பக்கங்கள்

30 ஏப்ரல் 2018

புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் மகோற்சவப் பெருவிழா!

ஊர்காவற்றுறை புளியங்கூடல் இந்தன் முத்து விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழா எதிர்வரும் (06.05.2018)ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இனிதே நடைபெற ஏற்பாடாகியுள்ளதாக ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொடியேற்றம்:06.05.2018 காலை 10:00 மணி 
வேட்டைத்திருவிழா:13.05.2018 மாலை 03:30 மணி 
சப்பரத் திருவிழா:13.05.2018 இரவு 08:00 மணி 
தேர்த்திருவிழா:14.05.2018 காலை 10:00 மணி
தீர்த்தத்திருவிழா:15.05.2018 காலை 09:00 மணி
வைரவர் பொங்கல்:16.05.2018 மாலை 04:00 மணி 

இவ்வாறு ஆலய துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

27 ஏப்ரல் 2018

லண்டனில் இருக்கும் ஈபிடிபியினர் இருவரை நாடுகடத்த கோரிக்கை!

இரட்டை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஈபிடிபி உறுப்பினர்களான செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன் மற்றும் நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரையும் லண்டனிலிருந்து நாடு கடத்த நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சுக் கேட்டுள்ளது. 2001ஆம் ஆண்டு நாரந்தனையில் தேர்தல் பிரசாரத்துக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் மீது ஈ.பி.டி.பியினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலின் போது கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கொல்லப்பட்டனர். இந்த வழக்கில் செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் மற்றும் அன்ரன் ஜீவராசா அல்லது ஜீவன் ஆகிய மூவருக்கும் இரட்டைத் தூக்குத் தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றபோது, செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரும் வெளிநாட்டில் இருந்தனர். வழக்கின் தீர்ப்பு 2016ஆம் ஆண்டு டிசெம்பர் 7ஆம் திகதி வழங்கப்பட்டது. இந்த நிலையில், செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் இருவருக்கும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டதுடன், வெளிவிவாகார அமைச்சு, நீதி அமைச்சு, சட்ட மா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் மா அதிபர் திணைக்களம் ஆகியவைகள் இணைந்து இந்தக் குற்றவாளிகள் இருவரையும் நாடு கடத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கட்டளை வழங்கியிருந்தது. இந்த நிலையில் லண்டனில் வதியும் செஸ்ரியான் ரமேஸ் அல்லது நெப்போலியன், நடராஜா மதனராஜா அல்லது மதன் ஆகிய இருவரையும் நாடு கடத்தல் வழிமுறையில் இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாதுகாப்பு அமைச்சுக் கேட்டுள்ளது. இது தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்கள மன்றாடியார் அதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சின் சட்ட ஆலோசகர் கடந்த 17ஆம் திகதி அனுப்பிவைத்த கடிதத்தின் பிரதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

21 ஏப்ரல் 2018

சுரேஸ் பிரேமச்சந்திரனை நம்பமுடியாது-கஜேந்திரகுமார்!


உள்ளூராட்சி தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை, நம்பி எவ்வாறு  புதியதொரு கூட்டுக்கு செல்ல முடியும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார். 
உள்ளூராட்சி தேர்தலின் போது எங்களை நம்ப வைத்து நடுத்தெருவில் விட்ட சுரேஸ் பிரேமசந்திரனை, நம்பி எவ்வாறு புதியதொரு கூட்டுக்கு செல்ல முடியும் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வியெழுப்பியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் மேலும் கூறுகையில், “எங்களோடு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சுரேஷை கேட்ட போது அதற்கு சம்மதம் தெரிவித்த அவர், இறுதியாக உதய சூரியனில் போட்டியிட வேண்டும் என்று கூறினார். அதற்கு மோசமான கொள்கையுடைய கட்சியோடு இணைய போவதில்லை என்று கூறினேன். தேர்தல் அறிவிக்கப்பட்டதால் புதிதாக கட்சி மற்றும் சின்னம் தேட முடியாது, ஆகையால் ஈ.பி.ஆர்.எல்.எவ் சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறினேன். அதற்கு மறுப்பு தெரிவித்து இறுதிவரை எங்களோடு பேசிக்கொண்டே இருந்தார். இந்த பேச்சு நடைபெற்றுக் கொண்டிருக்கு போது சுரேஷ் உதயசூரியனில் போட்டியிட போவார் என்று தெரியாது. பத்திரிகையில் பார்த்து தான் அறிந்து கொண்டேன். எமக்கு நம்பிக்கை கொடுத்து நடுத்தெருவில் விட்டவர் அவர். தூய்மையான அரசியல், நடந்து கொள்ளும் விதம் என்பன ஒரு கூட்டுக்கு மிக முக்கியம். ஒன்று சேர்ந்த பின்னர் போட்டித்தன்மை இருக்க முடியாது. ஆனால் இவ்வாறு நடந்து கொண்ட சுரேஷை எவ்வாறு நாங்கள் இனி நம்புவது? சுரேஷ் தேசியவாதம் கதைத்துக் கொண்டு ஈ.பி.டி.பி, சிறிலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, மகிந்தவின் கட்சி ஆகியவற்றுடன் வவுனியாவில் கைகோர்த்து எங்களுக்கு எதிராக செயற்பட்டார். இதற்கும் தேசியவாதத்துக்கும் என்ன தொடர்பிருக்கின்றது? என்றார் கஜேந்திரகுமார்.

19 ஏப்ரல் 2018

மனோவுடன் முரண்பாடு,விலகினார் வேலணை வேணியன்!

