பக்கங்கள்

31 ஜூலை 2010

மூவாயிரம் போராளிகள் விடுதலையாம்!


அரச படையினரிடம் சரண் அடைந்தோரில் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் 3000 பேர் வரையானோர் இது வரை விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.


அத்துடன சரணடைந்த முன்னாள் போராளிகள் 11698 பேர் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு அடையாளம் காணப்பட்டிருந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


விடுதலை செய்யப்பட்டிருக்கும் 3000 பேரில் பல்கலைக்கழக மாணவர்கள்,சிறுவர்கள்,ஊனமுற்றோர்கள்,கர்ப்பிணிப் பெண்கள், இளம்தாய்மார்கள்,சிறு குற்றங்களைச் செய்தவர்கள், நீதிமன்றால் நிரபராதிகளென விடுவிக்கப்பட்டவர்கள் ஆகியோர் அடங்குவர் என்று அவர் பட்டியல் போட்டார்.

போர் குற்றத்தில் ஈடுபட்ட சில அதிகாரிகள் கோத்தபாயவினால் படுகொலை.


கோத்தபாயவின் உத்தரவின் பேரில் போர்குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிகள் சிலரை கோத்தபாயவின் இரகசிய கொலைப்படை போட்டு தள்ளிவிட்டதாக இலங்கையில் இருந்து தப்பிவந்த சிங்கள ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
லங்கா ஈ. நியூஸ் ஊடகவியலாளர்களில் ஒருவரான இவர் சிறிலங்கா படைப்புலனாய்வாளர்களினால் தேடப்பட்ட நிலையில் வெளி நாடு ஒன்றிற்கு தப்பி வந்துள்ளார்.
இவரது தகவலின் படி கோத்தபாயவின் நேரடி உத்தரவின் பேரில் சில இராணுவ அதிகாரிகள் களத்தில் செயற்பட்டனர். இவர்களுள் இரசாயன குண்டு தாக்குதலிற்கு பொறுப்பாய் இருந்தவர்களும் உள்ளடங்குவர்.
பெண் மற்றும் ஆண் போராளிகளை சித்திரவதை செய்து வன்னியிலேயே கொன்று தீயிட்டு கொழுத்தியவர்கள். காயப்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பெண்களை சித்திரவதை செய்து கொன்றவர்கள் ஆகியோரும் அடங்குவர்.
யுத்தம் முடிந்த பின்னர் இவர்களில் சிலர் சரத் பொன்சேகாவுடன் தொடர்பை பேணியும் வந்துள்ளனராம்.
இதனால் சந்தேகமுற்ற கோத்தபாய தனது இரகசிய படைகள் மூலம் இவர்களை கொலை செய்ததாக இந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார். குறிப்பாக இரசாயன குண்டுகளை பயன்படுத்துவதற்கு பொறுப்பாக நியமிகப்பட்ட அதிகாரி இந்த ஊடகவியலாளருடன் தொடர்பினை கொண்டிருந்தார் என்பதும் பின்னர் அவர் வெடிவிபத்தில் மரணமானதாக அறிவிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இரசாயன குண்டுகளை பாவித்தமை குறித்த சில அதிகாரிகளுக்கே தெரியும் எனவும் இந்த குண்டுகள் ஏனைய குண்டுகளுடன் களமுனைக்கு அனுப்பபட்டதாகவும் ஏற்கனவே தகவல் வந்தமை குறிப்பிடத்தக்கது.
இதை விட நூற்றிற்கு மேற்பட்ட அதிகாரிகள் இன்னமும் விசாரணையென அடைத்து வைக்கப்பட்டுள்ளார்களாம்.இவர்கள் போர்க்குற்றத்திற்கு முக்கிய சாட்சிகளாக உள்ளனர்.இவர்கள் மீது பொன்சேகாவின் வழக்கினை சாட்டியோ அல்லது விடுதலைப்புலிகளுக்கு தகவல் வழங்கினார்கள் என்றோ குற்றம் சுமத்தி தண்டனை வழங்கப்படலாம் என்றும் அந்த ஊடகவியலாளர் கூறியுள்ளார்.
சில அதிகாரிகளுக்கு வடக்கு கிழக்கில் பெருமளவான காணிகளையும் வசதிகளையும் கொடுத்து அங்கேயே குடியமர்த்தும் திட்டத்தினையும் அரசாங்கம் மேற்கொண்டு வந்துள்ளது.
எது எப்படி இருப்பினும் என்றோ ஒரு நாள் இவர்கள் உண்மைகளை வெளிக்கொண்டுவருவார்கள் என்றும் அந்த ஊடகவியலாளர் கூறினார். இந்த ஊடகவியளார் தம்மிடம் கிடைத்த போர்குற்ற மீறல்கள் தொடர்பிலான தகவல்களை குறித்த அமைப்புக்களுக்கும் முக்கிய நாடு ஒன்றிற்கும் வழங்கியுள்ளார். இந்த ஊடகவியலாளருக்கு இன்னமும் அகதி அந்தஸ்து வழங்கப்படவில்லை என்பதனால் பெயரை குறிப்பிடவில்லை.

30 ஜூலை 2010

செந்தமிழன் சீமானுக்கு சிறையில் அடாவடி.


சென்னையில் நடந்த தமிழக மீனவர் படுகொலை கண்டன கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக டைரக்டர் சீமான் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தனிமை சிறையில் அடைத்துள்ளார்கள். வாக்கிங் செல்லக்கூட அனுமதிக்கவில்லை என்று சீமான் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னமும் முடிந்தபாடில்லை.
இந்நிலையில் சீமான், சிறையில் யாருடனும் அதிகம் பேசக்கூடாது என்று சிறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். சிறையில் உள்ள புத்தக லைப்ரரிக்கு சென்று புத்தகம் படிக்க கூட சீமானுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வேலூர் சிறையில் முதலில் விசாரணைக்கைதியாக அடைக்கப்பட்ட போது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு அதே சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், பேரறிவாளன் ஆகியோரை சந்தித்து பேசி வந்தார் சீமான்.
ஆனால் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்ததில் இருந்துதான் சிறையில் இப்படியான நெருக்கடி அதிகமாகிக்கொண்டே போகிறது.

ஏழாவது நாளாக தொடரும் சிவந்தனின் நீதிக்கான நடைப்பயணம்.


தமிழ் மக்களிற்காக நீதிகேட்டு இன்று 7வது நாளாக சிவந்தன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி தனது மனிதநேய நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடும் வெயில், காற்றின் மத்தியில் ஏற்றம் இறக்கமான பிரதேசங்கள் ஊடாக இன்று அவரது பயணம் நடைபெறுவதால், மிகவும் களைத்த நிலையிலேயே சிவந்தன் தனது உறுதிமிக்க மனிதநேயப் பயணத்தை தொடருகின்றார். இன்று காலையில் இருந்து நண்பகல்வரை சுமார் 11 கிலோமீற்றர்கள் அவர் நடந்திருக்கின்றார். அமீனஸ் (Amiens) நகரத்தை நோக்கி நடந்துகொண்டிருக்கும் அவர் பரிஸ் நகரை அடைவதற்கு இன்னும் 160 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது. பரிசில் இருந்து ஜெனீவா நோக்கி 600 கிலோமீற்றர்கள்வரை நடந்து செல்ல வேண்டியுள்ளதால், மொத்தம் 1000 கிலோமீற்றருக்கு மேற்பட்ட தூரத்திற்கு சிவந்தன் நடந்து செல்லுகின்றார். இன்று காலையில் லண்டனில் இருந்து சென்ற சிலர் சிவந்தனது மனிதநேய நடை பயணத்தில் தம்மையும் இணைத்திருந்தனர். சிவந்தனுக்கு துணையாக லண்டனில் இருந்து அவருடன் சென்றிருந்த இலக்கியனும் அவ்வப்பொழுது இணைந்து நடந்து செல்வதுடன், பிரான்சின் கடற்கரையான கலைசில் இருந்து பொஸ்கோ என்ற இளைஞனும் வேறு சிலரும் இணைந்து நடந்து செல்லுகின்றார். சிறீலங்கா அரசின் போர்க்குற்றங்கள் மீது சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், கொல்லப்பட்ட அப்பாவி மக்களிற்கு நீதி கிடைக்க வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும், மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு சிவந்தன் இந்த நடை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

29 ஜூலை 2010

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி,தமிழர்கள் உற்சாகம்.


இலங்கையில் தமிழர்கள் எதிர்நோக்கி வருகின்ற பிரச்சினைகளை உலகமயப்படுத்தும் வகையில் கடந்த வருடம் பிரித்தானியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஈழத் தமிழரான பரமேஸ்வரன் சுப்பிரமணியம் கள்ளத்தனமாக உணவு உட்கொண்டிருக்கவில்லை என்று இன்று நிரூபணம் ஆகி உள்ளது.


பரமேஸ்வரன் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 07 ஆம் திகதி பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு முன்னால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார். 23 நாட்கள் வரை உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். பின் ஐந்து நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.


ஆனால் இந்த உண்ணாவிரதம் இடம்பெற்று ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் பிரித்தானிய ஆங்கில பத்திரிகைகளான டெய்லி மெய்ல், சன் ஆகியன பரமேஸ்வரன் உண்ணாவிரதத்தின்போது இரகசியம்,ஆன முறையில் ம்க்டொனால்ட் பேகரைச் சாப்பிட்டிருக்கின்றார் என்று குறிப்பிட்டு செய்தி பிரசுரித்தன.

ஆனால் இச்செய்தி பிழையானது என்றும் அவருடைய நற்பெயருக்கும், நன்மதிப்புக்கும், கௌரவத்துக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விட்டது என்றும் குற்றஞ்சாட்டி பரமேஸ்வரன் லண்டன் மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று லண்டன் மேல்நீதிமன்ற நீதியரசர் எடி முன்னிலையில் வந்தது.

பரமேஸ்வரனின் சார்பில் சட்டத்தரணி மக்னஸ் பொய்ட் ஆஜராகி வாதாடினார். அவர் நீதிமன்றில் தெரிவித்தவை வருமாறு:

”எனது கட்சிக்காரர் உண்ணாவிரதத்தை உத்தியோகபூர்வமாக முடிக்கும் வரை உணவு உட்கொண்டிருக்கவே இல்லை.பிரித்தானிய நாடாளுமன்ற சுற்றுவட்டத்தில் பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி இருந்த உயர் அதிகாரி பரமேஸ்வரன் இரகசியமான முறையில் பேகர் உண்டமையை விசேட கருவி ஒன்றைப் பயன்படுத்தி பொலிஸார் கண்டு பிடித்திருக்கவில்லை என்றும் பரமேஸ்வரன் பேகர் உண்டமைக்கான வீடியோ ஆதாரம் எதுவும் கிடையாது என்றும் உறுதிப்படுத்தி உள்ளார்கள்.
எனவே இப்பத்திரிகைகளில் பிரசுரமாகி இருந்த செய்தி முற்றிலும் தவறானது ஆகும். இப்பத்திரிகைகள் பிழையான செய்தியை வெளியிட்டிருந்த நிலையில் சர்வதேசம் பூராவும் உள்ள தமிழ் சமூகம் பரமேஸ்வரன் நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார், ஏமாற்றி விட்டார் என்றே நம்பி விட்டது. எனவே பரமேஸ்வரன் இச்செய்தியின் காரணமாக பாரதூரமான பிரச்சினைகளையும், நெருக்கடிகளையும் சந்திக்க நேர்ந்தது.”

இரு பத்திரிகைகள் சார்பிலும் சட்டத்தரணி விக்டோரியா ஜொலிபே ஆஜரானார். அவர் இரு பத்திரிகைகளும் அச்செய்தி தவறானது என்பதை ஒப்புக் கொள்கின்றன. அதற்காக முழுமனதுடன் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றன என்றும் உரிய நட்டஈடு வழங்கத் தயாராக உள்ளன என்றும் நீதிமன்றில் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

இரு பத்திரிகைகளும் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்புக் கோரின.அத்துடன் 77500 ஸ்ரேலிங்க் பவுண்டுகளை பரமேஸ்வரனுக்கு நட்டஈடாக வழங்கவும் சம்மதித்தன. இதையடுத்து வழக்கு முடிவுக்கு வந்தது.

இந்த வெற்றி குறித்து பரமேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளவை வருமாறு:-

”கடந்த 08 மாத காலமாக என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. எனது உயிரை மாய்த்துக் கொள்ளக் கூட எண்ணினேன்.இந்தப் பிழையான பத்திரிகைச் செய்தியால் ஏராளமான நண்பர்களை இழக்க நேர்ந்தது.எனது குடும்ப அங்கத்தவர்கள் கூட என்னை அலட்சியப்படுத்தினர்.

தமிழ் சமூகம் என்னைப் புறக்கணித்து விட்டது.ஆனால் அச்செய்தியில் எந்த உண்மையும் கிடையாது என்று இரு பத்திரிகைகளும் தற்போது ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டுள்ளன.

