பக்கங்கள்

30 செப்டம்பர் 2013

யாழில் விபத்து 20 வயது யுவதி பலி!

யாழ்.தட்டாதெரு சந்தியில் இன்றிரவு (30) பத்து மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் யுவதி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததுடன் மேலுமொரு யுவதி பலத்த காயமடைந்தார். கோப்பாய் ராஜ வீதியைச் சேர்ந்த எஸ். தீபிகா (20) என்பவரே உயிரிழந்த யுவதியாவார். சம்பவத்தில் உயிரிழந்த யுவதி சென்ற மோட்டார் சைக்கிளை இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று மோதிய போதே இந்த உயிரிழப்பு ஏற்பட்டது. இதேவேளை, இந்த
சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு இலக்கான இன்னொரு யுவதி யாழ். போதனா வைத்தியசாலையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் உயிரிழந்த யுவதியின் சடலமும் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கூட்டமைப்பினரால் அனந்தி ஒதுக்கப்படுகிறாரா?

தமிழர் தாயகப் பகுதியில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திய மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றது. இதில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட்ட அனந்தி சசிதரன் விருப்பு வாக்குகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட திரு.விக்கேனஸ்வரனுக்கு அடுத்த படியாக விருப்பு வாக்கினை பெற்ற அனந்திக்கு அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்கும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. எனினும் தற்போதைய நிலவரப்படி அனந்தி சசிதரனை, கூட்டமைப்பின் தலைமை நிராகரித்து வருவதாக தெரிய வருகிறது. இந்நிலையில் வடக்கு மாகாணசபை, அமைச்சரவையில் அனந்தி சசிதரனுக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் ஒதுக்கப்படுவதாக, வெளியான தகவல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிராகரித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியில், "அனந்தி ஒதுக்கப்படுவதான இந்தக் குற்றச்சாட்டு தவறானது. அனந்தி மிகவும் இளையவர். வடக்கு மாகாணசபையில் எமக்கு இளையவர்கள் பலரும், அனுபவம் வாய்ந்தவர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, சுகாதாரம், விவசாயம் போன்ற, குறிப்பிட்ட துறைகளில் அனுபவம் மிக்க சிலரும் இருக்கின்றனர். முதலாவதாக, அனுபவம் உள்ளவர்களை கட்சி கவனத்தில் எடுக்க வேண்டும். இளையவர்கள் சிறிதுகாலம் காத்திருக்க வேண்டிய ஏற்படலாம். வயதான, அனுபவம் வாய்ந்தவர்கள், மாகாணசபையின் ஆரம்பக்கட்டத்தை பொறுப்பேற்கக் கூடும். எவ்வாறாயினும் இந்த விவகாரங்கள் எல்லாமே தற்போது, ஆலோசனையில் தான் உள்ளன." என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

காணொளி வைத்திருந்த இளைஞர் கைது!

மட்டக்களப்பு, கல்குடாப் காவற்துறை பிரிவில் தமிழீழ விடுதலை புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர். பாசிக்குடா யானைக்கல் கடற்கரைப் பிரதேசத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காவற்துறையினர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29.09.12) மாலை இந்த இளைஞனை கைதுசெய்துள்ளனர். காவற்துறையினரைக் கண்டு ஓடிய இளைஞனை பிடித்த காவற்துறையினர் கையடக்கத் தொலைபேசியையும் சோதனை செய்துள்ளனர். இதன்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் வீடியோக் காட்சிகளை இளைஞன் தனது கையடக்கத் தொலைபேசியில் வைத்திருந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். பேத்தாளை விஷ்னு கோவில் வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இந்த இளைஞனிடம் கல்குடா காவற்துறை விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

29 செப்டம்பர் 2013

தங்க நகையுடன் சுழிபுரம் யுவதி கள்ளக் காதலனுடன் ஓட்டம்!

யாழ்ப்பாணத்தில் சுழிபுரம் மேற்கை சேர்ந்த நித்தியானந்தன் சுகிர்***- வயது 23 என்கிற யுவதி தாலிக் கொடி அடங்கலாக 40 பவுண் தங்க நகைகள், 11 இலட்சம் ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு கள்ளக் காதலனுடன் ஓட்டம் பிடித்து உள்ளார். இவரை கண்டு பிடிக்கின்ற பகீரத முயற்சியில் கணவன் ****லிங்கம் ****ரூபன் ஈடுபட்டு உள்ளார். ****ரூபன் இத்தாலியில் உழைத்தவர். சுழிபுரத்தில் ஐயனார் கோவிலடியை சேர்ந்த ****நாதன் ******வரன் என்பவரே கள்ளக் காதலன். பிடித்துக் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படுகின்றமையுடன் இரகசியம் காக்கப்படும் என்று கணவனால் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது.

மாகாண சபையின் அமைச்சுப்பதவி குறித்து இன்று முடிவு!

வடக்கு மாகாண சபையின் அமைச்சுப் பதவிகள் வழங்குவது தொடர்பிலும்,போனஸ் ஆசனம் தொடர்பிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் எனத்
தெரியவருகின்றது.வடக்கு மாகாண சபைத் தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இரண்டு ஆசனங்கள் போனஸாகக் கிடைத்தன. இதில் ஒரு ஆசனத்தை மன்னாரில் முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய ஒரு ஆசனத்தை வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் இன்று மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோன்று மாகாண சபையின் 4 அமைச்சுப் பதவிகளையும் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பிலும் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. முக்கிய இரு முடிவுகளையும் எடுப்பதற்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் இன்று கூடவுள்ளனர். நாளை திங்கட்கிழமைக்கு முன்னர், போனஸ் ஆசனங்களுக்கு உரியவர்களின் பெயர்களை அனுப்புமாறு தேர்தல்கள் ஆணையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

28 செப்டம்பர் 2013

ஒட்டுக்குழு சிறிரெலோ உறுப்பினர் மர்ம மரணம்!

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு பிரசாரம் செய்வதற்காக லண்டனிலிருந்து முல்லைத்தீவுக்கு சென்றிருந்த சிறிலங்கா இராணுவ ஒட்டுக்குழுவான சிறிரெலோ உறுப்பினரான மு.நிர்மலன் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். சிறிரெலோ இயக்கம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்து இயங்கி வருகிறது. வடமாகாணசபை தேர்தலில் சிறிரெலோ ஒட்டுக்குழு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிரெலோ ஒட்டுக்குழுவின் தலைவர் உதயராசா ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்டார். அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக முல்லைத்தீவு வற்றாப்பளையைச் சேர்ந்தவரும் பிரான்ஸ் குடியுரிமை பெற்றவருமான மு.நிர்மலன் (வயது-50) என்பவர் முல்லைத்தீவுக்கு சென்றிருந்தார். பிரான்ஸில் குடியுரிமை பெற்ற இந்நபர் தற்போது லண்டனில் வசித்து வருகிறார். முல்லைத்தீவிற்கு வந்த நிர்மலன் என்பவர் இராணுவ ஒட்டுக்குழுவான உதயராசாவுக்காக தீவிர பிரசாரம் செய்தார். ஆனால் உதயராசா நூறு வாக்கு கூட பெறவில்லை. தேர்தல் முடிந்த பின் கடந்த திங்கட்கிழமை அதிகாலை வேளை நிர்மலன் என்பவர் நெடுங்கேணியில் வீதியில் காயங்களுடன் கிடந்தார். காயங்களுடன் மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் இராணுவத்தினர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்த்தனர். அவர் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். இராணுவ ஒட்டுக்குழுவுடன் சேர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்காக முல்லைத்தீவு மக்கள் இவருக்கு வெகுமதி வழங்கியிருக்கலாம் என்றும் பேச்சடிபடுகிறது. வெளிநாடுகளிலிருந்து சென்று வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசாங்கத்திற்காக பிரசாரம் செய்பவர்களுக்கு இது நல்ல படிப்பினை என்றும் கூறப்படுகிறது.

உரத்தகுரலில் சிறிலங்காவைத் தாக்கிய கனேடிய வெளிவிவகார அமைச்சர்!

