பக்கங்கள்

31 மே 2010

தோண்டி எடுக்கப்பட்ட சடலங்களின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது!




கிளிநொச்சி கணேசபுரத்திலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் மீள் குடியமர்த்தப்பட்டிருந்தனர். அங்குள்ள ஒரு வீட்டு உறுப்பினர்கள், தமது வீட்டைப் புனரமைக்கும் நடவடிக்கைகளில் இறங்கியபோது, மலசலக் கூடக் குழிக்குள் பிளாஸ்டிக் பைக்குள் அடைக்கப்பட்ட பல சடலங்களை கடந்த சனிக்கிழமை கண்டுள்ளனர். இதையடுத்து செய்தி கிளிநொச்சி குற்றவியல் நீதிபதிக்குச் செல்ல, அவர் குறித்த வீட்டுக்குச் சென்று பார்வையிட்டார். பின்னர் இவற்றை இன்று திங்கட்கிழமை வவுனியா அரச மருத்துவமனையில் மருத்துவ அதிகாரி முன்னிலையில் வெளியே எடுக்கும்படி பணித்தார். எனவே அவை இன்று வெளியே எடுக்கப்படவுள்ளன. வீட்டுக்காரர்கள் தாம் ஐந்து சடலங்களைக் கண்டதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் மேலும் பல சடலங்கள் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இதேவேளை அவ்வீட்டுக்குச் சென்று பார்வையிட்ட கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினரான சிறிதரன் இதுகுறித்துக் கருத்துக் கூறும்போது, இந்தக் கொலைகள் திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டுள்ளன என குறிப்பிட்டார். இந்தச் சடலங்கள் இருபடையாலான பிளாஸ்டிக் பைகளில் சுற்றப்பட்டு, கற்கள், மணல் நிரப்பட்டு தாழ்க்கப்பட்டுள்ளன. எனவே இதைச் செய்ய கணிசமான நேரம் எடுத்திருக்கும் எனச் சுட்டிக்காட்டிய அவர் இக்கொலைகள் திட்டமிட்டுச் செய்யப்பட்டுள்ளன என்றார்.புதைக்கப்பட்ட இச் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது அங்கு வந்த காவல்துறையினர், புகைப்படம் எடுக்க எவரையும் அனுமதிக்கவில்லை. அத்தோடு ஏற்கனவே கையடக்கத் தொலைபேசியில் எடுத்த சில புகைப்படங்களையும், சோதனையிட்டு அதனை அழித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

மேலும் சடலங்கள் இருக்கலாம்,இன்றும் தேடுதல் தொடர்கிறது!



கிளிநொச்சி கணேசபுரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சடலங்களைத் தொடர்ந்து, மேலும் சடலங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில், இன்று அந்தச் சுற்று வட்டத்தில் மீண்டும் தேடுதல் நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சி கணேசபுரத்தில் மீளக் குடியமர்ந்த மக்கள், நேற்று முன்தினம் மலசலக் குழியைத் துப்புரவு செய்த வேளை, அதற்குள் இருந்து பொலித்தீன் பைகளில் சுற்றிய நிலையில் சடலங்கள் கிடப்பதைக் கண்டனர். உடனே அவர்கள் பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார், அவ்விடத்தில் இருந்து நேற்று முன்தினம் 3 சடலங்களை மீட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று மேலும் 3 சடலங்கள் மீட்கப்பட்டன. அங்கு வந்த கிளிநொச்சி மாவட்ட நீதவான் சடலங்களைப் பார்வையிட்டு, மேலும் அவ்விடத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதற்காக அவ்விடத்திற்கு நிலம் தோண்டும் கனரக வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இன்று நீதவான் முன்னிலையில் நிலத்தை மேலும் தோண்டும் நடவடிக்கை மேற்கொள்ளப்படிகிறது. மீட்கப்பட்ட சடலங்கள் 5 அல்லது 6 மாத காலத்திற்கு முன் கொலை செய்யப்பட்டு போடப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

30 மே 2010

கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவு சென்ற குடும்பஸ்தர் அடித்துக்கொலை!


கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்குச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் 10 ஆயிரம் ரூபாவிற்காக அடித்து நேற்று மாலை படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கிளிநொச்சியைச் சேர்ந்த 56 வயதுடைய சோமசுந்தரம் சுப்பிரமணியம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.நேற்றுக் காலை கிளிநொச்சியிலிருந்து புங்குடுதீவிற்கு சென்றுவிட்டு மீண்டும் கிளிநொச்சி திரும்புவதற்காக அப்பகுதியிலுள்ள ஆலடிச் சந்தியில் பஸ்ஸிற்கு காத்துக் கொண்டிருந்த வேளை மது அருந்துவதற்காக அப் பகுதியில் வந்த இருவரிடம் மதுபானச்சாலை எங்கே என்று கேட்டுள்ளார். மதுபானச்சாலையைக் காட்டுவதாக அழைத்துச் மேற்படி இருவரும் அவரது தலையின் பின்புறமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து விட்டு அவரிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாவையும் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். சடலம் புங்குடுதீவுப் பகுதியில் உள்ள தென்தென்திடல் பிள்ளையார் கோவில் வீதியில் மீட்கப்பட்டது. சடலம் தற்போது யாழ் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் காவற்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெறும் இந்திய திரைப்பட விழா,சல்மான் கான் புறக்கணிப்பு!



இலங்கையில் அடுத்த மாதம் நடக்க உள்ள சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதற்கு இந்தியாவை சேர்ந்த திரைப்பட கலைஞர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழாவின் விளம்பர தூதராக நடிகர் அமிதாப் பச்சன் நியமிக்கப்பட்டிருந்தார். இதற்கு தமிழர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, நடிகர் அமிதாப்பச்சன், இலங்கை விழாவில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று அறிவித்தார். தனது தூதர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இப்பட விழாவில் இந்தி நடிகர் ஷாருக்கான் பங்கேற்பார் என்று படவிழா குழுவினர் அறிவித்திருந்தனர். இலங்கைக்கு எதிரான நட்பு ரீதியான கிரிக்கெட் போட்டிக்கு பாலவுட் குழுவுக்கு ஷாருக்கான் கேப்டனாக நியமிக்கப்பட்டுவதாக இருந்தது. இந்நிலையில் ஷாருக்கான் அடுத்த மாதம் கொழும்பு நகரில் நடக்கும் இந்திய திரைப்பட விழாவில் தன்னால் கலந்து கொள்ள இயலாது என்று இப்போது தெரிவித்துள்ளார்.
ஷாருக்கானும் இலங்கையில் நடக்கும் இந்திய படவிழாவை புறக்கணித்திருப்பதால், அவரைத் தொடர்ந்து பல இந்தி நடிர்கள், நடிகைகளும் இலங்கை படவிழாவில் கலந்து கொள்ளமாட்டார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐஸ்வர்யா,ஷாருக்கான் படங்களுக்கு ஐந்து மாநிலங்களில் தடை.




இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழா அடுத்த மாதம் (ஜூன்) 4, 5, 6 ஆகிய தேதிகளில் நடக்கிறது. விழாவையொட்டி இந்திய நடிகர் நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்பட உள்ளன. இவ்விழாவை இலங்கையில் நடத்துவதற்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
தமிழ் இனத்தை படுகொலை செய்த இலங்கையில் இந்திய படவிழாவை நடத்தக் கூடாது என்று அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் திரைப்படத்துறையினர் வற்புறுத்தி வருகிறார்கள். இவ்விழாவுக்கு செல்ல முடிவெடுத்துள்ளவர்களின் வீடுகள் முன்பும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அமிதாப்பச்சன், கமலஹாசன் வீடுகள் முற்றுகையிடப்பட்டன. இதையடுத்து இந்த விழாவில் கலந்து கொள்ளமாட்டேன் என்று கமலஹாசன் அறிவித்தார். விழாவில் பங்கேற்கும் முடிவை மறுபரிசீலனை செய்து வருவதாக அமிதாப்பச்சன் கூறினார். இதற்கிடையில் தென்னிந்திய திரைப்படத்துறையினர் மற்றும் தென்னிந்திய திரையுலகத்தினர் சென்னையில் அவசர கூட்டம் நடத்தி இதுபற்றி விவாதித்தனர். இக்கூட்டத்தில் இலங்கையில் சர்வதேச இந்திய திரைப்பட விழாவை நடத்தக்கூடாது என்றும் இவ்விழாவில் கலந்து கொள்ளும் நடிகர் நடிகையர் திரைப்படங்கள் தென்னிந்தியாவில் திரையிடப்படமாட்டாது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளனர். இதனால் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், ஷாருக்கான் படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஐஸ்வர்யாராயும் ஷாருக்கானும் இந்த விழாவில் கலந்து கொள்வதாக செய்திகள் வந்துள்ளன. தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களிலும் ஐஸ்வர்யா ராய், ஷாருக்கான் படங்களுக்கு தடை விதிக்கப்பட உள்ளது. ஷாருக்கான் 2 படங்களில் தற்போது நடித்து வருகிறார். ஐஸ்வர்யாராய் நடித்த ராவணன் படம் அடுத்த மாதம் ரிலீசாகிறது. இந்த படங்களுக்கு சிக்கல் ஏற்படலாம். எனவே மூவரும் இலங்கையில் நடக்கும் இந்திய பட விழாவை புறக்கணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பை நாலாம் மாடிக்கு கொண்டு செல்லும் திட்டம்-அரியநேந்திரன்.


தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை நாலாம் மாடிக்கு கொண்டு சென்று அடைத்து வைப்பதற்கான அரசின் சதித் திட்ட நிகழ்ச்சி நிரலில் ஒன்றாகவே கூட்டமைப்பின் தலைவராக நாடு கடந்த தமிழீழஅரசின் முக்கியஸ்தர் வி.உருத்திரகுமார் நியமிக்கப்பட உள்ளார் என்று சிங்களப் பத்திரிகைகளில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இத்தகைய திட்டமிட்ட பிரசாரங்களை நம்பி தமிழ் ஊடகங்கள் அச்செய்திகளைப் பிரசுரிப்பதன் மூலம் தமிழ் சமூகத்தை அச்சத்தில் மூழ்கடித்து விடக் கூடாது என்றும் அவர் கோரினார்.

கூட்டமைப்பின் தலைவராக நாடு கடந்த தமிழீழ அரசின் முக்கியஸ்தர் வி.உருத்திரகுமார் நியமிக்கப்பட உள்ளார் என்று தெரிவித்து லங்காதீப பத்திரிகை செய்தியொன்றை வெளியிட்டுள்ளது.

இச்செய்தியை ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து வெளிவரும் இணையத் தளச் செய்திச் சேவை ஒன்றும் பிரசுரித்தது. இச்செய்தியின் உண்மைத் தன்மை குறித்துக் கருத்துக் கூறிய போதே அவர் அவ்வாறு கூறினார்.

அவர் தெரிவித்தவை வருமாறு ”தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இன்னொருவர் நியமிக்கப்படுவார் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை.சம்பந்தர் ஐயாவே தொடர்ந்தும் எமது தலைவராக இருப்பார்.

வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் பிரதிநிதிகளாக கூட்டமைப்பினர் உள்ளனர். எனவே எமது தலைவராக இருப்பவர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்பவராக இருக்க வேண்டும் என்பது இன்னொரு விடயம்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கும் தமிழ்க் கூட்டமைபுக்கும் முடிச்சுப் போட்டு செய்தி பிரசுரித்திருப்பது மலடி மகன் முயற்கொம்பில் ஏறி ஆகாயத் தாமரையைப் பிடுங்கினான் என்பது போன்ற அப்பட்டமான பொய்யே ஆகும்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு ஆதரவாகச் செயற்பட்டனர் என்கிற குற்றச்சாட்டின் பேரில் கிழக்கு மாகாணத்தின் பல பாகங்களிலும் கடந்த வாரம் முதல் ஏராளமான தமிழர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வெளியாகி இருக்கின்றமையை தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ,கூட்டமைப்பு ஆதரவாளர்களையும் கைது செய்கின்ற நடவடிக்கையின் சூழ்ச்சியாகவே கூட்டமைப்பு காண்கின்றது.

இத்தகைய பிரசாரங்கள் மூலம் அரசு எதிர்கால சமாதானப் பேச்சுக்களைக் குழப்பத் திட்டம் இட்டுள்ளது.தமிழ் மக்கள் இது போன்ற செய்திகளால் குழப்பமோ, அச்சமோ அடையத் தேவை இல்லை.

கிளிநொச்சியில் மலசலகூட குழியினுள் சடலங்கள்,மக்கள் பதற்றம்!


கிளிநொச்சி, கணேசபுரத்தில் இருந்து இடம்பெயர்ந்து அண்மையில் மீளக்குடியேறிய ஒரு குடும்பத்தினர் தமது மலசலக் கூடத்தின் குழிக்குள் பல சடலங்கள் இருப்பதைக் கண்டுள்ளனர். இந்த வீடு ஏ9 சாலையின் மேற்குப்புறமாக 1 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. அக்குழிக்குள் 5 சடலங்கள் இருந்ததை அப்பகுதிவாசிகள் கண்டுள்ளனர். ஒவ்வொரு சடலமும் பிளாஸ்டிக் பைக்குள் பொதி செய்யப்பட்டு, அந்தக் குழிக்குள் போடப்பட்டு அதன்மேல் மணல் பரவப்பட்டுள்ளதாக அம்மக்கள் கூறினர். ஆனால் இன்னும் சில சடலங்கள் அங்கு இருக்கலாம் எனவும் அம்மக்கள் கூறியுள்ளனர்.இதையறிந்த இலங்கை ராணுவத்தினரும், போலீசாரும் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர். எனவே இது குறித்து மூன்றாம் தரப்பொன்று தகுந்த விசாரணைகள் செய்யவேண்டும் என தனது பெயரை வெளிவிடவிரும்பாத மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்தார். ராணுவமும், போலீசும் இச்சம்பவத்தைத் திரித்து, மறைத்துவிட முன்னர் இந்த விசாரணைகள் நடக்கவேண்டும் எனவும் அவர் அழுத்தமாகத் தெரிவித்தார்.

29 மே 2010

பாடசாலை மாணவியை திருமணம் செய்வதாக கூறி படைச்சிப்பாய் அழைத்து சென்றுள்ளான்!




முக்கொம்பன் கிராமத்தில் உள்ள பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி இலங்கை இராணுவச் சிப்பாய் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.


இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது, இலங்கை அரசினால் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ள முக்கொம்பன் கிராமத்தில் 10 வது தரம் கல்வி கற்ற கலைமகள் என்ற 18 வயது பூர்த்தியடையாத சிறுமியை திருமணம் செய்வார் என்று ஆசைவார்த்தை கூறி சிங்கள இராணுவச் சிப்பாய் ஒருவர் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.


