பக்கங்கள்

31 ஆகஸ்ட் 2010

மேர்வின் சுற்றவாளியாம்?


பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக இருந்த மேர்வின் சில்வா குற்றம் எதையும் இழைத்து இருக்கவில்லை என்று அவரை விசாரித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒழுக்காற்று விசாரணைக் குழு அறிவித்துள்ளது.
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தில் கலந்து கொள்ளத் தவறிய சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவரை மேர்வின் சில்வா மாமரம் ஒன்றில் கட்டிப் போட்டார் என்கிற குற்றச்சாட்டு தொடர்பாகவே இவ்விசாரணை இடம்பெற்றது.
கட்சித் தலைவருமான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் உத்தரவின் பேரிலேயே இவ்விசாரணை நடத்தப்பட்டது இவ்விசாரணையின் முடிவில் மேர்வின் நிரபராதி என்றும் சுய விருப்பின் பேரில் சமுர்த்தி உத்தியோகத்தர் சுயமாகவே மரத்தில் கயிற்றால் கட்டிக் கொண்டார் என்றும் ஒழுக்காற்றுக் குழு முடிவுக்கு வந்துள்ளது.
அச்சமுர்த்தி உத்தியோகத்தர் இவ்வாறுதான் விசாரணைக் குழுவுக்கு தெரிவித்துள்ளார் என்றும் தெரிய வருகிறது. ஒழுக்காற்றுக் குழுவின் விசாரணை அறிக்கை ஜனாதிபதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சுட வேண்டாம்.... சுட வேண்டாம் என்று மகேஸ்வரன் கத்தினார் ! நேரில் கண்ட சாட்சிகளில் ஒருவர் மன்றில் தெரிவிப்பு.


ஐ.தே.க வின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரன் படுகொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்றது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ இவ்வழக்கை விசாரித்தார். இவ்வழக்கில் அரசுத் தரப்புச் சாட்சிகளாக மூவர் ஆஜராகி சாட்சியம் வழங்கினர்.
மகேஸ்வரனின் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிய சார்ஜண்ட் தர்மஸ்ரீ பெரேரா, காரைநகரை சொந்த இடமாகக் கொண்டவரான சோதிலிங்கம், கொட்டாஞ்சேனையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்தவரான நவரட்ணம் தினேஸ் சுபராஜா ஆகியோரே சாட்சியம் வழங்கினர்.
சாட்சிகளை அரச சட்டவாதி குமாரரட்ணம் நெறிப்படுத்தினார். இவ்வழக்கின் எதிரி கொலின் வெலண்டன். இவரின் சார்பில் சட்டத்தரணி எஸ்.ஜெயக்குமார் ஆஜரானார்.
அவர் இச்சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தார். சார்ஜண்ட் தர்மஸ்ரீ பெரேரா சாட்சியம் வழங்கியபோது எதிரி சம்பவ தினம் அணிந்திருந்தார் என்று கூறப்படும் மேலாடையை அடையாளம் காட்டினார்.
எதிரி இச்சட்டையைத்தான் சம்பவதினம் அணிந்திருந்தார் என்று உறுதிப்படுத்தினார்.இம்மேலாடை வழக்கின் தடயப் பொருட்களில் ஒன்றாகும்.
அவர் சாட்சியத்தில் முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-
”எதிரி மீது எனது கைத்துப்பாக்கியால் சுட்டேன். இதனால் எதிரி காயமடைந்தார் அவர் நான் கடமையின்போது கைத்துப்பாக்கியையே பாவித்து வந்துள்ளேன். அதில் ஒரே தடவையில் ஆறு ரவைகளைப் போட்டு சுட முடியும்.
சம்பவதினம் நான் 15 தடவைகள் வரை எனது கைத்துப்பாக்கியால் சுட்டிருப்பேன். எனது கைத்துப்பாக்கியால் சுட்ட குண்டின் காரணமாகவே எதிரி காயமடைந்தார் .” அப்போது குறுக்கீடு செய்த எதிரி தரப்பு சட்டத்தரணி எஸ். ஜெயக்குமார்,
கடந்த தவணை சாட்சியமளித்த போது உங்களது துப்பாக்கிக் குண்டு பட்டு எதிரி காயமடைந்தாரா? என்பது குறித்து தெரியாது என தெரிவித்தீர்கள். தற்போது உங்களது ரிவோல்வர் குண்டினாலேயே எதிரி காயமடைந்தாரென பொய் சாட்சியம் கூறுகின்றீர்கள் என்று வினவினார். இதற்கு பதிலளித்த சாட்சி இல்லை, எனது ரிவோல்வர் குண்டினாலேயே எதிரி காயமடைந்தார் என்று தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து சாட்சியம் வழங்குகையில் எதிரி எந்த ஆயுதத்தால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டார் என்பதை கண்டிருக்கவில்லை என்றும் ஆனால்அவரது துப்பாக்கிச் சூட்டில் எதிரி கையில் காயமடைந்திருந்தமையை கண்டார் என்றும் தெரிவித்தார். எதிரியை சுடப் பயன்படுத்தினார் என்று கூறப்படும் ரிவோல்வரை சாட்சி மன்றுக்கு அடையாளம் காட்டினார். இந்த ரிவோல்வரும் தடயப் பொருட்களில் ஒன்றாகும்.
சோதிலிங்கம் அவரது சாட்சியத்தில் தெரிவித்தவை வருமாறு:-
”2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி கொழும்பு கொச்சிக்கடை பொன்னம்பல வானேஸ்வரர் ஆலயத்துக்கு காலை 6 மணியளவில் நான் சென்றேன். அங்கு இரண்டு மூன்று மணித்தியாலங்கள் வரை நின்றிருப்பேன். ஆலயத்துக்குள் மகேஸ்வரனும் நின்றிருந்தார். அவரது கடைசி மகள் , பாதுகாப்பு உத்தியோகத்தர் ஆகியோருடன் வந்திருந்தார்.
சிறுவயதிலிருந்தே மகேஸ்வரனை நன்கு அறிவேன். எமது ஊரவர் ஆவார். ஆலயத்துக்கு அவர் வந்தால் சுற்றி கும்பிடுகின்றமை வழக்கமாகும். அதன்படி அன்றைய தினமும் அவர் ஆலயத்தைச் சுற்றி வந்தார்.
ஆலயத்தைச் சுற்றி அவர் வந்தபோது நான் அவருக்கு முன்பாக வந்து வெளிவாசலை அடைந்தேன். அப்போது அவர் என்னிலிருந்து 20 அடி தூரத்தில் நின்றிருந்தார். நான் பிரதான வாசலால் வெளியே வந்தபோது துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்டன. சுட வேண்டாம்.... சுட வேண்டாம் என மகேஸ்வரன் கத்தியமை எனக்கு கேட்டது.
ஆனால் அவர் யாருடையதாவது பெயரைச் சொல்லி கத்தினாரா? என்பது எனக்கு தற்போது ஞாபகமில்லை . துப்பாக்கிச் சூட்டு சத்தத்தை அடுத்து உள்ளிருந்த பக்தர்கள் முட்டி மோதிக்கொண்டு வெளியே வந்தனர். இதன்போது நானும் வெளியே வந்தேன்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது இரத்தம் தோய்ந்த நிலையில் மகேஸ்வரன் கீழே விழுந்து கிடந்தார்.” நவரட்ணம் தினேஷ் சுபராஜா அவரது சாட்சியத்தில் கூறியவை வருமாறு:- ”10 வருடங்களாக நான் கொழும்பில் தங்கியிருக்கிறேன்.
2008 ஜனவரி மாதம் முதலாம் திகதி நான் சங்கமித்தை மாவத்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தேன். சம்பவதினம் 8 மணிக்கும் 9.30 மணிக்கும் இடையில் எமது கடைக்கு முன்னால் ஒருவர் விழுந்து கிடக்கிறாரென தெரிவித்தனர். அவருக்கு நீர் வழங்க வேண்டும் என்று சிலர் கூறினர். நான் தண்ணீர் எடுத்துக்கொண்டு அங்கு சென்றபோது சேட்டும், டவுசரும் அணிந்த ஒருவர் கீழே விழுந்திருந்தார்.
அவரது முகத்தின் ஒரு பக்கத்தில் இரத்தம் காணப்பட்டது. அவர் அணிந்திருந்த சேட்டின் நிறம் எனக்கு ஞாபகமில்லை. அப்போது அவ்வழியால் பொலிஸ் ஜீப் ஒன்று வந்தது. மக்கள் அந்த இடத்தில் கூடி நின்றமையினால் என்ன நடந்தது? என பொலிஸார் கேட்டனர். நாம் ஒருவர் விழுந்து கிடக்கின்றார் எனக் கூறியபோது அனைவரும் விலகிச் செல்ல வேண்டும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அப்போது முச்சக்கர வண்டியில் வந்த இருவர் விழுந்து கிடப்பவர் நன்கு தெரிந்தவர் எனக் கூறி ஆட்டோவில் அவரை ஏற்றிச் சென்றனர். கோவிலில் அமைச்சர் ஒருவருக்கு வெடி வைத்து விட்டனர் என்று பின்னர் சிலர் அவ்விடத்தில் பேசிக் கொண்டனர்.
எமது கடைக்கு முன்னால் விழுந்திருந்தவரை அப்போது நான் அடையாளம் கண்டிருக்கவில்லை.” நவரட்ணம் தினேஸ் சுபராஜாவிடம் நீதிபதி கேள்விகள் கேட்டார். சுபராஜ் பதில் வழங்கினார்.
அவற்றின் தொகுப்பு வருமாறு:-
நீதிபதி: விழுந்து கிடந்தாரென நீங்கள் தெரிவித்திருக்கும் நபர் இந்த நீதிமன்றத்தில் எங்காவது இருக்கின்றாரா?
சாட்சி: (எதிரிக்கூண்டில் இருந்த எதிரியைக் காண்பித்து ) இவர்தான் அவர். நீதிபதி
கேள்வி: அவர் அணிந்திருந்த சேட்டின் நிறம் தெரியுமா?
சாட்சி: அரைக்கை சேட்டே அணிந்திருந்தார். சம்பவம் இடம் பெற்று ஓரிரு தினங்களில் குற்றப்புலனாய்வுப் பொலிஸார் என்னிடம் விசாரணை நடத்தினர். கடைக்கு முன்னால் விழுந்திருந்த இளைஞனை அடையாளம் காட்ட முடியுமா? எனக் கேட்டனர். இதனையடுத்து குற்றப்புலனாய்வுப் பொலிஸ் தலைமையகத்துக்கு சென்ற நான் அங்கு வாக்கு மூலம் அளித்தேன். எதிரியையும் அடையாளம் காட்டினேன். அத்துடன் விழுந்து கிடந்த நபரை ஆட்டோவில் ஏற்றிச் சென்ற மற்றொருவரையும் நான் அங்கு அடையாளம் காட்டினேன் என்று தெரிவித்தார்.
இச்சாட்சியங்களை அடுத்து நீதிபதி இவ்வழக்கை ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார். மகேஸ்வரனின் சகோதரர்களான தியாகராஜா பரமேஸ்வரன், தியாகராஜா துவாரகேஸ்வரன், ஆகியோரும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

30 ஆகஸ்ட் 2010

போர் குற்றவாளிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள தயாராகின்றது தமிழ் சமூகம்.


எதிர்வரும் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறும் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் தனது பரிவாரங்களுடன் ஐ.நா செல்ல திட்டமிட்டுள்ளார் மகிந்தா ராஜபக்சா.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
எதிர்வரும் மாதம் நியூயோர்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்ளும் நோக்கத்துடன் தனது பரிவாரங்களுடன் ஐ.நா செல்ல திட்டமிட்டுள்ளார் மகிந்தா ராஜபக்சா.
அவருடன் வர்த்தகர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் கொண்ட குழுவும் ஐ.நா செல்லவுள்ளது. இந்த விஜயத்தை தொடர்ந்து மெக்சிக்கோ மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் மகிந்த விஜயத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
இதனிடையே எதிர்வரும் 22 ஆம் நாள் நடைபெறும் இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்ளும் மகிந்தாவின் பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை ஐ.நா அலுவலகத்திற்கு வெளியில் மேற்கொள்ள புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் மகிந்தாவிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என புலம்பெயர் தமிழ் சமூகம் கோரிக்கை விடுத்து வருகின்றது.
ஆனால் மகிந்தாவுக்கு எதிராக சிங்களவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என அரச தரப்பு தெரிவித்துள்ளது.

3வது நாளில் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கிய மூன்று ஈழ உணர்வாளர்களின் மனிதநேய நடை பயணம்.



ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள திரு. ஜெகன் (62) அவுஸ்திரேலியா, திருமதி தேவகி குமார் (36) சுவிஸ், திரு. வினோத் (48) பிரான்ஸ் ஆகிய மூன்று ஈழ உணர்வாளர்கள் இன்று (30.08.2010) 3வது நாளில் தமது நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் (28.08.2010) ஜெனீவாவிலிருந்து Nyon வரை 23km தூரம் வந்தடைந்த இவர்கள் நேற்று (29.08.2010) தொடர்ந்து Rolle, Morges ஆகிய பிரதேசங்கள் ஊடாக 42km தூரம் நடந்து Lausanne-Renens பிரதேசத்தை சென்றடைந்தனர். இன்று (30.08.2010) இங்கிருந்து நடைபயணம் தொடரும்.
இவர்கள் செல்லும் பிரதேசங்களில் பல இடங்களில் தமிழ் மக்கள் உற்சாகமளித்து சிற்றுண்டிகளையும் பானங்களையும் வழங்கி ஆதரவளித்ததுடன் பலர் இணைந்து நடந்தும் சென்றனர்.
•இலங்கை அரசு மீது ஐ.நா. சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
•எமது பெண்கள் சிறுவர்கள் மீது அநீதியிழைத்த சீறீலங்கா அரசு மீது சர்வதேச நீதிமன்றத்தில் தண்டணை வழங்கப்படவேண்டும். அத்துடன் சிறைகளில் தவிக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும்.
•மனித உரிமைகள் மதிக்கப்படு;ம் வரை சிறீலங்கா அரசை அனைத்து நாடுகளும் புறக்கணிக்க வேண்டும்.
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
போன்ற கோரிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் சார்பாகவும் முன்வைத்தே இம் மனிதநேய நடைபயணம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மனிதநேயன் சிவந்தன் கடந்த ஜூலை 23ஆம் திகதி பிரித்தானியாவிலிருந்து மனிதநேய நடைபயணமொன்றை ஆரம்பித்து இம்மாதம் 20ஆம் திகதி தனது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஜெனி வாவிலுள்ள ஐ. நா. சபையிடம் கையளித்தார். அதன் தொடர்ச்சியாக ஒருவார இடைவெளியின் பின் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி மூன்று ஈழ உணர்வாளர்களின் அடுத்தகட்ட மனிதநேய நடை பயணம் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடர்ச்சியான மனிதநேய நடை பயணத்திற்கு ஐரோப்பா வாழ் அனைத்து தமிழ் மக்களும் ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

29 ஆகஸ்ட் 2010

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் அரசியல் கட்டமைப்பு: நியூசிலாந்து உயர் நீதிமன்றம்.



தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை ஏற்படுத்தவும், அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்டதுமான ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நியூசிலாந்தில் அடைக்கலத்தஞ்சம் கோரிய விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்களை எடுத்துச் சென்ற கப்பலில் முன்னர் பணியாற்றிய ஈழத்தமிழர் ஒருவருக்கு எதிராக நியூசிலாந்து உயர் நீதிமன்றத்தில் நியூசிலாந்து அரசு மேற்கொண்ட வழக்கை நிராகரித்துள்ள நீதிமன்றம் அவருக்கு அடைக்கலத்தஞ்சம் வழங்கப்பட வேண்டும் என கடந்த வெள்ளிக்கிழமை (27) பரிந்துரை செய்துள்ளது.
மேலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு தமிழ் மக்களின் சுயாட்சி மற்றும் அவர்களுக்கு தனிநாட்டை அமைத்துக்கொடுக்கும் இலட்சியத்தை கொண்ட ஒரு அரசியல் அமைப்பாகவே செயற்பட்டுவந்ததாக நியூசிலாந்து உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த தவறிய சிறீலங்கா அரசே விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கான பாதையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவங்கள் விடுதலைப்புலிகளை ஒரு அரசியல் அமைப்பாக கருதவே வழியேற்படுத்தியுள்ளது என அது மேலும் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளின் ஆயுதக்கப்பலில் பணியாற்றியதாக குற்றம் சுமத்திய நியூசிலாந்து அரசு மூன்று ஈழத்தமிழ் மக்களின் அடைக்கலத்தஞ்சக் கோரிக்கையை நிராகரித்திருந்தது. அவர்களில் இருவர் மீண்டும் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். எனினும் கப்பலில் கப்டனாக பணியாற்றியவர் நியூசிலாந்து அரசின் முடிவுக்கு எதிராக மேன்முறையீடு செய்திருந்தார்.
இவ்வாறான வழக்குகளில் இந்திய நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது அதனை ஏற்றுக்கொள்ள உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
நியூசிலாந்தில் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடை விதிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
விடுதலைப்புலிகளை தடைசெய்யும் பிரேரனைகளை 2000 ஆம் ஆண்டு நியூசிலாந்து அரசு முன்வைத்தபோது, அதற்கு எதிராக நியூசிலாந்தில் வாழும் தமிழ் மக்கள் மேற்முறையீடு செய்திருந்தனர்.
உலகின் மனித உரிமைகள் கோட்பாடுகளின் அடிப்படையில், ஒரு மனிதன் தனக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிராக போரடமுடியும் என்பதே இந்த மேற்முறையீட்டின் அடிப்படையாக கொள்ளப்பட்டது. அதன் பின்னர் நியூசிலாந்து அரசு விடுதலைப்புலிகளை தடைசெய்யும் தனது திட்டத்தை கைவிட்டிருந்தது.
2000 ஆம் ஆண்டு நியூசிலாந்து மக்கள் மேற்கொண்ட போராட்டத்தின் பலன் தற்போதைய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பில் மீண்டும் ஒலித்துள்ளதாக நியூசிலாந்தை தளமாக கொண்ட தமிழ் செயற்பாட்டாளரும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதியுமான திரு ஏ தேவாரஞ்சன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது தெரிவித்துள்ளார்.

எனது மார்பில் இராணுவத்தினர் சிகரெட்டால் சுட்டனர் - கனடா சென்றுள்ள பெண்.


கடந்த 13 ஆம் திகதி வன்கூவரை அடைந்துள்ள எம்.வி சன் சீ கப்பலில் சென்ற அகதிகளுக்கான விசாரணையை கனேடிய குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் நடத்தி வருகின்றனர். இவர்கள் முன்னிலையில் விசாரிக்கப்பட்ட பெண்ணொருவர் இலங்கை இராணுவத்தினர் தமக்கு செய்த சித்திரவதைகளை வெளித்தெரிவித்துள்ளார். தமது கணவரை இராணுவத்தினரே சுட்டுக்கொன்றனர் எனத் தெரிவித்த அவர், தமது மார்பில் இலங்கை இராணுவத்தினர் சிகரெட்டுகளால் சூடு வைத்தனர் எனத் தெரிவித்தார். இப்பெண்மணியின் கணவர் எப்போது கொல்லப்பட்டார் என்பது பற்றியோ இச்சித்திரவதைகள் எப்போது நடந்தன என்பது பற்றியோ குறிப்பிடப்படவில்லை.
இப்பெண்மணி சார்பில் மாலினி டயொனிசியஸ் என்ற சட்டத்தரணி ஆஜராகி இருந்தார். குறித்த பெண்மணி தமக்கு நேர்ந்த அவலங்களைக் கூறியபோது, சட்டத்தரணி அவர்கள் அவற்றை மொழிபெயர்த்து குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்குத் தெரிவித்தார். மேலும், சித்திரவதைகளுக்கு உள்ளான இப்பெண்மணி ஒரு ஆஸ்த்மா நோயாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

மாணவிகளிடம் காடைத்தனம் புரியும் இளைஞர்கள்.

மலேசியாவில் ஒரு வாகனத் தரிப்பிடத்தில் வைத்து இரு இளம் பெண்களை கெட்ட வார்த்தைகளால் திட்டி அடித்து உதைக்கும் காட்சிகள் வீடியோ மூலம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.காடைத்தனம் புரியும் இளைஞர்கள் தமிழர்கள் என்பதால்,தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

28 ஆகஸ்ட் 2010

நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த நபரை அடித்துக் கொன்ற பெண்.



நள்ளிரவு நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த ஆண் ஒருவரை பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்த சம்பவம் புத்தளம் மாவட்டத்தின் லுனாவில சிறியகம்பல எனும் இடத்தில் இடம்பெற்றுள்ளது.
மேற்படி விதவைப்பெண் பொலிஸாரிடம் நேற்று காலை சரணடைந்துள்ளார்.
கணவர் இறந்தபின் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்த தனக்கு தொந்தரவு ஏற்படுத்துவதற்காக வீட்டிற்குள் வந்த இந்நபரை, தான் தாக்கியதாக அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

யாழில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.



யாழ் கொட்டடிப் பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 42 வயதுடைய தாய் ஒருவர் படுகாயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
யாழ் நகர பாடசாலையில் கல்வி கற்கும் இந்தப் பெண்ணின் சிறிய மகள் வீதியில் கிடந்த பொருள் ஒன்றை எடுத்துச் சென்று வீட்டின் அடுப்பில் போட்டதாகவும் அந்தப் பொருள் வெடித்ததனால் 42 வயதுடைய சிவரட்ணேஸ்வரி என்ற தாய் கடும் காயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்ததாக ஜீரீஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இது யுத்தகாலத்தில் பண்ணைப் பகுதியில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளாக இருக்கலாம் எனத் தெரிவிக்கும் காவற்துறையினர் மேலதிக விசாரனைகளைத் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 ஆகஸ்ட் 2010

பிரிட்டன் பிரஜைகளிடம் 50 இலட்சம் ரூபாய் கப்பம் கோரி யாழில் படுகொலை அச்சுறுத்தல்.

பிரித்தானியாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் விடுமுறையை கழிக்க வந்த தமிழ் குடும்பம் ஒன்று பெரிய பிரச்சினையில் மாட்டுப்பட்டுள்ளது. இன்றைய யுத்தம் அற்ற சூழலில் யாழ்ப்பாணத்துக்கு வந்து உறவினர்களையும் கண்டு கொள்ளலாம், நல்லை முருகனையும் தரிசித்து செல்லலாம் என்று ஏராளமான எதிர்பார்ப்புக்களுடன் சுமார் 15 வருடங்களுக்குப் பின் புறப்பட்டு வந்திருந்த வடமராட்சி- மாசனையைச் சேர்ந்த பெற்றோர் மற்றும் பிள்ளைகள் மூவர் கொண்ட குடும்பம் ஒன்றே இவ்வாறு பேராபத்தில் சிக்கி உள்ளது.
ஓரிரு வாரங்களுக்கு முன் கொழும்பை வந்து அடைந்த இவர்கள் யாழ்ப்பாணம் செல்கின்றமைக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற உரிய அலுவலகத்துக்குச்சென்றனர். ஆனால்அந்நடைமுறை நீக்கப்பட்டு விட்டது என அங்கு தெரிவிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை வந்து அடைந்த அவர்கள் வடமராட்சி- கற்கோவளத்தில் உள்ள உறவினர்களின் வீடு ஒன்றுக்கு சென்று தங்கி இருந்தனர்.
இவர்களை மோப்பம் பிடித்த மர்மநபர்கள் இருவர் கடந்த திங்கட்கிழமை அவ்வீட்டுக்கு வந்து சேர்ந்தனர். பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெறாமல் வந்திருக்கின்றனர் என்று மிரட்டினர். கடவுச்சீட்டைத் தரக் கோரினர். மறுத்தபோது மறைத்து வைத்திருந்த துப்பாக்கியைக் காட்டிப் பயமுறுத்தி ஐந்து கடவுச்சீட்டுக்களையும் பறித்தெடுத்தனர்.
தொலைபேசி இலக்கம் ஒன்றைக் கொடுத்துவிட்டு சென்றனர்.தொலைபேசியில் மதியம் தொடர்பு கொண்டபோது ஐவருக்கும் தலா 10 இலட்சம் ரூபாய்ப்படி இரு நாட்களுக்குள் 50 இலட்சம் தந்து விட்டு கடவுச் சீட்டைப் பெறக் கோரினர்.தவறினால் கொல்லப்படுவர் என்றும் மிரட்டினர்.அவர்கள் கொடுத்த தவணை நேற்றுடன் முடிந்து விட்டது.
இந்நிலையில் இக்குடும்பத்தினர் கற்கோவளம் பொலிஸ் நிலையத்தில் கப்பம் கோரல், கொலை அச்சுறுத்தல் ஆகியன தொடர்பாக முறையிடச் சென்றபோது பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க முதலில் தயங்கினர்.பின் ஏற்றனர். குடும்பத் தலைவர் அத்தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மிரட்டல் பேர்வழிகளுடன் பேசினார்.
அப்போது பொலிஸ் நிலையத்தில் இருந்து பேசுகின்றமை தெரியும் என்றும் முறைப்பாட்டை வாபஸ் பெற்று விட்டு வந்து விட வேண்டும் என்றும் பணத்தைத் தரா விட்டால் கொல்லப்படுவார்கள் என்றும் அனைத்தையும் அருகில் இருந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் மறுமுனையில் மிரட்டல் பேர்வழி ஒருவர் கூறி இருக்கின்றார்.
பொலிஸார் தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு துண்டிக்கப்பட்டது. தற்போது இக்குடும்பத்தினர் மரண அவஸ்தையில் அந்தரித்துக்கொண்டு இருக்கின்றார்கள்.

பதில் சொல்லப்படாத கேள்விகள் பல உண்டு:ஹோம்ஸ்.


தனது பதவிக்காலம் முடிவடையும் தருவாயில் இருக்கும் ஐ.நாவுக்கான மனிதாபிமான தூதுவர் ஜோன் ஹோம்ஸ் அவர்கள் இறுதியாக பத்திரிகையாளர் மாநாடு ஒன்றை இன்று(26.08.2010) நடத்தியுள்ளார். அதில் அவர் பல நாடுகள் குறித்து தனது கருத்தைத் தெரிவித்தார். நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த ஜோன் ஹோம்ஸ், இலங்கை அரசை சாடியுள்ளார். இலங்கையில் நடைபெற்ற போரைப் பொறுத்தவரை பல விடைகாணாத கேள்விகள் இன்னும் பாக்கியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவித்த கருத்துகள் பின்வருமாறு:
தான் அதிகாரியாக கடமையாற்றிய காலகட்டத்தில், இலங்கை பிரச்சனையாலேயே தாம் பெரும் அழுத்தங்களை எதிர்நோக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். போர் நடைபெற்ற காலகட்டத்தில் ஐ.நா சபை மீது உலகநாடுகள் பல அழுத்தங்களைப் பிரயோகித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். உலகளாவியரீதியாக புலிகளும் அதன் சகோதர அமைப்புகளாலும், இலங்கை அரசிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பரப்புரைகளால், இலங்கை அரசு மீது தாம் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைதோன்றியதாகவும் தெரிவித்த அவர், புலிகளுக்கு எதிராக இலங்கை அரசும் கடும் பரப்புரைகளை மேற்கொண்டது என்று கூறியுள்ளார்.
யுத்தத்திற்கு பின்னர் தாம் எதிர்பார்த்த அளவு நிலமை முன்னேறவில்லை என்பதே தாம் பெரிதும் ஏமாற்றம் அடைந்த விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரசு மக்கள் குடியிருப்பு மீது தாக்குதல் நடத்தியது, வகைதொகையின்றி மக்கள் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுவது, மற்றும் தடுத்துவைக்கப்பட்டுள்ளோர், போன்றவை இன்னும் கேள்விக்குறியாகவும், விடை காணப்படாதவையாகவுமே இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மூதூரில் 17 தொண்டு நிறுவன ஊழியர்கள் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக இலங்கை அரசு இன்னும் சரியான விசாரணைகளை நடத்தவில்லை எனவும் அவர் தனது கருத்துக்களை பதிவுசெய்துள்ளார்.
தனது பதவிக் காலத்தில் பல தடவைகள் இலங்கை சென்றுவந்த ஜோன் ஹோம்ஸ் அவர்கள், இறுதி யுத்தத்தின்போது, யுத்தத்தை நிறுத்த பாடுபட்டதோடு, புலித்தேவன், மற்றும் ப.நடேசன் ஆகியோரிடம் தொலைபேசியில் உரையாடியும் உள்ளார். இலங்கை அரசு பல குற்றச்செயல்களை இழைத்திருப்பதை, இவர் நன்கு அறிந்திருந்தாலும் ஐ.நாவின் அதிகாரியாக தாம் இருப்பதாலேயே, இவர் அதனை கடுமையாகச் சாடவில்லை என்பதே உண்மையாகும்.

26 ஆகஸ்ட் 2010

சிவந்தன் ஏந்திய தீ தொடர்ந்தும் எரிகிறது.