Image result for வேலணை வேணியன்!ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசன் உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது தனக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டார். உள்ளுராட்சி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது தனது பெயர் தேசிய பட்டியலில் இருப்பதாக கூறினார். எனினும் தேர்தலில் பின்னர் வெள்ளவத்தை தெற்கு பிரதேச சபையை நான் கோரிய போதிலும் அதனைத் தர மறுத்தமையின் காரணமாகவே கட்சியில் இருந்து விலகி நவோதய மக்கள் முன்னணியுடன் இணைவதாக வேலணை வேணியன் தெரிவித்தார். கொழும்பு பிரைட்டன் ஹோட்டலில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வேலணை வேணியன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், '' ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் அமைச்சர் மனோகணேசன் தேர்தல் பிரசாரத்தின் போது எமக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. எனக்கு மாத்திரமல்லாது கட்சியில் அங்கம் வகித்த இளைஞர்களுக்கும் அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர் தவறியமையால் சுமார் 17 இளைஞர் உறுப்பினர்கள் இது வரையில் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். அரசியலில் இலாபம் தேடுவதும் உழைப்பதும் என்னுடைய நோக்கம் அல்ல. மக்களுக்கு சேவை வழங்குவது மாத்திரமே எமது நோக்கமாகும். அதனாலேயே மக்களுக்கு பல வருடங்களாக சேவையாற்றிவரும் நவோதய மக்கள் முன்னணியில் இணைந்துள்ளேன். நாட்டில் தற்போது பல கட்சிகள் காணப்பட்டாலும் வறிய மக்களுக்கான சேவையை வழங்கும் கட்சியாக நவோதய மக்கள் முன்னணியை இனங்கண்டமையினாலேயே அக்கட்சியுடன் கை கோர்த்துள்ளேன். தலைமைத்துவங்களின் சுய நல நோக்கங்களின் காரணமாக பல இளைஞர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் கட்சியிலிருந்து விலகும் அல்லது விலகிய எந்தவொரு உறுப்பினரிடமும் கட்சி தலைவர் மனோ கணேசன் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறந்த ஒரு கலந்துரையாடலில் ஈடுபடவில்லை. ஜனநாயக மக்கள் முன்னிணியின் செயலாளருடனான முரண்பாடுகள் காரணமாக பல உறுப்பினர்கள் விலகினார்கள் என கூறப்படுகின்றது. அது எந்த அளவில் உண்மை என எமக்கு தெரியாது எனினும் அவ்வாறான பாதிப்புக்கள் கட்சிக்குள் காணப்படுகின்றது.

17 ஏப்ரல் 2018

கூட்டமைப்பு வேட்பாளருக்கு த.தே.மக்கள் முன்னணி ஆதரவு!

வவுனியா வடக்கு பிரதேச சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. இன்று காலை நடந்த வவுனியா வடக்கு பிரதேச சபையின் அமர்வில் புதிய தவிசாளர் தெரிவு இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், நா.தணிகாசலமும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஜெ.ஜெயரூபனும் தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்டனர். இதையடுத்து நடந்த வாக்கெடுப்பில், இருவரும் தலா 11 வாக்குகளைப் பெற்றனர். கூட்டமைப்பு வேட்பாளருக்கு ஐதேக உறுப்பினர்கள் இருவரும், சுயேட்சை உறுப்பினர் ஒருவரும் ஆதரவு அளித்தனர். கூட்டணி வேட்பாளருக்கு, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் 5 உறுப்பினர்களும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 2 உறுப்பினர்களும், ஐதேக உறுப்பினர் ஒருவரும், ஆதரவு அளித்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 2 உறுப்பினர்களும் நடுநிலை வகித்தனர். இருவரும் சமமான வாக்குகளைப் பெற்ற நிலையில் திருவுளச்சீட்டு மூலம் தெரிவு செய்யப்பட்ட கூட்டமைப்பு வேட்பாளர் தணிகாசலம் தவிசாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து பிரதி தவிசாளர் பதவிக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நா. யோகராஜாவும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் து.தமிழ்ச்செல்வனும், சிறிலங்கா பொதுஜன முன்னணி சார்பில், காமினி விக்கிரமபாலவும் போட்டியில் நிறுத்தப்பட்டனர். தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு சிறிலங்கா பொதுஜன முன்னணி ஆதரவு அளித்த நிலையில், பிரதி தவிசாளர் பதவிக்கு அந்தக் கட்சி காமினி விக்கிரமபாலவை நிறுத்தியதை அடுத்து, கூட்டணி வேட்பாளர் தமிழ்ச்செல்வன் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதையடுத்து நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், யோகராஜாவுக்கு 14 வாக்குகளும், காமினி விக்கிரமபாலவுக்கு 6 வாக்குகளும் கிடைத்தன. யோகராஜா பிரதி தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். பிரதி தவிசாளர் தெரிவின் போது, கூட்டமைப்பு நிறுத்திய வேட்பாளர் யோகராஜாவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஆதரவாக வாக்களித்தது. எனினும், தமிழர் விடுதலைக் கூட்டணி நடுநிலை வகித்திருந்தது. அதேவேளை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது. நெலுக்குளத்தில் அமைந்துள்ள பிரதேச சபை கட்டிடத்தில் இன்று பிற்பகல் நடந்த அமர்வில் தவிசாளர் தெரிவு இடம்பெற்றது.தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக துரைச்சாமி நடராஜசிங்கமும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் த.சிவராசாவும் போட்டியிட்டனர். வாக்கெடுப்பில் துரைச்சாமி நடராஜசிங்கம் 14 வாக்குகளைப் பெற்று வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து போட்டியிட்ட த.சிவராசா 13 வாக்குகளை பெற்றார்.தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த ஒருவர், நடுநிலை வகித்திருந்த நிலையில் இருவர் வாக்களிக்கவில்லை. உப தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகேந்திரன் 15 வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்த எஸ்.குகதாசன் 14 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார். 11 ஆசனங்களைக் கொண்ட கூட்டமைப்புக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவரும், சுயேட்சை உறுப்பினர்கள் இருவரும் ஆதரவு வழங்கியிருந்தனர்.

