பக்கங்கள்

30 மார்ச் 2018

கட்சிக் கொள்கைகளை மீறியவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை!

திருக்கோவில் பிரதேச சபை தெரிவில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவர் கட்சி கொள்கைகளை மீறி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் , சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் வாக்களித்ததால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க அக் கட்சி தீர்மானித்துள்ளது. தென் தமிழீழம். திருக்கோவில் பிரதேச சபையின் 16 உறுப்பினர்களை கொண்ட முதலாவது அமர்வில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன், ஒட்டுக்குழு ஈபிடிபி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆகியன இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. தலைமை பதவிக்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டமையினால் 16 உறுப்பினர்களது சம்மதத்துடன் திறந்த வாக்கெடுப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டிரு
ந்தது. இவ் திறந்த வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான இராசையா வில்ஷன் கமலராஜன் 09 வாக்குகளும் விவேகானத்தராசா புவிதராஜன் 07 வாக்குகளும் பெற்று 02 வாக்குகள் வித்தியாசத்தில் இராசையா வில்ஷன் கமலராஜன் தெரிவு செய்யப்படடர். இவ் தலைவர் பதவிக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஒருவரும் வாக்களித்தார் அதே போல் உபதலைவர் தெரிவிற்கு இருவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்ட நினையில் சிறிலங்கா சுதந்திர கட்சி உறுப்பினரான சின்னதம்பி விக்னேஸ்வரனுக்கு அதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வாக்களித்திருந்தார். இதனால் கட்சி கொள்கைகளை மீறி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் செயற்பட்டதால் அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையை அக் கடசியினர் எடுக்க முடிவு செய்துள்ளனர்.

27 மார்ச் 2018

மக்களை அபாய நிலைக்குள் தள்ளியுள்ள த.தே.கூட்டமைப்பின் கூட்டு!


ஒற்றையாட்சியை ஏற்று தமிழர் தேசத்தை கூறுபோடத் துடிக்கும் சிங்கள பேரினவாதக் கட்சிகளுடனும் ஒட்டுக் குழுக்களுடனும் இணைந்து தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தமிழ் மக்களின் எதிர்காலத்தை மேலும் அபாய நிலைநோக்கியே நகர்த்தியுள்ளது  என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், தேசிய அமைப்பாளருமான வி.மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒற்றையாட்சியை ஏற்று தமிழர் தேசத்தை கூறுபோடத் துடிக்கும் சிங்கள பேரினவாதக் கட்சிகளுடனும் ஒட்டுக் குழுக்களுடனும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தமிழ் மக்களின் எதிர்காலத்தை மேலும் அபாய நிலைநோக்கியே நகர்த்தியுள்ளது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், தேசிய அமைப்பாளருமான வி.மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயற்பட்டு வருவதோடு பதவிகளுக்காக இனப்படுகொலையாளிகளுடன் இணைந்து தமிழினத்திற்கு துரோகமிழைத்து வருகின்றது என்பதை நாம் பல்வேறு தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். அந்த வகையில் இன்றைய தினமும் இவர்களின் உண்மை முகத்தை துகிலுரித்து காண்பிப்பதற்காக தந்திரோபாய நடவடிக்கையாக யாழ் மாநகரசபை மற்றும் சாவகச்சேரி நகர சபைகளில் முதல்வர் தெரிவில் நாம் போட்டியிட்டிருந்தோம். நாம் முன்னெடுத்து வந்த கொள்கை வழியிலான பதவிகளுக்கு சோரம் போகாத அரசியல் நிலைப்பாட்டின் காரணமாக நாங்கள் உள்ளூராட்சித் தேர்தல் முடிந்த பின் சபைகளில் ஆட்சியமைப்பதில் எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை எனவும் அவர்களின் ஆதரவினைக் கோரப்போவதில்லை என்ற நிலைப்பாட்டினையும் கடைப்பிடித்து வந்திருந்தோம். அந்த வகையில் தமிழினத்தை மாறி மாறி இனவழிப்பு செய்த சிங்கள பேரினவாத கட்சிகளுடனும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஒட்டுக் குழுக்களுடனும் பதவிகளுக்காக கூட்டிணைந்து நாம் கூட்டமைப்பு பற்றி கூறிவரும் கருத்துக்கள் உண்மையானவை என்பதை நிரூபித்துள்ளனர். இன்று தமிழ் தேசியவாதிகள் ஒருபுறமாகவும் தமிழின விரோதிகள் மறுபுறமாகவும் அடையாளங்காணப்பட்டுள்ளார்கள். ஒற்றையாட்சியை ஏற்று தமிழர் தேசத்தை கூறுபோடத் துடிக்கும் சிங்கள பேரினவாதக் கட்சிகளுடனும் ஒட்டுக் குழுக்களுடனும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்து வருகின்றமை தமிழ் மக்களின் எதிர்காலத்தை மேலும் அபாய நிலைநோக்கியே நகர்த்தியுள்ளது. எத்தனை தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சக்திகள் ஒன்றுதிரண்டாலும் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை ஏற்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ்த் தேசியப் பற்றுறுதியுடன் எமது அரசியல் பயணத்தை முன்னெடுப்பதோடு தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காக அயராது உழைப்போம். அதற்காக நாம் எமக்குக் கிடைத்த அரசியல் களங்களைப் பயன்படுத்துவோம் என்பதனை இந்த நேரத்தில் எமது பாசத்திற்குரிய மக்களுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். இன்றைய தமிழ்த் தேசிய அரசியல் கள யதார்த்தத்தினைப் புரிந்து கொண்டு தமிழர் விரோத சக்திகளிடமிருந்து எம்மினத்தை பாதுகாத்துக் கொள்ள அனைத்து மக்களும் எமது அரசியல் இயக்கத்துக்குப் பின்னால் அணிதிரளுமாறு உரிமையோடு வேண்டிக்கொள்கின்றோம்.

