பக்கங்கள்

30 நவம்பர் 2011

காணாமல் போன மாணவன் விடுதி திரும்பினார்.

நேற்று முன்தினம் முதல் காணாமல் போயிருந்த யாழ்.பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறை மாணவன் வேதாரணியம் லத்திஸ் நேற்றுத் திங்கட்கிழமை மாலை விடுதிக்குத் திரும்பியுள்ளார்.
இது தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.
அத்துடன் இந்த மாணவனுக்கு எந்தவிதமான பிரச்சனையும் தற்போது இல்லை என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
எனினும் இந்த மாணவனுக்கு என்ன நடந்தது என்பதை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடகங்களுக்கு தெரிவிக்க தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 27ம் திகதி மாவீரர் தினத்தன்று இரவு குறித்த மாணவன் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ் பல்கலைக்கழக மாணவன் வெள்ளை வாகனத்தில் வந்தவர்களினால் கடத்தப்பட்டு வவுனியா நகரப்பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டு சரளமாக தமிழில் உரையாடிய மூவரினால் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும்.
இவர் முன்னாள் புலி இயக்கப் போராளி என்பதால் இவரிடம் யாழ்.பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் முன்னாள் போராளிகளின் விபரங்களையும் தருமாறும் மாவீரர் தினம் கொண்டாடுமாறு யார் உங்களுக்குப் பின்னால் நின்று செயற்படுகிறார்கள், எந்த அரசியல் வாதியின் பின்னனியோடு இதைச் செய்தீர்கள் என்ற பல கோணங்களில் விசாரிக்கப்பட்டதாக தெரியவருகிறது
யாழ்.சாவச்சேரி பொலிஸ் நிலையத்தில் மாணவன் விசாரிக்கப்பட்டதன் பின்னர் தற்போது வீடு வந்துள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதே வேளை இந்த மாணவனின் பெற்றோர் மிகவும் பயப் பீதியுடன் இருப்பதாகவும் இந்த மாணவன் இந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாதவராக இருப்பதாக அவரைச் சென்று பார்வையிட்டுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர்.

கரைச்சி பிரதேச சபையின் களஞ்சியத்தை உடைத்து திருடினர் சுதந்திரக் கட்சியினர்!

கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபையின் களஞ்சிய அறை உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருள்கள் சுதந்திரக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நீலப்படையணியினால் அபகரிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது.
கரைச்சிப் பிரதேச சபையின் களஞ்சிய அறை தனியார் காணி ஒன்றில் அமைந்துள்ளது. “நேற்று மதியம் களஞ்சிய அறைக்கு வந்த சிலர் பூட்டுக்களை உடைத்து அங்கிருந்த பொருள்களைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
விசாரித்ததில் அவர்கள் கிளிநொச்சி சுதந்திரக் கட்சி அலுவலகத்தில் இருந்து வந்தவர்கள் என்று தெரிந்தது. அதனால் தான் அவர்களுக்கு எதிராகப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளோம்” என்று கூறினார் பிரதேச சபைத் தலைவர் நா.வை.குகராஜா.
487928 இலக்கமுடைய “எல்வ்’ ரக வாகனத்தில் வந்தவர்களாலேயே பொருள்கள் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸார் தமது முறைப்பாட்டைப் பதிவதற்கு முதலில் மறுத்தார்கள் என்றும் சுதந்திரக் கட்சியினருடன் பேசி சமாதானமாகச் செல்லுமாறு கூறினார்கள் என்றும் பிரதேச சபையினர் தெரிவித்தனர்.
சுதந்திரக் கட்சி அலுவலகத்துக்குச் சென்று பிரதேச சபை ஊழியர்கள் கேட்டதற்கு “தனியார் காணியில் இருந்ததால் தாங்கள் பொருள்களை எடுத்து வந்தனர்” என்று கூறப்பட்டதாகவும் தெரிகிறது.
சம்பவம் குறித்து சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் கீதாஞ்சலியுடன் தொடர்புகொண்டு கேட்ட போது சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த எவரும் இந்தச் சம்பவத்தில் தொடர்புபடவில்லை என்று கூறினார். நீலப்படையணியினர் ஏதாவது செய்தார்களா? என்பது பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றார்.

29 நவம்பர் 2011

யசூசி அகாசி தமிழ்தேசிய கூட்டமைப்பை சந்தித்தமை வெறும் கண் துடைப்பா?

ஜப்பானின் முன்னாள் சிறப்பு சமாதானத் தூதுவர் யசூசி அகாசியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான ஏழு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்தச் சந்திப்பு கொழும்பு ஹில்டன் விடுதியில் இன்று முற்பகல் 11.30 மணி தொடக்கம் 12.30 மணி வரை இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள், இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வு, வடக்கு,கிழக்கில் தொடரும் இராணுவக் கெடுபிடிகள், அரசியல்தீர்வு விடயத்தில் கடைப்பிடிக்கப்படும் இழுத்தடிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து தாம் சிறிலங்கா அரச பிரதிநிதிகள், அதிகாரிகளைச் சந்திக்கின்ற போது கலந்துரையாடுவதாக யசூசி அகாசி தம்மிடம் வாக்குறுதி அளித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
போர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு நியாயமான அரசியல்தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு இதுவே சரியான தருணம் என்றும், இதன் மூலவே சிறிலங்காவின் பொருளாதார நிலையை உயர்த்த முடியும் என்றும் அகாசி கூறியதாக சுரேஸ் பிறேமச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், பொன்.செல்வராசா, அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா அதிபர், வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களைச் சந்தித்த பின்னரே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அகாசி சந்தித்துள்ளார்.
அவர் மூன்று நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று ரோக்கியோ புறப்பட்டு செல்லவுள்ளார்.
இந்தநிலையில் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சுட்டிக்காட்டிய விடயங்கள் குறித்து தாம் சிறிலங்கா அரச பிரதிநிதிகளைச் சந்திக்கின்ற போது கலந்துரையாடுவதாக அகாசி கொடுத்துள்ள வாக்குறுதி பற்றிக் கேள்வி எழுந்துள்ளது.

யாழ்,பல்கலையில் யாரோ பந்தம் கட்டி விளையாடியுள்ளனர்,அது மாவீரர் சுடரல்ல"என்கிறார் கத்துருசிங்க.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இரவோடிரவாக எவரோ பந்தம் கட்டி விளையாடியுள்ளனர். அதற்குப் பெயர் "மாவீரர் சுடர் அல்ல, தீப்பந்தமே'' என்று யாழ்.மாவட்ட இராணுவக் கடடளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பரபரப்பாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பிரபாகரனின் ஆட்சி கவிழ்ந்து இரண்டரை வருடங்கள் ஆகின்றன. தற்பொழுது மத்திய அரசின் ஆட்சியே இங்குள்ளது. மறந்து செயற்படுபவர்கள் இதைத்தான் நினைவுகூர்ந்து பார்க்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் ஆண்கள் மற்றும் பெண்கள் விடுதிகளின் தண்ணீர்த் தாங்கியின் உச்சியில் நேற்று முன்தினம் இரவு திடீரென மாவீரர் சுடர் ஏற்றப்பட்டது.
மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க மாணவர்கள் தயாராக நின்றமையையொட்டி அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், யாழ்.பல்கலை வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் யாழ். கட்டளைத்தளபதியிடம் வினவியபோதே அவர் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு:
"இல்லை....இல்லை.... நீங்கள் கூறுவது போன்று அதற்குப் பெயர் மாவீரர் சுடர் இல்லை, தீப்பந்தம். இரவோடிரவாக எவரோ பந்தம் கட்டி விளையாடியுள்ளனர். அதுவே இங்கு நடந்துள்ளது. வேறொன்றுமில்லை.
நீங்கள் கூறுவது போல யாழ்ப்பாணத்தில் எவரும் மாவீரர் தினத்தை அனுஷ்டித்ததாகத் தகவல் இல்லை. இங்கு பிரபாகரனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பல வருடங்கள் ஆகின்றனவே. அரசின் ஆட்சிதான் இங்குள்ளது என்பதை சிலர் மறந்து செயற்படுகின்றனர்'' என்றார் ஹத்துருசிங்க.

28 நவம்பர் 2011

இலங்கை தமிழ் பெண்ணின் உடலிலிருந்து ஏழு கம்பித் துண்டுகள் மீட்பு!

சவுதி அரேபியாவிற்குப் பணிப்பெண்ணாகச் சென்ற மற்றுமொரு இலங்கைப் பெண்ணின் உடலில் இருந்து 7 கம்பித் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அராப் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இலங்கையைச் சேர்ந்த 22 வயதுடைய இளம் யுவதியான பாலசுப்பிரமணியம் சசிக்கலா என்ற பணிப்பெண்ணை உடல் வருத்தம் எனக் கோரி அவருடைய வீட்டு உரிமையாளர் கடந்த வியாழக்கிழமை தம்மான் மத்திய வைத்தியசாலையில் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை குறித்த இளம் யுவதியை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் அவரது உடலில் இருந்து 7 கம்பித் துண்டுகளை மீட்டுள்ளனர்.
குறித்த பெண்ணை பார்வையிட ரியாத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இவ்விடயம் குறித்து விசாரணை நடத்துமாறு சவுதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளருடைய மனைவி (எஜமானி) தனக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டதாகவும் என்ன நடந்தது எனத் தெரியாது எனவும் இளம் இலங்கைப் பணிப்பெண்ணான சசிக்கலா நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஓகஸ்ட் 22ம் திகதி தான் வேலைக்கு வந்தது தொடக்கம் வீட்டு எஜமானி தன்னை தவறாக நடத்தி வருவதாக சசிக்கலா குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி குறித்த வீட்டு உரிமையாளர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் இன்று காலை விசாரணைக்கென பொலிஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகள் முடிவும்வரை இலங்கைப் பணிப்பெண் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என அராப் செய்திச் சேவை குறிப்பிட்டுள்ளது.

27 நவம்பர் 2011

எங்களின் வாக்குகளில் ஆட்சி அமைத்து விட்டு எம்மையே முடக்குவது எவ்வளவு கொடுமை!

19 11 2011 முதல் இனம் காக்க உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களை போற்றும் வகையில் தமிழர் எழுச்சி வார நிகழ்வை ஒரு வாரத்திருக்கு நாம் தமிழர் கட்சி ஏற்பாடு செய்து இருந்தது, இதன் முதற்கட்டமாக 19 11 2011 அன்று வில்லிவாக்கத்தில் நடைபெற இருந்த பொது கூட்ட அனுமதியை திடீரென ரத்து செய்தது தமிழக காவல்துறை.
அது மட்டுமல்லாமல் டிசம்பர் 6ம் தேதி வரை நாம் தமிழர் நடத்தும் எந்த கூட்டத்திற்கும் அனுமதி வழங்கப்படவில்லை, தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பிரச்சாரம் செய்வது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் என காவல்துறை காரணம் கூறியும் பல்வேறு காரணங்களை கூறியும் நாம் தமிழர் எழுச்சி வார நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும் உள்ளரங்கங்களின் அந்நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 25.11.2011 அன்று சென்னை அம்பத்தூரில் உள்ள ‘ஆஸ்ஸி’ பள்ளி மைதானத்தில் நடந்த நாம் தமிழர் குடும்ப விழாவில் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.
அவர் பேசுகையில்,
என்ன உங்கள் பிரச்சனை. சீமானை பேசவிட்டால் விடுதலைப்புலிகளை ஆதரிச்சுப் பேசுவான். சீமானை பேசவிட்டால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை பற்றி பேசுவான். உன்னை யார் தடை செய்ய சொன்னது. தடையை நீக்கு என்கிறோம். நாங்கள் ஆதரித்து பேச வேண்டும் தடையை நீக்கு என்கிறோம். முதலில் அதை புரிந்துகொள்ளுங்கள்.
ஒரு பொது வாக்கெடுப்பை இந்த நாட்டில் இந்த அரசுகள் செய்யுமா. விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு தடை தேவையா இல்லையா. ஒரு வாக்கெடுப்பை நடத்துமா. 100க்கு 99 விழுக்காடு விடுதலைப்புலிகள் மீதான தடை தேவையில்லை என்று மக்கள் வாக்கு செலுத்துவார்கள். நீங்கள் எல்லாவற்றையும் எங்களுக்குள் திணிக்கிறீர்கள்.
விடுதலைப்புலிகளை பிறந்ததிலிருந்து ஆதரிச்சு பேசுகிறேன். என் ஆத்தா பேசுறாள். என் அப்பன் பேசுறான். என்னுடன் பிறந்தவன் அத்தனைப் பேரும் பேசுறான். என் உயிர் தமிழ்ச் சொந்தங்கள் அத்தனை பேரும் பேசுறான். அனுமதி கொடுக்கவில்லை என்றால் ஆதரிச்சு பேசிட மாட்டேனா. பிரபாகரன் பிறந்த நாளை ரோட்டில் கொண்டாடவில்லை. ஒவ்வொரு தமிழனும் வீட்டில் கொண்டாடிக்கொண்டிருக்கிறான்.
உங்களுக்கு என்ன தெரியும், பிரபாகரனை யார் என்று தெரியுமா? என்ன தெரியும். மாவீரர் தினம் கொண்டாடிவிடுவார்கள். சுவரொட்டி ஒட்டக் கூடாது. மாவீரர் தினம் கொண்டாட அனுமதியில்லை. ஏன். என் இனத்தின் மானத்தையும், என் இனத்தையும் காப்பாத்த செத்தான்ல்ல அதுக்காக கொண்டாடிவிடக் கூடாது. என் நாடு. என் பூமி. மானத் தமிழர்கள் வாழுகிற பூமி. என் இனத்தின் மானத்தை காக்க செத்தவனுக்கு நான் நன்றி சொல்லக்கூட இந்த மண்ணில் உரிமை இல்லை.
இத்தனை கூட்டங்கள் நாங்கள் நடத்தியிருக்கிறோம். 21 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்து, பல்வேறு தலைவர்கள், பல்வேறு கட்சிகள் பேசியிருக்கிறார்கள். அதனால் இந்த மண்ணில் நடந்த ஏதாவது ஒரு அசம்பாவிதத்தை நீங்க சொல்லுங்க. பிறகு இந்த கூட்டத்துக்கு தடை போடுங்கள். ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுடைய சட்டம், உங்களுடைய செயல்பாடுகளை முடக்கும். என்னுடைய பேச்சை நீங்கள் தடை செய்யலாம். ஆனால் என்னுடைய உணர்வையும், என்னுடைய கனவையும் எந்த சட்டமும் தடை செய்ய முடியாது. அதை நீங்க புரிந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒவ்வொரு தடைவையும் இதை செய்துக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஒவ்வொரு தடைவையும் பணிந்து பணிந்து போவோம் என்று எதிர்பார்த்துக்கிட்டு இருக்கீங்க. இதுவெல்லாôம் சாத்தியமில்ல. குறைந்தபட்சமாவது ஒரு கட்டுப்பாடுகளை போட்டாவது கூட்டம் நடத்த அனுமதிச்சிருக்க வேண்டும்.
இது உண்மையிலேயே ஜனநாயக நாடா. அமெரிக்காவில் தடை இருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தடை இருக்கிறது. பிரான்சில் தடை இருக்கிறது. கனடாவில் தடை இருக்கிறது. ஜெர்மனில் தடை இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளிலும் தலைவர் பிறந்த நாளும், மாவீரர் தினமும் எழுச்சியாக் கொண்டாட அந்த நாடுகள் அனுமதிக்கிறது. ஏன். அந்த நாடுகள் கருத்து சுதந்திரம் உள்ள நாடு. இந்தியா கருத்து சுதந்திரமற்ற ஒரு சர்வாதிகார நாடு.
இதில் தமிழர்களுக்கென்று ஒரு அரசு இருக்கிறது. எந்த தமிழனும் தமிழராக இருக்கக்கூடாதுன்னு சொல்றத்துக்கு ஒரு அரசு இருக்கிறது. இதைவிட ஒரு கேவலம். இதைவிட ஒரு இழிநிலை எதுவுமே இருக்க முடியாது. இந்த மண்ணின் மகன், ஒரு தமிழன் தன்னை தமிழன் என்று சொல்வதே தேசத் துரோக குற்றம் என்று சொன்னால் இதைவிட கொடுமை எங்கே இருக்கிறது. எங்களுடைய வாக்கை வாங்கி அதில் வலிமையைப் பெற்று ஆட்சியை அமைத்து, அதிகாரங்களை பெற்றுக்கொண்டு, எங்களிடமே அதைக்காட்டி, எங்களை நசுக்குவது, எங்களையே முடக்குவது என்பது எவ்வளவு கொடுமையானது.
கடலூரில் கூட்டம் நடத்தக் கூடாது. ஏன். அங்க டிரைனேஜ் தோண்டிக்கிட்டு இருக்காங்களாம். கழிவு போவதற்கு கால்வா. அது தடைப்பட்டுவிடுமாம். என்னடா காலக்கொடுமையா இருக்குது. இதெயெல்லாம் முதல்ல நிறுத்திகிருங்க. எங்களை ஒருபோதும் நாங்கள் மாத்திக்கொள்ள முடியாது. அதை நீங்கள் புரிந்துகொள்ளுங்கள். இவ்வாறு பேசினார்.

