பக்கங்கள்

30 அக்டோபர் 2016

பிரபாகரன் படை என்ற பெயரில் எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் கடமையாற்றும் தமிழ் பொலிசாரை உடனடியாக இடமாற்றம் பெற்று வெளி மாவட்டங்களுக்கு செல்லுமாறு ”பிரபாகரன் படை” என்ற பெயரில் இன்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. யாழ். நகரின் பல இடங்களிலும் போடப்பட்டுள்ள இந்த துண்டுப் பிரசுரங்கள், யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் வெளிவரும் தமிழ் பத்திரிகைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த துண்டுப் பிரசுரத்தில், தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வட மாகாணத்தை விட்டு வெளியேற 21 நாள் கால அவகாசமும் அறிவிக்கப்பட்டுள்ளது.யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த 21 ஆம் திகதி இரவு பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து ”ஆவா கெங்ஸ்டர்” என்று அழைக்கப்படும் வாள் வெட்டுக் கும்பல் உட்பட யாழ் குடாநாட்டில் செயற்பட்டுவரும் ஆயுதக் குழுக்கள் தொடர்பில் அனைவரினதும் கவனம் திரும்பியுள்ள நிலையில், யாழ் குடாநாட்டிலுள்ள பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர்களை இலக்கு வைத்து துண்டுபிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட 24 வயதுடைய விஜயகுமார் சுலக்சனின் இறுதிக்கிரியைகள் இடம்பெற்ற தினமான கடந்த 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் பல இடங்களில் ஆவா கெங்ஸ்டர் என்ற பெயரில் துண்டுப் பிரசுரமொன்று விநியோகிக்கப்பட்டிருந்தது. அந்த துண்டுபிபிரசுரத்தில் குறிப்பிட்டிருந்தது போல், வடக்கில் தொடரும் போதைப் பொருள் விநியோகம், பாவணை மற்றும் சிங்கள, பௌத்த மயமாக்கல் தொடர்பிலும் தமது கரிசணைகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழர்கள் வாழும் பூவீகப் பிரதேசமான வடமாகாணத்தின் மண்ணும் எமது கலசாரமும் தனித்துவமானவை என்றும், அவை இன்று சிங்கள காடையர்களால் சூறையாடப்பட்டு வருகின்றன என்றும் ” பிரபாகரன் படை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் இளைஞர் சமுதாயம் சாராயம் மற்றும் போதைவஸ்துக்கு அடிமையாகி சீரழிந்து வருவதாகவும். இவை சிங்கள அரசால் மேற்காள்ளப்பட்டுவரும் ஒரு திட்டமிட்ட செயலாகும் என்றும் கூறப்பட்டுள்ளது. புத்தர் சிலைகள அமைப்பதும் சிங்கள குடியேற்றங்களை நிறுவுவதும் எம் இனத்தை சினங் கொள்ள வைக்கும் செயலாக பார்க்கப்படுவதாகவும், இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் 10 ஆண்டுகளில் வடக்கு மாகாணம் சிங்கள பெரும் பிரதேசமாக மாற்றம் கண்டுவிடுமளவிற்கு சிங்களவாதிகளின் போக்குகள் மிகக்கடுமையாகவும், கீழ்தரமாகவும் இருக்கின்றன என்றும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை தம்மை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பாசறையைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளப்படுத்திக்கொண்டுள்ள ”பிரபாகரன் படை” என்ற இந்தக் குழு, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தங்களது உரிமை போராட்டம் தவிரிந்த கோரிக்கைகள் தவிர்த்து அடாத்தான போராட்டங்களை செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்.அத்துடன் கடந்த 21 ஆம் திகதி பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களின் கொலைக்கும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன், விலைமதிக்க முடியாத அரும்பெரும் சொத்துக்களான பல்கலைக்கழக மாணவர்களை திட்டமிட்டு அழிப்பதற்கு சிங்கள அரசு செயற்படத் தொடங்கியுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது.எதிர்கட்சித் தலைவர் உட்பட தமிழ் அரசியல்வாதிகள், யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலைக்கு நீதி கிடைக்கும் வரை, அவர்கள் வகிக்கும் பதவிகளிலிருந்து இடை விலகிக் கொள்ள வேண்டும் அல்லது, இராஜினாமா செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளனர். அதேவேளை வடக்கு மாகாணத்திலுள்ள பொலிஸ் காரியாலயம், பொலிஸ் நிலையங்களில் கடமை புரிகின்ற அனைத்து தமிழ் உறவுகளும், தங்களது கடமைகளை இன்னுமொரு பிரதேசத்திற்கு மாற்றிக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ள ”பிரபாகரன் படை”, இதற்காக 21 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

