பக்கங்கள்

31 ஜூலை 2013

புங்குடுதீவில் உருக்குலைந்த நிலையில் சடலம்!

யாழ்ப்பாணத்தின் புங்குடுதீவுக்கடற்பகுதியில் உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. உருக்குலைந்த நிலையில் புங்குடுதீவு 10ம் வட்டார கடற்பரப்பில் கரையொதுங்கிய இந்த சடலத்தை கடற்படையினர் மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். அடையாளம் காணமுடியாதவாறு உருக்குலைந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள இந்த சடலம் தற்போது யாழ் போதனா வைத்திய சாலையின் சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கொக்குவில் பிடாரி அம்மன் கோயிலடியைச் சேர்ந்த தேவாராசா தினேஸ் என்ற 26 வயது இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.கடந்த 4 ஆம் மாதம் 10ஆம் திகதியில் இருந்து இவர் காணமல் போயுள்ளதாக அவரின் சகோதரனால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுயேச்சை குழுவாக போட்டியிடும் எண்ணம் எனக்கு கிடையாது!

வித்தியாதரன் 
வடமாகாணசபை தேர்தலில் சுயேச்சைக்குழுவாக போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது என்றும் நான் சுயேச்சைக்குழுவாக போட்டியிடுவதற்கு முயற்சி செய்வதாக வெளிவந்த செய்திகளில் எந்த வித உண்மையும் கிடையாது என ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் தினக்கதிர் இணையத்திற்கு தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் இடம் கிடைக்காததால் வித்தியாதரன் சுயேச்சை குழுவாக போட்டியிட உள்ளார் என சில அநாமதேய இணையத்தளங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. இது தொடர்பான உண்மை நிலையை அறிந்து கொள்வதற்காக வித்தியாதரனுடன் நாம் நேரடியாக தொடர்பு கொண்ட போது அவ்வாறான செய்திகளை வித்தியாதரன் அடியோடு மறுத்தார். நான் பதவி ஆசை பிடித்தவன் அல்ல, பதவி ஆசைக்காக தமிழ் மக்களுக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டேன் என்றும் வித்தியாதரன் தெரிவித்தார். சுயேச்சையாக போட்டியிடுவதற்கோ அல்லது தமிழரசுக்கட்சி தவிர்ந்த வேறு அரசியல் கட்சி ஒன்றில் போட்டியிடுவதற்கோ ஒரு போதும் முயற்சிக்கவில்லை. அவ்வாறு வெளிவந்த செய்திகள் அனைத்தும் பொய் என வித்தியாதரன் தெரிவித்தார். அதேபோன்று யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவையின் முன்னாள் செயலாளர் ப.தர்சானந் சுயேச்சைக்குழுவில் போட்டியிடப்போவதாக வெளிவந்த செய்திகளில் எந்த வித உண்மையும் இல்லை என தர்சானந் தெரிவித்துள்ளார். நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கும் இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ். மாவட்ட இளைஞரணித்தலைவர் பா.கஜதீபனின் தனிப்பட்ட வெற்றிக்காகவும் உழைக்கப்போவதாகவும் தர்சானந் தெரிவித்துள்ளார். பதவி மோகம் கொண்டு சுயேச்சையாக போட்டியிடப்போவதாக சில தீய சக்திகள் வதந்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் தர்சானந் தெரிவித்துள்ளார்.இவ்வாறு தினக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளது.

30 ஜூலை 2013

கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு படைகள் மிரட்டல்!

சுரேஷ் பிறேமச்சந்திரன் 
எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்தது முதலே இராணுவத்தினரின் அடக்குமுறைகள் ஆரம்பித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். சாவகச்சேரி வேட்பாளர் சயந்தன் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறைத் தலைவர் எழிலனின் மனைவி ஆனந்தி சசிதரன் ஆகியோரிடம் இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளனர். வேட்பு மனுக்களை தாக்கல் செய்து விட்டு வீடு திரும்பியவர்களிடம் அவர்களது அரசியல் நடவடிக்கை குறித்து இராணுவத்தினர் விசாரணை நடத்தியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த நடவடிக்கையானது தேர்தல் சட்டங்களுக்கு புறம்பானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வட மாகாணசபைத் தேர்தல்கள் சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கட்சித் தலைவர் சம்பந்தனிடம் உறுதியளித்திருந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறெனினும் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் படையினர் தமது கட்சி வேட்பாளர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதிக்கும், வெளிநாட்டு தூதரகங்களிடமும் கட்சித் தலைவர் சம்பந்தன் முறைப்பாடு செய்வார் என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

