பக்கங்கள்

30 ஆகஸ்ட் 2015

தேசியத் தலைவர் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார்-கருணா(காணொளி)

இலங்கையின் இறுதி யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் இராணுவத்தினரிடம் சரணடையவில்லை. கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னாள் அமைச்சர் விநாயமூர்த்தி முரளிதரன் (கருணா) தெரிவித்துள்ளார். அத்துடன் அவரது மனைவி, மகள் ஆகியோர் ராணுவ ஷெல்வீச்சில் உயிரிழந்தனர் எனவும் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகமான 'புதிய தலைமுறை' தொலைக்காட்சிக்கு வழங்கி செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். எனக்கும் தலைவர் பிரபாகரனுக்கும் இடையில் சில முரண்பாடுகள் காணப்பட்டன என்பது உண்மையே. நான் என்றும் மதிக்கும் ஒரு தலைவர் பிரபாகரன். அவரது தியாகத்தையும், ஒழுக்கத்தையும் நாம் மதிக்க வேண்டும். போராட்டத்தில் மரணித்தவர்களின் தியாகத்திற்கு நாம் மரியாதை அளிக்க வேண்டும். - என்றார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் 'அக்னிப்பரீட்சை' நிகழ்ச்சிக்கு கருணா அளித்த செவ்வி காணொளியாக இங்கே.

28 ஆகஸ்ட் 2015

உள்ளக விசாரணை! தர்மசங்கடத்தில் கூட்டமைப்பு ஆதவாளர்கள்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை உள்ளக விசாரணைக்கு சாதகமான சமிக்ஞை காட்டியுள்ள நிலையினில் அதன் ஆதவாளர்கள் பலரும் மக்களிடத்தே கடுமையான எதிர்விளைவுகளை எதிர்நோக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக ஆதரவாளர்களிற்கு பதிலளிப்பதற்காக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசிகள் தயாராக இல்லையெனவும் கூறப்படுகின்றது.இதனால் பல ஆதவாளர்களும் முடக்க நிலையினை அடையத்தொடங்கியுள்ளனர்.நிஸா பிஸ்வாலுடனான சந்திப்பின் பின்னர் சுமந்திரன் ஊடககங்களிற்கு தெரிவித்துள்ள கருத்தினில் சர்வதேச பொறிமுறைகளின் கீழ் உள்ளக விசாரணையினை கூட்டமைப்பு ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.இது தமிழ் மக்களிடையே கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மக்களது இத்தகைய எதிர்ப்பு நிலைப்பாடு தேர்தல் வெற்றிக்காக பாடுபட்ட ஆதவாளர்களை தர்மசங்கடத்திற்குள்ளாக்கியுள்ளது.இதற்கு பதிலளிக்க முடியாது பலரும் தற்போது முடங்கிப்போயுள்ளனர்.குறிப்பாக சமூக வலைத்தளங்களினில் குரல் எழுப்பிய பலரும் தற்போது சுருண்டு போயுள்ளனரென அவதானிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.தொடர்ந்து வரப்போகும் ஜ.நா விசாரணை அறிக்கை வெளியீடு மற்றும் உள்ளக விசாரணை காலங்கள் கடுமையான எதிர்வினைகளினை கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிற்கு கடுமையான தர்மசங்கடங்களை தரலாமென நம்பப்படுகின்றது.

16 ஆகஸ்ட் 2015

மாவையும் சிறீகாந்தாவும் சேர்ந்து திட்டமிட்ட குண்டுத்தாக்குதல்!

