பக்கங்கள்

26 மே 2018

மத்திக்கு விசுவாசம் காட்டும் வட மாகாண அலுவலர்கள்!

அண்மையில் திறக்கப்பட்ட உணவகத்திற்கு ஹெல பொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கமான “ஈழ உணவகம்” என்று பெயர் வைக்கலாம் என மத்திய அமைச்சரொருவருக்கு கூறிய போதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வட மாகாணம் சம்பந்தமான பூர்வாங்க தேவைகள் மதிப்பீடு பணிக்கூடம் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த முதலமைச்சர், “எமது மாகாண அலுவலர்கள் சிலரின் நடவடிக்கைகளை நான் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றேன். மத்தி என்ன நினைக்குமோ, மத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ, மத்திக்கு ஏற்றவாறு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும், அவ்வாறு நடந்தால் தான் சலுகைகளை பெறலாம் என்ற மனோநிலையில் அவர்கள் நடந்து வருகின்றார்கள். உதாரணத்திற்கு ஒரு உணவகம் அண்மையில் திறக்கப்பட்டது. அதற்கு தெற்கத்தைய உணவகங்களின் சிங்களப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்தி எதிர்பார்த்தது. ஹெல பொஜூன் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. நான் அதற்கு சம்மதிக்கவில்லை. வேண்டுமெனில் ஹெல பொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கத்தைப் பாவிக்கலாம் என்றேன். அதாவது ஹெல - ஈழம், பொஜூன் - உணவகம் என்றவாறு ஈழ உணவகம் என்று பெயர் வைக்கலாம் என்று மத்திய அமைச்சருக்குக் கூறினேன். அதற்கு சம்மதிக்கவில்லை. அவ்வாறாயின் எமது வட மாகாண அதிகாரத்தின் கீழ்வரும் உணவகங்கள் போன்று அம்மாச்சி என்று பெயர் சூட்டுவோம் என்றேன். அதற்கும் எதுவும் கூறவில்லை. உணவகத்தைத் திறக்கவும் வரவில்லை. உணவகம் திறக்கப்பட்டு விட்டாலும் எமது அலுவலர்கள் இதுவரையில் அதற்குப் பெயரிடவில்லை. அவ்வளவு பயம் மத்திக்கு. மத்திய அரசாங்கத்தினர் என்ன கூறுவார்களோ என்று தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்ளும் நிலைமையையே நான் இங்கு காண்கின்றேன். மக்களின் ஆதரவை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இங்கு அதிகாரம் செலுத்துகின்றார்கள் என்பதை இங்குள்ள அதிகாரிகள் பலர் ஏற்றுக்கொள்வதாக இல்லை.மத்தியின் அதிகாரம் எப்பொழுது திரும்பவும் வரும் மத்திக்கு காக்காய் பிடித்து எமது தனிப்பட்ட நலன்களை எவ்வாறு நிறைவேற்றலாம் என்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள் போல் தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.

23 மே 2018

துப்பாக்கியால் சுட்ட போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீச்சு!

Petrol bomb hurdle on police in Thoothukudiதூத்துக்குடியில் பொதுமக்கள் மீது தடியடி நடத்திய போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் நகரம் மீண்டும் போர்க்களமாகியுள்ளது. தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள், நேற்று துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டவர்கள் உடல்களை பார்க்க உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, போலீசார் மீது மக்கள் கல்வீசினர்.இதையடுத்து போலீசார் அவர்களை தடியடி நடத்தி கலைக்கபார்த்தனர். அப்படியும் மக்கள் கோபத்தோடு முன்னேறினர். இதையடுத்து 2 ரவுண்டுகள் போலீசார் சுட்டனர். இதனால் கோபமடைந்த போராட்டக்காரர்களில் சிலர், போலீசார் மீது பெட்ரோல் குண்டை வீசினர். கடலோர கிராமங்களில் பெட்ரோல் குண்டு புழக்கம் சகஜமானது என்பதால், இந்த குண்டு எங்கிருந்து வந்திருக்கும் என்பதில் பெரிய ஆச்சரியம் இல்லை என்கிறார்கள் போலீசார். அதிருஷ்டவசமாக இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் இல்லை.

