பக்கங்கள்

31 மே 2012

கனடாவில் ஈழத்தமிழருக்கு பெருமை சோ்த்த மெலானி டேவிட்.

கனடாவின் அதிசிறந்த குடிவரவாளர்களிற்கான தெரிவிற்காக மேற்கொள்ளப்பட்ட தேர்வொன்றில் ரொறன்ரோவின் பிரபல சட்டத்தரணியும், தொழிலதிபருமான மெலானி டேவிட் அவர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இருபத்தைந்து சிறந்த குடிவரவாளர்களைத் தேர்வு செய்யவென மேற்கொள்ளப்பட்ட இந்த தேர்வில் 75 பேர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அவர்களில் மறைந்த எதிர்க்கட்சித் தலைவரின் மனைவியும் பாராளுமன்ற உறுப்பினருமான ஒலிவியா சோ, மற்றும் சிறந்த ஹிப் கொப் பாடகரும் 'weaving flag' பாடலின் மூலம் பிரபல்யமானவருமான ஹனான், எமி விருதிற்குத் தேர்வு செய்யப்பட்ட நடிகரான ரோன்யா லீ வில்லியம்ஸ், ஒலிம்பிக்ஸ் மல்யுத்த வீரரான டானியல் இகாளி ஆகியோருடன், ஈழத்தமிழர்களின் தலை சிறந்த சட்டத்தரணிகளில் ஒருவரும் ரொறன்ரோவில் வளர்ந்து வரும் தொழிலதிபருமான மெலானி டேவிட் அவர்களும் இந்த விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டார். 550 பேர் இந்த விருதுகளிற்காக பரிந்துரைக்கப்பட்ட போதும் அதன் போதான பலத்த தேர்வின் அடிப்படையில் 75 பேர் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவராக மெலானி டேவிட் தெரிவு செயயப்பட்டது ஈழத்தமிழர்களிற்கு பெருமை தரும் விடயமாகக் கருதப்படுகிறது.

30 மே 2012

சிறீலங்கா மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிலாரிக்கு போன இரகசியக் கடிதம்!

சிறிலங்காவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு இரகசிய கடிதம் ஒன்றை நியுயோர்க்கைத் தளமாகக் கொண்ட மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் அனுப்பி வைத்துள்ளது. இந்த இரகசியக் கடிதத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை துரிதமாகவும் அர்த்தமுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சிறிலங்கா அரசின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரும் இந்த நான்கு பக்கக் கடிதத்தை மனிதஉரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிரிவு நிறைவேற்றுப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் எழுதியிருந்தார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடனான சந்திப்பு, மற்றும் மனிதஉரிமைகள் நிலை குறித்த இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே இந்த இரகசியக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை கண்காணிக்குமாறும் அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. நீதியை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இழுத்தடித்துச் செல்லுமேயானால், மேலதிக நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருக்கும் படியும், ஹிலாரியிடம் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த இரகசியக் கடிதத்தில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானத்துக்கு அமைவாக, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் நிபுணத்துவ உதவியை பெற்றுக் கொள்ளுமாறும், ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கமைய சுதந்திரமான அனைத்துலக விசாரணைப் பொறிமுறையை உருவாக்குமாறும், சிறிலங்காப் படைகளின் சித்திரவதைகள் மற்றும் முறையற்ற நடத்தைகளை நிறுத்தும்படியும் - சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மூதூரில் அக்சன் பெய்ம் பணியாளர்கள் படுகொலை, திருகோணமலையில் மாணவர்கள் படுகொலை, லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமற்போனது, லலித்குமார், குகன் ஆகியோர் காணாமற்போனது உள்ளிட்ட தீர்வுகாணப்படாத கொலைகள், காணாமற்போதல்கள் குறித்து விசாரணை நடத்தும் படியும் சிறிலங்கா அரசக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரின் வொசிங்டன் பயணத்துக்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட்ட இந்த இரகசியக் கடிதத்தின் உள்ளடக்கம் தற்போதே வெளியில் கசிந்துள்ளது.

புலிகள் இருக்கும்போது இவ்வளவு கொடுமைகள் நடந்ததில்லை!மகிந்தவை சபிக்கிறார் தேரர்

தமிழர்களின் பாதுகாவலர் விடுதலைப் புலிகளே!:தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதில் மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாக தேசிய பிக்கு முன்னணியின் தலைவர் தம்பர அமிலதேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதன் காரணமாக அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து மஹிந்தவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் இருந்த காலகட்டத்தை விட தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள் தற்போது பன்மடங்கில் அதிகரித்துள்ளன. சர்வதேச தலையீடுகள் மேலோங்க அரசின் பொறுப்பற்ற தன்மையே காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். ஐ.நா.வையும் அமெரிக்காவையும் குறை கூறுவதை விடுத்து மனித உரிமைகள் தொடர்பில் பொறுப்புடைமையை அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அமில தேரர் மேலும் தெரிவித்திருப்பதாவது: போரின் பின்னரும் வடக்கு கிழக்கில் தமிழர்களினதோ தெற்கில் சிங்களவர்களினதோ பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசு தோல்வி கண்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் மேலோங்கி வருவதுடன் சர்வதேச ரீதியிலும் பாரிய சிக்கல்கள் காணப்படுகின்றது. மனித உரிமை பிரச்சினைகள் நாட்டில் தற்போது வெளிப்படையாகவே இடம் பெறுகின்றன. குறிப்பாக நாட்டில் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட அமைதி சூழல் திரும்பவில்லை. மாறாக கடத்தல், காணாமல் போதல், தாக்கப்படுதல் என பல்வேறு மனித உரிமை மீறல்களே நாட்டில் இடம்பெற்றன. இதனை காரணம் காட்டி ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்கு வந்துள்ளன. முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் இக்குற்றச்செயல்கள் குறைவாகவே காணப்பட்டன. தற்போது அது பல மடங்காக அதிகரித்துள்ளது. அத்துடன், எந்தவொரு நாடுமே செய்யாத விடயமொன்றை வெளிவிவகார அமைச்சு செய்துள்ளது. இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விளக்கமெழுதி, அதனை எவ்வாறு செயற்படுத்துவது என்பதை திட்ட வரைவு அமைத்து அமெரிக்காவிற்கு கொண்டுச் சென்று காண்பித்தது. உள்நாட்டில் யாருக்குமே மேற்படி செயற்திட்ட வரைவு காண்பிக்கப்படவில்லை. நம் தாய் நாடு இதை விட கீழ் மட்டத்திற்கு மண்டியிட வேண்டுமா? எனவே தற்போதைய அரசே இவை அனைத்திற்கும் பொறுப்புக் கூற வேண்டும். அது மட்டுமன்றி அந்நிய நாடுகளின் தலையீடுகளுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நாட்டிற்கு பெரும் சாபத்தையே பெற்றுக் கொடுத்துள்ளது என்றார்.

29 மே 2012

யாழில் தங்கு விடுதி உரிமையாளரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

யாழ் மாநகர சபையிலுள்ள விடுதி உரிமையாளர் ஒருவரைக் கைதுசெய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று (28) உத்தரவிட்டுள்ளது. யாழ் நகரில் விருந்தினர் விடுதி என்ற பேரில் காதல் ஜோடிகளை தங்கவைத்து கலாச்சார சீரழிவுக்கு விடுதியை கொடுத்து விபச்சாரத்திற்கு உதவியதாக இந்த விடுதி உரிமையாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகரினால் இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த விடுதி இயங்குவதை தடை செய்யுமாறு கோரி யாழ். நீதிவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த விடுதியில் கலாச்சர சீரழிவு நடைபெறுகிறது. திருமணமாகாத பெண்கள், ஆண்கள் ஜோடியாக தங்குகின்றனர். அத்துடன் விடுதியில் தங்குபவர்களின் அடையாள பதிவினை மேற்கொள்வதில்லை. மது விற்பனை, புகைத்தல் என்பன நடைபெறுகிறது என இந்த வழக்கின் குற்றப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா எதிர்வரும் ஜுன் 16ம் திகதிக்கு முன்பாக இந்த விடுதியின் உரிமையாளரைக் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துமாறு பொலிஸாரிடம் உத்தரவிட்டுள்ளார்.

ரிசாட் பதியூதினுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டது!

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. அமைச்சர் ரிசாட் பதியூதினுக்கு எதிராகவே போராட்டம் நடத்தப்பட்டதாகவும், அதனை முஸ்லிம் மக்களுக்கு எதிரானதாக கருதப்படக் கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மன்னார் ஆயர் அதி வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு எதிராக அமைச்சர் பதியூதீன் கருத்து வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. மன்னார் ஆயருக்கு எதிராக கருத்து வெளியிட்ட அமைச்சு எதிராக மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போரட்டம் நடத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வெளியிடும் கருத்துக்கள் மிக நிதானமாக வெளியிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். சமூகங்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்படக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

28 மே 2012

மண்டபம் முகாமில் ஈழத்தமிழர் கொலை!

தமிழ்நாடு - ராமநாதபுரம் மண்டபம் முகாமில் வசித்து வந்த இலங்கை அகதி ஜெகன் (18) கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.. 
இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த ஜெகன், கடந்த 2008 முதல், மண்டபம் அகதிகள் முகாமில், பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.. 
வீடு அருகில் உள்ள ஆள் இல்லாத அறையில் உறங்கிக் கொண்டிருந்த இவரை அதிகாலையில், அருகில் உள்ளவர்கள் சென்று பார்த்த போது பிணமாக கிடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைகள் மடக்கப்பட்ட நிலையில், வலது தொடை, ஆண் உறுப்பு அருகில் போத்தலால் கீறப்பட்ட காயங்கள் இருந்துள்ளன.. 
மண்டபம் காவல்துறையினரின் விசாரணையில், இவர் இறந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவர வில்லை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு பேரிடம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

27 மே 2012

அருண்பாண்டியனின் யாழ்,விஜயத்தால் தமிழக உளவுத்துறை அதிர்ச்சியாம்!

Arun Pandian Is Peravoorani Constituency Dmdk Aid0090தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் இலங்கை விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வரும் நிலையில், தேமுதிக தனது சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண்பாண்டியனை இலங்கைக்கு சத்தம் போடாமல் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இலங்கைக்கு பயணம் செய்யும் தமிழக அரசியல் தலைவர்கள் மற்றும் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அமைச்சர்கள் போன்றவர்கள், மத்திய அரசு அனுமதி பெற்று தூதுக்குழுக்களில் இணைந்து செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நிலையில், தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், கடந்த சில தினங்களுக்கு முன்பு மிக ரகசியமாக இலங்கை சென்று அங்கு யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்ததாக கூறப்படுகின்றது. இது குறித்து கொழும்பில் உள்ள பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது, தேமுதிகவைச் சேர்ந்த பேராவூரணி சட்ட மன்ற உறுப்பினரும், நடிகருமான அருண் பாண்டியன், யாழ்ப்பாணம் வந்துள்ளது உண்மை. ஆனால், அருண் பாண்டியன் தனிப்பட்ட முறையில் ஒரு மாத சுற்றுலா விசாவில், வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறிப்பாக, திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஐங்கரன் இன்டர்நேஷனல் தலைவர் கருணாமூர்த்தியுடன் யாழ்ப்பாணம் வந்துள்ளார். கருணாமூர்த்தி ஈழத் தமிழர் ஆவார் என்பது நினைவிருக்கலாம். பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களைத் தயாரித்துள்ளவர் கருணாமூர்த்தி. யாழ்ப்பாணம் வந்த, அருண் பாண்டியன், இணுவில் என்ற கிராமத்தில் தங்கியிருந்தார். அப்போது, பொது மக்கள் பலரையும் அவர் சந்தித்துப் பேசினார். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் மிக முக்கியமான புகைப்படங்களை அவர் எடுத்துள்ளார். தமிழ் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் இருவர், அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகின்றது என்கின்றனர். தேமுதிக தலைவர் விஜயகாந்த் இலங்கை விவகாரத்தில் மிக ஆர்வமாக உள்ளதாகவும், அதனால் தான் தனது நம்பிக்கைகுரிய நட்சத்திரம் அருண்பாண்டியன் மூலம் சில தகவல்களை பெற்று வர பணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அருண் பாண்டியன் தமிழகம் வந்த பின்பு, இலங்கையில் ஈழ தமிழர்களின் நிலையை புதுக்கோட்டை இடைத் தேர்தல் பிரச்சாரத்தில் புட்டுவைக்கப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகின்றது. இதை லேட்டாக மோப்பம் பிடித்த தமிழக உளவுத்துறை , கடும் அதிர்ச்சி அடைந்து அது குறித்த தகவல்களை விரைவாக சேகரித்து வருகின்றது.