நேற்று இரவு மாட்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகம் மீது நடாத்தப்பட்ட திட்டமிட்ட குண்டுத்தாக்குதலின் பின்னணி வெளியாகியுள்ளது. முற்று முழுதாக திட்டமிட்டு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரே இந்தத் தாக்குதல்ளை நடாத்தியுள்ளனர். குருநகர் தண்ணீர்த் தாங்கிப் பகுதியில் உள்ள ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட டைனமற் வெடி மருந்ததைப் பயன்படுத்தியே இத் தாக்குதலை கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சிறிகாந்தாவின் ஆதரவாளரான நிசாந்தன் என்பவரின் வழிகாட்டலில் நடாத்தியுள்ளது தெரியவந்துள்ளது. குருநகர் தண்ணீர்த்தாங்கிப் பகுதியைச் சேர்ந்த டைனமற் பாவித்து மீன் பிடித்து நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவரான டேவிட் ஜேம்சன் என்பவர் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளரும் சட்டத்தரணியுமான சிறீக்காந்தாவால் பிணையில் எடுக்கப்பட்டிருந்தான். அவனைப் பாவித்து டைனமற் வெடி மருந்தைப் பெற்றே அவனது துணையுடன் கூட்டமைப்பினர் தமக்கு அனுதாபம் பெறுவதற்காக இத் தாக்குதலை நடாத்தியுள்ளனர். இதற்காக குறித்த டேவிட்ஜேம்சனுக்க 50 ஆயிரம் ரூபா கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.இத் தகவல்களை சிறீக்காந்தாவுடன் நெருக்கிச் செயற்படும் இருவர் எமது செய்திச் சேவைக்கு உறுதிப் படுத்தியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துள்ளதால் பீதியடைந்துள்ள கூட்டமைப்பினரும் தமிழரசுக் கட்சியினரும் தமக்கான அனுதாப வாக்குகளைப் பெறுவதற்காக இவ்வாறான தில்லாலங்கடி வேலையைச் செய்துள்ளனர் . மாவை சேனாதிராஜாவின் திருகுதாளங்கள் மக்களுக்குத் தெரியவந்ததையிட்டு மாவையின் அனுசரனையுடனேயே இந்தத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.வழமையாக அதிகாலையிலேயே வரும் உதயன் பத்திரிகை இன்னும் வரவில்லை. எல்லாம் திட்டமிட்டது போல் செய்திகளை வெளியிடச் செய்து வருவதற்கான ஆயத்தமே இது.உண்மையில் தாக்குதல்களை நடாத்துபவர்கள் வெறுமனவே வீதியில் குண்டைப் போட்டுவிட்டு வேடிக்கை பார்த்து அனுதாப அலையை உருவாக்க மாட்டார்கள் என்பது அனைவருக்கம் தெரிந்த விடயம். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ளவர்கள், தேர்தலில் பின்னர் இவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்பதை அறிந்து சரியான முறையில் பாடம் புகட்டுவதற்கான ஆயத்தங்கள் தமிழ்த்தேசியத்தில் பற்றுக் கொண்ட இளைஞர்களால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.வயது போன நேரத்திலும் மக்களே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று பிச்சை கேட்கும் இந்த மாவையின் நடவடிக்கைகளை தமிழ்மக்களாகிய நீங்கள் உணராது விடில் எதிர்காலத்தில் நீங்கள் தொடர்ந்து அடிமையாகவே நடாத்தப்படுவீர்கள்.இங்கேயுள்ள காணொலியை பார்த்தால் விளங்கும் ஏன் குண்டு வெடிப்பை நிகழ்த்தினார்கள் என்பது.

15 ஆகஸ்ட் 2015

சுமந்திரனுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு!

தமிழரசுக்கட்சி வேட்பாளர் சுமந்திரனிற்கு அமைச்சரவை பாதுகாப்பு இன்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் படி அமைச்சரவை பாதுகாப்பு பிரிவை சேர்ந்த மூவர் விசேட அதிரடிப்படையினை சேர்ந்த எண்மர் மற்றும் சாதாரண காவல்துறையினை சேர்ந்த நால்வரென பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தலை முன்னிட்டு வடமராட்சி வருகை தந்து தங்கியுள்ள சுமந்திரன் தான் மக்களுடன் நெருங்கி உறவாடுவது போல காட்டிக்கொள்ள தனது பாதுகாப்பு பொறிமுறைகளினை நீக்கிக்கொண்டிருந்தார்.பிரச்சாரங்கள் முடிவடைந்ததையடுத்து தற்போது தனது விசேட பாதுகாப்பினை பெற்றுக்கொண்டுள்ளார். முன்னதாக ஒட்டுக்குழு தலைவராக இருந்த டக்ளஸ் ஆளுநர் சந்திரசிறி போன்றவர்களிற்கு வழங்கப்பட்டதைவிட அதிக பாதுகாப்பு சுமந்திரனிற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்.

14 ஆகஸ்ட் 2015

தேவியனை அரசபடைகளுக்கு காட்டிக் கொடுக்க சிறீதரன் 4 கோடி ரூபா பெற்றார்!

