பக்கங்கள்

24 மார்ச் 2019

வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி சீமான் பேச்சு!

அறிவிப்பு: மார்ச்-23, சீமான் தலைமையில் வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக்கூட்டம் - சென்னை (மயிலாப்பூர்)பண மழையில் மக்களுக்கு முன்னால் நாங்கள் மங்கலாகிவிடுகிறோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி வைத்தார். சென்னை மயிலை மாங்கொல்லையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் வேட்பாளர்கள் அறிமுகப்படுத்தப்பட்டனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல், மற்றும் 19 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் "கரும்பு விவசாயி" சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கும் சரிபாதி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் வேட்பாளர்கள் அனைவரும் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.இந்தநிலையில்,நேற்று மாலை 5 மணியளவில் சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், அனைத்து வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது அனைத்து வேட்பாளர்களையும் தொண்டர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து சீமான் பேசினார். கார் தயாரிக்கும் முதலாளி வாழும் நாட்டில் சோறு தயாரிக்கும் விவசாயி மரணிப்பது பெரிய முரண் என்றும், பண மழையில் மக்களுக்கு முன்னால் நாங்கள் மங்கலாகிவிடுகிறோம் எனவும் தெரிவித்தார். நாங்கள் மற்ற கட்சிகளை போல் விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய மாட்டோம், ஆனால் விவசாயிகளை கடனாளியாக்க மாட்டோம் என்று கூறிய சீமான், நாட்டு மக்கள் பசியில்லாமல் இரவில் தூங்க நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் வேட்பாளர்கள் மோடி, ராகுலால் உறுதி தர முடியுமா? என கேள்வி எழுப்பினார்.இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நாடாளுமன்றத் தேர்தல் ஆட்சி வரைவு புத்தகமும் வெளியிடப்பட்டது.

21 மார்ச் 2019

சிறீலங்கா அரசு பொறுப்புக்கூறலுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

Image result for kajendrakumarஇலங்கை அரசாங்கம், கடமைக்காவே ஐ. நா. மனித உரிமைகள் பேரவையுடன் தொடர்புகளைப் பேணுகிறதே தவிர, பொறுப்புக்கூறல் தொடர்பில் தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் நேற்று மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை மீதான விவாதம் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- ''குற்றவியல் பொறுப்புக்கூறலை கோரி போராடி வரும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் இலங்கையின் பிரதமர் அக்குற்றங்களை மன்னித்து மறந்துவிடுமாறு வெளிப்படையாகக் கோரியுள்ளார். இலங்கை அரசின் உயர் மட்ட தலைவர்கள் குற்றவியல் பொறுப்புக்கூறலை தொடர்ந்தும் ஒருமனதாக நிராகரித்து வரும் நிலையில் ஐ. நா மனித உரிமைகள் பேரவையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் இந்த அடிப்படை அபிலாசையை நிறைவேற்ற முடியாது என தெட்டத் தெளிவாக புலப்படுகிறது. யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் ஆகின்ற நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதன் மூலம் அல்லது இலங்கைக்கான விசேட சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் ஒன்றை நிறுவவதன் மூலம் மாத்திரமே பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான குற்றவியல் நீதியை நிலை நாட்டலாம் என்பதை ஆணையாளர் ஏற்றுக் கொள்வாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

15 மார்ச் 2019

சர்வதேச குற்றவியல் நீதிமன்றமே நீதிக்கான வழி-கஜேந்திரகுமார்!