சிவந்தன் ஏந்திய தீ மீண்டும் தொடர்கிறது. முருகதாசன் திடலில் இருந்து பெல்ஜியம் ஐரோப்பிய தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம்.தமிழ் மக்களின் மனதில் எரிந்து கொண்டிருக்கின்ற விடுதலைத் தீ அணையாது. மீண்டும்; தொடங்குகிறது 842கி.மீற்றர் நடைப்பயணம்.
எதிர்வரும் 28.08.2010 சனிக்கிழமை மதியம் ஒரு மணியளவில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கோரி, ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபையின் முன்னால் அமைந்துள்ள முருகதாசன் திடலில் இருந்து, பெல்ஜியம் ஐரோப்பியத் தலைமை ஒன்றியம் நோக்கிய நடைப்பயணம் தொடரப்படவுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்ததிலிருந்து சிறீலங்கா அரசாங்கத்திற்கும், சிங்கள மக்களுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் ஒரு வகையில் உற்சாகம் வழங்கி உதவி புரிந்த ஐரோப்பிய ஒன்றியத் தலைமையகம் நோக்கிய நடைப்பயணம்.
இந்த நீதிப் பயணத்தை முதியவர் ஜெகன் (அவுஸ்திரேலியா) அவர்களும், தேவகி அவர்களும் முன்னெடுத்துள்ளனர்.
நீதிப்பயணமானது 28.08.2010 அன்று ஜெனீவாவில் ஆரம்பித்து, பிரான்ஸ், ஜேர்மன், லக்சம்பேர்க் ஊடாக 26.09.2010 தியாகதீபம் லெப். கேணல். திலீபன் அவர்களின் நினைவு நாளன்று பெல்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத் தலைமையக முன்றலில் நிறைவுக்கு வரவுள்ளது.
“மக்கள் புரட்சி வெடிக்கட்டும்” என்றார் எங்கள் திலீபன் அண்ணா.
உலகத் தமிழ் உறவுகளே!
அனைவரும் ஒன்று திரளுவோம்!
நடைப்பயணத்தில் நம்மையும் ஒருவராக இணைத்துக் கொள்ளுவோம்.

தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது – தியாகு.



சீமானை தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது தவறு என்று கூறி நமது தரப்பு நியாயங்களை இந்த அறிவுரை கழகத்திற்கு எடுத்து வைத்திருக்கிறோம். அறிவுரை கழகம் என்பது நீதி மன்றம் அல்ல. நமது தரப்பு நியாயங்களை விசாரித்து அரசுக்கு தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தில் கைது செய்தது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டதா இல்லையா என்று பரிந்துரை செய்வார்கள். தவறு என்று கூறி விடுதலை செய்ய சொல்லலாம், அல்லது உத்திரவை செயல் படுத்த சொல்லியும் சொல்லலாம். இதுவே இந்த அறிவுரை கழகத்தின் பொறுப்பு.
2009 ல் சீமானை கைது செய்யும் பொழுதும் இப்பொழுது இருக்கும் இதே மூன்று நீதியரசர்கள் தான் அன்றும் இருந்தார்கள். கடந்த ஆண்டும் இதே போல் தான் நாங்கள் அவர்களிடம் எங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து கூறினோம் அதற்கு பிறகு உயர் நீதி மன்றம் அவரை விடுதலை செய்தது. அன்று உயர் நீதி மன்றம் என்ன காரணத்திற்காக விடுதலை செய்ததோ அந்த காரணத்தை சரியாக ஆராயாமல் அரசாங்கம் அதே காரணத்தின் அடிப்படையில் இந்த உத்திரவை பிறபித்து கைது செய்திருக்கிறது.
அன்று என்னென்ன குறைகளுக்காக விடுதலை செய்யப்பட்டாரோ, அதே காரணங்கள் இந்த வழக்கிலும் அப்படியே உள்ளன. மேலும் கூடுதல் மாநகர காவல் ஆய்வாளர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சீமானை கைது செய்ய சொல்லி உத்திரவு பிறபித்திருக்கிறார். அவருக்கு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்படி கைது செய்ய சொல்லும் அதிகாரம் இல்லை. மாநகர காவல் ஆய்வாளர் அல்லது மாவட்ட நீதியரசர் மட்டுமே இந்த உத்திரவை பிறப்பிக்க முடியும். அதற்க்கு ஆதரவாக 1965 ல் பிறபிக்கப்பட்ட உச்ச நீதி மன்ற உத்திரவின் படிவத்தை கொடுத்துள்ளோம்.
தேசிய பாதுகாப்பு தடை சட்டம் வெறும் வாய் பேச்சுக்காக போட முடியாது. ஒருவேளை அவ்வாறு பேசுவதால் ஏதாவது வன்முறை நிகழ்திருந்தால் வேண்டுமானால் பாதுகாப்பு தடை சட்டம் போடலாம். ஆனால் சீமான் பேசியதால் இதுவரை எந்த வன்முறையும் நிகழவில்லை என்ற அடிப்படையிலேயே கடந்த முறையும் விடுதலை செய்தார்கள் அதன் அடிபடையிலேயே இந்த முறையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வாதிட்டோம் அதற்கு நீதியரசர்கள் சீமான் பேசியதால் கடையை மூடிவிட்டு மக்கள் அச்சமடைந்து ஓடிவிட்டார்கள் என்று அரசாங்கத்தின் தரப்பில் தெரிவித்து இருக்கிறார்களே என்று கேட்டனர். அதற்கு நாங்கள் சீமான் சிங்களவனை பற்றி மட்டும் தானே பேசினார். இதுவரை எந்த சிங்களவனும் பயந்து கடையை மூடிவிட்டு ஓடவில்லையே. எந்த சிங்கள மாணவனும் இதுவரை தாக்கப்படவில்லையே. அருகில் இருந்த நகலகம் கடை வைத்திருப்பவர் கடையை மூடி விட்டு சென்றதை ஒரு காரணமாக சொல்லமுடியாது என்ற வாதத்தை அவர்களும் ஏற்று கொண்டனர். பிறகு இந்திய அமைதி படையை பற்றி பேசியதை பற்றி கேட்டனர். அதற்க்கு சீமான் நாம் பேசியது உண்மைதானே இந்திய அமைதிப்படை ஈழ தமிழர்களை கொன்று குவித்தது உண்மை என்று முதல்வர் கருணாநிதி அவர்களே பேசியிருக்கிறார்களே என்று கூறினார். நானும் ராசீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற நீதியரசர்கள் இந்திய அமைதி படை தமிழர்களுக்கு இழைத்த கொடுமைகளுக்க்காகதான் அந்த பழி வாங்கும் நடவடிக்கை அமைந்தது என்று உச்ச நீதி மன்ற தீர்ப்பிலேயே கூறியிருக்கிறார்கள் . இதற்காக தேசிய பாதுகாப்பு தடை சட்டம் போட முடியாது என்று வாதிட்டோம். இதை உயர் வழக்காடு மன்றத்தில் தெரிவித்தீர்களா என்று கேட்டனர் தெரிவித்து இருக்கிறோம் என்று சொன்னோம். பிறகு அவர்களிடம் உயர் நீதி மன்ற விசாரணை வரை நீங்கள் தாமதிக்க வேண்டாம் உங்கள் விசாரணையிலேயே நீங்கள் இவரை விடுவிக்க அரசுக்கு பரிந்துரைக்கலாமே என்று கூறினோம்.
அதற்க்கு அவர்களாலும் ஆவன செய்வதாக கூறியிருக்கிறார்கள் என்றார்.

25 ஆகஸ்ட் 2010

இந்து ஆலயத் திருவிழாவை நடத்த வேண்டாமென மிரட்டல்.


மட்டக்களப்பில் தமிழ் மக்களால் பாரம்பரியமாக திருவிழாக்கள் நடாத்தப்பட்டு வழிபட்டு வரும் ஆலயமொன்றின் திருவிழாவை நடத்த வேண்டாம் என்று கூறி பொலிஸாரும் தொல்பொருள் ஆய்வு அதிகாரியும் ஆலயத் தலைவரை அச்சுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கரடியனாறு குசலாந்தமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாக இருக்கும் நிலையில் குறித்த ஆலயத்தின் தலைவரும் நிர்வாக சபையினரும் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
இவ் விடயம் தொடர்பாக இந்த ஆலயத்தின் நிர்வாக சபையினர் தமிழ். சி. என். என் செய்திச் சேவைக்கு தெரிவித்த விடயங்கள் வருமாறு, வருடா வருடம் ஆலய உற்சவம் இடம் பெறுவது வழமை.
இம் முறையும் வருடாந்த தீர்த்த உற்சவத்தை முன்னிட்டு ஆலயத்தில் உற்சவ ஆயத்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தோம். அப்போது இங்கு பொலிஸாருடன் வந்த ஒருவர் தன்னை தொல் பொருள் ஆய்வுத் திணைக்கள அதிகாரி பண்டார என்று அறிமுகம் செய்து கொண்டு வந்தார். அவர் ஆலயத்தில் உற்சவம் நடத்த முடியாது.
இங்கு தொல்பொருள் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது என கட்டளையிட்டுதுடன் ஆலயத்தில் எவ்வித புனரமைப்பு வேலைகளும் செய்ய வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆலயத் தலைவரான என்னை பொலிஸார் அழைத்துச் சென்று திருவிழா செய்தால் 10 வருடம் சிறையில் அடைப்போம் என்று எச்சரித்தார்கள்.
வருடா வருடம் பாரம்பரியமாக திருவிழா செய்து வரும் எம் மக்களிடையே இச் செயற்பாடானது கடும் கவலையையும் பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டும் இடையூறுகள் வந்தன. இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவம் எதிர்வரும் மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அதற்கான பதாதைகளும் அச்சடிக்கப்பட்டுவிட்டது. இத் திருவிழாவுக்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழமை. இவ் வேளையில் இவர்கள் இப்படிக் கூறுவதன் நோக்கம் என்ன என்று புரியவில்லை. நாங்கள் இவ் விடயம் தொடர்பாக பிரதேச செயலாளர். நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
அமைச்சர்கள். மாகாண சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் அறிவித்துள்ளோம். இதற்குரிய பதிலை எதிர் பார்த்துள்ளோம் . இப் பிரதேசத்தில் மக்கள் குடியேறியதிலிருந்து இந்த ஆலயத்தை மக்கள் தரிசித்து வருகின்றனர். எனவே திருவிழாவுக்கான நாட்களும் நெருங்குவதால் இந்தப் பிரச்சினைக்கு முடிவைப் பெற்றுத்தர உரிய அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார்கள்.
இவ் ஆலயம் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கரடியனாறு கிராமத்தில் மலை ஒன்றின் மேல் அமைந்துள்ளது. இங்கு பண்டைய கால எச்சங்கள் காணப்படுகின்றது. இந்த மலையில் முருகன் வேல் உருவமும் செதுக்கப்பட்டுள்ளதுடன், குகைகளும் கற் தூண்களும், பழமை வாய்ந்த கட்டிடங்களின் எச்சங்களும் உள்ளன. இத் தொன்மை வாய்ந்த ஆலயத்தை மக்கள் பக்தியுடன் தரிசித்து வருகின்றனர்.

பேச்சை மாற்றிய மகிந்த,அதிர்ச்சியில் ரணில்.



சிறீலங்கா ஜனாதிபதிக்கும் எதிர்க்கட்சி தலைவர் ரணி;ல் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடந்த திங்கட்கிழமையன்று மூன்றாவது முறையாகவும் சந்திப்பு இடம்பெற்றது.
ஏற்கனவே நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு பதிலாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டிருந்தது.
எனினும் இதற்கு ஜனாதிபதி இதற்கு இணங்கவில்லையெனவும் திங்கட் கிழமை சந்திப்பின்போது ஏற்கனவே ஏற்றுக் கொண்டதை இப்போது மாற்றியுள்ளதாகவும் தாம் மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு உதவவேண்டும் என ஜனாதிபதி ரணிலிடம் கோரியதாகவும் அப்போது ரணில் விக்கிரமசிங்க அதிர்ச்சிக்குள்ளானதாகவும் அவர் எந்தக்கருத்தையும் வெளியிடவில்லை என ஐக்கிய தேசியக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

24 ஆகஸ்ட் 2010

மதுபோதையில் துன்புறுத்தினார்,மனைவி தற்கொலை.


நன்றாகக் குடித்துவிட்டு மது போதையில் வீடு வந்த கணவன் அன்றைய தினம் உணவு தயாரிக்க தாமதமாகியதால் மனைவியை அடித்து துன்புறுத்தினார்.
இதனையடுத்து ஆத்திரமும் விரக்தியுமுற்ற ஒரு பிள்ளையின் தாயான இளம் மனைவி கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தப் பரிதாபச் சம்பவம் கிளிநொச்சி மாவட்டம், வட்டகச்சி மாயவனூர் கிராமத்தில் கடந்த சனிக்கிழமையன்று மாலை இடம்பெற்றது இச்சம்பவத்தில் ஜெகதீபன் தயந்தினி (வயது 21) என்பவரே இவ்வாறு இறந்துள்ளார்.
இறந்தவரது மரண விசாரணையை கிளிநொச்சி திடீர் மரண விசாரணை அதிகாரி டாக்டர் கே. திருலோகமூர்த்தி கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைத்து மேற்கொண்டார். பிரேத பரிசோதனையை வைத்திய அதிகாரி டாக்டர் இரத்தினம் சிவானந்தன் நடாத்தினார்.
மரணமான பெண்ணின் கணவர் பாலசுப்பிரமணியம் ஜெகதீபன் (வயது 26) தாயார் திருமதி தேவராசா செல்வராணி (வயது 47) மாமியாரான பாலசுப்பிரமணியம் பாலேஸ்வரி (வயது 59) ஆகியோர் மரண விசாரணையின்போது சாட்சியமளித்தனர். மரண விசாரணை அதிகாரியினால் தற்கொலை மரணம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

பஷில் ராஜபக்ஷவிற்கு எதிர்ப்பு,நாம் தமிழர் கைது.



சிங்களத்தின் சிங்கக்கொடியை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்திய நாம் தமிழர் இயக்கத்தினர் கைது,போர் குற்றவாளி பசில் ராஜபக்சே இன்று இந்திய வருவதை கண்டித்து மதுரை மாவட்ட நாம் தமிழர் இயக்கம் ஆர்ப்பாட்டம் நடத்தியது .இதில் சிங்களத்தின் கொடியும் பசில் ராஜபக்சே புகைப்படமும் தீக்கிரை ஆக்கப்பட்டது இதன் போது 15 நாம் தமிழர் இயக்கத்தோழர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் .

கைதானோர் விவரம்

1. வெற்றி குமரன், மதுரை மாவட்ட பொறுப்பாளர், நாம் தமிழர்
2. செந்தில்
3. செங்கண்ணன்
4. சிவா
5. நாகராஜன்
6. தமிழ் குமரன்
7. பிரபாகரன்
8. காந்தி
9. பாண்டியராஜன்
10. முத்தையா
11. சண்முகம்
12. முத்துகுமரன்
13. பாண்டியன்
14. சுதாகரன்
15. ராஜ் குமார்.

23 ஆகஸ்ட் 2010

யாழ். மருத்துவ பீட மாணவன் சுன்னாகத்தில் சடலமாக மீட்பு!



யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்றுவரும் யாழ். மருத்துவபீடத்தின் 3ஆம் ஆண்டு மாணவனான சாரங்கன் சுன்னாகத்தில் கயிற்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் பயிற்சிக்காக யாழ். போதனா வைத்தியசாலையின் 7ஆம் இலக்க நோயாளர் விடுதியில் கடமையாற்றி வருகின்றார்.
குறித்த மாணவன் தாயாருடன் வாழ்ந்து வந்ததாகவும் தாயார் கடந்த சில நாள்களுக்கு முன்னர் வெளிநாட்டில் கல்வி கற்ற மற்றுமொரு சகோதரனின் பட்டமளிப்பு விழாவுக்குச் சென்றுள்ள நிலையில் இவர் தனித்து வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக குறித்த மாணவனின் நடமாட்டம் இல்லாததைக் கண்டு அவரது வீட்டிற்கு வந்த உறவினர்கள், வீட்டில் மின்விளக்குகள் எரிவதுடன் துர்நாற்றம் வீசுவதையும் உணர்ந்து கொண்டு வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது இவர் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டனர். மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தின் பணிப்புரைக்கமைய சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் கதவைத் தட்டி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் படையினர்!



மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்பைக்கடவை அந்தோனியார் புற கிராம மக்கள் அப்பகுதியில் நிலை கொண்டிருக்கும் இராணுவத்தினரால் தொடர்ந்தும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக அம் மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
மேற்படி கிராமத்தில் இதுவரை 450 குடும்பத்தினர் மீள் குடியேற்றம் செயப்பட்டுள்ளனர். அந்தக் கிராமமானது 212 வது இராணுவ படைப்பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.
இக்கிராமங்களில் இரவு நேரங்களில் பெண்கள் தனியாக உள்ள வீடுகளுக்குச் செல்லும் படையினர் பாலியல் சேட்டை புரிவதற்கு வீட்டுக் கதவை தட்டுதல், திடீர் சோதனை என்ற பெயரில் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைதல் போன்ற செயற்பாடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதால் நிம்மதியாக இரவில் நித்திரை கொள்ள முடியவில்லை என்று அப்பகுதி மக்கள் விரக்தியுடன் தெரிவிக்கின்றனர்.
அந்த இடங்களுக்கு மேஜர் விஜயரட்ன என்னும் இராணுவ அதிகாரி பொறுப்பாக இருக்கிறார்.அவரிடம் இந்த விடயம் தொடர்பாக அம்மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை எவ் வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என அப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது யுத்த நீதிமன்ற விசாரணைகள் இன்று ஆரம்பம்.



முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு எதிரான இரண்டாவது யுத்த நீதிமன்ற விசாரணைகள் இராணுவத் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நடத்தப்பட உள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவல தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்காக ஆயுதங்களை கொள்வனவு செய்த போது சரத் பொன்சேகா ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஊழல் மோசடி தொடர்பில் இன்றைய தினம் சிலரிடம் சாட்சியங்கள் பதியப்பட உள்ளதாக தெரியவருகிறது.
இராணுவம் யுத்த நீதிமன்றின் தலைவராக மேஜர் ஜெனரல் எம்.ஜீ.பீரிஸ் கடமையாற்றுகின்றார். இலங்கையில் தனக்கு நியாயம் கிடைக்காது என சரத் பொனசேகா அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

22 ஆகஸ்ட் 2010

மீள் குடியேற்றப்பட்ட விதவைப்பெண்கள் பெரும் அவலத்தில்.



மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரிய மடு ஈச்சலவக்கை கிராமத்தில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக இங்குள்ள விதவைக் குடும்பங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஈச்சலவக்கை கிராமத்தில் தற்போது 88 குடும்பங்கள் மீள் குடியேறியுள்ளனர்.
அவர்களில் 35 விதவைக் குடும்பங்களும் உள்ளனர். இவர்களில் பலர் தற்காலிக கூடாரங்களை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களின் வருமானத்தை தேடிக் கொள்வதில் பெரும் அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
நடந்து முடிந்துள்ள போரினால் கணவனை இழந்து பிள்ளைகளை இழந்து பல மாதங்களாகியும் எந்தவித மீட்சியுமில்லாமல் இன்னமும் மீள வழியில்லாமல் தவிக்கிறார்கள்.
இவர்களில் பலர் உளவியல் ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக 35 விதவைக் குடும்பங்களும் பெரும் போராட்டத்திற்கு மத்தியில் தங்களது ஒவ்வொரு நாள் வாழ்வையும் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தினமும் பட்டினியோடு நிரந்தர வருமானமும் இல்லாமல் தவிக்கும் தங்களை யாரும் கண்டு கொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகின்றார்கள். பல தரப்பில் இருந்தும் தம்மை வந்து பதிந்து கொண்டு செல்வதாகவும் ஆனால் தமக்கு எவ்வித உதவிகளும் செய்யவில்லை எனவும் அம மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
தற்போது மழைக்காலம் ஆரம்பித்துள்ளமையால் தங்களது குடிசைகளும் ஒழுகுவதாக அம்மக்கள் மிகுந்த கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

தமிழகத் தமிழர்களை குழப்ப கே,பி,மூலம் சதி செய்யும் சிங்கள அரசு.



சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி.யின் மூலம் புலம்பெயர் தமிழர்களை குழப்பிய சிறீலங்கா அரசானது அடுத்தப்படியாக கேபியின் மூலம் தமிழகத்தமிழர்களை குறிவைத்துள்ளது.
இது தொடர்பாக சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கே.பி. அளித்து ள்ள பேட்டி:
தமிழகத்தின் ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வை.கோவின் நடவடிக்கைகளினால் இறுதி நேரத்தில் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த முடியாமல் போனதாக சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இந்திய மத்திய அரசாங்கம் போர் நிறுத்தமொன்றை அமுல்படுத்த முனைப்பு காட்டிய போதிலும், வை.கோ அந்த யோசனைத் திட்டத்தை நிராகரித்தார் என கேபி குற்றம் சாட்டினார்.
போர் உச்சக் கட்டத்தை அடைந்த சந்தர்ப்பத்தில் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பானா பா.நடேசன் இந்தியாவின் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாக குமரன் பத்மநாதன் மேலும் தெரிவித்தார்.
அரசியல் தீர்வினை ஏற்றுக்கொள்ளல் மற்றும் ஆயுதங்களை களைந்து சரணடைதல் ஆகிய கோரிக்கைகளுக்கு உடன்பட்டால் போர்நிறுத்தத்தை அமுல்படுத்த முடியும் என இந்தியா அறிவித்திருந்ததாகவும் இப்போது சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் அறிவித்துள்ளார்.
இதன் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்திய மத்திய அரசாங்கம் இறுதி நேரத்தில் ஒத்துழைக்கவில்லை என சிறீலங்காவின் கட்டுப்பாட்டிலுள்ள குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

21 ஆகஸ்ட் 2010

பொலிஸ் உத்தியோகஸ்தரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற நபர்கள்.



பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் துப்பாக்கியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக்கொண்டு தப்பிச்சென்ற சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலத்திற்கு முன்னால் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இருவர் நடந்து சென்றுகொண்டிருந்த போது, அவர்களில் ஒருவரின் துப்பாக்கியை பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
மாலை. 6.30 மணியளவில் மட்டக்களப்பு ரயில் நிலையத்திற்கு பாதுகாப்புக் கடமைக்காக சென்றுகொண்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் துப்பாக்கியே பறிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. பொலிஸ் சார்ஜன்ட் செனவிரட்ன என்பவரின் துப்பாக்கியே இவ்வாறு பறிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கியை பறித்த மோட்டார் சைக்கிள் நபர்கள் புகையிரத நிலைய ஒழுங்கைக்கூடாக தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு ரயில் நிலையப் பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

19 ஆகஸ்ட் 2010

எம்.வி.சன்.சி கப்பலில் வந்த குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள்!



எம்.வி.சன்.சி கப்பலில் கடந்த வாரம் கனடாவை வந்தடைந்திருக்கும் மக்கள் கூட்டத்திலிருந்த 2 வயது நிரம்பிய குழந்தையின் தலையில் குண்டின் சிதறல்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த விடயத்தை அதிகாரிகள் தமது கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளார்கள். கப்பலில் வந்த மற்றொரு பெண் தனது கணவரின் சிறுநீரகத்தில் ஷெல் துண்டுகள் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் அகதிநிலை கூறி வந்துள்ள மக்கள் போர் இடம்பெற்ற பகுதிகளிலோ அல்லது அதற்கு அருகாமையிலேயோ இருந்திருப்பதை நிரூபிக்கின்றன.
இன்னும் ஏராளமான இப்படியான துயரச் சம்பவங்கள் தொடர்ச்சியான விசாரணையின் மூலம் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த விடயங்களை கனடியத் தமிழர் பேரவையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி.



தமிழரை இனப்படுகொலை செய்த இலங்கையின் பொருள்களுக்கு இனி ஜிஎஸ்பி எனப்படும் வர்த்தகச் சலுகைகள் நிறுத்தப்பட்டதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.இலங்கையில் இருந்து இறக்குமதியாகி ஐரோப்பியச் சந்தையில் விற்கப்படும் பொருட்களுக்கு ஜி.எஸ்.பி. என்றழைக்கப்படும் வர்த்தகச் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கி வந்தது.
இதன்படி, இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதித் தீர்வைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மானியம் அளித்துவிடும். இதனால் இலங்கைப் பொருட்களை ஐரோப்பிய சந்தையில் குறைந்த விலையில் விற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இலங்கையைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செய்யப்படும் ஏற்றுமதி அளவு ஆண்டிற்கு 3.7 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதம். ஆனால் இந்த ஏற்றுமதியை நேற்று முதல் அந்நாடு இழந்துள்ளது.
இதனால் அந்த நாட்டின் நிறுவனங்களுக்கு, பொதுவாக ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு பெறும் 3 பில்லியன் இலாபத்தில் 500 மில்லியன் இழப்பு, அதாவது 6ல் ஒரு பங்கு இழப்பு ஏற்படும் என்று அந்நாட்டு ஏற்றுமதி வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய நெருக்கடியாகும்.
ஏற்கனவே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மிகக் குறைந்த இலாப அளவுடன்தான் நடைபெறுகின்றன.
தமிழர் அமைப்புகள் செய்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பல நிறுவனங்கள் இலங்கையின் பொருள்களை வேண்டாம் என்றும் மறுத்து வருகின்றன.
ஒன்றியம் வழங்கி வந்தது.
இதன்படி, இலங்கையில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது விதிக்கப்படும் இறக்குமதித் தீர்வைகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் மானியம் அளித்துவிடும். இதனால் இலங்கைப் பொருட்களை ஐரோப்பிய சந்தையில் குறைந்த விலையில் விற்கும் வாய்ப்பு கிடைத்தது.
இலங்கையைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு செய்யப்படும் ஏற்றுமதி அளவு ஆண்டிற்கு 3.7 பில்லியன் டொலர்களாகும். இது இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 20 சதவீதம். ஆனால் இந்த ஏற்றுமதியை நேற்று முதல் அந்நாடு இழந்துள்ளது.
இதனால் அந்த நாட்டின் நிறுவனங்களுக்கு, பொதுவாக ஆயத்த ஆடை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு, பெரும் இழப்பு ஏற்படும் என்று தெரியவந்துள்ளது.
இலங்கையின் ஏற்றுமதி நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு பெறும் 3 பில்லியன் இலாபத்தில் 500 மில்லியன் இழப்பு, அதாவது 6ல் ஒரு பங்கு இழப்பு ஏற்படும் என்று அந்நாட்டு ஏற்றுமதி வர்த்தக அமைப்பு கூறியுள்ளது.
இலங்கையைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய நெருக்கடியாகும்.
ஏற்கனவே அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் மிகக் குறைந்த இலாப அளவுடன்தான் நடைபெறுகின்றன.
தமிழர் அமைப்புகள் செய்து வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக, பல நிறுவனங்கள் இலங்கையின் பொருள்களை வேண்டாம் என்றும் மறுத்து வருகின்றன.

18 ஆகஸ்ட் 2010

வே.பிரபாகரன் ஏன் போராட்டத்தைத் தொடங்கினார்? ஆணைக்குழு முன் முன்னாள் எம்.பி நீண்ட விளக்கம்.



"வடக்கு மாகாணத்தில் ஆரம்ப நாட்களில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்குமானால் இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்க மாட்டார்கள்.
அமைதியான வழியில் போராடிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிங்கள இனத்தை சேர்ந்த காடையர்களும், புத்த பிக்குகளும் சேர்ந்து கடுமையாகத் தாக்கினர்.
இவை போன்ற நிகழ்வுகளே வே.பிரபாகரனும்,தமிழ் இளைஞர்களும் கைகளில்ஆயுதம் ஏந்தக் காரணம் ஆகி விட்டன.” இப்படி தேசிய நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று சாட்சியம் வழங்கினார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்தியா, பிரித்தானியா போன்ற நாடுகளில் இலங்கைத் தூதுவராகப் பணியாற்றியவருமான மங்கள முனசிங்க.
அவர் அங்கு முக்கியமாகத் தெரிவித்தவை வருமாறு:-
"தேச நலன் சார்ந்த விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அரசியல்வாதிகள் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டனர்.இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தமிழர்களின் வாக்குரிமைகளை ஐக்கிய தேசியக் கட்சி பறித்து விட்டது.
பண்டா- செல்வா ஒப்பந்தத்தை எதிர்த்து ஐக்கிய தேசியக் கட்சியினர் செயல்பட்டனர். இதுவே 1983 ஆம் ஆண்டின் ஜூலைக் கலவரத்துக்கு காரணம் ஆனது. அரசின் தற்போதைய பேச்சாளர் தேசத்தின் ஓட்டு மொத்த நலனையும் மனதில் நிறுத்தி மனப்பக்குவம் , முன்யோசனை , விவேகம் ஆகியவற்றுடன் கருத்துக்களை வெளியிட வேண்டும்.
கடந்த கால போர் நிறுத்த ஒப்பந்தம் முழுமையாக அமலுக்கு வரப்படாமைக்கு பரஸ்பர நம்பிக்கையின்மையே காரணம். இந்த போரை இனப் போராகவோ, தீவிரவாதத்துக்கு எதிரான போராகவோ கருத முடியாது.
இது முற்றுமுழுதான அரசியல் நோக்கம் கொண்ட போர் ஆகும். முன்பொரு காலத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் ஒற்றுமையுடன் இணைந்தே வாழ்ந்தனர்,ஒன்றாகப் பணியாற்றினர். ஆனால் சுதந்திரம் பெற்ற பின்னர் நாட்டின் தலைவர்கள் பொறாமையால் உந்தப்பட்டனர்.
தேச நலனை பற்றிய எண்ணம் எதுமின்றி அரசியல் எதிரிகளை ஒழித்துக் கட்டி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற சிந்தனையோடு செயல்பட்டமையாலேயே பிரச்சினை ஏற்பட்டது.. இந்த எண்ணம் சிங்கள்-தமிழ் அரசியல்வாதிகளிடம் இருந்தது. இன்னமும் இந்த நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது.
தீவிரவாதம் காலப்போக்கில் ஏற்பட்ட ஒன்றுதான். இந்த நாட்டின் இரண்டு முக்கிய கட்சிகளின் தலைவர்களுமே பொறாமையுடனும், ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்துகின்றமை ஒன்றையே குறிக்கோளாக கொண்டும் செயற்பட்டனர். அவர்களின் அரசியல் பக்குவம் குறைந்து போனது.
இதன் பின்னர் வடக்குப் பகுதியில் நடந்த தேர்தல்களில் இளைய சமுதாயம் சோர்வுடன் உற்சாகமின்றி காணப்பட்டது. இதன் விளைவாகவே அனைத்து அரசியல் கட்சிகளையும் , தீவிரவாதக் குழுக்களையும் அகற்றி விட்டு பிரபாகரன் களமிறங்கினார்.
வடக்கு பகுதியில் இடம்பெற்ற தேர்தல்கள் ஜனநாயக ரீதியில் நடந்திருக்குமானால் இளைஞர்கள் வன்முறைப் பாதைக்கு சென்றிருக்க மாட்டார்கள். ஆனால் அனைத்துமே தலைகீழாகி இருந்தன.
தேச நலனில் அக்கறையின்றி செயற்படுகின்றமையையும், ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்கிற நினைப்பால் சண்டையிடுகின்றமையையும் அரசியல்வாதிகள் விட்டு விட வேண்டும். நாட்டு மக்களுக்காக ஒற்றுமையுடன் உழைக்க முன்வர வேண்டும்.

