பக்கங்கள்

28 பிப்ரவரி 2013

மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தியின் மறைவிற்கு தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இரங்கல்!

News Serviceதமிழர் புனர்வாழ்வுக்கழகம்,
முதன்மை செயலகம்
 27/02/2013

இரங்கற் செய்தி தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் நிறைவேற்றுக்குழுவின் மூத்த உறுப்பினரும், வெண்புறா அறக்கட்டளை அமைப்பின் நிறுவனருமான மருத்துவர் என். எஸ். மூர்த்தி காலமாகியுள்ளார் என்பதனை உலகத்தமிழர்களுக்கு மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். பிரித்தானியாவை வாழ்விடமாகவும் திருகோணமலை மாவட்டத்தினை பிறப்பிடமாகவும் கொண்ட மருத்துவர், நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்கள் தொடக்ககாலம் முதலே விடுதலைச் செயற்பாடுகளிலும் சிறிலங்கா அரசாங்கங்களின் தமிழர் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்தும் செயற்பட்டுவந்தவர். மனித உரிமை, மனிதாபிமான செயற்பாடுகள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் என்ற தேச விடுதலைக்கான துணைச்செயற்பாடுகளில் இரண்டறக் கலந்து பணியாற்றியவர். 1981 ஆம் ஆண்டில் இருந்து தனது பணிகளை தீவிரமாக்கிய மருத்துவர் மூர்த்தி அவர்கள் போராளிகள், செயற்பாட்டாளர்கள் அனைவருக்கும் ஓர் வழிகாட்டியாகவும் செயற்பட்டுவந்துள்ளார். 1983, 1984 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் தமிழ் நாட்டில் தாயக மருத்துவப் பிரிவுடன் சேர்ந்து பயிற்சி முகாம்களிலும், எமது மக்களின் ஏதிலிகள் முகாம்களிலும் மருத்துவப் பணிகளை செய்துவந்தார். கால்நடையாகவும் ஈருருளிகளிலும் நீண்ட பயணங்களை மேற்கொண்டு தனது சேவைகளை அர்ப்பணிப்போடு வழங்கி வந்தார். இதே காலப்பகுதியில் தமிழர் புனர்வாழ்வுக்கழகமானது இந்தியாவில் உதயமாகியபோது அதற்கான முதல் நிதியினை தேசியத்தலைவர் வழங்கி இருந்தார். இந்த 50,000 இந்திய ரூபாய் நிதியுடன் புனர்வாழ்வுக்கழகம் தனது பணியினை ஆரம்பிக்கையில் அதன் செயற்பாட்டு உறுப்பினர்களில் ஒருவராக பணியாற்றி இருந்தார். மனிதாபிமானப் பணிகள் மற்றும் அரச எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காக சிறிலங்கா அரசின் சித்திரவதை முகாமில் கைதியாக இருந்து சிங்கள இனவெறியர்களால் கடுமையான சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார். இந்த சித்திரவதைகளும்,கொடுமைகளுமே அவரை நிரந்தர நோயாளி ஆக்கியது. 1987 ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்த மருத்துவர் மூர்த்தி அவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் ஊடகம், மருத்துவம், புனர்வாழ்வு போன்ற தளங்களில் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பல்வேறு சமூக சேவைகளை முன்னெடுத்து வந்தார். தமிழர் புனர்வாழ்வுக்கழகம், மருத்துவப் பிரிவு போன்ற பிரிவுகளில் தீவிரமாக தனது பங்களிப்பினை ஆற்றிவந்த இவர் 2004 ஆம் ஆண்டில் தாயக தேவை கருதி அங்கு இயங்கிவந்த வெண்புறா அமைப்பினை ஐரோப்பாவில் நிறுவினார். �வெண்புறா� நிறுவனத்தினை உருவாக்கி அதனூடாக உறுப்புக்களை இழந்த போராளிகள் மற்றும் பொதுமக்களுக்கு புனர்வாழ்வுப்பணிகளை மேற்கொண்டுவந்துள்ளார். தனது சமூகத்துக்கும் தான் வாழும் நாட்டிற்கும் ஆற்றிய சேவைகளுக்காக பிரித்தானிய மகாராணியால் Freeman of the City என்ற உயர்விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டார். மருத்துவக் கல்வி, சமூக விழிப்புணர்வு, ஊடகம்,அரசியல் , வரலாறு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி அதனை புலம்பெயர்ந்துவாழும் இளையோர்களுக்கு எடுத்துக்கூறி அவர்களை தேசப்பணியில் இணைக்கவும் வழிவகை செய்தார். 2004 ஆம் ஆண்டு சுனாமி பேரலை எமது தாயக பூமியைத் தாக்கியபோது மிகத்தீவிரமாக செயலாற்றி மக்களின் மீழ்கட்டுமானப் பணிகளுக்கு பெரும் பங்களிப்பினைப் பெற்றுக்கொடுத்தார். தனித்து புனர்வாழ்வு, மருத்துவப் பணிகள் மட்டுமன்றி உலக நாடுகளின் தலைவர்கள், சர்வதேச தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளி நாட்டு இராஜதந்திரிகள் ஆகியோர்களை சந்தித்து எமது மக்களின் மனிதாபிமான பிரச்சினைகள், சிங்கள அரசின் மனித உரிமை மீறல்கள் ஆகியவை தொடர்பில் தெளிவுபடுத்தியும் வந்துள்ளார். பல்வேறு தளங்களில் தன் சக்திக்கு மீறிய சேவைகளைச் செய்துவந்ததன் விளைவாக அவர் கடந்த ஓர் ஆண்டாக கடுமையான சுகயீனமுற்று இருந்தார். ஆனாலும் அவர் தனது சுகயீனம் தொடர்பில் அதிக கவனம் எடுக்கவில்லை. தாயகத்தில் நடந்த பேரவலங்களும் துயரங்களும் அவரை வெகுவாக பாதித்துள்ளமையினை நேரடியாக அவதானிக்க முடிந்தது. என்றாலும் மிகவிரைவில் சுகம் பெற்று எமக்கு எல்லாம் வழிகாட்டியாக தொடர்ந்தும் பணிபுரிவார் என நம்பி இருந்தோம். ஆனால் மிகவிரைவில் மக்களையும், மண்ணையும் விட்டு நிரந்தரமாக பிரிந்துவிட்டார். எனினும் ஆத்மார்த்தரீதியாக அவர் எம்மை விட்டு பிரியவில்லை. அவரின் நினைவாக நாம் தொடர்ந்தும் பணிகளை முன்னெடுப்போம் என்பதுடன் இந்த நேரத்தில் மருத்துவரின் பிரிவால் வாடும் குடும்பத்தார் மற்றும் உறவினர்களுடன் நாமும் சேர்ந்து துயரைப் பகிர்கின்றோம்.

நன்றி
நிறைவேற்றுப்பணிப்பாளர்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலக நான்கு கட்சிகள் உத்தேசம்?

ஐந்து கட்சிகள் இணைந்த கூட்டமைப்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவதில் தாமதம் ஏற்படும் பட்சத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய நான்கு கட்சிகளும் மாத்திரம் இணைந்து தங்களை ஒரு அரசியல் கட்சியாகப் பதிவை மேற்கொள்ள அந்நான்கு கட்சிகளும் தீர்மானித்துள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணி, டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப் மற்றும் புளொட் ஆகிய நான்கு கட்சிகளுமே இந்த தீர்மானத்தை எடுக்க உத்தேசித்துள்ளன. இருப்பினும், இதற்கான இறுதித் தீர்மானம் தமிழரசுக் கட்சியின் முடிவைப் பொறுத்தே அமையும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோ முக்கியஸ்தருமான வினோ நோகதாரலிங்கம் தெரிவித்தார். “தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவை மேற்கொள்வது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு கட்சிகளின் நடவடிக்கைகளை முன்னகர்த்திச் செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம். ஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்” என்றும் அவர் கூறினார். “அரசாங்கம் இன்று சர்வதேச ரீதியில் பல்வேறுபட்ட பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்துக்கொண்டுள்ளது. குறிப்பாக இறுதி யுத்தத்தில் மேற்கொள்ளப்பட்டதாக சொல்லப்படும் போர்க்குற்றம் உட்பட பல பிரச்சனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் புலம்பெயர் தேசத்தில் உள்ள மக்களது போராட்டங்களும் தமிழகத்தில் உள்ள எமது உறவுகளின் போராட்டமும் அதற்கு அப்பால் வடக்கு கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் போராட்டம் என்பனவாகும். இவையே இன்று தமிழ் மக்கள் மீது சர்வதேசம் திரும்பி பார்க்க வைப்பதற்கும் காரணமாகியுள்ளது. இந்த அரசாங்கம் இன்று நடுங்கிக்கொண்டிருப்பதற்கு காரணம் சர்வதேசம் தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போகின்றது என்பதனாலேயே ஆகும். எனவே தமிழ் மக்களது அகிம்சை வழி போராட்டங்கள் எமக்கான நிரந்தரமான அரசியல் தீர்வுக்கோ அல்லது விடுதலைக்கோ வழிவகுக்கும்” என்றும் வினோ எம்.பி குறிப்பிட்டார். “நாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பதிவு செய்கின்றபோது தான் எமது போராட்டங்களை இன்னும் கீழ் மட்டத்தில் இருந்து கட்டமைப்புக்களை உருவாக்கி கொண்டு செல்வது இலகுவாக இருக்கும். எனவே தான் நாம் பதிவு விடயத்தை முன்னிலைப்படுத்துகின்றோம். தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று மூட்டணியாக அக்கட்சியின் பெயரை தேர்தலுக்காக பயன்படுத்துகின்றோமே தவிர தனித்தனிக் கட்சிகளாகவே இருக்கின்றோம். சில விடயங்களில் கூட்டமைப்பாக இயங்குகின்றோமே தவிர பெரும்பாலான விடயங்களில் தனித்தனியாக கட்சியின் நலன் சார்ந்தே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே கிராம மட்டத்தில் இருந்து கட்டமைப்புக்களை உருவாக்குவதானது எமது அரசியல் ரீதியிலாக மக்களின் அபிப்பராயங்களை கேட்பதற்கும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதற்குமான திட்டங்ககையும் கொள்கைகளையும் வகுப்பதற்கும் இப்பதிவு பயனுள்ளதாக இருக்கும். பதிவு செய்யப்பட்டதன் பின்னர் எமக்குள் இருக்கும் வேறுபாடுகள் களையப்பட்டு அல்லது ஒவ்வொரு கட்சியும் பிரிந்து இருப்பதால் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு ஒரே குரலாக ஒரே நிலையில் இருந்து பேசக்கூடியதாக இருக்கும்” என்றும் வினோ எம்.பி சுட்டிக்காட்டினார். “இது விடயமாக நாம் கடந்த காலத்தில் பேசி வருகின்றோம். 5 கட்சிகளும் கூடி பதிவு செய்தல், அதி உயர்பீடம், நிதிக்குழு, தேர்தல் தொடர்பான குழு மற்றும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் குழுக்கள் அமைப்பது தொடர்பாக ஆராந்திருக்கின்றோம். ஆனால் தமிழரசுக் கட்சி எமக்கு நிபந்தனைகளை விதிப்பதும் காலம் தாழ்த்துவதுமான நடவடிக்கையை எடுக்கின்றது. அவர்கள் இதில் விருப்பமில்லாத நிலையில் இருப்பதும் அல்லது சாக்குபோக்கு சொல்வதும் எல்லோருக்கும் தெரிந்த விடயமாகும். எனவே தமிழ் மக்கள் நம்பிக்கை வைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை அங்கீகரித்துள்ள நிலையில் நாம் தனித்தனியாக இனி செல்ல முடியாது என்பதனால் பதிவு விடயம் சாத்தியமற்று போகாதிருப்பதற்காக வேறு வழியின்றி நாம் இறுதியாக நான்கு கட்சிகள் கூடி பதிவு செய்யலாமா என்பது தொடர்பாகவும் அது சாத்தியமானால் பதிவது தொடர்பிலும் அல்லது வேறு எவ்வாறு இதனை முன்னகர்த்தி செல்லலாம் என்பது தொடர்பிலும் நாம் ஆராய்ந்திருக்கின்றோம். ஆகவே இறுதிக்கட்டமாக நாம் தமிழரசுக் கட்சியுடன் பேசி முடிவுக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கொடுத்துள்ளோம். இல்லையேல் நாம் நான்கு கட்சிகளும் இணைந்து எதிர்வரும் மாத இறுதிக்கிடையில் பதிவு செய்வது என தீர்மானித்துள்ளோம்” என்றார். இதேவேளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் எந்த பிளவுகளுமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் பிரதிநிதிகள் கடந்த வாரம் கொழும்பில் கூடி பல முக்கியமான தீர்மானங்களை மேற்கொண்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்வது என்ற முக்கிய தீர்மானமும் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார். அத்துடன் இது தொடர்பில் அங்கத்துவ கட்சிகளின் ஆலோசனைகளை மார்ச் 20ஆம் திகதி முன்னர் சமர்பிப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா குறிப்பிட்டார். இதற்கு மேலாக கட்சியின் நடவடிக்கைகளையும் விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைப்பதென்றும் முடிவு காணப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கட்சியிலிருந்து தலா மூவர் இணைக்கப்படும் வகையில் உயர் பீடம் அமைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தூதரக கதவுகளை உடைத்து உள்ளே பாய்ந்த மலேசிய தமிழர்கள்!

