பக்கங்கள்

28 பிப்ரவரி 2018

ஜெயேந்திர சரஸ்வதி காலமானார்!

Bildergebnis für ஜெயேந்திரர்சங்கர மடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி உயிரிழந்ததை தொடர்ந்து காமாட்சியம்மன் கோவில் நடை அவசரஅவசரமாக சாத்தப்பட்டது.காஞ்சிபுரம் சங்கரமடத்தின் மூத்த மடாதிபதியான ஜெயேந்திரருக்கு இன்று காலை திடீர் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து ஜெயேந்திரரின் உடல் சங்கர மடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. ஜெயேந்திரரின் மறைவை அடுத்த சங்கரமடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோவில் நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து வீதி உலா சென்றிருந்த காமாட்சியம்மன் சிலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு கோவில் நடைசாத்தப்பட்டது.வழக்கமாக 12 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். இன்று ஜெயேந்திரர் மரணத்தை முன்னிட்டு கோவில் நடை முன்கூட்டியே சாத்தப்பட்டுள்ளது.அயோத்தி பிரச்சனையில் மத்தியஸ்தராக நியமிக்கப்பட்ட ஜெயேந்திரர் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கர ராமன் கொலை வழக்கிலும் சிக்கி சர்ச்சைக்குள்ளானார்.

26 பிப்ரவரி 2018

தமிழரசுக் கட்சியில் இருந்து அனந்தி,சிவகரன் நீக்கம்!

வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் தமிழ் அர­சுக் கட்சியின் இளை­ஞர் அணி­யின் முன்­னாள் செய­லர் சிவ­க­ரன் இரு­வ­ரை­யும், இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வது என்று அந்­தக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்டத்­தில் ஏக­ம­ன­தாக முடிவெடுக்கப்பட்டுள்­ளது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையச் செயற்­கு­ழுக் கூட்­டம் கொழும்­பில் நேற்று முந்தினம் நடைபெற்­றது. ஏற்­க­னவே ஒழுக்­காற்று நட­வ­டிக்­கைக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்ள வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன் மற்­றும் சிவ­க­ரன் இரு­வ­ரை­யும் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கும் தீர்­மா­னம் அதில் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ளது.சிவ­க­ரனை மாத்­தி­ரம் இப்­போது நீக்­க­லாம். அனந்தி சசி­த­ரன் பற்­றிப் பின்­னர் பார்த்­துக் கொள்­ள­லாம் என்று யோசனை அப்­போது முன்­வைக்கப்பட்­டுள்­ளது. நட­வ­டிக்கை எடுப்­ப­தா­யின் இரு­வ­ருக்­கும் எதிராகவே நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்ற கருத்­தும் முன்வைக்­கப்­பட்­டுள்­ளது. இறுதியில் இரு­வ­ரை­யும் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வது என்று ஏகமனதாக முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது.2015ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில், மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஆதரிப்­பது என்று இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி தீர்­மா­னம் எடுத்த பின்­னர் அதனை மீறி இவர்­கள் இரு­வ­ரும் செயற்­பட்­ட­னர் என்ற குற்றச்­சாட்டு முன்­வைக்­கப்­பட்டே ஒழுக்­காற்று நட­வ­டிக்கை எடுக்க
ப்­பட்­டது.

25 பிப்ரவரி 2018

சுவிஸ் பாராளுமன்றம் முன்பாக தமிழ் மக்கள் போராட்டம்!

தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை ஒரு பயங்கரவாத இயங்கமாக அடையாளப்படுத்தி, அந்த இயக்கத்திற்காக உழைத்த தமிழ் தேசிய செயற்பாட்டாளர்களை தண்டிக்கும் நோக்கில் சுவிட்ஸர்லாந்து காவல்துறை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியன இணைந்து தொடர்ந்துள்ள வழக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.சுவிட்ஸ்லாந்தின் பேர்ன் நகரில் அந்த நாட்டு நாடாளுமன்றத்திற்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுதிரண்டு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது சுவிட்ஸர்லாந்து உட்பட ஐரோப்பிய வாழ் ஏராளமான புலம் பெயர் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.

22 பிப்ரவரி 2018

புகலிடம் கோரியவரை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!

இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடுகடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2012 யில் படகு வழியாக ஆஸ்திரேலியா சென்ற சாந்தரூபன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகு கட்டுபவராக இருந்துள்ளார். 2009 யில் ஏற்பட்ட புலிகளின் வீழ்ச்சி அவரின் வாழ்வையும் புரட்டிப்போட்டுள்ளது.இலங்கை ராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் ஆஸ்திரேலிய சமூகத்திற்குள் வாழ அனுமதிக்கப்பட்டு 2015 யில் குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது தஞ்சக்கோரிக்கை மனு நிராகரிக்கப்பட்டுள்ள சூழலில், அச்சுறுத்தல் என அஞ்சிய இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டு இருக்கிறார்.முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு அவர் நாடுகடத்தப்பட இருப்பதற்கான உத்தரவுச் சான்றை வழங்கிய ஆஸ்திரேலிய எல்லைப் படை விமான நிலையத்தின் எந்த பார்வையாளர்களையும் சந்திக்க அவருக்கு அனுமதி கிடையாது என்றும் கொழும்பு விமானத்தில் பாதுகாவலர் உடன் அவர் அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால் அந்த உத்தரவில் சாந்தரூபன் கையெழுத்திட
மறுத்திருந்தார்.‘சாந்தரூபனின் புகார் பரிசீலனையில்  இருப்பதால் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது’ என ஐ.நா.குழு ஆஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், திடீரென ஐ.நா.வும் அக்கோரிக்கையை திரும்பப் பெற்றமை மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்தது.சாந்தரூபன் உட்பட எந்த அகதிகளும் நாடுகடத்தப்படக் கூடாது என சில தினங்களுக்கு முன ஆஸ்திரேலியாவில் போராட்டமும் நடைபெற்றிருந்தது. அவர் நாடுகடத்தப்பட்டால் கடுமையான ஆபத்தில் சிக்கக்கூடும் என ஆஸ்திரேலியாவில் செயல்படும் தமிழ் அகதிகள் மையம் கவலை தெரிவித்திருந்தது.கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய சென்றிருந்த இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, “எல்லாம் மன்னிக்கப்பட்டது, திரும்பி வாருங்கள்” என தமிழ் அகதிகளை வரவேற்றிருந்தாலும் அதனை நிராகரிக்கும் விதமாக இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து சித்ரவதைகளுக்கு ஆளாவதாக சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அறிக்கைகள தெரிவிக்கின்றன. இப்படியான நிலையில், சாந்தரூபன் என்ற தமிழ் அகதியின் நிலை என்னவாகும் என்பதில் பெரும் ஐயம் ஏற்பட்டுள்ளது. அவர் இலங்கை சென்றடைந்ததற்கான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

18 பிப்ரவரி 2018

அமைச்சுப் பதவி புரளி என்கிறார் டக்ளஸ்!

மீன்பிடி அமைச்சராக பதவி ஏற்க உள்ளேன் என வரும் செய்திகள் தவறானவை என நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அரசாங்கத்துடன் இணையாமல் தொடர்ந்தும் வெளியில் இருந்து தனித்துவத்தை பேணுவதற்கே திடம்கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர் அண்மைய நாட்களில் பல புரளிகள் கிளப்பப்படுவதாகவும் கூறினார்.இதேவேளை யாழ். மாநகரசபையில் ஆட்சியமைத்தல், ஏனைய உள்ளூராட்சி சபைகளின் தொங்கு சபைகள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த டக்ளஸ்தேவானந்தா பல சபைகளில் பெரும்பான்மையை கொண்டிருக்கும் கூட்டமைப்பு ஆட்சியமைத்தால் அவர்கள் முன்வைக்கும் திட்டங்களின் அடிப்படையில் மக்களின் நலன் அடிப்படையில வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என தான் கூறியதாக தெரிவித்தார். அவ்வாறு தெரிவித்தமை கூட்டமைப்புடன் இணைவது அல்லது கூட்டமைப்பை ஆதரிப்பது என்ற பொருள்படாது எனக் கூறிய அவர், மக்களின் நலன் அடிப்படையில் சபைகளின் இயக்கத்திற்கு குந்தகம் விளைவிக்காமை என்ற முனைப்புடன் செயற்பட தீர்மானித்துள்ளதாகவும் கூறினார். எனினும் தற்போது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரும் மாநகரசபையில் ஆட்சியுரிமை கோரவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில் எவ்வாறு செயற்படுவது என்பது குறித்து கட்சியினுள் விவாதங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் டக்ளஸ்தேவானந்தா தெரிவித்தார். குறிப்பாக கூட்டமைப்பினர் ஆனோல்டை மேயராக்க முனைவதனை தமது கட்சியின் உறுப்பினர்கள் பலர் விரும்பவில்லை என்ற நிலையில் தமது உறுப்பினர்களை சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிப்பதா? அல்லது கட்சி எடுக்கும் தீரமானத்திற்கு கட்டுப்படுவதா என்ற முடிவுக்கு வரவில்லை என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றில் தடுக்கி விழுந்தார் மகிந்த!

ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உயர்நீதிமன்ற வாசற்படியில், தடுக்கி விழுந்த நிலையில், அருகில் இருந்து உதவியாளர்கள் தாங்கிப் பிடித்ததால், காயங்களின்றித் தப்பினார். இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் காலை உச்சநீதிமன்றத்தில் இடம்பெற்றது. உயர்நீதிமன்றத்தில் புதிய சட்டவாளர்களுக்கான உறுதிமொழியேற்பு நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதில், மகிந்த ராஜபக்சவின், பெறாமகளும் சட்டவாளராக உறுதிமொழியேற்றுக் கொண்டார்.இந்த நிகழ்வில், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த, மகிந்த ராஜபக்ச, சமல் ராஜபக்ச, பசில் ராஜபக்ச, கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டோர் குடும்பத்துடன் பங்கேற்றிருந்தனர். இதன்போது நீதிமன்ற வாசற்படியில் கால்வைத்து ஏறிய போது மகிந்த ராஜபக்ச, கால் தடுக்கி, நிலைதடுமாறி கீழே விழப்போனார். அப்போது அருகில் இருந்த அவரது உதவியாளர்கள் தாங்கிப் பிடித்துக் கொண்டதால் நிலத்தில் அடிபடாமல் காப்பாற்றப்பட்டார்.

16 பிப்ரவரி 2018

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் விடுத்துள்ள ஊடக அறிக்கை!

16-02-2018 
ஊடக அறிக்கை 
நன்றி நவிலல் 

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சின்னத்தில், தமிழ்த் தேசிய பேரவையாக பரிணமித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினராகிய நாம் முன்வைத்த கொள்கைக்கு வாக்களித்த எம் பாசத்திற்குரிய மக்களுக்கு எமது முதற்கண் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். எமது கொள்கையை வெற்றிபெறச் செய்வதற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட எமது கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் எமது சிரம் தாழ்த்திய நன்றிகள்.
அழுத்தங்களுக்கும் நெருக்குவாரங்களுக்கும் மத்தியில் உண்மையை வெளிக்கொணர முயற்சித்த ஊடகவியலாளர்களுக்கு எமது பாராட்டுதல்களும் நன்றிகளும். நெருக்கடிக்குள் இருந்த எமக்கு நேசக்கரம் நீட்டிய எம் புலம் பெயர் உறவுகளுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்.

தாயக மக்களுக்கு!
எமக்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களையும், இருட்டடிப்புகளையும் தாண்டி எம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த எம் அன்பிற்குரிய மக்களுக்கு எமது இதயம் கனிந்த நன்றிகள்.

