பக்கங்கள்

26 ஜூன் 2013

தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி விடுதலை!

தமிழினி 
தமிழீழ அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார். கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். புனர்வாழ்வை நிறைவு செய்துகொண்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. இருப்பினும், இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்தார். தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என்று தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர், அவர் அனைவர் மத்தியிலும் பிரசித்தமடைவதை விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், தமிழினிக்கும் அதற்கான வாய்ப்பினை வழங்க அரசியல் முக்கியஸ்தர்கள் முன்வந்துள்ளனர் என்றும் தேர்தலை இலக்கு வைத்தே அவரது விடுதலையும் அமையப்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

25 ஜூன் 2013

பாடசாலைச் சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை!

கொக்குவிலில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலை ஒன்றில் 8 வயது மாணவியொருவரை ஆசிரியர் தாக்கிய சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக்கிளை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அதன் இணைப்பாளர் த.கனராஜ் தெரிவித்தார். கொக்குவிலில் உள்ள ஆரம்பப் பிரிவு பாடசாலையில் தரம் 3 இல் கல்வி பயிலும் மாணவியொருவர் கடந்த வெள்ளிக்கிழமை கணிதபாட ஆசிரியரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். வகுப்பறையில் பயிற்சிக்காக கணக்கு ஒன்றை தவறாகச் செய்த காரணத்தால் குறித்த ஆசிரியர் மாணவியின் இரண்டு கால்களிலும் பிரம்பால் அடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட கண்டல் காயம் காரணமாக குறித்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சென்று சிகிச்சை பெற்றுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதனையடுத்து இது தொடர்பான விசாரணைகளை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்தியக் கிளை முன்னெடுத்துள்ளது என கனகராஜ் மேலும் தெரிவித்தார்.

24 ஜூன் 2013

யாழில் சிங்கள மாணவரிடையே மோதல்!

யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்விபயிலும் தென்பகுதி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் நான்கு மாணவர்கள் காயமடைந்தனர்.யாழ்,நாகவிகாரையில் நடைபெற்ற பொசன் நிகழ்வில் மாணவர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முரண்பாட்டாலேயே இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,நாகவிகாரையில் இடம்பெற்ற பொசன் நிகழ்வுக்காக யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தென்பகுதியைச் சேர்ந்த விஞ்ஞான பீட இரண்டாம் வருட மாணவர்களும்,முகாமைத்துவ பீட முதலாம் வருட மாணவர்களும் சென்றனர்.இதன்போது இரண்டாம் வருட மாணவர்களுக்கு உரிய மரியாதையை முதலாம் வருட மாணவர்கள் வழங்கவில்லை என்று முரண்பாடு எழுந்தது.இந்த முரண்பாட்டின் எதிரொலியாக முதலாம் வருட மாணவர்கள் விகாரையால் திரும்பி பரமேஸ்வராச் சந்தியில் பஸ்ஸால் இறங்கியபோது தாக்கப்பட்டனர்.முதலாம் வருட மாணவர்களை சிரேஷ்ட மாணவர்கள் கை,கால்காளாலும் தலைக் கவசங்களாலும் சரமாரியாகத் தாக்கினர் என்று நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் களேபரம் ஏற்பட்டது.தென்பகுதி மாணவர்களின் மோதலால் பரமேஸ்வராச் சந்தி ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டது. இதன்போது எட்டு மாணவர்கள் வரை காயமடைந்ததாகக் கூறப்பட்ட போதும் நால்வரே காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.பி.ஏரத் (வயது 20), கே.திலக்ஷன (வயது 22), டி.ஜெயரங்க(வயது 23),எஸ்.லக்மண (வயது 22)ஆகியோரே காயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டவர்களாவர்.இதனையடுத்து விஞ்ஞானபீட இரண்டாம் வருட தென்பகுதி மாணவர்கள் 6 பேரை விசாரணைக்காக அழைத்துச் சென்ற பொலிஸார் பின்னர் அவர்களை விடுவித்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

23 ஜூன் 2013

துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து ரீ- 56 ரக துப்பாக்கியுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 05.30 மணியளவில் ஓட்டமாவடி பாலத்தடியில் வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், பல்ஸர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை சோதனை செய்வதற்காக சைக்கிளை நிறுத்துமாறு கூறியபோது மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளனர். அவர்களை துரத்திச் சென்ற பொலிஸார் காவத்தமுனை மணிக்கூட்டுச் சந்தியில் வைத்து பிடித்து சோதனையிட்ட போது அறுகம்புல்லினால் மறைத்து வைத்து ரீ–56 ரக துப்பாக்கியை கொண்டு வந்தது தெரிய வந்துள்ளது. பேத்தாளை பாடசாலை வீதியைச் சேர்ந்த தேவமணி பாக்கியம் என்பர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவருடன் வந்த சீலன் தப்பிச் சென்றுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

22 ஜூன் 2013

குடாநாட்டு வர்த்தகர்களிடம் பொலிஸ் கப்பம்!

