பக்கங்கள்

29 டிசம்பர் 2017

மாணவன் விஷமருந்தி தற்கொலைக்கு முயற்சி!

உயர்தரப் பரீட்சையில் தான் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காமையினால் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.யாழ்ப்பாணம் வடமராட்சியை சேர்ந்த மாணவரே விஷமருந்தி தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.வர்த்தகப் பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய குறித்த மாணவன் தனது சக மாணவர்களை விடவும் குறைந்தளவு மதிப்பெண்களை பெற்றதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கிறார்கள்.மாலை வேளையில் மாணவனது அறையில் அழுகுரல் கேட்டதாகவும்,ஓடிச்சென்று பார்த்தபோது மாணவன் வாந்தி எடுப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றதாகவும்,மாணவனது உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

27 டிசம்பர் 2017

வெற்றி பெற்றால் ஊதியமின்றி பணி-மணிவண்ணன்.


உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ். மாநகர முதல்வர் வேட்பாளராக சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். யாழ். மாநகரசபையின் துணை முதல்வர் வேட்பாளராக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆரோக்கியநாதன் தீபன்திலீசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கட்சித் தலைவர் கஜேந்திரகுமாார் பொன்னம்பலத்தினால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து உரையாற்றிய யாழ். மாநகர முதல்வர் வேட்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் “எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் சைக்கிள் சின்னத்தில் தமிழ்த் தேசியப் பேரவை வடக்கு கிழக்கு முழுவதும் போட்டியிடுகின்றது. தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ் மக்கள் பேரவையில் அங்கம்வகிக்கின்ற பல பொது அமைப்புக்களும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் இணைந்து போட்டியிடுகின்றன. இவற்றுடன் 10 பொது அமைப்புக்களின் கூட்டான தமிழர் சம உரிமை இயக்கம் மற்றும் நம்பிகள் நல்வாழ்வுக் கழகம் தமிழர் வாழ்வுரிமை இயக்கம் ஆகியன இணைந்து போட்டியிடுகின்றன. இவற்றைவிட வேறு பல அமைப்புக்களும் எங்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. அவ் அமைப்புக்களின் யாப்பின் அடிப்படையில் பகிரங்க அரசியல் ஆதரவு வழங்க முடியாது என்பதால் அவற்றின் விபரங்களை உத்தியோகபூர்வ விபரங்களை வெளியிட முடியாதுள்ளோம். இந்தத் தேர்தலிலே நாங்கள் தூய கரங்கள் தூய நகரம் என்ற கோசத்தை முன்னெடுத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளோம். தூய கரங்கள் என்கின்ற பொழுது நாங்கள் மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்டு யாழ் மாநகரசபையினைக் கைப்பற்றுவோமாக இருந்தால் எந்தவிதமான கறையும் படியாத இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகாத இலஞ்ச ஊழலை முற்றாக ஒழிக்கின்ற ஒரு சபையை நாங்கள் உருவாக்கி நிர்வகிப்போம். தூய நகரம் என்கின்ற பொழுது தூய்மையான காற்று தூய்மையான நீர் தூய்மையான நிலம் என்கின்ற விடயங்களை யாழ் மாநகருக்குள் அமுல்படுத்துவோம். இலங்கையின் முன்மாதிரியான நகரமாக யாழ். நகரம் மாற்றியமைக்கப்படும். இத்திட்டங்களை ஏனைய பிரதேச சபைகளுக்கும் அமுல்ப்படுத்துவோம். எமது ஆட்சியில் இன, மத, சாதி பாகுபாடுகள் இன்றிய ஒரு சமத்துவ நிலை பேணப்படும். நாங்கள் சபைகளைக் கைப்பற்றினால் எங்களுக்கு வாக்களிக்காத பிரதேச மக்களது பிரதேசங்களினது அபிவிருத்திக்கும் முன்னுரிமையளிப்போம்சகல பிரதேசங்களுக்கும் சம அந்தஸ்து வழங்கப்படும். நாங்கள் சபைகளைக் கைப்பற்றும் பட்சத்தில் சபைக்குத் தெரிவு செய்யப்படும் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து திட்டங்களை வகுத்து பணியாற்றுவோம். அவர்கள் மாற்றுக்கட்சிக்காரர்கள் என்ற ஒதுக்கல் நிலைப்பாடு நீக்கப்படும். நான் மாநகரசபையின் முதல்வராக தேர்ந்தொடுக்கப்பட்டால் எந்தவித ஊதியமும் பெறாது பணியாற்றுவேன். மாநகரசபையினூடாக எனக்கு வழங்கப்படுகின்ற ஊதியம் முழுவதும் மக்கள் நலத் திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும். அதிலிருந்து ஒரு சதம் கூட எனக்கென எடுக்கமாட்டேன் என்ற வாக்குறுதியை மக்களுக்கு வழங்குகின்றேன்.முன்னைய சபைகளை ஆட்சிசெய்தவர்கள் போல எங்களுக்குள்ளே அடிபட்டுக்கொண்டு நீதிமன்றம் செல்லாத மிகக் கட்டமைக்கப்பட்ட நேர்த்தியான சபையை உருவாக்கி வழிநடத்திச் செல்வோம். கடந்த ஆட்சியில் தமது கட்சி தலைவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கொண்டுவரப்பட்டதே அதிகம் காணப்பட்டது. மற்றைய கட்சிகளில் ஆசனப் பங்கீடு தொடங்கும்போது அடிபாடு தொடங்கிவிட்டது. அவர்கள் ஆட்சியமைத்தால் இந்த அடிபாடுகள் தொடர்ந்துகொண்டே இருக்கும். உடனடியாக சாத்தியமில்லாதபோதிலும் அதனை இலக்காக வைத்து யாழ் நகரைக் கட்டியெழுப்புவோம். அதற்கென அந்நாடுகளின் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறப்படும். நிதிக் கையாளுகைகளுக்காக பொருத்தமான நிபுணர்களிடமிருந்த ஆலோசனைகள் பெறப்பட்டு குழுக்கள் நியமிக்கப்படும்.யாழ். நகரை சர்வதேச நகரம் ஒன்றுடன் இணைத்து.. இங்குள்ள கட்டமைப்புக்களைப் பலப்படுத்துவோம். நாங்கள் என்னென்ன விடையங்களுக்கு முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவோம் என்கின்ற விபரங்களை எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின்போது நாங்கள் மக்களுக்கு சமர்ப்பிப்போம்” என கூறியுள்ளார்.

26 டிசம்பர் 2017

தமிழரசுக் கட்சியின் உண்மை முகத்தை அம்பலப்படுத்துகிறார் வடக்கு முதல்வர்!

