பக்கங்கள்

30 நவம்பர் 2010

மகிந்தவிற்கு எதிரான போராட்டத்திற்கு பொலிசார் அனுமதி.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொலிசார் அனுமதியளித்துள்ளனர்.
எதிர்வரும் இரண்டாம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு பிரித்தானியப் பொலிசாரிடம் ஏற்பாட்டாளர்களால் அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதற்கான அனுமதி தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், இன்று லண்டன் நகரமெங்கும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பகிரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவற்றுக்கு மேலதிகமாக பாரிய பதாகைகளைத் தொங்கவிட்டவாறு வேன்களிலும் பிரதேசம் தோறும் மக்களை அறிவுறுத்தும் பிரசார நடவடிக்கைகளும் தற்போதைக்கு ஆரம்பமாகியுள்ளன.
தற்போதைய நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, முஸ்லிம், சிங்கள மக்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறைந்த பட்சம் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறிலங்காவுடன் அமெரிக்கா இரகசிய ராஜதந்திர உறவு!

சிறிலங்காவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரகசிய இராஜதந்திர தொடர்புகள் குறித்த விடயங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது.
ஈராக் போரில் அமெரிக்காவின் இரகசிய விடயங்கள் குறித்த ஆவணங்களை வெளிப்படுத்தி அம்பலப்படுத்தியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்த விக்கிலீக்ஸ் இணையத்தளம் தற்போது அமெரிக்க அரசின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்த ஆவணங்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசாங்கமானது உலகின் பல்வேறு நாடுகளுடன் வைத்திருக்கும் இராஜதந்திர உறவுகள் தொடர்பான 251,287 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம் சிக்கியுள்ளன.
அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் சம்பந்தப்பட்டவை என்று கூறப்படுகின்றது. 1996ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் தொடர்பான மூவாயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் எதிர்வரும் நாட்களில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான இராஜதந்திரத் தொடர்பின் இரகசிய விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளிவருவது குறித்து கொழும்பிலுள்ள அமெ ரிக்கத் தூதரகம் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரியவருகின்றது.
அதற்கு மேலதிகமாக இந்தியா (5087), பாகிஸ்தான் (4775), ஆப்கானிஸ்தான் (7095), பங்களாதேஷ் (2182) ஆகிய நாடுகள் தொடர்பான ஆவணங்களும் விக்கிலீக்ஸ் வசம் கிடைத்துள்ளதுடன் அவையும் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
நேற்றைய தினம் தன்னிடமுள்ள ஆவணங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஏனைய ஆவணங்கள் எதிர்வரும் நாட்களில் படிப்படியாக வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.

29 நவம்பர் 2010

மகிந்தவை எதிர்க்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு!

தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருப்பதால், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரித்தானியா வரவுள்ள மகிந்த எதிர்வரும் 2ஆம் நாள் (02-12-2010) மாலை 6:00 மணியளவில் Oxford Union, Frewin Court, Oxford என்ற முகவரியில் பல்கலைக்கழக சமூகத்தின் முன்னிலையில் உரையாற்ற இருக்கின்றார்.
ஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருந்த போதிலும், போர்க் குற்றம் புரிந்தவர்களை அல்லது போர்க்குற்ற சந்தேக நபர்களை பிரித்தானியாவின் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என எழுந்த அச்சம் காரணமாக அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்தது.
எப்படியாயினும், சட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து அதில் தங்கியிருக்கவோ அல்லது திருப்தியடையவோ முடியாது. அதனால் பிரித்தானிய தமிழர்களும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவர்களும் ராஜபக்சவின் வருகை மற்றும் ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்ற அனுமதித்ததற்கு எதிராக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச கடந்த 2008ஆம் ஆண்டும் இதே பல்கலைக்கழக சங்கத்தினர் மத்தியில் உரையாற்றியிருந்ததுடன், தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு திரட்டும் தளமாகவும், படை நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையிலும் அந்த மேடையைப் பாவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு தோற்றுப் போக நேர்ந்தால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகின் தோல்வியாக முடியும் எனவும், சனநாயகம் தோற்றுப்போகும் எனவும் தனதுரையில் கூறிய மகிந்த, தாம் முன்னெடுத்த போருக்கு ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் சபை சிறீலங்கா அரசைக் கண்டித்த பின்னர்கூட, தாம் ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு உட்பட பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும், பன்னாட்டு சட்டத்தை மதித்து நடப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறான பின்புலத்தில் மனித உரிமைகளை மதிக்காது நடந்து வருவது மட்டுமன்றி, தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது.
போரினால் தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடிமறைத்து, மனித உரிமைகளை மதிக்காது தொடர்ந்தும் செயற்பட்டு வருவதுடன், கருத்து வெளிபாட்டு சுதந்திரத்தை மறுதலித்துவரும் ராஜபக்சவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
நீங்கள் என்ன செய்யலாம்?
• ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவ சமூகத்தினர் ஆகியோரை அணுகி, உயர்ந்த கல்விச் சமூகத்தின் முன்னிலையில் ஒரு போர்க் குற்றவாளி உரையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.• ஒஸ்போர்ட் பிரதேசத்தில் உங்களுக்கு தொடர்புகள் இருந்தால் அவர்கள் மூலம் சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலத்திற்குக் கொண்டு வாருங்கள்.• எதிர்வரும் 2ஆம் நாள் மகிந்த ராஜபக்சவிற்கு ஒஸ்போர்டில் எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவையினால் எடுக்கப்படும் நடவடிக்கையில் உங்களையும் தவறாது இணைத்துக் கொள்ளுங்கள். (இது பற்றிய விபரங்கள் பின்னர் பகிரப்படும்)• உங்களின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தி, போர்க் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தச் செய்யவும்.

மகிந்த லண்டன் சென்றடைந்தாராம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சற்று முன் லண்டன் சென்றடைந்தாக விமான நிலைய செய்தியாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நாளை லண்டனுக்கு விஜயம் செய்வார் என குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் யு.எல்.509 என்ற விஷேட விமானத்தில் சென்றடைந்தாக மேலும் தெரித்தார்.

பிஸ்கட் சாப்பிட்டதால் சிறுமிக்கு தண்டனை!

கண்டி மாவட்டத்தின் மொரஹாஹேன பிரதேசத்தில் எஜமானர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் 5 பிஸ்கட்டுகளை சாப்பிட்டதற்கு தண்டனையாக 14 வயதேயான சிறுமி ஒருவரின் உள்ளங்கைகளில் கற்பூரமேற்றிய கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான எஜமானாரும் அதற்கு உடந்தையாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருந்துபசாரமொன்றுக்காக ஆடைத் தொழிற்சாலையின் உரிமையாளரும் அவரின் மனைவியும் சென்றிருந்த போதே குறித்த சிறுமி பிஸ்கெட்டுக்களைச் சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைகளில் கற்பூரமேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரஹாஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

28 நவம்பர் 2010

தமிழக இளைஞர்களை ஐந்தாம் கட்ட ஈழப்போருக்கு அனுப்புவோம்!

சென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் கிளிநொச்சியில் பேசியகூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது.28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாவீரர் தின விழாவில் பிரபாகரன் பேசும்போது ஈழப்போரில் 1027 விடுதலைப்புலிகள் பலியானதை அப்போது குறிப்பிட்டார்.
பல்வேறு கால கட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இணையதளம் மூலம் சில தவறான பிரச்சாரம் நடக்கிறது. இது நீடிக்காது. முத்துக்குமார் போன்ற தியாக இளைஞர்களின் கனவு வீண்போகாது. இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது. அங்குள்ள அகதிகள் முகாமில் 30 ஆயிரம் பேர் இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ராஜபக்சே 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாக கூறுகிறார்.
ஒவ்வொரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குதான் மக்களை மாற்றுகின்றனர். தமிழர் பகுதியில் 100 மீட்டருக்கு ஒரு சிங்கள ராணுவ முகாம் உள்ளது. அங்கு சிங்கள குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிவன், முருகன் கோவில்கள் பவுத்த ஸ்தலமாக மாறுகிறது. தமிழர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறிய பிறகு ராணுவத்துக்கு அங்கு என்ன வேலை?
ஏற்கனவே என்மீது இறையான்மைக்கு எதிராக பேசியதாக 2 வழக்கு உள்ளது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனாலும் நான் அஞ்சுவதில்லை. விடுதலைப்புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன். இதன் பொருட்டு எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளேன். தொடர்ந்து மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. அதற்கான பலன் வெகுவிரைவில் கிடைக்கும். பீகார் தோல்வி இதில் முதல் கட்டமாக வந்துள்ளது.
காந்திய வழியில் போராடிய பிறகுதான் ஈழத்தமிழர்கள் தனிநாடு தீர்வுக்கு வந்தனர். அதன்பிறகு அடக்கு முறை அதிகமானதால் ஆயுதம் ஏந்தினர். தமிழ்ஈழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தாய் தமிழகம் அவர்களுக்கு உறுதியாக இருக்கும்.
பழநெடுமாறன் கூறியது போல் தாய் தமிழகத்தில் இருந்து இளைஞர்களை 5ம் கட்ட ஈழப்போருக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவோம். நிறைவாகும் வரை மறைவாக இரு என கவிஞர் காசிஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்’’என்று தெரிவித்தார்.

27 நவம்பர் 2010

கல்முனையில் ஆயுதங்களுடன் புலிகள் என படை உஷார்!

கல்முனைப் பிரதேசத்தில் காணப்பட்ட மர்ம ஆயுததாரிகள் காரணமாக அப்பிரதேசமெங்கும் பலத்த பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளதுடன், படைத்தரப்பு உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை வெல்லாவெளி பிரதேசத்தில் இன்று காலை சிவில் உடையில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களின் நடமாட்டத்தை சிலர் அவதானித்துள்ளனர். வெளியாரைக் கண்வுடன் சடுதியில் அவர்கள் மறைந்து காணாமற்போயுள்ளனர்.
அவர்களின் பயண திசையானது மட்டக்களப்பிலிருந்து கல்முனை ஊடாக தென்பகுதி நோக்கியதாக (கஞ்சிகுடிச்சாறு பக்கமாக) அமைந்திருந்ததாக அவர்களைக் கண்ட பிரதேச வாசிகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.
வெல்லாவெளி பிரதேசத்தின் பலரும் அவர்களைக் கண்டிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அப்பிரதேசமெங்கும் பதட்டம் பலமாகத் தொற்றிக்கொண்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் இராணுவம், பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்பிரதேசமெங்கும் சோதனை மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் மர்ம நபர்கள் மாயமாக மறைந்து விட்டிருந்தனர்.
சிவில் உடையில் ஆயுதந்தாங்கிய மர்ம நபர்கள் புலிகளின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக தற்போதைய நிலையில் அம்பாறைப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்புத் தரப்பினர் உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

சீமான் அவர்கள் விடுத்துள்ள மாவீரர் வணக்க அறிக்கை!