தலைவரின் பிறந்த நாளை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய யாழ்,பல்கலை மாணவர்கள்.

தமிழீழ தேசிய மாவீரர் நாள், மற்றும் தேசியத் தலைவரது பிறந்தநாள் நிகழ்வுகள் யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என்பதால், பல்கலைக்கழக வளாகத்தை கடந்த இரண்டு நாட்களாக சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரும், படைப் புலனாய்வாளர்களும் சுற்றி வளைத்துள்ளனர்.தமிழீழ மண்ணிற்கும், மக்களிற்கும் உயிரீகம் செய்த மாவீரர்களை நினைவில் கொள்ளும் மாவீரர் நாள் நினைவு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டவுடன், கடந்த 24ஆம் நாள் மாவீரர்களை நினைவேந்தியும், தமிழீழத் தேசியத் தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதனைத் தொடர்ந்து சிறீலங்கா காவல்துறையினர் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும், வெளியே படையினரும், படைப் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, கல்விச் சமூகத்தை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் மறுநாள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
நேற்று (26-11-2011) தமிழீழத் தேசியத் தலைவரது பிறந்தநாள் வாழ்த்துக் கொண்டாட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்த்த ஆக்கிரமிப்புப் படையினர், பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றி தொடர் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
52-5476 என்ற இலக்கத்தகடுடைய கறுப்பு நிற பிக்-அப் ரக ஊர்தியும், இலக்கத்தகடு அற்ற வெற்ளைச் சிற்றூந்தும் பல்கலைக்கழகத்தை சுற்றி நேற்றிரவு வரை வட்டமிட்டுக்கொண்டிருக்க, பொது உடையில் படைப் புலனாய்வாளர்கள் சுற்றிவர குவிக்கப்பட்டிருந்தனர்.
இருந்த போதிலும், இவர்கள் அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவியது போன்றும், சிங்களத்தை தலைகுனிய வைத்தது போலவும், யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் நேற்றிரவு துணிகரமாகப் பட்டாசு கொழுத்தி தேசியத் தலைவரது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.
பட்டாசு சத்தத்தைக் கேட்ட செய்தியாளர்கள் பல்கலைக் கழகத்தைச் சுற்றி நின்ற படையினரே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளுகின்றனர் என அச்சமடைந்து அங்கு சென்ற பின்னரே உண்மை நிலையை அறிந்து திரும்பி இருக்கின்றனர்.
இன்றைய தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பல்கலை வளாகத்தில் மாணவர்கள் எழுச்சி நிகழ்வுகளை மேற்கொள்வர் என்ற எதிர்பார்ப்பில் சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படையினரும், படைப் புலனாய்வாளர்களும் தொடர்ந்தும் குவிக்கப்பட்டிருப்பதாக உள்ளே இருக்கும் மாணவர்கள் தெரிவித்தனர்.
சிறீலங்கா அரசாங்கமும், படைகளும் மேற்கொள்ளும் இவ்வாறான ஆயுதமுனை அடக்குமுறைகளால் தமது உணர்வுகளை அடக்கிவிட முடியாது என்றும், இவை தமது விடுதலை வேட்கையை மேலும் அதிகரிக்கச் செய்வதாகவே அமைந்திருக்கின்றது என்ற தகவலை தாயக மக்களிற்கும், புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் தெரியப்படுத்துகின்றோம் என யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் இந்த முக்கிய நாளில் தெரிவித்துள்ளது.

26 நவம்பர் 2011

தன்மானத் தமிழனின் ஒரே தலைவர் தேசியத்தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

தேசிய தலைவர் அவர்களுக்கு,இன்றைய விஞ்ஞான உலகத்தில் எங்களின் உணர்வு எப்படியும் சேரும் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன்.
உலகப் பூப்பந்தில் இருக்கும் ஒவ்வொரு தன்மான தமிழனின் ஒரே தலைவர் என்கிற தகுதி உள்ள தங்களுக்கு எங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
தங்களின் தலைமையில் தமிழ் ஈழத்திற்காக தங்களை உயிராயுதமாக்கிய அனைத்து மாவீரர்களுக்கும் தமிழினத்தின் சார்பாக வீரவணக்கம்.
உயுராயுதம் இது சாதாரண வார்த்தை அல்ல. போனால் வராத உயிரை நொடிப் பொழுதில் தன் இனத்திற்காகவும், நாட்டிற்காகவும், தன் தலைவனின் கட்டளைக்காகவும் அர்ப்பணித்த உள்ளங்களை
வாழ்த்தவும், வர்ணிக்கவும், தமிழில் வார்த்தைகள் இல்லை. உங்களுக்கு முன் நிகழ்ந்த வீர வரலாறுகளும் சரி, அதன் பிறகு நடந்த போராட்டங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால். நீங்கள் தனித்தே நிற்கிறீர்கள்.
முப்பது வருடத்திற்கு முன்பு சிறிய கை துப்பாகியால் துவங்கிய போராட்டம் பிறகு யாருடைய துணையும் இல்லாமல் முப்படைகளின் வளர்ச்சியை கண்டு உலக வல்லரசுகள் அஞ்சின. எங்களை போன்ற தமிழ் உணர்வளர்களைவிட எதிரிகுத்தான் உங்களின் பலம் தெரியும்.
அதன் பலம் அறிந்தே அனைத்து வல்லரசுகளும் உங்களுடன் மோதின. காரணம் உலகில் தமிழனின் ஈழம் வல்லரசாகி நிலைத்து நின்று விடும் என்கிற பயம். அவர்களின் வெற்றிக்கு உங்களுக்கு மரணத்தை அவ்வப்பொழுது ஏற்படுத்துவார்கள். இப்பொழுதும் அப்படியே. இப்படியே அவர்கள் வெற்றி பலமுறை………உலகத்தில் தன்னுடைய மரணத்தை பல முறை கண்ட ஒரே மனிதர் நீங்கள்.
தேசிய தலைவர் அவர்களுக்கு,
கடந்த மூன்று வருடமாக இந்த ஒரு நாளுக்காக (நவம்பர் 27) வருடத்தில் 364 நாட்கள் காத்திருக்கும் உங்களிடம் இருந்து என்ன பதில் வரும் என்று உலக தமிழினம் ஏங்குகிறது. சரியான வழிகாட்டலோ சரியான தலைமையோ இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருகிறது தமிழினம்.
உங்கள் மனம் எப்பொழுது கலையும். சனநாயக முறையில் போராட்டமா இல்லை, மீண்டும் கெரில்லா போர் முறையா. இதில் எம்முறையானாலும் அது உங்களால் மட்டுமே சாத்தியம். நீங்கள் இல்லாத நிலை இப்பொழுது உங்களுக்கு புரியும்.
எத்தனை எத்தனை கிளைகள் உங்கள் பெயரில் இதில் யார் உண்மை என்ற குழப்பம். யார் மீதும் நம்பிக்கை இல்லாமல் தவிக்கின்றோம். ஈழ மண்ணில் பகைவன் நமது அடையாளம் தெரியாமல் நம் இனத்தை அழித்து கொண்டு இருக்கிறான்.
தாய் தமிழகத்தில் இனத்தை அழிக்காமல் மொழி, கலாச்சாரம் மற்றும் வந்தேறிகளின் தலைமை மற்றும் ஆக்கிரமிப்பால் இறையாண்மை என்னும் பெயரில் அழிக்கிறான். ஈழ மண்ணில் சொல்லி அழ முறையிடுவதற்கு நீங்கள். தாய் தமிழகத்தில் சொல்லி அழ தகுதியற்ற நிலையில் நாங்கள். உண்மையில் நாங்களே அகதிகள்.
ஓய்ந்தது தமிழினம் என்று எதிரி நினைக்காமல், ஓயாத அலைகளாக தமிழினத்தை காக்க வரவேண்டும். இதற்கு வேறு தீர்வு இல்லை. பிம்பத்திலும், புத்தகத்திலும் பழைய வரலாறுகளை சொல்லி சொல்லி மழுங்க செய்த எங்களுக்கு வீர வரலாற்றை செய்து காட்டிய தலைவர் நீங்கள்.
நீங்கள் அதிகம் பேசாதவர். அது பயன் இல்லை என்று உங்களுக்கு தெரியும். தலைவா அனைத்து வல்லரசுகளின் தோல்விக்கு மற்றும் தமிழர்களின் ஒற்றுமைக்கு தற்சமயம் உங்கள் குரல் இத்தருணத்தில் கண்டிப்பாக ஒலிக்க வேண்டும்.
செயல் மட்டுமே சாத்தியம் என்று உணர்த்தியவர். அது உலகிற்கு தெரியும். உங்கள் செயலுக்காக காத்திருக்கும் கோடான கோடி தமிழனில் நானும் ஒருவன். நீண்ட நூற்றாண்டுகளுக்கு பிறகு தமிழ் இனத்திற்கு எந்த சூழ்நிலையிலும் விலை போகாத ஒரு நல்ல ஒழுக்கமுள்ள தன்மான தலைவன் உள்ளார் என்ற பெருமையோடு என்றும் உங்கள் வழியில் நாங்கள்.

ஓவியம்,
சென்னை.

சிங்களப் பெண்களினால் யாழில் விபத்துக்கள் அதிகரிப்பு என இமெல்டா தெரிவிப்பு.

தென்பகுதியிலிருந்து யாழ்ப்பணம் வரும் சுற்றுலாப் பயணிகளில் சிங்கள இளம் பெண்கள் அணியும் குட்டை ஆடையைப் பார்க்கும் யாழ்.இளைஞர்கள் மெய்மறந்து மோட்டார் சைக்கிள் ஓட்டுவதனால் யாழ். நவீன சந்தைப்பகுதியில் வீதி விபத்துக்கள் அதிகம் ஏற்படுகிறதாக கூறுகிறார் யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இமல்டா சுகுமார்.
பெண்களின் உரிமை தினமாக இன்று அவரிடம் யாழில் இளையோரின் நிலை தொடர்பாக கருத்துக் கேட்டபோது இவ்விதம் சிரித்தவாறு பதில் அளித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழிற்கு வரும் தென்பகுதி சுற்றுலாப் பயணிகள் தமிழ் பண்பாட்டைச் சீரழிக்கும் விதத்தில் நடந்து கொள்வதாகவும் நடுவீதியில் ஜோடியாக அழைந்து திரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு யாழுக்கு சுற்றுலா வரும் பெரும்பான்மை இனத்தவர்களில் சிலர் குறிப்பாக சிங்கள இளம் பெண்கள் குட்டை ஆடையோடு அலைந்து திரிவதால் எமது இளைஞர்களும் பால் உணர்வுக்குத் தூண்டப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
எமது பண்பாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் எனவும் அடுத்தவர்களின் பண்பாட்டை மதிக்கவேண்டும் எனக் கூறியதோடு எமது சமூகக் கலாச்சரப் பிறழ்வு நிலைக்கு தென்பகுதி சுற்றுலாப் பயணிகளும் ஒருவிதத்தில் காரணிகளாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

25 நவம்பர் 2011

யாழ்ப்பாணத்தில் இப்படியொரு ஆட்டோக்காரன்!