நேற்று மலேசியா தலைநகரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரகத்திற்கு எதிராக தமிழர் உதவும் கரங்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பல அமைப்புக்களும் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர். தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகனை சிங்களப் பயங்கரவாத அரசு 12 வயது சிறுவனை காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதை மலேசியாவில் உள்ள தமிழ் மக்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ள பாலச்சந்திரனின் மரணச் செய்தி அறிந்து தமிழர் உதவும் கரங்களும் மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கமும் சில அரசியல் கட்சிகளும் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் காவல்துறை குறுகிய நேரத்தில் கலைந்து செல்ல வேண்டும் என்று இட்ட கட்டளையால் பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காவல்துறையின் அராஜகத்தால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட 3 பேரை கைது செய்ததால் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது. 100 மேற்பட்ட காவல்துறையினர் இருந்த போதும் தமிழர் உதவும் கரங்கள் தலைவர் முரளி இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட முயன்ற போது காவல்துறையினர் தாக்க முற்பட்டதால் மக்கள் இலங்கைத் தூதரகத்தை தாக்கினார்கள். இதனால் இலங்கை தூதரக முன் வாசல் கதவு உடைக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் அடைந்த காவல்துறையினர் மூவரையும் விடுதலை செய்தார்கள். இலங்கைத் தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இலங்கை கொடியை பயத்தில் அகற்றி விட்டார்கள்.

27 பிப்ரவரி 2013

இரகசிய முகாமில் இருந்து தப்பிய புலிகளை சுட்டுகொன்ற படைகள்!

நேற்றைய தினம்(26) மதியம் அளவில், வெலிகந்தையில் உள்ள இரகசிய முகாம் ஒன்றில் இருந்து முன் நாள் விடுதலைப் புலிகள் இருவர் தப்பியுள்ளார்கள் என அறியப்படுகிறது.இதேவேளை வாழைச்சேனை, புனாணை பிரதேசத்தில் வைத்து காரொன்றை கடத்திச்செல்வதற்கு முயன்றவேளையில் இவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் நடத்தியுள்ளார்கள். இருப்பினும் இவர்கள் அங்குள்ள கார் ஒன்றைக் கடத்திச் சென்றுவிட்டனர். இதனையடுத்து குறிப்பிட்ட இருவரையும், தேடிப் பிடிப்பதற்கு இராணுவத்தினரை பொலிசார் அழைத்துள்ளார்கள். இதனையடுத்து திம்புலாகல மலையில் இராணுவத்தினர் தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர். பொதுமக்கள் கொடுத்த தகவலுக்கு அமைவாக தேடுதல் நடத்திய இராணுவத்தினர், திம்புலாகல மலையில் வைத்து அவ்விருவர் மீதும் கடுந்தாக்குதலை நடத்தியுள்ளார்கள். இதனையடுத்து குறிப்பிட்ட 2 தமிழ் இளைஞர்களும் கொல்லப்பட்டுள்ளார்கள். வெலிகந்தையில் உள்ள இரகசிய முகாம் ஆனது மிகவும் பாதுகாப்பு நிறைந்தது. இதில் இருந்து இலகுவாக எவராலும் தப்பிக்க முடியாது. எனவே சிலவேளைகளில் , இவர்களை வேண்டும் என்றே தப்பிக்க விட்டு, இறுதியில் இலங்கை இராணுவம் சுட்டுகொன்றதா என்ற சந்தேகங்களும் எழுந்துள்ளது. கொழும்பில் உள்ள பல ஊடகங்கள் முன்னுக்குப் பின் பல முரணான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் புலிகள் உறுப்பினர் என்று ஒரு ஊடகமும், இல்லை அவர்கள் பாதாள உலகக் கோஷ்டியினர் என்று மற்றுமொரு ஊடகமும் தெரிவித்துள்ளது. எது எவ்வாறு இருப்பினும் சுட்டுக்கொல்லப்பட்ட இருவரும் தமிழ் இளைஞர்கள் என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிறிலங்காவை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை-கனடா

stephen-harperசிறிலங்கா விடயத்தில் மென்போக்குடன் நடந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்புகளை நிராகரித்துள்ள கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர், இந்த ஆண்டு இறுதியில் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் உச்சிமாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவில் இருந்து தாம் பின்வாங்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். கனேடிய நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய அவர், “சிறிலங்காவில் நிலைமைகள் முன்னேற்றமடையாது போனால், அங்கு நடைபெறும் கொமன்வெல்த் தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று அறிவித்திருந்தேன். அந்த அறிக்கையை வெளியிட்ட பின்னர், அங்கு ஏற்பட்டுள்ள மாற்றங்கள் கவலையளிக்கிறது. அந்த நாடு மோசமான திசையில் சென்று கொண்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார். கொமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்கும் முடிவை கனடா கைவிட வேண்டும் என்று கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா கேட்டுக் கொண்டிருந்த போதும், தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹாப்பர் தெரிவித்துள்ளார்.

26 பிப்ரவரி 2013

தேசிய தலைவரின் இளையமகனின் படுகொலையில் இந்தியா!

பாலசந்திரன் படுகொலை குறித்து நடுநிலையான விசாரணை நடத்த வேண்டியது இந்திய அரசுக்கு முக்கியமானது என்று இந்திய இராணுவத்தின் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரியான கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா படையினரால் உணவு கொடுத்த பின்னர் கொல்லப்பட்டதாகக் குற்றம் சாட்டும் ஒளிப்படங்கள் பிரித்தானிய ஊடகம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் நடத்தபட்ட போர் இந்தியாவின் ஆசிர்வாதத்துடன் நடத்தப்பட்ட போர். இது இந்தியாவுக்கு மிகவும் நெருக்கமான அரசு ஒன்றின் மிருகத்தனமான, வெறுக்கத்தக்க செயல். இந்ந குற்றச்செயலுடன் இந்தியாவுக்கும் தொடர்புள்ளது. எனவே, மனிதாபிமான கரிசனைகள், இந்தியாவின் தனிப்பட்ட நலன்களின் அடிப்படையில், குற்றச்சாட்டுகள் குறித்து நடுநிலையான விசாரணை தேவை. உண்மையென்று உறுதிப்படுத்தப்பட்டால், அது சிறிலங்காவின் போர்க்குற்றம் என்பதில் சந்தேகத்துக்கு இடமில்லை. இது பிரபாகரனின் இளையமகன் என்பதால் முக்கியத்துவம் இல்லை, அவன் ஒரு சிறுவன், விடுதலைப் புலிப் போராளி அல்ல இன்னும் ஆயிரக்கணக்கானோருக்கு நேர்ந்த கதியைப் போலவே போரின் போதோ அதற்குப் பின்னரோ பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார். தடுப்புக்காவலில் இருந்த விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக சனல்4 தொலைக்காட்சி முன்னர் வெளியிட்ட குற்றச்சாட்டை, இது மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது என்றார்.

போர் தவிர்ப்பு வலயத்திற்கு தடை கோருகிறது சிறீலங்கா!

சிறீலங்காவின் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பிலான பிரித்தானியாவின் செனல்4 ஊடகத்தின் விவரணச் சித்திரத்திற்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் செனல்4 ஊடகத்தின் விவரணச் சித்திரம் காட்சிப்படுத்தபடுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறீலங்கா தெரிவித்துள்ளது. நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் போலியான தகவல்களை உள்ளடக்கி இந்த விவரணம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கை நிரந்தரப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்க தெரிவித்துள்ளார்.அடிப்படையற்ற தகவல்களை மையமாகக் கொண்டு இந்த விவரணம் தயாரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த விவரணத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை திரையிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.விவரணத்தை திரையிடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டால் அது ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் கொள்கைகளை கோட்பாடுகளை அந்த அமைப்பே மீறும் வகையில் அமைந்துவிடும் என ரவிநாத் ஆரியசிங்க சுட்டிக்காட்டியுள்ளார். செனல்4 ஊடகத்தின் குறித்த விவரணச் சித்திரம் காட்சிப்படுத்தக் கூடாது என்பதனை வலியுறுத்தி இலங்கை உத்தியோர்வமாக கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.

25 பிப்ரவரி 2013

வவுனியாவில் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கும் புதிய கட்சி தொடர்பான சுவரொட்டிகள்!

'தமிழ் தேசிய முன்னணி' என்னும் புதிய அரசியல் கட்சி உதயமாகுவதாகக் கூறி வவுனியாவில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒட்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சமகால ஆக்கபூர்வமான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்காய், அரசியல் ஆர்வமுள்ள இளைஞர், யுவதிகள் மற்றும் புத்திஜீவிகளினதும் பங்குபற்றுதலை உறுதி செய்வதற்காய், பாதிக்கப்பட்டுள்ள எமது மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை விரைவுபடுத்தவதற்காய், எமது தேசத்தை நாமே ஆளும் சக்தியாக உருவெடுப்பதற்காய், மேலும் பல அரசியல் புதுமைகளுக்காய் இந்தக் கட்சி உதயமாகின்றது என சுவரொட்டிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்சி தொடர்பான மேலதிக விபரங்களை பெறுவதற்காக 0242226436, 0777642329 என்ற தொலைபேசி இலக்கங்களும் இடப்பட்டுள்ளன.

அதிர்சியில் சிங்கள தேசம்: சிறிலங்காவின் ஊடகஇணையம் மீது ஊடறுப்பு தாக்குதல் ! இணையத்தில் போர்குற்ற காட்சிப்பதிவுகள்!!

website_001சிறிலங்க அரச கட்டமைப்பு இணையத் தளங்கள் மீதான இனந்தெரியாத நபர்களின் ஊடறுப்பு தாக்குதலின் தொடர்சியாக இன்று சிறிலங்கா அரச ஊடக இணையம் (http://www.media.gov.lk/) ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. http://www.media.gov.lk/ இந்த இணையத்தினை ஊடறுத்துள்ள நபர்கள் அப்பாவித் தமிழ் மக்கள் மீதான தாக்குதல்களை நிறுத்து என குறிப்பிட்டு அவுஸ்றேலிய தொலைக்காட்சியில் வெளிவந்திருந்த சிங்கள அரசின் போர்குற்றங்கள் தொடர்பிலான விபரண காணொளித் தொகுப்பினை இணைத்துள்ளதோடு அனைவருக்கும் நீதிவேண்டுமென தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சிறிலங்கா அரசின் 50க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் மீதான இவ்வகை ஊடறுப்புக்களினால் திகைத்துப்போயுள்ள சிங்கள அரசுக்கு இன்றைய இந்த ஊடறுப்பு அதிர்சியனை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் பாலசந்திரன் மீதான சிங்கள இராணுவத்தினரது படுகொலைக்காட்சிப்பதிவுகள் சிறிலங்காவின் போர்குற்றங்கள் சாட்சிப்பதிவுகளாக சர்வதேசத்தின் கவனத்தினை பெற்றுள்ள நிலையில் ஊடறுப்பு தாக்குதலுக்கு உள்ளான இணையத்தில் போர்குற்றங்கள் தொhட்பிலான காணொளிகள் வெளிவந்துள்ளமை சிங்கள அரசு பேரதிர்சியாக அமைந்துக்கும் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

ஐக்கிய நாடுகள் சபைக்கு இலங்கைக்கு எதிராக 8 அறிக்கைகள்!

geniva_meeting_001ஐக்கிய நாடுகளின் 22வது மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பல சர்வதேச அரச சார்ப்பற்ற நிறுவனங்கள் தமது அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளன. இந்தவகையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கைக்கு அப்பால் இலங்கை தொடர்பில் 8 அறிக்கைகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இந்த அறிக்கைககளில், ஆட்கள் தடுத்து வைக்கப்படல், பேச்சு சுதந்திரமின்மை, நீதித்துறைக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் இனப்பிரச்சினை தீர்வுக்கு வழியேற்படுத்தப்படாமை போன்ற காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

24 பிப்ரவரி 2013

மக்களை அலட்சியப்படுத்திய டக்ளசும்,சுந்தரமும்!

கச்சதீவு அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் பங்கு பற்றுவதற்காக நேற்றுச் சனிக்கிழமை காலை குறிகாட்டுவான் துறைமுகத்தைச் சென்றடைந்த மக்கள் நீண்டநேரமாக கால் கடுக்க வெயிலில் காத்திருந்தனர். அந்தவேளையில் அங்குவந்த டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் அங்கு கூடியிருந்த மக்களையும் கவனிக்காமல் வடதாரகை படகில் ஏறி கச்சதீவுக்குச் சென்றனர். அதன் பின்னர் குறிகாட்டுவானுக்கு வந்த யாழ். மாவட்டத்தின் பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரியான யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகமும் மக்களைப்பற்றி கவனத்தில் எடுக்காமல் தன்பாட்டில் புறப்பட்டுச் சென்றார். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினதும் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினதும் பொறுப்பற்ற செயலினால் குறிகாட்டுவானில் கச்சதீவு செல்வதற்காக திரண்டிருந்த நுற்றுக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டதுடன் அவர்கள் இவர்களின் பொறுப்பற்ற செயலை ஆத்திர மேலீட்டால் வாய்க்கு வந்தபடி திட்டித்தீர்த்தனர். கச்சதீவு அந்தோனியர் உற்சவத்துக்குச் செல்வதற்காக குறிகாட்டுவான் துறைமுகத்துக்கு நேற்றுக்காலையிலிருந்தே அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் சென்றனர். காலை 9.30 மணிக்குப் பின்னர் நுற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டபோதும் படகுகள் எவையும் வராத காரணத்தினால் அவர்கள் வெயிலில் காத்திருந்தனர். அந்தச் சமயத்தில் துறைமுகத்தில் வடதாரகைப்படகு நிறுத்தப்பட்டிருந்தது. மதியவேளை தனியார் படகு ஒன்று வந்து மக்களை ஏற்றிய போதும் பயணிகள் போதாது எனத்தெரிவித்து ஏற்றிய பயணிகளை படகின் உரிமையாளர் இறக்கிவிட்டார். கூடுதலான பணம் தருகிறோம் ஏற்றிச் செல்லுங்கள் எனப் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தபோதும் படகு உரிமையாளர் அதனைக் கணக்கிலெடுக்காமல் சென்றுவிட்டார். பிற்பகல் ஒரு மணியளவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் அங்கு வந்தனர். இதன் போது அங்கு கால் கடுக்க காத்திருந்த மக்கள், அமைச்சர் தலைமையிலான குழுவினரை சுற்றிவளைத்தனர். தங்களையும் வடதாரகைப் படகில் ஏற்றிச் செல்லுமாறும் அல்லது வேறுபடகை ஏற்பாடுசெய்து தருமாறும் கெஞ்சிக் கேட்டனர். இதனைப் பொருட்படுத்தாத அமைச்சர் நில்லுங்கள் படகு வரும் உங்களுக்கு நிற்க விருப்பம் இல்லாவிட்டால் திரும்பிப் போங்கள் என்று பதிலளித்துவிட்டு, வடதாரகைப்படகில் புறப்பட்டு சென்று விட்டார். காலையிலிருந்து காத்திருந்த மக்கள் வெயிலில் அத்தரித்துக் கொண்டுநிற்க அமைச்சர் டக்ளஸ்தேவானந்தாவும் அவரது குழுவினரும் வடதாரகையில் ஏறி கச்சதீவு நோக்கிப்பயணமாகினர். இதன் பின்னர் குறிகட்டுவானுக்கு யாழ்.மாவட்ட அரச அதிபர் வருகை தந்தார். அவரைச்சுற்றி வளைத்த மக்கள் தமக்குப் படகு ஒழுங்கு செய்து தருமாறும் தாங்கள் கட்டாயம் கச்சதீவு சென்று தமது நேர்த்திக் கடனை நிறை வேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தனர். காலையில் சென்ற படகு திரும்பி வந்து கொண்டிருக்கின்றது. இன்னும் ஒரு மணிநேரத்துக்குள் படகு வரும். நீங்கள் அதில் செல்லலாம் எனத் தெரிவித்து விட்டு அரச அதிபரும் அங்கிருந்து சென்றார். மணிக்க்ணக்காக மக்கள் காத்திருந்த போதும் நேற்று மாலை 5 மணிவரையில் படகுகள் எவையும் வராததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லத் தொடங்கினர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினதும், அரச அதிபரதும் பொறுப்பற்ற நடவடிகடகையை மக்கள் திட்டித் தீர்த்தனர். இது தொடர்பாக யாழ்.மாவட்ட அரச அதிபரை அவரது கைத் தொலைபேசி இலக்கத்தினூடாகப் பலமுறை தொடர்பு கொண்ட போதும் எமது அழைப்புக்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