நான் எந்தக் கட்சியையும் நாடிச் செல்லவில்லை. எந்தக் கட்சியின் ஆண்டு சந்தாப் பணத்தைக் கட்டி விடுபவனும் அல்ல. எந்தக் கட்சியும் என்னைத் தமது கூட்டங்களுக்கு அழைத்து வரவுமில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். “நீங்கள் உங்கள் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றீர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு இலங்கை தமிழரசுக் கட்சி சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது. உங்கள் நடவடிக்கைகள் மீண்டும் வன்முறையைத் தோற்றி விடுமோ என்ற பயம் தெற்கில் எழுந்துள்ளது. உங்கள் பதில் என்ன?” என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதை குறிப்பிட்டார். 'என்னைப் பொறுத்த வரையில் எனக்கென்று கட்சி ஒன்றில்லை. என்னுடைய ஒத்த கருத்துடையவர்கள் தமிழ் மக்கள் பேரவை என்ற நாமத்துடன் ஒரு மக்கள் இயக்கமாகப் பரிணமித்துள்ளார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கூட்டமொன்று திருகோணமலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடந்த போது 8 பேர்களைக் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது. அதன் பின் அக் குழுவிற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. கட்சி அரசியல் எதுவும் வேண்டாம் என்றிருந்த என்னை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் ஐந்து கட்சிகள் சேர்ந்த தலைவர்கள் ஒருங்கே வந்து வலிந்து கேட்ட போது மறுக்க முடியாமல் அரசியலில் கால் வைத்தேன். நான் சேர முன் வந்தது அந்த ஐந்து கட்சிகள் சேர்ந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுள்ளேயே. அப்போது அது பதிவு செய்யப்படாத ஒரு அரசியல் கூட்டமைப்பு என்பது கூடத் தெரியாதிருந்தது.சேர்ந்த போது தான் பலதும் வெளிவந்தன. ஆனால் முன்னர் வன்முறை சாராத கட்சி என்ற வகையில் இயற்கையாகவே இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தான் எனது தொடர்புகள் சார்ந்திருந்தன. 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கைப் பயணத்தை மேற்கொண்டேன். ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன். கொள்கைகள் மக்களுக்கு ஆனால் அரசியல் கொடுக்கல் வாங்கல்கள் கட்சித் தலைமைப்பீடங்களுக்கே என்பது தான் யதார்த்தமாக இருந்தது. இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் அல்லது அவற்றோடு சம்பந்தப்பட்ட முடிவுகள் எந்தவித கூட்டுக் கருத்துப் பரிமாற்றத்தின் அடிப்படையில் எடுக்கப்படவில்லை என்பதையும் கண்டு கொண்டேன். நடைமுறை நலன்கள் எவ்வாறு அமைந்தனவோ அவற்றை முன்வைத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்துக்கெடுக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன். உதாரணத்திற்கு தேர்தல் விஞ்ஞாபன சிந்தனைக்கேற்ப இனப்படுகொலை சம்பந்தமான பிரேரணை கொண்டுவரப்பட்டு எமது வடமாகாண சபையால் 10.02.2015இல் ஏக மனதாக ஏற்கப்பட்ட போது கட்சித் தலைமைத்துவம் அதிர்ச்சி அடைந்ததை நான் கண்டேன். அது சம்பந்தமான தலைமைத்துவக் கருத்துக்கள் முன்னுக்குப் பின் முரணாக அமைந்ததையும் கண்டு கொண்டேன். பின்னர் தான் அறிந்து கொண்டேன் சிலருக்கு வரவிருந்த சுயநல வரவுகள் சில அந்தப் பிரேரணையால் பறிபோனதென்று.நாங்கள் மக்களிடம் வாக்கு கேட்கும் போது எமது கொள்கைகளை முன் வைத்தே கேட்கின்றோம். என்னைப் பொறுத்த வரையில் அவற்றை மாற்றி, குறைத்தோ கூட்டியோ நாங்கள் அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன் வைப்பது என்றால் அது மக்களின் கருத்துக்கிசைவாக நடைபெற வேண்டும். ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கருத்தொருமிப்பின் அடிப்படையில் அவ்வாறான முரண்பட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட வேண்டும். ஏன் என்றால் நாங்கள் மக்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள். அவர்கள் நலம் சார்ந்தே நாங்கள் அரசியல் ரீதியாக நடந்து கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக சுயலாபம் கருதி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.ஆனால் அவ்வாறு தலைமையே கூட்டுக் கட்சியின் கொள்கைகளை உதாசீனம் செய்யும் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று வெளியேற வேண்டும். வெளியேறினால் உதாசீனம் செய்து நடந்து கொள்பவர்கள் கை ஓங்கிவிடும். இது எமது மக்களையே பாதிக்கும்.மக்கள் பெருவாரியாக என்னைத் தேர்ந்தெடுத்த போது இலங்கைத் தமிழரசுக் கட்சியினதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் ஒட்டு மொத்த கொள்கைகளின் அடிப்படையில் தான் தேர்ந்தெடுத்தார்கள். அவற்றிலிருந்து ஒரு கட்சியின் தலைமைத்துவம் வழுக முற்படும் போது கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் சார்பாக மாற்ற எத்தனிப்பதே எமது கடமை என்று உணர்ந்தேன். கட்சித் தலைமைத்துவம் கட்சிக் கொள்கைகளை மாற்றும் போது உபயோகிக்கும் கருவி தான் கட்சி ஒழுக்கம் என்ற பிரம்பு. “நாங்கள் சொல்வதை நீங்கள் செய்யுங்கள். இல்லையேல் அடுத்த முறை உங்களுக்குக் கட்சித் துண்டு கிடைக்காது” என்பார்கள் அல்லது “நாங்கள் சொல்வதை நீங்கள் மக்களுக்கு எடுத்துச் சென்றீர்கள் என்றால் அடுத்த முறை உங்களுக்குத் துண்டு நிச்சயம்” என்பார்கள். நான் என் கட்சியை அடையாளப்படுத்துங்கள் என்று ஏற்கனவே உங்களிடம் கேட்டுள்ளேன். இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு நான் நடக்கவில்லை என்று கூறும் போது அதே கட்சியின் கொள்கைக்குக் கட்டுப்படாத கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் என்ன பதில் கூற முடியும்? என்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் எமது முரண்பாடுகள் பற்றிக் கூறியிருப்பேன். அது நடைபெறாத நிலையில் எமது கொள்கை ரீதியான விடயங்களை வெளிப்படையாக மக்களுக்குக் கூறுவதே எமது கடமை என்று நான் நினைத்தேன். அதையே செய்தும் வருகின்றேன். தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது. தற்போதைய உள்ளூராட்சித் தேர்தலுக்கு எந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன் வைத்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வாக்குக் கேட்கின்றது என்பதைப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும். அப்பொழுது தான் கட்சித் தலைமைத்துவத்திடம் சில கேள்விகளை மக்கள் கேட்கலாம். அதாவது எமக்கு ஒன்றைக் கூறி அதற்கு மாறாக அரசாங்கத்துடன் நீங்கள் நடந்து கொள்ளும் நடவடிக்கையின் பின்னணி என்ன? நெருக்குதல்கள் காரணம் எனின் யாரால் ஏற்படுத்தப்பட்ட நெருக்குதல்கள்? என்று இன்னோரன்ன கேள்விகளை மக்கள் கேட்க வழிவகுக்க வேண்டும்.அதை விட்டு விட்டு “நாம் தான் தலைமை! நாம் முடிவெடுத்து விட்டோம். அது வழி நடவுங்கள் அல்லது சீட்டுமில்லை சிறப்புமில்லை” என்று கூறுவது ஜனநாயகம் ஆகாது. அவ்வாறான நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நலஞ் சாராது.ஆகவே தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நான் கூறும் பதில் பல தடவைகள் சிறை சென்ற போது நீங்கள் கொண்டிருந்த உறுதியான கொள்கைகளில் இருந்து நீங்கள் வழுவி விட்டீர்களா? ஏன்? பிறழ்வான கொள்கைகளுக்கு என்னைப் பணியச் செய்வதில் உங்களுக்கென்ன இலாபம்? உங்கள் கொள்கைகளைப் பழையபடி உறுதியாக எடுத்தியம்பி நிலையான தமிழரசுக் கட்சிக் கொள்கைகளுக்கு நீங்கள் இன்னமும் விஸ்வாசமாக இருக்கின்றீர்கள் என்று பகிரங்கமாக அறிவியுங்கள். இடைக்கால அறிக்கையின் போதாமை பற்றிப் பிரஸ்தாபியுங்கள். எவற்றை நாங்கள் அரசியல் ரீதியாகப் பெறவேண்டும் என்பதைப் பகிரங்கமாக அறிவியுங்கள். அவை கட்சியின் 2013ஆம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு ஏற்புடையதாக இருந்தால் நான் கட்சி கூறுவதற்குக் கட்டுப்படுவேன். அடுத்து மீண்டும் வன்முறை வெடிக்கும் சாத்தியம் பற்றியது... உண்மையைக் கூறினால் வன்முறை வெடிக்கும் என்று கூறுவதின் அர்த்தம் ஒருவர் மிரட்டினால் அடங்கிப் போங்கள் என்பது தான். நாம் கூறி வருவது எமக்குத் தெரிந்த உண்மை. உண்மையைக் கூறப் பின் நின்றால் பொய்மைக்கு நாம் இடமளிக்க வேண்டி வரும். சரித்திர ரீதியாக சிங்கள மொழி 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளிலேயே பிறந்தது என்றேன். எனவே அதற்கு முன்னைய மக்களைச் சிங்கள மக்கள் என்று நாம் எவ்வாறு அழைக்க முடியும் என்று கேள்வி கேட்டேன். சிங்கள மொழி பேசுவதால் தான் ஒரு குழு மக்கள் சிங்கள மக்கள் என்று அடையாளப்படுத்தப்பட்டார்கள். அந்த மொழியே ஒரு காலத்தில் இல்லாதிருந்த போது அம் மக்கள் அந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் என்று எவ்வாறு அடையாளப்படுத்த முடியும்? இது தான் யதார்த்தம். இது தான் உண்மை.நாங்கள் இது வரை இதைக் கூறவில்லை. இப்பொழுது இதை நான் கூற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதைப் பொறுக்க மாட்டாதவர்கள் தான் என்னைப் பைத்தியம் என்கின்றார்கள், பயங்கரவாதி என்கின்றார்கள். பகைவனாகப் பார்க்கின்றார்கள்.அடுத்து நான் சமஷ்டியைக் கோருவதால் வன்முறை வெடித்துவிடும் என்று பயமுறுத்துகின்றார்கள். இப்பொழுது சிங்கள மக்களிடையே படிப்பறிவுடையவர்கள் சமஷ்டியைச் சரியென ஏற்றுக்கொண்டு வருகின்றார்கள்.பின் எதற்கு இந்தப் பயம்? ஒரு விடயம் புரியாமல் இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு நாங்கள் அதை இதைக் கூறிவிடுகின்றோம். ஆனால் புரிந்துணர்வு ஏற்படும் போது அமைதியாக சிந்திக்க தொடங்குகின்றோம். சமஷ்டி ஒரு பூச்சாண்டி அல்ல. அது பிரிவினை அல்ல. மாறாக மக்களைச் சேர்க்கும் ஒரு அரசியல் உபாயம் என்பதை நாங்கள் சிங்கள மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். எங்களுள் சிங்களம் தெரிந்தவர்கள் இதைச் சிங்களப் பொது மக்களின் கவனத்திற்குக் கொண்டுவர வேண்டும்.சிவாஜிலிங்கமும் நானும் இதைச் செய்கின்றோம். அதே போல் சம்பந்தனும், சுமந்திரனும் சிங்களம் தெரிந்தவர்கள் என்ற முறையில் சிங்கள மக்களுக்கு சமஷ்டியின் தேவைகளையும் அரசியல் ரீதியான பொருத்தத்தையும் எடுத்துக் கூற முன் வர வேண்டும். எம்மவருள் சிலர் “அது எப்படி சமஷ்டியைக் கேட்பது சிங்களவர்கள் அதற்கெதிரே” என்று கூறுகின்றார்கள். அவர்கள் தான் தெற்கில் இருந்து கொண்டு சிங்கள மக்கள் தலைவர்களை உசுப்பேற்றி விடுகின்றார்கள்.இவர்கள் ஒன்றைப் புரிந்த கொள்ள வேண்டும். நாங்கள் வடகிழக்கு இணைப்பை விட்டுக் கொடுத்து, தாயகத்தை விட்டுக் கொடுத்து, சுய நிர்ணய உரிமையை விட்டுக் கொடுத்து, சமஷ்டியை விட்டுக் கொடுத்து ஒரு சில எலும்புத் துண்டுகளுக்காகக் குறைந்த ஒரு தீர்வைப் பெற்று விடலாம். எலும்புத் துண்டுகள் எமது அப்போதைய சுயநலப் பசியைத் திருப்திப்படுத்தக் கூடும். ஆனால் நாளடைவில் நடக்கப் போவதென்ன? எமது தனித்துவம் அழிந்து விடும். மீண்டும் மீண்டும் எமது மக்கள் வெளிநாடுகள் நோக்கிச் செல்வார்கள். இப்பொழுது எமது வடமாகாண சபையில் இருவர் இருக்கும் இடத்தில் சபையின் பாதி அவர்களின் மக்கள் என்ற நிலை 20 வருடங்களுக்குள்ளேயே ஏற்பட்டு விடும்.இன்று பறங்கியர் பற்றி பேசும் போது நாம் கடந்த காலத்தைச் சுட்டியே பேசுகின்றோம். ஐம்பது வருடங்களின் பின்னர் எம்மைப் பற்றியும் கடந்த காலத்தில் தான் வைத்துப் பேசுவார்கள். இந்த நிலை வர ஒரு சில எலும்புகளைப் பெற்று கொள்கைகளை விட்டுக் கொடுப்பது தான் சரி என்று இந்தத் தெற்கத்தியத் தமிழர்கள் நினைக்கின்றார்களா? இந்த நிலை வர வேண்டும் என்பது தான் தெற்கத்தைய சிங்களவர் எதிர்பார்ப்பா? அப்படியானால் அது இனப்படுகொலை என்ற கருத்தினுள் அடங்கும் என்பதை அவர்கள் அறிவார்களா?வன்முறை வெடிக்கும் என்பது சம்பந்தமான எனது பதில் 'வன்முறை வரும்' என்பது எம்மைப் பயமுறுத்தும் ஒரு செயல்.போர் வெடித்ததால் எமது நாடு எவ்வாறான உயர் கடன்களைப் பெறவேண்டியிருந்தது என்பதைத் தெற்கு அறியும். அவர்களின் இராணுவம் செய்த அட்டூழியங்களை உலகம் அறியும். ஆகவே எமது சிங்கள அரசியல்வாதிகள் வன்முறை வெடிக்க விடமாட்டார்கள். இன்னுமொரு 1983 வந்தால் இலங்கையின் பெயர் உலக அரங்கில் நாறும். அதையும் மீறி அவ்வாறு வெடித்தால் வெடிக்கட்டுமே. நாம் இதுகாறும் கூறி வந்த உண்மையை உலகம் அறிந்து கொள்ளும், உணர்ந்து கொள்ளும். எமது மக்கள் இதுவரை பட்ட பாட்டிற்கு மேலதிகமாக நாங்கள் எதைச் சந்திக்கப் போகின்றோம்? வன்முறை வெடிக்கும் என்பது சுயநலவாதிகளின் பயமே ஒளிய அதில் உண்மை இல்லை.இந்தக் கூற்று தெற்கில் இருந்து வருவதில் இருந்து அதன் சுயநலப் போக்கைப் புரிந்து கொள்ளலாம். தெற்கில் கொழும்பில் சொகுசாக வாழ்பவர்கள் தான் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுகின்றார்கள். ஆகவே எமது கட்சித் தலைமைகள் தங்கள் நிலையை எமது மக்கள் சார்பாக அவர்களுடன் இணைந்து உருவாக்க முன்வரவேண்டும்” என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

25 டிசம்பர் 2017

தமிழரசுக் கட்சி போட்டியிடும் இடங்களில் புளொட் பிரச்சாரம் செய்யாது!

Ähnliches Fotoஆச­னப் பங்­கீட்­டின் போது, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யால் வாய்ப்பு மறுக்­கப்­பட்ட இடங்­க­ளில் தேர்­தல் பிரசாரங்களில் இருந்து ஒதுங்­கி­யி­ருக்க புளொட் அமைப்பு தீர்மா­ னித்­துள்­ளதாக கூறப்படுகிறது. தமது கட்­சி­யின் வேட்­பா­ளர்­கள் கள­மி­றங்­கும் வட்­டா­ரங்­க­ளில் மட்­டும் பரப்­பு­ரை­களைத் தீவி­ர­மாக மேற்­கொள்ள அந்­தக் கட்சி திட்­ட­மிட்டு வரு­கின்­றது என்­றும் தெரி­ய­வந்­துள்­ளது. எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பாக, இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யிட பங்­கா­ளிக் கட்­சி­க­ளான ரெலோ மற்­றும் புளொட் என்­பன இணங்­கின.ஆச­னப் பங்­கீட்­டில் பங்­கா­ளிக் கட்­சி­க­ளுக்கு இடை­யில் ஆரம்­பத்­தில் இணக்­கப்­பாடு காணப்­பட்­டி­ருந்­தா­லும் பின்­னர் அது குழம்­பி­யது. ரெலோ அமைப்பு இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யு­டன் இணைந்து போட்­டி­யிட முடி­யாது என்று அறி­வித்­தது. பின்­னர் கட்­சி­க­ளுக்கு இடையே கொழும்­பில் இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டி­ருந்­தது. கொழும்­பில் எட்­டப்­பட்ட இணக்­கப்­பாட்­டுக்கு அமை­வாக இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்சி ஆச­னங்­களை வழங்­க­வில்லை என்று பங்­கா­ளிக் கட்­சி­கள் குற்­றம் சுமத்­தி­யி­ருந்­தன. கிளி­நொச்சி, மன்­னார், அம்­பாறை மாவட்­டங்­க­ளில் புளொட் அமைப்­புக்கு எந்­த­வொரு ஆச­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று கூறப்­ப­டு­கின்­றது. ஏனைய மாவட்­டங்­க­ளி­லும் ஒதுக்­கப்­பட்ட வட்­டா­ரங்­களை விடக் குறை­வான வட்­டா­ரங்­களே அந்த அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

24 டிசம்பர் 2017

நாம் தமிழர் தினகரன் கூட்டணி சாத்தியமாகுமா?

 தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு வாய்ப்பு ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சுயேச்சையாக களமிறங்கிய டி.டி.வி தினகரனின் கை ஓங்கி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது. இவை தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்களுக்கான அறிகுறியாக கருதப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் காலியான அவரது ஆர்.கே நகர் தொகுதிக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. ஏற்கனவே, கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த தேர்தல் பணப்பட்டுவாடா புகார்களால் தள்ளிவைக்கப்பட்டது. அதற்கு பிறகு நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில், ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் இணைப்பு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு, ரெய்டு நடவடிக்கைகள், 2ஜி வழக்கு தீர்ப்பு என்று தமிழக அரசியல் களத்தில் பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்து உள்ளது.இருப்பினும், தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து சுயேச்சையாக குக்கர் சின்னத்தில் களமிறங்கிய டி.டி.வி தினகரனே முன்னிலை வகித்து வருகிறார். மாநிலத்தில் ஆட்சி கையில் இருந்தும், இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டும் அதிமுக தினகரனுக்கு அடுத்த இடத்திலேயே இருக்கிறது. இதனை மாநிலம் முழுவதிலும் உள்ள டி.டி.வி தினகரன் ஆதரவாளர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். சமீபகாலங்களில் நடந்த இடைத்தேர்தல்களின் ஆளும்கட்சி தோற்றதில்லை என்பதையும், பல ஆண்டுகளுக்கு பிறகு சுயேச்சை ஒருவர் வெற்றி பெற போகிறார் என்பதும் தமிழக அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதுபோல, கடந்த கால மனக்கசப்புகளை எல்லாம் மறந்துவிட்டு திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து இருக்கும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட்டுகள் கட்சிகளின் ஆதரவோடு களமிறங்கியும் திமுக மிகவும் பின் தங்கிய நிலையிலேயே இருக்கிறது. இவர்களுக்கு அடுத்ததாக களத்தில் இருக்கும் முக்கிய கட்சியான பா.ஜ.க தற்போது உ.பி.,குஜராத், இமாச்சல பிரதேச தேர்தல்களில் பெருவாரியான வெற்றிகளை பெற்று இருந்தாலும், இந்த இடைத்தேர்தலில் நோட்டாவை விட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளது.தமிழகத்தில் நடக்கப்போகும் அரசியல் மாற்றங்களுக்கான அச்சாரமே ஆர்.கே நகர் தேர்தல் தான் என்று அனைவரும் சொல்லிவந்த நிலையில் அந்த தேர்தல் தினகரனுக்கு ஆதரவானதாக மாறி இருப்பது அரசியல் கட்சிகளிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், மீண்டும் அதிமுக தொண்டர்கள் டி.டி.வி தினகரன் அணிக்கு திரும்ப யோசித்து வருகின்றனர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது. வரலாறு காணாத பணப்பட்டுவாடா, தேர்தல் விதி மீறல்கள் என புகார்கள் அணிவகுக்கும் வேளையில் இத்தனை குற்றச்சாட்டுகள் இருந்தும் தினகரனுக்கு வாக்களித்து இருப்பது தமிழகத்தில் ஆளும்கட்சி, எதிர்கட்சி, மத்தியில் ஆளும் பாஜக ஆகியவற்றின் மீது மக்கள் கோபமாக இருப்பதையே காட்டுகிறது.இந்நிலையில், ஆர்.கே நகர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வாங்கி இருக்கும் வாக்குகள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில் கணிசமான வாக்குகள் பெற்று டி.டி.தினகரன், மதுசூதனன், மருது கணேஷ் ஆகிய வேட்பாளர்களுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் அணி மற்றும் அதிமுக சார்பில் கோடி கோடியாக பணப்பட்டுவாடா நடந்ததாக சொல்லப்படும் நிலையில், தி.மு.க போல எதிர்கட்சி அந்தஸ்தோ, மத்தியில் ஆட்சி நடத்தும் பா.ஜ.க போலவோ எந்த வித பின்புலமும் இல்லாமல் நாம் தமிழர் வாங்கி உள்ள ஓட்டுகள் அரசியல் களத்தில் முக்கியமானவையாக கருதப்படுகின்றன.மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் நாம் தமிழர் பெரும் வாக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது இளைஞர்கள் பெருமளவில் அந்த கட்சிக்கு ஆதரவளிப்பதை சுட்டிக்காட்டுகிறது. தேர்தல் பிரச்சாரத்திலும், தனிப்பட்ட பேட்டிகளிலும் கூட திமுக, அதிமுக கட்சிகளையும், ஆட்சிகளையும் விமர்சித்தவர் தினகரன் அணியை பெரிதாக விமர்சிக்கவில்லை என்பதும், அதுபோல தினகரனும் நாம் தமிழரை பெரிதாக சீண்டும் வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.இதனால் அடுத்த சட்டசபை தேர்தலில் தினகரன் தலைமையிலான அணியும், சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

22 டிசம்பர் 2017

பிக்குவின் உடலை கோட்டைப்பகுதியில் தகனம் செய்ய எதிர்ப்பு!

யாழ்ப்பாணத்தில் எரியூட்டப்படப் போகும் பிக்குவின் உடலம்!யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ். நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும் என தமிழ்த்தேசிய பண்பாட்டுப் பேரவை கண்டனம் தெரிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் யாழ் நாகவிகாரையின் விகாராதிபதியின் உடல் தகனம் செய்வது என்பது தமிழ் மக்களது உணர்வுகளைப் புண்படுத்தும் செயலாகும். அத்துடன் இந்துக்கள் மரணமடையும் உடல்களை அதற்காக ஒதுக்கப்பட்ட மயானங்களில் தான் தகனம் செய்கின்றார்கள். பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் இந்து ஆலயங்களுக்கு அருகில் சடலங்களை தகனம் செய்வதில்லை. யாழ்ப்பாணம் கோட்டைப் பகுதியில் இந்துக்களின் புனித தலமான கோட்டை முனீஸ்வரன் கோயில் உள்ளது அதற்கு அருகில் வைத்து விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது யாழ்ப்பாணத்தில் வாழும் இந்துக்களின் மனதை பெரிதும் புண்படுத்தும் செயலாகும். குறிப்பாக தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவாலயத்திற்கு அருகில் விகாராதிபதியின் உடலை தகனம் செய்ய முற்படுவதானது தமிழாராட்சி மகாநாட்டில் உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை கொச்சைப்படுத்தும் செயலாகும். நாகவிகாரை விகாராதிபதி உடலை இவ் இடத்தில் தகனம் செய்ய முற்படுவதானது எதிர்காலத்தில் அவரது பெயரால் இவ் இடத்தில் விகாரை ஒன்றை அமைப்பதை உள்நோக்காக கொண்டே திட்டமிடப் படுகின்றது. இது எதிர்காலத்தில் இன முறுகலை ஏற்படுத்தும். எனவே யாழ்ப்பாணம் நாகவிகாரை விகாராதிபதியின் உடலை கோட்டைப் பகுதியில் தகனம் செய்யாது பொருத்தமான மாயனத்தில் தகனம் செய்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் ஆவன செய்ய வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 டிசம்பர் 2017

சர்வதேசத்திடம் தீர்வைக்கோரி வவுனியாவில் போராட்டம்!

காணாமல் போனோரின் உறவுகளின் கவனயீா்ப்பு பேரணி இன்று வவுனியாவில் இடம்பெற்றது. அரசாங்கத்தை நம்பி ஏமாந்து போயுள்ளதாக தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமது பிரச்சினைக்கு சர்வதேசமே தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியாவில் மேற்கொள்ளப்படும் போராட்டம் தீர்வுகள் இன்றிய நிலையில் 300 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இந்த கருத்தை வெளியிட்டுள்ளனர். தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி, அவர்களது உறவினர்கள் 300 நாட்களையும் கடந்து கவனயீர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன்பின்னர் வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தின் மருதங்கேணி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அவர்களின் உறவினர்கள் போராட்டங்களை ஆரம்பித்து தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர். தமது பிரச்சினைகளுக்கு தீர்வை கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், மூன்று தடவைகள் சந்திப்பை மேற்கொண்டிருந்த போதிலும் உரிய தீர்வை வழங்க அவர் தவறியிருந்ததாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

15 டிசம்பர் 2017

கனடாவில் தமிழ் பெண் கொலை!கணவன் கைது!

யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்த தமிழ் பெண்ணொருவர் கனடாவில் அடுத்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Scarborough பகுதியை சேர்ந்த 46 வயதுடைய ஜெயந்தி சீவரத்னம் என்ற தமிழ் பெண்ணே கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை Malvern பகுதியில் குறித்த பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டதாக டொறாண்டோ பொலிஸார் தெரிவித்துள்ளார். பெண்ணின் உடலில் கடுமையான காயங்கள் காணப்பட்டதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாதசாரிகள் அவரை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்,எனினும் அவர் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. அவரது உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக மரண விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் கணவர் கதிர்காமநாதன் சுப்பையா கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என அறிய வருகின்றது.

11 டிசம்பர் 2017

தீயில் இருந்து முயலை காத்த உயிர்நேயவாதி!

Ähnliches Fotoஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் அண்மையில் பயங்கர காட்டுத்தீ எற்பட்டது. காட்டுத்தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்தபோது, அந்த வழியாக ஆஸ்கர் கோன்ஸால்ஸ் என்பவர் வேலை முடிந்து காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முயல் ஒன்று தீ எரிந்துகொண்டிருக்கும் பகுதிக்குள் செல்வதை ஆஸ்கர் கோன்ஸால்ஸ் பார்த்தார். பதறிய அவர் உடனே காரில் இருந்து வெளியே இறங்கி, முயலை மீட்கும் வகையில் கூக்குரல் எழுப்புகிறார். அவரது சத்தத்தைக் கேட்ட முயல் வெளியே வருகிறது. உடனே அதை நெஞ்சோடி வாரி அணைத்தபடி அவர் அந்த இடம்விட்டு நகர்கிறார். அவருடைய இந்தச் செயல் பாராட்டைப் பெற்றுள்ளது. அன்பு மனிதர்களுக்கானது மட்டுமல்ல; சக உயிரினங்கள் அனைத்துக்குமானது என்பதை இந்த நிகழ்வு காட்டுவதாக வீடியோவைப் பார்ப்பவர்கள் புகழ்கிறார்கள். அவர் முயலை மீட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. முயலை மீட்டது பற்றி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துள்ள ஆஸ்கர், தான் மனிதர்களைப் போலவே மிருகங்களையும் நேசிப்பதாகக் கூறியுள்ளார்.

10 டிசம்பர் 2017

கனடிய காவல்துறை அதிகாரி நல்லரட்ணம் அரசியலில்!

கனேடிய தமிழர்கள் மத்தியில் டோரன்றோ காவல்த்துறை அதிகாரியாக கடந்த 10 வருடங்களாக கடமையாற்றி வந்த - பல்லின மக்களாலும் நன்கு அறியப்பட்ட ரொஷான் நல்லரட்ணம் கனேடிய கன்சர்வேர்டிவ் கடைசியில் மார்கம் தோரன்கில் தொகுதியில் 2018 ல் வரவுள்ள தேர்தலில் களமிறங்கியுள்ளார். நேரடி நேர்காணல் ஒன்றில் தோன்றிய அவர் கூறும் கருத்துக்கள் மற்றும் சமுதாயம் நோக்கியத அவரது பார்வை - மிகவும் வித்தியாசமான ஒர் பார்வையாகவே மக்களை ஈர்த்துள்ளது. மூன்று குழந்தைகளுக்கு தந்தையான அவர் - கனேடியத்தமிழர்களது வாழ்க்கை முறைகளை - கடின உழைப்புகளை தானும் பாட்டுணர்ந்து கடந்து வந்ததாகவும் 13 விதமான தொழில் தளங்களில் அடிப்படை தொழிலாளியாக இருந்து சாதாரண மக்களது இன்ப துன்பங்களையும் அனுபவமாக பெற்றதையும் நினைவுகூர்கிறார். கனேடிய தமிழர்கள் மத்தியில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உற்று நோக்கப் படும் காணொளி நேர்காணலாக இக்காணொளி உள்ளது. இலங்கை - வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட ரொஷான் நல்லரட்ணம் தனது 2 வது வயதில் 1985 ல் புலம்பெயர்ந்து தமிழகத்தில் பெற்றோருடன் தனது ஆரம்பகால கல்வியை ஆரம்பித்தார். சென்னை மற்றும் திருச்சி மாவட்டங்களில் தனது உயர் கல்விகளை முடித்த அவர் - துடுப்பாட்ட விளையாட்டுகளில் தமிழக இளைஞர்களிடம் பிரபலமாக அறியப்பட்டவர் 2005 காலப்பகுதியில் கனடாவுக்கு பெற்றோருடன் புலம்பெயர்ந்தார் - கனடா டொராண்டோவில் சட்டம் ஒழுங்கு துறைகளில் ஆர்வம்கொண்டு தனது கல்விகளைத் தொடர்ந்த அவர் கடும் முயற்சிகளின் பயனாக நகர காவலத்துறை அதிகாரியாகி சுமார் 10 வருடங்கள் கடமையாற்றினார். கனேடிய அரசியல் கட்சிகளில் ஒன்றான கன்சர்வேர்டிவ் கட்சியின் உறுப்பினராக தொண்டனாக நீண்டகாலம் இருந்துவந்த அவர் எதிர்வரும் 2019 மார்க்கம் தொரன்கில் தொகுதி தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து களமிறங்கியுள்ளார் - ஏன் எதற்கு எப்படி என்ன நோக்கம் யார் பின்னணி என்கின்ற பல கேள்விகளுக்கு அவரளித்துள்ள பதில்களால் - கனேடிய தமிழர்கள் வியந்துபோயுள்ளனர் - அரசியல்வாதிகள் பலவிதம் அதிலும் ரொஷான் நல்லரட்ணம் ஒருவிதம். நீங்களே இந்த நேர்காணலை பாருங்க புரியும்.

