பக்கங்கள்

27 அக்டோபர் 2018

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு தேவை என்கிறது ரணில் கட்சி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு மிக முக்கியமானது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென பிரதமராக நியமக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தானே தொடர்ந்தும் பிரதமராக பதவி வகிப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க தற்போது ரணில் - மகிந்த தரப்பினர் அரசியல் காய்நகர்த்தல்களை மும்முரமாக முன்னெடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் உத்தியோகப்பூர்வ முடிவை கட்சி இன்று சனிக்கிழமை அறிவிக்கும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இதுவரை எவ்வித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை எனவும், உரிய நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுத்து அறிவிப்போம் எனவும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் 6 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடி தீர்க்கமான முடிவை எடுப்பதாக அக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிக்கச் செய்து அதிர்ச்சி அரசியல் நகர்வை முன்னெடுத்துள்ளதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.இலங்கைப் பிரதமரின் உத்தியோகபூர்வமாக வாசஸ்தலமான அலரி மாளிகையில் இன்று காலை வரை ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் குழுமியுள்ளனர். அலரி மாளிகையின் சுற்றுச்சூழலில் அமைதியான நிலையே காணப்படுகிறது. இலங்கை நாடாளுமன்றத்தில் ஆசனங்களின் விபரங்கள்

ஐக்கிய தேசிய முன்னணி - 106 (ரணில் தரப்பு)

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 96 (மகிந்த - மைத்திரி தரப்பு)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 16

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) - 6

ஈ.பி.டி.பி. - 1

சபாநாயகர் மொத்தம் : 225 நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை நிரூபிக்க 113 பேர் ஆதரவளிக்க வேண்டும். ஐக்கிய தேசிய முன்னணி கூட்டணியில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் 6 உறுப்பினர்கள் இருக்கின்றனர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக 7 உறுப்பினர்கள் இருக்கின்றனர். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க அனைத்து தரப்பிலும் பேச்சுக்கள் நடத்தப்பட்டு வருவதாக அறியமுடிகிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலை தொடர்பில் கூர்ந்து அவதானித்து வருவதாகவும், அது தொடர்பான அறிவிப்பை இன்று வெளியிடவுள்ளதாகவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, சட்ட ஆலோசனைகளின்படி அமையும் என சபாநாயகரின் ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பக்கசார்பற்ற முறையில் தனது நிலைப்பாடு அமையும் எனவும் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நன்றி:பிபிசி தமிழ்

24 அக்டோபர் 2018

விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி!

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சிங்கள முரண்பாடு 2019 உடன் நூற்றாண்டை எட்டுகின்றது. ஆனாலும் அதற்கான அடிப்படை காரணங்கள் ஏதுமே மாறவில்லை. நாங்கள் முன்னெடுப்பது தற்பாதுகாப்பிற்கான போராட்டம். அதனை சோர விடாது தொடர்ந்தும் முன்னெடுப்போம். எமது பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்த சிங்கப்பூர் இப்போது எட்ட முடியாத இலக்கை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்க தென முதல் அமைச்சர் தனது நல்லூர் கூட்டத்தில் தெரிவித்துள்ளார். நல்லாட்சி என்பது ஆட்சி மாற்றமேயன்றி தமிழ் மக்களிற்கு தீர்வை தரவில்லை. அதிகாரமற்ற மாகாண சபையில் எங்களால் செய்ய முடிந்தமை பற்றி நேற்று பேசியிருந்தேன். எங்களுக்கு தேவை சலுகையல்ல.உரிமையே எங்கள் தேவையெனவும் முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு ஆளுநர் முதலமைச்சர் நிதியத்தை முடக்கி விட்டு இப்போது இலண்டன் சென்று புலம் பெயர் உறவுகளிடம் பிச்சை கேட்கிறார். என்னிடமுள்ள நான்கு தெரிவுகள் பற்றி கூறியிருந்தேன். வீட்டே செல்வது, வேறு கட்சியில் இணைவது என்பது பொருத்தமில்லாது போய்விட்டது. அவ்வகையில் கைப்பொம்மையாக கூட்டமைப்பில் இணைந்து போட்டியிடுவது சாத்தியமற்றதாகி விட்டது. தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து மக்கள் இயக்க பாதையும் சில சில காரணங்களால் சாத்தியப்படாதுள்ளது. அகிம்சை வழி எமது போராட்டம் பின்னர் ஆயுதப் போராட்டமாக மாறியது தெரிந்ததே. அதிலும் ஒரு சில வாக்குகளால் முறையற்று வந்த சிலர் தற்போது என்னை ஏதும் செய்யவில்லையென குற்றஞ்சாட்டுகின்றனர். அவ்வாறு 9 வாக்கு பெற்று வந்த கட்சியுடன் இப்போது கூட்டமைப்பு கூட்டு வைத்துள்ளது. எமது போராட்டத்தை பயங்கரவாத போராட்டமென காண்பிக்க கை கொடுத்த இதே தரப்புக்களே இப்போது கூட்டு சார்ந்து அரசியல் பாதையில் பயணிக்கின்றனர்.வலிவடக்கில் துண்டு காணிகளை விடுவித்து விட்டு முல்லைத்தீவில் மாவட்டத்தையே சுருட்டி வருகின்றனர். அதனை கூட்டமைப்பு தலைமை வாய் மூடி பேசாதிருக்கின்றது. மன்னார் புதைகுழி பற்றி வாயே திறக்க கூட்டமைப்பு தான் பெறுகின்ற சலுகைக் கு விசுவாசமாகவே பேசாதிருக்கிறது. அரசியல் கைதிகள் விடுதலைக்கு வாய் திறக்க முடியாதிருக்கிறது .அதனால் தான் அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளேன். உள்நாட்டு, வெளிநாட்டு உறவுகளது ஆதரவுடன் களமிறங்குகிறேன். எனது மக்களே எனது பயணத்தை தீர்மானிப்பர். தமிழ் தேசிய சிந்தனை சார்ந்த அனைவரையும் இணைத்து பயணிப்பேன். ஆனாலும் கூட்டமைப்பை உடைத்ததென்ற பெயரை விரும்பவில்லை. ஆனால் கூட்டமைப்பே தனது நேர்மையற்ற அரசியலால் என்னை தனித்து அரசியல் பயணததை முன்னெடுக்க வழிகோலியிருக்கின்றது.என்றும் நீதியரசர் விக்கினேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

