பக்கங்கள்

30 செப்டம்பர் 2011

பெண்களுடன் சேஷ்டை செய்தவர்களை காவலூர் பொலிசார் கைது செய்தனர்!

யாழ்.காரைநகர் கசூரினா உல்லாச கடற்கரையில் மதுபோதையில் பெண்களுடன் பாலியல் சேட்டை விட்ட இளைஞர் பத்து பேரை ஊர்காவற்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இளைஞர்கள் சிலர் தென்பகுதி இளைஞர்களுக்கு மது விருந்து வைப்பதற்காக கசூரினா பீச் சென்று உல்லாசமாக மதுவை அருந்தி விட்டு போதை தலைக்கேற அவர்களின் பாலியல் தேவைக்காக பெண்களிடம் சென்று அங்க சேட்டை விட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பெண்களின் பெற்றோரினால் ஊர்காவற்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞர்கள் பத்துப் பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டனர். இவர்களை தலா 2 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறு ஊர்காவற்துறை நீதிபதி ஜோய் மகிழ் மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

நயினாதீவு சென்று திரும்பிய யாழ்,இந்துக்கல்லூரி மாணவன் விபத்தில் மரணம்!

யாழ்,இந்துக் கல்லூரியினால் நயினாதீவு அம்மனுக்கு நடத்தப்படும் நவராத்திரி பூசையில் கலந்துகொள்ளச் சென்ற மாணவன் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் புங்குடுதீவு குறிகாட்டுவான் இறங்குதுறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்விபத்துச் சம்பவத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் தரம் 09 இல் கல்வி பயிலும் திருநெல்வேலி முடமாவடியைச் சேர்ந்த நல்லைநாதன் தனு­ஷ‌ன் (வயது 14) என்ற மாணவரே உயிரிழந்தவராவார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சமூகத்தினர் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நவராத்திரி தின இரண்டாம் நாள் பூசை மேற்கொள்வது வழக்கம். இது கடந்த நான்கு வருடங்களாக மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. இதற்கென சுமார் 75 மாணவர்களும் 6 ஆசிரியர்கள் மற்றும் அதிபருமாக தனியார் பேருந்து ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அங்கு சென்றனர். பூசை நிகழ்வுகள் முடிந்த பின்பு பிற்பகல் 2 மணியளவில் நயினாதீவிலிருந்து குறிகாட்டுவானுக்குத் திரும்பினர்.
இந்நிலையில் அங்கிருந்து வாகனம் புறப்படத் தயரான போது சில மாணவர்கள் அதில் ஏறியுள்ளனர். அதன்போது பிரஸ்தாப மாணவர் கால் தடக்கிக் கீழே விழுந்ததால் வாகனச் சில்லு அவரின் தலையில் ஏறி மாணவன் ஸ்தலத்திலேயே பலியானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இச்சம்பவம் தொடர்பாக நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்ட ஊர்காவற்றுறை நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவன் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் கையளிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். பொலிஸார் சாரதியைக் கைது செய்ததுடன் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இதேவேளை சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற நல்லூர் கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.மாணிக்கராசா சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததுடன் மாணவனின் சடலத்தைப் பொறுப்பேற்று பெற்றோரிடம் கையளித்தார்.
இதேவேளை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்குச் சென்ற சிலர் கல்வீசித் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

29 செப்டம்பர் 2011

மண்டைதீவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி!

கடந்த வாரம் பண்ணை வீதியில் மாலை 6மணியளவில் இலங்கை போக்கு வரத்து சபைக்கு சொந்தமான
பயணிகள் ஊர்தியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.மோட்டார் சைக்கிள் பயணிகள்
ஊர்தியை முந்திச்செல்ல முற்பட்ட வேளையே இவ்விபத்து ஏற்பட்டு,மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும்
படுகாயமடைந்து யாழ்,மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தலைப்பகுதியில் படுகாயமடைந்து அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த
மண்டைதீவு 6ம் வட்டாரத்தை சேர்ந்த கே.கிருஷ்ணரூபன்(22)என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கே.கவாஷ்கர்(22)கால் முறிவடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்டோர் கட்டுநாயக்கா வந்தடைந்தனர்!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் இன்று காலை 10.26இற்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். LC6286 என்னும் விமானத்தில் 100 பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பாதுகாப்புடன் மேற்படி 50 பேரும் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மேற்படி நபர்களை தற்சமயம் தேசிய குற்றப் புலனாய்வு பிரிவினர் பொறுப்பேற்றுள்ளனர்.
நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்களிடத்தே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இலங்கை அகதிகள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
இவ்வாறு இலங்கை வந்தவர்களில் 42 ஆண்களும் 8 பெண்பளும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாளை நான்தான் தலைவன்"விஜயகாந்த் பேச்சு!

வேலூர் மேயர் வேட்பாளராக போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லதாவை ஆதரித்து, வேலூர் மண்டித்தெருவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர், ‘’ சுதந்திரம் அடைந்து, 65 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ரோடு பிரச்சனை, குடிநீர் பிரச்சனை, பஸ் ஸ்டாண்ட் பிரச்னைகள் எல்லாம் உள்ளது. அதைப் பற்றி கவலைப்படாமல் ஒருத்தர் காட்பாடி பாலாற்றில் மணல் கொள்ளை அடித்து வருகிறார்.
வேலூர் பஸ் ஸ்டாண்டில், 5 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்கின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டாமா? நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். விஜயகாந்த் தனியாக வந்துபேசுவதாக நினைக்காதீர்கள். தெய்வம் எப்போதும் நேரில் வராது; மக்கள் ரூபத்தில்தான் வரும்.
கம்சனை அழிக்க ஒன்று சேர்ந்தோம். ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தீர்கள். இப்போது, இப்படிப்பட்ட தொண்டர்களை விட்டு விட்டோமே என, ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
நேற்று, தே.மு.தி.க.,வுக்கு ஒரு எம்.எல்.ஏ., இப்போது, 29 எம்.எல்.ஏ.,க்கள். முன்பு, 71வது கட்சி என்று சொன்னார்கள். இப்போது, 1வது கட்சியாகி விட்டது. நாளை நாம்தான் தலைவன். நான் பொடிவைத்துப் பேசவில்லை. உங்களுக்கு புரிய வேண்டும் என்றுதான் பேசுகிறேன்.
தமிழகத்தில், 63 லட்சம் இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கொண்டுள்ளனர். ஆனால், காசு வாங்கிக் கொண்டுதான் கல்லூரிகளில் சீட் கொடுக்கின்றனர். படித்துவிட்டு வேலை இல்லாததால்தான், புரட்சிகள் வெடிக்கிறது. யாரையும் லஞ்சம் வாங்க விட மாட்டோம். உள்ளாட்சியில் ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பாருங்கள்.
எங்களை வெற்றி பெற வைத்தால், தவறுகள் நடக்காது. எத்தனை காலம்தான் நீங்கள் ஏமாந்து கொண்டிருப்பது? இந்த சந்தர்ப்பத்தை விட்டால், வேறு சந்தர்ப்பம் வராது.
கடந்த முறை, ஜாதியை சொல்லி தன் மகனை மந்திரியாக்கி, எத்தனை பேருக்கு வேலை கொடுத்தார்கள்.
அவங்க ஜாதியைச் சேர்ந்தவர்களுக்காவது வேலை கொடுத்தார்களா? மருத்துவக் கல்லூரியில் சீட் வாங்கித் தந்தார்களா? அவர்கள் வளர்ச்சியைத்தான் பார்த்து வந்தனர். அவர்களுக்காக, சாலை மறியல் செய்தவர்கள், இன்னும் வழக்கு விசாரணை என்று அலைந்து கொண்டுள்ளனர்.
பல ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் போட்டனர். ஆனால், அந்த திட்டங்கள் பேப்பரில்தான் உள்ளது. மக்களை ஏமாற்றி வருகின்றனர். மக்கள்தான் அவர்களை திருத்த வேண்டும்’’என்று பேசினார்.

28 செப்டம்பர் 2011

அல்லைப்பிட்டியில் சடவிரோத சாராயம் விற்றவர்கள் கைது!

அல்லைப்பிட்டிப் பகுதியில் யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்களத்தினர் திடீரென மேற் கொண்ட சோதனையின்போது சட்டவிரோதமான முறையில் சாராய விற்பனையில் ஈடுபட்ட மூவர் வகையாக மாட்டிக் கொண்டார்கள்.
யாழ்ப்பாணம் மதுவரித் திணைக்களத்திலிருந்து சென்ற ஐவர் கொண்ட குழுவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போது 480 மில்லிகிராம் 340 மி.கி., 290 மி.கி. சாராயத்தை விற்பனை செய்து கொண்டிருந்த வேளை குறித்த மூவரும் சந்தேகத்திற்கிடமானவர்கள் என்ற நிலையில் கைது செய்யப்பட்டதுடன் பொருட்களும் மீட்க்கப்பட்டுள்ளன.
இவர்கள் மீது மதுவரித் திணைக்களத்தினால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

நெடுந்தீவு சுற்றுலா மையமாகிறது!

நெடுந்தீவு பிரதேசத்தை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதற்கென சுற்றுலாத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளதாக அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக இந்த பகுதியில் கடல் விமானங்களை தரையிறங்குவதற்கேற்ற வசதிகளை செய்வதற்கும், அங்குள்ள குதிரை போன்ற விலங்குகளை பாதுகாப்பதற்கும், வெளிநாடுகளைப்போன்று புற்தரைகளை அமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது நெடுந்தீவு இறங்குதுறைப் பகுதியை அண்மித்த பகுதிகளை ஆழமாக்கும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நெடுந்தீவில் குடிநீருக்கான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், நீரைப் பெற்றுக்கொள்ள நீண்டதூரம் பயணிக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 செப்டம்பர் 2011

மீண்டும் ஆயுதம் ஏந்தும் திட்டம் இல்லையென ஜே.வி.பி.கிளர்ச்சிக் குழு தெரிவிப்பு!

