பக்கங்கள்

28 டிசம்பர் 2016

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இரு தமிழர்கள் மரணம்!


தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 நேற்று முன்தினம் இரவு  11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர். Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது. இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒன்றான பிக்கறிங்கில் Taunton வீதி & Altona வீதியும் சந்திக்கும் பகுதியில் 26-11-2016 நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் நடைபெற்ற கோரவிபத்தில் இரண்டு வாகன சாரதிகள் கொல்லப்பட்டுள்ளனர். Honda Accord, Toyota Corolla ஆகிய வாகனங்களே விபத்துக்குள்ளாகியுள்ளன என தெரியவருகிறது. இவ்கோர விபத்து தொடர்பான விசாரணைகளை DURHAM பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இவ்கோர விபத்து தொடர்பான தகவல்கள் இருப்பின் DURHAM பொலிஸாருக்கு அறிவிக்கலாம். மேற்படி விபத்தில் கொல்லப்பட்ட ஒருவர் நீர்வேலியைச் சேர்ந்த சதீஸ் லோகநாதன் (35), இரண்டாவது நபர் 21 வயதுடைய பல்கலைக்கழக மாணவர் அத்தீஸ் பலாசுரமணியம் எனவும் தெரியவருகிறது.

26 டிசம்பர் 2016

சுனாமி நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டது!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இன்று சுனாமி நினைவுத் தூபி திறந்தவைக்கப்பட்டு, குறித்த இடத்தில் மத வழிபாடுகளும் மலர் அஞ்சலி நிகழ்வுகளும் இடம்பெற்றன. சுனாமி பேரலையில் சிக்கி உயிர்நீத்தோரின் நினைவாக அங்கு அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி, யுத்த காலத்தில் படையினரால் அழிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் ஏற்பாட்டில் புதிதாக தூபி அமைக்கப்பட்டு, சுனாமி ஏற்பட்டு 12 வருட நினைவுதினமான இன்று திறந்து வைக்கப்பட்டது. சுனாமியால் உயிர்நீத்த ஆயிரக்கணக்கானவர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள குறித்த இடத்தில், இன்றைய தினம் அவர்களது உறவுகள் மலரஞ்சலி செலுத்தினர். இந் நினைவு நிகழ்வில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மூதாளர்களை அவமானப்படுத்திய நத்தார் பரிசு!

கிளிநொச்சி ஊற்றுப்புலம் கிராமத்தில் நேற்று நடைபெற்ற நத்தார் தின நிகழ்வில் மூதாளர்கள் பலரை அவமானப்படுத்தும் செயல் இடம்பெற்றுள்ளது. நத்தார் தின நிகழ்வில் மூதாளர்களுக்கு உதவும் நோக்கில் பரிசுப் பொதிகள் வழங்கப்படுவதாக அறிவித்து குறித்த கிராமத்தில் வாழ்கின்ற 136 மூதாளர்களை பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்துள்ளனர். கிராமத்தின் முதியோர் சங்கமும், வெளி மாவட்ட அமைப்பும் இணைந்து பொதிகளை மூதாளர்களுக்கு வழங்கினர். குறித்த பொதிகளை பிரித்து பார்ப்பதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மூதாளர்களுக்காக வழங்கப்பட்ட பொதிகளில் ஆடைகளே காணப்பட்டதாகவும், அவை எந்த வகையிலும் தமக்கு பொருத்தமில்லாத ஆடைகள் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பரிசுப் பொதிகளில் மேலைத்தேய பெண்கள் அணியக்கூடிய உள்ளாடை களே காணப்பட்டுள்ளன. மேலும் கிழிந்த புடைவைகளும் குறித்த பொதிகளில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு உபயோகிக்க முடியாத ஆடைகளை பரிசாக வழங்கியது எந்த விதத்தில் நியாயம் என பொது மக்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கிராமத்தில் வாழ்கின்ற மூதாளர்கள் என்ற காரணத்தின் அடிப்படையிலேயே தாம் அவமானப்படுத்தப்பட்டதாகவும், குறித்த செயலினால் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அறிவொளி எனும் அமைப்பு ஒழுங்கு செய்திருந்ததாக செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

25 டிசம்பர் 2016

சர்வதேச விசாரணையின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ள ரவிராஜ் கொலை வழக்கு!

தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் போர் குற்றங்களை விசாரிப்பதற்கு சர்வதேச விசாரணையே தேவை என்பதை ரவிராஜ் படுகொலை வழக்கின் தீர்ப்பு உணர்த்தியுள்ளதாக வட மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கையின் நீதித்துறையில் இருந்து தமிழ் மக்களுக்கு எந்தவொரு நீதியும் கிடைக்காது என்ற செய்தி இதன் மூலம் மீண்டும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறப்பட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் நிறைவை மிக உற்சமாக கொண்டாடவுள்ள நிலையில் சிங்கள பௌத்த பேரினவாதம் தெளிவான செய்தியை கூறியிருக்கிறது. ரவிராஜின் படுகொலை மூலம் ஈழத் தமிழர்களுக்கும் குடும்பத்தினருக்கும் இழைக்கப்பட்ட அநீதிக்கான தீர்வு வழங்கப்படாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பில் எந்தவொரு குற்றவாளிகளையும் கண்டறிய தவறிய அரசாங்கம், அனைத்து சந்தேகநபர்களையும் தற்போது விடுவித்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

24 டிசம்பர் 2016

மனிதம் மரணித்து விட்டதா?தையிட்டியில் மூதாளர்களின் அவல நிலை!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள்தையிட்டியை பிறப்பிடமாகக் கொண்ட மூதாளர்களான தம்பதியர் இருவர் தனித்து விடப்பட்ட நிலையில் தெல்லிப்பளையில் நோயோடும் பசியோடும் கடந்த சில வருடங்களாக போராடியே வாழ்ந்து வந்த அவலம் கண்களை குளமாக்கியது.இரண்டு வாரங்களாக பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட மூதாளரான பெண்மணி மாற்றுடை இன்றி இயற்கை கடன்கள் அனைத்தையும் கழித்தவாறு தரையில் முடங்கி கிடக்க,காது கேளாத,நடக்கவே தள்ளாடும் கணவன் செய்வதறியாது குப்பி விளக்குடன் காலம் கழித்த அவலம் நெஞ்சத்தை பிழிந்தது.ஆனாலும் இன்னும் மனிதத்தை நேசிக்கும் தெல்லிப்பளை பிரதேச உத்தியோகத்தர்கள் சிலர் மிக கரிசனை கொண்டு எம் சுகாதார துறையை தொடர்பு கொள்ள நாமும் சைவ மகா சபையினரும் இணைந்து அத்தாயாரை தெல்லிப்பளையில் சேர்த்து பின் மேலதிக சிகிச்சைக்கு யாழ்,போதனா வைத்தியசாலையில் அனுமதித்தோம்.அகதி அரசி எனும் படைப்புக்காய் முதலமைச்சர் விருது வென்றவரும் மனைவியின் துயர் கண்டு இயாலாமையோடு போராடிக் கொண்டிருந்த அந்த பெரியவருமான இராசதுரை ஐயாவை சைவ மகா சபை அலுவலகத்தில் தங்க வைத்தோம். இவ்வளவில் எம்மை இயக்கி மன நிறைவைத் தந்த பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் கருணையை பணிகின்றோம் அன்பின் உறவுகளே உங்கள் வீட்டின் அருகிலும் இவ்வாறான மூத்தோர் அநாதரவற்று இருக்கலாம். எம்மால் முடிந்தளவு உதவுங்கள் குறைந்த பட்சம் அவசர அம்புலன்ஸ் இலக்கமான 021 2225555 / 6666 ற்கு அழைத்து வைத்தியசாலையில் சேர்க்கவாவது உதவுங்கள்.

நன்றி:நந்தகுமார் பரா(முகநூல்)

23 டிசம்பர் 2016

ஜெர்மன் தாக்குதல்தாரி இத்தாலியில் சுட்டுக்கொலை!

பெர்லின் சந்தேக நபர் அனிஸ் அம்ரிஜெர்மன் பெர்லின் நகரில் திங்களன்று கிறிஸ்துமஸ் சந்தையில் பார ஊர்தியை செலுத்தி 12 பேரைக்கொன்ற சந்தேக நபர் அனிஸ் அம்ரி இத்தாலியின் மிலன் நகரில் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இத்தாலிய உளவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அந்த பார ஊர்தியை செலுத்தும் பாகத்தில் இருந்த கைரேகையும் சுட்டுக்கொல்லப்பட்டவரின் கைரேகையும் ஒத்துப்போவதாகவும் இத்தாலிய உள்துறை அமைச்சர் மார்கோ மின்னிட்டி தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை விடியற்காலை மூன்றுமணிக்கு மிலன் நகர காவல்துறையினருக்கும் அம்ரிக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் அவர் கொல்லப்பட்டதாக அவர் கூறினார். ரோந்த்துக்கு சென்ற மிலன் காவல்துறையினர் அம்ரி சாலையில் நடந்து சென்றதைக்கண்டதாகவும், அவரது அடையாள அட்டையை காட்டும்படி காவலர்கள் கோரியபோது அவர் தனது பையில் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்து இஸ்லாமிய கோஷமிட்டபடி சரமாரியாக சுடத் தொடங்கியதாகவும் அமைச்சர் கூறினார். ஒன்பது மாதமே ஆன பயிற்சி காவல்துறை அதிகாரி பதிலுக்கு அம்ரியை சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காவல்துறை அதிகாரிக்கும் காயம் பட்டிருந்தாலும் அவரது காயங்கள் ஆபத்தானவை அல்ல என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. பெர்லினில் நடந்த பார ஊர்தித் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். 48 பேர் காயமடைந்தனர்.என்பது குறிப்பிடத்தக்கது.

20 டிசம்பர் 2016

ஜெர்மனியில் நடந்த தாக்குதல்!பதிலடி எப்போது?

கிறிமஸ் சந்தையில் புகுந்து தாக்கிய லாரிஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் உள்ள மக்கள் நெரிசல் மிகுந்த சந்தைப் பகுதியில், லாரியை ஓட்டிச் சென்று 12 பேர் கொல்லப்பட்டதற்கு காரணமான தாக்குதல் சம்பவத்துக்கு எப்போது பதிலடி கொடுக்கப் போகிறீர்கள் என்று, ஜெர்மனியின் கன்சலர் அங்கெலா மெர்கலுக்கு அந்நாட்டில் உள்ள குடியேறிகளுக்கு எதிரான கட்சியான ஏஎஃப்டி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.இத்தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையை எப்போது ஜெர்மனி எடுக்கப் போகிறது என்றும் அவர்கள் வினவியுள்ளனர். நேற்றிரவு ( திங்கள்கிழமை) நடந்த தாக்குதல் சம்பவத்தை, மெர்கலின் குடியேறிகளுக்கான திறந்தவெளி கொள்கையே காரணம் என ஏஎஃப்டி கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். அங்கெலா மெர்கலின் குடியேறிகளுக்கு ஆதரவான கொள்கை திட்டத்தால், கடந்த ஆண்டு சுமார் பத்து லட்சம் பேர் ஜெர்மனிக்கு வந்துள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ்

19 டிசம்பர் 2016

நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பி.க்கும் தொடர்பில்லையாம்!

நாரந்தனை சம்பவத்திற்கும் ஈ.பி.டி.பிக்கும் சம்மந்தம் இல்லை என அந்தக் கட்சியின் செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். ஈ.பி.டி.பி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் வழக்கு தொடர்பாக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால், அந்த விடயம் தொடர்பில் நான் அதிகம் பேச நினைக்கவில்லை. இருந்தும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் கட்சியின் ஆதரவாக செயற்படுகின்றனர். இதே போல் ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், சிறையில் உள்ளவர் கட்சியின் ஆதரவாளரே தவிர அவர் கட்சி உறுப்பினர் அல்ல. அவர் வேறு கட்சி சார்ந்தவர். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டபட்டவர்கள் மக்கள் மத்தியில் செல்வாக்குள்ளவர்களாவர். ஒட்டுமொத்தமாக இந்த வழக்கில் ஈ.பி.டி.பிக்கு தொடர்பு இல்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். 2001ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரசார அணியினரை வழிமறித்து தாக்கியதில் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டு, 18 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கில் ஈபிடிபி உறுப்பினர்கள் மூவருக்கு இரட்டை மரணதண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

14 டிசம்பர் 2016

ஹேக்கர்களிடம் அப்பல்லோ கம்ப்யூட்டர்கள்!

Legion hacks server of Chennai Apollo hospital அப்பல்லோ மருத்துவமனை கம்ப்யூட்டர்களை ஹேக் செய்திருப்பதாக லெஜ்ஜியன் குழு அறிவித்துள்ளது. அத்துடன் அப்பல்லோ மருத்துவமனையில் விஐபிகளுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்களை வெளியிட்டால் பெரும் குழப்பம் வரும் எனவும் அக்குழு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி, விஜய் மல்லையாவின் ட்விட்டர் அக்கவுண்ட்டுகளை முடக்கி பரபரப்பை கிளப்பிய ஹேக்கர்ஸ்தான் லெஜ்ஜியன் குழுவினர். தற்போது அப்பல்லோ மருத்துவமனை கம்ப்யூட்டர்களை ஹேக் செய்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.அத்துடன் அப்பல்லோ மருத்துவமனையில் விஐபிக்களுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதை வெளியிட்டால் பெரும் குழப்பம் ஏற்படும் எனவும் லெஜ்ஜியன் குழுவினர், வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். மேலும் அடுத்ததாக இங்கிலாந்தில் பதுங்கி இருக்கும் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடியின் ட்விட்டர் அக்கவுண்ட்டை தாங்கள் ஹேக் செய்யப் போவதாவும் மிரட்டல் விடுத்துள்ளது லெஜ்ஜியன் குழு.

07 டிசம்பர் 2016

ஜெயலலிதாவின் ஆலோசகர் துக்ளக் ஆசிரியர் சோ காலமானார்!

Modi Meets Cho.Ramasamyஅப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டிருந்த மூத்த பத்திரிகையாளரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான சோ ராமசாமி இன்று காலை காலமானார். அவர் தனது நெருங்கிய நண்பரான முதல்வர் ஜெயலலிதா உயிரிழந்தது தெரியாமலேயே உயிரிழந்துள்ளார். சோ ராமசாமி பத்திரிக்கையாளர், அரசியல் விமர்சகர், நடிகர் என பன்முகத் தன்மைக்கொண்டவர். கடந்த சில மாதங்களகாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு மருத்துவமனையில் மூச்சுதிணறல் காரணமாக அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பத்திரிக்கைத் துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சோ ராமசாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பர் ஆவர். ஜெயலலிதா அரசியல் தொடர்பாக சோவிடம் ஆலோசனை கேட்பார், அவரது ஆலோசனைப்படி நடப்பார் என கூறப்படுவதும் உண்டு. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதா உடல்நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானர். அவரது உடல் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில் ஜெயலலிதாவின் மறைவு செய்தி சோவுக்கு தெரிவிக்கப்படவில்லை என தற்போது தெரியவந்துள்ளது. தனது நெருங்கிய நண்பர் உயிரிழந்தது தெரியாமலேயே அடுத்த 2 நாட்களுக்கு சோ ராமசாமி உயிரிழந்துள்ளார்.CM Jayalalitha meets ailing journalist Cho Ramaswamy

05 டிசம்பர் 2016

முதல்வர் ஜெயலலிதா காலமானதாக அறிவிப்பு!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு (வயது 68) மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற செய்தியை அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தியைக் கேட்டு தமிழகமே பெரும் அதிர்ச்சியிலும் துயரத்திலும் உறைந்துபோயுள்ளது. முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 22-ந் தேதியன்று உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2 மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.நீர்ச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டதாக முதலில் கூறப்பட்டது. பின்னர் நுரையீரல் தொற்று பாதிப்பு உள்ளது என அப்பல்லோ மருத்துவமனை கூறியது. இதனால் லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிட்டதாக அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி தொடர்ந்து கூறிவந்தார்.அத்துடன அப்பல்லோ போய்விட்டு வந்த அதிமுக தலைவர்களும், ஜெயலலிதா நன்றாக குணமடைந்துவிட்டார்; வீடு திரும்புகிறார் என கூறி வந்தனர். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழகமே அதிர்ந்தது. இதன் பின்னர் ஜெயலலிதாவுக்கு ரத்தநாள அடைப்பைப் போக்கும் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். ஆனால் திங்கள்கிழமை பிற்பகல் முதல் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவரும் ஜெயலலிதாவின் உடல்நிலை மிக மிக மோசமாகிவிட்டது எனவும் கூறியிருந்தார். பின்னர் மாலை 5.30 மணியளவில் ஜெயலலிதா காலமாகிவிட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாக பரவியது. அதிமுக தலைமை அலுவலகத்திலேயே கூட அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.பின்னர் மாலை 5.45 மணியளவில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை தொடருவதாக அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தொடர்ந்து ஜெயலலிதாவின் உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் கடுமையாக போராடினர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் இன்று நள்ளிரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அப்பல்லோ மருத்துவமனை இதை உறுதி செய்து அறிக்கையும் வெளியிட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா நம்மைவிட்டு பிரிந்துவிட்டாரே என்ற சோகம் ஒட்டுமொத்த தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் உள்ளாக்கியுள்ளது. ஏழைகளின் காவலராக விளங்கிய எங்கள் தலைவியை நாங்கள் இழந்துவிட்டோமே என கண்ணீரும் கம்பலையுமாக அதிமுகவின் அப்பல்லோ மருத்துவமனைகளில் கட்டுக்கடங்காத வகையில் கூடியுள்ளனர். தமிழகம் முழுவதும் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

27 நவம்பர் 2016

புலிகளின் ஆட்சியில் ஈழம் இப்படி இருந்தது!

