பக்கங்கள்

25 டிசம்பர் 2019

சிங்கள சிப்பாயின் துப்பாக்கி அபகரிப்பு!

வவுனியா போகஸ்வெவ படை முகாமில் கடமையில் இருந்த சிங்கள சிப்பாய் ஒருவரை தாக்கி காயப்படுத்தி அவரது துப்பாக்கி பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று இன்று (புதன்கிழமை) இடம்பெற்றுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா படைகளின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதலில் கழுத்து பகுதியில் காயமடைந்த படையினன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப் படுகின்றது.

17 டிசம்பர் 2019

சுவிஸ் தூதரக பணியாளர் விவகாரம் தொடர்பில் சிறீலங்காவிற்கு எச்சரிக்கை!


கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் விடயத்தில் இலங்கை நடந்து கொண்ட விதம் தொடர்பாக, சுவிஸ் மத்திய வெளிவிவகார திணைக்களம் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கடத்தப்பட்டு தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுவிஸ் தூதரக ஊழியர் விடயத்தில் இலங்கை நடந்து கொண்ட விதம் தொடர்பாக, சுவிஸ் மத்திய வெளிவிவகார திணைக்களம் கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்தின் ஊழியர் ஒருவர் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதை அடுத்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள மத்திய வெளியுறவுத் துறை (எஃப்.டி.எஃப்.ஏ) பணியாளர் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளிலும் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச தரங்களுக்கு அமைய தனிப்பட்ட உரிமைகளை பாதுகாக்க உறுதி செய்யுமாறு இலங்கை நீதித்துறை அதிகாரிகளிடம் அழைப்பு விடுத்துள்ளது. வெளியுறவுத் துறை மற்றும் கொழும்பு சுவிஸ் தூதரகம் தங்கள் பொறுப்புகளை தொடர்ந்து பூர்த்திசெய்து சம்பந்தப்பட்ட ஊழியருக்கு உதவ தங்கள் சக்தியால் முடிந்த அனைத்தையும் செய்யும். நவம்பர் 25, 2019 அன்று, சுவிஸ் தூதரகத்தின் உள்ளூர் ஊழியர் தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு கட்டாயப்படுத்தி கொழும்பில் கடத்தப்பட்டதாக தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பணியாளர் மற்றும் சுவிஸ் தூதரகம் இருவரும் இந்த நடவடிக்கைகளின் போது இலங்கை அதிகாரிகளுடன் முழுமையாக ஒத்துழைத்தனர். எஃப்.டி.எஃப்.ஏ பலமுறை உரிய செயல்முறை பின்பற்றப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக, உடல்நலம் சரியில்லாமல் இருந்தபோதும், மூன்று நாட்களுக்கு மேலாக ஊழியர் 30 மணி நேர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதையும், விசாரணைகள் முடிவடைவதற்கு முன்னர் இலங்கையின் மூத்த அதிகாரிகள் அவரது கணக்கை கேள்விக்குட்படுத்தியதன் பொது அறிக்கைகளையும் எஃப்.டி.எஃப்.ஏ விமர்சித்துள்ளது. தமது ஊழியர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகள் தேசிய சட்டம் மற்றும் சர்வதேச நீதித் தரங்களுக்கு இணங்க வேண்டும் என்றும் பணியாளரின் உரிமைகள் இப்போது சிறப்பாக பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் FDFA எதிர்பார்க்கிறது. பொருந்தக்கூடிய சட்டத்தின் கீழ் தங்கள் கடமைகளை பூர்த்திசெய்யவும், பணியாளரின் மோசமான உடல்நிலைக்கு உரிய கவனம் செலுத்தவும் இலங்கை அதிகாரிகளை எஃப்.டி.எஃப்.ஏ அழைப்பு விடுக்கிறது. இந்த உயர் வழக்கில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் ஒரு நாடு என்ற இலங்கையின் நற்பெயருக்கு ஆபத்து உள்ளது என்பதை சுவிட்சர்லாந்து வலியுறுத்த விரும்புகிறது. கொழும்பில் உள்ள எஃப்.டி.எஃப்.ஏ மற்றும் சுவிஸ் தூதரகம் முடிந்தவரை தங்கள் ஊழியருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும். பாதுகாப்பு சம்பவத்தை தீர்க்க ஒரு பொதுவான மற்றும் ஆக்கபூர்வமான வழியை நாடுகிறோம் என்று இலங்கை அதிகாரிகளுக்கு எஃப்.டி.எஃப்.ஏ மீண்டும் வலியுறுத்தியுள்ளது. 16 டிசம்பர் 2019 அன்று, கொழும்பில் உள்ள சுவிஸ் தூதர் இலங்கையின் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுடனான நேருக்கு நேர் சந்திப்பில் இதை மீண்டும் வலியுறுத்தியுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 டிசம்பர் 2019