26 நவம்பர் 2017

உலகம் முழுதும் கொண்டாடப்பட்ட தலைவர் பிறந்தநாள் விழா!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களது 63-வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் தமிழர்களால் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவு 12 மணிக்கு தந்தை பெரியார் தி.க.வினரால் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பொது இடத்தில் தலைவரின் பிறந்த நாள் கொண்டாட போலீசார் தடை விதித்தனர். இதையடுத்து மாடி ஒன்றில் திரண்ட பெரியார் தி.க.வினர் கேக் வெட்டி தலைவரது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடினர். அப்போது தேசியத் தலைவரையும் தமிழீழத்தையும் வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதேபோல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் அவரது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் களைகட்டின. முன்னதாக நேற்று மாலை கற்க கல்வி அறக்கட்டளை சார்பாக அம்பத்தூர் தாய் தமிழ் பள்ளியில் 100 மாணவர்களுக்கு தலைவரின் புகைப்படத்துடன் கூடிய புத்தகப்பை ஏடுகள் வழங்கப்பட்டன. கரு. அண்ணாமலை தலைமையில் பள்ளி குழந்தைகள் தலைவருக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்துகள் பாடி கேக் வெட்டி கொண்டாடினர்.தலைவரின் பிறந்தநாளையொட்டி ஈரோட்டில் சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு நாம் தமிழர் கட்சியினர் போர்வை, ரொட்டி வழங்கினர்.யாழ்ப்பாணத்தில் தலைவர் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையிலும் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. சிங்கள ராணுவம் இடித்த தலைவரின் வீட்டின் முன்பாக நள்ளிரவில் ராணுவ தடையை உடைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.தலைவர் பிறந்த நாளில் திடீரென வல்வெட்டித்துறையில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடி பறக்கவிடப்பட்டது. வன்னிச்சி அம்மன் கோவில் அருகே இக்கொடி பறக்கவிடப்பட்டது.வல்வெட்டித்துறையில் தேசியத் தலைவர் பிறந்த வீடு தமிழர்களின் புனித இடமாக கருதபட்டது. அதை சிங்கள ராணுவம் இடித்தது. இந்த வீட்டை தமிழர்கள் இன்று சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர்.தலைவரின் இடிக்கப்பட்ட வீடு முன்பாக தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்திலும் தலைவரது பிறந்த நாள் விழா களைகட்டியது. பல்கலைக் கழகத்தில் புலிகளின் இலச்சினை,தலைவரின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.சுவிஸிலும் தலைவர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சுவிட்சர்லாந்தில் நிட்வால்டன் மாவட்டத்தில் நள்ளிரவு 12.00 மணிக்கு தலைவர்
 பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது.தமிழீழ தேசிய மாவீரர் நாளையொட்டி பிரான்ஸில் வீர விதைகள் இசைத்தட்டு வெளியிடப்பட்டது. தமிழீழ மாவீரர்களின் தியாகத்தை போற்றும் பாடல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

24 நவம்பர் 2017

தமிழர்களின் சனத்தொகை அதிகரிக்கப்பட வேண்டும்!


தேசியக் கொடியை தாம் அவமதிக்கவில்லை என்று, வடமாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அவர், இதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.
தேசிய மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் சராசரியை விட மிகக்கீழ் மட்டத்திலேயே தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அமைந்துள்ளது.இந்தநிலை மாற வேண்டும். எங்களுடைய சனத் தொகைப் பெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் என,வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையின் வருடாந்தப் பரிசளிப்பு விழா பாடசாலையின் மாலதி சுப்பிரமணியம் அரங்கில் பாடசாலை அதிபர் பே.தனபாலசிங்கம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இந்த விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், வடக்கு மாகாணத்தில் 1, 007 பாடசாலைகள் தற்போது செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த 1, 007 பாடசாலைகளிலும் 120 பாடசாலைகளில் 20 இற்கும் குறைவான மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். யாழ்.மாவட்டத்திலும் கூட 20 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் காணப்படுகின்றன.வன்னிப் பகுதியில் இதன் எண்ணிக்கை அதிகமானதாகவுள்ளன. வடமாகாணப் பாடசாலைகளில் மிகப் பெரும் வீழ்ச்சி ஏற்படுவதற்குக் கடந்த காலயுத்தமே வழி வகுத்துள்ளது. யுத்தம் சுமார் நான்கு இலட்சம் மக்களைக் கொன்றொழித்துள்ளது. இவ்வாறு கொன்றொழிக்கப்பட்ட மற்றும் யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வெளியேறிய மக்களில் சுமார்- 18 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட வயதெல்லையைக் கொண்ட மக்களின் தொகையே மிக அதிகம். இந்த வயதெல்லையே பிறப்பினைஉருவாக்கக் கூடிய வயதெல்லையாகும். ஆகவே, கடந்த-30 ஆண்டுகளில் ஏறக்குறைய இரண்டு தலைமுறைப் பிள்ளைகளை நாங்கள் இழந்திருக்கின்றோம். பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்களின் வீழ்ச்சிக்கு இதுவே முக்கிய காரணம். இலங்கையில் தற்போது சனத் தொகைப் பெருக்க விகிதத்தை இன அடிப்படையில் நோக்கினால் 1, 000 பேருக்கு 8.5 முஸ்லீம்களும் , 1, 000 பேருக்கு 5.7 சிங்களவர்களும், 1, 000 பேருக்கு 1.5 என்ற அடிப்படையில் தமிழ் மக்களும் காணப்படுகிறார்கள். ஆகவே, இலங்கையின் தேசிய மக்கள் தொகைப் பெருக்க விகிதத்தில் சராசரியை விட மிகக்கீழ் மட்டத்திலேயே தமிழ் மக்களின் சனத்தொகைப் பெருக்கம் அமைந்துள்ளது.இந்தநிலை மாற வேண்டும். எங்களுடைய சனத் தொகைப் பெருக்கம் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13 நவம்பர் 2017

மாவீரர் குடும்பத்தை சார்ந்தவர் மட்டுமே பிரதான சுடர் ஏற்ற வேண்டும்!


இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று  மாவீரர்களது குடும்பங்கள் சார்பில், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமார் மனோகர்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இம்முறை மாவீரர் துயிலுமில்லங்களில் பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ,பெற்றோரோ அல்லது பிள்ளைகள் மட்டுமே ஏற்ற வேண்டும் என்று மாவீரர்களது குடும்பங்கள் சார்பில், விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மாவீரரின் தந்தையுமான பசீர் காக்கா எனப்படும், முத்துக்குமார் மனோகர் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், அவர் மேலும் தெரிவிக்கையில்- “ எந்தச் சூழ்நிலையிலும், எந்த நெருக்கடியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகளைத் துணிவுடனும், உணர்வுடனும் தொடர்ச்சியாகவும் நினைவுகூர்ந்த யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக சமூகங்களின் பங்களிப்பு அளவிட முடியாதது. தற்போது மாவீரர் நாளையொட்டி சிரமதானப் பணிகளில் உணர்வெழுச்சியுடன் பங்கு பற்றி வரும் அனைவருக்கும் மாவீரரின் பெற்றோரின் சார்பில் பணிவான வணக்கங்கள்.இந்த நிகழ்வானது – எந்த ஒர் அரசியல் கட்சியினதும் அல்லது அரசியல்வாதியினதும் தேர்தல் தேவைக்கு எவ்விதத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது என நாம் எதிர்பார்க்கின்றோம். 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த உணர்வுடன் துயிலுமில்ல மண்ணை மிதித்தோமோ, எவ்வாறான மனநிலையில் வெளியில் வந்தோமோ அந்த மனோநிலை அவ்வாறே இப்போதும் பேணப்பட வேண்டும் என வேண்டுகின்றோம். குறிப்பாக – இதற்கு ஊடகவியலாளர்களின் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கிறோம். இந்த வணக்க உணர்வுநிலைக்கு இடையூறு ஏற்படும் வகையில் – மாவீரர் நிகழ்வுச் சூழலில் வைத்து அரசியல் விவகாரங்கள் தொடர்பாக செவ்விகள் எடுப்பதனைத் தவிர்க்குமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

1. பிரதான சுடரினை ஒரு மாவீரரின் மனைவியோ, கணவரோ, பெற்றோரோ அல்லது பிள்ளைகளோ மட்டுமே ஏற்ற வேண்டும்.

 2. சமரசம் உலாவிய இடமாக துயிலுமில்லங்கள் திகழ்கின்றன. பிரிகேடியர் முதல் காவல்துறை , எல்லைப்படை, துணைப்படை, போருதவிப்படை வீரர்கள் என சகலரையும் சமமாகவே தன்னுள் ஏற்றுக்கொண்டது இந்த மண். அந்த நிலை தொடர்ந்து பேணப்பட வேண்டும். முதன்மைச் சுடர் ஏற்றுபவரைத் தெரிவு செய்யும் போது மாவீரர் பதவி நிலைகளைக் கணக்கிலெடுக்கத் தேவையில்லை என்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்.

 3. பிரிபடாத தமிழ் தேசத்தினதும் அதன் இறையாண்மையினதும் அங்கீகாரம் என்பதுவே எமது போராட்டத்தின் அடிப்படையாகும். எமது இந்த பிறப்புரிமைக்காக – லெப். ஜுனைதீன் (ஜோன்சன்) முதல் 43 முஸ்லீம் மாவீரர்கள், 1985 முதல் 1990 வரை, வீரச் சாவடைந்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் பின்னரும் இருவர் மாவீரர்களாகியுள்ளனர். எனவே முஸ்லீம் மாவீரர்களின் உறவுகளும் கௌரவிக்கப்பட வேண்டும்.

 4. தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை – ஒரே ஒரு பிரபாகரன் தான். அவரது நிலையில் யாரும் தம்மை வைத்துப் பார்ப்பதையோ, அல்லது அவராகத் தம்மைச் சித்தரிக்கும் முனைவதையோ எமது இனம் அனுமதிக்காது. அத்தோடு – மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒருவரது உரையும் தேவையற்றது. இதேவேளை மாவீரர் நாள் நிகழ்வுக்கு முன்னதாகவோ, பின்னதாகவோ எந்த ஒர் அரசியல் கட்சிக்கும் அல்லது அரசியல்வாதிக்கும் சார்பாகவோ அல்லது எதிராகவோ பிரசுரங்களை வழங்க வேண்டாம். நிகழ்வு தொடர்பான அறிவுறுத்தல்களை ஒலிபெருக்கி ஊடாக வழங்குவோரும் இந்த வழிமுறையைப் பின்பற்றுவதே சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

04 நவம்பர் 2017

துரைசிங்கம் பிறேமதாஸ் (பிறேம்)லண்டனில் காலமானார்!


புளியங்கூடல் அமரர் சாந்தலிங்கம் மற்றும் தவமணி மண இணையரின் இளைய மருமகனும் சாந்தலதாவின்(லதா)அன்புக் கணவருமான துரைசிங்கம் பிரேமதாஸ்(பிறேம்)நேற்று நள்ளிரவு லண்டனில் காலமானார் என்ற செய்தி கூடலூர் மக்களையும் அவரது நட்பு வட்டங்களையும் பெரும் அதிர்சசிக்குள்ளாக்கி இருக்கிறது.இளம் வயதில் சாந்தலதாவும் அவரது ஏக புதல்வியும் சந்தித்திருக்கும் இந்தப் பேரிழப்பை ஈடு செய்ய எவராலும் இயலாது.இவர்களை எண்ணிப்பார்க்கும்போது எமது நெஞ்சமே வெடித்து விடும்போல் இருக்கிறது.இனி எப்படித்தான் அந்த அன்புத்தங்கையோடு பேசமுடியும்?மனமெங்கும் அன்பை மட்டுமே சுமக்கும் லதாவை நாம் எப்படித்தான் தேற்றமுடியும்?இந்த மரணச் செய்தியின் அதிர்ச்சசியில் இருந்து மீளமுடியவில்லை.பிறேம் அவர்களின் ஆத்மா நித்தியக் கமலங்களில்  அமைதிபெற புளியங்கூடல்.கொம் எல்லாம் வல்ல சக்தியை வேண்டி நிற்கின்றது.ஓம் சாந்தி!ஓம் சாந்தி!ஓம் சாந்தி!