கடந்த மே 18 அன்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தால் அங்குள்ள தமிழர்கள் மத்தியில் அச்சமும் பதற்றமும் நிலவுகின்றது.

இராணுவத்தினர் அங்கு தமிழ்மக்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்துவதாக அங்குள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மன்னிப்பு சபை பயங்கரவாத அமைப்பென்கிறார் சிறிலங்காவின் அமைச்சர்!



உலகெங்கும் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று இலங்கை அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க கேட்டுள்ளார்.
பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராகத் தொடரர்ந்து குரல் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதிகளுக்கு உதவிவரும் மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாகப் பிரகடனப் படுத்துவதன் மூலமே உலகப் பயங்கரவாதத்தை அழிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை அரசின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எதிர்த்து வந்த மன்னிப்புச் சபையின் அறிக்கைகளையும் கண்டனங்களையும் பொருட்படுத்தாமல் செயற்பட்ட தலைமையினாலேயே நாடு விடுவிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையில் இயங்கும் வேறும் சில தன்னார்வ நிறுவனங்களும் பயங்கரவாதத்திற்கு உயிரூட்ட முனைவதாகவும் இது குறித்து அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்ட ரணவக்க நாட்டு மக்களும் இந்த விடயத்தில் அவதானமாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

28 மே 2010

தமிழ் மக்கள் சிங்களப்படைகளை நேசிக்கின்றனராம்-அல்ஜசீராவில் மகிந்தவின் நாடகம்!

முள்ளிவாய்க்காலில் இறுதி யுத்தம் நடந்து இராணுவத்தினர் கைப்பற்றியபோது தமிழ் மக்கள் அப்படியே ஓடிவந்து, இராணுவத்திடம் சரணடைந்ததாகவும், தமிழ் மக்கள் இராணுவத்தை நேசிக்கின்றனர் என்றும் மகிந்த அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். 3வது தடவையும் தான் ஜநாதிபதியாக இருக்க ஆசைப்படுவதாக தெரிவித்த அவர், சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒன்றாகக் கலக்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். அவர் வழங்கிய நேர்காணல் இணைக்கப்பட்டுள்ளது.

விஜயின் படங்களால் நஷ்டம்,திரையரங்க உரிமையாளர்கள் போர்க்கொடி!


நடிகர் விஜய் நடித்த படங்களை வாங்கி திரையிட்டு நஷ்டமடைந்ததால் விஜய் நஷ்ட ஈடு தர வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இது தொடர்பாக இன்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, ‘’2010ல் வெளியான எந்தப்படமும் லாபம் கொடுக்கவில்லை. தமிழ்ப்படம், பையா, அங்காடித்தெரு ஆகிய மூன்று படங்களால் மட்டுமே ஓரளவு லாபம் கிடைத்தது.




விஜய் ரசிகர்களை மட்டுமல்ல; எங்களையும் ஏமாற்றி வருகிறார். தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி அடைந்துள்ளன.

5 படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும், 6 வது படம் அவரது சொந்தப்படம். விஜய் நடிக்கும் 50வது படம் வேறு. இதனால் பெரும் எதிர்பார்ப்பில் சுறா படத்தை வாங்கினோம்.



250 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. படம் படு தோல்வி அடைந்தது. இப்படத்தால் எங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்த தொடர்ச்சியாக தோல்வியடைந்த 6 படங்களால் 30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.



இதற்கு முன்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதை உணர்ந்து ரஜினி, கமல்,டி.ராஜேந்தர் ஆகியோர் பணம் கொடுத்து நஷ்டத்தை ஈடு செய்துள்ளார்கள்.



அது போல் விஜய்யும் எங்களுக்கு நஷ்ட ஈடு தருவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் அப்படி தரவில்லையென்றால் வரும் ஜூன் மாதம் எங்கள் சங்கம் கூடும். அப்போது, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம்.



விஜய் இனியாவது நல்ல கதைகளில் நடித்து ரசிகர்களுக்கும் எங்களுக்கும் ஏமாற்றம் தர மாட்டார் என்று நம்புகிறோம்’’என்று தெரிவித்தார்கள்.

ஜெர்மனியில் புலிகலுக்கு ஆதரவாக செயற்பட்டதாக கொழும்பில் தமிழ் பெண் கைது!

ஜேர்மனியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி திரட்டி வந்ததாக கூறப்படும் இலங்கைத் தமிழ்ப்பெண் ஒருவர் கொழும்பில் வைத்து குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இலங்கையில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், அதற்கு எதிராக ஜேர்மனியில் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தவர் என கூறப்படுகிறது.



இதன் போது அவர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவானவர்களை திரட்டி புகையிரதக் கடவைகளை தகர்த்தல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.



அத்துடன் ஜேர்மனியில் உள்ள இந்திய தூதுவரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டவர்களில் முக்கியமானவர் அவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.



அவர் சிலாபம் புத்தளம் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உறவினர் என தெரிவிக்கப்படுகிறது.



தற்போது அவர் குற்றப்புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சரணடைந்த முக்கிய அரசியற் பிரமுகர்கள் சிங்களப்படைகளால் கொல்லப்பட்டு விட்டனரா?







முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரின் போது அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்து சேர்ந்த விடுதலைப் புலிகளின் முக்கிய அரசியற் பிரமுகர்கள் பலர் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
நிராயுதபாணிகளாய் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்த இவர்கள் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் மேலிடத்து உத்தரவுக்கமைய கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசியற் துறைப் பணிகளை மேற்கொண்ட விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினரும் முன்னாள் ஈரோஸ் இயக்கத் தலைவருமான வே.பாலகுமாரன், வரலாற்று ஆவணக் காப்பகப் பொறுப்பாளர் யோகரத்னம் யோகி, கலைப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்ட பலர் இவ்வாறு கொல்லப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கலைப் பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளர் புதுவை இரத்தினதுரையின் விடுதலை தொடர்பாக அவரது சகோதரி ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தாவைச் சந்தித்திருந்ததும் அவரது விடுதலைக்குத் தான் உதவுவதாகவும் உறுதியளித்ததாகவும் செய்தி வெளியாகியிருந்த நிலையில் இவர்கள் எவரும் எந்தவொரு தடுப்பு முகாமிலும் இல்லை என டக்ளஸ் தேவானந்தா கையை விரித்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகளின் உறுப்பினர்கள் என சுமார் பத்தாயிரம் பேரின் பெயர் விபரங்களை பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டிருந்த நிலையில் இந்தப் பட்டியலில் மேற்கூறிய முன்னணி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் இல்லை என்பதும் சுட்டிக் காட்டத்தக்கது.
இவ்வாறு பட்டியலில் இல்லாதவர்கள் தற்போது உயிருடன் இல்லை என்றே கருதப்பட வேண்டும் என பசில் றாஜபக்ச குறிப்பிட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.
நிராயுதபாணிகளாய் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சரணடைந்த வயது முதிர்ந்த இந்தத் தலைவர்கள் என்ன காரணத்திற்காகக் கொலை செய்யப்பட்டார்கள் என்பது குறித்து சிங்கள அரசாங்கத்திடம் கேள்வியெழுப்புவது மனித உரிமை குறித்துப் பேசும் அமைப்புகளினது கடமை எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
யுத்தக் கைதிகள் நடத்தப்பட வேண்டிய முறை குறித்த சாசனங்களும் விதிமுறைகளும் வெறும் ஏட்டளவில் தானா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதனிடையே முன்னாள் திருமலை மாவட்டப் பொறுப்பாளர் பதுமன் விசாரணைகள் எதுவுமின்றி வெலிக்கடை தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகள் இயக்க பாடலை பதிவுசெய்து வைத்திருந்த இளைஞர் கைது!


கல்முனை பாண்டிருப்பில் கையடக்கத் தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் பாடல் ஒன்றை பதிவுசெய்து வைத்திருந்த இளைஞர் ஒருவர் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பாண்டிருப்பு பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, கூட்டமாக நின்ற இளைஞர் குழுவினரையும் அவர்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர். அவ்வேளை, விடுதலைப் புலிகளின் பாடல் ஒன்றை பதிவு செய்து வைத்திருந்த பாண்டிருப்பு மாரியம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெயது கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

27 மே 2010

செய்தியாளர் மாநாட்டிலிருந்து ஜீ,எல்,பீரிஸ் திடீரென வெளியேறினார்!


அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று National Press club இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போது அமைச்சர் திடீரென வெளியேறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.National Press club இனால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் திடீரென காரணம் எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறிச் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் இலங்கை பற்றி டேவிட் மிலிபான்ட் உரையாற்றினார்.

நேற்றைய தினம் பிரித்தானிய நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆரம்பமானது. மதியம் சுமார் 11.30 மணியளவில் நடந்த அமர்வுகளை பிரித்தானிய ராணி விக்டோரியா ஆரம்பித்துவைத்தார். இலங்கை நிலைகுறித்து அவர் பேசுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அது குறித்து எதுவும் பேசவில்லை. இருப்பினும் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நிழல் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மிலபான் அவர்கள் இலங்கை அரசும், புலிகளும் போர்க்குற்றத்திலும், மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டதாகத் தெரிவித்தார்.போரில் ஈடுபட்ட பல விடுதலைப் புலிகள் இறந்து விட்டனர், இருப்பினும் குற்றமிழைத்த பல இலங்கை இராணுவத்தினர் இன்னும் உயிரோடு இருப்பதால் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும். மேலும் பேசிய அவர் இலங்கை நிலைகுறித்து சர்வதேச அனர்த்த சபை குறிப்பிட்ட விடயங்களையும், புலத்தில் வாழும் இலங்கை பத்திரிகையாளர்கள் குறித்த சில விபரங்களையும் அங்கு தெரிவித்திருந்தார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் நடுக்கடலில் தமிழர்கள் தத்தளிப்பு!


இந்தோனேசியாவின் யாவா மத்திய மாகாணத்தின் கரையோரத்தில் இருந்து 80 மைல் தொலைவில் இந்துசமுத்திர பிராந்தியத்தில் 26 தமிழ் மக்கள் நடுக்கடலில் தத்தளிப்பதாக ஜகர்த்தா போஸ்ட் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது:
கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் இந்த தமிழ் ஏதிலிகளை உள்ளூர் மீனவர்கள் கண்டறிந்தனர். அவர்களை கரைக்கு கொண்டுவருவது தொடர்பில் அதிகாரிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
அதிகாரிகளின் மூலம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஏதிலிகள் மீனவர்களை கேட்டிருந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் படைகளின் மூலம் மேற்கொள்ளும் அடாவடித்தனங்களை கண்டிக்கிறோம்-சந்திரசேகரன்.


சுதந்திரம்,நீதியாக செயற்படுகின்றோம் எனக் கூறும் அரசாங்கம் தமது இராணுவங்கள் மூலம் மேற்கொள்ளும் அடக்குமுறைகள் , அடாவடித்தங்கள் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி வன்மையாக தமது கண்டனத்தை தெரிவிப்பதாக முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் சந்திரசேகரன் நேற்றைய தினம் சுமார் 3 மணித்தியாலங்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் நாரயணகுரு மண்டபத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இது தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே வீரகேசரி இணையத்தளத்திற்கு இவ்வாறு தெரிவித்தார். யுத்தம் நிறைவடைந்து ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு அரசாங்கம் பாரிய வெற்றி விழாக்களை கொண்டாடுகிறது.இந்நிலையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் இலங்கை அரசாங்கம் இதுவரையில் எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இதனை வலியுறுத்தி சந்திரசேகரன் தலைமையில் கிராண்ட்பாஸ் நாராயண குரு மண்டபத்தில் காணாமல் போனவர்களது உறவினர்களுடனான சந்திப்பு தொடர்பிலேயே இவ்விசாரணைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

26 மே 2010

எங்கள் உறவுகளை மீட்டுத்தாருங்கள்,கதறும் தமிழ் மக்களின் துயர காட்சி!


நேற்றைய தினம் வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் அவலக்காட்சிகள்.

உலகத்தமிழர்களே ஒருமணி நேரம் எங்களுக்காக ஒதுக்குங்கள்!மலேசியாவில் தவிக்கும் தமிழர்கள் அவசர கோரிக்கை!


அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு எங்களை அனுப்பி வையுங்கள் என்று மலேசிய முகாம்களில் தத்தளிக்கும் 61 ஈழத்தமிழர்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் நக்கீரன் இணையதளம் மூலம் விடுத்துள்ள கோரிக்கையில்,
உலகத் தமிழர்களின் பார்வைக்கு மரணத்தின் வாயிலில் இருந்து ஈழத் தமிழர்களின் கண்ணீர் கோரிக்கை. உலகத் தமிழினமே உங்களை நம்பித்தான் உயிரை பணயமாக வைத்து, பழுதான படகில் புறப்பட்டோம். நடுக்கடலில் சிக்கி தவித்தபோது மனிதாபிமானத்தோடு காப்பாற்றியது மலேசிய அரசு.
ஆனால், வதைமுகாம்களில் நாங்கள் பட்ட சித்ரவதையைவிட, இப்போது அதிகமாக பட்டுக்கொண்டிருக்கிறோம். எங்களை அகதிகளாக ஏற்றுக் கொள்ளும் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்ற கோரிக்கையை ஒரு மாதம் கழித்து உண்ணா நிலையை தொடங்கி உள்ளோம்.
எங்களை கேட்க நாதியில்லை. எங்களை பசி என்ற ஆயுதம் கிழித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் வாழும் நாடுகளில் எங்களுக்காக குரல் எழுப்புங்கள். எங்கள் துன்பங்களையும், துயரங்களையும் சற்று பாருங்கள்.
உங்கள் குரல்கள்தான் எங்களை மீட்கும். உங்கள் குரல்களை உங்கள் நாட்டு அரசுகளிடமும், மலேசிய தூதரகங்களிடமும் எழுப்புங்கள். உங்கள் குரல்கள் எங்களை உயிருடன் எழுப்பும்.
உறவுகளே, ரத்த சொந்தங்களே எங்களுக்காக குரல் கொடுங்கள். நீங்கள் தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும், எங்கள் உயிர் போய்க்கொண்டுதான் இருக்கிறது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மரணம் எங்களை நெருங்கி கொண்டுதான் இருக்கிறது. உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் வதைப்பட்டு, துன்பப்பட்டு, பாதிக்கப்பட்டு இப்போது இங்கு பசியின் கொடுமையால் மரணத்தை நோக்கி போகிறோம். எங்களுக்காக ஒரு மணிநேரம் செலவிடுங்கள். அந்த ஒரு மணி நேரத்தில் எங்கள் உயிரை காப்பாற்ற குரல் கொடுங்கள். அப்போதுதான் எங்கள் உயிர் காக்கப்படும். எங்கள் உயிரை மீட்கும் பணி உங்களிடம்தான் உள்ளது என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேசியத் தலைவரின் பாதை-கண்மணி.






ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. பல பத்தாண்டுகளை கடந்து நாம் போய் பார்த்தாலும், போராளிகள் சித்ரவதைப்பட்டு இறந்துபோயிருக்கிறார்கள். அவர்கள் குருதி கறையிலே முகிழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும்கூட, அவர்களின் லட்சியங்கள் மாறவில்லை, அவர்களுக்கான எண்ணங்கள் இடைவிடாமல் விடுதலை என துடித்துக் கொண்டிருந்தது. எந்த ஒரு போராளியும் தமது வாழ்வுக்காக, தமது வளத்திற்காக போராடியது கிடையாது. அப்படி போராடுவது ஒரு போராளியின் குணமும் கிடையாது. தேசிய தலைவர் இதைக் குறிப்பிடும்போது நாங்கள் புரட்சியாளர்கள், அரசியல்வாதிகள் அல்ல என்று சொல்வார். ஆக, அரசியல்வாதிகள் தமது தன்னல வாழ்வுக்காக, சமூக அக்கறையின்றி தம்மை நிலைநிறுத்திக் கொள்ள தமது வாழ்வை செம்மையாக்கிக் கொள்ள உழைப்பதென்பது இயல்பானதொன்று. அதை இந்திய அரசியலில் மிக எளிதாக நம்மால் காண முடிகிறது. சில ஆண்டுகளுக்கு முன்வரை மிகச் சாதாரணமாக திரிந்து கொண்டிருந்த பலர், இன்று திடீர் பணக்காரர்களாக, கல்லூரி அதிபர்களாக எப்படி மாறினார்கள் என்றால், அதற்குக் காரணம் அரசியல்.
ஆனாலும் புரட்சிக்காரர்களை பொறுத்த மட்டில் அவர்களின் வாழ்வு முற்றிலுமாய் மக்களோடு மக்களாய், மக்களுக்காக வாழ்வதாகவே அமைந்துவிடுகிறது. இந்த வாழ்வை அவர்கள் விரும்பி ஏற்கிறார்கள். இதை யாரும் போராளிகள்மீது அறைவது கிடையாது. தமது மக்களின் மகிழ்ச்சியான வாழ்விற்காக அவர்களின் விடுதலைக்காக தாம் சித்ரவதைகளை அனுபவிக்கவும், உயிரை கொடையாக்கவும் எந்த நேரத்திலும் விருப்பத்தோடு செயல்பாடுகிறார்கள். ஆகவே, போராளிகளின் வாழ்வு என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான வாழ்வாக இருக்கிறது. உலக அரங்கில் பெரும் கொடுங்கோலனாய் சித்தரிக்கப்பட்ட இட்லரின் அடக்குமுறை ஆட்சியாளர்களால் கைதுசெய்யப்பட்ட ஜூலிஸ் பூசிக், சித்ரவதை நம்மால் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பெரும் அச்சத்தையும், பீதியையும் உண்டாக்கக் கூடியதாக இருக்கிறது. அடக்குமுறையாளர்களை பொருத்தமட்டில் பொதுமக்களுக்கு அச்சதை ஏற்படுத்துவதின் மூலம் அவர்களை போராட்ட பாதையிலிருந்து திசை திருப்பி, அடங்கிப்போக செய்வதிலேதான் தமது ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்துவார்கள், பயன்படுத்தினார்கள், பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அச்சம் ஒன்றுதான் ஆட்சியாளர்களின் பெரும் ஆற்றலாய் இருக்கிறது. அவர்கள் கோழைகளாக இருப்பதால், சாதாரண மக்களிடம்கூட கொடும் ஆயுதம் திணிப்பதிலே அதிக அக்கறைக் காட்டுகிறார்கள். இதன்மூலம் அவரின் முகத்தை வெளிப்படுத்த வேண்டும். அதுதான் அவர்களின் பெரும் நோக்கமாக இருக்கிறது. இந்த நோக்கத்திலிருந்து அவர்கள் தொடக்கக்காலங்களிலிருந்தே மாறுபட்டது கிடையாது. இதுதான் அரச பயங்கரவாதத்தின் அடிப்படை பண்பாகும். ஜூலிஸ் பூசிக் கைதுசெய்யப்பட்டு, ராவன்ஸ்பார்க் சிறையிலே அடைக்கப்பட்டிருந்தபோது, அவரின் தாடி மயிர்கள் ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டது. அப்படி பிடுங்கப்படும்போது தெறித்த ரத்தம் முகம் முழுக்க பரவி, அவர் முகத்தை மிகக் கொடூரமாக காட்டியது. அந்த நிலையிலும்கூட அவர் சிரித்த முகத்தோடு அந்த கொடூரங்களை ஏற்றுக் கொண்டார். இத்தனை கொடுமைகளையும் ஏற்றுக் கொண்டப்பின்னரும்கூட அவர் சொல்கிறார், விடுதலை பெரும் இந்த தேசத்தை நாங்கள் காண மாட்டோம் என்பது எங்களுக்குத் தெரியும்.
ஆனாலும்கூட இந்த துயர்களை நாங்கள் மனமுவந்து ஏற்றுக் கொள்வதற்குக் காரணம் எமது மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்பதுதான். இதுதான் ஒரு போராளியின் கனவாக இருக்கிறது. இந்த விடுதலை களத்தின் நாயகர்கள் இப்படித்தான் களமாடுகிறார்கள். ஆனால் அரச பயங்கரவாத ஆற்றல்கள் இதை முற்றிலுமாக அழித்தொழிப்பதிலே பெரும் முனைப்புக் காட்டுகிறது. இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு நம்மில் நீடித்திருக்கிறது. 1931ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அலகாபாத்தில் இப்போது மோதிலால்நேரு பூங்கா என்று அழைக்கப்படும் ஆல்பிரட் பூங்காவில் தமது தோழர் ஒருவருடன் ஆசாத் பேசிக் கொண்டிருந்தபோது போலீசார் சுற்றி வளைக்கிறார்கள். அவருக்கும் போலீசாருக்கும் இடையே நடைபெற்ற ஒரு கடுமையான மோதலுக்குப் பிறகு தன் துப்பாக்கியின் கடைசி குண்டுக்கு ஆசாத் தன்னை பலியாக்கிக் கொண்டார். அந்த மோதலின் போது தாம் மறைந்திருந்து தாக்க உதவிப் புரிந்த அந்த மரத்தை ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுச் சென்று பார்வையிட்டார்கள். இதைக் கண்ட அரசாங்கம் ஆசாத் மறைந்திருந்த அந்த மரத்தை வெட்டிப்போட்டது.
இன்று தமிழீழ மண்ணிலே தேசியத் தலைவர் வாழ்ந்த ஒரு வீடு மக்களின் விடுதலைக்கான உந்துதலாகிவிடுமோ என்ற அச்சத்தில் சிங்கள பேரினவாத அரசு அவர் வாழ்ந்த வீட்டை இடித்துத்தள்ளி இருக்கிறது. ஆக, வரலாற்றில் எப்போதுமே அரச பயங்கரவாதம் ஒரே படிமத்தில்தான் பயணம் செய்திருக்கிறது. அது, எந்த காலத்திலும் மக்களை அடக்கி ஒடுக்கவே முனைப்புக் காட்டி இருக்கிறது. இந்த நிலையிலிருந்து எந்தக் காலக்கட்டத்திலும் அதுதம்மை மாற்றிக் கொண்டது கிடையாது. அன்று ஆசாத் மறைந்திருந்த மரமானாலும், இன்று தேசியத் தலைவர் வாழ்ந்த இல்லமானாலும் அரசிற்கு இரண்டும் ஒன்றுதான். அது பிரிட்டிஷ் காலனி ஆதிக்க அரசானாலும், மகிந்தாவின் சிங்கள பாசிச அரசானாலும் பெயர்கள் தான் மாறியிருக்குமேத் தவிர, அதன் உள்ளடக்கமும் அதன் தன்மைகளும் வெவ்வேறாக இருந்தது கிடையாது. இருக்கப்போவதும் கிடையாது. எப்படி இந்த அரச ஆற்றல்கள் தம்முடைய எதேச்சதிகாரத்தை அழுத்தத்தோடு நிலைநாட்ட விரும்புகிறதோ, அதைக்காட்டிலும் மிக வேகமாக தமது அறிவாற்றலை பயன்படுத்தி பயணிக்கும் பண்பு கொண்டவர்களாக போராளிகள் களத்திலே இருக்கிறார்கள்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் பல்வேறு இரத்த சிதறல்கள் நிகழ்ந்தேறி இருக்கிறது. தம்மை அர்ப்பணித்த எண்ணற்ற வீர இளைஞர்களின் இரத்த சுவடுகளில்தான் இந்த தேசம் வடிவமைக்கப்பட்டது என்பதை மறந்து, பாசிச அடக்குமுறையாளர்களுக்கு துணைப்போகும் இந்திய அரசிற்கு நாம் சில செய்திகளை சுட்டிக்காட்டத்தான் வேண்டும். ஒருவேளை இத்தாலியில் பிறந்த சோனியாவிற்கு இந்த செய்தி புதிதாக இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் இயக்கத்திலும், இடதுசாரி இயக்கத்திலும் இருக்கும் பல்வேறு ஆற்றல்வாய்ந்த களப்போராளிகளுக்கு இந்த செய்தி தெரியாமல் இருக்க நியாயமில்லை.
1930ஆம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி பகவதி சரண் என்கின்ற ஒரு போராளி, தாம் தயாரித்த வெடிகுண்டை சோதித்தறிவதற்காக தமது நண்பர்கள் வைசம்பாயன், சுகதேவ்ராஜ் ஆகியோருடன் ரவி நதிக்கரையில் அடத்தியான காடுகளுக்கு இடையே பணியாற்றிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அந்த குண்டு வெடித்தது. பகவதி சரணின் கைகள் துண்டிக்கப்பட்டு ரத்தம் கொட்டியது. எவ்வித துணைக்கும் ஆளில்லாத அந்தப் பகுதியில் துடிதுடித்துக் கொண்டிருந்த பகவதி சரண், அந்த நேரத்திலும்கூட முகத்தில் புன்னகை தழுவ இருந்திருக்கிறான்.இந்த நிகழ்ச்சியை பகவதி சரணுடன் இந்த சகப்போராளி வைசம்பாயன் கீழ்க்கண்டவாறு கூறுகிறார். ரத்தம் பெருக்கெடுத்தோடி தரையை நனைத்துக் கொண்டிருந்தது. பொறுக்க முடியாத வேதனையிலும் அவர் முகத்தில் சிரிப்பு. அந்த போராளி உடல் துயரால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தான்.
அவனின் கடைசி மூச்சிக்கு முன்பு பகத்சிங்கையும், தத்தையும் விடுவிக்கும் முயற்சிக்கு என் மரணம் தடையாக இருக்கக்கூடாது என்று மரணிக்கிறான். ஆக, எந்த நிலை என்றாலும் ஒரு போராளி தமது துயரத்தைவிட, தாம் கொண்ட லட்சியங்களையே முன்னோக்கி நடத்தி செல்ல முயற்சி செய்கிறான். அதிலிருந்து அவன் இறுதிவரை சமரசப்படுத்திக் கொண்டதே கிடையாது. இந்த வரலாற்று தகவல்களை நாம் சொல்வதற்குக் காரணம், இன்று இணையத்தளங்களில் தொடர்ந்து வெளிவரும் புகைப்படங்கள், தமிழர்களின் மனங்களில் ஒருவித சலிப்பையும், அச்சத்தையும் உருவாக்கலாம். எமது போராளிகள் சித்ரவதைக்குள்ளாவதும், அவர்கள் மிருகங்களைப்போல் சுட்டுக் கொல்லப்படுவதும், அவர்களின் பிணங்களை குப்பைகளைப் போல் கொட்டுவதும் நமக்கு தவிப்பை உண்டாக்கலாம். ஆனால் இதையெல்லாம் உணர்ந்துதான், இதையெல்லாம் நிகழும் என்று அறிந்தபின்னர்தான் நமக்காக, நமது விடுதலைக்காக, நமது நாட்டின் மகிழ்ச்சிக்காக அவர்கள் இந்த பணியை விரும்பி ஏற்றார்கள். இதற்காக அவர்களின் அணைத்து ஆற்றல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு சிலிர்த்து நின்றது.
நாம் இப்படிப்பட்ட புகைப்படங்களை பார்த்தப்பின்னர் முன்னைக் காட்டிலும் நமக்குள் எழுச்சி கூடுதலாக்கப்பட வேண்டும். அந்த மரணம் நமக்காக நிகழ்ந்தது. அந்த சித்ரவதை நமக்காக ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த கொடூரம் நமது விடுதலைக்காக அவர்கள் விரும்பி நிகழ்த்தியது. இதைக் கண்டு நாம் பொங்கி எழ வேண்டும். இந்த சித்திரங்கள் நமது விடுதலையை உலுக்கிவிடுவதற்கான ஆயுதம் என்பதை நாம் இந்த நேரத்தில் நிதானித்து முடிவு செய்ய வேண்டும். நமது அசைவுகள், நமது செயல்கள் ஒவ்வொன்றும் இந்த போராளிகளுக்கு நன்றியுடையதாக இருக்க வேண்டும். தமிழீழ விடுதலை என்பது நமக்கு கிடைக்க, நமது பங்களிப்பு என்ன என்பதை நாம் இறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து போராடுவோம். நமது தேவையான நமது நாட்டை நாம் அடையும்வரை போராடுவோம். வீழ்ச்சி என்பது நிரந்தரமானது அல்ல. விடுதலை என்கிற மாபெரும் மகிழ்ச்சி நமக்கு முன்னால் அமர்ந்திருக்கிறது. நமது நகர்வு அதை நோக்கி என்பதை மறந்துவிட வேண்டாம். தேசிய தலைவரின் பாதை நம்மை அந்த மகிழ்ச்சியான நாட்டில் கொண்டுபோய் சேர்க்கும்.

25 மே 2010

தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ஒபாமா காரணம் கேட்கவேண்டும்!


