பக்கங்கள்

31 மே 2013

மர்ம மரணச்செய்தியால் மனம் வருந்தும் ஊடகங்கள்!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்பெண் திருச்சியில் மர்ம மரணம் என்ற செய்தி பல பிரபல ஊடகங்கள் தொடங்கி முகநூல்கள் வரை வெளியாகி எல்லோர் மனங்களையும் வேதனைக்குள்ளாக்கி இருந்தது  என்பது மறைக்க முடியாத உண்மை!செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தபோதும் சில ஊடகங்கள் தலைப்புக்களை மாற்றி பிரதான செய்தியாக வெளியிட்டிருந்தன.இதிலிருந்து இச்செய்தி ஒருவரால்தான் திட்டமிட்ட முறையில் பரப்பப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.இந்த ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டு பல ஊடகங்கள் கறைபடிந்து நிற்கின்றன.அந்த வகையில் தமிழ் சி.என்.என் இணையம் தனது தவறான செய்திக்கு வருத்தம் தெரிவித்துக்கொண்டது,அதன் பின் லங்காசிறி இணையமும் தனது பதிப்பு தவறென்றும் சசீந்தினி மரணம் இயற்கை மரணம் என்பதை மருத்துவ சான்றிதழ்,காவல்துறை அறிக்கை உறுத்திப்படுத்துவதாகவும் தாம் முன்பு வெளியிட்ட செய்திக்கு மனம் வருந்துவதாகவும் தெரிவித்திருந்தது.தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் ஒரு நாளிதழும் தனது தவறுக்கு வருத்தத்தை வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருச்சியில் மர்மமான முறையில் மரணமானதாக வெளியாகிய செய்தி முற்றிலும் தவறானது என்று இப்போது தெரியவந்துள்ளது.கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற இந்த மரணம் தொடர்பாக நடைபெற்ற விசாரணைகளில் இருந்தும்,பிரேத பரிசோதனை அறிக்கையில் இருந்தும் மேற்படி செய்தி தவறானது என்று தெரியவந்துள்ளது.வெளிநாட்டு செய்தி இணையத்தளங்கள் சில இச்செய்தியை பரபரப்புடன் வெளியிட்டிருந்தன.இந்த மரணத்துக்கான உண்மையான காரணத்தை உரியதரப்புக்களுடன் தொடர்புகொண்டு உடனடியாக உறுதிப்படுத்த முடியாமல் இருந்தது.இதே செய்தியை எமது செய்திப் பக்கத்திலும் கடந்த 09.02.13ஆம் திகதி பிரசுரித்திருந்தோம்.இந்த மரணத்துக்கான உண்மையான காரணம் காலதாமதமாகவே கிடைத்தது.ஏற்கனவே நாம் வெளியிட்ட செய்தியால் அவரது குடும்பத்தினருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக நாமும் மனம் வருந்துகிறோம்.இவ்வாறு அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.

லண்டனில் இருந்து வற்றாப்பளை வந்தவர் கைது!

லண்டனில் இருந்து வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்த வந்தவர் சிறிலங்கா காவல்துறையின் தீவிரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மயில்வாகனம் கணேசரூபன் (39 வயது) என்பவரே வற்றாப்பளையில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கியிருந்த போது, நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இவர் 18 ஆண்டுகள் கழித்து பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பியிருந்தார். தம்மை தீவிரவாத புலனாய்வுப் பிரிவினர் என்று அடையாளப்படுத்திய ஆறு பேர் இவரை கைது செய்து கொண்டு சென்றுள்ளனர். அத்துடன், காலையில் வவுனியாவில் உள்ள தமது பணியகத்தில் வந்து சந்திக்கும்படி, குடும்பத்தினரிடம் கூறியுள்ளனர். எனினும் நேற்றுக்காலை வவுனியா சென்றபோது, கணேசரூபனை மேல் விசாரணைக்காக கொழும்புக்குக் கொண்டு செல்வதாகவும் சனிக்கிழமை வந்து பார்வையிடலாம் என்றும் கூறியதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வற்றாப்பளை ஆலய நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக வந்திருந்த தாம், அடுத்த வாரம் லண்டன் திரும்பிச் செல்லவிருந்த நிலையிலேயே தமது கணவர் கைது செய்யப்பட்டிருப்பதாக அவரது மனைவி சுகந்தினி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதரக அதிகாரிகளுக்கும் இதுதொடர்பாக முறையிடப்பட்டுள்ளது.

28 மே 2013

த.தே.கூ வென்றால் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு!

இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் இந்தியாவின் தேவைகளுக்காக இலங்கையில் எதற்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளதுடன், இலங்கையில் இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பொருத்தமானதல்ல எனவும் பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோரக் கூடும். இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படும். எனினும் நாட்டில் 13ம் திருத்தச் சட்டத்திற்கு மக்கள் ஆதரவளிக்கவில்லை. இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது. இந்தியாவின் தேவைகளுக்காக 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நாம் தயாரில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலுப்பக்கடவை சாட்டி யாருக்குச் சொந்தம்?

இலுப்பக்கடவை சாட்டி யாருக்குச் சொந்தம்? கடற்படைக்கும் மக்களுக்கும் இடையில் முறுகல்இலுப்பக்கடவை கடற்கரையிலுள்ள சாட்டி யாருக்கு என்பது தொடர்பில் அப்பகுதியில் முகாமிட்டிருக்கும் கடற்படையினருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. இலுப்பக்கடவை சாட்டிப் பகுதி கடற்தொழிலுக்குச் செல்லும் மக்கள் தமது படகுகளை கரை சேர்க்கும் இடமாகும். அப்பகுதியை தற்பொழுது இராணுவத்தினர் தமது பாவனைக்காக எடுத்துள்ளனர். மன்னார் மாவட்டத்தில் உள்ள இலுப்பைக்கடவை 2008ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டது. இலுப்பக்கடவையை கைப்பற்ற இலங்கை இராணுவத்தினர் கடும் யுத்தம் செய்தனர். விடுதலைப் புலிகளும் கடுமையாக திருப்பித் தாக்கினர். எனினும் இலுப்பக்கடவையை விட்டு புலிகள் பின் வாங்கியதையடுத்தே அப்பகுதியை இராணுவம் கைப்பற்றியது. சாட்டியை அபகரித்தமை தொடர்பில் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததுடன் தாம் காலம் காலமாக தொழில் செய்த இடம் தமக்குச் சொந்தமானது என்றும் அதனை திருப்பித் தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை மறுத்த கடற்படையினர் அப்பகுதியை மக்களிடம் மீளக்கையளிக்கப் போவதில்லை என்று பிடிவாதமாகத் தெரிவித்தனர். இந்த முறுகல் நிலையைத் தொடர்ந்து நிலத்தகராறை தீர்க்க கடற்படையினருக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது. தாம் காலம் காலமாக தொழில் செய்த இடம் மக்களுக்குச் சொந்தமானது அதனை கடற்படை திருப்பி ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் காலம் காலமாக தொழில் செய்த உங்கள் இடமாக இருக்கலாம் என்று தெரிவித்த கடற்படையினர் நாங்கள் யுத்தம்மூலம் மீட்ட இடங்கள் எங்களுக்கே சொந்தமானது என்று தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த மக்கள் பயங்கரவாதிகளிடமிருந்து நிலத்தையும் தமிழ்மக்களையும் மீட்கிறோம் என்று சொல்லி யுத்தம் நடத்தியது இதற்காகவா? என்று கூட்டத்தில் கேள்வி எழுப்பினர். கடற்படையினர் மக்களுக்கு சாட்டியை கையளிக்க தயாரில்லை என்பதைத் தொடர்ந்து சாட்டியை மீட்பதற்குரிய போராட்டங்களை முன்னெடுப்பதாகக்கூறி மக்கள் முறுகல் நிலையுடன் கலைந்து சென்றனர்.

நன்றி:குளோபல் தமிழ் செய்தி 

25 மே 2013

கருணா கேட்டாராம் அரசு நிராகரித்ததாம்!

கருணா 
கைதுசெய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியவர்கள், இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், கிராமங்களுக்குள் புகுந்து கொலைகளை செய்தவர்கள் என பல வன்முறைச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட சுமார் 200 விடுதலைப்புலிகள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சிறிய குற்றச் செயல்களுடன் சம்பந்தப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு மாத்திரம் மன்னிப்பு வழங்கப்பட்டு, அவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.

கோத்தபாயவுக்கு அதிகாரம் கிடையாது!

வாசுதேவ நாணயக்கார 
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும். எனவே அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது. தேசிய அரசியல் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கும். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

24 மே 2013

திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு!

சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. திருகோணமலை நகரசபையுடன் இணைந்து பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையத்தை அமைப்பதற்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாட்டை செய்து கொண்டுள்ளது. இந்த உடன்பாட்டில் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக கலாசார, கல்வி, ஊடக விவகாரங்களுக்கான பணிப்பாளர் கிறிஸ்ரொபர் டீலும், திருகோணமலை நகரசபை முதல்வர் கே. செல்வராசாவும் கையெழுத்திட்டனர். கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரக பொதுசன விவகார பிரிவுக்கும் திருகோணமலை நகரசபைக்கும் இடையிலான இந்த உடன்பாடு நேற்றுமுன்தினம் திருகோணமலை பொது நூலகத்தில் வைத்து கையெழுத்திடப்பட்டுள்ளது. இது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அறிவிக்கப்படவோ அல்லது, அதன் அனுமதி பெறப்படவோ இல்லை. அனைத்துலக நடைமுறைகளுக்கு அமைய, கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்கள் உள்ளூர் அதிகாரிகளுடன் ஏதாவது இணக்கப்பாட்டை ஏற்படுத்த முன்னர், அது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியப்படுத்தவோ அல்லது அதன் அனுமதியைப் பெறவோ வேண்டும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.எனினும் எந்த அனுமதியும் பெறப்படாமல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் திருகோணமலை நகரசபையுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்பாடு சிறிலங்கா அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.திருகோணமலை நகரசபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் இருந்து வருகின்றது.அமெரிக்கன் கோணர் எனப்படும் பொது தகவல் மற்றும் செயற்பாட்டு நிலையங்களை அமெரிக்கா ஏற்கனவே யாழ்ப்பாணத்தலும் கண்டியிலும் நிறுவியிருப்பது குறிப்பிடத்தக்கது.