வவுனியா வடக்கு யாருக்கு என்பதில் மும்முனை போட்டிக்கு வாய்ப்பு!

வவுனியா வடக்கு பிரதேச சபையிலும் மும்முனைப் போட்டி ஏற்படலாம் என்று செய்திகள் கூறுகின்றன. வவுனியா வடக்கு பிரதேச சபையில் 08 ஆசனங்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அடுத்தபடியாக 05 ஆசனங்களுடன் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன பெரமுன முன்னிலை வகிக்கிறது.வவுனியா வடக்கு பிரதேச சபையில் ஐக்கிய தேசியக் கட்சி 03, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 02, மக்கள் விடுதலை முன்னணி 01, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 01 என ஆசனங்களைப் பெற்றிருக்க மகிந்தவின் கட்சியுடைய 05 ஆசனங்களையும் சேர்த்து 12 உறுப்பினர்களுடன் சிங்களக் கட்சி ஒன்றின் பெரும்பான்மை இனத்தவர் ஒருவரே வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளராகும் வாய்ப்பு அதிகரித்தது. இந்நிலையில் தமிழர் ஜக்கிய விடுதலை முன்னணி சில சபைகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்கியிருந்த நிலையில் வவுனியா வடக்கிலும் பெரும்பான்மை இனத்தவரை வீழ்த்துவதற்காக அக்கட்சியின் 03 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறலாம் என்ற நிலை இருந்தது. எனினும் இதுவரை தவிசாளர் தெரிவுகளில் நடுநிலை வகித்து வந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 03 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தால் மட்டுமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 08 உறுப்பினர்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் 03 உறுப்பினர்களின் ஆதரவோடு 14 உறுப்பினர்கள் எனும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி சூழல் உருகியது. இந்நிலையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும்பான்மை பெற்றிருந்த சபைகளில் கூட ஈபிடிபி மற்றும் பெரும்பான்மைக் கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைப் பிடித்திருந்த போதிலும் வடக்கில் பெரும்பான்மை இனக்கட்சி ஒன்றின் பெரும்பான்மை இன உறுப்பினர் ஒருவர் தவிசாளராக வரக்கூடாது எனக்கருதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது உறுப்பினர்கள் மூவரும் ஆதரவு வழங்குவர் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்தது. அதேவேளை, நேற்று வவுனியா நகரசபையில் நடைபெற்ற தவிசாளர் தேர்தல் முடிவு வவுனியா வடக்கு தவிசாளர் தேர்விலும் தாக்கம் செலுத்தக்கூடும் என அஞ்சப்படும் சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில் வவுனியாவில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட முனையும் ஈபிஆர்எல்எவ், ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது சுதந்திரக் கட்சியுடனோ கைகோர்த்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறான சூழலில் மும்முனைப் போட்டிக் களம் ஒன்று திறக்கப்படக்கூடிய வாய்ப்புக்களும் அதிகரித்துள்ளது. மும்முனைப் போட்டிக்களம் ஒன்று திறக்கப்பட்டால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நடுநிலை வகிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளும் உள்ளதாக தெரியவந்துள்ளது. எச் சூழ்நிலை வந்தாலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமக்கு வாக்களிக்க வைக்கவேண்டும் என்ற முனைப்பில் வடக்கு மாகாணசபையின் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

16 ஏப்ரல் 2018

வவுனியா நகரசபை உதயசூரியன் வசம்,முன்னணி நடுநிலைமை!

வவுனியா நகரசபையை ஐதேக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன, ஈபிடிபியுடன் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி தன்வசப்படுத்தியுள்ளது. வவுனியா நகரசபை தலைவர், உப தலைவர் தெரிவு இன்றுவட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இடம்பெற்றது.தலைவருக்கான போட்டியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் நா.சேனாதிராஜாவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் இராசலிங்கம் கௌதமனும் முன்மொழியப்பட்டு பகிரங்க வாக்களிப்பு இடம்பெற்றது. இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட நா.சேனாதிராஜாவுக்கு கூட்டமைப்புக்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர். தமிழர் விடுதலைக்கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட இ.கௌதமனுக்கு தமிழர் விடுதலைக்கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக்கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜனபெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் கிடைக்கப்பெற்று இ.கௌதமன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். உபதலைவருக்கான தெரிவில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் க.சந்திரகுலசிங்கமும் சுதந்திரக்கட்சியின் சார்பில் சு.குமாரசாமியும் போட்டியிட்டிருந்தனர். இவர்களில் க.சந்திரகுலசிங்கத்திற்கு கூட்டமைப்பின் உறுப்பினர்களான 8 பேரும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர் ஒருவருமாக 9 பேர் வாக்களித்திருந்தனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சு.குமாரசாமிக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் 3 வாக்குகளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 3 வாக்குகளும் ஐக்கிய தேசியக் கட்சியின் 3 வாக்குகளும் ஈ.பி.டி.பியின் ஒரு வாக்கும் பொது ஜன பெரமுனவின் ஒரு வாக்குமாக 11 வாக்குகள் பெற்று உபதலைவராக தெரிவு செய்யப்பட்டார். அனைத்து தெரிவுகளுக்கும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி நடு நிலைவகித்தமை குறிப்பிடத்தக்கது.