பொறுப்புக்கூறவும், மனிதஉரிமைகள் குறித்த கடப்பாட்டை நிறைவேற்றவும், சிறிலங்கா முன்வர வேண்டும் என்று கனேடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பயார்ட் அழைப்பு விடுத்துள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் ஒரு பக்க நிகழ்வாக, நேற்று முன்தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கொமன்வெல்த் வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்தில் உரையாற்றிய போதே கனேடிய வெளிவிவகார அமைச்சர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். கொமன்வெல்த் செயலர் கமலேஸ் சர்மா, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆகியோரும் கலந்து கொண்ட கூட்டத்தில் வைத்து, சிறிலங்கா குறித்து உரத்த குரலில் கனேடிய வெளிவிவகார அமைச்சர் காட்டமான கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்தக் கூட்டத்தை முடித்து வெளியே வந்த கனேடிய வெளிவிவகார அமைச்சர், “ சிறிலங்காவின் மனிதஉரிமைகள் விவகாரம் குறித்து மீண்டும் இன்று நான் சத்தமாகவும் தெளிவாகவும் பேசினேன். போர்க்குற்றங்கள் குறித்த தீவிரமான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்புக்கூற நடவடிக்கை எடுக்கப்படாமை, தமிழ்ச் சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படாமை, போர் முடிவுக்கு வந்த பின்னரும் தொடரும் நிகழ்வுகள் குறித்த கவலைகளையும் அங்கு எடுத்துக் கூறியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். கனேடிய வெளிவிவகார அமைச்சர் அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு, உரத்த குரலில் பேசியதை, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

27 செப்டம்பர் 2013

வாகரையில் படையணி ஒன்று தரை இறக்கம்?

தென் தமிழீழத்தின் வாகரை பிரதேசத்தில் ரொக்கட் லோஞ்சர் ஒன்று கடந்த செவ்வாய்க்கிழமை மீடகப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார். நிலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே 40 மில்லி மீற்றர் ரக ரொக்கட் லோஞ்சர் குண்டு மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். இந்த ரொக்கட் லோஞ்சர் அண்மைக் காலத்திலேயே புதைக்கப்பட்டுள்ளது போல் தெரியவருகறது. வாகரை கோமந்தமடு களப்பு வீதியில் உள்ள வீடொன்றின் பின்பகுதியில் பற்றைக் காட்டை வெட்டி துப்பரவு செய்யும் பணியில் வீட்டின் உரிமையாளர் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று குண்டை மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாகரை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, அண்மையில் மட்டக்கப்புக்கு அண்மித்த கடற்பகுதியில் அனாதரவான நிலையில் இயந்திரங்கள் பூட்டப்பட்ட படகொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், ஆயுததாரிகள் சிலர் வந்து தரையிறங்கியதாகவும் குறித்த செய்திகள் தெரிவித்திருந்தன. இந்த நிலையிலேயே, இந்த ரொக்கட் லோஞ்சர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே, தரையிறங்கிய விசேட படையணி ரொக்கட் லோஞ்சர் தாக்குதல் நடாத்த திட்டம் தீட்யிருப்பதாக செய்திகள் அடிபடுகிறது.இவ்வாறு இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ்.வைத்­தி­ய­சா­லை­யி­லி­ருந்து 85 டாக்டர்கள் இடமாற்றம்!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து 85 வைத்தியர்களை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்வது வைத்தியசாலைப் பணிகளை முடக்கும் நடவடிக்கை, என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.போதனா வைத்தியசாலையிலிருந்து இடமாற்றம் செய்யப்படவிருக்கும் வைத்தியர்களுக்கு பதிலாக பதிலீட்டு வைத்தியர்களை நியமிக்க நடவடிக்கைகள் வேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலைக்கு 412 வைத்தியர்கள் தேவையாக உள்ளபோதும் தற்போது 322 வைத்தியர்கள் மாத்திரமே உள்ளனர். இந்நிலையில் 85 வைத்தியர்களை இடமாற்றம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.இந்த இடமாற்றங்களை சுகாதார அமைச்சு மீள்பரிசீலனை செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் இவ்வளவு வைத்தியர்களை இடமாற்றம் செய்வது வைத்தியசாலைப் பணிகளை முற்றாக முடக்கும் செயல். போதனா வைத்தியசாலைக்கு தாதியர்களும் வைத்தியர்களும் இன்னமும் தேவையாகவுள்ளனர் என்றார். இது தொடர்பாக யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் பிரதிப் பணிப்­பாளர் எஸ்.சிறி­ப­வா­னந்­த­ராஜா தெரி­வித்துள்ளதாவது, யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற 90 வைத்­தி­யர்­களை உட­ன­டி­யாக இட­மாற்றம் செய்­யு­மாறு சுகா­தார அமைச்சின் ஊடாக அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் வலி­யு­றுத்­தி­யுள்­ளது. உட­ன­டி­யாக வைத்­தி­யர்­களை இட­மாற்றம் செய்­ய­மு­டி­யாது கட்டம் கட்­ட­மாக இட­மாற்றம் செய்ய முடி­யு­மென சுகா­தார அமைச்­சுக்கு வைத்­தி­ய­சாலை நிர்­வா­கத்­தினர் பதில் கடிதம் ஒன்­றினை அனுப்­பி­யுள்­ளனர் என யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையின் பிரதிப் பணிப்­பாளர் எஸ்.சிறி­ப­வா­னந்­த­ராஜா தெரி­வித்தார். யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­பு­ரியும் வைத்­தி­யர்­களின் இட­மாற்றம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், மத்­திய சுகா­தார அமைச்சின் ஊடாக அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம், யாழ்.போதனா வைத்­தி­ய­சா­லையில் கட­மை­யாற்­று­கின்ற 90 வைத்­தி­யர்­களை உட­ன­டி­யாக இட­மாற்றம் செய்­யக்­கோரி பெயர்ப் படிவம் ஒன்­றினை அனுப்பி வைத்­துள்­ளது. அதில் 13 வைத்­தி­யர்­கள் எந்­த­வி­த­மான மாற்று ஏற்­பா­டு­க­ளு­மின்றி உட­ன­டி­யாக இட­மாற்றம் செய்­யப்­பட வேண்டும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. வடக்கு மற்றும் கிழக்குப் பகு­தி­களில் உள்ள வைத்­தி­ய­சா­லை­களில் கட­மை­யாற்­று­கின்ற வைத்­தி­யர்கள் ஒரு வரு­டத்தின் பின்னர் இட­மாற்றம் பெறலாம் என்ற பழைய நடை­மு­றையை வைத்துக் கொண்டு இவ் நட­வ­டிக்­கையை அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் மேற்­கொண்­டுள்­ளது. எமது வைத்­தி­ய­சா­லைக்கு 432 வைத்­தி­யர்கள் தேவை­யாக உள்ள இடத்தில் 324 வைத்­தி­யர்­களே கட­மையில் உள்­ளனர். ஏற்­க­னவே வைத்­தி­யர்கள் குறை­வாக உள்ள இடத்தில் 90 வைத்தியர்களை இடமாற்றம் செய்து புதிய வைத்தியர்களை நியமித்தால் எமது வைத்தியசாலையின் சிகிச்சைத் தரம் குறைவடைந்து போய்விடும். எனவே வைத்தியர்களை கட்டம் கட்டமாக இடமாற்றம் செய்யக் கோரி சுகாதார அமைச்சுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார்.

26 செப்டம்பர் 2013

யாழ்,பல்கலைக்கழகத்தில் திலீபனின் நினைவு நாள் அனுஷ்டிப்பு!

தமிழீழத் தயாக விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் முற்பகல் 10.48 மணிக்கு திலீபன் சாவைத் தழுவிக் கொண்ட நேரத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி உள்ளதுடன் நினைவு பேருரைகளையும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் பல்கலைக்கழகத்தின் உள்பகுதி எங்கும் திலீபனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகிறது.

25 செப்டம்பர் 2013

சிறீலங்காவிற்கு நவநீதம்பிள்ளை எச்சரிக்கை!