மண்கும்பானில் மணல் கடத்தல்காரர் மீது தாக்குதல் சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை!


தீவகம், சாட்டி மண்கும்பான் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களுடன் பிரதேச மக்கள் முரண்பட்டதனால் மூவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.அத்துடன் மணல் அகழ்வில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றும் பிரதேச மக்களால் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்றும் இதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்யுமாறும், அதிகளவு மணல் குவியல்கள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்துக்கிடமானோரை மன்றில் முற்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன், பொலிஸாருக்கு உத்தரவிட்டார். மண்கும்பானில் மணல் அகழ்வில் ஈடுபட்டோரைத் தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர் என்ற குற்றச்சாட்டில் 8 பேர் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றில் பொலிஸார் இருவேறு வழக்குகளைத் தாக்கல் செய்தனர். அந்த வழக்குகளின் விசாரணையின் போதே ஊர்காவற்றுறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. தீவகம் மண்கும்பானில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட கும்பலை விரட்டிய ஊர் மக்கள், கும்பல் கைவிட்டுச் சென்ற இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்தனர். இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது. இந்த நிலையில் மண்கும்பானைச் சேர்ந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். மேலும் ஆறு பேரை கைது செய்ய ஊர்காவற்றுறை பொலிஸார் முற்ப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவர் உள்பட 8 பேருக்கு எதிராக இருவேறு அறிக்கைகளை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர். சந்தேகநபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர். மேலும் 6 பேர் மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் ஊடாக மன்றில் சரணடைந்தனர். வழக்குகள் ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. “மணல் லோட்டுகளை ஏற்றியோர் மீது சந்தேகநபர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். காணி உரிமையாளர்களின் அனுமதியுடனேயே மணல் அகழ்வு இடம்பெற்றது. பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்க முடியாது. சட்டவிரோத செயற்பாடு நடந்தால் பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும். சந்தேகநபர்கள் அதனைச் செய்யாமல், சட்டத்தில் கையில் எடுத்து மணல் ஏற்றிச் சென்றோர் மீது தாக்கியதுடன் இரண்டு உழவு இயந்திரங்களுக்கு தீ வைத்துள்ளனர்” என்று பொலிஸார் மன்றுரைத்தனர். “அரசு மணலை ஏற்றிச் செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை மாத்திரமே ரத்துச் செய்துள்ளது. ஆனால் மணல் அகழ்வுக்கு அனுமதி தேவை. எனவேதான் சட்டவிரோதமான மணல் அகழ்வு தொடர்பில் ஊர் மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். எனினும் இரண்டு நாட்களுக்கும்  மேலாகியும் பொலிஸார் நடவடிக்கை எடுக்காததால் ஊர்மக்கள் மணல் கடத்தலைத் தடுக்க கும்பலை விரட்டினர். வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கும் சம்பவத்துக்கும் தொடர்பில்லை. அவர்களுக்கு பிணை வழங்கவேண்டும்” என்று மூத்த சட்டத்தரணி வி.திருக்குமரன் மன்றுரைத்தார். இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதிவான், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டார். அத்துடன், ஊர்காவற்றுறை நீதிமன்ற நியாயாதிக்க எல்லையில் தனியார் காணிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று காணிகளுக்குள் பள்ளம் காணப்பட்டால் அதுதொடர்பில் முறைப்பாடு வழங்காதோரைக் கைது செய்வேண்டும். அதிகளவு மணல் கும்பிகள் உள்ள காணிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகத்து இடமானோரை மன்றில் முற்படுத்த உனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் நீதிவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

