பக்கங்கள்

31 ஜூலை 2020

வளங்களை சூறையாடுபவர்களை அகற்றவேண்டும்-புளியங்கூடலில் மணிவண்ணன்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், , ’பாராளுமன்றத் தேர்தல் 2020 யாழ்.மாவட்டம் தழிழ்த் தேசிய மக்கள் முன் னணி அகில இலங்கை தமிழ்க காங்கிரஸ் X 8 விஸ்வலிங்கம் மணிவண்ணன் மணிவண ததரணி தேசிய அமைப்பானர் 2 கப்பேச்சானர் மானகரசபை துப்பினர் தமிழ்த்தேசிய மக்கள் மன்னணி 2 10’ எனச்சொல்லும் உரைதமிழ் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்றும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம்மினத்தின் மீது புரியப்படும் குற்றங்களை தடுக்க முடியும் என்றும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். ஊர்காவற்றுறை புளியங்கூடல் பகுதியில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “எங்களுடைய மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவே நாம் அரசியல் களத்தில் புகுந்தோம். எங்களுடைய மண் பறிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கல்வியும் பறிக்கப்பட்டு வருகின்றது,நான் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் போது 100 வீதம் தமிழ் மாணவர்களே கல்வி கற்றனர்,ஆனால் இன்று எத்தனை சிங்கள மாணவர்கள் கற்கின்றார்கள்? எமது கடல் வளமும் சூறையாடப்படுகிறது,எம்மிடம் இருந்து எல்லாமே பறிக்கப்பட்டு வருகின்றன,எம் இனத்தின் மீதான ஒடுக்குமுறைகளை இல்லாமல் ஒழிக்கவே எமக்கு அங்கீகாரம் தாருங்கள் என கேட்கிறோம் எமது வளங்களை சூறையாடுபவர்களை எம் மண்ணை விட்டு அகற்ற வேண்டும் வடமராட்சி தொடக்கம் மண் கும்பான் வரையில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை எம் மண்ணிலிருந்து அகற்ற வேண்டும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்பில் கஜேந்திரன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஏன் தெரிவு செய்ய
வேண்டும்?புலம்பெயர்ந்த மக்கள் என்பது மாபெரும் சக்தி. எமது தேசத்தின் மூன்றில் ஒரு பகுதி மக்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் பல கோடி ரூபா உதவிகளை செய்துவருகின்றார்கள். ஆனால் அந்த திட்டங்களை ஒருங்கிணைக்க கூடிய அவர்களது வளங்களை பயன்படுத்தக்கூடிய விரிவுபடுத்தப்பட்ட திட்டங்களோ நிறுவன கட்டமைப்போ ஏற்படுத்தப்படவில்லை. இதனை, மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளாக கட்சி சார்பற்ற பொதுவேலைக்கான கட்டமைப்பை, மாவட்ட ரீதியாக ஏற்படுத்தி, தேசிய ரீதியாக ஒருங்கிணைக்ககூடிய பொறிமுறை ஒன்றை ஏற்படுத்துவோம்.

முஸ்லிம்கள்:மொழியால் ஒன்றித்த தனித்துவமான தேசிய இனம். வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக - தமிழ் மக்களின் அங்கீகாரம் பெற்ற பிரதிநிதிகள் என்ற வகையில் நட்புறவான கலந்துரையாடல்களை ஆரம்பித்து உறவுநிலையை பலப்படுத்துவோம்.
மக்களால் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அங்கீகாரத்தின் அடிப்படையில் செயற்படும்போதே, உள்ளக கட்டமைப்புகளையும் வெளியக கட்டமைப்புகளையும் விரிவுபடுத்தி, தமிழ்த் தேசத்திற்கான அரசியல் இயக்கமாக மக்களுக்கான பலவேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் முன்னெடுக்க முடியும். சர்வதேச நாடுகளுடனும் சர்வதேச நிறுவனங்களுடனும் அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக தொடர்புகளை பேணி, எமது மக்களுக்கான நீதிக்கான கோரிக்கைகளை, அபிவிருத்தி திட்டங்கள் பற்றிய விடயங்களை தேவைகளை அவர்களுக்கு முன்வைக்கமுடியும். சர்வதேச நாடுகளுடன் தமிழர்களது தேவைகள் நலன்கள் தொடர்பாக பேசி தீர்வு காண்பதற்கு முயல்வோம். மாறாக அவர்களின் முகவர்களாக செயற்படமாட்டோம்.