23 மே 2013

பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர்-மன்னார் ஆயர்

தேசியத் தலைவர் 
"பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். அவருடன் என்னை ஒப்பிடவேண்டாம். பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.'' இவ்வாறு கடும் ஆவேசத்துடன் தெரிவித்தார் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்.
"இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமை களையும் வழங்கவேண்டும். அதேவேளை, வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுபலசேனாவின் தலைமை அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கல கொட அத்தே ஞானசார தேரர், "நாட்டில் மீண்டும் பிரிவினை வாத சக்திகள் தலைதூக்குகின்றன. அடுத்த பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார். ஆகவே, சிங்கள மக்கள் வீதியில் இறங்கி 13ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடவேண்டும். மாகாணசபைத் தேர்தல் என்பது தனி ஈழத்திற்கான முதற்படியாகும். எனவே, இந்தத் தேர்தலை அரசு நடத்தக்கூடாது'' என்று தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மன்னார் ஆயர் மேற்கண்டவாறு கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று உதயனிடம் தெரிவித்தவை வருமாறு: "முகவரி எதுவும் இல்லாத பொதுபலசேனா என்னைப் பிரபாகரனுடன் ஒப்பிட்டுக் கூறி யுள்ளது. பிரபாகரன் தனிச்சிறப்புக் கொண்டவர். நான் அவருக்கு ஒப்பானவர் அல்லர். நான் சமயவாதி; அரசியல்வாதி அல்லது ஆயுதப் போராளி அல்ல. சமாதானத்தை விரும்புபவன். ஒருபோதும் நான் தனி ஈழத்தைக் கோரவில்லை. தமிழ் மக்கள் ஏனைய மக்களைப் போல சம உரிமையுடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்நிலையில், இனவாத அமைப்பான பொதுபலசேனா என் மீது வீண்பழி சுமத்துகின்றது. பச்சைப் பொய்களைக் கூறி தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் ஒற்றுமையைக் குழப்புவதற்கும், நாட்டுக்குத் தீமை செய்யவுமே பொதுபலசேனா என்ற இந்த இனவாத அமைப்பு முளைத்துள்ளது. இந்த அமைப்பு ஊடகங்கள் மூலமாகத் தனக்கு முகவரி தேட முற்படுகின்றது. எனவே, இதை நாட்டு மக்கள் முளையிலேயே கிள்ளியெறியவேண்டும். தமிழர்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள். இந்த நாடு பல்லின மக்களைக் கொண்டது; கலாசாரத்தைக் கொண்டது. எனவே, முதலில் நாட்டின் வரலாற்றைப் படித்துவிட்டு பொதுபலசேனா அரசியலில் இறங்கவேண்டும். நாட்டின் அரசமைப்பை இல்லாதொழிக்குமாறு கூறுவதற்கு பொதுபலசேனா என்ற இந்த அமைப்புக்கு எந்த அருகதையும் கிடையாது. எனவே, இனவாதிகளின் கருத்துகளுக்குச் செவிசாய்க்காமல் வடக்கில் மாகாணசபைத் தேர்தலை அரசு உடனடியாக நடத்தியே ஆகவேண்டும். அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவேண்டும். அதேவேளை, தமிழர்கள் பரந்து வாழும் வடக்கு, கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்'' என்றார்.

22 மே 2013

மன்னார் ஆயர் இரண்டாவது பிரபாகரன் என்கிறது இனவாத பொதுபல சேனா!

வட மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டிய அவசியமில்லை. முதலில் அங்கு சிங்கள மக்களை பதிவுசெய்து குடியேற்ற வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபல சேனாவின் தலைமையலுவலகமான சம்புத்தத்வ ஜயந்தியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்குத் தேர்தல் தேவையில்லை. அதனை நடத்துவதற்கு பொதுபல சேனா ஒருபோதும் அனுமதிக்காது. முதலில் அங்கு பெரும்பான்மை இனத்தவர்களாகிய சிங்கள மக்களை பதிவு செய்து குடியமர்த்த வேண்டும். இந்நிலையில் மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும். நாட்டுப் பற்று இருந்தால் 13 ஆவது திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஏனைய 8 மாகாண சபைகளிலும் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் அனைவரும் பதவியை இராஜினாமா செய்து மக்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். இதேவேளை, வடக்குத் தேர்தல் இடம்பெற்றால் அது தமிழீழத்திற்கு வழி வகுக்கும். இரண்டாவது பிரபாகரனாக மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் செயற்படுகின்றார். வட மாகாண சபைத் தேர்தலை நிறுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பொதுபல சேனா அனைத்து மக்களையும் ஒன்றுதிரட்டி வீதியில் இறங்கி போராடும் என அவர் மேலும் தெரிவித்தார்.

21 மே 2013

நாடாளுமன்றம் செல்வது போன்று 4 ஆம் மாடிக்கும் செல்லும் நிலை!

பா.அரியநேந்திரன் 
ஒரு மாதத்துக்கு இரண்டு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்வது போன்று மாதத்துக்கு ஒரு தடவையாவது 4 ஆம் மாடிக்குச் செல்ல வேண்டியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சாட்டியுள்ளார். முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து பிரார்த்தனை செய்யும் வைபவத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்லுவது போல அடிக்கடி 4 ஆம் மாடிக்கும் செல்கின்றனர். இதுவரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், சிறிதரன், அரியநேத்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வம் அடைக்கலநாதன் உட்பட வேறு சிலரும் 4 ஆம் மாடிக்கு சென்றுள்ளனர். இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனை 4 ஆம் மாடிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நாங்கள் நாடாளுமன்றத்துக்குச் செல்வது போல 4 ஆம் மாடிக்கும் சென்று வருகின்றோம். எப்போது தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். எத்தனை வருடங்கள் சென்றாலும் தமிழ் தேசிய விடுதலைக்கான பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுடப்பட்டார்கள். அவர்களின் இடத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களே நியமிக்கப்பட்டார்கள். அதற்காக தமிழ் தேசியத்தை அழித்து விடவில்லை. இன்னுமொரு இனத்தை அழித்து விழா கொண்டாடுவது வெற்றி விழாவா? ஒரு நாட்டுக்கு எதிராக போர் செய்து அதில் வெற்றி பெற்று விழா கொண்டாடுவதுதான் வெற்றி விழாவாகும். அரசு வெற்றி விழா கொண்டாடுவதானது இன்னும் மக்கள் அடிமைகளாக இருப்பதையே காட்டுகின்றது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு பிரார்த்தனை செய்யக்கூட முடியாத அடக்கு முறைக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்றார். எப்போது தமிழ் மக்களுக்கு சுதந்திரமான அரசியல் தீர்வு விடுதலை கிடைக்கின்றதோ அது வரையும் எமது பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

20 மே 2013

சட்டத்தரணிகளை மிரட்டுகிறது படைத்தரப்பு!

படையினரிடம் சரணடைந்த பின் காணாமற் போனவர்கள் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுமாறு மனுதாரர்கள் இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர் என்று காணாமற் போனோரை தேடிக் கண்டறியும் குழுவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். போரின் இறுதிக் கட்டத்தில் அரச படையினரின் அறிவித்தலுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான முன்னாள் போராளிகள் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்திருந்தனர். இதன் பின்னர் சரணடைந்தவர்கள் அவர்களது உறவினர்களின் கண்ணெதிரே படையினரால் பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டனர். எனினும் அதன் பின்னர் அவர்களது நிலை என்னவென்று தெரியா நிலையில் அவர்களது உறவினர்கள் உள்ளனர். இந்த நிலையில் சரணடைந்து காணாமல் போனவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளவர்களில் ஐந்து பேர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி வவுனியா மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனையடுத்து, முல்லைத்தீவில் உள்ள 58 ஆம் படைப்பிரிவின் தலைமை அதிகாரியையும், இராணுவ தளபதியையும் இன்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகி இது தொடர்பில் சாட்சியமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் வழக்கைத் திரும்பப் பெறுமாறு அதனைத் தாக்கல் செய்தவர்களுக்கு, தொலைபேசியூடாகவும், நேரிலும் சீருடையினர் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். இதன் காரணமாக அவர்கள் வழக்கை தொடர்ந்து நடத்துவது குறித்து அச்சம் அடைந்துள்ளனர். ஆயினும் குறித்த வழக்கில், வழக்கை தாக்கல் செய்தவர்களை தமது அமைப்பினர் பாதுகாப்பாக அழைத்து வந்து நீதிமன்றில் இன்று முற்படுத்துவர் என்று காணாமல் போனோரை தேடிக் கண்டறியும் குழு தெரிவித்துள்ளது.