நான் எந்தத் தவறும் செய்திருக்கவில்லை என்பதை என்னைப் புறக்கணித்த எல்லோரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றேன்.எனது உண்ணா விரதத் தியாகம் உண்மையானது.”என்றார்.

திருமலை பத்திரகாளி ஆலயத்தின் முன் சிங்களவர்களின் கூத்து.

திருகோணமலை பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை பெரும்பான்மை இன இளைஞர் குழுக்களால் "பைலா" ஆட்ட நிகழ்வுகள் மாறி மாறி இடம்பெற்றன.


திருமலை ஸ்ரீறிமாபுரத்தில் உள்ள விகாரை ஒன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வைபவம் ஒன்றுக்காக நீர்கொழும்பு,சிலாபம் போன்ற இடங்களில் இருந்து 15 இற்கும் அதிகமான பெளத்த இளைஞர் குழுக்கள் திருமலைக்கு வந்துள்ளன.


இந்த ஒவ்வொரு குழுவையும் சேர்ந்த இளைஞர்கள் வெவ்வேறு நேரங்களில் பத்திரகாளி அம்பாள் ஆலயத்துக்கு முன்பாக வந்து பைலா ஆடினார்கள். வழிபாட்டுக்குரிய ஆலயத்துக்கு முன்னால் அவர்கள் பைலா ஆட்டம் போட்டமை தமிழ்-இந்துக்களை மிகவும் காயப்படுத்தி உள்ளது.

பரமேஸ்வரன் தாக்கல் செய்த வழக்கு இன்று தீர்ப்பு.



பரமேஸ்வரன் உணவருந்தியவாறே உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சுமத்தியதற்கு எதிராக சண் மற்றும் டெய்லி மெயில் பத்திரிக்கைகளுக்கு எதிராக பரமேஸ்வரன் தொடர்ந்த வழக்கு இன்று காலை 10 மணிக்கு முடிவுக்கு வருகின்றது.
சென்ற ஆண்டு பரமேஸ்வரன் உடனடி போர் நிறுத்தம் கோரி உண்ணாவிரதம் இருந்தார். அதே வருடம் சுமார் 6 மதாங்கள் கடந்த நிலையில் டெய்லி மெயில் என்னும் பிரித்தானியாவின் முன்னனி பத்திரிக்கைகளில் ஒன்றான டெய்லி மெயில் எனும் பத்திரிக்கை பரமேஸ்வரன் உணவருந்தியவாறே உண்ணாவிரதம் இருந்ததாக குற்றம் சுமத்தியது.
அதனை தொடர்ந்து பிரித்தானியாவின் பல பத்திரிகை உட்பட உலகின் முன்னனி பத்திரிகைகள் அனைத்தும் அந்த செய்திக்கு முக்கியத்துவம் அளித்து முதன்மை செய்தியாக வெளியிட்டது. ஆனால் அனைத்து பத்திரிகைகளும் டெய்லி மெயிலை மேற்கோள் காட்டி வெளியிட்டபோதும் சண் பத்திக்கையும் டெய்லி மெயிலின் தலையங்கத்தை முழுவதுமாக மாற்றி அதே செய்தியை வெளியிட்டது.
அதனால் டெய்லி மெயில் மற்றும் சண் பத்திரிக்கைகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடிவாகி தாக்கல் செய்யப்பட்டது. அதன் முடிவாக இன்று காலை மத்திய லண்டனில் அமைந்திருக்கக் கூடிய [court 13 or 14 royal court of justic which is in the strand , london,wc2 nearest tube stationa are,chancery lane [central line] and temple [distric line] றோயல் உயர் நீதிமன்றத்தில் இறுதி முடிவு வெளியிடப்படுகின்றது.
மக்கள் அனைவரையும் அங்கு வந்து உங்கள் ஆதரவை பரமேஸ்வரனுக்கு வழங்குமாறு அழைக்கின்றோம்.

28 ஜூலை 2010

சிங்களவன் மூட்டிய தீ அணையாது எரிகிறது!தமிழ் தம்பதி தற்கொலை முயற்சி.


வன்னியில் அண்மையில் மீளக்குடியேறிய இளம் தம்பதியினர் தம்மைத் தாமே கொல்ல முயற்சித்ததில், கணவர் உயிர் பறிபோயுள்ளது. கிளிநொச்சியில் கடந்த ஞாயிறு இச்சம்பவம் நடந்துள்ளது. கணவர், மனைவி இருவரையும் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்த்தபோதும், கணவர் இறந்துவிட்டார். மனைவி தற்போது யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த போரின்போது, இராணுவத்தினரின் ஷெல் தாக்குதலில் இத்தம்பதியின் நான்கு குழந்தைகள் கொல்லப்பட்டனர். தமது குழந்தைகளையும், சொத்துக்களையும் இழந்த நிலையில் மீளக்குடியேறிய இவர்கள் அந்த மனவருத்தத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருக்கலாமென அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர்.இறந்த கணவர் 29 வயதான சிவசுப்ரமணியம் சோமசுந்தரம் என்றும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரது மனைவி 26 வயதான சோமசுந்தரம் தனலக்ஷ்மி என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் அக்கராயன்குளத்திலுள்ள கெங்காதரபுரத்திலுள்ள அவர்களின் வீட்டிலேயே தற்கொலைக்கு முயற்சித்தனர்.

யாழில் தமிழ் மக்களை ஏமாற்றும் சிங்கள கும்பல்.

வெளிநாட்டுத் தூதரகங்களினால் மறுக்கப்பட்ட விசாக்கள் 2 வாரங்களில் மீளப் பெற்றுத் தரப்படும் என்று பொய் சொல்லி யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களை ஏமாற்றி 5 லட்சம் வரை பணம் கறக்கும் கும்பலினால் மக்கள் பலர் பாதிக்கப்படுகின்றனர்.
பணத்தை வாங்கிய பின்னர் கொழும்புக்கு வர சொல்லி வெளிநாட்டு தூதரகங்களில் தாம் பணம் கொடுத்து விட்டோம், நீங்கள் நேர்முகத் தேர்வுக்கு போனால் போதும் என்று சொல்லி முழுத் தொகை பணத்தையும் வாங்கி கொண்டு பாதிக்கப்பட்டவர்களுடன் எதுவித தொடர்புமில்லாமல் அவர்கள் மாறிவிடுகிறார்கள்.
தூதரகங்களினால் தற்போது சகல வகையான விசாக்களும் கூடுதலாக மறுக்கப்படுகின்றன, இது தெரியாமல் எம்மக்களும் அங்கு சென்று தமது கடவுச்சீட்டில் மறுபடியும் விசா மறுப்பு முத்திரை பெற்று வரவேண்டியேற்படுகின்றது.
இந்த ஏமாற்றுக் கும்பல் ஒன்று தற்போது திருநெல்வேலி பலாலி வீதியில், தபால்பெட்டி சந்தியில் வோயோகுஸ் லங்கா (voyogus lanka) எனும் பெயரில் இயங்குகிறது,
மக்களே! இந்த மாதிரி ஏமாற்று கும்பல்களிடம் விழிப்பாக இருங்கள்.
எம் முன்னேற்றத்தின் முட்டு கட்டைகள் இவர்கள் தான், நாம் இதுவரை இழந்தது போதும், உயிர் முதல் உடமை வரை சிங்களவன் எம்மிடம் புடுங்கியே பழகி விட்டான்.
தற்போது சிங்களவன் புது விதமாக தமிழ் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க முனைகிறான், விழிப்போடு இருங்கள்.
பாதிக்கப்பட்ட நபர்.

தர்சிகாவின் உடலம் தோண்டி எடுக்கப்பட்டது.




யாழ்ப்பாணம், வேலணை குடும்பநல உத்தியோகத்தர் தர்ஷிகாவின் சடலம் இன்று முற்பகல் கைதடியில் உள்ள மயானத்தில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது மகள் தர்ஷிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்த மனுவின் அடிப்படையிலேயே சடலம் தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம், கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்த மாத ஆரம்பத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் தர்ஷிகா, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என அவரது தாயார் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, இந்த மரணம் தொடர்பில் சந்தேகநபரான சிங்கள வைத்தியர் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

27 ஜூலை 2010

கருணாஸ் போடும் இரட்டை வேடம்.


சமீபத்திய சிங்களவனின் போர் வெற்றியை கொண்டாடும் வகையில்ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரய்னர் சில்வா என்ற சிங்களவரும்,பஞ்சாபிஒருவரும் இணைந்து நடத்தும் சூரியன் எவ்,எம்மின் 16ம் ஆண்டு தொடக்கவிழாவில் கலந்துகொள்ளவிருந்த கருணாஸ்,தமிழின உணர்வாளர்களின்எதிர்ப்பால் கொழும்பு செல்லும் திட்டத்தை கைவிட்டு இருந்தாலும்,சிங்களவனிடம் வாங்கிய காசுக்கு விசுவாசமாக நடந்து கொண்டுள்ளார்.நேற்றுமுந்தினம் சூரியன் எவ்,எம் நிகழ்ச்சி ஒன்றில் கருணாசும் அவரது மனைவிகிரேஸ் கருணாசும் தாங்கள் இருவரும் இலங்கை வர இயலாமைக்கு வருத்தம்தெரிவித்து,சிங்களவர்களுக்கு திரைப்பட வாழ்த்துப் பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.அது நேரடியாக ஒலிபரப்பப்பட்டுள்ளது.இவர்களது செயல்கள் உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் கோபத்தைஏற்படுத்தியிருக்கிறது.

வவுனியாவில் வர்த்தகர்கள் கடையடைப்பு!


வவுனியாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தலை கண்டித்து வவுனியா வர்த்தகர் சங்கத்தினர் இன்று காலையில் கடையடைப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


வவுனியாவில் தங்குமிட விடுதி நடத்தி வருபவரான புஷ் என்று அழைக்கப்படும் மாரிமுத்து கதிர்காமராஜா(வயது 41) என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டு 06 இலட்சம் ரூபாய் கப்பம் கொடுத்த பின் விடுவிக்கப்பட்டார்.


இந்நிலையிலேயே கடைகளை காலை முதல் மதியம் வரை சுமார் 4 மணித்தியாலங்கள் வரை மூடி விட்டு வவுனியாவின் வர்த்தகர்கள் அனைவரும் சங்கத்தின் எதிரில் கூடி, அமைதியாக அமர்ந்திருந்து, எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தினர்.

வர்த்தகர் மாரிமுத்து கதிர்காமராஜா வெள்ளை வானில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்துப் புலனாய்வு விசாரணை நடத்திக் பொலிஸார் கடத்தல்காரர்களைக் கைது செய்ய வேண்டும் என்று இவர்கள் கோரி உள்ளார்கள். இதனால் வவுனியா நகரம் முழுவதும் வெறிச் சோடிக் காணப்பட்டது.

26 ஜூலை 2010

கண்ணிவெடி அகற்றும் பணியில் பெண்கள்.


இலங்கையின் வடக்கே போர் நடைபெற்ற வன்னிப்பிரதேசத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் பல பெண்கள் ஈடுப்பட்டுள்ளனர். யுத்தச் சூழலில் கணவரை இழந்த பெண்கள், தடுப்புக்காவலில் கணவனைப் பிரிந்துள்ள பெண்கள், கணவன் காணாமல் போனதால் தனித்து வாழும் பெண்கள் ஆகியோர் முன்னுரிமை அடிப்படையில் கண்ணிவெடி அகற்றும் பணிக்கு எவ்எஸ்டி நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.
கண்ணிவெடி அகற்றும் பணியில் 45 பெண்கள் உட்பட 600 பேர் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக எவ்.எஸ்டி நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் கூறுகின்றார்.முல்லைத்தீவு மாவட்டத்திலேயே கண்ணிவெடிகள் மிகவும் நெருக்கமாகக் காணப்படுவதாக கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் கூறுகின்றார்கள். கண்ணிவெடி அகற்றும் பணியில் நவீன உபகரணங்கள் ரிமோட் கண்ரோலில் இயக்கத்தக்க இயந்திரங்கள் என்பன பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கண்ணிவெடி அகற்றும் பணி வேகப்படுத்தப்பட்டிருப்பதாக எவ்.எஸ்டி நிறுவனத்தின் இலங்கைக்கான திட்ட முகாமையாளர் நைஜல் ரொபின்சன் கூறுகின்றார்.

மணலாறில் காயமடைந்த படையினர் முல்லைத்தீவுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.