25 அக்டோபர் 2016

கர்த்தாலால் வெறிச்சோடியது வடபகுதி!

முழு கடையடைப்பு: யாழ்ப்பாணம் முடங்கியதுயாழ்பல்கலைக்கழக மாணவர்கள் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகின்ற சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று முழுகடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன்படி, யாழ்ப்பாணத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், அரச மற்றும் தனியார் பேருந்துகளும் இயங்கவில்லை என செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நகர் பகுதி முழுமையாக முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டில் கல்வி பயிலும் இரண்டு மாணவர்கள் கடந்த 20-ஆம் தேதியன்று வீதியோரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர். இவர்களில் ஒருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பிரேதப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், மற்றைய மாணவன் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஐந்து போலீஸார் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் யாழ். மாவட்டத்தில் பூரண கடையடைப்பை அனுஷ்டிக்குமாறு அரசியல் கட்சிகள் நேற்று முன்தினம் கோரிக்கை முன்வைத்திருந்தன. இந்த கோரிக்கையின்படி, இன்றைய தினம் பூரண கடையடைப்பு அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

நன்றி:பிபிசி தமிழோசை

22 அக்டோபர் 2016

செலவுகளை ஏற்கிறோம் மன்னியுங்கள் என்றனராம் பொலிஸார்!

img_7757யாழ்ப்பாணம் வைத்தியசாலையிலிருந்து என்னையும் மகளையும் ஒவ்வாரு காவல்துறையினர் கையை பிடித்து அழைத்துச் சென்று ஏசி வாகனம் ஒன்றினுள் ஏற்றி யாழ் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனா். அங்கு எங்களுக்கு தேனீா் தந்தனா் ஆனால் நாங்கள் மறுத்துவிட்டோம்.பின்னா் அங்கு கம்பஸ் பெடியளும் வந்திட்டாங்கள். அங்கு வைத்து காவல்துறையினர் எங்களிடம் தெரிவித்தனா் இதனை நாங்கள் திட்டமிட்டு செய்யவில்லை தவறுதலாக நடந்துவிட்டது. காவல்துறையினர் வெறியில் இருந்தார்களோ என்னவோ தெரியவில்லை சுட்டதுதான் மாணவா்கள் மீது பட்டுவிட்டது. மன்னித்துக்கொள்ளுங்கள் இனிமேல் இப்படியொன்றும் நடக்காது.சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கொழும்பில் இருந்து ஆட்கள் வருகின்றாா்கள், அவா்களை நாங்கள் கைது செய்திருக்கின்றோம் கோட்சுக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்போம் தெரியாமல் நடந்த இந்த சம்பவத்தை நீங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். காவல்துறை உங்களுக்கு பந்தல் போடுவதற்கும் கதிரைகள் பிஸ்கட், சோடாவும் தந்து எல்லா செலவையும் செய்யவாா்கள் என்று சொல்லிப் போட்டு அங்கிருந்து (யாழ்ப்பாணம்) இங்குள்ள (கிளிநொச்சி) டிஜஜி ஒபீசுக்கு கோல் பண்ணி எங்கட வீட்டு முகவரியைம் சொல்லி போய் எல்லா உதவியையும் செய்ய சென்னாா்கள் நாங்கள் செய்த குற்றத்திற்கா போஸ்மோட்டம், பெட்டிச் செலவு, வாகனச் செலவு எல்லாத்தையும் காவல்துறையினர் செய்து தாறம் என்றும் ; அந்த வீட்டுச் செலவு இந்தவீட்டுச்செலவு எல்லாத்தையும் நாங்கள் செய்யிறம் என்றும் சொன்னாா்கள். ஆனால் இங்க எங்கட ஆட்கள் அவா்களை செய்ய விடவில்லை காவல்துறையினர் இங்க வரக் கூடாது உங்கட உதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி அனுப்பிவிட்டுடினம் பிறகு கொழும்பிலிருந்து காவல்துறை பெரியாள் ஒருவா் கதைக்கிறன் என்று சொல்லி அவா் சொன்னாா் உங்கட பிள்ளைகள் ஏஎல், ஓஎல் படிச்சிருக்கினமா நாங்கள் அவா்களுக்கு வேலைவாய்ப்பு தாறம். உங்களுக்கு நாங்கள் இந்த உதவியை மனிதாபிமான முறையில் செய்யிறம் மன்னிச்சிக்கொள்ளுங்கள் தவறுதலாக நடந்துவிட்டது என்றாா்கள் என கொல்லப்பட்ட யாழ்ப,ல்கலைகழக அரசறிவியல் துறை மூன்றாம் வருட மாணவனான நடராசா கஜன் அவா்களின் தாயாரான நடராசா சறோஜினி(வயது 61) தெரிவித்துள்ளார்  என  தெரிவிக்கப்படுகிறது.