கைதிகளின் விடுதலை வேண்டி போராட்டம்!

சிறைக்கூடங்களில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை கோரி நாளை மறுநாள் செவ்வாய்கிழமை 29ம் திகதி நண்பகல் 12 மணிக்கு கொழும்பு பொரளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் ஒன்று கூடும்படி, கைதிகளின் குடும்ப அங்கத்தவர்களுக்கும், அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், சமூக நிறுவனங்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட நவசமசமாஜ கட்சி, முன்னிலை சோஷலிச கட்சி, ஐக்கிய சோஷலிச கட்சி ஆகிய கட்சிகளினால் நடத்தப்படும் சாத்வீக ஆர்ப்பாட்டம் தொடர்பில், மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் கடத்தப்பட்டு காணாமல் போனோரின் விடுதலை என்பவை அப்பாவி தமிழ் பாமர மக்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மற்றும் மனித நேய பிரச்சினைகள் ஆகும். அரசியல் தீர்வு வரும்வரை மனித உரிமைகள் மீறப்படுவதை நாம் சகித்துக்கொண்டு காத்திருக்க முடியாது. அரசியல் தீர்வுக்கான பேச்சவார்த்தைக்கான களம்கூட ஏற்படுத்தப்படாதபோது, தமது உறவுகளை பிரிந்து வாழும் பெற்றோர்களையும், குழந்தைகளையும் கண்ணீர் விடாதீர்கள் என நாம் சொல்ல முடியாது. அரசாங்கம் தரும் போலி வாக்குறுதிகளை நம்பி நாம் பதிலுக்கு மக்களுக்கு வாக்குறுதி அளிக்க முடியாது. எமது மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை இன்று தென்னிலங்கை முற்போக்கு அணியினரும் ஏற்றுகொண்டு வருவது நல்ல அறிகுறியாகும். இந்நிலையில் எமது கூட்டு ஏற்பாட்டில் நடைபெற ஏற்பாடாகி இருக்கும் இந்த சாத்வீக ஆர்ப்பாட்டத்தில் தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவபடுத்தும் கட்சிகளையும், சமூக, மத நிறுவனங்களையும் கலந்துகொள்ளும்படி அழைக்கிறேன். கைதிகளின், காணாமல்போனோரின் குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களும் இதில் கலந்துகொள்ள வேண்டும். இதன்மூலமே நாட்டினதும், சர்வதேசத்தினதும் மனசாட்சியை எம்மால் தட்டி எழுப்ப முடியும் என்பதை நாம் நினைவில் நிறுத்தி கொள்ள வேண்டும்.

26 மே 2012

யாழில் நேற்று கடத்தப்பட்ட மாணவன் விடுதலை!

யாழ்,நகரில் நேற்றுக் கடத்திச்செல்லப்பட்ட மாணவன் இன்று காலையில் நல்லூர் பகுதியில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
யாழ் நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கலாச்சார உத்தியோகத்தராக கடமையாற்றும் பிரபாகரனின் புதல்வரான
அக்சையன் நேற்று பிற்பகல் சென் ஜோண்ஸ் கல்லூரியிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை வெள்ளை வானில் வந்த
இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டார்.இவர் நேற்றிரவு கிளிநொச்சியில் மறைவிடம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பின்னர்
இன்று காலை 7மணியளவில் நல்லூர் பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளதாக மாணவனின் தந்தை பிரபாகரன் தெரிவித்ததாக அறியப்படுகிறது.
நான்கு நபர்களினால் தான் கடத்தப்பட்டதாக மாணவன் தெரிவித்துள்ளார்.இந்தக்கடத்தல் எதற்காக நடந்தது என்று தெரியவில்லை,கடத்தல்காரர்களின்
நோக்கம் என்னவென்றும் புரியவில்லை என பிரபாகரன் தெரிவித்துள்ளார்.இந்திய தூதரகத்தின் அழுத்தம் காரணமாகவே தனது மகன்
விடுவிக்கப்பட்டதாக தான் நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.இக்கடத்தல் தொடர்பாக கோத்தபாயவுக்கும் அரச உயர்மட்டத்திற்கும் இந்திய
தூதரகம் கடும் அழுத்தத்தை பிரயோகித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

25 மே 2012

யாழ்.குடாநாட்டில் சமூகவிரோத செயற்பாடுகளில் முஸ்லிம்கள்!


யாழ்.குடாநாட்டில் அதிகரிக்கும் சமூகவிரோத செயற்பாடுகளில் முஸ்லிம்கள் ஈடுபட்டுவருகின்றமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மட்டக்களப்பு காத்தான்குடிப்பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவரும் முஸ்லிம் ஆயுதக் குழுவான ஜகாத் எனப்படும் ஆயுதக்குழு யாழில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை யாழ்.குடாநாட்டில் இளம் பெண்கள் மற்றும் சிறுவர்கள் காணாமல் போகின்ற பின்னணியில் முஸ்லீம்கள் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,
யாழ்ப்பாணம் மானிப்பாய் மாசியப்பிட்டிப் பகுதி தமிழ் சிறுவன் ஒருவனை கடத்திச் சென்று அவனுக்கு சுண்ணத்து பண்ணி முஸ்லீமாக மாற்றி அவனை கொடுமைப்படுத்திய மிகவும் பரபரப்பான சம்பவம் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளமை யாவரும் அறிந்ததே.
இந்த வகையில் குறித்த நிறுவன் இன்று வியாழக்கிழமை(24.05.2012) தினம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மருத்துவப் பரிசோதனைக்காக சிறைக்காவலர்களினால் கொண்டு வரப்பட்டான்.
“ நான் அம்மாவோட இருக்கப் போகிறேன் அம்மா என்னை விட்டுவிட்டு எங்கையும் போகாத… என்னை விட்டுவிட்டு போகாத அம்மா” என வைத்தியசாலையில் அழுது புலம்பினாள்.
சிறுவனின் தாய் தனது மகனைக் கட்டியணைத்து உன்னைவிட்டு போகமாட்டேன் என்ர ராசா என தாயும் அழுதமை பார்த்தவர்கள் நெஞ்சங்களில் உணர்வுகள் ஒருநிமிடம் நிறுத்தப்பட்டு கண்களில் கண்ணீர் துளிகள் பனித்தது.
மானிப்பாய் மாசியப்பிட்டியைச் சேர்ந்த பரமநாதன் ரஜிராம் வயது 12 என்ற மாணவனே இவ்வாறு கதறியழுதான்.
யாழில் முஸ்லிம்களினால் சிறுவர்கள் கடத்தல்கள் மட்டுமல்ல சிறுவர்களை கடத்திச் சென்று பாலியல் தேவைக்காக பயன்படுத்தப்படுகின்றமையும் நடைபெறுகின்றது.
யுத்ததிற்கு பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வந்தேறு குடிகளாக வந்த முஸ்லிம்கள் யாழ்ப்பாணத்தின் பண்பாட்டை வாழ்வியலைச் சிதைப்பதற்காக பல சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர்.
போதைப் பொருள் விற்பனை கிரோயின், கஞ்சா, பான்பறாக், பக்கிஸ்தானிய பீடிகள் என போதைப்பொருள்களைக் கடத்தி வந்து யாழ்ப்பாணத்து இளைஞர்களுக்கு அவற்றை விற்பனை செய்து யாழ்.சமூகத்தை சீரழிக்க முஸ்லிம்கள் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
யாழ்.குடாநாட்டில் முஸ்லிம்களின் இந்த சமூகவிரோத செயற்பாடுகளை தடுப்பதற்கு யாழ்.மக்கள் ஒன்றழனைந்து அவர்களை யாழ்.மாவட்டத்திலிருந்து துரத்த வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

24 மே 2012

உண்ணாவிரத பகுதியில் பெருமளவு பொலிசார் குவிப்பு!

தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக… வவுனியா நகரசபை மைதானத்தில் உண்ணாவிரதம்சிறைகளில் நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்து முன்னெடுத்துவரும் உண்ணாவிரதப் போராட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமானது. நகரசபை மைதானப் பகுதியில் பெருமளவிலான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்ட போதும், பெருமளவு பொதுமக்கள் உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சித் தலைவர்கள் அனைவரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையிலேயே இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.. கட்சி பேதங்களை மறந்து அனைத்துத் தரப்பினரும் இதற்கு ஆதரவளிக்க வேண்டும் என தமிழ் அரசியல் கைதிகளும் கோரிக்கை விடுத்திருந்தார்கள். இன்று காலை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்னதாகவே நகரசபை மைதானப் பகுதியில் பெருந்தொகையான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நகரசபை வாயிலிலும் காவல்துறையினர் பாதுகாப்பக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

சிறிலங்கா மீது அடுத்த ‘குண்டு‘ தயார்!

நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை குறித்த 2011ம் ஆண்டுக்கான அறிக்கையை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இன்று வெளியிடவுள்ளது.
இந்த அறிக்கையில் சிறிலங்கா குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் கீழ் செயற்படும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான செயலகம், ஆண்டுதோறும் நாடுகளின் மனிதஉரிமைகள் நிலை தொடர்பான அறிக்கையை வெளியிட்டு வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக வெளியிடப்படும் அறிக்கைகளில், சிறிலங்கா குறித்து காட்டமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், 2011ம் ஆண்டுக்கான மனிதஉரிமைகள் அறிக்கையை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனும், ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னரும் இணைந்து இன்று வெளியிடவுள்ளனர்.
வொசிங்டன் நேரப்படி, இன்று காலை 10.30 மணியளவில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகச்சந்திப்பு அறையில் இந்த அறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இந்த அறிக்கை கடந்தவாரம் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், வொசிங்டனில் அமெரிக்க இராஜாங்கச் செயலரைச் சந்திப்பதற்கு முன்னரே தயாராகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பின்னர் ஹிலாரி கிளின்ரனும், மைக்கல் போஸ்னரும் சுமார் ஒரு மணிநேரம் செய்தியாளர்களுடன் கலந்துரையாடவுள்ளனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள, ஜனநாயகம், மனிதஉரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் மைக்கல் போஸ்னர்,
“சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்ட மீறல்கள் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது.
எல்லா சிறிலங்கர்களுக்கும் நீதியானதும் சமத்துவமானதுமான நல்லிணக்கத்தை நடைமுறைப்படுத்த சிறிலங்கா அரசாங்கம் ஐ.நாவுடனும், அனைத்துலக சமூகத்துடனும் இணைந்து பணியாற்றக் கடமைப்பட்டுள்ளது“ என்று கூறியுள்ளார்.

23 மே 2012

தங்கச்சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிய கோப்ரல்!