யாழ்ப்பாணம் 
யாழ். குடாநாட்டு வர்த்தகர்கள் சிலரிடம் பொலிஸார் மூலம் சிலர் கப்பம் கோரினரா என்ற விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். வர்த்தகர்கள் பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு கப்பம் கோருவோர் பற்றியும், அதற்கு உடந்தையாக பொலிஸார் இருந்தனரா என்பது பற்றியும் இரு வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.எம். ஜெப்றி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்தச் தகவலை வெளியிட்டார். யாழ். நகரில் ஆஸ்பத்திரி வீதியில் தற்காலிக பொலிஸ் நிலையம் ஒன்று உள்ளது. அதனை அண்மித்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடமே இவ்வாறு கப்பம் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வைத்தியசாலை வீதியில் பொலிஸார் சீருடையில் கடமையில் நிற்பர். அவர்களது கைத்தொலைபேசிகளுக்கு சிலர் அழைப்புக்களை மேற்கொள்வர். அதில் தம்மைப் பொலிஸார் என்று கூறும் நபர்கள் குறித்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களிடம் கைத்தொலைபேசியைக் கொடுக்குமாறு கூறுவார்கள். பொலிஸாரும் அவ்வாறே கைத்தொலைபேசியைக் கொண்டு சென்று வர்த்தகர்களிடம் கொடுப்பார்கள். மறுமுனையில் பேசுபவர் தான் ஒரு பொலிஸ் உயர் அதிகாரி என்றும் தனக்கு ஒரு தொகைப் பணம் வழங்க வேண்டும் என்றும் அதனை வழங்க மறுத்தால் வவுனியாவுக்கு விசாரணைக்கு அழைக்க வேண்டி வரும் என்றும் வர்த்தகர்களை அச்சுறுத்தும் பாணியில் பேசுகின்றனர். ஒரு சில வர்த்தகர்கள் இவ்வாறு கப்பம் செலுத்தியுள்ளனர். சிலரிடம் இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட தடவை கப்பம் கோரப்பட்டுள்ளது. சில வர்த்தகர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டது. இந்த நிலையிலேயே கப்பம் கோருவோர் தொடர்பிலும் அதனுடன் தொடர்புடைய பொலிஸ் குறித்தும் வர்த்தகர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இதற்கு அனுசரணையாகச் சென்ற பொலிஸார் சிலர் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதனால் யாழ். பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் நேற்று வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் கேட்டபோது இந்தச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு அழைப்பை ஏற்படுத்துபவர்கள் தாமும் பொலிஸார் என்றே கூறியள்ளனர். அவர்கள் தொடர்பிலும் கப்பம் கோரலுக்கு உடந்தையாக இருந்தார்கள் என்று கூறப்படும் பொலிஸார் தொடர்பிலும் தனித்தனியே விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் பின்னரே ஏனைய விடயங்கள் தெரியவரும் என்றார்.

ஜெர்மன் எசன் நகரில் பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு!

ஜெர்மன் எசன் அல்றண்டோர்ப் பகுதியில் உள்ள தமிழர் வீட்டில் பட்டப்பகலில் வீடுடைத்து நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக குறித்த வீட்டின் உரிமையாளர் எமக்கு தகவல் தருகையில்,சென்ற  ஞாயிற்றுக்கிழமை(16.06.2013)காலையில் தேவாலையம் சென்றிருந்ததாகவும் பின்னர் பிரார்த்தனைகளை முடித்துக்கொண்டு வீடு திரும்பிய வேளை வீட்டுக்கதவு உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த நகைகள் கொள்ளையிடப் பட்டிருந்ததாகவும் இத்தனைக்கும் தாம் குடியிருப்பது பத்தாவது மாடியில் என்றும் தெரிவித்தார்.கொள்ளையர் தொடர்பான தகவல்கள் எதுவும்  இதுவரையில் தமக்கு தெரியாது என்றும் தெரிவித்தார்.எசன் காவல்துறையினர் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது.

21 ஜூன் 2013

சிங்களவனை அடித்து விட்டார்கள் கூக்குரலிடுகிறது சிங்கள அமைப்பு!