26 மார்ச் 2018

யாழ்,மாநகர முதல்வராக ஆர்னோல்ட் தெரிவு!

Ähnliches Fotoயாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

யாழ் மாநகர சபையில்.. 
💥 ஆட்சியமைக்க ஆதரவளித்தவர்கள்: 18 
1. தமிழரசுக்கட்சி – 16 
2. சிறீலங்கா சுதந்திரக் கட்சி – 02 

♦️ஈபிடிபிக்கு ஆதரவளித்தவர்கள்: 13 
1. ஈழ மக்கள் சனநாயக கட்சி – 10 
2. ஐக்கிய தேசிய கட்சி – 03 

♦️தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளித்தவர்கள்: 13 தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 13 

இறுதியில் தமிழரசுக்கட்சி , சிறீலங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் சனநாயக கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகியன இணைந்து யாழ்ப்பாணம் மாநகர சபையில் புதிய அரசை நிறுவுகின்றது. முன்னதாக, இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமான யாழ். மாநகரசபையின் முதலாவது அமர்வில், முதல்வரைத் தெரிவு செயவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இரண்டாவது தடவையாக இரகசிய வாக்கெடுப்புக்கு தெரிவு செய்யப்பட்ட, ஈபிடிபி வேட்பாளர் முடியப்பு ரெமீடியஸ் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்ததை அடுத்து, யாழ். மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட், தெரிவானார். இதையடுத்து, மாநகர முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இம்மானுவல் ஆர்னோல்டின் பெயரை முன்மொழிந்தது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி,வி. மணிவண்ணனின் பெயரை முன்மொழிந்தது. ஈபிடிபி முடியப்பு ரெமீடியசின் பெயரை முன்மொழிந்தது. இதையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டு, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இரகசிய வாக்கெடுப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிறுத்திய ஆர்னோல்ட் 18 வாக்குகளைப் பெற்றார். ஈபிடிபி நிறுத்திய ரெமீடியசும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நிறுத்திய வி. மணிவண்ணனும், தலா 13 வாக்குகளைப் பெற்றனர். இதனால், இறுதி வாக்கெடுப்புக்காக- சம வாக்குகளைப் பெற்ற ரெமீடியஸ் மற்றும் மணிவண்ணன் ஆகியவர்களில் ஒருவரை திருவுளச்சீட்டுமூலம் தெரிவு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, திருவுளச்சீட்டில் இவர்களின் பெயர்கள் எழுதப்பட்டு. அவற்றில் ஒன்று எடுக்கப்பட்டது. அதில் ரெமீடியசின் பெயர் தெரிவானது. இதையடுத்து, மணிவண்ணன் முதல்வர் பதவிக்கான போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இரண்டாவது இரகசிய வாக்கெடுப்பில் ஆர்னோல்டும், ரெமீடியசும் மோதுவர் என்று அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