ஒன்றரை கோடி சிங்களனிடம் 12 கோடி தமிழ்த் தேசிய இனம் அடிபட்டு மிதிபட்டு வீடிழந்து நாடிழந்து ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளை அண்டிப்பிழைக்கும் அவலநிலை உருவானதற்கு காரணம் சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை. சாதிகளாக மதங்களாக பிரதேசங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறான் என, சீமான் தனது மாவீரர் தின அறிக்கையில் கூறியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் உள்ள சீமான், மாவீரர் தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நவம்பர் 27 மாவீரர் நாள். மனித குல வரலாற்றில் மகத்தான தியாகங்களை புரிந்து வியத்தகு சாதனைகளை செய்து வித்தாகிப்போன எமது தமிழ்த்தேச விடுதலைப் போராளிகளை நினைவு கூறும் வீரத்திருநாள். வரலாற்றில் மூத்த தமிழ்க்குடிக்கு காலம் அளித்த கொடையான தமிழ்த்தேசிய தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் காட்டிய பாதையில் தம்மை மனமுவந்து ஒப்படைத்துக்கொண்ட அந்த விடுதலை வேங்கைகளை நினைவு கூறும் உன்னத நாள்.
“தமிழினம் சிதைந்து அழிந்து போகாமல்
பாதுகாப்பாக வாழ்வதற்கு போராடித்தான்
வாழவேண்டும் என்ற நிர்பந்தத்திற்கு
தமிழ்த்தேசம் தள்ளப்பட்டிருக்கிறது.
இந்த தேசிய பணியிலிருந்துஇ வரலாற்றின்
அழைப்பிலிருந்து தமிழ் இளம் பரம்பரை
ஒதுங்கிக்கொள்ளமுடியாது.
என்ற எமது தேசியத் தலைவரின் கூற்றுக்கமைய களமாடி விதையான 40 ஆயிரத்திற்கும் அதிகமான மாவீரர்களை போற்றும் புனித நாள்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கரிகால் பெருவளத்தான் காவிரியில் கல்லனை எழுப்பியபோது தமிழன் பெருமை உலகை சென்றடையவில்லை. எமது முப்பாட்டன் ராசராசனும் அவனது அருமை மகன் ராசேந்திரனும் கடல்கடந்து சென்று பல தேசங்களை வென்றபோதும் தமிழனின் புகழ் உலகத்தாரால் கவனிக்கப்படவில்லை.கற்பனைக்கெட்டாத எமது மாவீரர்களின் ஈகமே “தமிழன் என்றோர் இனமுண்டு என்பதை உலகமறியச் செய்தது.
“உயிர் உன்னதமானது;
விடுதலை உயிரை விட உன்னதமானது.
என்றார் தேசியத்தலைவர். அந்த வகையில் விடுதலைக்காக உயிர்த்துறந்தவர்கள் நமது மாவீரர்கள்.
ஆண்ட பரம்பரை மாண்டு போவதா?
ஆளப்பிறந்தவன் அடிமையாவதா?
வீரத் தமிழினம் வீழ்ந்து போவதா?
வீனர்க் கூட்டம் நம்மை ஆள்வதா?
என்று நம்மில் எழும் இவ்வினாக்களுக்கு விடையாகத்தான் நம் மாவீரர்கள் உயிரைக் கொடையாக கொடுத்து போராடினார்கள்.
நாம் சுதந்திரக் காற்றை சுவாசிப்பதற்காகவே
அவர்கள் சுவாசித்தக் காற்றை நிறுத்திக் கொண்டார்கள்.
அன்னைத் தமிழீழம் அன்னிய சிங்களனிடம் அடிமைப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே நமது வீரவேங்கைகள் உயிர் நீத்தார்கள்.
“அடிமையாக வாழ்வதைவிட சுதந்திரத்திற்காக சாவதே மேலானது.
என்ற கொள்கை முழக்கத்திற்கு ஏற்பவே அவர்கள் வீரச்சாவை தழுவிக் கொண்டார்கள்.
ஈழ விடுதலை என்பது ஈழத்தில் வாழ்கிற - வாழ்ந்த - புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கான விடுதலை மட்டுமல்ல - அது உலகெங்கும் பரவி வாழ்கின்ற 12 கோடி தமிழ்த் தேசிய இன மக்களுக்குமான தேச விடுதலை. ஒவ்வொரு தமிழனுக்குமான தாயக விடுதலை.
தமிழீழ விடுதலை என்பது தலைவர் பிரபாகரனின் சொந்த இலட்சியமோ தனிப்பட்ட விருப்பமோ அல்ல - ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இன மக்களின் ஆன்ம விருப்பத்தின் வெளிப்பாடே தனித்தமிழீழ அரசு. தமிழ்த் தேசிய மக்களின் அந்த ஆன்ம விருப்பத்தை நிறைவேற்றவே நமது தேசியத் தலைவர் “விடுதலைப்புலிகள் என்ற தமிழீழ தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடினார்.
எமது மக்களின் இந்த விருப்பத்தினை புரிந்துகொள்ளாத சர்வதேச சமூகம் சிங்கள பேரினவாத அரசின் பொய்யான பரப்புரையினை நம்பி நமது தேசிய இன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமென சித்தரித்து சிங்கள பேரினவாத அரசினுடைய அரச பயங்கரவாதத்திற்கு துணை நின்று நமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கியது.
தற்பொழுது தமிழீழ விடுதலைப் போர் வரலாற்றுத் தேக்கமொன்றில் வந்து நிற்கிறது. இனத்தின் விடியலுக்காகப் போராடிய விடுதலைப்புலிகள் யுத்தகளத்தில் வீழ்த்தப்பட்டுள்ளனர். இது உலகம் முழுவதும் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள் அமைப்புகளின் மீது விழுந்த மிகப் பெரிய அடியாகும். இந்த பின்னடைவுக்கான புறக்காரணங்களையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் முக்கியமானவையாக சிங்கள அரசின் இனவாதத்திற்கு இந்திய சீன ஏகாதிபத்தியங்களின் உதவி மேற்கத்திய நாடுகளின் ஆதரவு. ஐ.நா.சபையின் பொறுப்பற்ற தன்மை ஆகியவையாகும். அதிலும் குறிப்பாக விடுதலைப் போராட்டம் இன்று வந்தடைந்திருக்கும் தேக்கத்திற்கு மேற்கத்திய நாடுகள் பின்னணியில் இருந்து பெருமளவு இலங்கை அரசுக்கு உதவியிருக்கின்றன.
நார்வே அரசை நடுநிலையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே பெருமளவிலான நாடுகள் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என்று கூறித் தடைவிதித்து. புலிகளின் பலத்தைப் பெருமளவு குறைத்தன. ஐ.நா.சபையோ இலட்சக்கணக்காகன மக்கள் மீது கிளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள் பொழிந்து தாக்கப்பட்டபோது அகதிகளாய் தமது வாழ்விடங்களிலிருந்து பெயர்க்கப்பட்;ட போது அங்கங்கள் சிதறி ஊனமடைந்து துடித்தபோது பசியில் சிறுகச் சிறுகச் செத்து மடிந்தபோது வெறுமென அறிக்கைகள் விடுவதைத் தவிர வேறு எதையும் செய்யாமல் ‘போர் முடிந்தது.’ என்று இலங்கை அரசாங்கம் அறிவித்தபோது மட்டும் பொது வெளிக்கு வருகிறது.
தொடர்ச்சியான 30 வருடப் போரின் இறுதியில் இலட்சக்கணக்கான மக்களின் படுகொலைக்குப் பின்னர் பல்லாயிரம் போராளிகளின் உயிரிழப்புக்குப் பின்னர் இலட்சக்கணக்கானோர் தங்கள் சொந்த நாட்டிற்குள்ளும் வெளிநாடுகளிலும் அகதிகளாக விரட்டியடிக்கப்பட்ட பிறகு போரின் கொடுமைகளைக் கண்ணால் பார்த்து மனம் பேதலித்து சில இலட்சக்கணக்கானவர்கள் எஞ்சியிருக்கும் ஒரு மண்ணில் அவர்களுக்கான நியாயம் எப்படி யாரால் வழங்கப்படப் போகிறது?
“எமது தேச விடுதலை என்பது எதிரியால்
வழங்கப்படும் சலுகையல்ல. அது ரத்தம்
சிந்தி உயிர் விலை கொடுத்து போராடிப்
பெறவேண்டிய புனித உரிமை.
என்ற நமது தேசியத்தலைவர் கூற்றுக்கமைய எண்ணற்ற உயிர் விலையினை கொடுத்தே உலகின் மனசாட்சியை சற்றேனும் அசைத்துப்பார்க்கும் நிலை இன்று எழுந்துள்ளது.
உலகம் முழுவதும் பரவலாக வாழும் தமிழர்கள் இன்று வீதிக்கு வந்து தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள.; இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனையாக அறியப்பட்டு வந்த தமிழர்களின் பிரச்சனை இன்று சர்வதேசம் முழுவதும் பேசப்படும் பெருளாக மாறி இருக்கிறது. போராட்டங்கள் வேறு வடிவத்திற்கு மாறி இருக்கிறது. ஈழத்தமிழர் பிரச்சனையில் பின்னடைவிலும் இது நமக்கு சாதகமான விசயமாகும். வன்னிக்காட்டில் நடந்த யுத்தம் இன்று உலகின் வீதிகளில் எதிரொலிக்கிறது.
“போராட்ட வடிவங்கள் மாறலாம்;
போராட்ட இலட்சியங்கள் மாறுவதில்லை.
என்ற நமது தேசியத்தலைவர் கூற்றுக்கமையவும்.
“யுத்தம் என்பது இரத்தம் சிந்துகிற அரசியல்;
அரசியல் என்பது இரத்தம் சிந்தாத யுத்தம்.
என்ற புரட்சியாளர் மாவோ சொன்னதைப் போலவும் நாம் இரத்தம் சிந்தாத அரசியல் யுத்தத்திற்க்கு தயாராக வேண்டிய தருணம் வந்துவிட்டது.
ஒன்றரை கோடி சிங்களனிடம் 12 கோடி தமிழ்த் தேசிய இனம் அடிபட்டு மிதிபட்டு வீடிழந்து நாடிழந்து ஏதிலிகளாக புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளை அண்டிப்பிழைக்கும் அவலநிலை உருவானதற்கு காரணம் சிங்களன் சிங்களனாக இருக்கிறான். தமிழன் தமிழனாக இல்லை. சாதிகளாக மதங்களாக பிரதேசங்களால் பிளவுபட்டுக் கிடக்கிறான்.
இந்த நிலையிலிருந்து விடுதலையடையாமல் இனத்தின் விடுதலை சாத்தியமில்லை. நாம் தமிழர் என்ற உணர்வை பெற்று பேரினமாக ஒன்றிணையாத வரை நம் விடுதலையை வென்றெடுக்க வாய்ப்பில்லை.
“தமிழர் ஒன்றானால் வாழ்வு பொன்னாகும். இல்லையேல் மண்ணாகும்.
என்பதனை இந்த நிலையிலாவது புரிந்து கொள்ள வேண்டும். நீ பெரியவன் நான் பெரியவன் என்ற வேறுபாட்டை களைந்து இனம் பெரிதுஇ இனத்தின் மானம் பெரிது என்ற எண்ணம் வளர வேண்டும்.
இன்றைக்கு இலங்கை ஒரு இனப்படுகொலை செய்த நாடு - போர்க் குற்றம் புரிந்த நாடு என்ற உண்மையை பல்வேறு நாடுகள் புரிந்து கொண்டிருக்கிறது. அதன் விளைவால் ஐ.நா.அவை இலங்கை போர்க்குற்றம் குறித்த ஒரு விசாரணை குழுவை நியமித்திருக்கிறது. நாம் நம்மை இந்தப் பணியில் ஈடுபடுத்திக் கொண்டு அனைத்து ஆதாரங்களையும் திரட்டி ராசபட்சேவுக்கு தண்டணை வாங்கித்தர வேண்டும் என்ற உறுதி ஏற்கவேண்டும். இதன் மூலம் தமிழீழ விடுதலைக்கான சர்வதேச ஆதரவு சக்திகளை திரட்ட வேண்டும். எம் தமிழின மக்களைக் கொன்றொழித்தவர்களுக்கு இந்தியாவில் துணை நின்ற சக்திகளை விரைவில் வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் வீழ்த்த அணிவகுப்போம் என்ற சபதம் ஏற்க வேண்டும்.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்க போராடவேண்டும். புலிகள் மீதான தடை என்பது தமிழ்த் தேசிய இனத்தின் மீது சுமத்தப்பட்ட ஒரு அவமானமாகும். இந்த தடையால் வாழ வழியின்றி புலம்பெயர்ந்து வருகிற எமது மக்களை ஏதிலிகளாக ஏற்க மறுக்கிற ஒரு நிலை நீடிக்கிறது. எனவே தடையை நீக்கும் வரை தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
உன்னதமான இலட்சியத்திற்காக உயிர்த் தியாகம் செய்த நம் மாவீரர்களை நினைவு கூறும் இன்றைய நாளில் நாம் ஏற்றுகிற ஈகச்சுடர் மீது சத்தியம் செய்து உறுதி ஏற்க வேண்டும். இதுவே அளப்பரிய அர்ப்பணிப்பு செய்த அந்த தியாக சீலர்களுக்கு நாம் செலுத்துகிற உண்மையான வீரவணக்கமாக அமையும்.
நமது தேசியத் தலைவர் கூறியது போல
“சத்தியத்திற்காக சாகத் துணிந்து விட்டால்
சாதாரணமானவனும் சரித்திரம் படைக்க முடியும்.
அவ்வாறு சாகத்துணிந்து சரித்திரமானவர்கள் நம் மாவீரர்கள்.
எங்கள் மாவீரர்களே!
உங்கள் இரத்தத்தால் நமது தமிழினத்தின் விடுதலை
வரலாறு மகத்துவம் பெறுகிறது.
உங்கள் இலட்சிய நெருப்பில் தமிழினப் போராட்டம்
புனிதம் பெறுகிறது.
அளப்பரிய உங்கள் தியாகத்தால் தமிழ்த்தேசியம்
உருவாக்கம் பெறுகிறது
உங்கள் நினைவுகளை போற்றுவதால் எங்கள்
உறுதி மேலும் மேலும் உறுதியாகிறது.
தாயகக் கனவுடன்
சாவினைத் தழுவிய
சந்தனப் பேழைகளே!
எம் விடுதலைக்கான
வீர விதைகளாக
விழுந்த மாவீரர்களே!
எந்த இலட்சியத்தை எம்மிடம் கையளித்து சென்றீர்களோ அதனை நிறைவேற்றும் வரை உறுதியாக நின்று இறுதிவரை போராடுவோம் என்ற உறுதியோடு எங்களின் வீர வணக்கத்தை செலுத்துகிறோம் .
வீரவணக்கம்! வீரவணக்கம்!!
எங்கள் மாவீரர்களே வீரவணக்கம்!
நீங்கள் சிந்திய குருதி
ஈழம் மீட்பது உறுதி!
இவ்வாறு சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வல்வெட்டித்துறையில் சிங்களப்படையினர் அராஜகம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறை முழுக்க பெருமளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது யாழ். செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் 56வது பிறந்த தினமான நேற்று அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு யாரும் கொண்டாட்டங்களில் ஈடுபடாமல் தடுக்கும் நோக்கிலேயே வல்வெட்டித்துறை முழுக்க இராணுவத்தினர் குவிக்கப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் வல்வெட்டித்துறை வழக்கத்துக்கு மாறான இராணுவத்தின் தொடர் ரோந்து நடவடிக்கைகளால் ஒருவித அச்ச நிலைக்குள்ளாக்கப்பட்டிருந்தது. வீதிச் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டிருந்தன.
பொதுமக்களின் நடமாட்டம் பெருமளவுக்குத் தடைசெய்யப்பட்டதைப் போன்று மக்கள் வீடுகளுக்குள் முடக்கப்பட்டிருந்தனர். அத்துடன் வல்வெட்டித்துறைப் பகுதியில் அமைந்திருக்கும் கோயில்களும் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