ஆயுத போராட்டம் நடத்தும் திட்டம் கிடையாது என ஜே.வி.பி. கிளர்ச்சி குழு உறுப்பினர்கள் அறிவித்துள்ளனர். இலங்கையில் மட்டுமன்றி உலக அளவிலும் ஆயுத போராட்டம் நடத்துவது புத்திசாதூரியமான தீர்மானமாக அமையாது என கிளர்ச்சிக் குழு ஊடகப் பேச்சாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஆயுத போராட்டங்களை நடத்துவதற்காக சந்தர்ப்பமும், சாத்தியமும் காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், 1991ம்; ஆண்டு சோவித் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததனைத் தொடர்ந்து, அமெரிக்கா உலக அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் ஆயுத போராட்டங்கள் எதுவும் வெற்றியடைவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயுத போராட்டமொன்றின் மூலம் எதனையும் சாதிக்க முடியும் என கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இது இலங்கைக்கு மிகவும் பொருத்தமானதாக அமையும் எனவும், மிக நீண்ட யுத்தத்தின் பின்னர் தற்போது மக்கள் நிம்மதியாக வாழ ஆரம்பித்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியை விட்டு விலகுவது தமது நோக்கமல்ல எனவும் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே தமது பிரதான கோரிக்கை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசியல் விவகாரங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சில முரண்பாடான நிலைமைகள் ஏற்பட்டதனை மறுக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக கட்சிக்குள் இவ்வாறான ஓர் முரண்பாட்டு நிலைமை நிலவி வருகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் கூட்டணி வைத்தமை, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு தேர்தலில் ஆதரவளித்தமை போன்ற பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடு நிலவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் கட்சி சரியான தீர்மானங்களை எடுக்கத் தவறியுள்ளதாகவும், குறிப்பாக யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஜே.வி.பி.யின் தீர்மானங்கள் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒரு குறிப்பிட்ட இனத்தின் தேசியவாத கொள்கைகளை எமது கட்சி பிரதிபலிக்கவில்லை என அவர் வலியுறுத்தியுள்ளார். பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்கின்றோம், எனினும் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்துடன் கூடிய சமத்துவமான தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். கட்சியில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தேசிய மாநாட்டைக் கூட்டி தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

வேலணையில் வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருந்தொகை போதைப்பொருள் பறிமுதல்!

இந்தியாவில் இருந்து கடத்தி வந்து வேலணையிலுள்ள வீடொன்றினுள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதி மிக்க 288 கிலோகிராம் போதையூட்டப்பட்ட புகையிலைத் தூள் பைக்கற்றுக்கள் நேற்றுக் கைப்பற்றப்பட்டன. வீட்டு உரிமையாளரும் கைது செய்யப்பட்டார்.
யாழ். மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றை அடுத்து அங்குசென்ற திணைக்களப் பொறுப்பதிகாரி என்.கிருபாகரன் தலைமையில் கோபரல் எஸ். யாதவன், மதுவரி அலுவலர்களான என்.யோகலிங்கம், எஸ்.ஆர்.புவனேந்திரன், ரி. தேவமயூரன் ஆகியோரே இந்த அதிரடிப் பாய்ச்சலை மேற் கொண்டனர்.
புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய உடல் நலத்துக்குக் கேடான இந்த புகையிலைத் தூள் (போதைப்பொருள்) இலங்கையில் தடைசெய்யப்பட்டுள்ளது என்று கிருபாகரன் தெரிவித்தார்.
இந்த போதைதரும் புகையிலைத் தூளை பதுக்கி வைத்திருந்த வேலணை கிழக்கைச் சேர்ந்த சேனாதிராசா பத்மநாதன் என்ற நபரை மதுவரித் திணைக்களத்தினர் கைது செய்து ஊர்காவற்றுறை நீதிமன்றில் நேற்று முன்னிலைப்படுத்தினர். கைப்பற்றப்பட்ட புகையிலை பைகளும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன.
ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் திருமதி ஜோய் மகிழ் மகாதேவா இந்த வழக்கை விசாரணை செய்தார். சந்தேக நபர் தனது குற்றத்தை ஏற்றுக்கொண்டதனால் 5 இலட்சம் ரூபா அபராதம் செலுத்துமாறும் அபரா தம் செலுத்தத் தவறின் இரண்டு வருட சாதாரண சிறைத் தண்டனையும், பத்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனையும் வழங்கித் தீர்ப்பளித்தார். கைப்பற்றப்பட்ட புகையிலைப் பைகளை அழிக்கும் படியும் நீதிவான் உத்தரவிட்டார்.

26 செப்டம்பர் 2011

ஸ்ரீலங்காவிற்கு கடைசி நேரத்திலும் ஆபத்து வரலாம்!

ஜெனீவாவில் மனிதவுரிமைகள் பேரவையின் 18ஆவது அமர்வு இடம்பெற்று வருகிறது. இன்னும் நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த அமர்வில் தமக்கு எதிரான பிரேரணை எதுவும் சமர்ப்பிக்கப்படாது என்று இலங்கை அரசு உறுதி செய்து கொண்டது. அமைச்சர் மகிந்த சமரசிங்க மீண்டும் ஒருமுறை ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமையே பிரேரணைகளைச் சமர்ப்பிக்கும் இறுதி திகதி என்பதன் காரணமாகவே இந்த நம்பிக்கையைக் கொண்டிருந்தது.
எனினும் இலங்கைக்கு எதிரான யோசனை ஒன்றுக்கு கனடா இறுதி நேரத்தில் முயலக் கூடும் என்ற தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டில் விசாரணைகளை மேற்கொண்ட நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை எதிர்வரும் நவம்பரில் வெளியாகும் நிலையில் அதனை எதிர்வரும் 19ஆவது மனிதவுரிமைகள் பேரவை அமர்வில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற யோசனையைக் கொண்டுவர கனேடியக் குழு முயற்சித்து வருகிறது.
அதனைத் தற்போது நடைபெற்று வரும் 18ஆவது அமர்வின் எதிர்கால அட்டவணையில் சேர்க்க கனடா முயற்சிகளை மேற்கொள்ளலாம். எனினும் இதனைத் தடுப்பதற்காக அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையிலான குழுவினர் மீண்டும் ஜெனீவாவுக்குச் சென்று கலந்தாலோசனைகளை நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் மோதல்,ஒருவர் பலி!

வவுனியா, ஓயார்சின்னக்குளத்தில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதல் சம்பவத்தில், யோகாநந்தன் கமல்ராஜ் (வயது 40) என்பவரே உயிரிழந்தவராவார்.
சம்பவத்தை அடுத்து, மோதலுடன் தொடர்புடையதான 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் சந்திரசிறி பண்டார தெரிவித்தார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ‘ஓயார்சின்னக்குளம் பகுதியில் இடம்பெற்ற பூப்புனித நீராட்டுவிழா வைபவமொன்றில் கலந்துகொண்ட சிலருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே மோதலாக உருவெடுத்துள்ளது என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் பலத்த அடிகாயங்களுக்கு உள்ளான ஓயார் சின்னக்குளம் இரும்பு வர்த்தகராக கமல்ராஜ், சிகிச்சைகளுக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைகளுக்கா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் அதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடையதான மேலும் சிலரைத் தேடி வலைவீசியுள்ளதாக வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

25 செப்டம்பர் 2011

தாயையும்,மகனையும் வாளால் வெட்டி கொள்ளையர் அராஜகம்!சித்தங்கேணியில் சம்பவம்.

சித்தங்கேணி கீரிமலை வீதியில் உள்ள வீடு ஒன்றில் வீட்டின் கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த கொள்ளையர் குழு, வீட்டிலிருந்த தாயையும் மகனையும் வாளால் வெட்டிவிட்டு கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இக்கொள்ளையர்கள் வீட்டிலிருந்த தங்க ஆபரணங்களையும் பெறுமதியான இலத்திரனியல் சாதனங்களையும் கொள்ளையடித்து விட்டு தலைமறைவாகியுள்ளதாக வட்டுக் கோட்டை பொலிஸார் கூறினர். கொள்ளையரின் வாள்வெட்டிற்கு இலக்காகிய சுந்தரலிங்கம் மங்கையக்கரசி, அவரின் மகன் சுந்தரலிங்கம் ராஜன் ஆகியோர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசார் மத்தியில் மோதல்!ஒருவர் பலி!

அம்பாறையில் மஹாஓயா 65ம் சந்தியில் உள்ள பொலிஸ் விசேட அதிரடிப் படை முகாமில் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் துணை அதிகாரி (Sub-Inspector(SI)) ஒருவரும் பொலிஸ் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவரும் (Assistant Superintendent of Police (ASP)) ஒருவருக்கு ஒருவர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்திலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
காயங்களுடன் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உதவி கண்காணிப்பு அதிகாரி ஒருவரும் (Assistant Superintendent of Police (ASP)) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

24 செப்டம்பர் 2011

புங்குடுதீவில் இளம் பெண் மீது பாலியல் பலாத்கார முயற்சி!ஆட்டோ சாரதி கைது.

யாழ்ப்பாணத்தில் இருந்து புங்குடுதீவு இறுப்பிட்டியில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற இளம் பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டார் என்ற குற்றச் சாட்டில் ஒட்டோ சாரதி ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸரால் கைது செய்யப் பட்டுள்ளார். சம்பவம் கடந்த 19 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் கூறினர். தனியார் பஸ் ஒன்றில் புங்குடு தீவுக்குச் சென்ற 23 வயதுள்ள இளம் பெண் இறுப்பிட்டிக்குச் செல்வதற்காக பெருங்காட்டுச் சந்தியில் இறங்கியுள்ளார். அங்கிருந்து தனது வீட்டுக்குச் செல்வதற்காக அங்கு நின்ற ஓட்டோவை வாடகைக்கு அமர்த்தி உள்ளார். இரவு நேரம் என்பதால் பஸ்ஸில் வந்திறங்கிய ஒரு முதியவர் அந்தப் பெண்ணுக்குத் துணையாகச் செல்ல யோசித்துத் தானும் அந்தப் பெண்பிள்ளையின் வீடுவரை வந்து திரும்பி வருவதாகவும் ஓட்டோ சாரதியிடம் தெரிவித்துள்ளார். ஓட்டோ சாரதி குறிப்பிட்ட பெண்பிள்ளை தனது உறவினர், தெரிந்தவர் என்று கூறி அந்தப் பெரியவரைத் தவிர்த்து விட்டு பெண்ணை மட்டும் ஏற்றிச் சென்றார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டோ எனது வீட்டுக்குச் செல்வதற்கான பாதையை விடுத்து ஊரதீவுக்குச் செல்லும் வீதியூடாகச் செல்வதைத் கண்டதும் நான் சத்தம் போட்டேன். எனினும் சன சந்தடி யற்ற அந்த இடத்தில் வைத்து ஒட்டோ சாரதி என்னைப் பலாத்காரம் செய்ய முயற்சித் தார் என்று தனது முறைப்பாட்டில் அந்தப் பெண் தெரிவித்துள்ளார். தன்னிடம் சாரதி முறை தவறி நடந்து கொள்வது குறித்து பொலிஸாரிடமும் இராணுவத்தினரிடமும் முறையிடுவேன் என்று யுவதி மிரட்டியதை அடுத்து பயந்து போன சாரதி, அவரை ஏற்றி வந்து வீட்டுக்கு அருகே இறக்கி விட்டுச் சென்றுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாகப் பெண் தனது வீட்டாரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர்கள் குறிக் காட்டுவானில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்றனர். ஆனால், குற்றப்பிரிவு முறைப்பாடுகளைத் தாம் எடுப்பதில்லை என்று கூறி அவர்களை ஊர்காவற்றுறைப் பொலிஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
ஊர்காவற்றுறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அங்குள்ள வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெண் பின்னர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டார். சம்பந்தப்பட்ட பெண்ணின் சட்டைகள் கிழிந்திருத்ததுடன் உடலில் சிறுசிறு நகக் கீறல் காயங்களும் காணப்பட்டதாகவும் மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஓட்டோ சாரதி இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். ஏற்கனவே இது போன்ற சம்பவங்களில் இவர் ஈடுபட்டிருந்தார் என்றும் எனினும் வழக்குகளைச் சந்திக்காமல் தப்பிக் கொண்டார் எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.யாழ்ப்பாணத்தில் இருந்து அன்றைய தினம் 7 மணிக்குப் புறப்பட வேண்டிய தனியார் பஸ் வவுனியாவில் இருந்து வரும் ஒருவருக்காகக் காத்திருந்து 45 நிமிடங்கள் பிந்தியே புறப்பட்டதாகவும் இரவு 8.45 இற்குப் பின்னரே அந்த பஸ் பெருங்காட்டுச் சந்தியை வந்து சேர்ந்ததாகவும் பஸ்களின் இந்த நேரம் தவறும் நடவடிக்கைகளே இந்தச் சம்பவம் இடம் பெறக்காரணம் எனவும் புங்குடுதீவு மக்கள் விசனப்படுகின்றனர்.