19 மே 2013

விடுதலைப் போராட்டம் தொடரும்-மாவை எம்.பி. சூளுரை

news"முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளின் மீது சத்தியம் செய்து விடுதலைக்காக தொடர்ந்தும் போராடுவோம்.'' இவ்வாறு நேற்று வவுனியாவில் சூளுரைத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா. "எமது உறவுகளை படுகொலை செய்தவர்கள் அதற்கான தண்டனையை என்றோ ஒருநாள் பெற்றே தீர வேண்டும். நிச்சயமாக அவர்கள் போர்க் குற்றவாளிகள் என ஐ.நா. பரிந்துரைக்கின்ற போது எங்களுக்கான விடுதலையும் நெருங்கிவிடும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் பிரதான நிகழ்வு நேற்று வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது: 2009ஆம் ஆண்டில் முள்ளி வாய்க்காலில் அரச படைகளினால் பல்வேறு வகைகளிலும் படுகொலை செய்யப்பட்ட எமது தமிழ் உறவுகளின் தியாகம் ஒரு போதும் வீண்போகாது. அவர்களின் தியாகத்தில் தான் நாம் இன்று ஜனநாயக வழியில் பலமாகப் போராடுவதற்கான அத்திபாரம் அமைந்துள்ளது. உலகில் எந்தவொரு நாட்டுக்கும், இனத்திற்கும் நிகழாத துன்பம் இலங்கையில் தமிழ் மக்களுக்குத்தான் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் முள்ளி வாய்க்காலில் நடந்தேறியுள்ளது. தமிழ் உறவுகளின் உயிரிழப்புகள் ஒரு படுகொலை எனக் கருதியே அதனை ஒரு போர்க்குற்றமாக ஐக்கிய நாடுகள் சபையில் மனித உரிமைகள் ஆணையகமும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனமும் ஏற்றுக்கொண்டுள்ளது எமது உறவுகளை படுகொலைசெய்தவர்கள் அதற்கான தண்டனையை என்றோ ஒருநாள் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். நிச்சயமாக அவர்கள் போர்க்குற்றவாளிகள் என ஐ.நா. பரிந்துரைக்கின்ற போது எங்களுக்கான விடுதலையும் நெருங்கிவிடும். அது முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் சாட்சியாகக் கிடைக்கும் விடுதலை என நாம் ஏற்போம் என்பதே இந்த நாளில் எமக்குத் தெளிவாகக் கிடைக்கும் செய்தி. இப்படித் தெரிவித்தார் மாவை எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஈ.சரவணபவன், சி.சிறீதரன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.வினோநோகராதலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், வீ.ஆனந்தசங்கரி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகனேசன், ஐக்கிய சோசலிஷக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய, கூட்டமைப்பின் வவுனியா நகரசபை பதில் தலைவரும் தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் அணித் தலைவருமான எம்.எம்.ரதன் ஆகியோர் உட்படப் பலர் உரையாற்றினர்.

18 மே 2013

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிப்பு!

வவுனியா தமனக்குளத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவுகள் நினைவாக ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு கடந்த 2010 ஆம் ஆண்டு மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி வவுனியாவில் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் முள்ளிவாய்க்காலில் உறவுகள் படுகொலை செய்யப்பட்டு இன்று 4 ஆம் ஆண்டு நினைவு நாளாகும். இதற்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று காலை 10 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் குறித்த நினைவுதூபியில் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடாகியிருந்த நிலையிலேயே நேற்று இரவு விசமிகளால் இடித்தழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் தாயகத்தில் இன்று துயர் பகிர்வு!

தமிழர் வாழ்வில் துயர்படிந்த முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நான்காம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தாயகம் மற்றும் அவர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகள் எங்கும் பெருமெடுப் பில் உணர்வெழுச்சியுடன் இன்று நினைவு கூரப்பட வுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள் என்பவற்றால் செய்யப்பட்டுள்ளன. 2009 மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் ஆகுதியான உறவுகளை நினைத்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ் மக்களால் ஆண்டு தோறும் நடத்தப்படுகின்றன. இந்த நிகழ்வுகளுக்கு தடை ஏதும் இல்லை என்று இராணுவம் தெரிவித்துள்ளது. இந்தத் தினத்தில் புலிகளை நினைவுகூரக் கூடாது என்றும் அது அறிவுறுத்தி உள்ளது. போரில் ஆகுதியான எமது உறவுகளுக்காக ஆலயங்களில் இன்றைய தினம் விசேட வழிபாடுகளை நடத்து மாறும், வீடுகளில் மாலை வேளையில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்துமாறும் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனாதிராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதான நிகழ்வு: முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் வவுனியாவில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வவுனியா நகரசபை மண்டபத்தில் காலை 10 மணிக்கு இடம்பெறும் இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்க்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், மாட்டீன் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு சுடரேற்றும் நிகழ்வும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் இடம்பெறவுள்ளது.கிளிநொச்சி உருத்திரபுரம் புனித பற்றிமா ஆலயத்தில் உள்ள இறுதிப் போரில் உயிரிழந்தவர்களின் நினைவிடத்திலும், கிளிநொச்சியில் உள்ள இந்து மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட பூசை வழிபாடுகளும் பிரார்த்தனைகளும் இடம்பெறவுள்ளன. அத்துடன் வீடுகளிலும் உயிரிழந்த உறவுகளுக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெறும். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தால் நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. தமிழர் தாயகத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் பேரெழுச்சியுடன் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளன. நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புலம்பெயர் நாடுகளிலும் தமிழ் மக்களால் பேரெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளன. கண்டனப் பேரணிகள், நினைவுப் பேருரைகள் என்பனவும் இடம்பெறவுள்ளன. பிரான்ஸ் தமிழர் நடுவகத்தால் மாலை 4 மணி முதல் 7 மணிவரை துரோகத்திரோ மெக்ரோ தரிப்பிடத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று அனுஷ்டிக்கப்படவுள்ளன. பிரித்தானிய தமிழர் பேரவையினால் இன்று பி.ப 1 மணிக்கு பேரணி நடத்தப்படவுள்ளது. இந்தப் பேரணியில் மக்களைக் கறுப்பு உடை அணிந்து பங்கெடுக்குமாறு வேண்டுகோள் விடுக்க்பபட்டுள்ளது. றைட் பார்க்கில் ஆரம்பமாகும் பேரணி வெஸ்ற்மினிஸ்ரரில் முடிவடையும். பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் இன்று பி.ப 2மணிக்கு எரேமில் ரெயாரில் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. கனடியத் தமிழர் தேசிய அவையினால் மாலை 5 மணிக்கு டென்மார்க் தமிழர் அமைப்புக்களின் ஒன்றியத்தினால் காலை 10 மணிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படவுள்ளன. ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பு, ஈழத் தமிழர் மக்கள் அவையினால் பி.ப. 2 மணிக்கு பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. செல்போர்டில் ஆரம்பமாகும் பேரணி லால்ட்ராகில் முடிவடையவுள்ளது. பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பு, தமிழர் பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றால் மதியம் 12 மணிக்கும், நெதர்லாந்து தமிழர் பேரவையால் பி.ப 1மணிக்கும், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நண்பகலும் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படவுள்ளன. நோர்வேயில் தமிழர் பேரவையால் நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசினால், அமெரிக்காவில் தமிழீழ சுதந்திர சாசனத்துக்காக முரசறைவு நிகழ்வுகள் இன்று இடம்பெறவுள்ளன.

16 மே 2013

விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி வரும் – சிறிலங்காவுக்கு எச்சரிக்கை

மனிதஉரிமை மீறல்களை உரிய முறையில் கையாளத் தவறினால், அதன் விளைவுகளை கொழும்பில் கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாடு நடக்கும் போது, சிறிலங்கா எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரித்தானிய பிரதிப் பிரதமர் நிக் கிளெக் எச்சரித்துள்ளார். பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது, பிரித்தானியப் பிரதமர் சார்பாகப் பதிலளித்த போதே, துணைப் பிரதமர் நிக் கிளெக் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார். பிரதமருக்கான கேள்வி நேரத்தின் போது உரையாற்றிய, லிபரல் ஜனநாயகக் கட்சியின் துணைத்தலைவரான சைமன் ஹியூஸ், சிறிலங்காவின் மனிதஉரிமை நிலவரங்களின்படி, அங்கு நடக்கும் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளும் பிரித்தானியப் பிரதமரின் முடிவை ஆதரிக்க முடியாது என்று தெரிவித்தார். அத்துடன் சிறிலங்காவின் மோசமான ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு நாம் எப்படி பதிலளிக்க வேண்டும் என்று விளக்கமளிக்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் கொமன்வெல்த் அமைப்பு தாம் மனிதஉரிமைகளில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்று வெறுமனே கூறாது, மனிதஉரிமைகளுக்காக என்ன செய்தோம் என்பதைக் கூறுவதற்கு நாம் என்ன செய்யலாம் என்பது குறித்தும் விளக்கமளிக்க வேண்டும் என்றும் பிரித்தானியப் பிரதமரிடம் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த அதே கட்சியின் தலைவரும், துணைப் பிரதமருமான நிக் கிளெக், அண்மைய போரின் போது மனிதஉரிமைகள் மீறப்பட்டுள்ள நிலையில், சிறிலங்காவில் நடக்கவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்ற பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சரின் முடிவு சர்ச்சைக்குரியது என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை, பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் பணியகப் பேச்சாளர் ஒருவர், பிரதமர் டேவிட் கெமரூன் நிச்சயமாக சிறிலங்கா மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்தார். சிறிலங்கா மனிதஉரிமை விவகாரங்களை உரிய வகையில் கையாள வேண்டும் என்பதை வலியுறுத்துவதும், அவர் அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று எனவும் அவர் கூறியுள்ளார்.

14 மே 2013

சவால் விடுகிறார் சிறிலங்கா படைகளின் வன்னித்தளபதி!

சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்த பின்னர், வன்னி மாவட்டத்தில் பொதுமக்களில் ஒருவர் கூடக் காணாமற் போகவில்லை என்று, வன்னிப் படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். போர் முடிவுக்கு வந்த பின்னர், யாராவது காணாமற்போயுள்ளனர் என்று கூறும் எவரேனும், காணாமற்போனவர்கள் யார், எப்போது, எங்கே என்ற விபரங்களைத் தர முடியுமா என்றும் அவர் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக தாம் எந்தவொரு தனிநபருடனோ அல்லது அனைத்துலக அமைப்புடனோ, சிறிலங்கா அரசாங்கத்தின் சார்பாக விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். “வன்னியில் போர் முடிவுக்கு வந்த பின்னர், எவரும் காணாமற்போகவோ கடத்தப்படவோ இல்லை. அவ்வாறு கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. போரினால் வன்னி மாவட்டத்தில் மூவினத்தவர்களும் இடம்பெயர்ந்துள்ளனர். எனினும் தமிழர்களை மீளக்குடியேற்றவே நாம் முன்னுரிமை கொடுத்தோம். அதன் பின்னர் தான் சிங்களவர்களை மீளக்குடியேற்றி வருகின்றோம். ஆனாலும், ஊடகங்கள் உண்மைக்கு மாறாக செய்திகளை வெளியிடுகின்றன” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

13 மே 2013

அதிகாலை வீசிய மினி புயல்!

யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை வீசிய மினி புயல் காற்று காரணமாக மல்லாகம், கோணப்புலம் முகாமிலுள்ள 25 இற்கும் மேற்பட்ட தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. மரங்கள் முறிந்து விழுந்த நிலையிலும் காற்றினால் கூரைகள் அடித்துச் செல்லப்பட்ட நிலையிலும் இத்தற்காலிகக் குடிசைகள் சேதமடைந்துள்ளன. யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை அதிகாலை வேளையிலிருந்து இடி, மின்னலுடன் கூடிய அடை மழை பெய்து வருகின்றது. இதேவேளை, யாழ். மாவிட்டபுரம், மாவை கலட்டி பகுதியில் பனை மரமொன்று முறிந்து வீடொன்றின் மீது வீழ்ந்துள்ளது. இந்த அசம்பாவிதங்களினால் காயமடைந்த 3 பேர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கோணப்புலம் முகாமில் தங்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சூசைதாசன் சுமதி (வயது 42) சூசைதாசன் சுயந்தன் (வயது 13) மற்றும் மாவை கலட்டி பகுதியைச் சேர்ந்த தி.சதீஸ்வரன் (வயது 43) ஆகியோரே காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது இவ்வாறிருக்க புன்னாலைக்கட்டுவன், சூறாவத்தை பகுதியில் இடி வீழ்ந்துள்ளது. அரியாலையிலுள்ள நாவலடி, புங்கன்குளம், பூம்புகார், ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலம்பெயர் தமிழர் வாக்களிக்க அனுமதியோம்!

வெளிநாடுகளிலும் அகதிகளாக வசிக்கும் தமிழ் மக்கள் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வாக்களிப்பதற்குரிய ஒழுங்குகள் புதிய சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு உடனடியாக நிராகரித்துள்ளது. புலம்பெயர் தேசங்களில் உள்ள இலங்கை மக்கள் தமது வாக்குரிமைகளைப் பயன்படுத்துவதற்கு புதிய சட்ட மூலத்தினூடாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதனை வலியுறுத்தி தேர்தல்கள் ஆணையாளருக்கு எழுத்து மூலமான கோரிக்கையொன்றை அனுப்பவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்திருந்தார். இதனையே அரசின் சார்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் நிராகரித்துள்ளார். கூட்டமைப்பின் கோரிக்கை குறித்து மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தாவது: "1983 ஆம் ஆண்டு மே முதலாம் திகதிக்கும் 2009 மே 18 ஆம் திகதிக்கும் இடையில் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் வாக்களிப்பதற்கு வாய்ப்பளிக்கும் சட்டத்தைக் கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனூடாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ள மக்களும் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். வெளிநாடு என்பதில் குறிப்பாக இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் மற்றும் கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அகதி அந்தஸ்துப் பெற்றுள்ளவர்களையும் வடமாகாண சபைத் தேர்தலில் தத்தம் நாட்டில் இருந்தபடியே வாக்களிப் பதற்குரிய நடவடிக்கை மேற் கொள்ளப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரவுள்ளோம். தேர்தல்கள் ஆணையாளருடன் கடந்த வருடம் இடம் பெற்ற சந்திப்பில் வெளிநாடுகளிலுள்ள தமிழ் மக்களின் வாக்குரிமையை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தோம். இதேவேளை, வடமாகாண சபைத் தேர்தலில் இந்தியாவிலுள்ள ஈழ அகதிகள் அங்கிருந்தே வாக்களிப்பதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்தபோது வலியுறுத்தியிருந்தோம் என்றார்.

12 மே 2013

தேசியத் தலைவரின் பாடசாலை நண்பர் குற்றத்தை ஒப்புக்கொண்டாராம்!

அயர்லாந்துக் குடியுரிமை பெற்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பாடசாலைத் தோழர் எனக்கூறப்படுபவர் தீவிரவாதச் செயற்பாடுகளில் தான் ஈடுபட்டதை நேற்று சிறிலங்கா நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார். வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஞானசுந்தரம் ஜெயசுந்தரம் என்ற, தேசியத் தலைவர் வே.பிரபாகரனின் பாடசாலைத் தோழர், 2007ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் விடுதலைப் புலிகளுக்கு உதவினார் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இவர், விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிப்பதில் முக்கியமானவராக விளங்கினார் என்றும், விடுதலைப் புலிகளின் அனைத்துலக புலனாய்வுப் பிரிவில் செயற்பட்டார் என்றும், குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர் சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து இராணுவ தளபாடங்களைக் கொண்டு செல்வதற்காக கப்பல் ஒன்றை வாங்கியதாக நீதிமன்றத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட இவர், தன்னைப் புனர்வாழ்வுக்கு அனுப்புமாறும், சமூகத்தில் நல்ல குடிமகனாக தன்னால் இணைந்து கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். 2007இல் சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஞானசுந்தரம் ஜெயசுந்தரம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 6 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் அரசியல் சூழ்நிலை ஆபத்தானது!

ஹிருனிகா 
அரசியலிலிருந்து தற்காலிகமாக ஒதுங்கிக்கொள்ளப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர அறிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை சாதகமானதாக இல்லை எனவே தற்காலிக அடிப்படையில் அரசியல் நடவடிக்கைகளிலிருங்கு ஒதுங்கிக்கொள்ளப் போவதாகவும், முழு அளவில் அரசியலில் ஈடுபடுவதற்கு போதியளவு ஆதரவு தேவைப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியதுடன், இலங்கையில் அரசியல் செய்வது மிகவும் கடினமானது எனவே குடும்பத்தாருடன் இணைந்து பேசி அரசியலில் ஈடுபடுவது குறித்து இறுதித் தீமானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கொலன்னாவ தேர்தல் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக மீண்டும் துமிந்த சில்வா நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

11 மே 2013

த.தே.கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் முடிவில்லை!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் மன்னாரில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் முடிவெதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இடையே, மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது. இக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பை பதிவு செய்வது தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் ஆர்.சம்பந்தன், மற்றும் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர். இதேபோன்று, ஈ.பி.ஆர்.எல்.எவ், டெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தமது நிலைப்பாட்டை எடுத்துக் கூறினர். இருப்பினும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் எந்தவிதமான முடிவுகளும் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படவில்லை என சுரேஸ் பிரேமச்சந்திரன் கூறினார். இதேவேளை, பதிவு செய்வது தொடர்பிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள கட்சிகள் ஒரு புரிந்துணர்வு அடிப்படையில் செயற்படுவதற்குத் தமிழரசுக் கட்சியினர் சில விட்டுக்கொடுப்புக்களைச் செய்வதற்கு முன்வந்துள்ளதாக, அந்தக் கட்சிக்கும் டெலோ அமைப்புக்கும் இடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தின் முடிவுகள் குறித்து தெரிவித்த டெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார். தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் மன்னார் ஆயர் தலைமையிலான குழுவினருக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பையடுத்து, வடமாகாணத்தின் பல மாவட்டங்களையும் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில், தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளை என்ன வகையில் எதிர்காலத்தில் முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றிய நீண்ட கலந்துரையாடலும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மே 18 சர்வதேச இனப்படுகொலை நாள்!

முள்ளிவாய்க்கால் 
2009ம் ஆண்டில் உலகின் மிகப் பெரிய இனப்படுகொலை தமிழீழத்தில் சாட்சிகளே இல்லாமல் அரங்கேறியது. இந்தியாவின் ஒப்புதலோடு உலக நாடுகள் வேடிக்கை பார்க்க இந்த தமிழ் இனப் படுகொலையை இலங்கை அரசு நடத்தியது. இந்த இனப் படுகொலையை தொடர்ந்து தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு, அவர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு, உள்நாட்டிலேயே அகதிகளாக கைதிகளாக மாற்றப்பட்டனர் தமிழர்கள். இது ஒரு இன அழிப்பாகவே பார்க்க முடிகிறது. எனினும் ஐ.நா மன்றமோ, உலக நாடுகளோ இந்த இன அழிப்பை ஏற்கவில்லை. ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை தான் என அங்கீகரிக்கவில்லை. தமிழக அரசு ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை தான் என சொல்லிய பிறகும் இந்திய அரசு அதை ஏற்கவில்லை. இந்நிலையில் 2009 மே 18ம் நாளில் மாபெரும் இனப் படுகொலைக்குப் பின் போரை நிறுத்தியது இலங்கை அரசு. இந்த நாள் தமிழர்களின் கறுப்பு தினமாக உலகத் தமிழர்களால் கருதப்படுகிறது. இந்த நாளை இலங்கை அரசு தமிழர்களை கொன்று வெற்றி வாகை சூடிய நாளாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகிறது. அதற்கு எதிர்வினையாக தமிழர்கள் இந்த நாளை சர்வதேச இனப்படுகொலை நாளாக அனுசரிக்க வேண்டும். அதற்கு தமிழக அரசின் அதிகார பூர்வ ஒப்புதல் வேண்டும். இந்த நாளை தமிழக அரசு உலக தமிழர்களின் கருப்பு நாளாகவும், தமிழினப் படுகொலை நாளாகவும் அறிவிக்க வேண்டும். இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும். தமிழக அரசுக்கு இதை பரிந்துரைக்க வேண்டும் என தமிழகம்- தமிழர் பண்பாட்டு நடுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் செயற்பாடுகளில் இறங்கியுள்ள இந்திய அரசு!