உங்கள் நம்பிக்கைக்கு அமைய நாம் உங்களுக்காய் தொடர்ந்தும் பணியாற்றுவோம். நாம் பெற்றிருக்கும் வெற்றியென்பது தனித்து ஒரு கட்சியின் வெற்றியல்ல. மாறாக, தமிழர்களின் நலனை முதன்மைப்படுத்திய கொள்கைக்காக எமது மக்கள் வழங்கிய அங்கீகாரமும் வெற்றியுமாகும். இது ஒரு ஆரம்பம் மட்டுமே. நீண்ட கடினமான பணிகளும் சவால்களும் எமக்குக் காத்திருக்கிறது. தொடர்ச்சியான அழுத்தங்கள், அச்சுறுத்தல்கள், பாரபட்சங்களுக்கும் எதிர்நீச்சல் போட்டவாறே எமது கட்சியின் தோற்றமும் செயற்பாடும் இருந்தது, இருந்து வருகிறது. இதன் காரணமாக தமிழர் தேசத்தின் பெரும்பாலான மக்களை நேரடியாக சந்தித்து, உண்மை நிலைமைகளை எடுத்து விளக்கி, தமிழர் தேசத்தின் நலனை எவ்வாறு முன்னெடுத்துச் சென்று நிலைநிறுத்துவது என்பது தொடர்பாக எடுத்துக் கூறமுடியாமல் போனமை எமது ஆழமான கரிசனைக்குரிய விடயம். ஆயினும், இந்த குறையை நிவர்த்தி செய்வதற்காக எங்கள் உறவுகளின் வாசல் தேடி எதிர்காலத்தில் வருவோம். இலட்சியத்தில் உறுதிபூண்டு கொள்கையால் ஒன்றுபட்ட மக்களாலேயே தேசநலனை முன்னிறுத்தி செயற்பட முடியும். இதற்கு எமது மக்களின் ஆதரவு இன்றியமையாதது. பூகோள அரசியலால் நாம் சந்தித்த சவால்களையும், எமக்கிருக்கின்ற சந்தர்ப்பங்களையும் நாம் தெளிவாக எமது மக்களுக்கு எடுத்து விளக்கும் போது, இந்தத் தேர்தலில் எமக்கு வாக்களிக்காத எமது மக்கள்கூட, இனிவரும் காலத்தில் எமது கொள்கையை பலப்படுத்துவதற்கு அங்கீகாரமும் ஆதரவும் தருவார்கள் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதற்கு நாம் இன்று அடைந்துள்ள வெற்றி ஒரு சாட்சி. ஏனையோர் சொல்வதை செய்வதற்கும், தருவதைப் பெறுவதற்கும் நாம் ஒன்றும் அடிமைப்பட்ட இனமல்ல. எமது பேரம் பேசும் பலத்தை சரணாகதி அரசியலூடகவோ, இணக்க அரசியலுடாகவோ அதிகரிக்க முடியாது. ஆகவே, எமது தேசநலனை முதன்மைப்படுத்திய உறுதியான கொள்கையை எடுத்துள்ள நாம், அதனை அமுல்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலை வகுத்து, செயற்திட்டங்களை முன்னெடுக்க இருக்கிறோம். இது தொடர்பான சிறப்புக் கலந்துரையாடல்களை எதிர்காலத்தில் உங்களோடு மேற்கொள்ள இருக்கிறோம். தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளை கைவிட்டு தமது சுயநலத்திற்காக ஒற்றுமை என வேடமிட்டுள்ளோருடன் நாம் இணையப் போவதில்லை. பதவிகளுக்கான கூட்டையோ தேர்தல்களுக்கான கூட்டையோ நாம் விரும்பவில்லை. ஆனால், தேசத்தை கட்டியெழுப்புவதற்காக கூட்டை, எம் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான கூட்டினை எமது கொள்கையின் அடிப்படையில் உருவாக்குவதற்கு தயாராகவே உள்ளோம். இதேவேளை, தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி செயற்படுவதற்காக, தமிழ்த் தேசியக் கொள்கைப் பற்றுடைய அனைத்து சக்திகளையும் கட்சி பேதங்கள் அமைப்புப் பேதங்களைக் கடந்து எம்முடன் இணைந்து செயற்பட முன்வருமாறு நாம் கேட்டுக்கொள்கிறோம்.

புலம்பெயர்ந்த உறவுகளிற்கு!
தாயகத்தில் வாழும் மக்களுக்கும் புலம்பெயர்ந்து வாழும் உறவுகளுக்குமிடையில் உள்ள பிணைப்பை சிதைப்பதற்காய், பிளவுகளையும் பிரச்சினைகளையும் உருவாக்குவதற்கு பல்வேறு சக்திகள் பல சதித் திட்டங்களைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொண்டு வந்தனர், வருகின்றனர். தமிழர் தேசத்தை அழிப்பதை நோக்காக கொண்ட செயற்த்திட்டத்தின் ஒரு அங்கமே இந்தச் சதியும். ஆயினும், அவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்குவது போல், தமிழ்த் தேசிய பேரவையின் வெற்றிக்காய் புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் அர்ப்பணிப்போடு பணியாற்றினார்கள். இது புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் எங்கு வாழ்ந்தாலும், தமிழர் தேசத்தின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாடுகள் மீது கொண்டுள்ள பற்றுறுதியை எடுத்துக் காட்டுகிறது. புலம்பெயர் உறவுகளுக்கு எமது பாராட்டுதல்களையும் நன்றியையும் தெரிவிப்பதோடு, நாம் எமது தேசத்தின் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான பயணப் பாதையில் நெருப்பாறுகளையும் நீந்திக் கடக்கவேண்டியுள்ளதால், உங்களது ஆதரவை மென்மேலும் வழங்க வேண்டுமென்று அன்புரிமையோடு கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி 
செல்வராசா கஜேந்திரன் 
பொதுச் செயலாளர் 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 

14 பிப்ரவரி 2018

மக்களுடன் மாத்திரமே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி கூட்டு-காண்டீபன்!


