பக்கங்கள்

26 பிப்ரவரி 2017

தமிழர் நெஞ்சங்களில் இருந்து பிரிக்க முடியாத சாந்தன் எனும் மாமனிதன்!

தனது மதுரக் குரலால் புரட்சித் தீயை உலகத்தமிழர் மத்தியில் பாய விட்ட ஒரு வீரப்போருக்கு உரம் பாய்ச்சிய மகத்தான மாமனிதன் இன்று நம் மத்தியில் இருந்து விடைபெற்றார் என்பது அறிந்து தமிழுலகம் கண்ணீர் மழையில் மூழ்கி கிடக்கிறது.
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை உணர்ச்சிபூர்வமாக எழுச்சியுடன் தமது கம்பீரமான குரலில் பாடி ஈழத்தில் மட்டுமன்றி உலகில் தமிழர்கள் பரவி வாழும் சகல பிரதேசங்களிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே கொண்டிருந்த புரட்சிப் பாடகர் எஸ்.ஜே.சாந்தன் இவ்வுலகை விட்டுச் சென்றுள்ளார். தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்ததோடு, இருதய நோயாலும் நீண்டகாலமாக அவதியுற்று வந்திருந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்.போதான வைத்தியசாலையில் அவர் காலமானார்.    அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தமிழர்களின் போராட்டத்தின் நியாயத்தையும் உண்மைத் தன்மையையும் உணர்ச்சி ததும்ப வெளிக்கொணர்ந்த பெருமை சாந்தனையே சாரும். இதற்கென, விடுதலைப் புலிகளின் தலைவரால் பலமுறை கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.  

19 பிப்ரவரி 2017

சோபிகா கொலையுடன் தொடர்புடையவர் சுவிசில் கைது!


ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் சோபிகா (22) என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணைக்  கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் அகதிகள் செயற்பாட்டாளராகப் பணியாற்றிய போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த 27 வயதான அகதியுடன் நட்புடன் இருந்துள்ளார், அந்த நபர் சோபிகாவை பின் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜேர்மனியின் Ahaus மாவட்டத்தில் சோபிகா (22) என்ற ஈழத் தமிழ்ப் பெண்ணைக் கொலை செய்து விட்டு தலைமறைவாகியிருந்த நைஜீரியா அகதி சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் அகதிகள் செயற்பாட்டாளராகப் பணியாற்றிய போது, நைஜீரியா நாட்டை சேர்ந்த 27 வயதான அகதியுடன் நட்புடன் இருந்துள்ளார், அந்த நபர் சோபிகாவை பின் தொடர்ந்து அவருக்கு தொல்லை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.    இந்த நிலையில் சோபிகாவை மிரட்டிய அந்த நபர் ஒருகட்டத்தில் அவரை கழுத்து, தலை போன்ற பகுதியில் அடித்து கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் சுவிட்சர்லாந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.அவர் மீது ஐரோப்பிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதையடுத்து, சுவிஸ் பொலிசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் என அறியவருகிறது.

16 பிப்ரவரி 2017

ஜெர்மனியில் ஈழப்பெண் படுகொலை!

ஜேர்மனியில் வசித்து வரும் ஈழத்து பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சோபிகா என்ற ஈழத்துப் பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை அதிகாலை 02.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தனது குடியிருப்பு பகுதியில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியிருந்த பெண் தொடர்பில் பொலிஸ் மற்றும் அம்புலன்ஸ் வண்டி உதவிகோரியிருந்த போதிலும், அவர்கள் தாமதமாகவே அந்த இடத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பில் நைஜீரிய நாட்டு அகதி ஒருவர் தொடர்புப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கொலைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட ஈழத்து பெண் சோபிகா ஜேர்மனிக்கு அகதிகளாக வரும் மக்களுக்கு உதவி செய்யும் நற்பணிமன்றங்களுடன் இணைந்து சேவை செய்து வருபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 பிப்ரவரி 2017

எழுவைதீவில் முதலாவது கலப்பு மின் உற்பத்தித்திட்டம்!


இலங்கையின் முதலாவது கலப்பு மின் உற்பத்தி திட்டம்  எழுவைதீவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்கசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி இந்த மின் திட்டத்தை திறந்து வைத்துள்ளார். இந்த திட்டத்தின் ஊடாக காற்றலை சக்தி, சூரிய சக்தி மற்றும் எரிபொருளை பயன்படுத்தி 60 கிலோவோட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முதலாவது கலப்பு மின் உற்பத்தி திட்டம் எழுவைதீவில் நேற்று திறந்து வைக்கப்பட்டது. மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்கசக்தி அமைச்சர் ரஞ்ஜித் சியம்பலாபிட்டி இந்த மின் திட்டத்தை திறந்து வைத்துள்ளார். இந்த திட்டத்தின் ஊடாக காற்றலை சக்தி, சூரிய சக்தி மற்றும் எரிபொருளை பயன்படுத்தி 60 கிலோவோட் மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றின் நிதி உதவியுடன் இந்த மின்உற்பத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கதக்க சக்தியின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 187 மில்லியன் ரூபா செலவில் இந்த மின்உற்பத்தி திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. ஒரு அலகு மின்சாரத்தை 9 ரூபா 14 சதத்திற்கு உற்பத்தி செய்ய முடியும்.இவ்வாறு செய்தி ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 பிப்ரவரி 2017