19 அக்டோபர் 2016

கருணாவின் உத்தரவில் பாலச்சந்திரன் கொல்லப்பட்டாராம்!

இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள் தான் உக்கிரமாக நடந்தது. பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். சரண் அடைய இருந்த போராளித் தலைவர்கள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்டனர். அப்போது தேசியத்தலைவர் பிரபாகரனின் மூத்த புதல்வர் சார்லஸ் பயங்கர சித்திரவதை அனுபவித்து சுட்டுக் கொல்லப்பட்டார். அதே நாளில் தான் பாலகன் பாலச்சந்திரனும் பிடி பட்டுள்ளார். அவரை தங்கள் ராணுவ முகாமில் உட்காரவைத்து பிஸ்கட் கொடுத்து தண்ணீரும் கொடுத்தவர் கலிங்கே ரத்னே என்கிற 57வது பட்டாலியன் அதிகாரி. இரக்க சுபாவம் உள்ளவர். குறிப்பாக தலைவர் பிரபாகரன் மீது நல்ல மதிப்பை வைத்திருப்பவர். அவருக்கு பாலச்சந்திறனைப் பார்த்ததும் வியப்பு. மாபெரும் இயக்கத்தின் தலைவரின் மகனா இவர் என்று. உடனடியாக பிஸ்கட், தண்ணீர் கொடுத்து உபசரித்துள்ளார். அந்த பாலகனை கொலை செய்யப்போகிறோம் என்று அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை..! ராணுவத்தலைமைக்கு செய்தி போய்ச்சேர, முக்கிய அதிகாரிகளும் அவர்களுடன் துரோகி கருணாவும் உடன் வந்திருக்கிறார்..! அந்த பாலகனை என்ன செய்வது என்று ஆலோசனைகள் நடந்திருக்கிறது. அப்போது கருணா இவனை விட்டு வைத்தால், நாளை இவனே புலிகளின் தலைவன்…!!அப்பாவை விட அதிக தீரத்துடன் உங்களை எதிர்ப்பான்..உங்களால் தாக்கு பிடிக்க முடியாது ..உடனடியாக சுட்டுக் கொல்லுங்கள் என்று கூறிஇருக்கிறார். கலிங்கேரத்னே கலங்கிப் போயுள்ளார். அதன் பின் மூன்று வீரர்கள், சுற்றி நின்று அந்த இளம் பாலகனை சுட்டு வீழ்த்தியுள்ளார்கள்.! இவ்வாறு தனது வலைத்தளத்தில் கூறி கலங்யுள்ளார் அந்த மனிதம் நிறைந்த அதிகாரி..!இவ்வாறு செய்தியொன்றில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.

16 அக்டோபர் 2016

புளியங்கூடலில் மதில் ஏறிப்பாய்ந்த காளை மாடு!