தமிழ்த் தேசியக் கொள்கைக்காக கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏனைய கட்சிகள் இணைந்து பயணிக்க தயாராக வேண்டும்.  உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவையாக போட்டியிட்டு இரண்டு சபைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அந்தக் கட்சியின் பிரமுகர் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கொள்கைக்காக கட்டியெழுப்பப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏனைய கட்சிகள் இணைந்து பயணிக்க தயாராக வேண்டும். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவையாக போட்டியிட்டு இரண்டு சபைகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து செயற்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அந்தக் கட்சியின் பிரமுகர் சட்டத்தரணி காண்டீபன் தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழரசுக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள், தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் பொதுக்கொள்கை ஒன்றை வகுத்து தனிக்கட்சியாக செயற்பட வேண்டும் என வெளியான செய்தி தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே காண்டீபன் இவ்வாறு தெரிவித்தார். ஏனைய கட்சிகளுடன் கூட்டுச்சேர முடியாது என்றும், மக்களோடு மாத்திரமே தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூட்டுச்சேரும் என்றும் காண்டீபன் குறிப்பிட்டார். 30 ஆண்டுகளுக்கு மேலாக மக்களை ஏமாற்றி கொள்கைகளையும் கைவிட்ட கட்சிகளை மீண்டும் கூட்டு என்ற பெயரில் சேர்த்துக்கொள்வது மக்கள் ஆணைக்கு செய்யப்படும் துரோகமாகும். வரலாற்று ரீதியாக தவறிழைத்த கட்சித் தலைவர்கள் இன்றும் பதவிக்காக ”கூட்டு“ என்ற பெயரிலும், பொதுக்கொள்கை என்ற அடிப்படையிலும் ஒன்றுசேர நினைப்பதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறிய அவர், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் முன்னணிக்கு அளித்த வாக்குகளுக்கும், மக்கள் ஆணைக்கும் ஒருபோதும் துரோகமிழைக்காது. நீண்டகாலமாக தேசியத்திற்காக போராடி தேர்தல்கள் பலவற்றில் தோல்வியைக்கண்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியை மக்கள் தற்போது அடையாளம் கண்டு, வாக்களித்துள்ளனர். சலுகைகளுக்காகவும், வரப்பிரசாதங்களுக்காகவும் தேசியத்தை விலைபேசிய ஏனைய கட்சிகள் பொதுக் கொள்கை என்ற போர்வையில் குளிர்காய்ந்து மீண்டும் தமது பதவிகளைத் தக்கவைத்துக்கொள்ள முற்படுவதை ஏற்கமுடியாது. தமிழ் தேசியத்தை நிலைநாட்டி தமிழர்களின் இறைமையை உறுதிப்படுத்த நினைக்கும் ஏனைய தமிழ்க் கட்சிகள் விரும்பினால் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து பயணிக்க வேண்டும். மாறாக பொதுக்கொள்கை அடிப்படையிலும், பொதுச் சின்னமொன்றிலும் புதிய கட்சியாக பதிவுசெய்து செயற்படுவதை தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்றுக்கொள்ளாது. இளைஞர்களையும் அதாவது, புதிய இரத்தங்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைத்து தேசியத்தின் அடிப்படையில் தொடர்ச்சியாக பயணிப்பதே ஆரோக்கியமான அரசியல் என்றும் காண்டீபன் கூறினார்.

வடக்கு முதல்வருடன் முன்னணியினர் சந்திப்பு!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று காலை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும் உடன் பங்கேற்றிருந்தனர்.மரியாதையின் நிமிர்த்தம் குறித்த சந்திப்பு நிகழ்ந்ததாக இரு தரப்புத் தகவல்களும் தெரிவித்துள்ள போதும்  உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்று கட்சிகள் ஆட்சியமைப்பத்தில் இக்கட்டான தொங்கு நிலை ஏற்பட்டிருக்கும் இத்தருணத்தில் குறித்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் மிக்க சந்திப்பாகப் பார்க்கப்படுகின்றது.