15 ஏப்ரல் 2018

நயினாதீவை சேர்ந்தவர் கனடாவில் வெட்டிக்கொலை...மர்மம் அம்பலமானது!

யாழ்ப்­பாணத்தை சேர்ந்த ஒருவர்,கனடாவில் வெட்டிக் கொலை செய்­யப்­பட்­ட தகவல் சுமார் ஒன்­றரை வரு­டங்­க­ளின் பின்­னர் அவரது குடும்பத்தினருக்கு தெரி­ய­வந்­துள்­ளது. இந்த அதிர்ச்­சித்
தக­வலை கனடிய பொலி­ஸார் அங்­குள்ள உற­வி­ன­ரி­டம் கூறி
உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள அவ­ரது குடும்­பத்­தி­னர் தெரி­வித்­த­னர்.நயி­னா­தீ­வைச் சேர்ந்­த­வ­ரும்
யாழ்ப்­பா­ணம் கச்­சே­ரி­ய­டியை வசிப்­பி­ட­மாக் கொண்­ட­வ­ரு­மான கன­க­ரட்­ணம் கிருஷ்­ண­கு­மார் (வயது – 40) என்­ப­வரே
கொல்­லப்­பட்­டவராவார். அவர் முக­வர் ஊடாக சன் சீ கப்­ப­லில் வெளி­நாட்­டுக்­குச் சென்­றி­ருந்­தார். கன­டா­வில் அவ­ரது உற­வி­னர் ஒரு­வர் அவ­ரைப் பொறுப்­பேற்­றி­ருந்­தார். 2015 ஆம் ஆண்­டுக்­குப்
பின்­னர் அவ­ரது தொடர்பு அங்­குள்ள உற­வி­ன­ருக்கோ
யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள பெற்­றோ­ருக்கோ கிடைக்­க­வில்லை. இந்த நிலை­யில் அங்கு இடம்­பெற்ற ஒரு சம்­ப­வம் ஒன்­றில் அதே நாட்­டைச் சேர்ந்த சந்­தே­க­ந­பர் ஒரு­வர் கைது செய்­யப்­பட்­டார். அவ­ரி­டம்
நடத்­திய விசா­ர­ணை­யி­லேயே திடுக்­கி­டும் தக­வல்­கள்
வெளி­வந்­தன. இலங்­கை­யர்­கள் இரு­வர் உட்­பட 8 பேர் அவ்­வாறு வெட்­டிக் கொல்­லப்­பட்டு அங்­குள்ள பூந்­தோட்­டம் ஒன்­றில்
புதைக்­கப்­பட்­டுள்­ளமை தெரி­ய­வந்­தது. தற்­போது அவர்­க­ளது
எலும்­புக்­கூ­டு­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. அவர்­க­ளில் ஒரு­வர்
யாழ்ப்­பா­ணத்­தைச் சேர்ந்­த­வ­ரது என்­ப­தனை அங்­குள்ள
உற­வி­ன­ரைக் கொண்டு பொலி­ஸார் நேற்­று­முன்­தி­னம் விசா­ரணை செய்து உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர் என்று யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள
கு­டும்­பத்­தி­னர் தெரி­வித்­த­னர். ஏனைய விட­யங்­கள் நாளை
அறி­விக்­கப்­ப­டும் என்று அந்­த­நாட்­டுப் பொலி­ஸார் கூறி­யுள்­ள­னர் என்று மேலும் தெரி­விக்­கப்­பட்­டது.

11 ஏப்ரல் 2018

இலட்சியத்திற்காக மாலைகள் சூடாத த.தே.மக்கள் முன்னணி!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் வெளிப்புறம்யாழ்,மாநகசபையின் கன்னி அமர்வு இன்று (11.04.2018) நடைபெற்றிருந்த நிலையில் அமர்வு ஆரம்பிப்பதற்கு முன்னராக யாழ்,மாநகர சபையின் வாயில் பகுதியில் உறுப்பினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்போது உறுப்பினர்களுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு மேள,நாதஸ்வர இசை முழங்க சபை மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்டனர். இதன்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களின் தலைகளுக்கும் மாலைகள் சூட முற்பட்டபோது அவற்றை கௌரவமாய் கைகளில் வாங்கி அவைக்குச் சென்றிருந்தனர். இது குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்,மாநகர உறுப்பினர்கள் குறிப்பிட்டபோது, இலட்சியத்திற்காகப் போராடிய வீர மறவர்கள் கழுத்தில் மாலைகளை ஏற்றதில்லை. அவர்களின் வழியில் நாங்களும் மாலைகளை கழுத்தில் ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டனர்.மாலைகளுக்காக முட்டிமோதும் இன்றைய அரசியல்வாதிகள் மத்தியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உண்மையில் முன் மாதிரித்தான் என மக்கள் பேசிக்கொள்வதையும் அவதானிக்க முடிகிறது.

கொள்கை உடன்பாடுள்ள கட்சிகளோடு கூட்டணி-வடக்கு முதல்வர்!


வடக்கு மாகாணசபைத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரத்துக்கொரு கேள்வி பதில் அறிக்கையை  ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாரம் மூன்று வினாக்களுக்கு பதிலளித்துள்ளார்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வாரத்துக்கொரு கேள்வி பதில் அறிக்கையை ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் இவ்வாரம் மூன்று வினாக்களுக்கு பதிலளித்துள்ளார்.புதுவருட வாரமாகையால் மூன்று கேள்விகளுக்குப் பதில் இறுத்துள்ளேன். அவையும் அவற்றிற்கான பதில்களும் பின்வருமாறு –

1. எம் மக்களுக்குச் சொல்லும் புது வருடத்திற்கான உங்கள் செய்தி என்ன?