விடுதலைப் புலிகளின் ஆளுகையில் ஈழம் இருந்தபோது எப்படி இருந்தது என்பதை விளக்கும் ஒரு அருமையான புகைப்படத்தை அமெரிக்க புகைப்படக் கலைஞர் ஸ்டீவன் மெக்கர்ரி வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு சிங்களர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்திட்டு வருகின்றனர். அதற்கு தமிழர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சிங்களர்களின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து இந்தப் புகைப்படத்தை அகற்றாமல் வைத்துள்ளார் மெக்கர்ரி.இந்தப் புகைப்படத்தில் வயல் வெளி ஒன்றில் ஒரு விவசாயி ஏர் பூட்டி உழுதுகொண்டிருக்கிறார். மறுபுறம் விடுதலைப் புலிகள் வீரர்களும், வீராங்கனைகளும் வரிசையாக வரப்பு மீது நடந்து வரும் காட்சி உள்ளது. விடுதலைப் புலிகள் வசம் இருந்தபோது ஈழ மக்கள் எந்த அளவுக்கு நிம்மதியாக இருந்தனர், தங்களது வழக்கமான வேலைகளை எப்படி நிம்மதியாக செய்து வந்தனர் அதை விட முக்கியமாக அவர்களது நிலம் அவர்களிடமே இருந்தது என்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தப் புகைப்படம் அமைந்துள்ளது. மெக்கர்ரி அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஆவார். இவரை டக்கென புரிந்து கொள்ள வேண்டுமானால்.. இவர்தான் வித்தியாசமான கண்களுடன் கூடிய ஆப்கானிஸ்தான் பெண்ணை புகைப்படம் எடுத்துப் பிரபலமானவர். 1984ம் ஆண்டு ஆப்கன் கேர்ள் என்ற பெயரில் இந்தப் புகைப்படம் அப்போது நேஷனல் ஜியாகிரபி புத்தகத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.
ஏராளமான விருதுகளையும் குவித்துள்ள மெக்கர்ரியின் இந்த ஈழத்துப் புகைப்படம் தற்போது வைரல் ஆகியுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசின் மாவீரர் தின அறிக்கை!

நவம்பர் 27, 2016.

சுயநிர்ணய
உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும்! அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் எமது அறமாக ஏற்கும் உறுதி எடுப்போம்! இன்று மாவீரர் நாள். தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஆகுதியாக்கிய நமது மாவீரர்களை நாம் எமது இதயக்கோவிலில் வைத்துப் பூசிக்கும் நாள். மாவீரர்கள் நமது மக்களின் விடுதலைக்காய் களமாடினார்கள். நெருப்பாற்றைத் தாண்டினார்கள். புயலை வாயால் ஊதிக் கடந்தார்கள். காற்றுப் போகமுடியா வெளியில் கூடப் புகுந்து பகை அழித்தார்கள். அவர்கள் மண்ணில் வீழும் போதெல்லாம் நமது மண்ணின் விடுதலைக்காய் வித்தாய் வீழ்ந்து போவதாகவே எண்ணிக் கொண்டார்கள். தமிழீழ தேசம் தனது விடுதலைக்காய் இறுதிவரை போராடும் என்பதே மாவீரர்களின் இறுதிமூச்சின் நினைவாக இருந்தது. மாவீரர்கள் ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆள்வதில் என்ன தவறு என்ற பழம் பெருமையினை மீட்டெடுக்கும் நோக்குடன் ஆயுதம் தரித்தவர்கள் அல்ல. மேடைகளில் வீரவசனம் பேசும் அரசியலை நடத்தியவர்களும் அல்ல. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பில் இருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாத்து எமது கௌரவமான இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவே மாவீரர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எவ்வித தேசிய சமூக ஒடுக்குமுறைகளுக்கும் அப்பாற்பட்டு அதியுயர் சமூகநீதி நிலவும் தேசம் ஒன்றினைப் படைக்க வேண்டும் என்ற இலட்சிய உறுதியின்பாற்பட்டே போராட்டத்தீயில் அவர்கள் குதித்தார்கள். மாவீரர்கள் ஆயுதங்கள் மீது கொண்ட காதலால் கருவி ஏந்தியவர்களுமல்ல. இவர்களின் போராட்டப்பாதையினை எதிரியின் ஆயத வன்முறைதான் நிர்ணயம் செய்தது. தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டங்களும் எதிர்ப்பும் ஆயுதமுனையில் நசுக்கப்பட்டபோது அதன் தர்க்கரீதியான எதிர்வினையாகவே இவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வந்தது. சிங்கள தேசத்தின் தலைவர்கள் பௌத்த சமயக் கோட்பாடுகளின் பாற்பட்டு உண்மையாக நடந்திருப்பார்களேயாயின் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய அவசியம் எமது மாவீரர்களுக்கு ஏற்பட்டிருக்காது. மாவீரர்களின் போராட்டமே தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்துலக கவனத்தைப் பெற்றுத் தந்தது. தமிழ் மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் மாவீரர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். அவர்களது நினைவுகள் தமிழ் மக்களின் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும். இந்த நினைவு எமது சுதந்திர வேட்கையைச் சுமந்து நிற்கும். அன்பான மக்களே! நாம் இன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு காலகட்டத்தில் நிற்கிறோம். மாவீரர்களின் கனவு சுமந்து சுதந்திர வாழ்வுக்காகத் தொடர்ந்து போராடுவதா அல்லது சிங்களப் பேரினவாதத்தின் மேலாண்மையினை ஏற்று அடிமைவாழ்வில் சிறுமைப்பட்டுப் போவதா என்பதைத் தமிழ் மக்கள் முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் இது. நல்லாட்சி என்ற பெயரிலும் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான அரசியல்தீர்வு என்ற போர்வையிலும் மாயமான்கள் எம் முன்னால்; உலவி வரும் காலம் இது. வெளித்தோற்றத்தில் காட்டப்படும் மினுமினுப்பையும் பளபளப்பையும் கண்டு ஏமாறாது தமிழீழ மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது. நமது தலைவர்கள் தமது இயலாமை காரணமாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ அல்லது தம்மை யதார்த்தவாதிகள் என்று கருதிக் கொள்ளும் நிலை காரணமாகவோ அல்லது சொந்தநலன்கள் காரணமாகவோ இந்த மாயமான்களை தமிழ்மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியினைத் தொடர்ந்தும் மேற்கொள்ளாத வகையில் தமிழ் மக்கள் அதனைத் தடுத்த நிறுத்த வேண்டும். நமது மாவீரர்களின் பெயரால் நாம் அதனைச் செய்துதான் ஆக வேண்டும். தற்போதய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியினை நல்லாட்சி என அழைத்துக் கொள்கின்றனர். முன்னைய குடும்ப ஆட்சியின் அதிகார மையத்தை ஆட்டம் காணச் செய்தமையின் மூலம் ஆட்சிமாற்றம் சிங்கள மக்களுக்குச் சில நன்மைகளை வழங்கியிருக்கக்கூடும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இவ் ஆட்சியினை நல்லாட்சி என எவ்வாறு உணர முடியும்? தமிழ்மக்களுக்கு எதிரான இனஅழிப்பை புரிந்தவர்களும் இனஅழிப்புக் குற்றவாளிகளும் நிறைந்தவொரு ஆட்சியே இது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப்படையினரைத் தமிழர் தாயகபூமியில் இருந்து அகற்ற மறுக்கும் ஆட்சியே இது. அரசியற் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகளை விடுதலை செய்வதற்கு எவ்வித தயவுதாட்சணியமுமின்றி மறுத்துக்கொண்டிருக்கும் ஆட்சியே இது. இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதாகக் கூறிய தமிழர் காணிகளை முழுமையாக விடுவிக்காது இழுத்தடிக்கும் ஆட்சியே இது. பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லும் ஆட்சியே இது. இனவெறுப்பினை உமிழும் புத்தபிக்குகள் சட்டநடவடிக்கை எதுவுமின்றி சுதந்திரமாக உலவ இடம் தரும் ஆட்சி;யே இது. இத்தகை ஆட்சியை எவ்வாறு நாம் நல்லாட்சியெனக் கொள்ள முடியும்? முன்னைய மகிந்த இராஜபக்ச ஆட்சியின் கொடூரம் காரணமாகவே தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு ஆதரவு வழங்கினர். ஆனால் இப்புதிய ஆட்சியினை நல்லாட்சி என அங்கீகரிப்பதற்குத் தமிழ் மக்கள் தயாராக இல்லையென்பதே உண்மை. இந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் சிக்குண்டு இறுகிப் போய் இருக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் எவராலும் தமிழ் மக்களுக்கு நல்லாட்சியினை வழங்க முடியாது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை ஒரு தேசமாக அங்கீகரித்து, இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களை தமிழர் தாயகப் பகுதியாக ஏற்றுக்கொண்டு, தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் நடத்தி தேசியப்பிரச்சனைக்குத் தீர்வு காண எந்த ஆட்சி முன்வருகிறதோ அந்த ஆட்சி மட்டுமே நல்லாட்சியாக இருக்க முடியும். இவ்வகையான மேம்பட்ட சிந்தனைக்கு சிறிலங்காவின் எந்த ஆட்சியாளரும்; தயாராக இல்லை. தற்போதய ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேசி ஒற்றையாட்சி ஆட்சிமுறையை சமஸ்டி போலக் காட்டும் வகையிலான ஓர் அரசியலமைப்பின் மூலம் தேசியப்பிரச்சினைக்குத் 'தீர்வு' காணும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் திட்டத்தின்படி வடக்கு கிழக்கு இணைக்கப்படப் போவதில்லை. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரங்களில் சில மாகாணங்களுக்குக் கிள்ளித் தெளிக்கப் படவுள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கிஞ்சித்தேனும் எட்ட முடியாத ஒரு திட்டமாகத்தான் புதிய திட்டம் அமையப்போகிறது. தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட வகையில் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பதே கூட்டமைப்பினர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி. இந்த வாக்குறுதிக்கு மாறான எந்தத் தீர்வுவடிவம் குறித்தும் அரச தலைவர்களுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் எவ்வகை அங்கீகாரத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் நடத்த முடியும்? தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை நிலைப்பாடுகளை சிறிலங்கா அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனவும் இதுவே யதார்த்தம் எனவும் இக் காரணங்களுக்காகக் கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்கள் தம்மைப் பலப்படுத்திக்; கொள்ள வேண்டும் எனக் கருதுபவர்களும் எம் மத்தியில் உள்ளனர். தமிழ் மக்கள் தாயகத்தில் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எமக்கு முரண்பாடு எதுவும் கிடையாது. இதேவேளை தேசியப் பிரச்சனைக்கான தீர்வு என்ற பெயரில் சிறிலங்கா அரசு முன்வைக்கவுள்ள அரைகுறைத் திட்டத்தை இனப்பிரச்சனைக்கான தீர்வாகத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே எமது நிலைப்பாடு. தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை நிலைப்பாடுகளை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளும்வரை தமிழின அழிப்புத் திட்டத்தை சிங்களம் கைவிடப்போவதில்லை. இந்நிலையில் எத்தகைய அரசியல் தீர்வும் தமிழ் மக்கள் கௌரவமாகவும் சமத்துவமாகவும் பாதுகாப்பாகவும் இனஅழிப்புக்கு உட்படாமலும் தமது அரசியல் முடிவுகளைத் தமக்காகத் தாமே எடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதை நாம் இவ்விடத்தில் மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம். வடக்கு – கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லீம் மக்களுக்கும் இப்பகுதி தாயகப் பிரதேசமே. முஸ்லீம் மக்களுடன் எத்தகைய அரசியல் ஏற்பாடுகளுக்கு வருதல் என்பது குறித்து தமிழ் - முஸ்லீம் அரசியல் தலைவர்கள் தமக்குள் பேசி ஓர் உடன்பாட்டை எட்டிக் கொள்ள வேண்டும். அமைவிடக் கேந்திர முக்கியத்துவம் காரணமாக அனைத்துலக அரசுகளின் அக்கறைக்குரிய இடமாக இலங்கைத்தீவு இருந்து வருகிறது. தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் கேந்திர முக்கியத்துவம் உள்ள மக்களாக இருக்கிறார்கள். இருந்தும் தமது நலன்கள் சார்பாக இக் கேந்திர முக்கியத்துவத்தைப் பயன்படுத்துவதில் தமிழ் மக்கள் இதுவரை வெற்றியடையவில்லை. இது ஏன் என்பது குறித்து நாம் மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டும். மிக நீண்டகாலமாக அரசு அற்ற மக்களாக இருந்து வி;ட்டமையால் இராஜதந்திரப் பாரம்பரியச் செழுமை குறைந்த மக்களாக நாம் இருந்தமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது குறித்து ஈழத் தமிழர் தேசம் கூடுதல் கவனம் கொடுத்தல் அவசியம். மாவீரர்நாளை நினைவுகூரும் இவ் வேளை மறைந்த கியூபப் புரட்சியின் தலைவரும் முன்னாள் கியூப அரசதலைவருமான தோழர் பிடல் கஸ்ரோ அவர்களுக்கும் எமது தோழமை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஓர் ஆதர்ச நாயகனாக விளங்கியர் அவர். புரட்சி குறித்த நம்பிக்கையினை புரட்சியாளர்கள் மத்தியில் விதைத்ததில் பிடல் கஸ்ரோவுக்கும் சே குவேராவுக்கும் முக்கிய பங்குண்டு. பிற்காலத்தில் கியூப அரசின் சிந்தனை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக மையம் கொள்ளாது தமது அரச உறவுகளையும் கோட்பாட்டு நிலைப்பாடுகளையும் மையம் கொள்ளத் தொடங்கிய பின்னர் கியூப அரசானது ஒடுக்குமுறையாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களுக்கெதிராகச் செயற்பட்டமையினையும் இத் தருணத்தில் கவலையுடன் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. எரித்திரிய விடுதலைப் போராட்டத்திலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இது நிகழ்ந்துள்ளது. அன்பான மக்களே! மாவீரர்கள் உயர்ந்தவொரு இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். உலக விழுமியங்களின் பாற்பட்ட ஒரு சுதந்திரமான வாழ்வு என்ற வேணவாவுடன் தமது வாழ்வை எமக்காக ஈகம் செய்திருக்கிறார்கள். சாதாரண மனிதர் எவரும் கற்பனை பண்ணக்கூட முடியாத அளவுக்கு அர்ப்பணிப்புடன் எம் முன்னால் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். சாவின் மீதான அச்சம் ஏதுமின்றி உரிமைகள் மீதான தமது பற்றுறுதியினை முரசறைந்து சென்றிருக்கிறார்கள். வீரம் என்பதற்கு புதிய அகராதி படைத்து உலகைத் தம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றை மூன்று தசாப்தகாலப் போராட்ட வாழ்வின் ஊடாகச் செதுக்கி விட்;டுச் சென்றிருக்கிறார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர் கனவு சுமந்தே தமிழீழ இலட்சியத்தினைத் தனது அரசியற்கொள்கையாக வகுத்துள்ளது. மாவீரர்களை நினைவு கொள்ளும் இன்றைய புனிதநாளில் மாவீரர்கள் கனவை நனவாக்க உழைத்திடுதல் என்பது நமது அறமாக இருக்க வேண்டும். மாவீரர் கனவை நனவாக்கும் மனவுறுதியுடன் உழைப்போம் என இன்றைய தினத்தில் மீண்டும் உறுதி எடுத்துக் கொள்வோமாக!