23 செப்டம்பர் 2011

கரம்பொன் காளிகோவிலடியில் பூசகர் சடலமாக மீட்பு!

ஊர்காவற்றுறை கரம்பொன் காளிகோவிலடியில் உள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இந்துமத பூசகர் ஒருவரின் சடலம் நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டுள்ளது.
அப் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் ஐயர் இராஜசேகரசர்மா (வயது-31) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.
சடலத்தை ஊர்காவற்றுறை நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா நேரில் சென்று பார்வையிட்டார்.
ஊர்காவற்றைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவரது மரணம் தொடர்பில் மர்மம் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

வேலணையில் இனந்தெரியாதோர் அட்டூழியம்!குடும்பஸ்தர் பலி!

வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் கூரிய ஆயுதங்களினால் சரமாரியாகத் தாக்கியதில் குடும்பஸ்தர் ஸ்தலத்தில் பலியானதோடு அவரது மனைவியும் மகனும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 12.30 மணியளவில் வேலணை இரண்டாம் வட்டாரத்திலுள்ள செல்வநாயகம் வீதியில் இடம்பெற்றுள்ளது. இதில் 4 பிள்ளைகளின் தந்தையான சபரிமுத்து யேசுதாசன் ( வயது 57) என்ற குடும்பஸ்தர் வாள்வெட்டுக்கிலக்காகி பலியானவராவார். அவரது மனைவி யேசுதாசன் ரஞ்சனாதேவி (வயது-43), யேசுதாசன் முகுந்தன் (வயது-18) ஆகிய இருவரும் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலத்தை ஊர்காவற்றுறை நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா நேரில் சென்று பார்வையிட்டதோடு பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல் வெளியாகவில்லை என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்: இக் கொலைச் சம்பவத்தினையடுத்து வேலணையில் பதற்றமான சூழ் நிலை காணப்பட்டது.

நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக கையெழுத்திட இந்தியா மறுத்து விட்டதாம்!

நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஏற்கக் கூடாது எனக் கோரும் கடிதத்தில் கையயாப்பமிட இந்தியா மறுப்புத் தெரிவித்துள்ளது. அது தொடர்பாக விவாதத்தில் பார்த்துக் கொள்ளலாம் என இந்தியா கூறிவிட்டது. ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவுக்கு செயலாளர் நாயகம் பான் கீ மூன் கையளித்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையை ஏற்கக் கூடாது எனக் கோரும் கடிதம் ஒன்றில் சில நாடுகளிடம் இருந்து அரசாங்கம் கையொப்பங்களை பெற்றுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு கோரிக்கை விடுக்கும் இக்கடிதம் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தற்போதைய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெறாத நிபுணர்கள் குழுவின் அறிக்கையை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது எனவும் இக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசிற்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதத்தில் சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மலேசியா, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, பங்களாதேஷ், மாலைதீவு மற்றும் கியூபா ஆகிய 9 நாடுகள் கையயாப்பம் இட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
அதேவேளை இந்தியா உள்ளிட்ட முக்கியமான சில நாடுகளிடமிருந்து இக்கடிதத்தில் கையொப்பம் பெறுவதற்கு அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிபடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. இவ்விவகாரத்தில் முன்கூட்டியே எதுவும் செய்ய முடியாது எனவும் இது குறித்த விவாதம் எடுத்துக் கொள்ளப்படும் போது பார்த்துக் கொள்ளலாம் எனவும் இந்தியா கூறி விட்டதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

22 செப்டம்பர் 2011

மன்மோகனை சந்திக்க ஆர்வம் காட்டாத வல்லரசு தலைவர்கள்!

வழக்கமாக பிரதமர் மன்மோகன் சிங் ஐ.நா. கூட்டத்திற்குப் போனால் உலக வல்லரசு நாடுகளின் தலைவர்கள் அவரைச் சந்தித்துப் பேச அலை பாய்வார்கள், ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திற்காக அமெரிக்கா போயுள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்க யாருமே ஆர்வம் காட்டவில்லை என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையோ, இங்கிலாந்து பிரதமரையோ, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகளின் தலைவர்களையோ இந்த முறை அவர் சந்திக்கவில்லை.
அன்னா ஹஸாரே போராட்டம், ஊழலுக்கு எதிரான இந்திய மக்களின் கொந்தளிப்பு, தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான ஊழல் புகார்கள் உள்ளிட்டவை காரணமாக பிரதமர் மன்மோகன் சிங்கின் மிஸ்டர் கிளீன் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் மீதான நற்பெயர் சர்வதேச அளவில் காலியாகியுள்ளதாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதன் காரண்மாகவே மன்மோகன் சிங்கை சந்திக்க எந்த வல்லரசுத் தலைவரும் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக ராஜபக்சே போன்ற இரண்டாம் கட்ட உலகத் தலைவர்களை சந்தித்துப் பேசி ஆலோசனை நடத்தும் நிலைக்கு பிரதமர் தள்ளப்பட்டுள்ளார்.

சிறிலங்கா அரசுக்கு தண்டனை விதிக்குமாறு கோரப்பட்டுள்ளது!

இலங்கை அரசாங்கத்திற்கும் படைவீரர்களுக்கும் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென 17 அரச சார்பற்ற நிறுவனங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கவுன்ஸிலின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையிடம் கோரிக்கை விடுத்துள்ளன.போர்க் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகத் தெரிவித்து இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரகசியமான முறையில் அவசரமாக இந்த கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தாருஸ்மன் அறிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறும் குறித்த அரச சார்பற்ற நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 16ம் திகதி இந்த விசேட கோரிக்கைகள் அடங்கிய மகஜர் நவநீதம்பிள்ளையின் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

21 செப்டம்பர் 2011

நாட்டுப்பற்றாளர் ஏரம்பு சின்னம்மா அவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இரங்கல்!

தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி அவர்களின் தாயார் திருமதி ஏரம்பு சின்னம்மா அவர்கள் 06/09/2011 அன்று காலமானார். அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்பேசும் மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இது தொடர்பாக விடுக்கும் இரங்கற் செய்தி

அன்பான தமிழ் பேசும் மக்களே,
தமிழீழத் தேசியத் தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் துணைவியார் மதிவதனி அவர்களின் தாயார் திருமதி ஏரம்பு சின்னம்மா அவர்கள் 06/09/2011 அன்று காலமானார்.
தமிழீழத் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமை தாங்கிய தமிழீழத் தேசியத் தலைவரின் வாழ்க்கைத் துணைவியாரைப் பெற்றெடுத்து வளர்த்த பெருமை சின்னம்மா அவர்களைச் சாரும்.
அதுமட்டுமன்றி தமிழீழ விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்துக் களப்பலியான மாவீரன் கப்டன் அருண் (ஏரம்பு பாலச்சந்திரன்) அவர்களின் தாயாருமாவார்.
தேசியத் தலைவரின் பிள்ளைகளான சாள்ஸ் அன்ரனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகியோரின் தமிழ்த்தேசியப் பற்றுடனான வளர்ச்சியில் சின்னம்மாவின் பங்களிப்பு அளப்பெரியது.
ஆசிரியையாகப் பணிபுரியத் தொடங்கிய காலத்திலிருந்தே தனது கணவர் நாட்டுப்பற்றாளர் ஏரம்பு அவர்களைப் போலவே சமூக மேம்பாட்டுக்காக உழைத்து வந்த சின்னம்மா அவர்கள். எமது போராளிகளின் பராமரிப்பிலும் வளர்ச்சியிலும் அக்கறையோடு செயற்பட்டவர்.
தாயகத்தை விட்டு வெளியேறி வசிக்கும் வசதிகள் தாராளமாக இருந்தும்கூட எமது மக்களோடு மக்களாகவே வாழ்ந்துவந்த சின்னம்மா அவர்கள், முள்ளிவாய்க்கால் பேரழிவின் இறுதிக்கணம்வரை எமது மக்களுடனேயே அத்தனை துன்பங்களையும் அனுபவித்து வாழ்ந்து வந்தார்.
எமது இனவிடுதலைப் போராட்டத்தில் பற்றுறுதியோடு தன்னை அர்ப்பணித்து, வெளித்தெரியாமலேயே பல சேவைகளையும் பணிகளையும் செய்து வாழ்ந்து வந்த ஏரம்பு சின்னம்மா அவர்களை ‘நாட்டுப்பற்றாளர்’ என கெளரவப்படுத்துவதில் எமது அமைப்பு பெருமை கொள்கின்றது.
இறுதிநேரம் வரை பல்வேறு நெருக்கடிகளுக்குள்ளும் நாட்டுப்பற்றாளர் சின்னம்மாவின் நலன்பேணலில் அக்கறையோடு செயற்பட்ட அனைவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அவரின் பிரிவால் துயருறும் அவரது குடும்பத்தினருக்கு தமிழ்பேசும் மக்களோடு இணைந்து எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

