குறித்து பொலிசாருடன் படக்குழுவினர் பேசி வருவதாக மேலும் அறிய
முடிகிறது.

காரைநகரில் சிறுமியை புலியுடைதரித்தவர் தூக்கிச்சென்றாராம்!

News Serviceகாரைநகர் முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் உடை அணிந்திருந்த நபரொருவர், சிறுமியை அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என்று காரைநகர் சம்பவத்துடன் புலிகளைத் தொடர்புபடுத்தி நேற்று நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார் சிறீலங்காவின் சிங்களப்பிரதமர் டி.எம். ஜயரட்ண. நாடாளுமன்றத்தில் நேற்று காரைநகர் சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்திய விசேட உரைக்குப் பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.ஜயரத்ன கூறியதாவது. "கடந்த 15ஆம் திகதி காலை 7 மணியளவில் பாடசாலைக்கு நடந்து சென்ற சிறுமியொருவரை காரைநகரிலுள்ள முருகன் கோயிலுக்கருகில் வைத்து புலிகளின் சீருடை போல் உடை அணிந்திருந்த நபரொருவர் அருகிலுள்ள காட்டுக்குள் தூக்கிச் சென்றுள்ளார். இதன்போது அங்கு வந்த(சிங்களப்படையினன்)கடற்படைச் சிப்பாய் இதனைக் கண்டுவிட்டு விசாரிக்க முற்பட்டபோது அந்நபர் சிறுமியை கைவிட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார். மகள் நேரகாலத்துடன் பாடசாலை விட்டு வந்தமை தொடர்பாக அதிபரிடம் தாயார் வினவியுள்ளார். தினமும் மகள் இவ்வாறு வருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், அச்சிறுமி அக்காலப்பகுதியில் பாடசாலைக்கு சமுகமளிக்கவில்லை என பாடசாலை அதிபர் கூறியுள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் அச்சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். வைத்தியசாலைப் பொலிஸார் ஊர்காவற்றுறைப் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர். நீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 9 கடற்படைச் சிப்பாய்கள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். எனினும், இரண்டுபேர் விடுமுறை எடுத்திருந்ததால் 7 பேரே அடையாள அணிவகுப்பில் உட்படுத்தப்பட்டனர். இவர்களில் எவரையும் சம்பந்தப்பட்டவர் அடையாளம் காட்டவில்லை. அதன்பின்னர் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரமே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதேவேளை, இதுபோல் பல சம்பவங்கள் இந்தியா உட்பட உலகெங்கும் தினமும் இடம்பெறுகின்றன. ஆனால், காரைநகரில் இடம்பெற்ற ஒரு சிறு சம்பவத்தை பெரிதுபடுத்தி சர்வதேசத்துக்கு காட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது'' என்று சிறீலங்கா பிரதமர் ஜயரட்ண தெரிவித்திருக்கிறார்.

25 ஜூலை 2014

முன்னாள் பெண் போராளிகள் நடத்தும் அரச சார்பற்ற நிறுவனம்!

முன்னாள் பெண் போராளிகள் அரச சார்பற்ற நிறுவனமொன்றை நடத்தி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்த அரச சார்பற்ற நிறுவனத்திற்கு கொழும்பிலும், கிளிநொச்சியிலும் அலுவலகங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் இந்த அரச சார்பற்ற நிறுவனம் இயங்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக சர்வதேச சமூகத்திடம் முன்வைக்கக் கூடிய பிழையான தகவல்களை இந்த அரச சார்பற்ற நிறுவனம் திரட்டி வருவதாகக் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. அண்மையில் கிளிநொச்சி வேராவில் இந்து வித்தியாலயத்தில் இவ்வாறு தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது. இந்த அரச சார்பற்ற நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்து வரும் முன்னாள் புலிப் போராளிகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைம்பெண்கள், ஊனமுற்றவர்கள், விவாகரத்தானவர்கள், சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் பற்றிய விபரங்களை திரட்டும் போர்வையில் இந்த அரச சார்பற்ற நிறுவனம் இயங்கி வருவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில் இந்த நிறுவனம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

24 ஜூலை 2014

கொன்சலிற்றா பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டாரா?

யாழ்.குருநகர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஜெரோம் கொன்சலிற்றா
பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். யாழ். குருநகர்ப் பகுதியியைச் சேர்ந்த ஜெரோம் கொன்சலிற்றா (வயது 23) கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி குருநகர் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கு பின்புறமாகவுள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிட்டுள்ள பெற்றோர், அது தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு ஏற்கனவே நடைபெற்றிருந்த நிலையில் மீண்டும் இன்று யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் பொ.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிவான், குறித்த பெண் நீரில் மூழ்கியே உயிரிழந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அதேவேளை, அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸாரை விசாரணை செய்து அடுத்த வழக்கு விசாரணையின் போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அடுத்த விசாரணை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 9ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

23 ஜூலை 2014

இறுதிக்கிரிகை நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட காயம்!உடலம் மருத்துவமனையில்!

இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட சடலமொன்று, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், தொண்டமனாறு பகுதியில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் கே.கஜநிதிபாலனின் உத்தரவிற்கமையே இந்த சடலம், யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இது பற்றி மேலும் தெரியவருவதாவது, தொண்டமனாறு, கொட்டியாங்காட்டுப் பகுதியினைச் சேர்ந்த துரைராசா சின்னராசா (வயது 55) என்பவர் நேற்று திங்கட்கிழமை (21) அதிகாலை உயிரிழந்துள்ளார். உயர்குருதி அமுக்க நோய் அவருக்கு இருந்த காரணத்தினால், அதனாலேயே அவர் உயிரிழந்துள்ளார் என நினைத்த உறவினர்கள், அவருடைய சடலத்தை வைத்தியசாலையில் ஒப்படைக்காமல் இறுதிச் சடங்குக் கிரியைகளை நேற்று (21) அவரது வீட்டில் நடத்தியுள்ளனர். இதன்போது, சடலத்தினைக் குளிப்பாட்டுகையில் சடலத்தின் முதுகில் காயங்கள் இருந்ததுடன், மர்மஉறுப்பு றப்பர் நூலினால் கட்டப்பட்டு இருந்ததுமையும் தெரியவந்தது. இதனையடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் கொண்ட உறவினர்கள், வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்கு இது தொடர்பில் தகவல் வழங்கினர். இந்நிலையில், பருத்தித்துறை நீதவானுடன் சம்பவ இடத்துக்கு வருகை தந்த வல்வெட்டித்துறைப் பொலிஸார் நீதவானின் உத்தரவிற்கமைய சடலத்தினை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைகளுக்காக ஒப்படைத்தனர்.

லண்டனில் தமிழ் மாணவன் அறிவுத்திறனால் பெற்ற வெற்றி!

News Serviceஇங்கிலாந்தில் ஐந்து லட்சம் மாணவர்கள் பங்குபற்றிய போட்டியில் முதலிடம் பெற்று 150,000 பவுண்ட்ஸ் பரிசுத்தொகை பெற்று ஈழத்தாய் திருனாட்டுக்கு பெருமை சேர்த்த இளவல் குறிஞ்சிகன்! வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ரமேக்ஷ் தனலக்ஷ்மி தம்பதிகளின்புதல்வன் செல்வன் குறிஞ்சிகன் ஒன்பது வயதுடையவர். இவர் பிரித்தானியாவில் பீச்சோம் ஆரம்பப் பாடசாலையில் (Beecholme Primary School) நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகின்றார். அங்கு பிரித்தானிய எரிவாயு (British Gas) நிறுவனத்தால் ஒழுங்கு செய்யப்பட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற பசுமை பேணல் சம்பந்தமான பசுமை வீடு கட்டுதல் , வீடு வடிவமைத்தல் போட்டியில் தனது மிகவும் சிறந்த சிந்தனையால் வீட்டின் உள்ளக, வெளிப்புற அமைப்பை வடிவமைத்திருந்தார். அதனால் இவரது பாடசாலை முதலாவது இடத்தைப் பெற்று 150,000 பெளண்ட்ஸ் பெறுமதியான பரிசினைத் தட்டிக்கொண்டது.இளைய தலைமுறையினரிடையே எரிவாயு சேமிப்பு, பசுமை பேணல் என்பன சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இங்கு ஐந்நூறுக்கு மேற்ப்பட்ட பாடசாலைகள் பங்கு பங்குபற்றியிருந்தன . ஒவ்வொரு பாடசாலையிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டனர் . முழுமையாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர். அவர்களில் ஆறு பேர் முதற்சுற்றில் தெரிவு செய்யப்பட்டு இறுதிச் சுற்றில் இவர் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் . இவரது இச்சாதனையால் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதன் காரணமாக எம்தமிழ் சமூகமும் பெருமைகொண்டு குறிஞ்சிகனை வாழ்த்துகின்றது.