கார்டிப் மைதானம் லண்டன் 
இங்கிலாந்தில் உள்ள சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசாங்கம், பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய கோரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட அமைப்பாக இருந்த போதிலும், பிரித்தானிய அரசாங்கமும், பாதுகாப்பு பிரிவினரும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களுக்கு மறைமுகமாக வழங்கி வரும் ஒத்துழைப்பு காரணமாகவே, பிரித்தானியாவின் கார்டிப் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை இந்திய அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியின் முடிவில், புலிகளின் ஆதவாளர்கள் சிங்களவர்களை தாக்கி, அச்சம் மின்றி வெளிப்படையாக செயற்பட்டுள்ளதாகவும் அந்த கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக செயலாளர் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க விடுத்துள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். கிரிக்கெட் போட்டியின் இறுதியில், சுமார் 200 விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், மிகவும் குழப்பமாக, வன்முறையாக செயற்பட்டு, சிங்கள கிரிக்கெட் ரசிகர்கள் மீது இரும்பு கம்பிகளாலும் பொல்லுகளாலும் தாக்கியுள்ளனர். இதற்கு முன்னர், இலங்கை அவுஸ்திரேலிய இடையிலான போட்டியின் போது புலிகளின் ஆதரவாளர்கள் சிங்களவர்களை ஆத்திமூட்டும் வகையில் நடநந்து கொண்டனர். மேலும் சிங்க கொடியை மிதித்து கொண்டு புலிக் கொடியை ஏந்தியும் இலங்கைக்கு எதிராக பதாகைளை எடுத்து கொண்டும் மைத்தானத்தில் நேற்று போட்டிக்கு தடையேற்படுத்தினர். அரையிறுதிப் போட்டியில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் மிகவும் திட்டமிட்ட வகையில், இந்த செயற்பாட்டில் ஈடுபட தயாராகி வருவதாக ,yq;if தூதரக அலுவலகம் ஊடாக பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்காதது குறித்து பிரித்தானிய அரசு மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு எமது கடும் எதிர்ப்பையும், அதிருப்தியை தெரிவித்து கொள்கிறோம். இந்த நிலைமையானது மிகவும் பாரதூரமான நிலைமையாகும். இங்கிலாந்தில் இருக்கும் சிங்களவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு, இலங்கை அரசு, இங்கிலாந்து அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

20 ஜூன் 2013

லண்டன் மைதானத்தில் புலிக்கொடிகளுடன் புகுந்த தமிழர்கள்!

பிரிட்டனில் உள்ள கார்டிப்பில் நடந்து வரும் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் (ICC Champions Trophy 2013) இலங்கைக்கு எதிரான 2வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி விளையாடி வருகின்றது. போட்டியின் இறுதி ஓவரில் புலிக்கொடியோடு தமிழர்கள் மைதானத்தில் புகுந்து வலம் வந்ததால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது.பின்னர் புலிகொடியோடு மைதானத்தில் வலம் வந்த வீரர்கள் காவல்துறையினரால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

19 ஜூன் 2013

தமிழர்களின் வீடுகளை எரித்து காடையர்கள் அட்டகாசம்!

வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம் காடையர்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமித்து வருகின்றனர். பாரதிபுரம் பகுதியிலுள்ள விக்ஸ் மரக்காடு என்ற தமிழர்களின் பகுதியில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் அப்பகுதியில் குறைவான மக்களே வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்மையில் அப்பகுதியில் சில தொழில் முயற்சிகள் ஏற்படுத்தப்பட்டு இடம்பெயர்ந்த தமிழர்கள் குடியேறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன்போது அப்பகுதியில் அடாவடி அமைச்சர் றிசாத் பதியுதீனின் பக்க பலத்துடன் முஸ்லிம் காடையர்கள் காணிபிடிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மக்கள் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்தனர். இதன்பின்னர் அந்த பகுதியில் எந்த முஸ்லிம்களும் காணி பிடிக்க கூடாது என்றும் அது தமிழர்கள் வசிக்கும் பகுதி என்றும் பொலிஸார் முஸ்லிம்களை எச்சரித்துள்ளனர். இந்நிலையில் தமிழர்களின் வீடுகளை முஸ்லீம் காடையர்கள் தீயிட்டு எரித்துள்ளனர். அவர்கள் வேலைக்கு சென்ற சமயம் இந்த நாசவேலையில் முஸ்லிம்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் நடைபெற்ற இடங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நேரில் சென்று பார்வையிட்டார். கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்களையும் அட்டகாசங்களையும் செய்து வரும் முஸ்லீம் காடையர்கள் தற்போது வடமாகாணத்திலும் தமது கைவரிசையை காட்டி வருகின்றனர். இதேவேளை இரும்பு வியாபாரிகள் என்ற போர்வையில் தமிழ் கிராமங்களுக்கு செல்லும் காமவெறி பிடித்த முஸ்லீம் காடையர்கள் தமிழ் சிறுமிகள் மீது பாலியல் வன்முறை கொடுமைகளையும் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி:தினக்கதிர் 