22 அக்டோபர் 2018

படையதிகாரியை திருப்பி அனுப்பும் ஐ.நாவின் முடிவிற்கு யஸ்மின் சூக்கா வரவேற்பு!

Image result for yasmin sookaஇலங்கை படையதிகாரி லெப்.கேணல் கலன அமுனுபுரவை மாலியிலிருந்து திருப்பியனுப்புவதற்கு ஐ.நா எடுத்துள்ள தீர்மானத்தை சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூக்கா வரவேற்றுள்ளார். சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளரான யஸ்மின் சூக்கா இலங்கை படையதிகாரி தொடர்பான விவகாரம் குறித்து அறிக்கையொன்றை விடுத்துள்ளார் அமைதிப்படை தொடர்பான திணைக்களத்திற்கு இலங்கையின் படையதிகாரி அமுனுபுர தொடர்பாக நாங்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் ஐநா அவரிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு காரணமாக அமைந்துள்ளமை குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம். 2009 யுத்தத்தில் எத்தனை தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இன்னமும் தெரியாத நிலை காணப்படுகின்றது. இதுவரை எவரும் இதற்காக பொறுப்புக்கூறச்செய்யப்படவில்லை. ஐநாவின் இந்த சிறிய நடவடிக்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களிற்கு என்றோ ஒரு நாள் தங்களிற்கு நீதி கிடைக்கும் என்ற சிறிய நம்பிக்கையை ஏற்படுத்தும். யுத்தக்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இனிமேலும் ஐ.நாவின் கௌரவாமான பதவிகளை வகிக்க முடியாது என்ற செய்தியை வலுவான செய்தியை இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது என்பது குறித்து எந்த வித சந்தேகமும் இல்லை. யுத்தக்குற்றவாளிகள் எதிர்காலத்தில் ஐ.நாவின் கடுமையான கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது என்ற செய்தியையும் இந்த நடவடிக்கை தெரிவிக்கின்றது. 2009 இல் இடம்பெற்றவைகளில் இருந்து தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக நாடகமாடுவதற்காக ஐ.நாவின் அமைதிப்படை நடவடிக்கைகளை இலங்கை பயன்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது. மூன்று வருடங்களிற்கு முன்னர் இலங்கை ஐ.நா மனித உரிமை பேரவையில் தீர்மானமொன்றிற்கு இணை அனுசரனை வழங்கியதுடன் கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்குவதாகவும், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகளை யுத்தக்  குற்றங்களிற்காக விசாரணை செய்வதாகவும் வாக்குறுதி வழங்கியது. இலங்கை அரசாங்கம் தனது வாக்குறுதிகளை இன்னமும் நிறைவேற்றவில்லை. 2009 இல் அமுனுபுரவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றிய சவீந்திர டி சில்வா தற்போது இலங்கை படைகளின் மனித உரிமை விவகாரங்களிற்கு பொறுப்பாக செயற்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். இவரே படையினர் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டால் அது குறித்து விசாரணை செய்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

16 அக்டோபர் 2018

யாழில் ஊடகவியலாளர்களை சந்தித்தார் பாரதிராஜா!