22 ஜூலை 2014

எழிலன் தொடர்பிலான வழக்கை சிறப்பு நீதிபதி விசாரிப்பாராம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்து, இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்ததன் பின்னர் தகவல் தெரியாதுபோன எழிலன் உள்ளிட்ட 12 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையிலேயே முல்லைத்தீவில் நடத்தப்படும் என்று திங்களன்று அறிவிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட இந்த வழக்குகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள சம்பவங்கள் முல்லைத்தீவிலேயே நடந்துள்ளமையால், அவை பற்றிய விசாரணைகளை நடத்தி விபரங்களை அறிவிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்திற்கு வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்த வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அந்த விசாரணைகள் சிறப்பு நீதவான் ஒருவர் முன்னிலையில் நடைபெறும் என்று அறிவித்த முல்லைத்தீவு மாவட்ட நீதவான் கணேசராஜா, அந்த விசாரணைகளை வரும் ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.எழிலனின் மனைவியான வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் உள்ளிட்ட வழக்காளிகள் இந்த வழக்கு விசாரணைக்காக அங்கு சென்றிருந்தனர்.அவர்களை புலனாய்வுத் துறையினர் என சந்தேகிக்கப்படுகின்ற பல நபர்கள் புகைப்படங்கள் எடுத்ததுடன், முல்லைத்தீவில் இருந்து பரந்தன் செல்லும் வீதியில் உள்ள முக்கிய சந்திகளில் ஆங்காங்கே காவல் இருந்து தம்மை அச்சுறுத்தும் வகைளில் சந்தேகத்திற்கு இடமாக நடந்துகொண்டதாகவும் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.இவ்வாறான கண்காணிப்பு அச்சுறுத்தல்கள் புதுக்குடியிருப்பு நகருக்கு அப்பால் உள்ள வள்ளிபுனம் வரைக்கும் தொடர்ந்ததால், தாங்கள் மீண்டும் புதுக்குடியிருப்பு நகருக்குத் திரும்பி வந்து காவல்துறையினரிடம் முறையிட்டு பின்னர் யாழ் பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபருடன் தொடர்பு கொண்டு காவல்துறையினரின் வழிப்பாதுகாப்பைப் பெற்றுச் சென்றதாகவும் அனந்தி சசிதரன் கூறினார். தாங்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளைத் தொடரவிடாமல் நிறுத்தும் வகையிலேயே இவ்வாறான அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ஏற்கனவே விசாரணைகள் மிகவும் தாமதமாக்கப்பட்டுள்ள இந்த வழக்குகளின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

21 ஜூலை 2014

காரைநகர் குற்றவாளிகளுக்கு மகிந்த அதரவு!

யாழ்ப்பாணத்தில் 11 வயது மற்றும் 9 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை வீரர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத வேண்டாம் என நாட்டின் ஜனாதிபதியும் முப்படைகளினதும் சேனாதிபதியுமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளதாக லங்கா ஈ நியூஸ் இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அவரது பாராளுமன்ற விவகார இணைப்புச் செயலாளர்களில் ஒருவரான குமாரசிறி ஹெட்டிகே, காவல்துறையினருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டதன் பின்னர் இரண்டு தடவைகள் குமாரசிறி ஹெட்டிகெ நெடுந்தீவு காவல் நிலையத்திற்கு தொலைபேசி அழைப்புக்களை எடுத்துள்ளார். குறித்த கடற்படை வீரர்களை விளக்க மறியலில் வைத்தால் படையினரின் மனோ திடத்திற்கு களங்கம் ஏற்படக் கூடுமெனத் தெரிவித்து அவர்களை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாண பிராந்தியத்திற்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் ஆர்.டி.பீ. விமலசேன மற்றம் நெடுந்தீவிற்குப் பொறுப்பான கவால்துறை அத்தியட்சகர் எஸ்.பீ.சேனாநாயக்க ஆகியோருக்கும் இது தொடர்பில் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை அத்தியட்சகர்களின் உத்தரவிற்கு அமைய நெடுந்தீவு காவல்நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பாளர் ஆர்.கே.பீ. சேனாரட்ன குறித்த கடற்படை வீரர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்துள்ளார். 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் திகதி 18-2014 என்ற முறைப்பாட்டு இலக்கத்தில் சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. “சிறுமியைக் கடத்திச் சென்று, கூட்டாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்” என முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான சம்பவங்களின் போது சிறுமியை வைத்தியசாலைக்கு அனுப்பி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை பெற்றுக் கொள்ள வேண்டியது அவசியமானது என்ற போதிலும் அவ்வாறான அறிக்கை எதுவும் பெற்றுக்கொள்ளப்படவில்லை. 11 வயது சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஏழு கடற்படை உத்தியோகத்தர்களும் காரைநகா கடற்படை முகாமைச் சேர்ந்தவர்களாகும்.
 1. அஜித் குமார 
2. ருபசிங்க ஆராச்சிலாகே சாமர இந்திக்க 
3. நதீர தில்சான் ரத்நாயக்க 
4. குடாபாலகே ஜயவீர 
5. இந்திக்க குமார விதானாரச்சி 
 6. ரணசிங்க சுமித் சுபாஸ் 
7. விகும் சேனாக பியசிறி திசாநாயக்க 
ஆகியோருக்கு எதிராகவே குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாக சிறுமி செய்த முறைப்பாட்டை கருத்திற் கொண்டு சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்வதாக நெடுந்தீவு காவல் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி சேனாரட்ன நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார். பீ-64-2014 என்ற இலக்கத்தைக் கொண்ட அறிக்கையே இவ்வாறு சமர்ப்பிக்க்பபட்டுள்ளது, சிறுமியின் வாக்கு மூலத்தைக் கருத்திற் கொண்டு சந்தேகத்தின் பேரில் கடற்படை வீரர்களை கைது செய்வதாக பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார். குறித்த கடற்படை வீரர்களை இலகுவில் விடுதலை செய்யும் நோக்கில் இவ்வாறு முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கடற்படை வீரர்களின் தலைகளை மறைத்து, சீருடை அணிந்த நிலையில் அடையாள அணிவகுப்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளனர், இவ்வாறான ஓர் நிலையில் சிறுமியினால் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை. குறித்த சிறுமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இந்த அச்சுறுத்தல் காரணமாகவும் சிறுமி எவரையும் அடையாளம் காட்டவில்லை. படையினரை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்ற இவ்வாறான பொய் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக படையினர் தெரிவித்துள்ளனர். எவ்வாறெனினும், சந்தேக நபர்களை பிரதான நீதவான் விளக்க மறியலில் வைக்க உத்தரவிட்ட போதிலும், பதில் நீதவான் ஒருவரின் ஊடாக பிணை வழங்கப்பட்டுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய பாரதூரமான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட கடற் படைவீரர்களுக்கு வெறும் 250 ரூபா ரொக்கப் பிணையிலும், 5000 ரூபா சரீரப் பிணை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. 11 வயதான சிறுமியின் பாலியல் வன்கொடுமை தொடர்பில் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என்ற போதிலும் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட படைவீரர்களின் பணி விசாரைணகள் முடிவடையும் வரையில் இடைநிறுத்தப்படுவது வழமையானது என்ற போதிலும், தமது பிள்ளைகளை அருகில் வைத்துக் கொண்டு அண்மையில் கடற்படைத் தளபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட வைஸ்ட் அட்மிரால் ஜயந்த பெரேரா, இந்த சந்தேக நபர்களை காலி கடற்படை முகாமிற்கு இடமாற்றம் செய்துள்ளார்.

20 ஜூலை 2014

லைகாவிற்கு எதிராக பிரான்சில் சுவரொட்டிகள்!

பிரான்சில் 
தமிழர்களின் கடைகளுக்கு முன்பாக தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுடன் இணைந்து துரோகம் இழைக்கும் லைக்கா மொபைலுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.அந்த சுவரொட்டியை இங்கே தருகின்றோம்.

சீமான் மீது பொய் வழக்கு!விடுதலை செய்தார் நீதிபதி!

மதுரை மேலூர் அருகே உள்ள வெள்ளரிபட்டியில் உள்ள சுங்கச்சாவடி மேற்பார்வையாளரின் கூறிய குற்றச்சாட்டின்படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார். பின்னர் மதுரை ஜேஎம்-2 கோர்ட் நீதிபதி விசாரணையில், குற்றச்சாட்டில் உண்மையில்லை என தெரியவந்தது. இதையடுத்து சீமானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார் நீதிபதி பால்பாண்டி. இதையடுத்து நீதிமன்றத்திற்கு வெளியே வந்த சீமான், ’’என் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு. புகார் தாரரே புகார் கொடுக்கவில்லை என்று சொல்லிவிட்டார். இது என் சொந்த பிரச்சனை. இதுக்காக மக்கள் யாரும் போராடவேண்டாம். நானே சரி செய்துகொள்கிறேன். மக்கள் பிரச்சனைகளை மட்டும் தொடர்ந்து பேசுவேன். 2016 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஆளூங்கட்சி அதிமுக உட்பட அனைத்து கட்சிகளையும் எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடும்’’என்று தெரிவித்தவரிடம், ‘’பொய் வழக்கு ஏன் போடப்படுகிறது; இது அதிமுகவின் பழிவாங்கும் நடவடிக்கையா?’’என்று கேட்டதற்கு, ’’அதுபற்றி எனக்கு எதுவும் தெரியவில்லை’’ என்று கூறினார். அவர் மேலும், ‘’தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவோம். 7 நாள் திருநாளாக கொண்டாடு வோம்’’என்று தெரிவித்தார்.

19 ஜூலை 2014

‘தலைவர்-தம்பி-நான்’ புத்தக வெளியீடு நாளை!

கவிஞர் புலமைப்பித்தன் அவர்கள் எழுதிய ‘தலைவர்-தம்பி-நான்’ புத்தக வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வடபழனி ஆர்கேஜி அரங்கில் மாலை
வெளியீட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது . தலைவர் இந்தியாவில் இருந்த காலகட்டங்களில் நடைபெற்ற சம்பவங்களை பதிவாக்கியுள்ளார். 1984ல் மட்டக்களப்பு சிறையை உடைத்து மீட்கப்பட்ட தோழர்கள் நிர்மலா நித்தியனந்தன் மற்றும் அவரது கணவர், பேபி உள்ளிட்ட பலர் அய்யா.புலமைபித்தன் அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள்.இவர்களை அழைத்துவந்த தம்பி அவரது அண்ணியிடம் (புலமைப்பித்தனின் மனைவி) “ எங்களுக்கு சிற்றுண்டி தயார் செய்யுங்கள் “ என்றார். ரகு அண்ணிக்கு உதவி செய்தார். பின்னர் தம்பி “அண்ணன், நீங்க உமர்முக்தார் படம் பார்த்திருக்கிறீர்களா?” என்றார். ... (படம் பார்த்தபின்) எல்லோருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. வயிறு நிரம்ப உணவருந்தினார்கள். கொஞ்ச நேரம் அளவளாவி மகிழ்ந்தோம். என் பிள்ளைகளை அருகேஅமரவைத்து தம்பி பேசிக்கொண்டிருந்தார். நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போதே தம்பி திடீரென பால்கனிக்கு போனார். “ரகு.....” என்று சத்தம் போட்டு அழைத்தார். ’அண்ணே , நான் வெளிக்கிடுறேன்’ என்று சொல்லிவிட்டு அவசரமாக புறப்பட்டார். நான் ‘ தம்பி....’ என்றேன். அவர்,” அண்ணே மொசாத்,.... மொசாத்” என்று சொல்லியபடியே படிக்கட்டுகளில் எட்டிக்குதித்து ஜீப்பில் ஏறிப் புறப்பட்டார். தம்பியை கொல்வதற்கு இஸ்ரேல் மொசாத் படையை ஏவிவிட்டிருக்கிறார்கள்.எங்கள் வீட்டில் இருப்பதை மோப்பம் பிடித்து ஏறத்தாழ முற்றுகையிட்டது மாதிரி வந்திருக்கிறார்கள். அதைத் தம்பி மோப்பம் பிடித்து உடனே புறப்பட்டார்.இன்னும் பத்து-பதினைந்து நிமிடம் இங்கே அவர் தங்கி இருந்திருந்தால் எங்கள் வீடே ரணகளமாக ஆகிப்போய் இருக்கலாம்....இதைப்பற்றி விவரங்களை நாளை அவரிடமே நேரில் கேட்கலாம் என்று புத்தகம் தொடர்பில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

18 ஜூலை 2014

காரைநகரில் ஏழு காமுகப்படையினர் கைதாம்!