தேவியன் 
விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்கவும் அவர்களை ஆயுத ரீதியாக பலப்படுத்தவும் முயன்ற விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தராக இருந்த தேவியன் மற்றும் அப்பன் போன்றவர்களை சிறீதரன் அரச புலானாய்வுப் பிரிவிடம் காட்டிக் கொடுத்து அவர்களைக் கொலை செய்த பின் மகிந்தராஜபக்சவிடம் இருந்து 4 கோடி ரூபா பெற்றதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது, 2010ம் ஆண்டு கூட்டமைப்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக வந்த சிறீதரன் 2012ம் ஆண்டு வரை கடும் தேசியம் பேசி வந்துள்ளார். இவரை எவ்வாறு தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது என மகிந்தவும் மகிந்தவின் புலனாய்வுப் பிரிவினரும் பெரும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருந்த வேளை சிறீதரனின் பாலியல் பலவீனம் பற்றிய தகவல்களை துல்லியமாகப் பெற்றனர். தனது அலுவலகத்திற்குள் தனது அந்தரங்க உதவியாளரான வேளமாளிதனை நியமித்து, அலுவலகத்திற்கு பல்வேறு தேவைகளுக்காக வரும் ஏழைகளான யுவதிகளையும் இளம் பெண்களையும் ஆசை வார்த்தைகள் மற்றும் வேலை வாய்ப்பு, பண உதவி என்பன தருவதாக வேளமாகிதனுாடாக பேரம் பேசி அவர்களை தனது பாலியல் இச்சைகளுக்குப் பயன்படுத்துவது அரச புலனாய்வுத் துறையினருக்குத் தெரியவந்தது. இதன் பின்னர் சிறீதரனது அலுவலகத்தைச் சுற்றிவளைத்த பொலிசார் வேளமாகிதனை ஆண்உறைகளுடன் பிடித்தது. அத்துடன் சிறீதரன் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்த பாலியல் மாத்திரைகளையும் கைப்பற்றியது. இதனையடுத்து வேளமாகிதனை விசாரித்த பாதுகாப்புத் துறையினர் வேளமாகிதனின் வாயால் சிறீதரனின் அனைத்து பாலியல் செயற்பாடுகளையும் கண்டு பிடித்தனர். இந்தப் பின்னணியை வெளியிடப் போவதாக சிறீதரனை அச்சுறுத்த தொடங்கவே சிறீதரன் மகிந்தவிடம் சரணடைந்ததாகத் தெரியவருகின்றது. 2012ம் ஆண்டு இறுதிப் பகுதிக்குப் பின்னர் சிறீதரன் அரசாங்கத்தை விமர்சிப்பதைக் குறைத்துக் கொண்டார். ஆனால் இவ்வாறு தொடர்ச்சியாக அமைதியாக இருந்தால் தவறு எனத் தெரிந்து டக்ளஸ் தேவானந்தாவை மட்டுமே குறை கூறி வந்தார். இந் நிலையில் சிறீதரனிடம் தேசியப் பற்று நினைப்பதாக கருதிய சில புலி உறுப்பினர்கள் தாங்கள் தொடங்க உள்ள ஆயுதப் போராட்டம் பற்றி தெரிவித்ததாகவும் இதனையடுத்து சிறீதரன் உசாரடைந்ததாகவும் இரகசியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவியன் உட்பட்ட புலிகள் இவ்வாறு ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடப் போவது தொடர்பாக மகிந்தவின் தம்பியான கோத்தாவிடம் தகவல்களைத் தெரிவித்துள்ளார் சிறீதரன். அதன் பின்னர் தேவியன் குழுவினருக்கு ஆதரவு தெரிவிப்பது போல் காட்டிக் கொண்டு அவர்களுக்கு உதவி செய்பவகள் யார் எங்கிருந்து உதவி்கள் வருகின்றன, புலம்பெயர் தமிழர்களின் பின்னணி இருக்கின்றதா? என சகலவற்றையும் அறிந்த படையினருக்கு தெரியப்படுத்திக் கொண்டிருந்தார் சிறீதரன். தேவியன் குழுவினர் ஆயுதப் போராட்டத்தை தொடங்க ஆயத்தமான வேளை சிறீதரன் சரியான தருனத்தில் படையினருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து தேவியனின் மறைவிடம் சுற்றிவளைக்கப்பட்டது. அங்கு இருந்த தேவியன் உட்பட்டவர்கள் தப்பி ஓடினர். இதனால் அரசாங்கத்தரப்பு சிக்கலில் இருந்தது, இருந்தும் சிறீதரனின் காட்டிக் கொடுப்பு தெரியாத தேவியன் மீண்டும் சிறீதரனைத் தொடர்பு எடுத்த போது சிறீதரன் அவர்களைக் குறித்த இடத்திற்கு வருமாறு கூறி அரச படையினரிடம் மாட்ட வைத்ததாக சிறீதரனுடன் நெருங்கிய நண்பர்களின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த டீலுக்காக மகிந்த தரப்பு சிறீதரனுக்கு 4 கோடி ரூபாக்களைக் கொடுத்ததாகவும் அதனை வைத்து சிறீதரன் கிளிநொச்சி உட்பட்ட பகுதிகளில் நெல் வயல்கள் மற்றும் காணிகளைக் கொள்வனவு செய்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர், இதே வேளை சிறிதரன் புலிகளில் இருந்து தப்பி ஓடியவர்களையும் புலிகளையும் மக்களையும் காட்டிக் கொடுத்தவர்களையும் தனது பக்கத்தில் வைத்துக் கொண்டு தனது தம்பி சிறிகுகனின் இணையத்தளங்களான லங்காசிறி, தமிழ்வின் , ஜேவிபி ஆகியவற்றைப் பயன்படுத்தி விசமப் பிரச்சாரங்களைச் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது, வெகு விரைவில் சிறீதரனின் பாலியல் லீலைகள் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள் இங்கு வெளியிடுவதற்கு முற்பட்டுள்ளோம். இவர் செய்த லீலைகளை இவரது அலுவலகத்திற்குச் சென்ற பெண் தெரிவிக்க முன்வந்துள்ளார். விரைவில் அவற்றை வெளியிடவுள்ளோம்.
இவ்வாறு இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