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
நன்றி!
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்

நாடு கடந்த தமிழீழ அரசின் மாவீரர் தின அறிக்கை!

நவம்பர் 27, 2016.

சுயநிர்ணய
உரிமையின் அடிப்படையிலான ஏற்பாடு ஒன்றே தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக அமைய முடியும்! அதற்கென உழைப்பதையே மாவீரர்கள் கனவை நனவாக்கும் எமது அறமாக ஏற்கும் உறுதி எடுப்போம்! இன்று மாவீரர் நாள். தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம் உயிரை ஆகுதியாக்கிய நமது மாவீரர்களை நாம் எமது இதயக்கோவிலில் வைத்துப் பூசிக்கும் நாள். மாவீரர்கள் நமது மக்களின் விடுதலைக்காய் களமாடினார்கள். நெருப்பாற்றைத் தாண்டினார்கள். புயலை வாயால் ஊதிக் கடந்தார்கள். காற்றுப் போகமுடியா வெளியில் கூடப் புகுந்து பகை அழித்தார்கள். அவர்கள் மண்ணில் வீழும் போதெல்லாம் நமது மண்ணின் விடுதலைக்காய் வித்தாய் வீழ்ந்து போவதாகவே எண்ணிக் கொண்டார்கள். தமிழீழ தேசம் தனது விடுதலைக்காய் இறுதிவரை போராடும் என்பதே மாவீரர்களின் இறுதிமூச்சின் நினைவாக இருந்தது. மாவீரர்கள் ஆண்டபரம்பரை மீண்டுமொருமுறை ஆள்வதில் என்ன தவறு என்ற பழம் பெருமையினை மீட்டெடுக்கும் நோக்குடன் ஆயுதம் தரித்தவர்கள் அல்ல. மேடைகளில் வீரவசனம் பேசும் அரசியலை நடத்தியவர்களும் அல்ல. சிங்கள பௌத்த பேரினவாதத்தின் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பில் இருந்து தமிழர் தேசத்தைப் பாதுகாத்து எமது கௌரவமான இருப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காகவே மாவீரர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். எவ்வித தேசிய சமூக ஒடுக்குமுறைகளுக்கும் அப்பாற்பட்டு அதியுயர் சமூகநீதி நிலவும் தேசம் ஒன்றினைப் படைக்க வேண்டும் என்ற இலட்சிய உறுதியின்பாற்பட்டே போராட்டத்தீயில் அவர்கள் குதித்தார்கள். மாவீரர்கள் ஆயுதங்கள் மீது கொண்ட காதலால் கருவி ஏந்தியவர்களுமல்ல. இவர்களின் போராட்டப்பாதையினை எதிரியின் ஆயத வன்முறைதான் நிர்ணயம் செய்தது. தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டங்களும் எதிர்ப்பும் ஆயுதமுனையில் நசுக்கப்பட்டபோது அதன் தர்க்கரீதியான எதிர்வினையாகவே இவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டி வந்தது. சிங்கள தேசத்தின் தலைவர்கள் பௌத்த சமயக் கோட்பாடுகளின் பாற்பட்டு உண்மையாக நடந்திருப்பார்களேயாயின் ஆயுதம் ஏந்தியிருக்க வேண்டிய அவசியம் எமது மாவீரர்களுக்கு ஏற்பட்டிருக்காது. மாவீரர்களின் போராட்டமே தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு அனைத்துலக கவனத்தைப் பெற்றுத் தந்தது. தமிழ் மக்களின் நெஞ்சங்களில் எல்லாம் மாவீரர்கள் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள். அவர்களது நினைவுகள் தமிழ் மக்களின் மத்தியில் என்றும் நிலைத்திருக்கும். இந்த நினைவு எமது சுதந்திர வேட்கையைச் சுமந்து நிற்கும். அன்பான மக்களே! நாம் இன்று வரலாற்று முக்கியத்துவம் மிக்கதொரு காலகட்டத்தில் நிற்கிறோம். மாவீரர்களின் கனவு சுமந்து சுதந்திர வாழ்வுக்காகத் தொடர்ந்து போராடுவதா அல்லது சிங்களப் பேரினவாதத்தின் மேலாண்மையினை ஏற்று அடிமைவாழ்வில் சிறுமைப்பட்டுப் போவதா என்பதைத் தமிழ் மக்கள் முடிவு செய்ய வேண்டிய காலகட்டம் இது. நல்லாட்சி என்ற பெயரிலும் தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான அரசியல்தீர்வு என்ற போர்வையிலும் மாயமான்கள் எம் முன்னால்; உலவி வரும் காலம் இது. வெளித்தோற்றத்தில் காட்டப்படும் மினுமினுப்பையும் பளபளப்பையும் கண்டு ஏமாறாது தமிழீழ மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய தருணம் இது. நமது தலைவர்கள் தமது இயலாமை காரணமாகவோ அல்லது அறியாமை காரணமாகவோ அல்லது தம்மை யதார்த்தவாதிகள் என்று கருதிக் கொள்ளும் நிலை காரணமாகவோ அல்லது சொந்தநலன்கள் காரணமாகவோ இந்த மாயமான்களை தமிழ்மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சியினைத் தொடர்ந்தும் மேற்கொள்ளாத வகையில் தமிழ் மக்கள் அதனைத் தடுத்த நிறுத்த வேண்டும். நமது மாவீரர்களின் பெயரால் நாம் அதனைச் செய்துதான் ஆக வேண்டும். தற்போதய ஆட்சியாளர்கள் தமது ஆட்சியினை நல்லாட்சி என அழைத்துக் கொள்கின்றனர். முன்னைய குடும்ப ஆட்சியின் அதிகார மையத்தை ஆட்டம் காணச் செய்தமையின் மூலம் ஆட்சிமாற்றம் சிங்கள மக்களுக்குச் சில நன்மைகளை வழங்கியிருக்கக்கூடும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இவ் ஆட்சியினை நல்லாட்சி என எவ்வாறு உணர முடியும்? தமிழ்மக்களுக்கு எதிரான இனஅழிப்பை புரிந்தவர்களும் இனஅழிப்புக் குற்றவாளிகளும் நிறைந்தவொரு ஆட்சியே இது. தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சிங்களப்படையினரைத் தமிழர் தாயகபூமியில் இருந்து அகற்ற மறுக்கும் ஆட்சியே இது. அரசியற் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட போர்க்கைதிகளை விடுதலை செய்வதற்கு எவ்வித தயவுதாட்சணியமுமின்றி மறுத்துக்கொண்டிருக்கும் ஆட்சியே இது. இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து விடுவிப்பதாகக் கூறிய தமிழர் காணிகளை முழுமையாக விடுவிக்காது இழுத்தடிக்கும் ஆட்சியே இது. பல்கலைக்கழக மாணவர்களை வீதியில் வைத்துச் சுட்டுக் கொல்லும் ஆட்சியே இது. இனவெறுப்பினை உமிழும் புத்தபிக்குகள் சட்டநடவடிக்கை எதுவுமின்றி சுதந்திரமாக உலவ இடம் தரும் ஆட்சி;யே இது. இத்தகை ஆட்சியை எவ்வாறு நாம் நல்லாட்சியெனக் கொள்ள முடியும்? முன்னைய மகிந்த இராஜபக்ச ஆட்சியின் கொடூரம் காரணமாகவே தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்துக்கு ஆதரவு வழங்கினர். ஆனால் இப்புதிய ஆட்சியினை நல்லாட்சி என அங்கீகரிப்பதற்குத் தமிழ் மக்கள் தயாராக இல்லையென்பதே உண்மை. இந்த ஆட்சியாளர்கள் மட்டுமல்ல சிங்கள பௌத்த பேரினவாதத்தின் பிடியில் சிக்குண்டு இறுகிப் போய் இருக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் எவராலும் தமிழ் மக்களுக்கு நல்லாட்சியினை வழங்க முடியாது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழ் இனத்தை ஒரு தேசமாக அங்கீகரித்து, இலங்கைத் தீவின் வடக்கு – கிழக்குப் பிரதேசங்களை தமிழர் தாயகப் பகுதியாக ஏற்றுக்கொண்டு, தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழீழத் தனியரசு உட்பட்ட தீர்வு வடிவங்களை உள்ளடக்கிய மக்கள் வாக்கெடுப்பினைத் தாயகத்திலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியிலும் நடத்தி தேசியப்பிரச்சனைக்குத் தீர்வு காண எந்த ஆட்சி முன்வருகிறதோ அந்த ஆட்சி மட்டுமே நல்லாட்சியாக இருக்க முடியும். இவ்வகையான மேம்பட்ட சிந்தனைக்கு சிறிலங்காவின் எந்த ஆட்சியாளரும்; தயாராக இல்லை. தற்போதய ஆட்சியாளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையுடன் பேசி ஒற்றையாட்சி ஆட்சிமுறையை சமஸ்டி போலக் காட்டும் வகையிலான ஓர் அரசியலமைப்பின் மூலம் தேசியப்பிரச்சினைக்குத் 'தீர்வு' காணும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத் திட்டத்தின்படி வடக்கு கிழக்கு இணைக்கப்படப் போவதில்லை. மத்தியில் குவிக்கப்பட்ட அதிகாரங்களில் சில மாகாணங்களுக்குக் கிள்ளித் தெளிக்கப் படவுள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைக் கிஞ்சித்தேனும் எட்ட முடியாத ஒரு திட்டமாகத்தான் புதிய திட்டம் அமையப்போகிறது. தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட வகையில் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வு என்பதே கூட்டமைப்பினர் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதி. இந்த வாக்குறுதிக்கு மாறான எந்தத் தீர்வுவடிவம் குறித்தும் அரச தலைவர்களுடன் கூட்டமைப்புத் தலைவர்கள் எவ்வகை அங்கீகாரத்தின் அடிப்படையில் பேச்சுக்கள் நடத்த முடியும்? தமிழ் மக்களின் தேசியம், தாயகம், சுயநிர்ணயம் போன்ற அடிப்படை நிலைப்பாடுகளை சிறிலங்கா அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனவும் இதுவே யதார்த்தம் எனவும் இக் காரணங்களுக்காகக் கிடைப்பவற்றைப் பெற்றுக் கொண்டு தமிழ் மக்கள் தம்மைப் பலப்படுத்திக்; கொள்ள வேண்டும் எனக் கருதுபவர்களும் எம் மத்தியில் உள்ளனர். தமிழ் மக்கள் தாயகத்தில் தம்மைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் எமக்கு முரண்பாடு எதுவும் கிடையாது. இதேவேளை தேசியப் பிரச்சனைக்கான தீர்வு என்ற பெயரில் சிறிலங்கா அரசு முன்வைக்கவுள்ள அரைகுறைத் திட்டத்தை இனப்பிரச்சனைக்கான தீர்வாகத் தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதே எமது நிலைப்பாடு. தேசியம், தாயகம், சுயநிர்ணயம் என்ற அடிப்படை நிலைப்பாடுகளை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளும்வரை தமிழின அழிப்புத் திட்டத்தை சிங்களம் கைவிடப்போவதில்லை. இந்நிலையில் எத்தகைய அரசியல் தீர்வும் தமிழ் மக்கள் கௌரவமாகவும் சமத்துவமாகவும் பாதுகாப்பாகவும் இனஅழிப்புக்கு உட்படாமலும் தமது அரசியல் முடிவுகளைத் தமக்காகத் தாமே எடுக்கும் ஏற்பாடுகளைக் கொண்டதாகவும் அமைய வேண்டும் என்பதை நாம் இவ்விடத்தில் மீளவும் வலியுறுத்த விரும்புகிறோம். வடக்கு – கிழக்குப் பகுதியில் வாழும் முஸ்லீம் மக்களுக்கும் இப்பகுதி தாயகப் பிரதேசமே. முஸ்லீம் மக்களுடன் எத்தகைய அரசியல் ஏற்பாடுகளுக்கு வருதல் என்பது குறித்து தமிழ் - முஸ்லீம் அரசியல் தலைவர்கள் தமக்குள் பேசி ஓர் உடன்பாட்டை எட்டிக் கொள்ள வேண்டும். அமைவிடக் கேந்திர முக்கியத்துவம் காரணமாக அனைத்துலக அரசுகளின் அக்கறைக்குரிய இடமாக இலங்கைத்தீவு இருந்து வருகிறது. தமிழ் மக்கள் இலங்கைத்தீவில் கேந்திர முக்கியத்துவம் உள்ள மக்களாக இருக்கிறார்கள். இருந்தும் தமது நலன்கள் சார்பாக இக் கேந்திர முக்கியத்துவத்தைப் பயன்படுத்துவதில் தமிழ் மக்கள் இதுவரை வெற்றியடையவில்லை. இது ஏன் என்பது குறித்து நாம் மிக ஆழமாகச் சிந்திக்க வேண்டும். மிக நீண்டகாலமாக அரசு அற்ற மக்களாக இருந்து வி;ட்டமையால் இராஜதந்திரப் பாரம்பரியச் செழுமை குறைந்த மக்களாக நாம் இருந்தமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இது குறித்து ஈழத் தமிழர் தேசம் கூடுதல் கவனம் கொடுத்தல் அவசியம். மாவீரர்நாளை நினைவுகூரும் இவ் வேளை மறைந்த கியூபப் புரட்சியின் தலைவரும் முன்னாள் கியூப அரசதலைவருமான தோழர் பிடல் கஸ்ரோ அவர்களுக்கும் எமது தோழமை கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ஓர் ஆதர்ச நாயகனாக விளங்கியர் அவர். புரட்சி குறித்த நம்பிக்கையினை புரட்சியாளர்கள் மத்தியில் விதைத்ததில் பிடல் கஸ்ரோவுக்கும் சே குவேராவுக்கும் முக்கிய பங்குண்டு. பிற்காலத்தில் கியூப அரசின் சிந்தனை ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக மையம் கொள்ளாது தமது அரச உறவுகளையும் கோட்பாட்டு நிலைப்பாடுகளையும் மையம் கொள்ளத் தொடங்கிய பின்னர் கியூப அரசானது ஒடுக்குமுறையாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு விடுதலைக்காகப் போராடுகின்ற மக்களுக்கெதிராகச் செயற்பட்டமையினையும் இத் தருணத்தில் கவலையுடன் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. எரித்திரிய விடுதலைப் போராட்டத்திலும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலும் இது நிகழ்ந்துள்ளது. அன்பான மக்களே! மாவீரர்கள் உயர்ந்தவொரு இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். உலக விழுமியங்களின் பாற்பட்ட ஒரு சுதந்திரமான வாழ்வு என்ற வேணவாவுடன் தமது வாழ்வை எமக்காக ஈகம் செய்திருக்கிறார்கள். சாதாரண மனிதர் எவரும் கற்பனை பண்ணக்கூட முடியாத அளவுக்கு அர்ப்பணிப்புடன் எம் முன்னால் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். சாவின் மீதான அச்சம் ஏதுமின்றி உரிமைகள் மீதான தமது பற்றுறுதியினை முரசறைந்து சென்றிருக்கிறார்கள். வீரம் என்பதற்கு புதிய அகராதி படைத்து உலகைத் தம் நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்கள். ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றை மூன்று தசாப்தகாலப் போராட்ட வாழ்வின் ஊடாகச் செதுக்கி விட்;டுச் சென்றிருக்கிறார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர் கனவு சுமந்தே தமிழீழ இலட்சியத்தினைத் தனது அரசியற்கொள்கையாக வகுத்துள்ளது. மாவீரர்களை நினைவு கொள்ளும் இன்றைய புனிதநாளில் மாவீரர்கள் கனவை நனவாக்க உழைத்திடுதல் என்பது நமது அறமாக இருக்க வேண்டும். மாவீரர் கனவை நனவாக்கும் மனவுறுதியுடன் உழைப்போம் என இன்றைய தினத்தில் மீண்டும் உறுதி எடுத்துக் கொள்வோமாக!