மணலாறு காட்டுப் பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்த படையினரை ஏற்றிய ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக வன்னியில் இருந்து கிடைத்துள்ள தகவல்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
நேற்று முன்னாள் முற்பகல் சில மணி நேரங்களுக்குள் குறித்த ஆறு அம்புலன்ஸ் வண்டிகள் மருத்துவமனைக்குச் சென்றதாகவும், அதில் இருந்து பல இராணுவத்தினர் காயம் அடைந்த நிலையில் சிகிச்கைக்காக இறக்கப்பட்டதாகவும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
குறித்த இராணுவத்தினர் எந்த வகையில் காயம் அடைந்தனர் என்பது தொடர்பிலான விபரங்களைப் பெற முடியவில்லை. அம்புலன்ஸ் வண்டியுடன் சென்ற இராணுவத்தினர் பதற்றமடைந்து காணப்பட்டதாகவும் வாகனங்கள் மணலாற்றில் இருந்தே அங்கு வந்ததாக அறிய முடிந்ததாகவும் சம்பவத்தினை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மைக் காலமாக வன்னி மற்றும் மட்டக்களப்பு காட்டுப் பகுதிகளில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்தச் சம்பவம் குறித்த தகவலினையே உறுதி செய்ய முடிந்ததாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

25 ஜூலை 2010

ஜெனீவா நோக்கிய நடை பயணத்திற்கு ஆதரவு கோருகிறார் சிவந்தன்.

இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச ரீதியில் சுதந்திரமான, நீதியான போர்க் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும், முட்கம்பி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதி கேட்டு சிவந்தன் மேற்கொண்டுள்ள கால்நடைப் பயணம் 42 மைல்களை எட்டியுள்ளது.


இப்போது தொடர்ச்சியாக ஜெனிவா நோக்கி நடந்து கொண்டிருக்கும் சிவந்தன் அவர்களோடு தற்போதைய நிலை சம்பந்தமான நேர்காணலிலிருந்து...


அவருடைய நடைப் பயணம் தொடர்பாக பதிலளிக்கையில் ஏராளமான வெள்ளையின மக்கள் அவரின் பயணம் வெற்றி பெற வாழ்த்துகின்றனர் என்றும் பல்வேறு வழிகளிலும் உதவிகள் செய்கின்றனர் என்றும் கூறினார்.


அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்களிடமிருந்து உரிய ஆதரவு அவருக்கு இன்னமும் கிடைக்கவில்லை என்று கவலையை தெரிவித்த சிவந்தன் தமிழ் ஊடகங்களும் இந்த விடயத்தை உலகறியச் செய்ய பாடுபட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 6 ஆம் திகதி ஜெனிவாவை வந்தடைந்து விடுவார் என்றும் அப்போது அங்கு புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் ஐ.நா முன்றலில் அணி திரள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

பேரினவாத சிங்களத்தோடு கிரிக்கெட் விளையாட கோத்தபாய அழைப்பு.


லண்டனில் இயங்கிவரும் மிடில் செக்ஸ் தமிழ் விளையாட்டுக் கழகம்(MTSSC) இலங்கை விமானசேவையான ஏர் லங்காவுடன் இணைந்து கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளை வரும் செப்டெம்பர் மாதம் நடாத்தவுள்ளதாக அறியப்படுகிறது. குறிப்பாக பிரித்தானியாவில் உள்ள பல பாடசாலை முன்னாள் மாணவர்கள் இது தொடர்பாக பல சந்திப்புகளை நடாத்தி இருக்கின்றனர். சிலர் சிங்களவனோடு விளையாடக் கூடாது என்றும் சிலர் விளையாடலாம் என்றும் தமது கருத்துக்களைக் கூறியுள்ளனர். விளையாட இருக்கும், அல்லது விளையாட விரும்பும் துடுப்பாட்ட வீரர்களே ஒரு கணம் இதை வாசியுங்கள்!சர்வதேசரீதியாக பல அவப்பெயர்களைச் சம்பாதித்துள்ள இலங்கை அரசு தனது உண்மையான முகத்தை மறைக்கவே இவ்வாறன விளையாட்டுப் போட்டிகளையும், விழாக்களையும் நடாத்தி வருகின்றது என்ற உண்மையை எவராலும் அவ்வளவு சுலபத்தில் மறுத்துவிட முடியாது. இந்திய திரைப்பட விழா இலங்கையில் நடைபெற்றது. அதை தமிழக திரை உலகினர் புறக்கணித்தனர். இலங்கையில் மனித உரிமை இன்னும் மேம்படவில்லை என ஐரோப்பிய ஒன்றியம் வரிச்சலுகைகளை நிறுத்தியுள்ளது. இது அனைத்தையும் நாமே பிழை என்று கூறுவது போல அமைந்துள்ளது எமது செயல்.ஏர் லங்கா நிறுவனம் உட்பட இலங்கையின் உட்பத்திப் பொருட்களை தமிழர்கள் புறக்கணித்து வரும் இவ்வேளை இதுபோன்ற செயல்கள் சிங்கள அரசுக்கே நன்மை பயக்கும் விடயமாக அமையும், சற்று சிந்தித்துப் பாருங்கள்! தமிழ் விளையாட்டுக் குழுக்கள் சிங்களவர்களோடு விளையாடுவதன் மூலம் தமிழர்களுக்கு என்ன லாபம்? மாறாக சிங்கள அரசு இலங்கையில் போர் இல்லை, போர்குற்றம் நடைபெறவில்லை, சர்வதேச சுற்றுலாப் பயணிகள் தாராளமாக வந்துசெல்லாம், மற்றும் தமிழர்கள் மகிந்த அரசோடு பின்னிப் பிணைந்து உள்ளார்கள் என்பதையே உலகிற்கு காட்டும். ஆக மொத்தத்தில் இந்த விளையாட்டுகள் மூலம் சிங்கள அரசே 100% நன்மை அடையப் போகிறது. தமிழர்கள் தலையில் மிளகாய் அரைத்து, போரில் வென்றது போதாது என்று தற்போது தமிழர்களை அடி முட்டாள்கள் ஆக்கப் பார்க்கிறது சிங்களம். தொடர்ந்து அவர்கள் முன்னெடுக்கும் அரசியல் மற்றும் இராஜதந்திர நடவடிக்கை மூலமாக சில தமிழ் பிரமுகர்களை இலங்கை அரசு தன்வசப்படுத்தி வைத்துள்ளது. அவர்களின் முன்னெடுப்புகள் மூலம், தான் நினைத்ததை இலங்கை அரசு சாதித்துவருகிறது. அரசியலையும் விளையாட்டுத் துறையையும் கலக்கவேண்டாம் என்று கூறும் அதீத புத்திஜீவிகளே வாருங்கள்! முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவம் மக்களையும் இளைஞர்களையும் கொல்லும் போது, இவன் விளையாட்டு வீரன் இவனைக் கொல்லவேண்டாம், இவன் கிரிக்கெட் விளையாடுபவன் ஆனபடியால் இவனைக் கொல்லாது விடுவோம் என்று விட்டார்களா? கண்ணில் கண்ட அனைவரையும் அல்லவா கொன்றார்கள்? அப்படி இருக்கும் போது அரசியல் வேறு விளையாட்டு வேறு என்று எவ்வாறு புண்ணாக்கு நியாயம் பேசுவீர்கள்? ஏன் மக்களை திசை திருப்புகிறீகள்? ஏன் மக்கள் மனதை மாற்ற நினைக்கிறீர்கள். மகிந்த அரசுடன் சேர்ந்து இயங்கி அவர்கள் கொடுக்கும் பணத்திற்கும், பதவிக்கும், மற்றும் செல்வாக்காக நீங்கள் இருக்கவேண்டும் என்பதற்காக மற்றத் தமிழர்களை ஏன் பலிகடா ஆக்குகிறீர்கள்?இயன் போத்தாவின் தென்னாபிரிக்க இனவெறி, நிறவெறி அரசிற்கு எதிராக போராட்டம் நடாத்திய பல உலக நாடுகள் , அந்த நாட்டின் விளையாட்டு அணியினரை தமது நாட்டுக்குள் வர அனுமதிக்கவில்லை. அவர்கள் போராட்டம் வேறு அரசியல் வேறு என்று பார்க்கவில்லை. தென்னாபிரிக்க உற்பத்திப் பொருட்களையும் புறக்கணித்தார்கள். சிறிலங்கா கிரிக்கட் அணியினர் தமிழ்நாட்டுக்குள் வரக்கூடாதென்று ,அங்குள்ள தமிழின உணர்வார்கள் எதிர்த்தார்கள் அந்த அறிவு கூட தமிழர்களுக்கு இன்னும் எட்டவில்லையா ?புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில் கிளிநொச்சி சென்று அங்கு வாரக் கணக்கில் தங்கி, மான் இறைச்சி கிடைக்குமா, மரை இறைச்சி கிடைக்குமா என்று கேட்டுவாங்கிச் சாப்பிட்டு கைகள் நனைத்து, அவர்கள் போட்ட உப்பைக் கூட மறந்து சிங்களத்தோடு கைகோர்த்து நிற்பது என்பது, பெற்ற தாயை விபசாரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஒப்பான செயலாகும். லண்டனில் எத்தனையோ விளையாட்டுக் கழகங்கள் இருக்கின்றன, வேற்றின விளையாட்டு வீரர்கள் இருக்கிறார்கள், அல்லது ஐரோப்பா தழுவிய ரீதியில் தமிழர்களுக்கு இடையே விளையாட்டுப் போட்டிகளை நடத்தலாம்... எல்லாவற்றையும் விடுத்து இலங்கை அரசோடு சென்று தான் சொறியவேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்?போர் முடிந்துவிட்டது, இனி அரசுடன் ஒத்துத் தான் போக வேண்டும் என்று ஒரு கும்பல்! அரசுடன் இணைந்து செயல்பட்டால் எமது இலக்கை அடயலாம் என்று ஒரு கும்பல் (தமிழீழத்தை) ! எப்படி இலங்கை அரசு தமிழர்களுக்குள் ஊடுருவி தமிழர்களை அழித்ததோ அதேபோல தாமும் ஊடுருவி அழிக்கப் போவதாக சொல்லிக்கொண்டு இன்னொரு கும்பல் அரசுடன் சேர்ந்து இயங்குகிறது! புனர்வாழ்வுக்கு மட்டும் நாம் இலங்கை அரசோடு இணைவோம் என்று சொல்லும் இன்னொரு கும்பல்! அத்தோடு விளையாட்டு மட்டும் தான், அதுவேறு இது வேறு என்று சொல்லிக்கொண்டு இலங்கை அரசோடு இணைந்து செயல்பட எந்தச் சொல் பதங்களைப் பாவிக்க முடியுமோ அத்தனை சொல் பதங்களையும் பாவிக்கிறான் தமிழன்! ஆகமொத்தத்தில் இன அழிப்பில் ஈடுபட்ட மகிந்த அரசுடன் இணைந்து செயல்பட சில தமிழர்கள் கங்கணம் கட்டி நிற்பதைப் பார்த்தால், நாம் எல்லாம் ஒரு இனம் தானா என்ற கேள்விதான் எழுகிறது. சூடு சுறணை, வெட்கம், மானம், ரோஷம் எதுவும் எமக்கு இல்லையா? நாம் எல்லாம் தமிழ்த் தாயின் பாலைத் தான் குடித்து வளர்ந்தோமா? இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நியாயம் வேண்டும் என்று வேற்றின மக்கள், மனிதநேய அமைப்புகள், ஐ.நா போன்ற அனைத்து அமைப்புகளும் சொல்கின்றன. ஆனால் இவ் அமைப்புகள் வெட்கி நாணிக் கோணும் வகையில் சில தமிழர்கள் நடந்துகொள்கிறார்கள். யார் பலமாக இருக்கிறார்கள் என்று பார்த்து அங்குபோய் ஒட்டுக்கொள்ளும் இவர்கள் போன்ற பச்சோந்திகள் இருக்கும்வரை எமது இனத்திற்கு விடுதலை என்பது ஒரு எட்டாக் கனியாகவே இருக்கப்போகிறது. இவர்கள் திருந்த வேண்டும் அல்லது திருத்தப்படவேண்டும் !சிங்களப் பேரினவாதிகளோடு, கிரிக்கெட் விளையாடுவது தொடர்பாக மிடில் செக்ஸ் தமிழ் விளையாட்டுக் கழக முக்கியஸ்தர், வினாயகம் சங்கரலிங்கம் என்பரோடு அதிர்வு இணையம் தொடர்புகொண்டு அவர் பக்க கருத்துக்களை கேட்டறிய முனைந்தபோது, மிகவும் பரபரப்படைந்த அவர், எதையும் கூற மறுத்துவிட்டார். எதுவாக இருந்தாலும் தான் கதைப்பதற்கு தயார் இல்லை என்று கூறிய சங்கரலிங்கம் அவர்கள் இலங்கை அரசின் செயல்களை ஞாயப்படுத்தவே பெரிதும் முன்றார். அத்தோடு, கடும் கோபமும், ஆத்திரமும் அடைந்த அவர் தொடர்ந்து பேச மறுத்து தொலைபேசியையும் துண்டித்தார்.