நன்றி:முகநூல் செ.கஜேந்திரன்

29 ஜூலை 2020

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு ஐந்து பொது அமைப்புக்கள் கூட்டாக ஆதரவு தெரிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு பூரண ஆதரவினை வழங்குவதாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 பொது அமைப்புகள் கூட்டாக தெரிவித்துள்ளன. யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே குறித்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இதனை தெரிவித்துள்ளனர். இந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட கிராமிய உழைப்பாளர் சங்கம், மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கம், மாவட்ட பூந்தளிர் பெண்கள் அமைப்பு, மாற்றத்திற்கான மாவட்ட இளைஞர் பேரவை மற்றும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு அகிய அமைப்புக்களே இவ்வாறு ஆதரவினை தெரிவித்துள்ளனர். அதேவேளை, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிப்பதாக வவுனியா மாவட்ட பிரஜைகள் குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார், செயலாளர் தி.நவராஜ் மற்றும் ஊடகப்பேச்சாளர் அ.ஈழம் சேகுவேரா இணைந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான தாமரை மொட்டுக் கட்சியே மத்தியில் (கொழும்பில்) ஆட்சி அமைக்கப் போகின்றது. எனவே தாங்கள் கையாளக்கூடிய, தமது அரசியல் தீர்மானங்களுக்கு ஒத்து இசைந்து போகக்கூடிய, ஒரு தரப்பே வடக்கு கிழக்கில் இம்முறை தேர்தலில் அதிக ஆசனங்களுடன் வெல்ல வேண்டும் என்று ராஜபக்ச குடும்பத்தினர் விரும்புகின்றனர். புலிகள் கேட்டதை விடவும் அதிகமான அதிகாரங்களை கூட்டமைப்பு கோருகிறது. என்று ராஜபக்ஸ தரப்பினர் கத்துகின்றனர். இப்படி ராஜபக்ஸ தரப்பினர் வெளியிட்ட அறிக்கைகள் எல்லாம் கூட்டமைப்பினர் எழுதிக் கொடுத்து ராஜபக்ச தரப்பினர் வாசித்த அறிக்கைகளே. தமிழ் மக்களின் ஆணை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தரப்புக்கு கிடைத்து விடக் கூடாது என்று ராஜபக்ச தரப்பினர் விரும்புகின்றனர். இப்போதும் தமிழ்த் தேசிய அரசியல் களத்தில் சத்தமே இல்லாத ஒரு பெரும் இனவழிப்பு போர் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இதனை பொ.கஜேந்திரகுமார் தலைமையில் தமிழர் தேசம் எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். தண்ணீருக்கு உள்ளால் விடுதலை நெருப்பை அணைய விடாமல் கொண்டு போய்க் கரை சேர்ப்பித்து அடுத்த தலைமுறைப் பிள்ளைகளிடம் கையளித்து விட்டாலே போதுமானது. இந்த தேசியப் பெரும் பணியை சளைக்காமல், தொய்வுறாமல் செய்து கொண்டிருக்கும் கஜேந்திரகுமாரின் கரங்களை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும்.” என்றுள்ளது.

கிழக்கில் மக்கள் முன்னணிக்கு ஆயுததாரிகள் அச்சுறுத்தல்!