செனல் 4 தொலைக்காட்சி இலங்கையை விலை பேசுகிறது: ஹத்துருசிங்க

‘போர்க்குற்ற படங்கள் என போலியான புகைப்படங்களை வெளியிட்டு செனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் இலங்கையை விலை பேசுகின்றது’ என யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க குற்றஞ்சாட்டினார். ‘யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் காணிகளை அபகரிப்பதாக மக்களை பயப்படுத்தி போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்கின்றார்கள். அமைதி இருக்க வேண்டுமானால் அரச நிறுவனங்கள் முழுமையாக செயற்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ‘படைகளின் செயற்பாடு மக்களின் அமைதியை மேம்படுத்துவதற்கு பயன்படுகிறது. அதற்காக எமது படையினர் பாடுபடுகின்றனர். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், மக்களின் காணிகளை இராணுவம் சுவீகரிப்பதாக கூறி மக்களை போராட்டத்திற்கு அழைத்து பூச்சாண்டி காட்டுகின்றார். அத்துடன், அரசியல்வாதிகள் இன குரோத்தினை ஏற்படுத்தி அமைதியை குழைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்’ என்று யாழ். கட்டளைத் தளபதி மேலும் கூறினார்.

23 பிப்ரவரி 2013

அமெரிக்கப் படைகளுக்கு சவேந்திர சில்வா நடத்திய பயிற்சி கருத்தரங்கு!

யுத்தக் குற்றவாளி சந்திர சில்வா அமெரிக்க படையினருக்கு பயிற்சிக்கு அழிக்கும் விசித்திரம்?பயங்கரவாதத்தை எவ்வாறு வெற்றி கொள்வது என்பது தொடர்பில் அமெரிக்க கடற்படையினருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாக செயற்படும் தமிழின அழிப்பில் ஈடுபட்ட குற்றவாளி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவினால் பயிற்சிக் கருத்தரங்கொன்று அளிக்கப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வது எப்படி’ என்ற தலைப்பில் அமெரிக்காவிலுள்ள கடற்படை பயிற்சிப் பல்கலைக்கழகத்தில் இந்த பயிற்சிக் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது.(ஒன்றுமே புரியல்லே உலகத்திலே,என்னமோ நடக்குது மர்மமாய் இருக்குது)

ஈழத்தமிழருக்காக குரல் கொடுக்கும் முதல்வருக்கு மக்கள் துணைநிற்க வேண்டும் – பழ.நெடுமாறன்!

தமிழக உரிமைகளை பாதுகாக்கவும், நிலைநாட்டவும் மத்திய அரசுடன் போராடும் துணிவுடன் செயல்படுகிற முதல்வருக்கு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது கடமையாகும் என்று பழ.நெடுமாறன் கூறியுள்ளார். மக்கள் உரிமை கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை வீரர்கள் பங்கேற்கும் ஆசிய தடகள விளையாட்டு போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருப்பதை பாராட்டி வரவேற்பதாக கூறியுள்ளார். இலங்கை அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராக இனஅழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்பது, தமிழக மக்களின் மன உணர்வுகளை புண்படுத்தும். எனவே, இலங்கை வீரர்கள் இப்போட்டிகளில் பங்கு பெறக்கூடாது என ஆசிய தடகள கழகத்திற்கு தமிழக அரசு தெரிவித்திருந்தும், எவ்வித பதிலும் கிடைக்காத காரணத்தினால் இந்த நடவடிக்கையை முதல்வர் மேற்கொண்டிருக்கிறார். அண்மை காலமாக தமிழக உரிமைகளை பாதுகாக்கவும், நிலைநாட்டவும் மத்திய அரசுடன் போராடும் துணிவுடன் செயல்படுகிற முதல் அமைச்சருக்கு, கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழக மக்கள் துணையாக நிற்க வேண்டியது நீங்காத கடமையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

22 பிப்ரவரி 2013

மற்றுமொரு படகில் மதிவதனி (அம்மா) பயணித்ததாக பாலச்சந்திரன் கூறினார்?

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இளைய மகன் பாலச்சந்திரனை படுகொலைசெய்த நபர், மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவே என சிங்கள இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மே 19ம் திகதி காலை 7.30 மணியளவில் 53ம் படைப் பிரிவில் வந்து சரணடைந்துள்ளார் பாலச்சந்திரன். இது இவ்வாறு இருக்கையில், 18ம் திகதி இரவு(முதல் நாள்) 2 படகுகள் நந்திக்கடலூடாக புறப்பட்டதாகவும், இராணுவ சுற்றிவளைப்பில் இருந்து தப்பவே இப் படகில், சிலர் பயணித்ததாக பாலச்சந்திரன் மேஜர் ஜெனரல் கமால் குணரட்னவிடம் தெரிவித்ததாக அவ்விணையம் மேலும் தெரிவித்துள்ளது. ஒரு படகில் தனது அம்மா மதிவதனி, புறப்பட்டுச் சென்றதாகவும், இருப்பினும் அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இக் கூற்றில் உண்மை இருக்கலாம். ஏன் எனில் கேணல் ரமேஷ் அவர்கள் 18ம் திகதி இராணுவத்திடம் சரணடைந்தபோது அவரை முதலில் விசாரித்த இராணுவத்தினர், தேசிய தலைவரின் மகன் மற்றும் மனைவி எங்கே என்று தான் கேட்கிறார்கள். மற்றும் இதற்கு அடுத்த நாள் தான் பாலச்சந்திரன் இராணுவத்திடம் சரணடைந்தான் என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
During the interrogation Balachandran had said that he was with his father in one boat trying to escape the gunfire, while his mother and sister were in another. Balachandran had also revealed that his father and his few remaining security personnel had fought back. Gunaratne had informed all the details he had learnt from Balachandran to the Defence Secretary on his mobile phone. The Defence Secretary had informed all the details to Karuna Amman. Karuna Amman had told the Defence Secretary that Balachandran should be killed since there was a possibility that he would become the next LTTE leader if he survived and because he would be released from courts since he was under age.

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இன்று திரையிடப்படுகிறது ‘போர் தவிர்ப்பு வலயம்’

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ‘போர் தவிர்ப்பு வலயம்’ ஆவணப்படம் முதல் முறையாக நாளை புதுடெல்லியில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் திரையிட்டுக் காண்பிக்கப்படவுள்ளது. புதுடெல்லியில் உள்ள அரசியலமைப்பு கழகத்தில் (Constitution Club) இன்று பிற்பகல் 4.30 மணிக்கு இந்த ஆவணப்படத்தின் 20 நிமிடக் காட்சிகள் திரையிடப்படவுள்ளன. இதையடுத்து, மாலை 5 மணியளவில் குழுநிலை விவாதம் ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதில், அனைத்துலக மன்னிப்புச் சபையின் இந்தியாவுக்கான பிரதம நிறைவேற்று அதிகாரி ஜி.அனந்தபத்மநாதன், போர் தவிர்ப்பு வலயம் ஆவணப்படத்தின் இயக்குனர் கல்லும் மக்ரே, ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்தின் பிரதம செய்தி ஆசிரியர் எம்.ஆர்.நாராயணசாமி, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பி.சகாதேவன் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.

இலங்கைக்கு பாடம் கற்பிக்கும் மூவரின் சாட்சியங்கள்

1f43daa4b469ba1d5c10fdac3eeb9408சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட தமிழர்கள் மீது பாலியல் கொடுமைகள் குறித்து திங்களன்று வெளிவரவுள்ள அறிக்கையில், இடம்பெற்றுள்ள 75 பேரின் சாட்சியங்களில், மூவரினது சாட்சியங்களை மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. சாட்சியம் 01:
2011ம் ஆண்டு நவம்பர் மாதம் கொழும்பிலுள்ள தனது வீட்டில் இருந்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பிடித்துச் செல்லப்பட்ட 31 வயதான தமிழ்ப்பெண் “கொழும்பில் நாலாம் மாடியில் உள்ள குற்றப்புலனாய்வு பிரிவு பணியகத்துக்கு நான் கொண்டு செல்லப்பட்டேன். எனக்கு குடிக்க நீரோ, உணவோ தரப்படவில்லை. அடுத்த நாள், சீருடை அணிந்த ஒரு அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் என்னைப் படம் பிடித்தனர். எனது கைவிரல் அடையாளங்களை பதிவுசெய்தனர். வெற்றுத்தாளில் எனது கையொப்பத்தைப் பெற்றுக் கொண்டனர். எனது கணவர் பற்றிய எல்லா விபரங்களையும் தாம் வைத்துள்ளதாகவும், அவர் எங்கே பதுங்கியுள்ளார் என்ற விபரத்தை கூறிவிடுமாறும் அவர்கள் என்னிடம் கேட்டனர். எனது கணவர் வெளிநாடு சென்று விட்டதாக அவர்களுக்கு கூறினேன். அவர் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாக, அவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டினர். பல்வேறு பொருட்களால் நான் தாக்கப்பட்டேன். விசாரணையின்போது, வெண்சுருட்டினால் சுடப்பட்டேன். மணல் நிரப்பிய குழாயினால் தாக்கப்பட்டேன். அடித்துக் கொண்டே எனது கணவர் பற்றிய விபரங்களை கேட்டனர். ஒரு இரவில் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். சாதாரண உடையில் இரண்டுபேர் எனது அறைக்குள் வந்தனர். எனது ஆடைகளை அவிழ்த்து விட்டு இருவரும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினர். அவர்கள் சிங்களத்தில் பேசினர். வேறு எதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அது இருளாக இருந்ததால், அவர்களின் முகங்களை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.” என்று விவரிக்கிறார். சாட்சியம் 02:
2012 ஓகஸ்ட் மாதம் பிடிக்கப்பட்ட இன்னொரு 23வயது இளைஞர். “அவர்கள் எனது கண் கட்டை அவிழ்த்து விட்டபோது, நான் ஒரு அறைக்குள் இருப்பதை கண்டேன். அங்கு மேலும் நால்வர் இருந்தனர். நாற்காலி ஒன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்ட பின்னர், விடுதலைப் புலிகளுடனான எனது தொடர்புகள் குறித்து விசாரிக்கப்பட்டேன். அண்மையில் வெளிநாடு சென்றதற்கான காரணம் என்ன என்று கேட்டனர். என்னைக் கட்டி வைத்து அடிக்கத் தொடங்கினர். மின் வயரினால் அடித்தனர். வெண்சுருட்டினால் சுட்டனர். பெற்றோல் நிரப்பிய பொலித்தீன் பைக்குள் அமுக்கினர். பின்னர் அன்றிரவு, நான் சிறிய அறை ஒன்றுக்குள் கொண்டு செல்லப்பட்டேன். தொடர்ந்து மூன்று நாட்களாக நான் பாலியல் ரீதியாதத் துன்புறுத்தப்பட்டேன். முதல் நாள் இரவு ஒருவர் தனியாக வந்து வல்லுறவுக்கு உட்படுத்தினார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் இரண்டு ஆண்கள் எனது அறைக்கு வந்தனர். அவர்கள் என்னை பாலியல் வல்லுறுவுக்கு உட்படுத்தியதுடன் வாய் வழி உறவு வைத்துக் கொள்ளவும் நிர்ப்பந்தித்தனர். பாலியல் வல்லுறவுகளை அடுத்து எனக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உள்ளதாக கூறும் ஆவணத்தில் நான் கையெழுத்திட்டுக் கொடுத்தேன்.”
சாட்சியம் 03:
2009 மே மாதம் சிறிலங்கா படையினரிடம் சரணடைந்த மற்றொரு இளைஞர். “இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்புறம் பிடித்திருக்க, ஒருவர் எனது ஆணுறுப்பைப் பிடித்து அதனுள் உலோகத்துண்டு ஒன்றை செலுத்தினார். எனது ஆணுறுப்பினுள் அவர்கள் சிறிய உலோகக் குண்டுகளை செலுத்தினர். சிறிலங்காவில் இருந்து நான் தப்பி வந்த பின்னர் அவை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.” இதற்கு ஆதாரமான மருத்துவ அறிக்கையும் உள்ளது. என்று விவரிக்கிறார். மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிடவுள்ள அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள சாட்சிகளே இவை. இதுபோன்ற சித்திரவதைகள், பாலியல் கொடுமைகளைத் தாங்கமுடியாமல் பலரும் தமக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்புள்ளதாக ஒப்புக்கொள்ளும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாறு சாட்சியமளித்துள்ளவர்கள் எவரும் முறைப்படியாக விடுதலையாகவில்லை. அதிகாரிகளுக்கு உறவினர்கள் இலஞ்சம் கொடுத்தத்தை அடுத்து தப்பிக்க அனுமதிக்கப்பட்டவர்கள் என்றும் மனிதஉரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