இந்தியாவிலிருந்து ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் இலங்கையின் வடபகுதிக்கு இந்தியப் புலனாய்வாளர்கள் அனுப்படுகின்ற விடயங்கள் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளன. யுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் இலங்கை வரும் இவர்கள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து இந்திய அரசிற்கான ஆதரவை பெற்றுக்கொள்ள முயற்சிகின்றனர். சர்வதேச அரசியலை நோக்கி நகரும் விடுதலைப் போராட்டத்தை சிதைக்கும் இந்திய அரசின் ஒரு இரகசிய நடவடிக்கையாகவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தம்மை ஊடகவியலாளர்கள் மற்றும் இந்திய பல்கலைக்கழகங்களின் ஆய்வாளர்கள் என்று அடையாளப்படுத்தும் இவர்கள், விடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழர்களது விடுதலைப் போராட்டத்தை 1987 ஆம் ஆண்டு காலப் பகுதி முதல் இன்றுவரை அழிக்கும் செயற்பாடுகளையே இந்தியா தொடர்ந்தும் முன்னெடுத்து வருவதாக புத்தி ஜீவிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

10 மே 2013

கனடாவில் வன்னி வீதி!

தை மாதத்தை தமிழர் மரபுரிமை மாதமாக அங்கீகரித்ததன் முலம் தமிழ் மக்களுக்கு உரிய கௌரவத்தை வழங்கிய மார்க்கம் நகரசபை மீண்டும் ஒரு தடவை உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம், தனது நிர்வாகத்தின் கீழ் வரும் முக்கிய வீதி ஒன்றுக்கு “வன்னி வீதி” என்று பெயர் சூட்டுவதற்கு தீர்மானித்துள்ளது. மார்க்கம் நகரசபையின் 7ம் வட்டார அங்கத்தவரான திரு,லோகன் கணபதியின் சிபார்சினை ஏற்று சபை அங்கத்தவர்கள் அனைவரதும் ஏகோபித்த ஆதரவோடு வன்னி வீதி என பெயர் சூட்டும் அவரது முயற்சிக்கு பலன் கிட்டியுள்ளது. மார்க்கம் நகர சபையின் தமிழ் பேசும் அங்கத்தவராகத் திகழும் திரு லோகன் கணபதி அவர்கள் தொடர்ச்சியான சிறந்த சேவையின் பலனாக தமிழ் மக்கள் மட்டுமல்ல வேற்று இன மக்களும் அவரைப் பாராட்டுகின்றார்கள். அத்துடன் மார்க்கம் மாநகரசபையின் நகரபிதா திரு ஸ்கெப்பட்டி அவர்களின் நட்புக்கும் மரியாதைக்கும் உரியவராகவும் திரு லோகன் கணபதி இருப்பதும் தமிழ் மக்கள் பெருமைப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.மேற்படி வன்னி வீதி என்று பெயர் சூட்டப்படும் இந்த வீதியில்தான் மிகவிரைவில் மார்க்கம் நகரசபையின் மிகப்பெரிய சனசமூக நிலையம் மற்றும் நூலகம், பூங்கா போன்றவை அமைந்துள்ள பொழுது போக்கு வளாகம் அமையவுள்ளது என்பதும். மேற்படி வன்னி வீதியானது காலகிரமத்தில் மார்க்கம் நகரத்தில் மட்டுமல்ல கனடா முழுவதிலும் புகழ்பெற்ற ஒரு வீதியாகத் திகழ்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைக் களமாக விளங்கிய அந்த வீர மிகு பிரதேசத்தை மேற்குலக நாடுகளுக்கு பறைசாற்றும் ஒரு சாதனமாக அமையும் என்று மார்க்கம் நகரில் வாழும் முன்னாள் யாழ்ப்பாண கல்லூரியொன்றின் அதிபர் கூறியுள்ளார்.

அசாத் சாலி சற்று முன்னர் விடுதலை!

அசாத் சாலி 
குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந்த கொழும்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரின் மேலதிக சிகிச்சைக்காக தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.ஆயுதப் போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்ததாலேயே அசாத் சாலி கைது செய்யப்பட்டார் என கோத்தபாய தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இளம் வர்த்தகர் நஞ்சருந்தி சாவு!

யாழ்.நகரில் இளம் வர்த்தகர் ஒருவர் நஞ்சருந்தி நேற்று வியாழக்கிழமை உயிரை மாய்த்துக் கொண்டார். இந்தச் சம்பவம் நல்லூர் சங்கிலியன் வீதி, பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் கஸ்தூரியார் வீதியில் வர்த்தகத்தை மேற்கொள்ளும் வர்த்தகரான சந்தானம் சசிக்குமார் (வயது23) என்பவரே பலரிடம் கடன் பெற்று அதனை மீளச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார். அதனால் ஏற்பட்ட உளத் தாக்கத்தினாலேயே அவர் நஞ்சை உட்கொண்டு சாவைத் தழுவினார் என்று தெரிய வந்தது என்று யாழ். போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி என்.பிரேம்குமார் தெரிவித்தார். உயிரிழந்தவரின் சடலம் யாழ். போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டு மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

09 மே 2013

சிறுவன் உயிரையும் பறித்தான் யமன்!

விடுமுறைக்காக சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்த தமிழ்ச் சகோதரர்கள் இருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமது விடுமுறையை முடித்துக் கொண்டு மீண்டும் திரும்பிச் செல்ல இருந்தனர். கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் மஞ்சள் கோட்டில் வீதியை கடக்கும் வேளையில் கார் ஒன்று மோதியே விபத்துக்குள்ளாகினர். ஏற்கனவே சகோதரி மற்றும் உறவினரான பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜவீனின் மகன் ஜனன் ( 13 வயது) நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். சுவிஸில் இருந்து இலங்கைக்கு சென்ற ஜவீன் ஜெயந்திமாலா தம்பதிகளின் மகள் ஜனனி (16 வயது) , ஜவீனின் சகோதரியின் மகள் பாலசூரியன் வாரணி (29 வயது) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது தொடர்பில் வெள்ளவத்தைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.இக்கோர விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

08 மே 2013

யாழில் டக்ளஸ் – கே.பி பிரச்சார மோதல்!

குமரன் பத்மநாதன் 
வடக்கு தேர்தல் தொடர்பில் அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கிடையில் பல்வேறு போட்டி நிலைப்பாடுகள் உள்ள நிலையில் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனும் யாழ்ப்பாணத்தில் தனது பிரச்சாரப் பணிகளை ஆரம்பித்துள்ளார். இவர் வந்த வேகத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை வம்பிற்கு இழுத்து கடும் விமர்சனம் செய்துள்ளதோடு தனது துரோகத் தனங்களை தொடர்ந்து அரங்கேற்றுவதற்கான அடித்தளங்களை யாழ்ப்பாணத்தில் அமைத்து வருகின்றார். ஊடகங்களின் குரல்வளையை அமைச்சர் டக்ளஸ் நெரிப்பேன் என்று தெரிவித்த கருத்திற்கு கடும் கண்டனம் வெளியிட்ட கே.பி, தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் எந்த நிலைப்பாட்டையும் தான் எடுக்கவில்லையென்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை இப்பொழுதே வடக்கு தேர்தலில் அரசாங்க தரப்புக்கள் தமக்குள்ளே உள்ள போட்டி காரணமாக ஒருவரை ஒருவர்
 விமர்சனம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

மாட்டிக்கொண்டான் ஆட்டுக்கள்வன்!

newsகளவாக பிடிக்கப்பட்ட ஆட்டினை முச்சக்கரவண்டியில் கொண்டு சென்றவர்களை தெல்லிப்பழைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். களவாடப்பட்ட ஆட்டினை முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற நபர்களை தெல்லிப்பழை பொலிஸார் மறித்தபோது நிறுத்தாது தப்பிச் செல்ல முற்பட்டவர்களை வீதிக்கடமையில் ஈடுபட்டிருந்து பொலிஸார் மோட்டார் சையிக்கிளில் சுமார் மூன்ற கிலோ மீற்றருக்கு மேல் துரத்தி சென்று குறிப்பிட்ட முச்சக்கர வண்டியையும் அதில் இருந்தவர்களையும் நிறுத்தியுள்ளனர். அந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. அதன் போது முச்சக்கர வண்டியில் இருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பி ஓடிய நிலையில் மேலும் ஒருவரை கைது செய்த பொலிஸார் முச்சக்கர வண்டி, ஆடு ஆகியவற்றையும் பொலிஸ் நிலையத்தில் கையளித்தார். எனினும் கைது செய்யப்பட்டநபர் தம்மிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லை எனவும். அதன்காரணத்தினால் தாம் நிறுத்தாது தப்பி ஓடியதாகவும் ஆட்டிற்கு சுகமில்லாததால் மிருக வைத்தியரிடம் ஆட்டைக் கொண்வந்தோம் எனவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிவித்திருந்தார். அதனையடுத்து குறித்த நபர் பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் இரண்டாம் நாள் கீரிமலைப் பகுதியில் உள்ள ஒருவர் தனது ஆடு இது தான் என தெல்லிப்பழை பொலிஸ் நிலையம் வந்து உரிமை கோரியுள்ளார். ஆட்டை பிடித்து வந்தவர் தனது ஆடு தான் இது என அடம் பிடித்த நிலையில் ஆட்டின் உரிமையாளரிடம் வேறு ஆதாரம் உண்டா என பொலிஸார் கேட்ட போது ஆடடின் குட்டிகள் தம்மிடம் உள்ளதாக தெரிவித்ததுடன் ஆட்டுக்குட்டிகளையும் பொலிஸ் நிலையம் கொண்டுவந்து சேர்ப்பித்தார். அதன் போது குட்டிகள் தாயைக் கண்ட சந்தோசத்தில் பாயந்துசென்று தாயின் மடியில் பால் குடித்ததைத் தொடர்ந்து குறிப்பிட்ட நபர் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆட்டுக்களவு சம்பந்தமாக ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு குறித்த சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்கும் படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். எனினும் மற்றும் ஒரு சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

07 மே 2013

புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் நாளை தேர்!

புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் 30.04.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது.ஒன்பதாம் திருவிழாவாகிய நாளை(08.05.2013)காலை பத்து மணியளவில் விநாயகப் பெருமான் தேரில் அமர்ந்தருளி பக்தகோடிகளுக்கு அருள் பாலிக்கும் வண்ணம் வீதியுலா வர இருக்கிறார்,அதனை தொடர்ந்து மாலை பச்சை சாத்தும் நிகழ்வு இடம்பெறும்.நாளை மறுதினம்(09.05.2013)தீர்த்தோற்சவம் நடைபெற்று இரவு கொடி இறக்கத்துடன் வருடாந்த திருவிழா நிகழ்வுகள் இனிதே நிறைவுற இருக்கின்றன.பதினோராம் நாளாகிய 10.05.2013 அன்று வைரவர் மடை இடம்பெறும்.

தமிழீழ தேசியத்தலைவர் பகவத் கீதையை அடிப்படையாக கொண்டே போரிட்டார்!

இலங்கை வரலாற்றில் எந்தவொரு போரும் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நடைபெறவில்லையென ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக வரலாறு மற்றும் தொல்லியல்துறை பீட பேராசிரியர் ரி.ஜீ.குலதுங்க தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற தொல்பொருளியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பேராசிரியர் குலதுங்க, "பிரபாகரன் போரில் ஈடுபட்டது பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்டுதான்'' என்று குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது: வரலாற்றை எடுத்துக்கொண்டால், நடந்த போர் நிச்சயமாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருந்திருக்காது. அது மதத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருந்திருக்கிறது. துட்டகைமுனுவின் போர் கூட இனவாதத்தின் அடிப்படையில்தான் நடத்தப்பட்டதாக கடந்த பல காலங்களில் கூறப்பட்டன. ஆனால் எந்தவொரு நூலிலும், ஆவணத்திலும் எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையிலான போர் இனவாதத்தின் அடிப்படையில் நடந்ததென்று குறிப்பிடப்படவில்லை. எல்லாள மன்னனைப் பற்றி மகாவம்சத்தில் 23 விதந்துரைகள் இருக்கின்றன. அதில் முதலாவது மற்றும் இறுதி விதந்துரைகளைத் தவிர ஏனைய எல்லாவற்றிலும் அவரைப்பற்றி நன்றாகத்தான் சொல்லப்பட்டுள்ளது. நமது நாட்டைப் பொறுத்தவரை கலாசாரம்கூட இந்தியக் கலாசாரத்தையே அடியொற்றி வந்திருக்கிறது. எமது நாட்டில் போரில் ஈடுபட்ட பிரபாகரன் கூட இந்திய நூலான பகவத்கீதையின் பல விடயங்களை அடியொற்றித்தான் அதில் குதித்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராசிரியர் குலதுங்க.

06 மே 2013

அசாத் சாலி மீண்டும் வைத்தியசாலையில்!

தடுப்புக்காவலிருக்கும் கொழும்பு மாநகர சபை முன்னாள் பிரதி மேயர் அஸாத் சாலி மீண்டும் உடல் நிலை பாதிப்பு காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே கடந்த வௌ்ளிக்கிழமை உடநல நிலை குறைவுகாரணமாக கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு பின்னர் நேற்றைய தினம் வைத்திய சாலையிலிருந்து வெளியேறியிருந்தார். எனினும் மீண்டும் இன்று பிற்பகல் 4 மணியளவில் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மண்கும்பான் பகுதியில் இளைஞன் மீது தாக்குதல்!

யாழ். மண்கும்பான் பகுதியில் வைத்து இளைஞர் ஒருவர் மீது மேற்கொண்ட தாக்குதலில் அந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போதே பின்தொடர்ந்து வந்த இனந்தெரியாதோர் அவரது தலையில் கோடரியால் தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் படுகாயமடைந்த 24 வயதான வேனுகாந்தன் என்ற இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

05 மே 2013

தமிழீழ விடுதலைப் புலிகள் 37-வது அகவையில்!

தமிழீழ மக்களின் அடையாளமாகவும், தமிழர்களைத் தனிப் பெரும் சக்தியாக உலகிற்கு அடையாளப்படுத்திய அமைப்பாகவும் விளங்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு இன்று மே 5-ம் தேதியன்று 37-வது அகவையில் கால் பதிக்கிறது. 1972-ம் ஆண்டின் மத்தியில் தனது 17-வது வயதில், “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற இயக்கத்தைத் தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தொடங்கினார். அதன்பின்னர் தமிழ்த் தேசியத் தலைவர் அவர்கள் “புதிய தமிழ்ப் புலிகள்” என்ற பெயரில் இருந்த இயக்கத்தை ஒரு பெரிய இராணுவமாக உருவாக்க முடிவெடுத்து, “தமிழீழ விடுதலைப்புலிகள்” அமைப்பை (எல்.டி.டி.ஈ) 1976-ம் ஆண்டு மே மாதம் 5-ந்தேதி தொடங்கினார். தமிழ்த் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இயக்கத்தை தனது சிறந்த கட்டுப்பாடான நெறிப்படுத்தலினாலும், தனது அயாரத உழைப்பாலும், தமிழ் மக்களின் ஆதரவாலும் மிகப் பெரிய அமைப்பாக மாற்றினார். தமிழர்களுக்கென தனியான ஒரு தேசத்தையும், அதற்கான அரச கட்டமைப்பும் திறம்பட வைத்து, உலகின் பார்வையைத் தம்மகத்தே மூன்றாவது ஈழப் போரின் போது திருப்பிய தமிழீழ விடுதலைப்புலிகள் உலக படை வரலாற்றில் பல நிகழ்வுகளிற்கு முன்னூதாரணமாகத் திகழ்ந்தார்கள். உலக வல்லரசுகளின் இராணுவப் படிமுறைகளிற்கும் வரையறைகளிற்கும் சவாலாக விளங்கிய பல சிறந்த தாக்குதல்களின் மூலம் உலகின் பார்வையைத் தம்மகத்தே திருப்பிய விடுதலைப்புலிகளின் போராட்ட வரலாற்றில் ஓயாத அலைகள் தாக்குதல்கள் போராட்டத் தந்திரோபாயங்களையெல்லாம் புரட்டிப் போட்ட மரபு வழித் தாக்குதலாக உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. அத்தோடு எதிரி உச்சவிழிப்பில் இருந்து எதிர்பார்த்துக் காத்திருந்த ஆனையிறவு இராணுவத் தளம் மீதான முப்பரிமாணத் தாக்குதலை தமது திட்டமிடலின்படியே நடத்தி மூன்று மாத காலத்தில் படைகளை அகற்றி உலகில் தமக்கெனத் தனி அங்கீகாரம் பெற்றார்கள் விடுதலைப்புலிகள். அத்தோடு பல முறியடிப்புச் சமர்கள் குறிப்பாக யாழ். தேவி முறியடிப்புச் சமர், சூரியக்கிரன முறியடிப்புச் சமர், ஜெயசிக்குறு எதிர்ச்சமர், தீச்சுவாலை முறியடிப்புச் சமர் என பல முறியடிப்புச் சமர்களின் மூலம் தமது தற்காத்தல் போராட்ட முறையை உலகிற்குப் பாடவிதானமாக்கிய விடுதலைப்புலிகளின் ஜெயசிக்குறு எதிர்ச்சமர் 18 மாதங்களாக நீடித்த ஒரு பாரிய சமராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டது. முப்படைகளையும் அதற்கான சிறந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டுமாணத்தோடு உருவாக்கிய தமிழீழ விடுதலைப்புலிகள் அவற்றிற்கான தனிச்சீருடைகள், முகாம்கள் என அவற்றைப் பராமரித்ததோடு அவற்றின் சண்டையிடும் திறன் மூலம் இந்தியப் பிராந்தியத்திற்கே படைபல அச்சமேற்படுத்தும் படையணிகளாக அவற்றை சிறீலங்கா மற்றும் அவற்றின் நேச நாடுகள் நோக்குமளிவிற்குப் பேணிப் பாதுகாத்தனர். இராணுவப் படைக் கட்டுமாணத்தின் கீழ் பல சிறப்புப் படையணிகளைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகள் ஜெயந்தன் படையணி, சிறுத்தைப் படையணி, மகளீர் படையணி, சார்லஸ் அன்ரணிப் படையணி, மோட்டார்ப் படையணி, ஆட்லறிப் படையணி, டாங்கிப் படையணி என இன்னும் பல பிரிவுகளையும் திறம்படச் செயற்படுத்தி வந்தனர். குறிப்பாக ஈழப் போர் நான்கில் தமிழீழ தேசப் படையணிகள் முழுப் பரிமாணம் பெற்றதற்கான அடையாளமாக உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய வான்புலிகளின் தோற்றமும் அவற்றின் செயற்பாடும் மிக நேர்த்தியான தாக்குதல்கள், உச்ச இலக்குகள், இலாவகமாகத் திரும்பித் தளமடையும் செயற்திறன் என ஒரு வான்படைக்கான அங்கீகாரத்தை அதற்கு வழங்கியிருந்தது. போராட்டத்தின் பெயர் சொல்லவல்ல 70-க்கும் மேற்பட்ட சிறந்த தளபதிகளைக் கொண்டிருந்தார்கள் தமிழீழ விடுலைப்புலிகள். பல வல்லாதிக்க சக்திகளின் ஆதரவு இன்றி சிங்கள இனவாத அரசை எதிர்கொண்டு போராடினார்கள். ஆயுதங்களை மௌனிப்பதாக முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் அறிவிக்கும்வரை கொண்ட கொள்கை மீதான பற்று உறுதியுடன் போராடிய தமிழர்களின் போராட்ட சக்தி தோற்றம் பெற்ற நாள் தமிழர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான நாளாகும். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பின் கீழ் இயங்கியவை:

01. இராணுவம் (தரைப் படை -பல்வேறு படை அணிகள்) இம்ரான் பாண்டியன் படையணி, ஜெயந்தன் படையணி, சார்ள்ஸ் அந்தோனி சிறப்புப் படையணி, கிட்டு பீரங்கிப் படையணி, ராதா வான்காப்புப் படையணி, குட்டிஸ்ரீ மோட்டார் படையணி, சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, விக்டர் கவச எதிர்ப்புப் படையணி, சோதியா படையணி, மாலதி படையணி, அன்பரசி படையணி, ஈருடப் படையணி, குறிபார்த்து சுடும் படையணி, சிறுத்தைப் படையணி, எல்லைப்படை, துணைப்படை, பொன்னம்மான் மிதிவெடிப் பிரிவு, ஆயுதக் களஞ்சிய சேர்க்கை, பாதுகாத்தல் பிரிவு.
02. கடற்புலிகள் நீரடி நீச்சல் பிரிவு கடல் வேவு அணி சார்லஸ் சிறப்புக் கடற்புலிகள் அணி அங்கயற்கண்ணி ஆழ்கடல் நீச்சல் அணி (பெண்கள்) நிரோஜன் ஆழ்கடல் நீச்சல் அணி கடல் சிறுத்தைகள் சிறப்பு அணி
03. வான்படை 04. கரும்புலிகள் 05. அரசியற்துறை அரசியல்துறை – பரப்புரைப் பிரிவு.
06. புலனாய்வுத்துறை 07.
07.வேவுப்பிரிவு 08.
08.ஒளிப்பதிவுப் பிரிவு 09.
09.மருத்துவப் பிரிவு லெப். கேர்ணல் திலீபன் சிறப்பு மருத்துவப் பிரிவு 10. 10.கணணிப் பிரிவு 11.
11.மாணவர் அமைப்பு 12.
12.தமிழீழ வைப்பகம் 13.
13.தமிழர் புனர்வாழ்வுக் கழகம் 14.
14.அனைத்துலகச் செயலகம் 15.
15.சுங்கவரித் துறை 16.
16.தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுக் கழகம் 17.
17.தமிழீழப் படைத்துறைப் பயிற்சிப் பள்ளி 18.
18.அரசறிவியற் கல்லூரி 19.
19.தமிழீழக் காவற்துறை காவல்துறை – குற்றத் தடுப்புப் பிரிவு காவல்துறை – குற்ற புலனாய்வுப் பிரிவு 20.
20.வன வளத்துறை 21.
21.தமிழீழ நிதித்துறை 22.
22.விடுதலைப்புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம் 23.
23.தமிழீழ சட்டக்கல்லூரி, தமிழீழ நீதித்துறை, நீதிமன்றுகள் 24.
24.தமிழீழக் கல்வி மேம்பாட்டுப் பேரவை 25.
25.காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகள்)
26. செந்தளிர் இல்லம் (5 வயதுக்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகள்)
27. செஞ்சோலைச் சிறார் இல்லம் (ஆதரவற்ற பெண் குழந்தைகள்)
28. வெற்றிமனை (வலுவிழந்தோர்)
29. அன்பு இல்லம் (முதியோர்)
30. பொத்தகசாலை 31.
31.விடுதலைப் புலிகள் செய்தி இதழ் 32.
32.ஈழநாதம் செய்தி இதழ் 33.
33.வெளிச்சம் செய்தி இதழ் 34.
34.ஆவணப்படுத்தல்-பதிப்புத்துறை 35.
35.தமிழீழ தேசியத் தொலைக்காட்சி 36.
36.நிதர்சனம் 37.
37.புலிகளின் குரல் வானொலி 38.
38.மாவீரர் பணிமனை 39.
39.நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கான)
40. மயூரி இல்லம் (இடுப்பின்கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
41. சேரன் வாணிபம் 42.
42.சேரன் சுவையகம் 43.
43.பாண்டியன் உற்பத்திப் பிரிவு 44.
44.பாண்டியன் வாணிபம் 45.
45.பாண்டியன் சுவையூற்று 46.
46.சோழன் தயாரிப்புகள் 47.
47.வழங்கற் பிரிவு 48.
48.சூழல் நல்லாட்சி ஆணையகம் 49.
49.நிர்வாக சேவை 50.
50ஆயுத ஆராய்ச்சி மற்றும் உருவாக்கல் பிரிவு 51.
51.மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு 52.
52.திரைப்பட வெளியீட்டுப்பிரிவு, மொழியாக்கப்பிரிவு 53.
53.பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம் 54.
54.தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித் துறை 55.
55.தமிழீழ விளையாட்டுத்துறை 56.
56.தமிழீழ காலநிலை அறிவுறுத்தல் வாரியம்.

 தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

வரணி துயிலும் இல்ல காணி தாரை வார்ப்பு!

கொடிகாமம் வரணி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி 522 ஆவது படைப் பிரிவுக்கு விற்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லம் இருந்த இந்த 7 ஏக்கர் காணி, படையினரின் தேவைக்கானது எனக் கா
ணி சுவீகரிப்புச் சட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த 7 ஏக்கர் காணியும் இரண்டு உரிமையாளர்களுக்கு சொந்தமானது. இந்தக்காணியை இராணுவத்தினர் சுவீகரிப்பதற்கு அதன் உரிமையாளர்கள் சம்மதித்துள்ளனர் என பிரதேச செயலக வட்டாரங்கள் தெரிவித்தன. துயிலும் இல்லம் அமைந்திருந்த காணி என்பதால் வேறு யாரும் அதனை வாங்க முன்வரமாட்டார்கள் என்பதால் விற்பதற்குச் சம்மதித்ததாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனராம்.

04 மே 2013

இளவாலையில் மனித எலும்புக்கூடு!

யாழ்ப்பாணம், இளவாலை, சீனிப்பந்தல் பிரதேசத்தில் தனியார் காணியொன்றிலிருந்து எலும்புக்கூடொன்று மீட்கப்பட்டுள்ளது. மாலை 4.30 மணியளவில் இந்த எலும்புக்கூடு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மலசலகூடம் அமைப்பதற்கான குழியொன்று வெட்டும்போதே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

தமிழரின் காணிகளில் சிங்களவர் குடியேற்றம்!

செட்டிகுளம் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வீரபுரம் கிராம வீட்டுத் திட்டக் காணிகளில் உலுக்குளத்தில் வசிக்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்
வாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்தக் காணிகள் 1995 ஆம் ஆண்டு 400 தமிழ் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத் தேவைக்கென தலா ஒரு ஏக்கர் வீதம் காணி அனுமதிப்பத்திரத்துடன் பிரதேச செயலாளரால் வழங்கப்பட்டவையாகும். இந்தக்காணிகளிலேயே உலுக்குளத்தில் வசிக்கும் சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் மிகத் துரிதமாக அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பின்னணியில் காணி அமைச்சு செயற்படுவதோடு இன நல்லிணக்கம் தொடர்பாக மாவட்டங்கள் தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டுவரும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்கவும் முழுமூச்சாக உள்ளார். காணி அனுமதிப்பத்திரங்களுடைய தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து சிங்கள மக்களைகுடியேற்றும் அரசின் இத்தகைய அடாவடித்தனங்களை உடன் நிறுத்த முன்வருமாறு சர்வதேச சமூகம் உட்பட அனைத்துத் தரப்பினரிடமும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 29 ஆம் திகதி செட்டிக்குளம் பிரதேச செயலகத்தில் ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவவிஜயசிங்க தலைமையில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மத்தியில் இன நல்லிணக்கம் தொடர்பாகவும் அவர்களின் தேவைகள் பற்றியும் அறியும்பொருட்டு கூட்டமொன்று நடத்தப்பட்டது. செட்டிகுளம் பிரதேச செயலர் உட்பட அதிகாரிகள் மற்றும் கூடியிருந்தவர்கள் முன்னிலையில் மேற்படி 400 ஏக்கர் காணி கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் அவற்றை உலுக்குளம் சிங்கள மக்களிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் சமூகமளித்திருந்த காணிச் சொந்தக்காரர்களான தமிழ் மக்கள் தமது காணிகளைச் சிங்கள மக்கள் அபகரித்து வருவதாக முறையிட்ட போதே அரச நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்தக் காணி அப்போதைய வட கிழக்கு மாகாண அரசினால் காணி அமைச்சின் அனுமதியுடன் செட்டிக்குளம் பிரதேச செயலரால் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. எது எவ்வாறு இருப்பினும் அரசினால் காணி அனுமதிப்பத்திரத்துடன் வழங்கப்பட்ட காணிகளை மீளப்பறிக்கும் ஏற்பாடுகள் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியவையே. அதிலும் ஓர் இனத்திடமிருந்து அவர்களது சொந்தக் காணிகளைப் பறித்தெடுத்து அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றும் நடவடிக்கையானது அடிப்படை மனித உரிமை மீறலாகும். இதனால் எவ்வாறு இன நல்லிணக்கத்தைப் பேணவும் மேம்படுத்தவும் முடியும் என அரசு நினைக்கின்றது. காணி உறுதிகள், அனுமதிப் பத்திரங்கள் முதலானவை தமிழர் பகுதிகளில் தேவையற்றன என்று அரசு கருதினால் வடக்கு கிழக்கிலுள்ள மக்களைத் திறந்தவெளிச் சிறைச்சாலைகளில் அடைத்துவிட்டு அரசு தமக்குத் தேவையான காணிகளைச் சுவீகரிப்பது மேலானது எனவும் சிவசக்தி ஆனந்தன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