18 மே 2018

சிறீலங்காவை முடக்கிய ஒபறேசன் முள்ளிவாய்க்கால்!

ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் இரண்டாம் தடவையாக 300 - க்கு மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மே 18 தமிழின அழிப்பு நாளான இன்று ஒப்பரேசன் முள்ளிவாய்க்கால் என்கின்ற பெயரில் சிறிலங்கா துதூவராலயங்கள் இணையத்தளங்கள், சிறிலங்கா அரசநிர்வாக இணையங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஆதரவான செய்தி ஊடக இணையங்கள் உட்பட 300 -க்கும் மேற்பட்ட சிறிலங்கா இணையத்தளங்களை ஊடுருவி அந்த தளங்களில் முள்ளிவாய்க்கால் இன்படுகொலைப்படங்களை பதிவேற்றியும் அதை தாம் மறக்க மாட்டோம் எனவும் செய்தி பதிவேற்றியுள்ளனர். இது மட்டுமல்லாமல் யாழில் உள்ள இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள்ளும் அதுமட்டுமின்றி இதே மாதிரியாக 2017ம் ஆண்டு மே மாதம்18ம் திகதியும் 200க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை இதே பேரில் முடக்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும். அமேரிக்காவையே ஆட்டம்காணவைத்திக்கொண்டிருக்கும் சைபர் தாக்குதல் இப்பொழுது மீண்டும் தமிழீழ விடுதலைப்புலிகள் என்கின்ற பெயரில் சிறிலங்கா அரசையும் கதிகலங்க வைத்திருப்பது முக்கியமான விடயமாகும். அது மட்டுமின்றி சிறிலங்கா துதூவராலய இணையங்களுக்குள் ஊடுருவப்பட்டிருப்பதால் பல்வேறுபட்ட ரகசியத்தகவல்களும் கசிந்திருக்ககூடும்.

கேரளா சிறிலங்கா துதூவராலய இணையம் http://slhckerala.org/article_details.php?articleid=NTM= 

http://slhckerala.org/

சீனா சிறிலங்கா துதூவராலய இணையம் 
http://www.slemb.com/third.php?menu_code=1&rid=46&lang=cn

சிறிலங்கா சுற்றுலா துறை அமைச்சு http://www.tourismmin.gov.lk/sinhala/news_view.php?news_id=1

இந்தியா துணைத்தூதராக இணையத்திற்குள் http://www.cgijaffna.org/ckfinder/userfiles/files/ltte-flag-300-news.jpg

குவைத் துதூவராலய இணையம் http://kuwaitembassy.net/news.php?news_id=275 

சிறிலங்கா உள்ளூர் அதிகாரசபை இணையம் http://www.dolgnwp.lk/ 

சிறிலங்கா அரச இணையத்தளங்கள் மற்றும் சிறிலங்கா அரச ஊடக இணையங்கள் http://actuaries.org.lk/