மன உளைச்சல்தான் மணிவண்ணன் மரணத்துக்கு காரணம்! - சீமான்

எதிர்பாராத மன உளைச்சல்களின் அழுத்தம் காரணமாக இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதாலேயே இயக்குநர் மணிவண்ணன் மரணத்தைத் தழுவியதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறினார். தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநராக, பிரபல நடிகராக திகழ்ந்த மணிவண்ணன் கடந்த சனிக்கிழமை திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மரணத்துக்கு இரு தினங்களுக்கு முன்பு, அவரது குரு பாரதிராஜா ஆனந்த விகடனில் மிகக் கேவலமாக மணிவண்ணனைத் திட்டி எழுதியிருந்ததுதான் இந்த மரணத்துக்குக் காரணம் என சினிமா உலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மணிவண்ணனின் மரணம் குறித்து அவரது நண்பர் பாக்யராஜ், சீடர் சீமான் ஆகியோர் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டி வெளியாகியுள்ளது.பாரதிராஜாவின் திட்டு மற்றும் மணிவண்ணன் மரணம் குறித்து இயக்குநர் கே பாக்யராஜ் கூறுகையில், "மணிவண்ணன் நல்ல படைப்பாளி.. வித்தியாசமான புத்தகங்களைப் படிக்கிற படிப்பாளி. எழுத்தாளர், பேச்சாளர், சமூக சிந்தனை உள்ள முற்போக்குவாதி. ஈழத்தமிழர்கள் மீது எல்லாருக்குமே ஒரு பரிவு இருக்கும். ஆனா அவங்களை ரத்த உறவா பார்த்துப் பழகியவர் மணிவண்ணன். எனக்குப் பிறகுதான் பாரதிராஜாவிடம் சேர்ந்தார். ஆனாலும் பாரதிராஜாவுக்கு பிடித்தமானவராக இருந்தார் மணிவண்ணன். ஈகோவே பார்க்க மாட்டார். டிஸ்கஷன்ல ஒரு நல்ல சீனைச் சொன்னாபோதும், சொன்னவங்க காலைத்தொட்டு வணங்குவார். என்னோட "ஆராரோ ஆரிரரோ' படத்தில வர்ற "அதிர்ச்சி பைத்தியம்' கேரக்டரை அவர்தான் சொன்னார்.பாரதிராஜா கோபம்கிறது குழந்தைக் கோபம் மாதிரி. தன் படங்கள்ல ஸ்கிரிப்ட்ல ஒர்க் பண்ற திறமையானவங்க தன்னை விட்டு விலகும்போது கோபப்படுவார். எல்லார் மேலயும் பாரதிராஜா கோபப்பட மாட்டார். தனக்குப் பிடிச்சவங்க மேலதான் ரொம்ப கோபப்படுவார். ஓவர் அஃபெக்ஷனில் பேசுறது பாரதிராஜா வோட வழக்கம். பாரதிராஜா, மணி வண்ணனைப் பத்தி பதில் சொன்ன நேரத்துல மணிவண்ணனோட துயர மரணம் நிகழ்ந்திருச்சு. அதுதான் வருத்தமா இருக்கு'' என்கிறார் துயரத்துடன்.இயக்குநர் சீமானிடம் பேசியபோது, "எதனால் மரணம் ஏற்பட்டது என்று மருத்துவர்களிடம் நான் விசாரித்தபோது, 'எதிர்பாராத மன உளைச்சல்களின் அழுத்தம் காரணமாக இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது' என்றனர். அதனால், விமர்சனங்கள் அவரது இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.
இனமானத் தமிழன் ஐயா மணிவண்ணன் அவர்களுக்கு புளியங்கூடல்.கொம் தனது வீர வணக்கத்தை செலுத்துகின்றது.

02 ஜூன் 2013

தேர்தல் அறிவித்ததும் தமிழரசு கட்சி முடிவெடுக்க தீர்மானம்!