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
நன்றி!
விசுவநாதன் ருத்ரகுமாரன்
பிரதமர்

26 நவம்பர் 2016

தேசியத் தலைவர் பிறந்தநாளில் மறைந்தார் பிடல் காஷ்ரோ!

கியூபா புரட்சியின் தந்தையும் கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு வயது 90.’’கியுபப் புரட்சியின் தலைமைத் தளபதி வெள்ளிக்கிழமை இரவு 10.29 (இந்திய இலங்கை நேரப்படி சனிக்கிழமை காலை 9 மணி) மணிக்கு காலமானார்’’, என்று அவரது சகோதரரும் கியுப அதிபருமான ரவுல் காஸ்ட்ரோ அறிவித்திருக்கிறார். ஃபிடல் காஸ்ட்ரோ கியுபாவை சுமார் 50 ஆண்டுகளுக்கு ஒரு கட்சி அரசாக ஆண்டு வந்தார். அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ 2008ல்தான் அவருக்கு அடுத்த அதிபராகப் பதவியேற்றார். மிகவும் சோகமான முகத்துடன் கியுபா அரச தொலைக்காட்சியில் எதிர்பார்க்கப்படாத பின்னிரவு ஒளிபரப்பில் இந்த அறிவிப்பை ரவுல் காஸ்ட்ரோ செய்தார். ஃபிடல் காஸ்ட்ரோவின் இறுதிக்கிரியைகள் சனிக்கிழமை நடக்கும் என்றும் அவர் அறிவித்தார். ஃபிடலின் மறைவையொட்டி கியூபாவில் பல நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படும்.அவ்வப்போது அவர் எழுதி வந்த பத்திரிகை கட்டுரைள் தவிர, ஃபிடல் காஸ்ட்ரோ அரசியல் வாழ்விலி்ருந்து ஏறக்குறைய ஓய்வு பெற்ற நிலையிலேயே இருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் , நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி காங்கிரஸின் கடைசி நாளன்று, ஃபிடல் , அபூர்வமாகத் தோன்றி உரையாற்றினார்.

21 நவம்பர் 2016

படையினர் கட்டும் வீடு தேவையில்லை என சுலக்சனின் தந்தை தெரிவிப்பு!

கொக்குவிலில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கஜன், சுலக்சனின் பெற்றோருக்கு படைகளின் உதவியுடன் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் இன்று, யாழ். பல்கலைக்கழகத்தில் தெரிவித்த நிலையில் படைகளின் உதவியுடன் கட்டப்படும் வீடு தமக்கு தேவையில்லை என, சுலக்சனின் தந்தை அதனை நிராகரித்துள்ளார். பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான யாழ்,பல்கலைக்கழக மாணவர்கள் கஜன் மற்றும் சுலக்சனின் பெற்றோரை ஸ்ரீலங்காவின் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் சுவாமிநாதன் இன்று யாழ். பல்கலைக்கழகத்தில் சந்தித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில், கஜன் மற்றும் சுலக்சனின் பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இன்று நான் வந்திருப்பது எதற்கென்றால் உடனடியாக சில நிவாரணங்களை வழங்குவதற்காகவே.படுகொலை செய்யப்பட்ட மாணவர்கள் இருவரினதும் பெற்றோருக்கு வீடு ஒன்றினைக் கட்டிக் கொடுப்பதற்கு இராணுவத்துடன் கலந்தாலோசித்திருந்தேன். அவர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்கள். என்னுடைய அமைச்சின் ஊடாக அதற்குரிய பணத்தினை பெற்றுக்கொடுப்பேன். கஜனுடைய குடும்பத்தினருக்கு நிலம் இருப்பதால் உடனடியாக அவர்களுக்கு வீடு கட்டிகொடுக்கப்படும். சுலக்சனுடைய குடும்பத்தினருக்கு நிலம் இல்லாத காரணத்தினால் பிரதேச செயலரிடம் கலந்தாலோசித்துவிட்டு அவர்களுக்கும் வீட்டினைக் கட்டிக் கொடுப்பதற்கு முயற்சி செய்கிறேன்.அத்தோடு இரண்டு வாரத்துக்குள் இரு குடும்பத்தினருக்கும் நஷ்டஈடு கொடுப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இந் நிலையில் மாணவர்களின் குடும்பத்தினருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்குமாறு யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் இன்று என்னிடம் கேட்டுக்கொண்டார். படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் சகோதரர்களுக்கு அவர்களின் கல்வித் தகைமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புக்கள் வழங்கப்படும். நான் கடந்த முறை மாணவத் தலைவர்களை சந்தித்தபோது உடனடியாக இழப்பீடு வழங்குவதாகக் கூறியிருந்தேன். இதற்காகவே இன்றைய தினம் யாழ் வந்தபோது பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துள்ளேன் என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவித்தார். இது தொடர்பில் சுலக்சனின் தந்தையார் தெரிவிக்கையில், நாங்கள் வீடு ஒன்றிற்காக அமைச்சரை சந்திக்க வரவில்லை படுகொலை செய்யப்பட்ட எமது பிள்ளைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகவே நாங்கள் இங்கு வந்திருக்கின்றோம். எனது ஒரு மகன் காணாமல் போக செய்யப்பட்டிருக்கின்ற நிலையில் தற்போது எனது மற்றைய மகன் சுலக்சனும் பொலிசாரினால் படுகொலை செய்யப்பட்டிருகின்றார். இந்நிலையில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் வீடு எனக்கு தேவையில்லை. எனது ஐந்து பிளளைகளையும் நான் ஒருவனாக நின்றே வளர்த்துள்ளேன். சுலக்சன் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டார் அடுத்து எனது மகளும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார் என தெரிவித்தார்.

06 நவம்பர் 2016

மேடையில் பாதுகாவலர்களால் சூழப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்(காணொளி)

ஹிலரி ட்ரம்ப்பிரசாரத்தில், நெவாடாவில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட பாதுகாப்பு சர்ச்சைக்கு பிறகு தனது ரகசிய சேவை பாதுகாவலர்களால் மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்.கூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டவுடன் அங்கிருந்து உடனே வெளியேற்றப்பட்டார் ட்ரம்ப்; எனினும் சிறிது நேரம் கழித்து தனது உரையை முடிப்பதற்காக திரும்ப வந்தார் ட்ரம்ப். போலிஸாரால் இது குறித்து ஒருவர் சிறிது நேரம் கைது செய்யப்பட்டார்; ஆனால் அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. முன்னதாக ஹிலரி மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவருமே அமெரிக்க தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய ஊசலாடும் மாநிலங்கள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான ஃப்ளோரிடாவில் பேரணி நடத்தினர். ஃப்ளோரிடா மற்றும் நெவாடாவில் முன்னதாக நடக்கும் வாக்குப்பதிவில், பெரும் எண்ணிக்கையில் ஹிஸ்பானிய மக்கள் வாக்களிப்பது, ஹிலரிக்கு சாதமாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். குடியரசுக் கட்சியினர் கடந்த நாற்பது ஆண்டுகளாக வெற்றிப்பெற இயலாத மாநிலமான மற்றும் ஜனநாயகக் கட்சியின் வலுவான மின்னெசோட்டாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேடையில் பாதுகாவலர்களால் சூழப்பட்ட டொனால்ட் ட்ரம்ப்(காணொளி)

ஹிலரி ட்ரம்ப்பிரசாரத்தில், நெவாடாவில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட பாதுகாப்பு சர்ச்சைக்கு பிறகு தனது ரகசிய சேவை பாதுகாவலர்களால் மேடையிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட போதிலும் பிரச்சாரத்தை தொடர்ந்து மேற்கொண்டார் டொனால்ட் ட்ரம்ப்.கூட்டத்தினருக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டவுடன் அங்கிருந்து உடனே வெளியேற்றப்பட்டார் ட்ரம்ப்; எனினும் சிறிது நேரம் கழித்து தனது உரையை முடிப்பதற்காக திரும்ப வந்தார் ட்ரம்ப். போலிஸாரால் இது குறித்து ஒருவர் சிறிது நேரம் கைது செய்யப்பட்டார்; ஆனால் அவரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை. முன்னதாக ஹிலரி மற்றும் ட்ரம்ப் ஆகிய இருவருமே அமெரிக்க தேர்தலில் வெற்றியை உறுதி செய்ய ஊசலாடும் மாநிலங்கள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் மிகப்பெரிய மாநிலமான ஃப்ளோரிடாவில் பேரணி நடத்தினர். ஃப்ளோரிடா மற்றும் நெவாடாவில் முன்னதாக நடக்கும் வாக்குப்பதிவில், பெரும் எண்ணிக்கையில் ஹிஸ்பானிய மக்கள் வாக்களிப்பது, ஹிலரிக்கு சாதமாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். குடியரசுக் கட்சியினர் கடந்த நாற்பது ஆண்டுகளாக வெற்றிப்பெற இயலாத மாநிலமான மற்றும் ஜனநாயகக் கட்சியின் வலுவான மின்னெசோட்டாவிற்கு விஜயம் மேற்கொள்ளப்போவதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

30 அக்டோபர் 2016

பிரபாகரன் படை என்ற பெயரில் எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் தமிழ் பொலிசாரை உடனடியாக இடமாற்றம் பெற்று வெளி மாவட்டங்களுக்கு செல்லுமாறு ”பிரபாகரன் படை” என்ற பெயரில் இன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ். நகரின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரங்கள், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த துண்டுப் பிரசுரத்தில், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வட மாகாணத்தை விட்டு வெளியேற 21 நாள் கால அவகாசமும் அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி இரவு பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ”ஆவா கெங்ஸ்டர்” என்று அழைக்கப்படும் வாள் வெட்டுக் கும்பல் உட்பட யாழ் குடாநாட்டில் செயற்பட்டுவரும் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் அனைவரினதும் கவனம் திரும்பியுள்ள நிலையில், யாழ் குடாநாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 24 வயதுடைய விஜயகுமார் சுலக்சனின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற தினமான கடந்த 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் ஆவா கெங்ஸ்டர் என்ற பெயரில் துண்டுப் பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டிருந்தது. அந்த துண்டுபிபிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தது போல், வடக்கில் தொடரும் போதைப் பொருள் விநியோகம், பாவணை மற்றும் சிங்கள, பௌத்த மயமாக்கல் தொடர்பிலும் தமது கரிசணைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழர்கள் வாழும் பூவீகப் பிரதேசமான வடமாகாணத்தின் மண்ணும் எமது கலசாரமும் தனித்துவமானவை என்றும், அவை இன்று சிங்கள காடையர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன என்றும் ” பிரபாகரன் படை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் சமுதாயம் சாராயம் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும். இவை சிங்கள அரசால் மேற்காள்ளப்பட்டுவரும் ஒரு திட்டமிட்ட செயலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. புத்தர் சிலைகள அமைப்பதும் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் எம் இனத்தை சினங் கொள்ள வைக்கும் செயலாக பார்க்கப்படுவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் 10 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் சிங்கள பெரும் பிரதேசமாக மாற்றம் கண்டுவிடுமளவிற்கு சிங்களவாதிகளின் போக்குகள் மிகக்கடுமையாகவும், கீழ்தரமாகவும் இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை தம்மை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாசறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளப்படுத்திக்கொண்டுள்ள ”பிரபாகரன் படை” என்ற இந்தக் குழு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களது உரிமை போராட்டம் தவிரிந்த கோரிக்கைகள் தவிர்த்து அடாத்தான போராட்டங்களை செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்.அத்துடன் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், விலைமதிக்க முடியாத அரும்பெரும் சொத்துக்களான பல்கலைக்கழக மாணவர்களை திட்டமிட்டு அழிப்பதற்கு சிங்கள அரசு செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.எதிர்கட்சித் தலைவர் உட்பட தமிழ் அரசியல்வாதிகள், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை, அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து இடை விலகிக் கொள்ள வேண்டும் அல்லது, இராஜினாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் காரியாலயம், பொலிஸ் நிலையங்களில் கடமை புரிகின்ற அனைத்து தமிழ் உறவுகளும், தங்களது கடமைகளை இன்னுமொரு பிரதேசத்திற்கு மாற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ள ”பிரபாகரன் படை”, இதற்காக 21 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

25 அக்டோபர் 2016

கர்த்தாலால் வெறிச்சோடியது வடபகுதி!

முழு கடையடைப்பு: யாழ்ப்பாணம் முடங்கியதுயாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று முழுகடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன்படி, யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை என செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நகர் பகுதி முழுமையாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் கடந்த 20-ஆம் தேதியன்று வீதியோரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். இவர்களில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், மற்றைய மாணவன் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐந்து போலீஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யாழ். மாவட்டத்தில் பூரண கடையடைப்பை அனுஷ்டிக்குமாறு அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் கோரிக்கை முன்வைத்திருந்தன. இந்த கோரிக்கையின்படி, இன்றைய தினம் பூரண கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி:பிபிசி தமிழோசை

22 அக்டோபர் 2016

செலவுகளை ஏற்கிறோம் மன்னியுங்கள் என்றனராம் பொலிஸார்!

img_7757யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் ஒவ்வாரு காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு எங்களுக்கு தேனீா் தந்தனா் ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.பின்னா் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள். அங்கு வைத்து காவல்துறையினர் எங்களிடம் தெரிவித்தனா் இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது. காவல்துறையினர் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவா்கள் மீது பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள் இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றாா்கள், அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். காவல்துறை உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும் தந்து எல்லா செலவையும் செய்யவாா்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டிஜஜி ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியைம் சொல்லி போய் எல்லா உதவியையும் செய்ய சென்னாா்கள் நாங்கள் செய்த குற்றத்திற்கா போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் காவல்துறையினர் செய்து தாறம் என்றும் ; அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள் செய்யிறம் என்றும் சொன்னாா்கள். ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவா்களை செய்ய விடவில்லை காவல்துறையினர் இங்க வரக் கூடாது உங்கட உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுடினம் பிறகு கொழும்பிலிருந்து காவல்துறை பெரியாள் ஒருவா் கதைக்கிறன் என்று சொல்லி அவா் சொன்னாா் உங்கட பிள்ளைகள் ஏஎல், ஓஎல் படிச்சிருக்கினமா நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாறம். உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம் மன்னிச்சிக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றாா்கள் என கொல்லப்பட்ட யாழ்ப,ல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜன் அவா்களின் தாயாரான நடராசா சறோஜினி(வயது 61) தெரிவித்துள்ளார்  என  தெரிவிக்கப்படுகிறது.