06 டிசம்பர் 2019

நடராசா சிறிரஞ்சனின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி வெளியீட்டு விழா!

புளியங்கூடல் மண்ணின் மறைந்த மதிப்பிற்குரிய நடராசா ஆசிரியர் அவர்களின் புதல்வர் பெருமைக்குரிய நடராசா சிறிரஞ்சன் அவர்களின் யாழ்ப்பாணத் தமிழ் அகராதி நூல் வெளியீட்டு விழா 11.12.2019 புதன்கிழமை முற்பகல் 9:30 மணியளவில் கைலாசபதி கலையரங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திருநெல்வேலி எனும் முகவரியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமாகி அதைத் தொடர்ந்து தமிழ் மொழி வாழ்த்தும் இடம்பெறும்.

வரவேற்புரை:
த.மயூரநாதன் அவர்கள்

ஆசியுரை:
பேராயர் கலாநிதி எஸ்.ஜெபநேசன் அவர்கள்

வாழ்த்துரை:பேராசிரியர் ஏ.என்.கிருஷ்ணவேணி அவர்கள்

தலைமையுரை:பேராசிரியர் சுபத்தினி ரமேஸ் அவர்கள்

பிரதம விருந்தினர் உரை:கலாநிதி சி.பத்மநாதன் அவர்கள்

தொடர்ந்து அகராதி வெளியீடும் சிறப்பு விருந்தினர்களின் உரையுடன் வெளியீட்டாளர் உரையும் இடம்பெறும்.ஏற்புரையை நடராசா சிறிரஞ்சன் நிகழ்த்துவார்.இவ்விழா சிறப்புற புளியங்கூடல்.கொம் குழுமம் வாழ்த்தி மகிழ்கின்றது.

26 நவம்பர் 2019

இருபத்தையாயிரம் மாவீரர்களின் பெயர்களுடன் நல்லூரில் கல்வெட்டு!

யாழ்ப்பாணம் நல்லூரில், தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் மக்கள் நினைவு வணக்கம் செலுத்துவதற்காக  வைக்கப்படவுள்ளன. இன்று மாலை 6 மணி முதல் நாளை 27ஆம் திகதி வரையில் இந்த கல்வெட்டுகள் மாவீரர் நினைவு வணக்கத்திற்காக வைக்கப்படவுள்ளன. இதன்போது, மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு மாவீரர்களுக்கு மலர் வணக்கம் செலுத்த முடியுமென தெரிவிக்கப்படுகிறது. மாவீரர் வாரத்தின் இறுதிநாளான நாளை மாலை 06.05 மணிக்கு வணக்க நிகழ்வுகள் இடம்பெற்று சுடர்கள் ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு நினைவு வணக்கம் செலுத்தப்படவுள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் மாவீரர் தொடக்கம் இறுதி யுத்தத்தில் வீரமரணமடைந்த சுமார் 25ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களின் பெயர்கள் குறித்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

15 நவம்பர் 2019

ஜெர்மனியில் போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழர் விடுதலை!

ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவரை ஜெர்மன் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.தமது தடுப்பு காவலில் இருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினரை சுட்டு படுகொலை செய்தார் என இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டு இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளியான சிவதீபன் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. 2009 யுத்தம் முடிந்த சமயத்தில் ஜெர்மனிக்கு சென்றிருந்த இவரை ஜெர்மன் காவல்துறையினர் கைது செய்தனர். முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 சிங்களப் படையினரை சுட்டுக்கொன்று தீ மூட்டியதாக குற்றம்சாட்டி டயல்டோர்ஃப் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் நடந்து வந்தன. இந்த நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமில்லாததால் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

07 நவம்பர் 2019

தமிழ்க் கட்சிகள் ஐந்தும் தவறிழைத்து விட்டதாக மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு!


ஜனாதிபதித் தேர்தலில்  தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்  குற்றம் சாட்டியுள்ளது. 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று  நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.
ஜனாதிபதித் தேர்தலில் தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்த்தேசியக் கட்சிகள் இணைந்து ஒருமித்த முடிவு ஒன்றை எடுக்கவேண்டும் என முயற்சி செய்தோம். அதன் அடிப்படையில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்து பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடாத்தி வந்தோம். அதன்படி 13 பிரதான கோரிக்கைகள் அறிக்கையிடப்பட்டது. அதில் மேலதிகமாக இடைக்கால அறிக்கையை நிராகரிக்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கோரியது அது ஏற்றுக்கொள்ளப்படாததால் பேச்சுவர்த்தையில் இருந்து அவர்கள் வெளியேறினார்கள். பின்னர் ஐந்து தமிழ்த் தேசியக் கட்சிகளும் 13 அம்சக் கோரிக்கைகளில் கையொப்பம் இட்டு தென்னிலங்கயைிலுள்ள பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் நேரடியாக பேசுவது என தீர்மானிக்கப்பட்டது. எனினும் நேரடியாகப் பேசுவதற்காக சரியான அணுகுமுறைகளை கையாளவில்லை தென்னிலங்கைத் தரப்புடன் பேசும் விடயத்தில் ஐந்த தமிழ்த் தேசியக் கட்சிகளும் தவறிழைத்துள்ளது. மேலும் 13 அம்சக் கோரிக்கைகளையும் தென்னிலங்கையின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் நிராகரித்தால் ஜனாதிபத் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என மீண்டும் கூடிப்பேசுவதாக இணக்கம் காணப்பட்டது. எனினும் எமது தமிழ்த் தலைமைகள் மாணவர்களாகிய எங்களையும் தமிழ் மக்களையும் முட்டாள் ஆக்கி விட்டனர். குறிப்பாக ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் கூடிப்பேசிக்கொண்டிருந்தபோது முதலாவதாக முந்திக்கொண்டு தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சி.வி.விக்கினேஸ்வரன் ஒற்றுமையை சிதறடித்தார். பின்னர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர். இந்த விடயம் தவறான அணுகுமுறையாகும் கட்சிகள் ஒன்றுகூடி கதைக்கும்போது தபால் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதால் எவ்வாறான நிலைப்பாட்டிற்கு வருவது என நாம் ஆராய்ந்தபோது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் விரும்பியவர்களுக்கு வாக்களியுங்கள் என கோருவோம் என்றார். அதை எழுதியும் தந்தார். அதையே நாம் அன்று ஊடகங்கள் முன்னிலையில் வாசித்தோம் அன்று நடந்த கலந்துரையாடலில் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியாகவில்லை. அது வந்தவுடன் நாம் முடிவு எடுப்போம் ஏனெனில் நாம் முன்வைத்துள்ள 13 அம்சக்கோரிக்கைகளில் பல உள்ளடக்கப்படும் என நம்புவதாக கூறினார். அதற்கு எமக்கு கடிதமும் தந்தார் . ஆனால் தேர்தல் விஞ்ஞாபனம் வந்த பின்னர் யாருடனும் கலந்தாலோசிக்காது தமிழ்த் தலைமைகள் தாமாகவே முடிவு எடுத்து விட்டனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைப் பொறுத்தவரையில் 13 அம்சக் கோரிக்கைகளை விட சஜித் பிரேமதாஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் வலுவற்றதாகவே காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேதமதாஸவிற்கு நிபந்தனை அற்ற ஆதரவை வழங்கியுள்ள தமிழ்த் தலைமைகள் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் கூடிப் பேசியபோது மூன்று மாததத்தில் தீர்க்கக்கூடிய விடயங்களாக குறிப்பிடப்பட்டவற்றை நிறைவேற்றித் தரவேண்டும் இல்லையெனில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தலைமைக்கு பாடம் புகட்டுவார்கள் என்றனர்.

