பக்கங்கள்

31 டிசம்பர் 2010

இலங்கையை ஐ.நா.விசாரணை செய்யவேண்டும்!

இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை கொண்டுவருவதே அமெரிக்காவின் நோக்கமாகும். இதன் அடிப்படையிலேயே விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டது. இவ்வாறு அமெரிக்காவை தளமாகக் கொண்ட த பொஸ்ரன் குளோப் தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்களால் உலகில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே உள்ளார். 2009ஆம் ஆண்டு நிறைவடைந்த போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் தேவை என்ற கோரிக்கைகளை அவர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றார்.
இச்சந்தர்ப்பத்தில் மனித உரிமைகள் குறித்த அமெரிக்காவின் இரகசிய தகவல் பரிமாற்றமும், மனித உரிமைகள் கண்காணிப்பகம், அனைத்துலக மன்னிப்புச் சபை, அனைத்துலக நெருக்கடிகளுக்கான அமைப்பு போன்றவற்றின் கருத்துகளும் முக்கியமானவை. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இந்த மூன்று மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
தனது படையினரும் படை உயர் அதிகாரிகளும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை சொந்த அரசே விசாரணை செய்வது எங்கும் நிகழாதது என அமெரிக்காவின் கொழும்புத் தூதுவர் பற்றீசியா புட்னீஸ் அனுப்பிய தகவலில் தெரிவித்துள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்படட்ட மனித உரிமை மீறல்களில் படை அதிகாரிகளும், அரச அதிகாரிகளும் குற்றவாளிகள் எனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வும் அவரின் சகோதரர்களும் அதில் உள்ளடங்கியுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போரின் இறுதி நாட்களில் பல நூற்றுக் கணக்கான தமிழர்கள் கண்கள், கைகள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக்கப்பட்டுச் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதை காணொளிகளும், தப்பியவர்களின் சாட்சியங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
எனினும் இலங்கையின் அயல்நாடுகளான இந்தியா, சீனா போன்றன இந்த குற்றங்களுக்காக இலங்கை அரசு தண்டிக்கப்படுவதை விரும்பவில்லை. ஆனால் அமெரிக்காவின் இந்தத் தகவல் திரட்டலின் நோக்கம் இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணையை கொண்டு வருவதே என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரும்பிராயில் கடத்தப்பட்டவர் தொடர்பாக மனைவி முறைப்பாடு!

உரும்பிராய் பகுதியில் நேற்றுக் கடத்தப்பட்ட நபர் ஒரு தனியார் கல்விநிலைய ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.
30 வயமுடைய சண்முகநாதன் விக்கினேஸ்வரன் என அவரது மனைவி யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறையிட்டுள்ளார். திருமணமாகி ஒரு கிழமையே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது கணவர் இணுவிலில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்பித்துக் கொண்டிருந்ததாகவும் அங்கு சென்று கொண்டிருந்த வேளையிலேயே அவர் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் மனைவியின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுன்னாகத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கடத்தப்பட்டவரிகன் செருப்பு உள்ளிட்ட பொருட்களை பார்த்து விக்கினேஸ்வரனின் மனைவி தனது கணவரே இவர் என இன்று
முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

30 டிசம்பர் 2010

பாதிரியாருக்கு தனியான இடம்.

வவுனியா சிறைச்சாலையில் சக கைதிகளினால் தாக்குதலுக்குள்ளான பாதிரியாரை தனிமையாக தங்கவைக்க சிறைச்சாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னாரில் சிறுவர் இல்லமொன்றைச் சேர்ந்த இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றங் சாட்டப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்து பின்னர் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட போது பாதிரியார் மீது சக கைதிகளினால் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த பாதிரியார் சிறைச்சாலையில் தனிமையாக தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய அதிகாரி தெரிவிக்கின்றார்.
பாதிரியார் மீது தாக்குதல் மேற்கொண்ட மற்றும் சிறைச்சாலையில் பிரச்சினைகள் இடம்பெற காரணமாக இருந்த 11 கைதிகளும் இன்று மாலை 5 மணியளவில் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து தற்போது வவுனியா சிறைச்சாலையில் 72 கைதிகள் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

29 டிசம்பர் 2010

கலாச்சார சீர்கேட்டை ஆபாச இணையங்கள் மூலம் ஏற்படுத்தும் ஒட்டுக்குழுக்கள்!

புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க ஒட்டுக்குழுவினரின் ஆயுதமாக பாலியல் ஆபாச இணையதளங்கள்
தமிழீழம்தாயகத்தில் தமிழர்களின் பண்பாட்டை அழித்து சமூகச்சீர்கேடுகளை ஏற்படுத்திவரும் ஒட்டுக்குழுவினர் புலத்திலுள்ள தமிழர்களின் மனதை சிதைக்க பாலியல் செய்திகளை முதன்மைப்படுத்தி இணைய ஊடகங்களை ஆயுதமாக பயன்படுத்திவருகின்றனர்.
மேலும் தமிழ் பேசும் உறவுகளான ஈழத்தமிழர்கள், தமிழகத்தமிழர்கள் மற்றும் இசுலாமிய தமிழர்களுக்குள் பிளவினை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுவருகின்றனர்.
வெண்ணெய்த்திருடனின் (கண்ணன்) பெயரைக்கொண்ட 2 நபர் புலத்தில் இத்தகைய செயல்பாட்டில் செயல்பட்டுவருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
ஈழ ஆதரவு இணையதளங்களோடு தொடர்புகொண்டு நட்புடன் பழகி அவ் இணையங்களுக்கு தொழிற்நுட்ப பிரச்சினைகளை திட்டமிட்டு உருவாக்கி தான் சரி செய்து தருவதாகக்கூறி அத்தளங்களை தங்களின் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்கின்றனர்.
அக்காலத்தில் நம் சோழ அரசன் பொன்னியின் செல்வன் அருண்மொழிவர்மனுக்கு திட்டமிட்டு நோயினை ஏற்படுத்திய வெண்ணெய்த்திருடனின் வாரிசுகள் பின்னர் அவர்களே நோயினை குணப்படுத்தி நட்புடன் பழகி தமிழகத்தின் பண்பாட்டினை அழித்து ஆரியப்பண்பாட்டினை பரப்பி தமிழர்களை சாதியால் பிரித்து அடிமையாக்கினர்.
குஞ்சரமல்லன் என்ற தூய தமிழ்பெயரை இயற்பெயராக கொண்ட பொன்னியின் செல்வன் தன் பெயரை வெண்ணெய்த்திருடர் (கண்ணன்) கூட்டத்தின் சதியால் “ராஜராஜசோழன்” என்ற சமஸ்கிருத பெயராக மாற்றியபின்னர் தமிழ்ச்சமூகத்திற்கு சாவுமணி அடிக்கப்பட்டது.
இதே போன்ற திட்டத்தில் ஒட்டுக்குழுவினர் தற்போது செயல்பட்டுவருகின்றனர். தங்கள் தொடர்புக்கு வராத தளங்கள் பற்றி பொய்யான செய்திகளை பரப்பி அவதூறுகளை கிளப்பியும் வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னதாக அனைத்துத்தமிழர்களும் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளும் கருத்துக்கள தளத்திற்கும் ஈழ ஆதரவு ஊடகங்களுக்கும் மோதலை உருவாக்கி வழக்குபோடும் நிலையை உருவாக்கியவர்கள் இவ் ஒட்டுக்குழுவினரே.
இவ் ஒட்டுக்குழுவினரால் நம் தமிழினத்தின் பல பதிவுகளை உள்ளடக்கிய அக்கருத்துக்கள தளமானது நிறுத்தப்படும் நிலைக்கும் சென்று உலகத்தமிழர்களின் வேண்டுகோளால் மறுபடி தொடர்ச்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.

வவுனியாவைச்சேர்ந்த பொறியியலாளர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை!

இலங்கை வவுனியாவைச் சோ்ந்த தமிழ் பொறியியலாளர் ஒருவர் அமெரிக்கா கலிபோர்னியா மாநகரில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ளதாக வவுனியாவில் உள்ள அவரது பெற்றோர்களுக்கு தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கொலையுண்டவர் 25 வயதையுடைய அமரசிங்கம் சுஜன் என தெரியவந்துள்ளது. இவர் கடந்த வருடம் புலமைப்பரிசில் பெற்று அமெரிக்கா சென்றிருந்தூர்.
இவர் பணியாற்றும் வேலைத்தளத்தில் இரவுக் கடமையாற்றிய வேளையில் அங்கு வந்துள்ள கொள்ளையர்களினாலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக இவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பொறியியலாளரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு தூதரகங்களினூடாக முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

28 டிசம்பர் 2010

மக்களை அடிமைகளாக வைத்திருக்கவே கொலைகள் இடம்பெறுகின்றன!

யாழ். குடாநாட்டு மக்களை தொடர்ந்து அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கிலேயே தொடர் கொலைகளும், கொள்ளைகளும் திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என யாழ். மாவட்ட எம்.பி. எஸ்.சிறிதரன் இன்று குற்றம் சாட்டினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்,நாட்டில் சமாதானம், அமைதி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கும் அரசு இராணுவ முகாம்களையும், சோதனைச் சாவடிகளையும் அகற்றுவதற்குப் பதிலாக அவற்றை தொடர்ந்து இயங்கச் செய்து தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருக்கும் நோக்கில் இதுபோன்ற அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விடுகின்றது.மதத் தலைவர்களும் புத்திஜீவிகளும் படுகொலை செய்யப்படுகின்றனர். யாழ். குடாநாட்டில் இராணுவத்தினரும், இராணுவத்துடன் இணைந்து செயற்படும் குழுவினருமே ஆயுதங்களை வைத்திருக்கின்றனர்.
இக்கொலைகளுக்கும், கொள்ளைகளுக்கும் இவர்களே பொறுப்புக்கூறவேண்டும். 1995ஆம் ஆண்டு முதல் யாழ். குடாநாடு இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது என்று அவர் தெரிவித்தார்.

27 டிசம்பர் 2010

வலிகாமம் பிரதி கல்விப்பணிப்பாளர் படுகொலை!

வலிகாமம் வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் நேற்று இரவு அவரது வீட்டில் வைத்து இனந்தெரியாத ஆயுததாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் உரும்பிராய் மேற்கு மூன்று கோவிலடியைச் சேர்ந்த மார்க்கண்டு சிவலிங்கம் வயது 52 என்பவரே சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
நேற்று மாலை வான் ஒன்றில் வந்த ஆயுததாரிகள் அவரினைச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.
எனினும் அவரது மகளின் நகைகளை அங்கு வந்தவர்கள் கேட்டதாகவும் மகள் கூக்குரலிட்டபோது அங்கு வந்த தந்தையை ஆயுததாரிகள் சுட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைக் காலமாக திருடர்கள் என்ற போர்வையில் ஆயுததாரிகள் அவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டு தங்களின் முயற்சிகளை திசைதிருப்பும் புதிய உத்தியை கையாண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான முயற்சியிலேயே அண்மையில் சங்கானையில் ஆலய குருக்களும் அவரது புதல்வர்களும் சுடப்பட்டதாக தெரியவருகிறது.

26 டிசம்பர் 2010

தனி ஈழத்தை வென்றே தீருவோம்!-செந்தமிழன் சீமான்.

விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வாறு நாம் தமிழர் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற்ற பெரியார்-எம்.ஜி.ஆர். நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் சீமான் தெரிவித்தார்.
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நேற்று இரவு நடைபெற்ற இக்கூட்டத்தில் திரைப்பட இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைவருமான செந்தமிழன் சீமான் பேசியதாவது:
மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை வெளிக் கொண்டு வர போராடியவர் பெரியார். அவரது கருத்துக்களை சினிமா பாடல்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர் எம்.ஜி.ஆர்.
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதுன்னு விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க. உந்தன் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க”, திட்டம் போட்டு திருடுகிற கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது” என்பது போன்ற பாடல்கள் மூலம் நல்ல கருத்துக்களை எடுத்து சொன்னார் எம்.ஜி.ஆர்.
ஈழத் தமிழர்களுக்கு எம்.ஜி.ஆர். போல உதவி செய்த தலைவர்கள் யாரும் கிடையாது.
கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் செத்து மடிகிறார்கள். தமிழக மீனவர்களை சிங்கள இராணுவம் கொன்று குவிக்கிறது. இனிமேலும் தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்கள மாணவர்களை அடிப்போம் என்று பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் என்னை கைது செய்தீர்கள். 5 மாதம் சிறையில் அடைத்தீர்கள். இதற்கெல்லாம் நான் அஞ்ச மாட்டேன்.
1 லட்சம் துப்பாக்கிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். சிறையில் இருந்து எனது தம்பிமார்கள் முருகன், பேரறிவாளன், சாந்தன், தங்கை நளினி ஆகியோர் என்னை சந்தித்து விடக் கூடாது என்பதில் சிறைத்துறை அதிகாரிகள் கவனத்துடன் இருந்தனர். ஓடும் தண்ணீரை 5 மாதம் தேக்கி வைத்து விட்டு பின்னர் திறந்து விட்டால் அது காட்டாற்று வெள்ளமாக ஓடும்.
அதைப் போல நானும் வேகத்துடன் செயல்படுவேன். தற்போது எனது தோளில் இரண்டு சுமைகள் உள்ளன. ஒன்று ஈழ விடுதலை, இன்னொன்று சிறையில் இருக்கும் எனது தம்பிமார்களின் விடுதலை. இந்த இரண்டும் நடக்கும் வரை நான் ஓயமாட்டேன்.
தனி ஈழத்தை வென்றே தீருவோம்.
இலங்கைக்கு சென்ற இந்திய அமைதிப்படையில் தொடங்கி ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது வரை காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு. ஈழத் தமிழர்கள் மீது காங்கிரசுக்கு அக்கறை இல்லை. எனவே காங்கிரசை வீழ்த்துவதே எங்கள் லட்சியம். அது வரை சீமான் ஓயமாட்டான்.
இன்று காங்கிரஸ் அரசில் ஊழல் மலிந்து விட்டது. ஸ்பெக்ட்ரம் முறைகேடு, காமன்வெல்த் ஊழல், இதற்கு முன்பு போபர்ஸ் ஊழல் என காங்கிரஸ் கட்சியின் ஊழலை அடுக்கி கொண்டே செல்லலாம். இவைகளில் இருந்து தப்பிப்பதற்காக விடுதலைப்புலிகள் மீது தற்போது வீண்பழி சுமத்த தொடங்கி உள்ளனர்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் என்பது உண்மையா? விடுதலைப்புலிகளால் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்பது உண்மையா? விடுதலைப்புலிகள் ஒரு போதும் கோழைகளை கொல்ல மாட்டார்கள். விடுதலைப்புலிகளைப் பற்றி நான் பேசினால், சீமான் கோடி, கோடியாக பணம் வாங்கி விட்டார் என்று கூறுகிறார்கள்.
விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கியிருப்பதாகவும், அந்த பணத்தை பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். இவ்வளவு பணம் என்னிடம் இருந்தால் அதனை ராஜபக்சேயிடம் கொடுத்து எங்கள் பகுதியை எழுதி வாங்கி இருக்க மாட்டோமா?
நாங்கள் தமிழ் நாட்டில் ஆட்சி மாற்றத்துக்காக போராடவில்லை. அரசியல் மாற்றத்துக்காக போராடுகிறோம். நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல போராளிகள், சீர்திருத்தவாதிகள் அல்ல, லட்சியவாதிகள். எனது பேச்சை கேட்பதற்காக என் முன்னால் கூடியிருக்கும் நீங்கள் எல்லாம் எனது பின்னால் அணிவகுத்து வாருங்கள்.
பிரபாகரனின் தம்பி என்ற உரிமையில் உங்களிடம் இதனை கேட்கிறேன். இந்தியாவுக்கு என்று இறையாண்மை, பண்பாடு எதுவும் இல்லை. தமிழ், மலையாளம், தெலுங்கு என பலமொழிகளின் பண்பாடே இந்திய பண்பாடு. தமிழுக்காக உயிரை இழக்கவும் தயாராக உள்ளேன்'' இவ்வாறு சீமான் பேசினார்.
இக் கூட்டத்தில் புகழேந்தி தங்கராஜ், திரைப்பட தயாரிப்பாளர் கோட்டை குமார், சாகுல் அமீது, இயக்குனர் செல்வபாரதி, ராஜீவ்காந்தி, ஆ.சி.ராசா, அமுதா நம்பி, ரேவதி நாகராஜன், வக்கீல் கயல்விழி, அன்புத்தென்னரசன் உட்பட பலர் பேசினர்.
இதற்கான ஏற்பாடுகளை சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள் தங்கராசு, அதியமான், அமுதாநம்பி ஆகியோர் செய்திருந்தனர்.

உண்ணாவிரதம் இருந்தவர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்!

இறுதி யுத்தம் தமிழீழத்தில் இறுக்கம் பெற்றிருந்த காலத்தில் உன்னாவிரத்ததில் ஈடுபட்டிருந்த சிவராஜா சுகந்தன், 26 என்பவரை பிரித்தானியாவின் குடி வரவு குடியகல்வு பிரிவினர் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர் .750 பேர் இவரை நாடு கடத்த வேண்டாம் என கையெழுத்து வைத்து கொடுத்த போதும் அதனை ஏற்று கொள்ளாமல் இவர் நாடுகடத்த பட்டுள்ளார்.
இவர் இலங்கைக்கு நாடுகடத்த படும் நிலையில் அங்கு சிங்கள படைகளினால் சித்திர வதைகளிற்கு உள்ளகக படும் அதேவேளை இவரது உயிருக்கு ஆபத்துநேரும் எனவும் எதிர்பார்க்க படுகின்றது.
டிசம்பர் 7 திகதி இவர்Trinity Road Police Station குறித்த காவல் நிலையத்தில் கையெழுத்து வைக்க சென்ற போதே இவரை போலீசார் கைது செய்து நாடுகடத்தியுள்ளனர். இவருக்கு இரேண்டுவயது மற்றும் நான்கு வயதில் இரு குழந்தைகள் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

24 டிசம்பர் 2010

யாழில் நகைக்கடை உரிமையாளர்கள் பகிஷ்கரிப்பு!

யாழ்ப்பாண நகைக்கடை உரிமையாளர்களுக்கும் இலங்கை காவற்துறையினருக்கும் இடையிலான நீண்டகால முறுகல் நிலை இன்று முற்றியது. இதனால் இன்றைய தினம் யாழ் நகரிலுள்ள கணிசமான நகைக்கடைகள் தமது வர்த்தக நிலையங்களை மூடி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் இருந்து வந்ததாகக் கூறப்படும் விசேட காவற்துறைப் பிரிவொன்று கொள்ளையர்களிடம் இருந்து நகைகளைக் கொள்வனவு செய்ததாக, 3 நகைக்கடை வர்த்தகர்களை இன்று கைது செய்தது. இந்தக் கைது அடாத்தாக இடம்பெற்றதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தக் கைதின் போது கொள்ளையர் ஒருவர் அழைத்து வரப்பட்டு இந்த நகைகள் யாழ்ப்பாண நகைக்கடை உரிமையாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டதாக காவற்துறை குற்றம் சாட்டியது. எனினும் தாங்கள் இந்த நகைகளைக் கொள்வனவு செய்யும் போது வழமையான நடைமுறைகளின் கீழேயே இந்தக் கொள்வனவைச் செய்திருந்ததாகவும் உரிய ஆளடையாள அட்டை விபரங்கள் பெறப்பட்டிருந்ததாகவும் நகைக்கடை உரிமையாளர்கள் கூறினர். கைது செய்யப்பட்ட நகைக்கடை உரிமையர்கள் மூவரில் ஒருவர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக வவுனியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
முன்னதாக நகைகளை விற்றதாகக் கூறப்படுகின்ற நபர் கூட கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் காவற்துறையினர் அடாத்தாக நடந்ததாக கூறி ஏற்கனவே நீண்டகாலமாக காவற்துறைத்தரப்பு நகைக்கடை உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கெடுபிடிகளைக் காட்டி வருவதாகவும் அவர்களுக்கான கப்பம் பெறும் நடவடிக்கைகளில் காவற்துறையினர் பின்னணியில் நின்று செயற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நகைக்கடை வர்த்தகர்களை இலக்கு வைத்து காவற்துறைத் தரப்பு தொடர்ச்சியாக நடத்தி வருகின்ற கெடுபிடிகள் மற்றும் அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபடும் காவற்துறைத்தரப்பின் செயற்பாடுகளைக் கண்டித்தே திடீரென இன்று அவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். தமது வர்த்தக் நிலையங்களை பகிஸ்கரிப்பிற்காக பூட்டி வைத்தனர். இது தொடர்பன ஊடகவிலாளர் மகாநாடொன்று யாழ் வணிகர் கழகத்தில் இடம்பெற்றது. இன ரீதியாக காவற்துறையினருக்கும் தமிழ் மக்களுக்கும் இடையே என்றுமே உறவுகள் ஏற்படச் சாத்தியம் இல்லை என வணிகர் கழகப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் காவற்துறை அதிகாரிகளுடன் வணிகர்கழக பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்தினர். இதனையடுத்து காவற்துறை வழங்கிய உறுதிமொழிகளை அடுத்து மதியத்துடன் போராட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்ட போதிலும் குழப்பமான சூழலே வணிகர்களிடையே காணப்படுகின்றது. ஏற்கனவே வணிகர்கள் கொழும்பிலிருந்து குற்றத்தடுப்பு காவற்துறையினரால் தொடர்ச்சியாக விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

18 டிசம்பர் 2010

கருணாநிதியின் அரவணைப்பில் இருந்த கருணா!பரபரப்பு தகவல்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா இலங்கை அரசின் உதவியுடன் பிரிந்து சென்று இலங்கை அரசினதும் இந்திய,தமிழக அரசின் ஆதரவுடனும் தமிழகத்தில் 2004 ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டுவரை தங்கியிருந்ததாக இலங்கை தொடர்பான பல இரகசிய தகவல்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸ் இணையம் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழீழ தேசிய விடுதலைப் போரை காட்டிக்கொடுத்து செத்த பிணமாக இருந்துவரும் கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து சென்ற போது இலங்கையில் இருப்பதற்கு பாதுகாப்பு இல்லையென்பதை உணர்ந்த இலங்கை இந்திய புலனாய்வு அதிகாரிகள் அவரை தமிழகத்தில் மேல் குறிப்பிட்ட இரு ஆண்டுகளாகவும் தங்கவைத்திருந்ததாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சிதைக்க வேண்டும் என்று இலங்கை அரசை விட அதிகமாக ஆசைப்பட்ட கருணாநிதி அவர்கள் இதை செய்துள்ளார் என்பதையிட்டு ஆச்சரியப்படுவதற்கில்லை என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஐ.நா.நிபுணர் குழுவை அனுமதிக்க முடியாதென்கிறார் விமல் வீரவன்ஸ.

ஐக்கிய நாடுகளின் நிபுணாகள் குழுவினை நாட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக சுமத்தப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தும் நோக்கில் நிபுணர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்தால் அதற்கு சந்தர்ப்பம் அளிக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனின் மூவர் அடங்கிய நிபுணர்கள் குழு எந்த வகையிலும் இலங்கைக்குள் பிரவேசிப்பதனை அனுமதிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த நிபுணர்கள் குழுவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அணி திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு கலைக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி அமைச்சர் விமல் வீரவன்ச சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலையீட்டில் இந்த உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.

17 டிசம்பர் 2010

படுகொலை உத்தரவுகளை சிங்கள அரச தலைமையே வழங்கியுள்ளது!