போஸ்டன் குளோப்பின் நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தில் இலங்கைப் போர்க்குற்றம் குறித்த விசாரணையின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் ஆரம்ப மாதங்களில் பொதுமக்கள் மீது பெருமெடுப்பில் இலங்கைப் படையினராலும், விடுதலைப் புலிகளாலும் செய்யப்பட்டுள்ள குற்றச்செயல்கள் குறித்து வெளியுலகம் நம்பிக்கைக்குரிய குற்றச்சாட்டுகள் பலவற்றைப் பெற்றுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள போஸ்டன் குளோப், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் எங்கென்றாலும் மனித உரிமைகள் விடயத்தை மென்மையாளக் கையாண்டார் என பலவாறு விமர்சனங்களுக்கு உள்ளான அமெரிக்க அதிபர் ஒபாமா, பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகள் மீதான ஷெல் தாக்குதல்களுக்கும், சரணடைந்த விடுதலைப் புலிகளைக் கொலை செய்தமைக்கும் இலங்கை அரசு பதிலளிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.இந்த விசாரணையானது நீதி, நியாயக் கருத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது அல்ல. இலங்கையில் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்றால், உள்நாட்டுப் போரைக் கையாளும் பிற நாடுகள் தாம் இலங்கையைப் போலவே செயற்பட்டால் அதற்காக எதுவித பதிலும் சொல்ல வேண்டியதில்லை என்று கருதும் எனவும் போஸ்டன் குளோப் ஆசிரியர் எழுதியுள்ளார்.சர்வதேச போர்க்குற்றங்களை விசாரணை செய்வதானது நீதியை நிலைநாட்டச் செயற்படுவதோடு, ராஜபக்ஷ அரசுக்கும், அங்குள்ள சிறுபான்மைத் தமிழர்களுக்கும் இடையிலான சமரச இணக்கத்தையும் மேம்படுத்தக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சிங்களம் புரியும் கொடூரம்,மற்றுமோர் போர்க்குற்ற ஆதாரம்!(காணொளி கொடூரமானது)

சிங்கள அரசின் மற்றுமொரு யுத்தக்குற்ற ஆதாரம்.இரசாயன ஆயுதங்கள் மூலம் கோழைத்தனமாககொன்று குவிக்கபட்ட எம் குலப்பெண் தளிர்களைபாருங்கள்,சிங்களத்துடன் தமிழன் இனியும் ஒட்டிவாழமுடியுமா?சிந்தியுங்கள்!.

விஜயகாந்தினது மகன் பிரபாகரன் மக்களால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்!


விஜயகாந்த் மகன் பிரபாகரன் காரில் கூடுவாஞ்சேரி வழியாக சென்றுகொண்டிருந்தார். அப்போது காரை ஓட்டிய டிரைவரின் கவனக்குறைவால் நான்கு பேருக்கு அடிபட்டது.தாம்பரத்தில் உள்ள ஒரு வணிக வளாக ஊழியர்கள் 10 பேர் நேற்று வேலை முடிந்து வேனில் கூடுவாஞ்சேரி நோக்கி சென்றனர்.வண்டலூர் பூங்கா அடுத்த ஊரப்பாக்கம் ரோட்டில் வேன் வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வெள்ளை நிற கார் ஒன்று தொடர்ந்து வந்தது. வேனை முந்து வதற்கு கார்போட்டி போட்டது. திடீரென வேனின் ஓரத்தில் கார் மோதிவிட்டு நிற்காமல் வேகமாக சென்றது. இதில் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த மோகன், கிருஷ்ணகுமார், பிரியா, கோகிலா ஆகியோர் காயம் அடைந்தனர். இதனால் கொதித்தெழுந்த வேன் டிரைவர் உடனே கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர்களுக்கு போன் செய்தார்.
நான் வந்த வேன் மீது ஒரு கார் மோதிவிட்டு நிற்காமல் நம்ம ஏரியாவுக்கு வருது. அதனை மடக்கி பிடிங்க என்று கூறினார். அவரது நண்பர்களும் அப்பகுதி பொதுமக்களை அழைத்து கொண்டு ரோட்டில் தடுப்பாக நின்றனர். காரை துரத்தி வேனும் பின்னால் சென்றது. கார் கூடுவாஞ்சேரி வந்தவுடன் அதனை மடக்கி சுற்றி வளைத்தனர். ஆத்திரத்தில் இருந்த மக்கள் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். டிரைவரை வெளியே இழுத்து வந்து உதைத்தனர். இதில் அவர் காயம் அடைந்தார். உடனே பின் சீட்டில் அமர்ந்திருந்த 20வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறங்கி வந்தார். நான் நடிகர் விஜயகாந்த் மகன். எனது பெயர் பிரபாகரன். தெரியாமல் நடந்து விட்டது என்று கூறினார். ஆனால் யாரும் நம்ப வில்லை. பிரபாகரன் அந்த பகுதி கட்சி செயலாளர் கரீம் என்பவருக்கு போன் செய்து வரவழைத்தார். அவர் வந்து சொன்ன பிறகே அவர் விஜயகாந்த் மகன் என தெரிந்தது. பின்னர் இருதரப்பினரும் சமாதானம் பேசி கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

இரசாயன எரிகுண்டுகளால் கொல்லப்பட்ட பெண் போராளிகள்!சிங்களப் படைகள் புரியும் அராஜகங்கள்,மேலும் ஒரு யுத்தக்குற்ற ஆதாரம்!


இரசாயன எரிகுண்டுகளால் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளினது உடலங்கள்இலங்கை அரசைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் போர்க்குற்றம் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் குறுகிய காலப்பகுதியில் அதிகமாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன.அதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இன்னுமொரு காணொளி இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் மூலமாக வெளியாகியுள்ளது. சர்வதேச போரியல் விதி முறைகளையும், யுத்த தர்மங்களையும் மீறி இரசாயனக் குண்டுகளால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் உடலங்கள் எரிகாயங்களுடன் காணொளியில் தெளிவாகத் தெரிகின்றது.

இப்போ வெளியாகி கொண்டிருக்கும் புகைப்படங்கள்,காணொளிகள் ஆகியவற்றை கண்டு உலகத்தமிழ் மக்கள் பெரும் கோபமும் சீற்றமும் கொண்டுள்ளார்கள்,அதே நேரம் இவற்றை உரிய இடத்தில் சேர்த்து

மகிந்த கும்பலை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு

தமிழ் மக்களிடமே உள்ளதென்பதும் குறிப்பிடபட வேண்டிய ஒன்றாகும்.

24 மே 2010

இலங்கையில் சமாதானம் ஏற்பட கே.பி.பாடுபடுகிறாராம்!


புலிகளின் சர்வதேச தொடர்பாளராக இருந்த, இப்போது இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கே.பி இலங்கையில் சமாதானம் ஏற்படப் பாடுபடுகிறார் எனக் கூறியுள்ளார் சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட பயங்கரவாதம் குறித்த ஆய்வாளரான ரொஹான் குணரட்ண. கே.பி தற்போது இலங்கையிலுள்ள மற்றும் வெளிநாடுகளிலுள்ள தமிழர்களுக்கும், பிற சமூகங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக அமைந்து இன ஒற்றுமையை ஏற்படுத்தப் பாடுபடுகிறாராம்.எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகிறீர்கள் எனக் கேட்டதற்கு தாம் கே.பி ஐச் சந்தித்துள்ளதாக குணரட்ண தெரிவித்தார். "கே.பி இலங்கையின் வட கிழக்கிலுள்ள தமிழர்கள் உட்பட பலரைச் சந்தித்துள்ளார். அவர் அமைதியாகப் பணியாற்றி வருகிறார்" எனவும் மேற்கொண்டு குணரட்ண தெரிவித்துள்ளார். கே.பி ஐ இலங்கை அரசு ஒரு போதுமே சித்திரவதை செய்யவில்லை எனக் கூறியுள்ள அவர், ஒரு நல்ல காரணத்துக்காக அவர் செயல்படும்போது எதற்காக அவரைச் சித்திரவதை செய்து, சிறையில் போடவேண்டும் என்கிறார் குணரட்ண. அதாவது இவர் கூறும் நல்ல காரியம் என்பது என்ன ? இலங்கை அரசுடன் இணைந்து செயல்படுவதுதானே ?கே.பி குறித்து பல்வேறு மட்டங்களில் பல கருத்துகள் முன் வைக்கப்பட்டாலும், தற்போது சிங்கப்பூரைத் தளமாகக்கொண்டு இயங்கும், பயங்கரவாதம் குறித்த ஆய்வாளரான ரொஹான் குணரட்ணவின் கருத்துக்கள் சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது. இலங்கை அரசின் நிகழ்ச்சிநிரலின் கீள் இவர் செயல்படுவதாக மீண்டும் செய்திகள் பரவியிருக்கின்றன.

தமிழீழத்தின் பிரபல பாடகர் சாந்தன் விடுதலை.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகர் சாந்தன் படையினரால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அரசின் புனர்வாழவு வழங்கும் திட்டத்தின் கீழ் இவர் வவுனியா மாவட்டத்தில் உள்ள தர்மபுரம் புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.இலங்கையின் பிரபல திரைப்பட இயக்குநர் ஒருவர் அரசு-புலிகளுக்கு இடையிலான யுத்தத்தை மையப்படுத்தி பிரமாண்டமான முறையில் திரைப்படம் ஒன்றை இயக்க உள்ளார். அவர் அப்படத்தில் புலிகள் இயக்கத்தின் கலைஞர்களையும் இணைத்துக் கொள்ளத் திட்டம் இட்டுள்ளார்.இதற்காக அவர் அண்மையில் தர்மபுரம் புனர்வாழ்வு முகாமுக்கு நேரில் சென்றிருந்தார். அவர் அங்கு புலிகள் இயக்கத்தின் கலைஞர்களைச் சந்தித்து உரையாடினார். அவரின் சிபாரிசின் பேரில் சாந்தன் உட்பட சில கலைஞர்கள் இத்திரைப்படத்தில் பணியாற்றும் பொருட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

மலேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவிப்பு!


மலேசிய கடல் பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த 75 ஈழத்தமிழர்களை (பெண்கள், குழந்தைகள் உள்பட) பினாங்கு கடற்கரைக்கு மலேசிய கடற்படை அழைத்து வந்தது.
எங்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் நாடுகளுக்கு அனுப்பி வைக்கும்படி 75 ஈழத்தமிழர்களும் மலேசிய அரசை கேட்டுக்கொண்டனர்.
இதை முதலில் எற்றுக்கொண்ட மலேசிய அரசாங்கம், பிறகு ஏற்க மறுத்ததால் கப்பலை விட்டு இறங்காமல் 2 நாள் பழுதடைந்த கப்பலிலேயே இருந்தனர். மீறி எங்களை இறக்க முயற்சி செய்தால் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வோம் என்றும் அறிவித்தனர்.
இதையடுத்து, பினாங்கு துணை முதல்வர் ராமசாமி இவர்களின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சமாதானம் செய்து கரைக்கு அழைத்து வந்தார்.
அதன்பிறகு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என தனித்தனி முகாம்களில் அடைக்கப்பட்டனர். பெண்கள், குழந்தைகள் நிலை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து பல்வேறு அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்தும் முகாம்களை விட்டு வெளியே அனுப்பவில்லை என்று முகாமில் உள்ள 67 ஆண்கள் கூறினர்.
இப்போது தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி 67 ஆண்கள் மட்டும் நாளை (25.05.2010) முதல் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

இந்திய திரைப்பட விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் போராட்டம்!