24 ஜூலை 2010

யாழ்,மாவட்ட பொது சுகாதார வைத்திய பிரிவுகளில் இரகசிய குடும்பக்கட்டுப்பாடு!



யாழ்.மாவட்டத்தில் உள்ள சகல பொதுச்சுகாதார வைத்திய பிரிவுகளிலும் சுமார் 40 பேருக்கு கட்டாய குடும்பக்கட்டுப்பாடு செய்வதற்கான நடவடிக்கைகள் மிகவும் இரகசியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கென தென்னிலங்கையில் இருந்து வைத்தியர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதுபோன்ற சம்பவங்கள் முன்னர் மலையகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மிகவும் இரகசியமான முறையில் யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்தத் தகவல்கள் மாவட்டத்தின் முக்கியமான நிலைகளில் உள்ள வைத்தியர்களினாலேயே கசியவிடப்பட்டுள்ளது. எனினும் உத்தியோகபூர்வமான கடிதங்கள் எவையும் கிடைக்கப் பெறவில்லை என அவர்கள் பூசிமெழுகிக் கொள்கின்றனர்.
ஏற்கனவே யாழ்.மாவட்டத்தில் பிறப்பு விகிதம் குறைவடைந்துள்ளது. வருடத்திற்கு 7 தொடக்கம் 8 ஆயிரம் வரையே உள்ளது.
இந்நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் இனத்தின் பெரும்பான்மையை பாதிக்கும் ஒரு செயற்பாடாக அமையும் என மாவட்டத்தின் சமூக ஆர்வலர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நெடுந்தீவு கடற்கரையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலம்.


நெடுந்தீவு கடற்கரைப் பகுதியில் இனம் தெரியாத சடலம் ஒன்று தலை வெட்டப்பட்ட நிலையில் கடற் தொழிலுக்குச் சென்ற மீனவாகளினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக நெடுந்தீவுப் பொலிசாருக்கு மீனவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் உரிய இடத்திற்க்குச் சென்ற பார்வையிட்டதடன் ஊர்காவற்துறை நீதிபதி இ.வசந்த சேனனின் கவனத்திற்க்கு கொண்டுவந்தார்கள்.
ஊர்காவற்துறைக்குச் சென்று சடலத்தை பார்வையிட்ட நீதிபதி சடலத்தை அடையாளம் கானும் முகமாகவும் பிரேத பரிசோதனைக்காகவும் சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கும் படி கட்டளையிட்டதன் பெயரில் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது . சுமார் 40 வயது மதிக்கத் தக்கவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.

இளையோர் முன்னெடுத்த கருப்பு ஜூலை நினைவுகள்!





யூலை 1983 இன் பொழுது தமிழ் மக்கள் மீது அநியாயமாக நிகழ்த்தப்பட்ட இனக்கலவரங்கள் தமிழ் மக்களின் மனங்களை பெருமளவில் பாதித்திருக்கின்றன. தொடர்ந்து ஏழு நாட்களாக தமிழர் வாழ்ந்த பகுதிகளில் அவர்களை நிம்மதியாக வாழ முடியாதபடி இவ்வினக்கலவரங்கள் இலங்கை அரசினாலும் சிங்கள மக்களினாலும் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டன.
யூலை இனக்கலவரத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் வாழ்வை, வீட்டை, சொத்தை, நிம்மதியை, உறவினரை இழந்து தவிர்தனர், இன்றும் தவிர்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறான கறுப்பு யூலையினை தமிழ் மக்கள் மனதில் நிறுத்தி ஆண்டு தோறும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் கனடா நாட்டில் தமிழ் இளையோர் அமைப்பினாலும் University of Toronto St. George, University of Toronto Missisauga, University of Toronto Scarborough Campus, York University, Guelph and Humber, Ryerson University ஆகிய ஆறு பல்கலைக்கழகங்களின் தமிழ் மாணவர் அமைப்புகளினாலும் “I Remember” என்னும் கறுப்பு யூலை நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வு புதன் யூலை 21, 2010 அன்று Ryerson பல்கலைக்கழகத்தில் பிற்பகல் 4:30க்கு அகவணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில் மாணவர் மட்டுமே கறுப்பு ஆடை அணிந்தவாறு கலந்து கொண்டனர். “I Remember” நிகழ்வு முழுக்க முழுக்க மாணவரால் ஒழுங்கு செய்யப்பட்ட நிகழ்வு என்பதும் தமிழ் மற்றும் வேற்றினத்து மாணவருக்கு கறுப்பு யூலை பற்றி அறிவூட்டும் வகையில் நடத்தப்பட்ட நிகழ்வு என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாணவர் கலந்து கொண்டனர்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து கறுப்பு யூலையின் ஏழு நாள் துயரங்களை பற்றி பல்கலைக்கழக மாணவரால்அமைக்கப்பட்ட கண்காட்சிகள் மூலம் மாணவருக்கு கறுப்பு யூலை பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பல்கலைக்கழக மாணவரால் தயாரிக்கப்பட்ட காணொலிகள் ஒளிப்பரப்பப்பட்டன. இதனைத் தொடரந்து, கறுப்பு யூலையின் பொழுது தமிழருக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளையும் அநியாயங்களையும் நாடகங்கள், கவிதைகள் ஆகியவற்றின் ஊடாக மாணவர் சித்தரித்தனர்.
மேலும், அவர்களின் உணர்வுகளை ஓவியம், எழுத்து, பேச்சு போன்றவற்றின் ஊடாகவும் வெளிப்படுத்தினர். நிகழ்வின் நிறைவில் நாம் ஒற்றுமையாய், மனம் தளராமல் எமது தாயகத்திற்காய் உழைப்போம் என்னும் கருத்தினை அனைத்து பல்கலைக்கழக மாணவரும் முன்வைத்தனர். பிற்பகல் 8:00 மணிக்கு கறுப்பு யூலை நிகழ்வு நிறைவு பெற்றது.

23 ஜூலை 2010

அசினின் படங்களுக்கு தடை விதிக்க மீனவர் அமைப்புக்கள் கோரிக்கை.


தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்க நிறுவனத்தலைவர் கபடிமாறன், அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்க தலைவர் மகேஷ், தென்னிந்திய மீனவர் பேரவைத்தலைவர் ஜெயபாலன் ஆகியோர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, ‘’தமிழக மீனவர்கள் படுகொலையை கண்டித்து தமிழக மீனவர்களுக்காக பேசிய ஒரு காரணத்திற்காக கைது செய்யப்பட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருக்கும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்குகளை வாபஸ் பெற்று அவரை உடனே விடுதலை செய்ய வேண்டும்.
அவர்கள் மேலும், ‘’மீனவர் செல்லப்பன் கொலையை நியாயப்படுத்திய தென்னிந்திய கடலோர காவல்படை கமாண்டர் ராஜசேகரை கண்டிக்கிறோம்.
தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை வேடிக்கை பார்க்கும் இந்திய கடற்படையை கண்டிக்கிறோம்.
மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படுவதை கண்டித்து இலங்கை திரைப்பட விழாவிற்கு தடை விதித்த தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைக்கு நன்றி தெரிவிக்கிறோம்.
ராஜபக்சே அரசின் விளம்பர தூதர்களாக செயல்படும் நடிகை அசின், விவேக் ஓபராய் மற்றும் இந்திய படவிழாவில் பங்கேற்ற திரைப்படங்களுக்கு திரைப்பட சங்கங்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

கருணாநிதிக்கு நள்ளிரவில் கொலை மிரட்டல்.



தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்கு நள்ளிரவில் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அந்த நபரைப் பிடிக்க பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
இது பற்றி தெரியவருவதாவது:-
நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் போனில் பேசினார். அந்த நபர் கூறுகையில், கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் வெடிக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.
இதேபோல 108 அம்புலன்ஸ் சேவை மையத்தையும் தொடர்பு கொண்டு இதேபோல கூறியுள்ளார்.
இதையடுத்து பொலிஸார் குவிக்கப்பட்டனர். விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. ஆனால் வீட்டில் எங்குமே குண்டு சிக்கவில்லை. இதையடுத்து அது வெறும் புரளி எனத் தெரிய வந்தது. இந்த மிரட்டலை விடுத்த நபரைக் கண்டுபிடிக்க பொலிஸார் நடவடிக்கையில் இறங்கினர்.
மிரட்டல் வந்த இரண்டு தொலைபேசி எண்களை வைத்து பொலிஸார் விசாரித்தபோது ஒரு முகவரி அரும்பாக்கத்திலும், இன்னொரு முகவரி தாம்பரத்திலும் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். ஆனால் மிரட்டல் விடுத்த நபர் சிக்கவில்லை. தொடர்ந்து அவரை தேடி வருகிறார்கள்.

இலங்கை அரசை கண்டித்து லண்டனில் போராட்டம்.




நீதியும் , சுதந்திரமுமான யுத்தக் குற்ற விசாரணை இலங்கையில் நடத்தப்பட வேண்டும், இலங்கைச் சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளை சென்று எவரும் பார்வையிடக் கூடிய சூழல் உருவாக்கப்பட வேண்டும், இலங்கை அரசு மனித உரிமைகளை மதித்து நடக்கும் வரை அந்நாட்டை புறக்கணிக்க வேண்டும் ஆகிய மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்நிறுத்தி பிரித்தானிய தமிழர் பேரவை இன்று இரவு நீதிக்கான பயணம் என்கிற பெயரில் லண்டனில் மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கிறது.


இந்தப் போராட்டம் ரொட்ஹில் வீதியில்(வெஸ்ட் மினிஸ்ரர் மெதடிஸ்த் தேவாலயத்துக்கு அருகில்) லண்டன் நேரம் இரவு 9.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை இடம்பெற உள்ளது.


புலம்பெயர் தமிழர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளார்கள்.

ஐ.நா.நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும்.


ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுணர் குழுவை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், ஐக்கிய நாடுகள் சபையினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவை இலங்கை அரசு எதிர்த்தது எதிர்த்ததாகவே இருக்கும் எனவும் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இலங்கை அரசாங்கம் இன்று உறுதியாக அறிவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளரினால் நியமிக்கப்பட்ட இந்த குழுவை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும், இலங்கை அரசு முன்னர் தெரிவித்தது போன்று தமது நிலைப்பாட்டில் மாற்றம் ஏதும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.விசாரணைக்குழு தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் பல நாடுகளுடன் இலங்கை அரசு பேச்சுவார்த்தைகளை நடத்திவருவதாகவும் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவின் செற்பாடுகளும் அவர்களின் தீர்மானங்களுக்கும் அமையவே இலங்கை அரசாங்கத்தின் செற்பாடு அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

22 ஜூலை 2010

வேலணையில் வைத்தியரின் பேயாட்டம்-ஒரு ஆய்வு.