போர் குற்றங்கள் குறித்து இலங்கை அரசு நம்பகமான விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்,அதையும் மார்ச் மாதத்துக்குள் செய்யவேண்டும், அப்படி செய்யாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக ஒரு விசாரணையை நடத்த வேண்டிவரும் என்று ஐநா மனித உரிமைகள் பேரவையின் ஆணையர் நவி பிள்ளை எச்சரித்துள்ளார். ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் நவி பிள்ளை இலங்கைக்கு ஒரு வாரகால விஜயம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர் கண்டதையும், கேட்டதையும், விசாரித்து அறிந்ததையும் அவரின் சார்பில், மனித உரிமைகள் பேரவையின் துணைத் தலைவர் வாயிலாக வாய்வழி அறிக்கையாக ஐநா மனித உரிமைகள் பேரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது. போரின்போது பொதுமக்கள் தரப்புக்கு ஏற்பட்ட உயிரிழப்புகள், இராணுவம் விசாரணையின்றி சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டும் சேனல் 4 வெளியிட்ட வீடியோ போன்றவை தொடர்பில் மனித உரிமைகள் பேரவை கவலை வெளியிட்டும் இது தொடர்பில் முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக தனக்குத் தெரியவில்லை என்று நவி பிள்ளை கூறியுள்ளார். குற்றச்சாட்டுகள் தொடர்பாக இராணுவமும், கடற்படையும் நடத்தும் விசாரணைகள் நம்பிக்கையை அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். போர்க்குற்றங்கள் குறித்த தேசிய விசாரணைகள் நம்பகமான முறையில் நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் இல்லாவிட்டால் சர்வதேச சமூகம் தனியாக விசாரணை நடத்தும் பொறிமுறையை ஏற்படத்த வேண்டிய கடமை இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார் விடுதலைப் புலிகள் தொடர்புடைய போர் குற்றங்களை முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் இது தொடர்பில் சம்மந்தப்பட்டோர் மீதான வழக்குகள் விரைவு படுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா ஆணையர் வலியுறுத்தியுள்ளார். திருகோணமலைக் கொலை விசாரணைகளில் முன்னேற்றம் இல்லை என்கிறார் நவி பிள்ளை திருகோணமலை கடற்கரையில் 5 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கு தொடர்பில் சட்ட மா அதிபர் தன்னிடம் விளக்கமளித்தார் என்றும் இந்த வழக்கு விசாரணை தொடர்பில் தொழில்நுட்ப உதவிகளை அளிக்கத் தயாராக இருப்பதாக இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார். ஏசிஎப் நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்ட வழக்கு உள்ளிட்ட பலவற்றில் முன்னேற்றம் இல்லாத நிலையையும் தாம் அவதானிப்பதாக நவி பிள்ளை தெரிவித்தார். இலங்கைக்கு சென்றபோது தான் சென்ற கிராமங்களுக்கு, தான் செல்வதற்கு முன்பும், பின்பும் காவல்துறையும் இராணுவமும் சென்றது என்று குறிப்பட்ட நவி பிள்ளை திருகோணமலையில் தன்னை சந்தித்தவர்கள் தன்னிடம் என்ன கூறினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்டார்கள் என்றும் தெரிவித்தார். இது இலங்கை ஜனாதிபதி மற்றும் வெளியுறவுச் செயலரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது என்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள் குறித்த செய்திகள் மீது ஐநா மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார். இலங்கையில் சட்டத்தின் ஆட்சியும், ஜனநாயக நிறுவனங்களும் மதிப்பிறக்கம் செய்யப்படுவது மற்றும் அருகிப்போவது குறித்து தான் ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக கூறிய நவி பிள்ளை, 17 ஆவது சட்ட திருத்தத்தை மீண்டும் கொண்டுவருவது மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் மேலாய்வு செய்ய வழி செய்யப்பட வேண்டும் என்று படிப்பினைகள் ஆணைக்குழு தெரிவித்திருந்த பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். வட மாகாணத் தேர்தல் நடைபெற்றதை வரவேற்றுள்ள நவி பிள்ளை, 13 ஆவது சட்ட திருத்தம் அமல்படுத்தப்படும் என்று ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என்று நம்புவதாகத் தெரிவித்தார் நவி பிள்ளை. போர் முடிந்து நான்கு ஆண்டுகளான பிறகும் அங்கு காணப்படும் கணிசமான இராணுவப் பிரசன்னம் குறித்து ஐ நா ஆணையர் கவலை வெளியிட்டார். பெண்கள், சிறுமிகள் மற்றும் பலவீனமான நிலையில் இருக்கும் பெண்களின் தலைமையிலான வீடுகளில் இருக்கும் பெண்கள் இராணுவத்தால் பாலியல் அத்துமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்க் ஆளாகக் கூடிய சூழல் குறித்து கவலை வெளியிட்ட நவி பிள்ளை, பாலியல் துஷ்பிரயோகங்களை அரசு கிஞ்சிதமும் சகிக்கக் கூடாது என்று அரசிடம் வலியுறுத்தியுள்ளார். தனியார் நிலங்களை இராணுவத் தேவைகளுக்காக கட்டாயமாக கையகப்படுத்துவது குறித்த ஆவணங்கள் நவி பிள்ளைக்கு அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட மாகணத்தில் சிவில் நிர்வாகத்திலும், பொருளாதார நடவடிக்கைகளிலும், கல்வி , விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளிலும் இராணுவத்தின் பங்களிப்பு அதிகம் காணப்படுவதாகவும் அவர் அவதானித்துள்ளார். சிவில் நிர்வாகத்துக்குட்பட்ட விடயங்களில் இருந்து இராணுவத்தை ஒரு காலவரைக்குள் விலக்கிக் கொள்ளுமாறு அரசிடம் நவி பிள்ளை தெரிவித்துள்ளார். கற்றறிந்த பாடங்கள் ஆணைக்குழு அளித்த பரிந்துரைகளில் கூடுதலாக 53 பரிந்துரைகளை அமல்படுத்த அரசு முன்வந்துள்ளதை பாராட்டியுள்ள மனித உரிமைகள் ஆணையர் அதே நேரம் அரசு இது தொடர்பில் ஒரு பொது விவாதத்தை நடத்தினால் அதனால் கூடுதல் பயன் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். காணமல் போனோர் நிலையும் இன்று முக்கிய இடத்தை பிடித்தது. கடந்த 1990 ஆம் ஆண்டுக்கும் 2009 ஆம் ஆண்டுக்கும் இடையில் வடக்கிலும் கிழக்கிலும் காணாமல் போனோர் குறித்து விசாரிக்க அரசு ஒரு குழுவை அமைத்திருந்தாலும், போருக்குப் பிறகு கொழும்பிலும் நாட்டின் இதர பகுதிகளிலும் வெள்ளை வேன் கடத்தல் தொடர்பில் விசாரணை நடக்காது என்பதால் இந்த ஆணையத்தின் வரம்புகளை விரிவு படுத்த வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். காணமல் போனோர் குறித்து அரசு முன்பு அமைத்த 5 ஆணையங்களால் பயனேதும் ஏற்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காணமல் போனோர் தொடர்பிலான சர்வதேச ஒப்பந்தத்தை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் கைச்சாத்திடுவதன் மூலம் இது தொடர்பில் அரசுக்குள்ள உறுதிப்பாட்டை காட்ட முடியும் என்றும் காணமல் போனோர் தொடர்பிலான விசாரணைகளை துரிதப்படுத்த கடத்தி காணமல் போனோர் தொடர்பிலான ஐ நா நிபுணர் குழுவின் சேவைகளை அரசு பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

செயற்படாத ஐ.நா.ஒப்புக்கொள்கிறார் பான் கீ மூன்!

இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை தோல்வியடைந்து விட்டோம் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒப்புக் கொண்டுள்ளார். ஐ.நா பொதுச்சபையின் 68ஆவது கூட்டத்தொடரில், பொதுவிவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்ற முன்பாகவே அவர் இதனைத் தெரிவித்தார். இலங்கையில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில், அமைப்பு ரீதியாக ஐ.நா சபை தோல்வியை தழுவியுள்ளது. எனவே குறித்த நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை. அத்துடன் ஐ.நா அமைப்பு முழுமையாக செயற்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

24 செப்டம்பர் 2013

புளியங்கூடலில் ஈ.பி.டி.பியினர் வெறியாட்டம்!

நடந்து முடிந்த வடமாகாணசபை தேர்தலில் படுதோல்வி கண்டதால் ஈ.பி.டி.பியினர் கண்டபடி மக்களை தாக்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.பல்லாண்டுகளாக தீவகத்தை தமது அடக்குமுறைக்குள் வைத்திருந்த இவர்கள் இந்த தேர்தலிலும் தாம் வெற்றி பெற்று விடலாம் என்றே கனவு கண்டிருந்தனர்.இவர்களின் கனவை தவிடு பொடியாக்கி "நாம் தன்மானத்தமிழர்"என்பதை தீவக மக்களும் முரசறைந்து இன்று நிமிர்ந்து நிற்கின்றனர்.மக்களின் எழுச்சி கண்டு கொதித்துப்போன ஈ.பி.டி.பியினர் புளியங்கூடல் பகுதியிலும் தமது அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.இளைஞர்களை தேடித்தேடித் தாக்கியதுடன்,முன்னர் ஈ.பி.டி.பியினருக்கு ஆதரவாக இருந்த சில இளைஞர்களும் இத்தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பதாக கூறி அவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

தமிழரின் தீர்ப்பை ஏற்று உடன் தீர்வை வையுங்கள்!