25 மார்ச் 2018

ஜெனிவா சந்திப்புக்கள் குறித்து செல்வராஜா கஜேந்திரன் வழங்கிய செவ்வி!

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக தமிழீழத்திலிருந்து வருகை தந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அவர்கள் ஜெனிவாவில் நடைபெற்ற சந்திப்புகள் குறித்தும், கோரிக்கைகள் குறித்தும் தாரகம் இணையத்திற்கு வழங்கிய சிறப்பு செவ்வியை நாம் பிரதி பண்ணி வெளியிடுகின்றோம்.நன்றி:தாரகம் இணையம்

24 மார்ச் 2018

உள்ளூராட்சி சபைகளை நடத்த ஒத்துழைப்பு வேண்டும் என்கிறார் சிவஞானம்!

Bildergebnis für சிவஞானம்!வடக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி நிர்வாகத்தை சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்க வேண்டும் என்று வட மாகாணசபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாளை மறுதினம் உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். உள்ளூராட்சி நிர்வாகத்தை உள்ளூர் விடயம் என்பதால் அதற்குள் மட்டுப்படுத்திக்கொண்டு, சேவைகளை வழங்கக் கூடிய வகையில் அனைத்து தரப்பினர்களும் செயற்படுவதே இன்றைய தேவையாக இருக்கின்றது. வடமாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி நிர்வாகத்தை சுமூகமான நிலையில் கொண்டு நடத்துவதற்காக அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். புரிந்துணர்வுகள் இடம்பெற வேண்டும். ஏனைய மாகாணங்களை விட வட மாகாணத்தில் சிறந்த நிர்வாகமாக திகழ வேண்டும். அந்தந்த கட்சிகள் தமது தலைவர்களை தெரிவு செய்வதன் மூலமும், அவர்களுக்கு ஆதரவு அளிப்பதன் மூலமாகவும், சுமூகமான சூழுலை உருவாக்க வேண்டும். முரண்பட்டுக்கொண்டு உள்ளூராட்சி சபைகளை நிர்வகிக்க முடியாது. தனிப்பெரும்பான்மை பெற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும், முழுமையான ஆதரவை ஏனையோருக்கு வழங்கியும், கலந்துபேசியும், சிக்கலில்லாத நிர்வாகத்தை வடமாகாணத்தில் ஏற்படுத்த வேண்டுமென்று அனைத்துக் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

21 மார்ச் 2018

வெவ்வேறு கட்சிகளில் வெற்றி பெற்ற புளியங்கூடல் மைந்தர்கள் மூவர்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்து தமது உறுப்பினர் பதவிகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.இந்த தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றுக்கொண்டவர்களில் மூவர் புளியங்கூடல் மண்ணின் மைந்தர்கள் என்பது புளியங்கூடலுக்கு பெருமை மிகு சிறப்பு அம்சமாகும்.வெவ்வேறு கட்சிகளில் வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிட்டு இருந்தாலும்,கொள்கை முரண்பாடுகளுக்கு அப்பால் இவர்களின் வெற்றி புளியங்கூடல் மக்களின் அரசியல் முன்னேற்றத்தை கோடிட்டு காட்டுகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் போட்டியிட்டு கேதீஸ்வரன் ஞானேஸ்வரன் வெற்றி பெற்றிருக்கிறார்.தமிழரசுக் கட்சியில் போட்டியிட்டு சிவலிங்கம் அசோக்குமார் வெற்றி பெற்றிருக்கிறார் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு சிவகடாட்சம் சிவநேசன்(ரூபன்)வெற்றி பெற்றிருக்கிறார்.இவர்களது அரசியல் பயணம் இனிதே தொடர புளியங்கூடல்.கொம் குழுமம் வாழ்த்தி மகிழ்கின்றது.படம் இதைக் கொண்டிருக்கலாம்: 6 பேர், Ketheeswaran Gnaneswaran உட்பட, பலர் அமர்ந்துள்ளனர், பலர் சாப்பிடுகின்றனர் மற்றும் உணவுபடம் இதைக் கொண்டிருக்கலாம்: 7 பேர், பலர் அமர்ந்துள்ளனர், உணவு மற்றும் உட்புறம்படம் இதைக் கொண்டிருக்கலாம்: 2 பேர், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் தாடி