21 பிப்ரவரி 2013

தடகள போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்க கூடாது-முதல்வர் ஜெயலலிதா

இலங்கை வீரர்கள் பங்கேற்றால் தமிழர்களின் மனம் புண்படும் என்பதால், 20வது ஆசிய தடகள போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கை: விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில், 20வது ஆசிய தடகள போட்டிகளை சென்னையில் வரும் ஜூலை மாதம் நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அதே நேரத்தில், இலங்கைவாழ் தமிழர்கள் சுயமரியாதையுடனும் சம உரிமையுடனும் கவுரவத்துடனும் நடத்தப்பட வேண்டும் என்பதில் தமிழக அரசு எப்போதும் உறுதியாக உள்ளது. இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழகம் உள்பட இந்தியாவில் எங்கும் பயிற்சி அளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தி பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியுள்ளேன். இந்த சூழ்நிலையில், பிரபாகரனின் மகன் என்ற ஒரே காரணத்துக்காக 12 வயது சிறுவன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவம் சுட்டுத் தள்ளிய கோர காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இது மன்னிக்க முடியாத மாபெரும் போர்க் குற்றமாகும். இவற்றை எல்லாம் பார்க்கும்போது, ஜெர்மனியில் ஹிட்லர் நிகழ்த்திய இனப் படுகொலையை விஞ்சும் அளவுக்கு இலங்கையில் இனப் படுகொலை நடந்து இருப்பது தெரிய வருகிறது. இலங்கை அரசு, அங்கு வாழும் தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதை கருத்தில் கொண்டு, வரும் ஜூலை மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் 20வது ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் அது தமிழர்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமைந்துவிடும். இலங்கை வீரர்கள் 20வது ஆசிய தடகளப் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்றும், இதை இலங்கை அரசுக்கு உரிய முறையில் தெரிவிக்குமாறும் சிங்கப்பூரில் உள்ள ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளருக்கு தமிழக அரசின் தலைமைச் செயலாளரால் கடிதம் எழுதப்பட்டது. அதன் நகல்கள் மத்திய அரசின் வெளியுறவுத் துறை செயலாளர் மற்றும் விளையாட்டுத் துறை செயலாளருக்கும் அனுப்பப்பட்டன. இருப்பினும், இதுநாள் வரை ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எந்த பதிலும், தகவலும் தமிழக அரசுக்கு வரவில்லை. ஆசிய தடகள கழகத்திடம் இருந்து எந்த சாதகமான பதிலும் வராத சூழ்நிலையில், இலங்கை நாடு பங்கேற்கும் ஆசிய தடகள போட்டிகளை தமிழகத்தில் நடத்துவது என்பதை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. தமிழர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, இந்த ஆண்டு ஜூலையில் நடக்கவுள்ள 20வது ஆசிய தடகளப் போட்டிகள் தமிழக அரசால் நடத்தப்படாது. இந்தப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த இயலாது என்பதால் வேறு எங்கேனும் நடத்திக் கொள்ளுமாறு ஆசிய தடகள கழகத்தின் பொதுச் செயலாளர் தமிழக அரசால் கேட்டுக் கொள்ளப்படுவார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு தமிழக முதல்வர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 பிப்ரவரி 2013

நாவற்குழியில் பதற்றம்: சிங்கள குடியேற்றவாசிகள் மீது தாக்குதலுக்கு தயார்படுத்தல்?

தமிழர் தாயகத்தை சிதைக்கும் நோக்கோடு சிங்களவர்களை தமிழீழப் பகுதியில் சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டவகையில் குடியேற்றி வருகிறது. அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணம் நாவற்குழிப் பகுதியில் சுமார் 134 குடும்பங்கள் சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளின் பாதுகாப்புடன் குடியேற்றப்பட்டுள்ளனர். தமிழ்மக்கள் அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் தமது பூர்வீக நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் சிங்களவர்களை தமிழர்களின் மரபுரீதியான தாயகத்தில் குடியேற்றும் நடவடிக்கை தமிழர் தரப்பிடம் கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. இந்தநிலையில், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் புத்திரன் பாலகன் பாலச்சந்திரன் சிங்கள இன அழிப்புப் படைகளால் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்மை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை உண்டுபண்ணியுள்ளது. இந்த கொந்தளிப்பு யாழ்ப்பாணத்தில் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில், நாவற்குழியில் திட்டமிட்ட வகையில் குடியேற்றப்பட்டுள்ள சிங்களவர்கள் மீது தாக்குதல் நாடத்தவென இளைஞர்கள் குழு தயாரவதாக வெளியான தகவல் பெரும் பரபரப்ரை ஏற்படுத்தியுள்ளதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.
நன்றி:பரிஸ்தமிழ் 

பிரபாகரனின் குடும்பம் தொடர்பில் எதுவும் தெரியாது : அச்சத்தில் பொன்சேகா

கொல்லப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரான வே.பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோரின் மரணம் பற்றி இராணுவம் எதையும் அறிந்திருக்கவில்லை என சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார். “2009ஆம் ஆண்டு மே 17ஆம் திகதி இரவு தொடங்கி 19ஆம் திகதி 10 மணி வரை நடந்த இறுதி யுத்தம் முடிந்த பின் நாம் பிரபாகரன், அவரது மூத்த மகன் சார்ள்ஸ் அன்ரனி  மற்றும் 400 பயங்கரவாதிகளின் உடல்களை கண்டெடுத்தோம். பிரபாகரன் மற்றும் சார்ள்ஸ் அன்ரனி ஆகியோரின் உடலை அப்போது அமைச்சராக இருந்த கருணா அம்மான் அடையாளம் காட்டினார்” என அவர் குறிப்பிட்டார். பிரபாகரனின் ஏனைய குடும்ப உறுப்பினர்கள் எங்குள்ளனர் என்பதையிட்டு இராணுவத்திற்கு எதுவும் தெரியாது எனவும் அவர் கூறினார். பிரபாகரனின் மனைவி, மகள், இளைய மகன் ஆகியோர் வகித்த பதவிகள் பற்றி இராணுவத்திடம் தகவல்கள் இருக்கவில்லை. இவர்கள் இலங்கையில் இருந்தனரா அல்லது யுத்தத்தின்போது இறந்துவிட்டனரா என்பதெல்லாம் இராணுவத்திற்கு தெரியாது என சரத்பொன்சேகா தெரிவித்தார். தமிழீழ விடுதலை புலிகளின் தலைவரின் இளைய மகன் பாலச்சந்திரனை இராணுவம் பிடித்து வைத்திருந்தபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் சனல் – 4 இனால் வெளியிடப்பட்ட படங்கள் பற்றி கருத்து தெரிவித்த பொன்சேகா இராணுவத்திடம் பிரபாகரனின் இளைய மகன் பற்றிய தகவல் எதுவும் இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.

பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை ஆழ்ந்த கவலையளிக்கிறது என்கிறது அமெரிக்கா!

News Serviceதேசியத் தலைவர் பிரபாகரனின் 12வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்கா இராணுவத்தினரால் உயிருடன்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்கா, சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஆழ்ந்த கவலையடைவதாக தெரிவித்துள்ளது.. வொசிங்டனில் நேற்று இடம்பெற்ற நாளாந்த செய்தியாளர் சந்திப்பில், பாலச்சந்திரன் தடுத்து வைக்கப்பட்டு, கொல்லப்பட்டுள்ள ஒளிப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், சிறிலங்காவில் இடம்பெற்ற அனைத்துலக மனிதாபிமான மற்றும் மனித உரிமைச்சட்டங்கள் மீறல்கள் குறித்து, தொடர்ந்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளோம். ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாகவும் தீர்மானம் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சிறிலங்காவில் போரின் முடிவில், அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதமாபிமான சட்ட மீறல்களின் ஈடுபட்ட எல்லாத் தரப்பினரையும் முழுமையாக பொறுப்புக்கூறுவதற்கு ஆதரவளித்தோம். நீண்டகாலப் பிரச்சினையாக உள்ள நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரங்களுக்குத் தீர்வுகாண சிறிலங்கா அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை கடுமையான கவலை தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையையும் அமெரிக்கா வரவேற்கிறது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நாம் இது தொடர்பாக, சொந்தமாக ஒரு தீர்மானத்தைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இவ்வாறு அமெரிக்கா கடந்த நான்குவருடங்களாக கவலையும், கண்டனமுமாக காலத்தை கழிக்கின்றார்கள். இந்த முறையாவது உருப்படியான தீர்மானத்தினைக் கொண்டுவருவார்களா என்ன ? பார்க்கலாம்....!

19 பிப்ரவரி 2013

நாஜிகளின் படுகொலையை விட மகிந்தனின் படுகொலை கொடூரமானது- வைகோ ஆவேசம்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியாகியுள்ள புகைப்படத்தை பார்க்கும் போது இதயம் வெடிப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “நம் இருதயங்களை வெட்டிப் பிளக்கும் துன்பச் செய்தியாக, பிரபாகரனின் இளைய மகன், 12 வயதே நிரம்பிய பாலச்சந்திரன், படுகொலை செய்யப்பட்ட கோரச் சம்பவத்தை, வீடியோ ஆதாரத்தோடு சனல் 4 வெளியிட்டு உள்ளது. ஐந்து குண்டுகள் பாலச்சந்திரன் மார்பிலே பாய்ந்து உள்ளன. சண்டை நடந்தபோது, இருதரப்பிலும் குண்டுகள் பாய்ந்தபோது ஏற்பட்ட சம்பவம் அல்ல. சின்னஞ்சிறு பிள்ளையான பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டு, மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு உள்ள ஒரு நிலவறைக்கு உள்ளே உட்கார்ந்து இருக்கிறார். அரைக்கால் சட்டை அணிந்து இருக்கிறார். கருப்பு சட்டை இடுப்பில் சுற்றப்பட்டு உள்ளது. தோள்களில் ஒரு பழைய லுங்கி, அப்பிள்ளையின் பால்வடியும் முகம், சின்னஞ்சிறு மார்பு, ஒரு படத்தில் கையில் ஏதோ பிஸ்கட்டோ ஒன்றையோ வாயில் உதடுகளில் வைப்பதுபோல் தோற்றம். அடுத்தபடத்தில் அந்த ஒளி தரும் கண்கள் எதையோ உற்று நோக்கும் பார்வை. ஐயோ, அதைப் பார்க்கும் போதே இதயம் வெடிக்கிறதே! அடுத்தபடம். உயிரற்ற சடலமாகக் கிடக்கிறான் பிள்ளை. ஐந்து குண்டுகள் மார்பில் பாய்ந்து உள்ள அடையாளம். இதுகுறித்து, ஆய்வு செய்த நிபுணர் கூறுகிறார்: மூன்று அடி இடைவெளியில் இருந்துதான் முதல் குண்டைச் சுட்டு இருக்க வேண்டும். அந்தத் துப்பாக்கியை நோக்கி பாலச்சந்திரன் கையை நீட்டித் தொட முயன்று இருக்கலாம். முதல் குண்டு பாய்ந்தவுடன் பின்புறமாக விழுந்துவிட்டான். அதன் பிறகு நான்கு ரவைகள் மார்பிலே பாய்ந்து உள்ளன. கிடைத்து இருக்கக்கூடிய வீடியோ ஆதாரங்களின்படி, பாலச்சந்திரன் சடலம் கிடந்த இடத்திற்குப் பக்கத்தில், வேறு ஐந்து பேரின் சடலங்களும் கிடக்கின்றன. அவர்கள் விடுதலைப்புலி போராளிகளாகத் தெரிகிறது. அவர்களது உடைகளைக் களைந்து அம்மணமாக்கி, கைகளையும், கண்களையும் கட்டி, உச்சந்தலையில் சுட்டுக் கொன்று இருக்கின்றார்கள். இது திட்டமிட்ட கோரப் படுகொலை ஆகும். தடவியல் துறையில் உலகப் புகழ்பெற்ற நிபுணர், பேராசிரியர் டெரிக் பவுண்டர், “இது நூற்றுக்கு நூறு உண்மையான தடயம்” என்று உறுதிப்படுத்தி இருக்கின்றார். பாலச்சந்திரன் கண்முன்னாலேயே ஐந்து தமிழர்களைக் கொடூரமாகச் சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் பாலச்சந்திரனையும் படுகொலை செய்யப்பட்டுள்ளமை அணு அளவு ஐயத்துக்கும் இடம் இன்றி உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என்று, சனல் 4 தொலைக்காட்சியின் காணொளிக்காட்சிகள் சாட்சியம் தருகின்றன. ஜெர்மானிய நாஜிகள் நடத்திய படுகொலைகளைவிட, தமிழ் இனக்கொலைகள், அதிலும் சின்னஞ்சிறு பிள்ளைகளை ஈவு இரக்கம் இன்றிக் கொன்றுகுவித்த பின்னும், இன்னுமா மனிதகுலத்தின் மனசாட்சி விழிக்கவில்லை? உலகத்தின் நீதியே செத்துவிட்டதா? இப்படி எத்தனை எத்தனை பாலச்சந்திரன்கள் கொல்லப்பட்டனர்? இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் 'மிருக்கத்தனமான ஆட்சி'க்கு ஆயுதவிற்பனை!