கிழக்கு மாகாணத்தில் தமது கட்சி வேட்பாளருக்கு ஆயுதமுனையில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகவேண்டும் என ஆயுதமேந்திய நபர்கள் எச்சரித்துள்ளனர் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கூறியுள்ளது. குறிப்பிட்ட வேட்பாளரின் தந்தையை ஆயுதமுனையில் அச்சுறுத்தியுள்ள நபர்கள், மகனை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகச் சொல்லுங்கள் விலகாவிட்டால் கடத்துவோம் என எச்சரித்துள்ளனர் என்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

25 ஜூலை 2020

என்னுடன் விவாதிக்க தகுதியற்றவர் சுமந்திரன்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன்னுடன் விவாதிப்பதற்கு தகுதி இல்லாத ஒருவர் என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். அம்பாறை மாவட்டம், பாண்டிருப்பு பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இங்கு உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்த முறை சுமந்திரன் தமிழ் மக்களால் நிராகரிக்கப்பட்டு தோல்வி அடைவார் என்று குறிப்பிட்டார். தனது கட்சித் தலைவரினால் கூட நிராகரிக்கப்பட்ட அவருடன், விவாதத்திற்கு சென்று, மக்கள் மத்தியில் அவருக்கு அங்கீகாரத்தை பெற்றுக் கொடுக்க போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். தான் ஒரு கட்சியின் தலைவர் என்றும், தன்னுடன் விவாதிப்பதற்கு சுமந்திரனுக்குத் தகுதி இல்லை என்றும், கஜேந்திரகுமார் தெரிவித்தார். அவருடன் பல இடங்களில் விவாதித்துள்ள நிலையில், தற்போது ஒளித்துக் கொண்டு திரியும் அவர், தப்புவதற்கான சில வழிகளை தேடி வருகின்றார் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

24 ஜூலை 2020

மக்கள் முன்னணி அலுவலகத்திற்குள் புகுந்து அட்டகாசம் புரிந்த அங்கயனின் அடியாட்கள்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்காரியாலயத்திற்குள் புகுந்த அங்கயனின் அடியாட்கள் கொண்ட கும்பல் அட்டகாசம்,சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்திற்குள் நள்ளிரவில் புகுந்த அங்கயனின் அடியாட்கள் வாசல் கதவுகளை உடைத்து அக் கதவுகளில் தங்களது போஸ்டர்களை ஒட்டியும், அலுவலகத்தில் இருந்த ஏனைய பொருட்கள் சிலவற்றையும் தாக்கி சேதப்படுத்தியுமுள்ளனர். தமிழர் பகுதியில் அடியாள் அரசியல் செய்பவர்களில் முதன்மையானவர்களில் ஒருவரான அங்கயனும் அவரது தந்தையும் கடந்த கால தேர்தல்களில் செய்த அட்டகாசங்களை மக்கள் இன்னும் மறந்திருக்க வாய்ப்பில்லை என்பது குறிப்பிடப்படவேண்டிய தகவலாகும்.

நன்றி:தாரகம்

21 ஜூலை 2020

சுமந்திரனின் பெயரை உச்சரிக்கும் தேவை இனி இருக்காது!

கூட்டமைப்பில் சுமந்திரன் வெறுமனே சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார். எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அவரது பெயரை உச்சரிக்க வேண்டிய தேவை இருக்காது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களுக்கு, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்- கொக்குவிலில் கட்சி அலுவலகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார். “யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நேற்று முன்தினம் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான விவாதம் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திடீரென இந்த நிகழ்ச்சி இரத்துச் செய்யப்பட்டது. எமது கட்சியின் சார்பில் சட்ட ஆலோசகர்களான சுகாஸ் மற்றும் காண்டீபன் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்தனர். எனினும் நான் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்து, தாம் நிகழ்வுக்கு வரவில்லை என்று சுமந்திரன் கூறியதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். சுமந்திரன் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு கட்சியின் தலைவராக இருக்கின்றேன். அப்படியாயின் இன்னொரு கட்சியின் தலைவருடனேயே நான் விவாதத்திற்கு செல்ல வேண்டும். அதனாலேயே எனது சட்ட ஆலோசகரை அந்த நிகழ்வுக்கு அனுப்பத் திட்டமிட்டேன். ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் பதவியையும் இழந்து வெறுமனே சட்ட ஆலோசகராவே தற்போது செயற்பட்டு வருகின்ற சுமந்திரன், இவர்களுடன் விவாதம் செய்ய பயந்தே வரவில்லை. சுமந்திரன் பொது வெளிகளில் குறிப்பிடுகின்ற கருத்துக்களை கட்சியின் கருத்தாக எடுக்க வேண்டாம் என கூட்டமைப்பின் தலைவரே கூறிவருகின்றார். அது மட்டுமல்லாது சுமந்திரனின் கருத்துக்களை கணக்கில் எடுக்கத் தேவை இல்லை என்று பல தடவை கூறியிருக்கின்றார். அப்படியாயின் கூட்டமைப்பில் சுமந்திரன் வெறுமனே சட்ட ஆலோசகராகவே இருக்கின்றார். எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் அவரது பெயரை உச்சரிக்க வேண்டிய தேவை இருக்காது. அதனால் தான் எனது கட்சி உறுப்பினர்களுக்கும் சுமந்திரனின் பெயரை இனி உச்சரிக்கக் கூடாது என கூறி வைத்துள்ளேன் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

