பக்கங்கள்

27 ஜூலை 2015

ஜனநாயகப் போராளிகளை மிரட்டுகிறதாம் இந்தியா!

யாழ். மாவட்டத்தில் சுயேட்சையாகப் போட்டியிடும் ஜனநாயக போராளிகள் கட்சியை தேர்தலில் இருந்து விலகிக்கொள்ளுமாறு இந்தியா தொடர்ந்து அழுத்தங்களை பிரயோகித்துவருவது அம்பலமாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள இந்தியத் துணைதூதுவராலய அதிகாரிகளான நட்ராஜ் மற்றும் மூர்த்தி ஆகிய இருவரும் நேரடியாகவும் மின்னஞ்சல் வழியாகவும் இம்மிரட்டலை விடுத்துள்ளனர். இந்தியா புலிகள் எவ்வகையிலும் மீளெடுக்க அனுமதிக்கப்போவதில்லையென மிரட்டலில் தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழ் மக்களின் இன்றைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும் சரியான தலைமைகளை உருவாக்குவதற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆயுதமேந்திப் போராடிய நாங்கள், ஆயுதமின்றி ஜனநாயக ரீதியில், நடைபெறறவுள்ள நடாளுமன்ற தேர்தலின் ஊடாக மீள்பிரவேசம் செய்துள்ளோம். எம்மை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் நம்புகின்றோமென ஜனநாயக போராளிகள் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. ஆயுதம் ஏந்திய எம்மை, பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய சர்வதேச நாடுகள் அனைத்தும், 2001ஆம் ஆண்டின் பின்னர் ஒன்றிணைந்து எம்மை இல்லாதொழிக்க செயற்பட்டன. நாம் மக்களுக்காக போராடியவர்கள். இன்று எமக்கு பின்னால் பலர் உள்ளனர் என்ற பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. உண்மையில் எமக்கு பின்னால் வலிகளை சுமந்த மக்களே உள்ளனர். பொருளாதார ரீதியிலும் ஏனைய வழிகளிலும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்ற மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு தற்போது யாரும் இல்லை. ஆகையால், போராளிகளாகிய நாம் ஜனநாயக ரீதியில் மக்களுக்காக குரல் கொடுக்க நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கியுள்ளோம்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வாக்குப் பலத்தை உடைக்கும் எண்ணம் எம்மிடம் இருந்திருந்தால் நாம் ஏன் அரசியல் அங்கீகாரம் கேட்டு அக்கட்சியிடம் செல்லவேண்டும்?. யாரையும் விமர்சிக்கும், குற்றம் சுமத்தும் எண்ணம் எம்மிடத்தில் இல்லை. ஏனெனில், மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் தான் நம் முன் உள்ளன. கூட்டமைப்புடன் இணைந்து அதனை பலப்படுத்தி காத்திரமான தலைமைகளை உருவாக்குவதற்காகவே நாம் அவர்களிடம் ஆதரவு கேட்டோம். ஆனால், எம்மை அவர்கள் நிராகரித்தனர். மீண்டுமொரு ஆயுதப்போராட்டம் தலைதூக்க வாய்ப்புக்கள் உள்ளது என்ற கருத்துக்கு நாம் அடையாளம் காட்டப்படுகின்றோம். இதிலிருந்து வெளிவருவதற்கு ஜனநாயக முறையில் செல்வதே ஒரே வழி. மக்களின் தற்போதைய தேவை எதுவோ அதை பெற்றுகொடுப்போம். போரின் வடு இல்லாத சூழலை உருவாக்க முயல்வோம். போராளிகள் ஜனநாயக வழிக்குள் வந்தால் மக்கள் நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படும். எனவே எமது கொள்கைகள், செயற்பாடு என்பன எதிர்வரும் புதன்கிழமை (29) சுதுமலையில் வெளியிடப்படும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவிக்கப்படும். போராளிகளாகிய நாம் ஜனநாயக ரீதியில் செல்வதற்கான ஆணையினை மக்கள் எமக்கு நிச்சயம் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உள்ளதுதென ஜனநாயகப்போராளிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

25 ஜூலை 2015

நீங்கள் என்ன சொன்னாலும் சனம் நம்பாது என்றாராம் சிறீதரன்!