இனப்படுகொலை செய்த நாடான இலங்கையில் இந்திய திரைப்பட சங்கமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும் இணைந்து நடத்தும் கலைச் சேவை மற்றும் வணிக ஒப்பந்தங்களை கண்டித்து பெங்களுரு மகாத்மா காந்தி சாலையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேவ் தமிழ் பெங்களூரு கிளை தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் மற்றும் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கமும் இணைந்து நடத்திய இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இன உணர்வாளர்கள் கலந்து கொண்டு இனப்படுகொலையை மறைக்கும் இந்தி(ய) திரைப்பட உலகம் மற்றும் இந்திய முதலாளிகள் சம்மேளனத்திற்க்கும் தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. இராசன் (தலைவர் .க‌ர்நாட‌க தமிழ் மக்கள் இயக்கம்), திரு.பாலன் (கர்நாடக உயர் நீதி மன்ற வழக்கறிஞர்), திரு. சிவ சுந்தர் (கன்னட ஊடகவியலாளர்) ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர். ஆர்ப்பாட்ட‌ நிக‌ழ்வில் ஊட‌க‌விய‌ளால‌ர் திரு.சிவ‌ சுந்த‌ர் , உல‌க‌ ஊட‌க‌வியாள‌ர்க‌ள் இல‌ங்கை அர‌சின் போர்குற்ற‌த்தை வெளிக்கொண‌ரும் இவ்வேளையில் இந்திய‌ திரைப்ப‌ட‌ விருது வ‌ழ‌ங்கும் விழாவை கொழும்பில் ந‌ட‌த்துவ‌த‌ன் மூல‌ம் இன‌வெறி பிடித்த‌ இல‌ங்கை அர‌சை, ந‌ல்ல‌ர‌சு என்று ந‌ற்சான்றித‌ழ் வ‌ழ‌ங்கும் முய‌ற்சியில் இந்திய‌ அர‌சு ஈடுப‌ட்டுள்ளது என்றும், த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌ ஆயுத‌ங்க‌ளை அப்பாவி த‌மிழ‌ர்க‌ளின் மீது பிர‌யோகித்து கொன்று குவித்த‌ இன‌வெறி அர‌சுட‌ன் இந்திய‌ அர‌சு கொண்டுள்ள‌ உற‌வான‌து, இந்திய‌ர்க‌ளும் த‌மிழ‌ன ப‌டுகொலையில் ப‌ங்கேற்ற‌தாக‌ பொருள் கொள்ளவும், இந்தியர்கள் அனைவரது கரங்களிலும் த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்த‌க்க‌றை ப‌டிந்துள்ள‌து எனவும் கூறினார்.
தொட‌ர்ந்து பேசிய வழக்கறிஞர் பால‌ன் அவ‌ர்க‌ள், கொள்ளை அடிப்ப‌தும், கொன்றொழிப்ப‌தும் ஏகாதிப‌த்திய‌த்தின் கொள்கைக‌ளாக‌ உள்ள‌ன‌. இந்திய‌ ஏகாதிப‌த்திய‌ம் ப‌சுமை வேட்டை என்ற‌ பெய‌ரில் ப‌ழ‌ங்குடி ம‌க்கள் வாழும் நில‌ப்ப‌ர‌ப்பில் உள்ள‌ வ‌ள‌ங்க‌ளை கொள்ளை அடிக்க‌, அங்குள்ள‌ ம‌க்க‌ள‌னைவ‌ரையும் ந‌க்ச‌ல்க‌ள் என்ற‌ போர்வையின் கீழ் கொன்ற‌ழிப்ப‌தை போல‌, த‌மிழ‌ர் நில‌ங்க‌ளை இந்திய‌ வ‌ர்த்த‌க‌ முத‌லாளிக‌ள் கொள்ளை அடிக்க‌ இன‌வெறி சிங்க‌ள‌ அர‌சுட‌ன் சேர்ந்து இந்திய‌ ஏகாதிப‌த்திய‌ம் இணைந்து அங்கு வாழ்ந்த‌ த‌மிழ‌ர்களை தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்தி கொன்று குவித்த‌ன‌ர்.
உல‌க‌ அர‌ங்கில் இல‌ங்கையின் போர் குற்ற‌ம் வெளிப்ப‌ட்டால் இந்தியாவின் கூட்டு ச‌தியும் வெளிவ‌ருமென்ற‌ அச்ச‌த்தில் இந்திய‌ ஏகாதிப‌த்திய‌த்தின் கைக்கூலிக‌ளான‌ திரை உல‌கின் உத‌வியுட‌ன் இல‌ங்கையில் அமைதி நில‌வுவ‌தாக‌ ஒரு பொய் தோற்ற‌த்தை ஏற்ப‌டுத்த‌ முனைகிறார்க‌ள் என‌க் கூறினார்.
அத‌ன் பிற‌கு பேசிய‌ க‌ர்நாட‌க‌ த‌மிழ் ம‌க்க‌ள் இய‌க்க‌ த‌லைவ‌ர் இராச‌ன், அப்பாவி த‌மிழ் பெண்க‌ள், குழ‌ந்தைக‌ள் என‌ப் பாராம‌ல் ந‌ச்சுக் குண்டுக‌ள் வீசி கொலை செய்த‌ கொடும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளை புற‌க்க‌ணிக்க‌ வேண்டிய‌து த‌மிழ‌ர்க‌ள் மாத்திர‌ம‌ல்ல‌ மாந்த‌ நேய‌ம் உள்ள‌ அனைவரது க‌டமையாகும். உல‌க‌த்தாரிடமிருந்து சிங்க‌ள‌வ‌ர்க‌ள் செய்த‌ இன‌ப்ப‌டுகொலையை ம‌றைக்க‌ முனையும் இந்திய‌ அர‌சு இந்திய‌ திரைப்ப‌ட‌ துறையின் மூல‌ம், அவ‌ர்க‌ளின் விருது வ‌ழ‌ங்கும் விழாவை கொழும்பில் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ஏற்பாடு செய்துள்ள‌து.
அதே போல உல‌கெங்கிலும் உள்ள‌ த‌மிழ‌ர்களிடமிருந்து மே மாத‌த்தில் ந‌டைபெற்ற‌ இன‌ப்ப‌டுகொலையை ம‌ற‌க்க‌டிக்க‌ இன‌த்துரோகி க‌ருணாநிதியின் த‌லைமையில் செம்மொழி மாநாடு ந‌டைபெறுகின்ற‌து. உல‌க‌ங்கிலும் வாழ‌க்கூடிய‌ த‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கையை புற‌க்க‌ணிக்கும் அதே வேளையில், துரோகிக‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌டும் செம்மொழி விழாவையும்,விருது வ‌ழ‌ங்கும் விழாவில் ப‌ங்கு கொள்ளும் திரை உல‌கின‌ரையும் புற‌க்க‌ணிக்க‌ வேண்டும் என‌க் கூறினார். மேலும் நிக‌ழ்வில் கீழ்காணும் கோரிக்கைக‌ள் வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌‌.
1. விருது வ‌ழ‌ங்கும் விழாவின் இட‌த்தை மாற்று
2. இந்திய‌ முத‌லாளிக‌ள் சம்மேள‌ன‌மே, இன‌ப்ப‌டுகொலை ந‌ட‌ந்த‌ நாட்டோடு வ‌ர்த்த‌க‌ உற‌வு கொள்ளாதே
3. கமல்ஹாசன் அவர்களே இன‌ப்ப‌டுகொலை செய்த‌ நாட்டோடு வ‌ர்த்த‌க‌ உற‌வு கொண்டுள்ள‌ FICCI யின் பொழுதுபோக்கு துறைத் த‌லைமை ப‌த‌வியிலிருந்து வில‌குங்க‌ள்.
4. அமிதாப் ம‌ற்றும் ச‌ல்மான் கான் அவ‌ர்க‌ளே த‌மிழ‌ர் இர‌த்த‌க்க‌றை ப‌டிந்த‌ இல‌ங்கையில் ந‌டைபெறும் விருது வ‌ழ‌ங்கும் விழாவை புற‌க்க‌ணியுங்க‌ள்.
5. மாந்த‌ நேய‌முள்ள‌ ச‌மூக‌மே போர்குற்ற‌ம் புரிந்த‌ இல‌ங்கை புற‌க்க‌ணியுங்க‌ள்.

லண்டனில் நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் நினைவு வணக்க நிகழ்வு!








பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவாகவும், பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாகவும், மே மாதத்தில் வீரச்சாவை தழுவிக்கொண்ட அனைத்து மாவீரர்களுக்காகவும் 23-05-2010 அன்று லண்டனில் வணக்க நிகழ்வு இடம்பெற்றது.
வடமேற்கு லண்டனில் உள்ள ரைய்சிலிப் பகுதியில் உள்ள ஹவாட் ஹவுஸ் மண்டபத்தில் இந்த நினைவு வணக்க நிகழ்வு நடைபெற்றது.
23-05-2010 ஞாயிறு மாலை 8:00மணிக்கு ஆரம்பமான இந்த நினைவு வணக்க நிகழ்வில் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினருமான திரு. சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தி அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் நினைவுருவப்படத்திற்கு மலர்மாலையினை அணிவித்தார்.
அதனைத்தொடர்ந்து லெப்ரினன்ட் கேணல் சிரித்திரனின் சகோதரியான சிவமலர் கோகேஸ்வரன் அவர்கள் பிரிகேடியர் சொர்ணம் அவர்களின் நினைவுருவப் படத்திற்கு மலர்மாலையினை அணிவித்தார்.
மலர்மாலை அணிவிப்பை அடுத்து இதுவரை காலமும் போரினால் கொல்லப்பட்ட மக்களுக்கும், மாவீரர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தை தொடர்ந்து மக்கள் வரிசையாக சென்று மலர் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் கவிஞர் ராஜமனோகரன் அவர்களின் உரையும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரித்தானிய பிரதிநிதி திரு. ஜெயானந்தமூர்த்தி அவர்களின் உரையும் இடம்பெற்றது. அத்தோடு பிரிகேடியர் பால்ராஜ் நினைவுப் பாடலும், கவிதைகளும் இடம்பெற்றன.
பிரித்தானிய ஐக்கிய செயற்பாட்டுக் குழுவினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நினைவுவணக்க நிகழ்வில் பெருமளவான மக்கள் வந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

23 மே 2010

இரத்தினபுரியில் கைக்குண்டுத் தாக்குதல்!


இரத்தினபுரி மாவட்டத்தின் இறக்குவாணை டெல்வின் தோட்டப்பிரிவில் சற்று முன்னர் கைக்குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது,டெல்வின் தோட்டப்பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களுல் 2 பெண்கள் , 2 சிறுவர்கள் , 6 இளைஞர்கள் உள்ளனர். இதேவேளை காயமடைந்தவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுல் 3 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.இக் கைக்குண்டு தாக்குதல் தனிப்பட்ட காரணங்களுக்காக இடம்பெற்றிருக்கிறது என பொலிஸார் தெரிவித்தனர், இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் இறக்குவாணை பொலிஸார் தெரிவித்தனர்.

வன்னியில் அடை மழை,மக்கள் பெரும் அவதி!


வன்னிப் பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக மீளக் குடி யேறியுள்ள மக்கள் பெரும்பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். வன்னியில் நடைபெற்ற போரின் காரணமாக தங்களின் வீடுகளை இழந்த மக்கள் மீளக்குடியேறி சிறு கூடாரங்களை அமைத்துக் கொண்டே இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்..இந்த நிலையில் சீரற்ற காலநிலை காரண மாகப் பெய்து வரும் பெருமழையினாலும் காற்றினாலும் இந்த மக்கள் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். கிளிநொச்சி மாவட்ட மக்களே இந்த மழையினால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள் ளனர். இம் மாவட்டத்தில் மீளக்குடியேறிய மக்களில் 90 வீதமானவர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலகத் தைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித் தார். பலமாக வீசிய காற்றினால் கூரைகளும் கூடாரங்களும் சேதமாகியதால் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட எந்த உடமைகளையும் பாதுகாக்க முடியாத நிலையில் பெரும் அவலங்களைச் சந்தித்துள்ளனர். தப்பிப் பிழைத்த ஆவணங்களைக் கூட தங்களால் பாதுகாக்க முடியாமலிருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர். .தங்களுடைய கூடாரங்களுக்குள் தங்க முடி யாத மக்கள் படையினரால் கைவிடப்பட்ட காவலரண்களுக்குள் தஞ்சமடைந்து பாதுகாப் புத் தேடியுள்ளனர். இரவு நேரங்களில் தூங்க முடியாமல் எழுந்து இருக்கும் நிலையே தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாக இந்த மக்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளத்தினாலும் காற்றினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதேச செயலர்கள் பார்வை யிட்டு அவசர உதவிகளைச் செய்து வருகின் றனர். பாதிக்கப்பட்ட மக்களை ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார், தமிழத்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் ஆகியோரும் பார்வை யிட்டுள்ளனர்.

தலிபான்களின் போர்த்திறனால் திண்டாடுகிறது அமெரிக்கா!


என்​ன​தான் வல்​ல​ர​சாக இருந்​தா​லும் உல​குக்கே வழி​காட்​டும் அறி​வி​யல் ஆசா​னாக இருந்​தா​லும் போர்த்​தி​றம் என்​பது ரத்​தத்​தில் ஊறி வர வேண்​டுமே தவிர போர்க்​க​ருவி மூலம் அல்ல என்​பதை ஆப்​கா​னிஸ்​தா​னம் அமெ​ரிக்​கா​வுக்கு உணர்த்​தி​விட்​டது.​​ ஆப்​கா​னிஸ்​தா​னில் கடந்த சில ஆண்​டு​க​ளா​கவே தங்கி சண்டை போட்​டு​வ​ரும் அமெ​ரிக்​கா​வுக்கு,​​ இந்​தத் தலி​பான்​களை நம்​மால் அடக்​கவே முடி​ய​வில்​லையே ஏன் என்ற கேள்வி மண்​டை​யைக் குடைந்து கொண்​டி​ருந்​தது.​​ அமெ​ரிக்க ராணு​வத்​தின் ஆய்​வுப் பிரிவு களத்​தில் சென்று செய்த சில ஆய்​வு​க​ளுக்​குப் பிற​கு​தான் கோளாறு எங்கே என்று தெரி​ய​வந்​தது.​​ அமெ​ரிக்கா இப்​போது எம்-​4 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​து​கி​றது.​ இது மிக​வும் நவீ​ன​மான துப்​பாக்கி என்​ப​தில் சந்​தே​கமே இல்லை.​ 5.56 மில்லி மீட்​டர் குறுக்​க​ள​வுள்ள குண்​டு​கள் இதில் பயன்​ப​டுத்​தப்​ப​டு​கின்​றன.​ ​​ வியத்​நாம் போரில் பயன்​ப​டுத்​திய எம்-​16 ரக துப்​பாக்​கியை மேம்​ப​டுத்தி,​​ நவீ​னப்​ப​டுத்​தி​ய​தன் மூலம்​தான் எம்-​4 உரு​வாக்​கப்​பட்​டது.​ அப்​ப​டி​யி​ருந்​தும் இது பயன் தரா​மல் இருப்​பது ஏன் என்று ஆய்​வுக்​குழு இப்​போது கண்​டு​பி​டித்​து​விட்​டது.​​ தலி​பான்​கள் நவீன துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​தா​மல்,​​ இன்​னும் பழை​ய​கால துப்​பாக்​கி​க​ளையே பயன்​ப​டுத்​து​கின்​ற​னர்.​ முதல் கார​ணம்,​​ புதிய துப்​பாக்​கி​க​ளுக்கு நிறைய செல​வ​ழிக்க வேண்​டும்.​ அடுத்து,​​ பழைய துப்​பாக்​கி​க​ளைக் கையாண்ட அனு​ப​வம் தரும் நம்​பிக்கை கார​ண​மாக துப்​பாக்​கியை மாற்​றிக்​கொள்ள அவர்​கள் விரும்​ப​வில்லை.​ மூன்​றா​வ​தாக,​​ தங்​க​ளு​டைய எதி​ரி​களை அடை​யா​ளம் கண்டு சுட்டு வீழ்த்த பழைய துப்​பாக்​கி​களே தலி​பான்​க​ளுக்​குப் போது​மா​ன​தாக இருக்​கின்​றன.​​ அமெ​ரிக்கா பயன்​ப​டுத்​தும் எம்.-​4 ரக நவீன துப்​பாக்​கி​கள் சில நிமி​ஷங்​க​ளுக்​கெல்​லாம் ஏரா​ள​மான குண்​டு​களை துரி​த​க​தி​யில் உமிழ்ந்​து​வி​டு​கின்​றன.​ இந்​தத் துப்​பாக்கி வியத்​நா​மி​லும் இராக்​கி​லும் ஓர​ள​வுக்​குப் பலன் தந்​த​தற்​குக் கார​ணமே எதி​ரி​கள் நகர்ப்​பு​றங்​க​ளில்,​​ மிக அரு​கில் வந்து சிக்​கி​ய​து​தான்.​ வியத்​நா​மில் நக​ரங்​க​ளி​லும் காடு​க​ளி​லும் எதி​ரி​களை மிக நெருக்​க​மாக சந்​தித்து சுட்​ட​னர்.​ எனவே இந்​தத் துப்​பாக்​கி​க​ளின் கொல்​(லும்)​திறன் கூடு​த​லாக இருந்​தது.​​ இராக்​கில் பாக்​தாத்,​​ ரமாடி,​​ பலூஜா போன்ற நக​ரங்​க​ளில்​தான் அமெ​ரிக்​கப் படை​கள் அதி​கம் சுட்​டன.​ அங்​கெல்​லாம் எதி​ரி​கள் மிக அரு​கில் வந்து துப்​பாக்​கிக் குண்​டு​களை வாங்​கிக் கொண்​ட​னர்.​​ ஆப்​கா​னிஸ்​தா​னமோ மலைப் பாங்​கான பகுதி.​ இங்கே தலி​பான்​க​ளைப் பார்த்து அமெ​ரிக்க வீரர்​கள் சுட்​ட​துமே அந்த குண்​டு​கள் சீறிப்​பாய்ந்​தா​லும் எதி​ரி​கள் இருக்​கு​மி​டம் அரு​கில் செல்​லும் போது வேகம் குறைந்து,​​ இலக்கி​லி​ருந்து விலகி தாக்​கு​வ​தால் தாக்​கு​த​லுக்கே வலு​வில்​லா​மல் போய்​வி​டு​கி​றது.​​ தலி​பான்​கள் அமெ​ரிக்க வீரர்​கள் வரு​வ​தைக் கவ​னிக்​கா​மல் எங்​கா​வது பார்த்​துக் கொண்​டும்,​​ போய்க்​கொண்​டும் ​ இருந்​தா​லும் அமெ​ரிக்க துப்​பாக்​கி​க​ளின் சத்​தம் அவர்​களை உஷார்​ப​டுத்​தி​வி​டு​கி​றது.​ அத்​து​டன் அந்த குண்​டு​கள் வலு​வில்​லா​மல் இருப்​ப​தால் சாதா​ரண தடுப்​பு​கள் மூலமே தலி​பான்​கள் அடி​ப​டா​மல் தப்பி விடு​கின்​ற​னர்.​ அதே சம​யம் அவர்​கள் வைத்​துள்ள பழ​மை​யான துப்​பாக்​கி​கள் 2,000 அடி முதல் 2,500 அடி வரை​யுள்ள இலக்​கு​க​ளைக்​கூட ஊடு​ரு​விச் செல்​லக்​கூ​டி​யவை.​ எனவே தலி​பான்​கள் திருப்​பிச்​சுட்​டால் அந்த குண்​டு​கள் அமெ​ரிக்க வீரர்​கள் மீதும் அவர்​க​ளு​டன் செல்​லும் இதர வீரர்​கள் மீதும் பாய்ந்து பலத்த சேதத்தை ஏற்​ப​டுத்​து​கின்​றன.​​ இந்த ஆய்வு கார​ண​மாக துப்​பாக்​கி​களை மாற்​றிக்​கொள்ள அமெ​ரிக்க ராணு​வத் தலைமை முடிவு செய்​தி​ருக்​கி​றது.​ அத்​து​டன் தன்​னு​டைய எல்லா படைப்​பி​ரி​வு​க​ளி​லும் குறி​பார்த்​துச் சுடும் திற​மை​யுள்ள வீரர்​கள் 10 அல்​லது 12 பேரை குழு​வாக நிய​மித்​துக் கொண்டு,​​ தலி​பான்​கள் பயன்​ப​டுத்​து​வ​தைப் போன்ற பழைய,​​ அதே சம​யம் வலு​வான துப்​பாக்​கி​களை அவர்​க​ளி​டம் தந்து தலி​பான்​க​ளுக்கு ஈடு கொடுக்க அமெ​ரிக்கா முடிவு செய்​தி​ருக்​கி​றது.​​ ஆப்​கா​னிஸ்​தா​னர்​களை முத​லில் அடக்க முற்​பட்ட பிரிட்​டி​ஷார் ​(1832-1842) பிரெüன் பெஸ் ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​தி​னர்.​ ஆப்​கா​னிஸ்​தா​னி​யர்​களோ ஜெசைல் பிளிண்ட்​லாக்ஸ் என்​கிற பழைய ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்தி அவர்​க​ளு​டைய தாக்​கு​தல்​களை முறி​ய​டித்​த​னர்.​​ 1980-களில் சோவி​யத் யூனி​ய​னைச் சேர்ந்த ராணுவ வீரர்​கள் ஏ.கே.​ 47 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்​திப் பார்த்​த​னர்.​ ஆப்​கா​னிஸ்​தா​னி​யர்​கள் இரண்​டா​வது உல​கப் போரில் பயன்​ப​டுத்​தப்​பட்ட லீ-​என்​ஃ​பீல்டு ரக துப்​பாக்​கி​க​ளைக் கொண்டே அவர்​களை முறி​ய​டித்​த​னர்.​ இந்த ரக துப்​பாக்​கி​யில் பெரிய லீவ​ரும் போல்​டும் இருக்​கும்.​​ இப்​போது அமெ​ரிக்கா எம்.​ 4 ரக துப்​பாக்​கி​க​ளுக்​குப் பதி​லாக எம் 110 ரக துப்​பாக்​கி​க​ளைப் பயன்​ப​டுத்த முடிவு செய்​தி​ருக்​கி​றது.​ இவை 2,500 அடி தொலை​வு​வரை பாய்ந்து இலக்​கு​களை நாசப்​ப​டுத்​தும்.​​ ஆப்​கா​னிஸ்​தா​னிய தலி​பான்​கள் போர்த் திறத்​தைத் தங்​க​ளு​டைய மூதா​தை​யர்​க​ளி​ட​மி​ருந்து பெற்​றி​ருப்​ப​தால்,​​ காலத்​துக்​கேற்ற நவீன ரகங்​களை நாடா​மல்,​​ போர்க்​க​ளத்​துக்​கேற்ற நம்​ப​க​மான துப்​பாக்​கி​க​ளையே பயன்​ப​டுத்தி வரு​கின்​ற​னர்.