காரைநகரில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, 7 சிங்கள (கடற்)காமுகப்படையினர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். சிறுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என தெரிய வருகின்றது.
காரைநகர் பிரதேசத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவர் பாடசாலைக்குச் சென்ற போது, அவரைத் தடுத்து வைத்து தொடர்ச்சியாக பதினொரு நாட்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காரைநகரில் சிறுமிகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

காரைநகர் ஊரிக் கிராமத்தில் சிங்கள கடற்படைக் காமுகனால் சிறுமிகள் இருவர் பாலியல் வல்வுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை காரைநகர் பிரதேச செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஊரிக்கிராம மக்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான
மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர் கஜதீபன், தமிழ்த் தேசியமக்கள் மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் பொதுமக்கள் என பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் தாங்கியவாறு கோஷங்களையும் எழுப்பினர்.

17 ஜூலை 2014

மலேசிய விமானத்தை உக்ரைனில் சுட்டு வீழ்த்தியது ரஷ்ய ஆதரவுப்படை!

நெதர்லாந்தில் இருந்து 295 பேருடன் மலேசியா கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் உக்ரைனில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படையால் சுட்டுத் தள்ளப்பட்டது. இதில் விமானத்தில் இருந்த 295 பேரும் பலியாகியுள்ளனர். மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று 295 பேருடன் நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூருக்கு இன்று மதியம் 12.10 மணிக்கு கிளம்பியது. எம்.ஹெச். 17 என்ற அந்த விமானம் உக்ரைனில் ரஷ்ய எல்லைக்கு அருகே செல்கையில் ரஷ்ய ராணுவத்தின் ஆதரவுப் படை தீவிரவாதிகள் பக் ஏவுகணை வீசித் தாக்கினர். இதையடுத்து விமானம் ஷக்தர்ஸ்க் என்ற இடத்தில் தரையில் விழுந்து நொறுங்கியது. விமானத்தின் எரிந்த பாகங்கள் அந்த பகுதியில் சிதறிக் கிடக்கின்றன. இது குறித்த புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகியுள்ளன. உக்ரைன் விமானங்களை ரஷ்யாவும், ரஷ்ய விமானங்களை உக்ரைனும் தாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தான் மலேசிய விமானத்தை உக்ரைன் அல்லது ரஷ்யா தவறுதலாக நினைத்து தாக்கியிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விமானம் எரிந்துவிட்டதாகவும் அதில் பயணம் செய்த 280 பயணிகள் மற்றும் 15 சிப்பந்திகள் என 295 பேருமே உடல் கருகி இறந்துவிட்டதாகவும் உக்ரைன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுட்டுத் தள்ளப்பட்ட விமானம் போயிங் 777-200 ரகத்தைச் சேர்ந்தது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 71 என்ன ஆனது என்று தெரியாமல் உள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஐ.நாவில் சாட்சியமளிக்க 10பேர் ஜெனீவா சென்றுள்ளனர்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு முன் சாட்சியமளிப்பதற்காக பத்து பேர் சுவிட்சர்லாந்திற்கு பயணமாகியுள்ளதாக, சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவின் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைகளில் சாட்சியமளிக்கும் நோக்கில் பத்து பேர் சுவிட்சர்லாந்து சென்றுள்ளனர். பிரிட்டன் தமிழர் பேரவை, உலகத் தமிழர் பேரவை ஆகியனவே இவ்வாறு பத்து பேரை அனுப்பி வைத்துள்ளன. சாட்சியமளிக்க முன்வந்தவர்கள் வன்னிப் போரின் போது இலங்கையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஐ.நா விசாரணைக் குழு ஜெனிவாவில் ஐந்து நாட்கள் விசாரணை நடத்தவுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்படுகிறது.

16 ஜூலை 2014

திருமணமாகி 11ம் நாள் எயிட்ஸ்,யாழில் இளம்பெண்ணின் அவலம்!