26 நவம்பர் 2010

யாழ்,தினக்குரல் அலுவலகம் ஆயுததாரிகளால் சுற்றிவளைப்பு!

யாழ். தினக்குரல் அலுவலகம் ஆயுததாரிகள் கொண்ட குழு ஒன்றால் நள்ளிரவு முதல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் வான் ஒன்றில் கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்டு இருக்கின்றனர்.
இவர்கள் கத்திகள், பொல்லுகள் உட்பட ஆயுதங்கள் பலவற்றையும் உடைமையில் வைத்திருக்கின்றனர். அலுவலகம் அமைந்துள்ள வீதியை சுற்றி சூழ்ந்து நிற்கின்றனர்.
யாழ். தினக்குரல் அலுவலகத்தில் இரவு நேர வேலையில் உள்ள ஊழியர்கள் மரண பீதியில் உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாங்கள் அழிந்துபோய்விட வில்லை! தக்க நேரத்திற்காக காத்திருக்கின்றோம்!போராளி.

உலகத் தமிழினத்தின் தலைநிமிர்விற்கு இன்று அகவை 56. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களது 56வது பிறந்த நாள் அன்று களத்தில் இருந்து இனிப்பான நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டு மே௧9ம் திகதிக்கு பின்னர் எல்லாமே முடிந்துவிட்டதாக எதிரிகள் கதையளக்க அதை நம்பி துரோகிகள் கூக்குரல் இட்டு ஆரவாரம் செய்ய ஒவ்வொரு நிமிடங்களும் உலகத் தமிழர்களிற்கு ஒவ்வொரு யுகங்களாக கடந்து வருகையில் அவ்வப்போது நம்பிக்கையான தகவல்கள் பலவழிகளில் கிடைத்த வண்ணமுள்ளது. அந்தவகையில் வன்னி களமுனையில் இருந்து நம்பிக்கையான தகவல் கிடைத்துள்ளது. அதனை இந்த தலைவனது பிறந்தநாளில் உலகத்தமிழர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வடைகிறோம்.
மாங்குளம் ஒட்டிசுட்டான் வீதியில் உழவுஇயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் போராளி ஒருவரை இடைமறித்த களத்தில் உயிர்ப்புடன் இருக்கும் போராளிகள் குழு ஒன்று இந்த நம்பிக்கையான தகவலை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நாங்கள் அழிந்து போய்விடவில்லை. உயிருடன் பத்திரமாகத்தான் இருக்கின்றோம். உலக அரங்கில் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்துகொண்டுதான் உள்ளோம். அடுத்கட்ட பாய்சலுக்கு வாய்ப்பான சூழலில் தலைவரிடம் இருந்து வரும் கட்டளைக்காக காத்திருக்கின்றோம். தயவுசெய்து புலம்பெயர்ந்து இருக்கும் எமது உறவுகளிடம் சொல்லுங்கள்...
எதிரியாலும் துரோகிகளாலும் வெளியிடப்படும் செய்திகளையும் தகவல்களையும் நம்பவேண்டாம். நாங்கள் பத்திரமாக உள்ளோம் என்றும் அண்ணை(தலைவர்)வெளியில் வந்து தமிழீழத்தை மீட்பது விரைவில் நடக்கத்தான் போகின்றது. அதற்கு ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக புலம்பெயர்வாழ் உறவுகள் களமாடவேண்டியது அவசியமாகும். என்ற தகவலை சொல்லிவிட்டு களநிலவரம் தொடர்பாக சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டுவிட்டு கடந்து சென்றுள்ளனர் இன்னும் உயிர்ப்புடன் களப்பணியில் தம்மை அர்பணித்துக் கொண்டிருக்கும் தேசத்தின் புயல்கள்.
அன்புத் தமிழ் உறவுகளே! தமிழீழம் என்பது குறிப்பிட்ட சிலரது விருப்பமோ ஆசையோ எதிர்பார்ப்போ அல்ல. ஒட்டுமொத்த உலகத் தமிழர்களுக்கும் வேண்டிய அவசியமான நிலையாகும். ஆகவே குறிப்பிட்ட சிலரோ அல்லது குறிப்பிட்ட சில குழுவினரோ ஒட்டுமொத்த சுமையையும் தாங்கிக் கொண்டு தமிழீழ விடுதலைக்கான பணியை தொடர்ந்து செய்ய முடியாது. நாம் எல்லோரும் ஒன்றுபட்டுத்தான் அன்நிய ஆக்கிரமிப்பிற்குள்ளாகியிருக்கும் எமது தாபயகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
தலைவரது இருப்புத் தொடர்பாகவும் களமுணையில் மீண்டும் ஒரு போராட்டம் சாத்தியமா...? என்ற விவாதங்களில் இனியும் காலத்தை விரையமாக்காது விரைந்து பணியாற்றுவோம். அனைத்துலக மன்றங்களில் எமது கோரிக்கையை வலுவாக முன்வைத்து தலைவரது வரவிற்கும் அத்தோடு இணைந்த தமிழீழ மலர்விற்கும் விரைந்து வழியேற்படுத்துவோம்.
தமிழீழ விடுதலையை தமது உயிர் மூச்சாக வரித்துக் கொண்டு கடலிலும் தரையிலும் வானிலும் கரைந்து போய் காவியமான எமது மானமறவர்களான மாவீரர்களை போற்றிபுகழ்ந்து நிணைவெழுச்சி கொள்ளும் இந்த புணிதநாட்களில் அந்த மாவீரர்களது புணித ஆத்மாவை சாட்சியாக்கி சொல்கின்றோம் தலைவர் உள்ளிட்ட தளபதிகள் நலமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் எமது பாசத்திற்குரிய பல்லாயிரக்கணக்கான உறவுகளை கொன்று குவித்ததோடு விழுப்புண்னடைந்து களத்தில் இருந்த பல்லாயிரம் போராளிகளையும் அனைத்துலக போர்விதிகளை மீறி கொன்று குவித்து கொலைவெறியாட்டம் நிகழ்த்திய சிங்களத்திற்கும் அதற்கு துணைநின்ற நாடுகளிற்கும் தமது பிராந்திய நலன்களை நிலைநிறுத்திக் கொள்வதற்காக நிகழ்ந்தேறிய கொடுமைகளை வெறும் பார்வையாளர்களாக இருந்து பார்தத உலக வல்லரசுகளிற்கும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி சுதந்திர தமிழீழத்தை தலைவர் அமைப்பது சர்வ நிட்சயம்.
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்...? உலகத் தமிழர்களே சிந்தியுங்கள். துணிவுடன் முடிவெடுங்கள். இறுதி இலக்கான தமிழீழத்தை வென்றெடுக்கும்வரை ஓயமாட்டோம் என்று தமிழீழக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தணப்பேழைகளாகிய முப்பத்தேழாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களது கல்லறைமீது வீர சபதமெடுத்து களமாட இன்றே புறப்படுங்கள்.
நாளை நமதே. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
நன்றி:ஈழதேசம்.கொம்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானமூலம் புறப்பட்டுச் சென்றவரை காணவில்லை!

யாழ் அச்சுவேலி தெற்கைச் சேர்ந்த செல்வரத்தினம் ருதீபன் என்பவரை கடந்த ஒருவாரமாக காணவில்லை என அவரின் சகோதரன் தெரிவித்துள்ளார்.
இவரைப் பற்றி மேலும் தெரியவருவதாவது; 28 வயதுடைய மேற்படி நபர், கடந்த 19.11.2010அன்று காலை 8:45 மணிக்கு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு விமானமூலமாக புறப்பட்டுச் சென்றதாகவும், ஆனால் இதுவரையும் இவர் நாட்டிற்கு சென்றதற்கான அறிகுறிகள் எதுவும் கிடைக்கப் பெறவில்லை என அவரது சகோதரன் தெரிவித்திருந்தார்.
இந்திய விமான நிலையத்தில் இருந்து உறவினர்களோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிவிட்டு, விமானத்தில் ஏறிய இவர், இலங்கை விமான நிலையத்தில் இருந்து வெளியில் சென்றாரா? இல்லை இலங்கை விமான நிலையத்தில் வைத்து காணாமல் போனாரா என இன்றுவரை மேற்படி நபரைச் சார்ந்தோர்களால் உறுதிப்படுத்தமுடியவில்லை.
இவரோடு அன்றைய நாளில் பயணம் செய்தோர் இவரைப் பார்த்திருந்தால் அல்லது இவருக்கு என்ன நடந்தது என தெரிந்தால் கீழுள்ள மின்னஞ்சல் வழியாக தெரியப்படுத்துமாறு அவருடைய மூத்தசகோதரன் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றார்.
phoneparis@yahoo.fr

25 நவம்பர் 2010

தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நல திட்ட உதவி!