22 மே 2010

கோரமாக கொல்லப்பட்ட போராளி நாரந்தனையை சேர்ந்தவர்!


சிங்கள படைகளின் கோர வெறி தாண்டவத்தில் வதைகள் செய்யப்பட்டு கோரமாக வெட்டி கொலை செய்யபட்ட இந்த போராளியின் விபரம் நமக்கு கிடைக்க பெற்றுள்ளது .யாழ்ப்பாணம் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் கட்டு பாட்டுக்குள் இருந்த காலபகுதியில் இவரது சிறுவயதில் விடுதலைப்புலிகளின் பராமரிப்பில் இருந்து வந்த சிறார் செஞ்சோலையில் இணைந்து கல்வி கற்று வந்தார் .அதன் பின் 1995காலபகுதியில் இலங்கை படைகள் யாழை அபகரிக்க,அங்கிருந்து வன்னி சென்ற இவர் தமிழ் ஈழ விடுதலை புலிகள் இயக்கத்தில் பயிற்சி பெற்று போராளியானார்,முல்லை கலை பண்பாட்டு கழகத்தில் இணைந்து மக்கள் விழிப்புணர்வை ஊட்டும் தெரு வீதி நாடகங்களில் நாடக கலையனாக சிறப்பு பெற்று விளங்கினார்.மக்கள் மத்தியில் மிகவும் சிறப்பு பெற்றவராக இவர் விளங்கினார்.பின்னர் ரணில் விடுதலை புலிகளுக்கிடையில் உருவான இரண்டாயிரத்து இரண்டாமாண்டு சமாதான காலப்பகுதியில் வவுனியா செட்டிக்குள பகுதிக்கு அரசியல் துறை பொறுப்பாளராக நியமிக்க பட்டு அரசியல் போராளியாக பணியாற்றி வந்தார் .அந்த பகுதியில் மக்களின் நம்பிக்கைக்கு உரியவராக மக்களின் கஷ்டங்களில் பங்கெடுத்த போராளியான இவரது சொந்த ஊர் தீவு பகுதிகளில் ஒன்றான நாரந்தனை .இவரது சகோதரன் ஒருவர் மாவீரன் மற்றொருவர் நாட்டு பற்றாளர்,ஒரு கால பகுதியில் நடந்து முடிந்த இறுதி யுத்தத்தில் சிங்கள படைகளால் கைது செய்ய பட்ட இவர் கோரமாக வதை செய்ய பட்டு தென்னை மரத்துடன் கட்டி வைக்க பட்டு உடல் பாகம் எங்கினும் வெட்டு காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் கழுத்தை வெட்டி கொலை செய்துள்ளது சிங்கள படைகள் .கடற்படை மற்றும் தரைப்படைகள் விடுதலை புலிகளிடம் சிறை பிடிக்கபட்ட போது அவர்களை புலிகள் சிறப்பாக பராமரித்து விடுதலை செய்தனர் .ஆனால் இங்கே இந்த போராளிக்கு நடை பெற்ற இந்த கோர சம்பவம் போராளிகளையும் மக்களையும் வெகுவாக பாதித்துள்ளதோடு மீண்டும் தமிழ் பேசும் மக்கள் ஆயுதம் எடுத்து போராட வேண்டிய ஒரு நிலையை இவை உருவாக்கும் என இவர் அருகில் இருந்த முன்னால் போராளி ஒருவர் இந்த தகவலை நமக்கு தெரிவித்துள்ளார் .விதையாய் வீழ்ந்த ஆயிரம் ஆயிரம் போராளிகள் வரிசையில் நீயும் விதையானாய் .உனக்கு எங்கள் வீர வணக்கம் .

வன்னி மக்கள் பெரும் அவல வாழ்க்கை வாழ்கின்றனர்!செல்வம் அடைக்கலநாதன்.


சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் வன்னி மக்கள் தொடர்ந்தும் கூடாரங்களுக்குள்ளேயே வாழ்ந்து வருகின்றனர். அகதிகளாகவே காலத்தை ஓட்டும் நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளமை கவலையளிக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு நேற்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டு அங்கு மீள்குடியேற்றப்பட்ட மக்களைச் சந்தித்து அவர்களது குறைநிறைகளைக் கேட்டறிந்து கொண்டது. இது தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே செல்வம் அடைக்கலநாதன். மேற்கண்டவாறு கவலை வெளியிட்டார்.
கூட்டமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரும், திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தலைமையில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராஜா வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட கூட்டமைப்பின் குழுவினர் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தனர்.
நேற்றுக்காலை 10.00 மணி முதல் மாலைவரை இடம்பெற்ற இந்த மக்கள் சந்திப்பின்போது, முல்லைத்தீவின் ஒட்டுசுட்டான், நெடுங்கேணி, ஒழுமடு, மதியாமடு, வற்றாப்பளை, வன்னி விளாங்குளம் மற்றும் முல்லைத்தீவு நகர் உள்ளிட்ட பிரதேசங்களுக்குச் சென்ற மேற்படி நாடாளுமன்ற குழுவினர், அவர்களது குறை, நிறைகள் மற்றும் தேவைகள் குறித்து அறிந்து கெண்டதாகவும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் விபரிக்கையில்,
“யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அகதி வாழ்க்கை அனுபவித்த எமது மக்கள் தற்போது மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த மீள்குடியேற்றமானது பொருத்தமற்றதாகவே அமைந்துள்ளது. அதாவது இடம்பெயர்ந்த நிலையில் எவ்வாறு அகதிகளாக கூடாரங்களில் காலத்தைக் கடத்தினார்களோ அதேவகையில்தான் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தற்போதும் கூடாரங்களில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
பாரிய அவலத்தில் மக்கள்
இவர்களுக்கான அடிப்படைவசதிகள் எனும் போது அது பாரிய அவலத்துக்குரியதாக காணப்படுகின்றன. வடிகாலமைப்புக்கள், போக்குவரத்துக்கள், சுகாதார வசதிகள் பாடசாலைகள் எனும்போது எந்த நிறைவுகளும் காணப்படவில்லை. அநேகமாக மரநிழல்களிலேயே பாடசாலைகள் நடத்தப்படுகின்றன.
நீண்ட தூரங்களை நடைபயணமாகவே சென்றடைய வேண்டியுள்ளது.மழை பெய்கின்ற போது இந்த நிலைமை வெகுவாக மோசமடையும் நிலையும் காணப்படுகின்றது.
சொந்த இடங்களில் குடியேறி விட்டோம் என்ற மகிழ்ச்சியை அவர்களிடத்தில் காண முடிகின்ற போதிலும், சொந்த வீடுகள் இல்லை என்பதையும் அதனை அமைத்துக் கொள்வதற்கான வாய்ப்புக்கள் இல்லையென்பதை கூறி அவர்கள் துன்பப்படுவதையும் உணரக் கூடியதாக இருக்கின்றது.
மாணவர்களுக்கான பாடநூல்கள் ஓரளவு கிடைத்துள்ளதாக மாணவர்கள் கூறுகின்றனர். ஏனைய வசதிகள் குறித்து அவர்களிடத்திலும் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடத்திலும் ஏக்கமே காணப்படுகின்றது.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா நிவாரண நிதியைக் கொண்டு ஒருசிலர் சிறு சிறு தொழில்களை ஏற்படுத்திக் கொண்ட போதிலும் பெரும்பாலோர் கஷ்டப்படுகின்றனர்.
வருமானத்தை ஈட்டிக் கொள்ளும் வகையிலான தொழில்கள் அவர்களுக்கு இல்லை. இங்கு பெரும்பாலும் விவசாயமே தங்களது ஜீவனோபாய தொழிலாகக் கருதப்படுகின்ற நிலையில் அதனை மேற்கொள்வதற்கான மூலப்பொருள்களையும் வளங்களையும் பெற்றுக் கொள்வதில் பெரிதும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
தடுப்பு முகாமில் பிள்ளைகள் : பெற்றோர் வேதனை
இன்னும் பல பெற்றோர் தமது பிள்ளைகள் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கண்ணீர்மல்க தெரிவித்ததுடன் அவர்களை மீட்டுத் தருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டனர்.
மொத்தத்தில் யுத்தம் நிறைவடைந்து ஒருவருடம் பூர்த்தியாகிவிட்டபோதிலும் அதனால் பாதிக்கப்பட்ட எமது மக்கள் இன்னும் மீட்சியடையாதிருப்பதும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாதிருப்பதும் பெரும் கவலைக்கிடமானதாகும்.
மீள்குடியேற்றம் என்பது நியாயமானதாக அமையவில்லை. எமது மக்கள் தொடர்ந்தும் துன்பம் அனுபவிக்கின்றனர். வசதிகள் வாய்ப்புக்கள் இல்லாது துன்பப்படுகின்றனர்.
இந்த நிலைமைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்வாங்கிக்கொண்டுள்ளதுடன் அதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க விருக்கின்றது. எமது சமூகத்தின் இன்னல்களை தீர்க்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. வடக்கின் மீள்குடியேற்றப் பிரதேச மக்களுடனான சந்திப்பு தொடரும் என்பதுடன் அவர்களது குறைபாடுகளையும் வெளிக்கொணர அர்ப்பணிப்புடன் செயற்படும்” என்றார்.

மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள கோரமான புகைப்படங்கள் போலி என்கிறது சிங்களம்!