இலங்­கை­யை சர்வதேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­துக்­குப் பரிந்­து­ரைத்­தல் அல்­லது சர்வதேச சிறப்­புக் குற்­ற­வி­யல் தீர்ப்­பா­யத்தை நிறு­வு­தலே போரால் பெரு­ம­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளான தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைப்­ப­தற்­கான ஒரே­ வழி­மு­றை­ என்று தமிழ் தேசிய மக்­கள் முன்­ன­ணி­யின் தலைவர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் தெரி­வித்­துள்ளார். ஐ.நா. மனித உரி­மை­கள் பேர­வை­யில் நேற்று முன்தினம் இடம்­பெற்ற பொது­வி­வா­தத்­தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். 30/1 தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­தி­லி­ருந்து, அதற்கு இணை அனு­ச­ரணை வழங்­கிய இலங்கை அர­சின் உயர்­மட்­டத் தலை­வர்­க­ளான ஜனாதிபதியும் பிரதமரும் குற்­ற­வி­யல் நீதி­யை­யும் பொறுப்­புக்­கூ­ற­லை­யும் நிரா­க­ரித்து வரு­கி­றார்­கள். இன அழிப்­பால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களோ குற்­ற­வி­யல் நீதி­யை­யும் பொறுப்­புக்­கூ­ற­லை­யும் கோரி­நிற்க, இந்­தக் கூட்­டத் தொடர் இடம்­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் வேளை­யில், இன அழிப்­பால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு மத்­தி­யில் வடக்­கில் உரை­யாற்­றிய பிரதமரோ மன்­னிப்­போம் மறப்­போம் என்று வெளிப்­ப­டை­யா­கக் கூறி­யுள்­ளார். குற்­ற­வி­யல் நீதி­யை­யும் பொறுப்­புக்­கூ­ற­லை­யும் தொடர்ச்­சி­யாக இலங்கை அரசு அர­சு­ நி­ரா­க­ரித்து வரு­கின்ற நிலை­யில், இது பாதிப்­ப­டைந்த மிகப்­பெ­ரும்­பான்­மை­யான தமிழ் மக்­க­ளுக்கு, குற்­ற­வி­யல் நீதியை வழங்க முடி­யாது என்­பதை தெளி­வாக எடுத்­துக்­காட்­டு­கி­றது. தீர்­மா­னத்­தில் கூறப்­பட்ட ஏனைய விட­யங்­க­ளில் பெய­ர­ள­வுக்கு எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னேற்­றங்­க­ளா­கக் காண்­பிப்­ப­தும், தாம் வழங்­கிய உறு­திப்­பாட்டை நிறை­வேற்­றா­மல் காலத்தை இழுத்­த­டிப்­ப­தும் இலங்கை அர­சின் நேர்­மை­யற்ற பண்­பை­யும் கப­டத்­த­னத்­தை­யும் வெளிப்­ப­டுத்­து­கி­றது. அத­ன­டிப்­ப­டை­யில், இலங்­கையை சர்வதேச குற்­ற­வி­யல் நீதி­மன்­றத்­திற்­குப் பரிந்­து­ரைத்­தல் அல்­லது சர்வதேச குற்­ற­வி­யல் தீர்ப்­பா­யத்தை நிறு­வு­தலே பெரு­ம­ள­வில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளான தமிழ் மக்­க­ளுக்கு நீதி கிடைப்­ப­தற்­கான ஒரே­யொரு வழி­மு­றை­யா­கும் என்­றார்.

13 மார்ச் 2019

வேலணையில் மூன்று மாவீரர்களின் தந்தை காலமானார்!

மூன்று மாவீரர்களை தமிழீழப் போராட்டத்திற்கு அர்ப்பணித்த தந்தை திரு,சின்னத்துரை சந்திரசேகரம்(சந்திரன்)அவர்கள் நேற்றைய தினம் அவரது சொந்த இடமான வேலணையில்(வங்களாவடி)
காலமானார்.இவரது இரண்டு புதல்விகளும் ஒரு புதல்வனும் மாவீரர் என்பது குறிப்பிடத்தக்கது.சமூக சேவைகளில் சிறந்த ஈடுபாடுகொண்டவர் திரு,சின்னத்துரை சந்திரசேகரம் அவர்கள்,இவரது இழப்பு தமிழ் மக்களுக்கு பேரிழப்பாகும்,இந்த மாவீரத் தந்தைக்கு எம் அக வணக்கங்கள்!

10 மார்ச் 2019

சவேந்திர சில்வா நியமனத்திற்கு ஐ.நா.கண்டனம்!


இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமைக்கு, ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கை கடந்த வியாழக்கிழமை பகிரங்கப்படுத்தப்பட்டது. அந்த அறிக்கையிலேயே, மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் நியமனத்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையில், ‘மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தின் 58 ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர். அவரது கட்டுப்பாட்டில் இருந்த படையினர், அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் மற்றும் அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களை மீறினார்கள் என்று, ஐ.நா. பொதுச்செயலாளர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையிலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையிலும், குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன’ என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.