29 ஜூலை 2013

சாகும்வரை உண்­ணா­வி­ரதம் - செல்வம் அடைக்­க­ல­நாதன்

செல்வம் 
தமிழ் மக்­க­ளு­டைய தேசிய பிரச்­சி­னைக்கு தீர்வு கிடைக்­கா­விடில் சாகும் வரை உண்­ணா­வி­ர­தத்தில் ஈடு­படப் போவ­தாக வன்னி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­வித்­துள்ளார். இது தொடர்­பாக அவர் தெரி­வித்­த­தா­வது, அர­சாங்­கத்­தினால் அடுத்த வரு­டத்­துக்குள் தீர்வு முன்­வைக்­கப்­ப­டா­விடின் சாகும் வரை உண்­ணா­வி­ரதப் போராட்­ட­மொன்றை மேற்­கொள்ளப் போவ­தாக கடந்த வருடம் நவம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்­தி­ருந்தேன். 7 மாதங்கள் கடந்த நிலை­யிலும் அர­சினால் இன்னும் எந்த­வொரு தீர்வும் வழங்­கப்­ப­ட­வில்லை. அர­சுக்­கான கால அவ­காசம் இன்னும் நான்கு மாதங்­களே உள்­ளன. அதற்குள் தமிழ் மக்­க­ளு­டைய தேசிய பிரச்­சினை தீர்க்­கப்­ப­டாது போனால் நான் கூறி­ய­படி எதிர்­வரும் நவம்­பரில் இருந்து சாகும்­வரை உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­ப­டப்­போ­கின்றேன் என்றார். இதேவேளை, இதற்கு ஆதரவு வேண்டி ரெலோ அமைப்பினரால் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகின்றன.

28 ஜூலை 2013

இரவல் வாங்கிய நகையை கொடுக்க மறுத்தவர் கைது!

12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இரவலாக பெற்றுக் கொண்டு ஏமாற்றிய குற்றச்சாட்டின் அடிப்படையில்; ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இரவலாக பன்னிரெண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை இரவலாக பெற்றுக் கொண்டு ஏமாற்றிய மானிப்பாய் சுதுமலையைச்சோந்த 30 வயதான ஒருவருக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 22ஆம் திகதி முறையிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாணம் பொலிஸார் குறிப்பிட்ட சந்தேகநபரை அவரது விட்டில் வைத்து கைதுசெய்து யாழ்ப்பாணம் நிதிமன்றில் ஆயர்படுத்தியதைத் தொடர்ந்து எதிர்வரும்; 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தினால் கட்டளையிடப்பட்டுள்ளது என பொலிஸ் அத்தியட்சகர் எக்கநாயக்கா தெரிவித்துள்ளார்.

வாக்குகளை சிதறடிக்க தயா மாஸ்டரை சுயேட்சையாக களமிறக்க சதி!

சுதந்திரக்கட்சியில் வடக்கு தேர்தலில் குதிக்கப் போவதாக அறிவிப்பை விடுத்திருந்த விடுதலைப் புலிகளது பேச்சாளர் தயாமாஸ்டரையும் மஹிந்த அரசாங்கம் ஏமாற்றியுள்ளதா? அல்லது மகிந்த ராஜபக்ஸ சகோதரர்களின் அரசியல் வியூகமா என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன. இன்றிரவு வெளியான சுதந்திரக்கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளர் பட்டியலில் தயா மாஸ்டரது பெயர் இருந்திருக்கவில்லை. இதனையடுத்து தேர்தலில் தனித்து சுயேட்சையாகப் போட்டியிட தயா மாஸ்டர் முடிவு செய்துள்ளதாக தெரிய வருகின்ற போதும் அதனை தயா மாஸ்டர் உறுதிப்படுத்தவில்லை. இந்த நிலையில் நடைபெறவுள்ள வடமாகாண சபைத் தேர்தலில் சுதந்திரக்கட்சியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரங்களை சுதந்திரக்கட்சி வெளியிட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் சுதந்திரக்கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு ஏழு பேர் தெரிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் நாளைய தினம் இவர்கள் வேட்பு மனுவில் ஒப்பமிடவுள்ளதாக அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளா அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இதேவேளை சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன், முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான முடியப்பு றேமிடியஸ், சாவற்காட்டு கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் எஸ். பொன்னம்பலம், நெல்லியடி வணிகர் கழகத்தலைவர் அகிலதாஸ், யாழ் மாநர சபை உறுப்பினர் அகமட் சுபியான், எஸ்.செந்தூரன், எஸ். கதிரவேல் ஆகியோர் போட்டியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தயாமாஸ்டரை சுதந்திரக் கட்சி சார்பில் தேர்தலில் களமிறக்கினால் தெற்கில் கடும்போக்காளர்களிடையே ஏற்படும் அதிர்ப்தி ஒரு புறமிருக்க தேர்தலில் கூட்டமைப்பின் வாக்குகளை சிதறடிக்கும் இலக்கையே கொண்டிருக்கும் மகிந்த அரசாங்கத்தின் அரசியல் வியூகத்தில் தயாமாஸ்டர் தலைமையிலான முன்னாள் போராளிகளை தனித்து சுயேட்சையாக களமிறக்குவதனையும் அரசாங்கம் விரும்புவதாக தெரியவருகிறது.