சுவிற்சர்லாந்திற்குள் காலடி வைத்துள்ள சிவந்தனின் மனிதநேய நடை பயணம்.



தமிழ் மக்களிற்கு நீதி கேட்டு, மூன்று கோரிக்கைகளை முன்வைத்து ஐக்கிய நாடுகள் சபை நோக்கி 26வது நாளாக மனிதநேய நடை பயணம் மேற்கொண்டுள்ள சிவந்தன் இன்று காலை சுவிற்சர்லாந்தின் எல்லைக்குள் காலடி வைத்திருக்கின்றார்.
சுவிஸ் எல்லையை அண்டிய La Cure என்ற இடத்தில் இருந்து இன்று காலை தனது நடை பயணத்தைத் தொடர்ந்த சிவந்தன், சுவிஸ் எல்லைக்குள் நுழைந்து ஜெனீவா நோக்கி நடந்து வருகின்றார். அவர் ஜெனீவாவை அடைவதற்கு இன்னும் 44 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டியுள்ளது.
நேற்று 9 மணித்தியாலங்களில் 20 கிலோமீற்றர் நடந்திருந்த சிவந்தனுடன் இன்று சுவிற்சர்லாந்தில் இருந்து சென்ற இருவர் உட்பட 12 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர்.
இவர்கள் நடந்து செல்லும் வழிகளில் தமிழ் மக்களின் நிலை மற்றும் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கல் செய்யப்பட்டு, பிரெஞ்சு மற்றும் டொச் மக்களிற்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, சிவந்தனது கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்து சுவிற்சர்லாந்து சூரிச்சில் இருந்து ஜெனீவா நோக்கிய 300 கிலோமீற்றர் தூர மனிதநேய நடை பயணத்தை தமிழின உணர்வாளர்கள் மூவரும் இன்று நான்காவது நாளாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
எதிர்வரும் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஈகப்பேரொளி முருகதாசன் திடலிலான ஐ.நா முன்றலில் இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதால், அதில் கலந்துகொள்ள ஐரோப்பிய தமிழர்கள் அணிதிரண்டு வருகின்றனர்.
சிறீலங்கா அரசு மீது சுயாதீன போர்க்குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்,தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும்,மனித உரிமைகள் மதிக்கப்படும்வரை சிறீலங்காவைப் புறக்கணிக்க வேண்டும்போன்ற கோரிக்கைகளை முன்வைத்து ஜெனீவா ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி நீதிகேட்டு மனிதநேய நடை பயணத்தை சிவந்தன் மேற்கொண்டு வருகின்றார்.

17 ஆகஸ்ட் 2010

ஈழத்தமிழர்கள் பற்றி இலங்கை ஜெயராஜ் பேச்சு: கண்கலங்கிய ரஜினி.



சென்னை கம்பன் விழாவில், இலங்கை தமிழர் பற்றிய பேச்சை கேட்டு நடிகர் ரஜினி கண்கலங்கினார்.
கம்பன் கழகம் சார்பில், 36வது ஆண்டு கம்பன் விழா சென்னை மைலாப்பூரில் உள்ள ஏ.வி.எம்.ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் 3 நாட்கள் நடைபெற்றது.
இறுதி நாளன்று, கம்பன் புலமை, திருவள்ளுவர் வழியில் பெரிதும் வெளிப்படுவது அறத்திலா, பொருளிலா, இன்பத்திலா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
பட்டிமன்றத்தில் பேசிய இலங்கை ஜெயராஜ்,
நான் தமிழன் ஆனால் அயல்நாட்டுக்காரன். நான் சுதந்திரமானவனா?. ஒருவன், மற்றொருவரை சுதந்திரமாக நடமாடவிடும்போதுதான், சுதந்திரமாக பேச, செயல்பட விடுவதுதான் உண்மையான சுதந்திரம். அந்த சுதந்திரமில்லாத நாட்டின் குடிமகன் நான். ஆனாலும், என் எல்லையை உணர்ந்து, உங்கள் சுதந்திரத்தை வாழ்த்துகிறேன்.
ஒருவன் கோடிக் கோடியாக சம்பாதிக்கலாம், வெற்றி பெறலாம். ஆனால் அறமில்லாத வெற்றி தூக்கத்தை தராது. அறமாக வாழ்ந்தால் சொர்க்கத்துக்கு போகலாம். ஆனால், சொர்க்கத்துக்கு போனவர்கள் யார் யார் என்று யாருக்கு தெரியும். காந்தி, அண்ணா, காமராஜர், எம்.ஜி.ஆர். என்று நாமாக சொல்லலாம். ஆனால் பார்த்தவர்கள் யார்? என்று இலங்கை ஜெயராஜ் பேசினார்.
இதை மேடையின் முன்வரிசையில் இருந்து இலங்கை தமிழர்களின் நிலை பற்றிய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நடிகர் ரஜினி கண்கலங்கினார்.

ஐ.நா.நோக்கி அணிதிரளுங்கள் மக்களே: ஜெயானந்தமூர்த்தி.



ஐ.நாவை நோக்கி மனிதநேய நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள சிவந்தனின் உணர்வுபூர்வமான உறுதிமிக்க போராட்டத்தின் இறுதிநாள் நிகழ்வில் ஐரோப்பிய புலம் பெயர் தமிழ் உறவுகள் பெருமளவில் கலந்து கொள்வதன் மூலம் எமது ஒற்றுமையையும் பலத்தையும் மீண்டும் சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் காண்பிக்க முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் லண்டன் பிரதிநிதியுமான எஸ்.nஐயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வி ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.'இன்று எமது புலம் பெயர் தமிழ் மக்கள் சற்று சோர்ந்துபோன நிலையில் உள்ளனர். இதற்கு புலம் பெயர் நாடுகளில் உள்ள ஒரு சிலரின் நடவடிக்கைகளும் காரணமாக உள்ளன. முன்பு விடுதலைப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சிலர் தற்போது சிறிலங்கா அரசுடனும் சிறிலங்கா அரசின் பாதுகாப்பில் இருப்போருடனும் தொடர்புகளைப் பேணி வருகின்றனர். இது அவர்களின் சுயலாப நோக்காக இருக்கலாம். அது மாத்திரமின்றி புலம் பெயர் நாடுகளில் சில குழு நிலை வாதங்களும் காணப்படுகின்றன. இதனால் மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் உள்ளன. இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான குழப்பங்களை நாம் சந்தித்தே தீரவேண்டும். இதன் மூலம்தான் நாம் எமக்கு எதிரான சக்திகளை இனங்காண முடியும். எமது தேசியத் தலைவர் எமக்கிட்ட பணிகளையும் கட்டளைகளையும் அவர் அமைதிகாக்கும் இவ்வேளையில் நாம் தொடர்ந்து செய்ய வேண்டும். அவர் போராட்டத்தை புலம் பெயர் தேசத்திற்கு நகர்த்தியதை நாம் மறந்துவிட முடியாது. எனவே மக்கள் இந்நிலையில் விழிப்பாக இருக்க வேண்டும். எமது உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும். இந்நிலையில்தான் சிவந்தனின் மனித நேய நடைப்பயணம் ஆரம்பிக்கப்பட்டது. எமது மக்கள் மீண்டும் பலத்துடன் நிமிர்ந்தெழ சிவந்தன் வழிசமைத்துள்ளார். உயிரைப் பணயம் வைத்து ஆரம்பிக்கப்பட்ட இந்நடைப்பயணம் எதிர்வரும் 20 ஆம் நாள் nஐனிவாவில் ஐ.நா. மன்றத்திற்கு முன்னால் முடிவடைவதுடன் அங்கு எழுச்சி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இவ் எழுச்சி நிகழ்வில் எமது மக்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் எமது உறுதி, ஒற்றமை, பலம் என்பனவற்றை மீண்டும் நாம் சர்வதேசத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் காண்விக்க முடியும். முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் பின் புலம் பெயர் மக்கள் பலமிழந்து விட்டார்கள், ஒற்றுமையின்றி உள்ளனர் என நினைத்திருக்கும் சிறிலங்கா அரசுக்கு ஓங்கி முகத்தில் அறைவதுபோன்று இந்நிகழ்வு அமைய வேண்டும். எனவே எமது பலத்தையும் ஒற்றுமையையும் ஐ.நாவுக்கு முன்னால் மீண்டும் நாம் நிருபித்துக் காட்ட வேண்டும்' என தெரிவித்துள்ள nஐயானந்தமூர்த்தியிடம் நாடு கடந்த அரசாங்கம் பற்றிக் கேட்டபோது 'நாடுகடந்த அரசாங்கம் தற்போதும் ஒரு குறைப்பிரவசம்போன்றே உள்ளது. அது இன்னமும் முழுமையடையவில்லை. தேர்தல் முடிவடைந்து முதலாவது அமர்வு நடந்து மூன்று மாதங்கள் முடிவடையும் நிலையில் இன்னமும் முன்னேற்றமில்லை என்பதே உண்மை. என்னைப் பொறுத்த வரையில் என்னை மக்களே வேட்பாளராக நிறுத்தினார்கள் அதுபோன்று மக்களே தெரிவும் செய்தனர். இதில் நான் போட்டியிடாவிட்டிருந்தாலும் எனக்கென்றொரு தளம் உள்ளது. அதிலிருந்து நான் மக்களுக்குத் தொடர்ந்து சேவை செய்யமுடியும். கடந்த காலங்களில் போராட்டத்திற்கு என புலம் பெயர் நாடுகளில் ஆதரவு தெரிவிக்காத மற்றும் எந்தவொரு போராட்டத்திலும் கலந்து கொள்ளாத ஒரு சிலர் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர் வெளியே வந்துள்ளனர். இவர்களே மக்களுக்கு இன்று அரசியல் செய்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார் எஸ்.ஜெயானந்தமூர்த்தி.

நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்.



பெரியார் திராவிடர் கழகத்தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்துள்ளது மிகவும் பாசிசமான போக்கு ஆகும் என்று நாம் தமிழர் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நாம் தமிழர் செய்தி தொடர்பாளர் கூத்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது.
மு.கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இன்று தமிழ்நாட்டு மக்களின் கருத்துரிமைக்கு மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது.
உள்நாட்டு அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே, காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் உள்ளூர் மக்கள் மீது நடத்தி வரும் அடக்குமுறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணியைக் கைது செய்துள்ளது.இது மிகவும் பாசிசமான போக்கு ஆகும்.இதனை நாம் தமிழர் இயக்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறையிடம் கூட்டமைப்பினர் உரிய முறையில் அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டுள்ளது.அதனை மீறி பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட 8 பெண்கள் உட்பட 59 பேரையும் தமிழக அரசு கைது செய்து வேலூர் மற்றும் புழல் சிறைகளில் அடைத்துள்ளது. சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் இடங்களில் சைதாப்பேட்டை பனகல் மாளிகையும் ஒன்றாகும்.ஆனால் திட்டமிட்டு அனுமதி மறுப்பதும் பின் கைது செய்வதும் தமிழ்நாட்டில் கருத்துரிமைக்கு எதிரான போக்கு தொடர்ச்சியான நிலவுவதைக் காட்டுகின்றது.
மீனவர் பிரச்சனையா,ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது.உள்ளூர் விவசாயிகளின் பிரச்சனையா,போராட்டத்திற்கு அனுமதி கிடையாது.டாஸ்மாக் தொழிலாளியின் கூலி உயர்வுக்கான போராட்டமா,அனுமதி கிடையாது.தொப்புள் கொடி தமிழர்களின் உயிர்ப் பிரச்சனையா போராட்ட அனுமதி கிடையாது.
சரி இங்கு உள்ள பிரச்சனைக்குத்தான் அனுமதி கிடையாது,எங்கோ உள்ள காஷ்மீர் மக்களின் பிரச்சனை என்றாலும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி கிடையாது என்றால் இது ஜனநாயகம் கடைபிடிக்கப்படும் நாடா அல்லது கருணாநிதியின் தலைமையில் மன்னராட்சி நடைபெறும் நாடா என்று சந்தேகம் எழுகின்றது.நாடு முழுவதும் மக்கள் படும் துன்பங்களையும் துயரங்களையும் கண்டித்தும் உலகிற்கு எடுத்துச் சொல்லவும் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கும் காவல்துறையும் அதிகார வர்க்கமும்,தமிழர்களை வதைக்கும் முதல்வருக்கு யாராவது பாராட்டு விழாக்கள் நடத்தி குத்தாட்டம் போட்டால் ஆதரவாக முழு வீச்சில் இயங்குகின்றன.இந்த நிலை ஜனநாயகத்தில் மிகவும் இழிவான போக்கு ஆகும். இதற்கு எம் தமிழ் மக்கள் விரைவில் நல்ல பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

16 ஆகஸ்ட் 2010

எம்.வி.சன்.சியில் இரு வாரங்களுக்குமுன் ஈழ இளைஞன் மரணம்,கடலில் சடலம் அடக்கம்!



எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவுக்கு புறப்பட்டு இருந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் இக்கடற்பயணத்தின்போது இரு வாரங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். 37 வயது உடைய இளைஞர் ஒருவரே கடந்த 28 ஆம் திகதி உயிரிழந்தார். ஆயினும் இவரின் மரணத்துக்கான காரணம் தெரியாமல் உள்ளது. சடலம் கடலில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் மனைவியும், ஒரு குழந்தையும் இலங்கையில் இருக்கின்றார்கள்.
கனேடிய தமிழ் பேரவையின் பேச்சாளர் மஞ்சுளா செல்வராசா கப்பலில் வந்திருந்த தமிழர்களை நேரில் சந்தித்துப் பேசினார். அவரை மேற்கோள் காட்டியே கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதே நேரம் இந்த ஈழ அகதிகள் கனேடியர்களின் உதவியைப் பெற்றுக்கொண்டுதான் புறப்பட்டு வந்து சேர்ந்தார்களா? என்கிற கோணத்திலும் கனேடிய புலனாய்வுப் பிரிவினர் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

தேசியத் தலைவரை ஹெலி மூலம் வெளியேற்ற நினைத்தாராம் கே.பி!



மே 18ம் திகதிக்கு பின்னர் ஆரம்பமான தமிழ் இணையம் பொங்கு தமிழ். ஈழத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட உணர்ச்சிபூர்வமான பொங்கு தமிழ் விழாவின் பெயரை தமது இணையத்தின் பெயராகச்சூட்டி வலம்வரும் இவ் இணையம் தமிழர்களை பொங்கவைக்கவில்லை! மாறாக அதே அடுப்பில் தமிழர்களை வேகவைக்க நினைக்கிறது. பொங்கு தமிழ் நடாத்தும் இணைய அன்பர்களுக்கும், பொங்கு தமிழ் நிகழ்வை நடத்தியவர்களுக்கும் எத் தொடர்பும் இல்லை. இவர்கள் எவரும் அப்பக்கம் தலைவைத்துப் படுத்ததே இல்லை, மழைக்கு அப்பக்கம் ஒதுங்கியவர்களோ அல்லர்.பிரித்தானியாவில் இருக்கும் ரஞ்சித், இந்தியாவில் இருந்து திரு என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசு, நோர்வே பேர்கனில் இருந்து ஹேமா, என்போராலும் வேறு சிலராலும் பொங்கு தமிழ் இணையம் நடாத்தப்பட்டுவருகிறது. இந்த ஞானசூனியங்கள் கே.பி என்பரை ஒரு பெரும் தலைவராகச் சித்தரிக்க முற்படுவதை முழுநேரத் தொழிலாகக் கொண்டுள்ளனர். தேசிய தலைவர் எடுத்த முடிவுகள் பிழையானவை என்று ஏற்கனவே வாதிட்டுவந்த இவர்கள், தற்போது கே.பி சொல்வதை தெய்வ வாக்காக எடுத்து கைகளில் வேப்பிலை கட்டி ஆடுவது, வேடிக்கையான விடயம்! வெட்கி நாணவேண்டிய விடயமும் கூட. இலங்கை அரசுடன் சேர்ந்து இயங்கும் கே.பி, தான் சொல்லவருவதை டி.பி.எஸ் ஜெயராஜ் கேட்பது போலவும், அதற்கு தான் ஆத்மார்த்தமாக பதில்சொல்வது போலவும் ஒரு நேர்காணல் நாடகம் ஆட, அதனை அரசு ஆதரவு இணையமான டெய்லிமிரர் பக்கம் பக்கமாக வெளியிட்டு வருகிறது. இதன் தமிழாக்கம் மிக நீளமானது. அதில் கே.பியை நல்லவர் என்று கருதும்படியான வாசகங்கள் அடங்கிய பகுதிகளை மட்டும் மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த பொங்குதமிழ் ஆசிரியர்கள், அதனை மட்டும் பிரசுரித்துள்ளனர், மிகவும் இலகுவான நடையில், அதாவது பாமர மக்களும் விளங்கிக்கொள்ளும் வகையில் இது சுருக்கி பிரசுரமாகியுள்ளதாக பொங்கு தமிழ் இணையமே தெரிவித்துள்ளது. கே.பியின் முழுப்பேட்டியையும் போடாது, குறிப்பிடப்பட்ட சில விடயங்களை மட்டும் ஏன் பொங்குதமிழ் போடவேண்டும்? இவர்கள் தமிழ் மக்களுக்கு சொல்லவரும் கருத்துதான் என்ன என்கின்ற கேள்விகள் இங்கு எழுகின்றன. அப்படியானால் இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலின் கீழ் தான் இவர்கள் இயங்குகிறார்களா என்ற சந்தேகமும் வலுப்பெறுகிறது.

தேசியத் தலைவரை ஹெலி மூலம் காப்பாற்ற நினைத்தாராம் கே.பி:

யுத்த காலத்தில் ஹெலி மூலம் தேசிய தலைவரை தான் காப்பாற்ற நினைத்ததாக கே.பி கூறியுள்ளார். அதற்காக ஒரு ஹெலியை வாங்க தாம் முயற்சித்ததாகவும் கூறியுள்ளார். உண்மையில் போர்க்களத்தில் உள்ள தேசிய தலைமையைக் காப்பாற்ற ஒருவர் எண்ணியிருந்தால் காசுகொடுத்து உலங்குவானூர்தி ஒன்றை வாங்கித்தான் செயல்படுத்தவேண்டும் என்று இல்லை. அனைவருக்கும் ஞாபகம் இருக்கும்! சமாதான கால கட்டத்தில், தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் மாலைதீவு சென்று, அங்கிருந்து சிறிய ரக விமானம் மூலம் இரணைமடு குளத்தில் சென்று இறங்கினார். அதற்கு அவர் அவ் விமான ஓட்டிக்கு செலுத்திய பணம் 5,000 டாலர்களுக்கும் குறைவானது.அப்படி இருக்கும்போது, தாய்லாந்து, இந்தோனேசியா, மற்றும் மாலைதீவுகளில் பணம் கொடுத்தால் நூற்றுக்கணக்கான விமானிகளை வாடகைக்கு அமர்த்த முடியும் என்பது, ஐரோப்பாவில் இருக்கும் எமக்கே தெரியும் போது, அந்த நாடுகளின் காவல்துறைக்கே கண்ணில் விரலைவிட்டு ஆட்டிய கே.பிக்கு தெரியாதா என்ன? யார் காதில் பூ சுற்றப் பார்க்கிறார்கள்? இதோ இங்கு உள்ள இணையத்தைப் பாருங்கள்,(http://www.aircraftdealer.com/) இங்கே 50,000 டாலர் தொடக்கம் விமானங்கள் விற்பனைக்கு உண்டு, அவற்றில் ஒன்றை அல்லது இரண்டை வாங்கி வாடகைக்கு விமானிகளை அமர்த்தி சென்றிருக்க முடியாதா அல்லது அது சாத்தியம் இல்லையா?அனுராதபுரம், கொழும்பு மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலேயே இலங்கை இராணுவம் விமான எதிர்ப்பு ஆயுதங்களை நிலைநிறுத்தியிருந்தது. முள்ளிவாய்க்காலில் அல்ல. எனவே ஒரு இரவில் இலகுவாகச் சென்று நந்திக்கடலில் தரையிறங்கி குறிப்பிட்ட சில தலைவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டிருக்கமுடியும். ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தினால் கூட மீதமுள்ள விமானம் பிழைத்திருக்கும். அவ்வாறு செய்யாது மௌனம் காத்தது யார்? இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி பணம் சேர்த்தது யார்? இறுதியில் ஏன் இது நடக்கவில்லை?விடுதலைப் புலிகளின் தலைமை தன்னை விலக்கியது என்பதை கே.பி பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். திரும்பவும் தேசியத் தலைவர் 2008ம் ஆண்டு தன்னோடு தொடர்புகொண்டு மீண்டும் ஆயுதக் கப்பல்களை அனுப்பும்படி கூறியபோது, கே.பியின் வலையமைப்பு கலைக்கப்பட்டுவிட்டதே என்ற காழ்ப்புணர்வை தேசிய தலைவருக்கே எடுத்துரைத்துள்ளார் கே.பி. அதனை அவர் இங்கு சொல்லியும் உள்ளார். போர் உக்கிரம் அடைந்துவரும் நிலையில், புலிகள் பல இழப்புக்களைச் சந்தித்தவேளை, தேசிய தலைவர் கே.பியிடம் உதவிகேட்டபோது, தனது வலையமைப்பைக் கலைத்துவிட்டீர்களே என்று கே.பி சொல்லுவாரேயானால் அவர் மனதில் என்ன இருந்திருக்கும் என்பதை நாம் அறிவோம்!அத்தோடு மீண்டும் தனது வலையமைப்பைக் கட்டி எழுப்ப 1 வருடம் ஆகும் எனக் கே,பி கூறியபோது அது மிகவும் காலதாமதம் ஆகியிருக்கும் என தேசியத் தலைவர் கூறியதாக கே.பியே ஒத்துக்கொள்கிறார். அப்படியாயின் இக்கட்டான நிலையை அறிந்து அவசரமாக உதவமுடியாத ஒருவர் எவ்வாறு எமது இனத்தை பாதுகாக்க முடியும். பெரும் பணத்தோடும், செல்வாக்கோடும் உலாவந்த கே.பி, அப்போது இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதபோதே முடியாததை இப்போது எப்படி செய்வார் என்று எதிர்பார்ப்பது.? தமிழீழ தேசியத் தலைமையையோ அல்லது தேசியத் தலைவரையோ விமர்சிக்கும் தகுதி இங்கு யாருக்கும் இருப்பதாக நாம் கருதவில்லை. போர்களம், அதன் வியூகங்கள், களநிலைகளை வெறுமனவே வெளிநாட்டில் இருந்து அனுமானிக்க முடியாது. அங்கு உள்ளவர்களே தீர்மானிக்க முடியும்! எனவே தேசியத் தலைவரை ஒரு பகடைக்காய் போலப் பாவிப்பதும், புலிகள் மீது சேறுபூசுவதும் முதலில் நிறுத்தப்படவேண்டும்! தலைவரைக் காப்பாற்ற நினைத்தேன், அவர் குடும்பத்தை காப்பாற்ற நினைத்தேன் என்று அம்புலிமாமா கதைகளைச் சொல்லி மக்கள் மனதில் இடம்பிடிக்க வேண்டாம்! தேசிய தலைவர் வசனங்கள் பேசி மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை! எனவே வெட்டிப் பேச்சுக்களையும், உதவாத விவாதங்களையும் நிறுத்திவிட்டு, இலங்கை அரசின் போர்குற்றங்களை, இன அழிப்பை, வெளிக்கொண்டுவந்து, தமிழர்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை, வலுப்பெற பாடுபடுவதே தமிழர் விடிவுக்கு வழிசமைக்கும்!

செய்தி:அதிர்வு.கொம்

15 ஆகஸ்ட் 2010

"திருக்குவளை தீயசக்தி': கருணாநிதிக்கு புதிய பெயரிட்டார் ஜெயலலிதா.


கருணாநிதியை திருக்குவளை தீயசக்தி என்றே இனிமேல் அனைவரும் குறிப்பிடுவோம் என்றார் ஜெயலலிதா.
இதுதொடர்பாக அவர் மேலும் பேசியது:
"ஒருவரின் பெயரைச் சொல்லி அழைப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன். கருணாநிதி என்று பெயரைச் சொல்லி அழைக்கிறேன் என்று வருத்தப்பட்டிருக்கிறார் கருணாநிதி.
என்னை ஜெயலலிதா என்று அழைத்தால் நான் தவறாகக் கருதமாட்டேன். ஜெயலலிதா என்பது பெற்றோர் வைத்த பெயர். அதைச் சொல்லி அழைப்பதில் தவறில்லை.
நேருவையும், இந்திராவையும், காமராஜரையும் பெயரைச் சொல்லித்தானே குறிப்பிடுகிறோம். அதனால் அவர்களின் மதிப்பு ஒன்றும் குறைந்துவிடவில்லையே? நாடாளுமன்றத்தில் பேசும்போது அதிமுக எம்பிக்கள், புரட்சித் தலைவி என்றோ, அம்மா என்றோ குறிப்பிட்டுப் பேச வேண்டாம் எனக் கூறியிருக்கிறேன். அவ்வாறு சொல்லுவதால், பிற்காலத்தில் அவைக் குறிப்புகளைப் படிக்கும்போது, உண்மையான பெயர் வரும் சந்ததிக்குத் தெரியாமலே போய்விடலாம்.
இருப்பினும், பெயரைச் சொல்லி அழைப்பது கருணாநிதிக்கு வருத்தத்தை அளிப்பதால், அவருக்கு எம்ஜிஆர் சூட்டிய "தீயசக்தி' என்ற பெயரைச் சூட்டுவோம். திருக்குவளை தீயசக்தி என்றே கருணாநிதியை அழைப்போம். இந்த தீய சக்திகளை அகற்ற, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாம் அனைவரும் "கை' கோர்த்து செயல்பட வேண்டிய தருணம் நெருங்கிவிட்டது. வெற்றி நம்மை அழைக்கிறது. களப்பணி ஆற்றத் தயாராகுங்கள்' என்றார் ஜெயலலிதா.
அழுந்தச் சொன்ன "கை': "குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நாம் அனைவரும் கை கோர்த்து செயல்பட வேண்டிய தருணம் நெருங்கி விட்டது' எனக் குறிப்பிடும்போது "கை' என்ற ஒற்றைச் சொல்லை அழுந்தச் சொன்னார். ஜெயலலிதா பேசியபிறகு, அந்தப் பேச்சின் பிரதி பத்திரிகையாளர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்தப் பிரதியில் "கை' என மேற்குறியிடப்பட்டிருந்தது.

அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை!