ஆனந்தசுதாகரனை விடுவிக்க கோரி மைத்திரிக்கு முதல்வர் கடிதம்!

ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதி, ஆனந்தசுதாகரனை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக்கோரி வட மாகாண முதலமைச்சர், சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். ஆனந்தசுதாகரனின் மனைவி யோகராணி, கடந்த வாரம் உடல்நலக் குறைவினால் மரணமானார்.இதையடுத்து, அவர்களின் இரண்டு குழந்தைகளும் பெற்றோரின்றித் தவிக்கும் நிலையிலேயே கருணை அடிப்படையில் ஆனந்த சுதாகரனை விடுவிக்குமாறு முதலமைச்சர் விக்னேஸ்வரன் கோரியுள்ளார். அதேவேளை, ஆனந்தசுதாகரனை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய ஜனாதிபதியை வலியுறுத்துமாறு கோரி, ஆனந்தசுதாகரனின் உறவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இன்று சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளார். முதலமைச்சரின் அழைப்பினையடுத்து முதலமைச்சரை சந்தித்த ஆனந்தசுதாகரனின் உறவினரே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.இதன்போது, ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் தந்தையை விடுவிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தின் பிரதியையும் உறவினர், முதலமைச்சரிடம் கையளித்துள்ளார். இதனையடுத்து, ஆனந்த சுதாகரனின் விடுதலை தொடர்பில் தானும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்த முதலமைச்சர் அதன் பிரதியை உறவினரிடம் வழங்கியுள்ளதுடன், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். ஆயுள் தண்டனை பெற்று சிறையிலுள்ள அரசியல் கைதியான ஆனந்த சுதாகரனின் மனைவி கடந்த 15ஆம் திகதி உயிரிழந்த நிலையில், இறுதிச்சடங்குக்காக குறுகிய நேர விடுப்பில் வந்த ஆனந்த சுதாகரனுடன் சிறைக்கு அவரது மகள் செல்ல முற்பட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தமை குறிப்பிடத்தக்கது.

20 மார்ச் 2018

முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவிய ஐயா நடராஜனின் இழப்பு பேரிழப்பு-சீமான்!

