பக்கங்கள்

22 மார்ச் 2013

முகநூலில் அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை-அருள்

முகநூலில் தனக்கும் தனது குடும்பத்திற்கும் எதிராக அவதூறு பரப்பி தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுத்து வந்தவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அருள் என அழைக்கப்படும் திருஞானம் அருள்செல்வன் தெரிவித்துள்ளார்.அது தொடர்பான நகலையும் எமக்கு அனுப்பி வைத்துள்ளார்.அவர் குறிப்பிட்டுள்ள விடயங்களை இங்கு அப்படியே தருகின்றோம்.இணையங்களில் எழுதும் சிலர் பொழுது போக்குக்கு எதை வேண்டுமானாலும் எழுதலாம் என நினைக்கிறார்கள்.அவர்கள் சட்டம் பற்றி தெரிந்து கொள்வதில்லை.ஒருவர் புகைப்படத்தை அவர் அனுமதி இன்றி இணையத்தில் விடுவது சட்டப்படி குற்றம்,அந்த படத்தில் உள்ளவர் தொடர்பில் தவறான கருத்துக்களை வெளியிடுவதும் தண்டனைக்குரிய குற்றம்.ஆனால் இந்த சட்ட திட்டங்களை எல்லாம் மீறி புளியங்கூடல் குழுமம் என்ற பெயரில் இயங்கும் முகநூலில் எமக்கெதிராக மாபெரும் சதி அரங்கேற்றப்பட்டது.ஆகவே எமக்கு இவர்களால் ஏற்படுத்தப்பட்ட களங்கத்தை போக்க சட்டம் ஒன்றே சிறந்த வழி எனப்பட்டது.எனவேதான் சட்டவாளர்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டேன்,எனக்கு புளியங்கூடல் முகநூல் மூடபடுவதில் எந்த இலாபமும் இல்லை,ஆனால் அதை இயக்கி வந்த அதன் ஸ்தாபகர் எமக்கெதிரான இந்த பெரும் அவதூறான பரப்புரைக்கு துணை போயுள்ளார் என்பதே எனக்குள்ள மிகப்பெரும் ஆதங்கமாகும்.அதனால் தான் வழக்கு தாக்கல் செய்ய வேண்டிய நிலை எனக்கு ஏற்பட்டது.புளியங்கூடல் குழுமத்தின் ஸ்தாபகர் யார் என்று தெரியாமலேயே தான் வழக்கை தொடர்ந்தேன்,பின்னர் பொலிசாரால் புளியங்கூடல் குழும ஸ்தாபகர் அடையாளம் காணப்பட்டார்.அதன் பின்னர் எனது சகோதரருடன் தொடர்புகொண்டு விடயத்தை தெரிவித்தபோதுதான் தெரியவந்தது எனது பாடசாலை நண்பனின் சகோதரர்தான் புளியங்கூடல் குழும ஸ்தாபகர் என்பது.எனக்கு இவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற விருப்பம் இருந்ததில்லை ஆனாலும் சட்ட ரீதியில் அணுகும் போது தவறை உணர்ந்து செயற்படுவார்கள் தண்டனை வரை செல்லாமல் தவிர்த்துக் கொள்வோம் என்று எண்ணி இருந்தேன்,இதற்கிடையில் குழும ஸ்தாபகர் இந்த முகநூலை இனியும் கொண்டு செல்ல எனக்கு விருப்பம் இல்லை யாராவது இதை பொறுப்பேற்று நடத்துங்கள் என்று அறிவித்தல் விடுத்ததாக  அறிந்தேன்,இவர் மீது வழக்கு பதிவு செய்யபட்டு இருக்கும்போது  இவர் இதை வேறு யாரிடமும் கொடுத்தால் சிக்கலுக்குள் தள்ளப்படுவார் என்ற ஒரு நல்ல எண்ணத்தில் தான் இவருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எனது மனைவி இறக்கும் முன்பும் சரி இறந்த பின்பும் சரி என் வாழ்க்கையை பற்றி எவருடனும் பேசிக்கொள்ளாத நான் முதல் முறையாக இவரிடம் பேசினேன்,அவரும் தனது தவறையும் ஆபத்தையும் உணர்ந்து,உடனடியாகவே தனது புளியங்கூடல் குழுமத்தை மூடிவிடுவதாக தெரிவித்தார்.நான் அதை மறுத்தேன் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்,நான் பேசியதற்காக எதையும் செய்ய வேண்டாம் என கூறி,சட்டவாளர் மூலம் உங்களுக்கான எச்சரிக்கை அறிவித்தலும்,உங்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாகவும் அறிந்து கொள்ளுங்கள் அத்துடன் சட்டவாளர் என்ன சொல்கிறாரோ அதை செய்யுங்கள் என்று தெரிவித்தேன்.அத்துடன் நான் உங்கள் மேல் தொடுத்திருக்கும் வழக்கை வாபஸ் வாங்க தயாராக இருக்கிறேன்,நீங்கள் சட்டவாளரிடம் மன்னிப்பு கடிதம் ஒன்றை கொடுங்கள் நானும் வழக்கை வாபஸ் வாங்குவதற்கான கடிதத்தை கொடுக்கிறேன்,காவல்துறைக்கு வழக்கை நீக்க இது அவசியம் என்று கூறி இருந்தேன்,இதன் பின்னர் புளியங்கூடல் குழும ஸ்தாபகரின் சகோதரர் (எனது பாடசாலை நண்பர்)என்னுடன் தொடர்புகொள்ள முயன்றார், நான் எனது தொழில்சார்  விடையமாக வெளிநாடு சென்றிருந்ததால் திரும்பியாவுடன் அவருடன் தொடர்புகொண்டேன்,அவர் தனது சகோதரர் மீதான வழக்குகள் பற்றி எதுவும் என்னுடன் பேசவில்லை.