29 அக்டோபர் 2017

இலங்கையில் இன்னும் சித்திரவதை முகாம்கள்!


இலங்கையில் சித்திரவதை முகாம்கள் தொடர்ந்தும் இயங்குவதாக ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூக்கா அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மற்றும் நேர்மைக்கான கவுன்சிலிடம் அவர் இந்த அறிக்கையைக் கையளித்துள்ளார். 
இலங்கையில் சித்திரவதை முகாம்கள் தொடர்ந்தும் இயங்குவதாக ஐ.நா.வின் முன்னாள் நிபுணர் யஸ்மின் சூக்கா அறிக்கை சமர்ப்பித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை மற்றும் நேர்மைக்கான கவுன்சிலிடம் அவர் இந்த அறிக்கையைக் கையளித்துள்ளார். சித்திரவதை முகாம்களில் துன்புறுத்தல்களுக்கு உள்ளான சுமார் பத்து விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு பல்வேறு நாடுகளில் யஸ்மின் சூக்கா அரசியல் தஞ்சம் பெற்றுக் கொடுத்துள்ளார். அத்துடன் அவர் இலங்கைக்கு எதிராக இதுவரை சுமார் 25 அறிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு அமைப்புகளுக்கு சமர்ப்பித்துள்ளார்.வேறு எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் அவர் இந்தளவு அறிக்கைகளை சமர்ப்பித்ததில்லை.இவ்வாறு சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

22 அக்டோபர் 2017

மனித மிருகங்கள் குதறிய மிருக மனிதம்

புளியங்கூடலில் சினைப்பசு ஒன்று பயங்கரமாகக் கழுத்திறுக்கிக் கொலைசெய்யப்பட்டுள்ளது!பெறுமதி வாய்ந்த உயர் இனப்பசு இது! 100% இந்து மக்கள் வாழும் புளியங்கூடல் கிராமத்திற்கு இது அவமானமல்லவா!மேய்ச்சலுக்கு விடப்பட்டமாடு இது! யாருடைய பயிரையாவது மேய்ந்தால் பிடித்துக்கட்ட வேண்டும்! ஏன் கொலைசெய்யவேண்டும்? இது அராஜகமல்லவா! சம்பந்தப்பட்ட பசுக்கொலைக்காரரை சட்டத்தின் முன் நிறுத்த புளியங்கூடல் பொது அமைப்புக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்! இப்போது கந்தசஷ்டி விரதகாலமல்லவா? நமது பண்பாடு, விழுமியங்கள் எல்லாம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது? (2017-10-22) மாட்டின் உரிமையாளர் பெயர்: திரு.தில்லையம்பலம் பாஸ்கரன்!இவர் நமது வேலணை மேற்கு நடராஜ வித்தியாலய பழைய மாணவராவார்!

நன்றி:(முகநூல்)இரத்தினம் ஞானசோதியன்(ஆசிரியர்)அவர்கள்.

10 அக்டோபர் 2017

குடும்பப் பெண் மரணத்தில் மர்மம்!இளைஞன் கைது!


மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில்  பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வசிக்கும் ஐந்து வயதுப் பிள்ளையின் தாயான 26 வயதுடைய விஜயரட்னம் தர்மினி எனும் பெண்ணே, அவரது வீட்டிலிருந்து நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டாரென, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொக்கட்டிச்சோலை, முத்துலிங்கப் பிள்ளையார் ஆலய வீதியில் வசிக்கும் ஐந்து வயதுப் பிள்ளையின் தாயான 26 வயதுடைய விஜயரட்னம் தர்மினி எனும் பெண்ணே, அவரது வீட்டிலிருந்து நேற்றுமாலை சடலமாக மீட்கப்பட்டாரென, கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த பெண்ணின் சகோதரியின் பாடசாலை நண்பரொருவர், அவ்வீட்டில் இருந்தபோதே, மர்மமான முறையில் பெண் உயிரிழந்துள்ளாரென, அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, பட்டிப்பளையைச் சேர்ந்த குறித்த இளைஞன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். பெண்ணின் சடலம், பிரேத பரிசோதனைகளுக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

07 அக்டோபர் 2017

சுவிஸில் தமிழ் இளைஞன் காவல்துறையால் சுட்டுக்கொலை!

சுவிற்சர்லாந்தில் கத்தியால் தாக்குதல் நடத்த முயன்ற இலங்கைத் தமிழ் அகதி ஒருவரை அந்நாட்டு பொலிஸார் சுட்டுக்கொன்றனர். முறைப்பாடு ஒன்றையடுத்து, பொலிஸார் இன்று அதிகாலையில் இரண்டு அகதிகளை அழைத்துக்கொண்டு குடியிருப்பு ஒன்றிற்கு சென்றனர். அப்போது, வீட்டிற்குள் இருந்த அகதியொருவர் இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் பொலிஸார் அழைத்து வந்த அகதிகள் மீது அவர் தாக்குதல் நடத்த முயன்றார். உடனடியாக பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவாக செயல்பட்டு தாக்குதல்தாரியை துப்பாக்கியால் சுட்டார். இரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உயிரிழந்தவர் கரன் எனப்படும் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞன் என செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், முழுமையான விபரங்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு செய்தியொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

28 செப்டம்பர் 2017

ஆறறிவு மிருகம் குதறிய ஜீவனை ஐந்தறிவு மிருகம் தேடுகின்றது!.

ஆறறிவு மிருகம் குதறிய ஜீவனை ஐந்தறிவு மிருகம் தேடுகின்றது
. நெஞ்சை நெகிழவைக்கும் வித்தியாவின் ஐந்தறிவுள்ள நாய்....
விலங்கு மனத்தையும் விம்மி அழவைத்த வித்தியா!! உள்ளத்தை உருக்கிய பதிவுகள்! யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் பிரிவு பல்கோடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒன்று. பல தமிழ் மக்களை மட்டுமன்றி இனம் மதம் மொழி என அனைத்தையும் கடந்து மானுடத்தை நேசிக்கும் அத்தனை மக்களையும் அவளது பிரிவு உலுக்கியது. அந்த வகையில் மனிதர்களை மட்டுமன்றி
 ஐந்தறிவு படைத்த சீவன் ஒன்றைக்கூட அந்த இளங்குருத்து வாடிப்போன சம்பவம் வேதனையில் வாட்டியுள்ளது. மாணவி வித்தியா செல்லமாக ஒரு நாயினை வளர்த்து வந்துள்ளாள். சிறு குட்டியாக இருக்கும்போதே அதனை வளர்த்தபடியால் அதற்கு ‘குட்டி’ என்று பெயர் சூட்டினாள். செல்லமாக வளர்க்கப்பட்ட அந்த நாய், வித்தியா தினமும் பாடசாலை செல்லும்போது வீதிவரை அவளது தாயோடு வந்து வாலாட்டி வழியனுப்பிவைக்கும். பின்னர் பாடசாலை முடித்து வீடு வரும்போதுகூட வாலைக்குழைத்தபடி வித்தியாவை வட்டமிடும். வித்தியா இந்த மண்ணை விட்டு மறைந்து புண்ணிய சொர்க்கத்தில் குடிபுகுந்தபோது இந்த ஐந்தறிவு சீவனும் கோடானகோடி மக்களில் ஓருயிராக கதிகலங்கிப்போனது. சாவு நிகழ்ந்த அந்த நாட்களில் மிகுந்த சோகத்துடன் இந்த நாய் காணப்பட்டுள்ளது. வித்தியாவின் உடலம் புதைக்கப்பட்ட இடத்தையே சில நாட்களாக குறித்த நாய் சுற்றிச் சுற்றி வந்து வானத்தைப் பார்த்து ஊளை ஒலி எழுப்பியுள்ளது. வித்தியாவின் நாற்பத்தைந்தாம் நாளின்போது ‘குட்டி’யின் முன்னால் வித்தியாவின் அமருவப் படம் காண்பிக்கப்பட்டுள்ளது. அதன்போது அந்தப் படத்தையே ‘குட்டி’ வெறித்தப்டி பார்த்துக்கொண்டு நின்றுள்ளது. இந்தக் காட்சி அப்போது அங்கே நின்ற மனிதர்களின் கண்களை மீண்டும் கலங்க வைத்துள்ளது. ஊதையிற் பட்ட பூளைப் பூவைப்போல் கயவர்களால் நூறி எறியப்பட்ட எங்கள் வித்தியாவின் ஆத்துமா மனிதத்தை மட்டுமன்றி ஐந்தறிவு விலங்கினத்தையும் உருகவைத்துள்ளமை இதனூடு கண்கூடாகின்றதல்லவா!

நன்றி:இராவணன் பாலம்(முக நூல்)

26 செப்டம்பர் 2017

சிறுவனின் கையை முறித்த கொடூரன்!

பருத்தித்துறை பகுதியில், 7 வயது சிறுவனின் கையை அடித்து முறித்த சிறிய தந்தையும் அதை வேடிக்கை பார்த்த தாயையும் பொலிஸார் நேற்று கைது செய்தனர். சிறிய தந்தையால் துன்புறுத்தப்பட்ட சிறுவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றான்.தாயின் இரண்டாவது கணவன் என கூறப்படும் நபரே சிறுவனை கடுமையாக தாக்கியுள்ளார். இதன்போது சிறுவனின் தாயாரும் அதனைத் தடுக்காது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சிறுவனின் தாயாரும் சிறிய தந்தையும் பருத்தித்துறைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

07 செப்டம்பர் 2017

தெருவில் விடப்பட்ட மூதாளரின் வீட்டை மீண்டும் பெற்றுக்கொடுத்த மனிதாபிகள்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 3 பேர், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர்முரசறைந்து வெளியேற்றப்பட்ட மூதாட்டி மீண்டும் சொந்த வீட்டில் குடியேற்றப்பட்டார் -மனிதநேயச் செயற்பாட்டார்களின் நிதியுதவியில் வீடு மீட்கப்பட்டது- செய்தி மூலம் சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பிய சிவ தொண்டர் பொன் ராசாவும் விரைந்து செயலாற்றிய உண்மையான மனிதநேய சீலர்களும் மறக்க முடியாத சமூக முன்னுதாரணங்கள் காரைநகரில் நீதிமன்ற உத்தரவின்பேரில் முரசறைந்து வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட மூதாட்டியின் வீடு நேற்று மீண்டும் அவருக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. காரைநகரைச் சேர்ந்த மனிதநேயக் கொடையாளர்களின் நிதி உதவியுடன் அந்த பெண்மணி நேற்று மாலை மீண்டும் தனது சொந்தவீட்டில் குடியேறினார். காரைநகர் வெடியரசன் வீதியைச் சேர்ந்த ஏரம்பு ஞானேஸ்வரி என்ற பெண்மணி பணத் தேவையின் பொருட்டு தனது வீட்டை அவ்வூரைச் சேர்ந்த ஒருவரிடம் இரு வருட தவணை அடிப்படையில் அறுதி உறுதி எழுதி ஈடு வைத்தார். சுமார் மூன்று இலட்சம் ரூபாவிற்கு ஈடு வைக்கப்பட்டது. உரிய காலத்தில் அந்த வீட்டை மீட்க முடியாத காரணத்தால் ஈடு பிடித்தவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையினல் அந்த வீடு ஈடு பிடித்தவர்களுக்குச் சொந்தமானது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை மூதாட்டியின் வீட்டுக்கு பொலிஸார் சகிதம் வந்த நீதிமன்றப் பணியாளர்கள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தையும் வெளியே, வீதியில் தூக்கி வைத்துவிட்டு அந்தப் பெண்மணியையும் வீட்டை விட்டு வெளியேற்றியிருந்தனர். 'அவர்கள் வரும்போது பானையில் சோறு அவிந்துகொண்டிருந்தது. அந்தப் பானையை அப்படியே தூக்கி வெளியே வைத்தனர்' என மூதாட்டி அழுதவாறு கருத்து வெளியிட்டிருந்தார். மூதாட்டியின் நிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களும் இணைய, அச்சு ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டதன் அடிப்படையில் அவருக்கு உதவுவதற்கு பல தரப்பினரும் முன்வந்தனர். தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக மேஜர் இளமகள் என்ற மாவீரரைத் தந்த தாய் என்ற அடிப்படையில் அவர் மீது அனைவரின் பார்வையும் திரும்பியது. இந்நிலையில், அவரது ஊரைச் சேர்ந்த வெளிநாட்டில் உள்ளவர்கள் சிலர் தாங்களாக முன்வந்து பணத்தை திரட்டி அனுப்பியதன் பயனாக ஈடு பிடித்தவர்களுக்கு 5 இலட்சத்து 26 ஆயிரம் ரூபா பணம் செலுத்தி அந்த வீடு மீண்டும் பெறப்பட்டு மூதாட்டியிடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வேம்படி காரைநகரில் உள்ள பாரதி கலைக் கல்லூரியின் புலம்பெயர் தேசத்தில் உள்ள செயற்பாட்டாளரும் சமூக ஆர்வலருமான தம்பையா கருணாநிதி (பபி கனடா) எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக சுமார் 2 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டது. மேலும், அவ்வூரைச் சேர்ந்த சிவகாமி நலன்புரி ஒன்றியத்தின் புலம்பெயர் செயற்பாட்டாளர்களின் முயற்சியால் 2 இலட்சத்து 96 ஆயிரம் ரூபா நிதி சேர்க்கப்பட்டது. இதன்மூலம் அந்தக் காணி தற்போது மீட்கப்பட்டுள்ளது.நேற்று பிற்பகல் 6.00 மணியளவில் சட்டத்தரணி சாருஜா சிவநேசனின் காரைநகரில் உள்ள அலுவலகத்தில் காணி மீளவும் அந்த மூதாட்டியின் பெயரில் எழுதப்பட்டது. இதன்போது ஈடு பிடித்தவர்கள், காணி உரிமையாளரான ஞானேஸ்வரி, பாரதி கலை மன்றம் மற்றும் சிவகாமி நலன்புரி ஒன்றியத்தின் பிரதிநிதிகள், அப்பிரதேச கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் நலன்விரும்பிகள் சிலரும் பிரசன்னமாகியிருந்தனர். காணி எழுதப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மூதாட்டியை அழைத்துச் சென்று அவரிடம் வீட்டுத் திறப்பைக் கையளித்து, வீட்டில் குடியேற்றினர். இதன்போது சட்டத்தரணி சாருஜா சிவநேசனும் அங்கு பிரசன்னமாகியிருந்தார். தனது வீடு மீண்டும் கிடைப்பதற்கு உதவி செய்த மனிதநேயம் மிக்க அனைவருக்கும் அந்த மூதாட்டி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். தனது இறப்பு வரை அவர்களைத் தாம் மறக்கமாட்டார் எனவும் அவர் கூறினார்.