“தாயக மண்ணில் தமிழர் ஆட்சியே மலரவேண்டும் என்ற செய்தியை வடக்கு மக்கள் தமது வாக்குரிமை மூலம் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். இதற்கமைய தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை உடன் வழங்க மஹிந்த அரசு முன்வர வேண்டும். இல்லையேல், போராட்டம் வெடிக்கும். சர்வதேசம் வரை போராட்டம் விஸ்தரிக்கப்படும்.” இவ்வாறு நவசமசமாஜக் கட்சியின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட இடது சாரித்தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு தெரிவித்துள்ளார். வடக்குத் தேர்தலில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப் புக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ள விக்கிரமபாகு, கூட்டமைப்புடன் இணைந்து தமிழர் உரிமைகளுக்காகத் தொடர்ந்தும் போராடுவார் என்றும் அறிவித்துள்ளார். “அரசின் அபிவிருத்திச் சலுகைகளை எட்டி உதைத்துள்ள வடக்கு மக்கள் தமது கொள்கையில் உறுதி பூண்டுள்ளனர். இது வரவேற்கத்தக்கது. எனவே, கூட்டமைப்பின் வெற்றியைக் களமாகப் பயன்படுத்தி ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக நாம் தொடர்ந்தும் போராடுவோம். அதேவேளை, அரசியல் தீர்வின் முக்கியத்துவத்தை வடக்கு மக்கள் இத்தேர்தலில் வலியுறுத்தியுள்ளனர். தேர்தல் முடிவுகள் வடக்கு மக்களின் மன நிலையை வெளிப்படுத்துகின்றது. தமக்குரிய உரிமைகளையும், தமது தாயக மண்ணில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தையுமே கோருகின்றனர். எனவே, நீடித்து நிலைக்கக் கூடிய தீர்வை அரசு தமிழர்களுக்கு உடன் வழங்க முன் வரவேண்டும். காலம் இழுத்தடிக்கப்படுமானால், வடக்கிலும் தெற்கிலும் போராட்டங்களை முன்னெடுப்போம்; சர்வதேச மட்டத்திலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம். அறவழிப் போராட்டத்தில் ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும் பங்கேற்க வேண்டும்” என்றும் விக்கிரமபாகு கூறியுள்ளார்.

23 செப்டம்பர் 2013

முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் ஏகமனதாக தெரிவு!

யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று இன்றுமாலை 4.30மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாணசபைக்கு தெரிவுசெய்யபட்ட 28 உறுப்பினர்களும் கலந்துகொண்டு உத்தியோகபூர்வமாக திரு.சிவி.விக்னேஸ்வரன் அவர்களை வட மாகாண முதலமைச்சராக ஏகமனதாக தெரிவுசெய்தார்கள். இக்கூட்டத்தின் ஆரம்ப நிகழ்வாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சி.வி விக்னேஸ்வரன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் வேட்பாளர்கள் சார்பில் அனந்தி சசிதரன் ஆகியோர் உரையாற்றினார்கள். இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களுமான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிறீதரன், சிவசக்தி ஆனந்தன், விநோ நோகராலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு போனஸ் ஆசனங்களுக்காக முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் ஒருவர் உள்ளிட்ட சிலரின் பெயர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டது. அத்துடன் நாளையதினம் வட மாகாண முதலமைச்சராக சி.வி விக்னேஸ்வரன் அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதுடன், தமிழரசுக் கட்சியின் யாழ் தலைமையகத்தில் நான்கு வட மாகாண அமைச்சர்களும் போனஸ் ஆசனங்களுக்கு உரிய இரண்டு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தா.பாண்டியன் வாழ்த்து!

தமிழர் தேசியக் கூட்டணிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையின் வடகிழக்கு மாநிலங்களில் சர்வதேச பிரதிநிதிகளின் மேற்பார்வையில் நடைபெற்ற தேர்தலில் ஈழத் தமிழர்கள் மிகத் தெளிவான, திட்டவட்டமான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களையும், கொடிய இன அழிப்புப் போருக்குப் பிறகு அஞ்சாமல் வாக்களித்த மக்களையும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். துப்பாக்கி முனையில் ஒடுக்குமுறைகள் நீடிக்கும் சூழலில், ஈழத் தமிழர்கள் தங்களது அடிப்படை உரிமைகளை வலியுறுத்தும் வகையில் வாக்களித்திருப்பதை, இந்திய அரசும், இலங்கை அரசும் உணர வேண்டும்.மக்களின் இந்த்த தீர்ப்பை மதித்து ஈழத் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்க அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என தா. பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

22 செப்டம்பர் 2013

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கூட்டமைப்பு வடக்கில் அமோக வெற்றி!

வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரும் வெற்றியீட்டி வரலாற்றுச் சாதனை படைத்தது. இதன் மூலம் வடக்கில் தமிழர்களின் அரசு மலர்ந்தது. வட்டுக்கோட்டை தீர்மானத் தின் பின்னர் தமிழர்கள் தமது வடக்கு கிழக்குத் தாயகம், சுயநிர்ணயம் என்பவற்றுக்கு மீண்டும் தெளிவான ஆணை ஒன்றை வழங்கி உள்ளனர். மூன்றில் இரண்டு பெரும் பான்மைக்கு தேவையான ஆசனங்களைவிட அதிக ஆசனங்களை கைப்பற்றி கூட்டமைப்பு இந்த வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. போனஸ் ஆசனங்களையும் சேர்த்து 30 ஆசனங்கள் கூட்டமைப்பு வசம் வந்துள்ளன. இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்ததன் மூலம் தமிழ்த் தேசியம், சுயநிர்ணயம், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் ஆகியவற்றுக்கு ஏகோபித்த குரலில் அங்கீகாரம் வழங்கியிருக்கிறார்கள் தமிழர்கள். முழு உலகத்தாலும் பெரும் எதிர்பார்ப்புடன் நோக்கப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர் தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக போட்டியிட்ட ஆளும் அரசின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெறும் ஆறு ஆசனங்களை மட்டும் பெற்றுப் படுதோல்வி கண்டது. முஸ்லிம் காங்கிரஸ் ஒரு ஆசனத்தைக் கைப்பற்றியது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 4 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் 4 ஆசனம் 3 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசமாக, ஒரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வசமாக வென்றது. வவுனியாவில் 6 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இரண்டு ஆசனங்களை பெற்றது. யாழ்ப்பாணத்தில் 16 ஆசனங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 ஆசனங்களை கைப்பற்றியது. இரு ஆசனங்களை மட்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வென்றது. மன்னார் மாவட்டத்தில் 5 ஆசனங்களில் 3 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தலா ஒவ்வொரு ஆசனத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியனவும் பெற்றுக் கொண்டன. வடக்கில் ஒட்டுமொத்தமாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே அதிக ஆசனங்களை பெற்று வரலாற்று வெற்றியை தனதாக்கியது.

யாழ் பல்கலைக்கழகத்தில் பதற்றம் : இராணுவம் சுற்றிவளைத்தது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தற்போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வட மாகாணசபைத்தேர்தல் வாக்களிப்பில் இதுவரையிலும் வெளியான பெறுபேறுகளின் பிரகாரம் இலங்கை தமிழரசுக்கட்சி முன்னணியில் நிற்கின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக பட்டாசு கொளுத்தியதையடுத்தே ஆயுதம் தரித்தவர்கள் பல்கலைக்கழக ஆண்கள் விடுதிக்குள் புகுந்து அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அதிர்வின் செய்தியாளர் சற்று முன் அறியத்தந்துள்ளார் ! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி(மகிந்தர் கட்சி) யாழில் படுதோல்வி அடைந்துள்ள நிலையில், பல்கலைக்கழக மாணவர்கள் வெடிகொழுத்தியுள்ளார்கள். இதனை சற்றும் பொறுக்க முடியாத இராணுவத்தினரும் ஈ.பி.டி.பி கைக்கூலிகளும் இணைந்து மாணவர்களை கடுமையாகத் தாக்கியுள்ளார்கள். டக்ளஸ் மாமா மண் கவ்விய நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் யோசிப்பது மட்டுமல்ல, மகிந்தருக்கு என்ன பதில் கூறுவது என்று திணறியடித்துக்கொண்டு இருப்பார் என்றும் யாழில் உள்ள சில வேட்ப்பாளர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.

ஊர்காவற்றுறையும் கூட்டமைப்பு வசமானது!