சரணடைந்த தமிழ் மக்களை கூட்டமாக படுகொலை செய்ததற்கான உத்தரவுகளை சிறீலங்கா அரசின் தலைமையே வழங்கியுள்ளது என்பதையே பிரித்தானியாவை தளமாகக் கொண்ட சனல் போஃர் தொலைக்காட்சி ஒளிபரப்பிய இரண்டாவது காணொளி உறுதிப்படுத்தியுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையின் ஆலோசனைக்குவுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு 15ம் திகதி அனுப்பிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
சனல் போஃர் செய்தி நிறுவனம் ஒளிபரப்பிய காணொளியில் சிறீலங்கா அரசிடம் சரணடைந்தவர்கள் கண்களும், கைகளும் கட்டப்பட்ட நிலையில், நிர்வாணமாக இழுத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கியுள்ளன.
அவர்களை படுகொலை செய்யும் இராணுவத்தினர் மகிழ்ச்சியாகவும், உறுதியுடனும் காணப்படுகின்றனர். எனவே இந்த படுகொலைக்கான உத்தரவுகள் மேலிடத்தில் இருந்தே சிறீலங்கா இராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதை அனுமானிக்க முடிகின்றது.
தாம் தண்டிக்கப்படமாட்டோம் என்ற மன உறுதியுடன் அவர்கள் படுகொலையில் ஈடுபடுவதை நாம் அவதானிக்க முடிகின்றது. முதலாவது காணொளியை பார்த்தபோது, அதனை ஊடகவியலாளர் ஒருவர் இரகசியமாக படம் பிடித்ததாகவே நாம் கருதினோம். ஆனால் இரண்டாவது படத்தை பார்த்தபோதே தம்மை படம் எடுக்கிறார்கள் என தெரிந்தும் படையினர் படுகொலைகளில் ஈடுபடுவதை காணமுடிகின்றது என அவர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆனைக்கோட்டையில் வீடொன்றினுள் புகுந்து கொள்ளை!

ஆனைக்கோட்டையிலுள்ள வீடொன்றினுள் நுழைந்த திருடர்கள் அங்கிருந்த சுமார் ரூ.மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர்.மானிப்பாய் வீதியில் ஆறுகால்மடச் சந்தியில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் வீட்டிற்குள் நுழைந்த 10க்கும் மேற்பட்ட திருடர்கள் கதவினைத் திறக்கும்படி வீட்டுக்காரர்களை மிரட்டிப் பின்னர் கதவின்மேல் காணப்பட்ட கண்ணாடிகளை அடித்து நொருக்கியுள்ளனர்.
இதனால் பயமுற்ற வீட்டுக்காரர் கதவினைத் திறக்க உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் வீட்டுக்காரர் அனைவரையும் வீட்டுக்குள் வைத்துப் பூட்டி விட்டு சிறுமி ஒருவரைத் தூக்கிச் சென்று நகைகள் இருக்கும் இடத்தினைக் காட்டும்படி மிரட்டியுள்ளனர். இதற்காக வீட்டின் அனைத்துப் பொருட்களையும் உடைத்தும் தூக்கியும் எறிந்துள்ளனர்.
பின்னர் அறையிலிருந்த ரூ. 3 இலட்சத்துக்கு மேற்பட்ட நகைகளையும் சைக்கிளையும் கொள்ளையடித்துச் சென்றனர். வீட்டில் கொள்ளையிடப்பட்டவேளை நன்றாக மழை பெய்து கொண்டிருந்ததனால் அக்கம் பக்கம் யாருக்கும் என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை. இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கே.கே.எஸ். வீதியில் இருக்கும் வீடு ஒன்றிற்கு வானில் வந்த கொள்ளையர்கள் வீட்டுக்காரர்களை கதவினைத் திறக்கும்படி மிரட்டியுள்ளனர். அவர்கள் உடனே அருகிலுள்ள பேராசிரியர் வீட்டிற்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருடர்கள் வந்து இருப்பதாகத் தகவல் கூறினர்.பேராசிரியர் பொலிஸ் நிலையத்திற்குத் தொடர்பு கொண்டு தகவல் வழங்கி மீண்டும் இவர்களுக்குத் தகவல் வழங்க தொலைபேசியை அழைத்த வேளை வீட்டுக்காரர் உசாராகி விட்டதை உணர்ந்த கொள்ளையர்கள் கொள்ளையடிப்பதனை விட்டு விட்டுச் சென்று விட்ட னர்.
இப்படியான அடுத்தடுத்த கொள்ளை நடவடிக்கைகளினால் யாழ்ப்பாண மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.

16 டிசம்பர் 2010

நம்பியாரை பதவியிலிருந்து தூக்குமாறு பிரிட்டன் கோரிக்கை!

இலங்கையில் இறுதிப்போரின் போது இந்திய, சீன, இலங்கை நலன்களுக்கு ஏற்ப செயற்பட்டமையினால் அங்கு பல ஆயிரம் உயிர்களை காப்பாற்ற முடியாமல் போனது. இந்த வேலையினை சரிவரச்செய்ய முடியாத நம்பியாரை இப்போ பர்மாவிற்கு பான் கி மூன் நியமித்துள்ளார்.
ஈழத்தமிழர்க்கு துரோகம் விளைவித்தது போலவே பர்மாவிலும் சிறுபான்மையினர்க்கும் சூகியின் ஆதரவாளர்களுக்கும் எதிராக நம்பியார் செயற்படுகின்றார் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த சூழலில் பர்மாவிற்கான பான்கிமூனின் தூதுவர் பதவியில் இருந்து நம்பியாரை அகற்றுமாரு பிரிட்டன் கோரியுள்ளது. இவர் ஏற்கனவே இலங்கைவிடயத்தில் சரியாக செயற்படவில்லை என்வும் பிரிட்டன் சுட்டிக்காட்டியுள்ளது.

புலிகள் மீது தடையை நீடிக்க இந்திய மத்திய மாநில அரசுகள் சதி!

விடுதலைப்புலிகள் மீதான தடையினை நீடிப்பதற்கு ஈழத் தமிழ் தேசியத்திற்கு எதிரான இந்திய ஊடகங்களும் சில சக்திகளும் தயாராகியுள்ளதாக தெரியவருகின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஆகியோரை இலக்குவைத்து பாரிய தாக்குதலொன்றை மேற்கொள்ள விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் இன்று மாலை செய்தி வெளியிட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது.
இந்தியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தடை நீடிப்பு வழக்கில் மத்திய அரசுக்கு 3 வாரத்தில் பதில் அளிக்குமாறு இந்திய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை தெரிந்ததே.தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு தடை நீடிக்கப்பட்டதை மத்திய தீர்ப்பாயம் உறுதி செய்திருந்தது. அந்த தீர்ப்பாய உத்தரவை ரத்து செய்யக்கோரும் வைகோவின் மனு மீது விசாரணை நடந்தது. தமது மனுவை தீர்ப்பாயம் நிராகரித்தது சரியல்ல என்று நீதிமன்றத்தில் வைகோ வாதிட்டிருந்தார்.
வைகோ மனு மீதான வழக்கில் 3 வாரத்தில் பதில் அளிக்க இந்திய உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
மத்திய அரசு புலிகளுக்குச் சாதகமான முடிவினை எடுத்துவிடலாம் என்ற அச்சம் காரணமாக
இன்று மாலை விடுதலைப் புலிகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி தடை நீடிப்புத் தீர்ப்பினை வலுப்படுத்தும் நோக்கானதென்று நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட குருக்கள் மரணம்!

யாழ் சங்கானை பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு இனந்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் பூசகர்கள் மூவர் படுகாயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சங்கானை இலுப்பைத்தாழ்வு முருகமூர்த்தி ஆலயப் பிரதமகுரு நித்தியானந்த குருக்கள் (வயது 55) நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் முகமூடி அணிந்த இனந்தெரியாத ஆயுததாரிகள் குருவின் வீட்டினுள் புகுந்து அவரையும் அவரது இரு மகன்மாரையும் சுட்டும் வெட்டியும் காயப்படுத்தியதோடு, மோட்டார் சைக்கிளையும் இரண்டு மோதிரங்களையும் கைச்சங்கிலியையும் பறித்துவிட்டுத் தப்பிச்சென்றனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மூவரும் யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையிலேயே நேற்று முருகமூர்த்தி ஆலயப் பிரதமகுரு சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த பிரதம குருவின் மகன்மாரான சிவானந்தசர்மா(வயது 32), ஜெகானந்தசர்மா(வயது 26) ஆகியோர் தொடர்ந்தும் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூட்டு சம்பவத்திற்கு உதவிய துப்பாக்கி இராணுவத்தினருடையது என்பது தெரியவந்துள்ளது.
அதுபற்றி மேலும் தெரியவந்துள்ளதாவது,
சூடு நடத்தியவர்களுக்கு ரி56 துப்பாக்கிகளைக் கொடுத்து உதவிய படையினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜென ரல் ஹத்துருசிங்க பொலிஸாரிடம் வலியுறுத்திக் கேட்டுள்ளார்.
மானிப்பாயில் பணியாற்றும் கோப்ரல் ஒருவரே சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட ரி56 துப்பாக்கிகளை சந்தேக நபர்களுக்கு வழங்கி உள்ளார். அவர் சிகரெட் மற்றும் கஞ்சாவுக்கு அடிமையானவர். மற்றொரு சிப்பாயும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்' என்றார் ஜெனரல் ஹத்துருசிங்க.

15 டிசம்பர் 2010

இந்திய முக்கிய பிரமுகர்கள் சிலரின் வீடுகளில் CPI முற்றுகை!

இந்தியாவின் தலைநகர் புதுடெல்கி மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா தழுவி முக்கிய பிரமுகர்களின் வீடுகள் சீ.பீ.ஐ காவற்துறையினரின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளதாக எமது விசேட செய்தியாளர் தமிழகத்தில் இருந்து தெரிவித்துள்ளார்.
முக்கிய ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்களின் வீடுகளில் சீ.பீ.ஐ புலனாய்வுப் பிரிவினர் திடீர் தேடுதலை நடத்திக் கொண்டு இருப்பதாக எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய பிரமுகர் ஜெகத் கஸ்பார், நக்கீரன் துணை ஆசிரியர் காமராஜ், ராஜ்ரீவியின் ஊடகவியலாளர் ஒருவரது வீடு, மற்றும் முன்னாள் அமைச்சர் ராசாவின் உறவினர்கள் வீடுகள் உள்ளிட்ட 27 பேரது வீடுகள் சீ.பீ.ஐ புலனாய்வுப் பிரிவினரின் முற்றுகைக்கு உள்ளாகியிருக்கிறது.

14 டிசம்பர் 2010

சிங்கள அமைச்சரை விரட்டியடித்த கர்நாடக மக்களுக்கு வாழ்த்து!

கர்நாடக மாநிலம் பெங்களுரில் நடைபெற்றுவரும் ஆயுர்வேத இலவச மருத்துவ முகாமில் கலந்து கொள்ளவிருந்த இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரான சாலிந்த திசாநாயக்கவை வரவிடாமல் போராட்டம் நடாத்தி விரட்டியடித்த கன்னட வாழ் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்து நாம் தமிழர் கட்சி. தலைவர் சீமான் கடிதம் அனுப்பியுள்ளார்.
கடிதத்தின் விபரம் வருமாறு:
கன்னடவாழ் தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்.
கடந்த 10.12.2010 அன்று இனவெறி பிடித்த சிங்களக் கொலைகார அமைச்சரைத், தமிழுணர்வு மேலோங்கிநிற்கும் நம் மண்ணில் நடமாட விடாமல் ஓட ஓட விரட்டியடித்ததால் சிறை சென்று மீண்ட நாம் தமிழர் கட்சியின் எம் உயிர்த் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும், தாய்மார்களுக்கும் ஏனைய தமிழ் அமைப்புகளுக்கும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இனிவரும் காலங்களில் இதுபோல், நம் இனம் காக்க,மொழி காக்க , மண் காக்க, ‘தமிழால் இணைவோம் – நாம் தமிழராய் எழுவோம்!’ என்றும் உரிமைக்குப் போராட வேண்டுமென்று கேட்டுக்கொள்வதுடன். தமிழின வரலாற்றில் எழுச்சிமிக்க இந்நிகழ்ச்சிக் குறிப்பு பதிவு செய்யப்படும். களமாடும் வேங்கைகளை உளமாரப் பாராட்டுகிறேன்,புரட்சி வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.
நன்றி
சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி.