04 நவம்பர் 2019

அன்னம் பாலை குடித்து விட்டு தமிழர்களை தண்ணீராய் கைவிட்டு விடும்!

தமிழரசு கட்சி, ஐந்து கட்சிகள் மற்றும் யாழ். பல்கலைக்கழகத்திற்கு மாத்திரமல்ல தமிழ் மக்களிற்கும் பச்சைத் துரோகத்தினை செய்துள்ளது என ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கம் குற்றம்சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென நேற்றைய தினம் தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. இவ்வாறு துரோகத்தனமாக செயற்படும் என்பது ஏற்கனவே அறியப்பட்டதே. 6 கட்சிகள் இணைந்து கூட்டு முயற்சி எடுத்தபோது ஒரு கட்சி தவிர்ந்து ஏனைய ஐந்து கட்சிகள் ஓப்பந்தம் ஒன்றை செய்திருந்தனர். அதில் 13 அம்சங்களை முன்னிலைப்படுத்தி ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், சுமந்திரன் துரோகமான செயற்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார். குறித்த கட்சிகள் ஏற்கனவே கூடியபோது தமிழரசு கட்சி இவ்வாறு செயற்படுவார்கள் என்பதை அன்றே அறிந்திருந்தோம். இந்த நிலையில் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் என்ன விடயத்தை கண்டு அவர்களிற்கு தமிழரசு கட்சி ஆதரவு வழங்கியிருந்தது? இரண்டு தடவை அன்னம் கவிழ்ந்துவிட்டது. முதல் தடவை சரத் பொன்சேகாவிற்கு ஆதரவாக வாக்களித்தோம். அதில் பயன் கிடைக்கவில்லை. இரண்டாவது தடவையாக நல்லாட்சி அரசிற்காக அன்னத்திற்கு வாக்களித்தோம். இரு தடவையும் தமிழ் மக்களிற்கு எவையும் கிடைக்கவில்லை. தேர்தல் விஞ்ஞாபனத்தில் போர் குற்றம் இளைத்தவர்களை பாதுகாப்பதாகவே கூறப்பட்டுள்ளது. சரத் பொன்சேகா தான் தான் இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தேன் என்கின்றார். அப்போது யார் கொலைகாரன். இந்த சரத் பொன்சேகாவும் கொலைகாரனே. இவர்களை போன்றவர்களை பாதுகாப்பதற்காக தமிழரசு கட்சி சஜித்திற்கு ஆதரவு வழங்கியிருந்தது? காலத்திற்கு காலம் நாம் ஆட்சி மாற்றத்தை செய்யவில்லை. ஆட்களைதான் மாற்றியுள்ளோம். நாம் ஆட்சியை மாற்றியதாக எண்ணிக்கொண்டு இதுவரை இருந்துள்ளோம். உண்மை அதுவல்ல. சந்திரிக்கா அதன் பின்னர் மகிந்த ராஜபக்ஷ, அதன் பின்னர் மைத்திரிபால சிறிசேன அடுத்தது யாராகவோ இருக்கலாம். அதனால் தமிழ் மக்களிற்கு எதுவும் கிடைக்காது. அன்னம் பாலுடன் கலக்கப்பட்ட தண்ணீரிலிருந்து பாலை மட்டும் குடித்து விட்டு தண்ணீராக தமிழர்களை கைவிட்டுவிடும் என்பதே உண்மை என தெரிவித்தார்.