வவுனியாவில் சிறிதரன் தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்தால் தமிழர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உண்மையான விடுதலைப் புலிப் போராளிகள் என்றால் முள்ளிவாய்க்காலில் செத்திருக்க வேண்டும் என்ற கருத்து முன்னாள் புலிப் போராளிகள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந் நிலையில் இவ்வாறு தான் பேசவில்லை என சிறிதரன் கூறிவருகின்றார். சிறிதரன் வவுனியாவில் புலிகளைப் பற்றி கூறிய வேளையில் அங்கு இருந்த ஏனைய தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களின் ஊடாக சிறிதரன் கூறியது உண்மை என்பதை அறிந்த சிறிதரனின் விசுவாசியான ஒருவர் இது தொடர்பாக சிறிதரனிடம் நேரடியாகக் கேட்டுள்ளார். அதற்கு சிறிதரன் இவ்வாறு பதில் சொன்னாராம் ”அண்ணை நான் கதைக்கும் போது என்னோட இருந்தவங்களைப் பற்றியோ அல்லது என்னோட இருந்தவங்கள் சொல்லுறதைக் கேட்டுவிட்டு என்னோட கதைக்கிறவங்களைப் பற்றியோ நான் கவலைப்படப் போவதில்லை. ஏனென்றால் நீங்கள் என்னத்தைதான் சொன்னாலும் சனம் நம்பாது என்று எனக்குத் தெரியும். அவங்கள் (முன்னாள் போராளிகள்) அந்தக் கூட்டத்துக்குள்ள வந்து நின்று குழப்பியடிப்பாங்கள். மற்றவங்கள் போல நானும் பார்த்துக் கொண்டு நிக்குறதோ? ” இவ்வாறு சிறிதரன் சொன்னாராம். கடந்த 2010ம் ஆண்டு தேர்தலில் வெறும் பத்தாயிரம் வாக்குகளுடன் வந்த சிறிதரன் அதுவும் புலிகளின் தளபதி தீபனின் மச்சான் (தங்கையின் கணவர்) என்ற போர்வையில் வந்த புலித்தோல் போர்த்தி நரி இவ்வாறு கூறியதைக் கேட்டு மிகவும் கோபத்துடன் எழுந்து வந்துள்ளார் சிறிதரின் விசுவாசி.

24 ஜூலை 2015

புளொட் சித்தார்த்தனை ஆதரிக்கும் அனந்திக்கு எதிர்ப்பு!

இறுதியுத்த கணம் வரையினில் விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அiமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் தப்பித்து வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களுள் பதுங்கியிருந்த பல முன்னாள் போராளிகளை வேட்டையாடுவதினில் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டிருந்தனர். அவர்களால் கடத்தப்பட்ட மற்றும் அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட பல போராளிகள், ஆதவாளர்களென பலர் பற்றி தகவல்களில்லாதுள்ளது.இந்நிலையினில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்புவதாக கூறிக்கொள்ளும் அனந்தி இதனை செய்த சித்தார்த்தனிற்கும் அவரது ஆட்களிற்கும் குரல் கொடுப்பதே ஆதரவாளர்களை சீற்றங்கொள்ள வைத்துள்ளது. ஏற்கனவே அனந்தியினது நடவடிக்கைகள் காரணமாக அவரது ஆதரவாளர்கள் பலரும் விட்டுவிலகியுள்ளனர்.இந்நிலையினில் தற்போது எஞ்சிய ஆதரவாளர்களும் விட்டு விலக முடிவு செய்துள்ளனர். இதனிடையே அனந்தியை தற்போது இயக்கிவரும் தென்னிலங்கை தரப்புக்கள் குறித்த முக்கிய புகைப்படங்களை வெளியிட ஆதரவாளர்கள் முடிவு செய்திருப்பதாக தெரியவருகின்றது. இச்சம்பவங்களின் தொடர்ச்சியாகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணியினில் இணைந்து அனந்தி விருப்பம் கொண்டிருந்த போதும் அவர்கள் பின்னடித்ததாக தொடர்புடைய தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

18 ஜூலை 2015

முதல்தர கொலையாளி வேட்பாளர்!வெளிக்கக்குகிறார் கருணா!

தமிழ் அரசியல்வாதிகள் பலரைப் படுகொலை செய்த முதலாம் நம்பர் கொலைகாரனுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் அளிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு மற்றும் பேராசிரியர் ரவீந்திரநாத் ஆகியோரின் படுகொலைகளில் நேரடியாகத் தொடர்புடைய நபருக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இடமளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேமஜெயந்தவே இந்த தனிநபருக்கு தனது சுயவிருப்பில் இடமளித்திருக்கிறார். இந்த முதல் தர கொலைகாரன் பற்றிய உறுதியான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என குறிப்பிட்டுள்ளார். எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் குறிப்பிட்ட முதல் தர கொலையாளி யார் என்ற விபரத்தை வெளியிடவில்லை. இதேவேளை, முன்னாள் கிழக்கு முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் இந்த தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.தேசியப் பட்டியலில் இடமளிப்பதாக கருணாவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குறுதி கொடுத்திருந்த போதிலும் அவருக்கு அதில் இடமளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

13 ஜூலை 2015

புலிமுகச்சிலந்தி ஜனநாயகப்போராளிகளின் சின்னம்!