பதில்: எல்லோரும் இவ்வருடம் இன்பமுடனும் வளமுடனும் வாழ வேண்டும் என்று இறைவனை யாசிக்கின்றேன். எமது மக்களின் உரிமை மற்றும் நீதிக்கான போராட்டம் இந்த வருடம் வெற்றிபெற வேண்டும் என்றும் இறைவனை பிரார்த்திக்கின்றேன். 

2)அரசியல் ரீதியாக இந்த வருடம் உங்களுக்கு முக்கியமான ஒரு வருடம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களை எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?

பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது என்பது உங்கள் எல்லோருக்குந் தெரிந்த விடயம். அதன் ஆரம்ப காலத்தில் அதனை உருவாக்கப் பாடுபட்டவர்களுடன் எனக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. வடகிழக்குக் தாயகம், இறைமை, சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக் கூறுகளை ஐந்து கட்சிகளின் கூட்டிணைவாக முன்வைத்து உருவாக்கப்பட்டதே அக்கட்சியாகும். அந்தக் கொள்கைகளுக்காகவே கடந்த மாகாணசபைத் தேர்தலில் மக்களிடம் நாம் வாக்குக் கேட்டோம். மக்களும் எமக்கு அமோக வெற்றியை பெற்றுத்தந்து என்னையும் முதலமைச்சராக்கினர். அதே கொள்கையுடைய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இன்று இருக்கின்றதா? இன்று அதில் எத்தனை ஸ்தாபக கட்சிகள் உள்ளன? அப்படி ஒரு அமைப்பே இல்லாதவிடத்து எங்கிருந்து எனக்கு அழைப்பு வரும்?

3) எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் உங்களை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்த விருப்பம் இல்லாதது பற்றி திரு.சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: என்மேல் இருக்கும் உருக்கத்தினால், பாசத்தினால், பரிவினால் என்னைக் கஷ்டப்படுத்தக் கூடாது என்ற மனோ நிலையில் என் மாணவர் காரணங்களை அடுக்கியுள்ளார். அதன் முழுத்தாற்பரியத்தையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். 2013ம் ஆண்டு தேர்தலில் நிற்க முடியாது என்று நான் தொடர்ந்து கூறிய போது என்னை சமாதானப்படுத்தி தேர்தலில் நிற்க வைப்பதற்காகப் பல மாற்று யோசனைகள் முன் வைக்கப்பட்டன. இரண்டு வருடங்களுக்கு மட்டும் நில்லுங்கள் பிறகு இன்னொருவர் ஏற்றுக் கொள்வார் என்று சிலர் கூறினார்கள். ஒரு நண்பர் “உனக்கு என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் தான் இருக்கின்றோமே” என்று கூறிவிட்டு தேர்தல் முடிந்ததும் வெளிநாடு சென்று விட்டார். இவ்வாறான கூற்றுக்களை சட்டத்தில் Trader’s Puff என்று அழைப்பார்கள். வியாபாரத்திற்கான பசப்பு வார்த்தைகள் போன்றவை அவை. “குடிகாரன் பேச்சு விடிந்தால்ப் போச்சு” என்பது போல் காரியம் முடிந்ததும் அக் கூற்றுக்களுக்கு மதிப்பில்லை. தேர்தல் முடிந்த போது அதுவும் 133000க்கு மேலான மக்கள் வாக்குகள் கிடைத்த பின்னர் எவருமே அதுபற்றிப் பேசவில்லை. முடுக்கி விட்ட இயந்திரப் பொம்மைகள் முடுக்கியவர் முன்மொழிவுகளுக்கு ஏற்ப வடமாகாண சபையில் கூத்தாட்டத்தில் ஈடுபட்ட போது இவ்விடயம் முதன் முதலில் பேசப்பட்டது. ஆனால் அப்பொழுதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் மத்தியில் குடிகொண்டிருந்த சர்வாதிகாரப் போக்கு வெளி வந்திருந்தது. கூட்டமைப்பு கூட்டாகத் தீர்மானங்களை எடுத்ததைக் காண்பது அரிதாக இருந்தது. நான் இதுவரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உடைக்கவோ சிதைக்கவோ நடவடிக்கைகள் எடுக்கவில்லை. அதன் தலைமைத்துவத்தின் பிழையான நடவடிக்கைகளைச் சுட்டிக் காட்டவே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளேன். அரசியலுக்கு வருவேன் என்று நான் நினைத்திருக்கவில்லை. ஆனால் இறை செயலால் நான் அரசியலுக்குள் வந்துவிட்டேன். வந்த பின் எனது மக்களின் பேராதரவும் அன்பும் என்னை நெகிழ வைத்துவிட்டன. இதுவரை என்னால் முடிந்தளவுக்கு செய்யக்கூடியவற்றை செய்துள்ளேன். பல விடயங்களை செய்யமுடியாமல் அதிகார வரையறை, ஆட்சி அமைப்பு முட்டுக்கட்டைகள், குழிபறிப்புக்கள் என்று பல தடைகளை எதிர்கொண்டுள்ளேன். அதிகாரம் ஓச்சும் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு சிலர் பல விடயங்களை நாம் செய்ய விடவில்லை. ஏன்! அடுத்த ஆறு மாதங்களினுள் எமது மக்களிடையே மனமாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கலாமா? முடியாது. பழைய பாணியில் எமக்கு மீண்டும் கடுமையான எதிர்ப்புக்கள் வெளிப்படுத்தப்படுவன. அடுத்து உள்ளூராட்சி சபைகளிலும் இந்தவாறான நடவடிக்கைகளை எதிர் பார்க்கலாம். இது எங்கள் சுபாவம் போல்த் தெரிகின்றது.எமது மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை, படுகொலைகளை, போர்க்குற்றங்களை எல்லாம் யாருக்கோ உதவி செய்யும் நோக்கில் எம்மவர் சிலர் மறைக்க முற்படுவதுபோல் என்னால் மறைக்க முடியாதிருக்கின்றது. உண்மையை உலகம் உணர வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு என்னால் இயலுமானளவு செயற்பட்டிருக்கின்றேன். ஏகோபித்த வடமாகாணசபை இனப்படுகொலைத் தீர்மானம் இதற்கொரு உதாரணம். எமது மக்களுக்கான குரலாக நீதிவேண்டி பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக தொடர்ந்து குரல் கொடுத்துவருவதுடன் முடிந்தளவு அவர்களின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளைப் பல தடைகளுக்கு மத்தியில் எடுத்து வருகிறேன். உதாரணமாக, எமக்கான உதவிகளை சிங்கள ஆட்சியாளர்கள் செய்துதர முன்வராமையால் எம் புலம்பெயர் சொந்தங்களிடம் எமக்கான உதவிகளைப் பெற்று போரினால் நலிவுற்றிருக்கும் எம்மக்களின் துயர்களை துடைக்க முதலமைச்சர் நிதியம் ஒன்றுக்கான ஒப்புதலைத் தரும்படி 4 வருடங்களாக வேண்டி நிற்கிறோம். மாகாண சபையின் ஆயுட்காலமும் முடிவுக்கு வருகிறது. ஆனால் இன்று வரை அதற்கான ஒப்புதல் அளிக்கப்படவில்லை. பாராளுமன்றத்தில் செயற்படும் எமது எந்த தமிழ்த் தலைவராவது இதனை வலியுறுத்தி இருக்கின்றார்களா? போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றுங் கிடைக்காது போனாலும் பரவாயில்லை தனியொருவனுக்குப் பெயர் வந்து விடக்கூடாது என்ற மனோபாவத்தின் வெளிப்பாட்டை நான் அவதானிக்கின்றேன். இணைந்த வடக்கு – கிழக்கில் சுயநிர்ணய அடிப்படையிலான தீர்வு என்ற எமது தீர்வுக் கோரிக்கையை இல்லாமல் செய்து தமிழ் தேசிய கோட்பாட்டைச் சிதைக்குந் திட்டமிட்ட நடவடிக்கைகளை எதிர்க்கும் நிலைக்கு நான் கடந்த 4 வருடங்களில் தள்ளப்பட்டிருந்தேன். இவ்வாறான சிதைக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக என்னால் முடிந்தளவுக்குச் செயற்பட்டு “இணைந்த வடக்கு கிழக்கில் சுயநிர்ணய உரிமை” என்ற அரசியல் கருத்து வினைப்பாட்டை சர்வதேச சமூகம், இலங்கை மத்திய அரசு மற்றும் எமது மக்கள் மத்தியில் மீள நிலைநிறுத்தியுள்ளேன். எவர் முதலமைச்சர் பதவிக்கு வந்தாலும் இவற்றைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். அவர்கள் சுயநலமொன்றே குறிக்கோளாக வைத்திருப்பின் எமது போராட்டம் பிசு பிசுத்துப் போய்விடும். ஆலைகளுக்கும் சாலைகளுக்கும் ஆசைப்பட்டு அடிப்படை உரிமைகளைத் தவறவிட்டு விடுவோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இதுவே எனது பிரார்த்தனை. எமது மக்களுக்கு நாம் செய்யவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. தற்போது பொருளாதார ரீதியாகப் பல செயற்திட்டங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளேன். நான் அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பெருவாரியான மக்கள் விரும்புவதை நான் அறிவேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்களிடம் இருந்து இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. எனது பயணம் தொடரவேண்டும் என்பது அவன் சித்தமும் மக்கள் விருப்பமும் போலும். இந்தப் பின்னணியில் நான் என்ன செய்ய? மக்கள் கருத்தும் மகேஸ்வரனின் கருத்துக்களுமே முக்கியம். கட்சிகளின் அனுமதி பெறாத கரவான கருத்துக்களைக் கொண்டோரின் கருத்துக்களைக் கேட்டுக் கலவரம் கொள்ளத் தேவையில்லை?ஜீ.ஜீ பொன்னம்பலம் அவர்கள் இரத்தினபுரி கிரிமினல் வழக்கொன்றில் ஆஜராகி குற்றம் சாட்டப்பட்டவரை அவர் விடுவித்துக் கொடுத்தார். உடனே விடுதலையான அந்த நபர் ஜீ.ஜீயிடம் சென்று “சேர்”! இனி எந்த வழக்கு வந்தாலும் உங்களிடமே நான் அதைக் கொண்டு வருவேன்” என்று மகிழ்ச்சியாகக் கூறினார். ஜீ.ஜீக்கு இது பிடிக்கவில்லை. “என்ன சொன்னாய் நீ? எனக்கு நீ வழக்கு கொண்டு வருவாயோ? எடே! வழக்குகள் என்னைத் தேடி வருமடா! தேடி வரும்” என்றார். ஆகவே பதவிகள் வருவதாக இருந்தால் அவை தேடி வருவன. உள்ளூராட்சியில் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு என்னையே காரணம் காட்டுகின்றார்கள். சிலர் தம்மைத் தாமே கண்ணாடியில் பார்த்துக் காரணங்களைக் கண்டு பிடிக்காமல் என்னை வைகின்றார்கள். ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சியிடம் இருந்து எனக்கு அழைப்பு வரக் கூடிய சாத்தியம் இல்லை. எனவே மக்கள் நன்மை கருதி கொள்கை ரீதியாக எம்முடன் உடன்படும் வேறு ஒரு கட்சிக்கூடாகத் தேர்தலில் நிற்கலாம். ஆனால் கடந்த கால அனுபவங்களின் அடிப்படையிலும் மூலோபாய ரீதியாகவும் நடைமுறை அடிப்படையிலும் அவ்வாறு நிற்பதால் பல பிரச்சினைகள் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. புதிய கட்சி ஒன்றை தொடங்குமாறு பலரும் ஆலோசனை வழங்கி வருகின்றார்கள். கொள்கை ரீதியாக உடன்படும் அனைவருடனும் கூட்டணி அமைத்துப் போட்டியிடலாம் என்கின்றார்கள். அதற்குரிய காலம் கனிந்து விட்டதோ நான் அறியேன். எமது அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான பயணப்பாதையைத் தனிநபர்கள் தீர்மானிக்காமல் அறிவு ஜீவிகளின் பங்களிப்புடன் ஒரு நிறுவன மயப்படுத்தப்பட்ட அரசியல் செயற்பாட்டை இதுவரை காலமும் முன்னெடுத்திருப்போமானால் எம்மிடையே பிளவுகள் ஏற்பட்டிருந்திருக்காது, தெற்கில் எவர் வரப்போகின்றார் என்ன நடக்கபோகின்றது என்ற மனக்கிலேசங்களுக்கு உள்ளாக வேண்டியிருந்திருக்காது. நாம் தொடர்ந்தும் ஏமாற்றப்படும் இனமாக இருக்கவேண்டி வந்திருக்காது. எமது பிரதேசங்கள் தொடர்ந்தும் திட்டமிட்ட குடியேற்றங்களால் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்காது. திட்டங்களுக்கு ஏற்ப நிறுவனமயப்படுத்தப்பட்ட மற்றும் ஒழுக்கம் சார்ந்த ஒரு அரசியலை மேற்கொண்டு எமது அபிலாஷைகளை வென்றெடுக்க சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள், சமூகவியலாளர்கள், புத்திஜீவிகள், மகளிர், இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டும்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்