மனிதஉரிமைகளை மீறுகின்ற மிருகத்தனமான சிறிலங்காவின் ஆட்சியாளர்களுக்கு, பிரித்தானிய அரசு ஆயுதங்களை விற்ற விவகாரம், பிரித்தானிய ஊடகங்களின் கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது. பிரித்தானியாவின் முக்கிய ஊடகங்களான, ‘தி இன்டிபென்டென்ட்‘ மற்றும் ‘தி கார்டியன்‘ என்பன இந்த ஆயுத விற்பனையை மோசமாக விமர்சித்துள்ளன. “சிறிலங்காவின் மிருகத்தனமான ஆட்சிக்கு ஆயுதங்களை விற்ற பிரித்தானியா“ என்று இன்றைய பதிப்புக்கு ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு பிரதான தலைப்பிட்டுள்ளது. இந்தச் செய்தியில் பிரித்தானிய மகாராணி சிறிலங்கா அதிபருடன் கைகுலுக்கும் ஒளிப்படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. சிறிலங்காவின் மோசமான மனிதஉரிமை மீறல்கள் போர்க்குற்றங்கள் குறித்து விலாவாரியாக விளக்கும் வகையில், இந்தப் பிரதான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், ‘சிறிலங்காவின் மீறல்கள் குறித்து உரக்கக் கத்தினோம், மூன்றாண்டுகளாக நாமே ஆட்சியாளர்களுக்கு ஆயுதங்களை அளிக்கிறோம்‘ என்ற தலைப்பில் மற்றொரு கட்டுரையையும் இன்றைய ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு வெளியிட்டுள்ளது. மேலும், ‘சிறிலங்கா குறித்த பிரித்தானியாவின் கபடநாடகம்‘ என்ற தலைப்பில், இந்த ஆயுத விற்பனையை விமர்சித்து, ஆசிரிய தலையங்கத்தையும் ‘தி இன்டிபென்டென்ட்‘ நாளேடு வெளியிட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை, பிரித்தானியாவின் மற்றொரு பிரபல நாளேடான தி கார்டியனும், சிறிலங்கா அரசுக்கான இந்த ஆயுத விற்பனையை கடுமையாக விமர்சித்துள்ளது. மோசமான மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள - பிரித்தானிய வெளிவிவகார அமைச்சினால் ‘கவலைக்குரிய நாடாக‘ பட்டியலிடப்பட்டுள்ள நிலையிலும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்ய பிரித்தானிய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக ‘தி கார்டியன்‘ கவலையுடன் சுட்டிக்காட்டியுள்ளது.

கிளிநொச்சியில் சிறுவர் இல்லத்தில் துஸ்பிரயோகம்!

கிளிநொச்சியிலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் கிளிநொச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் நேற்று (18) இவர்களைப் பொலிஸார் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தினர். வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதவான் நீதிமன்றம் குறித்த நபர்களில் ஒருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றைய நபரை ஒரு இலட்சம் ரூபா ஆட்பிணையிலும் 50 ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் செல்ல அனுமதியளித்துள்ளது. அத்துடன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டவர் வாரத்தில் ஒரு நாள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்குச் சென்று கையொப்பமிட வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

18 பிப்ரவரி 2013

பிரபல ஆங்கில ஆசிரியர் எஸ்.பி.ஐயர் காலமானார்!

யாழ்ப்பாணம்,கொழும்பு ஆகிய இடங்களில் பிரபல ஆங்கில ஆசிரியராக திகழ்ந்த எஸ்.பி.ஐயர் என்று அழைக்கப்படும் செல்லையா ஐயர் பாலசுப்பிரமணிய ஐயர் அவர்கள் 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் காலமானதாக அவரது குடும்பத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.கல்வி கற்பிப்பதில் தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கி,மாணவர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்து நகைச்சுவையூடே தனது புலமையை மாணவர்களுக்குள் புகுத்தியவர் எஸ்.பி.ஐயர் அவர்கள்.அவரது இறுதி நிகழ்வுகள் நாளை செவ்வாய்க்கிழமை (19.02.2013)நண்பகல் 12.00மணியிலிருந்து 13.00மணிக்குள்St.Marylebone Crematorium East End Road FInchey,London, N20 Rz என்ற முகவரியில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலணையில் வாலிபர் குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்!

குளத்தில் குளிக்கச் சென்ற இளைஞர் குளத்து நீரிழ் முழ்கி உயிரிழந்துள்ளார். வேலணை 8ஆம் வட்டாரத்தில் சேர்ந்த பாலசுப்பிரமணியம் நிரோஜன் (வயது 18) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். அதே இடத்தில் உள்ள வேணா குளத்தில் மைத்துனருடன் குளிக்கச் சென்றுள்ளார். தன்னுடன் வந்த மைத்துனரை காணவில்லை என வீட்டில் தெரிவித்த போது உறவினர்களினால் இளைஞனின் சடலம் குளத்தில் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சடலம் குறித்து ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டக்ளஸின் தலையீட்டால் தான் வீதிகளின் அபிவிருத்தி முடக்கம்!

உலக வங்கியின் நிதியுதவியுடன் யாழ். குடாநாட்டில் வீதிகளைப் புனரமைப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தில் இரு தொகுதிகள் அரசியல் தலையீடு காரணமாக செயலிழக்கும் அபாயநிலையை எட்டியுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதனால் 700 மில்லியன் ரூபா செலவில் திருத்தம் செய்யப்பட வேண்டிய 6 வீதிகளின் புனரமைப்பு வேலைகள் அப்படியே நின்று போயுள்ளன. இவற்றைச் செய்து முடிக்க வேண்டிய காலப்பகுதி இந்த வருடம் மே மாதத்துடன் முடிவடையும் நிலையில் அதற்குரிய ஒப்பந்தக் காரரைச் தெரிவு செய்வதில் ஏற்பட்டுள்ள அமைச்சர்கள் மட்ட கூட்டு அரசியல் தலையீட்டால் பணிகள் அனைத்தும் அப்படியே முடங்கிவிட்டன. இந்த நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு இந்த நிலை நீடித்தால் வழங்கப்பட்ட நிதி திரும்பிச் செல்லும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். இதேவேளை உலக வங்கியில் எதிர் காலத்தில் வடக்கு அபிவிருத்திக்கு என நிதி உதவிகள் வழங்கப்படாத நிலைமை ஏற்படும் என அவர்கள் சுட்டிக்காட்டினர். புன்னாலைக்கட்டுவன் புளியங்கிணற்றடிவீதி, மல்லாகம் புன்னாலைக்கட்டுவன் ஈவினை வீதி, சண்டிலிப்பாய் உடுவில் வீதி ஆகிய மூன்று வீதிகளையும் புனரமைப்பதற்கு 406 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. காரைநகர் சிவன் கோயில் வீதி, வேலணை சுருவில் வீதி, மண்டைதீவு வீதி ஆகியவற்றைப் புனரமைக்க 300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. உள்ளூரில் உள்ள யூரோவில் என்னும் பொறியியல் நிறுவனத்தின் கீழ் இந்த வீதிகளைப் புனரமைக்கும் ஒப்பந்தம் 2011 ஆம் ஆண்டு கடைசிக் காலாண்டில் வழங்கப்பட்டது. 18 மாதங்களுக்குள் இந்த ஒப்பந்தங்கள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஆண்டு இறுதிவரை புனரமைப்புப் பணிகளில் 5 வீதம் கூட இந்த நிறுவனத்தால் பூர்த்தி செய்யப்படவில்லை. இதனையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒப்பந்தங்கள் அனைத்தும் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் இரத்துச் செய்யப்பட்டன. இந்த 6 புனரமைப்புத்திட்டங்களுக்காக யூரோவில் நிறுவனத்துக்கு 90 மில்லியன் ரூபா முற்பணமாக வழங்கப்பட்டது. எனினும் வேலைகள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை என்பதால் உலக வங்கியின் அறிவுறுத்தலுக்கு அமைய ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்டன. பின்னர் இந்த வீதிகளை புனரமைப்பதற்கான மீள் ஒப்பந்தம் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விவகாரத்தில் தலையிட்டதை அடுத்தே மீள் ஒப்பந்தத்துக்கான கேள்வி இதுவரை கோரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் ஒப்பந்தத்தை மீளவும் யூரோவில் நிறுவனத்திடமே வழங்கும் படி கேட்டுள்ளார். ஆளுநர் அதனை ஏற்று ஒப்பந்தத்தை மீளவும் பழைய ஒப்பந்தகாரரிடமே வழங்கும் படி உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருக்கு சிபாரிசு செய்துள்ளார். இந்த நிலையில் ஒப்பந்தகாரருக்கு வழங்கப்பட்ட முற்பணத்துக்கான வங்கிப் பாதுகாப்பு உத்திரவாதத்தின் அடிப்படையில் முற்பணத்தின் ஒரு தொகுதியை கடந்த வாரத்தில் வங்கி, வடமாகாண பிரதம செயலாளர் விஜயலட்சுமி ரமேஸிடம் கையளித்தது. ஆனால் சட்ட திட்டங்களுக்கும் விதிமுறைகளுக்கும் மாறாக அந்தக் காசோலை வங்கியிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீடே இதற்கும் காரணம் என அதிகாரிகள் கூறினர். “உலக வங்கியிடம் இருந்து அங்கீகாரம் பெற்றமைக்கு அமைய இந்தத் திட்டங்கள் மீண்டும் கேள்வி கோரப்பட்டு வேறு ஒப்பந்த காரருக்கு உடனடியாக வழங்கப்படாது விடின் எதிர் காலத்தில் வடமாகாணத்துக்கென உலக வங்கியிடம் இருந்து கிடைக்கும் கடனுதவிகள் கிட்டுவது கேள்விக்குறியாகிவிடும்” என்று மாகாண சபை அதிகாரி ஒருவர் உதயனிடம் தெரிவித்தார். “மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தால் ஒப்பந்தங்கள் இரத்துச் செய்யப்பட்ட போதிலும் உரிய அரசியல் தலைவரிடம் பேசி அதனை நாம் மீள பெற்றுக்கொண்டோம்” என்று யூரோவில் நிறுவனத்தின் பணிப்பாளர் ராமதாஸ் உதயனிடம் தெரிவித்தார். அரசியல் வாதிகளின் சொந்த நலன்களுக்காக அபிவிருத்தித் திட்டங்கள் இவ்வாறு பந்தாடப்படுவது குறித்து யாழ்ப்பாண மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர். அரசியல் வாதிகளின் தாளத்துக்கு ஆடாமல் உரிய நெறிமுறைகளில் நின்று அதிகாரிகள் அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

தெல்லிப்பழை கைது புகைப்படம் தொழில்நுட்ப மோசடிப் புனைவு! இப்படிக் கூறுகிறார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

s2யாழ். தெல்லிப்பழை உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்தார்கள் எனக் கூறப்படுபவர்களுள் ஒருவரின் கையை பொலிஸார் பிடித்துக் கொண்டு செல்வதுபோல வெளியாகியுள்ள புகைப்படங்கள் திரிபு படுத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். தற்போது வளர்ச்சியடைந்துள்ள அதிநவீன தொழில்நுட்பத்தில் புகைப்படங்கள் பலவாறாக திரிபுபடுத்தப்படுகின்றன. தெல்லிப்பழை சம்பவத்திலும், குறித்த புகைப்படங்கள் பொலிஸாருக்கு எதிராகத் திரிபுபடுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். யாழ். தெல்லிப்பழையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் நபரைப் பிடித்து பொலிஸாரிடம் தாம் ஒப்படைத்தனர் என அங்குள்ள மக்கள் தெரிவித்ததுடன், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும் என உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், குறித்த போராட்டத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் நபரை மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கவும் இல்லை. பொலிஸார் எவரையும் கைதுசெய்யவும் இல்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி முன்னர் தெரிவித்தார். இது விடயத்தில் தெல்லிப்பழை மக்களதும், எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களது கருத்துகளும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கும் கருத்துகளுக்குமிடையே முரண்பாடு தோற்றம் பெற்றுள்ளதால் இது தொடர்பில் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதுடன் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடியிடம், தெல்லிப்பழை ஆர்ப்பாட்டம் குறித்து நீங்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்கும், பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ள கருத்துகளுக்குமிடையே முரண்பாடு நிலவுகின்றதே என வினவியபோது அவர் பதிலளிக்கையில், “தெல்லிப்பழையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குழப்பம் விளைவித்ததாகக் கூறப்படும் எந்த நபரையும் மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைக்கவில்லை. அத்துடன், பொலிஸாரும் எவரையும் கைதுசெய்யவில்லை” என்றார். இந்தப் போராட்டத்தில் குழப்பம் ஏற்பட்ட பின்னர் நபரொருவரின் கையை பொலிஸார் பிடித்துச் சென்றனர் என மக்கள் கூறுகின்றனர். நீங்களும் இதை ஊடகங்கள் மூலமாக பார்த்ததாகக் கூறியுள்ளீர்கள். அவர் இப்போது எங்கே இருக்கிறார்? யாழில் மட்டுமல்ல, நாடு முழுவதும் போராட்டங்கள் இடம்பெறுகின்றபோது அங்கு குழப்பம் ஏற்பட்டால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும், பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் அங்குள்ள நபர்களைப் பொலிஸார் அவ்வேளையில் பிடிப்பர். அதன் பின்னர் அவர் விடுவிக்கப்படுவார். அதுபோலவே இந்தச் சம்பவத்திலும் நடந்தது. இந்தப் போராட்டத்தில் தம்மால் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபரை பொலிஸார் கூட்டிச் சென்றனர். அதற்குத் தேவையான புகைப்பட ஆதாரங்கள் இருக்கின்றன என பொதுமக்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் கூறுகின்றனர். இது தொடர்பில் உங்களது கருத்து என்ன? தற்போது வளர்ச்சியடைந்துள்ள அதிநவீன தொழில்நுட்பத்தில் புகைப்படங்கள் பலவாறாகத் திரிபுபடுத்தப்படுகின்றன. தெல்லிப்பழை போராட்டத்தின்போதும், பொலிஸார் நபரொருவரின் கையைப் பிடித்துக்கொண்டு செல்வதுபோல நவீன தொழில்நுட்பத்தினூடாக புகைப்படங்களைத் திரிபுபடுத்தியிருக்கலாம். தற்போது இதுபோன்ற சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. இந்தச் சம்பவத்திலும் பொலிஸாருக்கு எதிராக புகைப்படங்களைத் திரிபுபடுத்தியிருக்கலாம். இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் தம்மிடமுள்ள ஆதாரங்களுடன் தெல்லிப்பழை மக்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளும் பொலிஸில் முறைப்பாடு செய்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.