http://www.batticaloa.mc.gov.lk/event.php?id=18

http://actuaries.org.lk/ http://avistholdings.com/ http://www.bricsventures.lk/

http://www.bungalow1926.com/ http://www.captain.lk/ http://csquareholdings.com/

http://emcuni.com/ http://www.imslanka.lk/ http://www.lankamahilasamiti.com/

http://lankapropertyclub.com/

http://mahi-mahi.net/

http://www.modernsalonfurniture.com/

http://www.onwardlogistics.net/

http://sinharafamilyrestaurant.com/

http://sphere.lk/

http://www.srilankatourismclub.com/

http://www.staractuarialacademy.com/

https://www.stbridgets-

kandy.com/ http://www.sundozmedigroup.com/

http://www.surasagammadda.lk/

http://welfaretourism.com/

http://www.ymbarestkataragama.lk/

http://www.dolgnwp.lk/

http://www.anew.lk/

http://www.libertymotors.lk/

http://www.mgttools.com/

http://www.nuhatravels.com/

http://www.ralhum.com/

http://broadwaybakers.lk/

http://www.bronteparkhighlandcottages.com.au/

http://djmaxtune.ca/web/

http://www.jptechnologies.lk/jptech/

http://nasrullah.info/

http://www.patersoniacottage.com.au/index.php

http://wijayasiribakehouse.com/

http://siscolombo.lk/

http://www.jayanandaevilla.com/index.html

http://www.nptccd.health.gov.lk/

http://www.tissatimber.com/

http://www.thuyar.com/

https://mirror-h.org/search/hacker/24172/

மன்னாரில் போராளி ஒருவரை கடத்த முயற்சி!

நள்ளிரவில் சிவில் உடையில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி முன்னாள் போராளி ஒருவரைக் கைது செய்ய முயன்றனர். அவர்களுடன் போராளி போராடியதில் அவர்கள் தமது முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றனர். துப்பாக்கிச் சூட்டில் அவருக்கு காயம் ஏற்படாத போதும் சம்பவ இடத்தில் குருதிக் கறைகள் காணப்படுகின்றன. இந்தச் சம்பவம் நேற்று இரவு மன்னார் உயிலங்குளத்தில் நடந்துள்ளது. சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. வெள்ளை நிறக் காரில் சிவில் உடையில் வந்த குழு முன்னாள் போராளியின் நண்பரைக் கடத்தித் தமது வாகனத்தில் மறைத்து வைத்துள்ளனர். வாகனம் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த முன்னாள் போராளி வாகனத்தை அவதானித்துள்ளார். அப்போது அந்த வாகனத்தில் இருந்து பதுங்கியவாறு இறங்கிய மூவர் முன்னாள் போராளியை நோக்கிச் சரமாரியாகச் சூடு நடத்தியுள்ளனர். சுதாகரித்துக் கொண்ட முன்னாள் போராளி அவர்களை நெருங்கி அவர்களுடன் இழுபறிப்பட்டுள்ளார். அதை எதிர்பார்க்காத அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். கடத்தி வைத்திருந்த நண்பரையும் அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் கொண்டுவந்திருந்த கை விலங்கு ஒன்றையும் விட்டுச் சென்றுள்ளனர். சம்பவ இடத்தில் குருதிக் கறை காணப்படுவதால் சிவில் உடையில் வந்தவர்கள் காயமடைந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் சம்பவ இடத்துக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார். சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டது. வந்தவர்கள் பொலிஸார் எனில் காரணத்தைக் கூறிக் கைது செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டது. பொலிஸார் சம்பவ இடத்துக்கு உடனடியாக வரவில்லை. சுமார் 2 மணித்தியாலத்துக்குப் பின்னரே சம்பவ இடத்துக்கு வந்தனர் என்று கூறப்படுகிள்றது. சிவில் உடையில் தப்பிச் சென்றபோது அவர்களின் வாகனத்துக்குப் பின்புறம் பொலிஸ் வாகனத்தை ஒத்த வாகனம் ஒன்றும் சென்றது என்று அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். எனினும் பொலிஸார் சம்பவம் தொடர்பில் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.

16 மே 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது!


முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்பான ஒழுங்கமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில், யாழ். பல்கலைக்கழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் கோரிக்­கை­க­ளுக்கு, வடக்கு மாகாண சபை இணங்கியுள்ளதையடுத்தே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் நிகழ்வு தொடர்பான ஒழுங்கமைப்புகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த விடயத்தில், யாழ். பல்கலைக்கழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் கோரிக்­கை­க­ளுக்கு, வடக்கு மாகாண சபை இணங்கியுள்ளதையடுத்தே இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்­கும், வடக்கு மாகா­ண­ச­பை­யின் முள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக் குழு­வுக்­கும் இடை­யில் கடந்த ஞாயிற்­றுக் கிழமை முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் கலந்­து­ரை­யா­டல் நடை­பெற ஏற்­பா­டா­கி­யி­ருந்­த­போ­தும் அது நடை­பெ­ற­வில்லை. இந்த நிலை­யில் வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனை, யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யத்­தின் பிர­தி­நி­தி­கள், சிவில் சமூ­கப் பிர­தி­கள் உள்­ள­டங்­க­லான குழு­வி­னர் நேற்­று­ முன்­தினம் மாலை சந்­தித்­த­னர். இந்­தச் சந்­திப்­பில் மாண­வர்­க­ளின் கோரிக்­கை­க­ளுக்கு, முத­ல­மைச்­சர் இணக்­கம் தெரி­வித்­தார். யாழ்ப்­பாண பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் தயா­ரித்­தி­ருந்த நிகழ்ச்சி
நிர­லின் ஒழுங்­குக்கு அமை­வாக, நிகழ்­வு­களை முன்­னெ­டுக்க
முத­ல­மைச்­சர் சந்­திப்­பில் இணங்­கி­யி­ருந்­தார். இன்று
புதன்கிழ­மையே, முள்­ளி­வாய்க்­கால் ஏற்­பாட்­டுக்­குழு
முள்­ளி­வாய்க்­கால் மண்­ணில் சந்­திப்பு நடத்­தும் என்­றி­ருந்த
நிலை­யில், மாண­வர்­க­ளு­டன் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­ட­தும்
நேற்­றுக் கூட்­டத்­துக்கு முத­ல­மைச்­சர் அழைப்பு விடுத்­தார்.
நினை­வேந்­தல் ஏற்­பாட்­டுக்­கு­ழு­வில் 9 பேர் உள்ள நிலை­யில் 4 பேர் மாத்­தி­ரமே நேற்­றைய கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர். வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன், வடக்கு மாகாண அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான து.ரவி­க­ரன், த.குரு­கு­ல­ராஜா ஆகி­யோரே நேற்றைய கலந்­து­ரை­யா­ட­லில் பங்­கேற்­ற­னர். யாழ்ப்­பாண பல்கலைக்­க­ழக மாண­வர்­கள் சார்­பில் 3 பேரும், தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பின் முன்­னாள் போரா­ளி­யான பசீர் காக்­கா­வும் கலந்து கொண்­ட­னர்.மாண­வர்­க­ளு­டன் கடந்த சனிக்­கி­ழமை