27 ஜூலை 2013

பஷில் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை-சுரேஷ்

வட­மா­காண மக்­களின் விருப்­பத்­துக்கு இணங்­கவே முன்னா
ள் நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வ­ரனை நாம் முத­ல­மைச்சர் வேட்­பா­ள­ராக நிய­மித்­துள்ளோம். தேர்­தலில் அவர் அமோக ஆத­ரவைப் பெற்று பெரு வெற்றி அடை­யும்­போ­துதான் வட பகுதி மக்­களை யார் அவ­ம­தித்­தார்கள் என்­ப­தனை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ அறிந்­து­கொள்ள முடியும். எனவே வட­மா­காண மக்கள் குறித்து அமைச்சர் கவ­லைப்­பட வேண்­டி­ய­தில்லை என்று தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பேச்­சா­ளரும் யாழ்.மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­வித்­தார்.

பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவை கோத்தா சந்திக்க மறுப்பு!

கோத்தா படைகளுடன்
பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பை கோத்தபாய ராஜபக்ச கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளார்.பிரித்தானிய நாடாளுமன்றக் குழு தற்போது சிறிலங்காவில் உண்மை கண்டறியும் பயணத்தை மேற்கொண்டுள்ளது.இந்தக் குழு வடக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று நிலைமைகளை பார்வையிட்ட நிலையில்,நேற்று கொழும்பில் அரசதரப்புடனான சந்திப்புகளை மேற்கொண்டது.நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலரை சந்திக்கத் திட்டமிட்டிருந்த நிலையில்,பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடனான சந்திப்பை கோத்தாபய ராஜபக்ச கடைசி நேரத்தில் நிறுத்தியுள்ளார்.முன்னதாக, சிறிலங்கா ஜனாதிபதியையும் இந்தக் குழு சந்திக்கத் திட்டமிட்டிருந்தது.ஆனால்,இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்,சைமன் டன்சுக்,சிறிலங்கா ஜனாதிபதியைச் சந்திக்கும் போது,பிரித்தானிய சுற்றுலாப் பயணியின் கொலை தொடர்பாக கேள்வி எழுப்பப் போவதாக வெளியிட்ட கருத்து சிறிலங்காவுக்கு விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.இதனால்,பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுக்கும்,மகிந்த ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நிறுத்தியது.இந்தநிலையிலேயே கோத்தபாய ராஜபக்சவும்,பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவை சந்திக்காமல் தவிர்த்துள்ளார்.