ஆனால் பின்னர் குழும ஸ்தாபகர் என்னுடன் தொடர்பு கொண்டார்,நீங்கள் உங்கள் முகநூல் பக்கத்தை தொடர்ந்து நடத்த விரும்புகிறீர்களா?என அவரிடம் வினவினேன்,அதற்கு அவர் இதை ஏற்கனவே மூடி விட முயன்றேன் ,சில நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்கத்தான் நடத்தி வருகிறேன் என்று சொனார்,எனக்கு உங்கள் குழுமத்தை மூடிவிட வேண்டும் என்பதெல்லாம் இலக்கு இல்லை,உங்கள் குழுமத்தில் வெளிவந்த உண்மைக்கு புறம்பான எமது குடும்பத்திற்கெதிரான அவதூறான கருத்துக்களுக்கு பகிரங்க மன்னிப்புக்கோரி அறிக்கை விடும்படியும் அவரிடம் கேட்டிருந்தேன்.உங்கள் கையில்தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தங்கியிருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினேன்.ஆனால் அவர் என்னுடன் பேசியது சம்பந்தமாக புளியங்கூடல் குழுமத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டு விட்டு ஒரு சில நிமிடங்களில் அந்த அறிவித்தலை நீக்கி விட்டு,ஸ்தாபகரின்  சகோதரர் நான் தான் இனி இதற்கு பொறுப்பு என்னுடன் அருள் தொடர்பு கொள்ளலாம் என அறிக்கை விட்டதாக அறிந்தேன்.இவர்களது இந்த செய்கையானது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை உண்டுபண்ணியது.உண்மைக்கு புறம்பாக அவர்கள் ஏன் நடந்து கொள்கிறார்கள் என்பதை என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை!என்னுடன் தொடர்பில் இருக்கும் அவர்கள் நினைத்திருந்தால் ஒரு சுமூகமான நிலைப்பாட்டிற்கு வந்திருக்கலாம் என்பதே உண்மை.புளியங்கூடல் குழும ஸ்தாபகர் மீது நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது,இதில் 180 நாள் சிறை தண்டனையுடன்  அபராதமும் அத்துடன் நான்கு வருடங்களுக்கு அவரின் நடவடிக்கைகளில் கண்காணிப்பும் உள்ளன, swiss art:259 art:180 art:174 art:173 ஆகிய சட்டக் கோவைகளின்படி  இவர் மீது இவ்வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன,நான் முதலில் கூறியது போல எனக்கு இந்த முகநூலை மூடுவதில் எந்த லாபமும் இல்லை அது என் இலக்கும் கிடையாது,எமது ஊருக்கு நன்மை அளிக்கும் எதையும் நான் அழிக்க விரும்பவில்லை,ஆனால் உண்மையில் இந்த குழுமமானது எமது ஊருக்கு களங்கத்தையே ஏற்படுத்தி இருக்கிறது.குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க படவேண்டும் என்பதே எனது நோக்கம்.அவதூறுக்கருத்துக்களை வெளியிட்டவர்களது IP காவல்துறையினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது,மேலும் சில விபரங்களை திரட்டுவதற்காக புளியங்கூடல் குழும பதிவில் உள்ள blackbook ஐ காவல்துறையினர் நாடி உள்ளனர் facebookநிறுவனம் இந்த விபரங்களை கையளித்ததும் குற்றவாளிகள் அம்பலப்படுத்தப் படுவார்கள்.தவறான செய்தியை வெளியிட்ட நிறுவனகள் மீதும் மான நஷ்ட வழக்குகள் தொடரப்படுள்ளன,அவர்கள் மூலம் தவறான செய்தியை கொடுத்தவர்களை வெளி உலகத்துக்கு எடுத்து வருவதே என் நோக்கம்,ஊர் பெயரை சொல்லிக்கொண்டு சில விஷமிகள் செயற்பட்டிருக்கிறார்கள்,ஆனால் உண்மையான எம் ஊர்க்காரர் இப்படி அநாகரிகமான செயற்பாடுகளில் இறங்க மாட்டார்கள் என்பது எனது நம்பிக்கை.ஒரு குடும்பத்தின் வேதனையை இந்த ஈனப்பிறவிகள் எப்படியெல்லாம் இரசித்திருக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது,இவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பதில் தப்பில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த துயர் நிலை வேறெந்தக் குடும்பத்திற்கும் இனி ஏற்படக்கூடாது என்பதே என் பெரு விருப்பு.