ஆனந்தசங்கரிக்கு சம்பந்தன் சட்டத்தரணி மூலம் கடிதம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்துகொண்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
தமிழர் விடுதலைக் கூட்டணியின் வருடாந்த மாநாடும், பொதுக்கூட்டமும் எதிர்வரும் 24ஆம் 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெறவுள்ளது என்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி அறிவிப்பு விடுத்திருந்தார். இந் நிலையில் இந்த நிகழ்வுகளை நடத்த வேண்டாம் என்றும் மீறி நடத்தினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கீழுள்ள சட்டத்தரணி ஒருவர் ஊடாகவே இந்த நோட்டீஸ் அனுப்பிவைக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள ஆனந்த சங்கரி தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து சம்பந்தன் வெளியேறியதன் பின்னர் நான்கு தடவைகள் தேர்தல்கள் வந்து சென்றிருக்கின்றன.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இரண்டு சபைகளில் உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியிருந்தது. இந்தச் சூழலில் தாம் தான் விடுதலைக்கூட்டணியின் பொதுச் செயலாளர் என்று இரா.சம்பந்தன் தெரிவித்து எமது நிகழ்வுகளை தடுத்து நிறுத்துவது வேதனையளிக்கிறது என்று தெரிவித்திருக்கின்றார்.
தமிழரசுக்கட்சி, ஈபிஆர்எல்எப், ரெலோ ஆகிய கட்சிகள் தமது வருடாந்த மாநாட்டினை இந்த ஆண்டும் நடத்தியிருக்கின்றன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் இருக்கின்ற ஒன்றரைக் கோடி ரூபா பணமே சம்பந்தனின் இந்த முடிவிற்கான காரணம் என்கிறார் கூட்டணியின் மூத்த உறுப்பினர் ஒருவர்.

20 செப்டம்பர் 2011

பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள கோர்டன் வைஸ் எழுதிய புத்தகம்!

இலங்கைக்கான ஐ.நா வின் பேச்சாளராகக் கடமையாற்றி பின்னர் இலங்கையை விட்டு வெளியேறிய கோர்டன் வைஸ் இலங்கை தொடர்பாக பல கருத்துக்களை முன்வைத்து வருவது என்பது யாவரும் அறிந்ததே. அதன் பின்னர் அவர் இலங்கையில் நடந்த இனப்படுகொலை தொடர்பாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார். அல்ஜசீரா பி.பி.சி மற்றும் சனல் 4 போன்ற சர்வதேச தொலைக்காட்சிகளுக்கு அவர் இலங்கையில் நடைபெற்ற பல விடையங்களை தெரிவித்து ஒரு சாட்சியாகவே மாறியிருந்தார்.
அவர் தொடர்ந்தும் இலங்கையில் ஈழத் தமிழர் படும் இன்னல் தொடர்பாக குரல்கொடுத்துவந்தார். இலங்கையில் தாம் கண்டதையும் தனது அனுபவத்தையும் ஒரு புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். த கேஜ் என்று அழைக்கப்பட்டும் இப் புத்தகத்துக்கு கனடா மற்றும் அவுஸ்திரேலிய பத்திரிகைகள் முன்னுரிமை கொடுத்து இப் புத்தகம் பற்றி எழுதியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான சிட்னி மோனிங்கும், மற்றும் கனடாவில் இருந்து வெளிவரும் பிரபல நாளேடான நஷனல் போஸ்ட்டும் இப் புத்தகம் தொடர்பாகவும் மற்றும் இலங்கை நிலை தொடர்பாகவும் செய்திகளை வெளியிட்டுள்ளது. இது கனடா மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேற்றின மக்கள் மத்தியில் இலங்கைக்கு இருந்த கொஞ்ச நெஞ்ச நம்பிக்கையும் இதனால் பாதிக்கப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. கோர்டன் வைஸ் எழுதியுள்ள புத்தகத்தில் இலங்கையில் நடந்த இறுதி யுத்தம் குறித்தும் மக்கள் கொல்லப்பட்டது குறித்தும் எழுதப்பட்டிருந்தாலும் இதுவரை வெளிவராத பல தகவல்களும் வெளியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது சர்வதேச ரீதியாக பல சர்ச்சைகளை இப் புத்தம் கிளப்பலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விடுதலைப் புலிகளுடனான போரில் கிராமம் கிராமமாக முன்னேறிய இலங்கைப் படையினர் அங்கே முதலில் என்ன செய்தார்கள் என்பதனையும் அவர்கள் மறைத்த பல விடையங்களை கோர்டன் வைஸ் வெளிப்படையாகவே எழுதியுள்ளார் என்றும் மேலும் அறியப்படுகிறது.

யாழ்ப்பாணம் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் வெடிபொருட்களாம்!

மொனராகலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தில் கொண்டுசெல்லப்பட்ட சீ போ ரக வெடிபொருட்கள் மொனராகலை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மொனராகலை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் நேற்றிரவு பேருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெடி பொருட்கள் 615 கிராம் எடையைக் கொண்டவை என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வெடிபொருட்கள் பஸ்சின் சாரதி ஆசனத்திற்குக் கீழே மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மொனராகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

19 செப்டம்பர் 2011

தேசியத்தலைவரின் துணைவியாரின் தாயார் காலமானார்!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் மாமியாரும், திருமதி. மதிவதனி பிரபாகரன் அவர்களின் தாயாருமான திருமதி. ஏரம்பு சின்னமா அவர்கள் காலமானார்.சரவணையைப் பிறப்பிடமாகவும் புங்குடுதீவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஏரம்பு சின்னம்மா அவர்கள் அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார்.
இவர் கடந்த 06-09-2011 செவ்வாய்கிழமை காலமாகியுள்ளதாக செய்திகள் மூலம் அறியக்கிடைத்திருக்கிறது. அவருக்கு எமது புளியங்கூடல்.கொம் இதய அஞ்சலிகளை காணிக்கையாக்குகின்றது.

18 செப்டம்பர் 2011

ஸ்ரீலங்காவிற்கு பிரித்தானியா காலக்கெடு!

போரின்போது இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதன் முன்னேற்றத்தை காண்பிப்பதற்கு சிறிலங்கா அரசுக்கு பிரித்தானியா காலக்கெடு ஒன்றை வழங்கியுள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்யூ தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுவுக்கே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்காவில் போரின்போது இருதரப்பினராலும் இழைக்கப்பட்ட கொடூரங்கள் குறித்த அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க அனைத்துலக போர்க்குற்ற விசாரணை ஒன்றுக்கு அழுத்தம் கொடுக்க பிரித்தானிய வெளிவிவகாரச் செயலகம் தவறி விட்டதாக பிரித்தானிய நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழு குற்றம்சாட்டியிருந்தது.
இந்தக் குற்றச்சாட்டுக்கு பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹக்யூ கடந்த வாரஇறுதியில் வழங்கியுள்ள பதிலிலேயே சிறிலங்கா அரசுக்கு காலக்கெடு விதித்துள்ள விபரத்தை வெளியிட்டுள்ளார்.
முன்னேற்றத்தைக் காண்பிக்க சிறிலங்காவுக்கு இந்த ஆண்டு இறுதிவரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அல்லது சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைகளுக்கு பிரித்தானியா ஆதரவளிக்கும் என்றும் வில்லியம் ஹக்யூ மேலும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இருதரப்பினராலும் அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்கள் மீறப்பட்ட மோசமான குற்றச்சாட்டுகள் குறித்து உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதே பிரித்தானிய அரசின் நிலைப்பாடு என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

சாவகச்சேரியில் கோஷ்டி மோதல்!

இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலினால் இரண்டு பேர் வெட்டுக் காயங்களுக்குள்ளாகி சிகிச்சைக்கென சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்தச் சம்பவம் சாவகச்சேரியில் நேற்றுப் பிற்பகல் இடம் பெற்றது. சம்பவத்தில் பாலாவி தெற்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த அ.பிரகாஸ் (வயது 33) என்பவர் கையில் வெட்டுக் காயத்துக்குள்ளாகிப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கச்சாய் தெற்கு, கொடிகாமத்தைச் சேர்ந்த க.நல்லதம்பி (வயது 63) என்பவர் தலையில் காயமடைந்து தொடர்ந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகிறார். சாவகச்சேரிப் பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்துகின்றனர்.
பிரகாஸ் என்பவர் கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் பிறிதொரு குழுவினரால் வெட்டப்பட்டு சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று நேற்று முன்தினம் வீடு திரும்பியிருந்தார்.இந்த நிலையில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

17 செப்டம்பர் 2011

புலிகள் இயக்க சந்தேக நபரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!

பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவரை விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிசாரிடம் இவர் கொடுத்திருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இவருக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக தாக்குதல் ஒன்றை நடத்த வெடிப்பொருட்களை சேகரித்ததாக குற்றம்சாட்டி சந்திரகுமார் ராபர்ட் புஷ்பராஜன் என்பவர் 2000ஆம் ஆண்டு நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பொலிசாருக்கு இவர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இவருக்கு எதிரான சாட்சியமாக வழக்கில் பயன்படுத்தப்பட்டிருந்தது.இந்த வாக்குமூலம் இவர் தன்னிச்சையாக வழங்கியதுதான் என நிரூபிக்க அரச சட்டவாதி தவறிவிட்டதாக மேல்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேகநபரிடமிருந்து வெடிப்பொருட்கள் பலவற்றைக் கைப்பற்றியதாக பொலிசார் கூறினர். ஆனால் அதனை சாட்சிகள் மூலம் நிரூபிக்க பொலிசார் தவறிவிட்டதாகவும் நீதிபதி சுனில் ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.
குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில், புஷ்பராஜன் விடுவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி அவுஸ்திரேலியாவில் வட்டமேசை மாநாடு!

இலங்கைமீது யுத்தக்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தும் வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் வட்டமேசை மாநாடொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 20ம் திகதி இந்த மாநாடு நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் விசாரணையை வலியுறுத்துவதற்கு ஆதரவளிக்கும் நாடுகள் தொடர்பான விவரங்கள் மாநாட்டில் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் ஐ.நா அமைப்பின் இலங்கைக்கான முன்னாள் பேச்சாளர் கோர்டன் வைஸ், சர்வதேச ஜூரிகள் சபையின் தலைவர் ஜோன் டோவ்ட், நியூ சௌத் வேல்சின் முன்னாள் சட்டமா அதிபர் உள்ளிட்ட பலர் பங்கேற்கவுள்ளனர்.

16 செப்டம்பர் 2011

சீன இராஜதந்திரிகள் மீது புகழ்மாலை பொழிகிறார் மகிந்த!