10 ஏப்ரல் 2018

சென்னை அண்ணாசாலையில் பிரமாண்ட புரட்சி... அணி அணியாக பல்லாயிரம் பேர் கைது!

Severe protest occurs in Anna Salai: various organisations opposes IPL ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் மறியல் போராட்டம் என அணி அணியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், கருணாஸ், அமீர் , தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.காவிரி வாரியம் தொடர்பான பிரச்சினை கொழுந்து விட்டு எரியும் நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு அனுமதி கூடாது என்று கோரிக்கை எழுந்தது. எனினும் திட்டமிட்டபடி போட்டிகள் நடப்பதற்கான நடவடிக்கைகள் செய்யப்பட்டு வருகின்றன.இதையடுத்து ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா சாலை முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்டிபிஐ, நாம் தமிழர் கட்சியினர் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சென்னை அண்ணா சாலையில் மாற்றுத் திறனாளிகள் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு மறியல் போராட்டம் நடத்த வருகின்றனர். அண்ணா சாலையிலிருந்து கிரிக்கெட் மைதானம் செல்லும் பாதை வரை போராட்டங்கள் நடைபெறுகின்றன.ரசிகர்களுக்கு 6 மணி வரை மட்டுமே மைதானத்துக்குள் அனுமதி என்பதால் அவர்கள் மைதானத்தை நோக்கி வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. மேலும் அவர்களுக்கு வாலாஜா சாலை வழியாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.அண்ணா சாலையில் அணி அணியாக திரளும் கட்சிகள், இயக்கங்களால் அண்ணாசாலை, வாலஜா சாலை, சேப்பாக்கம் போர்க்களமாக காட்சியளிக்கிறது. இதில் அணி அணியாக கைது நடவடிக்கைகளும் நடத்தப்படுகின்றன.ரஜினி ரசிகர்களும் ஐபிஎல்லு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.ரசிகர்களுக்கு கருப்பு பேட்ஜை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றனர். மோடியின் உருவபொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் ஐபிஎல் போட்டி டிக்கெட்டுகளும் எரிக்கப்பட்டன. அண்ணா சாலையின் 4 புறங்களில் இருந்தும் போராட்டக்காரர்கள் குவிவதால் போலீஸார் திணறி வருகின்றனர்.ரசிகர்கள் யார் போராட்டக்காரர்கள் யார் என்று தெரியாமல் போலீஸார் உள்ளனர். சீமான், கருணாஸ் , சினிமா இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான் உள்ளிட்ட போராட்டத்தில் நடத்தினர். அப்போது தடுப்புகளை தாண்டி சென்ற போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. இந்நிலையில் சீமான், கருணாஸ் , சினிமா இயக்குநர்கள் வெற்றிமாறன், பாரதிராஜா, அமீர், தங்கர்பச்சான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