ஊர்காவற்துறை
Name of the Party/Independent GroupNo. of Votes Received
Percentage  %
Ilankai Tamil Arasu Kadchi
8,917
67.42 %
United People's Freedom Alliance
4,164
31.48 %
Socialist Equality Party
29
0.22 %
Democratic Unity Alliance
21
0.16 %
United National Party
17
0.13 %
Sri Lanka Mahajana Pakshaya
16
0.12 %
Independent Group 3
15
0.11 %
United Socialist Party
11
0.08 %
Independent Group 7
8
0.06 %
Independent Group 8
8
0.06 %
Independent Group 9
6
0.05 %
People's Liberation Front
5
0.04 %
Independent Group 1
3
0.02 %
Jana Setha Peramuna
2
0.02 %
Independent Group 5
2
0.02 %
Democratic Party
1
0.01 %
Sri Lanka Labour Party
1
0.01 %
Independent Group 6
1
0.01 %
Independent Group 2
0
0.00 %
Independent Group 4
0
0.00 %
Total Valid Votes
13,227
90.57 %
Rejected Votes
1,377
9.43 %
Total Votes Polled
14,604
67.77 %
Registered Electors
21,548*



தமிழரசுக் கட்சிக்கு 30ஆசனம் உறுதி!

வடமாகாண சபைத் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 14 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 2 ஆசனங்களையும் பெற்றிருப்பதாக தெரியவருகிறது. இதேபோல் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை நிட்சயமாக பெற்றுக் கொள்ளும் என்ற நிலையில் எஞ்சியுள்ள 1 ஆசனமும் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்து 4 ஆசனங்களாக மாறலம் எனத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத் தீவு மாவட்டத்தில் தமிழரசுக் கட்சி 4 ஆசனத்தையும் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது. மன்னாரில் தமிழரசுக் கட்சி 3 ஆசனங்களை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. 1 ஆசனம் ஐக்கியமக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும், 1 ஆசனம் முஸ்லீம் காங்கிரசிற்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வவுனியாவில் 6 ஆசனங்களில் 4 ஆசனத்தை தமிழரசுக் கட்சி கைப்பற்றும் எனவும் இது 5 ஆசனமாக மாற்றமடைய வாய்ப்பு உண்டு எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி போனஸ் ஆசனத்துடன் 30 ஆசனங்களை தமிழரசுக் கட்சி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

21 செப்டம்பர் 2013

தீவகத்தில் மோசடிகள் இடம்பெறலாமென அச்சம்!

தமிழர் தாயகத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிறிலங்கா அரச கட்டமைப்பினால், இலங்கையின் வட புலத்தில் நடத்தப்படும் வட மாகாணசபைத் தேர்தல், உத்தியோகபூர்வமாக உள்ளுர் நேரம் 4 மணிக்கு நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் 50% - கிளிநொச்சி 60ம% - வவுனியா 61% - முல்லைத்தீவு 73% - மன்னார் 70% ஆகிய மாவட்டங்களில் வாக்களிப்பு பதிவாகியுள்ளது. இரு போனஸ் ஆசனங்கள் உள்ளிட்ட 38 ஆசனங்களுக்கான இந்தத் தேர்தலில், வாக்களிக்க 719, 356 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர். தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக வாக்களிப்பில் கலந்து கொண்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதேவேளை யாழ் மாவாட்டத்தின் தீவகபகுதிகளின் வாக்குப்பெட்டிகளை வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் வேளையில் மோசடிகள் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இவ்விவகாரத்தை குறித்த தேர்தல் கண்காணிப்பாளர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மாதகலில் வாக்களிக்க விடாது மக்கள் படைகளால் தடுப்பு!

வலி. வடக்கு மாதகல் பிரதேசத்தில் வாக்களிக்க சென்ற மக்களை இராணுவ புலனாய்வாளர்கள் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபை தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்து விட்டு ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கில் இதுவரை நடைபெற்ற தேர்தல் வன்முறை சம்பவங்களில் 95 வீதமானவை இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்று கூட இராணுவத்தினர் வாக்களிக்க சென்ற மக்களை வாக்களிக்க செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியதுடன் அவர்களை அச்சுறுத்தி உள்ளார்கள். இது தொடர்பகாக நாம் தேர்தல் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்துள்ளோம். நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை ஈ.பி.டி.பி.யும் இராணுவத்தினரும் சேர்ந்து யாழில் பல பகுதிகளில் மக்களிடம் விநியோகித்து உள்ளார்கள். இன்று காலை கூட ஒரு பத்திரிக்கையின் பெயரில் அதேபோலான அநாமதேய பத்திரிகை ஒன்றை வெளியிட்டு தமிழரசு கட்சி இந்த தேர்தலை புறக்கணிக்கின்றது என செய்தி வெளியிட்டு மக்களை குழப்பி உள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

யாழில் படைகளின் விஷமப்பிரச்சாரம்!

கூட்டமைப்பின் சார்பில் யாழில் பேட்டியிடும் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்துள்ளதாக போலியான உதயன் பத்திரிகை அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அரசபடைகளதும் புலனாய்வளரகளதும் போக்கிலித் தனமான தேர்தல் முறைகேடுகள் கண்டு யாழ் குடாநாட்டு மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர். இன்று காலை அரசாங்கத்தினாலும் அவர்களின் படையினராலும் அச்சிடப்பட்ட போலியான உதயன் பத்திரிகையில் விடுதலைப் புலிகளின் முன்னைநாள் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலனின்  துணைவியார் அனந்தி அரசாங்கத்துடன் இணைந்ததாக செய்தி வெளியிடப்பட்டு அனைவரது வீட்டு வாசலிலும் பத்திரிகை விநியோகிக்கப்பட்டு உள்ளது. எனினும் அனந்தி அரசாங்கத்துடன் தான் இணையவில்லை எனவும் இது அரசாங்கத்தினதும் அவர்களின் படையினரதும் திட்டமிட்ட போக்கிலித் தனம் எனவும் தெரிவித்துள்ளார்.

20 செப்டம்பர் 2013

அனந்தி சசிதரனுக்கு எதிராக உள்ளக வெளியக சதி!

வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும், திருகோணமலை மாவட்ட முன்னால் அரசியல் துறைப் பொறுப்பாளரும், தமிழீழ பரப்புரை செயலகப் பொறுப்பாளருமான திரு.எழிலனின் துணைவியார் திருமதி. அனந்தி சசிதரன் அவர்கள் இன்றுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீது அதிக பற்றும் வைத்திருப்பதோடு, தமிழ்த் தேசியத்தினை முன்னிறுத்தி செயற்படுத்தி வருபவர். எமது தாயகம் சிங்கள இராணுவத்தினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்று நேற்றைய தினம் ஒரு ஆங்கில ஊடகத்திற்கு மிக துணிச்சலோடு ஒரு நேர்காணலையும் கொடுத்திருந்தார். அத்துடன், தான் எழிலனின் மனைவியா இந்த தேர்தலில் நிற்கவில்லை. மாறாக, பலத்த உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் காணமல் போனவர்களின் அடையாளமாக தேர்தலில் குதித்துள்ளேன் எனத் கூறியுள்ளர். இவர் வெற்றி பெறுவது மட்டுமில்லை. இவரால், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கான வாக்கு வங்கி அதிகரிக்கும். இதனால், அச்சங்கொண்ட சிறீலங்கா தரப்பு, அனந்தி சசிதரன் அவர்கள் தேர்தலில் விலகிவிட்டதாக பொய்ப்பிரச்சாரம் ஒன்றை இன்று காலை முதல் கிளப்பிவிட்டுள்ளதாக பரிஸ்தமிழ்.கொம்மின் வட மாகாண சபைத்தேர்தலுக்கான சிறப்பு நிருபர் தெரிவித்துள்ளார். இதேவேளை, கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் திரு.சி.வி.விக்னேஸ்வரனையும் விட அதிகமான வாக்குகள் அனந்திக்கே விழும் என்ற அச்சம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்ளோருக்கும் மத்தியில் உள்ளதால், அனந்தி அவர்களுக்கான விருப்பு வாக்கில் சதித்திட்டம் மூலம் மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அறிய முடிகிறது. அனந்தி சசிதரனுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் தமிழிழ விடுதலைப் போராட்டத்திற்கான மீள் அங்கீகாரம் என யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல் ஆய்வாளர் ஒருவர் பரிஸ்தமிழ்.கொம்மின் வட மாகாண சபைத் தேர்தலுக்கான சிறப்பு நிருபரிடம் தெரிவித்துள்ளார்.

நன்றி:பரிஸ்.கொம் 

ஈ.பி.டி.பியும் சிங்களகாடைகளும் இணைந்து அனந்தி வீட்டின் மீது தாக்குதல்!