12 பிப்ரவரி 2018

முன்னணியின் எழுச்சியையும் கூட்டமைப்பின் வீழ்ச்சியையும் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன!

தானியங்கு மாற்று உரை இல்லை.நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் யாழ். மாவட்டத்தில் மொத்தமாக இருந்த 416 ஆசனங்களில் 84 ஆசனங்களை பெற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டாவது கட்சியாக தன்னை அடையாளப்படுத்தி உள்ளது. ஆசன விகிதத்தில் கூட்டமைப்பு 36% வீதத்தினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 20%வீதத்தினையும் பெற்றது. வாக்குகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மொத்தமாக 104513 வாக்குகளையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 64580 வாக்குகளையும் பெற்றுள்ளன.81 ஆசனங்களை பெற்ற ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 3ஆவது இடத்தை தக்கவைத்தது. நான்காவது இடத்தை 32 ஆசனங்களைப் பெற்ற சிறீலங்கா சுதந்திரக்கட்சியும், 25 ஆசனங்களை பெற்ற ஐக்கியதேசியக்கட்சி 5ஆவது இடத்தையும், 21 ஆசனங்களை பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி 6வது இடத்தையும் பெற்றன. மாவட்ட ரீதியாக தனித்து ஒரு கட்சி பெற்ற அதி கூடிய 150 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றாலும், அதற்கு எதிராக இறங்கிய ஏனைய கட்சிகள் சுயேட்சைகள் 266 ஆசனங்களைப் பெற்றுள்ளன. இந்த வகையில் யுத்தத்தின் பின்னரான தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை போன்று இதுவரை சவால்களை எதிர்கொள்ளவில்லை. உள்ளூராட்சி தேர்தல் தமிழ்த்தேசிய முன்னணியின் எழுச்சியாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சரிவாகவும் அமைந்துள்ளது. ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்காலில் மௌனிக்கும் வரையும், பிரதான தேசியக் கட்சிகள் இரண்டும் யாழ் மாவட்டத்தில் தனித்து நிலைகொள்ள முடியாத நிலை நிலவியது. அதன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு கட்சிகளினதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட போதிலும் ஒருவர் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்றார். இருந்த போதும் இம்முறை உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு பேரினவாதக் கட்சிகளுக்கும் முறையே 32 – 25 என்ற வகையில் 57 ஆசனங்களை பெற்றுள்ளன. ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி 81 ஆசனங்களை பெற்று தன்னை மீள் நிர்மானம் செய்திருக்கிறது. 2 தசாப்தங்களாக ஆளும் அரசுகளோடு ஆட்சியில் பங்கெடுத்து தமிழ் தேசியத் தரப்புகளால் துரோகப் பட்டியலில் இணைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சிகளில் இருந்து வெளிவந்து, தமது வீணைச் சின்னத்தில் போட்டியிட்டு தனது வாக்கு வங்கியை நிரூபித்து அதன் பின்னரான 3 வருட காலப்பகுதியில் மக்களின் ஊடான அங்கீகாரத்தை பெற்று இருக்கிறார். மறுபக்கம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய சுரேஸ்பிறேமச்சந்திரனின் ஈபிஆர்எல்எவ் அணி பாரிய வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 21 ஆசனங்களையே பெற்றிருக்கிறது. வடமாகாண அமைச்சர் ஒருவரையும், நாடாளுமன்ற உறுப்பினரையும், மாகாண சபை உறுப்பினர்களையும் கொண்ட சுரேஸ் பிறேமச்சந்திரனின் தமிழ்த் தேசியப் பிடிப்பிற்கும், அரசியல் தொடர்ச்சிக்கும் இந்த ஆசன எண்ணிக்கை மிகக் குறைவானதே. இந்தக் கட்சிகளைத் தாண்டி சுயேட்சைகள் தமது தனிப்பட்ட ஆளுமைகளை பிரபல்யத்தை முன்னிறுத்தி 23 ஆசனங்களை பெற்றிருக்கிறார்கள்.

10 பிப்ரவரி 2018

கொள்கை வென்றது!புளியங்கூடலில் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பெரும் வெற்றி!