07 ஏப்ரல் 2018

கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் பொருத்தமான நேரத்தில் கொண்டுவந்த தீர்மானம்!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்கள் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் முன் வைத்த தீர்மானமான மாற்று வழிவகைகளை நடைமுறைப்படுத்துமுன் புகையிலைக்கான தடையை அமுல்படுத்தக்கூடாது எனும் கோரிக்கை மிகவும் வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.இன்றைக்கு பலவித போதைப் பொருட்களை எமது தேசத்தினுள் புகுத்தியுள்ள இந்த அரசானது தமிழ் மக்களது குறிப்பாக விவசாயிகளது பொருளாதாரத்தையும் சிதைக்கும் பல முன்னகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.இவற்றை முறியடிக்கும் விதமாக,இன்றைய காலகட்டத்தில் மக்கள் நலன்சார்ந்த பல விடையங்களை கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஊடாக நிறைவேற்ற பாடுபடுவார் என்ற நம்பிக்கையை  அவரது தொகுதி மக்கள் கொண்டிருக்கிறார்கள்.எந்த ஒரு பதவியில் இல்லாதபோதும் மக்கள் நலப்பணிகளை தமது சொந்த செலவில் ஆற்றி வந்தவர் கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் என்பதும் சுட்டிக்காட்டத் தக்கது.அவர் கொண்டு வந்த தீர்மானம் ஊர்காவற்றுறை பிரதேச சபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருப்பது மிகவும் பாராட்டத்தக்கதாக்கும்.

02 ஏப்ரல் 2018

கல்முனையின் உதவி மேயராக கூட்டணியின் காத்தமுத்து கணேஸ் தெரிவு!


கல்முனை மாநகர சபையின் முதல்வராக, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.றகீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. அதில் புதிய மேயர் தெரிவுக்கான பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் முதல்வராக, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.றகீப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்முனை மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது. அதில் புதிய மேயர் தெரிவுக்கான பகிரங்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.ஏ.றகீப், தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த ஹென்றி மகேந்திரன் ஆகியோரது பெயர்கள் வாக்கெடுப்புக்கு பிரேரிக்கப்பட்டது. வாக்கெடுப்பில் 31 வாக்களித்தனர். 22 பேர் றகீப்புக்கும், ஹென்றி மகேந்திரனுக்கு 7 பேரும் வாக்களித்தனர். இருவர் வாக்களிக்கவில்லை. வாக்குகளின் அடிப்படையில் புதிய மேயராக எம்.ஏ.றகீப் தெரிவு செய்யப்பட்டார். உப மேயராக மூவரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டன. அதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் கந்தசாமி சிவலிங்கம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஜி.எம்.முகித், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் காத்தமுத்து கணேஸ் ஆகியோரது பெயர்கள் வாக்கெடுப்புக்கு விடப்பட்டன. அதில் காத்தமுத்து கணேஸ் 15 வாக்குகளைப் பெற்று பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டார். ஏனைய இருவரும் தலா 7 வாக்குகள் பெற்றுக் கொண்டனர்.

01 ஏப்ரல் 2018

கரவெட்டி, வவுனியா வடக்கில் கூட்டமைப்புடன் இணைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இணக்கம்!

கர­வெட்டி மற்­றும் வவு­னியா வடக்­குப் பிரதேச சபை­க­ளில் சிங்களக் கட்­சி­க­ள் ஆட்சியமைப்பதைத் தடுப்பதற்காக - இந்த இரண்டு சபை­க­ளி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைப்­ப­தற்கு, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி ஆத­ரவு வழங்­கும் என்று கூறப்படுகிறது.‘தமி­ழர் மண்­ணில் பேரி­ன­வாத கட்­சி­கள் ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு ஒரு போதும் இட­ம­ளிக்­க­மாட்­டோம். அவ்வா­றான சூழல் ஏதா­வது சபை­க­ளில் உரு­வா­னால் அந்த இடத்தில் தமி­ழர்­கள் ஆட்சி அமைப்­பதற்கே ஆத­ர­வ­ளிப்­போம். அது ஒரு­வேளை கூட்­ட­மைப்பாக இருந்­தா­லும் தமிழ்த் தேசத்­தின் நலன் கருதி ஆதரவ­ளிப்­போம்’ என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் பேச்­சா­ளர் வி.மணி­வண்­ணன் தெரிவித்­துள்­ளார்.யாழ்ப்­பா­ணத்­தின் கர­வெட்டி பிர­தேச சபை­யில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு 9 ஆச­னங்­க­ளும், தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்­கும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் தலா 7 ஆசனங்­க­ளும், ஈழ மக்­கள் ஜன­நா­ய­கக் கட்சி, தமி­ழர் விடு­த­லைக் கூட்­ட­ணிக்கு தலா 3 ஆச­னங்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்சிக்கு 2 ஆச­னங்­க­ளும் உள்­ளது. கர­வெட்டி பிர­தேச சபை­யில் ஆட்சி அமைப்­ப­தற்கு சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி முயற்­சித்து வரு­கின்­றது. ஏனைய கட்­சி­க­ளு­டன் பேச்­சுக்­க­ளை­யும் நடத்தி வரு­கின்­றது. இதே­வேளை, வவு­னியா மாவட்­டத்­தின் வவு­னியா வடக்­குப் பிர­தேச சபை­யின் 26 ஆச­னங்­க­ளில், 12 ஆசனங்­கள் சிங்­கள உறுப்­பி­னர்­க­ளு­டை­யது. எஞ்­சிய 14 ஆச­னங்­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்புக்கு 8 ஆச­னங்­க­ளும், தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி, தமிழ்த் தேசிய மக்­கள் முன்­ன­ணிக்கு தலா 3 ஆச­னங்­க­ளும் உள்­ளன.இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே, தெற்கு கட்­சி­கள் ஆட்சி அமைப்­பதை தடுப்ப­தற்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­ட­னும் இணைந்து ஆட்சி அமைப்­ப­தற்கு தயார் என்று தமிழ்த் தேசிய மக்­கள் முன்னணி தெரி­வித்­துள்­ளது.