வடமாகாணசபை தேர்லை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அறிவித்ததும் அதுபற்றி முடிவெடுப்பதற்கு தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கட்சித்தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டம் கட்சியின் தலைவரும் தமிழ்க்கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுக்களின் தலைவருமான ஆர்.சம்பந்தன் தலைமையில் கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டம் சனிக்கிழமை காலைவேளையில் ஆரம்பமாகி மாலை 6 மணிவரையும் இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மத்தியக்குழு அங்கத்தவர்களுக்கு இடையே பலத்த வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தேர்தல் திணைக்களத்தில் தனிக் கட்சியாக பதிவு செய்வது, மீளகுடியேற்றப் பிரதேசங்களில் பலவந்தமாக மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிக்கையில், இராணுவ தேவைக்காகக் அரசாங்கம்,பொதுமக்களின் காணிகளை கையகப்படுத்துவது, இடம்பெயர்ந்த மக்களை வாக்காளர்களாகப் பதிவு செய்வது, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள குடும்பங்கள் தாயகம் திரும்பி மீள்குடியேறுவது தொடர்பில் இலங்கை இந்திய அரசாங்கங்களுடன் பேச்சுக்கள் நடத்துவது, இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருந்த நடவடிக்கைகள், அரசிடம் முன்வைக்கப்பட்டுள்ள கூட்டமைப்பின் தீர்வு யோசனைகள் போன்றவை உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து இங்கு விரிவாக பேசப்பட்டது. வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை எடுத்து அரசாங்கம் அறிவிக்கும்போது, தாங்களும் அதுபற்றி முடிவெடுப்பது என்றும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த பலரும் பல விடயங்கள் தொடர்பில் பல்வேறு கேள்விகளை எழுப்பியதாகவும், அவற்றுக்கு தாங்கள் உரிய விளக்கம் அளித்ததாகவும் மாவை சேனாதிராஜா எம்.பி மேலும் தெரிவித்தார். இக்கூட்டத்தில் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் கட்சியின் மூத்த உறுப்பினர் சிற்றம்பலத்திற்கும் இடையில் பலத்த வாக்குவாதம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

01 ஜூன் 2013

ஒசாமாவை கொல்ல உதவிய சாவகச்சேரி தமிழர்!

ஒசாமா பின்லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தின் பிரதான மூளைசாலி ஒரு இலங்கை தமிழர் :அல்-குவைதா அமைப்பின் ஸ்தாபக தலைவர் ஒசாமா பின் லாடனை கொலை செய்யும் அமெரிக்காவின் திட்டத்தில், பிரதான மூளைசாலியாக செயற்பட்டவர், இலங்கை தமிழரான பேராசிரியர் சிவலிங்கம் சிவநாதன் என தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் இந்து கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் சிவலிங்கம், இந்த வெற்றிகரமான நடவடிக்கையை அடுத்து, வெள்ளை மாளிகையினால் மாற்றத்திற்கான விசேட நபர் என கௌரவப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 30 ஆம் திகதி இலங்கை பேராசிரியருக்கு மதிப்பளிக்கும் வகையில் வெள்ளை மாளிகையில் வழங்கப்பட்ட விருதினை அடுத்தே இந்த தகவல் தெரியவந்துள்ளது. அமெரிக்க பிரஜைகளை உலகில் சிறந்த மற்றும் முக்கியமான பிரஜைகளாக மாற்றுவதற்கு தமது அறிவை பயன்படுத்துபவர்களுக்கு இந்த கௌரவ விருது வழங்கப்படுவதாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உள்ள இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் சிவலிங்கம் சிவநாதன், அல் -குவைதா தலைவர் ஒசாமா பின் லாடனை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கைக்கு தேவையான தொழிற்நுட்பத்தை முழுமையாக கண்டுப்பிடித்துள்ளார். இந்த நடவடிக்கைக்கு தேவையான நைட் விஷன் தொழிற்நுட்பம் உள்ளிட்ட உபகரணங்களை பேராசியரே தயாரித்துள்ளார். பேராசிரியர் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்காவின் பிரதான தொழிற்நுட்பட அதிகாரி டோட் பார்க், இப்படியான அறிவார்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு வந்து தாம் அவர்களுடன் பணியாற்ற கிடைத்தமை மதிப்புக்குரியது என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் பிறந்த பேராசிரியர் சிவலிங்கம், அணுமின் தொழிற்நுட்பம் தொடர்பில் புகழ்பெற்றவர். அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் அவருக்கு சகல வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது தமது கடமை எனவும் அவர் கூறியுள்ளார்.