சுழிபுரத்தில் அமைந்துள்ள அனந்தியின் வீட்டை நடுநிசியில் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் வாள், கத்திகள், துப்பாக்கிகள் சகிதம் சுற்றி வளைத்ததாக அனந்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈபிடிபியினரும் இராணுவத்திரும் தனது வீட்டை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதாகவும், இதை அறிந்து ஆதரவாளர்களும் நண்பர்களும் அயலவர்களும் விரைந்து வந்ததும் இராணுவத்தினரும் ஈபிடிபியினரும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். விடயம் அறிந்து வீட்டிற்கு வந்த ஆதரவாளர்கள் அவரை வற்புறுத்தி விட்டில் இருந்து வெளியேற்றி வேறு இடத்திற்கு அனுப்பிய சில நிமிடங்களில் அங்கு மீண்டும் வந்த 40க்கு மேற்பட்ட படையினரும் ஈபிடிபி ஆயுததாரிகளும் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு 8க்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் பாரிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சில ஆதரவாளர்களுக்கு தலை உடைக்கப்பட்டு, கால் கைகள் முறிந்த நிலையில் இருப்பதாகவும் ஆபத்தான நிலை தொடர்வதாகவும் தெரிவித்த அனந்தி, இந்த தாக்குதலில் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதே வேளை இத் தாக்குதலில் கபே அமைப்பின் யாழ் மாவட்ட கண்காணிப்பாளரும் மனித உரிமைவாதியும், சட்டத்தரணியுமான சுபாஸ் உள்ளிட்ட பலர் காயம் அடைந்துள்ளனர். அதிகாலை 2:10 மணியளவில் சம்பவ இடத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன், சரவணபவன், யாழ் மாவட்ட தேர்தல் ஆணையாளர் அச்சுதன் மற்றும் தேர்தல் கண்காணிப்புக் குழுக்களும், ஊடகவியலாளர்களும் ஸ்தலத்தில் இருப்பதாக அனந்தி உறுதிப்படுத்தினார். மேலும் விடிவதற்குள் என்ன நடக்குமோ என அச்சத்துடன் இருப்பதாகவும் அனந்தி தெரிவித்தார். எழிலனின் மனைவியை தோற்கடிக்க இராணுவம் கடும் பிரச்சாரம் - போலி வதந்திகள் பரவுகின்றன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை வேட்பாளர் அனந்திக்கு எதிராக இராணுவத்தினர் பல்வேறு வதந்திகளைப் பரப்பி கடும் தேர்தல் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அனந்தியின் கணவரான எழிலன் தடுப்பில் இருந்து இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டதாகவும் அதன் அடிப்படையில் அவர் தேர்தலில் இருந்து விலகி விட்டதாகவும் செய்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் இராணுவத்தினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நாம் அரச உயர் அதிகாரிகள் சிலருடன் பேசியபோது எழிலன் தொடர்பாக எந்தவொரு தகவலும் இல்லையென்றே தெரிவித்தனர். மேலும் அனந்தியின் கணவரான எழிலன் கொலையாளி என்றும் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் இராணுவத்தினர் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறான பிரச்சாரங்கள் தென்மராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் சாவற்கட்டு ஆகிய பகுதிகளில் மிக மோசமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதேவேளை அனந்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிச் சின்னமான வீட்டுச் சின்னத்தில் முதலாம் இலக்கத்தில் தொடர்ந்தும் போட்டியிடுகின்றார். அதில் எந்த விதமான சந்தேகமும் இல்லையென்று கூட்டமைப்பு உறுதியாக அறிவித்துள்ளது. இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் க.வி.விக்கினேஸ்வரனுக்கு எதிராகவும் இராணுவத்தினர் கடும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். மக்களை குழப்பும் விதத்தில் இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களை கண்டு கொள்ள வேண்டாம் என்றும் தமிழரின் விடுதலைக்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கரங்களை தமிழ் மக்கள் பலப்படுத்த வேண்டும் என்றும் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

19 செப்டம்பர் 2013

மந்தனா வடஅமெரிக்காவில் தஞ்சம்!

கொலை அச்சுறுத்தலையடுத்து, சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரம சிறிலங்காவை விட்டு தப்பிச் சென்றிருப்பது, சிறிலங்கா அரசாங்கத்துக்குப் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பம்பலப்பிட்டியில் உள்ள சண்டே லீடர் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் வீட்டுக்குள், மூன்று வாரங்களுக்கு முன்னர் நுழைந்த ஆயுதபாணிகள், மந்தனாவைத் தாக்கியதுடன், அவரையும் அவரது குடும்பத்தினரையும் கத்திமுனையில் பயணம் வைத்திருந்தனர். அவர்கள், வீட்டினுள் தேடுதல் நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த சிறிலங்கா காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் கொல்லப்பட்டார், ஏனையவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தை அடுத்து, மந்தனா தலைமறைவாக இருந்த வந்த நிலையில், பூட்டப்பட்டிருந்த அவரது வீடு உடைக்கப்பட்டு அங்கிருந்த கணினியும் திருடப்பட்டது. இந்தநிலையில், மந்தனா, தனது கணவரான சண்டே லீடர் வணிகப் பகுதி ஆசிரியர் ரமேஸ் அபேவிக்கிரம, 10 வயது மகளுடன் சிறிலங்காவை விட்டு வெளியேறி, வடஅமெரிக்க நாடு ஒன்றில் தஞ்சமடைந்துள்ளார். உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலேயே அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். ஏற்கனவே, சண்டேலீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டார். அவரையடுத்து, சண்டேலீடர் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிரெட்றிக்கா ஜான்ஸ், பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் அச்சுறுத்தலினால், சிறிலங்காவை விட்டு வெளியேறினார். சண்டே லீடர் ஊடகவியலாளர் சௌகத்அலி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் அவர் படுகாயத்துடன் தப்பினார். இந்தநிலையில், தற்போது மந்தனாவுக்கு விடுக்கப்பட்ட மரண அச்சுறுத்தலை அடுத்து நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். தாம் சில மாத காலம் தற்காலிகமாக சிறிலங்காவை விட்டு வெளியேறியிருப்பதாகவும் மீண்டும் நாடு திரும்ப விரும்புவதாகவும் மந்தனா தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்கம் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் விவகாரம் ஐ.நா உள்ளிட்ட அனைத்துலக அரங்குகளில் கடுமையான கண்டனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் சூழலில், நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்சபைக் கூட்டம் ஆரம்பமாகியுள்ள சூழலில், கொமன்வெல்த் மாநாட்டை சிறிலங்காவே நடத்தவுள்ள சூழலில் இவர் நாட்டை விட்டு வெளியேறியிருப்பது சிறிலங்கா அரசாங்கத்துக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சியில் பூசகர் குத்திக்கொலை!

கிளிநொச்சி அம்பாள்குளம் பிரதேசத்தில் கோயில் பூசகர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். 69 வயதுடைய இவரை யார் கொலைசெய்தது, கொலைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை.இக் கொலைச் சம்பவமானது நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

18 செப்டம்பர் 2013

நாங்கள் வலிகளை சுமந்தவர்கள்-அனந்தி எழிலன்(காணொளி)

சரணடைந்தவர்களையும் தடுத்து வைக்கப்பட்டவர்களையும் மீட்பதற்காகவும் பெண்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் எமது சுயகௌரவத்தை பாதுகாப்பதற்கும் இத்தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் அனந்தி எழிலன் சாவகச்சேரியில் நேற்று முந்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் தெரிவித்தார். முள்ளிவாய்க்காலில் எமது உறவுகள் சாட்சியமின்றி படுகொலை செய்யப்பட்டனர். இதை எல்லாம் மூடிமறைத்து வடமாகாணசபை தேர்தலில் வெல்லவேண்டும் என்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் கோடிக்கணக்கான பணத்தை செலவழித்து வருகிறது. நாம் எல்லோரும் வலிகளை சுமந்தவர்கள் இந்த சலுகைகளினால் எம்மை வாங்க முடியாது என்பதை இத்தேர்தலில் நிருபிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

காமுகர்களினால் 6மாதக்குழந்தை கொலை!

கிளிநொச்சி மாவட்டத்தின் கோணாவில் பகுதியில் ஆறுமாதக் குழந்தை ஒன்று பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இன்று இடம்பெற்றது. பிறந்து ஆறுமாதமே ஆன பெண் குழந்தையே இவ்வாறு துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டது. இலங்கை இராணுவத்தினரே இவ்வாறு குழந்தையை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக சந்தேசிக்கப்படுகிறது. துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட குழந்தை கிளிநொச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே மரணமடைந்துள்ளது.