13 டிசம்பர் 2010

நவாலியில் பெரும்சத்தத்துடன் வான் நோக்கி பறந்தது நீர்!


வயலில் தேங்கியிருந்த மழை நீர் திடீரெனப் பெருஞ் சத்தத்துடன் வான் நோக்கி மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தது. இதனைப் பார்த்த மக்கள் "சுனாமி” ஏற்பட்டு விட்டது என்று பதறி அடித்துக் கொண்டு ஓட்டம் எடுத்தனர். நவாலி மேற்குப் பகுதியில் நேற்று நண்பகல் நேரம் இந்த அச்சமூட்டும் சம்பவம் இடம்பெற்றது.
இது மினிச் சூறாவளியாக இருக்கலாம் என வளிமண்டல வியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதன் தெரிவித்தார்.
நவாலி மேற்கு களையோடை கண்ணகை அம்மன் ஆலயத்திற்கும் (பிட்டி அம்மன்) ஆம்பன் குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த அச்சுறுத்தும் இயற்கைச் சீற்றம் இடம்பெற்றது.
இதுபற்றி தெரியவருவதாவது:
நேற்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.50 மணியளவில், பெரும் உறிஞ்சு குழல் வைத்து உறிஞ்சுவது போன்ற போன்ற சத்தம் கேட்டது. வழக்கையாற்றுப் படுக்கைக்கு அருகில் இருந்த வயல் நிலங்களில் இருந்த நீர் திடீரென வான் நோக்கி மின்னல் வேகத்தில் சுழன்று பெருஞ் சுழலாக சீறிப் பாய்ந்தது. இதனால் வானத்துக்கும் நிலத்துக்கும் இடையில் கரும்புகை வடிவிலான ஒரு நூல் தொடுப்பு ஏற்பட்டது' என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
வானில் றொக்கெட் சென்றால் ஏற்படும் அடையாளம் போன்று அது இருந்தது' என்றும், சுமார் அரை மணி நேரம் இவ்வாறு தண்ணீர் வான் நோக்கி உறிஞ்சப்பட்டது எனவும் பிரதேசவாசிகள் கூறினர்.
சூறாவளி போன்று நீர் வான் நோக்கி இழுக்கப்பட்டதைக் கண்ட, வயல் நிலங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் பதற்றமடைந்து ஓட்டம் எடுத்தனர். அப்பகுதி வீடுகளில் இருந்தவர்களும் பயத்தில் வீதிகளுக்கு விரைந்தனர். சுனாமி ஏற்பட்டு விட்டதோ என்ற அச்சத்தில் மக்கள் இடம்பெயர்வதற்கும் ஆயத்தமாகினர்.
எனினும் துணிச்சல் மிக்க இளைஞர்கள் சிலர் தண்ணீர் வான் நோக்கி இழுக்கப்படுவதை அருகில் சென்று தமது கமெரா மொபைல் போன்கள் மூலமாகப் பதிவு செய்தனர்.
விடயம் காட்டுத் தீ போலப் பரவியதில் சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், கல்லுண்டாய் பகுதியில் கடல் உள்வாங்கிக் கொண்டதாகவும் வதந்திகள் பரவ ஆரம்பித்தன. கொழும்பில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் இது குறித்த விசாரிப்புக்களும் வந்தன.
இதற்கு முன்னர் ஒரு போதும் இவ்வாறான இயற்கைச் சீற்றங்கள் இப்பகுதியில் இடம்பெற்றதில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த விநோத இயற்கைச் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் அவதான நிலையப் பொறுப்பதிகாரி புஸ்பநாதனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் தெரிவித்ததாவது:
இவ்வாறான சம்பவம் சாதாரணமாகவே இடம்பெறக் கூடியது. இதனை மினி சூறாவளி என்று கூறலாம். கடலிலும் தரையிலும் இது ஏற்படலாம்.
வளிமண்டலத்திலுள்ள அமுக்க வேறுபாடு காரணமாக இவ்வாறான மினி சூறாவளிகள் ஏற்படுகின்றன. கடந்த இரு தினங்களாக அதிக வெப்பநிலை நிலவியது. அதனாலேயே இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம்.
சில சந்தர்ப்பங்களில் இவ்வாறான சூறாவளிகள் உயிர் மற்றும் உடைமைக்கும் சேதங்களை ஏற்படுத்தக்கூடும். எனவே மக்கள் அவதானமாகவும் விழிப்புடனும் இருக்க வேண்டும் என்றார்.

12 டிசம்பர் 2010

மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்புவோம்.

மக்கள் விரோத அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சி பீடமேறிய இந்த அரசாங்கம், மக்களின் அடிமடியில் கை வைத்து தமது அடியாட்களை போஷித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோற்கடிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அவசியமானதென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் ரணில் வி;க்ரமசிங்க முதல் கட்சியின் அடிமட்ட உறுப்பினர் வரையில் அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வளங்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே அனைவரினதும் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானது எனவும், விரைவில் வெற்றிப் பாதையை நோக்கி நகரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியே மக்களின் வெற்றி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கட்சியின் தலைமைத்துவம் எடுக்கும் பிழையான தீர்மானங்களுக்கு கட்சியை நேசிப்பவர்கள் தலையாட்ட மாட்டார்கள் எனவும், பிழைகளைச் சுட்டிக்காட்டி ஒட்டு மொத்த கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்வதே தமது எண்ணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படை தாக்குதல்.

தமிழக மீனவர்கள் மீது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படைக் காடையர்கள் மீண்டும் வெறித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர். மீனவர்களை அடித்து உதைத்தும், படகுகளை சேதப்படுத்தியும் அனுப்பியுள்ளது சிங்கள வெறிப்படை.
685 படகுகளில் தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். இந்த மீனவர்கள், கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு சிங்களப் படையினர் வந்தனர். தமிழக மீனவர்களின் படகுகளில் ஏறி மீனவர்களை அடித்து உதைத்தனர். பின்னர் படகுகளையும் சேதப்படுத்தி விட்டு எச்சரிக்கை விடுத்து திரும்பிச் சென்றனர்.
போகும்போது மீனவர்கள் வைத்திதருந்த மீன் பிடி வலை, செல்போன்களையும் சிங்கள காடையர் கூட்டம் பறித்துச் சென்றது.

11 டிசம்பர் 2010

சங்கானையில் துப்பாக்கிச்சூடு,இந்து மதகுருமார் மூவர் படுகாயம்!

வலிகாமத்தின் சங்கானைப் பகுதியில் இன்று இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இந்து மத குருமார் மூவர் படுகாயமடைந்துள்ளனர். சங்கானை முருகமூர்த்தி ஆலய பிரதம குருவான நித்தியானந்த சர்மா என்பவரினது வீட்டினுள் புகுந்தே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
56 வயதுடைய நித்தியானந்த சர்மா அவருடைய மகன்களான 27 வயதான ஜெகானந்த சர்மா மற்றும் 32 வயதுடைய சிவானந்த சர்மா ஆகிய மூவருமே படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ஒரு தகவல் கூறுகின்றது. எனினும் இவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதற்கான பூரண விபரங்கள் வெளியாகவில்லை.
சம்பவத்தை அடுத்து வலிகாமத்தின் பல பகுதிகளும் படையினரின் சுற்றிவளைப்பிற்குள்ளாகியிருக்கின்றது. பிரதான வீதிகளில் பொதுமக்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் பொதுமக்கள் வாகனங்களில் இறக்கப்பட்டு நீண்ட நேரம் சோதனைக்குள்ளாக்கப்படுகின்றனர் என எமது ஜீரிஎன் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முக்கிய முகாம் பகுதிகள் மற்றும் சந்திகளில் இவ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மோட்டார் சைக்கிளில் பயணித்த பலரும் இவ்வாறு சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக வன்னியிலிருந்து அண்மைக்காலங்களில் குடியமர்ந்த மக்கள் சோதனைச் சாவடியில் அவலத்திற்குள்ளாவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இலங்கையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இலங்கையின் மனித உரிமை நிலவரங்கள் தொடர்பில் தொடர்ந்தும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக எச்சரித்துள்ளது.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அமெ ரிக்காவின் ஜனநாயக மனித உரிமைகள் மற்றும் தொழில் துறை பிரதியமைச்சர் மைக்கல் போஸ்னர் அறிக்கையில் கையொப்பமிட்டுள்ளார்.
நாங்கள் தொடர்ச்சியாக இலங்கையின் மனித உரிமைகள் விவகாரங்களை கண்காணித்து வருகின்றோம். அதில் மாற்றம் இல்லை.
இலங்கையில் கடந்த காலங்களில் நடந்தது என்னவென்பதையும் நாங்கள் அவதானித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். அது மாத்திரமன்றி ஐ.நா. நிபுணர்கள் குழு இலங்கை விடயத்தில் எப்படிச் செயல்படப் போகின்றது என்பதையும் மிகவும் உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்துள்ளது.
மேற்குலக நாடுகளின் கண்களில் தொடர்ச்சியாக விரல் விட்டு ஆட்டலாம் என்ற இலங்கை அரசாங்கத்தின் ஆணவத்துக்கு இந்த அறிக்கை ஒரு பலத்த அடியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கேபிக்கு விழுந்த அடியால் கையாட்கள் ஆடுகின்றனர்.

புலிகளின் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி.க்கு(குமரன் பத்மநாதனுக்கு) நேற்றுக் காலை கன்னத்தில் பலமான அடி விழுந்தமையால் அவரின் கையா ட்கள் இங்கு ஆடுகின்றனர் என்று ஐ. தே. க. எம்.பி. ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டினார்.நாடாளுமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதõன நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் இவை குழு நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதன்போது ரவி எம்.பி உரையாற்ற தயாராக இருந்தார்.
இதனிடையே எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மேசையில் இருந்த புத்தகமொன்றை காண்பித்து இந்தப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற தரவுகளை அடிப்படையாகக் கொண்டா நாம் இன்று (நேற்று) விவாதிக்கின்றோம். அப்படி விவாதிப்பதாயின் அதில் கே. பி.யிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட சொத்துக்கள் தொடர்பிலான விபரங்கள் உள்ளடக்கப்படவில்லை எனக் கூறி அமர்ந்தார்.
இதனிடையே எழுந்த ஆளும் கட்சியின் பின் வரிசையை சேர்ந்த சில எம்.பி.க்கள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், “காலையில் வந்தவுடனேயே கே.பி… கே.பி… என்று கொக்கரிக்கின்றீர்களே…” எனக் கோஷம் எழுப்பினர்.
உரையை ஆரம்பிப்பதற்கு எழுந்திருந்த ரவி கருணாநாயக்க எம்.பி., “கே.பிக்கு காலையிலேயே கன்னத்தில் பலமாக அடித்தமையினால் அவரின் அடியாட்கள் சபைக்குள் ஆடுகின்றனர்…” என்று எழுந்திருந்து கூச்சல் செய்த உறுப்பினர்களை பார்த்துக் கூறினார்.
“கருணா, பிள்ளையான் போன்ற புலிகளைப் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு எங்களிடம் கேட்கின்றனர்…” எனக் கூறி தனது உரையைத் தொடர்ந்தார்.