13 ஆகஸ்ட் 2015

தோல்வி பயத்தால் முன்னணியினர் மீது கூட்டமைப்பு வன்முறைத்தாக்குதல்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி 
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தீவிர ஆதரவாளரொருவர் நேற்றிரவு உடுப்பிட்டி பகுதியினில் வைத்து தாக்கப்பட்டுள்ளார். அதே வேளை கனகராயன் குளப்பகுதியினில் வைத்து மற்றுமிரு ஆதரவாளர்கள் கூட்டமைப்பின் வேட்பாளரான சிவமோகனின் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர்.நேற்றிரவு வடமராட்சி பகுதியினில் பிரச்சார நடவடிக்கைகளினை முடித்துவிட்டு இரவு வீடு திரும்பியிருந்த அவரை அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் நபர்கள் தாக்கியுள்ளனர்.செயின் மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குண்ட அவர் தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையினில் அயலவர்களால் மீட்டெடுக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே அதே போன்று வவுனியாவினில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக் கூட்டத்தினில் பங்கெடுக்க சென்று கொண்டிருந்த மற்றுமிரு ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.நேற்று தனது செயற்பாட்டாளர்களிற்கு மது விருந்தொன்றை வைத்தியர் சிவமோகன் வைத்திருந்ததாகவும் அதிலிருந்தவர்களே முன்னணியின் ஆதவாளர்களை தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவங்கள் தொடர்பினில் தேர்தல் கண்காணிப்பு அலுவலகங்கள் விசாரணைகளை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.தோல்வி பயத்தில் கூட்டமைப்பு தடுமாறத் தொடங்கியிருப்பதாகவே தெரிகிறது.

11 ஆகஸ்ட் 2015

கொள்கையின் சின்னமாக உந்து ஊர்தி!

புளியங்கூடல் 
எதிர்வரும் 17ம் திகதி இலங்கையின் பாராளுமன்றத்திகான தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும் வடக்கு கிழக்கு பகுதிகளில் களைகட்டியுள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில்தான் இம்முறை பெரும் போட்டி நிலவுகிறது.கூட்டமைப்பின் முன்னுக்குப்பின் முரணான பேச்சுக்களும் தேர்தல் நேர பொய் வாக்குறுதிகளும் இனிமேலும் தமிழ் மக்களிடத்தில் எடுபடப்போவதில்லை என்றும் இம்முறை கூட்டமைப்பு பெரும் பின்னடைவை சந்திப்பது உறுதி என்றும் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்களின் தேசியக்கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்புக்கள் உள்ளதாகவும் தெரியவருகிறது.கொள்கையின் சின்னமான  உந்து ஊர்திக்கே வாக்களிக்க உள்ளதாக இளையோர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக கருத்து பரிமாறி வருகிறார்கள்.

07 ஆகஸ்ட் 2015

மன்னார் ஆயரின் சிகிச்சைக்கு நிதி உதவி கோரப்படுகிறது!