நன்றி:பரா நந்தகுமார்(முகநூல்)

30 ஆகஸ்ட் 2017

புலிகளின் பெயரில் வவுனியாவில் பிரசுரங்கள்!


தமிழீழ விடுதலைப் புலிகளின் இலச்சினை பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் வவுனியாவில் பல இடங்களில் இன்று விநியோகிக்கப்பட்டுள்ளன. வவுனியா, குருமன்காடு போன்ற பகுதிகளில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்கள் பரவலாக காணப்பட்டுள்ளன. சுவரில் ஒட்டப்பட்டும், வீதியோரங்களில் வீசப்பட்டும் குறித்த துண்டுப்பிரசுரங்கள் காணப்பட்டுள்ளன.குறித்த துண்டுப்பிரசுரங்கள் எவ்வாறு வந்தது, யார் இவற்றை விநியோகித்துள்ளார்கள் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை. இது குறித்து வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இரண்டு விடயங்களை முன்வைத்து குறித்த துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. ஒன்றில், “தமிழீழத்தில் ஒரு பெண் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மீறி தவறிழைக்கும் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இரண்டு வார காலம் அவகாசம் வழங்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.மற்றைய துண்டுப்பிரசுரத்தில், வவுனியாவுக்கான முக்கிய அறிவித்தல்! என்ற தலையங்கத்தில், “தமிழீழத்திற்காக உயிரிழந்தவர்கள் கண்ட கனவுகள் உண்மையாகும் நேரம் வந்து விட்டது. இன்னும் நாங்கள் முற்றாக அழிந்து விடவில்லை.” போன்ற பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

28 ஆகஸ்ட் 2017

மண்டைதீவு கடலில் படகு கவிழ்ந்து மாணவர்கள் பலி!

யாழ்ப்பாணம், மண்டைத்தீவு கடற்பரப்பில் இன்று பிற்பகல் படகு கவிழ்ந்து, ஆறு மாணவர்கள் கடலில் மூழ்கிப் பலியாகினர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மண்டைத்தீவு கடற்பரப்பில் இளைஞர்கள் 7 பேர் படகில் இருந்த வேளை அது மூழ்கியுள்ளது. கடலில் மூழ்கியோரில் ஒருவர் மாத்திரம் நீந்தி, கரையை வந்தடைந்தார். ஏனையோரில் ஐவரின் சடலங்கள் உடனடியாக மீட்கப்பட்டன. தீவிர தேடுதலின் பின்னர் மற்றையவரின் சடலமும் மீட்கப்பட்டது. இன்று கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்ய முற்பட்டபோது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. மீட்கப்பட்டோரின் சடலங்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் பெயர் விபரங்கள் வருமாறு- நந்தன் ரஜீவன் (உரும்பிராய் ) 18 , நாகசிலோஜன் சின்னதம்பி (உரும்பிராய்) 17 , தனுரதன் (கொக்குவில்) 20 , பிரவீன் (நல்லூர்) 20 ,தினேஷ் (உரும்பிராய்) 17 ,தனுசன் (சண்டிலிப்பாய்) 18,என தெரிய வந்துள்ளது.

27 ஆகஸ்ட் 2017

கம்பவாரிதி ஜெயராஜின் செயலுக்கு கண்டனம்!


சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை கம்பவாரிதி ஜெயராஜ் கேலிச் சித்திரமாகப் பயன்படுத்தியுள்ளமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவர் தனது செயலுக்காகச் சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தனது இணையத்திலிருந்து குறித்த படத்தை நீக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சைவ மகாசபை வலியுறுத்தியுள்ளது.
சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை கம்பவாரிதி ஜெயராஜ் கேலிச் சித்திரமாகப் பயன்படுத்தியுள்ளமைக்கு அகில இலங்கை சைவ மகா சபை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அவர் தனது செயலுக்காகச் சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். தனது இணையத்திலிருந்து குறித்த படத்தை நீக்க வேண்டும் எனவும் அகில இலங்கை சைவ மகாசபை வலியுறுத்தியுள்ளது.    இது தொடர்பாக அகில இலங்கை சைவ மகா சபை வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளது. கம்பவாரிதி ஜெயராஜ் சைவத் தமிழர்களின் புனிதமான வணக்கத்திற்குரிய அம்மை அப்பர்களான சிவன் - உமை இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வடிவத்தை இலங்கை ஆட்சியாளரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு ஒப்பிட்டுக் கேலிச்சித்திரமாக்கித் தனது கட்டுரையொன்றில் பயன்படுத்தியுள்ளார். இந்தச் செயல் சைவத் தமிழ் மக்களின் மனங்களைப் புண்படுத்தியுள்ளது. இதை அவர் புரிந்து கொண்டு சைவத் தமிழ் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், தனது இணையத்தளத்திலிருந்து குறித்த படத்தை அகற்ற வேண்டும் என அகில இலங்கை சைவ மகா சபை தனது கண்டன அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

19 ஆகஸ்ட் 2017

ஜீவசமாதி அடையப்போவதாக அறிவித்து தண்ணீர் மட்டும் அருந்துகிறார் முருகன்!


வேலூர் ஜெயிலில் முருகன் ஜீவசமாதி: கோவிலில் அமர்ந்து நீண்ட நேரம் தரிசனம் - அதிகாரிகள் பேச்சுவார்த்தைமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் முருகன் இன்று காலை முதல் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையில் உள்ளனர். முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.26 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனக்கு சிறை வாழ்க்கையை தொடர விரும்பவில்லை என்றும் சிறையிலேயே ஜீவசமாதி அடைய விரும்புவதாகவும் முருகன் சிறைத்துறை கூடுதல் டிஜிபிக்கு கடிதம் எழுதியிருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தும் கடிதத்தை முருகன் நேற்றைய தினம் முதல்வர் பழனிசாமிக்கு அனுப்பிவைத்துள்ளார். தோற்றத்திலும் சாமியார் போலவே காவி உடை, தலையில் நீண்ட முடி என்று காட்சியளிக்கும் முருகன், கடந்த ஜூலை 26ம் தேதி முதல் முருகன் ஒருவேளை மட்டுமே உணவு சாப்பிட்டு வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் முருகன் தண்ணீர் மட்டுமே அருந்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

13 ஆகஸ்ட் 2017

இலங்கை மக்களை அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

Ähnliches Fotoஇந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில நடுக்கத்தை அடுத்து, இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று காலை சுமார் 6.5 ரிச்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவிவில் ஏற்பட்டுள்ளது. சுமத்திரா தீவுக்கு மேற்கே 81 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில் சுமார் 67 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனையடுத்து இலங்கையின் கரையோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை அவதான மையம் எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இடர் முகாமைத்துவத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி, சுமத்திரா தீவில் அருகில் 6.5 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது குறித்து இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவொரு எச்சரிக்கை மாத்திரமே. சுனாமி ஏற்படும் என அறிவிக்கப்படவில்லை. இலங்கையின் கரையோரப் பகுதியில் இருக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கும் வகையிலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்த அனர்த்தம் குறித்து தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றோம். எனவே மக்கள் குழப்பமடையத் தேவையில்லை.தொடர்ந்தும் வளிமண்டலவியல் திணைக்களத்துடன் இணைந்து நிலமையினை அவதானித்துவருகின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவிப்புஇந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுகளுக்கு அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை என இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.சுமாத்திரா தீவில், 6.5 றிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையால், இலங்கையின் அனைத்து கடலோரப் பகுதிகளுக்கும், இடர் முகாமைத்துவ மத்திய நிலையம், சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. சுனாமி நிச்சயமாக ஏற்படும் என்று யாரும் அச்சப்படத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் அவதானமாக இருக்கவேண்டும் என்பதற்காக மாத்திரமே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது என்று, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பீலி தெரிவித்தார்.இது தொடர்பான அறிவித்தல்களை ஊடகங்கள் வாயில்களாக மக்களுக்கு தெரியப்படுத்திக் கொண்டு இருப்பதாகவும் இதனால், மக்கள் பதற்றமடையத் தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.சுமாத்திரா தீவில், 35 கிலோமீற்றர் ஆழத்திலேயே, இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

26 ஜூலை 2017

புலிகள் மீதான தடையை நீக்கியது ஐரோப்பிய நீதிமன்றம்!

பயங்கரவாத இயக்கங்கள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. 2009-ம் ஆண்டிலிருந்து எந்தப் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபடாததால் விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம் நீக்கியுள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்புக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் விதித்த தடையை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் 2011இல் லக்சம்பர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் சார்பில் நெதர்லாந்து வழக்கறிஞர் ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது ’2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆயுதம் ஏந்தவில்லை, வன்முறையற்ற வழிகளில்தான் போராட விரும்புகின்றனர்’ என்று வாதிடப்பட்டது. இந்நிலையில் 11 ஆண்டுகளுக்கு பிறகு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கியுள்ளது. 2009க்கு பிறகு எந்த வன்முறை செயலிலும் ஈடுபடாததால் தடை நீக்கப்படுவதாகவும், இந்த அமைப்புக்கு தாக்குதல் நடத்தும் திறன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் அளிக்கவில்லை எனக்கூறி தடையை நீக்கி ஐரோப்பிய யூனியன் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

23 ஜூலை 2017

நீதியைக்காக்க தன்னுயிர் விட்ட மெய்ப்பாதுகாவலர்!

நீதியைக்காக்க தன்னுயிரை விட்டிருக்கிறார் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் கேமச்சந்திர அவர்கள்.15 வருடங்கள் தன்னுடைய மெய்ப்பாதுகாவலராக இருந்தவர்,மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தன்னை விட்டு விலகாது அருகிலேயே இருந்தவர்,இன்று அமைதியான சூழல் ஏற்பட்டு விட்டதாக கூறப்படும் காலத்தில் அவரது உயிர் பறிக்கப்பட்டிருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக கண்ணீர் விட்டிருக்கிறார் நீதியாளர் இளஞ்செழியன் அவர்கள்.நீதியாளர் இளஞ்செழியன் அவர்கள் தீவகத்தில் வேலணையை சொந்த இடமாக கொண்டவர்.இன்று உலக வரலாற்றில் ஒரு முன்னோடி நீதியாளராக திகள்பவர்.அமெரிக்காவில் ஒரு மாநிலம் அவரை ஒரு நாள் முதல்வராக அமர்த்தி மதிப்பளித்தது என்பது தமிழ்கூறு நல்லுலகிற்கு கிடைத்த பெருமையாகும்.அத்தகையதொரு நீதியாளருக்காகத்தான் தன்னுயிரை அர்ப்பணித்திருக்கிறார் கேமச்சந்திர என்ற போற்றுதற்குரிய மெய்ப்பாதுகாவலர்.உலகில் நல்ல நீதியாளருக்கு எடுத்துக்காட்டாக இளஞ்செழியன் அவர்கள் இருப்பதுபோல் ஸ்ரீலங்கா பொலிஸ் பிரிவிலும் நல்ல மனிதாபிமானமும் விசுவாசமும் உள்ள பொலிஸாரும் இருக்கிறார்கள் என்பதற்கு கேமச்சந்திர ஒரு எடுத்துக்காட்டு.அன்னாருக்கு புளியங்கூடல்.கொம் குழுமம் வீரவணக்கத்தை தெரிவித்து நிற்கிறது.