17 ஜூலை 2020

என் வெற்றியை விட சம்பந்தன்,சுமந்திரன் தோல்வி செய்தியே எனக்கு மகிழ்ச்சி என்கிறார் சிவாஜி!

நல்லாட்சி அரசாங்கத்தில் நிஜப் பிரதமராக இருந்த சுமந்திரன் நிழல் பிரதமராக இருந்த ரணிலை வைத்து எதனைச் சாதித்தார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். சாவகச்சேரி பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “சில காலத்திற்கு முன்னர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வரும் போது அவரது நண்பர்கள் நிழல் பிரதமர் வருகிறார் எனக் கூறியிருந்தனராம். அதனைக் கேட்ட சுமந்திரன் “இல்லை, இல்லை நான் தான் நிஜப் பிரதமர், ரணில் விக்ரமசிங்கே தான் நிழல் பிரதமர்” எனப் பதில் கூறினாராம். இவ்வாறு நிழல் பிரதமரை வைத்து நிஜப் பிரதமராக இருந்து எதைச் சாதித்தீர்கள்? நூறு அரசியல் கைதிகளை விடுதலை செய்தீர்களா? மக்களின் காணிகளை விடுவித்தீர்களா?, போரினால் அழிந்து போன தேசத்தை மீளக் கட்டியெழுப்ப முயற்சி எடுத்தீர்களா? அண்மையில் இராணுவ ஆட்சி வரப்போகிறது என்று சுமந்திரன் புதிய நகைச்சுவை ஒன்றைக் கூறி இருந்தார். சுமந்திரனுக்கு இதுவரை 6 விசேட அதிரடிப்படை, 4 அமைச்சரவைப் பாதுகாப்பு பிரிவினர். தற்போது மேலும் பத்துப் பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 5 மோட்டார் சைக்கிள் படையணி பாதுகாப்பு கொடுக்கிறது. பிறகு ஏன் சுமந்திரன் இராணுவ ஆட்சி பற்றி கவலைப்படுகிறார். அவர் வரும் போதே அந்த இடத்தில் மக்கள் கலங்குகிறார்கள். இம்முறை திருகோணமலையில் சம்பந்தன் ஐயா தோற்கடிக்கப்படக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. அவருக்கு அனுதாபம் காட்ட மக்கள் இம்முறை தயாரில்லை. இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய வெற்றிச் செய்தி கேட்டு நான் சந்தோசமடைவதனை விட சம்பந்தன் ஐயா மற்றும் சுமந்திரனின் தோல்விச் செய்தி கேட்டால் அதுவே எனக்கு வெற்றிச் செய்தியாக அமையும். தமிழினத்திற்கு ஓர் மாற்றம் ஏற்படும் என்றார் சிவாஜிலிங்கம்.

15 ஜூலை 2020

வேலணையில் தேர்தல் பரப்புரையின்போது மோதல்!