ஆசிரியை ஒருவரின் பதினொன்றரை இலட்சம் பெறுமதியான, தங்கச்சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடியதாக கூறப்படும் இராணுவ உயர் அதிகாரியொருவரை(கோப்ரல்) நேற்று முன்தினம் பண்டராவளை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆசிரியை, பண்டாரவளை எல்ல தொட்ட பிரதேசத்தில் புகையிரத வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த சமயம் சந்தேக நபரான இராணுவ கோப்ரல்(வயது 39) ஆசிரியையிடம் இருந்து சங்கிலியை பறித்துக் கொண்டு தலை மறைவாகியதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இராணுவ கோப்ரல் பண்டராவளை பிரதேசத்தில் உள்ளவர் என்றும் குறித்த ஆசிரியை நகருக்கு வந்து மாலை வேளையில் வீடு திரும்பியதை அவதானித்துக் கொண்டிருந்து அதன் பின் தொடர்ந்து சென்று கொள்ளையடித்துள்ளதாக தெரிய வருகின்றதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

22 மே 2012

தேர்வில் பேர‌றிவாள‌ன்,முருக‌ன் சாதனை!

தமிழகத்தில் 12வது பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தூக்குதண்டனை கைதியான முருகன், பேரறிவாளன் இருவரும் இந்த ஆண்டு தனித்தேர்வராக சிறையில் இருந்தபடியே படித்து 12வது தேர்வு எழுதினர்.
வணிகவியல் பாடத்திட்டத்தை முதல்நிலை பாடமாக எடுத்து தேர்வு எழுதியிருந்தார்கள். இன்று முடிவுகள் வெளியிடப்படும் என்றதும் தேர்வு முடிவுகளை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டு இருந்தார்கள். இன்றைய தேர்வு முடிவுகளை அவர்களுக்கு சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பேரறிவாளன், தமிழில் 185, ஆங்கிலத்தில் 169, வரலாறு 183, பொருளாதாரம் 182, வணிகவியல் 198, அக்கவுண்டன்சி 179 என மொத்தம் 1096 மார்க் எடுத்துள்ளார்.
முருகன் 986 மார்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார். இதில் முருகன் வணிகவியல் பாடத்திட்டத்தில் 200க்கு 200 மார்க் எடுத்து வெற்றி பெற்றுள்ளார்.
இவர்களைப்போல் சிறையில் இருந்தபடி தேர்வு எழுதிய மேலும் 4 கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிறையில் தண்டனை கைதியாக உள்ள படிக்காதவர் களுக்கு ஆசிரியராக இருந்து பாடங்களை நடத்தி வரு கிறார் பேரறிவாளன் என்பது குறிப்பிடதக்கது.

மக்களுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்!


தந்தையை இழந்த மகளாக துயரங்களை எதிர்கொள்கிறேன்!நாட்டில் மக்களுக்கான இறைமை மற்றும் அவர்களுக்கான அதிகாரங்கள் நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தனது நாட்குறிப்பில் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் எட்டாம் திகதி குறிப்பிடப்பட்டிருந்த வாசகத்துடன் ஹிருணிகா, ஜனாதிபதிக்கான தனது கடிதத்தினை ஆரம்பித்துள்ளார்.
குறித்த தினத்தினை (THE DAY I LOST MY SOUL) அதாவது “எனது உயிரினை இழந்த தினம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஏழு மாதங்களாக தான் தந்தையை இழந்த ஒரு மகளாக, துன்பம், துயரம், அவமானம், அச்சுறுத்தல் என அனைத்தையும் எதிர்கொண்டதாக ஹிருணிகா பிரேமச்சந்திர ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவ்வாறான தருணங்களை தான் தொடர்ந்தும் அனுபவிப்பதாகவும், வாழ்நாளில் மிகவும் கஷ்டமான அனுபவங்களாக அவை அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி, அதேபோன்று ஏனைய பொறுப்புள்ள அதிகாரிகள் மக்களின் இறைமையை பயன்படுத்துவதாக ஹிருணிகாவின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
செய்திகளில் எனது தந்தையின் இரத்தக்கறையைக் கண்டபோது என்னால் என்னையே கட்டுப்படுத்திக்கொள்ள முடியாது போனது. எனக்கு கதறி அழ வேண்டும் போல் இருந்தது, சத்தமிட வேண்டும் போன்று இருந்தது. ஆனாலும் என்னால் வாய் பேச முடியவில்லை.
1980 களில் இருந்து எனது தந்தையின் அரசியல் பயணம் எவ்வாறானது என கொலன்னாவ பகுதி மக்கள் மாத்திரமன்றி, அனைத்து மக்களும் அறிவார்கள். 1979 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி அரசு இருந்த போது, இலங்கை மக்கள் வீட்டிற்கு வெளியே வருவதற்கே அச்சமடைந்த காலப்பகுதி அது.
அப்போது அந்த அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது, மக்களை ஒன்றிணைத்து வீதிக்கு இறங்கி நீலக்கொடியை கொலன்னாவையில் பறக்கவிட்ட ஒரே தலைவர் எனது தந்தை. கடந்த ஏழு மாதங்களாக பிரதான சந்தேகநபரை சட்டத்தின் முன் கொண்டுவர வேண்டுமென்றே நான் கூறி வருகிறேன்.
தற்போது இந்த வழக்கு பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் தரப்பு மற்றும் துமிந்த சில்வா உள்ளிட்ட நாட்டின் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தரப்பினரின் வழக்காக மாறியுள்ளது.
இந்தக் கடிதம் யாருடைய அழுத்தங்களுக்கும், தேவைகளுக்கும் அமைய எழுதப்பட்ட ஒன்று அல்ல. எனது உள்ளத்தில் பதிந்துள்ள அனைத்து விடயங்களையும் இந்தக் கடிதத்தில் சேர்த்துள்ளேன்.
ஜனாதிபதி அவர்களே தற்போது இது உங்களுக்கான சந்தர்ப்பம், இதனை படித்தவுடன் கிழித்துப்போடுவதா? கோபமடைந்து நடவடிக்கை எடுப்பதா? அல்லது இரண்டு, மூன்று தடவைகள் அல்லது 10 தடவைகள் சிந்தித்து நியாயத்தை வழங்குவதா? என்பதை நீங்களே தீர்மானிக்க வேண்டும்.
பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவிற்கு நியாயம் வழங்கப்படுமாயின், இந்த நாட்டில் சட்டத்துக்கு முரணான விதத்தில் செயற்படுகின்ற நபர்களுக்கு அதுவொரு முன்னுதாரணமாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

21 மே 2012

சரத் பொன்சேகா விடுதலை!

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெலிக்கடைச் சிறைச்சாலையில் இருந்து இன்று மாலை சுமார் 4.50மணியளவில் விடுதலை செய்யப்பட்டார்.
27 மாதகாலம் சிறைவாசம் அனுபவித்த அவருக்கு சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்துள்ளதை அடுத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நவலோகா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரத் பொன்சேகா இன்று காலை அங்கிருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து, உயர்நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவர், தாம் சமர்ப்பித்திருந்த இரண்டு மேல்முறையீட்டு மனுக்களையும் விலக்கிக் கொள்ளும் மனுவை சமர்ப்பித்தார்.
அதனை நீதியரசர்கள் ஏற்றுக்கொள்வதாக இன்று பிற்பகல் அறிவித்தனர்.
இதையடுத்து மீண்டும் வெலிக்கடைச் சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு அங்கு முறைப்படியான விடுதலை அளிக்கப்பட்டது.
பிற்பகல் 4.50 மணியளவில் சரத் பொன்சேகா சிறையில் இருந்து வெளியேறினார். அவரை பெருமளவு ஆதரவாளர்கள் கூடி நின்று வரவேற்றனர்.

இரும்பு வாங்க சென்ற முஸ்லீம்கள் இளம் பெண் மீது பலாத்காரம்!

 
ஆட்டோவில் வீடு வீடாகச் சென்று பழைய இரும்பு சேகரிப்பில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞர் ஒருவர், வீட்டிலிருந்த இளம் பெண்மீது பாலியல் பலாற்காரம் புரிந்துள்ளார். 19ம்திகதி காலை காரைநகர் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரின் வீட்டுக்கு பழைய இரும்பு சேகரிக்க சென்ற இவர், தம்மிடம் உள்ள பழைய இரும்புகளை வீட்டின் பின்வளவில் தாயார் எடுக்கச் சென்ற சமயத்தில் அவரது மகள் மீது பாலியல் வன்முறையைப் பிரயோகித்துள்ளார். தனது ஆட்டோவில் தப்பியோட முற்பட்டவரை ஊரவர்கள் ஒன்று கூடி பிடித்து நையப் புடைத்துள்ளனர். இவ்விடயம் சம்பந்தமாக காரைநகர் பொலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காரைநகர், வட்டுக்கோட்டை, பொலீசார் வந்து காயமடைந்த இளைஞனை கைது செய்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இதேவேளை பாதிக்கப்பட்ட இளம் பெண்ணும் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு பொலீசாரால் அனுப்பிவைக்கப்பட்டார். பெண்ணின் பெற்றோர்கள் டாக்டர்களின் அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் அறிப்படுகின்றது. யாழ்ப்பாணக் குடாநாட்டில் பழைய இரும்பு சேரித்தல் முக்கியதொழிலாக உள்ளது. கடந்த வருடம் ஒரு கிலோ இரும்பு 30 ரூபாவாகவும் இந்த வருடம் 60 ரூபாவிற்கு உயர்ந்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட வீடுகள், படலைகள், வண்டில்கள் போன்றவற்றின் இரும்புகளை பழைய இரும்புக்காக களவு எடுத்து விற்கப்படுவது தெரிந்ததே. இப்படியான பழைய இரும்பு கேசரிப்பவர்கள் பல சந்தர்ப்பங்களில் பல கற்பழிப்பு, கொள்ளை, களவு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர் என்றும், ஆள் இல்லாத வீடுகளின் உள்ளே புகுந்து இவர்கள் இரும்புகள் களவெடுத்து பிடிபட்டு பலஇடங்களில் சண்டையில் முடிவடைந்ததுமுண்டு என அவ்வூர் மக்கள் தெரிவித்தனர்.இதேவேளை இச்செயலை கண்டித்து யாழ்,முஸ்லீம் சமூகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும் அறியப்படுகின்றது.இந்த பாதகச்செயலை செய்தவர்கள் எமது கையில் கிடைத்திருந்தால் அடித்தே கொன்றிருப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்,அவர்கள் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சரியான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 மே 2012

அகப்பட்டுக்கொண்ட திருட்டுப்பெண்கள்!

சாவகச்சேரி ஆலயத்தினுள் சங்கிலி திருடிய இரண்டு பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.. இந்தச் சம்பவம் கடந்த 17ஆம் திகதி மாலை சாவகச்சேரி வாரியப்பர் சிவன் ஆலயத்தில் இடம்பெற்றது. 
வியாழ மாற்றத்தை ஒட்டி ஆலயத்தில் இடம்பெற்ற விசேட யாகத்தில் கலந்து கொள்ள பெருமளவு பக்தர்கள் கூடியிருந்தனர். 
யாகம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் அடியார்களுடன் நின்ற இரண்டு பெண்களும் கையில் சேலைத் தலைப்பை சுற்றி வைத்துக் கொண்டு நெரிசலைப் பயன்படுத்தி பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துள்ளனர். 
இதனை அவதானித்த சிறுவன் சங்கிலியைப் பறிகொடுத்த பெண்ணிடம் சம்பவத்தைக் கூற அடியார்கள் திரண்டு இரண்டு பெண்களையும் மடக்கிப் பிடித்து சாவகச்சேரி காவல்துறையினரிடம் கையளித்தனர்.. 
மட்டக்களப்பு, சிலாபம் ஆகிய இடங்களைச் சேர்ந்த இரண்டு பெண்களையும் காவல்துறையினர் சாவகச்சேரி நீதிமன்றில் கடந்த 18 ஆம் திகதி ஆஜர்படுத்தினர். இந்த இருவரையும் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்..