பங்­கேற்ற பொது­அ­மைப்­புக்­க­ளின் பிர­தி­நி­தி­கள் எவ­ரும் நேற்­றுச் சந்­திப்­பில் பங்­கேற்­க­வில்லை. முத­ல­மைச்­சர் முன்­னரே எழு­தி­வந்த, நிகழ்வு ஒழுங்கை வாசித்­தார். அனை­வ­ரும் ஏற்­றுக் கொண்­ட­னர். இதே­வேளை சுட­ரேற்­றல் காலை 10 மணிக்கு இடம்­பெ­ற­ வேண்­டும் என்று வடக்கு மாகாண சபை தீர்­மா­னித்­தி­ருந்­தது. பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் மதி­யம் 12.30 மணிக்கே இடம்­பெ­ற­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யி­ருந்­த­னர். இந்த நிலை­யில் தற்­போது 11 மணிக்கு சுட­ரேற்­றல் மாற்­றப்­பட்­டுள்­ளது. வடக்கு – கிழக்­கின் எட்டு
மாவட்­டங்­க­ளை­யும், ஏனைய மாவட்­டங்­கள் எல்­லா­வற்­றை­யும் சேர்த்து ஒன்­றா­க­வும், மொத்­த­மாக 9 சுடர்­கள் ஏற்­று­வது என்­றும், அவை அந்­தந்த மாவட்­டங்­க­ளைப் பிர­தி­நித்­து­வப்­ப­டும்
பாதிக்­கப்­பட்ட ஒரு­வர் ஏற்­று­வார் என்­றும் வடக்கு
மாகா­ண­ச­பை­யின் நினை­வேந்­தல் குழு முடி­வெ­டுத்­தி­ருந்­தது.
இதற்­குப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­கள் ஆட்­சே­பம்
தெரி­வித்­துள்­ள­னர்.சரி­யான ஒரு­வரை எல்லா
மாவட்­டங்­க­ளி­லி­ருந்­தும் தெரி­வது கடி­னம் என்­றும் ஒரே­யொரு முதன்­மைச் சுடரை ஏற்­று­வ­து­தான் சரி­யா­னது என்­றும்
கூறி­யுள்­ள­னர்.இதனை வடக்கு மாகாண சபை நினை­வேந்­தல்
ஏற்­பாட்­டுக்­குழு ஏற்­றுக் கொண்­டுள்­ளது.போரால்
பாதிக்­கப்­பட்­ட­வர்­களே சுட­ரேற்­று­வர் என்று முன்­னர்
தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தா­லும்,தற்­போது முத­ல­மைச்­சர் சுடரை
ஏற்றி,பாதிக்­கப்­பட்ட ஒரு­வ­ரி­டம் கைய­ளிக்க அவர் ஏற்­று­வார் என்று மாற்­றப்­பட்­டுள்­ளது. அதேவேளை,இதுகுறித்துக் கருத்து வெளியிட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் கி.கிருஸ்ணமேனன், நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை, கடந்த காலங்களில் முரண்பட்டிருந்த தரப்புக்களை ஒன்றிணைத்து மேற்கொள்ளவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இன்றுஇடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கான பணிகளை அனைத்து தரப்புக்களையும் இணைத்து அதாவது கடந்த காலங்களில் முரண்பட்டு இருந்த நான்கு தரப்புக்களையும் ஒன்றாக இணைத்து ஏற்பாடுகளை செய்வதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்துள்ளோம். எதிர்வரும் 18ம் திகதி பல்கலைக்கழகத்தில் இருந்து பாரிய மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்று ஆரம்பமாகி முள்ளிவாய்க்கால் மண்ணை அது வந்தடையும். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் கலந்துகொண்டு உலகுக்கு காத்திரமான செய்தி ஒன்றினை சொல்ல தயாராகிக்கொண்டிருக்கின்றோம். அதற்கு ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். தாயகத்தில் எவ்வாறு நாங்கள் ஒற்றுமையான நினைவு நிகழ்வை நடத்துகின்றோமோ, அதேபோல் புலம்பெயர் நாடுகளிலும் அனைவரும் இலங்கை தூதரகத்துக்கு முன்பாகவோ அல்லது நாட்டின் தூதரகத்துக்கு முன்பாக சென்று நினைவேந்தலை செய்வதன் ஊடாக, அந்த நாட்டின் அரசாங்கம் ஊடாக காத்திரமான செய்தி ஒன்றினை ஐ.நா சபைக்கு கொண்டு செல்ல முடியும். எங்கள் உரிமையைப் பெற்றுக்கொள்ள அது வலுசேர்க்கும்” என தெரிவித்துள்ளார்.