புளியங்கூடலில் உதவி மருத்துவமனை அமைக்க உதவி கோரப்படுகின்றது!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: வானம், மரம், புல், வெளிப்புறம் மற்றும் இயற்கை32 பரப்பு நிலம் 12 இலட்சம் ரூபா கொள்வனவில், உதவி வைத்தியசாலை நம் ஊரில் அமைய உள்ளது.அதற்கான உங்கள் ஆதரவுக்  கரம்பற்ற இப்பதிவை வரைகின்றோம். அன்பு உள்ளம் கொண்ட புளியங்கூடல் மண்ணின் உறவுகளே!புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எம் ஊரின் மீது அதீத பற்றுக்கொண்ட நம் உறவுகளே! உங்கள் அனுசரணை மூலம் பல சிறந்த விடயங்கள் நம் ஊரில் நடந்தேறியது அனைவரும் அறிந்த விடயமே. முன்பள்ளியின் சொந்தக் கட்டடம் முதல் ஆரம்பிக்க இருக்கும் அடுத்த பகுதிநேர வகுப்புக்களுக்கான ஓர் நிலையம், கட்டணம் இன்றிய பகுதிநேர வகுப்புக்கள் அனைத்தும் உங்கள் அனுசரணையில் நடைபெற்றுவருவதும், ஊர் உறவுகள் அனைவரும் அறிந்தவிடயமே!! பெருமை கொள்ளவேண்டிய விடயமும் கூட. அதுபோல் இந்தப் பதிவும் உங்கள் மீது நம்பிக்கை வைத்து ஊர் மீது பற்றுவைத்த அனைவரின் மீதும் நம்பிக்கைவைத்து மேற்கொண்ட ஓர் சிறந்த விடயமே. உங்கள் அனுசரணையை நாடிவரும் ஓர் பதிவே. அனைவரும் ஊர் வளர்ச்சிக்காகவும், ஊர் மாணவர் கல்வி வளர்ச்சிக்காகவும் செய்யும் எந்த அனுசரணையும் வீணடிக்கப் படவில்லை. உங்கள் பங்களிப்பின் பலன்கள் சிறிது தாமதமானாலும் நடந்தேறும், பலன்பெறும் என்பதை நாம் உறுதியளிக்கின்றோம். தற்போது ஊர்காவற்றுறை அரச செயலகமும் அதன் அதிபரும் எங்கள் ஊரில் ஓர் உதவி வைத்திய நிலையம் அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளனர். அதற்கான காணியை ஊர் வளர்ச்சியில் உழைக்கும் புளியங்கூடல் சிறுவர் நல்வாழ்வு நிலையத்திடம் காணியை தரும்படி கேட்டிருந்தனர். அந்தச் சூழ்நிலையில் அவசரமாக காணியை வேண்ட வேண்டியதாகிவிட்டது. காணி தரும் பட்சத்தில் உதவி வைத்தியசாலையை எங்கள் ஊரில் அமைப்பதாக உறுதி அளித்துள்ளார். முன்பு நாம் வாங்கிய காணியுடன் வேல் கோவில் ஐயாவின் அன்பளிப்பு காணியையும் சேர்த்து ஓர் நூல் நிலையம், மழலைகளுக்கான முன் பள்ளிக் கட்டிடமும் அமைத்துள்ளமை அனைவரையும் மகிழவைக்கும் விடயமே. ஒர் உதவி வைத்திய நிலையம் நம் ஊரில் அமைக்க அரச செயலகம் திட்டமிட்டிருப்பது பெரும் மகிழ்ச்சிக்குரிய விடயமே.அதற்காக புளியங்கூடல் சிறுவர் நல்வாழ்வு நிலையத்தின் ஐரோப்பிய நிர்வாக உறுப்பினர்கள், சில ஊர் நலன்விரும்பிகள் சிலர் சிந்தனைகளின் முயற்சிகளில் வேல் கோவில், நூல்நிலையத்தின் பின் பகுதியில் உள்ள 32 பரப்புக் காணியை 12,00,000(12இலட்சம் ரூபாய்) ரூபாய்களுக்கு வேண்டி உதவி வைத்தியசாலைக்கு 7 பரப்புக் காணியை அரச பணிமனைக்கு எழுத்து மூலம் கொடுத்துவிட்டனர். உதவி வைத்தியசாலை நம் ஊரில் அமையும் என்பது நம்பிக்கை. அது போன்று நாம் கொள்வனவு செய்த இந்த மிகுதி நிலப்பரப்பால் அம்மன் கோவில் பிள்ளையார் கோவில்களுக்கு இடையாக செல்லும் பாதையும் பல காலமாக இடையூறாக வாகனப் போக்கு வரத்து தடையாக உள்ளதும் அனைவரும் அறிந்த விடயமே. இதையையும் இணைக்கமுடியும், அதைவிட சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றம்( சிறுவர் பூங்கா) , ஓர் சிறந்த விளையாட்டு மைதானம், போதிய அளவிலான பகுதிநேர, கணணி வகுப்புக்களுக்கான கட்டிடங்கள் என்பனவற்றை இந்த நிலப்பரப்பில் உருவாக்க முடியும் உங்கள் அனுசரனையுடன். வேறு செயற்திட்டங்களுக்கும் பயன்படுத்த முடியும். இப்போ இந்த நிலப்பரப்பை ஓர் உறவின் பணக் கடன் தொகையாக 7 இலட்சம் ரூபாய்களை பெற்று, அதை முற்பணமாக காணி உரிமையாளரிடம் கொடுத்து சிறுவர் நல்வாழ்வு நிலையத்தின் பெயரில் உறுதி எழுதப்பட்டுள்ளது. மிகுதிப் பணம் 5 இலட்சம் ரூபாய்களும் 2 அல்லது 3 மாதங்களில் தருவதாக உறுதியளித்துள்ளோம். நம் ஊர் உறவுகள், ஊர் பிரிந்து வாழும் நம் உறவுகள் மீது கொண்ட திடமான நம்பிக்கையிலேயே இந்தத் தொகை பணத்தை கடனுதவி, கடன் நம்பிக்கை மூலம் இத்தகைய பிரமாண்டமான நிலப்பரப்பை கொள்முதல் செய்துள்ளோம். புளியங்கூடல் மண் பிறந்த, உருண்டு விளையாடிய, ஊர் காற் றை உள் உணர்வாக சுவாசிக்கும் உறவுகளே. வாருங்கள் உங்கள் கடின உழைப்பின் ஓர் சிறு பகுதியை ஊருக்கும் கொடுத்து, ஊரையும் அந்த நம் உறவுகளையும் சிறப்பாக்குவோம். இந்த நிலப்பரப்பின் 12,00,000 உறுதி எழுத்துக்கூலி. 40,000ரூபா மொத்தமாக 12,40,000ரூபாய்களை (12 இலட்சத்து 40ஆயிரம்)உறவுகளிடமிருந்து ஒன்றுசேர்க்க வேண்டுகின்றோம். அதே போன்று யாராவது மழலைகள் விளையாட்டு முற்றத்தை ( சிறுவர் பூங்கா) உங்கள் மறைந்த உறவுகள் நினைவாகவோ அல்லது உங்கள் பெயரின் அன்பளிப்பாகவோ அமைத்து வைக்கலாம். மழலைகள் மனதை சந்தோசப்படுத்த யாரும் முன்வரலாம்.