சில நாடுகளின் இராஜதந்திரிகள் இராஜதந்திர வரைமுறைகளை மீறிச் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­ குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத் திணைக்களங்களின் தலைவர்களையும் பணிப்பாளர்களையும் குறித்த இராஜதந்திரிகள் நேரடியாக சந்திப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். துறை சார் அமைச்சர்கள் அல்லது அமைச்சுக்களின் செயலாளர்களது அனுமதியின்றி இராஜதந்திரிகள் அரச நிறுவன அதிகாரிகளை சந்திப்பது இராஜதந்திர வரைமுறைகளுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு இராஜதந்திர வரைமுறைகளை மீறிச் செயற்படக்கூடாது என குறித்த இராஜதந்திரிகளுக்கு விளக்கமளிக்குமாறு ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். பல சந்தர்ப்பங்களில் துறை அமைச்சர்களும் அமைச்சு செயலாளர்களும் அறிந்திராத வகையில் அரச நிறுவன உயரதிகாரிகளுடன் சில நாட்டு இராஜதந்திரிகள் நேரடியான தொடர்புகளைப் கொண்டிருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இவ்வாறு இராஜதந்திர வரைமுறை மீறிச் செயற்படும் அநேகமான இராஜதந்திரிகள் பிரதிநிதித்துவம் செய்யும் நாடுகள் இலங்கையில் நல்லாட்சி நிலவவில்லை என குற்றம் சுமத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். சீனா போன்ற நாடுகள் எந்தச் சந்தர்ப்பத்திலும் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததில்லை எனவும் சீன இராஜதந்திரிகள் நாட்டின் உள்விவகாரங்களில் தேவையின்றி தலையீடு செய்வதில்லை என அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்கக்கோரி பிரிட்டனில் போராட்டம்!

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானியப் பாதுகாப்புச் செயலர் லியம் பொக்ஸ் ஆதரவளிக்க வேண்டும் என்று கோரி பிரி. வடக்கு சொம்செற் தொகுதியில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
நெயஸ்சீ நகர சதுக்கத்தில் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தை அக்ற்நெளவ் என்ற அமைப்பு மற்றும் தமிழர்களும் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர்கள் வீதியில் சென்றவர்களிடம் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் பற்றிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்ததுடன் அது தொடர்பான மனுவொன்றிலும் கையெழுத்துக்களைத் திரட்டியுள்ளனர்.
வடக்கு சொம்செற் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான லியம் பொக்ஸ் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களைக் குறித்து அனைத்துலக விசாரணைக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என்று இவர்கள் கோரியுள்ளனர்.
இது தொடர்பான மனுவையும் ஆதரவாகத்திரட்டிய கையொப்பங்களையும் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் லியம் பொக்ஸின் தொகுதி செயலகத்தில் கையளிக்கவுள்ளனர்.
போர்க்குற்ற விசாரணைக்கு லியம்பொக்ஸ் ஆதரவு தெரிவிக்கும் வரை தாம் தொடர்ந்து வடக்கு சொம்செற் தொகுதியில் தொடர்ச்சியாக இத்தகைய போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

15 செப்டம்பர் 2011

நெஞ்சு வலியால் துடித்த கோத்தபாய!

கோத்தாவிற்கு நேற்று திடீரென சுகயீனம் ஏற்பட்டது. உடனடியாக இராணுவ வைத்தியசாலை வைத்தியர்கள் வீட்டிற்கு வரவளைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத்தொடர், சர்வதேச அழுத்தம் மற்றும் உட்கட்சி பூசல்களால் கோத்தாவிற்கு அடிக்கடி உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. உணவு பழக்கவழக்கங்கள், குடிபானங்கள் போன்றவற்றில் கட்டுபாடாக இருக்குமாறு வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். அத்துடன் போதிய ஓய்வு எடுத்துக்கொள்ளுமாறும் கூறியுள்ளனராம்.

மீசாலையில் மாணவிகளை கடத்த முயற்சித்தவரால் பரபரப்பு!

தனியார் கல்வி நிறுவனத்துக்குச் சென்று கொண்டிருந்த மாணவிகளைப் பிடித்துத் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றுவதற்கு முயன்ற நபரினால் நேற்று மாலை யாழ்.தென்மராட்சி மீசாலைப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மீசாலை, புத்தூர்ச் சந்திப் பகுதியில் நேற்றுப் பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
மீசாலை வீரசிங்கம் மகா வித்தியாலயத்துக்கு அண்மையில் இயங்கி வரும் தனியார் கல்வி நிலையம் ஒன்றுக்கு நேற்றுப் பிற்பகல் மாணவிகள் சென்றுகொண்டிருந்தனர்.
அந்தவேளை அந்தப் பகுதியில் ஏ9 வீதியில் ஊதா நிற ஸ்கூட்டி பெப் மோட்டார் சைக்கிளில் ஒருவர் அங்குமிங்குமாகச் சுற்றிக் கொண்டிருந்தார். அவர் திடீரென மாணவிகளைத் துரத்த ஆரம்பித்தார்.
தரம் 10 இல் கல்வி பயிலும் 03 மாணவிகள், தரம் 06 இல் கல்வி பயிலும் மாணவி ஒருவரையும் அடுத்தடுத்துச் துரத்திச் சென்று இந்த நபர் அவர்களைக் கையால் பிடித்து இழுத்துள்ளார். அத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் ஏறுமாறு அந்த மாணவிகளை மிரட்டியுள்ளார்.
இந்த நபரின் பிடியில் இருந்து விடுபட்ட மாணவிகள் கூக்குரலிட்டுக் கொண்டு அருகில் உள்ள வீடுகளில் தஞ்சம் புகுந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த நபர் குறித்த தனியார் கல்வி நிலையத்துக்குள்ளேயும் செல்ல முயன்றுள்ளார்.
கல்வி நிலையத்தின் நிர்வாகத்தினர் அவரை நெருங்க முற்பட்டபோது அவர் ஓடித் தப்பி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவங்களினால் நேற்று பிற்பகலுக்குப் பின்னர் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது. மாணவர்களுக்கு நடந்ததை அறிவதற்காக கல்வி நிலையத்தை நோக்கிப் பெற்றோர் விரைந்தனர்.
குறித்த நபர் நீல நிறத்திலான ரீசேட்டும் கறுப்பு நிறத்திலான ஹெல்மெட்டும் அணிந்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த மோட்டார் சைக்கிள் இலக்கம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது.

14 செப்டம்பர் 2011

நிரந்தர தீர்வு கிட்டும்வரை போராட்ட குணம் மாறப்போவதில்லை!

முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த ஆயுதப் போராட்டம் போல் தமது போராட்டங்கள் முடியப்போவதில்லை. தமக்கான நிரந்தர தீர்வு ஒன்று கிட்டும் வரை போராடும் குணமும் மாறப்போவதில்லையென தெற்காசிய வெளி விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்க செயலரிடம் யாழ் மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப்பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்கத் தூதுவர் குழு இணையங்களின் பிரதிநிதிகளை நேற்று செவ்வாய்க்கிழமை (13.0911) நண்பகல் 12 மணியளவில் கோவில் வீதியில் உள்ள அவர்களது அலுவலகத்தில் வைத்து சந்தித்தது. மேலும் அங்கு தெரிவிக்கப்படுகையில் தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் இருந்தும் கூட எதுவும் செய்யமுடியாது உள்ளதாகவும் பேச்சுச் சுதந்திரம் கூட மறுக்கப்பட்டுள்ளது எனவும் றொபேட் ஓ பிளேகின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
'எமது பகுதிகளில் எம்மை நாமே ஆளுகின்ற கட்டமைப்பு, மொழியுரிமை, கலாச்சாரம் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்கான உரிமைகள் எமக்குத் தேவை. கிறீஸ் பூதம் என்ற உருவாக்கம் மக்களை அச்ச நிலைமைக்குள் கொண்டுசென்று உளவியல் யுத்தத்தை நடாத்துகின்றது. எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றது. மீள் குடியேற்றம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், வீட்டு வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. 55 சதவீதமான இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டு இருக்கவில்லை. தொழிற்சாலைகளை இயங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை. பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வைக் காண அமெரிக்கா மற்றும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டார்கள்.
குறிப்பாக ஜ.நா நிபுணர் குழு அறிக்கையினில் சுட்டிக்காட்டப்பட்டவாறு உண்மை நீதி மற்றும் இழப்பீடு தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டுமென்பதை சுட்டிக்காட்டியதாக யாழ்.; மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப்பிரமுகர் சி.வி. கே. சிவஞானம் பின்னர் ஊடகவியலாளர்களிடையே உரையாடுகையில் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் உதை வாங்கிய மன்னார் இளைஞர்கள்!

மன்னாரிலிருந்து முச்சக்கர வண்டியொன்றில் கிளிநொச்சிக்கு சென்ற மூன்று இளைஞர்கள் கிறீஸ் மனிதர்கள் என்று பொதுமக்களால் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சி நகரில் நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி இராணுவ முகாமில் பணியாற்றும் இராணுவத்தினன் ஒருவர் விடுமுறையில் தென்பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு சென்றுவிட்டு மீண்டும் கடமைக்குச் செல்வதற்காக பஸ் மூலம் கடந்த சனிக்கிழமை இரவு 11 மணியளவில் மன்னார் நகருக்கு வந்துள்ளார்.
பின்னர் கிளிநொச்சி செல்வதற்காக பஸ் கிடைக்காததினால் மன்னார் நகரில் முச்சக்கரவண்டியொன்றை வாடகைக்கு அமர்த்தியுள்ளார்.
இரவு வேளையில் கிளிநொச்சிக்கு தனித்து செல்வது கடினமென உணர்ந்த முச்சக்கரவண்டி சாரதி தனது இரண்டு நண்பர்களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு குறித்த இராணுவத்தினனுடன் கிளிநொச்சி நோக்கி சென்றுள்ளார்.
இந்த நிலையில் ஞாயிறு அதிகாலை 3.30 மணியளவில் கிளிநொச்சி நகரில் குறித்த இராணுவத்தினனை இறக்கிவிட்ட முச்சக்கரவண்டி சாரதி தனது இரு நண்பர்களுடன் கிளிநொச்சி நகர்ப் பகுதியில் முச்சக்கரவண்டியை நிறுத்தி உள்ளே உறங்கியுள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதியில் கூடிய பெருமளவான பொதுமக்கள் அவர்களை கடுமையாகத் தாக்கி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பின்னர் விசாரணைகளை மேற்கொண்டு பொலிஸார் மூவரையும் விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

13 செப்டம்பர் 2011

ஸ்ரீலங்கா மீதான சர்வதேச விசாரணைக்கு நாம் ஆதரவு வழங்குவோம்!

கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்னர் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு கனடா பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
பொதுநாவாய நாடுகளின் தலைவர்களிடம் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக பிபிசி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.இலங்கையில் மனித உரிமைகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பிலான நடவடிக்கைகள் உரிய முறையில் மு்ன்னெடுக்கப்படாத பட்சத்தில் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் ஹாபர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் பொதுநலவாய மாநாட்டினை கொழும்பில் நடத்துவதற்கு கனடா அவுஸ்திரேலியா மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகிய நாடுகள் ஏற்கனவே மறுப்பு வெளியிட்டிருந்தன.
அத்துன் இலங்கையின் தற்போதைய நிலவரம் தொடர்பில் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹாபர் தெரிவித்துள்ளார்.
இந்த மாநாட்டினை புறக்கணிப்பதற்கு ஏனைய நாடுகளும் அதரவு வழங்குமென நம்புவதாகக் குறிப்பிட்ட ஹாபர் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இது அழுத்தமாக அமையுமெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகத்தினால் இலங்கை தொடர்பில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கமைவாக சர்வதேச விசாரணைகளை தாம் ஆதரிப்பதாக கனடா பிரதமர் இதன் போது தெரிவித்தார்.

எம்மை புறக்கணித்து விட்டு பெரும்பான்மை கட்சிகள் அரசியல் நடத்த முடியாது!

ஜனநாயக மக்கள் முன்னணி கொழும்பு மாவட்டத்து தமிழ் மக்களின் ஜனநாயக அரசியல் சக்தி. தமிழ் மக்களையும், எமது கட்சியையும் எந்தவொரு பெரும்பான்மை கட்சியும் உதிரிகளாக நடத்துவதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம். எங்களை புறக்கணித்துவிட்டு எந்தவொரு பெரும்பான்மை கட்சியும் கொழும்பிலே அரசியல் நடத்த முடியாத நிலைமையை நாம் உருவாக்குவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகரசபை வேட்பாளர்கள் எஸ்.குகவரதன், கே.ரீ.குருசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த பிரசாரக் கூட்டம் கொழும்பு ஆமர்வீதி, பிறைட்டன் மண்டபத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மனோகணேசன் மேலும் கூறியதாவது,
அரசியலில் வெற்றி பெறுவதற்கு பொறுமை கட்டாயம் தேவை. நான் பத்து வருடங்களாக நாடாளுமன்றத்தில் இருந்தேன். இரு வருடங்களைத் தவிர, பெரும்பாலும் எதிர்கட்சியில் இருந்தேன். மூன்றுமுறை ஆளுகின்ற அரசுடன் இணைந்து கொள்வதற்கு எனக்கு அழைப்புவந்தது. 2004 இல் சந்திரிகா பண்டார நாயக்க அழைத்தார். 2005 இல் ஒருமுறையும், 2009 இல் ஒரு முறையும் பசில் ராஜபக்­ஷ‌ எனக்கு அழைப்பு விடுத்தார். அவர்கள் அழைப்பு விடுத்ததில் தவறேதும் கிடையாது. அழைப்புகளை நான் ஏற்றுக்கொள்ள வில்லை. ஆனால் அரசுடன் இணைந்து ஆகப் போவது எதுவுமில்லை என்பதால் நான் அவர்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளவில்லை. அரசுடன் இணைந்து கொண்டவர்கள் எதையும் சாதிக்கவில்லை.
எனவேதான் பொறுமையுடன் இருக்கிறேன். பாராளுமன்றத்தில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் மனங்களில் வாழ்கிறேன். பொறுமையாக இருந்தால் உரிய இடம், உரிய நேரத்தில் தேடிவரும். புதிதாக பாராளுமன்றம் சென்ற சிலருக்கு பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரம் இருக்க முடியவில்லை. பாராளுமன்றம் என்பது என்ன என்பதை படிப்பதற்கு முன்னர் சிலருக்கு பிரதி அமைச்சராகி, அமைச்சராகி, ஜனாதிபதி ஆகவேண்டும் என்ற ஆசை வந்துவிடுகின்றது. இப்படியானவர்களின் அரசியல் வாழ்க்கை ஆரம்பமானவுடனையே சடுதியாக முடிவிற்கு வந்துவிடுகின்றது என்றார் அவர்.

இப்படியும் கேவலம் கெட்ட பிறவிகள்!

கோவை மாநகரத்தின், சுற்றுப்பகுதியில் இருக்கும் பொறியியல் தொழிற்சாலைகளில் வேலை செய்ய வட மாநிலங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் வந்து தங்கியுள்ளனர்.
போத்தனூர் பக்கம் உள்ள செட்டிபாளையத்தில் சிமெண்டு கலவை தயார் செய்யும் ஒரு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் நூறுக்கும் மேற்பட்ட வட இந்திய வாலிபர்கள் வேலை செய்கிறார்கள்.
நேற்று இரவு, தண்டபாணி என்பவரின் தோட்டத்தில் கட்டிவைக்கப் பட்டிருந்த மாட்டுக்கன்று பலமாக
கத்தியது. “நாயோ நரியோ”தான் கன்றுக்குட்டியை கடிக்கிறது என்று பயந்த தண்டபாணி, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தனது தோட்டத்துக்கு ஓடியுள்ளார்.
தண்டபானியுடன் சிலர் கூட்டமாக ஓடியபோது, மாட்டுக்கட்டுத்தறைக்கு பக்கத்திலிருந்து நான்கு பேர் தப்பி ஓடியுள்ளார்கள்.
திருடர்கள் தான் என்று நினைத்து சத்தம் போட்டபடியே நான்கு போரையும் துரத்தியதில் ஒருவர் மட்டும் அகப்பட்டுக்கொண்டார். மற்ற மூவரும் தப்பிவிட்டனர்.
இதற்கிடையில் கன்றுக்குட்டியை பார்த்த சிலர் அதன் வாயிலிருந்து ரத்தம் கொட்டியதை பாத்துவிட்டு, கன்று குட்டியின் வாயை பிடித்து பார்த்தபோது அதன் நாக்கு அருக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து பிடிபட்டவனிடம்(ஒரிசாவை சேர்ந்த பினோத் 18 ), எதற்குடா கன்றுக்குட்டியின் நாக்கை அறுத்தீர்கள் என்று கிராமத்து பொதுமக்கள் தென்னை மரத்தில் கட்டிவைத்து உதைத்து விசாரித்ததில் உண்மையை கூறினான்.
’’என்னோடு நிஸ்தார் 18, டேவிட் 20, பெகோர் 22, ஆகிய நான்கு பேரும் பக்கத்தில் உள்ள ரெடி மிக்ஸ்
கலவை தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறோம்.
இரவு 11 மணிக்கு கன்றுக்குட்டியை பிடித்து அதனுடன் உடலுறவு கொல்ல முயற்சி செய்தோம். அப்போது கன்றுக்குட்டி கத்தியதால், அதன் வாயில் துணையை வைத்து அடைத்தோம். அப்படியும் சத்தம் போட்டதால் சத்தம் வராமல் இருக்க மன்வெட்டியின் “கைபிடி”யை கழட்டி கன்றுக்குட்டியின் வாயில் வைத்து கெட்டியாக பிடித்துக்கொண்டு உறவு கொண்டோம்.
மறுபடியும் கன்றுக்குட்டி சத்தம் போட்டதால், அதன் நாக்கை அறுத்து விட்டு உறவுகொள்ள முயன்றபோதும் சத்தம் போட்டது. சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்ததும்தான் தப்பித்து ஓடினோம்’’ என்று கூறினான் கொடூரன்.
இது குறித்து செட்டிபாளையம் போலீசில் சில இளைஞர்கள் புகார் கொடுக்க சென்றனர். அப்போது பணியில் இருந்த பெண் உதவி ஆய்வாளர், வேறு காவலர்கள் வந்த உடனே வருவதாக கூறினார். ஆனால், விடியும் வறை யாரும் வரவில்லை.
இதற்கிடையில் நடந்த “மிருகவதை” சம்பவத்தை கேள்விப்பட்ட சிலர், மாட்டையே இப்படி செய்த பாவிகள் மனிதர்களாக இருந்தால் என்ன செய்வார்கள் என்று ஆத்திரம் கொண்டு ரெடி மிக்ஸ் கம்பெனியில் இருந்த நிஸ்தார், டேவிட், பெகோர் ஆகிய மூன்று கொடூரன்களையும் பிடித்துக்கொண்டு வந்து தென்னை மரத்தில் கட்டி வைத்து உதைத்துள்ளார்கள்.
காலை எட்டு மணி வரையில் பல தடவை போன் செய்தும், செட்டிபாளையம் போலிசார் வரத்தால், கோவை மாவட்ட எஸ்.பி. உமாவுக்கு தகவல் சொல்லிவிட்டு பிடித்து வைத்திருந்த நால்வரையும் கைகளை பின்னால் கட்டியபடியே “ஊர்வலமாக” காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
அப்போதும் போலீசார் “விபரீதத்தை” உணராமல் மந்தமாக இருந்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் “மிருகத்தை” வதை செய்த “மிருகங்களின்” மீது நடவடிக்கை எடுக்காத “மிருகங்களை” கண்டித்து காலை 11 மணிக்கு செட்டிபாளையம் காவல் நிலையம் முன்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
போரூர் துணை கண்காணிப்பாளர் சண்முகம், செட்டிபாளையம் ஆய்வாளர் ரவிக்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, பொது மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
வெளி மாநிலங்களில் இருந்து இது போன்ற கூலி ஆட்களை கொண்டு வந்து கம்பெனி நடத்தும் உரிமையாளரை கூட்டிக்கொண்டு வாருங்கள் என்று போராட்டக்காரர்கள் சொன்னர்ர்கள். ஆனால் கடைசிவரை உரிமையாளர் வாரவில்லை.
கன்றுக்குட்டியை கால்நடை மருத்துவரிடம் பரிசோதனைக்கு அனுப்பிய ஆய்வாளர் ரவிக்குமார், ஒரிசா மாநிலம், ஜுந்தர்காட் மாவட்டம், ஜகர்தார் கிராமத்தை சேர்ந்த இந்த நான்கு மிருகங்கள் மீதும், இந்திய தண்டனை சட்டம்-377, (இயற்கைக்கு முரணாக உறவுகொல்லுதல்) 429 மற்றும் 518 (மிருகங்களை
கொலை செய்ய முயற்சி செய்தல்) மிருகவதை தடை சட்டம்-24 பிரிவு உள்ளிட்ட சட்டபிரிவுகளில் கைது செய்துள்ளார்.
நன்றி:நக்கீரன்.

12 செப்டம்பர் 2011

இளவாலையில் மீட்கப்பட்ட சடலத்தில் மர்மம்!