19 அக்டோபர் 2016

கருணாவின் உத்தரவில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டாராம்!

இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள் தான் உக்கிரமாக நடந்தது. பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சரண் அடைய இருந்த போராளித் தலைவர்கள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டனர். அப்போது தேசியத்தலைவர் பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்லஸ் பயங்கர சித்திரவதை அனுபவித்து சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில் தான் பாலகன் பாலச்சந்திரனும் பிடி பட்டுள்ளார். அவரை தங்கள் ராணுவ முகாமில் உட்காரவைத்து பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் கொடுத்தவர் கலிங்கே ரத்னே என்கிற 57வது பட்டாலியன் அதிகாரி. இரக்க சுபாவம் உள்ளவர். குறிப்பாக தலைவர் பிரபாகரன் மீது நல்ல மதிப்பை வைத்திருப்பவர். அவருக்கு பாலச்சந்திறனைப் பார்த்ததும் வியப்பு. மாபெரும் இயக்கத்தின் தலைவரின் மகனா இவர் என்று. உடனடியாக பிஸ்கட், தண்ணீர் கொடுத்து உபசரித்துள்ளார். அந்த பாலகனை கொலை செய்யப்போகிறோம் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை..! ராணுவத்தலைமைக்கு செய்தி போய்ச்சேர, முக்கிய அதிகாரிகளும் அவர்களுடன் துரோகி கருணாவும் உடன் வந்திருக்கிறார்..! அந்த பாலகனை என்ன செய்வது என்று ஆலோசனைகள் நடந்திருக்கிறது. அப்போது கருணா இவனை விட்டு வைத்தால், நாளை இவனே புலிகளின் தலைவன்…!!அப்பாவை விட அதிக தீரத்துடன் உங்களை எதிர்ப்பான்..உங்களால் தாக்கு பிடிக்க முடியாது ..உடனடியாக சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறிஇருக்கிறார். கலிங்கேரத்னே கலங்கிப் போயுள்ளார். அதன் பின் மூன்று வீரர்கள், சுற்றி நின்று அந்த இளம் பாலகனை சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.! இவ்வாறு தனது வலைத்தளத்தில் கூறி கலங்யுள்ளார் அந்த மனிதம் நிறைந்த அதிகாரி..!இவ்வாறு செய்தியொன்றில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

16 அக்டோபர் 2016

புளியங்கூடலில் மதில் ஏறிப்பாய்ந்த காளை மாடு!

இன்று16.10.2016 ஞாயிற்று கிழமை மாலை புளியங்கூடல் பகுதியில் காளை மாடு ஒன்று மதில் ஏறி குதித்துள்ளது. அப்பகுதி கிராம அலுவலரும், கிராமத்தின் இளைஞர்களும் குறித்த காளை மாட்டை மடக்கி பிடிப்பதற்கு பெரும் பாடுபட்டுள்ளனர்.பாய்ச்சல் என்றால் அப்பிடி ஒரு பாய்ச்சல். வேலி என்ன மதிலை கூட விட்டு வைக்காமல் குறித்த காளை மாடு எகிறி குதித்து ஓடியுள்ளது. அப்போது ஒரு பெரியவர்'இந்த மாட்டை யாழ்ப்பாணத்திலிருந்து தேசிய மட்ட உயரம் பாய்தல் போட்டிக்கு தப்பாமல் அனுப்பி வைக்கலாம். நிச்சயம் தங்கப் பதக்கத்தோடு திரும்பி வரும்' என்று ஆருடம் சொன்னார்.எனவும் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.இந்த வீரமிகு மாடடைப் பற்றி மக்கள் வியப்போடு பேசி வருவதுடன் அதன் சாகசக் காட்சியை முகநூல்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
 

12 அக்டோபர் 2016

தேசியத் தலைவரது புகைப்பட சுவரொட்டி தொடர்பில் பெண் கைது!


மருதனார்மடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட பெண், பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  ஜேர்மனி பிரஜாவுரிமை கொண்ட இந்தப் பெண் சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
மருதனார்மடத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட பெண், பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜெர்மன் பிரஜாவுரிமை கொண்ட இந்தப் பெண் சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே நேற்று இரவு கைது செய்யப்பட்டார். மருதனார்மடம் பிரதேசத்தில் இராமநாதன் நுண்கலைப் பீடத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் இரவு தமிழீழத் தேசியத் தலைவரது புகைப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்றும், தமிழ்த் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிந்த சுன்னாகம் பொலிஸார் உடனடியாக அந்த சுவரொட்டிகளை அகற்றியிருந்த நிலையில் விசாரணைகளையும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மருதனார் மடம் ஆஞ்சனேயர் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி காணொளியைக் கொண்டு, சுவரொட்டிகளை ஒட்டிய பெண்ணை அடையாளம் கண்டதாகவும், இதற்கமைய நேற்று இரவு அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஜெர்மன்  பிரஜாவுரிமையை கொண்ட இந்தப் பெண்ணுக்கு இலங்கை பிரஜாவுரிமையும் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக சிறீலங்காவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

02 அக்டோபர் 2016

சிங்களவர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தியதாக போராளி கைது!

வவுனியா- கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு வவுனியா கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்திற்குள் புகுந்த சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரும், அவரது சகாக்களும் ஆயுதங்களைக் காட்டி தம்மை உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகத் தெரிவித்து 30 சிங்கள குடும்பங்கள் ஏ 9 வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதனையடுத்து அங்கு சென்ற வவுனியா பொலிசார் கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்ட சிங்கள குடும்பங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியிருந்ததுடன், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைதுசெய்வதாகவும் உறுதியளித்திருந்தனர். இதற்கமையவே இன்று இன்று சின்னவன் என்ற முன்னாள் போராளியும், அவரது நண்பர் ஒருவரும் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

25 செப்டம்பர் 2016

வடக்கு முதல்வரின் உரை நல்லிணக்கத்திற்கு பாதகம் என்கிறார் சுமந்திரன்!

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் எழுக தமிழ் பேரெழுச்சியில் தெரிவித்திருக்கும் கருத்து நல்லிணக்கத்திற்கு எதிரானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம். ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் “எழுக தமிழ்” எழுச்சிப் பேரணி நடைபெற்றிருந்தது. பேரணியின் இறுதியில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் உரையாற்றியிருந்தார். இது குறித்து கருத்து வெளியிட்டிருக்கும் சுமந்திரன், யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எதிர்ப்பு ஊர்வலத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் எந்தவித தொடர்பும் இல்லை, நாம் அதில் கலந்துகொள்ளவில்லை. இங்கு வட மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து நாட்டின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எதிரானது. நாட்டில் புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில், இது போன்ற நடவடிக்கைகள் தெற்கு மக்களுக்கு தவறான ஒரு கருத்தை கொடுப்பதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

24 செப்டம்பர் 2016

யாழில் மிக எழுச்சியுடன் எழுக தமிழ் பேரணி!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண முதலமைச்சர் தலைமையில்,பாராளமன்ற உறுப்பினர்கள், வடமாகண விவசாய அமைச்சர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை, பலாயிரகணக்கான மக்கள், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்குபேருந்துகளில் வருகைதந்த வண்ணமே உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

20 செப்டம்பர் 2016

நல்லாட்சி அரசின் மூன்று முகத்தை வெளிக்காட்டவே எழுக தமிழ் பேரணி!


நல்லாட்சி அரசாங்கத்துக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டி அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. இதனை உலகுக்கு வெளிப்படுத்தவே எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளதாக யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு மங்களராஜா தெரிவித்தார். 
நல்லாட்சி அரசாங்கத்துக்கு மூன்று முகங்கள் இருக்கின்றன. அவற்றைக் காட்டி அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றி வருகின்றது. இதனை உலகுக்கு வெளிப்படுத்தவே எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளதாக யாழ்.மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் தலைவர் அருட்திரு மங்களராஜா தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணி தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, கலைத்தூது மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர், நல்லாட்சி அரசாங்கம், காணிகள் விடுவிக்கப்படும், மீள்குடியேற்றம் நடைபெறும், கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், தீர்வு எட்டப்படும் என வடபகுதிக்கு ஒரு முகத்தையும், தமிழர்களுக்கு தீர்வை கொடுக்கமாட்டோம், இராணுவத்தினரை குற்றவாளிகளாக நிறுத்தமாட்டோம் என தென்னிலங்கை இனவாதிகளுக்கு ஒரு முகத்தையும், வாக்குறுதிகளை அள்ளி வீசிச் செயலில் காட்டாமல் ஜெனீவாவுக்கு ஒரு முகத்தையும் காட்டுகின்றது. இந்த வருடத்துக்குள் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. இதனால் இந்தப் பேரணி நடத்தப்படுகின்றது என்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் செயலாளர் நாயகமுமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இங்கு கருத்து வெளியிடுகையில், இந்தப் பேரணி ,சுமார் 40 அமைப்புக்களுடன் கலந்துரையாடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பேரணி நடைபெறாவிட்டால், நல்லாட்சி அரசாங்கத்தின் கபட நாடகம் வெளியில் வராமல் போய்விடும். இந்தப் பேரணி தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட பல தரப்பினரும் கேள்வி எழுப்புகின்ற அளவுக்கு பேரணி முக்கியத்துவம் பெற்றுள்ளது என்றார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து ஒரு பேரணியும், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஒரு பேரணியும் ஆரம்பித்து, இரண்டும் இலுப்பையடிச் சந்தியில் சந்தித்து, தொடர்ந்து யாழ். திறந்தவெளி அரங்கைச் சென்றடையவுள்ளது.

17 செப்டம்பர் 2016

அரசியலுக்காகவே முஸ்லீம்கள் மதம் சார்ந்தவர்களாக காட்டிக்கொள்கிறார்கள்!

விக்கினேஸ்வரன்இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும் அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி .விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பு நகரில் நடைபெறுகின்ற தமிழ் மக்கள் பேரவையின் முத்தமிழ் விழாவில் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை அவர் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய அவர் ''எந்தவொரு இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் கலை, கலாசாரம், இலக்கியம் அனைத்திற்கும் அடிநாதமாக விளங்குவது அவர்களின் தாய்மொழிதான். தமிழர் என்றாலும் சரி, சிங்களவர்கள் என்றாலும் சரி, மொழிதான் அந்த இனங்களின் பாரம்பரிய வடிவமாக அமைகிறது.முஸ்லிம்கள் அரசியல் காரணங்களுக்காக தமது அடையாளம் மதம் சார்ந்தது, மொழி சார்ந்தது அல்ல என்று கூறி வருகின்றனர். கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தமிழ் மொழி பேசும் போதும், தமிழ் மொழியில் கவிதைகள் எழுதி பாடும் போதும் அவர்களின் கலை அடையாளமும் மொழி சார்ந்தது என்று சொல்லத் தோன்றுகின்றது. மொழி பேச கற்றுக் கொண்ட பின்னர்தான் மதத்தை அறிந்து கொண்டோம். இந்நிலையில் முஸ்லிம் சகோதரர்களும் அடிப்படையில் தமிழ் மொழி சார்புள்ளவர்கள்தான். தமிழ் இனத்தை இனிமேல் ஒன்றிணைக்கப் போவது அரசியல் அல்ல மொழிதான்'' என்றார்.தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர்களில் ஒருவராக தான் செயல்படுவது தொடர்பாகவும் தனது உரையில் அவர் குறிப்பிட்டார். ''தமிழ் மக்களின் அரசியல் தலைமைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கும் அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் தமிழர்களின் வருங்கால நிரந்தர இருப்பை உறுதிப்படுத்தும் வகையிலான பரிந்துரைகளை முன் வைப்பதையும் நோக்கமாக கொண்டுதான் பல்வேறு தரப்பின் வேண்டுகோளின் பேரில் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்டது.இந்த உருவாக்கத்திற்கு காரணமாக செயல்பட்டவர்களிடம் தெளிவுத்தன்மை காணப்படுகிறது . அதன் காரணமாகவே தமிழ் மக்கள் பேரவையின் செயல்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகிறேன். தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சியாக எக்காலத்திலும் மாற்றம் பெறக் கூடாது என்ற நிபந்தனையை ஏற்கெனவே முன் வைத்துத் தான் இந்த ஒத்துழைப்பை வழங்கி வருகின்றேன்" எனக் குறிப்பிட்டார் வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன்.

11 செப்டம்பர் 2016

எமக்கும் கோபம் வரலாம்..நாமும் போட்டுத் தாக்கலாம்..!சீமான் ஆவேசம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி நீர் திறந்துவிடுவதற்கு கர்நாடகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சில கன்னட வெறியர்கள் அங்குள்ள தமிழரை அடித்து, உதைத்து, மண்டிய வைத்து, கன்னடம் வாழ்க என்று சொல்ல வைத்துள்ளார். இது தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’நாங்கள் எதைச்செய்தாலும் தமிழக இனவெறியர்கள். தீவிரவாதிகள் என்றெல்லாம் பேசி பழி சுமத்தினீர்கள். காவிரியில் தண்ணீர் கேட்கும்போது எங்கள் பேருந்துகளை பிடித்து வைத்துக்கொள்வது, எங்கள் படங்கள் ஓடின திரையரங்குகளை அடித்து நொறுக்குவது, எங்கள் மக்களுக்கு உயிர் பயத்தைக்காட்சி அச்சுறுத்தலை கொடுப்பது, அடிப்பது, தண்ணீர் எதுக்கு சிறுநீர் தருகிறோம் என்று எழுதி அனுப்புவது என்று கொடுமைகள் நடக்கின்றன. எல்லா பக்கமும் எங்களை அடிக்கிறார்கள்; ஆனால் இந்த நிலத்தில் அது நடக்குதா பாருங்க. எவ்வளவு மாண்புக்க ஜனநாயகவாதிகள் தமிழர்கள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஈழத்தில் லட்சக்கணக்கில் எம் மக்கள் செத்து விழுந்தபோது கூட என் தம்பி முத்துக்குமார், தன் ஆழ் மனதில் எழுந்த ஆத்திரத்தை வெளிக்காட்ட முடியாமல் தன் உடலில் நெருப்பை வைத்துக்கொண்டு செத்தான். ஒரு சிங்களர் கூட இங்கு தாக்கப்படவில்லை. எவ்வளவு நேரம் ஆகிவிடும் நாங்கள் இங்குள்ள கன்னடர்களை விரட்டுவதற்கு. அதைச்செய்யாமல் இருக்கிறோம். தமிழர்கள் ஒன்னேகால் கோடி மக்கள் கர்நாடகாவில் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்று தனித்த அரசியல் என்று எதுவுமில்லை. அந்த மண்ணின் மக்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதன்படிதான் வாழ்கிறார்கள். ஆனால் இங்கு எங்களுக்கு அப்படிப்பட்ட அதிகாரம் இல்லை. அடிமைகளாக நாங்கள் இருக்கிறோம். போராடுகிற மக்களை கர்நாடக அரசு ஆதரித்து ஊக்கப்படுத்துகிறது. போலீசார் பாதுகாப்புக்கு நிற்கிறார்கள். நான் கோயம்பேட்டில் கர்நாடக பேருந்தை தடுத்து நிறுத்தினால் நாளைக்கு இந்த அரசு என் மேல் குண்டாசை போட்டு உள்ளே தூக்கிப்போடும். ஆனால் என் பிள்ளைகளை அடிக்கிறான்; பேருந்துகளை உடைக்கிறான். அந்த அரசு யாரையாவது கைது செய்திருக்கிறதா பாருங்க. தமிழர்களுக்கு மொழிப்பற்று இனப்பற்று கிடையாது. சாதிப்பற்று, மதப்பற்றுதான் இருக்கிறது. தொடர்ச்சியாக இதை சகித்துக்கொண்டே இருப்போம் என்று எதிர்ப்பார்ப்பது மிகப்பெரிய தவறு. எந்த நேரமும் திடீர் என்று கோபம் வரலாம்; எவனையாவது போட்டு நாங்களும் அடிக்கலாம். அது நடக்கலாம். அந்த நிலைக்கு எங்களை தள்ளாமல் ஒரு நியாயமான முடிவை எடுக்க முயற்சிக்க வேண்டும். நான்கு மாநில முதல்வரையும் அழைத்து பேசவேண்டும் என்று சித்தாராமைய்யா பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். நியாயமாக பார்த்தால் அம்மையார் ஜெயலலிதானே கடிதம் எழுதியிருக்க வேண்டும். ஏன் எழுதவில்லை. அங்கே அடிக்க அடிக்க இங்குள்ள உணர்வுள்ளவர்கள் பொறுத்துக்கொண்டே இருப்பார்களா? பதிலுக்கு அடித்தால் இவர்கள் வன்முறையாளர்கள்; இனவெறியர்கள் என்றால் இதை எப்படி ஏற்பது? தமிழன் எங்கு அடி வாங்கினாலும் அது நன்முறை; நாங்கள் அடித்துவிட்டால் அது வன்முறையா? கையை கட்டிக்கிட்டு நிற்போம் என்று எதிர்ப்பார்க்காதீர்கள். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களே காவிரி விவகாரத்தில் சும்மா இருக்கிறார்கள். மக்களை மகிழ்விக்கிற கலைஞர்களை ஏன் எதிர்ப்பார்க்க வேண்டும். இருந்தாலும் கர்நாடகாவில் நடிகர், நடிகைகள் போராடியதுபோல இங்கேயும் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். அங்கே உள்ள எழுச்சி இங்கே இல்லை. இது வருந்தத்தக்கது. இப்போது நாங்கள் தெருவில் இறங்கி போராட ஆரம்பித்தால் பற்றி எரியும். அது நடக்கலாம்’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.