யாழ்,பல்கலை மாணவர்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக அறிவிப்பு!


யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக் கோரியும் மாணவர்களுக்குரிய பாதுகாப்பினை வலியுறுத்தியும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாகவும் மாணவர்கள் காலவரையற்ற வகுப்புப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
மாணவர்களுக்கான பாதுகாப்பு கிடைக்கும் வரையில் காலவரையறையற்ற தமது வகுப்பு பகிஸ்கரிப்பை மேற்கொள்வதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்படுகையில்:
வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் பல்கலைக்கழத்திற்கு சென்று கொண்டிருந்த வேளையில், கலைப்பீட 4ம் வருட மாணவனும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 2012ம் ஆண்டுக்கான செயலாளராக பரிந்துரை செய்யப்பட்டவருமான பரமலிங்கம் தர்சானந், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால், அதிக சனநடமாட்டம் கூடிய யாழ்ப்பாணம் கலட்டி சந்தியில் உள்ள இராணுவ காவலரன் அருகில் வைத்து கூரிய மற்றும் இரும்பு ஆயுதங்களால் கடுமையாக தலைப்பகுதியில் தாக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறான தாக்குதல்கள் கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வருடத்திற்கான யாழ். பல்கலைக்கழ மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.
மாணவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தொடர்ச்சியான தாக்குதல்களால், மாணவர்கள் உடல், உள ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அவர்கள் கல்விச் செயற்பாடுகளில் சுமூகமான முறையில் ஈடுபடமுடியாமல் போகிகின்ற நிலை தோன்றியுள்ளது.
கடந்த காலத்தில் மேற்படி மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிமணியம் தவபாலசிங்கம் தாக்கப்பட்டதன் பின்னர், மாணவர்களின் கடுமையான எதிர்ப்பு போராட்டத்தின் காரணமாக யாழ். மாவட்ட தலைமை பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியுடன் யாழ் பல்கலைக்கழக நிர்வாகம் நடாத்திய கலந்தரையாடல் கூட்டத்தின் போது, மாணவர்கள் மீதான தாக்குதல்கள் இனிவரும் காலத்தில் நடைபெறாதவாறு பாதுகாப்பு வழங்கப்படும் என்கின்ற உத்தரவாதத்தினை மாணவர்களுக்கு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் இத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது என்பது தமிழ்க் கல்விச் சமூகத்தில் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க அண்மைக் காலங்களில் யாழ். பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளும் சூழலிலும் இராணுவ புலனாய்வாளர்களின் சுதந்திரமான நடமாட்டம் அதிகரித்திருக்கின்றது.
இதனை பல்கலைக்கழக நிர்வாகம் அறிந்திருந்தும் அதனை தடுத்து நிறுத்தவதற்கான எந்தவிதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. அத்தோடு மேற்படி மாணவர் மீதான தாக்குதல்கள் குறித்து அக்கறை கொள்ளாது அசமந்தப் போக்குடன் இருப்பதும் மாணவர்கள் மத்தியில் கடுமையான கொந்தளிப்பை தோற்றுவித்துள்ளது.
இவ்வாறான பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகள் காரணமாக மாணவர் மீதான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியானதொன்றாகவே மாறியுள்ளது.
எனவே யாழ். பல்கலைக்கழக மாணவர் மீதான இத்தகைய கொலை மிரட்டல்கள், கொலை முயற்சிகள் மற்றும் தாக்குதல்கள் போன்றவற்றை மாணவர்கள் கடுமையாக கண்டிப்பதோடு தொடர்ச்சியான முறையில் மேற்கொள்ளப்படும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் மாணவர்களுக்குரிய பாதுகாப்பினை வலியுறுத்தியும் எதிர்ப்பினைத் தெரிவிக்கும் முகமாகவும் மாணவர்கள் காலவரையற்ற வகுப்புப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை மதியத்துடன் தமது விரிவுரைகளை பகிஸ்கரித்துள்ள மாணவர்கள் அன்றைய தினம் துணைவேந்தரது அலுவலகத்தை சுற்றி வளைத்ததுடன் அவரிற்கு எதிராக கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.துணைவேந்தர் ஆளுந்தரப்பினது கட்சி பிரதிநிதி போன்று செயற்படுவதாகும் அரச ஆதரவு தமிழ் கட்சியிற்கு பயந்து செயற்படுவதாகவும் மாணவர்கள் கோசங்களை எழுப்பியிருந்தனர். 

19 மே 2012

புளியங்கூடல் இந்தன்முத்துவிநாயகர் தேர்த்திருவிழா!



புளியங்கூடல் மண்ணில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற
இந்தன் முத்து விநாயகர் ஆலய தேர்த்திருவிழா இன்று
மிகவும் சிறப்பாக நடைபெற்றது.ஆயிரக்கணக்கான பக்தர்களின்
பக்தி பிராவகத்தினூடே விநாயகப்பெருமான் தேரேறி அனைத்து
அடியார்களுக்கும் அருள் புரிந்தார்.கற்பூரச்சட்டி ஏந்தியும்,அங்கப்பிரதிஷ்டை செய்தும்,
காவடி எடுத்தும் அடியார்கள் தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொண்டனர்.
நாளை தீர்த்தோற்ஷபம் நடைபெறுவதுடன் விநாயகப்பெருமான் சப்பறத்தேர் ஏறி
வீதியுலா வந்து அடியார்களுக்கு அருள்பாலிக்க இருக்கிறார்.

இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்!


இலங்கை மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கும் விவகாரம் தொடர்பில் இலங்கை காத்திரமான நடவடிக்கை எடுக்கவேண்டுமென அமெரிக்கா வலியுறுத்த வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்ரன், இலங்கைப் பிரதிநிதிகளுக்கு நினைவுபடுத்த வேண்டுமென தெரிவித்துள்ளது. தற்போது அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கைப் பிரதிநிதிகளுடன் நடைபெறும் சந்திப்புக்களின் போது குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் பற்றி வலியுறுத்தப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
குற்றச் செயல்கள் தொடர்பில் உள்நாட்டு விசாரணை நடத்தப்படும் என இலங்கை அரசாங்கம் தெரிவித்து வரும் போதிலும் இதுவரையில் அவ்வாறான விசாரணைகள் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனை சந்திப்பதற்கு முன்னதாக சர்வதேச மன்னிப்புச் சபை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வெற்று வாக்குறுதிகளுக்காக சர்வதேச சமூகம் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக சுயாதீனமான, சர்வதேச விசாரணைப் பொறிமுறைமை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
சுயாதீனமான விசாரணைகளின் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நியாயத்தை வழங்க முடியும் என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. 

18 மே 2012

பரந்தன் காட்டுப்பகுதியில் குண்டுச்சத்தங்கள்!


இன்று அதிகாலை 5.00 மணியளவில் பரந்தன்-முல்லைத்தீவு (A35 ) நெடுஞ்சாலைக்கு சுமார் 15km வடக்குகிழக்கே உள்ள காட்டுப்பகுதியில் பாரிய ஒரு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சற்று நேரம் கழித்து தொடர்ந்து துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் அந்தப் பகுதியில் இருந்து கேட்ட வண்ணமாக இருந்தது.
இந்த துப்பாக்கி சத்தம் சுமார் 20 நிமிடங்கள் நீடித்தன.
அதனைத்தொடர்ந்து சம்பவம் நடக்கும் பிரதேசம் நோக்கி படையினர் விரைந்தனர்.
சற்றுநேரத்தின் பின்பு இன்னுமொரு பாரிய குண்டு வெடிப்பு சத்தம் A35 நெடுஞ்சாலைக்கு மிக அருகாமையில் கேட்டது.
பின்பு அங்கு தொடர்ந்து கனரக துப்பாக்கி சத்தங்கள் கேட்டதாகவும். கொஞ்ச நேரத்தின் பின்னர் சூட்டுச் சத்தங்கள் தணிந்ததாக குறித்த பிரதேசத்துக்கு அருகில் வாழும் ஒருவர் தெரிவித்தார்.

சரணடைந்து காணாமல் போன 40ற்கும் மேற்பட்ட போராளிகளது விபரங்கள் வெளியாகின!


இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தகாலப்பகுதியான மே 16,17,18 ஆகிய நாட்களில் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் பலர் காணாமல் போயுள்ளனர். சரணடைந்தவர்களில் பலர் மனைவி, பிள்ளைகளோடும் சரணடைந்துள்ளனர். அவர்களின் நிலையென்ன என்பது தொடர்பாக இதுவரை சிறிலங்கா அரசாங்கம் வெளிப்படுத்தவில்லை. தமிழீழ அரசியல்துறைப்பொறுப்பாளர் பா.நடேசன், மற்றும் புலித்தேவன் உள்ளிட்ட பலர் சரணடைந்தமை பலரும் அறிந்ததே. இந்நிலையில் அவர்கள் சிறிலங்கா படையினரால் சித்திரவதைகளின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டுள்ளமை காட்டும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
இதேபோன்று சரணைடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ் அவர்களையும் சித்திரவதையின் பின்னர் படுகொலைசெய்யப்பட்டதற்கான ஆதார புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.
இறுதிநாட்களில் சரணடைந்த பல போராளிகளை இதுவரை சிறிலங்கா அரசாங்கம் உறவினர்களுக்கு காட்டாது இருப்பது சந்தேகப்படவைக்கத்தக்க விடயங்களே. இவர்கள் இறுதி நாட்கள் பா.நடேசன், புலிதேவன், ரமேஸ் போன்று கொல்லப்பட்டுவிட்டார்களா? என்ற பலத்த சந்தேகம் மக்கள் மத்தியில் நிலவுகின்றது.
விடுதலைப்புலிகளின் இராணுவ பேச்சாளர் இளந்திரையன் இறுதி நாட்களில் முதுகுப்பகுதியில் பலத்த காயமடைந்திருந்தார். இவரை இவரது மனைவியும் உறவினர்களும் முல்லைத்தீவு பகுதியில் வைத்தே இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தனர். ஆனால் அவரை இதுவரை அவரது உறவினர்களுக்கு காட்டவில்லை.
தளபதி லோறன்ஸ், கி.பாப்பா ஆகியோரும் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்திருந்தனர். (இருவரும் ஒன்றாக சென்றனர்) லோறன்ஸ் இறுதியாக நீல நிற செக் சாரமும் பிறவுன் கலர் இரண்டு பக்கமும் பொக்கற் வைத்த சேட்டும் அணிந்திருந்திருக்கின்றார். அதேவேளை மெல்லிய நீலநிறத்திலான சேட்டும், நீல சாரமும் அணிந்திருந்த கி.பாப்பா கிலட்சஸ் ஒன்றின் உதவியோடு முல்லைத்தீவுப்பகுதிக்கு சென்றிருந்தார். இவர்களை இறுதியாக வன்னிச்செய்தியாளர் ஒருவர் படையினரால் காயமடைந்தவர்களை ஏற்றும் பகுதியான முல்லைத்தீவு பகுதியில் வைத்து மிக அருகாமையில் கண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் காணாமல் போனவர்களில் ஒரு தொகுதியினர் குறித்த விபரங்கள் வருமாறு,
மணலாறு கட்டளைபணியகத்தளபதிகளில் ஒருவரான செல்வராசா
மணலாறு கட்டளைப்பணியக தளபதிகளில் ஒருவரான பாஸ்கரன்
இம்ரான் பாண்டியன் சிறப்புத்தளபதி வேலவன்
தளபதி லோறன்ஸ்
தளபதி குமரன்
விடுதலைப்புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன்
மட்டுமாவட்ட தளபதிகளில் ஒருவரான பிரபா
தமிழீழ அரசியல் துறைதுணைப்பொறுப்பாளர் சோ.தங்கன்
வழங்கப்பகுதி பொறுப்பாளர் ரூபன்
நகைவாணிபங்களின் பொறுப்பாளர் பாபு
தமிழீழ வைப்பகப்பொறுப்பாளர் வீரத்தேவன்
தமிழீழ விளையாட்டுத்துறைப்பொறுப்பாளர் கி.பாப்பா
தமிழீழ விளையாட்டுத்துறை துணைப்பொறுப்பாளர் ராஜா(செம்பியன்) அவரது மூன்று பிள்ளைகள்.
தமிழீழ அரசியல் துறையைச்சேர்ந்த கானகன்
தமிழீழ கல்விக்கழகப்பொறுப்பாளர். வெ.இளங்குமரன்,மனைவி வெற்றிச்செல்வி மற்றும் மகள்
தமிழீழ கல்விக்கழக பொறுப்பாளர்களில் ஒருவரான அருணா
விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் மற்றும் அவரது மகன், உதவியாளர் போராளி ஐங்கரன்
தமிழர் புனர்வாழ்வுக்கழக துணை நிறைவேற்றுப்பணிப்பாளர் சொ.நரேன்
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர் பிரியன் மற்றும் குடும்பம்
தமிழீழ நிர்வாக சேவை முன்னாள் பொறுப்பாளர் வீ.பூவண்ணன்
தமிழீழ நிர்வாசேவை பொறுப்பாளர்களில் ஒருவர் தங்கையா
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான மலரவன்
தமிழீழ நிர்வாக சேவை பொறுப்பாளர்களில் ஒருவரான பகீரதன்
தமிழீழ போக்குவரத்துக்கழக பொறுப்பாளர் குட்டி
தமிழீழ கலைபண்பாட்டுக்கழகப்பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை
திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் எழிலன்
யாழ்.மாவட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் இளம்பரிதி
அரசியல்துறைநிர்வாகப்பொறுப்பாளர் விஜிதரன்
தளபதிகளில் ஒருவரான வீமன்
வனவளபாதுகாப்புப்பிரிவு பொறுப்பாளர் சக்தி குடும்பம்
சிறுவர் இல்லங்களின் பொறுப்பாளர் இ.ரவி
முள்ளியவளைக்கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் சஞ்சை
நீதிநிர்வாகப்பொறுப்பாளர் பரா
சமர்ஆய்வு மையப் பொறுப்பாளர் யோகி
ராதா வான்காப்புப்படையணிபொறுப்பாளர்களில் ஒருவர் குமாரவேல்
தமிழீழ மருத்துவப்பிரிவுப்பொறுப்பாளர் ரேகா
மணலாறு மாவட்ட கட்டளைத்தளபதி சித்திராங்கன்
மாலதி படையணித்தளபதிகளில் ஒருவரான சுகி
கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான அருணன்
மருத்துவப்பிரிவைச்சேர்ந்த மனோஜ்
நிதித்துறையைச்சேர்ந்த லோறன்ஸ் உட்பட்டவர்களின் நிலை என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