அந்த நாற்பது நாட்கள் மிகவும் கொடூரமானவை.. ஆனால் நான் எனது உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காகவே எனது நாட்டை விட்டு வெளியேறினேன் - இப்படி கூறினார் ஓசியன் லேடி கப்பல் மூலம் கடந்த வருடம் கனடாவை வந்தடைந்த ஈழத் தமிழர்கள் 76 பேரில் ஒருவரான 21 வயது இளைஞன்.
அவர் பாதுகாப்புக் காரணங்களாக பெயரை வெளிப்படுத்த மறுத்து விட்டார். ஆயினும் அக்கடல் பயணத்தின்போது எதிர்கொண்ட பேராபத்துக்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.
அவர் தெரிவித்தவை வருமாறு:-
”நான் மூன்று இலட்சம் தமிழர்களில் ஒருவராக வவுனியாவில் முட்கம்பி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்தவன்.ஒருவாறு அங்கிருந்து தப்பினேன். உயிரைக் காப்பாற்றிக் கொள்கின்றமைக்காகவே கடற்பயணத்தில் ஈடுபட்டேன்.
அந்த நாற்பது நாட்கள் கொண்ட கடல் பயணம் மிகவும் கொடூரமானது.பேராபத்துக்கள் நிறைந்தது. அந்த நாற்பது நாட்களும் நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன்.நான் கப்பலில் உயிரைக் குடிக்கும் கடுங்குளிரில் தூங்க வேண்டித்தான் இருந்தது.
காலநிலையுடன் போராட வேண்டி இருந்தது. பல்லைக் கடித்துக்கொண்டு இருக்கத்தான் முடிந்தது. கடல் அடிக்கடி பயங்கரமாக ஆர்ப்பரித்துக் கொண்டே இருந்தது.கடுங்காற்றும் வீசியது. கப்பல் ஒருவாறு கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா தீவை கடந்த ஒக்டோபர் மாதம் வந்தடைந்தது.
இப்பயணிகள் அனைவருமே எமது அகதிக் கோரிக்கை தொடர்பாக கனேடிய அரசினால் இறுதித் தீர்மானம் எடுக்கும் வரை கனடாவில் தங்கி இருக்க அனுமதிக்கப்பட்டோம். என்னை அதிகாரிகள் கேள்விகளை அடிக்கடிக் கேட்டு அரித்துக்கொண்டே இருந்தனர்.
ஐந்து மாதங்கள் சிறையில் போட்டனர். விடுவிக்கப்பட்டேன். தற்போது தலைநகர் ரொரன்ரோவில் வாழ்கின்றேன். எனது அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றேன்.
எனது தற்போது தொழில் பார்க்கும் உரிமை கிடையாது.எனது ஆங்கில அறிவை விருத்தி செய்ய வகுப்புகளுக்குச் செல்கின்றேன்.என்னை மனிதாபிமான தொண்டர்கள் சிலர்தான் ஆதரித்து வைத்திருக்கின்றார்கள்.
கணனித் துறையில் ஒரு மேதாவியாக வந்து சாதனைகள் நிலைநாட்ட வேண்டும் என்பது எனது இலட்சியக் கனவு. எனது தந்தை இறந்து விட்டார். எனது தாய், எனது சகோதரர்கள் இப்போதும் வவுனியா முட்கம்பி முகாம்களுக்குள்தான் அடைக்கப்பட்டிருக்கின்றார்கள்.
எனது வாழ்க்கை கனடாவில் கேள்விக்குறியாகவே இருக்கின்றது. இந்நாட்டுக்கு அரசியல் தஞ்சம் கோரி வருகின்ற ஈழத் தமிழர்கள் உண்மையிலேயே அப்பாவிகளும், பாதிக்கப்பட்டவர்களும்,ஆதரிப்பார் யாரும் இல்லாதவர்களுமே ஆவர்.
ஓசியன் லேடி கப்பலில் வந்த எம் மீது கனேடிய அரசு ஓரளவு கருணை காட்டி நடந்து கொண்டது. அக்கருணையை எம்.வி.சன்.சி கப்பலில் வந்திருப்பவர்கள் மீதும் காட்டுதல் வேண்டும்.கனடா அப்படி நடந்து கொள்ளும் என்கிற நம்பிக்கை எனக்கு உண்டு.
இலங்கையில் தமிழர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லை.ஆகவேதான் நாம் நாட்டை விட்டு வெளியேறி பேராபத்துகளுக்கு மத்தியில் வேறு நாடுகளுக்கு அரசியல் தஞ்சம் கோரி வர வேண்டி இருக்கின்றது.”

கனடா வந்தவர்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில்!



எம்.வி.சன்.சி கப்பலில் கனடாவைச் சென்றடைந்திருக்கும் ஈழத் தமிழர்களில் ஒருவரின் நிலைமை மிகவும் கவலைக்கு இடமாக உள்ளது.
அவர் உயிருக்குப் போராடிய நிலையில் விக்டோரியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
இப்பயணிகளில் சுமார் எட்டுப் பேர் வரையானோர் இவ்வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இவர்களில் இரு கர்ப்பிணிப் பெண்களும், ஒரு ஆறு மாதக் குழந்தையும் அடங்குவர்.

14 ஆகஸ்ட் 2010

தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு ஆபத்து: வைகோ.


தமிழ்நாட்டில் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். பாளையங்கோட்டை வண்ணாரபேட்டையில் நே‌ற்று தொடங்கிய ஓவியர் புகழேந்தியின் "போர் முகங்கள்'' என்ற இலங்கைப் போரில் தமிழர்களின் பாதிப்புகள் குறித்த ஓவியக் கண்காட்சியை தொடக்கி வைத்து வைகோ பேசுகை‌யி‌ல், இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள கொடுமைகள் குறித்து எனது பேச்சு ஏற்படுத்தும் தாக்கத்தைவிட இங்கே ஓவியர் புகழேந்தி வரைந்து வைத்துள்ள ஓவியங்கள் ஆயிரம் மடங்கு அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இலங்கை போர் நிகழ்வுகள் குறித்த இந்த ஓவியங்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட வேண்டும். ஒளி நாடாக்களாகவும், புத்தகங்களாகவும் தயாரிக்கப்பட்டு தமிழர் வீடுகள் தோறும் இடம்பெற வேண்டும். தமிழீழம் மலர்ந்தே தீரும். தமிழீழத்தை உருவாக்க இந்த ஓவியக் கண்காட்சி பயன்படும். இலங்கையில் தமிழர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது. 1989இல் பிரபாகரனை சந்தித்தேன். மீண்டும் சந்திப்பேன். காலம் கடந்தாலும் போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதி. இலங்கை அதிபர் ராஜபக்ச தப்ப முடியாது. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும்போது இங்குள்ள சிங்களவர்களுக்கு என்ன பாதுகாப்பு? இதைத்தான் சீமான் கூறினார். இங்கே கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அடக்குமுறைக்கு நாங்கள் அடங்க மாட்டோம் என்று வைகோ கூ‌றினா‌ர்.

13 ஆகஸ்ட் 2010

கொட்டாஞ்சேனைத் தமிழர்களையும் பதியும்படி போலீஸ் அறிவிப்பு.



கொழும்பில் தங்கியிருக்கும் தமிழர்கள் மீது சந்தேகப் பார்வையை வைத்துள்ள போலீசார் தற்போது கட்டம் கட்டமாக அவர்கள் மீது சில வரையறைகளை விதித்து வருகின்றனர். இதன்படி வெள்ளவத்தைப் பகுதியில் தங்கியுள்ள தமிழர்கள் அனைவரும் போலீசில் பதிவு செய்ய வேண்டும் என்ற நடைமுறை அண்மையில் அமுல்படுத்தப்பட்டது. இதேபோல, கொட்டாஞ்சேனைப் பகுதியை நேற்று அதிகாலை சுற்றி வளைத்த போலீசார், தமிழ்மக்களை போலீஸ் நிலையத்தில் பதிவுசெய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளனர். எதற்காகப் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேள்வி எழுப்பிய சில தமிழர்களைப் போலீசார் தம்முடன் போலீஸ் நிலையத்துக்குக் கூட்டிச் சென்றனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.நேற்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. "தமிழ்மக்கள் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற ஷரத்து அவசரகாலச் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது. பின்னர் ஏன் நாங்கள் பதிவுசெய்யவேண்டும்?" என சிலர் கேள்வி எழுப்பினர் என்றும் அதற்குப் போலீசார் வெளிநாடுகளிலுள்ள புலிகள் கொழும்பில் ஊடுருவியிருக்கலாம் எனத் தெரிவித்தனர் என்றும் கூறப்படுகிறது. வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிலர் போலீஸ் நிலையத்துக்குக் கூட்டிச் செல்லப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஓரு தமிழருக்குத் தடுமன் ஏற்பட்டால் உலகத் தமிழருக்கு எல்லாம் தும்மல் வரவேண்டும் – பேராசிரியர் தீரன்.



நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டு வருவது குறித்து சிறப்புக் கவன ஈர்ப்புத் தீர்மானம் மூலம் மாநிலங்களவையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல் தமிழக தி.மு.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட பகைமையைத் தீர்த்துக்கொள்வது போல் மீனவர் பிரச்சனையிலும் வெளிப்படையாக நடந்து கொண்டுள்ளனர். அரசுத் தரப்பில் உருப்படியாக எந்தப் பதிலும் கிடைக்காமல் ஒப்புக்கான விவதாமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினர் து.இராஜா குறிப்பிட்டது போல் எப்போது இலங்கை சம்மந்தமான விவாதம் நடந்தாலும் ஒரே மாதிரியான அறிக்கையை மத்திய அரசு தருகிறது எனச் சாடியுள்ளார்.
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, விவாதத்திற்குப் பதிலளிக்கையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதிக்குள் போகக்கூடாதென அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் எனவும், மீனவர்கள் குறித்து ஒப்பந்தம் போட்ட பிறகு தாக்குதல் சம்பவங்கள் குறைந்துள்ளது என்றும் இராஜபக்சே மன்மோகன் சிங்கிற்கு இனிமேல் தமிழக மீனவர்களைத் தாக்க மாட்டோம் என வாக்குறுதி தந்துள்ளார் என்றும், கச்சத்தீவைப் பொறுத்தவரை அது முடிந்து போன விவகாரம், திரும்பப் பெறுவது சாத்தியமற்றது எனவும் கூறி இந்திய அரசின் இயலாமையை வெளிப்படுத்திக் காட்டியுள்ளார். அமைச்சர் கிருஷ்ணாவின் பதில் இலங்கை அரசின் வெறிச் செயலை ஊக்கப்படுத்துவதாகவும், தமிழர் நெஞ்சங்களை ஊனப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.
சிங்கள மீனவர் எல்லை தாண்டி வந்தாலும் சுடாமல் இந்தியக் கடற்படை அவர்களைப் பத்திரமாகக் கைது செய்து திருப்பியனுப்புகிறது. நமது நட்பு நாடு எனக் கூறிக் கொள்ளும் இலங்கை மட்டும் இதுவரை சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை ஏன் அடித்தும் சுட்டும் கொன்று வருகிறது எனக் கேட்டால் இலங்கை என்ன தனது தூதரக உறவை முறித்துக் கொண்டு இந்தியாவுக்கு நெருக்கடியா தந்துவிடப் போகிறது? இந்தியக் குடிமக்களான தமிழக மீனவர்களைக் காப்பாற்ற முடியாத மத்திய அரசுக்கு நமது வரிப்பணத்தில் ஒரு கப்பற்படை தேவையா? இவர்கள் இலங்கைக்கு நிதியுதவி, நெருக்கடியான நேரங்களில் இராணுவத் தளவாட உதவி, இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி உதவி போன்று முறைவாசல் வேலை செய்தாலும் செய்வார்களே தவிர, சுட்டுக்கொல்லப்படும் நமது தமிழக மீனவர்களைக் காப்பாற்றும் கடமையை மட்டும் செய்யமாட்டார்களாம்!
நாளுக்கு நாள் நடைப்பிணமாகி வரும் காங்கிரசைத் தூக்கிச் சுமக்க தமிழக அரசியல் கட்சிகள் பல போட்டிபோட்டுக் கொண்டு இருக்கும் போது, மத்தியில் ஆளும் காங்கிரசு தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதற்கு என்ன தடுப்பு நடவடிக்கைகள் உருப்படியாக இதுவரை எடுத்து இருக்கிறது என்று துணிச்சலாய் கேட்கும் ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் இல்லாமலிருப்பது மாபெரும் மானக்கேடு ஆகும்.
கடலில் எல்லைக்கோடு பார்ப்பது கடினம். மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்வதோ சர்வசாதாரணம். ஆனால் சர்வதேசத்தில் எங்குமே எல்லை தாண்டினார்கள் என்பதற்காக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படும் கொடுமைகள் நடப்பது கிடையாது. அப்படியிருக்க இந்தியாவும் இலங்கையும் சார்க் நாடுகளின் உறுப்பு வகிக்கும் நாடுகளாக உள்ள போது, அங்குத் தமிழக மீனவர் பிரச்சினையை எழுப்பத் தயங்குவது ஏன்? தேசத்தின் மதிப்பு அதன் குடிமக்களைக் காப்பதில் இருக்குமா? அல்லது அண்டை நாடான இலங்கை நம் குடிமக்களை அழித்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதால் நமது தேசத்தின் மதிப்பு உயருமா?
கச்சத்தீவு ஒப்பந்தம் போடப்பட்டு முடிந்த விவகாரம் அதைத் திரும்பவும் பரிசீலனை செய்ய முடியாது என்கிறார் வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணா. 1974 ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி தமிழக மீனவர்களுக்குக் கச்சத்தீவின் அருகே மீன் பிடிக்கவும் வலைகளை உலர்த்தவும் புனித அந்தோணியார் ஆலயத்திற்குச் சென்று வழிபாடு நடத்தவும் உரிமை வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது. அந்த உரிமை தற்போது நடைமுறையில் நமக்கு உள்ளதா? இல்லையா? இருந்தால், ஒப்பந்தப்படி இலங்கை நடக்காதபோது கச்சத்தீவை மீட்பது குறித்து எப்படி நம்மால் முடியாமல் போகும்? கச்சத்தீவில் நமக்கு உரிமை இல்லையென்றால், சீனர் கச்சத்தீவில் முகாம் அமைப்பதற்கும், உளவுப்பார்க்க தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கும் இலங்கை அனுமதித்திருப்பது மட்டும் ஒப்பந்தத்தை மீறிய செயல் அல்லவா? இந்தியப் பாதுகாப்பிற்கு இது ஆபத்தை விளைவிக்குமா, இல்லையா? இலங்கை நமக்கு எதிராகத் தந்திரமாகச் செயல்படும்போது நாம் மட்டும் உயிரிழப்புகளை தடுப்பதற்குக்கூட வாய்தா கேட்டுக் கொண்டிருக்கலாமா?
கச்சத்தீவு தமிழ்நாட்டின் இராமநாதபுரம் சேதுபதி மன்னருக்கு உரிமை உடையதாக இருந்தது என்பது வரலாறு. கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல், கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது மத்திய அரசு தமிழர்களுக்கு செய்த பெருந்துரோகமாகும்.
தமிழக மக்களைக் கேட்காமல் நமக்கு உரிய கச்சத்தீவை இலங்கைக்குத் தந்துவிட்டு, இன்று தமிழக மீனவர்கள் மீது தவறிருப்பதுபோல், எல்லை தாண்டுவதால்தான் இலங்கை சுட்டுக் கொல்கிறது என்று முன்பு இந்திய தென்பிராந்தியக் கடற்படைத் தளபதியும், தற்போது வெளியுறவு அமைச்சரும் கூறுவது மிகவும் வேதனைக்கு உரியதாகும். மனித உயிர்களைவிட வெறும் காகித ஒப்பந்தங்கள் என்ன உயர்வானவையா? துணிவிருந்தால் கச்சத்தீவைக் கொடுத்தது சரியா, தவறா என தமிழகத்தில் ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடத்த மத்திய அரசு தயாரா? சர்வதேச மீன்பிடி உரிமைகளை மீறி தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதைத் தடுக்க முடியாததற்குக் காரணம் ஒன்று இந்தியாவின் இயலாமையாய் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழக மீனவர்களின் உயிர் உடமைகளை மிகவும் மலிவானதாக கருதும் மத்திய அரசின் மெத்தனப்போக்கு காரணமாய் இருக்க வேண்டும். நமது இந்திய அரசியல் சாசனப்படி பாரபட்சமின்றி இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து பதவிக்கு வருகிறவர்கள் தனது குடிமக்களைப் பாதுகாக்க இயலாது என்பதை பகிங்கரமாக மாநிலங்களவையில் அறிவிக்கும்போது, உறுதிமொழியைக் காப்பாற்றத்தவறிய எஸ்.எம்.கிருஷ்ணாவின் பதவியைக் குடியரசுத் தலைவர் பறிக்க வேண்டும்.
இலங்கை அதிபர் இராஜபக்சே இந்திய பிரதமருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம். எந்த வாக்குறுதிகளை இலங்கை இதுவரை காப்பாற்றி வந்துள்ளது? இலங்கையில் வடக்கு கிழக்கு மாநிலங்களை இணைக்கும் இநதிய-சிறிலங்கா ஒப்பந்தத்தை இதுவரை நிறைவேற்றினார்களா? ஒருதலைபட்சமாக இலங்கை உச்சநீதிமன்றத்தின் மூலமாக சர்வதேச உடன்பாட்டைக் குப்பையில் தூக்கி வீசினார்கள். பாதுகாப்பு வளையத்திற்குள் வந்தால், ஈழத்தமிழர்களைக் கொல்லமாட்டோமென இந்தியாவுக்கும் ஐ.நாவுக்கும் தந்த வாக்குறுதிகளை மீறி 2009 மே போரில் சுமார் 50,000 அப்பாவித் தமிழர்களைக் குண்டு வீசிக் கொன்ற இன்றைய ஹிட்லர்தானே அதிபர் இராஜபக்சே. வெள்ளைக் கொடியோடு சமாதானம் பேசவரும் போராளிகளைக் கொல்லமாட்டோமென வாக்குறுதி தந்துவிட்டு அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட தலைவர்களை ஈவிரக்கமில்லாமல் நொடிப்பொழுதில் சுட்டுக்கொன்ற இக்கால இடிஅமீன்தானே இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபய இராஜபக்சே. பேர்ர் முடிவுற்ற பிறகு ஈழத்தமிழர்களின் புனரமைப்புப் பணிக்காக இந்தியா தந்த ரூபாய் 500 கோடியைச் சொன்னபடி அதற்காக செலவிட்டார்களா? அதைக்கூட பார்க்காமால் தற்போது வேறு 1000 கோடி ரூபாய் இந்தியா இலங்கைக்கு வழங்கியிருப்பது தமிழின அழிப்பிற்காக இந்தியா தரும் கௌரவ விருதுகளா? அல்லது சன்மானமா?
ஐ.நா.மன்றம் நியமனம் செய்துள்ள இலங்கையின் போர்க்குற்ற விசாரணை பற்றி ஆராய அமைக்கப்பட்ட மர்சுகி தரூஷ்மன் தலமையிலான குழுவை இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என இலங்கை அரசு அடாவடி செய்கிறது. இதைக்கூட இதுவரை இந்தியா தட்டிக்கேட்க முடியவில்லை. தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை மட்டும் இவர்கள் எங்கே தடுக்கப்போகிறார்கள்? அமைச்சர் எஸ்எம்.கிருஷ்ணா வாக்குறுதி தந்த 10ஆம் தேதியே, தமிழக மீனவர்களை இந்திய எல்லைக்குள்ளேயே வந்த இலங்கைக் கடற்படை, தனுஷ்கோடி அருகே கல்லால் அடித்து காயப்படுத்தி விரட்டியுள்ளது. இலங்கை கடற்படை பலமுறை நமது எல்லையில் வந்து தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றுள்ளது. மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் மத்திய அரசு யார் வீட்டில் இழவு விழுந்தால் எங்களுக்கென்ன என்பதைப் போல் மெத்தனமாய் இருக்கிறது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சீக்கியர்களின் தலைமுடி காக்கும் டர்பனுக்காக பிரான்ஸ் அரசிடம் வாதாடி அவர்களுக்குப் பாதுகாப்பைப் பெற்றுக்கொடுத்தார். ஆனால் நூற்றுக்கணக்கான மீனவத் தமிழரின் உயிர்களை பாதுகாக்க மட்டும் இந்தியா தயங்குவது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தட்டிக் கேட்டால், அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கிறார்கள். தமிழர்களைக் கொல்பவனுக்குச் சன்மானம்: தடுக்கச் சொல்பவனுக்கோ சிறைவாசமாம்!
சாதிகளாய், சமயங்களாய், கட்சிகளாய்த் தமிழர்கள் கண்மூடித்தனமாக பிளவுற்று செயல்படுவதை விட்டுவிட்டு நாமனைவரும் தமிழர்கள் என்ற உணர்வோடு செயல்பட்டாக வேண்டும். இது மீனவர்களின் பிரச்சனை என்று பிற தமிழர்கள் ஒதுங்கி வேடிக்கைப் பார்க்கக் கூடாது.
சாதிகள், மதங்கள், கட்சிகள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும்தான் இருக்கின்றன. ஆனால் பிற மாநிலத்தவர், அவை எல்லாவற்றையும் கடந்து மலையாளி, தெலுங்கர், வங்காளி, காஷ்மீரி என்று இன உணர்வுக்கு முன்னுரிமை தந்து ஒன்றுபட்டு குரல் கொடுப்பதால் அவர்களுக்குப் பிரச்சனை ஏற்படுவது மிகமிகக் குறைவு. ஆனால் தமிழர்களிடம் இனஉணர்வுகளைவிட பிறஉணர்வுகள் மேலோங்கியிருப்பது ஒரு சாபக்கேடு!
ஆளும் கூட்டணியில் இருந்த போதிலும் மத்திய இரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி மாவோயிஸ்டுகளுக்காக- ஆசாத் போன்ற அரசுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த சமாதானத் தூதுவர்களாக இருக்கக்கூடியவர்களை மத்திய அரசு சுட்டுக்கொன்றது தவறு என்றும் அதற்காக நீதிவிசாரணையையும் துணிவுடன் கோரியுள்ளார். அரசியல் ஆதாயத்திற்காக மம்தா அப்படி பேசியிருந்தாலும் அவரிடம் மேலோங்கியிருப்பது, தான் ஒரு வங்காளி என்ற உணர்வுதான். ஆனால் தமிழ்நாட்டிலோ ஊழல் தலைவர்களிடம் அதிகாரம் உள்ளது, உணர்வுள்ள தமிழர்களுக்கோ சிறைவாசம் என்ற நிலைதான் உள்ளது.
அரசியல் ஆதாயத்திற்காகக் கூட, இங்கே அப்பாவித் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயல்பட, சுயநலத் தேர்தல் அரசியலையும் தாண்டி செயல்படுவதற்குத் தமிழகத்தில் யாரும் தயாராக இல்லை. தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக ஈழத்தமிழர்கள் அங்கே முள்ளிவாய்க்கால் போரில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். கேட்க நாதியில்லை. தடுக்க யாருமில்லை. தமிழன் என்கிற அதே காரணத்திற்காக இந்தியாவிலும் வந்து சிங்களக் கடற்படை எம் மீனவத் தமிழர்கள் நூற்றுக்கணக்கானவர்களைப் படுகொலை செய்து வருகிறது. பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மீனவர்களின் உடமைகளைச் சூறையாடிக் களிக்கிறது. கேட்க நாதியில்லை. தடுக்க யாருமில்லை. பறவை, விலங்குகளைவிட தமிழனின் உயிர் மிகமிக மலிவாகப் போய்விட்டது இன்று.
ஊரடங்கு உத்தரவு போடுமளவிற்கு வீதிக்கு வந்து போராடியதால் காஷ்மீரிகள் விருப்பப்படி இன்றைக்குச் சுயாட்சி தந்தேனும் அவர்களைத் திருப்திப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு. தேர்தல் மூலமும், போராட்டம் மூலமும் காங்கிரசுக்குச் சரியான பாடம் புகட்டியதால், தெலுங்கானா தனி மாநிலம் தரவும் முன்வந்துள்ளது மத்திய அரசு. ஒருவேளை புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் பாடியதுபோல், “இனமல்லடா, அவன் பகைவன், இனியும் ஏமாற வேண்டாம் தமிழா! மனமொன்று செயலொன்று அன்னோர்க்கு, கெட்ட வஞ்சகரைக் கண்ட இடமெல்லாம் தாக்கு!” என்று தமிழர் கூட்டம் வெகுண்டு எழுந்தால்தான் அங்கு ஈழத்தமிழர்க்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்க்கும் பாதுகாப்பு உறுதியாய் கிடைக்கும். கன்னியாகுமரியில் ஒருவர்க்குத் தேள் கொட்டினால், காஷ்மீரில் இருப்பவர்க்கு நெரி கட்டுகிறது என்பார்களே, அதுபோல இங்கு ஒரு தமிழனுக்குத் தடுமன்(சலதோசம்) ஏற்பட்டால், உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு உடனே தும்மல் வரவேண்டும். அன்றுதான் தமிழினத்திற்கு விடியல் பிறக்கும் நாள்!
—-
பேராசிரியர் தீரன்மாநில ஒருங்கிணைப்பாளர்,

நாம் தமிழர் கட்சி

12 ஆகஸ்ட் 2010

ஏழாலையில் கடத்தப்பட்ட இளைஞர் சாதுரியமாகத் தப்பிவந்தார்.



குடாநாட்டில் தொடர்ந்தும் பல கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன. நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் ஏழாலையில் உள்ள அம்மன் கோயில் சப்பரத் திருவிழாவுக்குச் சென்று விட்டு ஒரு இளைஞர் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை அவரை இனந்தெரியாத இருவர் கடத்திச் சென்றுள்ளனர். 21 வயதான கஜன் எனப்படும் குறிப்பிட்ட இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குப் புறப்படத் தயாரானபோது, அவரது மோட்டார் சைக்கிளில் பின்புறமாக ஏறிய கடத்தல்காரர் இருவரும் குறித்த இளைஞனின் வாயைப் பொத்திக் கட்டியதுடன் மோட்டார் சைக்கிளை உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்திற்கு அண்மையாக உள்ள கட்டுவன்புலம் பாடசாலைக்கு அருகில் கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர்.பின்னர் அவரது கழுத்தை "வயர்' கொண்டு திருக முயற்சித்தவேளை இளைஞர் தனது கைக்கட்டையும் வாய்க்கட்டையும் ஒருவாறு அவிழ்த்துக் கொண்டு சத்தமிட்டுள்ளார். சத்தம் கேட்டு அந்தப் பகுதியில் உள்ளவர்கள் ஓடிவரவே குறித்த நபர்கள் இருவரும் தப்பிச்சென்றுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்த தகவல் அறிந்த தெல்லிப்பழை பொலிஸார் இளைஞனை மீட்டு சுன்னாகம் பொலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக அறியப்பட்டுள்ளது.

11 ஆகஸ்ட் 2010

போலீஸ் பாதுகாப்புடன் அசின் படப்பிடிப்பு.


இலங்கை சென்றதால் சர்ச்சையில் சிக்கிய நடிகை அசின் ரகசியமாக சென்னை வந்தார். மலையாளத்தில் ஹிட்டான பாடிகார்ட் படம் தமிழில் ரீமேக் ஆகிறது. சித்திக் இயக்குகிறார். இதில் விஜய், அசின் ஜோடியாக நடிக்கின்றனர். இப்படத்தின் இறுதிகட்டப் படப் பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. இதில் நடிப்பதற்காகவே அசின் கடந்த திங்கட்கிழமை அன்று சென்னை வந்தார். கிழக்குகடற்கரை சாலையில் ஒரு பங்களாவில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று நடித்தார். அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க பங்களா வெளியே போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். படப்பிடிப்பு முடிந்து செல்லும் போது அசின் காரை பின் தொடர்ந்து தனியார் பாதுகாவலர்கள் இன்னொருகாரில் சென்றார்கள். இன்று எண்ணூரில் படப்பிடிப்பு நடந்தது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நடிகர் நடிகைகள் இலங்கை செல்லக் கூடாது என்று திரைப்பட சங்கங்கள் தடை விதித்திருந்தது. இந்த தடையை மீறி அசின் இந்தியில் தயாராகும் ரெடி படப்பிடிப்புக்காக இலங்கை சென்றார். இலங்கை அதிபர் ராஜபக்சே மனைவியுடன் தமிழர் பகுதிகளில் சுற்றுப் பயணமும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அசினுக்கு பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் விபச்சாரத்துக்காக இலங்கைச் சிறுமிகள் விற்பனை.



சிங்கப்பூரில் நடக்கும் நடனக் கச்சேரிக்காகக் கொண்டு செல்வதாகக் கூறி அங்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைச் சிறுமிகள் விபச்சாரத்துக்காக விற்கப்படுவதாக இலங்கை குற்றப் புலனாய்வுப் போலீசார் கண்டுபிடித்துள்ளனராம். இந்த விவகாரம் குறித்து கொழும்பு குற்றவியல் நீதிமன்றத்திற்குப் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதரகம் கொடுத்த ஒரு முறைப்பாட்டினை அடுத்தே போலீசார் இந்த விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.விசாரணைகள் மூலம் ஒரு சந்தேக நபரைத் தாம் கைது செய்துள்ளதாக நீதிமன்றில் கூறியுள்ள போலீசார், இந்நபர் விபச்சாரத்துக்காகச் சிறுமிகளை தலா 50 டொலர் பெற்றுக்கொண்டு சிங்கப்பூரில் விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளதாகக் கூறினர். இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள பிற நபர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

யுத்தக் குற்றச்செயல்கள் தொடர்பில் விசாரணைக்கு வலியுறுத்துமாறு அமெ. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை.




சிறீலங்காவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீன அனைத்துலக விசாரணைகள் அவசியம் என அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமெரிக்க அதிபர் பராக் ஓபாமாவை வலியுறுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்ற போரில் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்த சுயாதீனமான அனைத்துலக விசாரணைகள் அவசியம் என்பதை வலியுறுத்தி அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்; அமெரிக்காவின் வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
சிறீலங்கா அரசு உருவாக்கியுள்ள குழு நம்பகத்தன்மை அற்றது. அது போர்க்குற்ற விசாரணைகளை தாமதப்படுத்துவதுடன், பல சந்தர்ப்பங்களில் இந்த குழுவின் செயற்பாடுகள் மீது அரசின் தலையீடுகளும் இருந்துள்ளன.
போரின் போது இரு தரப்பினரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் உண்டு. எனவே சிறீலங்காவில் நடைபெற்ற இறுதிப்போரில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் சுயாதீனமான முழு விசாரணைகள் அவசியம் என அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 9 ஆம் நாள் அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் 57 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.