17 பிப்ரவரி 2013

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் குத்திக் கொலை!

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாறாஇலுப்பை கிராமத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இனந்தெரியாதோரால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று (17) அதிகாலை இடம்பெற்றுள்ளது. நெடுங்கேணி மாறாஇலுப்பை மகிழமோட்டையை சேர்ந்த 38 வயதான ஆறுமுகசாமி பிரேமசீலன் என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றைய தினம் (16) இரவு 9 மணியளவில் கொலை செய்யப்பட்டவரின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்ததாகவும் இதில் உன்னை கொலை செய்வோம் என தெரிவித்ததாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் தனது மனைவியையும் அழைத்துச்சென்று இவர்கள் வீட்டிற்கு அருகில் உள்ள இராணுவ பொலிஸ் காலவரணில் முறையிட்டபோது அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறு கூறவே இருவரும் நெடுங்கேணி பொலிஸில் முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர் என அவர்கள் மேலும் தெரிவித்தனர். எனினும் இன்று (17) அதிகாலை இவர்களது வீட்டிற்கு வந்த இனந்தெரியாதோர் கத்தியால் பிரேமசீலனை குத்திக் கொன்றதுடன் கூக்குரல் இட்ட மனைவியின் வாயினுள் சீலையை வைத்து அடைத்துள்ளனர். இதன்பின்னர் பிரேமசீலனை அவரது வீட்டில் உள்ள கிணற்றுக்கு அருகில் கொண்டு சென்று போட்டு விட்டு தப்பியுள்ளனர் எனவும் உறவினர்கள் தெரிவித்தனர். இது தொடர்பில் நெடுங்கேணி பொலிஸாரிடம் கேட்டபோது, நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குள் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தினர்.

காரைநகர் – ஊர்காவற்றுறை இடையே நிரந்தரப் பாதையை அமைத்துத் தருக;மக்கள் கோரிக்கை

காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையே நடைபெற்று வரும் “பாதை’ சேவைக்குப் பதிலாக நிரந்தரமான வீதியை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் காரைநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை காரைநகருக்குச் சென்ற ஜனாதிபதி மணற்காடு முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாட்டில் கலந்து கொண்டார். பின்னர் பொது மக்களைச் சந்தித்து உரையாடினார். அதன் போதே காரைநகர் மக்கள் சார்பாக மனு ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அந்த மனுவில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: காரைநகருக்குரிய நீதிமன்றம், பொலிஸ் நிலையம், வலயக்கல்வி அலுவலகம், சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பன ஊர்காவற்றுறையிலேயே அமைந்துள்ளன. இதனால் காரைநகரில் இருந்து கடல் வழியாகவே போக்குவரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே காரைநகர் ஊர்காவற்றுறைக்கான நிரந்தர தரைப் பாதையை அமைக்க வேண்டும். ஏழரைக் கிலோ மீற்றர் நீளமான காரைநகர் சுற்று வீதியை அகலமாக்கி “காப்பெற்’ வீதியாக அமைக்க வேண்டும். காரைநகர் கோவளம் வெளிச்ச வீட்டை உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் புனரமைத் துத்தர வேண்டும். கோவளம் ஆலடி வீதியை “காப்பெற்’ வீதியாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். போரால் பாதிக்கப்பட்டு உருத்தெரியாமல் சிதைந்து போய் உள்ள சீநோர் கட்டடத்தை புனரமைத்து காரைநகர் பிரதேச இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுத்தல் வேண்டும் என்றுள்ளது.

16 பிப்ரவரி 2013

எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழர் விடுதலை கேள்விக்குறியே!

2013-02-15 10_10_59(1)பலாலி விமானப்படைத் தளத்தின் பாதுகாப்பு முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க கூறுகிறார். எனவே இன்றுள்ள எதிர்க்கட்சி நாளை அரசமைத்தாலும் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. இவ்வாறு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் ச.யேசுதாஸ் தெரிவித்தார். வலி.வடக்கு உண்ணா விரதப்போராட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித் தவை வருமாறு, ஜனநாயக நாடு என்று சொல்கிறார்கள். போரின் பின்னர் இங்கு சுதந்திரம் நிலவுவதாகச் சொல்கின்றார்கள். அப்படியானால் இந்தப் போராட்டத்தில் ஏன் மக்களை விரட்ட வந்தீர்கள்? என்ன ஜனநாயகம் நாட்டில் இருக்கிறது? என்ன பாதுகாப்பு இந்த நாட்டில் இருக்கிறது? இங்குள்ள பாதுகாப்பு படைகள் சிவில் சமூகம் அடங்கிய அரசைப் பாது காக்கவில்லை. மாறாக அரசை மட்டுமே பாதுகாக்கின்றன. பலாலி விமானப் படைத்தளத்தின் பாதுகாப்பு முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் சொல்கிறார். அப்படியானால் இந்த எதிர்க் கட்சி நாளைக்கு அரசமைத்தாலும் தமிழர்களுக்கு விடுதலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியே. மக்களாகிய நீங்கள் வீதிக்கு வந்து போராடும் வரையில் இந்த விடுதலையை அடைய முடியாது. நாம் இந்த அரசிடம் நிவாரணம் கோரவில்லை. வடக்கின் வசந்தம் என்று சொல்கிறார்கள். எல்லோரையும் நாட்டில் குடியமர்த்தி விட்டோம் என்று சொல்கிறார்கள். ஆனால் 1990 ஆம் ஆண்டிலிருந்து இந்த மக்கள் நலன்புரி நிலையங்களில் எப்படி வாழ்கிறார்கள் என்று தெரியாதா? சர்வதேச சமூகம் கூட கொஞ்சம் நாடகம்தான். அரசின் நிகழ்ச்சி நிரலில் இங்கு வந்து பார்த்துவிட்டு எல்லாம் சிறப்பாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியானால் நாம் யாரிடம் போவது? மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும். முயற்சிப்போம். தொடர்ந்து முயற்சித்தால் நாம் வெல்லலாம் என்றார்.

சண்டேலீடர் ஊடகவியலாளர் தேசிய வைத்தியசாலைக்கு மாற்றம்

கழுத்தின் இடது பக்கத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சண்டேலீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் பாராஸ் சௌகாட்டலி கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளவிருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

15 பிப்ரவரி 2013

இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே தாக்குதல் நடத்தினர்!

2013-02-15 10_10_59(1)யாழ். தெல்லிப்பளையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தின் போது தாக்குதல் நடத்திய நபர்கள் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டிருந்த இப் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் வீரகேசரி செய்தித்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இக்குற்றச்சாட்டை முன்வைத்தார். இது தொடர்பில் ஈ.சரவணபவன் எம்.பி. மேலும் தகவல் தருகையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றிய பின்னர் அங்கு வந்த மூன்று பேர் ‘எல்லாம் முடிஞ்சுது போ.. போ” எனக் கூறிய வண்ணம் வந்தனர். எதிர்ப்பாராத இச்சம்பவத்தினால் நாமும் பொதுமக்களும் அதிர்ச்சிக்கு உள்ளானோம். பொதுமக்களை விரட்டத் தொடங்கிய அவர்கள் சிலர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் பத்திரிகையாளர்களின் கமெராக்களையும் உடைத்தனர். அவர்களைக் கைது செய்யுமாறு அருகில் இருந்த பொலிஸாரிடம் கோரினேன். எனினும் அவர்கள் உடனடியாகத் தப்பிச் சென்று வாகனமொன்றில் ஏறிச் சென்றுவிட்டனர். இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயல். இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டார்கள். ஜனநாயக ரீதியிலான போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை இவ்வாறான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளுமாயின் நாமும் அவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கத் தயங்க மாட்டோம் என்பதை அரசுக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என்றார். இச்சம்பவத்தில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் நடராஜா மதியழகன், வலி. தென்மேற்கு பிரதேச சபை தலைவர் எஸ்.ஜெபநேசன் ஆகிய இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளானதாக தெரிவிக்கிறார்.

14 பிப்ரவரி 2013

சிறுமியை பலாத்காரம் செய்த இருவர் தலைமறைவு!

நலன்புரி முகாமில் வசித்து வந்த 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அதே முகாமைச்சேர்ந்த இரு இளைஞர்கள் தலைமறைவாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுமி தனிமையில் இருந்த போதே குறித்த இரு இளைஞர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை தற்காலிக வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இக்குற்றத்தை புரிந்துள்ளனர். சுன்னாகம் பகுதியிலுள்ள இடம்பெயர் நலன்புரி முகாமில் வசித்து வந்த சிறுமியே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கபட்ட சிறுமியின் பெற்றோர் சுன்னாகம் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ராஜிவ் வழக்கில் 'நிலை' எடுக்க முன்னோட்டமா 4 தமிழர் தூக்கு?: தி.வேல்முருகன்

ராஜிவ் வழக்கில் தூக்கு கொட்டடியில் நிற்கும் மூன்று தமிழருக்கு எதிராக மத்திய அரசு ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ள 4 தமிழர்களை தூக்கிலிட முடிவு செய்திருக்கிறதோ? என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் தி. வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வீரப்பனின் கூட்டாளிகள் என்று கூறி மீசை மாதையன்,சைமன், ஞானப்பிரகாசம், பிலவேந்திரன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்து தூக்குக் கொட்டடியில் நிறுத்தியிருக்கிறார் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. அப்சல் குருவை அவசரம் அவசரமாக தூக்கிலிட்டுக் கொலை செய்த கோபத்தில் ஜம்மு காஷ்மீர மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். காஷ்மீரிகளை தனிமைப்படுத்தும் வகையில் தூக்குத் தண்டனையிலும் `தேர்வு' முறையை கடைபிடிப்பதா? என்று அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா குமுறியிருக்கிறார்.இந்தக் கோபத்தையும் கொந்தளிப்பையும் தணிக்க 4 தமிழர்களின் கருணை மனுக்களை நிராகரித்து நாங்கள் நேர்மையான முறையிலேயே தூக்கிலிடுகிறோம் என்று காட்டிக் கொள்கிறது இந்திய அரசு. தூக்குத் தண்டனையே கூடாது என்று ஒட்டுமொத்த உலகமே குரல் கொடுத்து வரும் நிலையில் அகிம்சையை உலகுக்கே எடுத்துச் சொன்ன இந்திய தேசம் அவசரம் அவசரமாக அடுத்தடுத்து தூக்குக் கொலைகளை செய்து வருகிறது. இன்று கூட தற்போது தூக்குக் கொட்டடியில் நிற்கும் 4 தமிழரும் வீரப்பனின் கூட்டாளிகளே அல்ல.. அப்பாவி பழங்குடி மக்கள்தான் என்று வீரப்பனின் துணைவியார் முத்துலட்சுமி கூறியிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இத்துடன் இரு முக்கிய காரணங்களுக்காகவும் 4 தமிழர்களை தூக்கிலிட இந்திய அரசு திட்டமிட்டுகிறதோ என்ற சந்தேகமும் இருக்கிறது. ஒன்று காவிரி நதிநீர் விவகாரத்தில் கூர்மையடைந்திருக்கும் தமிழக, கர்நாடகா மக்களிடையேயான உறவுநிலையை முற்றிலுமாக சீர்குலைக்கும் வகையில் கர்நாடகாவில் 4 தமிழரை தூக்கிலிட செய்வது, மற்றொன்று ராஜிவ் வழக்கில் தூக்கு மர நிழலில் நிற்கும் மூன்று தமிழர்களுக்கு எதிரான ஒரு நிலையை மேற்கொள்வதற்கு முன்னோட்டமாக தமிழர்களின் உணர்வுநிலையை சோதித்துப் பார்ப்பதுஆகிய காரணங்களுக்காகவே 4 தமிழரை தூக்கிலிட நினைக்கிறது மத்திய அரசு! தூக்குக் கொட்டடியில் நிற்கும் 7 தமிழரை பலியெடுக்க இந்திய அரசு கங்கணம் கட்டிவிட்டது என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. ஒன்றரை லட்சம் தமிழர்களை ஈழத்தில் பலியெடுத்த அதே இந்திய அரசு தமிழ்நாட்டிலும் தனது மரண வேட்டையை தொடங்கப் போகிறது. இந்திய அரசின் இந்த மனித வேட்டைக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழர்களும் சாதி, மத எல்லைகளைக் கடந்து ஒன்று திரண்டு போராடுவோம்! தூக்குக் கொட்டடியில் நிற்கும் 7 தமிழரின் உயிரைக் காக்க ஓரணியில் திரள்வோம்!! என்று வலியுறுத்தியுள்ளார்.