17 மே 2012

மடுமாதா ஆலயத்தை காத்தவர்கள் புலிகளே!


மன்னாரில் உள்ள பழமைவாய்ந்த மடு மாதா சிலையை பல முறை அழிவில் இருந்து காப்பாற்றியது விடுதலைப் புலிகள் தான் எனப் பிரையன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். 1920ம் ஆண்டு வத்திக்கானில் உள்ள போப்பிடன் அனுமதிபெற்று, மடுவில் ரோமன் கத்தோலிக்கர்கள் புனித மாதா சிலையை நிறுவினர்.
மிகவும் பழமைவாய்ந்த இச் சிலையின் அருகில் இயேசுவின் திருவுருவமும் உள்ளது. 1988ம் ஆண்டு முதல் இலங்கைப் படையினர், மடு மாதா அலயம் மீது தாக்குதலை நடத்திவந்தனர் என்றும் 1999ம் ஆண்டு காலப்பகுதியிலும் 2008 மற்றும் 2009 ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கை இராணுவம் மன்னாரை முற்றுகையிட்டபோதும் விடுதலைப் புலிகளே மாதா சிலையை காப்பாறினர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட ஆயர் வணக்கத்துக்குரிய ராயப்பு ஜோசப் ஆண்டகை, தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே பிரையன் செனிவிரட்ன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இலங்கை அதிகாரிகள் கிண்டல் செய்தனர்!-ஜொலண்டா


ஜெனீவாவில் நடந்த மனித உரிமை மாநாட்டில் கலந்துகொண்ட தன்னை இலங்கை அதிகாரிகள் கிண்டல் செய்தனர் என்று ஜொலண்டா போஸ்டர் தெரிவித்துள்ளார். ஜொலண்டா போஸ்டர் அவர்கள் சர்வதேச மன்னிப்புச் சபையில் அங்கம் வகிக்கும் முக்கிய அதிகாரிகளில் ஒருவர் ஆவார். இவர் இலங்கை தொடர்பாக பல கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புரொன் லைன் கஃபே எனப்படும், முன்னணி ஊடகவியலாளர் அமைப்பு, இலங்கை தொடர்பான கருத்தரங்கு ஒன்றை நேற்றைய தினம் நடத்தியிருந்தது. இதனை பி.பி.சி காட் டோக் என்னும் நிகழ்ச்சியை நடத்தும் ஸ்டீபன் ஸக்கர் நெறிப்படுத்தினார். இன அழிப்புக்கான தமிழர் அமைப்பில் இருந்து ஜனனி கலந்துகொண்டார்.
மகிந்தரின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜீவ விஜயரட்ன, கொலைக்களங்களின் தயாரிப்பாளர் காலம் மக்ரே, சர்வதேச மன்னிப்புச் சபையின் அதிகாரி ஜொலண்டா மற்றும் இலங்கை அரசியல் வாதி என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் அருன் தம்பிமுத்துவும் கலந்துகொண்டார். இதில் பேசிய ஜொலண்டா, தம்மை இலங்கை அரசின் அதிகாரிகள் ஜெனீவாவில் வைத்து கேலிசெய்ததாகத் தெரிவித்தார். 78 பேர் அடங்கிய இலங்கை அரசின் குழு, தம்மையும் தமது அமைப்பைச் சார்ந்த உறுப்பினர்களையும் அணுகி, இலங்கை அரசின் நிலை தொடர்பாக விளக்க முற்பட்டதாகவும், அதனை ஏற்க்க மறுத்த தம்மை, அவர்கள் கேலி செய்ததாகவும் தெரிவித்தார்.

16 மே 2012

திருடர்களை பாதுகாத்த சிங்களப்படைகள்!


இரவு நேரத்தில் கொள்ளையில் ஈடுபட்ட இரு கொள்ளையர்களை மடக்கிபிடித்த பொது மக்களை படையினர் கண்மூடித்தனமாக தாக்கியதோடு, கொள்ளையர்களையும் பத்திரமாக வழியனுப்பி வைத்துள்ளனர்.
இச்சம்பவம் நுணூவில் மாணாங்குளம் பிள்ளையார் கோவிலடியில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது. வீடென்றில் திருட்டில் ஈடுபட்ட வேளையில் இவர்கள் இருவரும் மடக்கி பிடிக்கப்பட்டனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவலளிக்கப்பட்டபோதும் நீண்டநேரமாகியும் பொலிஸார் வரவில்லை.
இந்நிலையில், திருடர்களை கால்நடையாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லும் வழியில் இருந்த இராணுவக் காவலரணில் நின்றிருந்த படையினர், சிங்களத்தில் கொள்ளையர்களுடன் உரையாடியாதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் பின்னர் கொள்ளையர்களை பிடித்த பொது மக்களை தாக்கி விரட்டிவிட்டு கொள்ளையர்களை பத்திரமாக அனுப்பி வைத்துள்ளனர். படையினரது இத்தாக்குதலில் காயமடைந்த இருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

யாழில்,சிப்பாயை கடித்தெழுப்பிய நாகபாம்பு!


யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியிலுள்ள படைமுகாமில் காவல் கடமையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்த படைச்சிப்பாய் ஒருவருக்கு நேற்று செவ்வாய் மாலை நாகபாம்பு தீண்டியுள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தீவிர சிகிச்சைப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த படைச் சிப்பாய் காவல் கடமையில் இருக்கும் போது இவர் தூங்கியதாகவும் அருகில் பற்றை ஒன்றிற்குள் இருந்த நாகபாம்பு இவருக்கு கையில் கடித்துச் சென்றதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கொழும்புத்துறை இராணுவ அதிகாரி பண்டாராசேனா தெரிவித்துள்ளார்.
தென்பகுதியான மகியங்கனையைச் சேந்த ஜெகத் நந்தகுமார (வயது 26) என்ற இராணுவச் சிப்பாயே நாகபாம்புக் கடிக்கு இலக்கானவராவர்.

15 மே 2012

குமுதினி படுகொலையின் நினைவுநாள்!


யாழ்.குடாநாட்டைக் கலங்க வைத்த, இரத்தக் கறை படிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.
1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட  நாள்.
 நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள், இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள்.
இதன்பின் ஈவிரக்கமின்றி கத்தியால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் அவர்கள் கொல்லப்பட்டனர். குற்றுயிரானவர்கள் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் கிடந்தனர். பயணிகளில் சிலர் கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றனர். அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்
பொது மக்களின் அன்றாட கடல் போக்குவரத்துக்கு குமுதினிப் படகே முக்கிய சாதனமாக இருந்தது. அவர்களது வாழ்வோடு இணைபிரியாத ஒன்றாக இருந்தது எனலாம். ஆனால் இதே நாள் இப்படகு படுகொலையின் இரத்தச் சாட்சியாக வரலாறாகி நிற்கிறது.
இவ்வாறான வெறித்தனமான தாக்குதலின் பின் காயமடைந்தோர் புங்குடுதீவு வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களைத் தேடி அந்த வன்முறையாளர்கள் சாட்சிகளை அழித்திட மேற்படி வைத்தியசாலைகளில் அலைந்ததும் உண்டு.
ஏழு மாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமின்றி நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இதுவரை இந்த ஜனநாயக நாட்டில் உரிய நீதி கிடைக்காது வருடாவருடம் அந்த அப்பாவி மக்களை நினைவுகூருவது மட்டுமே யதார்த்தமாகியுள்ளது.
27வருடங்கள் கடந்தாலும் அரச பயங்கரவாதத்தின் இரத்தசாட்சியம் இந்த குமுதினி படகு படுகொலை.

யாழ்,பல்கலைக்கழகத்தில் சிங்கள அடக்குமுறைக்கு எதிரான சுவரொட்டிகள்!

05பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்களை கொன்று அழித்து தமிழ் மக்களின் விடுதலை உணர்வை ஒட்டுமொத்தமாக தகர்த்து எறிந்ததாக கனவு காணும் சிங்கள இனவெறி அரசுக்கு பாடம் கற்பிக்கும் வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் சங்கம் முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நினைவு கூரும் வகையில் நேற்று இரவு யாழ் பல்கலைக்கழக சதுக்கத்தில் பல்வேறு இடங்களில் சிங்கள இனவாத அடக்குமுறைக்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகளை ஒட்டியிருக்கின்றது.வலிகள் தந்த வாரம் எனும் தலைப்பில் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது : “முள்ளிவாய்கால் முடிவல்ல”,”வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம்”,”உரிமைக்காய் குரல் கொடுப்போம் நீதிக்காய் போராடுவோம் ” என தமது விடுதலை வேணவாவை உயிரூட்டும்  முகமாக சுவரொட்டிகளை வெளிப்படுத்தினர் .
தமிழீழ விடுதலைக்கான ஆயுதப்  போராட்டம்  மௌனிக்கப்பட்டதின் பின் சிங்கள இனவெறி அரசும் அதன் துணைக்குழுக்களும் முள்ளிவாய்க்காலின் தொடர்ச்சியாக புலம்பெயர்   ஈழத்தமிழர்களின் செயற்பாடுகளை முடக்குவதற்கு மேற்கொள்ளும்  பரப்புரையின் காரணமாக  புலம்பெயர் மக்களின் விருப்பு மட்டும் தான் தமிழீழம் என்ற வெளிநாடுகளின் பொதுவான கருத்தை உடைத்தெறிந்து தமிழர்கள் ஒரு தனித்துவமான இனம் அதன்  அடிப்படையில் அவர்களுக்கு சுயநிர்ணய  உரிமை உண்டு, விடுதலை வேண்டும்  என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழர்களின் அரசியல் வேணவா என்பதை நிரூபிக்கும் யாழ்பல்கலைக்கழக மாணவர் சங்கம் தமது விடுதலை உணர்வை வெளிப்படுத்தி உள்ளார்கள் .
அத்தோடு  புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை தாயக உறவுகளிடம் இருந்து  தனிமைப்படுத்த எடுக்கும் சிங்கள அரசின் அரசியல் சதியையும் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பது ஒரு மக்கள் போராட்டம் என்ற உண்மையை  யாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கோடிட்டுக்காட்டியுள்ளார்கள்.

14 மே 2012

யாழில்,மகிந்த படத்தை ஏந்தி கூச்சலிட்டவருக்கு தர்ம அடி!


யாழ்.இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கருத்தரங்கில் மகிந்தவின் படத்தை தூக்கி வைத்துக் கொண்டு; “மகிந்தவே எமது கடவுள் வெள்ளையனே வெளியேறு” என்று கூச்சலிட்டவர் மக்களினால் அடித்து துரத்தப்பட்ட சம்பவம் ஒன்று யாழில் நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஏற்பாடு செய்த ஜனநாயகவழியில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டங்களை மேற்கொள்வோம் என்ற தொனிப்பொருளில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இவ் அரசியல் கலந்துரையாடலில் முதன்மை விருந்திராக அமரிக்காவின் இலங்கைத் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலர் போல் காடர், அவரது பாரியார் மற்றும் இந்தியாவின் யாழ் உயர்ஸ்தனிகராலைய உதவித் தூதர் மகாலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பொது மக்கள் என்ற போர்வையில் அரச புலனாய்வுப்பிரிவுனர்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர்
இந்தக் கூட்டத்தின் ஆரம்பத்தில் முள்ளிவாய்க்காலில் மரணித்த மக்களுக்கும் போராட்டத்தில் உயிர்நித்த போராளிகளுக்கும் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
13 வது அரசியல் திருத்தச்சட்டம் தொடர்பாக சட்ட விரிவுரையாளர் குருபரன் முக்கிய உரையாற்றினர் அதனைத் தெடர்ந்து கேள்வி கேட்குமாறு சபையோர் கேட்கப்பட்டனர்.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய குறித்த நபர் ஒலிவாங்கியை கையில் எடுத்து மகிந்த ராஜபக்ஸவின் படத்தைக் கையில் ஏந்தி “மகிந்தவே எமது கடவுள் வெள்ளையனே வெளியேறு என போராடிய மண்ணில் அந்நியரை வைத்து கூட்டமா?” என ஆவேசமாக பேச கூட்டத்தில் இருந்தவர்கள் குறுக்கிட்டு கூச்சலிட்டனர்.
உடனே ஒலிவாங்கியை கொடுத்து வெளியேறிய அவரை மக்கள் சூழ்ந்து தாக்கத் தெடங்கினர் மண்டபத்தை விட்டு வெளியேறிய நபர் மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தலைமறைவானார்.

13 மே 2012

விடுதலையான பெண் மீண்டும் சிறைக்கே அனுப்பபட்ட பரிதாபம்!


பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வெலிக்கடைச் சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரைப் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்பட்ட பரிதாப நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு, செங்கலடி உமா மில் ரோட்டைச் சேர்ந்த சிவராணி சந்திரகுமார் என்ற 30 வயதான பெண்ணுக்கே இந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது. 2008 ஆகஸ்ட் 29ம் திகதி, குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பஸ்ஸில் வந்துகொண்டிருந்த போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பாதுகாப்புப் படையினருடைய கடுமையான சித்திரவதைகளின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
கடந்த நான்கு வருடங்களாக சிறையில் கடுமையான சித்திரவதைக்கும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட இவர், அதனால் தற்போது ஒரு மனநோயாளியாகியிருப்பதாக இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி இவர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும், அவரைப் பொறுப்பேற்பதற்கு யாரும் முன்வராததால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த 8ம் திகதி குறித்த பெண்ணை மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரது மனோநிலையைக் கருத்திற்கொண்டு அவரை அங்கொடை மனநோயாளர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும் அவர் மோசமாக மனநிலை பாதிக்கப்பட்டிருப்தனால், அவரது நலன்களைக் கவனிப்பதற்காக யாரும் முன்வராமையால் அவரை அனுமதிக்க மருத்துவமனை வட்டாரம் மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டுள்ளார். மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள அவரது உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
எனவே குறித்த இந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பி தேகாரோக்கியத்துடனும் மன நலத்துடனும் வாழ்வதற்கு சமூக பொதுநல அமைப்புகள், மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புகளை முன்வர வேண்டுமென அரசியல் கைதிகளின் வெலிக்கடை பெண்கள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

12 மே 2012

கூட்டமைப்பை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டு வரத் தீர்மானம்!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்டமைப்புக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது. 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களான, நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி மற்றும் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் நேற்றையதினம் பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஸ்தாபனமயப்படுத்தல், அதற்கான ஒருபொறிமுறையை உருவாக்குதல், அதனைத் தேர்தல் ஆணையத்தில் பதிவுசெய்தல் போன்ற பலவிடயங்கள் கலந்துரையாடப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்,தெரிவித்துள்ளார்... 
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கான முடிவெடுக்கும் அதிகாரம் கொண்ட அதியுயர் சபை ஒன்று உருவாக்கப்பட வேண்டுமெனவும் மாவட்ட குழுக்களும், ஏனைய பிரதேச கிராமிய குழுக்களும் உருவாக்கப்பட வேண்டுமெனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.. 
மேற்படி கருத்துக்கள் யாவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த பல கட்சிகள் விரும்பினாலும் நடைமுறைப்படுத்துவது குறித்து அடுத்த சந்திப்பில் கலந்துரையாட வேண்டுமென சம்பந்தன் கூற அது ஏற்கப்பட்டு அடுத்த வாரமளவில் மீண்டும் சந்திப்பதாக முடிவெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இளைஞர் மீது சூடு நடத்திய சிப்பாய்களை விசாரிக்க உத்தரவு!


விசுவமடு குமாரசாமிபுரம் பகுதியில் இளைஞன் ஒருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோப்ரல் உள்ளிட்ட 3 இராணுவத்தினரைக் கைது செய்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் விசாரணை நடத்திவரும் காவற்துறையினர், சம்பவ நேரத்தில் அந்தப் பகுதியிலிருந்தார்கள் என்று கூறப்படும் இராணுவத்தினர் மூவரைக் கைது செய்து விசாரணை நடத்துவதற்கும் நீதிமன்றிடம் நேற்று அனுமதி கோரினர்.
அதற்கு அனுமதி வழங்கிய கிளிநொச்சி நீதிமன்றம், இராணுவத்தினர் மூவரதும் துப்பாக்கிகளையும் காவற்துறையினரிடம் ஒப்படைக்கும்படி அந்தப்பகுதி இராணுவப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டது. சம்பவம் நடந்த அன்றே விசாரணை நடத்தச் சென்ற சமயம், இது இராணுவத்தினர் தொடர்புபட்டது என்ற காரணத்தால் இராணுவ நீதிமன்றமே விசாரணை செய்யும் என்று கூறிய இராணுவ அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தத் தமக்கு அனுமதி மறுத்துவிட்டார் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
இதனை அடுத்தே, சம்பவம் இடம்பெற்ற போது அந்தப் பகுதியில் இருந்தார்கள் என்று கூறப்படும் இராணுவக் கோப்ரலையும் மற்றும் இரு சிப்பாய்களையும் கைது செய்து விசாரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை காவற்துறையினர் கோரினர்
இதேவேளை, காட்டுக்குள்ளேயே சம்பவம் இடம்பெற்றதாகவும் இராணுவத்தினரே தம்மைச் சுட்டார்கள் என்றும் சம்பவத்தில் தப்பிய இளைஞர் காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அதனடிப்படையிலேயே காவற்துறையினர், தற்போது இராணுவத்தினரிடம் விசாரணை நடத்த நீதிமன்றின் அனுமதியை நாடியுள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த 17 வயதான எஸ்.கிருஷ்ணகுமார் அனுராதபுரம் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். பன்றி வேட்டைக்கு அல்லது இருப்பு தேட இந்த இளைஞர்கள் சென்ற சமயத்தில் இத்தகைய சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று அயலவர்கள் கூறியுள்ளனர். எனினும் என்ன காரணத்தால் இளைஞர்கள் சுடப்பட்டார்கள் என்பது இதுவரை தெளிவாகவில்லை. 