உலக தமிழர்களின் ஒப்பற்ற நமது தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் 56 அகவையை போற்றும் வகையில் தென் சென்னை மாவட்டம் சைதை பகுதியில் வி ஜி பி சாலையில் உள்ள மனவளர்ச்சி குன்றியோருக்கான அன்னை சிறப்பு பள்ளியில் 26-11-2010 அன்று நல திட்ட உதவிகள் வழங்கும் விழா சி தங்கராசு (தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர்) தலைமையில் நடைபெறுகிறது.
நாம் தமிழர் செயல் வீரர்கள் பெரும்பான்மையாக கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

யாழில் மாவீரர் தின துண்டுப்பிரசுரங்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளால் கொண்டாடப்படும் மாவீரர் தின நிகழ்வை கொண்டாடுவதற்கு அனைத்து மக்களையும் தயாராக இருக்குமாறு கோரும் துண்டுப்பிரசுரங்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று காலை இனந்தெரியாத சில நபர்கள் பல்கலைக்கழக வளாத்தில் இத்துண்டுப்பிரசுரங்களை விநியோகித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். எனினும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தவர்கள் ஒரு சில நிமிடங்களில் காணால் போய் விட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் தலைவர் வேலப்பிள்ளை பிரபாகரன் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுடரை ஏற்றும் வகையிலான புகைப்படத்துடனேயே மாவீரர் தினத்தை அனுஸ்டிப்பதற்கு அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்து இத் துண்டுப்பிரசுரங்கள் விநியோகிகப்பட்டுள்ளன.
இதனிடையே பல்கலைக்கழகத்தின் சில பகுதிகளில் இந்தத் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் பல்கலைக்கழக நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தவோ அல்லது இது குறித்த தகவல்களை தெரிவிக்கவோ மறுத்து விட்டது.
விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வுகள் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறவுள்ளது. விடுதலைப் புலிகளால் மாவீரர் தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வந்த போதிலும் கடந்த சில ஆண்டுகளாக ராணுவ நெருக்குவாரங்கள் காரணமாக குடாநாடு உள்ளிட்ட பகுதிகளில் அவை அமைதியாக அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றமை தெரிந்ததே.

24 நவம்பர் 2010

சிறுமிகளிடம் பாலியல் சில்மிஷம்!தொண்டராசிரியர் கைது.

தரம் ஐந்தில் கல்விக்கற்கின்ற மாணவிகள் ஏழு பேரிடம் பாலியல் சில்மிசம் செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் தொண்டராசிரியர் ஒருவரை நோட்டன் பொலஸார் கைது செய்துள்ளனர்.
டிக்கோயாவுக்கும் நோட்டனுக்கும் இடைப்பட்ட பிரதேசத்திலுள்ள தமிழ் பாடசாலை ஒன்றில் தொண்டராசிரியராக சேவைபுரிந்த 25 வயதுடைய இளம் தொண்டராசிரியரொருவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் நேற்று 22 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட நோட்டன் பொலிஸ் பிரிவைச்சேர்ந்த பாடசாலை ஒன்றின் தொண்டராசிரியர் குறித்து பெற்றோர் ஒருவர் நோட்டன் பொலிஸில் பதியப்பட்ட முறைப்பாட்டைத்தொடர்ந்தே இந்தத் தொண்டராசிரியர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நோட்டன் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளைத்தொடர்ந்து இந்தத்தொண்டராசிரியரால் பாலியல் சில்மிஸத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்ற ஒன்பது தொடக்கம் பத்து வயது வரை வயதையுடைய ஏழு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த மருத்துவ பரிசோதனைக்குப்பிறகே குறிப்பிட்ட தொண்டராசிரியருக்கெதிராக அட்டன் நீதிமன்றத்தின் மூலமாக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென நோட்டன் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் பெண் தற்கொலை செய்த விவகாரம் மீண்டும் சூடு!

தமிழ்நாடு மாநிலத்தில் கரூர் மாவட்டத்தில் உள்ள ராயனூர் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த இலங்கைத் தமிழ் யுவதி ஒருவர் கடந்த மார்ச் மாதம் பொலிஸாரால் கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப் பின் தீக்குளித்து தற்கொலை செய்த விவகாரம் தற்போது மீண்டும் சூடு பெற்றுள்ளது.
பத்மாவதி (வயது-28) என்பவரே பொலிஸாரால் கற்பழிக்கப்பட்ட பின் தற்கொலை செய்தவர் ஆவார். இவரது கணவன் குமார்.
கரூரில் இருவருடங்களுக்கு முன் இரு குழந்தைகள் கழுத்து அறுக்கப்பட்டு கொல்லப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தில் குமாரையும் பசுபதி பாளையம் பொலிஸ் நிலைய பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இப்பொலிஸார் கடந்த மார்ச் 07 ஆம் திகதி பத்மாவதியை விசாரணைக்கு அழைத்துச் சென்று கற்பழித்து விட்டனர். முகாமுக்கு இரவு 7.00 மணியளவில் திரும்பி வந்த பத்மாவதி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீப்பற்ற வைத்துக் கொண்டார்.
ஏனைய அகதிகள் இவரை மீட்டு கரூர் அரச வைத்தியசாலையில் சேர்த்தனர். அங்கு 21 நாட்கள் தீவிர சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட பத்மாவதி பலன் எதுவும் இல்லாமல் அதே மாதம் 28 ஆம் திகதி இறந்து விட்டார்.
இந்நிலையில் இவ்விவகாரம் சுமார் 07 மாதங்களுக்கு பின் மீண்டும் சூடு பிடித்துள்ளது. பத்மாவதியின் தாய் நீதி கோரி சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
மகளின் மரணம் தொடர்பாக மத்திய புலனாய்வு பிரிவு பொலிஸாரின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நட்டஈடாக இந்திய ரூபாய் ஐந்து இலட்சம் பெற்றுத் தர வேண்டும் என்றும் இவர் நீதிமன்றில் கோரி உள்ளார்.
இம்மரணம் தொடர்பாக இது வரை முறையான விசாரணை எதுவும் நடத்தப்ப்படவே இல்லை என்றும் மகளின் மரணத்துக்கு காரணமான பொலிஸார் தொடர்ந்தும் பொலிஸ் சேவையில் இருக்கின்றார்கள் என்றும் இவர் மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.
இவ்வழக்கு நீதிபதி கே.சுகுணா முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்டது. இம்மனுவின் பிரதிவாதிகள் அடுத்த தவணைக்கு மன்றில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

23 நவம்பர் 2010

திரு. பிராகாஷ் சாமியிடம் எச்சரிக்கையாக இருங்கள்!

நியூயோர்க்கில் தன்னை ஊடகவியலாளர் மற்றும் செய்தியாளர் என்றும் கூறிக்கொள்ளும் திரு. பிரகாஷ் சாமி என்பவர் தொடர்ச்சியாக தமிழர்களுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக வட அமெரிக்க தமிழ் சங்கப்பேரவையின் தலைவர் திரு.பழனி சுந்தரம் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள தலைவர்களுக்கும் அமெரிக்கத் தமிழ் உணர்வாளர்களுக்கும்,
வணக்கம், FETNA வில் நாம் பின்வரும் ஒரு ஒழுங்கு நடவடிக்கை குறித்த முக்கிய அறிக்கையை சங்கத்தின் உறுப்பினர்களின் பார்வைக்கு கொண்டுவருகிறோம். நியூ யார்க் தமிழ் சங்கத்தின் பொது செயலாளரான திரு பிரகாஷ் சாமி, FETNA வுக்கு எதிரான நடவடிக்கைகளில் சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்திருப்பது பல சந்தர்பங்களில் நமது NYTS குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது . மேலும் சமீபத்தில் திரு சாமி அவர்கள் இதன் உச்சகட்டமாக FETNA விற்கு எதிரான மினஞ்சல் ஒன்றினை இந்திய அரசாங்க உயர் அதிகாரிக்கு அனுப்பியுள்ளார். உங்களில் பலருக்கு திரு சாமி இவ்வாறு FETNA விற்கு எதிராக செய்யப்பட்டு வந்திருப்பது ஏற்கனவே தெரிந்திருக்கும். இன்னும் நமக்கு தெரியாமல் திரு சாமி இவ்வாறு FETN விற்கு எதிராக மேலும் பலவாறாக செய்யல்பட்டிருக்கலாம் என்பதே நம் உறுதியான நம்பிக்கை.
இதன் காரணமாக திரு பிரகாஷ் சாமி அவர்களை FETNA வின் உறுப்பினர் பதவிலிருந்து நீக்குவதாக நம் குழுவின் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிவித்தல் வரும்வரை அவர் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார். இந்த ஒழுங்கு நடவடிக்கையானது FETNA குழுவில் உறுப்பினராக உள்ள பல்வேறு வட அமெரிக்க சங்கங்கள் நீண்ட கலந்துரையாடலுக்கு பின்னர் பல்வேறு வாய்ப்புக்களையும் கவனத்தில் கொண்டு ஒருமனதாக எடுக்கப்பட்ட நடவடிக்கை. இது குறித்த உங்களின் கேள்விகளுக்கு என்னை அல்லது FETNA வின் அதிபரை தொடர்பு கொள்ளலாம்.
FETNA விற்கு உங்களின் ஆதரவிற்கு மிகுந்த நன்றிகள்
உண்மையுள்ள
Dr . பழனி சுந்தரம்
செயலாளர் FETNA [2008-10]

22 நவம்பர் 2010

பிள்ளையான்,டக்ளஸ் ஆகியோர் கூட்டமைப்பால் புறக்கணிப்பு!

தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளுடன் முதலில் தனித் தனியாக பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பில் நேற்று கூடினார்கள்.
தமிழ் கட்சிகளின் அரங்கத்தில் இணையலாமா? என்பது குறித்து அங்கு ஆராயப்பட்டது. அரங்கத்தில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளை தனித் தனியாக சந்தித்துப் பேசிய பின்னர் இணையலாமா? என்கிற முடிவுக்கு வரலாம் என அங்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக புளொட் , ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணி, ஈழ ஏதிலிகள் மறுவாழ்வுக் கழகம், தமிழ் தேசிய விடுதலை முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் தனித் தனியாக கூட்டமைப்பு பேச்சு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கட்சிகளின் தலைவர்களுக்கு சந்திப்புக்கான அழைப்பிதழ்கள் தனித்தனியாக அனுப்பி வைக்கப்பட உள்ளன.
ஆனால் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஆகியவற்றை கூட்டமைப்பு கிஞ்சித்தும் கணக்கில் எடுத்திருக்கவில்லை என்றும் இக்கட்சிகளை சந்தித்துப் பேசுவது குறித்து கூட்டத்தில் எதுவும் தெரிவிக்கப்படவோ, தீர்மானிக்கப்படவோ இல்லை என்றும் தெரிய வருகின்றது.

போர்க்குற்ற அறிக்கையை வெளியிடும்படி ஐ.நாவை வற்புறுத்தவேண்டும்!

இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் திட்ட அறிக்கையொன்றைத் தயாரிக்கவேண்டுமென்று உலகமடங்கிலுமுள்ள தமிழர்கள் வலியுறுத்தவேண்டுமென இலியோனிஸ் சட்டக்கல்லூரியின் பேராசிரியர் பொய்ல் கூறியுள்ளார்.
சர்வதேச சட்டம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றவரான பேராசிரியர் பொய்ல், கொங்கோ ஜனநாயகக் குடியரசில் நிகழ்ந்'த மிக மோசமான மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் என்பன குறித்து ஐக்கிய நாடுகள் திட்ட அறிக்கை ஒன்றைத் தயாரித்திருப்பது சம்பந்தமாகவே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பான கட்டுரை ஒன்றைச் சர்வதேச சட்டத்திற்கான அமைப்பு வெளியிட்டுள்ளது.
கொங்கோவில் நடந்த மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் போன்ற போர்க்குற்றங்களே இலங்கை அரசாங்கத்தினாலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 500 பக்கங்களைக் கொண்ட கொங்கோ சம்பந்தப்பட்ட அறிக்கையில் கொலைகள், வல்லுறவுகள், நாசம் விளைவித்தமை மற்றும் பயங்கரமான தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதுபோன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் சர்வதேச சட்டம் தொடர்பான அமெரிக்க அமைப்பின் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் திட்ட அறிக்கை தயாரிக்கும் செயற்பாடுகள் 2008 யூலையில் ஆரம்பிக்கப்பட்டன. சர்வதேச குற்றங்கள் புலனாய்வு மேற்கொள்வதிலும் வழக்கு தொடர்வதிலும் நிபுணத்துவமிக்க கனடிய வழக்கறிஞரான லக்கோட் (Luccote) என்பரின் தலைமைத்துவத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் 1280 சாட்சிகளிடம் நோ்காணல் நடத்தப்பட்டது.2008 அக்டோபர் மாதத்திற்கும் 2009 மே மாதத்திற்கும் இடையிலான காலப்பகுதியில் 1500 ஆவணங்கள் கொங்கோ ஜனநாயக குடியரசு முழுவதும் திரட்டப்பட்டன என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்ட அறிக்கை 2009 யூன் மாதம் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. 2010 ஆகஸ்டில் அது இறுதி முடிவு செய்யப்பட்டது.
இந்த அறிக்கை தொடர்பான விபரங்கள் ஊடகங்களுக்கு கசியத் தொடங்கிய பின்னர் இரு மாதங்கள் கழிந்த நிலையில் 2010 அக்டோபர் அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.
இலங்கையில் 40000 தமிழ் பொது மக்கள் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவதும் இலங்கை பாதுகாப்பு படைகளின் மிகக் கொடூரமான நடவடிக்கைகளும் கொங்கோ தொடர்பில் ஐக்கிய நாடுகளினால் வெளிக்கொணரப்பட்ட தகவல்களை ஒத்ததாக அல்லது அதை விட மோசமானதாக அமைந்திருப்பதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட செயற்பாட்டுக் குழுவான இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பின் (TAG) பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யுத்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கெதிரான குற்றங்கள், சாத்தியமான இனப்படுகொலைகள் என்பன கொங்கோ நாட்டில் இடம்பெற்றுள்ளன என்பதை சுட்டிக்காடடியுள்ள அவர், இலங்கையிலும் அதைப்போன்ற மிக மோசமான குற்றச்செயல்கள் இடமபெற்றுள்ளதாகவும் எனவே சுயாதீனத்தன்மையுடன் கூடிய சர்வதேச விசாரணைக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றப்பத்திரத்தை சட்டரீதியாகத் தயாரிக்க வழிவகை செய்யப்பட வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
சர்வதேச சட்டத்திற்கான அமைப்பு (ASIL) வெளியிட்டுள்ள கட்டுரையில்,
நேற்றைய குற்றங்களுக்கான தண்டனை குறித்த பயமின்மை எனும் நடைமுறையானது இன்றைய குற்றங்களை அடிக்கடி மேற்கொள்ள வழிவகுக்கிறது. ஏனெனில் அதற்குப் பொறுப்பான குற்றவாளிகள் அதனை அடிக்கடி செய்வார்கள். அத்தகைய சூழ்நிலையில் பொறுப்புக் கூற வேண்டிய குற்றவாளிகளை வைத்திருப்பது வன்முறைகளைத் தடுக்கும் நடைமுறையை இல்லாமற் செய்துவிடும் என்று இறுதியாகத் தெரிவித்துள்ளது.

21 நவம்பர் 2010

புலோலியில் காணாமல் போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

யாழ். வடமராட்சியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன் மர்மமான முறையில் காணாமல் போய் இருந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று கோவில் ஒன்றுக்கு அருகில் உள்ள பற்றை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒரு பிள்ளையின் தந்தையான புலோலி வட மேற்கு பிரதேசத்தைச் சேர்ந்த வடிவேலு செல்வரட்ணம் (வயது-48) என்பவரே மந்திகை கண்ணகை அம்மன் கோவிலுக்கு அருகில் உள்ள பற்றை ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டு இருக்கின்றார்.
வீட்டில் இருந்து வெளியில் சென்றிருந்த இவர் திரும்பி வரவே இல்லை. குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் இவரை தேடி வந்திருக்கின்றனர். ஆலய சுற்றுசூழலில் துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அடுத்து சடலம் கண்டு பிடிக்கப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் இப்பிரதேசத்தில் மிகுந்த பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

20 நவம்பர் 2010

சுவிஸ் ஈழத்தமிழர் அவை மனித நேய அமைப்புடன் ஒப்பந்தம்.

ஐ. நா. சபையினால் நியமிக்கப்பட்ட சிறீலங்கா அரசு மீதான போர்குற்ற விசாரணைக்குழு எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னதாக சாட்சியங்களை பதிவு செய்து சமர்ப்பிக்கும்படி கோரியிருந்த நிலையில், தமிழர்கள் வாழும் பல நாடுகளில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
இவ்வேளையில் சுவிசில் உள்ள ஒரு மனிதநேய நிறுவனமான GfbV எனப்படும் Gesellschaft f�r bedrohte V�lker அதாவது அழிக்கப்படும் இனங்களை பாதுகாக்கும் நிறுவனம் தமிழர்களின் சாட்சியங்களை பதிவு செய்து உதவ முன்வந்துள்ளது.
பல நாடுகளில் தமிழ் அமைப்புக்களாலும் தனி நபர்களாலும் சாட்சிப்பதிவு செய்யப்பட்டு வரும் வேளையில், சாட்சியங்கள் பக்கச்சார்பில்லாமல் சர்வதேச சட்ட திட்டங்களுக்கு அமைய பதிவு செய்யப்பட வேண்டுமென்பதை கருத்தில் கொண்டு GfbV எனப்படும் அழிக்கப்படும் இனங்களை பாதுகாக்கும் மனிதநேய நிறுவனத்துடன் சுவிஸ் ஈழத்தமிழரவை ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது.
பேர்ண் நகரில் எதிர்வரும் 28.11.2010 சனிக்கிழமை காலை 08:00 மணிமுதல் 12:00 வரை சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளது. முன்கூட்டியே பெயர்களை பதிவு செய்தவர்கள் மாத்திரமே சாட்சியமளிக்கலாம். இதில் தனி நபர்களோ, அல்லது அமைப்புக்களோ வந்து நேரடியாக தங்களது சாட்சியங்களை பதிவு செய்யலாம்.
இது சார்ந்து மேலதிக விபரங்களை தமிழில் பெற்றுக்கொள்ள 078 744 59 60 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுங்கள். ஏனைய மொழிகளான யேர்மன், பிரெஞ்சு, இத்தாலி மற்றும் ஆங்கில மொழிகளில் விபரங்களை பெற politik-2@gfbv.ch என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதுங்கள்.

படை வாகனம் மோதி முறிகண்டி சென்ற தம்பதி சாவு!

வெளிநாட்டில் இருந்து வந்த தமது பிள்ளைகளின் நேர்த்திக் கடனை தீர்ப்பதற்காக முறுகண்டிப் பிள்ளையார் கோவிலுக்கு செல்லும் போது படையினரின் வாகனத்ம் மோதி இருவர் பலியாகினர்.
நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காக நல்லூரில் இருந்து முறிகண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதியினரை மாங்குளத்தில் இருந்து வந்த படையினரின் வாகனம் முறிகண்டி இந்துபுரம் பகுதியில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே நல்லூர் தம்பதிகள் பலியாகினர்.
கிளிநொச்சி ஆஸ்பத்திரிக்கு கொண்டுவரப்பட்ட இவர்களின் சடலத்தை அங்கு நின்ற அவர்களின் உறவினர் ஒருவர் தற்செயலாக கண்டு அடையாளம் காட்டியதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவத்தில் படையினர் 8 பேர் காயமடைந்ததாகவும் தெரியவருகின்றது. நல்லூர் செட்டித்தெருவைச் சேர்ந்த பவுண்ராஜா செல்வராஜா (வயது 52), அவரது மனைவியான செல்வராசா நகுலேஸ்வரி (வயது 48) ஆகியோரே உயிரிழந்தவர்கள் ஆவர்.

19 நவம்பர் 2010

லண்டனிலிருந்து கொழும்பு சென்ற தமிழ் ஊடகவியலாளர் கைது!

லண்டனைச் சேர்ந்த ஊடகவியலாளரான கார்த்திகேசு திருலோகசுந்தர் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
37 வயதான திருலோகசுந்தர் கொழும்பில் சுகவீனமுற்றிருக்கும் தனது தாயாரைப் பார்ப்பதற்காக இலங்கை சென்றிருந்த போதே கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து புலனாய்வுப்பிரிவினர் அவரைக் கைது செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் எங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவரவில்லை என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தீபம் தொலைக்காட்சி, ஜிரிவி ஆகியவற்றில் பணியாற்றிய இவர் தற்போது ஐபிசி வானொலியில் பணியாற்றி வருகிறார். பிரிட்டிஸ் பாஸ்போர்ட்டிலேயே இவர் பயணமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

நதீகா சுபாஷினியின் உடல் இன்று மீட்கப்பட்டது!

சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன் மர்மமான முறையில் உயிர் இழந்த களனி பல்கலைக்கழக வெளிவாரிப் பிரிவு மாணவி நதீகா சுபாஷினி என்கிற இளம் யுவதியின் சடலம் மாத்தளை மாவட்டத்தின் அக்குறஸ்ஸ பகுதியில் உள்ள மலைப்பாங்கான இடம் ஒன்றில் இருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சமத் மதநாயக்க, சட்ட வைத்திய அதிகாரி எச்.டி.கே. விஜயவீர ஆகியோர் சடலம் புதைக்கப்பட்டிருந்த இடத்தைக் கயிற்றின் உதவியுடன் சென்றடைந்தனர்.
மேலதிக நீதிவானின் மேற்பார்வையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. நதீகா சுபாஷினியை கொன்றார் என்கிற குற்றச்சாட்டின் பேரில் காதலரான வசந்த அமரசிங்க என்கிற இளைஞன் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

18 நவம்பர் 2010

ஊர்காவற்றுறையில் மக்களை விரட்டி அடித்தது ஒட்டுக்குழு!

யாழ்ப்பாண மக்கள் தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன்சாட்சியம் வழங்குகின்றமையில் இருந்து ஆயுதக் குழு ஒன்றால் விரட்டியடிக்கப் பட்டு இருக்கின்றார்கள் என்று உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான கபே தெரிவித்துள்ளது.
யாழில் கடந்த 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை பல இடங்களிலும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெற்றன.
ஊர்காவல்துறையில் இடம்பெற்ற அமர்வுக்கு சாட்சியம் வழங்க வந்த மக்களே ஆயுதக் குழு ஒன்றால் விரட்டியடிக்கப்பட்டனர் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளை அவதானிக்கும் பணியில் யாழில் நேரடியாக ஈடுபட்டிருந்த அமைப்புக்களில் ஒன்றான கபே கூறி உள்ளது. கபேயின் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கி உள்ளார்.

மெளனம் கலைக்கிறார் திஸ்ஸநாயகம்!

அனைத்துலக சமூகம் கடைப்பிடித்துவரும் மென்போக்கு அரசியல் சிறீலங்கா அரசின் போக்குகளில் மாற்றத்தை கொண்டுவரப்போவதில்லை என சிறீலங்கா அரசின் தடுப்புக்காவலில் இருந்து அண்மையில் விடுதலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம் நேற்று (17) தெரிவித்துள்ளார்.
எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அவரின் நேர்காணலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எனது விடுதலை கூட அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை கூட நிறுத்தியிருந்தது.
சிறீலங்காவில் நிலமை மோசமடைந்துள்ளது. அங்கு ஊடகவியலாளர்களுக்கு பாதுகாப்புக்கள் இல்லை. எனவே தான் அவர்கள் கொல்லப்படுகின்றனர், காணாமல்போகின்றனர், தாக்கப்படுகின்றனர். அவசரகாலச்சட்டத்தை பயன்படுத்தியும் அரசு ஊடகவியலாளர்களை தடுத்து வைத்துள்ளது.
அச்சம் காரணமாக பல ஊடகவியலாளர்கள் சுய தணிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். எனவே எனது கருத்துப்படி சிறீலங்கா அரசின் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கப்பட வேண்டும்.
சிறீலங்காவுக்கு வழங்கப்படும் பொருளாதார உதவிகள், ஊடகத்துறையின் சுதந்திரத்துடன் தொடர்புள்ளதாக இருத்தல் வேண்டும். அதன் மூலமே சிறீலங்கா அரசின் மீது அழுத்தங்களை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

17 நவம்பர் 2010

வெள்ளையனை வெளியேற்று

அதிகாலை அலுவலகம் செல்லுமுன்
மேல் பகுதியில் உள்ள கறுப்பர் குடியிருப்பை
ஆராய்ந்த போது அதிர்ந்து போனேன்.
கறுப்பர் குடியிருப்பில் ஓரிரு வெள்ளையரின் நடமாட்டம்.
பொத்திக் கொண்டு வந்தது கோபம்.
வெள்ளையரை வேரறுத்து விட்டு நிம்மதியாய் அலுவலகம் சென்றேன். ஆனால்
அந்த வெற்றி அதிக நாளைக்கு நீடிக்க வில்லை.
மீண்டும் வெள்ளையர் கண்ணில் பட நானும்
போர் கோலம் பூண்டு வெள்ளையரை அகற்ற தொடங்கினேன்.
எவ்வளவு முயன்றும் வெள்ளையனின் ஆதிக்கத்தை
முற்றாக முறியடிக்க முடியவில்லை.
புற்று நோய் போல வெள்ளையர் எல்லா இடமும் பரவ,
காலம் காலமாக இருந்த கருப்பர்கள் கூட
காலத்தின் கோலத்தால் வெள்ளையனாக மாறுவதை நிறுத்த முடியவில்லை.
வெள்ளையனை தொடர்ந்து வேரருத்தால்
குடியிருப்பே காலியாகும் அபாயம் கூட இருந்தது.