M Natarajan diesஈழப்போரின் அவலங்களை வரலாற்று ஆவணமாக்க வேண்டுமென்கிற எண்ணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைத்த ம.நடராஜனின் செயல் என்றென்றும் நினைவு கூறத்தக்கத்து என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான முறையில் இருந்த அவருக்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை காலமானார். நடராஜனின் இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில், இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ் மொழி காக்க தனது மாணவப் பருவத்திலேயே போராட்டக்களம் கண்டு நம்மொழி செழிக்க இனம் வாழ உழைத்தப் பெருந்தகை முனைவர் ம.நடராசன் அவர்கள் உடல்நலமில்லாது காலமானச் செய்திகேட்டு மனவேதனையும், பெருந்துயரமும் ஏற்பட்டுள்ளது. அரசியல் களத்தில் அவர் ஆற்றிய பணிகளும் வரலாற்றில் முக்கியமானது.ஐயா நடராசன் அவர்கள் அரசியல், இதழியல் மற்றும் தமிழ்ப் பண்பாட்டுக்களங்களில் பணியாற்றி தனி முத்திரைப் பதித்தவர். ‘புதிய பார்வை', ‘தமிழரசி' போன்றப் பத்திரிக்கைகளைத் திறம்பட நடத்தி இதழியல் உலகில் தனக்கெனப் பெருமைக்குரிய இடத்தை அடைந்தவர். மேலும், தமிழரசி அறக்கட்டளை என்றவொன்றினை நிறுவி ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் பலசெய்து, பலரது வாழ்வில் ஒளியேற்றி வைத்தவர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக் காலத்தில் ஐயா நடராசன் தஞ்சாவூரில் நடத்தும் ‘தைத்திருவிழா' நிகழ்வு மிகச் சிறப்பான பண்பாட்டு அடையாளங்களை மீட்டெடுக்கிற பெருநிகழ்ச்சியாகும்.தமிழர்களின் இன்னொரு தாய் நிலமான ஈழத்தில் கடந்த 2009ம் ஆண்டு நம் தொப்புள்கொடி உறவுகள் சிங்களப் பேரினவாதக் கரங்களால் கொத்து கொத்தாய் கொல்லப்பட்டபோது அதனைத் தடுக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் செய்தார். முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஈழப்போரின் வரலாற்று நாயகர்களாக திகழ்ந்த எம்மின மாவீரர்களை காலங்காலமாய் நினைவுகூறும்வகையில் ஈழப்போரின் அவலங்களை மறக்கவே கூடாத வரலாற்று ஆவணங்களாக பதிய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தஞ்சை விளார் சாலையில் ‘முள்ளிவாய்க்கால் முற்றம்' அமைத்து தமிழின வரலாற்றில் பெருமைக்குரிய தடத்தை ஐயா நடராசன் பதித்தது எக்காலமும் நினைவுகூறத்தக்கப் பெருஞ்செயலாகும்.எப்போதும் என் மீது தனிப்பட்ட அன்பும், அக்கறையும் கொண்டிருந்த ஐயா நடராசன் அவர்களின் இழப்பினை எனது தனிப்பட்ட இழப்புகளில் ஒன்றாகவே கருதுகிறேன். ஐயா ம.நடராசன் அவர்களை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரோடு பல்வேறு தளங்களில் பணியாற்றியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ச்சமூகத்தின் பேரிழப்பான ஐயா முனைவர் ம.நடராசன் அவர்களின் மறைவின் துயரத்தில் நானும் ஒருவனாய் பங்கேற்று, ஐயாவுக்கு எனது புகழ் வணக்கத்தைச் செலுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார்.

புலிகளின் ராணுவம் ஒழுக்கமானது என கூறுவதில் தயக்கமே இல்லை:அமைதிப்படை அதிகாரி

Bildergebnis für ltteதமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் தமக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய அதிகாரி உன்னி கார்தா தெரிவித்துள்ளார். 1987-89 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் 9 பேரை கொண்ட குழு அண்மையில் இலங்கை சென்று திரும்பியது. அப்போது இந்திய அமைதிப் படை முகாமிட்டிருந்த வடக்கு பகுதிகளுக்கும் அக்குழு சென்று பல்வேறு இடங்களைப் பார்வையிட்டது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைதிப் படை முன்னாள் அதிகாரியான உன்னி கார்தா கூறியதாவது: அமைதிப் படை காலத்தில் விமானத்தில் இலங்கைக்கு அடிக்கடி பயணித்தேன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிக ஒழுக்கமானவர்கள் என்பதை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கமாட்டேன். திருவனந்தபுரம், சூலூர் விமான படை தளங்களில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்துக்கு பயணித்திருக்கிறேன். வடக்கு பகுதி மக்களுக்கு உணவுப் பொட்டலம் வீசிய ஆபரேஷன் பூமாலையும் நினைவில் இருக்கிறது. இவ்வாறு உன்னி கார்தா கூறினார்.

17 மார்ச் 2018

தேசியத் தலைவரை படைவீரராக்கியது கூகிள்!