17 செப்டம்பர் 2013

கைவிரல் அடையாளத்துடன் விசா விண்ணப்பம்-கனடா

இலங்கையர்கள் தொடர்பில் கனடா புதிய சட்டங்களை அமுல் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை உள்ளிட்ட சில நாடுகளின் பிரஜைகள் தொடர்பில் பயோமெற்றிக் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன்படி கனடா வீசா கோரும் குறித்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் கைவிரல் அடையாளங்களையும் புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் வீசா அல்லது ஏனைய வீசாக்களுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் இலங்கையர்கள் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் வீசா விண்ணப்பிக்கும் போது கைவிரல் அடையாளங்களையும் விண்ணப்பத்தில் உள்ளடக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

16 செப்டம்பர் 2013

தமிழர்களுக்காக விக்னேஸ்வரன் என்ன செய்திருக்கிறார்?கேட்கிறார் ஹத்துருசிங்க

"புனர்வாழ்வு பெற்றுக்கொள்ளாமல் மக்களோடு மக்களாக வாழும் 4ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணர்ச்சிகரமான அரசியல் நடவடிக்கை மூலம் உசுப்பேற்றி வருகிறது.இதனால் வடக்கில் இராணுவ முகாம்களை மூடுவதை விடுத்து இன்னும் அதிக இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்புச் செயலரிடம் கோரவுள்ளேன்''என்று தெரிவித்தார் யாழ்.மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க.ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது:தற்போது நடைபெறும் சம்பவங்களையும் கிடைக்கும் தகவல்களையும் வைத்துப் பார்க்கும் போது வடக்கில் இன்னும் அதிக படையினரை கடமையில் ஈடுபடுத்த வேண்டும் என்றே தோன்றுகிறது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் விக்னேஸ்வரன் தேர்தல் பரப்புரை மேடைகளில் பிரபாகரன் ஒரு பெரும் வீரன் அவரால் தான் தமிழினத்துக்கே பெருமை கிடைத்தது என்றும், அவர் எந்த இடத்தில் போராட்டத்தை விட்டாரோ அந்த இடத்தில் இருந்து தாங்கள் அதனை தொடரப்போவதாகவும் கூறியுள்ளார்.புலிகளின் சித்தாந்தம் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க ஆயுதப் போராட்டமே ஒரே வழி என்று அவர்கள் இன்னமும் நினைக்கிறார்கள் இத்தகைய கருத்துக்களால் அச்சுறுத்தல் இன்னமும் பெரிய அளவில் இருந்து வருவது தெரிகின்றது. இந்த நிலைமையில் ராணுவத்தை குறைப்பதைவிடுத்து அதிக ராணுவத்தினரை அனுப்பும் படியும் புதிய முகாம்களை அமைக்கும் படியும் பாதுகாப்பு செயலாளரைக் கோருவது பற்றி ஆலோசித்து வருகின்றேன். கடந்த 25 வருட காலமாக இங்கு ஒரு மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றதில்லை. அப்படியான ஒரு சந்தர்ப்பம் வழங்கும்போது இதைத்தான் அவர்கள் செய்ய முற்படுகிறார்கள். விக்னேஸ்வரனும் கூட்டமைப்பும் ராணுவத்தை வில்லன் போல காட்டுவதற்கு முயற்சிக்கிறார்கள். ஆனால் இந்த விக்னேஸ்வரன் தமது வாழ்நாளில் தமிழ் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்? என்பதே எனது கேள்வி. காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் புலி உறுப்பினர்களோ அவர்களின் உறவினர்களோ தமது வழக்குகளை விக்னேஸ்வரன் விசாரிப்பதை விரும்பியதில்லை. ஏனெனில் அவர் இரக்கமே இல்லாமல் கடும் தண்டனை விதிப்பவர் என்று அவர் கருதப்பட்டார். இதே விக்னேஸ்வரன் தான் இப்போது தமிழ் மக்களின் இரட்சகர் என்று கூறிக்கொள்கிறார் என்றார்.

15 செப்டம்பர் 2013

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது -சீமான்

புலியின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது என நாம் தமிழர் கட்சி கூறியுள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை தொடக்ககாலம் தொட்டு கொச்சைபடுத்தியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வந்த ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவரும் விக்னேஸ்வரன் கூறுவதை ஏற்க மாட்டார்கள். ஈழத் தமிழரின் வாழ்விற்கும், அரசியல் சம உரிமைக்கு ஒரே தீர்வு தனித் தமிழ் ஈழமே என்று தமிழ்நாடு முடிவு செய்யவில்லை. அதனைத் தீர்மானித்தவர்,ஈழத் தமிழினத்தின் அரசியல் சம உரிமைக்காக சாத்வீக வழியில் போராடிய ஈழத் தந்தை செல்வா அவர்கள்தான் என்பது விக்னேஸ்வரனுக்கு தெரி்யாதோ? ஈழத் தமிழர்களின் அரசியல் சம உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முதலில் சிங்கள காவல் துறையையும், பிறகு இராணுவத்தையும் ஏவிவிட்டு தமிழர்களை திட்டமிட்ட இன அழித்தலுக்கு ஆளாக்கிய இலங்கையை ஆண்டு வந்த சிங்கள பெளத்த இனவாத அரசுகளின் இனவெறிபிடித்த நடவடிக்கைகளே அங்கு ஆயுதம் தாங்கிய போராட்டத்திற்கு வித்திட்டது என்கிற வரலாறும் விக்னேஸ்வரன் அறியாதவரோ ? அதனால் தான், ஏதோ தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தமிழீழ விடுதலையை பேசுவதனால் தான் இலங்கைத் தமிழர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கதை விடுகிறார். இலங்கைத் தமிழினத்தின் அரசியல் விடுதலை வரலாறு விக்னேஸ்வரனுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஏனென்றால் அவர் கொழும்புவில் சட்டப் பணியாற்றிக்கொண்டு, பிறகு நீதிபதியாகி வசதியான வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். சிங்கள அதிகார, அரசியல் குடு்ம்பங்களோடு திருமண சம்பந்தம் செய்து கொண்டு பாதுகாப்பாக வாழ்ந்து வந்தவர். எனவே, ஈழத் தமிழினத்தின் 60 ஆண்டுக்கால துயரம் விக்னேஸ்வரன் அறியாதது. அந்த துயரத்திற்குக் காரணமான சிங்கள பெளத்த இனவாத அரசியல் அவருக்கு புரிந்திருக்கவில்லை. அதனை விக்னேஸ்வரன் முழுமையாக புரிந்துகொள்ள வேண்டுமெனில், ஈழத் தந்தை செல்வா ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வந்துள்ள புத்தகங்களை படித்துத் தெளிய வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை, ஒரு குடும்பத்தின் கணவருக்கும் மனைவிக்குமான பிரச்சனை போன்றது, அதில் பக்கத்து வீட்டார் தலையிடக்கூடாது, நாங்கள் அடித்துக்கொள்வோம், பிறகு கூடிக்கொள்வோம் என்று விக்னேஸ்வரன் அந்த பேட்டியில் கூறியுள்ளார். விக்னேஸ்வரன் கூறியுள்ள இந்த எடுத்துக்காட்டை தமிழீழ மக்களிடம் கூறினால் வாயால் சிரிக்க மாட்டார்கள். சிங்கள பெளத்த இனவாத அரசியலின் அடிப்படையை புரியாத அல்லது இல்லாததுபோல் காட்டிக்கொள்ள விக்னேஸ்வரன் முயற்சிக்கிறார். தமிழருக்கும் சிங்களருக்கும் உள்ள பிரச்சனைதான், இதில் பக்கத்து வீட்டுக்காரன் தலையிடக்கூடாது என்று கூறியுள்ள விக்னேஸ்வரன், பிறகு இந்திய அரசின் தலையீட்டை பாராட்டுகிறார். ஆக, ஈழத் தமிழினத்திற்காக குரல் கொடுக்கும் தமிழ்நாடு உங்களுக்கு பக்கத்து வீட்டுக்காரன் என்றால், டெல்லி உங்களுக்கு யார் ? அதனை விளக்க வேண்டும். தமிழருக்காக பேசும் சிங்களவர்களும் உள்ளார்கள் என்று கூறுகிறார். தமிழர்களுக்காக நியாயமாக பேசும் சிங்கள புத்திசீவிகள் அனைவரும் தமிழீழ விடுதலையே தமிழருக்கான ஒரே தீர்வு என்று கூறுகிறார்கள் என்பதை விக்னேஸ்வரனை விட நாங்கள் அதிகம் அறிந்தவர்கள். இன்றிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன் வரை யாருக்கும் தெரியாத நபர் விக்னேஸ்வரன். ஆனால், அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கிறது என்றால், அதன் பின்னணி சதியில் சிங்கள பெளத்த இனவாத அரசும், டெல்லியும் உள்ளது என்பது வெள்ளிடை மலை. தமிழனின் அரசியலைக் கொண்டே தமிழினத்தின் விடுதலையை முடக்குவது என்கிற சீரிய சதித் திட்டத்தின் வெளிப்பாடுதானே விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது? இந்த உண்மையெல்லாம், சிங்கள இனவாத இராணுவத்தின் கொடூரங்களால் தங்களின் கணவரையும், பிள்ளைகளையும் இழந்து தனிமரமாய் நிற்கும் ஈழத் தாய்மார்களுக்குத் தெரியும், விக்னேஸ்வரன்களுக்குத் தெரியாது. பதவிக்காக தமிழினத்தின் விடுதலைப் போராடத்தை விலை பேசும் இப்படிப்பட்ட கொழும்புக் காக்காய்களுக்கு காயம் பட்டு முணங்கிக் கொண்டிருக்கும் தமிழினத்தின் வலி தெரியுமா? இனவெறி அரசியலால் சற்றும் பாதிக்கப்படாத உங்களைப் போன்றவர்களுக்கு தமிழினத்தின் விடுதலை உணர்வு சற்றும் தீண்டாதது எங்களுக்கு எந்த விதத்திலும் வியப்பளிக்கவில்லை. ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்ட வரலாறு எண்ணிலடங்கா துரோகிகளை கண்ணுற்றுள்ளது. அந்த பட்டியலில் நீங்களும் உள்ளீர்கள் என்பது எங்களுக்காக புரியாது? தமிழிழ மக்களின் உண்மைப் பிரதிநிதிகள் அவர்களின் விடுதலைக்காகவும், மானம் காக்கவும் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளே. தம் இனம் காக்க களம் புகுந்து உயிர் தியாகம் செய்த மாவீரர்களே ஈழத் தமிழினத்தின் வழிகாட்டிகள். ஈழத் தமிழினத்தின் துயரத்தை துடைக்க முத்துக்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் தங்கள் இன்னுயிரை தீக்கீரையாக்கியுள்ளனர். அவர்களின் தியாகமே, ஈழத் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தோடு எம் தமிழ்நாட்டையும், அதன் அரசியலையும் இணைத்துவிட்டது. அதன் மீது கேள்வி எழுப்பும் எந்த யோக்கிதையும் விக்னேஸ்வரனுக்குக் கிடையாது. எம் இனத்தின் விடுதலைக்காக உயிர் நீத்த ஒரு மாவீரராவது இந்த விக்னேஸ்வரன் குடும்பத்தில் உள்ளரா ? தமிழீழ விடுதலையின் தியாக ரூபங்களான விடுதலைப் புலிகளே எம்மக்களின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகள். அவர்களின் இடத்தில் ஒருபோதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்துவிட முடியாது. புலிகளின் இடத்தை பூனைகள் நிரப்ப முடியாது. அது நடக்கவும் நடக்காது, உலகத் தமிழினம் அதனை ஒருபோதும் அனுமதிக்காது. வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறலாம், விக்னேஸ்வரன் முதலமைச்சர் ஆகலாம். ஆனால் அதுவே ஈழத் தமிழினத்தின் விடுதலை கோரிக்கையை விட்டுத் தந்துவிடுவதாக ஆகாது. நாங்கள் ஒருபோதும் சிங்களத் தலைமையையோ அல்லது சிங்கள அரசியல் கட்சிகளையோ ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பதை வெளிப்படுத்தவே, தமிழீழ மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிக்கின்றனரே தவிர, த.தே.கூ.தான் எங்களின் அரசியல் பிரதிநிதிகள் என்று சான்றளிக்க அல்ல என்பதை விக்னேஸ்வரனும், அந்த கூட்டமைப்பின் பதவிப் பித்தர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும்.இப்படி செந்தமிழன் சீமான் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் படைகளால் தடுக்கப்பட்டார் சிவாஜிலிங்கம்!