இன்று நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் உந்து உருளி(சைக்கிள்)சின்னத்தில் போட்டியிட்ட கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பெரும் வெற்றியீட்டியுள்ளார்.அவரது வெற்றிக்காக பாடுபட்ட அனைவரும் பெரும் மகிழ்வில் திளைத்துள்ளனர்.புளியங்கூடல் மண் விழாக்கோலம் பூண்டுள்ளது,வெடிச்சத்தங்கள் முழங்க இளைஞர்கள் பவனி வந்துகொண்டு இருக்கின்றார்கள்.ஞானேஸ்வரனின் வெற்றியானது அவரதும் அவர் சார்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸினதும் கொள்கைக்கு கிடைத்த வெற்றியாகும்.சமூக சேவையாளரான ஞானேஸ்வரன் தான் பெற்றிருக்கும் இந்த வெற்றியின் மூலம் தனது கடமையை சரிவர ஆற்றுவார் என்ற நம்பிக்கை அவரது தொகுதி மக்களிடையே மிகுந்து காணப்படுகின்றது.பண பலம் இல்லை கொள்கையே முக்கியம் தன்மானமே முக்கியம் என்பதை புளியங்கூடல் மக்கள் தமது வாக்குகளால் அடித்து சொல்லியிருக்கிறார்கள்.இந்த தருணத்தில் புளியங்கூடல் மக்களுக்கு புளியங்கூடல்.கொம் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறது.அங்கிருந்து உடனுக்குடன் செய்திகளை வழங்கிய செய்தியாளர்களுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.புலம்பெயர் தேசத்தில் இருந்தும் தனிப்பட்ட ரீதியில் சைக்கிளுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டவர்களுக்கும் நன்றிகள்.உந்து ஊர்தியில்(சைக்கிள்)கேட்டு வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.உரிமைக்கான போராட்டம் தொடரும் மக்கள் சக்தியோடு.

09 பிப்ரவரி 2018

சுவிசில் இலங்கை இளைஞர் அடித்துக் கொலை!

சுவிட்சர்லாந்தில் 19 வயதுடைய இலங்கை அகதி ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் Ecublens VD பகுதியில் உள்ள அகதிகள் தங்கவைக்கப்பட்டிருக்கும் முகாமில் கடந்த புதன்கிழமை காலை 9.25 மணியளவில், இந்தச்சம்பவம் இடம்பெற்றது. அதுமட்டுமின்றி இந்த கொலையை செய்தது இலங்கையைச் சேர்ந்தவர் தான் எனவும் அவருக்கு வயது 47 எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த சம்பவம் எப்படி நடந்தது, என்ன காரணம் என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை. முழுமையான விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என்று அங்கிருக்கும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

07 பிப்ரவரி 2018

இன்றுடன் தேர்தல் பிரச்சாரங்கள் நிறைவுக்கு வருகின்றன!

Bildergebnis für voteஉள்ளூராட்சி தேர்தலுக்கான வாக்களிப்பு, எதிர்வரும் 10ஆம் திகதி இடம்பெறவிருக்கின்றது. இதற்கான தேர்தல் பரப்புரைகள் யாவும், இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையுமென, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நாட்டிலுள்ள 276 பிரதேச சபைகள், 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் உள்ளிட்ட 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வாக்களிப்பே அன்றையதினம் காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரையிலும் இடம்பெறவுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.தேர்தல் பிரசாரங்களுக்கான, சிறுசிறு கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆதரவு திரட்டும் வீட்டுத் தரிசனம், ஒலிபெருக்கி உள்ளிட்ட சாதனங்கள் மூலமான பிரசாரம் யாவும் இன்று நள்ளிரவு 12 மணியுடன், முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்” என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்தார். இம்முறை வாக்களிப்புகள், 13, 400 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறப் போகின்றன. இத்தேர்தலின் ஊடாக, உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்காக, இம்முறை மொத்தமாக 8,356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். பதிவு செய்யப்பட்டவற்றில் 43 அரசியல் கட்சிகளும், 272 சுயேச்சைக் குழுக்களும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் போட்டியிடுகின்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கலாக 57,252 அபேட்சகர்கள் போட்டியிடுகின்றனர். நடைபெறப் போகும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 2017ஆம் ஆண்டின் வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 15,760,867 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

04 பிப்ரவரி 2018

சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!