22 ஜூலை 2017

நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாவலர் மரணம்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் மெய்ப்பாதுகாவலர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டவர் எனக் கருதப்படும் சந்தேக நபரை விசேட அதிரடிப் படையினரும், பொலிஸாரும் இணைந்து கைது செய்துள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்றைய தினம் நல்லூர் பகுதியில் வைத்து, நீதிபதி இளஞ்செழியன் மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டிருந்தார். இத்தாக்குதலின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் படுகாயமடைந்திருந்தனர். குறித்த தாக்குதல்தாரி, அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் லிங்கம் கூல்பார் வழியாக தப்பிச் சென்றிருந்தார். இதனையடுத்து யாழ். நகரப்பகுதி பலத்த பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டதுடன், விசேட அதிரடிப்படையினர் களத்தில் இறக்கப்பட்டனர். இந்நிலையில் தான் தீவகப் பகுதிக்கு தப்பிச் சென்ற மர்ம நபரை விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர் என தெரியவருகிறது. இதேவேளை கைது செய்யப்பட்ட குறித்த நபரை யாழ் மாவட்ட பிராந்திய பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் இது குறித்து யாழ்.மாவட்ட பொலிஸார் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

21 ஜூலை 2017

கனடாவில் தமிழர் ஒருவர் காணாமல் போயுள்ளார்!


 Stouffville பகுதியில் நடைப்பயிற்சிக்குச் சென்ற 61 வயதுடைய பொன்ராசா நாகராஜா என்பவர் கடந்த 18ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 18ஆம் திகதி காலை நடைபயிற்சியில் ஈடுபடுவதற்காக சென்ற அவர் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அவர் தனது நாயுடன் வழமையாக நடை பயற்சிக்கு செல்வார். எனினும் அன்றைய தினம் அவர் தனியாகவே சென்றுள்ளார். இவர் தொடர்பில் தகவல் அறிந்தால் தகவல் தருமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர். ஐந்து அடி, நான்கு அங்குல உயரமான ஒருவராகும். கறுப்பு நிற முடியுடையவர். பழுப்பு நிற கண்கள் மற்றும் சாம்பல் நிற ஆட்டு தாடியை கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. அவர் தொடர்பில் அறிந்தால் 1-866-876-5423, மற்றும் 7541 இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

11 ஜூலை 2017

வடமராட்சியில் தொடரும் பதற்றம்!

மணல்காட்டில், நேற்றுமுன்தினம் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, வடமராட்சியின் சில பகுதியில் ஏற்பட்ட பதற்ற நிலை இன்றும் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. பவள் கவச வாகனங்களில் விசேட அதிரடிப்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று இளைஞனின் இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளதால், நெல்லியடி, மந்திகை, துன்னாலை, கரவெட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஒருவித பதற்றம் காணப்படுகிறது. பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

07 ஜூலை 2017

புளியங்கூடல் மக்களின் மனங்களில் நிறைந்து விட்ட எங்கள் குருஜிகள்!

புளியங்கூடல் மக்களின் மனங்களில் நிறைந்து விட்ட எங்கள் குருஜிகள்[திரு இரத்தினம் ஞானசோதியன்,திருமதி சரோஜினி ஞானசோதியன் மண இணையர்]கனடா-புளியங்கூடல் ஒன்றியத்தின் ஒற்றுமைக்கும் செயற்பாடுகளுக்கும் எம் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்.முக்கியமாக தலைமைப் பொறுப்பை மிகவும் சிறப்பாக வழி நடத்திச்செல்லும் சிவா அண்ணாவிற்கு[இலட்சுமணபிள்ளை சிவசோதி]எம் விஷேட வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

27 ஜூன் 2017

புளியங்கூடல்-கனடா மக்கள் ஒன்றியம் விடுக்கும் அழைப்பு!

புளியங்கூடல்-கனடா மக்கள் ஒன்றியத்தின் இவ்விழா சிறப்புற புளியங்கூடல்.கொம் குழுமம் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கின்றது.

புளியங்கூடல் அம்பாள் ஆலய மின் ஒளியால் பதற்றமான குடாநாடு!

பறக்கும் தட்டு பறப்பதாக நேற்றிரவு பரவிய வதந்தியால், யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், வீதியில் கூட்டம் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்தனர். புளியங்கூடல் அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தில் நேற்றிரவு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது பயன்படுத்திய பெரிய மின் விளக்குகள் வானை நோக்கி செலுத்திய ஒளி, திரண்ட முகில் கூட்டங்கள் மீது பட்டு அவை பாரிய ஒளிவட்டங்களாக தென்பட்டன. இதனைச் சிலர் பறக்கும் தட்டு என்று வதந்தியைக் கிளப்பி விட்டனர். இந்த செய்தி 3 மணித்தியாலங்களாக குடாநாடெங்கும் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் வீதிக்கு வந்து மக்கள் வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். எனினும், அந்த ஒளிவட்டத்திற்கான காரணம் தெரியவர மக்கள் பதற்றம் நீங்கி இயல்பு நிலைக்கு வந்தனர்.

21 ஜூன் 2017

மீளப்பெறப்பட்டது நம்பிக்கையில்லாப் பிரேரணை!

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கடந்தவாரம் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, இன்று திரும்பப் பெறப்பட்டது. வடமாகாண சபை உறுப்பினர்களான கேசவன் சயந்தன் மற்றும் ஆயுப் அஸ்மின் ஆகிய இருவரும் இணைந்து,வட மாகாண ஆளுநரிடமிருந்து அந்தப் பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொண்டனர். இதையடுத்து குழப்ப நிலை முடிவுக்கு வந்துள்ளது.

18 ஜூன் 2017

தனித்துச் செயற்பட பங்காளிக் கட்சிகள் யோசனை!

முதலமைச்சருக்கு எதிரான தமிழரசுக் கட்சி மாகாணசபை
உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணையை திரும்பப் பெறாவிட்டால் பாராளுமன்றத்திலும் பங்காளிக்கட்சிகள் தனித்து இயங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தெரியவருகிறது. ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் வடக்கு மாகாண அமைச்சர்களுக்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன் நடவடிக்கை எடுத்திருந்த நிலையில் தமிழரசுக்கட்சி அரச கட்சிகளுடன் இணைந்து முதலமைச்சருக்கு எதிராக தன்னிச்சையாக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகிய ஈபிஆர்எல்எப், ரெலோ,புளொட் ஆகிய கட்சிகள் வன்மையாக கண்டித்துள்ளதுடன் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவை வழங்கியுள்ளன. இந்நிலையில் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசுக் கட்சி உடனடியாக மீளப்பெறாவிட்டால்பாராளுமன்றத்திலும் இம் மூன்று பஙகாளிக் கட்சிகளும்,தனித்து இயங்குவது குறித்து பேசி வருவதாகவும் இது தொடர்பில்இணக்கப்பாடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

15 ஜூன் 2017

முதல்வரை விலக்கினால் தமிழரசுக் கட்சியுடன் தொடர்பு துண்டிப்பு!

எதிர்க்கட்சியினருடன் இணைந்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை விலக்கினால் தமிழரசுக் கட்சியுடனான சகல தொடர்புகளையும் தமது கட்சி துண்டிக்கும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், வடக்கு மாகாண முதலமைச்சரை பதவி விலக்குவதற்கு தமிழரசுக்கட்சி வகுத்திருக்கும் வியூகங்கள் குறித்து பேசுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த விடயம் தொடர்பாக சுரேஸ் தொடர்ந்து குறிப்பிடுகையில்- ”வடக்கு மாகாண முதலமைச்சர் என்பவர் ஒட்டு மொத்த வடக்கு மக்களின் பிரதிநிதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதி. அவரை கடந்த 2013இல் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகளும் இணைந்தே அதற்கான முன்மொழிவை வைத்தன. இவ்வாறு தெரிவு செய்யப்பட்டு இன்று முதலமைச்சராக உள்ள ஒருவரை, ஏனைய பங்காளிக் கட்சிகளை புறந்தள்ளிவிட்டு தமிழரசுக்கட்சி மாத்திரம் முடிவெடுத்து மாற்ற முடியாது. மாற்றுவதற்கும் அனுமதிக்க முடியாது. ஏனெனில், முதல்வர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடியதாக வடக்கு மாகாண சபையிலும் அதற்கு வெளியிலும் செயற்படுபவர். அவ்வாறானவர், ஊழல் மோசடிகளைச் செய்தவர்களை அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக்க முற்படும் போது, தமக்கு சார்பானவர்களைக் காப்பாற்றுவதற்காக எதிர்க்கட்சியின் துணை கொண்டு தமிழரசுக்கட்சி முதலமைச்சரையே விலக்க முற்படுவதானது, ஊழல் மோசடிக்காரர்களைப் பாதுகாப்பதாக அமைகிறது. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிலேயே இச்செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. வடக்கு மாகாண சபையின் 2 சிங்கள உறுப்பினர்கள், 3 முஸ்லிம் உறுப்பினர்களின் துணைகொண்டு முதலமைச்சருக்கு எதிராக ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதாக இருந்தால், அது தமிழரசுக்கட்சி மட்டுமல்ல ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியனவும் இணைந்தே அதனைக் கொண்டு வருவதாக அர்த்தம். மூச்சுக்கு 300 தடவை தந்தை செல்வாவின் பெயரைச் சொல்லும் தமிழரசுக்கட்சியா தமிழர் விரோத செயற்பாட்டைச் செய்கின்றது? தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை ஈ.பி.ஆர்.எல்.எப். கடுமையாக எதிர்க்கின்றது. முதலமைச்சரை வெளியேற்றும் தீர்மானத்தை அக்கட்சி கொண்டு வந்தால், கூட்டமைப்பில் தமிழரசுக்கட்சியுடனான தொடர்புகளை ஈ.பி.ஆர்.எல்.எப். துண்டிக்கும். மக்களும் தமிழரசுக்கட்சியின் நடவடிக்கைகளை நிராகரிப்பார்கள். நீதி கேட்டு வீதிக்கு இறங்குவார்கள்’ என்றார்.

06 ஜூன் 2017

தம்பாட்டியில் ஐவர் கைது!

பாடசாலை மாணவர்கள் மூவரை தகாத உறவுக்குட்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டில் தம்பாட்டி பகுதியைச் சேர்ந்த 5 பேரை ஊர்காவற்துறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 8 ல் கல்வி பயிலும் மாணவர்கள் மூவரை 8 நபர்கள் அப்பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி தகாத உறவுக்குட்படுத்தியுள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக 3 மாணவர்களும் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து  பொலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றபோது 3 நபர்கள் தப்பி ஓடியுள்ளனர். ஏனைய ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட 3 மாணவர்களும் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

05 ஜூன் 2017

தியாகி பொன்.சிவகுமாரன் நினைவு நாள்!

தியாகி பொன்.சிவகுமாரன் நினைவு நாள் இன்றாகும்! இன்று தியாகி பொன்.சிவகுமாரன் அவர்களின் 43ம் ஆண்டு நினைவு
தினமாகும்,26.08.1950ல் யாழ்,உரும்பிராயில் பிறந்த பொன்.சிவகுமாரன் அவர்கள் சிங்கள அரசின் கல்விதரப்படுத்தலுக்கு எதிராக போராட்டக்களத்தில் குதித்து வீரகாவியமான முதல் மாவீரன் என்ற பெருமைக்குரியவரானார்.தமிழ் துரோகி ஒருவனால் 05.06.1974ல் காட்டிக்கொடுக்கப்பட்டு சிங்களப்படைகள் சுற்றி வளைத்தவேளை நஞ்சருந்தி தன்னைத்தானே அழித்து முதற்களப்பலியானார்.இந்த மாவீரனது நினைவுகளை சுமந்தபடியே அவனது கனவுகளை நனவாக்க போராட்டக் களத்தில் நகர்ந்து செல்கிறது தமிழினம்.வரலாற்று ஏடுகளில் பொன் சிவகுமாரனின் பெயரும் என்றும் நிலைத்திருக்கும்.