சிவாஜிலிங்கம் 
தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் காரைநகரில் இரு மணி நேரம் சிங்களப்படைகளால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளுக்காகக் காரைநகருக்கு நேற்று மாலை சென்றுள்ளார். இதன்போது காரைநகர் வலந்தலைச் சந்தியில் அவரது வாகனத்தை மறித்த சிங்கள படைகள், சுவரொட்டிகளை ஒட்டுவதாகக் குற்றம் சாட்டி அவரை தடுத்து வைத்திருந்தனர் சுமார் இரண்டு மணி நேரம் படைகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிவாஜிலிங்கம் பின்னர் விடுவிக்கப்பட்டார்.

14 செப்டம்பர் 2013

சிங்களவர்களுடன் இணையாவிட்டால் தமிழர்களுக்கு வாழ்வில்லை என்கிறார் வாசுதேவ!

சிங்கள மக்களோடு இணைந்து வாழாவிட்டால் தமிழ் மக்களுக்கு எதிர்காலம் இல்லை எனத் தெரிவித்த இடதுசாரி அமைச்சர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டுக் கோரிக்கையை உள்ளார்ந்தமாக வைத்தே தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரித்துள்ளதாகவும் சாடியுள்ளனர்.ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பரப்புரைக்காக யாழ்ப்பாணம் வந்துள்ள இடதுசாரி அமைச்சர்களான வாசுதேவநாணயக்கார, டியூகுணசேகர,திஸ்ஸவிதாரண ஆகியோர் யாழ். நகரில் யஹாசி ஹோட்டலில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினர்.இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்."வடமாகாண சபைத் தேர்தல் மூலம் இந்த நாட்டின் ஆட்சியை மாற்ற முடியாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாட்டையே தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளிப்படுத்தி உள்ளது.தனிநாட்டுக்கான கோரிக்கையை முன்வைப்பதன் மூலம் மீள் இணக்கச் செயற்பாடுகளில் இருந்து தூர விலகிச் செல்கின்றனர்''என்று அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்." தனிநாட்டைப் பெறுவதற்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முயற்சி, மாகாண சபைத் தேர்தலை ஒத்திவைத்து மாகாணசபை முறையையே இல்லாமல் செய்கின்ற முயற்சி ஆகும்'' என்றும் அவர் கூறியுள்ளார். "கிழக்கு மாகாணசபைத் தேர்தலின்போது குறிப்பிடாத விடயங்களை ஏன் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போது குறிப்பிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்வைத்துள்ளது.இவர்களின் தேர்தல் விஞ்ஞாபனம் தற்போது பொருத்தமற்ற ஒன்று இது 13 ஆவது திருத்தத்தையும் தாண்டிச் செல்கிறது. இந்தியாவையும் தர்மசங்கடப்படுத்தி உள்ளது'' என்று அமைச்சர் டியூ.குணசேகர கூறியுள்ளார். ""நாம் இந்தியாவில் உள்ள இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்க வேண்டும்.பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாகச் சிங்களப் பேரினவாதிகளை குசிப்படுத்தும் விதத்தில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்டுள்ளனர். சிங்கள மக்களோடு இணைந்து வாழா விட்டால் தமிழ் மக்களுக்கு எதிர்காலமே இல்லை.நாங்கள் உங்களுக்குக் கரம் நீட்டத் தயாரக இருக்கின்றோம்.' என்றும் டியூ குறிப்பிட்டார். "எமது பிரச்சினையை நாம் வேறு நாடுகளுக்கு கொண்டு செல்லக்கூடாது. பல்வேறு கருத்துக்களை கொண்டிருந்தாலும் ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படவேண்டும்.மாகாண சபையில் அதிகாரங்கள் போதாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அதற்காக தனிநாடு தீர்வாகாது'' என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். "தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுயநிர்ணயம் தொடர்பில் குறிப்பிட்டுள்ளனர். இவர்கள் பிரிந்து போவதற்காகவே இதனைக் கேட்கின்றனர்'' என்று வாசுதேவ மேலும் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்ட சமஷ்டியை ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்டதற்கு இல்லை என்று பதில் அளித்தனர் இடதுசாரி அமைச்சர்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் சமஷ்டியைக் கொடுக்க இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தமை தொடர்பில் கேட்டபோது அது அப்போதிருந்த நிலைமை இப்போதுள்ள நிலைமையில் அது சாத்தியமில்லை என்று அவர் கூறினர்.