இன்று16.10.2016 ஞாயிற்று கிழமை மாலை புளியங்கூடல் பகுதியில் காளை மாடு ஒன்று மதில் ஏறி குதித்துள்ளது. அப்பகுதி கிராம அலுவலரும், கிராமத்தின் இளைஞர்களும் குறித்த காளை மாட்டை மடக்கி பிடிப்பதற்கு பெரும் பாடுபட்டுள்ளனர்.பாய்ச்சல் என்றால் அப்பிடி ஒரு பாய்ச்சல். வேலி என்ன மதிலை கூட விட்டு வைக்காமல் குறித்த காளை மாடு எகிறி குதித்து ஓடியுள்ளது. அப்போது ஒரு பெரியவர்'இந்த மாட்டை யாழ்ப்பாணத்திலிருந்து தேசிய மட்ட உயரம் பாய்தல் போட்டிக்கு தப்பாமல் அனுப்பி வைக்கலாம். நிச்சயம் தங்கப் பதக்கத்தோடு திரும்பி வரும்' என்று ஆருடம் சொன்னார்.எனவும் ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.இந்த வீரமிகு மாடடைப் பற்றி மக்கள் வியப்போடு பேசி வருவதுடன் அதன் சாகசக் காட்சியை முகநூல்களிலும் பதிவிட்டு வருகின்றனர்.
 

12 அக்டோபர் 2016

தேசியத் தலைவரது புகைப்பட சுவரொட்டி தொடர்பில் பெண் கைது!


மருதனார்மடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட பெண், பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  ஜேர்மனி பிரஜாவுரிமை கொண்ட இந்தப் பெண் சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.
மருதனார்மடத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் உருவப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டினார் என்ற குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்ட பெண், பயங்கரவாத தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ஜெர்மன் பிரஜாவுரிமை கொண்ட இந்தப் பெண் சுன்னாகம் பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையிலேயே நேற்று இரவு கைது செய்யப்பட்டார். மருதனார்மடம் பிரதேசத்தில் இராமநாதன் நுண்கலைப் பீடத்திற்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பிடத்தில் நேற்று முன்தினம் இரவு தமிழீழத் தேசியத் தலைவரது புகைப்படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்றும், தமிழ்த் தேசிய அடையாளங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்றும் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து அறிந்த சுன்னாகம் பொலிஸார் உடனடியாக அந்த சுவரொட்டிகளை அகற்றியிருந்த நிலையில் விசாரணைகளையும் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மருதனார் மடம் ஆஞ்சனேயர் ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி காணொளியைக் கொண்டு, சுவரொட்டிகளை ஒட்டிய பெண்ணை அடையாளம் கண்டதாகவும், இதற்கமைய நேற்று இரவு அவரைக் கைது செய்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். ஜெர்மன்  பிரஜாவுரிமையை கொண்ட இந்தப் பெண்ணுக்கு இலங்கை பிரஜாவுரிமையும் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட பெண் மேலதிக விசாரணைகளுக்காக சிறீலங்காவின் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

02 அக்டோபர் 2016

சிங்களவர்களை வெளியேறுமாறு அச்சுறுத்தியதாக போராளி கைது!

வவுனியா- கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்தில் குடியேற்றப்பட்டுள்ள சிங்கள குடும்பங்களை அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டில் சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் போராளி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வியாழக்கிழமை இரவு வவுனியா கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்டத்திற்குள் புகுந்த சின்னவன் என அழைக்கப்படும் முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரும், அவரது சகாக்களும் ஆயுதங்களைக் காட்டி தம்மை உடனடியாக வெளியேறுமாறு அச்சுறுத்தியதாகத் தெரிவித்து 30 சிங்கள குடும்பங்கள் ஏ 9 வீதியை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.இதனையடுத்து அங்கு சென்ற வவுனியா பொலிசார் கொக்குவெளி படைவீரர் குடியிருப்புத் திட்ட சிங்கள குடும்பங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை வழங்கியிருந்ததுடன், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைதுசெய்வதாகவும் உறுதியளித்திருந்தனர். இதற்கமையவே இன்று இன்று சின்னவன் என்ற முன்னாள் போராளியும், அவரது நண்பர் ஒருவரும் வவுனியா பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு வவுனியா நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.