11 மே 2012

சிங்க கொடியை இனியும் ஏற்றுவேன்!-இரா.சம்பந்தன்


sampanthan - raniசிங்க கொடியை முன்னரும் பல தடவை ஏற்றியிருக்கிறேன். அது எனது விருப்பத்திற்குரிய கொடி அதனை இனியும் ஏற்றுவேன், அதனை யாரும் தடுக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று கொழும்பில் நடந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு கூட்டத்தில் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு கூட்டம் இன்று ஆரம்பமான போது பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு செல்வது தொடர்பாக முதலில் ஆராயப்பட்டது. அந்த விடயம் முடிந்ததும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் சிங்க கொடி பிரச்சினையை எழுப்பினார்.
ஐயா நீங்கள் யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா தேசியக்கொடியை பிடித்தது தமிழினத்திற்கு செய்யும் துரோகம், தமிழின தேசவிரோதம் என காரசாரமாக விடயத்தை தொடங்கினார்.
தம்பி அரியம் நீர் என்ன கதைக்கிறீர்… உமக்கு வரலாறு தெரியாது. என்னை சிங்க கொடியை தூக்க கூடாது என்று ஒருவராலும் தடுக்கேலாது.
தேசிய கொடியை நான் தெரியாமல் தூக்கவில்லை. நன்றாக தெரிந்து விருப்பத்தோடுதான் தூக்கினேன். என்னிடம் யாரும் அக்கொடியை திணிக்கவில்லை. சிங்க கொடியை நான் தூக்கினது இதுதான் முதல்தடவையல்ல. நான் தேசியக் கொடிக்கு எதிரானவன் அல்ல. நான் பல தடவை தேசியக் கொடியான சிங்கக் கொடியை திருகோணமலையில் ஏற்றியிருக்கிறேன். நான் நேசிக்கும் ஒரே கொடி சிங்க கொடிதான். இந்த கொடியை வடிவமைத்த குழுவில் தமிழர்களும் இருந்திருக்கிறார்கள். அந்த குழுவில் ஜி.ஜி.பொன்னம்பலம், நடேசன் போன்றவர்கள் இருந்தார்கள். அதில் நடேசன் மட்டுமே இந்த கொடியை எதிர்த்தார். ஆனால் ஜி.ஜி.பொன்னம்பலம் இந்த கொடியை ஏற்றுக்கொண்டிருந்தார். தமிழரசுக்கட்சி இந்த கொடியை எதிர்க்கவில்லை என சம்பந்தன் தெரிவித்தார்.
அதுதவிர இன்னொரு விடயத்தையும் சம்பந்தன் சொன்னார். இந்த கொடி என்னுடைய மிக விருப்பத்திற்குரிய கொடி , சிங்கம்தான் பத்திரகாளி அம்மனின் வாகனம், எனவே சிங்க கொடிக்கு நான் எதிரானவன் அல்ல என சம்பந்தன் தெரிவித்தார். இதற்கு மாவை சேனாதிராசா, அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர்.
சிறிலங்கா கொடியை நீங்கள் தூக்கி பிடித்ததால் நாங்கள் தமிழ் மக்கள் முகத்தில் முழிக்க முடியாமல் இருக்கிறது. மானம் மரியாதை போகிற விடயம். இதனால் தமிழ் மக்கள் எங்கள் மீது வெறுப்படைந்திருக்கிறார்கள் என அரியநேத்திரன் சொன்னார்.
நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள் தமிழ் மக்கள்தான் எங்கள் பலம் என்று. ஆனால் இன்று தமிழ் மக்களின் மனங்களையும் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாது நடந்துள்ளீர்கள் என மாவை சேனாதிராசா கோபத்துடன் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சுமந்திரன் தேசியக் கொடியை ஏற்றுவதோ, பிடித்திருப்பதோ என்ன பிழை, ஏன் இதை பெரிதாக எடுக்கிறீர்கள் என சொன்னார்.
கொழும்பில் இருக்கும் உங்களுக்கு தெரியாது. இந்த பிரச்சினையின் தாக்கத்தை யாழ்ப்பாணத்திற்கும் மட்டக்களப்புக்கும் வந்து பாருங்கள் அப்போது தெரியும் என உறுப்பினர் ஒருவர் சுமத்திரனை பார்த்து கூறினார்.
நாங்கள் இளைஞர்களாக பாடசாலை மாணவர்களாக இருந்த போது இந்த கொடி எங்களுக்கு எதிரானது என தமிழரசுக்கட்சி தலைவர்களான நீங்கள்தான் சொல்லித்தந்தீர்கள். பாடசாலை காலத்தில் நான் இந்த கொடியை எரித்திருக்கிறேன். தமிழ் மக்களை இந்த அரசியல் யாப்போ, இந்த கொடியோ ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த கொடியை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் எங்களுக்கு இன்னும் வரவில்லை. இந்த கொடிக்கு பெரிய வரலாறு இருக்கிறது. இந்த கொடியை எரித்ததற்காக சிறை சென்ற இளைஞர்கள் பலர். சுட்டுக்கொல்லப்பட்டவர்கள் பலர். இவ்வாறு நீங்கள் சிறிலங்காவின் தேசியக் கொடியை தூக்கி பிடிப்பதும் அதுதான் என்னுடைய கொடி என்று கூறுவதும் சிங்கள தேசத்திற்கு அடிபணிந்து போவது போல இருக்கிறது என முன்னாள் போராளியான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இப்படி நடந்து கொண்டால் தமிழ் மக்களிடமிருந்து நாங்கள் அந்நியப்பட்டு போய்விடுவோம் என்றும் அரியநேத்திரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், சிறிதரன், மாவை சேனாதிராசா ஆகியோர் தெரிவித்தனர்.
தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்படவில்லை என்றால் தலைவர்கள் என்ற அந்தஸ்த்திலிருந்து தூக்கி எறியப்பட்டு விடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறிய போது நான் சரி என்று பட்டதை செய்வேன். எனக்கு ஆலோசனை சொல்ல தேவையில்லை. நான் செய்யும் காரியங்களை யாரும் கேள்வி கேட்ககூடாது என சர்வாதிகார தோரணையில் சம்பந்தன் தெரிவித்தார்.
விவாதம் காரசாரமாக போய் கொண்டிருந்த போது குறுக்கிட்ட மாவை சேனாதிராசா சாம் அண்ணன் ( சாம் அண்ணன் என்றுதான் மாவை சேனாதிராசா சம்பந்தனை அழைப்பார்) இந்த பிரச்சினை தொடர்பாக நான் உங்களோடு தனிய கதைக்க வேணும் என சொல்லி அந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இன்று சம்பந்தன் நடந்து கொண்ட விதமும், இறுமாப்பும், மக்களை மதிக்காத தன்மையும் எங்களை வெறுப்படைய வைத்து விட்டது. அவர் தொடர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைமை தாங்க தகுதி உடையவராக என நாங்கள் சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தினக்கதிருக்கு தெரிவித்தார்.
நன்றி – தினக்கதிர்

10 மே 2012

சிங்கக்கொடி சம்பந்தன்,எலும்புத்துண்டுக்கு அலையும் டக்ளஸ்!


பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற மீள்குடியேற்றம் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதால் சபையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.சிங்கக்கொடி சம்பந்தன் என டக்ளஸ் தேவானந்தாவும் எலும்புத்துண்டுக்கு அலையும் டக்ளஸ் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஒருவரையொருவர் விளித்துக்கொண்டதுடன் பரஸ்பரம் குற்றச்சாட்டுக்களையும் சுமத்தினர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரின் பேச்சை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நீண்டநேரம் அமைதியாகவிருந்து செவிமடுத்துக் கொண்டிருந்தார். அவர்களும் தமது பேச்சில் அமைச்சர் டக்ளஸை சுட்டிக்காட்டவில்லை. சுரேஷ் பிரேமச்சந்திரன் எனது அருமை நண்பர் டக்ளஸ் தேவானந்தா என்று மட்டும் ஒரு தடவை குறிப்பிட்டு பேசியிருந்தார்.
ஆனால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது உரையை ஆரம்பித்தவுடனேயே “மாவிட்டபுரத்திலுள்ள தனது வீட்டுக்குப்போக முடியவில்லை. அது அதியுயர் பாதுகாப்பு வலயமாகவுள்ளது. நானும் ஒரு அகதிதான்” என்று இங்கு குறிப்பிட்டார். அதுபொய். ஏனெனில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து அப்பகுதி விடுவிக்கப்பட்டுவிட்டது. அத்துடன் அங்கிருந்த தனது வீட்டை மாவை சேனாதிராஜா எப்போதோ விற்று விட்டார் என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மாவை சேனாதிராசா அமைச்சர் டக்ளஸுடன் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டார். மாவை சேனாதிராஜாவுடன் தமிழ்க் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் இணைந்து டக்ளஸுக்கு எதிராக கூச்சலிடத் தொடங்கினர். இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுக்களும் கேள்விக்கணைகளும் பறந்தன. சிங்கக்கொடி சம்பந்தன் என்றும் எலும்புத்துண்டு டக்ளஸ் என்றும் கூட வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டன.
உங்களால் இந்தியாவுக்கு போக முடியுமாவென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் டக்ளஸுக்கு சவால் விட்டபோது, தாராளமாக செல்வேன். எனக்கு இந்தியாவில் ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டு மட்டுமேயுள்ளது. கொலைக்குற்றச்சாட்டு இல்லை. உங்களின் தலைவர்கள் பிரபாகரன், உமாமகேஸ்வரன் இந்தியாவில் ஆயுதம் வைத்திருக்க வில்லையா? சுடுபடவில்லையா? நீங்கள் அத்தனைபேரும் ஆயுதம் வைத்திருந்தவர்கள் தானே? என்றார்.
அதற்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் ஏதோ கூற, நீங்கள் மண்டையன் குழுவின் தலைவர்தானே. நீங்கள் அப்போதும் TNA (தமிழ்த் தேசிய இராணுவம்) இப்போதும் TNA (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) என்றார் டக்ளஸ்.இதற்கு சுமந்திரன் எழுந்து நின்று ஏதோ கூற முற்பட்டபோது நீங்கள் பாலியல் வல்லுறவு வழக்குகளுக்கு வாதாடுபவர்தானே. உங்கள் விளையாட்டுக்கள் எங்களுக்கும் தெரியும் என்றார் டக்ளஸ்.
அப்போது சம்பந்தன் ஏதோ கூற முற்பட்டபோது அமைச்சர் டக்ளஸ் உரத்த குரலில் “அனைவரும் கொஞ்சம் அமைதியாக இருங்கோ சிங்கக்கொடி சம்பந்தன் ஐயா ஏதோ கூற முற்படுகின்றார் என்னவென்று கேட்போம் என்று” கூறியபோது சம்பந்தன் சிரித்தவாறு எதுவும் பேசாமல் இருந்தார். அமைச்சர் டக்ளஸ் தொடர்ந்தும் பலதடவைகள் சிங்கக்கொடி சம்பந்தன் என்று அழைத்துக் கொண்டிருந்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அமைச்சர் டக்ளஸுக்கும் நீண்ட நேரமாக கடும் தர்க்கம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது சபைக்கு பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் தலைமை தாங்கிக் கொண்டிருந்தார். அவர் சபையை கட்டுப்படுத்த பலமுறை முயன்றபோதும் அது முடியவில்லை. இறுதியில் சம்பந்தனிடம் உங்கள் உறுப்பினர்களை தயவு செய்து கட்டுப்படுத்துங்கள் என்று வலியுறுத்திய அவர் அமைச்சர் டக்ளஸையும் உரையை மட்டும் நிகழ்த்துமாறும் கேட்டுக்கொண்டார்.
ஆனால் இருதரப்பும் தர்க்கத்தையே தொடர்ந்தன. மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் ஒழுங்குப் பிரச்சினைகளை எழுப்பியபோதும் அவை ஒழுங்குப்பிரச்சினையல்லவென சபைக்கு தலைமை தாங்கியவரால் நிராகரிக்கப்பட்டது. இறுதியில் அமைச்சர் டக்ளஸ் உரையாற்றாமலே அவரது நேரம் முடிவடைந்தது. அதன் பின்னர் பொன் செல்வராசா பேசிய போதும் டக்ளஸ் அவர்களுடன் தனது தர்க்கத்தை தொடர்ந்தார்.

ஒரு கட்டத்தில் மாவை சேனாதிராஜா, தன்னை அகதியென்று கூறுவது தவறென அமைச்சர் டக்ளஸ் கூறிய போது அரச தரப்பின் தேசிய பட்டியல் எம்.பி.யான அஸ்வர் எந்த அகதி முகாமில் இருந்தவரென கேட்டார். இதற்கு சுமந்திரன் எம்.பி. தம்புள்ளயில் என்று கூறியதையடுத்து அஸ்வர் அமைதியாக இருந்து விட்டார்.

09 மே 2012

உடுவிலை சேர்ந்தவர்கள் வாகன விபத்தில் கனடாவில் பலி!


கனடாவில் திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர். மார்க்கம் நெடுஞ்சாலையில் வாகனத்தில் மோதுண்டே இவர்கள் இறந்ததாக ஒன்ராரியோ மாகாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். நான்கு பயணிகளுடன் சென்ற வாகனமொன்று ரயர் மாற்றுவதற்காக வீதியின் ஓரத்தில் தள்ளிச் செல்லப்பட்டபோது வாகனத்தைப் பார்ப்பதற்காக அதிலிருந்து கணவனும் மனைவியும் இறங்கியுள்ளனர்.
அச் சமயம் டொயோட்டோ பிக்கப் வாகனமொன்று அவர்களை மோதியுள்ளது. ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றவர் ஆஸ்பத்திரியில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த மற்றைய இருவருக்கும் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பியுள்ளனர். தற்போது அவர்களிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக ரொறன்ரோ சி.ரி.வி. கனடா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பிக்கப் ரக்கின் பெண் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உயிராபத்தான காயம் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை இந்த விபத்தில் பலியான ஜோர்ஜ் தேவராஜா (வயது 59), வாமா தேவராஜா (வயது 57 ) ஆகிய இருவரும் யாழ்ப்பாணம் உடுவிலைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரிட்டனில் வசித்து வந்தவர்கள் என்றும், கனடாவுக்குச் சென்ற தருணத்திலேயே இந்த சம்பவம் இடம் பெற்றிருப்பதாக கொழும்பிலுள்ள அவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். 