எங்களுக்கு நிம்மதியே கிடையாது. துப்பாக்கிச் சூடு, வெட்டுக்கொத்து, கொலை பாலியல் பலாத்காரம் இவைதான் எங்கள் துன்பப்பட்டியல். இந்தத் துன்பத் திற்கு முடிவும் இல்லை, விடிவும் இல்லை. யுத்தம் வாட்டி வதைத்தது. உயிரிழப்புக்கள்,சொத்து அழிவுகள் இதனிடையே மீளக்குடியமர்வில் படும் இடர்பாடுகள். இவற்றின் மத்தியில் பேரினவாத சிந்தனையில் மூழ்கிப் போயுள்ள சிங்கள அதிகாரிகள் சிலரிடம் சீறிப்பாயும் இனவெறியும் எங்கள் இனத்திற்கு ஈனமாகிப் போயுள்ளமை வேதனையிலும் வேதனை. இந்தத் துன்பத்தின் ஓர் அத்தியாயமே வேலணை அரசினர் வைத்தியசாலையில் நடந்தேறியது.
தர்சிகா 27வயது நிறைந்த இளம் குடும்ப நல உத்தியோகத்தர். வேலணைத் துறையூரில் வெளிக்களப்பணியில் கடமையாற்றி வந்தார்.வேலணை வைத்தியசாலையில் பிரசவ விடுதியில் கடமையாற்றும் குடும்ப நல உத்தியோகத்தர் லீவில் செல்லும் போது தர்சிகா பதில் கடமையைச் செய்ய வேண்டியதாயிற்று. கடந்த 9 ஆம் திகதி இரவுக் கடமையில் தர்சிகா ஈடுபட்டிருந்தார்.
அந்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியாக சிங்களவரான டாக்டர் பிரியந்த செனவிரத்ன கடமையாற்றினார்.கடந்த 9 ஆம் திகதி பதில் கடமையில் இருந்தபோது டாக்டர் செனவிரத்ன தர்சிகாவை திட்டத்தொடங்கினார். கையடக்கத் தொலைபேசியில் தர்சிகா உரையாடியதை சாட்டாக வைத்து, டாக்டர் செனவிரத்ன தர்சிகாவை அதட்டினார், மிரட்டினார். அடிப்பதற்கு கை ஓங்கினார், கையடக்கத் தொலைபேசியைப் பறித்தெடுத்தார்.
டாக்டரின் இனம்புரியாத வெறித்தனத்தால் விடுதியில் இருந்த நோயாளிகள் பயத்தில் உறைந்து போயினர். இப்படி ஒரு டாக்டரா? இரவு 7 மணிக்கு தர்சிகாவை திட்டத்தொடங்கிய டாக்டர் சென விரத்ன, நடுச்சாமம் 12 மணியாகியும் தனது திட்டலை விட்டபாடில்லை.
கைதடியைச் சொந்த இடமாகக் கொண்ட தர்சிகா தனது பொறுப்பதிகாரியின் பொறுப்பற்ற செயலால் விம்மி விம்மி அழுதார். சக பணியாளர்கள் அவருக்கு ஆறுதல் கூறமுடியாமல் தவித்தனர்.கூடவே இரவு வேளையிலும் வைத்தியசாலைக் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் டாக்டரின் சத்தத்தில் மிரண்டு போயினர்.என்ன செய்வது ஏன் டாக்டர் இப்படி…. என்று கேட்டால் அது வினை யாகிவிடும் என்ற பயம் ஒரு புறம். அதேநேரம் ஒரு இளம் தமிழ்ப் பெண்ணை சிங்கள டாக்டர் ஒருவர் இப்படித் திட்டுகிறாரே என்ற வேதனை மறுபுறமாக அவர்கள் குழம்பிப் போயினர்.நான்கு மாதங்களுக்கு முன்னர் கட்டடப் பணியாளர் ஒருவருக்கு பிரஸ்தாப டாக்டர் அடித்த சம்பவம், அத னைத் தொடர்ந்து பணியில் புறக்கணிப்பு, பின்னர் உயர் அதிகாரிகளின் சமரசம் என்ற நினைப்புகள் டாக்டரை நெருங்குவதற்குத் தடை விதித்தன. இதனால் கட்டடப் பணியாளர்கள் சம்பவத்தை அவதானித்துக்கொண்டே இருந்தனரே தவிர வேறு எதனையும் அவர்களால் செய்ய முடியாமல் போக, டாக்டரின் அதட்டலில் அதிர்ந்து போன தர்சிகா அழுது களைத்து மயங்கி விழுந்தார்.
சக பணியாளர்கள் அவ ருக்கு முதலுதவிச் சிகிச்சை அளித்தனர். சாமத்தோடு டாக்டரின் பேயாட்டம் தணிந்து உறங்கிக் கொண்டார். அந்த உறக்கம் கூட,அதிகாலையில் நடக்கப்போகும் அவரின் உருத்திர தாண்டவத்திற்கான ஓய்வாகவே இருந்தது.
பத்தாம் திகதி மீண்டும்….
மயங்கிக் களைத்து விழித்த தர்சிகா மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கெல் லாம் எழுந்து தனது கடமையை ஆரம்பித்தார். அவரின் முகத்தில் சோக ரேகை களின் ஆக்கிரமிப்பு- அந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் உறங்குவது போல தர்சிகாவைப் பார்த்தனர். அந்த பிள்ளைக்கு எங்களால் உதவ முடியவில்லை என்ற வேதனை அவர்க ளின் நெஞ்சங்களை அடைத்துக் கொண்டது. 10 ஆம் திகதி காலை 7மணிக்கு சீருடையுடன் வரவுப் புத்தகத்தில் கையயாப்பமிட்ட தர்சிகா,
தனது கையடக்கத் தொலைபேசியைத் திருப்பித்தருமாறு டாக்டரிடம் வினயமாகக் கேட்க, அவர் மீண்டும் தாண்டவம் ஆடினார். காலை வேளையில் கூட தனது இரத்தக் கொதிப்பை டாக்டரால் கட்டுப்படுத்த முடியவில்லை. சில மணி நேரங்கள் அமைதியாக கடந்தன. அந்த அமைதிக்குள் நோயாளர்களை சோதிக்கும் பணி ஒருபுறத்தில் ஆரம்பமான போது தர்சிகா எங்கே? சக பணியாளர்கள் தேடிக்கொள்ள அவர் களோடு சேர்ந்து டாக்டர் செனவிரத்னவும் தர்சிகாவை தேடுமாறு கூறியுள்ளார்.
விடுதியை நோக்கிச் சென்ற இரண்டு பெண் பரிசாரகர்கள் கதவைத் தட்டினர். கதவு பூட்டப்பட்டிருந்தது. விடுதியின் பின்புறமாக உள்ளே ஜன்னலைத் திறந்து பார்த்த போது அதிர்ந்து போனார். மின்விசிறியில் பிணைக்கப்பட்ட கயிற்றில் தர்சிகா தொங்கிக்கொண்டிருந்தார்.
பெண் பரிசாரர்கள் இருவரும் அலறி அடித்துக்கொண்டு ஓடிச் சென்று தர்சி காவின் நிலையைக் கூற, பணியாளர் கள் எல்லோரும் ஓடிச் சென்று கதவை உடைத்து தர்சிகாவைப் பார்க்க, அவரின் உடல் மட்டுமே எஞ்சியிருந்தது. இரவு முழுவதும் அழுது கொண் டிருந்த தர்சிகா காலையில் நம்பிக்கையோடு கையயாப்பமிட்டவர் ஏன் அப்படி செய்ய வேண்டும்?
கயிற்றில் தொங்கிய நிலையில் குடும்பநல உத்தியோகத்தர்இந்த இனம்புரியாத கேள்விகளுக்கு மருத்துவத்துறையும் நீதித்துறையுமே பதில் காண வேண்டும். ஓ!உயிரைக்காப்பாற்றவேண்டிய புனிதமான வைத்தியப்பணி பேயாட்டம் ஆடி, ஆடுதா,கோழிதா, மனித உடலைத் தா என்று கதறியதில் அருமந்த தமிழ் இளம் மருத்துவ மாதுவை பலி கொடுக்க வேண்டியதாயிற்று. இந்த சோகம் தமிழர் வாழும் இடங்கள் எல்லாம் புயலாய் வீசுகின்றது. உண்மைகள் கண்டறியப்படவேண்டும். ச… See moreிறுபான் மைத் தமிழர் என்றால் எங்களுக்கு அடிமை. நாங்கள் கேட்டால் அவர்கள் வந்தாகவேண்டும் என்ற பேரின வாத சிந்தனையை வெட்டிவிழுத்த மருத்து சமூகம் முன்வரவேண்டும். வேலணை வைத்தியசாலைப் பணி யாளர்கள்,அங்கு அனுமதிக்கப்பட் டிருந்த நோயாளர்கள் ,கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இணைந்து உண்மையைச் சொல்லவேண்டும். அதுவே இது போன்ற அவலம் மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கான உத்தரவாதமாக அமையும்.
அதேநேரம் யாழ்ப்பாணத்தில் கடமையின் நிமித்தம் வரும் தென்பகுதி பணியாளர்கள் பற்றி நாம் விழிப்பாக இருப்பது கட்டாயமானதாகும். குற்றம் புரியும் தென்பகுதி அரச பணியாளர்களின் இடமாற்றத்திற்குரிய பிரதேசமாக யாழ்ப்பாணத்தை எவரும் கருதி விடாமல் இருப்பதற்கு அவதானிப்புக்கள் அவசியம். ஓ! இந்த மண்ணை விட்டு வெளி யேறிய யாழ்ப்பாணத்தின் மருத்துவர் களே! எங்கள் உடலை வெட்டி பரிசோ தனை செய்து படித்த மருத்துவ கலாநிதிகளே!
உங்கள் வருமானத் தேடலின் ஆசைக்கு தமிழினத்தின் சோதரியை ஆகுதியாக்கியுள்ளோம்.ஏற்றிடுக. சிலவேளை யாழ்ப்பாண மண்ணை பார்ப்பதற்காக நீங்கள் கறுத்தக்கண்ணாடியும் அரைக்காற்சட்டையும் அணிந்து கொண்டு வேற்று நாட்டவர் போல வந்து போகலாம். அவ்வாறு வரும் சந்தர்ப் பம் கிடைத்தால் நீங்கள் பயிற்சி எடுத்த யாழ்.போதனா வைத்தியசாலையை ஒரு தடவை பாருங்கள். அது நன்றிக் கடனாக இருக்கும். அந்நேரத்திலாவது உங்கள் கறுத்தக் கண்ணாடிகளைக் கழற்றி விடுங்கள் ப்ளீஸ்.

அமெரிக்கா பாடம் சொல்லி தரத் தேவையில்லை-ஹெகலிய.


இலங்கைக்கு அமெரிக்கா பாடம் சொல்லித் தரத் தேவை இல்லை என்று அரசின் பேச்சாளரும் ஊடக அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கடுமையாக சாடி உள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்த மத்திய ஆசிய தென்னாசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சரினால் நேற்று ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் தொடர்பாகவே கெஹலிய இவ்வாறு கொக்கரித்துள்ளார்.

இலங்கையில் ஜனநாயகம், தேசிய, நல்லிணக்கம், ஊடக சுதந்திரம் ஆகியவற்றை அரசு பேணிப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசமைப்பின் 17 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்திப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ரொபேர்ட் பிளேக் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையிலேயே இக்கருத்துக்களைக் கூற ரொபேட் பிளேக்குக் எவ்வித உரிமையும் சரி, அருகதையும் சரி கிடையாது என்றும், அவர் இலங்கைக்கு பாடம் சொல்லித் தரத் தேவை இல்லை என்றும் இலங்கையில் உள்நாட்டு விடயங்களில் மூக்கு நுழைக்கத் தேவை இல்லை என்று அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் சீறிப் பாய்ந்தார்.

ஐ.நா.நிபுணர் குழு நவநீதம்பிள்ளையின் கீழ் இயங்கும்.



ஐ.நா இலங்கையின் பதிலளிக்கும் கடப்பாடுகள் தொடர்பாக ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட நிபுணர்குழுவுக்கு தேவைப்படும் அதிகாரிகளை வழங்கும் விவகாரம் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்தினால் கையாளப்படுவதாக ஐ.நா.பேச்சாளர் மார்ட்டின் நீசேர்கியை மேற்கோள் காட்டி இன்னர்சிற்றி பிரஸ் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இதேவேளை, நேபாளத்தில் தற்போது ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பிரதிநிதியாக பணியாற்றி வந்த ரிச்சர்ட் பென்னெற் நிபுணர் குழுவின் தலைமை அதிகாரியாக பணியாற்றவுள்ளார்.நவநீதம்பிள்ளையின் சிநேகிதியான ஜெசிக்கா நியூபேர்த் நிபுணர்குழுவின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்படவிருப்பதாக இன்னர்சிற்றி பிரஸ் முன்னர் தெரிவித்திருந்த போதும் அவர் நியமிக்கப்படமாட்டார் என்று நீ சேர்கி கூறியுள்ளார்.
ஐ.நா.பேச்சாளரை மேற்கோள் காட்டி ஐ.நா.செய்திகள் நிலையம் மேலும் தெரிவித்திருப்பதாவது;
"நிபுணர் குழுவின் தலைமை அதிகாரி ரிச்சட் பென்னெற் நிபுணர் குழுவானது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும். பென்னெற் இதுவரை நேபாளத்தின் ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் பிரதிநிதியாக இருந்தார்.முன்னர் ஆப்கானிஸ்தானிலும் இவர் இதே பதவியை வகித்தார்.
"அரசியல், மனிதாபிமான, சட்ட விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் நாயகங்கள், மனித உரிமைகளுக்கான பிரதி உயர் ஸ்தானிகர்கள், ஐ.நா.தலைமை அதிகாரி செயலாளர் நாயக அலுவலகத்தின் அரசியல் பணிப்பாளர் ஆகியோரின் தலைமையின் கீழ் நிபுணர் குழு உறுப்பினர்கள் சந்திப்பார்கள் என்றும் பேச்சாளர் கூறியுள்ளார்.
"சிறியளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிபுணர் குழுவின் சபைப்பகுதியில் முழுநேரம் பணியாற்றுவார்கள். அதேசமயம் சம்பந்தப்பட்ட விடயங்கள் கையாளப்படும்போது அவற்றில் பொருத்தமான அனுபவங்களைப் பெற்றவர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்றும் ஐ.நா.பேச்சாளர் கூறியுள்ளார்.

21 ஜூலை 2010

மனித உரிமைகள் அதிகாரி தலைமையில் குழு.


ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கை தொடர்பாக நியமித்த ஆலோசனைக்குழு நேற்றும் அதன் அமர்வுகளை நடத்தியுள்ளது. மூன்று உறுப்பினர்களை கொண்ட இந்த குழுவுக்கு உதவி செய்யும் உத்தியோகத்தர்கள் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அலுவலக அதிகாரி ரிச்சர்ட் பெனெற் தலைமை தாங்குகிறார் என்று ஐக்கிய நாடுகள் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.குழுவுடன் இணைந்து பணியாற்றும் சிறு குழுவின் சீரான இயக்கத்தை உறுதி செய்வதற்கான ஆலோசனைக் குழு தொடர்ந்து 3 நாட்களுக்கு கூடவிருக்கிறது. ஆழ்ந்த அனுபவத்தை கொண்டுள்ள சிறு குழுவில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்கள் அனைவரும் முழு நேரம் கடமையாற்றுபவர்களாவர் என்று செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெஸிர்கி நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பாலகுமார்,யோகி பற்றி எதுவும் தெரியாது என்கிறார் குணசேகர.

கடந்த சில தினங்களில் போரின் போது கணவர்களை இழந்த பெண்களின் மறுவாழ்வு தொடர்பான கூட்டங்களை அரசு வடபகுதியில் நடத்தியுள்ளது. இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்திருத்தத் துறை அமைச்சர் டியூ குணசேகரா அவர்கள் இந்தக் கூட்டங்களை நடத்தியுள்ளார்.
தெல்லிப்பளையில் இடம் பெற்ற கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்களான பாலகுமாரன் மற்றும் யோகி ஆகியோரின் மனைவிகளும் அவரை சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பின் போது இவர்கள் தமது கணவர்கள் குறித்து தம்மிடம் ஏதும் பேசவில்லை என்றும், திருமதி பாலகுமார் மட்டும் தமது குழந்தைகள் குறித்து தம்மிடம் கேட்டதாகவும் அமைச்சர் டியூ குணசேகர தமிழோசையிடம் கூறியுள்ளார்.
அதே போல யோகியின் மனைவி தான் கஷ்டத்தில் இருப்பதாகவும் தனக்கு உதவும்படி கோரியதாகவும் அமைச்சர் கூறுகிறார்.
போரின் இறுதியில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களின் பெயர் விபரங்களை இலங்கை அரசு வெளியிட்டது. ஆனால் அதில் பாலகுமார் மற்றும் யோகியின் பெயர்கள் இடம்பெறவில்லை.
இவர்களும் வேறு சில தலைவர்களும் அரச படையினரிடம் சரணடைந்ததாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. மனித உரிமைகளுக்கான யாழ் பல்கலைக் கழக ஆசிரியர்கள் அமைப்பும் இவர்கள் சரணடைந்ததாக கூறியிருந்தது.
எனினும் பாலகுமார் மற்றும் யோகி ஆகியோர் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பது குறித்து தனக்கு தெரியாது என்று கூறும் டியூ குணசேகர அது தொடர்பான விவாதத்தில் இறங்கத் தான் தயாராக இல்லை எனவும் கூறுகிறார்.
அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை பராமரிப்பது மட்டுமே தமது பொறுப்பு என்றும், அவர்களின் விசாரணை தொடர்பான விடயங்கள் தனது அதிகார வரம்புக்குள் வராது எனவும் அவர் கூறுகிறார்.
இலங்கை அரசு சுமார் 8000 போராளிகள் தடுப்பு முகாம்களில் வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது. ஆனால் அவர்களின் பெயர் விபரங்களை வெளியிட அது தொடர்ந்து மறுத்து வருகிறது.

20 ஜூலை 2010

சிங்கள வைத்தியரை சிறையில் வைத்த தமிழ் அதிகாரி மீது தாக்குதல்.




வேலணை மருத்துவமாது தர்ஷிகா கொலை வழக்கின் சந்தேக நபரான சிங்கள மருத்துவரை சிறையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டபோது, யாழ்ப்பாணச் சிறையில் அடைப்பதற்காக அவரைக் கூட்டிச் சென்ற சிறைச்சாலை அதிகாரி மீது கடந்த சனிக்கிழமை இரவு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தம்மீது தாக்குதல் நடத்தியதாக குறித்த சிங்கள மருத்துவர் குற்றஞ்சாட்டியுள்ளமையை அடுத்தே 31 வயதான நந்தகுமார் எனப்படும் சிறைச்சாலை அதிகாரிமீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு ஆனைக்கோட்டையிலுள்ள நந்தகுமாரின் வீட்டுக்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த எட்டு நபர்களே இவர்மீது தாக்குதல் நடத்தியதோடு அவரின் வீட்டையும் அடித்து நொருக்கியுள்ளனர்.இதேவேளை, இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரமிக்க அரசியல்வாதிகள் உட்பட பலர் தமக்கு அச்சுறுத்தல்களை விடுத்துள்ளதாகவும், இந்த அச்சுறுத்தல்களை அடுத்தே தம்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் மானிப்பாய் போலீஸ் நிலையத்தில் நந்தகுமார் கொடுத்துள்ள முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்திலுள்ள இலங்கை இராணுவத்துடன் இயங்கிய துணைக்குழுக்கள் நடத்தும் கொலை மற்றும் பிற தாக்குதல்களை ஒத்ததாகவே தற்போது நந்தகுமார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உள்ளதாக குடாநாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.

குஷ்பு பேசியதை நாட்டு மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.


ஈரோட்டில் மதிமுக தொண்டரணி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. மதிமுகவின் கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர்,’’செம்மொழி மாநாட்டில் உண்மையான கவிஞர்களை அழைக்கவில்லை. ஜால்ரா அடிக்கும் சிலரையும், குடும்ப அங்கத்தினரையும் வைத்து நடத்தினர். இதில் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது’’என்று பேசினார்.
அவர் மேலும், ‘’கற்பை பற்றி கேவலமாக பேசிய குஷ்பு, திமுக கொள்கையுடன் எனது கொள்கையும் ஒத்துப் போனதால் அந்த கட்சியில் இணைந்ததாக கூறுகிறார். இதை நாட்டு மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்’’என்று பேசினார்.

ஐ.நாவின் நிபுணர் குழு முதற் தடவையாக கூடியுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன்,இலங்கை தொடர்பி;ல் தமக்கு ஆலோசனை வழங்க, நியமித்துள்ள நிபுணர் குழு நேற்று முதல் தடவையாக கூடியுள்ளது
அமெரிக்க நியூயோர்க்கில் இந்தக்குழு கூடியதாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.
நான்கு மாதத்தில் தமது அறிக்கையை சமர்ப்பிக்கும் வகையில் இந்தக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்தக்குழுவின் விசாரணைகள் இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள உண்மையை கண்டறியும் குழுவுக்கு ஒத்திசைவான வகையில் போர்க்குற்றங்கள் தொடர்பில் தமது விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் வடக்கு லோன் கட்டிடத்தில் குழுவின் தலைவர் மர்சூகி தாருஸ்மான், உறுப்பினர்களான யஸ்மின் சூக்கா மற்றும் ஸ்டீவன் ரட்னர் ஆகியோர் பிற்பகல் 1.30க்கு தமது கலந்துரையாடலை ஆரம்பித்ததாக இன்னர் சிட்டி பிரஸ் தெரிவித்துள்ளது.

19 ஜூலை 2010

வேலணையில் கொலையுண்ட தர்சிகாவின் குடும்பத்தினருக்கு கொலை அச்சுறுத்தல்.


வேலணை வைத்தியாசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் தர்ஷிகா கொலை செய்யப்பட்டதையடுத்து தர்ஷிகாவின் குடும்பத்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவத்துடன் தொடர்பான சந்தேக நபர் டாக்கடர் பிரியந்த செனவிரட்ணவை பிணையில் செல்வதற்கு மேல்நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியது.இந்நிலையில் சில நபர்கள் மோட்டார் சைக்கிளில் பல தடவைகள் வந்து இந்த கொலை அச்சுறுத்தல்களை விடுத்ததாகவும், தனது மகள் பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்ட பின்னரே படுகொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி தர்ஷிகாவின் தாயார் மனுவொன்றினை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றில் தாக்கல் செய்தார். மேலும் தர்ஷிகாவின் சடலத்தினை மீண்டும் தோண்டியெடுத்து பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தவும், அதற்கான உத்தரவை வழங்க வேண்டும் எனவும் தர்ஷிகாவின் தாயார் இன்று நீதிமன்றத்தில் கையளித்திருந்நத மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து ஊர்காவற்துறை பொலிஸார் சாவகச்சேரி பொலிஸாருடன் தொடர்பு கொண்டு அவர்களது குடும்பத்தினருக்கும் அவருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என இன்று ஊர்காவற்துறை நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கின்றார். இதனிடையே பிணையில் விடுவிக்கப்பட்ட சந்தேக நபர் வைத்தியர் பிரியந்த செனவிரட்ண இன்று நீதிமன்றில் ஆஜரானமை குறிப்பிடதக்கது.

ஐ.நா.விடும் தவறுகளை சிறிலங்கா தனக்கு சாதகமாக பயன்படுத்தலாம்.




ஐ.நாவில் ஏற்பட்டுள்ள ஒழுக்கமற்ற நிலமை தொடர்பான விழிப்புணர்வை பான் கீ மூனுக்கு ஏற்படுத்த வேண்டும். ஐ.நா விடும் தவறுகளை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஐ.நாவின் ஆலோசனைக்குழுவை கலைத்துவிடலாம் என ஐ.நாவின் ஊடக அமைப்பான த இன்னசிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது
சிறீலங்கா மீதான போர்க்குற்ற விசாரணகைள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை 8 அங்கத்தவர்கள் கொண்ட குழுவை ஜசிகா நியூவேர்த் தலைமையில் மேலதிகமாக அமைத்துள்ளது. இதனை தொடர்ந்து அதன் தலைவர் மீதும், ஐ.நா சபையின் உறுப்பினர்கள் மீதும் சிறீலங்கா அரசு சேறடிப்பு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது.
ஜசிகா ஊழல்களை புரிந்துள்ளதாகவும், நவநீதம் பிள்ளைக்கும், ஜசிகாவுக்கும் இடையில் மிக நெருக்கிய உறவுகள் உள்ளதாகவும் பிரச்சாரங்களை மேற்கொள்வதுடன், அண்மையில் சிறீலங்காவுக்கு விஜயம் மேற்கொண்ட சிறுவர்களும், ஆயுத மோதல்களுக்குமான ஐ.நாவின் பிரதிநிதி பற்றிக் கமரேற் அங்குள்ள விடுதியில் மசார்ச் (massage services) சேவைகளை பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய கட்டணத்தை செலுத்தவில்லை எனவும் சிறீலங்கா அரசு தொவித்துள்ளது.
சிறீலங்கா அமைத்த அனைத்துலக நிபுணர்குழுவில் முன்னர் பணியாற்றியவரும், தற்போதைய ஐ.நா ஆலோசனைக்குழுவின் தலைவருமான மார்சுகி தருஸ்மன் முன்னர் சிறீலங்கா அரசு கொடுக்க மறுத்த பணத்தை வாங்கவே தற்போது அங்கு செல்ல விரும்புவதாகவும், சிறீலங்காவுடன் கடுமையாக நடந்துகொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஐ.நாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலமை தொடர்பான விழிப்புணர்வை பான் கீ மூனுக்கு ஏற்படுத்த வேண்டும். ஆனால் இது தொடர்பில் பான் கீ மூனின் கவனத்தில் கொண்டுவரப்பட்ட போதும் அவர் அதனை கருத்தில் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
எனவே ஐ.நா விடும் தவறுகளை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஐ.நாவின் ஆலொசனைக்குழுவை கலைத்துவிடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்தது புதிய தமிழகம் கட்சி.


அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இணைந்துள்ளதாக அதன் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை, இன்று காலை அவருடைய போயஸ் கார்டன் இல்லத்தில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சந்தித்துப்பேசினார். அப்போது இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகத் தெரிகிறது.ஜெயலலிதாவைச் சந்தித்தப் பின்னர் நிருபர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் சேர்ந்துள்ளதாகக் கூறினார்.

லண்டனில் பத்து முக்கிய மொழிகளில் ஒன்றாக தமிழும் உள்ளடக்கம்.


இங்கிலாந்தின் மெட்ரோ பொலிடன் பொலிஸ் சேவையின் அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்புகள் வரும் முதல் 10 மொழிகளில் தமிழும் ஒன்றாகும் என அப்பொலிஸ் சேவைப் பிரிவு அறிவித்துள்ளது.

பஞ்சாப், ஸ்பெயின், துருக்கி ,பிரெஞ்ச், தமிழ், வங்காளி போன்ற மொழிகளில் அதிக அழைப்புக்கள் வருகிறன என்றும் அப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஆங்கில மொழி தெரியாதவர்கள் எந்த நேரத்திலும் அவசர உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவசர உதவி எண்ணில் தொடர்பு கொள்பவர்கள் எந்த மொழியில் பேசினாலும் மொழிபெயர்ப்பாளர்கள் உதவியுடன் உடனடியாக பதில் அளிக்கப்படும் என்றும் இப்பொலிஸ் பிரிவு விழிப்புணர்வு பிரசாரங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

17 ஜூலை 2010

தமிழின உணர்வாளர்களின் விடுதலைக்கு குரல் கொடுக்க தமிழர்கள் முன்வரவேண்டும்!


