பக்கங்கள்

20 நவம்பர் 2018

ரணில்,மகிந்த இருவரும் சாதாரண எம்பிக்களே!


ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “ ரணில் விக்ரமசிங்க தற்பொழுது ஓர் நாடாளுமன்ற உறுப்பினராவார். அதனால் அவர் அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும்.ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையை விட்டு வெளியேற வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “ ரணில் விக்ரமசிங்க தற்பொழுது ஓர் நாடாளுமன்ற உறுப்பினராவார். அதனால் அவர் அலரி மாளிகையை விட்டு வெளியேறிச் செல்ல வேண்டும். ரணில் விக்ரமசிங்கவும், மஹிந்த ராஜபக்சவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாவர். ரணில் இன்னமும் தாம் பிரதமர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்.எனினும், மஹிந்த ராஜபக்சவோ ரணில் விக்ரமசிங்கவோ பிரதமர் கிடையாது. எனவே ரணில் விக்ரமசிங்க அலரி மாளிகையில் தொடர்ந்தும் தங்கியிருக்க முடியாது.இருவரும், ஓர் சாதாரண நாடாளுமன்ற உறுப்பினராவார். எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகளை மட்டுமே அனுபவிக்க முடியும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

14 நவம்பர் 2018

நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றம்!

Related imageபுதிய பிரதமர் மற்றும் அமைச்சரவை மீதான நம்பிக்கையில்லா பிரேரணை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார். இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 04ம் திகதி வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றம் கூடியதாகவும், இன்போது மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்த பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், அதன்படி பிரேரணைக்கு ஆதரவாக கிடைத்த பெரும்பான்மை வாக்குகளுக்கமைய பிரேரணை நிறைவேற்றப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அத்துடன், நம்பிக்கையில்லாப் பிரேரணையின் பிரதி மற்றும் அண்மையில் நியமிக்கப்பட்ட பிரதமர் மற்றும் அமைச்சரவை அரசியலமைப்புக்கு எதிரானது என்று 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட கடிதம் என்பன ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் நாளை காலை 10மணிவரை ஒத்திவைப்பு!

இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நவம்பர் 9-ம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை பிறப்பித்திருந்த நிலையில், இன்று இலங்கை நாடாளுமன்றம் கூடியது. இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடியது. பிரதமர் ஆசனத்தில் மகிந்த ராஜபக்ச அமர்ந்திருந்தார். ஆளும்கட்சி வரிசையில் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான, புதிதாக அமைச்சுப் பதவிகளைப் பெற்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்தனர். ஆரம்பம் முதலே சபையில் கூச்சல் குழப்பம் நிலவியது. மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்மொழிந்தார். அதே கட்சியைச் சேர்ந்த எம்.பி. விஜித ஹேரத், அதனை வழிமொழிந்தார். நிலையியல் கட்டளைச் சட்டத்தின்படி, வாக்கெடுப்பை நடத்துவதற்கு தனக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்தார். நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை நடத்துவதாக சபாநாயகர் அறிவித்ததையடுத்து, நாடாளுமன்றத்தில் தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியது. இதனால் 10:27 மணியளவில் சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளை காலை 10 மணிவரை ஒத்திவைத்தார்.

07 நவம்பர் 2018

சுமூகமான முடிவுகளை எடுக்க மைத்திரிக்கு கூட்டமைப்பு ஆதரவு!


நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமை தொடர்பில் ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தாம் சந்திப்பிற்குச் செல்லவுள்ளதாக 
பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வௌியிட்டுள்ள அறிக்கை வருமாறு, "தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், திரு செல்வம் அடைக்கலநாதன்பா.உ, திரு. த .சித்தார்த்தன் பாஉ, திரு. எம்ஏ.சுமந்திரன் பாஉ ஆகியோர் இன்று ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் இடம்பெற்றது. நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போதுஅதிமேதகு ஜனாதிபதி அவர்கள் சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு விளக்கமளித்தார் இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பினாலும் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பின் குழுவினர் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு எடுத்துக் கூறினார்கள். இத்தீர்மானங்கள் ஏற்கனவே பகிரங்கமாக முழு நாட்டிற்கும் உலகிற்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது என்றும் அத்தீர்மானங்களின் படியே தாம் செயற்படுவோம் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதி அவர்களுக்கு விளக்கி கூறினார்கள். அனைத்து கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையை சுமூகநிலைக்கு கொண்டு வருவதற்காக எதிர்காலத்தில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது முழுமையான ஆதரவை கொடுக்கும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு குழு குறிப்பாக அதிமேதகு ஜனாதிபதிக்கு உறுதியளித்தார்கள். இந்நிலையை விரைவாக அடைவதற்கு தற்போது யோசித்துள்ள திகதிக்கு முன்னதான ஒரு திகதியில் பாராளுமன்றம் கூட்டப்பட வேண்டுமென்று ஜனாதிபதிக்கு ததேகூ வலியுறுத்தியது. இவ்வேண்டுகோளை தான் கவனமாக ஆராய்வதாக ஜனாதிபதி உறுதியளித்தார்."இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

01 நவம்பர் 2018

வடக்கு கிழக்கு இணைப்பு,சமஷ்டி நான் இருக்கும்வரை சாத்தியம் இல்லை -மைத்திரி!


ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால், தாம் உடனடியாகப் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராகப் பதவியேற்றால், தாம் உடனடியாகப் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்று சிறீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.மைத்திரிபால சிறிசேன நேற்று நண்பகல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தார். ''நான் இருக்கும் வரை வடக்கு, கிழக்கு இணைப்பும் சமஷ்டியும் சாத்தியமில்லை. அதை அடைய வேண்டும் எனில் அவர்கள் என்னை கொலை செய்ய வேண்டும்.ஆனால் சமஷ்டி தொடர்பிலும் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலும் சிலர் வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் சிறந்த புரிதல் ஏற்பட்டுள்ளது. எனவே எதிர்காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றி இருவரும் விவாதித்துள்ளோம். எனவே எதிர்காலம் குறித்து அச்சம் தேவையில்லை” என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார்.