வேலணை வங்களாவடி பகுதியில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கட்சி ஒன்றின் ஆதரவாளர்கள் மீது நேற்று மாலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், இருவர் கடுமையாக காயமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்களாவடி பகுதியில் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவினர், அப்பகுதியில் இருந்த சில இளைஞர்களை இடைமறித்து தமது துண்டுப்பிரசுரங்களை கொடுத்துள்ளனர். அதன்போது இளைஞர்கள் காரசாரமாக கேள்விகளைத் தொடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது கடும் வாக்குவாதமாக மாறி கைகலப்பு வரை சென்றுள்ளது. இதன் போது கோபமடைந்த குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த இளைஞன் வேலணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ்,போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

14 ஜூலை 2020

ஊர்காவற்றுறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டவர் திடீர் மரணம்!

ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் அரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஊர்காவற்றுறை பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த நாடகக் கலைஞரான காவலூர் செல்வம் என்று அறியப்படும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஊர்காவற்றுறை பிரதேச சபை உறுப்பினர் கனகசுந்தரம் ஜெயக்குமார் என்பவரே உயிரிழந்தவராவார். இன்று இலங்கை தமிழ் அரசு கட்சியினர் ஊர்காவற்றுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாக பிரச்சார பணியில் ஈடுபட்டனர். இதன்போது பிரதேச சபை உறுப்பினர் ஜெயக்குமாருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு, உடனடியாக ஊர்காவற்றுறை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது.

12 ஜூலை 2020

புளியங்கூடல் சக்களாப்பதி அருள்மிகு கதிர்காமக் கந்தன்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 4 பேர், பலர் மேடையில் உள்ளனர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்ஊர்காவற்றுறை / புளியங்கூடல் சக்களாப்பதி அருள்மிகு கதிர்காமக் கந்தன் ஆலயத்தின் கும்பாபிஷேகத் திருவிழா 2020 ஆண்டி, ஆடி மாதம் 9ஆம. 10ஆம், 11ஆம் திகதிகளில் சிறப்பாக நடந்தேறியது. பக்தர்களும் பலர் இந்த அருள்மிகுந்த பெருவிழாவில் கலந்துகொண்டு சக்களாப்பதி கதிர்காமக் கந்தனின் அருள்பெற்று சென்றனர். அதன் சில புகைப்படங்கள், பக்தகோடிகள், புலம்பெயர்ந்து வாழும் சக்களாப்பதி கதிர்காமக் கந்தன் பக்தர்களின் பார்வைக்காக பதிவிடுகின்றோம். இந்தப் பெருவிழா 12.07.2020 முதல் 11 தினங்களுக்கு நடைபெறும்.எம்பெருமான், எம்மை வாழவைக்கும் புளியங்கூடல் சக்களாப்பதி கதிர்காமக் கந்தனினுக்கு மண்டலா அபிஷேகமும் நடைபெற உள்ளது. சக்களாப்பதி கதிர்காமக் கந்தனின் பக்தகோடிகளே!! அருள்மிகுந்த சக்களாப்பதி கந்தன் காலடியில் குறைகளை சமர்பித்து, கதிர்காமக் கந்தன் கருணைபெற்று நிறைவோடு வாழ்ந்திடுவோம். எங்கள் மனப்பாரம் தீரட்டும், நோய் நொடி மறையட்டும், கஸ்டங்கள் கரையட்டும், கந்தன் கருணை கொண்டு நம்வாழ்வு சீர்பெற்று மிளிரட்டும். சக்களாப்பதி கதிர்காமக் கந்தன் அருள் எங்கள் சிரம்காத்து நிற்கட்டும். எங்கள் புளியங்கூடல் சக்களாப்பதி கதிர்காமக் கந்தன் மனங்குளிர மண்டலாபிஷேகத்தை சிறப்புடனே நிறைவேற்றுவோம் பக்தகோடிகளே!! புளியங்கூடல் சக்களாப்பதி கதிர்காமக் கந்தன் கருணைபெற்று, கந்தன் காலடி வணங்கி அருள்பெற வருகைதரும் பக்தகோடிகளின் பசியினை போக்க ஓர் சில பக்கதர்கள் இணைந்து கதிர்காமக் கந்தன் ஆலயப்பகுதியில் அன்னதானமும் வழங்க எண்ணியுள்ளார்கள் என்பதையும் தெரிவித்து மகிழ்கின்றோம்.
(ஆலய நிர்வாகத்தினர்)

செய்தி அனுப்பிய அன்பருக்கு நன்றி!