பாரம்பரிய இசை விழா இரண்டாவது முறையாகவும் யாழில்

2013ம் ஆண்டிற்கான பாரம்பரிய இசை விழா இரண்டாவது முறையாகவும் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.. எதிர்வரும் பங்குனி மாதம் 1ம்,2ம் திகதிகளில் யாழ் மாநகர சபை முன்றலில் இடம்பெறவுள்ளது.வருடா வருடம் இடம்பெற்றுவரும் இவ் நிகழ்வானது 2012ம் ஆண்டு காலியில் இடம்பெற்றது. இதேவேளை 2011ம் ஆண்டில் பாரம்பரிய இசை விழாவானது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. உள்ளூர் மற்றும் சர்வதேச கலைஞர்களை ஊக்குவித்து பாரம்பரிய கலைகளை வளர்க்கும் முகமாக இவ் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழுவினர் அறிவித்துள்ளனர்.

13 பிப்ரவரி 2013

தென்னையில் ஏறிய சிறுவன் மின்சாரம் தாக்கி உயிருடன் மீண்ட அதிசயம்!

தென்னை மரத்தில் இறந்த சிறுவன் திடீரென உயிர் பிழைத்த அதிசயம்!தென்னைமரம் ஒன்றில் மின்சாரம் திடீரெனப் பாய்ந்து அதில் தென்னோலை வெட்டுவதற்காக ஏறிய சிறுவனைத் தாக்கியது. இதில் குறித்த சிறுவன் உயிரிழந்து விட்டதாகக் கருதி நீண்ட நேரத்தின் பின்னர் உடலை கீழே இறக்கிய போதே, அவன் உயிரோடு இருப்பது தெரியவந்தது. இந்தச் சம்பவம் நேற்று மாலை கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திப் பகுதியில் இடம்பெற்றது. இதில் அதேயிடத்தைச் சேர்ந்த மகேஸ்வரன் அந்தோனிதாஸ் (வயது 13) என்ற சிறுவன் மின்சாரம் தாக்கிய நிலையில் கிளிநொச்சி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:வீதியால் சென்ற சிறுவனை அழைத்து பணம் தருவதாக ஆசை காட்டி தென்னைமரத்தில் ஓலை வெட்டுமாறு ஏற்றியுள்ளனர் வீட்டு உரிமையாளர்கள். சிறுவன் மரத்தில் ஏறி ஓலையை வெட்டியபோது அது சாய்ந்து மின் கம்பியில் வீழ்ந்தது. இதனால் தென்னை மரத்தின் வட்டுக்குள் மின்சாரம் பாய்ந்தது. சிறுவனும் தாக்கப்பட்டு அதற்குள்ளே அகப்பட்டுக் கொண்டான். சிறுவன் உயிரிழந்து விட்டான் என்று கீழே நின்றவர்கள் முடிவெடுத்தனர். நீண்ட நேரத்தின் பின்னர் சிறுவனின் உடலத்தை கீழே இறக்கினர். இறந்து போனதாகக் கருதப்பட்ட சிறுவனின் உடல் திடீரென துடித்தது. அதன்போதே சிறுவன் உயிரோடு இருக்கும் விடயம் தெரிய வந்தது. உடனடியாக குறித்த சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டான். சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறித்த சிறுவனை ஆபத்தான பணியில் ஈடுபடுத்தியதோடு மட்டுமல்லாமல், அவன் இறந்து விட்டதாகக் கருதி நீண்ட நேரமாக மீட்பு நடவடிக்கைகள் எவற்றிலும் ஈடுபடாத வீட்டு உரிமையாளர்கள் குறித்து அங்கு கூடிய மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவை காரைநகருக்கு அழைத்துச்சென்றார் விஜயகலா மகேஸ்வரன்!

ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் மகிந்த அரசாங்கத்துடன் இணைவதற்கு தயாராகியுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன. மகிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல நிகழ்வுகளில் கலந்துகொண்ட நேற்றைய தினம் விஜயகலா மகேஸ்வரன் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து மகிந்த ராஜபக்சவை காரைநகருக்கு அழைத்துச் சென்றார். எதிர்க் கட்சியிலிருக்கும் போதே ஆளும் கட்சியிலுள்ள அமைச்சர்களுடன் நட்புடன் பழகி அவர்களை தமது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்துகின்ற விஜயகலா இன்று மகிந்த ராஜபக்சவையே தனது அரசியல் நலன்களுக்கு பயன்படுத்தியுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த மகிந்தவின் நிகழ்ச்சி நிரலில் காரைநகர் செல்வதற்கான திட்டமிடல் இருக்கவில்லை. இங்கு செல்வதாக ஊடகவியலாளர்களுக்கோ திணைக்கள அதிகாரிகளுக்கோ எதுவும் அறிவிக்கவில்லை. ஆனால், திடீரெனவே இந்த நிகழ்ச்சி நிரல் புகுத்தப்பட்டதாக தெரியவருகின்றது. நயினாதீவுக்குச் சென்ற மகிந்த ராஜபக்ச அங்கிருந்து நேரே காரைநகருக்கு உலங்கு வானூர்தியில் மகிந்த வந்திறங்கினார். காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் வந்திறங்கிய மகிந்த பின்னர் காரைநகர் மணற்காட்டு முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு விசேட வழிபாடுகளில் கலந்துகொண்ட அவர் மக்கள் மத்தியிலும் உரையாற்றினார். ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்டத்திற்கான ஒரேயொரு நாடாளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் மகிந்த ராஜபக்சவை வரவேற்று நிகழ்ச்சியொன்றை ஏற்படுத்தி நடத்தியமை குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பீடம் கடும் கொதிப்படைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. விஜயகலா எம்.பிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பரிசீலித்து வருவதாகவும் கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து தகவல்கள் தெரிய வருகின்றன. விஜயகலாவின் கணவரான தியாகராஜா மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியினூடாக அரசியலில் இறங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் யுத்தம் நடந்துகொண்டிருந்த காலப்பகுதியில் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் பிரதமர் ஆட்சி நடைபெற்ற போது மகேஸ்வரன் இந்து கலாசார அமைச்சராக இருந்தவர். சிறிலங்கா அரசியலில் மகேஸ்வரன் சிறந்த அரசியல்வாதியாகக் கருதப்பட்டவர். ஆனால், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்த பின்னர் மகேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார். மகேஸ்வரனின் இறப்பிற்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட வேட்பாளராக களமிறங்கிய அவரது மனைவியாகிய விஜயகலா மகேஸ்வரன் அனுதாப வாக்குகளைப் பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவாகியிருந்தார். மகேஸ்வரனைப் போன்றே இவரும் அரசியலுக்கு அப்பால் வியாபாரத்திலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். இதனால் ஆளும் கட்சி அமைச்சர்களுடன் நட்பு பாராட்டினார். தற்போது இவர் முற்று முழுதாகவே ஆளும் கட்சியில் இணைவதற்கு முயன்று வருவதையே மகிந்த ராஜபக்சவை காரைநகருக்கு அழைத்துச் சென்ற செயல் வெளிக்காட்டி நிற்பதாக பரவலாகப் பேசப்படுகின்றது.

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் சித்திரவதைகளுக்கு ஆளாகினர்!

பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தப்பட்டதாக கார்டியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.நாடு கடத்தப்பட்ட பதினைந்து இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டு யுத்த நிறைவு முதல் 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் நாடு கடத்தப்பட்டவர்களே இவ்வாறு துன்புறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது. நாடு கடத்தப்பட்ட 15 புகலிடக் கோரிக்கையாளர்கள் மீளவும் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மீளவும் பிரித்தானியாவிற்குள் பிரவேசித்த குறித்த புகலிடக் கோரிக்கையாளர்கள் துன்புறுத்தல்கள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர். தற்போது குறித்த இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, புகலிடம் பெற்றக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு துன்புறுத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதாக பிரித்தானியாவிற்கான இலங்கை பிரதி உயர்ஸ்தானிகர் நெவில் டி சில்வா தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேறும் நபர்கள், தமக்கு சித்திரவதை அச்சுறுத்தல் காணப்படுவதாகத் தெரிவித்து புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பது வழமையான ஓர் நிலைமை என குறிப்பிட்டுள்ளார். நாடு கடத்தப்படும் புகலிடக் கோரிக்கையாளர்கள் சித்திரவதைகளை அனுபவிக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக பிரித்தானிய மனித உரிமை அமைப்புக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

12 பிப்ரவரி 2013

வவுனியாவில் திருமணச் சாப்பாட்டில் புழு!

வவுனியாவில் கடந்த மாதம் 28ஆம் திகதி இறம்பைக்குளத்தில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணத்தின் போது பரிமாறப்பட்ட உணவில் புழுக்கள் இருந்தமை தொடர்பாக வவுனியா நகரசபை பொது சுகாதார பரிசோதகர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று (11) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மண்டப உரிமையாளர் ஒரு இலட்சம் ரூபா காசுப் பிணை மற்றும் 3 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த மாதம் 28ஆம் திகதி இறம்பைக்குளத்தில் உள்ள உணவகத்தினால் திருமண வைபவத்தில் பரிமாறப்பட்ட உணவில் உயிருள்ள புழுக்கள் காணப்பட்டமையினால் திருமண வீட்டார் உடனடியாக பொது சுகாதார பரிசோதகர்களுக்கு தகவல் வழங்கினர். இதனையடுத்து சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனையில் ஈடுபட்டதுடன் நீதிமன்றத்திலும் அன்றைய தினம் வழக்கு தாக்கல் செய்தனர். இந் நிலையில் திருமண மண்டபத்தின் உரிமையாளர் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததுடன் நேற்றைய தினம் வழக்கு தவணையும் வழங்கப்பட்டிருந்தது. அதனடிப்டையில் நேற்று (11) வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் நீதிபதி அலெக்ஸ்ராஜா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது திருமண மண்டபத்தின் உரிமையாளரை பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதிபதி உரிமையாளரை ஒரு இலட்சம் ரூபா காசுப் பிணையிலும் 3 இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் விடுதலை செய்ததுடன் திருமண மண்டபத்தினை அடுத்த வழக்கு தவணைவரை மூடுமாறும் உத்தரவிட்டுள்ளார்.

பாதுகாப்பு வலயங்கள் படைகளுக்கே உரியது-ஹத்துருசிங்க

வலி.வடக்கில் படையினரின் பாதுகாப்பு வலயத்துக்குள் உள்ளடங்கும் பிரதேசங்கள் படைகளுக்குரியவை. அந்தப் பிரதேசங்கள் மக்கள் பாவனைக்காக ஒருபோதும் விடுவிக்கப்படமாட்டா. அவற்றைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நேற்று அடித்துக் கூறினார் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க. யாழ்.நகரிலுள்ள சிவில் நிர்வாக அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பலாலியில் படையினரால் வீடுகள் இடிக்கப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஊடகவியலாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு: இராணுவத்தால் விடுவிக்கச் சாத்தியமான நிலப்பரப்புக்கள் விடுவிக்கப்பட்டுக் கொண்டே வருகிறன. பொதுமக்களின் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைத்துவிட்டு தற்போது எமது முகாம்களை பின்நகர்த்தியுள்ளோம். ஆனால் பலாலி, காங்கேசன்துறை, மயிலிட்டி ஆகிய பிரதசங்களில்தான் பிரச்சினை. ஏனெனில் யாழ்ப்பாணத்தின் பல பிரதேசங்களிலுள்ள இராணுவ முகாம்கள் மற்றும் பிரிகேட்டுக்கள் பலாலிக்குள் இப்போது உள்ளடக்கப்பட்டுள்ளன. இதனால் இராணுவ முகாம்கள் அமைப்பதற்குக் காணிகள் தேவைப்படுகின்றன. இதற்காக நாங்கள் மேற்படி பிரதேசங்களைச் சுவீகரிக்க வேண்டிய தேவையுள்ளது. பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் என்பனவற்றை விஸ்தரிப்புச் செய்ய வேண்டியுள்ளது. மேலும் பலாலி விமான நிலையத்தைச் சுற்றி சிறிய முகாம்கள் அமைக்க முடியாது. விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை முன்னர் இருந்தது. எனவே அவற்றைக் கருத்திற் கொண்டு பெரிய முகாம்களை அமைக்க வேண்டிய பாதுகாப்புத் தேவை இருக்கின்றது. விமான நிலைய விஸ்தரிப்புக்காகக் காணிகள் சுவீகரிக்கப்படுவது பலாலியில் மட்டும் நடக்கவில்லை. கொழும்பு கட்டுநாயக்காவிலும் நடந்ததுதான். நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களுக்குத் தற்போதையை பெறுமதிக்கு ஏற்ப காணிகளுக்குரிய நஷ்டஈட்டை வழங்கியே அவற்றைச் சுவீகரிக்கிறோம். இராணுவத்தினரால் தற்போது அமைக்கப்பட்டு வருகின்ற நிரந்தரப் பாதுகாப்பு வேலிக்குள் உள்ளடங்கும் பிரதேசங்களே சுவீகரிக்கப்பட்டுள்ளன. என்றார்.

சம்பூரில் குடும்பத் தலைவர்கள் புனர்வாழ்வு என்ற பேரில் கைது!