தனது ஓட்டோவில் இருந்து பெண்ணைக் கீழே தள்ளி விட்டு, அவரின் உடைமைகளைக் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று யாழ்ப்பாணப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் பற்றித் தெரிய வருவதாவது,
திருகோணமலையில் இருந்து யாழ். பஸ் நிலையத்துக்கு அதிகாலை வேளை வந்திறங்கிய பெண் ஒருவரை ஆனைக்கோட்டைக்கு ஏற்றிச் சென்ற ஓட்டோச் சாரதி ஒருவர் அந்தப் பெண்ணைக் காக்கைதீவு வெளியில் தள்ளிவிழுத்தி விட்டு அவரின் கைத்தொலைபேசி, பணம் அடங்கிய கைப்பை, உடுப்புப் பை போன்றவற்றுடன் தப்பிச் சென்றுள்ளார். இது தொடர்பாகக் குறித்த பெண் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
திரியாய், திருகோணமலையைச் சேர்ந்த மகாதேவ ஐயர் அமுதச் செல்வி (வயது45) என்பவர் உறவினர் ஒருவரின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காக திருகோணமலையிலிருந்து இரவு நேரப் பயணம் மேற்கொண்டு, அதிகாலை 5 மணியளவில் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
அங்கு நின்ற ஓட்டோ சாரதி, இவர் போகும் இடத்தை விசாரித்து, தானும் ஆனைக்கோட்டையைச் சேர்ந்தவர் என்றும், மரணம் அடைந்தவரின் பெயர் விவரங்களைக் கூறியுள்ளார். இதனை நம்பி, அப்பெண் அவரது ஓட்டோவில் பிரயாணத்தை மேற்கொண்டுள்ளார்.
ஓட்டுமடம் வீதியால், ஆறுகால்மடம் வரை வந்த ஓட்டோ காக்கைதீவு நோக்கி கல்லுண் டாய் வழியாக ஓட் டோவைச் செலுத்திய சாரதி, இடைவெளியில் நிறுத்திவிட்டு பெற்றோல் இல்லை எனக் கூறி,குறித்த பெண்ணை ஓட்டோவைத் தள்ளுமாறு கேட்க பெண்ணும் ஓட்டோவைத் தள்ளி விட்டு, ஏற முற்பட்ட போது அவரைத் தள்ளி விழுத்தி விட்டு ஓட்டோவில் இருந்த பெண்ணின் கைத்தொலை பேசி, உடுப்புப்பை, 1600 ரூபா அடங்கிய கைப்பை ஆகியவற்றுடன் அவர் ஓடித் தப்பியுள்ளார்.
இதுபற்றி ஓட்டோ சங்கத்திடம் பெண் முறையிட்ட போது, பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டாம். நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

தமிழர்களின் அவலங்களை சொல்கிறது ஏ.எவ்.பி செய்தி நிறுவனம்.

"எனக்குக் குடும்பம் இல்லை. ஹிந்திப் படங்களில் மட்டுமே நான் குடும்பங்களைப் பார்த்துள்ளேன்" என வவுனியாவில் இயங்கும் டொன் பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ள ஏனைய பெற்றோரற்ற பிள்ளைகளைப் பார்த்தவாறு கௌசி தெரிவித்தார்.
இவ்வாறு AFP செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தம் முடிவிற்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையிலும் தற்போதும் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமது காணாமற் போன பிள்ளைகளைத் தேடிவருகின்றனர்.
சிறிலங்காவிற்கு வடகிழக்கில் அமைந்துள்ள காடுகளில் 2009 ஏப்ரல், மே மாதங்களில் தமிழ்க் கிளர்ச்சியாளர்களிங்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சிறிலங்காப் படையினரின் தாக்குதல்களில் பல ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் அகப்பட்டிருந்தனர்.
யுத்தம் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில், தன்னிடம் இருந்த தங்கச் சங்கிலி ஒன்றை விற்றுப் பெற்ற பணத்தை தனது பதின்ம வயது மகனான சிவகஜன் யாழ்ப்பாணத்திற்குச் செல்வதற்கான படகுப் பயணத்திற்கு அனுமதி வாங்கக் கொடுத்திருந்ததாகவும், இந்தப் பயணத்தின் போது விடைகொடுத்த தனது மகனை இன்னமும் தான் காணவில்லை எனவும் உசாதேவி செல்வரட்ணம் தெரிவித்துள்ளார்.
"எனது மகனைப் பற்றிய எந்தவொரு செய்திகளும் கிடைக்கவில்லை. ...இது எனது இதயத்தில் மிகப் பெரிய இடைவெளியாக உள்ளது" என அவர் தெரிவித்தார்.
சிவகஜன் இறுதியாகத் தனது வீட்டை விட்டுப் புறப்பட்ட வேளையில் உடைகள், மற்றும் தான் ஒரு விடுதலைப் புலி உறுப்பினர் அல்ல என்பதை உறுதிப்படுத்தி அடையாளப்படுத்துவதற்கான ஆவணங்கள், பாடசாலை வரவுப் பதிவுகள் போன்றனவற்றை உள்ளடக்கிய பொதி ஒன்றை மட்டுமே எடுத்துச் சென்றுள்ளார்.
சிவகஜன் சென்ற படகு யாழ்ப்பாணக் கரையை அடைந்த போது வேறு பயணிகளுடன் இவரும் விசாரணைக்காக இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார் என்பதை உசா அறிந்துகொண்டுள்ளார். ஆனால் அன்றிலிருந்து சிவகஜன் தொடர்பாக பல அதிகாரிகளைச் சந்தித்துக் கேட்டபோதும் எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை.
"எமது பிள்ளைகளுக்கு என்ன நடந்ததென்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகின்றோம். எனது மகன் தற்போதும் உயிருடனிருக்கிறான் என நான் நான் நம்புகின்றேன். அவன் இறந்திருந்தால், அதனை நாள் உறுதிசெய்து கொள்ளவேண்டும். இவ்வாறு பிள்ளைகளைத் தொலைத்த எல்லாக் குடும்பத்தவர்களும் யுத்தத்தின் பின்னரான சுதந்திரத்தை அனுபவித்துக் கொள்வதற்கு முதலில் தமது பிள்ளைகளிற்கு ஏற்பட்ட நிலையை அறிந்து கொள்ளவேண்டும்" என உசா மேலும் தெரிவித்தார்.
தமது பிள்ளைகள் விடுதலைப் புலிகளால் பலவந்தமாகக் கூட்டிச் செல்லப்பட்டு இறுதி யுத்தத்தில் சண்டையிடுமாறு புலிகளால் வற்புறுத்தியிருக்கலாம் என காணாமற்போன பிள்ளைகளின் பெற்றோர் சிலர் அச்சம்கொள்கின்றனர்.
சிலவேளைகளில் தமது பிள்ளைகள் இராணுவ அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் அல்லது தமது பிள்ளைகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருந்தும் தம்முடன் தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருக்கலாம் எனப் பல்வேறு விதமாக காணாமற் போன பிள்ளைகளின் பெற்றோர்கள் சிலர் நம்புகின்றனர்.
சிலவேளைகளில் இவர்கள் இறுதியுத்தம் இடம்பெற்ற போது கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகின்றது. அதாவது இறுதி யுத்த காலப்பகுதியில் 40,000 வரையானவர்கள் தமது உயிர்களை இழந்திருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"காணாமற் போன பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடிப்பதென்பது மிகவும் கடினமான பணியாகும்" என வவுனியாவைத் தளமாகக் கொண்டியங்கும் காணாமற் போன பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களைக் குடும்பங்களுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் பிரிவின் ஆலூசகரான பிரிகேடியர் கல்கமுவ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் உதவியுடன் அரசாங்கத்தால் நிர்வகிக்கப்பட்டு வரும் காணாமற் போன பிள்ளைகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் திட்டத்தில் தற்போது யுத்தத்தின் இறுதியில் காணாமற்போனதாக முறைப்பாடு செய்யப்பட்ட 370 ஆண்பிள்ளைகள் மற்றும் 327 பெண் பிள்ளைகள் தொடர்பாகத் தேடப்பட்டுவருகின்றது.
ஆனால் உண்மையில் காணாமற்போன பிள்ளைகளின் தொகை இதனைவிட மிக அதிகமாக இருக்கும் எனவும் இதனுடன் தொடர்புபட்ட பல சம்பவங்கள் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இப்பிரிவால் இதுவரை 49 காணாமற்போன பிள்ளைகள் தேடிக்கண்டுபிடிக்கப்பட்டு அவர்களது பெற்றோர்களுடன் மீளவும் இணைக்கப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புபட்ட நம்பகமான ஆவணங்கள் கிடைக்கப் பெறாமையாலேயே இவ்வேலைத்திட்டம் மிக மெதுவாக மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
"காணாமற் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள சில பிள்ளைகள் யுத்தத்தின் போது கொல்லப்பட்டிருக்கலாம்" என யுனிசெப்பின் சிறுவர் பாதுகாப்பு சிறப்புப் பிரதிநிதி சஜி தோமஸ் தெரிவித்துள்ளார். காணாமற் போன சிறுவர்களைத் தேடுவதற்காக நீண்ட காலம் தேவைப்படுவதாகவும், ஏனெனில் இவர்கள் தொடர்பாக மருத்துவ அதிகாரிகள் மற்றும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளிடம் தொடர்புகொள்ள வேண்டியுள்ளதாகவும் தோமஸ் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகளால் முன்னர் நிர்வகிக்கப்பட்ட சிறுவர் விடுதி ஒன்றிலிருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 19 வயதை அண்மித்த கௌசி என்கின்ற பிள்ளையை மீளவும் குடும்பத்துடன் இணைப்பதில் கடினங்கள் உள்ளன. ஏனெனில் இவருக்கு நெருங்கிய எந்தவொரு உறவினரும் இல்லை என்பதாகும்.
"எனக்குக் குடும்பம் இல்லை. ஹிந்திப் படங்களில் மட்டுமே நான் குடும்பங்களைப் பார்த்துள்ளேன்" என வவுனியாவில் இயங்கும் டொன் பொஸ்கோ சிறுவர் இல்லத்தில் உள்ள ஏனைய பெற்றோரற்ற பிள்ளைகளைப் பார்த்தவாறு கௌசி தெரிவித்தார்.
கௌசி போன்று பெற்றோரை இழந்த சிறுவர்கள் விடுதலைப் புலிகளால் 'மூளைச்சலவை' செய்யப்பட்டு யுத்தத்தில் பங்குபற்ற அல்லது தற்கொலைக் குண்டுதாரிகளாகப் பயன்படுத்தப்பட்டதாக இந்த இல்லத்தை நடாத்திவரும் அருட்சகோதரி பெற்றில்டா பெர்னாண்டோ தெரிவித்தார்.
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தன் போன்ற பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்குத் தந்தையைப் போல் மட்டுமே செயற்பட்டதாக 19 வயதுடைய இராசகுமார் தெரிவித்தார்.
"மாமா [பிரபாகரன்] யுத்தத்தில் இறந்துவிட்டதாக மக்கள் சொல்கிறார்கள். உண்மையில் நாங்கள் அவரை இழந்தது துரதிஸ்டவசமே" என இராசகுமார் மேலும் தெரிவித்தார்.
சிறிலங்கா அரசாங்கம் பெற்றோரை இழந்து வாழும் இச்சிறார்களின் படங்களைப் பத்திரிகைகளில் பிரசுரித்தபோதும் யாரும் இவர்களை ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை.
"இச்சிறார்கள் தமது குடும்பத்துடன் இணைய முடியாமல் போகலாம். ஆனால் இவர்கள் கடவுளின் பிள்ளைகள். இவர்கள் மீது அன்பு செலுத்த வேண்டும். அத்துடன் இவர்களை விளங்கிக் கொள்ள வேண்டும்" என பெர்னாண்டோ தெரிவித்தார்.

24 நவம்பர் 2011

மூதூரில் காயங்களுடன் ஆசிரியையின் சடலம் மீட்பு!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் காயங்களுடன் இளம் ஆசிரியையொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை சம்பூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
கட்டைபறிச்சானைச் சேர்ந்த குருகுலசிங்கம் சிறிவதனி (வயது 27) என்ற ஆசிரியையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்திலுள்ள சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவ் ஆசிரியை வழமைபோன்று இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றுள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல்லும் காட்டுப்பகுதியில் சடலமொன்று காணப்படுவதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த இடத்திற்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
உறவினர்கள் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளனர். பிரேத பரிசோதனைக்காக சடலம் மூதூர் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

காரைநகரில் உள்ள ஆலயங்களில் மணியோசை எழுப்ப தடை!