14 மே 2018

அனலைதீவில் ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல் வீச்சு!

அனலைதீவு சதாசிவ மகாவித்தியாலயத்தில், ஆசிரியர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து அதிபர் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேறியதாகவும்  பாதுகாப்பின்மை காணப்படுவதால் அவர்கள் வெளியேறியுள்ளனர் எனவும் மேலும் அறியமுடிகிறது.இதனால் மாணவா்கள் கல்வி கற்க முடியாத நிலையில் பாடசாலைக்கு வெளியே காத்திருந்தனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

13 மே 2018

பிரான்ஸ் தாக்குதல்தாரி செச்சன்யாவில் பிறந்தவர்!

பாரீஸில் ஐஎஸ் தாக்குதல்தாரி நடத்திய கத்திக்குத்து: ஒருவர் பலிபிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் சனிக்கிழமை மாலை நடந்த தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதல்தாரி 1997-ஆம் ஆண்டு பிறந்தவர் என்றும், ரஷ்ய குடியரசான செச்சன்யா அவர் பிறந்தார் என்றும் நீதிமன்ற தகவல் ஒன்று தெரிவித்துள்ளது.பிரான்ஸ் தலைநகரான பாரீஸின் மத்திய பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதல் என்று சந்தேகிக்கப்படும் கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு ஆயுததாரி தனது கத்தியால் 29 வயதான ஒரு நபரை கொன்றுள்ளார் என முன்னதாக பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், இந்த தாக்குதல் சம்பவத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர்.பின்னர், பாரீஸின் ஒபேரா பகுதியில் இந்த தாக்குதல்காரி போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். 'அல்லாஹ் அக்பர்' என்று தாக்குதல்தாரி கோஷமிட்டதாக சம்பவ இடத்தில் இருந்த சிலர் தெரிவித்துள்ளனர்.சனிக்கிழமை மாலை நடந்த இந்த தாக்குதலை, தங்கள் படைவீரர் ஒருவர்தான் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் குழு தெரிவித்துள்ளது. பாரீஸில் கேளிக்கை மற்றும் இரவு வாழ்க்கைக்கு பெயர் போன ஒரு பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.இந்த சம்பவத்தால் அங்கிருந்த மக்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த கஃபே மற்றும் உணவு விடுதிகளுக்குள் நுழைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் பற்றி ட்விட்டர் பதிவு வெளியிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங், '' இன்று மீண்டும் பிரான்ஸ் தனது மண்ணில் ரத்தம் சிந்தியுள்ளது. ஆனால், நமது எதிரிகளிடம் ஒரு இஞ்ச்கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

நன்றி:பிபிசி தமிழ்

07 மே 2018

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மாகாணசபையே நடாத்தும்!

படம் கோரமானது
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வழமை போன்று வடக்கு மாகாண சபையே இம்முறையும் நடத்தும்.அதில் பல்வேறு பொது அமைப்புக்களும் பங்கேற்கும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுடனான கூட்டத்தை அடுத்து முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளார். 07-05-2018ம் திகதியாகிய இன்று எமது மாகாணசபை உறுப்பினர்கள் கூட்டமொன்று முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.மேற்படி நினைவேந்தல் நிகழ்ச்சி சென்ற மூன்று வருடங்கள் நடைபெற்றது போன்று இவ்வருடமும் தொடர்ந்து வடமாகாணசபையால் ஒழுங்குபடுத்தி நடத்தப்பட வேண்டும் என்பது பிரசன்னமாகியிருந்த எமது உறுப்பினர்கள் யாவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நடைபெறும் அமைவிடமானது பிரதேச சபைக்குரிய காணியாகும். சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுக்க ஒரு உறுப்பினர் குழு நியமிக்கப்பட்டது.எமது இனத்திற்கு ஏற்பட்ட ஒரு பேரவலத்தின் நினைவுகூரும் நிகழ்வானதால் எம்முடன் ஒன்று சேர்ந்து மேற்படி நடவடிக்கைகளில் ஈடுபட பல அமைப்புக்கள் தமது விருப்பத்தினை தெரிவித்துள்ளன. அவ்வாறான அக்கறையுடைய, கரிசனையுடைய அனைத்து அமைப்புக்கள் எமது மேற்படி குழுவுடன் 09-05-2018 அன்று முற்பகல் 11.30 மணிக்கு கைதடி முதலமைச்சரின் மாநாட்டு மண்டபத்தில் கூடி இவ்வாறான நிகழ்வை ஒன்றுபட்டு எல்லோருடைய ஒத்துழைப்புடன் சிறந்த முறையில் நடத்துவது சம்பந்தமாக ஆராயப்படும்.நாட்டமுள்ள அனைத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் இருவர் அவ்வவ்வமைப்புக்களின் சார்பாக குறித்த கூட்டத்திற்கு சமுகமளிக்குமாறு இத்தால் அழைக்கப்படுகின்றார்கள். என்று வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

05 மே 2018

நாரந்தனையில் பொலிஸ் மீது வாள்வெட்டு!

ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குலில் படுகாயமடைந்தார். ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி, சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடையவரே, பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.

03 மே 2018

திரிவுபடுத்தப்பட்ட செய்தி தொடர்பில் கஜேந்திரன் விளக்கம்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களிற்கு நிகரான ஒருவராக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னை ஒருபோதும் கருதியதில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மே தின நிகழ்வு யாழ் நல்லூர் கிட்டு பூங்காவில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் இ.எ.ஆனந்தராஜா அவர்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நிகரான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்று கூறினார் என்றும் அதனை கயேந்திரகுமாரே அவரூடாக திட்டமிட்டு செய்வித்தார் என்றும் திரிபுபடுத்தி வெளியிடப்பட்ட செய்திகள் தவறானவை. அவை எமது கட்சி மீதான காழ்ப்புணர்வாலும் கயேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான காழ்ப்புணர்வாலும் செய்யப்படும் பொய் பிரச்சாரங்கள். தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு நிகர் அவர் மட்டுமே என்பதும் அவருடன் யாரையும் ஒப்பிட முடியாதென்பதும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட கட்சியிலுள்ள அனைவரதும் உறுதியான நிலைப்பாடாகும். எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கும் தகுதி கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு உண்டு என்று ஆதரவாளர்கள் கூறும் சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களிடம் அவ்வாறு தன்னை குறிப்பிட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒருவராகவே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயற்பட்டுவருகின்றார். தேசியத் தலைவர் பிரபாகரன் முள்ளிவாய்க்கால் வரை பேச்சுவார்த்தை மேசையில் எத்தகைய அரசியல் நிலைப்பாட்டை இனப்பிரச்சினைத் தீர்வாக வலியுறுத்திவந்தாரோ அந்நிலைப்பாடுகளை விட்டுக்கொடுக்காமல் கொண்டு செல்ல வேண்டும் என்பதனை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அடிக்கடி வலியுறுத்துவதுண்டு. கஜேந்திரகுமார் தன்னை தமிழ் இனத்தின் தலைவராக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயற்படும் ஒருவர் அல்ல. அதனாலேயே வடக்கு மாகான முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவரக்ளுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரனை கொண்டுவரப்பட்டபோது அப்பிரேரணையை தோற்கடிப்பதற்காகவும் திரு விக்னேஸ்வரனுக்கு ஆதரவாகவும் இளைஞர்களை திரட்டிச் சென்று நடாத்திய போராட்டத்தில் திரு விக்னேஸ்வரன் தலைமையேற்க வரவேண்டுமென பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் வடக்கு மாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் புதிய கட்சி ஒன்றை ஆரம்பிக்கப்போவதாக கருத்துப்பட ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். அது தொடர்பில் ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோது தமிழ்த் தேசிய நிலைப்பாட்iடில் உறுதியற்ற நிலையிலுள்ள ஈபிஆர்எல்எவ் புளொட் த.வி.கூட்டணி ஆகிய தரப்புக்களை கைவிட்டு திரு விக்னேஸ்வரன் ஐயா அவர்கள் பேரவை உறுப்பினர்களையும் பொது அமைப்புக்களையும் இணைந்தவாறு கட்சியை உருவாக்கி எம்மை கூட்டுக்கு அழைத்தால் அவரது தலைமையில் இணைந்து தேர்தலில் போட்டியிடத் தயார் என்பதனை தெரிவித்திருந்தார். எதிர்காலத்தில் தன்னை தமிழினத்திள் தலைவர் என்ற அடிப்படையில் யாரும் கருத்துக்கூறக்கூடாது என்பதனை உறுப்பினர்களுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார் என்பதனையும் தங்களது கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்.