இளவாலை பிரதேசத்தின் உயரப்புலம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கிணறொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை காலை படையினர் மீட்டுச் சென்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து மக்கள் மேலும் தெரியவருகையில்.
நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் குறித்த பிரதேசத்தை சுற்றிவளைத்த படையினர் மக்கள் எவரையும் கண்டபடி வீதிகளிற்க்கு வரவோ வீதிகளில் நிற்கவோ அனுமதிக்கவில்லை. பின்னர் அப்பகுதியில் உள்ள பற்றைகள், புதர்கள், கைவிடப்பட்ட காணிகள் அனைத்தையும் சோதனையிட்ட படையினர் அப்பகுதியிலுள்ள கைவிடப்பட்ட கிணறொன்றிலிருந்து ஆணொருவரின் சடலத்தை எடுத்துச் சென்றதை மக்கள் கண்டுள்ளனர்.
எனினும் அவ்விடத்திற்க்கு பொலிஸாரோ, நீதிபதியோ வராமையினால் இந்த விடயம் குறித்து கருத்துத் தெரிவிக்க அச்சப்பட்ட நிலையில் மக்ள் இருந்துள்ளனர்.
எனினும் குறித்த சடலம் மர்ம மனினுடையதாக இருக்கலாம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஏனெனில் குறித்த பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக மர்ம மனிதன் நடமாட்டம் இருந்து வருவதாகவும் இதனால் இப்பகுதிக்கு வந்த மர்ம மனிதனுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த மர்ம மனிதன் தற்செயலாக கிணற்றில் விழுந்திருக்கலாம் அல்லது யாரேனும் பிடித்து பின்னர் கொன்று வீசியிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

பருத்தித்துறையில் மாணவி ஒருவர் தீமூட்டி தற்கொலை!

யாழ்.வடமராட்சிப் பிரதேசத்தின் பருத்தித்துறை பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தனக்குத்தானே தீ மூட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற மேற்படிச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, குறித்த மாணவி அதிகாலை 5.30மணியளவில் வீட்டிலுள்ள அறையொன்றினுள் நுழைந்து கதவுகளைப் பூட்டிக் கொண்டு தன்மேல் எண்ணையை ஊற்றிக் கொண்டு தீ மூட்டியுள்ளார்.
இதனால் சம்பவ இடத்திலேயே குறித்த மாணவி உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் தேவசபாநாதம் மேரிலிடக்ஷனா (வயது16) எனத் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பருத்துறை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். சடலம் மரண விசாரணைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

செங்கொடி வீர வணக்க நிகழ்வுகள் நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமையில் இடம்பெற்றது!

கருணை மனு நிராகரிக்கப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள பேரறிவாளன் முருகன் சாந்தன் ஆகியோரது உயிர்காக்க தன்னுயிரை தீக்கு இரையாக்கிய செங்கொடிக்கு வணக்க நிகழ்வுகள் ஜேர்மனியின் மூன்று நகரங்களிலும் சுவிசின் சூரிச்சிலும் இடம்பெற்றுள்ளன.
சுவிஸ் :
சூரிச் சிவன் கோவிலில் இடம்பெற்ற வணக்க நிகழ்வில் நா.த.அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதி ஜெயம் அவர்களின் ஈகச்சுடர் ஏற்றலுடன் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.
ஜேர்மனி :
பிறீமன், கானோவர், ஸ்ருட்காட் ஆகிய இடங்களில் இடம்பெற்ற வணக்க நிகழ்வில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்திருந்தனர்.
பிறீமன், கானோவர் ஆகிய நகரங்களில் இடம்பெற்ற வணக்க நிகழ்வினை நா.த.அசராங்கத்தின் கல்வி, கலாச்சார, விளையாட்டு, உடல்நலத்துறை துணை அமைச்சர் ராஜரட்ணம் ஜெயசந்திரன் அவர்கள் தலைமையேற்று நடாத்தினார். நிதித்துறை துணை அமைச்சர் நடராஜா ராஜேந்திரா தலைமையில் ஸ்ருட்காட் வணக்க நிகழ்வு இடம்பெற்றிருந்தன.
இதேவேளை, பிறீமன் நகரில் தோழர்.செங்கொடியின் வணக்க நிகழ்வினைத் தொடர்ந்து நா.த.அரசாங்கத்தின் செயற்பாடுகளை விளக்கும் மக்கள் அரங்கம் நிகழ்வு இடம்பெற்றது.
உள்துறை அமைச்சர் நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களும் மக்கள் அரங்கத்தில் பங்கெடுத்துக் கொண்டார்.
சுதந்திர தமிழீழத்தை நோக்கிய, தமிழின அழிப்பை – சுயநிர்ணய உரிமையை மையப்படுத்திய, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உலகளாவிய வேலை திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதோடு இதற்கான ஜேர்மனியின் செயற்திட்ட அணியும் உருவாக்கப்பட்டது.

11 செப்டம்பர் 2011

எனது இறுதிச்சடங்கை சீமான்தான் நடத்தவேண்டும் என மணிவண்ணன் பேசினார்!

தூக்கு தண்டனை கைதிகளான பேரறிவாளன்,சாந்தன்,முருகன், மூவரின் உயிர் காக்க சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரமாண்ட கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நாம் தமிழர் இயக்கம் சீமான் தலைமையில் நடந்தது.
இதில் சீமான்,இயக்குனர் மணிவண்ணன்,பேராசிரியர் தீரன்,தடாசந்திரசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டு உணர்ச்சி பொங்க பேசினார்கள்
கூட்டத்தில் பேசிய அனைவரும் மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சி மற்றும் தினமலர் நாளிதழை விமர்சித்தும் பேசினார்கள்.
இயக்குனர் மணிவண்ணன் பேசும் போது ” நான் இறந்த பின்னர் என்னுடைய உடலை நாம் தமிழர் கட்சி சீமானிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அவர் தான் என்னுடைய இறுதிச் சடங்கை செய்ய வேண்டும்” என்றும் பேசினார்.

தமிழ் மக்களை தொடர்ந்தும் கஷ்ரங்களுக்குள் சிக்க வைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது!

அவசரகாலச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களையும் விட மிக மோசமான வகையில் அரசாங்கம் அம்மக்களிடம் நடந்துகொள்கிறது. அதற்காகவே கிறீஸ் பூதம் என்பதை உருவாக்கி தமிழ் மக்களை தொடர்ந்தும் கஷ்டங்களுக்குள் சிக்கவைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது’ என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார்.
‘நாட்டுக்குள் இராணுவ ஆட்சியை கொண்டுவர விரும்பும் இந்த அரசாங்கம், அதற்காக பாதுகாப்பு தரப்பினரையே பயன்படுத்தி வடக்கு கிழக்கு மற்றும் மலையகப் பிரதேசங்களில் வாழும் அப்பாவித் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அச்சத்துக்குள் தள்ளப் பார்க்கிறது’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ‘தமிழ், முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவே இந்த கிறீஸ் மனிதர் பிரச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அரசாங்கம் மௌனம் சாதிப்பது சந்தேகத்துக்கு வழிவகுக்கிறது,இந்தப் பிரச்சினை மிகவும் சின்ன விடயமாகும். இதற்கு தீர்வு காண அரசால் முடியும். அதற்கு அரசாங்கத்துக்கு வெகு நேரம் ஆகப்போவதில்லை. ஆனால் அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதில் தள்ளியே நிற்கிறது.
இதன்மூலம், தனக்கும் கிறீஸ் மனிதன் பிரச்சினைக்கும் தொடர்பு உள்ளது என்பதை அரசாங்கம் நிரூபித்து வருகின்றது. அவ்வாறு தொடர்பு இல்லை என்றால், பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடி இதற்கு தீர்வு காண அரசாங்கம் முயற்சித்திருக்கும். ஆனால் அப்படி செய்யவில்லை.
திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் இந்த சிறிய பிரச்சினையிலிருந்து பாரியதொரு நடவடிக்கையை நோக்கிப் பயணிக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது. அதற்காகவே பொதுமக்கள் மீது தாக்குதல்களை நடத்தி, கிறீஸ் மனிதர்கள் என மக்களால் பிடிக்கப்படும் பாதுகாப்பு தரப்பினரையும் காப்பாற்றி வருகின்றது.
இந்த பிரச்சினைக்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களின் குரலுக்கு மதிப்பளித்து அவர்களை இந்தப் பிரச்சினையிலிருந்து மீட்க வேண்டும். இதனை நீடிக்க விடாது மக்களின் பாதுகாப்பையும் நிம்மதியான வாழ்க்கையையும் நிலைநாட்ட வேண்டும். அதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

10 செப்டம்பர் 2011

முருகன்,நளினி இருவரும் சந்தித்தனர்!

நளினியும், முருகனும் சிறைக்குள் அரை மணி நேரம் சந்தித்து பேசிக்கொண்டனர்.ராஜீவ்காந்தி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் முருகனும், அவரது மனைவி நளினியும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த வருடம் நளினி மட்டும், வேலூர் சிறையில் இருந்து சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நேற்று முன் தினம் மீண்டும் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார் நளினி.
இந்நிலையில் முருகனையும், நளினியையும் சந்திக்க வைக்க சிறைத்துறை ஏற்பாடு செய்தது.
சிறைக்காவலர்கள் அருகில் இருக்க, அரைமணி நேரம் இருவரும் சந்தித்து பேசினர்.

ஊர்காவற்றுறை,நவாலி,சித்தங்கேணி பகுதிகளில் மர்ம மனிதன் அட்டகாசம்!