மாவீரர் வாரம் ஆரம்பித்து விட்டதனால், காரைநகரில் உள்ள இந்து ஆலயம் எதிலும் மணி ஓசை எழுப்பக்கூடாது என்று கடற்படையினர் தடைவிதித்துள்ளனர். காரைநகர் பிரதேச சபைத் தலைவர் வே.ஆனைமுகன் கடற்படையினரின் இந்த அடாவடித்தனத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈந்த மாவீர்கள் நினைவாக நவம்பர் 21ஆம் திகதியில் இருந்து மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படுவது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் வரை வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் வழமை நிகழ்வாக இருந்தது.
எனினும், போரில் இலங்கை அரசு வெற்றி பெற்றதன் பின்னர் வடக்கு கிழக்கில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு உழுது தரைமட்டமாக்கப்பட்டன. அதனை அடுத்து வெளிப்படையாக மாவீரர் தினம் கடைப்பிடிக்கப்படுவது வடக்கு கிழக்கில் நின்றுபோனது. கடந்த மூன்று வருடங்களில் நவம்பர் இறுதி வாரத்தில் மாவீரர்கள் தொடர்பான எந்தவொரு நிகழ்வும் வெளிப்படையாக இடம்பெறுவதில்லை.
ஆனாலும் இராணுவத்தினரும் கடற்படையினரும் இந்தக் காலப் பகுதியில் அதிக முன்னெச்சரிக்கையுடனும் விழிப்புடனுமே இருந்து வருகின்றனர். மாவீரர் தின நிகழ்வுகள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றனர்.
“காரைநகரில் அடுத்துவரும் ஒரு வாரத்துக்கு கோயில்களில் மணியோசை எழுப்பக்கூடாது, தீபம் காட்டக் கூடாது, ஒலிபெருக்கி பயன்படுத்தக்கூடாது என இராணுவம் தடை விதித்துள்ளது. இதுவரை காரைநகர் மணற்காடு முத்துமாரி அம்பாள் ஆலயம், பண்டத்தரிப்பான்குளம் சிறி சுந்தரேசன் பெருமாள் கோயில் ஆகியவற்றின் அர்ச்சகர்களுக்கு கடற்படையினர் இந்த அறிவித்தலை நேரில் வழங்கியுள்ளனர்.
இதனால் கடந்த மூன்று தினங்களாக நித்திய பூசைகளின்போது இந்தக் கோயில்களில் மணியோசை எழுப்பப்படுவதில்லை. தங்களுடைய அரசியல் காரணங்களுக்காக மக்களுடைய அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பது ஏற்புடையதல்ல” என்றார் பிரதேச சபைத் தலைவர்.

23 நவம்பர் 2011

அங்க சேஷ்டை புரிந்தவரை இழுத்துச்சென்று போலீசில் ஒப்படைத்த யாழ்ப்பாணப்பெண்!

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு அங்க சேட்டை விட்ட இளைஞன் ஒருவரை யாழ். பொலிஸ் நிலையம் வரை இழுத்துச் சென்றுள்ளார் துணிரகமான பெண்.இச்சம்பவமானது இன்று புதன்கிழமை 23ம் திகதி காலை 7 மணியளவில் யாழ். மத்திய பஸ் நிலையத்தில் நடைபெற்றுள்ளது. குறித்த பெண்ணுடன் தொடர்ச்சியாக அங்க சேட்டை விட்டுக் கொண்டிருந்த இளைஞனை வீதியில் வைத்து சேட்டைப்பிடித்து தர தர என இழுத்துச் சென்றதை வீதியில் நின்றவர்கள் விசாரித்த போது அந்தப் பொண்ணுக்கு அங்க சேட்டை விட்டுள்ளார் எனத் தெரியவந்தது.
இதனை அடுத்து அங்கு கூடிநின்றவர்களும் இந்தப் பெண்ணுமாக சேர்ந்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் குறித்த இளைஞனை ஓப்படைத்தனர்.இச்சம்பவம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கொக்கிளாய் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்!

முல்லைத்தீவு – கொக்கிளாய் கடற்பரப்பில் அடையாளம் காண முடியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை குறித்த சடலம் மீட்கப்பட்டதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.
இது குறித்து மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை எனவும் இது மீனவரின் சடலமாக இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததோடு மெலதிக விசாரணைகள் நடைபெறுவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்

22 நவம்பர் 2011

போராட்டம் வெடித்ததால் மலையாள இயக்குனர் தப்பியோட்டம்!

தமிழர்களின் ஜீவாதாரப் பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை உடைந்துவிடும், அதனால் பல லட்சம் தமிழர்கள் மடிவார்கள் என்ற கருத்தை வலியுறுத்தி மலையாள இயக்குநர் எடுத்த 'டேம் 999' என்ற படத்தின் பிரஸ்மீட், மதிமுக மற்றும் திரைப்பட இயக்குநர்களின் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இந்த போராட்டத்தால் சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
டேம்999 என்ற படம் தமிழருக்கு எதிரான கேரளாவின் விஷமப் பிரச்சாரம் என்றும் இந்தப் படத்தை தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்கும் வெளியிடக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நாம் தமிழர் கட்சியின் சீமான் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தப் படத்தின் அறிமுக பத்திரிகையாளர் சந்திப்பு சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் அரங்கில் இன்று மாலை 4 மணிக்கு நடப்பதாக இருந்தது.
இந்த விஷயம் தெரிந்ததும் மதிமுகவினர் பிரசாத் லேபில் குவிந்தனர். நாம் கட்சியினரும் அவர்களுடன் சேர்ந்து தமிழருக்கு எதிரான ஒரு படத்துக்கு சென்னையில் பிரஸ் மீட் வைப்பதா என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
படச்சுருளை உருவினர் போராட்டக்காரர்கள்
மேலும் பிரசாத் லேபில்தான் இந்த டேம் 999 படத்துக்கு பிரிண்ட் போடுகிறார்கள் என்ற தகவல் பரவியதால், அந்த படச்சுருளை கைப்பற்ற லேபுக்குள் புகுந்தனர் ஆர்ப்பாட்டக்காரர்கள். இதில் டேம் 999 படம் என நினைத்து வேறு ஒரு படத்தின் நெகடிவ்வை சில அடிகளுக்கு உருவிவிட்டனர்.
அது ஒரு கன்னடப் படம் என்பது தெரிந்ததும் விட்டுவிட்டனர்.
போராட்டக்காரர்களை அடக்க பெரும் போலீஸ் பட்டாளம் குவிக்கப்பட்டிருந்தது. தடியடிக்கு தயாராக பெரிய லட்டிகளை வைத்துக் கொண்டு நின்றனர் போலீசார்.
இதனால் கொதித்துப் போன இயக்குநர் வ கவுதமன், "தமிழருக்கு எதிராக, தமிழர் நலனுக்கு எதிராக வேண்டுமென்றே படம் எடுக்கிறார்கள். அதை எதிர்க்க வந்த எங்களை கைது செய்வதாக மிரட்டுகிறது நமது போலீஸ். இது என்ன நியாயம்? தமிழ்நாட்டுப் போலீஸ் தமிழருக்கு பாதுகாப்பாக இல்லையே... இலங்கையில் ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்று குவிக்க இலங்கை அரசுக்கு மாஸ்டர் பிளான் போட்டுக் கொடுத்தது சிவசங்கர மேனன், எம்கே நாராயணன் என்ற இரு மலையாளிகள்தான். இப்போது, இங்கே தமிழ்நாட்டிலும் ஒன்றரை லட்சம் பேரை கொல்ல சினி்மா மூலம் திட்டம் போட்டுக் கொடுக்கிறார் இன்னொரு மலையாளி... இதை பார்த்துக் கொண்டு சும்மா இருப்பதா...
இந்த படத்தை தமிழகத்தில் எந்த திரையரங்கிலும் திரையிட விடமாட்டோம். மீறி திரையிட்டால், அந்த திரையரங்கம் அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். அனைத்து திரையரங்குகள் முன்பும் தமிழ் சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் போராட்டம் நடத்துவார்கள்," என்றார்.
இயக்குநர் ஐந்துகோவிலான் உள்பட சினிமா இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் மதிமுகவினர் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.
பாமக ஆர்ப்பாட்டம்
இதைத் தொடர்ந்து பிரஸ் மீட் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் பாமகவினர் வந்து டேம் 999 படத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் பிரசாத் லேபுக்கு போலீஸ் காவல் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மலையாள இயக்குநர் எஸ்கேப்
இந்தப் போராட்டம் குறித்த தகவல் எட்டியதும் படத்தின் இயக்குநர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அடங்கிய குழு, பிரசாத் லேபுக்கு வராமலேயே எஸ்கேப் ஆனது. இதனால் அவர்கள் தங்கியுள்ள விடுதியைத் தேடி புறப்பட்டனர் ஆர்ப்பாட்டக்காரர்கள்.

தொலைபேசி கட்டணங்களை ஸ்ரீலங்கா அரசு அதிகரிக்கிறது.

வெளிநாடுகளுக்கான தொலைபேசி அழைப்புக் கட்டணங்களை அதிகரிக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
2012ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புகளுக்கு, நிமிடம் ஒன்றுக்கு விதிக்கப்படும் வரி ஒரு ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முன்னர் 2 ரூபா அறவிடப்பட்ட நிமிடம் ஒன்றுக்கான வெளிநாட்டுத் தொலைபேசி அழைப்புக்கான வரி இனிமேல் 3 ரூபாவாக அறிவிடப்படவுள்ளது.
அத்துடன் நிமிடம் ஒன்றுக்கான உள்வரும் அழைப்புக் கட்டணமும் 0.7 டொலரில் இருந்து 0.9 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 2 பில்லியன் ரூபாவை மேலதிக வருமானமாகப் பெற முடியும் என்று சிறிலங்கா அதிபர் சமர்ப்பித்த வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

21 நவம்பர் 2011

வரணியில் சுற்றுமதில் விழுந்து மாணவன் பலி!

யாழில். பாடசாலையொன்றின் சுற்றுமதில் இடிந்து வீழ்ந்ததில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று திங்கட்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தில் யாழ்.வரணி வடக்கு சைவப்பிரகாச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி கற்கும் ஜெகநாதன் செந்தூரன் (வயது 7) என்ற மாணவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.
மேற்படி மாணவரின் சடலம் சாவகச்சேரி ஆராத வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

20 நவம்பர் 2011

ஆணைக்குழு அறிக்கையை உள்ளபடியே வெளியிடுவாரா மகிந்த ராஜபக்ஷ?

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ள போதிலும், 400 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கையை அவர் முழுமையாக வெளியிடுவாரா என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று சந்தேகம் கிளப்பியுள்ளது.
உணர்ச்சிபூர்வமான தகவல்கள் அடங்கிய பகுதிகளை நீக்கிவிட்டு அறிக்கையை அவர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்றும் அந்த வாரஇதழ் உயர்மட்ட வட்டாரங்களை ஆதாரம்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பு ஆங்கில வாரஇதழில் வெளியான பத்தியின் சிலபகுதிகள்.
“காலியில் கடந்தவாரம் இடம்பெற்ற கடல்சார் பாதுகாப்புக் கருத்தரங்கில் உரையாற்ற வந்திருந்த அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர், சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதன்போது அவர் இரண்டு சந்தர்ப்பங்களில் சிறிலங்கா தொடர்பான ஒபாமா நிர்வாகத்தின் கொள்கை தொடர்பாக – மனிதஉரிமை விவகாரங்களுக்கு பதிலளிக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், நல்லிணக்க முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டியது தொடர்பாகவும் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்.
சிறிலங்காவுக்கு அமெரிக்கா கண்ணிவெடிகளை அகற்றுதல், கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரழிவுகளுக்காக உதவிகள் போன்ற பாதுகாப்பு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
எவ்வாறாயினும், இந்த ஏற்பாடுகள் மனிதஉரிமைகள் நிலைமையைப் பொறுத்தே அமையும் என்றும் இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிறிலங்கா அதிபரிடம் சமர்ப்பிக்கப்படுவதற்கு ஒருவாரம் முன்னதாக மீண்டும் மீண்டும் கூறப்பட்ட அமெரிக்காவின் இந்தடச் செய்தி மிகவும் முக்கியமானது.
அதவும் மனிதஉரிமைகள் பற்றிய விவகாரங்கள் அதிகம் கரிசனைக்கு எடுத்துக் கொள்ளப்படாத கூட்டம் ஒன்றில் தான் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபர் கொமன்வெல்த் மாநாட்டுக்காக பேர்த் சென்றிருந்த போது, நாடாளுமன்றத்தின் மூலம் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிடப் போவதாக கூறியிருந்தார்.
ஆனால் இந்த அறிக்கையை அவர் முழுமையாக கையளிப்பாரா அல்லது முக்கிய விவகாரங்கள் தொடர்பான கண்டறிவுகள் மற்றும் பரிந்துரைகள் பற்றிய சில பகுதிகளை மட்டும் வெளியிடுவாரா என்பது பற்றி இன்னமும் தெளிவாகவில்லை.
உயர்மட்ட அரசாங்க வட்டாரங்கள் நேற்று தகவல் வெளியிடுகையில், அறிக்கையைப் பகுதியாக வெளியிடுவதற்கே வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதாக கூறியுள்ளன.
400 பக்கங்களைக் கொண்ட அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள உணர்ச்சிபூர்வமான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படாது.
அதேவேளை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த அறிக்கை குறித்து கேள்வி எழுப்புவதற்கு பல மேற்கு நாடுகள் காத்திருக்கின்றன.
அடுத்த சில வாரங்களுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வுக்கு பல பணிகள் காத்திருக்கின்றன. நாளை அவர் நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்.
அதன்பின்னர் அவர் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் அதனை எந்தவகையில் சமர்ப்பிப்பது என்று முடிவு செய்வார்.
மிகமுக்கியமாக, தொடர்நடவடிக்கை குறித்த அவர் முடிவு செய்ய வேண்டியுள்ளது.
ஆணைக்குழுவின் சில உறுப்பினர்கள், தமது இடைக்கால அறிக்கையின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாதுள்ளது குறித்து வெறுப்படைந்துள்ளனர்.
துணைஆயுதப்படைகள் அல்லது ஆயுதக்குழுக்களின் ஆயுதக்களைவு பற்றி விவகாரமும் இதில் ஒன்று.
இந்தப் பரிந்துரை தனியே யாழ்ப்பாணத்தில் செயற்படும் டக்ளஸ் தேவானந்தாவின் குழுவை மட்டும் குறியாகக் கொண்டதல்ல. சட்டத்துக்குப் புறம்பாக ஆயுதங்களைக் கொண்டுள்ள எல்லா தரப்பினையும் நோக்கமாக கொண்டது.
இந்தப் பரிந்துரையை நடைமுறைப்படுத்தியிருந்தால், கொலன்னாவவில் கடந்தமாதம் 8ம் நாள் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றிருக்காது என்று ஆணைக்குழுவுடன் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.“

மொகான் பீரிஷின் கருத்துக்கு திஸ்ஸநாயகம் மறுப்பு.

தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டமை காரணமாகவே தமக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னி;ப்பு வழங்கப்பட்டது என்ற கூற்றை சிரேஸ்ட தமிழ் ஊடகவியலாளர் ஜே எஸ் திஸ்ஸநாயகம் மறுத்துள்ளார்.ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான குழுவின் கேள்விகளுக்கு கடந்த நவம்பர் 9 ஆம் திகதி பதிலளித்த இலங்கை அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர் மொஹான் பீரிஸ், திஸ்ஸநாயகம் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாகவே அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
அவருடைய வழக்கில் ஈடுபட்டவன் என்ற அடிப்படையில் தமக்கு இது தெரியும் என்றும் மொஹான் பீரிஸ் குறிப்பிட்டிருந்தார். எனினும் மொஹான் பீரிஸின் கூற்றை மறுத்துள்ள திஸ்ஸநாயகம் தனிப்பட்ட காரணங்களுக்காக எவருக்கும் பொதுமன்னிப்பை கோரமுடியும்.
ஆனால் இலங்கை அரசாங்கம் தம்மீது சுமத்தியிருந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு மன்னிப்பை கோரியதாக தெரிவிக்கப்பட்ட தகவல் பிழையானது என்று குறிப்பிட்டுள்ளார்.
தாம் எவ்வித குற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என்றும் திஸ்ஸநாயகம் தெரிவித்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் முறுகல்களை தோற்றுவிக்க முயற்சித்ததாக குற்றம் சுமத்தி திஸ்ஸநாயகம் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், குற்றவாளியாக இனங்காணப்பட்டு, 20 வருட கடூழிய சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டார்.
எனினும் பின்னர் உலக நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கொடுத்த அழுத்தத்தினால் மகிந்தவினால் பொதுமன்னிப்பு என்ற பெயரில் அவர் விடுதலையானமை குறிப்பிடத்தக்கது.

19 நவம்பர் 2011

லண்டன் முத்துமாரி அம்மன் ஆலய தேர் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது!

பிரித்தானியத் தலைநகர் லண்டன் ரூட்டிங் பகுதியில் சிவயோகம் அறக்கட்டளையின் கீழ் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் அருள்மிகு இலண்டன் முத்துமாரி அம்மன் திருக்கோயிலின் சித்திரத்தேர் 16.11.2011 இரவு 11.00 மணியளவில் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது.இரவு 09.00 மணிக்கு அர்த்தசாமப் பூசை முடிவுற்று திருக்கோயில் நடைசாத்தப்பட்டது. சுமார் இரவு 11.00 மணியளவில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்று எரிபொருட்கள் (எரிதிரவம்) சகிதம் வந்து, கடந்த 11 வருடங்களாக அம்பாள் திருவீதி உலாவந்த, சித்திரத் தேரை தீவைத்து அழித்துள்ளனர்.
இச்சம்பவத்தை கண்ட அயலில் உள்ளவர்கள் கொடுத்த தகவலில் விரைந்து வந்த பொலிசாரும் தீயணைப்புப் படையினரும் செயற்பட்டு தீயை ஏனய கட்டிடங்களுக்குப் பரவாது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தபோதும், சித்திரத்தேர் மீண்டும் உபயோகிக்க முடியாத அளவிக்கு எரிந்துவிட்டது.
அதே சித்திரத்தேரைத் தற்போது செய்வதாயின் £100,000 ற்கு மேல் செலவாகும் என்று கூறிய இத் சித்திரத்தேரை உருவாக்கிய சிற்பாசிரியார் கலாநிதி ஜெயகாந்தன் சரவணமுத்து அவர்கள் மேலும் கூறுகையில், இத்தேரில் காணப்படும் சிற்பங்களும் அதன் அமைப்பும் பிரத்தியேகமானவை என்றும், அவ்வாறு மீண்டும் உருவாக்கப்படுவது என்பது சாத்தியமற்றது என்றும் தெரிவித்தார்.
நான்கு பேர்களால் நடாத்தப்பட்ட இந்த நாசகாரச் செயற்பாடுகள் அனைத்தும் துல்லியமாக திருக்கோயில் பாதுகாப்பு கமராக்களில் பதிவாகியுள்ளது. இப்பதிவுகள் அனைத்தும் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் அமைந்திருக்கும் கட்டிடத்தின் குத்தகைக் காலம் மார்ச் 2011 உடன் முடிவடைந்துவிட்டது. நீதிமன்றம்; கட்டிடத்தில் இருந்து உடனடியாகத் திருக்கோயிலை வெளிக் கொண்டு செல்லவேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.
நீதிமன்ற தீர்ப்பிற்கமைய, அம்பாளுக்குச் சொந்தக் காணிக்கொள்வனவிற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இம்முயற்சிகளுக்கெதிராகச் சிலர் செயற்பட்டும் வருகின்றனர். புதிய காணிக்கான கொள்வனவிற்கு யாரும் நிதியுதவி செய்யக்கூடாது என்ற பரப்புரைகளும் இடம்பெற்றுவருகின்றது.
“அனுக்கிரகம் பெறுவதிற்கு பணம் கொடுத்துதவி கோயில் கட்டுவதால் எந்த நன்மையும் அடையப்போவதில்லை” என்றும் “ கற்களால் ஆலயம் எழுப்பி வணங்க வேண்டுமென எந்த நியதியுமில்லை” போன்ற கருத்துக்களை பத்திரிகைகளில் பிரசுரிப்பதற்குப் பத்திரிகை ஆசிரியர்களுக்கு அனுப்பிவருகிறார்கள்.
முத்துமாரிக்கு ஆலயம் ஒன்று இருக்ககூடாது என்று ஒருசிலர் பிரச்சாரம் செய்து வரும் காலங்களில் சித்திரத்தேர் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாலயம் தனியாக வழிபாட்டுத்தலமாக அமையாது இந்நாட்டில் தமிழர்களின் கலாசாரச்சின்னமாகவும், தாயகத்தில் பல நூற்றுக்கணக்கான மக்களின் துயர் துடைக்கும் பணியிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் குறிப்பாக இந்துக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்பதை இச்செயற்பாடு எடுத்துக்காட்டுகிறது.
இந்துக்களின் நம்பிக்கையை அழிக்கும் முயற்சியிலும் அம்பாளின் சின்னங்களை உதாசீனப்படுத்தி அம்பாளை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவளுடைய சீற்றத்தில் இருந்து தப்பமுடியாது என்பது நியதி.
பாதுகாப்புப் படையினரின் விசாரனை நடைபெற்றுக்கொண்டிருப்பதால் நால்வர் தீவைக்கும் காட்சிகளை மக்கள் பார்வைக்குத் தவிர்க்கப்படுகின்றன.
சிவயோகம்
அறங்காவலர்.

18 நவம்பர் 2011

தீவக மக்கள் அணிதிரள வேண்டும்.

பண்ணைப் பாலத்தின் திருத்த வேலை குறித்து இவ்விடத்தில் பல தடவைகள் பிரஸ்தாபித்திருந்தும் எதுவும் நடந்த பாடில்லை. மாறாக மாரி காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில், பண்ணை வீதியின் அவலம் பெரும் மோசமாகிவிட்டது. பயணிக்கவே முடியாது என்ற நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து தீவகத்திற்கும் தீவகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்குமான பயண சேவை நடை பெறுகின்றது. மாரி காலம் ஆரம்பித்துவிட்டால் பண்ணை வீதியூடான போக்குவரத்து மிகவும் ஆபத்தானதாகி விடும் எச்சரிக்கையை இவ்விடத்தில் ஏற்கெனவே - பல தடவைகள் தெரிவித்திருந்தும் எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது. பக்குவமாக எடுத்துக் கூறியும் உரியவர்கள் பண்ணை வீதியைத் திருத்த நடவடிக்கை எடுக்காத நிலைமையானது வீதி திருத்தும் பணியில் ஊழல் கடுமையாக வேலை செய்கின்றது என்பதை உணர வைக்கின்றது.
இதன் காரணமாகவே அதிகாரிகள் வாய் மூடி மெளனமாக இருக்கிறார்கள் என அனுமானிப்பதிலும் தவறில்லை. எதுவாயினும் அதிகாரிகளின் மெளனத்திற்காக, பண்ணை வீதி தரக்கூடிய உயிராபத்துக்களை அனுமதிப்பது அபத்தமானது. எனவே இது விடயத்தில் தீவக மக்கள் மற்றும் தீவகப் பொது அமைப்புகள் ஒன்று திரண்டு இரண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதில் ஒன்று, பண்ணை வீதியை புனரமைக்கும் ஒப்பந்த நிறுவனம் தனது பணியை தீவிரப்படுத்த அல்லது ஒப்பந்தத்தை முடிபுறுத்த வேண்டும். இரண்டாவது, பண்ணை வீதித் திருத்தத்தை செம்மையாக மேற்பார்வை செய்யாமல் -புனரமைப்புப் பணியை துரிதப்படுத்தாமல் இருந்த உரிய அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்து அவர்களை நீதிமன்றில் நிறுத்தவேண்டும்.
இந்த இரண்டு பணிகளையும் தீவக மக்கள் செய்யத் தவறும் பட்சத்தில், பண்ணை வீதியில் தண்ணீர் தேங்கி நிற்கும் குன்றுகுழிகளில் விழுந்து எழுந்து பயணம் தொடர்வதையும், சில வேளைகளில் குன்றுகுழிகளில் விழுந்தவர்களின் விழுக்காடு இறுதியானதாகவும் அமைந்து விடுவது தவிர்க்க முடியாமல் போகும். காரைநகர் வீதியை விரைவில் புனரமைக்க முடியுமென்றால், பருத்தித்துறை-வல்லை வீதியை வேகமாக அமைக்க முடியுமென்றால், ஏ-9 வீதியில் ஏகப்பட்ட பணியாளர்கள் நின்று நாளும் பொழுதும் வீதியை விஸ்தரிக்க முடியுமென்றால், பண்ணை வீதிப் புனரமைப்பை மட்டும் ஏன் வேகப்படுத்த முடியாது? தீவக மக்கள் ஓரணியில் திரளாவிட்டால் அடுத்த ஆண்டல்ல அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதேகதி தான்.
ஆகையால் தீவக மக்கள் திரண்டு சட்டத்திற்கு உட்பட்டவாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இது நடந்தால் பண்ணை வீதியில் இறங்கி நடக்க வேண்டிவராது.
நன்றி:வலம்புரி

மீசாலையில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் மரணம்!

நேற்றையதினம் யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் பேருந்து ஒன்றுடன் சொகுசு ஊர்தி ஒன்று மோதிக்கொண்டதில்பெண்ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்று காலை யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்தும் யாழ்நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு ஊர்தியும் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில் 52 அகவையுடைய தேவகுஞ்சரி பரஞ்சோதி என்ற பெண் உயிரிளந்ததுடன் அவரது கனவரான 60 அகவையுடைய செல்லமுத்து பரஞ்சோதி மற்றும் 33 அகவையுடைய ஆர்.சுதர்சன் 22அகவையுடைய எஸ்.தவசீலன் என்பவர்கள் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் பொது மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

17 நவம்பர் 2011

அகதிகளை திருப்பி அனுப்பும் விடயத்தை மீள்பரிசீலனை செய்வதாக உறுதி.

சுவிற்ஸர்லாந்து மற்றும் பிரிட்டனில் அரசியல் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகளைத் திருப்பியனுப்பும் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்வதற்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்தூதரகம் என்னிடம் உறுதி அளித்துள்ளது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், அந்தக் கட்சியின் மனித உரிமை விவகாரங்களுக்குப் பொறுப்பானவருமான டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன தெரிவித்தார்.
அண்மையில் வத்திக்கான், சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜயலத் ஜயவர்த்தன நேற்றுமுன்தினம் நாடு திரும்பினார்.தனது பயணத்தின்போது வெளிநாடுகளில் அகதிகளாக வாழும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை தொடர்பாகவும், சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறித்தும் வெளிநாட்டுத் தலைவர்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு:
நான் சுவிற்ஸர்லாந்துக்கு சென்றிருந்தபோது அங்குள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் தூதரகத்தில் முக்கியஸ்தர்கள் பலரைச் சந்தித்துப் பேசினேன்.சுவிற்ஸர்லாந்து மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கை அகதிகளை நாடு கடத்துவதற்கு எடுத்திருக்கும் முடிவை மாற்றிக்கொள்ளவேண்டும்.
ஏனென்றால், இலங்கையில் யுத்தம் முடிந்துள்ளபோதிலும் நிலையான, ஆரோக்கியமான சமாதானச் சூழல் ஏற்படுத்தப்படவில்லை என்பதால் அந்த அகதிகளை மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்புவது அவ்வளவு உகந்ததல்ல என்பதை இதன்போது சுட்டிக்காட்டினேன். அதுமட்டுமின்றி, சுவிஸிலுள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடமும் சென்று இவற்றை எடுத்துரைத்தேன். அதற்கு இரு தரப்பினரும் இந்தத் தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தனர். சுவிஸ் குடிவரவுத் திணைக்களமும் இதனை கவனத்திற்கொள்வதாகத் தெரிவித்தது.
இதேவேளை, வெலிக்கடை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டுள்ளார். அவர் மீது உங்கள் கவனம் திரும்பவேண்டும் என்று பாப்பரசர் 16ஆவது ஆசீர்வாதப்பரைச் சந்தித்தவேளை கோரிக்கை விடுத்தேன் என்றார் ஜயலத்.

அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை.

இலங்கையை சேர்ந்த 26 வயதான தயாரட்ன ஜயசேகர எனும் இளைஞரொருவர் அவுஸ்ரேலியாவின் சிட்னியிலுள்ள விலாவூட் குடிவரவு தடுப்பு முகாமில் ஒக்டோபர் 26ஆம் திகதி தற்கொலை செய்துள்ளதாக அவுஸ்ரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நேற்று புதன்கிழமை கான்பராவிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகாராலயத்திற்கு அறிவித்துள்ளது.
இதுவரை அவரின் அடையாளம் காட்ட யாரும் முன்வரவில்லை. அத்துடன் இவர் தொடர்பிலான விபரங்களும் தெரியவில்லை.
குறித்த நபர் தான் தமிழர் என கூறிக்கொண்டு சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்குள் நுழைந்து அகதி விசா கோரியவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் தொடர்பான தகவல் அல்லது ஜயசேகரவின் குடும்பத்தவர்கள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவுடன் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளும்படி கோரப்பட்டுள்ளனர்.
இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்:

கொன்சியூலர் பிரிவு,
வெளிவிவகார அமைச்சு,
இல.14, சேர் பாரன் ஜயதிலக்க மாவத்த,
கொழும்பு – 01.

தொலைபேசி : 011 2437635 / 011 4718972
தொலைநகல் : 011 2473899
மின்னஞ்சல் : consular@sltnet.lk

16 நவம்பர் 2011

வெலிக்கடையிலிருந்து செஞ்சோலையில் வளர்ந்த பெண்கள் எழுதிய உணர்ச்சிமிகு கடிதம்!

வெலிக்கடை சிறைச்சாலைப் பெண்கள் பிரிவில் இறுதியுத்தத்தில் சரணடைந்த பல பெண் கைதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இச்சிறைச்சாலையில் 40வரையான தமிழ்ப்பெண் அரசியல் கைதிகள் துன்பங்களைச் சுமந்து வாழ்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் முன்னாள் பெண்போராளிகள். பெண்களுக்குரிய மாதவிடாய் காலங்களில் பாவித்தலுக்கான பொருட்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான சவர்க்காரம் , பற்பசை , பற்தூரிகை முதல் எல்லாவற்றிற்கும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். குறைந்தது ஒருவருக்கு ஒரு மாதம் ஆயிரம் ரூபா அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்குத் தேவைப்படுகிறது. ஆயினும் 5ரூபாய்கூட இல்லாது அவலப்படுகிறார்கள்.
இவர்களில் பலருக்கு உறவினர்கள் சென்று பார்ப்பது கூட இல்லை. காரணம் உறவுகளை போரில் இழந்துவிட்டுத் தனியனாக சிறைவாசத்தை அனுபவிக்கிறார்கள். மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிற இந்த தமிழ் அரசியல் கைதிகளை மறந்துவிட்டதா உலகத் தமிழினம் ? என வேதனையோடு தங்களுக்கான அடிப்படை உதவிகளை எதிர்பார்க்கிற பெண்கைதிகள் 5 பேர் தமக்கான உதவியைச் செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளனர்.
இவர்கள் செஞ்சோலையில் வாழ்ந்து இன்று வெலிக்கடையில் இவர்களைச் சென்று பார்க்க உறவினர்களோ உதவிகளோ இல்லாமல் வேதனையோடு எழுதிய கடிதம்..., வருமாறு:



இவர்கள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல் முகவரி- nesakkaram@googlemail.com
முகவரி:
Nesakkaram e.V
Hauptstr - 210
55743 Idar-Oberstein
Germany
Shanthy Germany - 0049 6781 70723
Fax: +49 (0)6781 70723

பாடசாலைக் காவலாளி சடலமாக மீட்பு!

அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இரவு நேர காவல்க் கடமையில் ஈடுபட்டு வருகின்ற காவலாளியொருவர் இன்று புதன்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கோளாவில் பிரதேசத்தில் மூன்றாம் பிரிவு காளிக்குட்டி வீதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான கந்தன் பாலச்சந்திரன் (வயது 66) என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவாரென அக்கரைப்பற்று பொலிஸார் கூறினர்.
மேற்படி நபர் நீண்டகாலமாக கோளாவில் பிரதேசத்திலுள்ள பெருநாவலர் வித்தியாலயத்தில் இரவு நேரக் காவலாளியாக கடமையில் ஈடுபட்டு வருபவரெனவும் அவ்வாறே நேற்று செவ்வாய்க்கிழமையும் இரவு நேரக் காவல் கடமைக்காக அவர் அப்பாடசாலைக்கு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இன்று புதன்கிழமை அதிகாலை 6 மணியாகியும் மேற்படி நபர் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்கள் அவரைத் தேடி பாடசாலைக்குச் சென்று பார்த்தபோது வகுப்பறைக் கட்டடமொன்றில் மேற்படி நபர் சடலமாக கிடந்தார்.
பின்னர் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தவே சம்பவ இடத்திற்குச் சென்று பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

15 நவம்பர் 2011

இந்திய அதிகாரியை புறக்கணித்த யாழ்,பல்கலை மாணவர்கள்.

யாழ்.பல்கலைக்கழகத்தில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலர் சியாம் சரண் நிகழ்த்திய உரையை மாணவர்கள் புறக்கணித்துள்ளனர்.
கைலாசபதி கலையரங்கில் நேற்று பிற்பகல் “இந்தியாவின் அயல்நாட்டுக் கொள்கையும், இந்திய - சிறிலங்கா நட்புறவும்“ என்ற தலைப்பில் முன்னாள் இந்திய வெளிவிவகாரச் செயலாளரும், நாடுகளின் அபிவிருத்திக்கான ஆராய்ச்சி மற்றும் தகவல் மையத்தின் தலைவருமான சியாம் சரண் உரையாற்றியிருந்தார்.
யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் ஜ.ஏ.சந்திரசிறி, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரி மகாலிங்கம், மற்றும் அரச, இராணுவ அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் வழமைக்கு மாறாக பெருமளவு இராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் எவரும் இந்த நிகழ்வில் பங்கேற்கவில்லை. குறைந்தளவிலான பல்கலைக்கழக விரிவுரையாளர்களே இதில் பங்குபற்றியிருந்தனர்.
இதனால் பெரும்பகுதி ஆசனங்கள் வெறுமையாகவே காட்சியளித்தன.

14 நவம்பர் 2011

புலிகளுடன் பேச நோர்வேயின் உதவியை கேட்டாராம் பிரேமதாசா!

விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ஆர்.பிறேமதாச நோர்வேயின் உதவியை நாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறிலங்காவில் தோற்றுப்போன நோர்வேயின் சமாதான முயற்சிகள் தொடர்பான மீளாய்வு அறிக்கையிலேயே இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.
1990 ஜுனில் விடுதலைப் புலிகளுடன் தொடர்பை ஏற்படுத்த நோர்வேயின் உதவியை பிறேமதாச நாடியுள்ளார்.
விடுதலைப் புலிகளுடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு உதவுமாறு சிறிலங்காவில் நீண்டகாலம் வசித்த நோர்வேயின் அரசியல்வாதியான ஆர்னே பியோரொவ்வை, அப்போதைய சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத் சந்தித்துப் பேசியிருந்தார்.
சிறிலங்கா அதிபர் ஆர்.பிறேமதாசவின் சார்பிலேயே அவர் இந்தச் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
போர்க்கைதிகள் தொடர்பாக நோர்வேயின் ஆதரவுடன் ஜெனிவாவில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஏ.சி.எஸ்.ஹமீத் ஒரு இரகசிய சந்திப்பை மேற்கொண்ட போதும், அதில் எதிர்பார்க்கப்பட்ட எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உண்மையில் சிறிலங்காவில் இருந்து இந்திய அமைதிப்படை வெளியேறிய பின்னர், சிறிலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நோர்வே சேவையாற்றியதாகவும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பின்னர் சந்திரிகா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்ட போது, கனடா, நெதர்லாந்தை உள்ளடக்கிய போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவுக்குத் தலைமையேற்க நோர்வேக்கு அழைப்பு விடுக்கப்பட்டதான- இதுவரை வெளிப்படுத்தப்படாத தகவலும்- இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
1995 ஏப்ரலில் இந்தப் போர்நிறுத்தம் முறிந்து போன பின்னரும் சிறிலங்கா அரசின் முக்கிய அதிகாரிகளும், ஆலோசகர்களும் நோர்வேயின் தலையீட்டை வலியுறுத்தி வந்துள்ளனர்.
நீலன் திருச்செல்வம், லக்ஸ்மன் கதிர்காமர், ஜெகான் பெரேரா, ஜி.எல்.பீரிஸ் ஆகியொர் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
1999இல் கத்தோலிக்கத் திருச்சபை ஊடாக நடத்தப்பட்ட பரஸ்பர கலந்துரையாடலை அடுத்து நோர்வே தெரிவு செய்யப்பட்டது.
ஏற்றுக் கொள்ளத்தக்க மூன்றாவது தரப்புகள் பற்றி விளக்கமளிக்குமாறும், அத்தகைய ஐந்து நாடுகளின் பட்டியலை தயாரித்து வழங்குமாறும், சிறிலங்கா அதிபர் சந்திரிகா குமாரதுங்க விடுதலைப் புலிகளிடம் கேட்டுக் கொண்டார்.
புலிகள் வழங்கிய அந்தப் பட்டியலில் நோர்வே முதலிடத்தில் இருந்தது. அதன்பின்னர் சந்திரிகா குமாரதுங்க நோர்வேயை தெரிவு செய்தார்.
லக்ஸ்மன் கதிர்காமருடனும், ஜி.எல்.பிரிசுடனும் நோர்வேஜியர்கள் 1999இல் பல இரகசிய சந்திப்புகளை மேற்கொண்டனர். இவற்றில் பெரும்பாலானவை சுவிற்சர்லாந்தில் நடைபெற்றன. சந்திரிகா குமாரதுங்கவுடன் கூட இரகசிய சந்திப்புகள் இடம்பெற்றதாகவும் நோர்வேயின் மீளாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, 1990 ஜுன் இரண்டாவது வாரத்தில் போர் வெடித்த பின்னர், நோர்வேயின் தலையீட்டின் கீழ் புலிகளுடன் பேச்சு நடத்தும் எந்த முயற்சியிலும் பிறேமதாச ஈடுபடவில்லை என்று அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ‘தி ஐலன்ட‘ தகவல் வெளியிட்டுள்ளது.

குளத்தில் மூழ்கி ஒருவர் மரணம்!

வவுனியா – கூடன்குளம் முருகையா வாவியில் நேற்று மாலை 04.30 மணியளவில் நீராடச் சென்ற குழுவில் அடங்கிய ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
யாழ். குருநகர் 61ம் வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் 29 வயதுடைய சின்சிலோ வேசான் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று பிரேத பரிசோதனை இடம்பெறவுள்ள நிலையில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

13 நவம்பர் 2011

கடல்சார் பாதுகாப்பு மாநாட்டை பிரித்தானியா,தென்னாபிரிக்கா புறக்கணித்தன!

ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சும், கடற்படையும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள காலி கடல்சார் பாதுகாப்பு மாநாட்டைப் புறக்கணிக்க பிரித்தானியாவும், தென்னாபிரிக்காவும் கடைசிநேரத்தில் முடிவு செய்துள்ளன.
அத்துடன் இந்த மாநாட்டில் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பிக்கவிருந்த சென்னை கிறிஸ்தவக் கல்லூரியின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் உதவிப் பேராசிரியர் கலாநிதி லோறன்ஸ் பிரபாகர், தனது கட்டுப்பாட்டை மீறிய காரணங்களால் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க முடியாதுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான இந்திய கடற்படையின் கண்ணோட்டம் தொடர்பாக இந்திய கடற்படையின் சார்ப்பில் முதன்மை நடவடிக்கை பணிப்பாளர் கப்டன் பாலகிருஸ்ணன் ஆய்வுக்கட்டுரை ஒன்றைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
முன்னதாக இந்தியக் கடற்படையின் மூத்த அதிகாரி ஒருவரே இந்த ஆய்வுரையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியத் தரப்பில் மூத்த கடற்படை அதிகாரிகள் பங்கேற்காததும், பிரித்தானியா, தென்னாபிரிக்கா ஆகியன வெளியேறியதும் சிறிலங்காவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
நாளை தொடங்கவுள்ள இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா, சீனா, பாகிஸ்தான், பிரான்ஸ், அவுஸ்ரேலியா, ஜப்பான், மாலைதீவு, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பங்காளாதேஸ், கென்யா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தென்கொரியா, மலேசியா, ஓமான், கட்டார் ஆகிய நாடுகள் பங்கேற்கவுள்ளன.
நாளை காலை இந்தக் கருத்தரங்கை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்தக் கருத்தரங்கில் இந்தியக் கடற்படையின் ஓய்வுபெற்ற அதிகாரியும், புதுடெல்லியில் உள்ள தேசிய கடல்சார் அமைப்பின் பணிப்பாளருமான வைஸ் அட்மிரல் பிரதீப் கௌசிவா, அமெரிக்க பாதுகாப்புத் திணைக்கள பிரதி உதவிச்செயலர் றொபேட் ஸ்கெர், பேராசிரியர் றொகான் குணரட்ண, சீனக் கடற்படையின் பிரதித் தளபதி வைஸ் அட்மிரல் டிங் யிபிங், கிறிஸ் தர்மகீர்த்தி, பாகிஸ்தான் கடற்படையின் நடவடிக்கைகளுக்கான பிரதி தலைமை அதிகாரி றியர் அட்மிரல் கான் ஹசாம் பின் சாதிக், மலேசிய கடற்படையின் திட்டமிடல் மற்றும் நடவடிக்கைகளுக்கான உதவித் தலைமை அதிகாரி றியர் அட்மிரல் டதோ முசா பின் ஒமர், இந்தியக் கடற்படையின் நடவடிக்கை முதன்மைப் பணிப்பாளர் கப்டன் பாலகிருஸ்ணன், மாலைதீவு தேசிய பாதுகாப்பு படையின் லெப்.கேணல் முகமட் இப்ராகிம் , சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி றியர் அட்மிரல் கொலம்பகே ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கவுள்ளனர்.