10 டிசம்பர் 2010

கலைஞரே காங்கிரசை தூக்கி சுமக்காதீர்கள்!-சீமான்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டார்.
விடுதலையான அவர் சிறைக்கு வெளியே அமைக்கப்பட்ட மேடையில் ஏறி உரையாற்றினார்.
அப்போது, ’’தமிழகத்திலேயே ஜெயலலிதாவும், கலைஞரும் ஒரே ஒரு விவகாரத்தில் மட்டுமே ஒற்றுமையாக உள்ளார்கள்.
அந்த ஒற்றுமை கொள்ளை அடிப்பதை பற்றி பேசுவதில்தான்.
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை இல்லாமல் அழிப்பதே எங்கள் நோக்கம். கூட்டணியில் இருந்தாலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன் போன்றவர்கள் எங்கே நின்றாலும் தோற்கடிப்போம்.
கார்த்தி சிதம்பரம் எல்லாம் சவால் விடுகிறார்கள். கார்த்தி சிதம்பரமே! எங்களுடன் போட்டி போட கார்த்தியாக(சிதம்பரம்) வா!! சிதம்பரத்தை சேர்த்துக்கொண்டு வராதே.
காங்கிரஸ் கட்சி என்பது வெள்ளைக்காரன் ஆரம்பித்து வைத்த கட்சி. அந்த கட்சியோடு இணைந்து வராதே.
நானோ,திருமாவளவனோ தமிழர்களுக்காக தனித்து ஒரு கட்சியை உருவாக்கினோம்.
உங்களைப்போல அடுத்தவன் முதுகில் சவாரி செய்யவில்லை. இதோ வருகிறது தேர்தல். உங்கள் உலக தலைவனை ராகுல்காந்தியை அழைத்து வாருங்கள். போட்டி போடட்டும். மண்ணை கவ்வ வைத்து துரத்துவோம்.
கலைஞர் குடும்பமே காங்கிரசை தூக்கிசுமக்காதே. பீகாரிலேயே 4 இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. தமிழகத்தில் அந்த இடம் கூட கிடைக்காது.
கலைஞரே! உங்கள் குடும்பம் ஆண்டது போதும். உங்களது குடும்பம் தமிழகத்திற்காக எவ்வளவு காலம்தான் உழைத்துக்கொண்டிருப்பது.
தயவு செய்து ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். புதியதாக நாங்கள் வந்து ஆளுகிறோம்’’ என்று பேசினார்.

யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம்!

இலங்கை யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது :இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றம் தொடர்பில் சர்வதேச அளவிலான விசாரணை அவசியம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. பிரித்தானிய 'சனல் 4' தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பப்பட்ட 5 நிமிட காணொளியைக் கொண்டு சர்வதேச மட்டத்தில் ஒரு விசாரணையை முன்னெடுக்க வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
சென்ற வருடம் ஒளிபரப்பப்பட்ட காணொளியின் நீட்டிப்பு காணொளி என குறிப்பிட்ட காணொளி ஒளிபரப்பப்பட்டுள்ளது. அக் காணொளியில் உள்ள ஒரு பெண்ணின் உடல் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தொலைக்காட்சி சேவையில் செய்தி வாசிப்பாளரான இசைப்பியாவினுடையது என சர்வதேச தமிழ் ஊடகங்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் ஒளிபரப்பப்பட்ட காணொளி சித்திரிக்கப்பட்டவை என இலங்கை அரசு தெரிவிக்கிறது என ஏபி அறிக்கை வெளியிட்டுள்ளது.
சர்வதேச மனித உரிமை தினமான இன்று தமிழ் அரசியல் கைதிகள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழ் அரசியல் கைதிகள் சர்வதேச மனித உரிமை தினமான இன்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தம்மை பிணையில் விடுவிக்க வேண்டும் அல்லது பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, வெலிக்கடைசிறைச்சாலை, வெலிக்கடை பெண்கள் சிறைச்சாலை, புதிய மகசீன் சிறைச்சாலை, அநுராதபுரம், வவுனியா, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய சிறைச்சாலைகளில் உள்ள 800 அரசியல் கைதிகளே இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக முன்னாள் எம்.பி.யும் தமிழ் தேசிய விடுதலைக் கூட்ட மைப்பின் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை துரிதப்படுத்தப்பட வேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில் நீதியமைச்சும், அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு காணாமல் போனவர்களை மீட்டுத் தருமாறு கோரி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும் இன்று ஆர்ப்பாட்டம் இடம் பெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை காணாமல் போனோரை கண்டறிவதற்கான குழு ஏற்பாடு செய்துள்ளது.

மற்றைய பெண் போராளியும் அடையாளம் காணப்பட்டார்!

இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஒளிக்காட்சிகளில் இசைப்பிரியாவுடன் கொல்லப்பட்டுக் காணப்படும் மற்றைய பெண் போராளியும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் அகல்விழி என்ற இயக்கப் பெயரில் அழைக்கப்பட்டிருந்ததுடன், தமிழீழ தொலைக்காட்சியில் செய்தி சேகரிப்பாளராக பணியாற்றியுள்ளார்.
அவரது சொந்தப் பெயர் குணலிங்கம் உசாலினி என்று தெரியவருவதுடன் அவர் மல்லாவியில் 1990ம் ஆண்டில் பிறந்துள்ளார். 2008ம் ஆண்டின் மே மாதத்தில் அவரது பெற்றோர் தமது மகளை புலிகள் இயக்கத்தில் சோ்த்துள்ளனர்.
ஆரம்ப காலங்களில் கிளிநொச்சி புலனாய்வுத்துறையில் பணியாற்றிய அவர் கடைசிக்கட்ட போரின் போது இசைப்பிரியாவுடன் இணைந்து ஊடகத்துறையில் பணியாற்றியுள்ளார்.
இறுதிக்கட்ட போரின் போது இராணுவத்திடம் சரணடைந்த நிலையில் 2009ம் ஆண்டின் மே மாதம் 18ம் திகதி இசைப்பிரியாவுடன் சோ்த்து அவரும் கொல்லப்பட்டுள்ளார்.

09 டிசம்பர் 2010

கரன்னாகொட லண்டன் தூதராக நியமனம்: நிராகரித்தது பிரிட்டன்.

இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொடவை அரசாங்கத்தின் உயர் மட்ட விருப்பின் பேரில் இங்கிலாந்துக்கான இலங்கைத் தூதராக நியமித்த போதும், அதனை பிரிட்டன் ஏற்க மறுத்துள்ளதாக அறிய முடிகின்றது.இலங்கையில் புலிகளுடனான அரசாங்கத்தின் இறுதிக்கட்டப் போரில் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் நிகழ்ந்திருப்பதாக பரவலாக ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்த விடயம் இலங்கை அரசாங்கத்துக்கு இன்னுமோர் பாரிய அடியாக விழுந்துள்ளது.
இறுதிக்கட்டப் போர் நிகழ்ந்த காலத்தில் வசந்த கரன்னாகொடவே கடற்படைக்குத் தலைமை தாங்கியிருந்தார். அதன் காரணமாகவே அவரும் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பிரிட்டன் அரசாங்கம் அவரது நியமனத்தை நிராகரித்துள்ளது.
பிரிட்டனிலுள்ள இலங்கைத் தமிழர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இராணுவத்தின் முக்கிய அதிகாரிகளின் போர்க்குற்ற விடயம் தொடர்பாக கிளர்ந்து எழுந்துள்ள நிலையில் அவற்றுடன் சம்பந்தப்பட்ட ஒருவரை தூதுவராக ஏற்றுக் கொள்வது வேண்டாத தலைவலியை உருவாக்கி விடும் என்று பிரித்தானிய அரசாங்கம் கருதுவதாக தெரிகின்றது.
ஆயினும் வசந்த கரன்னாகொடவின் நியமனத்தை நிராகரித்துள்ள செயலால் இலங்கை அரசாங்கம் பிரிட்டன் மீது கடும் ஆத்திரத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது

08 டிசம்பர் 2010

உண்மை வெளியானது குறித்து மகிழ்ச்சி - எம்.கே.சிவாஜிலிங்கம்.

கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம், தமிழ் அரசியல் தலைவர்கள் குறித்து கொண்டிருக்கும் அபிப்பிராயங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் மூலம் வெளியில் தெரியவந்ததையிட்டு மனத்திருப்பியடைவதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.ஜனாதிபதி தேர்தலின் போதும் நாடாளுமன்றத் தேர்தலின் போதும் தன் மீது சுமத்தப்பட்ட பொய்க் குற்றச்சாட்டுக்கள் உடைத்தெறியப்பட்டதன் மூலம் காலம் கடந்தாலும் உண்மைகள் வெளிவந்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :-
'ஜனாதிபதி மீதான நடவடிக்கையை விரும்பாத அரசியல் தலைவர்கள் - விக்கிலீக்ஸ் தகவல்' என்ற தலைப்பில் இலங்கை ஜனாதிபதி மீது போர்க் குற்றச்சாட்டுக்களை அமெரிக்கா மேற்கொண்டால் அது தமது இருப்பை பாதிக்கும் என இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அமெரிக்காவை தடுத்துள்ளதாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ் அரசியல் தலைவர்களின் இந்த தகவல்களை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றனீஸ் வொஷிங்டனுக்கு அனுப்பியுள்ளார். அத்துடன் இலங்கை அரசு மீது அமெரிக்கா தனது நடவடிக்கைகளை அதிகரிக்க முயன்றபோது யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அதனைத் தடுத்து விட்டனர்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது மேற்கொள்ளப்படும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் தங்களது பதவிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்ததாகவும் இலங்கை அரசு மீதான நடவடிக்கைக்கு இது தருணம் அல்ல என அவர்கள் தம்மைத் தடுத்ததாகவும் பற்றீசியா அனுப்பியுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவரவர் விளக்கங்களை அவரவர்களே வழங்க வேண்டும். எனவே இது குறித்து எனது விளக்கத்தை அளிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். அமெரிக்கத் தூதுவரால் அனுப்பப்பட்டிருந்த செய்தியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.யாக இருந்த சிவாஜிலிங்கம் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல்வாதியென சித்தரிக்கப்பட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான வேலுபிள்ளை பிரபாகரனின் உறவினரான இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று அதேநேரம் அரசு ஆதரவுக் கட்சிகளையும் ஆதரிக்காமல் பிரிந்து நின்றார்.
எதிர்க்கட்சிகளோ அல்லது அரசாங்கமோ தமிழர் விவகாரங்களை சரியான முறையில் கையாளவில்லை என்று சுய பிரகடனத்துடன் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்ட சிவாஜிலிங்கம் நம்பியிருந்தார்.
மத்தியில் அதிகாரம் குவிக்கப்படாத வகையில் எற்படுத்தப்படும் சமஷ்டி ஆட்சி முறையின் கீழ் சிங்களவர்கள் தமிழர்கள் ஆகியோருக்கு எனத் தனித் தனி பிரதமர்கள் வேண்டும் என்பது தான் பிரச்சினைக்கான தீர்வாக இவரால் கொள்ளப்பட்டு இருந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இவர் இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டு குறித்து சர்வதேச மட்டத்தில் முழுமையான நீதி விசாரணை வெளிப்படையாக வேண்டும் எனவும் யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வேண்டும் என்றும் யுத்தக் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் வெளிப்படையாகப் பேசி வந்துள்ளார் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரண்டு தேசங்கள் - ஒரு நாடு' என்ற கூட்டு இணைப்பாட்சி (கொன்பிடரேஷன்) கொள்கையை முன்வைத்தே ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டேன்.
இதன்படி, இரண்டு தேசங்களுக்கும் சிங்களவர் , தமிழர் பிரதமர்களாக இருக்க வேண்டும். அத்துடன் தனித் தனி நாடாளுமன்றங்கள் இருக்க வேண்டும். ஜனாதிபதி, உப ஜனாதிபதி ஆகிய பதவிகள் சுழற்சி முறையில் இரண்டு தேசங்களுக்கிடையில் பங்கிடப்படும்.
பாதுகாப்பு வெளிவிகாரம் ஆகிய துறைகள் மாத்திரமே ஜனாதபிதி, உப ஜனாதிபதி ஆகியோரின் பொறுப்பில் இருக்கும். பதவிக்காலம் நான்கு ஆண்டுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஜனாதிபதி, உப ஜனாதிபதி பதவிகளை ஒரு தேசம் ஒரே நேரத்தில் கொண்டிருக்க முடியாது.
இத்திட்டம் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் லண்டனிலுள்ள சிங்களவர் ஒருவரின் பொறுப்பிலிருந்த சட்ட அமைப்பினால் புத்திஜீவிகள் சார்பில் தயாரிக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

07 டிசம்பர் 2010

சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு!சந்தேக நபர் கைது.