03 மே 2013

''என் வாப்பா பயங்கரவாதியல்ல'' - ஆஸாத் சாலியின் மகள்

முஸ்லிம் சமூகத்தின்
விமோசனத்திற்காக என்னுடைய வாப்பா பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாலும் அவர் ஒரு பயங்கரவாதி அல்ல என, ஆஸாத் சாலியின் மகள் ஆமினா ஆஸாத் சாலி தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த,சிங்கள இனவாதிகள் மேற்கொண்ட செயற்பாடுகளை என்னுடைய வாப்பா எதிர்த்தார். முஸ்லிம்களின் நலனுக்காக பொது பல சேனா உள்ளிட்ட பல இனவாத அமைப்புக்களுடன் அவர் நேரடி வாக்குவாதங்களில் ஈடுபட்டார். பொது பல சேனா முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படுவதை சுட்டிக்காட்டி என்னுடைய வாப்பா ஜனாதிபதிக்கு கடிதம் எழுதினார். அவர் முஸ்லிம்கள் குறித்து சிந்தித்தார். அவர் முஸ்லிம்கள் குறித்து துணிவாக பேசினார். அவர் ஒருபோதும் இனவாதம் பேசவில்லை. அவரது நோக்கமெல்லாம் முஸ்லிம்களை இனவாத சூழ்ச்சிகளிலிருந்து காப்பாற்றுவதாகவே இருந்தது. முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்த வேண்டுமென அவர் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகள் தொடருமாயின் முஸ்லிம்கள் ஆயுதம் ஏற்றும் சூழ்நிலை தோன்றுமென்றே எச்சரித்தார். இப்படி எச்சரிப்பது பயங்கரவாதமாக மாறிவிடுமா..? இன்று என்னுடைய வாப்பா அநீதியான முறையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதே அவருடைய மகளான எனது ஒரே எதிர்பார்ப்பு. இன்று வெள்ளிக்கிழமை, 3 ஆம் திகதி இதுகுறித்த பிரார்த்தனை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாப்பா உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தி இன்று ஜும்ஆவிற்கு பின்னர் பல சமூகத்தவர்களும் இணைந்து ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்துள்ளதாக அறிகிறேன். எனது வாப்பா எந்த சமூகத்திற்காக குரல் கொடுத்தாரோ அந்த சமூகமான முஸ்லிம்கள் இதில் முன்நிற்பார்கள் என்று நான் நம்புகிறேன். முஸ்லிம் சமூகம் எனது வாப்பாவின் விடுதலையை துரிதப்படுத்துமென எதிர்பார்க்கிறேன். நான் எனது வாப்பாவின் நலத்திற்காகவும், விடுதலைக்காகவும் துஆ செய்கிறேன். அதுபோன்று இலங்கை முஸ்லிம்களும், வெளிநாடுகளிலுள்ள இலங்கை முஸ்லிம்களும் எனது வாப்பாவிற்காக அந்த இறைவனிடம் துஆ கேட்பதுடன், அவரை விடுவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிலும் முழு அளவில் பங்கேற்பார்கள் என நம்புகிறேன் எனவும் ஆஸாத் சாலியின் மகளான ஆமினா ஆஸாத் சாலி,கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

நாவற்குழியில் வீடு கட்டும் சிங்களவர்கள்!

நாவற்குழியில் அத்துமீறிக் குடியேறியுள்ள சிங்கள மக்கள் சட்ட விரோதமாக வீடமைக்கும் நடவடிக்கைகளைக் கடந்த சில நாள்களாக மீண்டும் ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தேசிய வீடமைப்பு அதிகார சபைக்குச் சொந்தமான, நாவற்குழியில் அமைந்துள்ள காணியில் கடந்த 2010 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 78 சிங்களக் குடும்பங்கள் அத்துமீறிக் குடியமர்ந்தன. ஆரம்பத்தில் இந்தக் குடும்பங்கள் கொட்டில்கள் அமைத்துச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்தனர். பின்னர் அந்தக் காணிகளுக்குரிய உறுதிகள் வழங்கப்படாமலும் சாவகச்சேரி பிரதேச சபையின் அனுமதி பெறாமலும் நிரந்தர வீடுகள் அமைக்கும் நடவடிக்கைகளை அவர்கள் தொடங்கியிருந்தனர். இருப்பினும் கடந்த ஜனவரி மாதம் இந்தப் பணிகளை அவர்கள் இடைநிறுத்தியிருந்தனர். எனினும் தற்போது அவர்கள் நிரந்தர வீடுகள் அமைக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது இரண்டு குடும்பங்கள் மாத்திரமே தங்கியிருந்து இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

02 மே 2013

யாழில் ஒரே நேரத்தில் மூன்று கடைகள் உடைப்பு!

யாழ். நகர பகுதியில் உள்ள மின்சார நிலைய வீதியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு உடைக்கப்பட்டு திருடப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்தனர். திருட்டு சம்பவம் தொடர்பாக கடை உரிமையாளர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் தடயவியல் நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். இந்த விசாரணையின் போது, தொலைபேசி விற்பனை நிலையம், தையல் கடை மற்றும், ஆடையகம் ஆகிய வர்த்தக நிலையங்களுமே உடைக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கடையில் மாத்திரம் 7,000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. ஏனைய இரு கடைகளையும் உடைத்த திருடர்கள் பூட்டுக்கள் உடைபடாத சந்தர்ப்பத்தில் கைவிட்டு சென்றுள்ளதாகவும் யாழ். பொலிஸார் கூறினர். ஒரே நேரத்தில் உடைக்கப்பட்ட 3 வர்த்தக நிலையங்களும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அசாத் சாலி கைது!

கொழும்பு மாநகரசபையின் முன்னாள் துணை மேயர் அசாத் சாலி அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொலன்னாவையில் உள்ள அவரது வீட்டில் வைத்து அவர் குற்றப் புலனாய்வினரால் கைது செய்யப்பட்டதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இவருக்கு எதிராக சில முறைப்பாடுகள் வந்திருந்ததாகவும், அது குறித்து விசாரணைக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தபோதிலும், அவர் வராத காரணத்தால் அவர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தரப்பு பேச்சாளரான புத்திக சிறிவர்த்தன தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

01 மே 2013

கொமன்வெல்த்துக்கான நிதியுதவியை நிறுத்துமா கனடா?

இந்த ஆண்டில் தலைவர்களின் உச்சி மாநாட்டை சிறிலங்காவில் நடத்த அனுமதித்ததன் மூலம் மிகப்பெரிய சோதனை ஒன்றில் கொமன்வெல்த் தோல்வியடைந்துள்ளது என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் தெரிவித்துள்ளார். எனினும் கொமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகும் எண்ணம் கனடாவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தின் பொதுச்சபை வெளிவிவகாரக் குழுவின் முன்பாக நேற்று உரையாற்றிய அவர், “சிறிலங்காவின் நிலைமைகள் மோசமடைந்து வருவது குறித்தும், சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரப்போக்கு தொடர்பாகவும், நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய ஜோன் பயார்ட், “கனடா மட்டும் தான், ஒட்டுமொத்த கொமன்வெல்த் அமைப்பிலும் உள்ள மோசமான நிலைமையை வெளிப்படுத்தி வருகின்ற ஒரே நாடாக உள்ளது.இது ஒரு சோதனை என்று நான் நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். அதேவேளை சிறிலங்காவில் நடக்கும் கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவுக்கு அப்பால் கனடா எடுக்கக் கூடிய ஏனைய நடவடிக்கைகள் என்னவென்று ஜோன் பயார்ட் கூறவில்லை. கனேடிய அரசாங்கம் கொமன்வெல்த் அமைப்பில் இருந்து விலகும் எண்ணம் உள்ளதா என்று கேள்விக்கு அவர், “இப்போது இல்லை” என்று பதிலளித்துள்ளார். அதேவேளை, கனேடிய அரசாங்கமும், கனேடிய இராஜதந்திரிகளும், இந்த விவகாரத்தில் ஏனைய கொமன்வெல்த் நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனாலும், அந்த முயற்சிகள் வெற்றி பெறாததற்கான காரணம் குறித்து கருத்து வெளியிடப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை, கொமன்வெல்த்தில் இருந்து விலகுவது உள்ளிட்ட எல்லா வாய்ப்புகள் குறித்தும் கனேடிய அரசாங்கம் ஆலோசிக்க வேண்டும் என்று கனடாவின் தேசிய ஜனநாயக் கட்சியின் வெளிவிவகாரக் குழு உறுப்பினர் போல் டேவர் தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் அமைப்புக்கு நிதி வழங்கும் நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் கனடா வழங்கி வரும் 25 மில்லியன் டொலர் நிதியை கனடா நிறுத்தி வைத்தால், கொமன்வெல்த் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு கடலில் கைதான மீனவர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களையும் தொடர்ந்தும் விளக்கமறிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 26 இந்திய மீனவர்களையும் நேற்று முன்தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆயர்ப்படுத்தினர். இவர்களை விசாரணை செய்த நீதவான் ஆர். எஸ்.எம். மகேந்திரராஜா எதிர்வரும் 6ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அத்துடன் கடந்த வாரம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் மேலும் 4 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரைக்கும் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதவான் ஆர். சபேசன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.