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக மன்னார் குருமுதல்வர் விக்டர் சோசை தெரிவித்தார். வவுனியாவில் நேற்று இடம்பெற்ற மனித மாண்பினைக்காக்கும் அமைப்பின் 9ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை கடந்த 3 மாதகாலமாக கடும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவர் உடல் நலம் நலம் பெறவும் அவர் முன்பு ஆற்றிய பணிகளை தொடர்வதற்கு நமது நாட்டில் சிகிச்சைகள் பலனின்றி உள்ளதால் சிங்கப்பூரில் 6 வாரம் தங்கியிருந்து மேலதிக சிகிச்சையினை பெறும் நோக்கில் இன்னும் சில தினங்களில் ஆயரை சிங்கப்பூர் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதற்கான செலவாக கிட்டத்தட்ட ஒருகோடி ரூபா தேவை. இந்நிதி உதவியினை புலம்பெயர் எமது உறவுகள் மூலமாகவும் மற்றும் எமது மக்களாகிய உங்களிடமும் தாம் எதிர்பார்ப்பதாகவும் இது தொடர்பான மேலதிக தகவல்களை மன்னார் ஆயர் இல்லத்தில் பெற்றுக் கொள்ளுமாறும் குருமுதல்வர் தனது உரையில் தெரிவித்திருந்தார்.

06 ஆகஸ்ட் 2015

சுமந்திரனின் விதண்டாவாதம்!(காணொலி இணைப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் சுமந்திரன் அவர்கள் இன்று மதியம் யாழ் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை நடாத்தினார். அதில் முக்கியமான தரவு ஒன்றினை பிழையாகச் சொன்னது மட்டுமல்லாது, மூத்த ஊடகவியலாளர் ஒருவர் அதனைச் சுட்டிக் காட்டிய போது அவரது கருத்தை பரிசீலிக்காமல் தான் சொன்னது தான் சரி என்கிற வகையில் நடந்து கொண்டுள்ளார். உண்மையில் 1982 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் அமரர் குமார் பொன்னம்பலம் அவர்கள் தான் அதிக வாக்குகளைப் (87,263) பெற்றார். அதே நேரம் கொப்பேக்கடுவ அவர்கள் (77,300) வாக்குகளைப் பெற்று யாழில் இரண்டாவதாக வந்தார். ஆனால், சுமந்திரனோ யாழில் கொப்பேக்கடுவா தான் முதலாவதாக வந்தார். குமார் பொன்னம்பலம் இரண்டாவதாக வந்ததாக திரும்பத் திரும்பக் கூறினார். குறித்த தேர்தலில் தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தி நின்றுதான் குமார் பொன்னம்பலம் அதிக வாக்குகளைப் பெற்று இருந்தமை குறிப்பிடத்தக்கது.

03 ஆகஸ்ட் 2015

கொள்கை மாறாதவர் கஜேந்திரகுமார் என்கிறார் தினேஷ்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறைமையில் தீர்வு என்று குறிப்பிட்டதன் மூலம் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பெரும் தவறிழைத்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தோற்கடிக்கவே அவர் இவ்வாறு செய்துள்ளார் என்று மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறைமையிலேயே தீர்வு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கூட்டமைப்பின் தலைவர் தீர்வு விடயத்தில் ஒரு கடும்போக்கான கட்டத்துக்கு சென்றுள்ளார். இதன் மூலம் அவர் பெருந் தவறிழைத்துள்ளார் என்பதனை குறிப்பிடுகின்றேன். குறிப்பாக இவ்வாறு கடும்போக்குவாதத்தை பின்பற்றி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. குறிப்பாக பெரும்பான்மை மக்களின் சம்மதமின்றி எந்தத் தீர்வையும் இலங்கையில் நடைமுறைப்படுத்த முடியாது. இந்நிலையில் சம்பந்தன் சமஷ்டி என்ற விடயத்தை குறிப்பிட்டவுடன் தென்னிலங்கை மக்கள் எதிர்க்கின்றனர். இவ்வாறு தென்னிலங்கையில் எதிர்ப்பு வரும் என்று தெரிந்தும் மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவும் தேர்தலில் தனித்து ஒரே கொள்கையுடன் களமிறங்கியுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தோற்கடிக்கவுமே சம்பந்தன் இந்த சமஷ்டி என்ற கடும்போக்கு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். சம்பந்தன் அடிக்கடி தமது நிலைப்பாடுகளை கூட்டமைப்புக்காக மாற்றிக்கொண்டிருக்கின்றார். கஜேந்திரகுமாரின் கொள்கைகளை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் அவர் ஒரே கொள்கையில் தொடர்ச்சியாக இருந்து வருகின்றார். எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவ்வப் போது கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலம் கருதி நிலைப்பாடுகளை மாற்றி வருகின்றார் என்றார்.