யாழ். பருத்தித்துறை கொட்டடிக் கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை நேற்று முன் தினம் இரவு இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயது இளைஞன் ஒருவர் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என பருத்தித்துறைப்பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து கூப்பிடு தொலைவில் சிறுமியின் அம்மம்மாவின் வீடு உள்ளது. சிறுமி இரவு 8.30 மணி அளவில் அம்மம்மாவின் வீட்டுக்கு தனியாக புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கின்றார்.
அந்நேரமே கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டு இருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது. இம்முறைப்பாட்டை அடுத்து இளைஞனைப் பொலிஸார் தேடினார்.
தும்பளை கிராமத்தில் மாமியார் வீட்டில் ஒளித்து இருந்த இளைஞன் நேற்று கைது செய்யப்பட்டார். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தீவக போக்குவரத்து வழமைக்கு திரும்பியது.

யாழ் குடாநாட்டில் அண்மை நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பண்ணை வீதியூடான போக்குவரத்துச் சேவைகளை இ.போ.சபை தற்காலிகமாக இடைநிறுத்தியிருந்தது. இந்நிலையில் நேற்று நண்பகலுடன் போக்குவரத்துக்கள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் நண்பகல் நிறுத்தப்பட்டது முதல் தீவக மக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் பல சிரமங்களை எதிர்கொண்டனர்.
இந்நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்ட துரித முயற்சி காரணமாக இந்த வீதி திறக்கப்பட்டதையடுத்து தீவகத்திற்கான போக்குவரத்து வழமைக்குத் திரும்பியது.
இதேவேளை நேற்று மாவட்டத்தில் மழை பெய்யாமையும் இதற்கு சாதகமாக அமைந்தது.

06 டிசம்பர் 2010

கே.பி.பற்றிய விமலின் கருத்துக்கு கோத்தபாய எதிர்ப்பாம்!

விடுதலைப்புலிகளின் முன்னாள் வெளிநாட்டு பொறுப்பாளர் கே.பி. தொடர்பில் அமைச்சர் விமல் வீரவன்ச அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச­ அதிருப்தி கொண்டதாக கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை அடையாளம் காணவும் விடுதலைப்புலிகளின் வெளிநாட்டு தொடர்புகளை அறிந்துகொள்ளவுமே கே.பியை அரசாங்கம் பயன்படுத்துவதாக விமல் வீரவன்ச குறிப்பிட்டிருந்தார். அத்துடன் கே.பி.யை பயன்படுத்தி வெளிநாட்டு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை தோற்றுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
கடந்த மூன்றாம் திகதி கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது, இறுதி யுத்த காலத்தில் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களை மீட்க முயற்சித்த கே.பி தற்போது அரசாங்கத்திற்கு ஆதரவாக உள்ளமை குறித்து செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எனினும் இந்தக் கருத்துகள் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளர் அதிருப்தி அடைந்ததுடன் விமல் வீரவன்சவை எச்சரித் துள்ளதாகவும் கூறப்படுகிறது.

லஸ்கர் ஈ தைபா முகாம் இலங்கையில்.-விக்கி லீக்ஸ்.

இலங்கையில் லஷ்கர் ஈ தைய்பா தீவிரவாதக் குழுவினரின் பயிற்சி முகாம்கள் பற்றிய இரகசியங்கள் உட்பட மற்றும் இன்னும் முக்கியமான இரகசியங்களை உள்ளடக்கிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முக்கிய இரகசிய அறிக்கையொன்றை விக்கிலீக்ஸ் இணையத்தளம் அம்பலப்படுத்தியுள்ளது.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையில் பயிற்சி முகாமொன்றை நிறுவிக்கொண்ட லஷ்கர் ஈ தைய்பா தீவிரவாதிகள் இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் அவர்களின் நடவடிக்கை முகாம்களை அமைப்பதற்குத் திட்டமிட்டிருந்ததாக தெரிய வருகின்றது.
கடந்த வருடம் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கேபிள் தகவல் குறிப்பு அதனை உறுதிப்படுத்துகின்றது.
இந்தியா, பாக்கிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் லஷ்கர் ஈ தைய்பாவின் வளர்ச்சி அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்ததாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
அந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஷபீக் கபா என்பவர் இந்தியாவில் இரண்டு இடங்களில் தமது நடவடிக்கை முகாம்களை அமைத்துக் கொள்வதில் தீவிர கவனம் செலுத்தியதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிடுகின்றது.
இலங்கையிலிருந்து வெளியேறிய போத்தல ஜயந்த, அஷ்ரப் அலீ போன்ற பல ஊடகவியலாளர்களும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல் வாதிகள் பலரும் இந்த விடயம் பற்றித் தெரிவித்த கருத்துக்களை பொய் என்று உதறித்தள்ளிய அரசாங்கம், அதன் குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து புயலைக் கிளப்பிக் கொண்டிருப்பது கண்டு தற்போது கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றது.

சீமான் வழக்கில் நீதிபதிகள் வேண்டுமென்றே இழுத்தடிக்கிறார்கள்.

நாம் தமிழர் இயக்கம் சீமானை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து அவரது சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை நீதிபதிகள் சொக்கலிங்கம், கர்ணன் ஆகியோர் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் ஜேம்ஸ்பீட்டர் ஐகோர்ட் தலைமை நீதிபதி இக்பாலிடம் புகார் மனு அளித்தார்.
அந்த புகார் மனுவில்,
’’சீமான் கைதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் சொக்கலிங்கம், கர்ணன் ஆகியோர் வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்தி வருவதாக தெரிகிறது.
அதனால் இந்த நீதிபதிகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வழக்கு இன்று நீதிபதிகள் சொக்கலிங்கம், கர்ணன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது ஜேம்ஸ் பீட்டர் தரப்பு வக்கீல் சந்திரசேகரன் ஆஜராகி, நாங்கள் இந்த வழக்கை வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற கோரி தலைமை நீதிபதியிடம் மனு கொடுத்துள்ளோம் என்று அதன் நகலை நீதிபதிகளிடம் காட்டினார்.
இதை படித்து பார்த்த நீதிபதிகள் சீமான் கைதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தலைமை நீதிபதியிடம் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து இவ்வழக்கு வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்படுகிறது.

04 டிசம்பர் 2010

கோவையில் பின்வாசல் வழியாக ஓடிய இலங்கை எம்.பி.

கோவை கொடிசியாவில் ஜவுளி கண்காட்சி நடைப்பெற்று வருகிறது. இதில் பங்கேற்க சிறப்பு அழைப்பாளர்களாக இலங்கையைச் சேர்ந்த எம்.பி., காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
இலங்கை அமைச்சர் வருவதை அறிந்த தமிழின உணர்வாளர்கள் அதிருப்தி அடைந்தனர். மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள், இலங்கை எம்பி காசிம் பைசல், அமைச்சர் ரிஷாத் பத்யூதின் ஆகியோர் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்த தயாராக இருந்தனர்.
கோவையில் பெருமளவில் திரண்டிருந்த பெரியார் திராவிட கழகத்தினர், ராஜபக்சே கூட்டாளியே திரும்பி போ, தமிழர்களை கொன்று குவித்த சிங்களனே திரும்பி போ என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த பதாதைகளை ஏந்திக்கொண்டு நின்றுக்கொண்டிருந்தனர்.
பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனிடம் வந்த போலீசார், கண்காட்சியில் இலங்கையைச் சேர்ந்த யாரும் பங்கேற்கவில்லை என்று சொன்னதின் பேரில், ஆர்ப்பாட்டத்தை கலைத்தனர்.
திரும்பவும் கொடிசியா கண்காட்சியில் இலங்கை அமைச்சர் காசிம் பைசல், ரிஷாத் பத்யூதின் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டனர் என்ற தகவலை தெரிந்துகொண்டு கொடிசியா முன்பு மதிமுக, பெரியார் திராவிடர் கழகம், நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் திரண்டனர். வெளியேற்று வெளியேற்று சிங்கள எம்பியை வெளியேற்று என்ற கோஷத்தோடு உள்ளே நுழைந்த அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர். பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
தன் வருகைக்கு எதிர்ப்பு கிளம்பியதால், இலங்கை எம்.பி., காசிம் பைசல், கண்காட்சியில் கலந்து கொள்ளாமல் கொடிசியா வாளத்தின் பின் பக்கம் வழியாக, கோவை விமான நிலைத்துக்குச் சென்று இலங்கை திரும்பினார். எதிர்ப்பு காரணமாக அமைச்சர் ரிஷாத் பத்யூதின் கோவை பயணத்தை முன்கூட்டியே ரத்து செய்தார்.
முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த தமிழக அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர், பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணனை சந்தித்து, இலங்கை அமைச்சர் வருவதற்கு அதிருப்தி தெரிவித்து நாங்களும் இந்த கண்காட்சியில் பங்கேற்வில்லை என்று கூறிவிட்டு சென்றனர்.
போலீசார் தடையை மீறி இலங்கை அமைச்சர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கொடிசியா அரங்கில் உள்ளே நுழைய முயன்றதால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது.

மகிந்தவிற்கு பிடியாணை பிறப்பிக்ககோரி போராட்டம்.

போர்க்குற்றவாளியான மகிந்த ராசபக்சவை கைது செய்வதற்கான பிடியாணையை பிறப்பிக்குமாறு கோரியும், அவரையும் அவரின் சகாக்களையும் கைது செய்து தமிழ் மக்களுக்கு நீதிவழங்க வேண்டும் என கோரியும் சுவிற்சர்லாந்து பேர்ண் நகரில் உள்ள பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் நேற்று பிற்பகல் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன் மனு ஒன்றையும் பிரித்தானிய தூதரக அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
மனுவை பகீரதன் தர்ஜிகா பிரித்தானிய அதிகாரிகளிடம் கையளித்தார்.
பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்டம் மாலை 5மணிவரை நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தோழர் தியாகு, உரையாற்றுகையில் மேற்குலக நாடுகளில் தமிழ் மக்கள் அனைவரும் அர்ப்பணிப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டால் மட்டுமே ஈழத்தமிழர்களுக்கான விடுதலையை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
ஹிட்லரின் கொடுமைகளுக்கு எதிராக யூதர்கள் ஒற்றுமையோடு போராட்டம் நடத்தியதைப்போல தமிழர்களும் ஹிட்லர் செய்த படுகொலையை விட மோசமான இனப்படுகொலையைச் செய்த மகிந்த ராசபக்சவிற்கு எதிராக தமிழர்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சுவிஸ் தமிழரவையைச் சேர்ந்த நிரோஜனும் அங்கு உரையாற்றினார்.

03 டிசம்பர் 2010

சிங்களச்சிப்பாய் துப்பாக்கிச்சூடு,சாவகச்சேரியில் பொதுமகன் பலி!

சாவகச்சேரி புத்தூர் சந்திக்கருகே இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் ஒருவர் பலியாகியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மேற்படி நபர் குறிப்பிட்ட இடத்தில் காணப்பட்ட இருப்புக்கம்பியைக் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களைத் தாக்கியதை அடுத்து இராணுவத்தினருக்கும் பொதுமகனுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் அப்பொதுமகன் பலியாகியுள்ளார்.
சடலம் யாழ் போதனா வைத்தியசாலலயில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தனி விமானத்தில் தப்பிக்க முயலும் படைத்தளபதி.

சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவுடன் பிரித்தானியாவுக்கு வருகைதந்த சிறீலங்கா இராணுவத்தின் சிறப்பு படையணியின் முன்னாள் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சாகி கலகே தனியார் விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வருடம் வன்னியில் இடம்பெற்ற போரில் பெருமளவான தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் சிறப்பு படையணியின் அல்பா, டெல்ரா, பீற்றா ஆகிய கொம்பனி படையணிகளே படுகொலை செய்திருந்தன.
வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் பிரதம பங்கு வகித்தவர்களில் கலகேயும் முக்கியமானவர்.
இதனிடையே, மகிந்தாவின் பேச்சு சுதந்திரம் பிரித்தானியாவில் மறுக்கப்பட்டுள்ளதாக நேற்று (2) பிரித்தானியாவில் உள்ள சிறீலங்கா தூதரகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஜி எல் பீரீஸ் தெரிவித்துள்ளார்.
சிறீலங்காவில் பேச்சுச் சுதந்திரம் பேணப்படுகின்றதா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது, சில சமயங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மகிந்தா ராஜபக்சா தனிப்பட்ட பயணமாக பிரித்தானியா வந்தபோதும், அவருடன் முக்கிய படை அதிகாரிகளும், அமைச்சர்களும் ஏன் வந்தனர் என்பது பெரும் சந்தேகத்தை தோற்றுவிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

02 டிசம்பர் 2010

இசைப்பிரியாவை சூழ்ச்சியால் சிக்கவைத்து கொடூரம் புரிந்த சிங்கள காடையர்கள்!

புலிகளின் ஊடகவியலாளராகவும், போராளியாகவும் செயற்பட்ட இசைப்பிரியா வஞ்சமாக விரிக்கப்பட்ட வலையில் சிக்கிய நிலையிலேயே இராணுவத்திடம் சிக்கி, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக இராணுவத் தரப்புத் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.
இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தின் ஸ்னைபர் வீரனொருவன் இசைப்பிரியாவினால் கொல்லப்பட்டுள்ளான். அதற்குப் பழிவாங்கும் முகமாகவே கொல்லப்பட்ட படைவீரனின் சகாக்களால் அவர் சிதைக்கப்பட்டதாக நம்பகமான தகவல் வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது.
தம்மிடம் சரணடைந்திருந்த பெண்ணொருவரை மிரட்டி காயம் பட்ட நிலையில் தவிப்பது போன்று நடிக்க வைத்து, முன்னரங்க காவல் நிலையில் கடமையில் இருந்த இசைப்பிரியாவை தந்திரமாக தமது எல்லைக்குள் படைத்தரப்பு வரவழைத்துள்ளது. அதன் பின் சற்றும் எதிர்பார்த்திராத முறையில் அவர் படையினரின் கையில் சிக்கிக் கொண்டுள்ளார்.
இசைப்பிரியா கைது செய்யப்பட்டது முதல் கற்பழிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டது வரை நடந்த அனைத்து நிகழ்வுகளும் கேணல் ரவிப்பிரிய தலைமையில் வழிநடாத்தப்பட்ட படையணியொன்றின் மூலமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இசைப்பிரியாவின் சித்திரவதையின் போது அவர் கதறிய ஓலங்களை அந்தப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுமக்கள் சிலரும் செவியுற்றதாக கூறப்படுகின்றது. அதன் பின்பே அவர் வாயில் துணி கொண்டு கட்டப்பட்டுள்ளது.
இசைப்பிரியாவைப் சித்திரவதை செய்து படுகொலை செய்யும் வரைக்கும் அனைத்து நிகழ்வுகளும் ஒளிப்படக் காட்சிகளாகப்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. அவர் கற்பழிக்கப்பட்ட காட்சிகள் இன்றும் கூட கேணல் ரவிப்பிரியாவின் டயலொக் இலக்க தொலைபேசியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக கண் கண்ட சாட்சிகள் மூலம் தெரிய வருகின்றது.
அத்துடன் அன்றைய கட்டத்தில் இறுதிப் போரில் பங்கு கொண்டிருந்த படையணிகளின் உறுப்பினர்கள் அனைவரும் மாதக்கணக்கில் விடுமுறை கிடைத்திருக்காத நிலையில் தங்களது உணர்ச்சிகளை தம்மிடம் சிக்கிய புலிகளின் மகளிர் அணியின் மீதே தீர்த்துக் கொண்டதாக களமுனையில் செயற்பட்ட சிலரின் தகவல்கள் உறுதி செய்கின்றன.
இலங்கையின் படைத்துறை உயர் அதிகாரிகளின் மொபைல் தொலைபேசிகள் இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும் பட்சத்தில் போர்க்குற்றம் தொடர்பான மேலும் பல உண்மைகளைக் கண்டறிய முடியும் என்றும் எமது தகவல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

01 டிசம்பர் 2010

மகிந்தவின் இறுமாப்பு தகர்ந்தது!ஒக்ஸ்போர்ட் உரை ரத்து.

இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆக்ஸ்போர்டில் வியாழக்கிழமை ஆற்ற இருந்த சிறப்பு உரை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஆக்ஸ்போர்ட் யூனியன் அமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பு தனது இணையத் தளத்தில் ஒரு அறிவித்தலை வெளியிட்டிருந்தது.
இந்த உரையை ஆற்றுவதற்காக இலங்கை ஜனாதிபதி பிரிட்டனுக்கு வந்ததை பிரிட்டனில் வாழும் தமிழர்கள் வன்மையாக கண்டித்து விமான நிலையத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியிருந்தார்கள்.
நாளை அவர் உரையாற்றவிருந்த மன்றத்தின் முன்பாகவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ் அமைப்புக்கள் சிலவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே அந்த உரை நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் ரத்துச் செய்யப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவே அந்த உரை ரத்துச் செய்யப்பட்டதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இந்த ரத்து காரண்மாக தாம் வருத்தமடைவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
நடக்கக்கூடிய ஆர்ப்பாட்டங்களின் அளவு பெரிதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த உரை பாதுகாப்பாக நடக்கும் என்று தாம் கருதவில்லை என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

போர்க்குற்றவாளி மகிந்த மீது நடவடிக்கை எடுக்க கோருகிறது மன்னிப்புச்சபை.

கடந்த வருடம் நடைபெற்ற போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் பெண் போராளிகளை நிர்வாணமாக்கிய பின்னர் சிறீலங்கா இராணுவத்தினர் அவர்களை சுட்டுக்கொல்லும் காணொளிக் கட்சிகளை பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட சனல் போஃர் செய்தி நிறுவனம் நேற்று (30) வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
கடந்த வருடம் சன்ல் போஃர் செய்தி நிறுவனம் வெளியிட்ட படுகொலை காணொளியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இழுத்துவரப்பட்ட தமிழ் இளைஞர்களை சிறீலங்கா இராணுவம் படுகொலை செய்யும் காட்சிகள் அடங்கியிருந்தன.
சிறிது நேரம் பதிவாகிய அந்த காணொளியில் 9 இளைஞகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த காணொளி உண்மையானது என ஐ.நாவின் முன்னாள் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பான அதிகாரி பிலிப் அல்ஸ்ரன் தெரிவித்திருந்தார். அது தொடர்பில் சுயாதீன விசாரணைகள் அவசியம் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா பிரித்தானியாவுக்கு வருகைதந்துள்ள நிலையில் சனல் போஃர் செய்தி நிறுவனம் புதிய காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் சரணடைந்த பெண் போராளிகள் நிர்வாணமாக இழுத்து வரப்பட்டு சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கியுள்ளன. எனினும் அதன் கொடூரத்தன்மையை உணர்ந்த செய்தி நிறுவனம் அதனை முழுமையாக ஒளிபரப்பவில்லை. மேலும் சுட்டுக் கொல்லப்படும் முன்னர் பெண் போராளிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த காணொளி பதிவுகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் சனல் போஃர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, நேற்று முன்தினம் (29) இரவு பிரித்தானியாவுக்கு வந்த மகிந்த ராஜபக்சா அங்கு திரண்ட தமிழ் மக்களை கண்டு அஞ்சி வேறு பாதையால் சென்றதாகவும், அவர் தற்போது டொன்கஸ்ரர் ஆடம்பரவிடுதியில் தங்கியிருப்பதாகவும் தெரிவித்துள்ள சனல் போஃர் செய்தியாளர், மகிந்தாவிற்கான பாதுகாப்புக்களை வழங்க பிரித்தானியா விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அதேசமயம், பிரித்தானியாவிற்கு வந்துள்ள மகிந்தா போர்க்குற்றங்களில் தொடர்புள்ளவர் என அனைத்துலக மன்னிப்புச்சபை நேற்று (30) தெரிவித்துள்ளது. அவர் மீதான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் அது பிரித்தானியா அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

30 நவம்பர் 2010

மகிந்தவிற்கு எதிரான போராட்டத்திற்கு பொலிசார் அனுமதி.

லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்தவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு பொலிசார் அனுமதியளித்துள்ளனர்.
எதிர்வரும் இரண்டாம் திகதி ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரை இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் அங்கு பாரிய ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த இடமளிக்குமாறு பிரித்தானியப் பொலிசாரிடம் ஏற்பாட்டாளர்களால் அனுமதி கோரப்பட்டிருந்தது.
அதற்கான அனுமதி தற்போதைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
தற்போதைய நிலையில் ஆர்ப்பாட்டம் தொடர்பான ஆரம்ப கட்ட பிரச்சார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், இன்று லண்டன் நகரமெங்கும் அது தொடர்பான துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பான துண்டுப் பிரசுரங்கள் பகிரப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
இவற்றுக்கு மேலதிகமாக பாரிய பதாகைகளைத் தொங்கவிட்டவாறு வேன்களிலும் பிரதேசம் தோறும் மக்களை அறிவுறுத்தும் பிரசார நடவடிக்கைகளும் தற்போதைக்கு ஆரம்பமாகியுள்ளன.
தற்போதைய நிலையில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, முஸ்லிம், சிங்கள மக்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முன் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறைந்த பட்சம் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

சிறிலங்காவுடன் அமெரிக்கா இரகசிய ராஜதந்திர உறவு!

சிறிலங்காவிற்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இரகசிய இராஜதந்திர தொடர்புகள் குறித்த விடயங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டு அம்பலப்படுத்தியுள்ளது.
ஈராக் போரில் அமெரிக்காவின் இரகசிய விடயங்கள் குறித்த ஆவணங்களை வெளிப்படுத்தி அம்பலப்படுத்தியதன் மூலம் உலகளவில் பிரபலமடைந்த விக்கிலீக்ஸ் இணையத்தளம் தற்போது அமெரிக்க அரசின் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்த ஆவணங்களை அம்பலப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்க அரசாங்கமானது உலகின் பல்வேறு நாடுகளுடன் வைத்திருக்கும் இராஜதந்திர உறவுகள் தொடர்பான 251,287 ஆவணங்கள் விக்கிலீக்ஸ் இணையத்தளம் வசம் சிக்கியுள்ளன.
அதில் மூவாயிரத்துக்கும் அதிகமானவை இலங்கையுடனான இராஜதந்திர உறவுகள் சம்பந்தப்பட்டவை என்று கூறப்படுகின்றது. 1996ம் ஆண்டு முதல் நடப்பாண்டு வரையான காலப்பகுதிக்குள் இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் தொடர்பான மூவாயிரத்துக்கும் அதிகமான ஆவணங்கள் எதிர்வரும் நாட்களில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையுடனான இராஜதந்திரத் தொடர்பின் இரகசிய விடயங்கள் அடங்கிய ஆவணங்கள் வெளிவருவது குறித்து கொழும்பிலுள்ள அமெ ரிக்கத் தூதரகம் பெரும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரியவருகின்றது.
அதற்கு மேலதிகமாக இந்தியா (5087), பாகிஸ்தான் (4775), ஆப்கானிஸ்தான் (7095), பங்களாதேஷ் (2182) ஆகிய நாடுகள் தொடர்பான ஆவணங்களும் விக்கிலீக்ஸ் வசம் கிடைத்துள்ளதுடன் அவையும் விரைவில் வெளியிடப்படவுள்ளது.
நேற்றைய தினம் தன்னிடமுள்ள ஆவணங்களில் இருநூறுக்கும் மேற்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டுள்ளது. ஏனைய ஆவணங்கள் எதிர்வரும் நாட்களில் படிப்படியாக வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் அறிவித்துள்ளது.