08 செப்டம்பர் 2016

ஸ்னோவ்டனுக்கு இலங்கை அகதிகள் அடைக்கலம்!


அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை விக்கிலீக்ஸ் மூலம் வௌியிட்ட எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக, ஜேர்மன் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டு வந்தவராவார். 
அமெரிக்காவின் புலனாய்வுத் தகவல்களை விக்கிலீக்ஸ் மூலம் வௌியிட்ட எட்வர்ட் ஸ்னோவ்டனுக்கு, ஹொங்கொங்கில் உள்ள இலங்கை அகதிகள் அடைக்கலம் வழங்கியதாக, ஜேர்மன் பத்திரிகையொன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வௌியாகியுள்ளன. அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரியான அவர், அமெரிக்க தேசிய பாதுகாப்பு குறித்த தகவல்களை வெளியிட்டமைக்காக தேடப்பட்டு வந்தவராவார். 2013ம் ஆண்டு ஹொங்கொங்கில் இலங்கை அகதிகள் தங்கும் பகுதி ஒன்றில் எட்வர்ட் ஸ்னோவ்டன் தலைமறைவாக இருந்ததாகவும், பின்னர் அங்கிருந்து வேறொரு நாட்டுக்கு தப்பி சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவருக்கு அடைக்கலம் வழங்கிய இலங்கை அகதிகளை, அமெரிக்க ஊடகங்கள் நேர்காணல் செய்து வௌியிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

15 ஆகஸ்ட் 2016

சிங்களத்திற்கு பணிந்து தமிழீழம் என்ற சொல்லை அவுஸ்திரேலியா நீக்கியதாம்!

அவுஸ்ரேலியாவில் நடத்தப்படும் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பில்,பிறந்த நாடு என்ற கேள்விக்கு அளிக்கப்பட்டிருந்த தமிழீழம் என்ற தெரிவு விடை, இலங்கை தூதரகத்தின் அழுத்தத்தின் பேரில் நீக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலிய புள்ளிவிபரப் பிரிவினால் தேசிய சனத்தொகைக் கணக்கெடுப்பு இணையத்தளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இதில், பிறந்த நாடு என்ற கேள்விக்கான பதில்களில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டிருந்தன. அதில் தமிழீழமும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதனால் அவுஸ்ரேலியாவில் உள்ள ஈழத் தமிழர்கள் தமிழீழம் என்று தமது பிறந்த இடத்தை குறிப்பிடத் தொடங்கினர். இதையடுத்து, கடந்த 6ஆம் ,7ஆம் நாள்களில், கன்பராவில் உள்ள இலங்கைத் தூதரகத்துக்கு பெருமளவு தொலைபேசி அழைப்புகளும், மின்னஞ்சல்களும் வரத் தொடங்கின. வாரஇறுதி விடுமுறைக்குப் பின்னர், முதலாவது வேலை நாளான கடந்த 9ஆம் நாள், கன்பராவில் உள்ள இலங்கைத் தூதரகம் துரித நடவடிக்கையில் இறங்கியது. அவுஸ்ரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தக திணைக்களத்திடமும், அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவிடமும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அவுஸ்ரேலியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஸ்கந்தகுமார் அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவுடன் நேரடியாகப் பேசினார். விடுதலைப் புலிகள் அமைப்பு அவுஸ்ரேலியாவில் தீவிரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், அதிகாரபூர்வ இணையத்தளத்தில் தமிழீழம் என்ற தெரிவு எவ்வாறு இடம்பெற்றது என்று அவுஸ்ரேலிய புள்ளிவிபரவியல் பிரிவிடம் அவர்கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழம் என்ற பதம், அவுஸ்ரேலிய அரசின் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் இடம்பெற்றிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தமிழீழத்தை நீக்குவதாக கடந்த 9ஆம் திகதி இலங்கை தூதுவருக்கு உறுதி அளித்தது, இதற்கமைய அன்று பிற்பகல் 2.30 மணியளவில், தமிழீழம் நீக்கப்பட்டது.இவ்வாறு செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

12 ஆகஸ்ட் 2016

போராளிகளின் மர்ம மரணங்களுக்கு சர்வதேச விசாரணை கோரி போராட்டம்!

புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மர்மமான முறையில் உயிரிழப்பதற்கு சர்வதேச விசாரணை கோரி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று வியாழக்கிழமை பிரிட்டனில் நடைபெற்றது. பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் அமைந்துள்ள டவுனிங் வீதியில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. இறுதிப் போரில் பொதுமக்கள் உள்ளிட்ட போராளிகள் பலர் கொன்று குவிக்கப்பட்டனர். இறுதிப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இராணுவத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க முன்னாள் போராளிகள் பலர் இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். இவ்வாறு சரணடைந்த போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 104 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இன்னும் பல போராளிகள் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் உள்ளனர். இவை பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன எனவே, குறித்த விடயம் தொடர்பில் நீதியான முறையில் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் மருத்துவ பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் தமிழர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

10 ஆகஸ்ட் 2016

மது,புகைப்பழக்கம் இல்லாத போராளிகளுக்கு எவ்வாறு புற்றுநோய் ஏற்படுகிறது?

துப்புரவுப்பணியில் போராளிகள்
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த போது, புகைத்தல் மற்றும் மதுபான பழக்கங்களுக்கு உட்படாதவர்கள் எவ்வாறு புனர்வாழ்வின் பின்னர் புற்றுநோயினால் உயிரிழக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றத்தில் கேள்வியெழுப்பினார்.நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தச்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் நேற்று உரையாற்றும்போதே அவர் இந்த சந்தேகத்தை வெளியிட்டார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட 12ஆயிரம் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளில் 107பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் பெரும்பாலானோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டே உயிரிழந்துள்ளனர். மதுபானம் மற்றும் புகைத்தல் பழக்கத்திற்கு கடுமையான கட்டுப்பாடு விதித்திருந்த புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் தொற்றாநோயான புற்றுநோய்க்கு எவ்வாறு ஆளானார்கள்? போராளிகளின் மரணம் தொடர்பாக சர்வதேச மருத்துவ நிபுணத்துவத்துடனான விசாரணை அவசியம். இதற்கு முன்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். தற்போது சமுகத்தில் உள்ள பல போராளிகள் வெவ்வேறு நோய்களுக்குள்ளாகின்றனர். இவை எவ்வகையான நோய்கள் என்று இனங்காணப்படவில்லை. எனவே அனைத்து போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அரசாங்கம் தொடர்ந்தும் காலம் தாழ்த்தாது இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அது மாத்திரமன்றி சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு கூட ஊசிகள் ஏற்றப்பட்டதால் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரம் சிறைச்சாலையிலும் அரசியல் கைதியொருவர் தடுப்பூசி ஏற்றப்பட்டதால் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளார். அவர் தொடர்பாகவும் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்ந்தும் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றது. ஆகக்குறைந்தது அவர்களின் வழக்குகளை தமிழ்ப்பகுதிகளுக்கு மாற்றவேண்டுமென கைதிகள் என்னிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனம் செலுத்தி நடடிவக்கை எடுக்க வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கேட்டுக்கொண்டார்.

07 ஆகஸ்ட் 2016

போராளிகளின் மரணங்கள் இன அழிப்பின் அடையாளமே!

அரசியல் மகளிரணிப் பொறுப்பாளர்
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் திடீரென மரணிக்கின்றனர். இவர்களின் மரணம் இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது. எனவே, புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் அச்சத்தைப் போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுந்த தரம் வாய்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- "புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் தொடர்ச்சியான உயிரிழப்பு பலருக்கும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது. கடந்த காலத்தில் அரசால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுள் சிலர் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருகின்றனர். அதிலும் புற்றுநோய் காரணமாகவே உயிரிழப்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. எனவே, தமக்கு இரசாயன உணவும் சந்தேகத்துக்கிடமான மருந்தும் ஏற்றியதாக புனர்வாழ்வில் இருந்து விடுதலையான முன்னாள் போராளி ஒருவர் பகிரங்கமாகவே மக்கள் கருத்தறியும் நல்லிணக்க செயலணியிடம் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலம் பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகள் மத்தியிலும் மிக மோசமான அச்ச உணர்வை ஏற்படுத்துகின்றது. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு இவ்வாறான மரண பயம் உளவியல் ரீதியாக மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, இவர்களுடைய அச்சத்தைப் போக்கி நம்பிக்கையுடன் வாழ்வியலில் ஈடுபடுவதற்கு இவர்கள் அனைவருக்கும் தகுத்த தரம் வாய்ந்த மருத்துவப்  பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்களின் தார்மீகக் கடமையும் பொறுப்பும் ஆகும். ஆனால், வழமைப்போல் இதனையும் அரசியலாக புறந்தள்ளி விடாதீர்கள். எனவே, இவ்வாறான நிலை கட்டமைக்கப்பட இன அழிப்பின் ஒரு வடிவமாகவே எம்மால் நோக்க வேண்டியுள்ளது. வெறுமனே நல்லாட்சி அரசு என நீங்களே உங்களுக்கு கூறிக்கொள்வதை விடுங்கள். கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழ் மக்கள் திருப்தியடையக் கூடிய வகையில் எந்தவிதமான ஆக்கபூர்வமான நல்லெண்ண முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தமிழ் மக்களால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சி மாற்றத்திலும் முன்னேற்றகரமான செயற்பாடுகள் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே, மனங்கள் வெல்லப்படாத வரை நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. சிங்கள மேட்டிமை வாதப் போக்கு உள்ளவரை நல்லிணக்கம் என்பது கானல் நீர்தான். இவற்றை ஏன் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் இல்லை என்பதே வேதனையாகவுள்ளது. எனவே, முன்னாள் போராளிகளின் அச்சத்தைப் போக்க வழிவகுப்பீர்கள் என நம்புகின்றோம்" - என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதிகள் ஜ.நா. தூதரகம், அமெரிக்கத் தூதரகம், இந்தியத் தூதரகம், சுவிஸ்சர்லாந்து தூதரகம், பிரிட்டன் தூதரகம் ஆகியவற்றின் தூதுவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

04 ஆகஸ்ட் 2016

வெள்ளைக்கொடியுடன் வந்தவர்களை சுட்டுக்கொன்று எரித்தனர்!மக்கள் கண்ணீர்!

"இறுதிப்போரில் முள்ளிவாய்க்கால் கிழக்கில் வெள்ளைக்கொடியுடன் வந்து படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி உறுப்பினர்களில் ஒரு பகுதியினர் உடனே சுட்டுக்கொல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள். சரணடைந்தவர்களில் ஏனையோருக்கு என்ன நடந்தது என்று தெரியாது. இது தொடர்பில் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்." - இவ்வாறு நல்லிணக்க செயலணி முன் கதறியழுது வலியுறுத்தியுள்ளனர் இறுதிப்போரில் உயிர்பிழைத்த வடக்கு மக்கள். போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை அமைப்பது என்பன தொடர்பில் நல்லிணக்க செயலணியால் வடக்கில் மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது:- "காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை இழுத்தடிக்கப்படுகின்றது. அரசு மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கண்டுபிடித்துத் தருவோம் என்று கூறிக்கொண்டிருப்பதை ஏமாற்றும் செயலாகவே நாம் கருதுகின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் சர்வதேசத்தால் அங்கீகரிக் கப்பட்ட குழு விசாரணை நடத்தவேண்டும். இது தொடர்பில் இராணுவத்தினர் யாராவது தகவல் தெரிவிக்க முன்வந்தால் அவர்களுக்குப் பாதுகாப்பு வழங்கவேண் டும். தகவல்களை மறைப்பவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும். இதேவேளை, இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று அரசு கூறுகின்றது. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு இவ்வாறு கூறுவதே பெரும் குற்றம். இதை எப்படி நல்லாட்சி என்பது? வடக்கில் பலர் இராணுவத்தால் கொல்லப்பட்டனர். இராணுவம் சுட்டுக் கொன்றது உண்மை. விரும்பியோ, விரும்பாமலோ இந்த அரசு குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்காது. அதனால் சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட விசாரணைக் குழு விசாரணை நடத்த வேண்டும்"என்றனர்.

03 ஆகஸ்ட் 2016

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்!

"முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவும், அவரின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டபாய ராஜபக்‌ஷவும் போர்க்குற்றவாளிகள். இறுதிப் போரில் அரச படைகள் குறிவைத்து ஏவிய கொத்துக்குண்டுகளினாலும், ஏனைய வெடிகுண்டுகளினாலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் உறவுகள் செத்துமடிவதற்கு இவர்கள் இருவருமே முக்கிய காரணமானவர்கள். இவர்களுக்குத் தண்டனை வழங்க சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும். இவர்களுக்குத் தண்டனை வழங்கினால்தான் நாட்டில் இனவாதம் ஒழிந்து உண்மையான நல்லிணக்கம் ஏற்படும்.'' - இவ்வாறு மீண்டும் ஆணித்தரமாகத் தெரிவித்தனர் வடக்கு மாகாண மக்கள். போர்க்குற்ற விசாரணைகளை எவ்வாறு முன்னெடுப்பது மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தை எவ்வாறு அமைப்பது என்பன தொடர்பில் நல்லிணக்கச் செயலணியால் வடக்கு மக்களிடம் கருத்தறியப்பட்டு வருகின்றது. இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: - "இறுதிக்கட்டப் போரின்போது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது? இது தொடர்பில் முழுமையான நம்பகமான விசாரணை நடத்தப்படவேண்டும். இதுவரையில் அவ்வாறான ஒரு விசாரணை நடக்கவில்லை. காணாமற்போனவர்கள் தொடர்பான விசாரணை பக்கச்சார்பின்றி முன்னெடுக்கப்படவேண்டும். இதில் சர்வதேச பிரதிநிதிகள் உள்ளடக்கப்படவேண்டும். அதேவேளை, காணாமற்போனோர் தொடர்பான அலுவலகம் வடபகுதியில் அமைக்கப்பட வேண்டும். போர்க்குற்றங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட அனைவருக்கும் சர்வதேச விசாரணை மூலம் தண்டனை வழங்கப்படவேண்டும். இந்தத் தண்டனை வழங்கப்படுவதன் ஊடாகவே எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருக்கும். எமக்கும் பாதுகாப்பு இருக்கும். உள்ளூர் விசாரணைப் பொறிமுறைகளில் நாம் நம்பிக்கை வைக்க முடியாது. வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணைக் குழுவே அமைக்கப்படவேண்டும். அப்போதுதான் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு உருவாகும். நாங்கள் சலுகைகளையோ, சன்மானங்களையோ எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு நீதி வேண்டும். அதற்காகத்தான் எல்லா இடங்களுக்கும் அலைகின்றோம். நாங்கள் கடுமையான உளப்பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம். நாட்டில் நல்லிணக்கம் ஏற்படவேண்டுமென்றால், பாதிக்கப்பட்ட மக்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அவற்றைச் செயற்படுத்தவேண்டும்'' இவ்வாறு மக்கள் தெரிவித்துள்ளனர்.