யாழ். நவாலி, அட்டகிரிப் பாடசாலைக்கு முன்பாக வீடொன்றுக்குள் நுழைந்த மர்ம மனிதன் உடைகளை உலரவிட்டுக் கொண்டிருந்த பெண்ணைத் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற நேரம் இராணுவத்தினர் அந்தச் சுற்றாடலில் காணப்பட்டனர். எனினும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:
குடும்பப் பெண் ஒருவர் உடைகளை உலரவிட்டுக் கொண்டிருந்த வேளை, ஒருவர் அவரைப் பின்புறமாகக் கட்டிப் பிடித்து கழுத்துப் பகுதியை திருகியதுடன் வாயையும் இறுக்கப் பொத்தியுள்ளார். பெண்மணி திணறிக் கத்திக் குழறியதும் அவர் தப்பியோடி விட்டார்.
துரத்திக்கொண்டு உடனே உறவினர்கள் வீதிக்கு வந்தபோது அங்கு இராணுவத்தினர் நிற்பதைக் கண்டு அவர்களிடம் சம்பவம் குறித்து விவரித்துள்ளனர். அதற்கு தாம் “எதுவும் செய்ய முடியாது. பொலிஸாருக்கு அறிவியுங்கள்” என்று கூறி விட்டு அவர்கள் சென்று விட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸாரிடம் முறையிடப்பட்டது. இரவு 8.30 மணியளவில் அவர்கள் குறிப்பிட்ட இடத்துக்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டனர். “பின்னர் கிறீஸ் மனிதன் இல்லை இது வேறு பிரச்சினை” என்று உதாசீனமாக பதில் அளித்து விட்டு அங்கிருந்து சென்றனர் என்று கூறப்பட்டது.
இதேவேளை, பிரஸ்தாப பெண் தாலிக்கொடி மற்றும் நகைகள் அணிந்திருந்த போதும் அவை எதுவும் அபகரிக்கப்படவில்லை என்று அவரது வீட்டார் தெரிவித்தனர்.
இதேவேளை, ஊர்காவற்றுறை, பருத்தியடைப்புப் பகுதியில் நேற்றிரவு 9 மணிக்கு மற்றுமொரு சம்பவம் இடம் பெற்றுள்ளது. சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய இருவரைப்பின் தொடர்ந்து சென்ற இளைஞர்கள் இருவர் மீது அவர்கள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தினர் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் இதேயிடத்தைச் சேர்ந்த ஆர்.பீற்றர் (வயது 24), சி.ரமணன் (வயது26) ஆகி யோர் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது:
குறித்த இடத்தில் வீடு ஒன்றுக்கு அருகில் சந்தேகமான முறையில் நடமாடிய இருவரை அவதானித்த இளைஞர்கள் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
இதன்போது பற்றைக்குள் பதுங்கியிருந்து கூரிய ஆயுதத்தால் ஒருவரைக் கீறியும் மற்றவரைத் தாக்கியும் விட்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர்.
சம்பவம் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து அங்கு வந்த பொலிஸார் மக்களை வீடுகளுக்குச் செல்லுமாறு பணித்து விட்டு திரும்பிச் சென்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரை தொடர்பு கொண்டு கேட்ட போது கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர், பொலிஸ் நிலையத்தில் எதுவித முறைப்பாடும் பதிவு செய்யப்படவில்லை என்றார்.
இதேவேளை, சித்தன்கேணி சிவன் கோயில் பகுதியில் நேற்றிரவு 7 மணியளவில் மூன்றாவது சம்பவம் நடந்துள்ளது. வீடொன்றுக்குள் நுழைய முற்பட்ட இருவர் அங்கிருந்தவர்கள் விழிப்படைந்ததை அடுத்து தப்பி ஓடினர் என்று தெரிவிக்கப்படுகிறது.
நேற்று நடைபெற்ற மூன்று சம்பவங்களின் போதும் குறிப்பிட்ட பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

09 செப்டம்பர் 2011

முதலில் உமது மகளுக்கு யாழ்ப்பாணத்தை காட்டும் என மகிந்த கிண்டல்!

வடக்கிலும் கிழக்கிலும் கிறிஸ் மனிதரால் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து மகிந்த ராஜபக்சவுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று மாலை நடைபெற்றது.இச்சந்திப்பில் தமிழ்த் தரப்பில் வீ.ஆனந்தசங்கரி, பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன்,செல்வராஜா, சுமந்திரன், சரவணபவன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரும் அரசாங்கத் தரப்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் அமைச்சர்களான பசில் ராஜபக்ச, சுசில் பிறேம்ஜயந்த,ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க மற்றும் பொலீஸ் மாஅதிபர் என்.கே.இலங்ககோன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது வடக்கு கிழக்கில் கிறிஸ் மனிதனால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து கூட்டமைப்பு எம்பிக்கள் மகிந்த ராஜபக்சவிற்கு எடுத்துரைத்துள்ளனர். இச் சந்திப்பின் போது கிறிஸ் மனிதனால் ஏற்பட்ட பிரச்சினைகளால் கைது செய்யப்பட்டு இதுவரை விடுதலை செய்யப்படாதவர்களை விடுதலை செய்யும்படி கேட்டிருந்தார்கள். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம் மகிந்த கேட்டுக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கிறிஸ் மனிதனின் அட்டகாசங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் மகிந்த ராஜபக்சவிடம் எடுத்துக் கூறிய போது, சடுதியாக குறிக்கிட்ட மகிந்த சரவணபவன் எம்பியைப் பார்த்து ‘கடந்த வாரம் நடந்த நிகழ்வொன்றில் உமது மகளைச் சந்தித்த போது யாழ்ப்பாணம் எப்படி உள்ளது? எல்லாம் நன்றாக இருக்கிறதா? எனக் கேட்டேன். அதற்கு உமது மகள் கூறினார், நான் இன்னும் யாழ்ப்பாணம் போகவே இல்லை என்று. தயவு செய்து உங்களின் மகளை யாழ்ப்பாணத்திற்கு கூட்டிக் கொண்டு போய் முதலில் யாழ்ப்பாணத்தைக் காட்டும்’ என்றார் மகிந்த.
இவ்வாறு மகிந்த கூறிய போது கூட்டமைப்பின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சற்று நேரம் ஆச்சரியத்தில் ஆழ்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் இது தொடர்பில் கொழும்பிலிருந்து விசேட குழுவொன்று வடக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டு பூரணமாக விசாரணை மேற்கொள்ளப்படும் என மகிந்த உறுதியளித்ததை தொடர்ந்து, எதிர்வரும் 10ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடாத்துவதாக இருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை பிற்போடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தமிழ் கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவித்தன.

08 செப்டம்பர் 2011

இந்திய போர்க் கப்பல் சீன போர்க்கப்பலை தேடி இலங்கை வந்துள்ளதா?

இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ‘ஐஎன்எஸ் குதார்‘ கொழும்புத் துறைமுகத்துக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.நேற்றுக்காலை கொழும்புத் துறைமுகத்துக்கு வந்த இந்தியக் கடற்படைப் போர்க்கப்பலுக்கு சிறிலங்கா கடற்படையினர் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்துள்ளனர்.
91.1 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில் 25 அதிகாரிகளும், 160 கடற்படையினரும் கொழும்பு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாளை வரை இந்தியப் போர்க்கப்பல் கொழும்பிலேயே தரித்து நிற்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தமான் கடற்பகுதியில் வேவு பார்த்த சீன வேவுக் கப்பல் ஒன்றை, இந்தியக் கடற்படை துரத்திச் சென்ற போது கொழும்புத் துறைமுகத்தில் அடைக்கலம் தேடியதாக கடந்தவாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன.
ஆனால் வேவு பார்க்கும் சிறப்புக் கருவிகள் பொருத்தப்பட்ட எந்தவொரு சீனக் கப்பலும் கொழும்புத் துறைமுகத்துக்குள் பிரவேசிக்கவில்லை என்று சிறிலங்கா கடற்படை கூறியிருந்தது.
இந்தநிலையிலேயே இந்திய கடற்படையின் போர்க்கப்பல் திடீரென கொழும்புக்கு பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறுமி கர்ப்பம் வயோதிப சந்தேக நபருக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு, வாழைச்சேனைப் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி கர்ப்பமாக்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 64 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
குறித்த சிறுமி வயிற்று வலி காரணமாக தனது நண்பியுடன் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற சென்றபோது அவர் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையதான சந்தேகநபரை நேற்று மாலை கைது செய்தனர்.
இதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிறுமி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ப பொலிஸாரின் உத்தரவிற்கு அமைய மட்டக்களப்பு, சினேகதீபம் இல்லத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என வாழைச்சேனை தள வைத்திய அதிகாரி எஸ்.தட்சணாமுர்த்தி தெரிவித்தார்.

07 செப்டம்பர் 2011

பாதுகாப்பு வலயம் முற்றாக அழிவடைந்து இருந்தது கண்டு பான் கீ மூன் அதிர்ச்சி அடைந்தாராம்!

இலங்கைப் போரின் இறுதிப் பகுதியில் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த 'பாதுகாப்பு வலயப் பகுதி' முழுமையாக அழிக்கப்பட்டிருந்த காட்சியை தான் நேரில் பார்த்ததாக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் இராஜதந்திரிகளிடம் தெரிவித்ததாக அமெரிக்க தூதரக கேபிள்களை ஆதாரம்காட்டி விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள பிந்திய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடம்பெயர்ந்தவர்களுக்காக வவுனியா, செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்ட மெனிக் பாம் முகாம் இதற்கு முன்னர் தான் பார்த்த எதனையும் விட மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது எனவும் பான் கீ மூன் தெரிவித்திருக்கின்றார்.
விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த இரு நாட்களின் பின்னர் கொழும்பு வந்து, போர்ப் பகுதிகளை ஹெலிக்காப்டரில் சென்று பார்வையிட்ட பின்னர், மெனிக் பாம் முகாமையும் பான் கீ மூன் பார்வையிட்டார். அதன் பின்னர் 2009 மே 23 ஆம் திகதி இரவு கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களுக்கு நிலைமைகளை விளக்கிய போதே இந்தத் தகவல்களை பான் கீ மூன் தெரிவித்தார்.
மெனிக் பாமில் காணப்பட்ட நிலைதொடர்பாக நோர்வே நாட்டுத் தூதுவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த பான் கீ மூன், "மிகவும் மோசமான கவலையான நிலை" காணப்படுவதாகத் தெரிவித்தார்.
போரினால் இடம்பெயர்ந்த இரண்டு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் அப்போது முகாமில் இருந்தார்கள். "டாபர் (Darfur) மற்றும் கோமா (Goma) உட்பட எந்த ஒரு முகாமிலும் காணப்பட்டதைவிட மிகவும் மோசமான நிலை அங்கு காணப்பட்டது" என மெனிக் பாம் முகாமின் நிலை தொடர்பாக இராஜதந்திரிகளுக்க மூன் விளக்கினார்.
விடுதலைப் புலிகளுடனான போரில் தாம் வெற்றி பெற்றுள்ளதாக அரசாங்கம் அறிவித்த பின்னர், கொழும்பு வந்த பான் கீ மூன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகல்லாகம உட்பட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் பலரையும் சந்தித்தார். அதன் பின்னர் போர் இடம்பெற்ற பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர் மெனிக் பாம் முகாமுக்கு அவர் சென்றார்.
அரசாங்கத்தினால் பாதுகாப்பு வலயம் எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலை தொடர்பாக இராஜதந்திரிகள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த மூன், அந்தப் பகுதி முழுமையாக அழிந்துபோய்காணப்பட்டதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பான தகவல்களை அமெரிக்க தூதரக அதிகாரியான மூன் மே 27 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அனுப்பிவைத்த இரகசிய கேபிளில் தெரிவித்திருப்பதாக இன்று காலை விக்கிலீக்ஸ் செய்தி வெளியட்டுள்ளது.