எத்தைனையோ குடியிருப்புக்கள் இன்று
பட்டுபோய் பாலைவனமாக போய்விட்டது.
அதோடு ஒப்பிடும்போது வெள்ளையர் வரவு பரவாயில்லைதான். ஆனால்
கருப்பு இளைமையின் அடையாளம்.
வெள்ளை முதுமையின் ஆரம்பம்.
அதை ஜிரணிக்கவோ விட்டு கொடுக்கவோ மனமில்லை.
விடை தெரியாமல் நின்ற எனக்கு
விஞ்ஞானம் கை கொடுத்தது.
வெள்ளையனை தேடி பிடித்து
சாயம் பூசி கருப்பனாக்கும்
வித்தையை சொல்லி தந்தது.

இப்போதைக்கு நான் மீண்டும்
இளமையுடன்
- ஆக்கம் கணேஷ்

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் மக்களை சந்திக்கவுள்ளார்.

என்.எஸ்.எஸ்.பி கட்சியின் பொதுச் செயலர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன லண்டனில் பொதுமக்களைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக, பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.
தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு தொடர்பாக ஆரம்பம் முதல் நீதியான, தெளிவான, ஒரே மாதிரியான கருத்துக்களை வெளியிட்டுவரும் கலாநிதி விக்கிரமபாகு, தமிழ் மக்கள் மீதான படுகொலைகள், அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றார்.
சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவாக இருக்கட்டும், அல்லது முன்னயை அரசுத் தலைவர்களாக இருக்கட்டும், அவர்களுக்கு எதிராக கொழும்பில் இருந்தவாறு துணிந்து குரல் கொடுக்கும் சிங்கள கட்சியின் தலைவராக இவர் இருந்து வருகின்றார்.
ஏனைய அரசியல் தலைவர்களும், கட்சிகளும் மகிந்த அரசுக்கு அடிபணிந்துள்ள போதிலும், கொள்கையில் உறுதியாக இருந்து தமிழ் மக்களிற்காகவும், சிங்கள தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்துவரும் விக்கிரமபாகுவுடன் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள பிரித்தானிய தமிழர் பேரவை சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றது.
சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களின் நீதியான கருத்துக்களைக் கொண்டு செல்ல இதனை ஒரு சந்தர்ப்பமாக பிரித்தானியாவாழ் தமிழ் மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் கலந்து கொள்ளுமாறு அன்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வை நேரஞ்சல் செய்வதற்கும், ஊடகங்கள் தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதுடன், அவரது கருத்தைப் பெறும் தளமாக இந்த சந்திப்பை பயன்படுத்துமாறும் பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
எதிர்வரும் 25ஆம் நாள் வியாழக்கிழமை வட மேற்கு லண்டனிலுள்ள சவுத் ஹறோ பகுதியில் மாலை 7:00 மணி தொடக்கம் இரவு 10:00 மணிவரை இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
இடம் - Harrow Borough Football Club Hall, Earlsmead, Carlyon Avenue, South Harrow HA2 8SS
நேரம் - மாலை 7:00 மணி
அருகிலுள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையங்கள் - Central Line NORTHOLT , Piccadilly Line SOUTH HARROW
பேரூந்துகள் - சவுத் ஹரோ தொடரூந்து நிலையத்தில் இருந்து, அதே பக்கத்தில் இருந்து (சம்பல் சொப் முன்பாக) 140, 395, 398, 487 போன்ற நோத்ஹோல்ட் செல்லும் பேரூந்துகளில் ஏறி இரண்டாவது தரிப்பிடம்.
நோத்ஹோல்ட் தொடரூந்து நிலையத்தில் இருந்து, அதே பக்கத்தில் இருந்து 282 என்ற மவுன்ட் வேனன் மருத்துவமனைக்குச் செல்லும் பேரூந்தில் ஏறினால் இரண்டாவது தரிப்பிடம்.
மேலதிக விபரங்களுக்கு:
020 8808 0465
079 5850 7009

தம்பாட்டியில் புலிக்கொடி பறந்தது!

யாழ் மாவட்டம், ஊர்காவற்துறை பிரதேசத்தின் தம்பாட்டி கிராம மீன்பிடிச் சங்க அலுவலகத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு இருந்ததைத் தாம் கண்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ஊர்காவற்றுறைப் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்களால் புலிக் கொடி அகற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை, இந்தக்கொடி ஏற்றப்பட்ட விடயம் குறித்து தம்பாட்டி மீன்பிடிச் சங்கத் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் பொலிஸாரால் விசாரிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்று தெரிய வந்தது.

16 நவம்பர் 2010

வேலணை-அராலிச் சந்தியில் மினிபஸ் குடைசாய்ந்தது!

வேலணை அராலிச் சந்தியில் பயணிகள் மினிபஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்ததில் இருபது பயணிகள் காயமடைந்தனர்.இச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஊர்காவற்றுறை-யாழ்ப்பாணம்‘780’பயணிகள் சேவையில் ஈடுபட்ட மினிபஸ் வேலணை அராலிச் சந்தியில் லொறி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகி குடைசாய்ந்துள்ளது.
இதில் பயணம் செய்த பயணிகள் இருபது பேர்வரை காயமடைந்துள்ளனர்.இவ்வாறு காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உட்பட ஐவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனையை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 35), அவரது மனைவி கெளரி (வயது 33), மகன் (வயது 03) ஆகிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருடன் நாரந்தனை மத்தி ஜெ.வசந்தகுமார் (வயது 40) மற்றும் மினிபஸ் நடத்துநர் இ.செந்தில் (வயது 30) ஆகிய 5 பேருமே யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இவ் விபத்துக்குறித்து ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

15 நவம்பர் 2010

அரசின் தடைகளையும் தாண்டி நடைபெற்ற கையெழுத்துப் போராட்டம்!

அரசாங்கத்தின் பல இடையூறுகளையும் மீறி யாழ்ப்பாணத்தில் நாம் இலங்கையர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரசார வைபவம் இன்று இடம்பெற்றது.
வடக்கில் யுத்தத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகளின் பெயர்ப் பட்டியலை வெளியிடுமாறு வலியுறுத்தும் மகஜரில் கையொப்பமிட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வைக் குழப்புவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை என்று இதன் அமைப்பாளர் ஒருவர் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெருந்திரளான மக்கள் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
ஜே.வி.பி.தலைவர். சோமவன்ஸ அமரசிங்க, செயலாளர் டில்வின் சில்வா உட்பட பெருந்திரளான ஜே.வி.பி உறுப்பினர்களும், ஏனைய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிதிகளும் கலந்து கொண்டனர்.
நேற்று தாக்குதலுக்குள்ளாகி யாழ்ப்பாண ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்னெட்டியும், மற்றவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

ஊர்காவற்றுறையில் நடைபெற்ற ஆணைக்குழு விசாரணையில் பெண்கள் சாட்சியம்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வறுமையிலுள்ள எங்களுக்கு அரசிடம் வாழ் வாதார உதவிகளைப் பெற்று தாருங்கள் என மூன்று விதவைப் பெண்கள் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்தனர். மகிந்தவினால் அமைக்கப்பட்டுள்ள கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவினர் நேற்று ஊர்காவற்றுறை நெடுந்தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவு மக்களிடம் ஊர்காவற்றுறை அந்தோனியார் ஆலயத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.
இதன்போது சாட்சியமளித்த நெடுந்தீவைச் சேர்ந்த கணே­சநாயகம் கருணைமலர், கிளிநொச்சியில் வசித்த நான் யுத்தம் காரணமாக பல்வேறு இடங் களில் இடம்பெயர்ந்து இறுதியாக புதுமாத்தளனில் குடியிருந்தேன். 2009 ஆம் ஆண்டு ஆரம்பத்தில் யுத்தம் உக்கிரமடைந்த காலப் பகுதியில் எனது கணவர் செல் தாக்குதலில் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் நானும் மூன்று பிள்ளைகளும் தற்போது எதுவித உதவியுமின்றி பல்வேறு கஷ்டங்கள் மத்தியில் வாழ்கின்றோம். எனவே எனது குடும்பத்திற்கு அரசாங்கத்திடமிருந்து வாழ்வாதார உதவிகளைப் பெற்றுத் தருமாறு ஆணைக்குழுவினரிடம் கேட்டுக் கொண்டார்.
இதன்போது சாட்சியமளித்த நெடுந்தீவைச் சேர்ந்த குகதாஸன் சாந்தினிதேவி,வன்னி இறுதி யுத்தத்தின் போது 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி சுதந்திரபுரத்திலிருந்தபோது எனது கணவர் செல் வீச்சில் உயிரிழந்தார். இதனால் நான் தனிமையில் எதுவித வாழ்வாதாரமுமின்றி நெடுந்தீவில் வாழ்ந்து வருகின்றேன். எனக்கு அரசிடமிருந்து உதவிகளைப் பெற்றுத் தாருங்கள் என்று கேட்டார். இவ் விசாரணையின்போது நெடுந்தீவைச் சேர்ந்த தயாபரன் சிவாஜினி சாட்சியமளிக்கையில், 2009 ஆம் ஆண்டு பெப்ரவரி 7 ஆம் திகதி புது மாத்தளனில் நடத்தப்பட்ட செல் தாக்குதலில் எனது கணவர் உயிரிழந்தார். தற்போது ஒரு ஆண் குழந்தையுடன் எதுவித வாழ்வாதாரமுமின்றி இருக்கிறேன். எனவே அரசாங் கத்திடமிருந்து உதவிகளைப் பெற்றுத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.
இவர்களது கேரிக்கைகளுக்கு பதிலளித்த ஆணைக்குழுவின் தலைவர், உங்களுடைய பிரச்சினைகள் போன்று பலரின் சாட்சியங்கள் எமக்குக் கிடைத்துள்ளன.இவ்வாறான குடும்பங்களின் வாழ்வாதாரத் திட்டங்களைஅரசு வழங்கவேண்டும் என்ற சிபார்சினை ஜனாதிபதியிடம் வழங்குவோம் என்றார்.

14 நவம்பர் 2010

காணாமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக பண மோசடி!மூவர் கைது.

இறுதி யுத்தத்தின் போது காணமல் போனவர்களை கண்டு பிடித்து தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட சிலரை கிளிநொச்சியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஒரு வார காலமாக இந்நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தவர்களை தமக்கு கிடைத்த விசேட தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிசார் கைது செய்துள்ளனர். எனினும் இது வரைக்கும் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நாவற்குழி அரச காணிகளை கைப்பற்றும் யாழ்.மக்கள்!

நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்குச் சொந்தமான காணிகளை யாழ்ப்பாண மக்களும் நேற்றுக் கைப்பற்றிக் கொண்டனர்.
நாவற்குழியில் உள்ள அரச காணிகளில் சுமார் 70 சிங்கள குடும்பங்கள் கடந்த 10 ஆம் திகதி இரவோடு இரவாக குடியேறினர். இது பல்வேறு மட்டத்திலும் பிரச்சினைகளைத் தோற்றுவித்தது. இந் நிலையில் நேற்று அப்பகுதிக்குச் சென்ற சாவகச்சேரி மற்றும் குருநகர் வாசிகள் எஞ்சிய நிலப்பரப்புக்களையும் கைப்பற்றினர். இதனால் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.
எனினும் சிங்கள மக்கள் பிடித்த நிலப்பரப்புக்களை தவிர மற்றைய நிலங்களை யாழ். வாசிகள் பிடித்துக் கொண்டனர். இதனால் சிறுதி நேரம் பதற்றம் நிலவியது.எனினும் சிங்கள மக்கள் பிடித்த நிலப்பரப்புக்களை தவிர மற்றைய நிலங்களை யாழ். வாசிகள் பிடித்துக் கொண்டனர்.
இதேவேளை இக்காணிகளில் குடியமர எவருக்கும் அனுமதி வழங் கப்படவில்லை. என அப்பகுதி கிராமசேவையாளர் தெரிவித்தார். தற்போது சுமார் 50 குடிசைகளை சிங்கள மக்கள் அமைத்துக் கொண்டுள்ளதுடன் 50ற்கும் மேற்பட்ட வீடுகளுக்கான இடங்களை யாழ்ப்பாண மக்கள் அமைத்துள்ளனர்.

13 நவம்பர் 2010

எனது கணவரை மீட்டுத்தாருங்கள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவரும், எனது கணவருமான விமல் மாஸ்ரர் கடந்த வருடம் மே 17 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் படையினரிடம் சரண் அடைய சென்றபோது இராணுவத்தால் கைது செய்யப்பட்டார்.
அவர் ஒரு கால் இல்லாதவர். அவரை நீங்கள்தான் மீட்டுத் தர வேண்டும்.” இவ்வாறு தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் ஆஜராகி சாட்சியம் வழங்கியபோது கோரி உள்ளார் விமல் மாஸ்ரரின் மனைவி கமலேஸ்வரி.
கால் இல்லாத எனது கணவரால் தனித்து எவ்வேலையும் செய்ய முடியாது. நான் இன்று 2 பிள்ளைகளுடன் கணவரது சகோதரியுடன் வாழ்ந்து வருகின்றேன். அவரை கண்டு பிடித்துத் தாருங்கள்.

கதிர்காமர் கொல்லப்பட்ட இடத்தில் விசாரணை!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்‌ஷ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் திடீர் திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது. கொழும்பு மேல்நீதிமன்றம் படுகொலை இடம்பெற்ற இடத்தில் இவ்வழக்கை விசாரிக்கத் தீர்மானித்துள்ளது.
2005 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் அவரது கொழும்பு-07 இல்லத்தில் வைத்து ஸ்னைப்பர் துப்பாக்கியால் கதிர்காமர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இப்படுகொலை தொடர்பாக கொழும்பு மேல்நீதிமன்றத்தில்முத்தையா சகாதேவன், இஸினோர் ஆரோக்கியநாதன் ஆகிய இருவர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இப்படுகொலைக்கு சதித் திட்டம் தீட்டியமை, உதவி, ஒத்தாசை செய்தமை, மரணத்தை ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் இவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவ்வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி குமுதினி விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது இரு எதிரிகளையும் ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி கே.வி. தவராசா ஆஜராகி வாதாடினார். அவர் கொலை நடந்த இடத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று மன்றில் ஏற்கனவே கோரி இருந்தார்.
வழக்காளியான சட்டமா அதிபரின் சார்பில் அரச சட்டத்தரணி சி.குலரட்ண ஆஜரானார். அவர் படுகொலை இடம்பெற்ற இடத்தில் வழக்கு விசாரணை நடத்தப்படுகின்றமையில் எவ்வித ஆட்சேபனையும் சட்டமா அதிபருக்கு கிடையாது என்றார்.
இதையடுத்து படுகொலை இடம்பெற்ற இடத்தில் அடுத்த மாதம் முதலாந் திகதி மதியம் 2.00 மணிக்கு வழக்கு விசாரணை இடம்பெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

12 நவம்பர் 2010

கணவரைப்பற்றி அறிந்து சொல்லுங்கள்,விஜிதனின் மனைவி வேண்டுகோள்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவில் பா. நடேசனுக்கு அடுத்ததாக உயர் பதவியில் இருந்தவர் எனது கணவர் சிவசிதம்பரபிள்ளை ரவிச்சந்திரன் அல்லது விஜிதன். கடந்த வருடம் மே-18 ஆம் திகதி இராணுவத்திடம் சரண் அடைந்த இவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பது கூட தெரியாமல் உள்ளது.”
இவ்வாறு சிதம்பரபிள்ளை ரவிச்சந்திரனின் மனைவி யாழ்.வட்டுக்கோட்டையில் வைத்து தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் இன்று சாட்சியம் வழங்கினார். ”எனது கணவரை தேடி நான் அலையாத இடமே தற்போது இல்லை. கணவர் உட்பட புலி முக்கியஸ்தர்களை இராணுவம் சுட்டுக் கொன்று விட்டது என்று அவரை நான் தேடிச் சென்ற பல இடங்களிலும் கூறி இருக்கின்றார்கள்.
ஆனால் எனது கணவர் கடந்த வருடம் மே-18 ஆம் திகதி இராணுவத்திடம் சரண் அடைந்திருந்தார் என்பது உறுதி. எனது தம்பி இதற்கு கண் கண்ட சாட்சி. எனது தம்பி முன்னிலையிலேயே கணவர் சரண் அடைந்து இருந்தார்.
எனக்கு இரு பெண் பிள்ளைகள். இவர்களை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்று தெரியாமல் மிகவும் தடுமாறிப் போய் உள்ளேன். கணவர் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பது தெரியாமல் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். எனது கணவர் பற்றிய தகவல்களை நீங்கள்தான் அறிந்து சொல்ல வேண்டும்.” என கேட்டுக்கொண்டார்.

அளவெட்டியில் இளைஞன் மீது துப்பாக்கிச்சூடு!

அளவெட்டி அழகொல்லை பிள்ளையார் ஆலயத்தில் நேற்று மாலை 5.30 மணியளவில் இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில்இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் அளவெட்டி வடக்கைச் சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி சஞ்சீவ் (வயது 24) என்பவரே காயமடைந்தவராவார். ஆலயத்தில் தவில் வாசித்துவிட்டு வெளியே வந்த வேளையில் இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த நபரை அழைத்த ஆயுதாரி அவரின் துப்பாக்கியை நெற்றிப் பகுதியில் வைத்துள்ளார். அப்போது விளையாட்டு என நினைத்து அவர் உடலை அசைத்துள்ளார் அதன்போது துப்பாக்கி வெடித்துள்ளது. இச்சம்பவத்தில் அவ் இளைஞன் இடுப்பிலும் கைப்பகுதியிலும் சூட்டுக்கு இலக்கானார்.
படுகாயமடைந்த அவர் நேற்றிரவு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே இவர்மீது துப்பாக்கிபிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

11 நவம்பர் 2010

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் சேதங்களை புனரமைக்க 1041 மில்லியன் ரூபா செலவு!

விடுதலைப் புலிகளின் வான் தாக்குதலில் சேதமடைந்த உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தை புனர்நிர்மாணம் செய்வதற்கு 1041 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் விடுதலைப் புலிகளின் இலகு ரக விமானம் கொழும்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்ட்டத்தின் மீது மோதி வெடித்துப் பெரும் சேதம் விளைவித்தது.
இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த பிரதி அமைச்சர் சரத் அமுனுகம, உள்நாட்டு இறைவரித் திணைக்களக் கட்டடத்தைப் புனரமைக்க அரசாங்கம் 1041 மில்லியன் ரூபாவைச் செலவிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இரும்புக் கதவு தாக்கி பெண் மரணம்!

இரும்பு உருள் கதவில் அகப்பட்டு பரிதாபகரமாக பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவமொன்று இன்று 11 அதிகாலை 12.30 மணியளவில் கொட்டகலை ரொசிட்டா நகரில் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் 52 வயதுடைய கந்தசாமிப்பிள்ளை பரமேஸ்வரி என்பவராவார். கொட்டகலை ரொசிட்டா பஜாரிலுள்ள வீடொன்றின் முன்பக்க கதவு இரும்பினால் ஏற்படுத்தப்பட்டதாகும் இந்த வீட்டிற்கு கொழும்பிலிருந்து வந்த உறவினர்கள் மீண்டும் செல்வதற்காக வீட்டின் கதவினை திறந்து விட்டு உறவினர்கள் சென்ற பிறகு கதவினை கீழே இழுத்து விட்டு குனிந்து செல்ல முற்பட்ட போது வேகமாக கீழிறங்கிய இரும்பு கதவு இந்தப்பெண்ணின் கழுத்துப்பகுதியில் தாக்கியுள்ளது.
இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திலேயே இந்தப்பெண் உயிரிழந்துள்ளார். இதன் பின்பு இந்தச்சம்பவத்தை அறிந்தவர்கள் பத்தனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். தற்போது இறந்தவரின் சடலம் நுவரெலியா மாவட்ட நீதிவானின் வருகைக்காக அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

10 நவம்பர் 2010

பூநகரியில் பெண் மீது சிங்களப்படை வெறியாட்டம்!

தனிமையில் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்த இளம் தாய் ஒருவர் கடந்த சனிக்கிழமை அதிகாலை இரண்டு சிங்கள சிப்பாய்களால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
பூநகரி, கிராஞ்சி மொட்டையன் புலவு பிரதேசத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் பிரஸ்தாபப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்தக் கொடூர சம்பவத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களில் அதிகரித்து வருகின்றன என்றும், மரண பயம் காரணமாக இப்படியான சம்பவங்கள் வெளிவருவதில்லை என்றும் ஸ்ரீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி விசுவமடுப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்னர் இரு குடும்பப் பெண்கள் சில சிங்களப்படைகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்த விசாரணை கிளிநொச்சி நீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வருகின்றது.

அமைச்சரின் வாயை மூட "ரொபி" கொடுத்த ரணில்!

அரச தரப்பினர் தொடர்ந்து இடையூறுகள் ஏற்படுத்திக் கொண்டிருந்ததையடுத்து அமைச்சரொருவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க "ரொபி' கொடுத்தனுப்பியதால் சபையில் பெரும் சிரிப்பொலி எழுந்தது. பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அவசரகாலக் சட்ட நீடிப்பு விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிக் கொண்டிருந்தார். இதன் போது அரச தரப்பினர் அவரின் உரைக்கு தொடர்ந்து இடையூறுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். இதையடுத்து திடீரென பாராளுமன்ற உதவியாளர் ஒருவரை அழைத்த ரணில் விக்கிரமசிங்க, தனது காற்சட்டைப் பொக்கற்றுக்குள் இருந்து “ரொபி’ ஒன்றை எடுத்து அந்த உதவியாளரிடம் ஏதோ கூறி கொடுத்தனுப்பினார்.
அவர் உதவியாளர் ரொபியுடன் அரசுப்பக்கத்துக்கு சென்று சற்று சிந்தித்து விட்டு அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவிடம் கொடுத்தார். என்னவென்று தெரியாமல் அதனை வாங்கிய அமைச்சர் அது ரொபி என்று தெரிந்தவுடன் சிரித்தவாறு தனக்கு வேண்டாமெனக் கூறி மேசை மீது வைத்து விட்டார். இதனால் சபையில் மட்டுமன்றி பார்வையாளர் கலரியில் இருந்த மாணவர்கள் மத்தியிலும் பெரும் சிரிப்பொலி எழுந்தது.

09 நவம்பர் 2010

மாமனிதர் ரவிராஜின் இலட்சியங்களை முன்னெடுப்போம்!