நாம் தமிழர் இயக்கத்தலைவர் சீமான் தேசியபாதுகாப்பு தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்துதடுத்து வைத்திருப்பதானது,தமிழர் மனங்களில் வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போன்ற பெரும்வலியை ஏற்படுத்தியிருக்கிறதென்பதே உண்மை,சிங்கள இந்திய கூட்டுச்சதியால் ஆயிரக்கணக்கான தமிழர்கள்கோரமாக படுகொலை செய்யப்பட்டார்கள்,பல்லாயிரக்கணக்கானதமிழர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டார்கள்,இன்றும் கூடதமிழ் மக்கள் துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையிலும்,தமிழக மீனவர்கள்கூட தாக்குதலுக்குள்ளாகி கொண்டிருக்கும்நிலையிலும்,தமிழர்களை பகடைக்காய்களாக வைத்து பிழைப்புவாதஅரசியல் நடத்தும் கருணாநிதி கண்டுகொள்ளவேயில்லை.அதற்கு நேர்மாறாக தமிழினத்தின் உரிமைக்குரலாய் ஒலிப்பவர்களையெல்லாம்அடக்கி ஒடுக்க்கி சிங்களனுக்கு நிகரான செயற்பாட்டையே கருணாநிதி அரசும்செய்துகொண்டிருக்கிறது.இன்று நாம் சிங்கள அரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருந்த தமிழர்கள் இன்று இந்திய மத்திய அரசுக்கு எதிராகவும் தமிழக கருணாநிதி அரசுக்கு எதிராகவும்ஜனநாயக ரீதியில் போராடவேண்டிய காலகட்டம் இதுவென்பதைஒவ்வொரு உணர்வுள்ளதமிழனும் புரிந்து செயற்படவேண்டும்.செந்தமிழன் சீமான் உட்பட கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழின உணர்வாளர்களினதும் விடுதலைக்காக குரல் கொடுக்கஎம் தமிழ் சமூகம் முன் வரவேண்டும்.

ராஜபக்ஷவை கண்டித்து பேசுவது எப்படி இந்திய இறையாண்மையை மீறுவதாகும்?சீமானின் வழக்கறிஞர் கேள்வி.



ராஜபக்சவும் அவரை சார்ந்த இனமும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொண்டே இருக்கும்போது, அவரை கண்டித்துப் பேசுவது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிராக அமையும் என்று சீமான் வழக்கறிஞர் சந்திரசேகர் கூறினார்.
இலங்கை தமிழர்கள் படுகொலையை கண்டித்தும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை கண்டித்தும் சீமான் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பேசியதாக சீமான் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமானை, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை தூண்டும் வகையில் பேசியதற்காக சீமான் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சென்னை மாநகர பொலிஸ் தெரிவித்துள்ளது.
இன்று காலை சீமான் அடைக்கப்பட்டுள்ள வேலூர் சிறைக்குச் சென்ற பொலிஸார், அவரிடம் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டது தொடர்பான உத்தரவை வழங்கினர்.
சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்திருப்பது தமிழ் உணர்வாளர்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், இதைக் கண்டித்து யாரேனும் போராட்டம் நடத்தினாலோ அல்லது போஸ்டர்கள் உள்ளிட்டவற்றை ஒட்டினாலோ அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க பொலிஸார் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, தன்னை பல வருடங்களாகப் பயன்படுத்தாமல் உள்ள பாழடைந்த சிறை அறையில் அடைத்து வைத்துள்ளதாக நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமான் புகார் கூறியுள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் வழக்கறிஞர் சந்திரசேகர், ராஜபக்சவும் அவரை சார்ந்த இனமும் தமிழக மீனவர்களை சுட்டுக்கொண்டே இருக்கும்போது, அவரை கண்டித்துப் பேசுவது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிராக அமையும். இதை முன்வைத்துதான் நாங்கள் வழக்காடுவோம்.
சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வதற்கு, அடிப்படை முகாந்திரம் இல்லை என்றும், மேலும் இதனை நீதிமன்றத்தின் மூலம் சந்திக்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

16 ஜூலை 2010

கனடாவை நோக்கி இலங்கை அகதிகளுடன் கப்பல்?



கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா துறைமுகத்தை நோக்கி, இலங்கை அகதிகளை ஏற்றிய தாய்லாந்து கப்பல் ஒன்று செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவின் குடிவரவு அதிகாரிளுக்கு கிடைத்த தகவல்படி, இவ்வாறான கப்பல் ஒன்று சுமார் 200 வரையான அகதிகளுடன் பயணித்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம் வீ சன் சீ என்ற இந்த கப்பலை இறுதியாக தாய்லாந்து குடாக்கடலில் வைத்து அவதானித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் கடற்படையினரின் தகவல்படி, இந்த கப்பல் சட்ட விரோத குடியேறிகளை ஏற்றிச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த அக்டோபர் மாதம் 76 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற ஓசியன் லேடி என்ற கப்பலும், பிரிட்டிஸ் கொலம்பியா என்ற துறைமுகத்தையே சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது கடலில் பயணிப்பதாக கூறப்படும் எம் வீ சன் சீ என்ற கப்பல் தொடர்பில் தமது அதிகாரிகள் கண்காணிப்பை செலுத்தி வருவதாக கனேடிய குடிவரவுத்துறை தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த கப்பலில் பயணிப்பவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் என இலங்கையின் அரச வார இதழான சண்டே ஒப்சேவர் சந்தேகம் தெரிவித்து செய்தி பிரசுரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

15 ஜூலை 2010

புலிகளின் முன்னாள் சிரேஷ்ட உறுப்பினர் நகுலன் இந்தியா சென்றுள்ளார்.


முன் நாள் விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினரும், ராமுடன் சேர்ந்து இலங்கை புலனாய்வுத்துறைக்காக இயங்கிவரும் நகுலன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியா சென்றுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது. சென்னை விமானநிலையத்தில் இருந்து இவர் புறப்பட்டவேளை அவரை நேரடியாகப் பார்த்த சிலர் கொடுத்த தகவல்களே இவை. இலங்கை புலனாய்வுப் பிரிவு நகுலனை ஏன் சென்னைக்கு அனுப்பிவைத்துள்ளது என்பது குறித்த விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை.இருப்பினும் இறுதி யுத்தத்திலும், அதன் பின்னரும் புலிகளின் பல உயர்மட்ட உறுப்பினர்கள் இலங்கையை விட்டு தப்பிச் சென்றனர். அவர்கள் சிலவேளை இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர்களை இனம் கண்டு கைதுசெய்ய, அல்லது அவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை அறிவதற்காக நகுலன் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது இவ்வாறிருக்க, இந்தியாவில் உள்ள தமிழ் இளைஞர்கள் சிலரிடம் பணத்தைப் பெற்று, அவர்களை அவுஸ்திரேலியாவுக்கு கப்பலில் அனுப்புவதாகக் கூறி கும்பல் ஒன்று, இளைஞர்களை ஒரு சிறிய படகில் ஏற்றி இலங்கை திருகோணமலைக்கு அனுப்பி வைத்துள்ளதாம்.தாம் அவுஸ்திரேலியா செல்கிறோம் என நினைத்துக்கொண்டிருந்த இளைஞர்களுக்கு, அதிர்ச்சிதான் மிச்சம். அவர்கள் அனைவரும் இலங்கை இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. இதனை பாப்பாவின் உதவியாளர்கள் செய்துவருவதாக சென்னை தகவல்கள் கூறுகின்றன. தமிழ் நாட்டில் தற்போது இலங்கை புலனாய்வுத்துறையினர், கணிசமான அளவு ஊடுருவியுள்ளனர். பணத்தையும் பெற்றுக்கொண்டு, இளைஞர்களை இலங்கை இராணுவத்தின் வலையில் சிக்கவைக்கும் பல நடவடிக்கைகள் திட்டமிட்டபடி கபில ஹந்தவிதாரனவின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழர்கள் விழிப்போடு இருப்பது நல்லது.
செய்தி:அதிர்வு.கொம் .

ஐ.நா.நிபுணர் குழுவை எதிர்க்க பின்வாங்கிய மலேசியா,பாகிஸ்தான்.



சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிசேரா நாடுகளின் கடிதத்தில் பாகிஸ்தானும் மலேசியாவும் கையொப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்து அரச அதிபர் மகிந்த அதிர்ச்சியடைந்துள்ளார் என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக தெரியவருவதாவது:-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான சிறிலங்காவின் போருக்கு பாகிஸ்தான் பிரதான பங்காளிகளில் ஒரு நாடாக அங்கம் வகித்து, அனைத்து ஆயுத வசதிகளையும் வழங்கிவந்திருந்தது. விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் உக்கிரமடைந்திருந்தவேளையில், சிறிலங்காவின் போர் முடிவடையும் வரை இரண்டு மாதங்களுக்கு ஒரு கப்பல் ஆயுதங்கள் என்ற ரீதியில் ஆயுதங்களை வழங்கவும் பாகிஸ்தான் தயார் என்று அந்நாட்டு அரச தரப்பு அறிவித்த அளவுக்கு, சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான படைத்துறை சகவாசம் உச்சத்தை அடைத்திருந்தது.
அதேபோன்று, மலேசியாவை பொறுத்தவரை விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. கைது செய்யப்படுவதற்கு சிறிலங்காவுக்கு பெருமளவில் அந்நாடு உதவியளித்திருந்தது. விடுதலைப்புலிகள் அமைப்பு சிறிலங்காவில் அழிக்கப்பட்ட பின்னர், புலம்பெயர்ந்த தமிழர்களினால் முன்னெடுக்கப்படவிருந்த கே.பி. தலைமையிலான ஜனநாயக வழிப்போராட்டத்துக்கு கே.பி. கைது படலத்தின் ஊடாக பின்னடைவை ஏற்படுத்துவதற்கு மலேசியா பாரிய பங்களிப்பை வழங்கியிருந்தது.
இந்நிலையில், இவ்விரு நாடுகளும் தற்போது சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படுவதற்கு திடீரென மறுப்பு தெரிவித்துள்ளன. அதாவது, சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பில் விசாரித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்கு ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர்குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அணிசேரா நாடுகளின் கடிதத்தில் பாகிஸ்தானும் மலேசியாவும் கையொப்பமிடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளன.
ஏனெனில், அண்மையில் காஸா பகுதிக்கு உதவிப்பொருட்களை கொண்டுசென்ற கப்பலின் மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக விசாரிப்பதற்கு ஐ.நா. அமைத்துள்ள விசாரணைக்குழுவுக்கு உலகெங்கும் உள்ள முஸ்லிம் நாடுகள் தமது ஆதரவை வலியுறுத்திவருகின்றன. அதாவது, இஸ்ரேலின் தாக்குதல் தொடர்பாக விசாரணை செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் முயற்சிக்கு அனைத்து முஸ்லிம் நாடுகளும் ஆதரவை வழங்கிவருகின்றன.
இந்நிலையில், ஐ.நா. சபையை மட்டுமல்லாமல் செயலாளர் நாயகம் பான் கீ மூனை தனிப்பட்ட ரீதியில் சர்வதேச ரீதியில் கடுமையாக தாக்கி வரும் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்து, அந்த நடவடிக்கை இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற முஸ்லிம் நாடுகளின் தார்மீக கோரிக்கைக்கு பங்கம் விளைவிப்பதாக அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில் முஸ்லிம் நாடுகளான மலேசியாவும் பாகிஸ்தானும் சிறிலங்காவுக்கு ஆதரவளிப்பதற்கு மறுப்பு தெரிவித்திருக்கின்றன.
- இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

14 ஜூலை 2010

இலங்கை தூதரகத்தை மூடக்கோரி போராட்டம் செய்த தலைவர்கள் கைது.


சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகத்தை மூடக்கோரி, இன்று ஆர்ப்பாட்டம் நடத்திய பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. "பல லட்சம் தமிழர்கள் இன்னமும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஐ.நா. விசாரித்தால் உண்மைகள் வெளியாகி சர்வதேச நீதிமன்றத்திற்கு முன் போர்க் குற்றவாளியாக நிறுத்தப்பட நேரும் என்ற அச்சத்தில் இலங்கை அரசாங்கம் எல்லைமீறி செயல்படுகிறது. மேலும், தமிழக மீனவர்கள்இலங்கைக் கடற்படையினால் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்" போன்றவற்றை முன் வைத்தே தூதரகத்தை மூடுமாறு இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை அரசுக்கு தமிழக மக்களின் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை உடனடியாக மூடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் அறிவித்திருந்தார். அதன்படி ஆர்ப்பாட்டம் மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்திற்கு முன்பாக நடைப்பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன், பெரியார் திராவிடக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ஆர்ப்பாட்டத்தில் சிலர் இலங்கை ஜனாதிபதியின் கொடும்பாவி உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் அனைவரும் இலங்கைத் தூதரகத்தை மூடுவதற்காக செல்ல முயன்றனர். பொலிசார் தடுத்தும் எவரும் நிற்கவில்லை. இதனையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வைகோ, பழ.நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன், சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. உட்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அமெரிக்க கடற்படை கப்பல் சிறிலங்கா சென்றுள்ளது.