நீண்ட காலமாகவே யாழில் உள்ள ஒரு எயிட்ஸ் நோயாளியிடம் சில கேள்விகளை கேட்க்கவேண்டும் என்று இருந்தேன். யாழில் சுமார் 2,000 எயிட்ஸ் நோயாளிகள் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எவரும் முன் வந்து எந்த தகவலையும் தர தயார் இல்லை. ஒரு விழிப்புணர்வுக்காக நான் ஒரு நேர்காணலை எடுக்க விரும்பினேன். இது குறித்து அனைவரும் தெரிந்திருக்கவேண்டும் அல்லவா ? இதோ ஒரு இளம்பெண் தனது எண்ணங்களை எம்மோடு மனம் திறந்து பகிர்ந்து கொள்கிறார்.
எப்படி உங்களுக்கு கலியாணம் நடந்தது ? உறவுமுறையான அவருக்கும் எனக்கும் பொருத்தம் பார்த்துப் பேசி திருமணம் நடந்தது. நாங்கள் இருவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர் வெளிநாட்டிலிருந்து வந்திருந்தார். திருமணத்தின் பின்னர் அவரது ஆண் உறுப்பில் சொறிச்சல் மாதிரி இருந்தது. காய்ச்சலும் இருந்தது. அது மாறவில்லை. அதனால், யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தோம். அவருக்கு ரத்தம் எடுத்துச் சோதித்துப் பார்த்தனர். அவருக்கு எயிட்ஸ் என்பதனை திருமணம் செய்து 11ஆவது நாளில் பரிசோதனை உறுதிப்படுத்தியது. அதனைச் சொல்லும்போது எனக்கு வயது 18 . என்ன செய்வது என்று எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அதிர்ச்சியில் அழுது புலம்பினேன்.
கணவரின் மனநிலை எப்படியிருந்தது ? அவருக்கு முதலிலேயே எயிட்ஸ் இருந்ததா என்பது தெரியாது. ஆனால், அவர் கூறினார், அநியாயமா உன் வாழ்க்கையையும் நாசமாக்கிவிட்டேன் என்று. அவர் அவ்வாறு கூறியது தனக்கு ஏற்கனவே இருக்கு என்பதனை மறைத்ததனால் கூறினாரா ? அல்லது தனக்கு எயிட்ஸ் இருப்பது தெரியாமல் திருமணம் செய்து, எனக்கும் அதனைப் பரப்பி விட்டேன் என்ற ஆதங்கத்தில் அவ்வாறு கூறினாரா என்பது தெரியாது. அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், நான் அதன் பின்னர் அது பற்றிக் கேட்பதைத் தவிர்த்து விட்டேன்.
கணவருக்கு எய்ட்ஸ் என்றபோது ? அவருக்கு எயிட்ஸ் என்ற விடயத்தை அவருடைய குடும்பத்தினருக்குச் சொன்னபோது அவர்களுக்கும் அதிர்ச்சிதான். திருமணம் செய்து 16 வருடங்களின் பின்னர்தான் அவர் பிறந்துள்ளார். அதனால், அவரை நல்ல செல்லமாக வளர்த்துவிட்டனர். நோய் வந்துவிட்டது. இனி என்ன செய்வது. அவர் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிவிட்டார். குடிக்காது இருந்தால் இன்னும் சிறிது காலத்துக்கு வாழமுடியும். குடிக்க வேண்டாம் என அவருக்கு நான் கூறிவந்தேன். நாளையிலிருந்து நான் குடிக்க மாட்டேன் என்று சொல்லுவார். ஆனால், அவருக்கு அந்தப் போதையில் இருக்கும் போதுதான் நிம்மதியாக இருக்க முடியும் என்ற நிலை இருந்தது. தனது நண்பர்கள் எல்லோரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். நான் மட்டும் இப்படியாகிவிட்டேன். அவர்களைப் போல வாழ முடியவில்லையே என்ற கவலை இருந்தது. அதற்குச் சிகிச்சை பெறுமாறு கேட்டுப் பார்த்தோம். அவர் கேட்கவில்லை. முன்னர் அவர் எப்படி மற்றவர்களின் பேச்சைக் கேட்கமாட்டாரோ அவ்வாறுதான் இறுதியிலும் கேட்கவில்லை. அதனால், அவர் இறந்துவிட்டார்.  
அதுக்குப் பிறகு ? எனக்கு முன்னரும் இக்கட்டான காலம்தான். நான் பிறந்து 6 மாதத்தில் எனது அப்பா இறந்துவிட்டார். அம்மா இரண்டாவது திருமணம் செய்து 6 பிள்ளைகள். அம்மாவிடம் இருந்து பாசம் கிடைக்கவில்லை. சீதனம் கேட்கவில்லை என்பதற்காக எனக்கு அவரைத் திருமணம் செய்து வைத்தனர். பிறகு எனது ரத்தம் எடுத்து சோதித்தனர். எனக்கும் அவர் மூலமாக எயிட்ஸ் பரவியமை உறுதிப்படுத்தப்பட்டது. என்னால் அதனை நம்பவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லை. மீண்டும் அழுது புலம்புகிறேன். அந்தநேரம் நான் இருந்த நிலமையை என்னால் விபரிக்க முடியாதுள்ளது.
 வீட்டுக்கு எப்பிடி சொன்னீங்கள் ? யாரிடம் சொல்வது ? என்னத்தைச் சொல்வது என்று மூளை எல்லாம் குழம்பிப் போய் ஒன்றும் சொல்ல முடியாத நிலையில் இருந்தேன். எச்.ஐ.வி. அவ்வாறு தான் வரும் என்று அப்போழுதுதான் தெரியும். அம்மாவிடம் போய் சொன்னேன். அம்மா சொன்னார், அது உன் தலையெழுத்து. நான் என்ன செய்யிறது ? என்றார். அதன் பின்னர் அம்மா என்னைத் தனது வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். பாசத்தில் கூட்டிச் செல்லவில்லை. கணவர் தந்த நகைகள் என்னிடம் இருந்தன. அதனைப் பெறத்தான் என்னைக் கூட்டிச் சென்றார்.  
ஊருக்குள் என்ன பேசிக் கொண்டார்கள் ? அவர் இறந்தபோது பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டது. பெயர் வரவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர், முகவரி என்றெல்லாம் வந்துவிட்டது. அதனால், எனது இடத்து மக்கள் கண்டுபிடித்துவிட்டனர். அப்படி வந்ததனால் ஊரார் என்னை ஒதுக்கி விட்டனர். சிலர் நேரடியாக வந்து கேட்டனர், உனக்கு எயிட்ஸ் உள்ளதாம், உன்னுடன் பழகக்கூடாதாம் என்று சொல்றாங்க என்று. மிகவும் கவலையடைந்தேன். நோய் வந்த பிறகு நான் கொண்டாட்டங்களுக்குச் செல்வதில்லை. என்னைச் சமூகம் ஒதுக்கியது. அதனைவிட வீட்டில் எனது அம்மா கூட ஒதுக்கினார். வீட்டிலேயே நான் ஒதுக்கப்பட்டதால் சமுதாயம் ஒதுக்கியதனை நான் பெரிதாக கொள்ளவில்லை. நான் எந்தவொரு தவறும் செய்திருக்கவில்லை. வீட்டில் அம்மா சொல்வார், இப்படி இருப்பதால் தம்பி ஆக்களுக்கு கலியானம் செய்ய முடியாது. எங்காவது போ அல்லது செத்துப்போ என்றார். என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. (அழுகிறார்… அழும்போதெல்லாம் அவரது கையைப் பற்றிப் பிடித்து அவரை ஆறுதல்படுத்தி சாதாரண நிலைக்குக் கொண்டுவருகிறார் அவருக்கு அருகில் இருக்கும் அவரது தற்போதைய கணவர்)  
அம்மா என்ன செய்திருக்கவேண்டும் ? திருமணத்துக்கு முன்னர் அவரைப் பற்றி எனது பெற்றோர் விசாரித்திருக்க வேண்டும். திருமணம் செய்து தள்ளிவிட்டால் சரி என்று அம்மா நினைத்து விட்டார்தானே. நோய் இருப்பது தெரியாதுவிட்டாலும் அவரது முன்னைய பழக்கவழக்கங்கள் பற்றியாவது விசாரித்திருக்கலாம் தானே ? அவர் ஏற்கனவே பெண்கள் விடயத்தில் பலவீனமானவராக இருந்துள்ளார். அதனை அவர் பின்னர் சொல்லியிருக்கிறார்.  
அதுக்குப் பிறகு அம்மா ? அதன் பின்னர் என் மனதை நோகடிக்கும் வகையில் கதை சொல்வார். தொடர்ச்சியாக அவ்வாறு நடந்து கொண்டார். சின்னப் பிள்ளைகள் இருப்பதனால் என்னை வைத்திருக்க வேண்டாம். வெளியேற்று என்று கிராம அலுவலர் தெரிவித்ததாக அம்மா சொன்னார். எனக்குப் பத்தொன்பதரை வயதாக இருக்கும்போது அவர் இறந்து விட்டார். கிராம அலுவலர் சொல்கிறார் என்கிறீர்கள் ? நான் எங்கு போவது ? யாழ்ப்பாணத்தில் இடமும் தெரியாது. வீட்டில் எனக்குத் தொல்லையாக இருந்தது. அதனால் நான் தற்கொலைக்கு முயற்சித்தேன்.  
தற்கொலையா ? ஆம், 700 தூக்கமாத்திரைகளை வாங்கி, 100 மாத்திரைகள் வீதம் பிரித்து வைத்து ஒவ்வொரு பிரிவாக 400 குழிசைகளை விழுங்கி விட்டேன். அதன் பின்னர் நான் மயங்க விட்டேன். பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். ஆனால், சாவும் வரவில்லை. கோமா நிலையில் இருந்து தப்பிவிட்டேன். நான் எங்காவது போக வேண்டும் என்று நினைத்து கிறிஸ்தவ நிறுவனம் ஒன்றுக்குச் சென்றேன். அங்கு போய், என்னை ஊரில் வாழ விடுகிறார்கள் இல்லை. கிராம அலுவலரிடம் சென்றால் குற்றம், வெளியில் சென்றால் குற்றம் என்கிறார்கள். நீங்கள் என்னை உயிர் பிழைக்க வைக்கவேண்டாம். எப்படியாவது சாகடியுங்கள் என்று அவர்களிடம் கேட்டேன்.  
அவர்கள் என்ன சொன்னார்கள் ? அவர்கள் என்னை ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சென்ற பின்னர்தான் நான் தற்போதைய நிலைக்கு வந்தேன். தற்போது பேட்டி தரவும் முடிகிறது. பேட்டி தருவதன் நோக்கம், இந்நோய் அடுத்தவர்களுக்கு வராதபடி இருக்க வேண்டும் என்பதே. அதற்காக என்னால் இயன்றதை நான் சொல்லுவேன். அதனைக் கேட்டு அவர்கள் சந்தோசமாக வாழவேண்டும். எனக்கு வந்த நிலைமை என் எதிரிக்குக் கூட வரக்கூடாது.  
இவருடனான (இப்போது திருமணம்) சந்திப்பு எப்படி ? பிறகு நான் ஐக்கிய அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் நிறுவனத்துக்குச் சென்றேன். அங்குதான் இவரைக் கண்டேன். (தற்போது திருமணம் செய்திருக்கும் இளைஞனைக் காட்டுகிறார்). கடந்த ஜனவரியில் தாம் இருவரும் சேர்ச்சில் திருமணம் செய்துகொண்டோம்.  
எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவரின் மனநிலை எப்படியிருக்கும் ? எய்ட்ஸ் நோயாளர்கள் ஒதுக்கப்படுகின்றனர். ஆனால், எயிட்ஸ் நோயாளர்களை ஒதுக்கக் கூடாது. பாதிக்கப்படவர்கள் கவுன்சிலிங் எடுத்து எங்களைப் போல மாறமுடியும். தவறின் அவர்கள் 2 விதமான முடிவை எடுப்பர். ஒன்று தம்மை அழிக்க வேண்டும் என்று நினைப்பர் அல்லது இதனை இன்னும் பலருக்குப் பரப்ப வேண்டும் என்ற மனநிலை உருவாகிறது. இந்த இரண்டுமே ஆபத்துத்தான். அந்தச் சூழ்நிலைக்குத் தள்ளுவது சமுதாயம்தான்.  
சரி, உங்களைப் பற்றிச் சொல்லுங்களன்? (கணவனை நோக்கித் திரும்பினோம்) எனது அம்மா மனநோய்வாய்ப்பட்டவர். அதனால், அம்மா சின்னப்பிள்ளை மாதிரி. தனது வேலைகளைக்கூட செய்துகொள்ளமாட்டார். அப்பா குடித்துவிட்டு வருவார். ஒரு அக்கா வீட்டில்.வறுமை. நான் பாடசாலைக்குப் படிக்கச் செல்லும்போது சிலர் (ஆண்கள்) எனக்கு உதவுவதாகக்கூறி என்னை தவறான வழியில் பயன்படுத்த முற்பட்டனர். தவறான உடலுறவுக்குப் பயன்படுத்த முற்பட்டனர். பணம் தந்து கேட்பார்கள். அதனால், ஒரு கட்டத்தில் மது, சிகரெட், கஞ்சா எல்லாம் குடிக்கத் தொடங்கி விட்டேன். வீட்டில் எவரும் கண்டித்திருக்கவில்லை. எவரும் ஆலோசனை செய்திருக்கவில்லை. கேட்டிருந்தால் நான் தப்பியிருப்பேன்.  
பிறகு ? அதன் பின்னர் வெளிநாடு போக சந்தர்ப்பம் கிடைத்தது. அம்மா அப்பாவிடம் கிடைக்காத அன்பு அங்கு என்னுடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணிடமிருந்து கிடைத்தது. ஒரு வருடமாக அவளுடன் ஒன்றாகத் தங்கி வாழ்ந்தேன். உடலுறவு கொண்டேன். பின்னர் வீட்டுக்குத் திரும்பி வந்தேன். அக்காவுக்குத் திருமணம் செய்து கொடுத்தேன். இரண்டாவது தடவை வந்துபோகும்போது மருத்துவப் பரிசோதணை செய்தனர். அதன்போதுதான் எனக்கு எயிட்ஸ் இருப்பது தெரியவந்தது. அவள் வேண்டுமென்றே எனக்கு எயிட்ஸ் நோயைப் பரப்பியமை பின்னர்தான் தெரிந்தது. அதுதான் சொன்னேனே சில பேர் தனக்கு தந்ததை 10 பேருக்குக் கொடுக்க வேண்டும் என்று பழிவாங்குவார்கள். அவர் என்னை நாஷமாக்கிவிட்டார். எனக்கு நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதனால் 6 மாதங்கள் சிறையிலிருந்தேன்.  
எப்படி இலங்கை திரும்பினீர்கள் ? நவீனரக சூட்கேஸ் பெட்டியுடன் சென்ற நான், ஒரு சொப்பின் பையில் 2 சேட்டுடன் திரும்பி இலங்கைக்கு வந்தேன். வீட்டுக்கும் போகமுடியாது. முகம் கொடுக்க கஷ்டமாக இருந்தது. வெள்ளவத்தையில் தங்கியிருந்தேன். கடலில் விழுந்து செத்திடுவமா என்று யோசித்தேன். பின்னர் என்னிடம் உள்ள முழுப் பணத்தையும் கொண்டுசென்று கொழும்பில் பரிசோதித்தேன். எயிட்ஸ் என்பதனை உறுதிப்படுத்தினர். மருந்து எடுத்து வாழலாம் என்றனர். சில நாள்களின் பின்னர் இவரைச் சந்தித்தேன். (மனைவியைக் காட்டுகிறார்)  
உங்கள் வீட்டுக்குத் தெரியாதா ? வீட்டுக்குத் தெரியவந்தது. அக்கா கேட்டதனால் அவருக்குக் கூறினேன். அவர் கதறி அழுதார். “எனக்கு நோய் வந்திட்டுது அக்கா. வீட்டில எவருக்கும் சொல்லாதே அக்கா. அம்மா அப்பாவைக் கஷ்டப்படுத்தக்கூடாது. நான் இதோட செத்திடுவன். நான் உனக்கும் கரைச்சல் கொடுக்கமாட்டேன்” என்றேன். (அழுகிறார். கண்ணீர் வழிந்தோடுகிறது, கண்ணீரைத் துடைத்துக் கொண்டே தொடர்கிறார்). அக்காவுக்கும் அதிர்ச்சி. சிறிது நாள் சென்றபின்னர், அதில் தொடாதே, இதில் தொடாதே என்று அவளும் சொல்லத் தொடங்கிவிட்டாள். பின்னர் எனது உடுப்புகளை எடுத்து வெளியே எறிந்து போ என்று கலைத்து விட்டார். இவருக்கும் உங்களுக்கும் இடையிலான உறவு ? (மனைவியைக் குறித்து) நடந்ததை இவருக்குச் சொன்னேன் (மனைவிக்கு). ஆறுதல் வார்த்தை கூறினார். நீங்கள் குடிக்க வேண்டாம் என்றார். அன்றிலிருந்து நான் குடிப்பதில்லை. கவுன்சிலிங் போனேன். தற்போது தனியார் நிறுவனத்தில் பொறுப்பு அதிகாரியாகப் பணியாற்றி வருகிறேன். பெண்ணால் ஆக்கவும் முடியும். அழிக்கவும் முடியும். என் வாழ்க்கை அதற்கு சரியான ஆதாரம். இப்போது உங்கள் மனநிலை எப்பிடி ? நான் பாதிக்கப்பட்டபோது, எனக்கு வந்த எண்ணம் என்னுடன் இது அழிந்திட வேண்டும் என்பதே. ஆனால், சிலர் இதனை இன்னும் பலருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். என்னை ஒரு பெண்தானே அழித்தார். அதனால், இன்னும் பத்துப் பெண்களை அழிக்காமல் சாகமாட்டேன் என்ற மனநிலை உருவாகிறது. அவ்வாறே பெண்ணின் மனநிலையிலும் எண்ணம் ஏற்படுகிறது. இந்த இரண்டையும் தவிர்த்து வாழமுடியும் என்பது பரப்பப்படவேண்டும். (இருவரிடமும் கேட்டோம்)  
நீங்கள் எடுக்கும் மருந்துகள் பற்றி ? இந்த நோய் ஏற்பட்டால் இரண்டு வகைப்பட்ட 3 குளிசைகள் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு வகைக் குளிசை 1998ஆம் ஆண்டு 15 ஆயிரம் ரூபா. மற்றையது 10 ஆயிரம் ரூபா. 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் இவை 3 ஆயிரம் ரூபாவுக்கு வந்து தற்போது இலவசமாக வழங்கப்படுகிறது. இவை பயன்படுத்துவதன் நோக்கம் நோயைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதற்கே. தற்போதுள்ள வைரஸ் கிருமிகளை அழிக்க முடியாது. ஆனால், கட்டுப்படுத்த முடியும். நீரிழிவு உள்ளவர்களுக்கு உறுப்புகள் கழற்றவேண்டிவரும். விரும்பிய உணவு உண்ண முடியாது. ஆனால், எமக்கு எந்த உணவுக்கட்டுப்பாடும் இல்லை.  
நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வீர்களா ? எயிட்ஸ் நோயாளர்கள் இருவர் திருமணம் செய்வதென்றால் வெண்குருதி சிறுதுணிக்கை இருவருக்கும் சமமாக இருத்தல் வேண்டும். ஒருவருக்குக் கூடவும் மற்றையவருக்கு குறையவும் இருந்தால் கூடாது. ஏனெனில், உடலுறவில் ஈடுபட்டால் கிருமிகள் ஒருவரிடமிருந்து மற்றையவருக்கு மாறி அது ஆபத்தாகிவிடும். இப்போது என்ன செய்கிறீர்கள் ? எம்மை எவரும் கட்டாயப்படுத்துவதில்லை. ஆனால், விழிப்புணர்வு ஊட்டவேண்டும் என்ற நோக்கத்தில் நாங்கள் உள்ளதனால் நாமாகவே அதனைச் செய்கிறோம். கத்தியால் குத்தப்பட்டவருக்குத்தான் அதன் வலி தெரியும். அவ்வாறே பாதிக்கப்பட்டிருக்கும் நாம் விழிப்புணர்வு செய்துவருகிறோம். எந்தவகை விழிப்புணர்வும் பாதிக்கப்பட்டவர்களால் செய்யப்படும்போதுதான், முழுப்பயனையும் அடையமுடியும். நாங்கள் இந்த அபாயத்திலிருந்து தப்பிக் கொள்வதற்கான விழிப்புணர்வை மேற்கொள்ள எங்கும், எப்போதும் தயாராகவே இருக்கிறோம். அதற்கான உதவிகளைச் செய்யுங்கள் சுகதேகிகளே!  
நிறுவனத்தின் இணைப்பாளர் என்ன சொல்கிறார் ? இங்குள்ள இளைஞர்கள் வெளிநாட்டுக்குப் போனால் வேலையை மட்டும் செய்து உண்டு உடுத்து இருக்க வேண்டுமே தவிர எந்தப் பெண்ணுடனும் உறவு கொள்ளக்கூடாது எனப் பணிவுடன் அறிவுறுத்துகிறோம். வெளிநாட்டுக்குச் செல்வோர் இந்த விடயத்தில் இனிமேலாவது மிகவும் அவதானமாக இருங்கள். யாழ்ப்பாணத்திலுள்ள நோயாளர்கள் பலர் சிகிச்சை பெறச் செல்வதில்லை. பிடித்து அடைத்து விடுவார்கள் என்ற பொய்யான அச்சம். ஆனால், எந்தவிதப் பயமும் இல்லை. சந்தேகம் இருந்தால்கூட பரிசோதிக்கமுடியும். வெளிநாடு செல்வோர்க்கு விழிப்புணர்வூட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஏற்பாடு செய்தல் வேண்டும். கொண்டம்(condom) பாவித்து உடலுறுவு வைத்துக் கொள்ளலாமே ? இந்த எண்ணம் தவறு. பொதுவாகவே ஒரு குழந்தை கிடைத்து குறித்த கால இடைவெளிக்குள் இன்னொரு குழந்தை கிடைக்கக்கூடாது என்ற குடும்ப கட்டுப்பாட்டுக்குத்தான் ஆணுறை (கொண்டம்) பயன்படுத்தப்படுகிறது. தவிர அதனைப் பயன்படுத்தி திருமணத்திற்கு முன்னர் பாலுறவில் ஈடுபடுதல் என்பதற்கல்ல. 1939ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொண்டம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தயாரித்தவரது பெயரிலேயே தற்போது அது அழைக்கப்படுகிறது. ஆனால், அதனைப் பயன்படுத்தி எப்படியும் வாழலாம் என்ற கருத்தையே வியாபாரிகள், வியாபார நோக்கத்துக்காக பரப்பி வருகின்றனர். இது தவறு என்று இவர்கள் கூறுகிறார்கள். கொண்டத்திற்கு இவ்வாறு ஒரு உண்மையான விளக்கம் சொன்ன தம்பதிகள் இவர்களாக தான் இருக்க முடியும்.