08 மே 2012

நல்லூரில் பட்டப்பகலில் அடிதடி! கொள்ளை!


நல்லூர் பின் வீதியில் உள்ள பாரதியார் சிலை சந்திப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் பட்டப்பகலில் நுழைந்த ரவுடிகள் வீட்டில் இருந்தவர்களை தாக்கிவிட்டு அங்கிருந்த பெறுமதிமிக்க பொருள்களையும் அடித்து நொருக்கி விட்டு தங்கச் சங்கிலி ஒன்றையும் அறுத்துச் சென்றுள்ளனர்.இதன் போது காயமடைந்த வீரையா ஜெகசோதி (வயது 56) என்பவர் தலையில் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வீட்டார்  தெரிவிக்கையில்,
கடந்த சனிக்கிழமை எமது வீட்டு நாய் குறுக்கே பாய்ந்ததால் தமது மோட்டார் சைக்கிள் சேதமடைந்து விட்டதாகவும், எனவே அதனை திருத்தித் தருமாறும் இருவர் எங்கள் வீட்டில் அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்றனர்.
நாங்களும் அதன்படி மோட்டார் சைக்கிளைத் திருத்தி வைத்திருந்தோம். இன்று காலை (நேற்று) மீண்டும் வந்த அவர்கள் தமது மோட்டார் சைக்கிள் சரிவரத் திருத்தப்படவில்லை என்று கூறி இரண்டரை லட்சம் ரூபா பணம் தரவேண்டும் அல்லது நாயையும் வீட்டில் உள்ளவர்களையும் வெட்டுவோம் என்று மிரட்டி விட்டு சென்றனர்.
சொன்னபடியே மாலையில் கொட்டன்கள், பொல்லுகளுடன் வந்த ரவுடிகள் கெட்ட வார்த்தைகளால் திட்டியவாறு வீட்டின் யன்னல் கண்ணாடிகள், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள், ஓட்டோ, வீட்டுக்குள் தொங்க விடப்பட்டிருந்த படங்கள் என்பவற்றை அடித்து நொருக்கி எங்களையும் கடுமையாகத் தாக்கினர் என்று தெரிவித்தனர்.
 அத்தோடு வீட்டில் இருந்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியையும் அறுத்துக்கொண்டு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு நேற்றிரவு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.
நாய் குறுக்கே பாய்ந்ததில் சேதமடைந்ததாக குறிப்பிடப்படும் மோட்டார் சைக்கிளை (EP VN 0125) நேற்றிரவு அந்த ரவுடிகள் உருட்டிச் சென்று அயலில் உள்ள வெற்றுக்காணி ஒன்றில் விட்டுச் சென்றுள்ளனர். இதனை அங்கு வந்த பொலிஸார் எடுத்துச்சென்றனர்.

07 மே 2012

நல்லிணக்க ஆணைக்குழு குறித்து ஆராய இன்னொரு ஆணைக்குழு!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை அமூல்படுத்துவது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான மற்றுமொரு விசேட ஆணைக்குழு நிறுவப்படவுள்ளது. 
அதற்கு நாட்டில் உள்ள அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைககளில் கூறப்பட்டவற்றில் எவற்றினை நாட்டில் அமூல்படுத்த முடியும் என்பது குறித்தும் இந்த புதிய ஆணைக்குழு ஆராய உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 
இந்த ஆணைக்குழுவினால் மேற்கொள்ள இருக்கின்ற பணிகளுக்கு நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். 
அத்துடன் இந்தக் குழுவில் தலைமை வகிக்கும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆணைக்குழுவிற்குரிய ஏனைய உறுப்பினர்களை நியமிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 
இருப்பினும் மிக விரைவில் இந்த ஆணைக்குழு தமது பணிகளை ஆரம்பிக்கும் என கூறியுள்ளார். இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் பரிந்துரைகளை நாட்டில் அமூல்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பினை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

06 மே 2012

சிறீலங்காவை அமெரிக்கா உளவு பார்த்ததாம்!

அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவினர் இலங்கை விவகாரங்கள் தொடர்பில் உளவு பர்த்ததாக திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 
அமெரிக்காவின் சி.ஐ.ஏ மற்றும் எப்.பி.ஐ ஆகிய உளவுப் பிரிவினர் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் ரகசியமாக கண்காணித்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணைய தளம் விடுத்த செய்தியை அது சுட்டிக்காட்டியுள்ளது. 
அமெரிக்காவின் ராஜாங்க திணைக்களத்தின் செயலாளர் ஹிலரி கிளின்ரன், குறித்த உளவுப் பணிகளை முன்னெடுக்க அனுமதி வழங்கியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னதாக இவ்வாறு உளவு பார்க்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிபிடப்பட்டுள்ளது.

05 மே 2012

சிங்கக்கொடியை விரும்பியே ஏந்தினேன்!


sampanthan - raniஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் நடத்திய மே தினக் கூட்டத்தில் தேசியக் கொடியை (சிங்கக்கொடியை) ஏந்தியது குறித்து மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
சிங்கக்கொடியை ஏந்தியமை குறித்து கட்சியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதீராஜா தெரிவித்த கருத்து குறித்து கேட்டபோதே இரா.சம்பந்தன் எம்.பி. இதனைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவருடன் இணைந்து மேடையில் தேசியக் கொடியை(சிங்கக்கொடியை) ஏந்தியிருந்தது உண்மைதான். இதுகுறித்து எவரும் மேலதிகமாக பேச வேண்டிய அவசியம் இல்லை. இதற்காக மன்னிப்பு கோரவேண்டிய அவசியமும் இல்லையென அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சிறீலங்காவின் தேசியக் கொடியினை சம்பந்தன் அவர்கள் மே தின ஊர்வலத்தின் போது விரும்பியே ஏந்தியுள்ளார் என்பது தெளிவாகிறது.அத்தோடு எதிர் கட்சிகள் திட்டமிட்டே சிறீலங்காவின் தேசியக் கொடியினை சம்பந்தன் அவர்களின் கையில் கொடுத்ததாக மாவை சேனாதி ராஜா அவர்கள் தெரிவித்து மன்னிப்பு கேட்டிருந்தமையும் அரியநேத்திரன் ரணில் விக்கிம சிங்க மீது குற்றம் சுமத்தியதும் அபாண்டமான பொய்களென்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

04 மே 2012

தச்சந்தோப்பில் இளைஞர் சடலமாக மீட்பு!


தென்மராட்சியின் கோவிலாக்கண்டி- தச்சந்தோப்பு பகுதியினில் நேற்று முன்தினம் இரவு வீடொன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்றிரவு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களென கூறப்படும் இருவரே துப்பாக்கி சூட்டினை நடத்தியுள்ளனர்.
எனினும் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்பட்டிராத நிலையில் ஆயுததாரிகள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.  மிக அண்மைக் காலங்களினில் மக்கள் மீளக்குடியமர்ந்த பகுதிகளுள் கோவிலாக்கண்டி தச்சந்தோப்பு பகுதியும் ஒன்றாகும்.
துப்பாக்கிதாரர்கள் வீட்டின் ஜன்னல் ஊடாக துப்பாக்கியை நுழைத்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர். எனினும் அவ்வேளை குறித்த அறையினுள் எவரும் இருந்திராமையால் உயிரிழப்புக்களோ காயங்களோ ஏற்பட்டிருக்கவில்லை.
ஏற்கனவே இதே பகுதியில் இளம் யுவதியொருத்தி கடத்தி சென்று படுகொலை செய்யப்பட்டிருந்த நிலையில் மாடு மேய்க்கவென சென்றவரென நம்பப்படும் பொதுமகன் ஓருவர் இதே பகுதியை அண்மித்த பகுதியில் இன்று சடலமாக மீடகப்பட்டுள்ளார்.
ஆட்கள் நடமாட்டம் குறைந்த இப்பகுதியில் வெறுமனே உள்ளாடைகளுடன் இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட கொலையொன்றாக இதுவிருக்கலாமென நம்பப்படும் நிலையினில் சடலம் மீட்கப்பட்டு யாழ்.போதனாவைத்தியசாலையின் பிரேத அறையினில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழில்,படையினர் இருவர் சுட்டுக்கொலை!


யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் இராணுவத்தினர் இருவர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஸ்ரீதர் திரையரங்கிற்கு அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது.இராணுவத்தினர் இருவரும் தம்மைத்தாமே சுட்டுக்கொண்டதாலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டிருக்கின்றது.
இதுவரையில் அந்தப் பகுதியிலேயே இருவரது சடலங்களும் காணப்படுவதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.  

03 மே 2012

மாவை பகிரங்க மன்னிப்பு!


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேதினத்தில் சிங்கக்கொடியேற்றியமைக்காக பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றேன் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் சுதந்திர ஊடகக் குரல் என்ற அமைப்பு முன்னெடுத்த மூத்த ஊடகவியலாளர் கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேதினத்தில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுமென்று சிங்கக் கொடியினை கையில் ஏந்தவில்லை, அவரது கையில் சிங்கக்கொடி திட்டமிட்டுத் திணிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்திற்காக நான் பகிரங்கமாக மன்னிப்புக்கோருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வின் போது புலிகளின்குரல் வானொலியின் செய்திப் பொறுப்பாசிரியர் இறைவன் (தி.தவபாலன்) மற்றும் போரின் போது கொல்லப்பட்ட ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தி உட்பட்டவர்களது உருவப்படங்கள் வைக்கப்பட்டு அவற்றுக்கு சுடர்கள் ஏற்றப்பட்டு மாலைகள் அணிவிக்கப்பட்டன. நிகழ்வில் முக்கிய விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர் திருமதி கீதாஞ்சலி நகுலேஸ்வரன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் உட்பட்டவர்கள் சுடர்களை ஏற்றி மாலைகளை அணிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூத்த ஊடகவியலாளரும் இலக்கியவாதியுமான கோபாலரட்ணம், உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் கானமயில்நாதன், தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தில்லைநாதன், வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரபாகன், உதயன், சுடரொளி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் வித்தியாதரன்  ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

இன்று உலக ஊடக சுதந்திர நாள்!


prakeerthகடத்தப்பட்டு காணாமற்போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட விவகாரம் குறித்து அமெரிக்கா கூடிய கவனம் செலுத்தி சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த தமது பார்வையின் ஒரு பகுதியாக எக்னெலிகொட விவகாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவுள்ளதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஊடகத்துறையினர் மீது மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்கள், தாக்குதல்கள் குறித்தும் அமெரிக்கா முதன்மைப்படுத்தவுள்ளது.
உலக ஊடக சுதந்திர நாள் இன்று கொண்டாடப்படும் நிலையிலேயே சிறிலங்காவில் ஊடகத்துறை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து அமெரிக்கா முக்கிய கவனம் செலுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்கெலிகொட தொடர்பான வழக்கில் நீதி வழங்க சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பது அமெரிக்காவின் நோக்கம் என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
2010ம் ஆண்டு ஜனவரி 24ம் நாள் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு காணாமற்போயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் விரைவில் அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதகாகவும் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.