இலங்கையின் 70ஆவது சுதந்திரதினம் இன்று கொண்டாடப்பட்ட நிலையில், கேப்பாபுலவிலும், வவுனியாவிலும், கிளிநொச்சியிலும் சுதந்திர தினத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கேப்பாபுலவு பூர்விக கிராமத்தை மீட்பதற்காகக் கடந்த வருடம் மார்ச் மாதம் 1ஆம் திகதி ஆரம்பித்த நிலமீட்பு போராட்டம், இன்று 339ஆவது நாளாகவும் தொடர்கிறது. போராட்டம் மேற்கொள்ளும் ஒருவர் கறுப்பு உடையணிந்து, பரண் மீது ஏறி உணவு தவிர்ப்புப் போராட்டத்தையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரதப் போராட்டத்தையும் முன்னெடுத்தார். சுதந்திர தினத்தை எதிர்க்கிறோம், வெறுக்கிறோம் எனத் தெரிவித்து, தமது போராட்ட இடமெங்கும் கருப்பு கொடிகள் கட்டி பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தொங்கவிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுகம் வேலாயுதம்பிள்ளை என்பவர், கடந்த வருடம் ஜனவரி மாதம் 31ஆம் திகதி பிலவுக்குடியிருப்பு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்தபோது, மக்களின் காணிகள் விடுவிக்க வேண்டும் எனக் கூறி கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி கேப்பாபுலவு மாதிரிக் கிராம பிள்ளையார் ஆலயத்தில் சிவபூசை ஒன்றை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக சிவ வழிபாட்டில் ஈடுபட்டு வந்த அவர், பிலவுக்குடியிருப்பு காணி விடுவிக்கப்பட்ட கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு பூர்விக வாழ்விடம் முழுமையாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக வாயிலில் கூடாரம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்தார். அவரது போராட்டம் இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், கறுப்பு உடையணிந்து பரண் மீது ஏறி, உணவு தவிர்ப்புப் போராட்டத்மையும், சுதந்திர தினத்தை எதிர்த்து மௌன விரத போராட்டத்தையும் முன்னெடுத்தார். இதேவேளை, “இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்திலும் எமக்கான சுதந்திரம் இல்லாத நிலையே உள்ளது” எனத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், வவுனியாவில் இன்று அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டி வீதியில் பிரதான தபால் நிலையத்துக்கு முன்பாக, கடந்த 346ஆவது நாளாக சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், 70ஆவது சுதந்திர தினத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இக்கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையிலேயே, இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்துடன் இலங்கையின் 70 ஆவது ஆண்டு சுதந்திர தினமான இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், கறுப்பு உடையணிந்து, தலையில் கறுப்புப் பட்டி அணிந்து சுதந்திர தினத்தை புறக்கணித்தனர். கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று 350 நாட்களாக காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு கோரி போராடி வரும் உறவுகள், எமக்கு எந்த தீர்வும் கிடைக்கபெறவில்லை என்றும் இந்த சுதந்திர தினத்தை எங்களால் கொண்டாட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்கள்.

02 பிப்ரவரி 2018

பிடல் காஷ்ரோவின் மகன் தற்கொலை!

கியூபா புரட்சியாளர் பிடல்காஸ்ட்ரோவின் மூத்த மகன் பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியாஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டார். கடந்த பல மாதங்களாக மன அழுத்த சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று காலை (வெள்ளிக்கிழமை), கியூபாவில் தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 68. அண்மையில்தான் அவர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. வீடு திரும்பியபோதும் அவர் தொடர் சிகிச்சையிலேயே இருந்தார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்கு அவரது குடும்பத்தினரால் முடிவு செய்யப்படும் என்றும், மேற்கொண்டு எந்த தகவலும் இல்லை என்றும் உள்நாட்டு ஊடங்கள் கூறுகின்றன.

01 பிப்ரவரி 2018

'ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு'அடித்து சொல்கிறார் ரணில்!


நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரியிருக்கிறது. ஆனால்,  ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும்  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில், சமஷ்டி முறைக்குச் சமனான தீர்வொன்றையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருக்கிறது. ஆனால், ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத தீர்வையே தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.“ஒன்றையாட்சிக்குள் தான் நாம் இருக்க வேண்டும். அதற்காக, அதிகாரங்களைப் பகிரக் கூடாதெனக் கூறவில்லை. ஒற்றையாட்சிக்குப் பங்கம் ஏற்படாத வகையில், அதிகாரங்கள் பகிரப்படல் வேண்டும்.அப்போது தான் தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கலாம்” என்றும் ரணில் தெரிவித்திருக்கிறார்.