குடும்பத்தையே இழந்து நிற்கும் விதவைப்பெண்ணை சீ.ஐ.டி விசாரணைக்கு அழைக்கிறது!

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் சாட்சியமளித்த விதவைப் பெண்ணொருவர், குற்றப்புலனாய்வுப் பிரிவினால் (சி.ஐ.டி.) விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதையடுத்து அச்சமடைந்துள்ளதாக பிபிசி சிங்கள சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
கல்முனையைச் சேர்ந்த 45 வயது விதவையான ரட்ணம் பூங்கோதை, அரசாங்கததினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி.) முன்னிலையில் கூறிய விடயங்கள் தொடர்பாக விரிவான விபரங்களைத் தருமாறு சி.ஐ.டி. கோரியுள்ளது.
ஆரம்பத்தில் அவர் சி.ஐ.டி. தலைமையகத்திலுள்ள நான்காம் மாடிக்கு வருமாறு அழைக்கப்பட்டார். ஆனால் பின்னர் இந்த நேர்காணல் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.
இத்தகவல் கல்முனை பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டது. இவ்விசாரணை குறித்து பிரதேச செயலாளருக்கு எல்.எல்.ஆர்.சி. அறிவித்தது.
‘என்னை இந்த நேர்காணலில் பங்குபற்றுமாறு எல்.எல்.ஆர்.சி. கூறிள்ளது. எனது பாதுகாப்பு குறித்த அச்சம் காரணமாக தனியாக இதில் பங்குபற்றுவதற்கு நான் தயங்குகிறேன். எல்.எல்.ஆர்.சி. முன்னிலையில் சாட்சியமளித்த பின் எனக்கு கஷ்டம் கொடுத்தவரக்ள் அங்குள்ளனர்’ என அவர் கூறினார். மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் அல்லது சடடத்தரணியும் இந்நேர்காணலின்போது இருக்க வேண்டும் என பூங்கோதை விரும்புகிறார்.
2007 ஆம் ஆண்டு பூங்கோதை சட்டவிரோதமாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். அதே வருடம், எல்.ரி.ரி.ஈ.யிடமிருந்து பிரிந்த குழுவின் தலைவர்களில் ஒருவரான இனியபாரதி அப்பெண்ணை கடத்தி இருவாரகாலம் சித்திரவதை செய்தார்.
பின்னர் 2009 அம் ஆண்டு பூங்கோதை மட்டக்களப்பு வைத்தியசாலையில் இருந்தபோது பொலிஸார் அவரை கைது செய்து இரு மாதங்களின் பின் சி.ஐ.டி.யிடம் ஒப்படைத்தனர். அவ்வருடம் ஏப்ரல் மாதம் பூங்கோதையின் சகோதரியான 3 பிள்ளைகளின் தயானா விதவைப்பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பின் காணாமல் போனார்.
“எனது கணவர் கொல்லப்பட்டார். எனது சகோதரர்கள் இருவர் காணாமல் போயினர். எனது சகோதரி கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். ஆனால் இந்த விடயங்கள்அனைத்தும் 1990களுக்கு முன் நடந்தவையாகும். நான் 2007 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடந்த சம்பவங்கள் - எனது கைது மற்றும் எனது சகோதரி காணாமல் போனமை- தொடர்பாக மாத்திரமே நீதி கேட்கிறேன்” என பூங்கோதை கூறினார்.
பூங்கோதை கூறுவதன்படி அவர் தமிழ் புலிகளுடன் அல்லது அரசியலில் சம்பந்தப்பட்டவர் அல்லர். ”எமக்கு எதிராக தனிப்பட்ட கோபங்களைக் கொண்ட நபர்கள் சுயலாபங்களுக்காக எமது குடும்பத்தை அழிக்கின்றனர்” என அவர் கூறினார்.

12 நவம்பர் 2011

அலுக்கோசுகளாக பெண்களும் விண்ணப்பிக்கலாமாம்.

தூக்குத் தண்டனை நிறைவேற்றுபவர்களுக்கான (அலுகோசு) இரு பதவிகளுக்கு பெண்களும் விண்ணப்பிக்கலாம் என சிறைசாலைகள் திணைக்களம் நேற்று தெரிவித்தது.
பெண்களுக்கு சட்டப்படி உரிமையுள்ளதால் பெண்களும் இப்பதவிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர் என சிறைசாலை அதிகாரியொருவர் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில நாளிதழான டெய்லி மிரருக்குத் தெரிவித்தார். ‘இப்பதவிக்கான பிரதான தகுதி உள, உடல் திடநிலையே. ஏனைய தேவைகள் இரண்டாம் பட்சமே’ என அவர் கூறினார்.
முன்னர் இப்பதவிகளை வகித்தவர்கள் 8ஆம் வகுப்புவரை மாத்திரமே கல்வி கற்றவர்கள். அவர்களுக்கு குறைந்தபட்சம் 13,000 ரூபா சம்பளம் வழங்கப்பட்டது என அவ்வதிகாரி கூறினார்.
இப்பதவி வெற்றிடம் இன்னும் வர்த்தமானியில் அறிவிக்கப்படவில்லை. எனினும் ஏற்கெனவே நூற்றுக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதாகவும் ஆனால் பொருத்தமான நடைமுறைகள் பின்பற்றப்படாததால் பெரும் எண்ணிக்கையான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் இவ்வெற்றிடங்கள் தொடர்பான விளம்பரம் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

11 நவம்பர் 2011

அடிப்படை சட்ட அறிவே இல்லாதவர் மொகான் பீரிஸ்!

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் சித்திரவதைகளுக்கு எதிரான மாநாட்டில் இலங்கையின் சார்பில் பங்கேற்கும் முன்னாள் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் அடிப்படை குற்றவியல் சட்டஅறிவுகளை கொண்டிருக்கவில்லை என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் சித்திரவதைகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கடந்த 9 ஆம் திகதி அவருக்கு பதிலளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதன்போது மொஹான் பீரிஸினால் சரியான புள்ளிவிபரங்களையும் சம்பவங்களையும் கூறமுடியவில்லை. 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் கீழ் இலங்கையின் உரிய சட்டமுறைகள் இருப்பதாக குறிப்பிட்டார்.
எனினும் அதனை கண்டித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு நடைமுறை நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் அந்த சட்டங்கள் வலுவிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சில சட்டத்தரணிகளை துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை காப்பாளர்கள் தாக்கப்பட்டமை குறித்து மொஹான் பீரிஸ் பதில் எதனையும் வழங்க மறுத்துவிட்டார்.
பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் சில சட்டத்தரணிகள் துரோகிகள் என்று குறிப்பிடப்பட்டமை எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஊடகவியலாளார் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அவர் இலங்கைக்கு எதிரான பிரசாரத்துக்காக வெளிநாடு ஒன்றில் அகதியாக சென்றிருக்கலாம் என்று மொஹான் பீரிஸ் பதிலளித்துள்ளார். அவரால் வலுவான ஆதாரங்களை சமா்ப்பிக்க முடியவில்லை.
சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனம் கட்டாயம் காணாமல் போனவர்கள் தொடர்பிலான பிரகடனம் சா்வதேச யுத்த நீதிமன்றம் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பீரிஸ் பதிலளிக்கவில்லை.
வெலியமுன என்பவரது வீட்டின் மீது கிரனைட் தாக்குதல் நடத்தப்பட்டமை குறித்து கேட்டபோது மொஹான் பீரிஸ் அளித்த பதில்களில் அவருக்கு அடிப்படை சட்டஅறிவு இல்லை என்பதை உணர்த்தியதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை சித்திரவதைகள் தொடா்ல் பூஜ்ஜிய நிலை ஏற்படவேண்டும் என்ற அடிப்படையில் செயற்படுவதாக அவா் குறிப்பிட்டபோது அதனை சித்திரவதைகள் தொடர்பான ஐக்கிய நாட்டு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரின் பதில்கள் உண்மையை மறைப்பதாக அமைந்துள்ளதாகவும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பாடசாலை அதிபர் கந்தர்மடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்து வெட்டிப்படுகொலை!

யாழ்.தென்மராட்சி வரணி கரம்பக்குறிச்சி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் சிவசுப்ரமணியம் தயாபரன் (வயது 40) கடந்த இரவு வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்.மீசாலைப் பகுதியில் வசித்துவருகின்ற பாடசாலை அதிபர் தயாபரனுக்குச் சொந்தமான வீடு ஒன்று புகையிரதநிலைய வீதி, கந்தர்மடத்திலும் உள்ளது. இரண்டு மாடிகளைக் கொண்ட அவரது வீட்டின் கீழ் தளத்தில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தினைச் சேர்ந்த சிங்கள மாணவர்கள் தற்காலிகமாக குடியமர்ந்துள்னளர்.
நேற்றும் வழமைபோல தனது வீட்டினைப் பார்க்கச் சென்ற அதிபர் தயாபரன் மேல்மாடியில் தங்கியிருக்கின்றார். இறுதியாக 9.00மணியளவில் அவர் தனது வீட்டாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அதன் பின்னர் அவருடைய தொடர்பு கிடைக்காத நிலையில் வீட்டினர் மீசாலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்று பார்த்த போது அவர் கத்திவெட்டிற்கு இலக்காகிப் படுகொலை செய்யப்பட்ட நிலையில் காணப்பட்டிருக்கின்றார்.
இதேவேளை கீழ் தளத்தில் இருந்த சிங்களமாணவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்து எதுவும் தெரியாது என்று தெரிவித்திருக்கின்றனர். தாம் தமது பெருநாள் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு காலம் தாழ்ந்தே வீடு திரும்பியதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
அதே வீட்டில் முன்னரும் கண்டியைச் சேர்ந்த மாணவர்களே தற்காலிகமாகக் குடியமர்த்தப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

10 நவம்பர் 2011

கொழும்பு மாநகர சபையில் மனோ கணேசனின் கட்சியை சேர்ந்த வேலணை வேணியனுக்கும் பதவி.

கொழும்பு மாநகரசபையில் நான்கு குழுக்களில் தலைவர்களாகவும் ஒன்பது குழுக்களின் அங்கத்தவர்களாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். தலைநகர தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியுள்ள வாக்குகளின் மூலமாகக் கிடைத்துள்ள அரசியல் பலத்தின் அடிப்படையில் இந்த பதவிகள் கிடைத்துள்ளன என ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வேலணை வேணியன் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் நிலையியற்குழுவின் தலைவராகவும் சுகாதார நிலையியற் குழுவின் அங்கத்தவராகவும் கடமையாற்றுவார். கே.ரி.குருசாமி வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி நிலையியற்குழுவின் தலைவராகவும் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு நிலையியற் குழுவின் அங்கத்தவராகவும் கடமயாற்றுவார். எஸ்.குகவரதன் திட்டமிடல் மற்றும் அபிவிருத்தி நிலையியற்குழுவின் தலைவராகவும் வள நிர்வாகம் மற்றும் வீண்விரய தவிர்ப்பு நிலையியற்குழுவின் அங்கத்தவராகும் கடமையாற்றுவார். எஸ்.பாஸ்க்கரா ஓய்வூதியக் குழு, திண்மக் குப்பைக் கழிவுகள் நிர்வாகக்குழு ஆகிய இரண்டு நிலையியற் குழுக்களில் அங்கத்தவராகக் கடமையாற்றுவார். லோரன்ஸ் அன்ரன் பொர்னாண்டோ சமூக அபிவிருத்தி மற்றும் சமூக கலாசார ஒருங்கிணைப்புக் குழு, சட்டம் மற்றும் பொது ஒழுங்குக் குழு ஆகிய இரண்டு நிலையியற் குழுக்களில் அங்கத்தவராகக் கடமையாற்றுவார். அதேவேளையில் வறுமை ஒழிப்பு மற்றும் சமூக நல நிலையியற் குழுவின் தலைமைப் பதவியும் மாநகரசபை நிதி தொடர்பிலான நிலையியற் குழுவில் அங்கத்துவமும் மற்றும் ஏழைகளுக்கான நிதி ஆதார விசேட குழுவில் அங்கத்துவமும் தலைவர் மனோ கணேசனிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுக்களின் பணிகள் பற்றிய விளக்கங்களும் இவற்றின் மூலமாக தலைநகர மக்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய சேவைகள் தொடர்பிலும் அடுத்தவாரம் ஊடகங்கள் மூலமாக மேலதிக விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

09 நவம்பர் 2011

ஸ்ரீலங்கா செய்யும் குற்றச்செயல்கள் நேற்றைய அமர்வில் பட்டியலிட்டு காட்டப்பட்டது!