ஐக்கிய அமரிக்காவின் கடற்படை கப்பலான ‘யூஎஸ்எஸ் பேர்ல் ஹார்பர்” நேற்று திருகோணமலை துறைமுகத்திற்கு சென்றுள்ளது.
நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டே இந்த விஜயத்தை அமரிக்க கப்பல் திருகோணமலைக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
186 மீற்றர் நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் 11 ஆயிரத்து 251 டன் நிறையை ஏற்றிச் செல்லக்கூடியது.
இந்த கப்பலில் 24 அதிகாரிகள் உட்பட 328 கடற்படை வீரர்கள் பயணிக்கின்றனர்.
இதேவேளை, இந்த கப்பலின் வருகை தந்துள்ள அமெரிக்க கடற்படையினர் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக திருகோணமலை கடற்படைத்தள வீதியில் உள்ள மெதடிஸ்த சிறுவர் இல்லத்திற்கு நேற்று விஜயம் செய்த அவர்கள் அங்கு துப்புரவு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்மந்தமாக சீனாவும் இந்தியாவும் மௌனம் காத்து வருகின்றது.

13 ஜூலை 2010

தர்சிகாவின் இறுதிச்சடங்கில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலந்துகொள்ளவில்லை.








வேலணையில் மரணமான மருத்துவ மாதின் இறுதிச்சடங்கின்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. மரணம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரி இன்று காலை பிராந்திய சுகாதார வைத்திய நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது
இவ்வாறு குடும்ப நல உத்தியோகத்தர்கள் தெவிக்கின்றனர்.இதற்கு அனைவரையும் ஒத்துழைப்புத் தருமாறும் சகல அரச உத்தியோகத்தர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் குடும்பநல மருத்துவ மாதுவாக சேவை புரிந்து வேலணைப் பிரதேச வைத்தியசாலையில் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட உத்தியோகத்தர் தர்ஷிகா சரவணனின் இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றபோது இந்த அழைப்பை விடுத்துள்ளனர்.
இதேவேளை அமரரின் இறுதிச்சடங்கின்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
குடும்ப நல மருத்துவ மாது இறுதி ஊர்வலத்தின்போது கலந்து கொண்ட உத்தியோகத்தர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்குமாறு கோரிக்கை விட்டதுடன்,
வேலணை வைத்தியசாலை ஊழியர்களை விசாரணை செய்க
இன்று உனக்கு நாளை எமக்கு,
சந்தேக நபரைப் பணிநீக்கம் செய்
என்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தாங்கியிருந்தமையைக் காணக்கூடியதாகவிருந்தது.

12 ஜூலை 2010

சீமான் கைதிற்கு வைக்கோ பலத்த கண்டனம்.





இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்லும் கொடுமையைக் கண்டித்து பேசிய, நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான சீமான் கைது செய்யப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள அரசு, கடற்படையை ஏவி தமிழக மீனவர்களையும் சுட்டுக் கொல்லும் கொடுமையைக் கண்டித்து, நாம் தமிழர் இயக்கத்தின் தலைவரும், இயக்குநருமான சீமான் பேசியதற்காக, பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்துள்ளனர்.
தமிழக முதல்வர், ‘இலங்கை அரசுக்கு எதிராகப் பேசினால், சட்டம் ஒழுங்கு தன் கடமையைச் செய்யும்’ என தன் அமைச்சரை விட்டுக் கூறுகிறார்.
தமிழ்நாட்டில், இலங்கை அரசைப் பற்றியே பேசக்கூடாதாம். அப்படிப் பேசுவோரை சிறையில் அடைக்க புதிய சட்டம் கொண்டு வரப்படுமாம். தங்கள் உயிர்களையே தீயில் கருக்கிக் கொள்ளும் முத்துக்குமார்களைத் தந்த தமிழ்நாட்டில், இத்தகைய மிரட்டல் அடக்குமுறைச் சட்டங்களை, தமிழர்கள் தூசாகவே கருதுவோம்.
இயக்குநர் சீமான், பத்திரிகையாளர்கள் சங்கத்தில் தன் கருத்தைக் கூறுவதற்கு அனுமதிக்காத பொலிஸ்துறை, பத்திரிகையாளர்களையும் தாக்கியுள்ளது.
இயக்குநர் சீமானைக் கைது செய்ததை வன்மையாகக் கண்டிப்பதோடு, கருத்து உரிமையை ஒடுக்க, அடக்குமுறையை ஏவுகின்ற அரசை எதிர்த்துப் போராடுவதற்கு, ஜனநாயக சக்திகள் ஆர்த்தெழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

என் தமிழினமே சுட்டாலும் பரவாயில்லை,கைதாகும் முன் சீமான் கடிதம்.



கைதான சீமான் தான் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை பத்திரிகையாளர்களிடம் வழங்கினார். அதில் கூறியிருப்பதாவது: உங்களை சந்திப்பதற்கு முன்பு நான் கைது செய்யப்பட்டால் சில செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியாது. எனவே இந்த கடிதத்தை தருகிறேன். வன்முறை பிரிவினையை தூண்டியதாக என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் 561 பேரை சிங்கள ராணுவம் சுட்டு வீழ்த்தியது வன்முறையை தூண்டும் செயல் இல்லையா? எங்கள் மீனவர்கள் சுடப்படுவதை பாதிக்கப்பட்டவர்களின் குரலாக கருதி நான் பேசியதால் வன்முறை ஏற்பட்டு விட்டதா? தி.மு.க. மீனவர் அணியினர் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு போராடினார்களே, இது யாருக்கு எதிராக ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாடு பிரிவது பிரினை வாதம் என்றால் உலகத்தில் சுதந்திரம் என்ற சொல்லே இருந்திருக்காது. இன்று கூட சிங்களர்கள் தமிழக மீனவர்களை தாக்கி இருக்கிறார்கள். இதற்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது. மீனவர்கள் பிரச்சினையை தீர்க்காமல் பிரச்சினையை தீர்க்கச் சொல்லி பேசுகிறவனை கைது செய்வதுதான் தீர்வா? இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு தனித் தமிழ் ஈழம்தான். இப்படி சொல்வது எப்படி பிரிவினையாகும். சிங்கள மீனவர்கள் எல்லை தாண்டி வரும்போது இந்திய ராணுவம் சுடாதது ஏன்? என் தமிழினமே சுட்டாலும் பரவாயில்லை. எண்ணற்ற கேள்விகளோடு நேரமின்மையால் சிறை செல்கிறேன். வந்து சொல்கிறேன். நன்றியோடு உங்கள் சீமான். இவ்வாறு அந்த கடிதத்தில், கூறப்பட்டுள்ளது.

11 ஜூலை 2010

ஷிராந்தியுடன் வவுனியா சென்றார் அசின்.




தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக்கு உள்ளாகி இருக்கும் தென்னிந்தியச் சினிமா நட்சத்திரம் அசின் இன்று வவுனியாவிற்குச் சிறப்பு விஜயம் மேற்கொண்டார்.
சிறிலங்காவில் நடைபெறும், இந்திப் படப்பிடிப்புக்காக சிறிலங்கா சென்றுள்ள நடிகை அசினுக்கு, தமிழகத்தில் பலத்த எதிர்ப்புக்கள் காட்டப்பட்டு வரும் நிலையில், சிறிலங்காவில் பலமான பாதுகாப்பும், சிறிலங்கா ஜனாதிபதியின் சிறப்பு விருந்தினராகவும் கவனிக்கப்பட்டு வருவதாக்க கொழும்புத் தகவல்கள் தெரிவித்து வந்தன.
இந்நிலையில், இன்று காலை வவுனியா நகருக்கு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன் நடிகை அசின் விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா பொது வைத்தியசாலைக்குச் சென்ற ஷிராந்தி – அசின் குழுவினருக்கு தமிழ்முறைப்படி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கபடுகிறது.
வைத்தியசாலையிலுள்ள சத்திர சிகிச்சைக் கூடம், மற்றும் கண் சிகிச்சைப் பிரிவுகளுக்கு விஜயம் செய்த மேற்படி குழுவினர், அங்குள்ள குறைபாடுகளையும், தேவையான விடயங்களையும் கேட்டறித்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிறு குட்டைக்குள் இருந்துகொண்டு பெரிய மீனாக விமல் வீரவன்ஸ நடிக்கிறார்.



பொய்கார நடிகர் என்ற அம்சத்தின் கீழ் முதல் பரிசு வழங்கப்படுமானால் அது அமைச்சர் விமல் வீரவன்சவுக்கே வழங்கப்படவேண்டும் என இலங்கையின் ஆங்கில செய்திதாளான சண்டேலீடர் தெரிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் புகழ்பெற்றவராக விளங்கும் விமல் வீரவன்ச ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆசிர்வாதத்துடனேயே உண்ணாவிரத நாடகத்தை நடத்தினார் என அனைவருக்கும் தெரிந்த விடயம்.
ஜே.வி.பியி.;ல் இருந்து துரத்தப்பட்ட விமல் வீரவன்ச, குறுகிய காலத்துக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பிரசித்தம் பெற்றுவிட்டார்.
இந்தநிலையில் அவர், அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடியவர் என்ற செல்வாக்கை பெற்றுள்ளார்.
எனினும் உயர் பதவிகளில் தமது ஆட்களை கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தமது செல்வாக்குக்கு உரிய விமல் வீரவன்சவின் நடவடிக்கைகளை கண்டும் காணாதவர் போல இருப்பதாக சண்டே லீடர் குறிப்பிட்டுள்ளது.
இதனை பயன்படுத்திக் கொண்டு விமல் வீரவன்ச, செயற்பாடுகளை தனக்குரிய தனித்துவத்துடன் மேற்கொண்டு வருவதாக அந்த செய்திதாள் தெரிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமையன்று, விமல் வீரவன்ச அமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதாக ஜனாதிபதிக்கு அனுப்பிய ராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் பலவந்தத்தினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகும்.
அந்த கடிதம் அனுப்பப்பட்டமை அது ஜனாதிபதியினால் ஏற்றுக் கொள்ளப்படாமை போன்ற செயல்களை கண்டு அரசியல் ஆய்வாளர்கள் சிரிக்கின்றனர்.
பெரிதாக கல்வி கற்காத விமல் வீரவன்ச, சிறுகுட்டைக்குள் இருந்துக்கொண்டு பெரிய மீனாக நடிக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை இவரின் உண்ணாவிரதத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.
விமல் வீரவன்ச உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என பான் கீ மூன் கோரவில்லை அதற்கு பதிலாக கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் தமது பணியாளர்கள் சுதந்திரமாக பணியாற்ற வழிவகுக்கப்பட வேண்டும் என்றே கோரி வந்ததாக சண்டே லீடர் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில் உண்ணாவிரதத்தை மறைமுகமாக ஆரம்பித்து வைத்த ஜனாதிபதியே அந்த உண்ணாவிரதத்தை முடித்து வைத்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

10 ஜூலை 2010

சிங்கள வைத்தியர் தாதியை படுகொலை செய்தார்,வேலணையில் பதற்றம்!






இது தொடர்பில் கிடைத்த தகவலின் படி,குறித்த சிங்கள வைத்தியர் குறித்த பெண்ணை கொலைசெய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வேலணை வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றிய குறித்த பெண்ணை சில நாட்களாக குறித்த சிங்கள வைத்தியர் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிவந்துள்ளார்.இந்த நிலையில் குறித்த பெண் வைத்தியசாலையில் உள்ள ஓய்வு அறையில் உள்ள மின்விசிறியில் தொங்கிய நிலையில் இன்று காலை சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் ஆரம்பத்தில் தற்கொலை என தெரிவிக்கப்பட்டபோதிலும் பின்னர் அது கொலை என தெரியவரவே வைத்தியசாலையினை முற்றுகையிட்டு பொதுமக்கள் வைத்தியருக்கு எதிராக கோசங்களை எழுப்பினர்.எனினும் அவ்விடத்துக்கு வந்த படையினரும் பொலிஸாரும் அவ்விடத்துக்கு வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த வைத்தியர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கொலைச்சம்பவத்தை தற்கொலையென பதிவுசெய்ய பொலிஸார் முயற்சிகளை மேற்கொண்டுவருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.