ஈழத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசாக இருக்கட்டும் எந்த அரசாக இருக்கட்டும் அவர்கள் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை. தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுக்கிறார்களே ஒழிய அதை அவர்கள் அரசியல் போராட்டமாக நினைக்கிறார்கள். ஒரு இனப்போராட்டமாக மொழிப் போராட்டமாக இந்திய அரசு நினைப்பதில்லை என்று இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 
ஈழத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசாக இருக்கட்டும் எந்த அரசாக இருக்கட்டும் அவர்கள் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை. தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இருந்து குரல் கொடுக்கிறார்களே ஒழிய அதை அவர்கள் அரசியல் போராட்டமாக நினைக்கிறார்கள். ஒரு இனப்போராட்டமாக மொழிப் போராட்டமாக இந்திய அரசு நினைப்பதில்லை என்று இயக்குநர் சிகரம் பாரதிராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தென்னிந்திய சினிமா இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 'இந்தக் காலச்சூழலில் ஈழம் பற்றி படம் எடுத்தால் கூட என்ன சொல்லுவார்கள் என்றால் இந்திய இராணுவம் இங்கே வந்தது. ஈழத் தமிழர்களுக்கு உறுதுணையாக இல்லை அப்படி சொல்லியாகணும் அதை நியாயப்படுத்தி சொன்னால் அதை ஒத்துக்கமாட்டான். சென்சார் அதை தூக்கிவிடும். அந்த அரசு ஆளுகின்ற வரை விரோதமான செயல்களை நான் வெளிப்படுத்தும் போது அந்தந்த பகுதிகளை தூக்கிவிடுவான். நானும் மொட்டையாக படம் சொல்லணும். தலைவர் பிரபாகரனை பார்த்தேன் என்று சொல்லும் போது இவனுக்கு தலைவன் பிரபாகரனா? என்று மாறுபட்ட கண்ணோடு என்னைப் பார்த்து என் செயல்களை எல்லாம் வகுத்துப் பார்த்து என்மீது ஒரு கண் வைத்திருப்பான். நான் நல்லது சொன்னாலும் அதை வெட்டிவிடுவான் ஆளுகின்ற அரசு. உங்களால் உங்கள் கதையை படம் எடுக்க முடியுமா? இலங்கை அரசு அதை வெட்டிவிடும். அதே மாதிரி தான் இதுவும். ஈழத்தில் நீங்கள் சந்திக்காத பிரச்சினைகள் இருக்காது. உங்கள் பிரச்சினையை வைத்தே ஆயிரக்கணக்கான படங்களை எடுக்க முடியும். தொழில்நுட்பம் கடந்த காலத்தில் நீங்கள் வளர்ச்சியடைவதற்கான சூழல் இல்லை. அறிவும் மூளையும் உலகத்தில் உள்ள தமிழனுக்கு ஒன்றுதான் வாய்ப்புகளும் வசதிகளும் உங்களுக்கு இல்லாத காரணத்தால் எல்லா கற்பனை வளங்களை உள்ளே வைத்துவிட்டு நீங்கள் தேங்கிக்கிடக்கிறீர்கள். ஈழத்தமிழன் நினைத்தால் என்னவெல்லாம் சாதிக்கலாம். உலகம் முழுவதும் ஸ்தாபித்துள்ளான் ஈழத்தமிழன். இலங்கை வானொலியைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். மிகப்பெரிய இலக்கியவாதி இங்கிருந்து வந்தவன். பாலுமகேந்திரா மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் இங்கிருந்து வந்தவர். எந்தெந்தக் காலம் அந்தந்தக் காலத்துக்கு என்னை மாற்றிக்கொண்டிருக்கிறேன். காலமாற்றத்துக்கு ஏற்ப சிந்தனைகள் மாறும் சூல்நிலைகள் மாறும் என்றார்.

13 அக்டோபர் 2018

நாங்கள் போறம் நீங்களும் வாங்கோ-மாணவர்களின் நடைபவனி!


தமிழ் அரசியல் கைதிகள் இதற்கு முன்னர் முன்னெடுத்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை வாக்குறுதி வழங்கி, நிறுத்திய தமிழ் அரசியல்வாதிகளின் தவறை தாமும் இழைக்கப் போவதில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகள் இதற்கு முன்னர் முன்னெடுத்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தை வாக்குறுதி வழங்கி, நிறுத்திய தமிழ் அரசியல்வாதிகளின் தவறை தாமும் இழைக்கப் போவதில்லை என யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி இன்று அனுராதபுர சிறைச்சாலைக்கு முன்பாக நடைபெறவுள்ள போராட்டத்தில் பலர் பங்கேற்பதாக தமக்கு உறுதி வழங்கியுள்ளதாகவும் யாழ் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கே.கிருஷ்ணமேனன் கூறியுள்ளார். அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அநுராதபுரம் சிறைச்சாலை நோக்கி நடைபவனியை ஆரம்பித்தனர். நாங்கள் போறம் நீங்களும் வாங்கோ என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த நடைபவனியின் நான்காம் நாள் பயணம் நேற்று மதவாச்சி ரம்பேவ பகுதியை சென்றடைந்துள்ளது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்காமல் அரசியல் பிரச்சினையாக பார்த்து அவர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்பதே பல்கலைக்கழக மாணவர்களது கோரிக்கை என நடைபயணத்தை தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய செயலாளர் ஜக்ஸன் லீமா கருத்து வெளியிட்டுள்ளார் இன்று காலை மதவாச்சியிலிருந்து அனுராதபுரம் நோக்கி தமது நடைபவனியை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றியத் தலைவர் கே.கிருஷ்ணமேனன் தெரிவித்துள்ளார்.