29 நவம்பர் 2010

மகிந்தவை எதிர்க்க பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு!

தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருப்பதால், அவரது பயணத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
ஒக்ஸ்போர்ட் சங்கத்தின் அழைப்பை ஏற்று பிரித்தானியா வரவுள்ள மகிந்த எதிர்வரும் 2ஆம் நாள் (02-12-2010) மாலை 6:00 மணியளவில் Oxford Union, Frewin Court, Oxford என்ற முகவரியில் பல்கலைக்கழக சமூகத்தின் முன்னிலையில் உரையாற்ற இருக்கின்றார்.
ஊடகங்களில் குறிப்பிட்டவாறு கடந்த மாதம் மகிந்த ராஜபக்ச பிரித்தானியா வர இருந்த போதிலும், போர்க் குற்றம் புரிந்தவர்களை அல்லது போர்க்குற்ற சந்தேக நபர்களை பிரித்தானியாவின் பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் கைது செய்ய முடியும் என எழுந்த அச்சம் காரணமாக அவரது பயணம் பிற்போடப்பட்டிருந்தது.
எப்படியாயினும், சட்ட நடவடிக்கைகளை எதிர்பார்த்து அதில் தங்கியிருக்கவோ அல்லது திருப்தியடையவோ முடியாது. அதனால் பிரித்தானிய தமிழர்களும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிப்பவர்களும் ராஜபக்சவின் வருகை மற்றும் ஒக்ஸ்போர்ட் சங்கத்தில் உரையாற்ற அனுமதித்ததற்கு எதிராக இணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
மகிந்த ராஜபக்ச கடந்த 2008ஆம் ஆண்டும் இதே பல்கலைக்கழக சங்கத்தினர் மத்தியில் உரையாற்றியிருந்ததுடன், தமிழ் மக்கள் மீதான போருக்கு ஆதரவு திரட்டும் தளமாகவும், படை நடவடிக்கையை நியாயப்படுத்தும் வகையிலும் அந்த மேடையைப் பாவித்திருந்தார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசு தோற்றுப் போக நேர்ந்தால், அது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகின் தோல்வியாக முடியும் எனவும், சனநாயகம் தோற்றுப்போகும் எனவும் தனதுரையில் கூறிய மகிந்த, தாம் முன்னெடுத்த போருக்கு ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தார். ஐ.நா மனித உரிமைகள் சபை சிறீலங்கா அரசைக் கண்டித்த பின்னர்கூட, தாம் ஐக்கிய நாடுகள் சபை, பொதுநலவாய நாடுகளின் அமைப்பு உட்பட பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவோம் எனவும், பன்னாட்டு சட்டத்தை மதித்து நடப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இவ்வாறான பின்புலத்தில் மனித உரிமைகளை மதிக்காது நடந்து வருவது மட்டுமன்றி, தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றம் புரிந்த சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என, பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுக்கின்றது.
போரினால் தமிழ் மக்களிற்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடிமறைத்து, மனித உரிமைகளை மதிக்காது தொடர்ந்தும் செயற்பட்டு வருவதுடன், கருத்து வெளிபாட்டு சுதந்திரத்தை மறுதலித்துவரும் ராஜபக்சவின் செயற்பாட்டை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
நீங்கள் என்ன செய்யலாம்?
• ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஏனைய பல்கலைக்கழகங்களிலுள்ள மாணவ சமூகத்தினர் ஆகியோரை அணுகி, உயர்ந்த கல்விச் சமூகத்தின் முன்னிலையில் ஒரு போர்க் குற்றவாளி உரையாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவியுங்கள்.• ஒஸ்போர்ட் பிரதேசத்தில் உங்களுக்கு தொடர்புகள் இருந்தால் அவர்கள் மூலம் சிறீலங்கா அரசின் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை அம்பலத்திற்குக் கொண்டு வாருங்கள்.• எதிர்வரும் 2ஆம் நாள் மகிந்த ராஜபக்சவிற்கு ஒஸ்போர்டில் எதிர்ப்புத் தெரிவிக்க பிரித்தானிய தமிழர் பேரவையினால் எடுக்கப்படும் நடவடிக்கையில் உங்களையும் தவறாது இணைத்துக் கொள்ளுங்கள். (இது பற்றிய விபரங்கள் பின்னர் பகிரப்படும்)• உங்களின் குடும்பத்தினர், உறவுகள், நண்பர்களுக்கு இதனைத் தெரியப்படுத்தி, போர்க் குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தச் செய்யவும்.

மகிந்த லண்டன் சென்றடைந்தாராம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ சற்று முன் லண்டன் சென்றடைந்தாக விமான நிலைய செய்தியாளர் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி நாளை லண்டனுக்கு விஜயம் செய்வார் என குறிப்பிட்ட போதும் ஜனாதிபதி இன்று மாலை 4.15 மணியளவில் யு.எல்.509 என்ற விஷேட விமானத்தில் சென்றடைந்தாக மேலும் தெரித்தார்.

பிஸ்கட் சாப்பிட்டதால் சிறுமிக்கு தண்டனை!

கண்டி மாவட்டத்தின் மொரஹாஹேன பிரதேசத்தில் எஜமானர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் 5 பிஸ்கட்டுகளை சாப்பிட்டதற்கு தண்டனையாக 14 வயதேயான சிறுமி ஒருவரின் உள்ளங்கைகளில் கற்பூரமேற்றிய கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் ஆடைத் தொழிற்சாலை உரிமையாளரான எஜமானாரும் அதற்கு உடந்தையாக இருந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விருந்துபசாரமொன்றுக்காக ஆடைத் தொழிற்சாலையின் உரிமையாளரும் அவரின் மனைவியும் சென்றிருந்த போதே குறித்த சிறுமி பிஸ்கெட்டுக்களைச் சாப்பிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைகளில் கற்பூரமேற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விரைவில் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரஹாஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

28 நவம்பர் 2010

தமிழக இளைஞர்களை ஐந்தாம் கட்ட ஈழப்போருக்கு அனுப்புவோம்!

சென்னை தியாகராய நகரில் நேற்று இரவு தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், ‘’வெள்ளமென திரண்டு வந்துள்ள இளைஞர் கூட்டத்தை பார்க்கும் போது 2003ல் நான் கிளிநொச்சியில் பேசியகூட்டம் ஞாபகத்துக்கு வருகிறது.28 ஆண்டுகளுக்கு முன்பு முதல் மாவீரர் தின விழாவில் பிரபாகரன் பேசும்போது ஈழப்போரில் 1027 விடுதலைப்புலிகள் பலியானதை அப்போது குறிப்பிட்டார்.
பல்வேறு கால கட்டங்களுக்கு பிறகு இப்போது மீண்டும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இணையதளம் மூலம் சில தவறான பிரச்சாரம் நடக்கிறது. இது நீடிக்காது. முத்துக்குமார் போன்ற தியாக இளைஞர்களின் கனவு வீண்போகாது. இலங்கையில் மீள் குடியேற்றம் நடக்கிறது. அங்குள்ள அகதிகள் முகாமில் 30 ஆயிரம் பேர் இருப்பதாக இவர்கள் சொல்கிறார்கள். ஆனால் ராஜபக்சே 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் இருப்பதாக கூறுகிறார்.
ஒவ்வொரு முகாமில் இருந்து இன்னொரு முகாமுக்குதான் மக்களை மாற்றுகின்றனர். தமிழர் பகுதியில் 100 மீட்டருக்கு ஒரு சிங்கள ராணுவ முகாம் உள்ளது. அங்கு சிங்கள குடியேற்றம் வேகமாக நடக்கிறது. சிவன், முருகன் கோவில்கள் பவுத்த ஸ்தலமாக மாறுகிறது. தமிழர்களால் அங்கு நிம்மதியாக வாழ முடியவில்லை. விடுதலைப் புலிகளை அழித்து விட்டோம் என்று கூறிய பிறகு ராணுவத்துக்கு அங்கு என்ன வேலை?
ஏற்கனவே என்மீது இறையான்மைக்கு எதிராக பேசியதாக 2 வழக்கு உள்ளது. அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை விதிக்கலாம். ஆனாலும் நான் அஞ்சுவதில்லை. விடுதலைப்புலிகளை நான் நேற்றும் ஆதரித்தேன். இன்றும் ஆதரிக்கிறேன். நாளையும் ஆதரிப்பேன். இதன் பொருட்டு எந்த விளைவையும் சந்திக்க தயாராக உள்ளேன். தொடர்ந்து மத்திய அரசு ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது. அதற்கான பலன் வெகுவிரைவில் கிடைக்கும். பீகார் தோல்வி இதில் முதல் கட்டமாக வந்துள்ளது.
காந்திய வழியில் போராடிய பிறகுதான் ஈழத்தமிழர்கள் தனிநாடு தீர்வுக்கு வந்தனர். அதன்பிறகு அடக்கு முறை அதிகமானதால் ஆயுதம் ஏந்தினர். தமிழ்ஈழம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். தாய் தமிழகம் அவர்களுக்கு உறுதியாக இருக்கும்.
பழநெடுமாறன் கூறியது போல் தாய் தமிழகத்தில் இருந்து இளைஞர்களை 5ம் கட்ட ஈழப்போருக்கு அனுப்பும் பணியில் ஈடுபடுவோம். நிறைவாகும் வரை மறைவாக இரு என கவிஞர் காசிஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரன் அதைத்தான் செய்கிறார். உரிய நேரத்தில் பிரபாகரன் வருவார். அவர் தலைமையில் தமிழ் ஈழம் அமையும்’’என்று தெரிவித்தார்.

27 நவம்பர் 2010

கல்முனையில் ஆயுதங்களுடன் புலிகள் என படை உஷார்!

கல்முனைப் பிரதேசத்தில் காணப்பட்ட மர்ம ஆயுததாரிகள் காரணமாக அப்பிரதேசமெங்கும் பலத்த பதட்டம் தொற்றிக் கொண்டுள்ளதுடன், படைத்தரப்பு உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
கல்முனை வெல்லாவெளி பிரதேசத்தில் இன்று காலை சிவில் உடையில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களின் நடமாட்டத்தை சிலர் அவதானித்துள்ளனர். வெளியாரைக் கண்வுடன் சடுதியில் அவர்கள் மறைந்து காணாமற்போயுள்ளனர்.
அவர்களின் பயண திசையானது மட்டக்களப்பிலிருந்து கல்முனை ஊடாக தென்பகுதி நோக்கியதாக (கஞ்சிகுடிச்சாறு பக்கமாக) அமைந்திருந்ததாக அவர்களைக் கண்ட பிரதேச வாசிகள் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர்.
வெல்லாவெளி பிரதேசத்தின் பலரும் அவர்களைக் கண்டிருப்பதாக உறுதிப்படுத்தியுள்ள நிலையில் அப்பிரதேசமெங்கும் பதட்டம் பலமாகத் தொற்றிக்கொண்டுள்ளது.
தகவல் கிடைத்தவுடன் இராணுவம், பொலிசார் மற்றும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உடனடியாக அப்பிரதேசமெங்கும் சோதனை மற்றும் தேடல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும் மர்ம நபர்கள் மாயமாக மறைந்து விட்டிருந்தனர்.
சிவில் உடையில் ஆயுதந்தாங்கிய மர்ம நபர்கள் புலிகளின் உறுப்பினர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் காரணமாக தற்போதைய நிலையில் அம்பாறைப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள பாதுகாப்புத் தரப்பினர் உச்சகட்ட உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.