நன்றி: ஜெரா 
நன்றி: "மாற்றம்"

15 ஜூலை 2014

தமிழ்மக்களுக்கு எதிரான பிரித்தானியாவின் கறைபடிந்த போர்!

சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில், பிரித்தானியாவின் பங்களிப்பை விபரிக்கும், ஆய்வு அறிக்கை ஒன்று லண்டனில் வெளியாகியுள்ளது. தமிழ்மக்களுக்கு எதிரான பிரித்தானியாவின் கறைபடிந்த போர் – 1979- 2009 என்ற தலைப்பில், பிரித்தானிய ஆய்வாளரான, பில் மில்லர் (Phil Miller ) இந்த ஆய்வறிக்கையை எழுதியுள்ளார். பிரீமென் அனைத்துலக மனித உரிமைகள் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, பிரித்தானிய தேசிய ஆவணக் காப்பகம் மற்றும் சுதந்திரமாக பெறப்பட்ட தகவல்கள், மற்றும் பொதுமக்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக, பில் மில்லர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையின் முதல் மூன்று பகுதிகளிலும், 1979ம் ஆண்டு தொடக்கம், 1989ம் ஆண்டு வரையான காலத்தில், சிறிலங்காப் படைகளுக்கு பிரித்தானியா வழங்கிய உதவிகள் குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் முன்னாள் படையினர், காவல்துறையினர், அளித்த பயிற்சிகள் குறித்தும், 1987இல் இந்தியப்படைகளுக்கு ஆலோசனை வழங்கியது குறித்தும் இதில் விபரிக்கப்பட்டுள்ளது. அடுத்த பகுதியில், 1990 தொடக்கம், 2002 வரையான காலப்பகுதியில், சிறிலங்கா படை அதிகாரிகளுக்கான பயிற்சி உதவிகள் பிரித்தானியாவினால் விரிவாக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் சிறிலங்காவில் இராணுவ கட்டளை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரி உருவாக்கப்பட்டதாகவும், அதில் பிரித்தானியாவின் தீவிரமான பங்கு இருந்ததாகவும், பிரித்தானிய இராணுவ அதிகாரிகள் சிலர் நிரந்தரமாக அங்கு தங்கியிருந்து பணியாற்றியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இறுதிப் பாகத்தில், 2002 தொடக்கம், 2009 வரையான காலப்பகுதியில், பிரித்தானியாவின் பங்கு குறித்து விபரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவில் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த இந்தக் காலப்பகுதியில், ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடைசெய்வதற்கு பிரித்தானியா கருவியாக செயற்பட்டது குறித்தும், சிறிலங்காவுக்கு ஆயுதங்கள் விற்றது குறித்தும் இந்தப் பகுதியல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பிரீமென் நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தில், 2013ம் ஆண்டு டிசெம்பரில் பில் மில்லர் அளித்த சாட்சியத்தின் விரிவான விளக்கமாக இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

14 ஜூலை 2014

யாழில்,அனந்தியின் உறவினர்கள் கைதாகி விடுதலை!

வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் உறவினர்கள் இருவர், தம்மை அவதூறாகப் பேசினர் என்று குற்றம்சாட்டி வட்டுக்கோட்டை பொலிஸார் அவர்கள் இருவரையும் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:- வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் அலுவலகத்துக்கு முன்பாக அவருடைய உறவினர்கள் இருவர் நேற்று மாலை நின்றிருந்தனர். இதன்போது அங்கு சிவில் உடையில் சென்ற பொலிஸார் அவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தினர் என்றும் இருவரையும் வாகனத்தில் ஏற்றி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொடர்பு கொண்டு, அவர்களை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்தார். இதனையடுத்து இருவரும் இரவு 10 மணியளவில் விடுவிக்கப்பட்டனர். இது குறித்து அனந்தி சசிதரனைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் இருவரும் எனது உறவினர்கள், அரச உத்தியோகத்தர்கள். அவதூறு வார்த்தைகளைப் பேசினார்கள் என்று பொய்கூறியே பொலிஸார் அவர்களைக் கைது செய்தனர். திட்டமிட்டு என்னை பழிவாங்கும் நோக்கில் சிலர் பொலிஸாரை ஏவிவிட்டுச் செய்யப்பட்ட காரியம் இது என்றார்.

13 ஜூலை 2014

ராஜபக்சவை லண்டனுக்குள் அனுமதிக்க வேண்டாம் - சிறுவன் அறிவழகன்

ஈழத்தில் என்போன்று பிஞ்சுக் குழந்தைகளைக் கொன்ற மகிந்த ராஜபக்சவை லண்டனுக்குள் அனுமதிக்க வேண்டாம் என உருக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றார் சிறுவன் அறிவழகன். அதேபோன்று மகிந்த ராஜபக்சவை விரட்டியடிக்க எம்மின மக்கள் அனைவரும் வாரீர் என உரிமையுடன் அழைப்பு விடுக்கின்றார் மாணவி கலைமதி அவர்கள்.

12 ஜூலை 2014

சேட்டை விட்டவனுக்கு வேலணையில் வைத்து சாட்டையடி!

நேற்று நயினாதீவில் இடம் பெற்ற தோ் உற்சவத்தின் பின்னா் தனது குடும்பத்தினருடன் யாழ்ப்பாணம் நோக்கி பேரூந்தில் பயணம் செய்து கொண்டிருந்த யுவதியுடன் அங்க சேஷ்டை செய்த இளம் நபா் பேரூந்தில் பயணம் செய்தவா்களால் இறக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வேலணைப் பகுதியை பேரூந்து அண்மித்துக் கொண்டிருந்த போதே இவா் பேரூந்தில் இருந்து இறக்கப்பட்டு தாக்கப்பட்டுள்ளார். குறித்த நபா் பயணிகளின் நெருக்கத்தைப் பயன்படுத்தி யுவதியுடன் மிகவும் அங்க சேஷ்டை செய்யத் தொடங்கியதாகவும் இதனால் கோபமடைந்த யுவதி குறித்த நபரை அதற்குள் வைத்தே அடித்ததாகவும் தெரியவருகின்றது. இதனால் கோபமடைந்த நபா் யுவதியின் தலைமுடியைப் பிடித்து இழுத்து அடிக்க முற்பட்டதாகவும் இதனையடுத்து யுவதியின் தாயும் அலறவே பஸ்சுக்குள் நின்ற இளைஞா்கள் குறித்த நபரைக் கீழே இறக்கி நையப்புடைத்துள்ளனா். இதன் போது குறித்த நபரின் பெறுமதி மிக்க கைத் தொலைபேசியும் நொருங்கியுள்ளது. இதன் பின்னா் இவரைப் பொலிசாரிடம் ஒப்படைக்க முயன்ற போது குறித்த நபா் அழுது புலம்பவே அவனை அங்கேயே விட்டு விட்டு பேரூந்து சென்றதாகத் தெரியவருகின்றது. இந் நபா் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் வேலை செய்வதாக இளைஞா்கள் விசாரித்த போது தெரிவித்துள்ளதாக இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழில்,வெட்டுக்காயத்துடன் இளைஞரின் சடலம்!

யாழ்.காக்கைதீவு பகுதியில் உள்ள சிறீலங்கா படை முகாமிற்கு பின்புறமாக இருந்து இளைஞர் ஒருவருடைய உடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.கொடிகாமம் பகுதியை சேர்ந்த என்.குகதீபன் எனும் இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சடலம் கழுத்து பகுதியில் பாரிய வெட்டுக் காயத்துடன் காணப்பட்டது என மேலும் அறியவருகிறது.சம்பவ இடத்திற்கு வந்த நீதிபதி ஜோய்மகிழ் மாகாதேவா விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

11 ஜூலை 2014

அல்லிராஜா குடும்ப பிறந்தநாள் விழாவுக்கு விஜய் லண்டன் செல்வதால் சர்ச்சை!

அல்லிராஜா(லைகா)
கத்தி படம் தொடங்கப்பட்டதில் இருந்தே அப்படம் குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய செய்திகள் வந்து கொண்டிருந்தன. இலங்கை அதிபர் ராஜபக்சேவின் பினாமி இந்தப் படத்தைத் தயாரிப்பதாக முதலில் சொல்லப்பட்டது. பிறகு பினாமி இல்லை அவரது தொழில் பார்ட்னர் தயாரிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் வெளியானதும் உலகத் தமிழர்களிடமிருந்து கத்தி படத்துக்கும், விஜய்க்கும், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுக்கும் கடும் கண்டனமும், எதிர்ப்பும் எழுந்தன.குறிப்பாக, புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள் மத்தியில் கொதிப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இந்நிலையில், கத்தி படத்திற்கு சிக்கல் அதிகமாகும் வகையில் மற்றொரு செய்தி வெளியாகி உள்ளது.அல்லிராஜாவின் தாயார் ஞானம் அம்மாளின் பிறந்தநாள் விழா விரைவில் லண்டனில் நடைபெறுகிறது. அந்தவிழாவில கலந்து கொள்ள விஜய், சமந்தா உள்ளிட்ட கத்தி படக்குழுவினர் அனைவருமே லண்டன் செல்கின்றனர்.இதற்காக அவர்களுக்கு தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் அடிபடுகிறது. லைகா நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஐங்கரன் மற்றும் முருகதாஸ் விளக்கம் கொடுத்தாலும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்கள்அதை ஏற்று கொள்ளவில்லை.இந்நிலையில் அவர்களது குடும்பவிழாவுக்கு விஜய் செல்ல இருப்பது பிரச்சனையை மீண்டும் ஊதிவிட்டதாகிவிட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் மத்தியிலும் இது கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

10 ஜூலை 2014

உயிலங்குளம் மாணவர்கள் வீதி மறியல் போராட்டம்!

மன்னார் உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் இன்று காலை தனியார் பேரூந்து ஒன்றை இடை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையினால் மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் சிறிது நேரம் போக்கு வரத்து தடைப்பட்டிருந்தது. பாடசாலை மாணவர்களை கடந்த சில தினங்களாக குறித்த தனியார் பேரூந்து ஏற்றாமல் செல்வதினை கண்டித்தே குறித்த வீதி மறியல் மேற்கொள்ளப்பட்டதாக குறித்த பாடசாலை மாணவர்கள் தெரிவித்தனர். மன்னாரில் இருந்து காலை 7.20 மணிக்கு மடு நோக்கி புறப்படும் குறித்த தனியார் பேரூந்து ஒன்று உயிலங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு வருவதற்காக சிறுநாவற்குளம்,கள்ளிக்கட்டைக்காடு,நொச்சிக்குளம் ஆகிய கிராமங்களில் பேரூந்திற்காக காத்து நிற்கும் மாணவர்களை ஏற்றாது கடந்த சில தினங்களாக சென்றுள்ளது. இதனால் நுற்றுக்கணக்கான பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதில் பாரிய சௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர். இந்த நிலையில் இன்று வியாழககிழமை காலை 7.20 மணியளவில் மன்னாரில் இருந்து மடுவிற்கு குறித்த தனியார் பேரூந்து புறப்பட்ட போதும் மாணவர்களை ஏற்றாது சென்றுள்ளது. இந்த நிலையில் உயிலங்குளம் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் குறித்த பேரூந்தை உயிலங்குளம் சந்தியில் மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின் மன்னார் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கதைத்து மாணவர்களை பாடசாலைக்கு அனுப்பி வைத்தனர்.இதனால் சுமார் ஒரு மணித்தியாலம் தாமதத்தின் பின்பே குறித்த பேரூந்து மடுவை சென்றடைந்தது.