2 கருத்துகள்:

  1. இங்கு இடம் பெற்றுக்கொண்டிருப்பது இரு குடுமங்களுக்கான விடயங்கள் தான் மறுக்கமுடியாது.சசீந்தினி மரணத்தில் மர்மம் என்பதை சசீந்தினி வாழ்ந்து இறந்த இடமும் அவரின் கணவர் வாழும் இடமுமே முதன்மயாக கருத முடியும்.
    சசீந்தினிவின் பெற்றோர் மற்றும் சகோதரிகளிடம் கேட்பதற்கு என்ன இருக்கிறது என எனக்கு புரியவில்லை.சசீந்தினி மரணத்தில் மர்மம் இருப்பின் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களை(கணவர் மற்றும் அவர் இறந்த இடம்) வினாவுதலே சிறந்த வழி என்பது தான் உண்மை.நடுநிலை வகிப்பது அவசிம் தான் ஆனால் இந்த விடயத்தில் மரணத்தில் மர்மம் இருபின் உங்கள் செய்தி 100% சரியானதே.

    பதிலளிநீக்கு
  2. அன்பின் நண்பன் ரவீஸ் பசுபதி.
    நலம் நலம் அறிய ஆவல். நீங்கள் புளியங்கூடல் இணையபக்கத்தினை நடாத்திவருவதையிட்டு புளியங்கூடல் மக்களாகிய நாம் பெருமையடைகிறோம்.. லங்காஸ்ரீ போன்ற பக்கங்களுக்கு பெரும்தொகை பணத்தை அள்ளி வழங்காமல் எங்களுடைய சொந்த இணையபக்கத்தில் எங்களது நிகழ்வுகள் கோவில்திருவிழக்கள் மரண அறிவித்தல்கள் நினைவஞ்சலிகள் போன்றவற்றை பிரசூரிப்பதில் மகிழ்வடைகின்றோம். அனால் இப்போது நீங்கள் ஒருதலைபட்சமான கருத்து பிரசூரிப்பது எவ்வளவு சரியானது என்று தெரியவில்லை. புளியங்கூடல் மக்களுக்கு அநேகமானோருக்கு சசீந்தினியின் இறப்பில் இன்னமும் சந்தேகம் இருக்கிறது. இதை நீங்கள் எவ்வளவுதூரம் அறிந்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. உங்களுக்கு சசீந்தினியின் வழக்கை வரலாறு தெரியவில்லை என்றால் நீங்கள் இங்கே ஒருதலைபட்சமான கருத்துக்களை வழங்குவது எவ்வளவு பொருத்தமானது என்று தெரியவில்லை. முதலில் சசீந்தினியின் அப்பாவிடமோ அல்லது அவர்களுடைய சகோதரிகளிடமோ விடயத்தை அறிவது பொருத்தமாக இருக்குமென்று நம்புகிறோம்.அல்லது இருதரப்பாரினதும் கருத்துகளை பிரசூரிக்காமல் நடுநிலைமை வகித்தால் உங்களுடைய இந்த இணைய சேவையை எல்லோரும் பிரயோசனமாக பயன்படுத்தலாம்..
    ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பதற்கு இணங்க இங்கே சிலர் எங்கள் ஊரில் நடந்த இந்த துன்ப நிகழ்வால் துண்டாகிபோன இரு புளியங்கூடல் முகபக்கங்களால் தேவையற்று முரண்பட்டு சம்பந்தபட்ட இரு குடும்பங்களுடனும் கலந்தாலோசிக்காமல் முட்டிமோதிகொள்வது சகோதரர்களுக்கிடையே இடம்பெறும் தற்காலிக சண்டையாகும்.. இதை பெரிதுபடுத்தி நீங்களும் நடுநிலைமை வகிக்காமல் ஒரு பக்கம் சார்பாக பேசுவது ஒரு நன்கு படித்த இணையபக்கத்தினை நடு நிலமையுடன் நடாத்தும் ஒரு ஆசிரியருக்கு அழகல்ல. தயவுசெய்து நாங்கள் இவ்வளவு காலமும் அமைதியாக சந்தோசமாக சகோதரத்துவமாக வாழ்ந்த ஊருக்குள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாமென்று மிகவும் பணிவுடன் கேட்டுகொள்கிறேன். நன்றி வணக்கம் .

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.