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மக்கள் கண்காணிப்புக்குழுவின் இணை ஸ்தாபகருமான எனது நண்பர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் செய்யப்பட்டு இன்றுடன் நான்கு வருடங்கள் நிறைவு பெறுகின்றது. இந்த நான்கு வருடங்களுக்குள் இந்நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் எத்தனை பின்னடைவுகள் ஏற்பட்டிருந்தாலும் அவை அனைத்தையும் எதிர்கொண்டு ரவிராஜின் இலட்சியங்களை முன்னெடுப்போம் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஏற்பாட்டாளருமான மனோ கணேசன் தெரிவித்தார்.
2006 ஆம் வருடம் நவம்பர் மாதம் 10 ஆம் திகதி கொழும்பில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் இணை ஸ்தாபகருமான நடராஜா ரவிராஜின் நினைவு தினம் தொடர்பில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
மனோ கணேசன் அறிக்கையில் மேலும், தலைநகரிலும், ஏனைய அரசக்கட்டுப்பாட்டு பிரதேசங்களிலும் தினசரி 10 பேர்வரை தமிழர்கள வெள்ளைவான் நபர்களினால் கடத்தப்பட்டு, காணாமல் போய்கொண்டிருந்த கால கட்டத்தில் மக்கள் கண்காணிப்புக்குழுவை நானும், ரவிராஜூம், சிறிதுங்க ஜயசூரியவும் இணைந்து 2006 செப்டெம்பர் மாதம் 19ம் திகதி உருவாக்கியிருந்தோம். எமது குழு உருவாக்கப்பட்டு 50 நாட்களில் எனது நண்பர் ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டார்.
அவர் கொலை செய்யப்பட்ட பின்பு மக்கள் கண்காணிப்புக்குழுவை கலைத்துவிடும்படி எனக்கும், சிறிதுங்கவிற்கும் பாரிய பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன மூன்று முறை படுகொலை முயற்சிகளிலிருந்து நான் தப்பியிருந்தேன். ஆனால் நாங்கள் கொலை அச்சுறுத்தல்களுக்கு பணிந்து மக்கள் கண்காணிப்புக்குழுவை கலைத்துவிடவில்லை அதன் மூலம் தனது உயிரை அர்ப்பணித்த நடராஜா ரவிராஜிற்கு நாம் துரோகம் இழைக்கவில்லை.
மாறாக தொடர்ந்த எமது செயற்பாட்டின் மூலமாக தலைநகரிலும், நாடு முழுக்கவும் அப்பாவி தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட கடத்தல், படுகொலை, கப்பம், வகைதொகையற்ற கைது ஆகிய பாரிய மனித உரிமை மீறல்களை உலகறிய செய்தோம். அதனால் இத்தகைய துன்பகரமான நிகழ்வுகள் மூலமாக தங்களது இன்னுயிரை இழக்கும் நிலையில் இருந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களை எங்களால் காப்பாற்ற முடிந்தது.
இத்தகைய ஒரு நேர்மையுடன் கூடிய உறுதியும், துணிச்சலும் மிக்கவொரு தலைமையை தந்தவர் நண்பர் நடராஜா ரவிராஜ். அவரது பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட மக்கள் கண்காணிப்புக்குழு இன்று தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான போராட்டத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுப்பதற்கு தீர்மானித்திருக்கின்றது.
இது மக்கள் கண்காணிப்புக்குழுவின் ஸ்தாபகர் என்ற முறையிலும், எனது நண்பர் என்ற முறையிலும், நடராஜா ரவிராஜிற்கு நான் செலுத்தும் அஞ்சலியாகும். அவரது தியாகம் வீண்போகவில்லை என்பதை நாங்கள் எடுத்துக்காட்டியிருக்கின்றோம். எதிர்வரும் காலங்களிலும் நண்பர் ரவிராஜின் இலட்சியங்களை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்போம். என சூளுரைத்தார்.

அரசுடன் இணைந்து செயற்பட புலம்பெயர் தமிழர் விருப்பமாம்!பீரிஸ் சொல்கிறார்.

புலம்பெயர் தமிழர்கள் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கு பிரதேசங்களை அபிவிருத்தி செய்யவிரும்புவதாக ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஜேர்மனிய நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தபோதே பீரிஸ் இதனைத் தெரிவித்தார்.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனர்நிர்மாணம் செய்வதற்கு புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புப் பெற்றுக்கொள்ளப்படும்.யுத்த காலப் பகுதியில் அதிகளவான புலம்பெயர் தமிழர்கள் ஆதரவாக செயற்பட்ட போதிலும், தற்போது நிலைமை மாறியுள்ளது. தற்போது புலம்பெயர் தமிழர் களுக்கு இடையில் வித்தியாசமான நிலைப்பாடுகள் காணப்படுகின்றன. அவர்கள் அரசுடன் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளனர் என்றார்.

வெள்ளவத்தை கடற்கரையில் சல்வார் அணிந்த பெண்ணின் சடலம்!

வெள்ளவத்தை கடற்கரையில் நேற்று நண்பகல் இனந்தெரியாத பெண்ணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. இச் சடலம் 35 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவரின் சடலமென்றும் அப்பெண் ரோஸ் நிறத்திலான சல்வார் அணிந்திருந்ததுடன் கால்விரலில் மிஞ்சி அணிந்திருந்ததாகவும் இதிலிருந்து அவர் ஒரு தமிழ்ப் பெண்ணாக இருக்கலாமென ஊகிக்கப்படுகிறது.
ஆனால் இப் பெண்ணின் சடலத்தினை இதுவரையிலும் யாரும் அடையாளம் காணமுன்வரவில்லையென்றும் இதனால் யாரென்று அடையாளம் காண முடியாமல் உள்ளதாகவும் தெரிவிக்கும் வெள்ளவத்தை பொலிஸார் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர். இந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தொடர்பில் உறுதியாக கூறமுடியாதுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்
கரையொதிங்கிய சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

08 நவம்பர் 2010

அரசாங்கத்திற்கு எதிராக அட்டனில் ஆர்ப்பாட்டம்!

தோட்டத்தொழிலாளர்களின் வாழ்வாதார பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரியும் அத்தியாவசிய பொருட்கள் சேரவகளின் விலையேற்றத்திற்கு எதிர்ப்பைத் தெரிவித்தும் அட்டன் பிரதான பஸ்தரிப்பு நிலையப்பகுதியில் இன்று கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அரசே கோதுமை மாவின் விலையை உடனடியாக குறை அல்லது மானியம் வழங்கு , உழைப்புக்கேற்ற ஊதியம் வழங்கு ,தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளை அரசே தீர் ,சரத்பொன்சேக்காவை விடுதலை செய் போன்ற கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்தக்கவனயீர்ப் போராட்டத்திற்கு மத்திய மாகாணசபையின் எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய தேசிய கட்சியின் மஸ்கெலியா தொகுதி அமைப்பாளருமான கே.கே.பியதாச ,ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும் ஜனநாயக மக்கள் முன்னணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர் முரளிரகுநாதன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தான் ஸ்ரீலங்கா உறவு,சர்தாரி வருகிறார்!

பாகிஸ்தானுடன் உறவு வைப்பதற்காக இலங்கை அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இதனொரு கட்டமாக பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இம்மாத இறுதியில் இலங்கை வரவுள்ளார்.
இங்கு வரும் சர்தாரி, இலங்கையின் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் பாதுகாப்பு உடன்படிக்கைகளி லும் கைச்சாத்திடவுள்ளார். எதிர்வரும் 19ஆம் திகதி இரண்டாவது தடவையாக ஜனாதிபதி பதவியை ஏற்கவுள்ள மகிந்த ராஜபக்ச அதன்பின் சந்திக்கின்ற முதலாவது வெளிநாட்டுத் தலைவர் பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரியாகவே இருப்பார் என கூறப்படுகின்றது. ஏற்கனவே சீனாவுடன் உறவுகளை வளர்த்து வரும் இலங்கை அரசு தற்போது பாகிஸ்தானுடனும் நெருங்கிய உறவை ஏற்படுத்த முயற்சிப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி இலங்கைக்கு வரும் காலப்பகுதியில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இங்கு வரு வதானது இலங்கை தொடர்பான இந்தியாவின் முடிபில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் எனவும் அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

07 நவம்பர் 2010

வடகிழக்கு இணைப்பிற்கு பிள்ளையான் கட்சி எதிர்ப்பாம்!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஒன்றாக இணைப்பதற்கு தமிழ் கட்சிகளின் அரங்கிலுள்ள ஏனைய அரசியல்க் கட்சிகள் விருப்பம் தெரிவித்தபோதிலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இதனை எதிர்த்துள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இந்த அரங்கமானது ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட், தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி போன்ற 10 தமிழ்க் கட்சிகளை கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதன் காரணமாக இந்த விடயத்தின் ஒரு பொதுக்கருத்துக்கு வருவது அரங்கத்திற்கு கடினமாக இருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகளின் குடுபத்தவர்கள் தொடர்பு கொள்க: மனோகணேசன்.

கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, பதுளை, அநுராதபுரம், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட சிறைச்சாலைகளிலும் மற்றும் பூசா தடுப்பு முகாமிலும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் குடும்பத்தவர்களைத் தொடர்புகொள்ளுமாறு மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளரும் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்
இது தொடர்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களது முழுப்பெயர், அடையாள அட்டை இலக்கம், கைது செய்யப்பட்ட திகதி, தடுத்துவைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை அல்லது முகாம், குடும்ப அங்கத்தவரது தொடர்பு விலாசம் மற்றும் தொலைபேசி இலக்கம் ஆகிய விபரங்களை மக்கள் கண்காணிப்புக் குழு தபால் பெட்டி இலக்கம் 803 கொழும்பு அல்லது இல.72 பாங்ஷால் வீதி, கொழும்பு11 என்ற விலாசத்திற்கு அனுப்புமாறும் அவர் கேட்டுள்ளார்.

கடத்திச் செல்லப்பட்ட 17 வயதுச் சிறுமி மீட்பு!

காத்தான்குடிப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சிறுமியைப் போலீசார் பத்திரமாக மீட்டுள்ளனர். குறித்த சிறுமிக்கு 17 வயது ஆகும். இவரை மூன்றுபேர் சேர்ந்து கடத்திச் சென்றனர். சிறுமியின் தகப்பனாருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இச்சிறுமி கடத்தப்ப்பட்டார். கடத்திச் செல்லப்பட்ட சிறுமி அதே பிரதேசத்திலுள்ள வீடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். எனினும், குறித்த இடத்தை மோப்பம் பிடித்த போலீசார் சிறுமி கடத்தப்பட்டு 4 மணித்தியாலங்களில் அவரை மீட்டுள்ளனர்.
காத்தான்குடி நகரத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு இச்சிறுமியை முச்சக்கரவண்டியொன்றில் கடத்தல்காரர்கள் இழுத்துச் சென்றுள்ளனர். அச்சிறுமி தகப்பனாருடன் சென்றுகொண்டிருந்தபோதே இக்கடத்தல் நடந்தது. காத்தான்குடி போலீசில் புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து மேற்படி சிறுமி மீட்கப்பட்டார்.

06 நவம்பர் 2010

மாணவர்கள் இருவர் வௌ்ளவத்தை கடற்பரப்பில் மூழ்கி மரணம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த ஆறு தமிழ் மாணவர்கள் நேற்று தீபாவளி தினத்தன்று மாலை கொழும்பு - வெள்ளவத்தைக் கடலோரமாக தீபாவளி கொண்டாட்டங்களுக்காக ஒன்றுசேர்ந்து பின்னர் கடலில் நீராடச்சென்றுள்ளனர் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது மூச்சுதிணறி கத்தியுள்ளனர் சத்தத்தைக் கேட்டு அருகாமையில் நின்ற கடற்கடையினர் காப்பாற்றியுள்ளனர். ஆனால் ஆறுபேரில் நான்கு பேரைதான் அவர்களால் காப்பாற்ற முடிந்தது இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இவர்களில் ஒருவரின் உடல் நேற்று மாலை 6 மணிக்கும், மற்றொருவரது உடல் 7 மணிக்கும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். மாவட்டத்தில் உரும்பிராய் பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்ட நரசுதன், வவுனியா மாவட்டத்தில் கற்குழியைச் சொந்தமாக கொண்ட அன்புதாஸன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர். குறிப்பிட்ட மாணவர்கள் ஶ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவபீடத்தில் கல்வி கற்று வந்த மாணவர்கள் ஆவர்.
இவர்களது உடல்கள் தற்போது களுபோவிலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துவருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.