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் போராளிகளின் கட்சியான ஜனநாயகப் போராளிகள் கட்சிக்கு புலிமுகச் சிலந்தி சின்னமாக ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுடன் மக்களாக இணைந்து சமூகவிரோதிகளையும் துர்நடத்தையில் ஈடுபடுபவர்களையும் தமது வலைக்குள் வீழ்த்தி அவர்களது நடவடிக்கைகளை இல்லாது செய்து தமிழ்மக்களை நிம்மதியாக வாழச் செய்த முன்னாள் போராளிகளுக்கு பொருத்தமான சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலமும் இவ்வாறான சிறந்த வலையமைப்பைப் பேணி சமூகவிரோதிகளுக்கு புலிமுகச் சிலந்தியின் குணத்தைக் காட்டுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றனர் ஜனநாயகப் போராளிகள்.

த.தே.ம.முன்னணியின் வேட்பாளர் பட்டியல்!

யாழ்ப்பாணத்தினில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பினில் அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செயலாளர் செல்வராசா கஜேந்திரன்,பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
(1)கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் த.தே.ம.மு தமிழ்காங்கிரஸ் கட்சி தலைவர் )
(2)செல்வராஜா கஜேந்திரன் (முன்னாள் நா.உ)
(3)மணிவண்ணன் (சட்டத்தரணி)
(4)ஆனந்தி சிவஞானசுந்தரம் (ஓய்வுபெற்ற அதிபர்- இராமநாதன் கல்லூரி)
(5)சுதா – (குருநகர் பாடும் மீன் விளையாட்டுக்கழக உபதலைவர் ) (6)அமிர்தலிங்கம் இராசகுமாரன் (விரிவுரையாளர், யாழ் பல்கலைக்கழக முன்னாள் ஆசிரியர் சங்க தலைவர்)
(7) திருநாவுக்கரசு சிவகுமாரன் (சிவா) – யாழ் பல்கலைக்கழக பட்டதாரி - (தீவகம்)
(8)பத்மினி சிதம்பரநாதன் (முன்னாள் நா.உ)
(9)சின்னமணி கோகிலவாணி – (கிளிநொச்சி)
(10)ஜெயரட்ணம் வீரசிங்கம் (வீரா) - (பல்கலைக்கழக ஊழியர் சங்கம்)

07 ஜூலை 2015

குப்பி கடிக்காதோரை முன்னாள் போராளிகள் எனக்கூற முடியாதென்றாராம் சிறீதரன்!

இறுதி யுத்தத்தில் குப்பி கடித்து வீரச்சாவடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் என அடையாளப்படுத்த முடியாது.போராளிகளாயின் குப்பி கடித்து வீரச்சாவடைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தொடர்பாக நேற்று வவுனியாவில் இடம்பெற்ற சம்பந்தன் தலைமையிலான கூட்டத்தில், ஜனநாயகப் போராளிகள் என்ற அமைப்புத் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அவர் இவ்வாறு தொரித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட தமிழ் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடவுள்ள கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு வவுனியாவில் இடம்பெற்றது. இச்சந்திப்பு நடைபெறுவுள்ளமையை அறிந்த ஊடகவியலாளர் வித்தியாதரன், முன்னாள் போராளிகளுக்கும் ஆசனங்கள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எமது தலைவர் சம்பந்தனிடம் முன்வைத்தார். ஆனால், தலைவர் சம்பந்தன் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் பின்னர் எமது கட்சிக் கூட்டத்தில் முன்னாள் போராளிகளின் ஜனநாயகக் கட்சி என்ற அமைப்புத் தொடர்பில் விவாதித்தோம். அந்த விவாதத்தில் சிறிதரன் கருத்துத் தெரிவிக்கையில், இறுதியுத்தத்தின் பொழுது குப்பி கடித்து வீரச்சாவடையாத எவருமே தம்மை முன்னாள் போராளிகள் எனத்தொரிவிக்க முடியாது என்ற தனது கருத்தைத் தெரிவித்தார். அதேபோல் பிரபாகரன் மட்டுமே தமது தலைவர் எனவும் தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த தலைவர் சம்பந்தன், தந்தை செல்வநாயகமே எல்லோருக்கும் தலைவர் எனத் தெரிவித்து இவ்விடயம் மீதான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் என்றனர்.