மூதூர் கிழக்கு பிரதேசத்தில் 2006 ஏப்ரலில் நடத்தப்பட்ட யுத்த நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்த பல தமிழ்க் குடும்பங்கள் நலன்புரி நிலையங்களிலும் மற்றும் உறவினர்களுடனும் தங்கியே வாழ்கின்றனர். இந்நிலையில், அண்மையில் அவர்களில் ஏழு பேரை புனர்வாழ்வுக் கொடுப்பதாக கூறி கொழும்பிலிருந்து வந்த சிறப்பு புலானாய்வுப் பிரிவுக்குழு கைது செய்து கூட்டிக்கொண்டு சென்றதை அடுத்து கிளிவெட்டி, பட்டித்திடல், மணற்சேனை மற்றும் கட்டைப்பறிச்சான் ஆகிய இடங்களில் உள்ள நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள அகதிக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகவலை திருகோணமலை மாவட்டத்தின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் உபதலைவருமான க.துரைரெட்னசிங்கம் வெளியிட்டார். புனர்வாழ்வு என்ற பெயரில் இடம்பெயர்ந்து அமைதி வாழ்வை மேற்கொண்டு வருகின்ற ஏழைக்குடும்பங்களின் வாழ்வில் அவர்களின் வாழ்வாதாரத்திற்காக உழைக்கின்ற குடும்பத்தலைவர்களைக் கைது செய்ததன் மூலம் அக்குடும்பங்களின் வாழ்வு சீரழிக்கப்பட்டு விட்டது என்றும் துரைரெட்னசிங்கம் கவலை தெரிவித்தார். காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வு வழங்குவதற்காக கொண்டு செல்லப்பட்ட ஏழு பேரின் பெயர்களையும் அவர் வெளியிட்டார். அவர்களில் இருவர் பட்டித்திடல் நலன்புரி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். பெயர் விவரங்கள் வருமாறு:- 1கட்டைப்பறிச்சான்: த.உதயகுமார் வயது 31, மூன்று பிள்ளைகளின் தந்தை 2.பட்டித்திடல் முகாம்: த.ஜெயகாந்தன், வயது 30 இரண்டு பிள்ளைகளின் தந்தை 3.லிங்கபுரம்: வைரமுத்து வசந்தம், வயது 36, இரண்டு பிள்ளைகளின் தந்தை 4.லிங்கபுரம்: சுப்பிரமணியம் மகேந்திரன், வயது 40, இரண்டு பிள்ளைகளின் தந்தை 5. பட்டித்திடல்: கோணலிங்கம் சந்திரகுமார், ஒரு பிள்ளையின் தந்தை 6.பட்டித்திடல்: எஸ்.தவச்செல்வன், வயது 35, ஒரு பிள்ளையின் தந்தை 7.கிளிவெட்டி முகாம்: வடிவேல் இராமு, வயது 35, இரண்டு பிள்ளைகளின் தந்தை

11 பிப்ரவரி 2013

யாழ்ப்பாணத்தில் இந்தியத் துணைத்தூதரின் வீடு சூறை - சென்னைத் தாக்குதலுக்கு பதிலடி?

சென்னையில் உள்ள இலங்கை வங்கிக் கிளை தாக்கப்பட்டதன் எதிரொலியாக, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதுவரின் அதிகாரபூர்வ வசிப்பிடம் சூறையாடப்பட்டிருக்கலாம் என்று இந்திய ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில், தனது பணிகளை முடித்து திரும்பிய துணைத் தூதுவர் மகாலிங்கம், தனது வசிப்பிடம் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பொருட்கள் கொள்ளையிடப்பட்டதை அவதானித்தார். அவரது வீட்டில் இருந்த ஒரு வீடியோ பிளேயர், மற்றும் ஒரு தொகைப்பணம் என்பன திருடப்பட்டுள்ளன. இந்தியத் துணைத் தூதுவரின் வீட்டினுள் புகுந்தவர்கள் அங்கு தேடுதல் நடத்தியிருப்பதை உணரமுடிவதாக, அங்குள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மடித்து வைக்கப்பட்டிருந்த துணிகளும், படுக்கை விரிப்புகளும் கூட கலைத்துப் போடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட எதையோ அவர்கள் தேடிவந்திருக்க வேண்டும் என்று தோன்றுவதாக அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார். கடந்த காலத்தில் இருந்த அச்சுறுத்தல் சம்பவங்களால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் சிறிலங்கா ஆயுதப்படைகளின் கண்காணிப்பில் உள்ள நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துணைத் தூதுவர் மகாலிங்கம் தூதரகத்தில் பணியில் இருந்தபோது, பட்டப்பகலிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. பின்பக்க ஜன்னல் வழியாக நுழைந்தே அங்கிருந்த பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன. எனினும், இந்தச் சம்பவத்தை சிறிலங்கா காவல்துறை பேச்சாளர் பிரசாந்த ஜெயக்கொடி நிராகரித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்த சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ள போதிலும், அது குறித்து எத்தகைய முறைப்பாடும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

புலம் பெயர் தமிழர் ஜெனிவாப் போரில் அரசுக்கு எதிராக குதிக்க முடிவு

ஜெனிவாவில் நடைபெறவுள்ளன புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள தமிழ்நாட்டில் இருந்தும் முக்கிய தலைவர்கள் செல்லவுள்ளனர். அடுத்தமாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதங்கள் நடைபெறும் நாள்களில் ஜெனிவாவில் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்குப் புலம்பெயர் தமி ழர் அமைப்புகள் தயா ராகி வருகின்றன. அடுத்த மாதம் 15 ஆம் திகதிமுதல் தொடர்ந்து சில தினங்களுக்கு ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபைத்தலைமையகத்துக்கு முன்பாக நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழின உணர்வாளர்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் கலந்து கொள்ளவுள்ளனர் என்று புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் பிரதிநிதிகள் நேற்றுத் தெரிவித்தனர். இறுதிப் போரில் நடைபெற்ற உயிரிழப்புகளுக்கு நீதி விசாரணை கோரியும், இது விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட வேண்டி வலியுறுத்தியுமே இந்த மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக மேற்படி பிரதிநிதிகள் மேலும் குறிப்பிட்டனர். இதற்கிடையில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தும்போது அதற்குப் போட்டியாக, இலங்கை அரசுக்காக ஆதரவு தெரிவித்து புலம்பெயர் சிங்கள அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களை நடத்தும் முன்னெடுப்புகளில் இறங்கியுள்ளன. இதனால் ஜெனிவாவில் அடுத்த மாத முற்பகுதியிலிருந்து விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை நகரப் பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர். இதேவேளை, ஜெனிவாவில் நடைபெறவுள்ள புலம்பெயர் தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்தும் முக்கிய தலைவர்கள் அங்கு செல்லவுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

10 பிப்ரவரி 2013

முள்ளிவாய்க்காலில் தங்கப் புதையலுக்கு மோதல் துரத்திப் பிடிக்கப்பட்டார் லெப்.கேணல்

முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை தோண்டியெடுப்பதில், சிறிலங்காப் படை அதிகாரிகளுக்குள் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து கிழக்குப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் உள்ளிட்ட 4 சிறிலங்காப் படையினர், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, கிழக்குப் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த லெப்.கேணல் ஒருவர் தலைமையிலான குழுவினர் கடந்த புதன்கிழமை வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்றனர். பாரா 3 கப்பலின் சிதைவுகளை அண்டிய கடற்கரையில் அவர்கள் நிலத்தை தோண்டினர். அந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள, சிறிலங்கா தேசிய காவல்படையின் 29வது பற்றாலியன் துருப்பினர் அதை அவதானித்து, அவர்களிடம் ஏன் தோண்டுகிறீர்கள் என்று விசாரித்தனர். தன்னை அடையாளம் காட்டிய லெப்கேணல், அந்த இடத்தில் விடுதலைப் புலிகள் பெருமளவு தங்கம் மற்றும் பணத்தை புதைத்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அதுபற்றி தான் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாவும் தேசிய காவல்படையின் 29வது பற்றாலியன் அதிகாரிகளிடம் கூறியுள்ளார். அதற்கு தமது முன்அனுமதி பெற்றே அங்கு தோண்ட வேண்டும் என்று தேசிய காவல்படை அதிகாரிகள் அவர்களுக்கு கூறினர். இதனால், இருதரப்புக்கும் இடையில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தாம் வந்த டபிள்கப் வண்டியில் ஏறி லெப்.கேணல் மற்றும் மூன்று படையினரும் தப்பிச் சென்றனர். இதுதொடர்பாக தேசிய காவல்படையினர் உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததை அடுத்து, தப்பிச் சென்ற லெப்.கேணல் மற்றும் படையினரைப் பிடிக்க வீதித் தடுப்புகள் போடப்பட்டன. பன்சல்கட பகுதியில் போடப்பட்டிருந்த வீதித்தடையில் அந்த டபிள் கப் வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டபோது, அது வேகமாக செல்ல முயன்றது. அங்கிருந்த சிறிலங்காப் படையினர் அதன் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ஆனால் அதையும் மீறி அவர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்த 62-1 பிரிகேட் படையினருக்கு உத்தரவிடப்பட்டது. அவர்கள் பராக்கிரமபுர பகுதியில் வீதிகளில் தடுப்பை ஏற்படுத்தியிருந்தனர். இதை அவதானித்த அந்த நால்வரும் வாகனத்தை நெடுங்கேணிப் பக்கம் திருப்பிக் கொண்டு தப்பிசென்ற போதும், 62-1வது பிரிகேட் படையினர் துரத்திச் சென்று கைது செய்து சிறிலங்கா இராணுவ காவல்த்துறையிடம் ஒப்படைத்தனர். லெப்.கேணல் உள்ளிட்ட நான்கு சிறிலங்காப் படையினரும் சிறிலங்கா இராணுவக் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய உறுதிப்படுத்தியுள்ளார். சோதனைச்சாவடியில் நிறுத்துமாறு விடுக்கப்பட்ட உத்தரவை மீறியதாலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நீங்கள் இனி வெளிநாட்டில் வாழும் இலங்கையர்!

இரட்டை பிரஜாவுரிமை என்ற பெயர் மாற்றப்பட்டு வெளிநாட்டில் வாழும் இலங்கையர் என்ற பெயரில் இரட்டை பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என குடிவரவு- குடியகல்வு திணைக்களத்தின் பிரதான கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேரா தெரிவித்தார். ‘Overseas Srilankan Citizen’’ திட்டம் தொடர்பாக சட்ட வரைஞர் திணைக்களத்தின் திருத்தங்கள் வந்தவுடன் அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் உடனடியாக இத் திட்டம் அமுல்படுத்தப்படும். குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட புதிய நடைமுறை தொடர்பாக நகரில் சட்டவரைவு அமைச்சரவையின் அங்கீ காரத்தை பெற்றுள்ளது. குடிவரவு தொடர்பாகவும், பிரஜாவுரிமை தொடர்பாகவும் இரண்டு விடயங்கள் இச்சட்ட வரைவுக்குள் இணைக்கப்பட்டுள்ளன. சட்டவரைஞர் திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட இத்திருத்தங்கள் தொடர்பில் குரவரவு - குடியகல்வு திணைக்களம் இணங்காத காரணத்தினால் இத்திருத்தங்கள் இரண்டையும் ஏற்கனவே பெறப்பட்ட அமைச்சரவை அங்கீகாரத்துக்கு உட்பட்ட விதத்தில் திருத்தித் தருமாறு சட்டவரைஞர் திணைக்களத்திடம் கோரப்பட்டுள்ளது. சட்டவரைஞர் திணைக்களம் திருத்தங்களை முன்வைத்ததுடன் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் புதிய நடைமுறை அமுல்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். இந்த திட்டம் 2013 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்துவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

09 பிப்ரவரி 2013

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்!

இந்திய நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார்நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு இன்று காலை 8 மணிக்கு தூக்கில் இடப்பட்டார். அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை இன்று காலை நிறைவேற்றப்பட்டது என்று சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், இன்னும் அதிகாரபூர்வமாக அரசு இந்தத் தகவலை தெரிவிக்கவில்லை. இருப்பினும் உள்துறை அமைச்சகம், காலை 8 மணிக்கு அப்சல்குரு தூக்கில் இடப்பட்டதாக தெரிவித்துள்ளது. உள்துறைச் செயலர் ஆர்.கே.சிங் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னதாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாதி அப்சல்குருவின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். இந்தத் தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரி வேணு ராஜாமணி தெரிவித்தார். கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி அனுப்பப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவை ஜன.26ல் குடியரசுத் தலைவர் நிராகரித்து விட்டதாகவும் அதைத் தொடர்ந்தே அப்சல் குரு, தில்லி திகார் சிறையில் தூக்கில் இடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்சல் குரு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பயங்கரவாத உறுப்பினராக இருந்தவர். கடந்த டிச.13, 2001ம் ஆண்டு தில்லி நாடாளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு உதவி, தாக்குதலுக்குக் காரணமாக இருந்தவர் அப்சல் குரு. இவருக்கு டிச.18, 2002ல் தில்லி நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் மேல் முறையீடு செய்து, கடந்த ஆக.4, 2005ல் உச்ச நீதிமன்றத்தால் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதை அடுத்து, கடந்த 2006ம் ஆண்டு அக்.20ல் அவரைத் தூக்கில் இட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிலையில், அவரது மனைவி குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். இந்த நிலையில், அப்சல் குரு மீதான விசாரணை முறைப்படி நடக்கவில்லை என்று கூறி, மனித உரிமை அமைப்புகள் சிலவும், சில அரசில் கட்சிகளும் குற்றம் சாட்டின. ஆனால், பா.ஜ.க.வோ அப்சல் குரு ஏன் தூக்கிலிடப் படவில்லை என்று கூறி பிரசாரத்தில் ஈடுபட்டது. குறிப்பாக, மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் தூக்கில் இடப்பட்ட பின்னர், இந்தக் கோரிக்கை வலுவடைந்தது. இஸ்லாமியர்களின் வாக்கு வங்கிக்காகவே நாட்டின் பாதுகாப்பை அடகு வைத்து காங்கிரஸ் அரசு அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றாமல் உள்ளது என்று பாஜக குற்றம் சாட்டியது. இந்நிலையில், 2012, டிச.10ம் தேதி, அப்சல் குருவின் கருணை மனு குறித்து பதிலளித்த உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் முடிந்த பிறகு இது பற்றி முடிவு செய்யப்படும் என்றார். இந்த நிலையில், குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் பிரணாப் முகர்ஜி இந்தக் கருணை மனுவை நிராகரித்து அனுப்பியுள்ளார். அப்சல் குரு உதவியுடன் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 5 போலீஸார் உள்பட பாதுகாப்பு வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.