மனித உரிமை கண்காணிப்பகம் உலகம் முழுவதிலும் விநியோகம் செய்துள்ள போர்க்குற்றக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் அனைத்தும் போலியானவை என திவயின என்னும் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் படையினர் தமிழ் இளைஞர்களை தென்னைமரத்துடன் கட்டிவைத்து கத்தியால் குத்தி கோரப்படுகொலைகளை மேற்கொள்வதாக சித்தரிக்கக் கூடிய 200 புகைப்படங்களை மனித உரிமை கண்காணிப்பகம் சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கியுள்ளது.
எனினும், போர்க் குற்றங்கள் தொடர்பாக முன்வைக்கப்படும் ஆதாரங்களை தொடர்ந்து நிராகரித்து வரும் இலங்கை அரசு, ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்ற மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களையும் வழமைபோல நிராகரித்துள்ளது.
இந்த புகைப்படங்கள் போலியானவை என இலங்கை அரசாங்கம் கண்டு பிடித்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இந்தப் புகைப்படங்களை வழங்கிய தரப்பினரை இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் அடையாளம் கண்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கையின் வான் படையினரே பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதாக இந்தப் புகைப்படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ளது. என திவயின என்னும் சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

21 மே 2010

நாடு கடந்தும் தொடரும் துரோகத்தனம்!


2009 மே மாதம் சர்வதேச நாடுகளின் உதவிகளுடன் குறிப்பாக இந்தியாவின் மேற்பார்வையில் புலிகள் அழிக்கப்பட்டனர் என்பது எல்லோராலும் அறியப்பட்ட விடயம் இருப்பினும் தலைவர் பிரபாகரன் பொட்டு அம்மான் மேலும் ஒரு சிலரின் விபரங்கள் குறித்து சர்வதேசம் குழப்பமாகவே உள்ளது.குறிப்பாக இந்திய புலனாய்வு அமைப்பான றோ பல மட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது திம்பு பேச்சுவார்த்தை காலத்திலிருந்தே புலிகள் அமைப்பு மற்ற இயக்கங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் ஒழுக்கத்திலும் வளர்ச்சியிலும் வியக்கும் வகையில் இருந்தது இதனை அவதானித்த றோ வட பிராந்தியத்தில் ஆயுத பலம்மிக்க அமைப்பான புலிகள் வளர்ந்து வருவதை விரும்பவில்லை அல்லது தனது கைப் பொம்மையாக்கி வைப்பதில் முனைப்புக் காட்டி பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்வி கண்டது இறுதியில் அதன் முயற்சியின் பலனாக (கோ. மகேந்திரராசா) மாத்தையாவை அவரின் பலவீனத்தை பயன்படுத்தி தனது பக்கம் இழுத்து நகர்வுகளை செய்தது. பொடடு அம்மானின் பார்வை முன் றோவின் புலனாய்வு வலையமைப்பு துடைத்தெறியப்பட்டது மாத்தையாவுக்கு ஆதரவாக இருந்த பலர் இனங்காணப்பட்டு புலிகள் அமைபிலிருந்து விலக்கப்பட்டனர்.இதில் சாவகச்சேரியைச் சேர்ந்த ரவி (ஸ்ராலின்) என்பவரும் அடங்குவர் இவர் தற்போது இந்தியாவில் ஈழத்தமிழர் செறிந்து வாழும் பகுதியான வளசரவாக்கம் என்னுமிடத்தில் இருந்து முன்னாள் புலிகளையும் மற்றும் ஆதரவாளர்களையும் தமிழ் நாட்டில் புலிகள் முறியடிப்புப் பிரிவான qபிரிவு எனும் அமைப்புடன் இணைந்து காட்டிக் கொடுப்பில ஈடுபட்டுள்ளார். வெளிப்படையாகவே செயல்படும் இவர் பின்னர் விடுதலை செய்வதற்கு உதவுவது போல் நாடகமாடி பணம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது. வவுனியா தடுப்பு முகாமில் உள்ளவர்களை அங்குள்ள ஒட்டுக்குளுக்களின் உதவியுடன் வெளியில் எடுப்பதற்கு இந்தியாவில் உள்ள உறவினர்களிடம் பெருமளவு பணம் வாங்கி அவர்களை வெளியில் எடுப்பதை தொழிலாகவே செய்து வருகிறார். அடிப்படையிலேயே இவர் ஒழுக்கமற்றவர் இதனால் இவரின் மனைவி இவரை பிரிந்து வெளிநாட்டில் வாழ்ந்து வருகிறார் இரண்டாம் முறையாக திருமணம் செய்துள்ள இவர் ஒரு சில அரசியல் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து பணத்துக்காக துர்ப்பிரயோகங்களில் ஈடுபட்டு வருவதாக அனேகராலும் கூறப்படுகிறது.
செய்தி:எதிரி.கொம்

20 மே 2010

தமிழர் காதில் பூச்சுற்ற கருணாநிதி போடும் நாடகம் செம்மொழி மாநாடு!



தமிழ்நாட்டில் தமிழிலேயே படிக்காமல் மழலை முதல் உயர் கல்வி வரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம், தமிழே தெரியாமல் அண்டை மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலம் மொழி வழிகளிலேயே படிக்கிற வாய்ப்பு தமிழகத்தில் உள்ளது ஆனால், மருத்துவ படிப்பு மற்றும் உயர் கல்விகளே தமிழிலில் படிக்க வழியில்லை.
தமிழகத்தின் உயர் வழக்கு மன்றத்திற்கு மெட்ராஸ் உயர்நீதி மன்றம், என்றே பெயர் வைத்திருக்கிறார்கள் இன்னும் மாற்றவில்லை அதிலும் தமிழில் பேச தர்க்கமிட முடியாது.
தமிழக அரசு அலுவலகங்களில் கூட தமிழில் ஆட்சி நடைமுறைகள் முழுமையாக இல்லை. தமிழகத்தில் இருக்கிற இந்திய அரசு அலுவலகங்களில் தமிழகமே நுழைய முடியாது.
வங்கிகளில் தமிழ் இல்லை, வழிபாட்டில் தமிழ் இல்லை இவற்றையெல்லாம் தமிழில் கொண்டுவர வேண்டுமான முயற்சி திராவிட கட்சிகளிடம் இல்லை. முத்தமிழ் அறிஞர், ஐந்தமிழ் அறிஞர் என்று பெருமைப்பட்டுக் கொள்ளும் கருணாநிதிக்கு தமிழனைத் தமிழில் படிக்க வைக்க முடியவில்லை.
தில்லியில், மும்பையில் ஓடும் வண்டிகளில் இந்தியில் எண்கள் உள்ளன. கருநாடகத்தில் கன்னடத்தில் எண்கள், குஜராத்தில் குஜராத்திதியில் எண்கள், வங்காளத்தில் வங்காள மொழியில் எண்கள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தமிழில் எண்கள் எழுதினால் விதி மீறல் என்று சிறைப்படுத்துகிறது தமிழக அரசு.
தமிழினத் தலைவர் ஐந்து முறை முதலமைச்சராக தமிழகத்தை ஆட்சி செய்தும் தமிழை கல்வி மொழியாகவோ, அலுவல் மொழியாகவோ, ஆட்சி மொழியாகவோ நடைமுறைப்படுத்த இயலவில்லை என்றால் அவர் எதை நோக்கி மாநாடு அறிவிக்கிறார்.
செம்மொழி என்று இந்திய அரசு தமிழை ஏற்றிருப்பது சமஸ்கிருதத்திற்கு இணையாகக் கூட அல்ல.
ஆண்டுதோறும் சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஆயிரம் கோடி உருவாய் ஒதுக்குகிற இந்திய அரசு, தமிழ் வளர்ச்சிக்கு ஒரு கோடி மட்டும் ஒதுக்குகிறது என்பதை ஒப்பிட்டு பார்த்தால் தமிழ் எந்த அளவு இழிவுக்குள்ளாக்கப்படுகிறது என்பது தெரியும்.
தமிழக மக்களின் வாயை அடைப்பதற்கு தமிழைச் செம்மொழி என்கிற அறிவிப்பை ஒப்புக்கு இந்திய அரசு செய்திருக்கிறது என்றால், அதற்கு விழாச் சிறப்பு மாநாடு நடத்தி பெருமைப்பட்டுக் கொள்வது தமிழர்களின் காதுகளில் பூச்சுற்றவே அல்லாமல் வேறொன்றும் இல்லை.
மொத்தத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஏதும் செய்ய இயலாத கலைஞர் கருணாநிதி, தமிழுக்குச் செய்ததாய் விளம்பரம் தேடிக் கொள்வதற்குத்தான் இந்த மாநாடு.
இப்படி விளம்பரம் தேடத் தான் இந்த மாநாடு பயன்படும் என அறிந்தே உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தினர் 9 ஆம் உலகத் தமிழ் மாநாட்டினை இப்போது நடத்த இசைவு தரவில்லை.
அந்த தோல்வியை மறைப்பதற்காக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு எனப் புதிதாக ஒரு தலைப்பை உருவாக்கிப் புது வேடம் கட்டித் தன் காட்சித் திரையை இறக்குகிறார் கருணாநிதி.
ஆக, தமிழ் வளர்ச்சிக்குரிய மாநாடு இது இல்லை என்பதும் கலைஞர் கருணாநிதி தம் விளம்பரத்திற்கு நடத்திக் கொள்ளும் மாநாடு என்பதும் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது.

புலுடா விடும் நக்கீரனுக்கு சாட்டையடி கொடுத்தது அதிர்வு இணையம்!


சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன் என்கிற பத்திரிகையாளர், இலங்கை சென்றதாகவும். அங்கிருந்து அவர் திருகோணமலை சென்று, பின்னர் 4 கிலோ மீட்டர் நடந்துசென்று அடர்ந்த காட்டுப் பகுதியில் ராமைச் சந்தித்ததாகவும் நக்கீரன் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் பல சுவாரசியமான விடயங்கள் அடங்கியுள்ளன. இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியான திருகோணமலைப் பகுதிக்குச் சென்ற தமிழக பத்திரிகையாளர் பாண்டியனை, ஒரு வெள்ளை வான் வந்து கூட்டிச் சென்றதாகவும், அதில் பல இளைஞர்கள் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அவர்கள் அனைவரும் விடுதலைப் புலிகள் என்று குறிப்பிடும் அவர், அவர்கள் வாக்கிடோக்கி வைத்திருந்ததாக கூறியிருப்பது வேடிக்கையான விடயம். தற்செயலாக ஏதாவது ஒரு சோதனைச் சாவடியில் இராணுவம் இவர்களின் வாகனத்தை நிறுத்தி சோதித்தால் வாக்கிடோக்கியைப் பார்க்கமாட்டார்களா? இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் நுழையும் புலிகள் இவ்வாறு செல்வார்களா? இலங்கை புலனாய்வுப் பிரிவிற்காக வேலை செய்வோரால் மட்டுமே இது சாத்தியம் என்பது, பாவம் பாண்டியனுக்கு புரியவில்லையா?, இது போல பல புலுடாக்களுடன் ஒரு கதை சொல்லியிருக்கிறது நக்கீரன்.அத்தோடு இருண்ட காட்டுப் பகுதிக்குள் 4 கிலோ மீட்டர் நடந்து சென்ற பத்திரிகையாளர் பாண்டியன் 50 புலிகளைக் கண்டதாகவும், இன்னும் 6000 புலிகள் இருப்பதாகவும் கூறியுள்ளார். அங்கு நின்ற 50 புலிகளும் ஏ.கே 47 ரக துப்பாக்கிகளை வைத்திருந்ததாகவும், அங்கு சமையல் செய்ததாகவும் குறிப்பிடும் பாண்டியன் அவர்கள், புகை அதிகம் வராத மரத்தை அவர்கள் பாவித்ததாகவும் கூறியிருக்கிறார். 50 பேருக்கு காட்டில் சமைப்பதே கடினம், அதுவும் 6000 பேருக்கு புகைவராமல் சமைக்க முடியுமா? புலிகள் இதுவரை காலமும் தமக்கு என்று ஒரு இடத்தை கைப்பற்றி வைத்திருந்தார்கள், அங்குள்ள முகாம்களில் அவர்கள் சமைப்பார்கள், மற்றும் உலர் உணவுப் பொருட்களையே அவர்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என்பது யாவரும் அறிந்த விடயம். ஆனால் இவர் கூறுவதுபோல 6000 போராளிகள் ராம் கட்டுப்பாட்டில் இருந்தால் இவர்களுக்கான உணவுகளை யார் வழங்குகிறார்கள்? எவ்வாறு கொண்டுசெல்லப்படுகிறது? என்பது இங்கு பெரும் கேள்வியாக அமைகிறது.அதாவது பாண்டியன் சமீபத்தில் இலங்கை சென்று ராமை சந்தித்தாக பரபரப்புச் செய்தி ஒன்றை வெளியிட்டு, தமது புத்தகத்தின் விற்பனையைப் பெருக்க நக்கீரன் முயல்கிறது என்பது யாவரும் அறிந்த விடயம். சந்தனக் கடத்தல் வீரப்பன் இருந்த காலகட்டத்தில், அவரால் கடத்தப்பட்டவர்கள் பலர். அப்படி கடத்தப்படும்போது நக்கீரன் கோபால் வந்தால் மட்டுமே தான் பேசத் தயார் என பல தடவை வீரப்பன் பேரம் பேசியது உண்டு, இதன் பின்னணியில் யார் இருந்தார்கள் என்பதை நாம் நன்கறிவோம். நக்கீரன் புத்தகம் லட்சக்கணக்கில் விற்பனையாகவே இவர் இவ்வாறு பல சூழ்ச்சிகளை மேற்கொண்டார் என பலரும் அறிவார்கள். அது ஒரு வியாபாரத் தந்திரமாக இருந்தது. ஆனால் தற்போது நக்கீரன் பணத்தாசை, ஒரு இன விடுதலைமேல் விளையாடுகிறது, அது எந்தவகையில் நியாயம்?தமிழ் நாட்டில் எத்தனையோ பரபரப்பான செய்திகள் இருந்தும் நக்கீரன் ஏன் ஈழத் தமிழர்கள் குறித்த செய்திகளுக்கு முன்னுரிமைகொடுத்து வெளியிடுகிறது? ஈழத்தில் ஒரு போராட்டம் வெடிக்க இருப்பதாகவும், அதற்கு தலைமை தாங்கி ராம் அவர்கள் போராட இருப்பதாகவும் ஏன் செய்திகளைப் பரப்புகிறது. ராம் இலங்கை அரசின் பிடியில் இல்லை இருண்டமலைப் பிரதேசத்தில் உள்ளார் என தெரிவிப்பதன் நோக்கம் தான் என்ன? ஒரு உதாரணத்திற்குச் சொல்வோம் ராம் உண்மையான போராளி என்று, அப்படி இருந்தால் கூட அவர் தன்னிடம் 6000 போராளிகள் இருப்பதை ஒப்புக்கொள்வாரா? இல்லை தான் திருகோணமலைப் பிரதேசத்தில் இருப்பதைத் தான் இப்படி வெட்டவெளிச்சமாகச் சொல்வாரா?கேட்பவன் கேணையனாக இருந்தால் எலி ஏரோப்பிளேன் ஓட்டியது என்றும் சொல்லுவார்கள்.கற்பனையின் ஒரு உச்சக்கட்டமாக, தன்னை ராம் பார்க்க வரும்போது ஒரு பிரபாகரன் போலத் தோற்றமளித்ததாக அவர் வர்ணிப்பதும், நன்றாக சவரம் செய்யப்பட்ட முகம், ஒரு மிடுக்கான நடை என ஒரு சினிமா படக் கதாநாயன் வருவதுபோல ஸ்டன் காட்டி இருக்கிறார் பத்திரிகையாளர் பாண்டியன். பல இடங்களில் பிரபாகரன், பிரபாகரன் என்று மட்டும் குறிப்பிடும் நக்கீரன், தலைவர் பிரபாகரன் அல்லது மேதகு பிரபாகரன் என்று குறிப்பிடாதது ஏன்? கருணாந்தியை எழுதும் போது கலைஞர் கருணாநிதி என்று குறிப்பிடும் நக்கீரன், இவ் விடயத்தில் ஏன் அவ்வாறு குறிப்பிடவில்லை? எமது தேசிய தலைவரை மதிக்காது, ஒரு வார்த்தைப் பிரயோகத்தைக் கூட சரிவர கையாளத் தெரியாத கையாலாகாத நக்கீரன், எமது தலைவரை அப்பட்டமாக இழிவுபடுத்தியுள்ளது.தேசிய தலைவரை அவமதிக்கும் இவர்களா ஈழ விடுதலையில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள்?. தேசிய தலைவர் மேதகு பிரபாகரனுடன் ஒப்பிட இந்த ராம் யார்? இடுப்பில் ஒரு கறுப்பு பெலிட் கட்டியிருந்தால் தேசிய தலைவராகிவிடலாம் என நினைக்கிறது நக்கீரன் குழுமம். காசுக்காக நக்கிப் பிழைக்கும் நக்கீரனுக்குத் தெரியுமா எமது உன்னத தலைவன் பற்றி?ராம் அவ்வாறு நடந்து வருகிறார், ராம் இவ்வாறு நடந்து வருகிறார் போராட்டம் இனி வெடிக்கும், 6000 போராளிகள் தயார் நிலையில் உள்ளனர், சமீபத்தில் 15 இராணுவத்தைக் கொன்றோம் என்று எல்லாம் ஒரு 70 மில்லிமீட்டர் பயாஸ்கோப் பிலிம் காட்டியுள்ளது நக்கீரன். இதை விட இவர்கள் சினிமாக் கதை எழுதி விற்றால் நல்ல காசு சம்பாதிக்கலாமே, ஏன் எங்கள் போராட்டத்தை கூறுபோட்டு விற்கிறீர்கள். உன்னதமான பத்திரிகைத் துறையை ஏன் கேவலப்படுத்துகிறீர்கள். ராம் இலங்கை இராணுவத்துடன் சேர்ந்து இயங்குவதற்கான பல ஆதாரங்கள் ஏற்கனவே பல தமிழ் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் நக்கீரன் குழுமம் தற்போது இணைந்துவிட்டதா என்ற கேள்விகளும் மேலோங்கியுள்ளது. ராமை இவர்கள் ஏன் முன் நிலைப்படுத்த முயல்கிறார்கள் என்பதில் பல பின்புலங்கள் இருக்கின்றன. அவதானமாக நாம் செயல்படவேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். தமிழர்களின் போராட்டத்தைச் சிதைக்க நினைக்கும் இணையங்கள் அடையாளம் காணப்படவேண்டும். எதிரிகள் முளையிலேயே கருவறுக்கப்படவேண்டும்!போராட்டத்தின் வடிவம் தற்போது மாறியுள்ள நிலையில், இலங்கையில் போராட்டம் வெடிக்க உள்ளதாகக் கூறி, ராமுக்கு உதவிசெய்யுங்கள் என்று கூறி பெரும் பணத்தை கொள்ளையடிக்க ஒரு கும்பல் மனக் கணக்கு போடுகிறது.புலிகள் மீதமில்லை என நாம் இங்கு கூறவரவில்லை. விடுதலைப் புலிகள் ஈழ மண்ணில் இன்னும் வேறூன்றி இருக்கிறார்கள். எவராலும் மறுக்கமுடியாத உண்மை. ஆனால் இவர் சொல்லும் பகுதியில் அல்ல. அவர்கள் தற்காலிகமாக தமது போராட்டத்தை மௌனித்துள்ளனர். அரசியல் போரை அங்குரார்ப்பனம் செய்துள்ளனர். தகுந்த நேரத்தில் வெளியே வருவார்கள். தேவை ஏற்படும் பட்சத்தில் ஆயுதங்களைக் கையில் ஏந்துவார்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை. இதனிடையே இந்த இந்திய மற்றும் இலங்கை அரசின் கைக்கூலிகள் செயல்களைக் கண்டு ஈழத் தமிழர்கள் அஞ்சப்போவது இல்லை.