ஜெனிவாவில் நேற்று நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய தடுப்பு முகாம்கள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் 47வது அமர்வு நேற்று ஜெனிவாவில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மனிதஉரிமைகளைப் பின்பற்றுவதில் சிறிலங்காவுக்கு உள்ள பொறுப்புத் தொடர்பாக கடுமையான கேள்விகள் எழுப்பப்பட்டன.
கேட்கப்படுகின்ற கேள்விகளுக்கு மேலதிகமான தகவல்களை வழங்குவதில்லை என்று குழுவின் பல உறுப்பினர்கள் சிறிலங்கா அரசு மீது குற்றம்சாட்டினர்.
சிறிலங்கா படைகளின் இரகசிய தடுப்பு முகாம்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க சுதந்திரமான விசாரணைகள் அவசியம் என்று சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் உதவித் தலைவர் பெலிஸ் கேர் அம்மையார் இந்த அமர்வில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிறிலங்கா இராணுவம் மற்றும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை ஆயுதக்குழுக்களால் இயக்கப்படும் இரகசியத் தடுப்பு முகாம்கள், சித்திரவதைகள் மற்றும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் இரகசியமாக இடம்பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும், அதுவே அங்கு நடந்துள்ளது என்றும் அவர் காட்டமாக குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காவின் வடக்குப் பகுதியில் ஏழு இரகசிய தடுப்புமுகாம்கள் இருப்பதாக அனைத்துலக மன்னிப்புச்சபை அறிக்கை ஒன்றை கையளித்துள்ளதாகவும், அவற்றில் 5 முகாம்கள் வவுனியாவிலும், இரண்டு முகாம்கள் முல்லைத்தீவிலும் இருப்பதாகவும் பெலிஸ் கேர் அம்மையார் குறிப்பிட்டுள்ளார்.
பூந்தோட்டம் மகா வித்தியாலயம், 211 பிரிகேட் தலைமையகம், வெளிக்குளம் மகாவித்தியாலயம், புளொட் துணை ஆயுதக்குழு நிலையம், தர்மபுரம் ஆகிய 5 முகாம்கள் வவுனியாவிலும், மேலும் 2 முகாம்கள் முல்லைத்தீவிலும் செயற்படுவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கைவிடப்பட்ட 5 கட்ட்டங்கள், வீடுகளைக் கொண்ட தர்மபுரம் இரகசியத்தடுப்பு முகாமில் ஆண்களும் பெண்களுமாக 700 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 80 பேர் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்கள் என்றும், புலிகளின் ஆதரவாளர்களான 300 பொதுமக்களும் அதில் அடங்குவதாகவும் பெலிஸ் கேர் அம்மையாளர் கூறியுள்ளார்.
காணாமற்போதல்கள் தொடர்பான ஐ.நா பணிக்குழு சிறிலங்காவை உலகில் அதிகளவில் காணாமற்போகும் சம்பவங்கள் இடம்பெறும் நாடுகளில் இரண்டாவது நாடாக பட்டியலிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“சிறிலங்காவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் மீது சுதந்திரமான மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுவதில்லை.
பாரிய மனித உரிமை மீறல்கள் சிறிலங்காவில் இடம்பெற்றதாக எனக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளன.
இந்த முறைப்பாடுகளில் பலவந்தமாக காணாமல் போனது, காவல்துறையால் சித்திரவதை செய்யப்பட்டது, பாலியல் தாக்குதல் நடைபெற்றது, மனிதஉரிமை குறித்த வழக்குகளில் முன்னிலையாகும் சட்டவாளர்கள் மிரட்டப்படுவது, சிறையில் நடைபெறும் மரணங்கள் போன்றவை அடங்கும்.
சிறிலங்கா அரசு தான் அறிவித்தபடி தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்களை இன்னமும் வெளியிடவில்லை.
தடுத்து வைக்கப்பட்டிருப்போரின் பெயர் விபரங்கள் அரசிடம் இருப்பதாகவும், இதை அவர்களின் உறவினர்கள் பெறலாம் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கடந்த ஜனவரி மாதம் கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகளிடம் கூறியிருந்தது.
ஆனால் இதுபோன்ற விபரங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், விபரங்களைப் பெற முடியவில்லை என்று அரசசார்பற்ற நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர்." என்றும் பெலிஸ் கேர் அம்மையார் குறிப்பிட்டார்.
சித்திரவதை தொடர்பான ஐ.நா உடன்பாட்டில் சில அம்சங்களில் தனது நாடு கைச்சாத்திடவில்லை என்று, இந்த மாநாட்டில் சிறிலங்காவைப் பிரதிநிதித்துவம் செய்யும் குழுவின் தலைவரான, சிறிலங்கா அமைச்சரவையின் ஆலோசகரும், முன்னாள் சட்டமா அதிபருமான மொகான் பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
சிறிலங்கா பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளை தடுக்க சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சித்திரவதைகளை சகிக்கமுடியாது என்ற கொள்கையில சிறிலங்கா அரசாங்கம் ‘110 வீதம்‘ ஒப்புக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்றைய அமர்வில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு சிறிலங்கா இன்று பதிலளிக்க வேண்டும் என்றும் பெலிஸ் கேர் அம்மையாளர் கூறியுள்ளார்.

08 நவம்பர் 2011

திருடப்போனவருக்கு சுத்தியல் அடி!

கிளிநொச்சி, கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் கிராமத்தில் இடம்பெறவிருந்த கொள்ளை முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆம் திகதி இரவு இந்தப் பகுதியிலுள்ள வீடொன்றினுள் மூவர் நுழைந்துள்ளனர். இவர்களின் கைகளில் துப்பாக்கி, கத்தி போன்ற ஆயுதங்கள் காணப்பட்டன. ஆனாலும் வீட்டில் இருந்தவர்கள் துணிவுடன் இவர்களை எதிர்கொண்டதால் இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
ஒருவருக்குத் தலையில் சுத்தியலால் அடிபட்டதால் காயம் ஏற்பட்டது. அவரிடமிருந்த துப்பாக்கியும் வீட்டில் இருந்தவர்களால் கைப்பற்றப்பட்டது. காயமடைந்த நபர் ஒருவாறு தப்பியோடிவிட்டார். பின்னர் இவர் அடுத்த நாள் கிளிநொச்சிப் பொது மருத்துவமனைக்குச் சிகிச்சைக்கெனச் சென்றபோது தகவல் கிடைத்ததன் பேரில் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையிடும் நோக்கில் வீட்டில் நுழைந்தவர்கள் சிங்கள மொழியில் பேசிக் கொண்டதாக வீட்டிலுள்ளோர் கூறுகின்றனர். மேலும் கொள்ளையரிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி சிறுவர்கள் பயன்படுத்தும் விளையாட்டுத் துப்பாக்கியென்றும் தெரியவந்துள்ளது.தற்போது இந்தத் துப்பாக்கி இராணுவத்தினரின் வசம் உள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவில் மக்கள் மீது தாக்குதல் நடத்துகிறது சிங்களப்படை!

முல்லைத்தீவு மாவட்டம், புதுக்குடியிருப்பில் பல்வேறு இடங்களிலும் இராணுவத்தினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அவர்கள் முறைப்பாடு தெரிவித்தனர். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு புதுக்குடியிருப்பு துர்க்கா வீதிச்சந்தியில் வணிக நிலையம் ஒன்றினுள் நுழைந்த இராணுவத்தினர் அங்கு படுத்திருந்த கடை உரிமையாளர் அவரது மகன், பஸ் சாரதி என மூவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இதேவேளை அன்று முற்பகல் 10 மணியளவில் கோம்பாவில் பகுதியில் வணிக நிலையம் ஒன்றை நடத்திவரும் காலிழந்த ஒருவரைத் தாக்குவதற்கும் இராணுவத்தினர் முயன்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது உடனிருந்த கடை உரிமையாளரின் மனைவி மீது கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் இராணுவ த்தினர் மேற்கொண்டனர் என்று கூறப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து இராணுவத்தினர் இவ்வாறு பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினரின் இந்தத் திடீர் மாற்றத்துக்கான உண்மைக் காரணத்தை அறிந்து கொள்ள முடியாதுள்ளதால் இங்குள்ள மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

07 நவம்பர் 2011

தவறான சிகிச்சையால் புத்தூரில் மாணவி மரணம்!

காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட மாணவி ஒருவர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்துள்ளார். ஆயுள்வேத வைத்தியர் ஒருவர் வழங்கிய தவறான ஆங்கில மருந்துகள் காரணமாகவே சாவு சம்பவித்ததாக மாணவியின் உடற்கூற்று மருத்துவப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தூர் கிழக்கைச் சேர்ந்த உருத்திரன் சுதர்சிகா (வயது 14) என்ற மாணவி காய்ச்சலால் பீடிக்கப்பட்டார். அருகில் இருந்த ஆயுள்வேத மருத்துவரிடம் பெற்றோர் இவருக்கு வைத்தியம் செய்துள்ளனர். எனினும் சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
மாணவியின் இறப்புத் தொடர்பான விசாரணைகளை அச்சுவேலிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். இறப்பு விசாரணைகளை நீதிபதி ஏ.ஏ.ஆந்தராஜா மேற்கொண்டார். உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலத்தைப் பெற்றோரிடம் ஒப்படைக்க அவர் உத்தரவிட்டார்.
சரியான மருத்துவ சோதனைகள் இன்றி, எழுந்தமானமாக ஆங்கில மருந்துகள் கொடுக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணத்தாலேயே சுதர்சிகா உயிரிழந்தார் என்று அவரது உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று யாழ். போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

புலிகளுடனான போருக்கு கண்மூடித்தனமாக ஆதரவு வழங்கி தாம் தவறிழைத்து விட்டதாக ஜே.வி.பி.தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல்களில் முதலில் மஹிந்த ராஜபக்ஷவையும் பின்னர் சரத் பொன்சேகாவையும் ஆதரித்தது தவறு என்று கூறியுள்ளது ஜே.வி.பி.
புலிகளுக்கு எதிரான போரைக் கண்மூடித்தனமாக ஆதரித்ததன் மூலம், தேசியப் பிரச்சினைகளை மஹிந்த அரசு புறந்தள்ள வாய்ப்பளித்து விட்டதாகவும் அது மகாதவறு என்றும் அந்தக் கட்சி முதல் தடவையாக நேற்று ஒப்புக்கொண்டது. இனிவரும் காலங்களில் யாருடனும் தேர்தல் கூட்டு ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதில்லை என்ற கொள்கை முடிவையும் அது அறிவித்துள்ளது.
2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜே.வி.பி. முழுமையான ஆதரவு தெரிவித்தது. 2010ஆம் ஆண்டு அவரது முக்கிய எதிரியாகப் போட்டியிட்ட, இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்தது. தற்போது, கட்சியின் அந்த முடிவுகள் மகா தவறானவை என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் எந்தவொரு கட்சியுடனோ தனி மனிதர்களுடனோ தேர்தல் கூட்டு ஒப்பந்தங்கள் எதையும் செய்து கொள்ளப் போவதில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க நேற்றுக் கொழும்பில் தெரிவித்தார். பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசியக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக திஸநாயக்க தொடர்ந்த போதும் இதனை நேற்று அறிவித்தார்.
கட்சியின் தவறுகளுக்காக அவர் பொதுமக்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். நாட்டின் தேசியப் பிரச்சினைகள் தொடர்பாகக் காணப்பட்ட சமநிலைத் தன்மை, போருக்குத் தமது கட்சி காட்டிய முழுமையான ஆதரவால் சமநிலை இழந்துபோனதாகவும் அவர் குறிப்பிட்டார். அது மிகத் தவறான முடிவு என்று கட்சி இப்போது புரிந்துகொண்டுள்ளது. பொதுவுடமையை (சோஷலிசம்) நோக்கி நாட்டை முறையாக முன்னகர்த்துவதற்கு “சிறிய மறுசீரமைப்பு” நடவடிக்கைகள் அவசியம் என்றும் திஸநாயக்க பத்திரிகையாளர்களிடம் கூறினார்.
கட்சியின் தற்போதைய தலைமை கைக்கொண்ட கொள்கை தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக ஜே.வி.பி. இரண்டாகப் பிளவு பட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி வரும் நிலையில் இந்த ஒப்புதல் வாக்குமூலமும் மன்னிப்புக்கோரலும் வெளிவந்துள்ளன.

06 நவம்பர் 2011

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பு சும்மாதானாம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகளின் சந்திப்பில் “ஒன்றுமேயில்லை“ என்றும், வெளிநாட்டு விருந்தினர்களுடன் மேற்கொள்ளப்படும் “வழக்கமான சந்திப்புகளில் ஒன்று தான்“ என்றும் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
“அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதுபோன்ற சந்திப்புக்களை அரசியல்கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு வகையான தரப்பினருடனும் நடத்துகிறது.“ என்று தமது செய்தியாளர் ஒருவருக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் கூறியதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் ,சிறிலங்காவின் தற்போதைய அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடியுள்ளதாகவும் அந்தப் பேச்சாளர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்தச் சந்திப்புக்களின் பின்னர் எந்தவொரு அதிகாரபூர்வ செய்திக்குறிப்பையோ அல்லது ஒளிப்படத்தையோ வெளியிடவில்லை.
இந்தப் பயணம் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், ஏனைய தரப்பினரும் பெரியளவில் பரப்புரை செய்திருந்த போதும், சந்திப்பு பற்றிய விபரங்கள் இருளாகவே உள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வொசிங்டனின் நன்கு அறியப்பட்ட சுற்றுலா சின்னமான கப்பிற்றல் மண்டபத்துக்கு முன்பாக நின்று எடுக்கப்பட்ட ஒளிப்படம் ஒன்றையே வெளியிட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வாரஇதழ் கூறியுள்ளது.
இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை வொசிங்டனில் நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்தப்பட்ட சந்திப்புகள் தொடர்பாக இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் அறிவாரா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் அம்மையார், “நிச்சயமாக அறிவார்“ என்று பதிலளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.