கூகுள் தேடு பொறியில இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழ தேசியத் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களின் பெயரை இப்பொழுது படைவீரர் (Soldier) என்று மாற்றியுள்ளது. இது விடுதலைப் புலிகளின் போராட்டத்திற்கு கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது. பொதுவாக கூகுளில் தீவிரவாதிகள் மற்றும் அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் அழிக்கப்படும். தேடு பொறியில் அவ்வாறான தகவல்கள் தரப்படமாட்டாது. அதையும் மீறி தகவல்களை அறியும் நோக்கில் தேடும் பட்சத்தில் தீவிரவாதி என்ற பதத்துடன் குறிப்பிடுவார்கள். இவ்வளவு காலமும் தீவிரவாதி என்று குறிப்பிடப்பட்டிருந்த தமிழீழத் தேசியத் தலைவரின் பெயர் தற்போது ராணுவ வீரர் அல்லது படைத் தலைவர் என்ற தலைப்புடன் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழர்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. இதனை Share செய்வதன் மூலம் அனைவருக்கும் உடனடியாக இந்த வெற்றியை தெரியப்படுத்துங்கள்.

நன்றி:அதிர்வு

கனடாவில் புத்தர் சிலைக்கு நேர்ந்த அவலம்!

கனடாவின் ஒட்டாவா நகரில் உள்ள பௌத்த மத வழிபாட்டு மையத்தில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலை உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது. ஒட்டாவாவில் உள்ள ஹெரோன் வீதியில் அமைந்துள்ள, ஹில்டா ஜெயவர்த்தன பௌத்த மடாலயம் மற்றும் தியான நிலையத்தின் முன்பாக உள்ள தோட்டத்தில், இலங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.இந்தப் புத்தர் சிலையின் தலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கும் நேற்றுக்காலை 7.30 மணிக்கும் இடையில் நடந்திருக்கலாம் என்று ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வரும் ஒட்டாவா காவல்துறையினர், இதற்குப் பின்னால் வெறுப்புணர்வு நடவடிக்கைகள் இருப்பதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர்.

16 மார்ச் 2018

ஐ.நாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மக்களுக்கான தீர்மானங்கள் இல்லை!

ஜெனிவாவில் 2012 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. இலங்கையில் அரசாங்கத்தை கவிழ்ப்பதே அவற்றின் நோக்கமாக இருந்தது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.ஜெனிவா வளாகத்தில் நேற்று நடைபெற்ற இனப்படுகொலை என்ற தொனிப்பொருளிலான இலங்கை குறித்த உப குழுக் கூட்டமொன்றிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.' இலங்கை பிரச்சினைக்கு ஒரு சர்வதேச பரிமாணம் இருக்கின்றது. அதில் சர்வதேச தரப்பு வகிக்க வேண்டிய முக்கிய வகிபாகம் ஒன்றிருக்கிறது. உலகில் எங்கு இவ்வாறு நடந்தாலும் சர்வதேசம் அதில் தலையிட வேண்டும். அந்த விடயத்தில் இலங்கை விதிவிலக்கல்ல. இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் 2012 ஆம் ஆண்டிலிருந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.ஆனால் அந்த தீர்மானங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற் கொள்ளவில்லை. மாறாக அந்த பிரேரணைகளூடாக அரசாங்கத்தை கவிழ்ப்பதே நோக்கமாக இருந்தது. அந்த வடிவத்திலேயே குறித்த தீர்மானங்கள் வரையப்பட்டிருந்தன. இலங்கையில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவே இந்த தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.அதன்படி ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் பொறுப்புக்கூறல் பொறிமுறை அப்படியே மறைக்கப்பட்டு விட்டது. இன்று அந்த நிலைதான் காணப்படுகின்றது. உதாரணமாக இலங்கையின் ஜனாதிபதியும் பிரதமரும் எந்தவொரு இராணுவ வீரரும் சட்டத்தின் முன்கொண்டு வரப்படமாட்டார்கள் என கூறுகின்றனர். அதன்போது மனித உரிமைப் பேரவையில் தீர்மானங்களை கொண்டு வந்த நாடுகள் ஜனாதிபதியையும் பிரதமரையும் பாராட்டுகின்றன. கடந்த மூன்று வருடங்களாக தீர்மானங்களை கொண்டு வந்த நாடுகள் இலங்கையுடன் சிறந்த உறவில் இருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

15 மார்ச் 2018

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் கையளியுங்கள்!ஐ.நா.வில் கஜேந்திரகுமார்!