தொடர்புகளுக்கு:
சுவீஸ்:- தலைவர் திரு அ. தியாகராஜா
உப தலைவர் திரு பொ. சாந்தலிங்கம்
செயலாளர் திரு கோ. வசந்தராஜா
பொருளாளர் திரு கோ. தர்மசீலன்

ஐரோப்பிய இணைப்பாளர்கள்:
திரு கு.பாலசுப்பிரமணியம்
திரு சு.பேரின்பநாதன்

நன்றி:முருகேசு விஜயன்
(புளியங்கூடல் மாணவர் வளாகம்)

06 பிப்ரவரி 2017

விபத்தில் வேலணையை சேர்ந்த புது மாப்பிள்ளை மரணம்!

யாழ்ப்பாணம் அராலிச்சந்தியில் இன்று முற்பகல் உழவு இயந்திரம் மோதி, மோட்டார் சைக்கிளில் சென்ற கணவன் பலியானார், மனைவி படுகாயமடைந்தார். இந்த விபத்துச் சம்பவத்தில் வேலணைப் பகுதியைச் சேர்ந்த தவநாகேஸ்வரன் பிரதீபன் (வயது 29) என்ற குடும்பஸ்தரே பலியானார். படுகாயமடைந்த மனைவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த உழவு இயந்திரம் அராலிப் பகுதியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளை மோதி 100 மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் சென்று கடலேரிக்குள் இறங்கியிருந்தது. குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் சிக்கிய கணவன் மனைவிக்கு ஆறு நாட்களுக்கு முன்னரே திருமணம் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.