19 மே 2010

நாச்சிக்குடா பகுதியில் மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு!


மன்னார் – கிளிநொச்சி மாவட்ட எல்லையில் அமைந்திருக்கும் நாச்சிக்குடாப் பகுதியில் மனிதநேயக் கண்ணிவெடியகற்றும் பணியாளர்களால் ஒரு தொகுதி மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றில் இருந்து இதுவரை எழுபத்தைந்து தொடக்கம் எண்பது வரையான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட பொழுது இவை கண்டெடுக்கப்பட்டதாக டானிஷ் கண்ணிவெடியகற்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வன்னிப் போரில் சிங்களப் படைகளால் சிறைப்பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இளைஞர் – யுவதிகளின் மனித எச்சங்களாக இவை இருக்கக்கூடும் என்று மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையில் நடைபெறும் படவிழாவை ஹிந்தி நட்சத்திரங்கள் புறக்கணிக்க வேண்டும்!


இலங்கையில் நடைபெறும் பட விழாவை ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் புறக்கணிக்க வேண்டும் என்று கவிஞர் தாமரை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து கவிஞர் தாமரை வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கொரியத் தலைநகர் சியோலில் நடப்பதாக இருந்த சர்வதேச இந்தியத் திரைப்படக்கழக விருது விழாவை சந்தடியின்றிக் கொழும்புக்கு மாற்றியதில் இந்திய அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது. கொழும்பின் கையில் படிந்துள்ள தமிழனின் ரத்தக்கறையைத் துடைத்து தன் பாவத்தையும் மறைத்துக் கொள்வதே அது! கொழும்பு ஐய்ஃபா விழாவின் முதன்மைத் தூதர் அமிதாப்பச்சன். அவரும் ஷாருக்கானும், ஐஸ்வர்யாராயும் உலகப்புகழ் பெற்ற பாலிவுட் கலைஞர்களும் மேடையில் தோன்றி இலங்கையில் “அழகும் அமைதியும் குடி கொண்டிருப்பதை” உலகமே பார்க்க உதவப்போகிறார்களாம்.
உலக மக்கள் தீர்ப்பாயம் டப்ளினில் வைத்து இலங்கையைப் போர்க்குற்றவாளியாக அறிவித்த இரண்டு மாதங்களில் எப்படி “அழகும் அமைதியும்” அங்கு குடிகொண்டன என்று அவர்கள் விளக்க வேண்டும். தமிழர்களின் வேண்டுகோளை மதித்து அமிதாப் விலகிக்கொண்டதாக ஒரு செய்தி! இது உறுதியானால் மகிழ்ச்சி! மற்றவர்களும் விலகிக்கொண்டு, விழாவை வேறிடத்தில் நடத்த வழி செய்ய வேண்டும். சர்வதேச இந்திய திரைப்பட விழா என்று பெயருக்குச் சொல்லப்பட்டாலும் பெரும்பாலும் இந்தித்திரைப்பட விழாவாகவே இதுவரை நடத்தப்பட்டது. ஆனால் இம்முறை தமிழ்த் திரைக்கலைஞர்களையும் இழுக்கச் சந்தடியின்றி ஒரு முயற்சி நடைபெறுகிறது.
மணிரத்னத்தின் ராவணன் கொழும்பு விழாவில் திரையேறும் என்று வந்த செய்தியை அவர் மறுத்திருக்கிறார். கமலஹாசன், ரஜினி, ரஹ்மானை கொழும்பு ஆட்கள் தனித்தனியாக அணுகி அழைத்ததாகவும் இவர்கள் மறுத்து விட்டதாகவும் ஒரு செய்தி. “தமிழன் ரத்தம் படிந்த கொழும்பில் விழா நடத்த நாங்கள்தானா கிடைத்தோம்” என்று சூடாகக் கேட்டாராம் பிரகாஷ்ராஜ். ஆனால் இது போதாது. தமிழ்த்திரைப்பட அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி, இந்திய அளவில் யாரும் கொழும்பு விழாவில் கலந்து கொள்ள விடாமல் செய்ய வேண்டும். முள்ளிவாய்க்கால் படுகொலையைத்தான் நம்மால் தடுக்க முடியவில்லை. கொலைக்களத்தில் கூத்தடிப் பதையாவது தடுக்கலாம்தானே? இது நம் தமிழுறவுகளுக்கு ஆறுதலாக மட்டுமல்ல, கொழும்புக்கும் அதன் இந்தியக் கூட்டாளிகளுக்கும் நம் உணர்வுகளைச் சொல்லி எச்சரிப்பதாகவும் அமையும் அல்லவா? பாரதிராஜா, செல்வமணி, மணிவண்ணன், சீமான், அமீர் போன்றவர்கள் திரையுலகின் முழு வலிமையோடும், தமிழக மக்களைத் தட்டியெழுப்பப் பாடுபட்டதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாமே முடிந்துவிட்டது என்று சோர்ந்துவிடவோ, ஓய்ந்து விடவோ கூடாது. ஐய்ஃபா விழா கொழும்பில் நடைபெற விடாமல் செய்ய நம்மால் முடியும். கோலிவுட்டின் கோரிக்கையை பாலிவுட்டால் அலட்சியப்படுத்த முடியாது. நிறவெறி தாண்டவமாடிய தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசைத் தனிமைப்படுத்துவதில் முக்கியப்பங்கு வகித்த அதே இந்தியாதான், இப்போது தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசு உலகில் தனிமைப்பட்டு விடாமல் பாதுகாத்து வருகிறது என்று தனது அறிக்கையில் தாமரை கூறியுள்ளார்.

நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக உதயமானது.


இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சித் துவக்கவிழா மதுரையில் நடந்தது. பல ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற இந்த மாநாட்டில், நாம் தமிழர் இயக்கம் அரசியல் கட்சியாக உதயமானது.
செவ்வாய்க்கிழமை மாலை, மதுரை ரிங் ரோடு அருகே உள்ள மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரமாண்ட மேடையில் நாம் தமிழர் கட்சி, பாயும் புலி கொடியோடு உதயமானது.
மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மற்றும் காந்திய அரசியல் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஆகியோர் குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தனர்.
7 மணிக்கு துவங்கிய மாநாடு 11 மணிக்கு முடிந்தது.
இம்மாநாட்டில் சீமான் எழுச்சி முழக்கமிட்டார்.
அவர், ‘’கட்சி நிதிக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்கிறார்கள். பணத்தை நம்பி நான் இந்த கட்சி ஆரம்பிக்கவில்லை. இனத்தை நம்பி ஆரம்பித்திருக்கிறேன்.இனம் சேர்ந்தா பணம் தானா வரும்.
திரைப்படங்கள் இயக்கி என்னால் சம்பாதிக்க முடியும். வருமானம் எனக்கு தேவையில்லை; இனமானம்தான் முக்கியம்.
என்னை தலைவராக பார்க்காதீர்கள். அண்ணன் பிரபாகரனுக்கு நான் தம்பி. இங்கே கூடியிருக்கும் அன்பு தம்பிகளுக்கு நான் அண்ணன்.
அரசியல் ஒரு சாக்கடை என்று எல்லோரும் மூக்கை பிடித்துக்கொண்டு போனால் யார்தான் உள்ளே இறங்கி சுத்தம் செய்வது.
ஒரு விசயத்தை செயல்படுத்த அரசியல் தேவைப்படுகிறது. அப்போதுதான் புரட்சி செய்ய முடிகிறது.
இந்த அரசியல்தானே என் இன மக்களை கொன்று குவித்தது. அதே அரசியலால் தமிழீழம் அமைக்கனும். அதற்காக போராடுவோம். இது ஆரம்பம்;இனி நிறைய பேசுவோம்’’என்று முழக்கமிட்டார்.

அடுத்த கட்டபோருக்கு தமிழகத்தில் இருந்தும் இளைஞர்கள் களம் செல்வார்கள்!-வைகோ.


முள்ளிவாய்க்கால் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு,​​ இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சென்னையில் நே‌ற்று மாலை கண்டனப் ​ பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.​ இக்கூட்டத்தில் பேசிய வைகோ, "இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி ஒருபோதும் ஒன்றிணைய முடியாது என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷ கூறியுள்ளார்.​ இலங்கையில் நடக்கும் தமிழர்கள் படுகொலை ஒரு இனப் படுகொலை என்று 1983 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி கூறினார்.

அவரே,​​ 1984 ஓகஸ்ட்டில் நாடாளுமன்றத்தில் பேசும்போது,​​ இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி தமிழர்களின் பூர்வீக பூமி,​​ அது தமிழர்களின் பூமி என்று குறிப்பிட்டார்.​ அத்தகைய பூமியில் தமிழர்களுக்கு ​ உரிமை இல்லை என்று கூறும் ராஜபக்ஷ ஜூன் 8ஆம் திகதி இந்தியா வருகிறார்.​ ராஜபக்ஷவின் ஒவ்வொரு இந்திய வருகையும்,​​ அவருக்கு இங்கு அரசால் அளிக்கப்படும் ஒவ்வொரு வரவேற்பும்,​​ இந்திய ஒருமைப்பாடு என்னும் மாபெரும் சுவரில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் எனக் குறிப்பிட்டார்.​

மேலும், இலங்கைத் தமிழர்களின் தனி ஈழப் போர் இன்னும் முடியவில்லை.​ விரைவிலேயே அடுத்த கட்டப் போர் ​ தொடங்கும்.​ உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்கள் அந்தப் போர்க்களம் நோக்கிச் செல்வார்கள்.​ அப்போது தமிழகத்திலிருந்தும் அந்தப் போர்க்களம் நோக்கிச் செல்ல வாலிபர்கள் தயாராக வேண்டும் என்றும் ஆவேசத்துடன் தமிழக வாலிபர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.​