20 அக்டோபர் 2019

ராஜீவ் காந்தியின் யாழ்,மருத்துவமனைப் படுகொலைகள்!

ராஜீவ் காந்தி உத்தரவில் நடந்தேறிய யாழ் வைத்தியசாலை படுகொலையின் 32 ஆம் ஆண்டு நனைவு நாள் , இந்திய இராணுவம் ஈழத்தமிழர்கள் மீது நடத்திய கொடிய படுகொலைகளில் யாழ்.போதனா வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர்கள், தாதிகள், ஊழியர்கள், நோயாளர்கள், என 68க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை சம்பவம் முக்கியமானதாகும். 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் அங்கு கடமையில் இருந்த வைத்திய நிபுணர் அ.சிவபாதசுந்தரம், வைத்திய கலாநிதி கே. பரிமேலழகர், வைத்திய கலாநிதி கணேசரத்தினம் , பிரதம தாதி உத்தியோகத்தர் திருமதி பா.வடிவேல், உட்பட தாதிகள், மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளர்கள் என 68பேரை ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றனர். தாம் வைத்தியர்கள் என்றும் தங்களை சுடவேண்டாம் என வைத்தியநிபுணர் சிவபாதசுந்தரம் இந்திய பேரினவாத இராணுவத்திற்கு தலைமை தாங்கி வந்த இராணுவ அதிகாரியை மன்றாடிய போதும் ஈவிரக்கமற்ற இந்திய இராணுவத்தினர் வைத்தியநிபுணர், வைத்தியர்கள் என அப்பாவி பொதுமக்களை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில் “1987 ஒக்ரோபர் இருபத்தோராம் திகதி மாலை 4.30 மணியளவில் வைத்தியசாலையினுள் வந்த இந்திய இராணுவத்தினர் மறுநாள் காலை 10.00 மணி வரை வைத்தியசாலையில் மக்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். தாக்குதலிற் காயப்பட்டவர்கள் சத்தமிடும் போது அவர்கள் மீது கைக்குண்டினை எறிந்ததுடன், துப்பாகியாலும் சுட்டார்கள். மறுநாள் காலை 6.00 – 7.00 மணிக்கிடையில் வைத்தியசாலையின் இருபத்தாறாவது நோயாளர் விடுதிப்பக்கமிருந்து சம்பவ இடத்திற்கு வந்த வைத்தியர் சிவபாதசுந்தரம் அவர்களும், இரண்டு தாதியினரும் இந்தியச் இராணுவத்தினருடன் கதைத்து எஞ்சியிருக்கும் பொதுமக்களைக் காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் இராணுவத்தினர் ஓடிச் சென்று துப்பாக்கியினை எடுத்து வைத்தியரையும் கூடச்சென்றவர்களையும் சுட்டதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தார்கள். காலை 10.00 மணியளவில் ஏனைய வைத்தியர்கள் எடுத்த முயற்சியினால் சம்பவத்தில் காயமடைந்து உயிருடனிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். சம்பவத்தில் உயிரிழந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தொரு மருத்துவமனை பணியாளர்களும், நோயளார் விடுதிகளிற் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தேழு நோயாளர்களுமாக மொத்தம் அறுபத்தெட்டுப் பேர் உயிரிழந்தார்கள். உயிரிழந்த அனைவரது உடல்களையும் வைத்தியசாலை பின்வாசற்பக்கமுள்ள பிண அறைக்கு அருகிற் போட்டு இந்தியப்படையினர் எரியூட்டினர்.” எனத் தெரிவித்தார். 1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் இருபத்தோராம், இருபத்திரண்டாம் திகதியில் கடமையின்பால் உயிர்நீத்த வைத்தியர்கள் உட்பட இருபத்தொரு ஊழியர்களையும் அவர்களுடன் உயிரிழந்த நோயாளர்கள் நாற்பத்தேழு பேரையும் யாழ்.மருத்துவமனை ஒவ்வொரு வருடமும் நினைவுகூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு ராஜீவ் காந்தியின் உயிரைப்பற்றி பெரிதாக பேசும் இந்தியர்கள் பெறுமதி மிக்க வைத்தியநிபுணர்கள் வைத்தியர்கள் , கல்விமான்கள் என நூற்றுக்கணக்கானவர்களை கொன்று குவிப்பதற்கு இந்திய இராணுவத்திற்கு உத்தரவிட்ட இந்தியாவின் போர்க்குற்றம் பற்றி பேசுவதில்லை.இந்த படுகொலைகளுக்கு உத்தரவிட்டவர் ராஜீவ் காந்தியே..!