(நன்றி:காவலூரான்)

04 ஜூன் 2017

லண்டன் தாக்குதலில் 7பேர் பலி,48பேர் காயம்!

லண்டன்லண்டனில் நேற்றிரவு பின்னேரம் நடந்த இரு தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 48 பேர் காயமடைந்திருக்கின்றனர் என்று லண்டன் போலிசார் கூறியிருக்கின்றனர். இந்த சம்பவத்தை பயங்கரவாதத் தாக்குதலாகக் கருதுவதாகப் போலிசார் கூறியிருக்கின்றனர். லண்டன் பிரிட்ஜ் பகுதியில் ஒரு வாகனம் பாதசாரிகள் கூட்டத்துக்குள் நுழைந்து மோதியபோது இந்த வன்முறை தொடங்கியது. மூன்று பேர் இந்த லண்டன் பாலத்திலிருந்து அருகிலுள்ள பரோ மார்க்கெட் என்ற பகுதிக்குள் கத்திகளுடன் ஓடியதை தான் பார்த்ததாக பிபிசியிடம் நேரில் கண்ட சாட்சி ஒருவர் தெரிவித்தார். சாலையில் பலரை அவர்கள் கத்தியால் குத்தினர் என்று அவர் கூறினார். அதற்கு சற்று நேரத்திற்குப் பின், ஆயுதந்தாங்கிய போலிசார் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கி சூடு சத்தங்கள் கேட்டன. இந்த்த் தாக்குதல்கள் கோழைத்தனமானவை , வேண்டுமென்றே நடத்தப்பட்டவை என்று லண்டன் மேயர் சாதிக் கான் கண்டனம் செய்திருக்கிறார். இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களை எவ்விதத்திலும் நியாயப்படுத்தமுடியாது என்று அவர் கூறினார். பிரிட்டிஷ் பிரதமர் தெரீசா மே அரசின் அவசர பாதுகாப்பு குழு கூட்டத்தை நடத்தவுள்ளார். மான்செஸ்டர் நகரில் தற்கொலை தாக்குதல் ஒன்றில் 22 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு வாரத்துக்குள்ளாக இந்த சம்பவம் நடந்துள்ளது. மார்ச் மாதத்தில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் கார் ஒன்று பாதசாரிகள் மீது நுழைந்து மோதியது, பின்னர் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், ஒரு பொலிசார் உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:பிபிசி தமிழ் 

02 ஜூன் 2017

திருமுருகன் காந்திக்கு ஆதரவாக யாழில் போராட்டம்!

ஈழத்தமிழர் படுகொலையை நினைவு கூர்ந்தமைக்காக திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 11 மணிக்கு எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், சென்னை மெரினா கடற்கரையில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினத்தை அனுஷ்டித்தமைக்காக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் தலைவர் உள்ளிட்ட நான்கு பேர் தமிழகப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து யாழ்ப்பாணத்தில் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளோம். ஈழத்தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டு என்பதற்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் தமிழ் மக்கள் பேரவை, சிவில் அமைப்புக்கள் ,தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இலங்கை அரசாங்கமும், இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகச் செயற்படும் உலக வல்லரசுகளும் சேர்ந்து இலங்கையில் இடம்பெற்ற இன அழிப்பை மூடி மறைக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஜேர்மன் பிறைமன் நகரில் நடைபெற்ற நிரந்தர தீர்ப்பாயமொன்றில் கலந்து கொண்டு மேற்கு நாடுகள் மற்றும் இந்தியா போன்ற நாடுகளும் சேர்ந்து இலங்கையில் இனப்படுகொலையை மேற்கொண்டது என்பதை நிரூபிப்பதற்காகக் கடுமையாகப் பாடுபட்டவர். தன் சொந்த நாடான இந்தியா ஈழத்தமிழர்களுக்குத் துரோகமிழைத்து விட்டது என்பதை அந்த நாட்டிலிருந்தவாறு எந்தவித தயக்கமுமின்றி அம்பலப்படுத்தி வருபவர். மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் இடம்பெறுகின்ற போது அங்கு இடம்பெறும் ஒவ்வொரு அமர்வுகளிலும் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் அழுத்தமான வகையில் குரல் கொடுத்து வருபவர். இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஜெனிவாவில் பக்க அறைகளில் அரசதரப்பினர் கலந்து கொண்டு பொய்ப் பிரச்சாரங்களை செய்கின்ற போது அதனை முற்றுமுழுதாக முறியடிக்கும் வகையில் திருமுருகன் காந்தி செயற்பட்டு வருகிறார். இவ்வாறு தமிழ்மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தைத் தலைமை தாங்கி நடத்துவது மிகவும் பொருத்தமானது. தமிழக அரசு இவ்வாறான நினைவேந்தல் நிகழ்வுகளுக்குத் தடை விதிக்கின்ற போது அதனையும் மீறி நடத்துவது பாராட்டுக்குரியது. தமிழக அரசின் இவ்வாறான அடக்குமுறையான செயற்பாடு கண்டனத்துக்குரியது. தமிழக மக்களும் ஈழத்தமிழர்களும் இணைந்து இவ்வாறான அடக்கு முறையான செயற்பாடுகளுக்கெதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேண்டுகோள் விடுத்தார்.

26 மே 2017

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவம் 2017!

புளியங்கூடல் செருத்தனைப்பதி அருள்மிகு சிறீ  இராஜமகாமாரி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் 09.06.2017 வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி பதினெட்டு(18)தினங்கள் விழா நடைபெறும்.பதின்நான்காம் திருவிழாவாகிய 22.06.2017 வியாழக்கிழமை வேட்டைத்திருவிழாவும்,பதினாறாம் திருவிழாவாகிய 24.06.2017 சனிக்கிழமை இரதோற்சவமும் நடைபெற்று பின்னர் மறுநாள் 25.06.2017 ஞாயிற்றுக்கிழமை தீர்த்தோற்சவமும் நடைபெறும்.18ம் திருவிழாவாகிய 26.06.2017 திங்கட்கிழமை பூங்காவனமும் இடம்பெற்று கொடியிறக்கத்துடன் அம்பாளின் 2017ம் ஆண்டின் வருடாந்த உற்சவம் நிறைவுக்கு வரும்,
ஆலய விழா தொடர்பான விபரங்களை ஆலய நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ளனர்.

25 மே 2017

மெலிஞ்சிமுனை சுற்றிவளைப்பில் சிலர் கைது!

ஊர்காவற்துறை மெலிஞ்சிமுனை பகுதியில் பொலிஸார் நேற்று திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டு சிலரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஈபிடிபி முன்னாள் உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவர் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பதற்றநிலை உருவாகியிருந்தது. இந்நிலையில், குறித்த பகுதியில் வன்முறையை தூண்டும் வகையில் செயற்பட்ட நபர்களை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம். றியாழ் உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் பலரை கைது செய்யும் நோக்கில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், ஊர்காவற்றுறை மெலிஞ்சிமுனை பகுதியில் இடம்பெற்ற பதற்ற நிலையை அடுத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 மே 2017

முகமாலையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறி தேடுதல்!

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம் தாங்கிய பெருமளவு படையினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு ஏ9 பிரதான முகமாலை கச்சார்வெளி பிரதேசத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தினை தொடர்ந்தே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை வேளை 12.30 மணிக்கு பின்னரான காலப்பகுதியில் போக்குவரத்து பொலிஸார் ஏ9 பிரதான வீதியில் கடமையில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது கச்சார்வெளி கிராம பக்கமாக எழுந்த சந்தேகத்திற்கு இடமான சத்தம் கேட்டபோது போக்குவரத்து பொலிஸார் டோர்ச் லைட் ஒளி மூலம் அவதானித்த போது இனந்ததெரியாத நபர் ஒருவர் ரி56 ரக துப்பாக்கியினால் நான்கு தடவைகள் பொலிஸார் மீது சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது பொலிஸாரும் பதிலுக்கு துப்பாக்கி சூடு நடத்தியுள்ளளனர். இருந்த போதும் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை துப்பாக்கி தோட்டாக்கள் அருகில் காணப்பட்ட புகையிரத சமிஞ்கை கட்டுப்பாட்டு பெட்டிகளை தாக்கியிருக்கின்றன. இதனையடுத்து இன்று அதிகாலை பொலிஸாரினால் ஒலிபெருக்கி மூலம் கச்சார்வெளி உள்ளிட்ட சுற்றியுள்ள பிரதேசங்களில் மக்களை வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவிப்புகள் செய்யபட்டதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர். பெருமளவு ஆயுதம் தாங்கிய படையினர் மற்றும் பொலிஸார் சுற்றி வளைத்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என சொல்லப்படுகின்றது.

17 மே 2017

வித்தியாவின் தாயார் மைத்திரிபாலவிற்கு கடிதம்!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை கொழும்புக்கு மாற்றாது யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்குமாறு, அவரின் தாயார் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். புங்குடுதீவு, 9ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் சரஸ்வதி (தே.அ.அ.இல. 668512127V) ஆகிய நான் தங்களுக்கு செய்யும் தாழ்மையான விண்ணப்பமாவது. எனது மகள் வித்தியா கொடூரமாக கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையை தாங்கள் அறிந்ததே. எனது மகளது கொலை வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது. தற்போது அவ்வழக்கின் விசாரணைகள் முடிவடைந்து வழக்கானது மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்படவுள்ள நிலையில் குறித்த வழக்கானது கொழும்பிற்கு மாற்றப்படவுள்ளதாக பத்திரிகை வாயிலாக கேள்வியுற்ற போது மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். குறித்த விசாரணைகள் தமிழ் மொழியில் பரீட்சயமற்ற நீதிபதிகளால் விசாரிக்கப்படவுள்ளதாகவும் அறிந்தேன். யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்த மாண்பு மிகுந்த ஐனாதிபதியவர்கள் கடந்த 2015.05.26ம் திகதி என்னை வேம்படி மகளீர் கல்லூரிக்கு அழைத்து குறித்த வழக்கானது யாழ்ப்பாணத்தில் Trial At Bar முறையில் நடைபெற தான் நடவடிக்கை எடுப்பேன் என்று உத்தரவாதம் வழங்கியிருந்தார். குறித்த உத்தரவாதத்திற்கு முரணாக தற்போது இவ்வழக்கானது கொழும்பிற்கு மாற்றப்படுவது எனக்கு மிகுந்த அதிர்ச்சியையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. கொழும்பிற்கு வந்து தங்கியிருந்து வழக்கு விசாரணைகளில் பங்கு பெறுவது எனக்கும் ஏனைய சாட்சிகளுக்கும் வறுமையில் நாம் இருப்பதன் காரணமாக மிகுந்த பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்பதுடன் வயது முதிர்ந்த நிலையில் இருக்கும் எனது உடல் நிலையும் அதற்கு ஒத்துழைக்காது. நாம் சிங்கள மொழி பேச முடியாது இருப்பதால் தமிழில் எம்மால் வழங்கப்படும் சாட்சியங்கள் சிங்கள மொழியிற்கு மொழிபெயர்க்கப்படும்போது திரிபடையும் வாய்ப்புகளும் உள்ளது. மேலும் எனது மகள் கொலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. ஊர்கர்வற்துறை நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் எல்லாம் தமிழ் மொழியில் காணப்படுவதால் அவற்றை மொழிபெயர்ப்பதற்காக மேலும் காலதாமதம் ஏற்படும் என அஞ்சுகின்றேன். எனவே இவை அனைத்தும் எனது மகளின் இழப்பிற்கு கிடைக்க வேண்டிய நீதியை இல்லாது செய்துவிடும் என நியாயமாக அஞ்சுகின்றேன். எனவே காலதாமதமின்றி இவ்வழக்கு நடவடிக்கைகளை கொழும்பில் மேற்கொள்ளாது யாழ்ப்பாணத்தில் Trial At Bar முறையில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தங்களை தாழ்மையாக கோருகின்றேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயார் எழுதியுள்ள இக்கடிதத்தின் பிரதியானது பிரதம மந்திரி, பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.என தெரிவிக்கப்படுகிறது.

09 மே 2017

மகிந்தவின் சகோதரி மரணம்!தூக்கிச்சென்றார் மகிந்த!

சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோரி காந்தினி விசித்ரா ராஜபக்ச நேற்று கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். கொழும்பு மலர் சாலைக்கு மஹிந்த தனது  சகோதரியின் உடலை ஒரு கையால் தூக்கிச் சென்றார். ஒரே இரத்தத்தில் பிறந்த சகோதரியின் உடலை ஒரு கையில் தூக்கி சென்ற அண்ணன் என ஊடகங்களில் செய்தி வெளியியாகியுள்ளது.    இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் சகோதரியின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.