26 ஜூலை 2013

இணக்க அரசியல் நடத்துவதற்கு விக்னேஸ்வரனே பொருத்தமானவர் - பஸில்

"அரசுடன்
இணக்க அரசியல் நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பாக வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள சி.வி.விக்னேஸ்வரனே பொருத்தமானவர். ஏனெனில் அவர் எமது அமைச்சர் ஒருவரின் உறவினர். இவரின் நியமனத்தை நாம் வரவேற்கிறோம். இந்த விடயத்தில் கூட்டமைப்பின் முடிவு எமக்குச் சாதகமானது."இவ்வாறு பஸில் ராஜபக்ஷ நேற்றுத் தெரிவித்தார்.தமிழ்ப் பத்திரிகை ஊடகவியலாளர்களுடன் பஸில் ராஜபக்ஷ நேற்று விசேட கலந்துரையாடலொன்றை நடத்தினார்.பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கருத்து கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது;உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக நியமித்துள்ளமை எமக்குச் சாதகம்தான்.இவரது நியமனத்தை நாம் வரவேற்கிறோம்.ஏனெனில் அவர் எமது அமைச்சர் ஒருவரின் உறவினர்.அத்துடன்,எம்முடன் இணைந்து செயற்படக் கூடியவர்.தமிழ்க் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில்,முதலமைச்சர் வேட்பாளர் விடயத்தில் வடக்குத் தமிழர்களை அவமதித்து விட்டது என்று சொல்லலாம்.ஏனெனில்,நாடாளுமன்றம் என்பது தேசிய இடம்.அங்கு எவரும் பிரதிநிதித்துவப்படுத்தலாம். ஆனால் மாகாணசபை எனும்போது குறித்த மாகாணத்தைச் சேர்ந்தவரே அதைப் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும்.முதலமைச்சர் வேட்பாளராகவும் அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரையே நியமிக்க வேண்டும். இந்த விடயத்திலேயே வடக்குத் தமிழர்களை கூட்டமைப்பு அவமதித்து விட்டது. விக்னேஸ்வரனை தேசிய அரசியலில் களமிறக்கலாம்.கூட்டமைப்புக்குத் தேவையாயின் சுமந்திரனின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விக்னேஸ்வரனுக்கு வழங்கலாம்.வட மாகாணத்தைப் பொறுத்தவரையில்,நான்கு மாவட்டங்களில் நாம் முன்னணியில் இருக்கின்றோம்.எமக்கான வெற்றிவாய்ப்புகள் அங்கு அதிகமாக இருக்கின்றன.அந்த வெற்றியை நாம் எதிர்பார்க்கிறோம்.வடக்குத் தேர்தலுக்கு நாம் ஏற்கனவே தயாராகிவிட்டோம் என்றார் பஸில்.

25 ஜூலை 2013

மாதகலில் மீட்கப்பட்ட மண்டை ஓடுகள்!

இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட மாதகல் மேற்குப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மனித மண்டையோடுகள், எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டு வருகின்றன. நேற்றுப் புதன்கிழமை இரண்டு மனித மண்டையோடுகள் மற்றும் பல் தாடைகள், எலும்புகள் என்பன இந்தப் பகுதியில் உள்ள மலசல கூட குழி ஒன்றை மீள்நிர்மாணம் செய்ய முற்பட்டபோது மீட்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரால் யாழ். குடாநாடு கைப்பற்றப்பட்ட பின்னர் மாதகல் மேற்குப் பகுதி உயர்பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு கடந்த வருடமே விடுவிக்கப்பட்டது. அண்மையிலும் இதேபோன்று மலசலகூடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டப்பட்ட போது அந்தக் குழியிலிருந்து மண்டையோடுகள் மற்றும் எலும்புக் கூடுகள் என்பன மீட்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

24 ஜூலை 2013

மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்கிறது தமிழரசு கட்சி!

newsவவுனியா,கிளிநொச்சி மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி என்ற பெயரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது சந்தர்ப்பத்தைப்பயன்படுத்தி மக்களை திசைதிருப்பலாம் என கனவுகாணும் கைக்கூலிகளது வேலையே என தமிழரசுக்கட்சியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வவுனியா,கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கு எதிரான வாசகங்கள் பொறிக்கப்பட்டு,தமிழரசுக் கட்சியின் வவுனியா,கிளிநொச்சிக் கிளை என உரிமைகோரப்பட்ட சுவரொட்டிகள் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகள் குறித்து தமிழரசுக் கட்சியின் வவுனியா,மற்றும் கிளிநொச்சி மாவட்ட கிளையின் பிரதிநிதிகளைத் தொடர்புகொண்டு கேட்டபோது, இந்த வேலைகளை செய்வது யார் என்பது மக்களுக்கு நன்கு தெரியும். மாவையை முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்க முதலில் பலர் விருப்பம் தெரிவித்தனர். அதனால் அவருக்கு ஆதரவான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு கட்சிகள் அனைத்தும் கூடி இறுதியான முடிவை எட்டின. இந்த சம்பவங்கள் அனைத்தும் மக்களுக்கு நன்குதெரியும். ஆனால் இதனை தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள சிலர் முயற்சிக்கின்றனர். இவ்வாறானவர்கள் கூட்டமைப்புக்கட்சிகளுக்குள் குழப்பம் என காட்டியும்,நாடாளுமன்ற உறுப்பினர்களை இழிவுபடுத்தியும் அரசியல் செய்ய முற்படுகின்றனர். இவ்வாறான செயற்பாடுகள் இனிவரும் நாட்களில் அதிகமாகவே இருக்கும். இது குறித்து மக்கள் தெளிவாக இருக்கவேண்டும் என கூட்டமைப்பு கட்சிகள் சார்பாகக் கோருகின்றோம் என்று அந்தப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.