பக்கங்கள்

28 பிப்ரவரி 2019

புலிகளும் தற்கொலை தாக்குதல்கள் நடத்தினர் என இம்ரான் கான் தெரிவிப்பு!

Image result for imran khanபாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் தொடர்பாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருக்கிறார். பாகிஸ்தானில் சிறைப்பட்டு இருக்கும் இந்திய விமானி அபிநந்தனை நாளை விடுதலை செய்வதாக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.“இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்வதாக இந்தியா தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகிறது. தீவிரவாதத்திற்கு மதம் கிடையாது. தற்கொலை தாக்குதல்கள் மதத்தின் பெயரால் நடப்பது இல்லை. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்கு முன்னதாகவே உலக அளவில் வீரியமான தற்கொலை தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியிருந்தனர். விடுதலைப் புலிகள் சார்பில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர்கள் அனைவருமே இந்துக்கள். அவர்கள் மதத்தின் பெயரால் நடத்தவில்லை. மாறாக தங்களது விரக்தி மற்றும் கோபத்தின் விளைவாகவே அதனை செய்தனர்” என இம்ரான் கான் கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

14 பிப்ரவரி 2019

கறுப்புப் பட்டியலில் சிறீலங்கா!

பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்,சிறீலங்காவை  கறுப்பு பட்டியலில் இணைத்துள்ளது ஐரோப்பிய ஒன்றியம். பணமோசடி மற்றும் எதிர்ப்பு பயங்கரவாத நிதி கட்டமைப்பின் மூலோபாய குறைபாடுகளை கொண்ட 23 நாடுகளைக் கொண்ட கறுப்பு பட்டியலை ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.ஐரோப்பிய ஒன்றிய நிதி அமைப்பு
முறையை பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியளிப்பு அபாயங்களிலிருந்து தடுக்கும் வகையில் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தங்களது குறைபாடுகளை விரைவாக சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. இந்த 23 நாடுகளில் சிறீலங்காவும்  இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

12 பிப்ரவரி 2019

சிறீலங்காவிற்கு எதிராக ஐ:நாவில் புதிய பிரேரணை!

ஜெனீவாவில் இலங்கை தொடர்பான புதிய பிரேரணை ஒன்றை பிரித்தானியா கொண்டு வரவுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த அமர்வில் அடுத்தமாதம், இப்பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. ஜெனீவாவிலுள்ள ஐ.நா.விற்கான பிரித்தானிய தூதரகம் நேற்று இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.அமெரிக்காவின் இணை அனுசரணையில் ஏற்கனவே ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையில் குறிப்பிடப்பட்ட பரிந்துரைகளை விரைவாக நடைமுறைப்படுத்தக் கோரும் வகையில் இந்த புதிய பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.அத்துடன், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமை விடயங்களை நிலைநாட்டுமாறு இப்பிரேரணையின் ஊடாக அழுத்தம் கொடுக்கப்படவுள்ளது. பிரித்தானியாவுடன் இணைந்து கனடா, ஜேர்மனி மற்றும் மசிடோனியா ஆகிய நாடுகளும் பிரேரணைகளை முன்வைக்கவுள்ளன.