02 ஆகஸ்ட் 2016

மகிந்தவை தூக்கிலிடுமாறு மக்கள் கோரிக்கை!

தமிழ் மக்களை அநியாயமாக படுகொலை செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தூக்குத்தண்டனை விதிக்க வேண்டும் என பூநகரி பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்தனர். போர்க்குற்ற விசாரணைக்கான பொறிமுறைகள் மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைகள் பற்றிய கலந்தாலோசனை செயலணி இன்று பூநகரி பிரதேச செயலகத்தில் யாழ். மாவட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் கண்காணிப்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு சாட்சியமளித்த மக்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் பொது மக்கள் அநியாயமாக கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு தகுதி, தராதரம் பாராது உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். மக்கள் கொல்லப்பட்டமைக்கு நியாயம் வழங்க வேண்டும். அத்துடன் தமிழ் மக்களுக்காக போராடி உயிரிழந்த மாவீரர்களுக்கான வணக்க நிகழ்வை எந்தவொரு இடையூறுமின்றி அனுஸ்டிப்பதற்கு வழியேற்படுத்தி தரவேண்டும். முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்வதற்கு இராணுவத்தின் தலையீடு இருக்கக்கூடாது எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை செயலணி நடைபெறும் குறித்த பகுதியில் இன்று காலை இராணுவத்தினரின் நடமாட்டம் காணப்பட்டதாகவும் எனினும் மனித உரிமை ஆணைக்குழுவினரின் வருகையை அடுத்து அவர்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

01 ஆகஸ்ட் 2016

முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச ரீதியிலான மருத்துவ பரிசோதனை தேவை!

முன்னாள் போராளிகளை சர்வதேச ரீதியிலான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று முல்லைத்தீவு மாவட்ட சமூக சேவை திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் கலந்துகொண்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர் உரையாற்றியபோதே வடக்கு முதலமைச்சரிடம் மேற்கண்ட கோரிக்கையை முன்வைத்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: ஒட்டுசுட்டானில் நல்லிணக்க பொறிமுறை செயலணியின் அமர்வின் போது கருத்துக்களை பகிர்ந்த முன்னாள் போராளி ஒருவர் தமக்கு கட்டாயப்படுத்தி ஊசி ஏற்றப்பட்டது எனத் தெரிவித்தார். இதனை கவனத்தில் எடுத்து முன்னாள் போராளிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும். எமது மக்களின் விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களே முன்னாள் போராளிகள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

26 ஜூலை 2016

பிரான்சில் மதகுருவும் ஜெர்மனியில் மருத்துவரும் படுகொலை!

வடக்கு பிரான்ஸில் தேவாலயம் ஒன்றில் பூசை நடந்துகொண்டிருந்த போது நுழைந்த இரு ஆயுதபாணிகள் ஆட்களை பணயமாக பிடித்து வைத்த சம்பவத்தில் எண்பத்து நான்கு வயதான கிறிஸ்தவ மதகுரு ஒருவர் கொல்லப்பட்டார்.இன்னுமொருவர் உயிருக்காக போராடுகிறார். இரு தாக்குதலாளிகளையும் போலிஸார் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகின்றது. கடந்த இரு வாரங்களில் 84 பேர் கொல்லப்பட்ட நிலையில் மிகவும் அதிகபட்ச உசார் நிலையில் இருக்கும் பிரான்ஸில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
இதே வேளை ஜேர்மனியில் உள்ள பெஞ்சமின் பிரான்க்லின் வைத்தியசாலையில் நோயாளி ஒருவர் வைத்தியரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் பலியானார். ஜேர்மனியின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஸ்டெக்லிட்ஸ் மாவட்டத்தில் உள்ளது பெஞ்சமின் பிரான்க்லின் பல்கலைக்கழக வைத்தியசாலையில் இன்று காலை 11 மணிக்கு நோயாளி ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வைத்தியரை சுட்டுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த வைத்தியர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். 2 மணிநேரம் கழித்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதற்கிடையே வைத்தியரை சுட்ட அந்த நோயாளி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.குறித்த சம்பவத்தால் வைத்தியசாலை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்திற்கும், தீவிரவாதத்திற்கும் தொடர்பு இல்லை எனவும்,வைத்தியசாலை வளாகத்தில் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வைத்தியசாலையில் இருந்த வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 ஜூலை 2016

செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள்!

