பக்கங்கள்

16 ஜனவரி 2019

யாழ்,பட்டத்திருவிழாவில் அங்கயற்கன்னி!

செய் அல்லது செத்துமடியாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் ராட்சத 'பட்ட திருவிழா' நடைபெறுவது வழக்கம். வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இந்த ராட்சத பட்டத் திருவிழா இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் எங்குமில்லாதவாறு ராட்சத பட்டங்களை பறக்கவிடுவது இந்த பட்டத் திருவிழாவின் சிறப்பு அம்சமாகும். இந்த ஆண்டு (2019 பொங்கல்) பட்டத் திருவிழாவில் பார்வையாளர்களின் கண்ணைக்கவரும் விதமாக முப்பரிமான தொழில் நுட்பத்தில் அமைக்கப்பட்ட 80க்கும் மேற்பட்ட பட்டங்கள் வானில் பறக்கவிடப்பட்டன. பட்டத் திருவிழாவினை காண யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலிருந்தும் ஆண்டு தோறும் பெருமளவிலான மக்கள் வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் ஒன்றுகூடுகின்றார்கள். இம்முறை பட்டத் திருவிழாவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் அமைப்பின் சீருடைக்கு ஒத்த நிறத்தில் உள்ள தரை மற்றும் கடலில் தாக்குதல் நடத்த கூடியவாறான போர் டாங்கி மற்றும் படகு அமைப்பில் வடிவமைக்கப்பட்ட பட்டங்களும் வானில் பறக்கவிடப்பட்டன. "செய் அல்லது செத்துமடி" எனும் வாசகத்துடன் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முதல் பெண் கரும்புலியான அங்கயற்கண்ணி பெயர் பொறிக்கப்பட்ட படகு பட்டம் பறக்கவிடப்பட்டது. இந்த பட்டம் வானில் பறந்தபோது பலரும் கரகோஷம் எழுப்பி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் சொந்த ஊர் வல்வெட்டித்துறை என்பது குறிப்பிடத்தக்கது.பட்ட திருவிழா

11 ஜனவரி 2019

செந்தமிழன் சீமான்,கயல்விழி மண இணையருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது!

Seeman blessed with male baby நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அப்பா ஆகியுள்ளார். அவரது மனைவி கயல்விழிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியைதான் சீமான் திருமணம் செய்தார். கயல்விழி எம்ஏ பட்டம் பெற்றவர்.இவர்களது திருமணம் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ அரங்கில் கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. சீமான்-கயல்விழி திருமணத்தை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்தான் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். எப்போதுமே தமிழுக்கு அதிக முக்கியத்துவம் தருபவர்.அதனால் இவரது திருமணமும், தமிழ்முறைப்படி சீர்திருத்த முறையில் திருமணம் நடந்தது. தமிழின் முதல் எழுத்தான 'அ' பொறிக்கப்பட்ட டாலருடன் கூடிய தாலியை பழ.நெடுமாறன் எடுத்து தர, அதை வாங்கி சீமான் கயல்விழி கழுத்தில் கட்டினார். கல்யாணம் ஆகி 5 அண்டுகள் ஆன நிலையில் சீமான்-கயல்விழி தம்பதிக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கயல்விழிக்கு பிரசவம் நடந்தது. தாயும் சேயும் நலம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீமான் தந்தை ஆகியுள்ளதால், நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் சந்தோஷத்தில் உள்ளனர். ஒருவருக்கொருவர் இனிப்புகளை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள்.

04 ஜனவரி 2019

தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது நாம் தமிழர் வேட்பாளர்!

பிரபாகரன் பற்றாளர் திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சாகுல் ஹமீது 25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதி காலமானதை அடுத்து, திருவாரூர் தொகுதி காலியானது. தமிழகத்தில் 20 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கும் மட்டும் வரும் 28ம் தேதி அதிரடியாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வாக்கு எண்ணிக்கை 31ம் தேதி நடைபெற்று, வெற்றி பெற்றவர் யார் என்று தெரிவிக்கப்படும். இடைத்தேர்தலில் களமிறங்க பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றன.வேட்பாளர் தேர்வு, ஆலோசனை கூட்டம் என அதிமுக, திமுக, அமமுக என முக்கிய கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. டிடிவி தினகரனின் அமமுக கட்சி சார்பில் வேட்பாளராக காமராஜ் அறிவிக்கப் பட்டுள்ளார். நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது வேட்பாளராக களமிறங்கி உள்ளார். 25 ஆண்டுகளுக்கும மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்றுச் சிறை சென்றிருக்கிறார் என்று அக்கட்சியின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் தேசியப் போராட்டங்களிலும், தமிழர் பாதுகாப்பு அமைப்பு நடத்திய ஏராளமான போராட்டங்களிலும் பங்கேற்ற வரலாறு இருக்கிறது. சாகுல் அமீது ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் இருந்த அந்தனப்பேட்டை எனும் சிற்றூரில் பிறந்தவர்.1974 - 82 காலக்கட்டத்தில் திருவாரூரில் வணிக நிறுவனம் நடத்தி அங்கேயே வளர்ந்தவர். தமிழினம் சார்ந்து வெளிவந்த மிகசொற்ப இதழ்களில் ஒன்றான ‘தமிழ் முழக்கம் வெல்லும்' இதழை நடத்தியவர் சாகுல் அமீது. 2002ம் ஆண்டு, தமிழ்த்தேசியத் தலைவர் பிரபாகரன் உலகச் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்தார்.ஈழத்தின் மீதும் பிரபாகரன் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட சாகுல் அமீது, தலைவரின் அந்த நேர்காணலைத் திறனாய்வு செய்வதற்காக, சென்னை ஆனந்தா திரையரங்கில் ஒரு திறனாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்ததற்காக, பொடாவின் கீழ் கைது செய்யப்பட்டு 17 மாதங்கள் சிறையில் இருந்தார். பின்னர், பழ.நெடுமாறன் எழுதிய, தமிழீழம் சிவக்கிறது எனும் நூலை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக தனது வணிகக் கிடங்கில் வைத்திருந்ததால், தேசத் துரோக வழக்குத் தொடுக்கப்பட்டுச் சிறைப்படுத்தப்பட்டார் சாகுல் அமீது.தமிழகத்தில் இருக்கிற அனைத்துக் கட்சி மற்றும் இயக்கத் தலைவர்களுக்கும் நன்கு அறிமுகமானவர். ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு விசாரிக்கப்பட்ட மிக முக்கியத் தமிழ்த்தேசியவாதிகளில் சாகுல் அமீதும் ஒருவர்.அண்மையில் கஜா புயலில் சிக்குண்டு பெரிதும் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் கஜா புயல் துயர் துடைப்புப் பணிகளில் முன்னின்ற களப்பாணியாளர்களில் சாகுல் அமீதும் ஒருவர் என்று நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.