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார்இலங்கையில் குற்றவிலக்களிப்புக் கொடூரம் தொடர்ந்து தலைவிரித்தாடுகின்றது. அதனை தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அல்லது இடைக்கால சர்வதேச குற்றவியல் ஆயம் ஒன்றை அமைத்து அதனிடம் கையளியுங்கள் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நேற்று கோரிக்கை விடுத்தார் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.'இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். சிங்கள பௌத்த இனவாதக் குழுக்களினால் முஸ்லிம் சமூகம் கடந்த இரு வாரமாக திட்டமிட்ட ஒழுங்குமுறையில் இலக்குவைக்கப்பட்டுவந்திருப்பதை இந்தக் கவுன்சில் அறிந்துள்ளது. மே 2009 இல் யுத்தம் முடிவுற்ற காலத்திலிருந்து இதே போன்ற குற்றங்கள் முஸ்லீம்களுக்கு எதிராக தொடர்ந்து இழைக்கப்பட்டே வருகின்றது. முஸ்லீம் சமூகத்தை நிதி ரீதியில் வெட்டியொதுக்கும் இலக்கோடு இயங்கும் சூத்திரதாரிகள் அதனை ஒப்பேற்றும்வரை எதயும் செய்யாதிருத்தல், இல்லது சிறிதளவே நடவடிக்கையெடுத்தல் என்ற போக்கையே இதுவரை இருந்த அரசுகள் பின்பற்றிவந்துள்ளன.தமிழ் மக்களுக்கு எதிரான இன அழிப்பு யுத்தம் முடிவடைந்த கையோடு இவ்வாறு முஸ்லீம்கள் ஒழுங்குமுறையாக இலக்குவைக்கப்படுகின்றமையை இலங்கைத் தேசம் தன்னைத் தனித்து சிங்கள பௌத்த பேரினவாத நாடாக நிலை மாறும் கொள்கைப்போக்காகவே அர்த்தப்படுத்த முடியும். தமிழர்களுக்கு எதிராக இளைக்கப்பட்ட சர்வதேச மனிதஉரிமைகள் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பில் உரியமுறையில் கவனம் செலுத்துவதற்கு இந்த (மனித உரிமைகள்) கவுன்சில் உட்பட்ட சர்வதேச சமூகம் – தவறியமையே மேற்படி பௌத்த சிங்கள பேரினவாத தேசமாக தன்னை நிலைமாற்றும் இலங்கையின் செயற்போக்கான துணிச்சலைத் தருகின்றது.இந்தநிலமையின் விளைவாகவே இவ்வாறு முஸ்லீம்களும் இலக்குவைக்கப்படுகின்றார்கள். ஆகவே இந்தப் பின்புலத்தில் இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் கையளியுங்கள் அல்லது இடைக்கால சர்வதேச குற்றவியல் ஆயம் ஒன்றை ஏற்படுத்தி அதற்கு அனுப்புங்கள் இதனிலும் குறைந்த எந்த நடவடிக்கை மூலமும் (இலங்கையில் தொடரும்) குற்ற விலக்களிப்பு (கொடூரத்தை) முறைமையை நிறுத்தச் செய்ய முடியாது என்றார்.

11 மார்ச் 2018

மெலிஞ்சிமுனை அந்தோனியார் ஆலய உணவில் நஞ்சு!

Bildergebnis für மெலிஞ்சிமுனைஊர்காவற்றுறை மெலிஞ்சி முனை புனித அந்தோனியார் ஆலயத்தில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98பேர் ஊர்காவற்றுறை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இவர்களில் ஒரு பகுதியினர் யாழ்,போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று சனிக்கிழமை மெலிஞ்சிமுனை புனித அந்தோனியார் ஆலயத்தில் இரு பகுதியினரால் உணவு வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்ட உணவில் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததாகவும் சந்தேகிக்கப்படுகின்றது.இவ்வுணவில் வேண்டுமென்றே நஞ்சூட்டப்பட்டதா அல்லது தவறுதலாக நஞ்சு கலந்ததா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.தொடர் வாந்தி,வயிற்றோட்டம் என்பனவால்  சிலரது உடல் நிலை ஆபத்தாக உள்ளதாகவும் மருத்துவமனையை ஆதாரம் காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.