07 ஜூலை 2020

தீர்வு கிடைக்காமல் போனமைக்கு தமிழ் தலைமைகளே காரணம்!

13ஆவது திருத்தச் சட்டத்தையும் ஒற்றையாட்சி முறைமையையும் தமிழ் தலைமைகள் ஏற்றுக்கொண்ட காரணத்தினாலேயே இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை பெற்றுக்கொள்ள முடியாதுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். “தமிழ் தேசிய மக்கள் முன்னணியைத் தவிர தமிழ் தரப்புக்கள் என்று ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏனைய அனைத்து தரப்புக்களும் ஒற்றையாட்சி இடைக்கால அறிக்கையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். சரித்திரத்தில் முதல் தடவையாக நான்காவது அரசியலமைப்பு இலங்கையில் கொண்டு வரப்படவுள்ள நிலையில் அந்த நான்காவது அரசியலமைப்பு ஒரு ஒற்றையாட்சியாக இருக்கின்ற நிலையில் தமிழ் மக்கள் அதனை ஆதரிக்கும் நிலைமை உருவாகப் போகிறது. சர்வதேசம் இன்றைக்கும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பொன்று உருவாக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றது. தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு அரசியலமைப்பு உருவாக்கப்பட்டால்தான் இந்தத் தீவில் இனப் பிரச்சினை இல்லை எனவும் நிலைத்து நிற்கக்கூடிய சமாதானத்தையும் அபிவிருத்தியையும் அடைய முடியும் என்பதையும் வலியுறுத்துகின்றார்கள். ஆனால், அந்த இனப் பிரச்சினைக்குத் தீர்வு என்ற விடயத்திலே, போருக்குப் பிற்பாடு இதுவரைக்கும் எமது தலைவர்களாக இருந்தவர்கள் 13ஆவது திருத்தத்தையும் ஒற்றையாட்சியையும் ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக இருந்தபடியால் தான் இன்று ஆபத்து உருவாகியிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

05 ஜூலை 2020

மக்கள் முன்னணி அலுவலத்தில் படைதரப்பு தேடுதல்!

யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகம் இன்று மதியம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. சுமார் 50இற்கும் மேற்பட்ட இராணுவத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில், கரும்புலிகள் தினத்தை நினைவு கூருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையிலேயே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, தெரிவித்துள்ளார். இதற்கு கஜேந்திரகுமார், பொன்னம்பலம், பொலிசாருக்கு தவறான தகவல் கிடைத்திருக்கலாம் அல்லது கட்சி உறுப்பினர்களை அச்சுறுத்துவதற்காகவும் பொதுமக்களை தமது அமைப்பிலிருந்து ஒதுங்கி நிற்கச் செய்வதற்காக வேண்டுமென்றே இதனைச் செய்திருக்கலாம் என்றும் யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், தாங்கள் மேலிட உத்தரவை மட்டுமே நடைமுறைப்படுத்தியதாக, யாழ்.பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.இவ்வாறு இணையம் ஒன்றில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

03 ஜூலை 2020

சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகம்!




தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர், எம்.ஏ.சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என்று, முன்னாள் மூத்த போராளி  காக்கா எனப்படும், மு.மனோகரன் தெரிவித்துள்ளார்.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர், எம்.ஏ.சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என்று, முன்னாள் மூத்த போராளி காக்கா எனப்படும், மு.மனோகரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட சுதந்திரம் என்றும் கூறிய முன்னாள் மூத்த போராளி பசீர் காக்கா, மாவீரர்களின் பெற்றோர்கள், எம்மை வழிநடத்திய தலைவர் பிரபாகரனை இன்றும் நேசிக்கும் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் சுமந்திரனுக்கு வாக்களிப்பது தமிழ் இனத்துக்கு செய்யும் துரோகமாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.