06 ஜூலை 2015

ஸ்ரீலங்காவின் மூத்த படையதிகாரி திடீர் மரணம்!

சிறிலங்கா இராணுவத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவரும், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக நேற்று திடீரென மரணமானார். நேற்றுமாலை திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாகவே, மேஜர் ஜெனரல் ஜெகத் விஜேதிலக மரணமானதாக சிறிலங்கா இராணுவ வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவர் சிறிலங்கா இராணுவத்தில் முக்கியமான பல பதவிகளை வகித்திருந்தவர் என்பதுடன், 2013 ஆம் ஆண்டு தொடக்கம் சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகமாக பணியாற்றிய வந்தார். இவரது பொறுப்பின் கீழேயே முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.புலிகளின் முக்கிய தளபதிகளாக விளங்கிய பாப்பா,லோறன்ஸ் உட்பட 60வரையிலான போராளிகள் மைத்திரி ஜனாதிபதியானதன் பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அதனால் ஏற்பட்டுள்ள உள்ளகப்பிரச்சனைகளால்
இந்த படையதிகாரிக்கு மரணம் நேர்ந்திருக்கலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

02 ஜூலை 2015

எனையாளும் என் அன்னை ஒலிப்பேழை வெளியிடப்பட்டது.

தீவகத்தின் கண்ணே அமைந்துள்ள ஊர்காவற்றுறை புளியங்கூடல் செருத்தனைப்பதிதனில் அமர்ந்திருந்து அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ இராஜமகாமாரியின் துணையுடன் வெளிவந்திருக்கும் "எனையாளும் என் அன்னை"பக்தி மழை பொழியும் ஒலிப்பேழை 26.06.2015 அன்று ஆலய முன்றலில் வெளியீடு செய்யப்பட்டது.இந்த ஒலிப்பேழைகளை புலம்பெயர் தேசங்களிலும் பெற்றுக்கொள்ளும் வசதியை ஆலய நிர்வாகத்தினர் மேற்கொண்டிருக்கின்றனர்.
கனடா:புவனேஸ்வரன்-4164099947
ஜெர்மனி:இரவீந்திரகுமார்-015217517832
பிரான்ஸ்:ராசன்-0661474728
பிரித்தானியா:சாந்தகுமார்-02030974065
அவுஸ்திரேலியா:கிரிசாந்த்-0403231581
சுவிற்சர்லாந்து:திருவருட்செல்வம்-41766833019
உங்கள் வீடு தேடி வந்து அருள்பாலிக்கும் மகாமாரி அன்னையை

ஒவ்வொருவரும் பூஜித்துக்கொள்ளுங்கள்.இலக்கியன் அவர்களின் இனிமை ததும்பும் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாய் பாய்கிறது.

குழந்தையை காப்பாற்றிய கடவுள்கள்!

முல்லைத்தீவு முல்லியவளையில் கிணற்றினுள் வீழ்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த சிறுமி கூறியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த சிறுமி தனது விளையாட்டுக் காரை வைத்து விளையாடிக் கொண்டிருந்த போது அந்தக் காருடன் கிணற்றினுள் வீழ்ந்து விட்டார். குறித்த கிணறு 12 அடி நீரைக் கொண்ட ஆழமான கிணறாகும். இருந்தும் சிறுமி அக் கிணற்றின் உள்ளே ஏதோ ஒரு ஆதாரத்தைப் பிடித்தபடி தனது அத்தையை அழைத்துள்ளாள். சிறுமியின் குரல் கேட்ட அத்தை கிணற்றினுள் பார்த்து விட்டு அலறி அடித்தபடி கிணற்றினுள் வாளியை விட்ட போது சிறுமி வாளியைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். சிறுமிக்கு எதுவித காயங்கள் இல்லாதும் சிறுமி பயமேதும் இல்லாதும் இருந்த போது இது தொடர்பாக சிறுமியை அயலவர்கள் விசாரித்துள்ளனர். அப்போது சிறுமி கிணற்றினுள் பிள்ளையாரும் ஒரு அம்மாவும் தன்னை பயப்பட வேண்டாம் என்று கூறி துாக்கி வைத்திருந்ததாகவும் இனிமேல் இவ்வாறு கிணற்றுப் பக்கம் வரவேண்டாம் எனச் சொன்தாகவும் கூறியுள்ளாள். இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சரியம் அடைந்து காட்டாறு விநாயகரினதும் வற்றாப்பளை அம்மனுடைய புதுமை எனவும் கூறுகின்றனர்.