09 ஜூலை 2014

தமிழகத்தில் ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் மூன்று அரசியல் பிரபலங்கள் அனுமதி!

ஒரே நேரத்தில் 3 முக்கியத் தலைவர்கள் ஒரே மருத்துவமனையில்.. தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரபல பத்திரிக்கையாளரும், அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி என மூன்று முக்கியத் தலைவர்கள் ஒரே நாளில் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும மூன்று பேருமே ஒரே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.சோ. ராமசாமிக்கு சமீப காலமாகவே உடல் நலம் சரியில்லை. ஏற்கனவே அவர் உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல் நிலை மோசமாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தற்போது அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் வைகோவும், விஜயகாந்த்தும் அதே அப்பல்லோவில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டுள்ளனர். விஜயகாந்த்து நெஞ்சுவலி என்று முதலில் தகவல்கள் வெளியாகின. பின்னர் நெஞ்சு எரிச்சல் காரணமாக அவரை சேர்த்துள்ளதாக தகவல்கள் கூறின. அவருக்கு இருதய பரிசோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிகிறது. அதேசமயம், மதிமுக பொதுச் செயலாளர் கடும் வயிற்று வலி காரணமாக சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அவரும் அப்பல்லோவில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்படி தமிழகத்தின் மூன்று முக்கியத் தலைவர்கள் ஒரே நாளில் ஒரே மருத்துவமனையில் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்டதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிறீலங்காவுக்கு ரோந்துப்படகுகளை கையளித்தார் அவுஸ்த்ரேலிய அமைச்சர்!

ஆஸ்திரேலியாவின் குடிவரவு குடியகல்வுக்கான அமைச்சர் ஸ்காட் மாரிசன் இலங்கைக்கு வந்து ஆஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடற்படை ரோந்துப்படகுகளை இலங்கை அரசுக்கு கையளித்திருக்கிறார்.இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அகதித்தஞ்சம் கோரி படகில் வருபவர்களை ஆஸ்திரேலிய அரசு சர்வதேச சட்டங்களை மீறி இலங்கையிடமே திரும்ப கையளிப்பதாக ஐநா மனித உரிமை கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆஸ்திரேலிய அரசை குற்றம் சுமத்திக்கொண்டிருக்கின்றன.இந்த பின்னணியில் ஆஸ்திரேலிய அரசின் குடிவரவு குடியகல்வு அமைச்சர் இலங்கைக்கு வந்திருப்பதும், ஆஸ்திரேலிய அரசின் சார்பில் இரண்டு கடல்ரோந்துக்கான நவீன படகுகளை இலங்கை அரசிடம் கையளித்திருப்பதும் சர்ச்சையை தோற்றுவிக்கக்கூடும் என்று கருதப்படுகிறது.ஆஸ்திரேலிய அரசின் சார்பில் அளிக்கப்பட்ட இந்த படகுகளை இலங்கை அரசுக்கு கையளிக்கும் நிகழ்வு கொழும்பு துறைமுகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில் இலங்கை சார்பில் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரரும் பாதுகாப்புத்துறை செயலருமான கோதாபய ராஜபக்ஷவும், கடற்படை உயர் அதிகாரிகளும் ஆஸ்திரேலிய அமைச்சர் ஸ்காட் மோரிசன்னும் கலந்துகொண்டனர். இந்த இரண்டு படகுகளுக்கும் இலங்கை அரசு ரத்னதீப, நிஹிகத என்று பெயர் சூட்டியிருக்கிறது.

08 ஜூலை 2014

படகில் வந்தவர்கள் ஆஸ்திரேலிய கடற்படை கப்பலில்!

ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம்கோரி படகில் சென்ற இலங்கையர்கள் 153 பேரை இலங்கையிடம் ஒப்படைப்பதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கின் விசாரணை ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம், இவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு தற்காலிக இடைக்காலத்தடை விதித்திருந்தது. இந்த 153 பேர் பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் இதுவரை பதில் சொல்லாமல் தட்டிக்கழித்து வந்த நிலையில், நீதிமன்ற வழக்கு விசாரணையின்போது இவர்கள் அனைவரும் தற்போது ஆஸ்திரேலிய கடற்படைக்கலனில் தங்க வைக்கப்படிருக்கிறார்கள் என்று முதல் முறையாக ஒப்புக்கொண்டது. மேலும் இவர்களில் யாரும் மூன்றுநாள் முன்னெச்சரிக்கை அறிவிப்பு கொடுக்கப்படாமல் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என்றும் ஆஸ்திரேலிய அரசு நீதிமன்றத்தில் இன்று உறுதிமொழி அளித்திருக்கிறது. இந்த 153 பேரில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். தாங்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் வழக்குகளைச் சந்திக்க நேரிடும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே இதே போல ஆஸ்திரேலியாவிடம் தஞ்சம் கோரி வந்த 41 இலங்கையரை கடலிலேயே விசாரித்து, அவர்களின் அகதித்தஞ்சக் கோரிக்கைகள் நிராக்கப்பட்ட பின், தமது கடற்படையினர் அவர்களை இலங்கையிடம் ஒப்படைத்துவிட்டதாக ஆஸ்திரேலிய அரசு உறுதிசெய்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 41 பேரும் நேற்று திங்களன்று இலங்கையை சென்றடைந்தனர். இவர்களில் 9 சிறார் உட்பட 27 பேரை நீதிமன்றம் செவ்வாயன்று பிணையில் விடுவித்தது. மீதமுள்ள 14 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வாறு புகலிடம் கோரியவர்கள் நாட்டைவிட்டு சட்டவிரோதமாக வெளியேறியது குறித்த வழக்கை சந்திப்பார்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆஸ்திரேலியாவால் திரும்ப அனுப்பப்பட்ட 41 பேரில் நான்கு பேர் மட்டுமே தமிழர்கள் என்று ஆஸ்திரேலியா கூறியிருந்தது.

07 ஜூலை 2014

வீட்டுக்குள் கூத்தடித்த மகனுக்கு மண்டையை பிளந்த தந்தை!

நயினாதீவு உற்சவத்திற்கு வீட்டில் உள்ளவா்கள் சென்றதைப் பயன்படுத்தி தென்பகுதியைச் சோ்ந்த தனக்குப் பழக்கமான யுவதி ஒருவரை வீட்டில் அழைத்து வந்து சல்லாபம் புரிந்த இளைஞா் ஒருவா் தந்தையால் கடுமையாகத் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் கடந்த ஞாயிற்குக் கிழமை கொக்குவில் கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தென்பகுதிப் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி கற்றுவரும் யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த இளைஞன் ஒருவா் கடந்த வாரம் இறுதியில் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அவா் யாழ்ப்பாணம் வரும் போது சிங்கள நண்பிகள் சிலரையும் அழைத்து வந்து இன்னொரு உறவினா் வீட்டில் தங்க வைத்துள்ளார். அவா்களும் நயினாதீவு செல்வதற்கு இளைஞனுடன் வந்ததாகத் தெரியவருகின்றது. தன்னுடன் வந்த சிங்கள யுவதிகளை தனது குடும்பத்தினருடன் நயினாதீவுக்கு அனுப்பி வைத்துவிட்டு தனக்கு வேலைகள் சில இருப்பதாகக் கூறி கோவிலுக்குப் போகாது இளைஞா் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இதே நேரம் இளைஞனுடன் வந்த யுவதிகளில் ஒரு யுவதியும் தான் யாழ்ப்பாணத்தில் உள்ள சிலரைச் சந்திக்கச் செல்ல வேண்டியிருப்பதால் கோவிலுக்கு வரமுடியாது எனத் தெரிவித்து குடும்பத்தினா் கோவிலுக்குச் சென்ற வாகனத்தில் ஏறி யாழ் நகரப் பகுதியில் இறங்கியுள்ளார். இதன் பின்னா் இளைஞன் குறித்த யுவதியை யாழ் நகரில் இருந்து ஏற்றி வந்து தனது வீட்டிற்குக் கொண்டு வந்துள்ளார். இளைஞனும் யுவதியும் மதுவும் அருந்தியுள்ளனா். இதன் பின்னா் இவா்கள் அடித்த கூத்து அயலில் உள்ளவா்களுக்கு தெரியும்படியாக இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் யுவதி மது போதையில் உச்ச குரலில் சிங்களப் பாட்டுப் பாடியபடி நிர்வாணமாக முற்றத்திற்கு வந்ததையும் அயலில் உள்ளவா்கள் அவதானித்துவிட்டு கோவிலுக்குச் சென்ற தந்தைக்கு தொலைபேசியில் தகவல் அனுப்பியுள்ளனா். கோவிலில் நின்ற குடும்பத்தினா் இடை நடுவில் வெளியேறி வீட்டுக்கு வந்தபோது அங்கு இருவரும் நிர்வாண நிலையில் கடும் போதையில் மயக்க நிலையில் கட்டிலில் கிடந்துள்ளனா். இதனால் கடும் கோமடைந்த தந்தை மகனை எழுப்பி தாக்குதல் நடாத்தியுள்ளார். மகனுக்கு அடி விழும் போது கண் விழித்த யுவதி நிர்வாணமாக வெளியே ஓடிவந்ததாகவும் இதனை மற்றைய சிங்கள நண்பிகள் தடுத்து நிறுத்தி அவா்களும் யுவதியைத் தாக்கி உள்ளே கொண்டு சென்றுள்ளனா். தாய் மற்றும் சகோதரிகள் தடுக்கத் தடுக்க மகனுக்கு தந்தை நடாத்திய அபிசேகத்தில் மகனின் தலையில் காயமேற்பட்டு இரத்தம் வழிந்துள்ளது. இதனையடுத்து அங்கு திரண்ட அயலவா்கள் தந்தையை மறித்து மகனை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது.

அவுஸ்ரேலியாவிலிருந்து அகதிகளை திருப்பி அனுப்ப தடை!

இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்படுவதனை தடை செய்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் கிறிஸ்மஸ் தீவு பகுதியை 153 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் படகு மூலம் சென்றடைந்திருந்தனர். சிட்னி உயர் நீதிமன்றில் இன்று நடைபெற்ற விசாரணைகளின் போது உயர் நீதிமன்ற நீதவான் சுசான் கிரினானன் (ளுரளயn ஊசநnயெn) இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய வேண்டுமென சட்டத்தரணிகள் கோரியுள்ளனர். புகலிடக் கோரிக்கையாளர்களில் 45 பேரின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் ஏனைய 105 புகலிடக் கோரிக்கையாளர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த இடைக்கால தடையுத்தரவு நாளை மாலை 4.00 மணி வரையில் மட்டுமே அமுலில் இருக்கும் என நீதவான் தெரிவித்துள்ளார். இந்த மனு நாளைய தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடு என்ற ரீதியில் புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர்களை ஆபத்தில் விடக் கூடாது எனவும் சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.

06 ஜூலை 2014

சாவகச்சேரி மருத்துவமனைக்குள் வாள்வெட்டு!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவிற்குள் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டுப் பேர் படுகாயமடைந்துள்ளனர். அல்லாரைப் பகுதியில் இரண்டு குழுக்களுக்குள் இடையில் ஏற்பட்ட முறுகலில் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டார். அதனையடுத்து குறித்த குழுவினர் வைத்தியசாலைக்குள் வந்து மீண்டும் தகராற்றில் ஈடுபட்டனர். இதனையடுத்த மீண்டும் வாள் வெட்டு இடம்பெற்றது. இதில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் மேலதிக சிகிச்சைக்கான யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதன்போது அல்லாரையை சேர்ந்த 25வயதுடைய அன்பழகன் என்பவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படும் வழியில். உயிரிழந்துள்ளார். சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றமையால் வைத்தியசாலையினர் பீதியில் உறைந்துள்ளதுடன் வைத்தியசாலை சூழல் பதட்டநிலையிலும் உள்ளது. தற்போது பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

05 ஜூலை 2014

யாழில் போலீஸ்காரனுக்கு செம அடி!

யாழ்.நகரப் பகுதியில் பெண்களிடம் அங்க சேட்டை புரிந்த சிறிலங்கா போலீஸ்காரன் ஒருவன் பொது மக்களால் நைய்யப்புடைக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,யாழ்.மத்திய கல்லூரியில் இன்று எல்லே போட்டி நடைபெற்றது. இப்போட்டிக்கான பாதுபாப்புக் கடமைக்கு சிறிலங்கா பொலிஸார் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிவில் உடையில் அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த சிறீலங்கா போலீஸ்காரன் ஒருவன் இன்று மாலை 6 மணியளவில் யாழ்.பொது நூலத்திற்கு அருகில் உள்ள பிரதான வீதியால் சென்ற பெண் ஒருவரிடம் அங்க சேட்டை புரிந்துள்ளார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த பொது மக்கள் பெண்ணிடம் அங்க சேட்டை புரிந்து விட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முற்பட்ட குறித்த சிறீலங்கா போலீஸ்காரனை மடக்கிப் பிடித்து நைய்யப்புடைத்துள்ளனர்.இதனால் காயமடைந்த சிறீலங்கா போலீஸ் அதிகாரி சிசிக்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என சொல்லப்படுகிறது.

பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணையும் பிரித்தானியா நாடுகடத்துகிறது!

படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட இலங்கைத் தமிழ் பெண் ஒருவர் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட உள்ளதாக சனல்4 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. யுத்த வலயங்களில் பாலியல் வன்முறைகளை தடுக்க சர்வதேச ரீதியான பிரகடனமொன்று அண்மையில் லண்டனில் கைச்சாத்திடப்பட்டிருந்தது. இந்த விசேட பிரகடனத்தை பிரித்தானியாவே முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான ஓர் நிலைமையில் ஆபத்துக்களை எதிர்நோக்கி வரும் பெண் ஒருவரை பிரித்தானியா நாடு கடத்த முயற்சித்து வருவதாக சனல்4 ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கைப் படையினரால் பல தடவைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக குறித்த பெண் தெரிவித்திருக்கும் நிலையிலும் அப்பெண்ணை நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்திருக்கிறது. குறித்த பெண் கடந்த 2010ம் ஆண்டில் பிரித்தானியாவை வந்தடடைந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேணிய தொடர்பு, படையினரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை மற்றும் உளவியல் பாதிப்புக்கு உள்ளானமை போன்ற காரணிகள் எடுத்துரைக்கப்பட்டும், அவை குறித்து பிரித்தானிய அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை என சனல் 4 சுட்டிக்காட்டியுள்ளது. யுத்த வலயத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பாலியல் வன்முறைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரித்தானியா உறுதியளித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்திருந்தார். எனினும், பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வரும் புகலிடக் கோரிக்கையாளர் விவகாரங்களுக்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய முக்கியத்துவம் அளிப்பதில்லை என சர்வதேச மன்னிப்புச் சபையும்
குற்றம் சுமத்தியுள்ளது.

04 ஜூலை 2014

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம்!

சிறீலங்கா படைகளின் நில ஆக்கிரமிப்பை எதிர்த்து இரண்டாம் கட்டமாக இன்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி அரச செயலகத்துக்கு முன்பாக கவன யீர்ப்புப் போராட்டம் ஒன்று நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இந்தக் கவனஈர்ப்புப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளைக் கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். இந்தக் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

03 ஜூலை 2014

யாழ்,மாநகரசபை வாகனம் விபத்து!6பேர் இடைநிறுத்தம்!

யாழ். மாநகர சபை ஆணையாளரின் வாகனம் விபத்துக்குள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மாநகர சபை பணியாளர்கள் 6 பேர் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என யாழ். மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார். யாழ். மாநகர சபை ஆணையாளர் பிரணவநாதனின் வாகனத்தை அனுமதியின்றி திருட்டுத் தனமாக எடுத்துச் சென்று விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. இதனால் பல்வேறு தரப்புக்களில் இருந்தும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரும் பணியில் இருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் இவர்களுக்கு எதிரான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது. இதில் 2சாரதிகளும் 4 உத்தியோகத்தர்களும் அடங்குகின்றனர். இவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை கடந்த 20 ஆம் திகதி யாழ். மாநகர சபை ஆணையாளரின் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றது மட்டும் அல்லாது குறித்த அறுவரும் போதையிலும் இருந்துள்ளனர். யாழ் மற்றும் தீவுப்பகுதியில் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தும் உள்ளனர். அதனையடுத்து அராலி சந்தியில் உள்ள மின்கம்பத்தோடு வாகனம் மோதுண்டமையினால் வாகனம் சேதத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

02 ஜூலை 2014

மனைவி மீது சந்தேகம் கொண்டு பிள்ளைகளை கொன்ற தந்தை!

வெளிநாடு சென்ற தன் மனைவி, அங்கு வேறொரு ஆணுடன் உறவு கொண்டுள்ளார் என்று ஏற்பட்ட சந்தேகத்தில், தனது பிள்ளைகளைக் கொன்று வீட்டிலேயே அந்தச் சடலங்களைத் தூக்கிட்டுவிட்டு தானும் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார் ஒருவர். எனினும் குறித்த நபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுக் காப்பாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கொழும்பு ஹட்டன் வீதியின், எட்டியாந்தோட்டை வல்பொலகொடச என்ற இடத்தில் இன்று அதிகாலை நடைபெற்றுள்ளது. தந்தையால் கொலை செய்யப்பட்டுத் தூக்கிடப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 7 வயது சிறுமி மற்றும் 3 வயது சிறுவன் ஆகியோரின் சடலங்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று அதிகாலை 2.08 அளவில் 119 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்குக் கிடைத்த முறைப்பாட்டை அடுத்து, அங்கு சென்ற எட்டியாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்போது தனது கைகளை வெட்டிக் கொண்ட குழந்தைகளின் தந்தை எனக் கூறப்படும் 35 வயதான ஒருவர், மனைவி வேலை நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் அவர் அங்கு பிறிதொரு நபருடன் தொடர்பை வைத்துள்ளார் என்றும் இதன் காரணமாகவே குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்ய முயன்றார் என்று பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

01 ஜூலை 2014

இலங்கையையும் கைப்பற்றப்போவதாக ஐ,எஸ்,ஐ,எஸ் தெரிவிப்பு!

ஐ.எஸ்.ஐ.எஸ்., என்ற முஸ்லீம் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த,அய்மன் மொகைல்தின் என்பவர்,ஒரு வரைபடம் மற்றும் 5 ஆண்டு திட்டத்தை டுவிட்டர்’ சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் ஈராக் முழுவதையும், தாங்கள் கைப்பற்றியதன் பின்னர், அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியா, இலங்கை போன்ற ஆசிய நாடுகளையும் கைப்பற்றும், ஐ.எஸ்.ஐ.எஸ்.,சின், ஐந்தாண்டு திட்டம் தயாராகி உள்ளதாக தெரிவித்துள்ளார். இவ் வரைபடத்தில், ஈராக் மட்டுமன்றி, ஆபிரிக்க நாட்டின் ஒரு பகுதி, இஸ்ரேல் உள்ளிட்ட அனைத்து மத்திய கிழக்கு நாடுகள், துருக்கி, இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் இந்தோனேஷிய நாடுகள், மியான்மர், மற்றும் ஒஸ்ரேலிய நாடுகளும் கறுப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளதுடன் இக் கறுப்பு நிறப் பகுதிகளை கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக ISIS முஸ்லீம் பயங்கரவாத அமைப்பினால் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதற்கு பாகிஸ்தானின் உதவியுடன் சில முஸ்லீம்கள் ஆயுதப்பயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இலங்கை முழுவதையும் தாம் கைப்பற்றப் போவதாக இந்த முஸ்லீம் பயங்கரவாத அமைப்பு அறிவித்திருக்கிறது.