23.07.1983 அன்று யாழ் திருநெல்வேலிப் பகுதியில் வைத்து சிறிலங்கா படையினர் மீதான தாக்குதலின்போது வரலாறாகிய லெப்டினன்ட் செல்லக்கிளி அம்மானின் 33ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தளபதி லெப்.சீலன் அவர்கள் மீதான தாக்குதலுக்கான பதில் நடவடிக்கையாக 23.07.1983 அன்று இரு படை ஊர்திகளில் சுற்றுக்காவல் வந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது. கண்ணிவெடித் தாக்குதலுடன் தொடங்கிய விடுதலைப் புலிகளின் கரந்தடித் தாக்குதலில் சுற்றுக்காவல் வந்த படையினரில் 13 பேர் கொல்லப்பட இரு படுகாயத்துடன் தப்பியோடினர். தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் உட்பட விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்கள் பங்கெடுத்த இத்தாக்குதல் லெப்.செல்லக்கிளி அவர்களின் தலைமையிலேயே நடாத்தப்பட்டது.படை ஊர்தியை இலக்கு வைத்து கண்ணிவெடி இயக்கிய லெப். செல்லக்கிளி அம்மான் பின்னர் படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
வரலாற்றுப் புகழ்வாய்ந்த யாழ். திருநெல்வேலி தாக்குதல்:
1983ம் ஆண்டு யூலை 23ம் திகதி இரவு 11மணியளவில் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து யாழ்ப்பாணம் நோக்கி ஒர் வெள்ளை நிற டெலிக்கா வான் வந்துகொண்டிருக்கிறது. வானை செல்லக்கிளி செலுத்த அவனை அடுத்து கையில் S.M.G உடன் கம்பீரமாக உட்கார்ந்திருக்கிறான் விக்ரர். அவனை அடுத்து நான் வானின் பின்பகுதியில் தம்பி, மற்றும் ஏனைய தோழர்கள். நாம் முன்பு திட்டமிட்டபடி வான் தபால்பெட்டிச் சந்தியில் நிற்க எல்லோரும் கீழே இறங்குகிறோம். அங்குதான் கண்ணிவெடி புதைக்க வேண்டும். வான் அந்த இடத்தில் நின்று நாங்கள் இறங்க அயல் சனங்கள் அரவம் கேட்டு வெளிவரத்தொடங்க விக்ரரும், செல்லக்கிளியும் (இராணுவச் சீருடை அணிந்து இருந்தனர்) சிங்களத்தில் உரக்கத் கதைத்தபடி றோட்டிலே நடக்கத் தொடங்க வெளியே எட்டிப் பார்த்த தலைகளை காணவில்லை. வெளிச்சம் போட்ட இருவீடுகளின் விளக்குகளும் அணைந்து விட்டது. யாரும் வெளிவரவில்லை. இராணுவத்தினர் வந்து நிற்கின்றனர் என்று நினைத்து விட்டனர். முன்பு திட்டமிட்டபடி அப்பையா அண்ணை, விக்ரர், செல்லக்கிளி மூவரும் வெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர். விக்ரரும் செல்லக்கிளியும் பிக்கானால் றோட்டிலே கிடங்கு வெட்டுகின்றனர். கண்ணிவெடி புதைப்பது பெரிய வேலை. வெடிமருந்து தயார்படுத்துகையில் வெடிமருந்தின் நச்சுத் தன்மையால் தலையிடிக்கும். என்னுடைய அனுபவப்படி தாங்க முடியாத தலையிடி. அதன்பின் கிடங்குவெட்டி, (இறுகப் போடப்பட்ட தார் றோட்டிலே கிடங்கு வெட்டுவது அவ்வளவு இலகுவானதல்ல) இவற்றையும விட தாக்குதலின் போது சண்டையும் போடவேண்டும்.எமது தகவலின் படி சுமார் நள்ளிரவு 12 மணியளவில் பலாலியில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு ஜீப் வண்டியிலும், ஒரு ட்ரக் வாகனத்திலும் இராணுவத்தினர் வருவது வழக்கம். ஜீப்பில் 4 இராணுவத்தினரும் ட்ரக்கில் 10 பேர் அளவிலும் வருவார்கள் எனத் தகவல். எனவே யாழ். பல்கலைக்கழக பின்வீதி பலாலி றோட்டைச் சந்திக்கும் இடமாகிய தபால் பெட்டிச் சந்தியில், கண்ணிவெடிபுதைத்து இரண்டாவதாக வரும் வாகனத்துக்கு கண்ணி வெடியால் தாக்க முன்னால் வரும் வாகனத்தைச் சுட்டு மடக்குவது என்று நாம் வகுத்த திட்டம். அதன்படி திருநெல்வேலிச் சந்தியில் ஒரு வோக்கிரோக்கி. அது அவர்களுடைய வரவை எமக்கு அறிவிக்கும். விக்ரரும் செல்லக்கிளியும் அப்பையா அண்ணையும் கண்ணிவெடி தயார்படுத்திக் கொண்டிருக்கையில் மற்ற எல்லோரும் அருகில் உள்ள வீடுகளின் சுவர்களின் உள்ளே பாய்ந்து தத்தமக்கு உரிய இடத்தை தேர்ந்தெடுக்கத் தொடங்கினோம். ஒவ்வொருவருக்கும் இடம் கிடைத்தது. கண்ணிவெடியை புதைத்துக் கொண்டிருக்கையில் விக்ரர் விலகி தனக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடத்தின் சுவரின் உள்ளே பாய்கின்றான். சுவர் அவனை விட உயரமாக இருக்க பின்பு வெளியில் குதித்து உயரம் வைப்பதற்காக தெருவில் தேடி சில பெரிய கற்களை எடுத்து உள்ளே போட்டு தன் உயரத்தைச் சரிப்படுத்திக்கொண்டு அந்த சுவரின் மறைவைக் கொண்டு தன் நிலையை சீர்படுத்திக் கொள்கிறான். துப்பாக்கியை தோளில் வைத்து இயக்கிப்பார்க்கும் விதங்களையும், துப்பாகியை இலகுவாக இயக்கமுடியுமா என்பதையும் சரி பார்த்துக் கொள்கின்றான். தம்பி (பிரபாகரன்) தபால் பெட்டிச் சந்தியில் இருந்து திருநெல்வேலிப்பக்கமாக உள்ள ஒரு வீட்டின் சுவரின் பின்னே நிலையை எடுத்து தாக்குதலுக்கு தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கையில் வோக்கி செல்லக்கிளியை கூப்பிடுகின்றது. செல்லக்கிளி அம்மான் மிக அவசரமாக தன் வேலையை முடித்துக்கொண்டு மீதி வேலையை அப்பையா அண்ணையிடம் விட்டுவிட்டு தனது நிலைக்குச் செல்கின்றான். அம்மான் அருகில் உள்ள ஒரு கடையின் மேல் வெடிக்கவைக்கும் கருவியுடனும் தானியங்கி இயந்திரத் துப்பாக்கியுடனும் தயாராகின்றான்.வெளிச்சம் எமக்கும் தெரிந்தது. அப்பகூட வேலை முடியவில்லை. விக்ரர் ”அப்பையா அண்ணை வெளிச்சம் வருகின்றது கெதியா மாறுங்கோ”” என்று கத்த அப்பையா அண்ணை வயர் ரோல்களுக்கு ரேப் சுத்திக் கொண்டிருக்கையில், வோக்கி மீண்டும் அலறியது. “அம்மான் நாங்கள் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்தான். முன்னால் ஜீப், பின்னால் ட்ரக்” என்று அறிவித்தது. எனவே அம்மான் ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடியால் தாக்க முன்னால் வரும் ஜீப்புக்கு நாம் தாக்குதல் தொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கையில் வெளிச்சங்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. ஜீப்பை எம்மிடம் வரவிட்டு, பின்னால் வரும் ட்ரக்வண்டியை கண்ணிவெடியால் தாக்கி அதில் தப்புபவர்களைச் சுடுவதாக எமது திட்டம். ட்ரக் வண்டியில் பின்பக்கமாக இருப்பவர்களை சுடக்கூடியவாறு விக்ரர் நிற்கின்றான். விக்ரரையும் தாண்டுபவர்களை கவனிக்க தம்பியும் சில தோழர்களும் நிற்கின்றனர். வெளிச்சங்கள் திருநெல்வேலிச் சந்தியைக் கடந்து வந்துகொண்டிருந்தது. நான் எட்டிப்பார்த்தேன். முன்னால் இரு விளக்குகளுடன் ஒரு வாகனம். அந்த விளக்குகளுக்கிடையிலான இடைவெளியைக் கொண்டு அது ஜீப் என்று புரிந்துகொண்டேன். அடுத்து ட்ரக். மெல்ல வந்து கொண்டிருக்கின்றன. நாம் ஜீப்பைத் தாக்குவதற்குத் தயாராகிக்கொண்டிருக்க ஜீப் விக்ரர் நின்ற இடத்தைத் தாண்டி கண்ணிவெடி வைத்த இடத்தை அண்மித்த போது கண்ணிவெடி வெடிக்க வைக்கப்பட்டுவிடுகிறது. எமக்கு அதிர்ச்சி. ஏன் அப்படி நடந்தது? சிந்திக்க நேரமில்லை. உண்மையில் ஜீப்வண்டியை விட்டு பின்னால் வரும் ட்ரக் வண்டிக்கே கண்ணிவெடி வைக்க இருந்தோம். இன்றுவரை அது ஏன் ஜீப்புக்கு வெடிக்க வைக்கப்பட்டது என்பது தெரியாது. ஏனென்றால் அதை வெடிக்க வைத்த செல்லக்கிளி அதை விளக்கவில்லை. சண்டை முடிந்தபோது அவனை நாம் இழந்துவிட்டோம்.சிந்திக்க நேரமில்லை. உடனே நானும் என்னோடு நின்றவர்களும் சுடத்தொடங்கினோம். ஜீப்பின் வெளிச்சம் அணையவில்லை. எனவே பின்னால் நடப்பவை எடக’கும’ எமக்குத் தெரியவில்லை. எனது G3யால் இரு விளக்குகளையும் குறிபார்த்து உடைத்தேன். விளக்கு உடைந்ததும் பின்னால் நின்ற ட்ரக்கின் வெளிச்சத்தில் ஜீப்பில் இருந்த சில உருவங்கள் இறங்குவதைக் கண்டு அவற்றை நோக்கியும் ஜீப்பை நோக்கியும் ரவைக் கூட்டில் போடப்பட்டு இருந்த அத்தனை குண்டுகளையும் சுட்டேன். அது இப்படி இருக்க விக்ரரைப் பார்ப்போம். ஜீப் வண்டி அவனைத் தாண்டும் போது விக்ரர் தன் தலையை சுவருக்கு உன்ளே இழுத்துக் கொண்டு நிற்கையில் மிகப்பெரிய சத்தத்துடன் கண்ணிவெடி வெடிக்கிறது. விக்ரர் தலையை நிமிர்த்திப் பார்க்க ஓரே புழுதிமண்டலம். மங்கலாக ஒருவன் வெடித்த ஜீப்பில் அருந்து ஓடிவருவது தெரிய அவனைக் குறிவைத்து விசையை அழுத்த. சில குண்டுகள் அவனின் உடலில் பாய அவன் தூக்கி எறியப்படுகின்றான். அப்படியே சுருண்டுவிழுந்து விட்டான். இன்னுமொருவன் ஓடிவர அவனை நோக்கிச் சுட அவன் மீண்டும் ஓடிவர மீண்டும் சுட குண்டுகள் அவனை வீழ்த்தவில்லை. ஆனால் காயத்துடன் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடினான். விக்ரர் அவனைத் திருப்பிச் சுட்டான். வானளாவ உயர்ந்த புழுதி மண்டலம் அடங்கவில்லை. மற்றும் தகுந்த வெளிச்சம் இல்லை. எனவேதான் சரியாகச் சுடமுடியவில்லை. அவன் ஓடிவிட ஜீப்புக்குக் கிட்டே ஒன்றோ இரண்டோ துப்பாக்கிகள் விக்ரரை நோக்கிச் சுட்டன. அதன் சுவாலையை விக்ரர் கண்டான். தன் இயந்திரத் துப்பாக்கியால் அந்த சுவாலையை மையமாக வைத்து சில வேட்டுக்களைத் தீர்த்தான். பின்பு அடங்கிவிட்டது. மேலும் ஒருசில உருவங்கள் தெரிய அவற்றை நோக்கியும் சில குண்டுகளைச் சுட்டான் துப்பாக்கி திடீரென்று நின்றுவிட்டது. விக்ரருக்கு விளங்கிவிட்டது. போடப்பட்ட குண்டுகள் தீர்ந்துவிட்டது. குண்டுகள் நிரப்பப்பட்ட மறு ரவைச் சட்டத்தைமாற்றி மீண்டும் சுட்டான். அதேவேளை பின்னால் வந்த ட்ரக் வண்டியின் சாரதி வெடி வெடித்ததைப் பார்த்தான். அவன் உடல் சில்லிட்டது. பெரிய வெளிச்சத்தையும், ஜீப் மேலே தூக்கி எறியப்பட்டதையும் கண்ட சாரதி தன்னை அறியாமலே பிரேக்கை இறுக அமத்தினான். ஏன் பிரேக் அழுத்தும் மிதி மீது ஏறி நின்றான் என்றே கூறலாம். ட்ரக் பிரேக் போட்டு நின்றதும் ட்ரக்கின் பின்புறத்தில் இராணுவத்தினர் தம் துப்பாக்கியை தயாராக்கியவாறு இருக்கையிலிருந்து எழத்தொடங்கினர்.தம்பி இரு வாகனங்களும் தன்னைத் தாண்டு மட்டும் சுவரின் மறைவிலே குந்தியிருக்க, இரு வாகனங்களும் அவரைத் தாண்டுகிறது. சிறிதாக நிமிர்ந்து பார்க்கையில் ஜீப் வண்டி கண்ணி வெடியை நெருங்கிக் கொண்டிருக்க ட்ரக் அவருக்கு 20 யார் தூரத்தில் சென்றுகொண்டிருக்க கண்ணிவெடி வெடித்தது. ட்ரக் அவருக்கு மிகக் கிட்ட கையில் எட்டிப்பிடிக்குமாப் போல் துரத்தில் பிரேக் போட்டதால் குலுங்கி நிற்க தான் எப்போதும் உடன் வைத்திருக்கும் அவருடைய G3 வெடிக்கத்தொடங்கியது. ட்ரக்கின் இருக்கையில் இருந்து இராணுவத்தினர் எழுந்தும் எழாததுமான நிலையில் தம்பியின் G3 வெடிக்கத் தொடங்கியது. G3 யிலிருந்து புறப்பட்ட சூடான ரவைகள் தாக்குதலுக்குத் தயாராக எழுந்த இராணுவத்தினரை வரிசையாக விழுத்தத்தொடங்கியது. சற்றும் எதிர்பாரமல் ஏற்பட்ட இத்திருப்பம் தம்பியை ஆபத்தின் உச்ச எல்லைக்குள் சிக்கவைத்துவிட்டது.ஆனால், இந்த எதிர்பாராத திருப்பமே இப்போரின் முழுவெற்றிக்கு வழி அமைத்தது எனலாம். மிகத் துரிதமாகவும் குறிதவறாமலும் துப்பாக்கியை கையாள்வதில் முதன்னமயாளராகத் திகழும் தம்பியிடம் ட்ரக்கில் வந்த 9 இராணுவத்தினரும் சிக்கியதே எமது முழு வெற்றிக்கு வழி கோலியது. ட்ரக் மிகக் கிட்ட நிற்பதால் இலகுவாக தம்பியால் அவர்களைச் சுடமுடிகிறது. வெடியன் அதிர்வில் தெரு விளக்குகள் அணைந்துவிட்ட பொழுதிலும் மிகக் கிட்டேயிருப்பதால் ஒவ்வொருவராகக் குறிவைத்துச் சுட்டார். ஆனால் மிக அபாயகரமான நிலை அவருக்கு. இராணுவத்தினரைப் பொறுத்தவரையில் தம்பி மிகக் கிட்டே நிற்கிறார். எதிர்பாராமல் இத்தாக்குதலில் மிக அபாயத்தின் எல்லையில் தம்பிதான் நிற்கிறார். ஆனால் தனது ஆளுமையால், ஆற்றலால் வரிசையாக இராணுவத்தினரை விழுத்தி வந்த போதிலும் இரண்டு சாதுரியமான இராணுவத்தினர் ட்றக்கிலிருந்து கீழே சில்லுக்குள் புகுந்துகொண்டு, மறைந்திருந்து தமது தாக்குதலை ஆரம்பித்தார்கள். தம்பி நின்ற சுவரில் வேட்டுக்கள் பட்டுத் தெறித்துக்கொண்டிருந்தன. இத்துடன் ட்றக்கின் முன்புறத்தில் இருந்தவர்களும் கீழே பாய எத்தனித்தனர். இதை நோக்கிய தம்பியின் G3 இவர்களையும் நோக்கி முழங்குகிறது.இதிலே மிகவும் சங்கடம் என்னவென்றால் தம்பிக்கு உதவிக்கு எவரும் இல்லை நாம் எமது திட்டத்தின் படி ஜீப்பை முன்னே விட்டு ட்ரக் வண்டிக்கு கண்ணிவெடித் தாக்குதல் செய்வதாக இருந்ததோம். அத்திட்டத்தின்படி தம்பியை மிகப் பின்னுக்கு வைத்திருந்தோம். ஆனால் இப்போ தனியாகவே ட்றக்கை சமாளிக்க வேண்டிய நிலைக்கு தம்பி தள்ளப்பட்டு விட்டார். இதே நேரம் ஜுப்பை நோக்கி சுட்டுக்கொண்டிருந்த விக்ரர் தனக்கு 20 யார் பின்னே ட்ரக் நிற்பதையும் அதிலிருந்து துப்பாக்கிகள் சடசடப்பதையும் அவதானித்தான். தன் இயந்திரத் துப்பாக்கியை ட்றக்கை நோக்கி திருப்பினான். ட்றக்கின் முன் கண்ணாடிகள் சிதறுகின்றன. கண்ணாடிக்கு குறுக்காக ஓர் நீளவரிசையாகச் சுட்டான். அப்பொதுதான் சாரதி இறந்திருக்க வேண்டும். நாம் பின்பு பார்த்தபோது தனது இருக்கையிலேயே ஸ்ரேறிங்கில் சாய்ந்து வாயால் இரத்தம் கக்கியபடி உயிரை விட்டிருந்தான்.விக்ரரின் இடத்திலிருந்து சற்று முன்னோக்கி எதிரில் இருந்த ஒழுங்கையிலிருந்து ‘”பசீர் காக்கா”” றிப்பீட்டரால் ஜீப்பை நோக்கிச் சுட்டுக்கொண்டிருந்தார். றிப்பீட்டரில் தோட்டாக்கள் முடியும்போது அதை மாற்றித் திருப்பித் தாக்கும் படி செல்லி உற்சாகமூட்டிக் கொண்டிருந்தார் காக்காவின் அருகிலிருந்த அப்பையா அண்ணை. அப்போழுது ஒழுங்கையை நோக்கி ஒருவன் S.M.G உடன் ஓடி வந்தான். ‘சுடு” என்ற அப்பையா அண்ணை உடனே ‘கவனம் எங்கட பெடியளோ தெரியாது பார்த்துச் சுடு” என்றார். றிப்பீட்டர் சத்தம் ஓய வந்தவன் பிணமாகச் சரிந்தான். அவனது S.M.Gயை அப்பையா அண்ணை ஓடிவந்து எடுத்துக்கொண்டார். இவனே ரோந்துப் பிரிவுக்கு தலைமை தாங்கிய லெப்ரினன்ட் என்று பின்னர் தெரிந்து கொண்டோம். அவனது விசேட இராணுவப் பட்டிகள் அதை உறுதிப்படுத்தின. இதே நேரம் தம்பி தனியே நிற்பதை உணர்ந்து ரஞ்சனையும் இன்னொரு போரளியையும் ”தம்பியிடம் ஓடு” என்று துரத்தினேன். அவர்கள் அருகிலுள்ள வீடுகளால் பாய்ந்து தம்பியை நோக்கிச் சென்றனர்.ஆனால் ரஞ்சனும் சக போராளியும் தம்பியை நோக்கி சென்றடைந்த போது ட்றக்கிலிருந்த அனைத்து துப்பாக்கிகளையும் தம்பியின் தனி ஒரு G3 ஓயவைத்துவிட்டது. சாதாரணமாக எவரும் நம்புதற்கரிய இவ்வீரச்செயலை முடித்து விட்டு அமைதியாக வீட்டின் அருகேயுள்ள மாமரத்தின் கீழிருந்து முடிந்த ரவைக்கூட்டிற்கு ரவைகளை நிரப்பிக் கொண்டிருந்தார் தம்பி. மதிலேறிக்குதித்த ரஞ்சனும் மற்றைய போரளியும் ஆயுதத்தோடு ஒரு நபர் இருப்பதைக் கண்டு ஆயுதத்தைத் தயார்நிலைக்குக் கொண்டுவந்து ”யாரது”” என்று முன்னே வந்தனர். ”அது நான்ராப்பா”” என்றவாறு ரஞ்சனை அடையாளம் கண்ட தம்பி இங்கே எல்லாம் முடிந்தது. உங்கடை பக்கம் எப்படி என்றார். ”அண்ணை எங்கடை பக்கம் பிரச்சினையில்லை”” என்றார் ரஞ்சன்.”இங்கையும் எல்லாம் முடிந்து விட்டது, ஆனால், எனக்கு சற்று முன்பாக எதிரேயிருந்த புலேந்திரனையும் சந்தோசத்தையும் காணவில்லை, வா பார்ப்போம்”” என்றவாறு தன் பிரியத்திற்குரிய பG3யை தூக்கிக்கொண்டு விரைந்தார் தம்பி. மதிலேறிக் குதிப்பதற்குமுன் ரஞ்சனுடன் வந்த போராளி தம்பியின் அனுமதியைப் பெற்று எதற்கும் முன்னெச்செரிக்கையாக ஓர் குண்டை வீசினான். குண்டு ட்ரக்கின் கீழ் விழுந்து வெடித்து எரிபொருள் தாங்கியை உடைத்தது. இதன்பின் மதிலேறிக் குதித்து றோட்டைத் தாண்டி புலேந்திரன் சந்தோசத்தின் இடத்தையடைந்தான். அங்கு புலேந்திரன் சந்தோசத்தைக் காணவில்லை. ‘எதற்கும் முதலில் இறந்தவர்களின் ஆயுதங்களைச் சேகரியுங்கள்” எனக் கட்டளையிட்டார் தம்பி. மதிலேறி றோட்டில் குதிக்க ஆயத்தமான ரஞ்சனுடன் வந்த மற்ற வீரன் தம்பியைப் பார்த்து ”அண்ணா அவன் அனுங்குகிறான்.” மீண்டும் ஒருமுறை முழங்கிய G3 அவனின் அனுங்கலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இதன் பின் ட்ரக்கை நெருங்கி ஆயுதங்களை சேகரிக்கத் தொடங்கினர். தம்பி எதற்கும் என்று வெளியே கிடந்த இராணுவத்தினரின் தலையில் இறுதி அத்தியாயத்தை G3ஆல் எழுதிவைத்தார். Gயின் வேகம் மண்டையோடுகளைப் பிளக்க வைத்தது. இதே நேரம் பல்கலைக்கழக பின் வீதியால் ஓடிய ஓர் இராணுவவீரனை இன்னோர் போரளி துரத்திச் சென்று சுட்டான். ஜீப்பை முற்றாக முடித்துவிட்டு பொன்னம்மானும் நானும் என்னுடைய போரளிகளும் ட்ரக்கை நோக்கி நடு றோட்டால் ஓடினோம். ”கரையால் வாருங்கள்”” என்ற குரல் எம்மை வரவேற்றது. எல்லோரும் தம்பியை சூழ்ந்துகொண்டு மகிழ்சி ஆரவாரம் செய்து கொண்டு ஆயுதங்களைப் பொறுக்கத் தொடங்கினோம். இதற்கிடையில் பொன்னம்மான் அதீத மகிழ்ச்சியுடன் இறந்து கிடந்த இராணுவத்தினரின் ஹெல்மெட்டை தலையில் போட்டுக்கொண்டு ட்ரக்கின் கீழே இறந்து கிடந்த இராணுவ வீரர்களினது ஆயுதங்களை தேடி எடுத்துக்கொண்டான். இத் தாக்குதல் இரவு நேரமாதலால் எம்மையும் இராணுவத்தினரையும் பேறுபிரிக்க நாம் ஹெல்மெட்டைத் தான் குறியீடாகப் பாவித்தோம். எனவே ஹெல்மெட்டுடன் ஓர் உருவம் நகர்வதைக்கண்ட தம்பி உடனடியாக துப்பாக்கியை தயார்நிலைக்கு கொண்டு வந்து ”யாரது” என்று வினவ அம்மான் ”அது நான் தம்பி” என்றவாறு தனது தவறை உணர்ந்து ஹெல்மெட்டைக் கழற்றினார். பொன்னம்மானை செல்லமாக கண்டித்தவாறு எல்லாரையும் சரிபார்க்குமாறு தம்பி பணிக்க ”அம்மானைக் காணவில்லை”” என்று விக்ரர் கத்தினான். விக்ரரும் புலேந்திரனும் அம்மான் நின்ற கடையின் மேல் ஏறினர். ”டேய் அம்மானுக்கு வெடி விழுந்திட்டுது” என்ற விக்ரரின் குரல் எங்கும் எதிரேலித்தது. எல்லோரும் அங்கே ஓட நான் வானை எடுத்து வந்தேன். வானில் அம்மானை ஏற்றும்போது அம்மானின் உடல் குளிர்ந்துவிட்டது. லிங்கம் இறுதியாக இராணுவத்தினரின் தலையில் போட றெஜி ஆயுதங்களைப் பொறுக்கினான்.வான் புறப்படத் தொடங்க மழையும் மெதுவாகத் தன் கரங்களால் வாழ்த்துத் தெரிவித்தது. எமக்கு செல்லக்கிளி அம்மானின் மரணத்திற்காக இடியும் மின்னலும் சேர்ந்து இறுதி வணக்கம் செலுத்த வான் எமது முகாம் நோக்கி பறந்தது.

 - அன்புடன் கிட்டு –