நன்றி:தாரகம் இணையம்.

15 அக்டோபர் 2019

தமிழ் மக்கள் வாக்களிக்காமல் விடுவதே சிறந்த முடிவு!


யார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ். மாவட்ட சங்கத் தலைவி சுகந்தினி தெரிவித்தார்.
யார் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு உரிய நீதியை வழங்கப் போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்காமல் விடுவதே சிறந்தது என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் யாழ். மாவட்ட சங்கத் தலைவி சுகந்தினி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரும் ஒன்றிணைந்தே போராடி வந்தோம். நாம் யாரையும் பிரித்து பார்க்கவில்லை. இந்நிலையில் ஏனைய பகுதிகளிலுள்ள 8 தலைவிகளும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலக அதிகாரிகளைச் சந்திக்க கொழும்பிற்கு சென்றார்கள் அதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில்தான் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திருட்டுத்தனமாக திறக்கப்பட்டது. இதனால் இவர்கள் மீது எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அத்துடன் இந்த அலுவலகத்தை நாம் அனைவரும் எதிர்க்கின்றோம். மேலும் இந்த அரசாங்கத்தின் மீது எமக்கு நம்பிக்கை இல்லாததன் காரணமாகவே சர்வதேச விசாரணையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம். எமக்கு இந்த அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட இருக்கின்ற 6 ஆயிரம் ரூபாயை ஏற்கமாட்டோம். உலகில் 43 நாடுகளில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு அவர்களின் உறவுகளைத் தேடி கொடுக்கும் வரை வாழ்வாதார உதவியாக வழங்கப்படுகின்ற நிதியை ஏற்கமாட்டோம். இலங்கை அரசு எமக்கு வழங்குவதாக கூறுகின்ற 6 ஆயிரம் ரூபாய், மீன் வாங்குவதற்கு கூட போதாது. எனவே ஐக்கிய நாடுகள் சபை எமது விடயத்தில் தலையிட்டால் அதற்காக முழு ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருக்கின்றோம். இந்த பேரினவாத அரசினால் 30ஆயிரத்துக்கு மேற்பட்ட உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பங்களிப்பும் தற்போது கிடைக்கப்பெற்று வருகின்றது. அதற்கான கூட்டம் கிளிநொச்சியில் அடுத்து நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஏனைய பகுதிகளிலும் நடைபெறவுள்ளன. மேலும் சரியான நிர்வாக கட்டமைப்பிற்குள் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் அனைவரையும் கொண்டு வந்து, அதனூடாக புதிய வழிமுறைகளை நோக்கி பயணிக்க தீர்மானித்துள்ளோம். இதேவேளை நாட்டின் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸ, கோட்டாபய என யார் வந்தாலும் எமக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. எனவே தமிழ் மக்கள் இந்த தேர்தலில் வாக்களிக்காமல் விடுவது சிறந்தது எனவும் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளுக்கிடையிலான கைச்சாத்து கஜேந்திரகுமார் விசனம்!

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கான இடைக்கால யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம் ஆவணத்தில் கைச்சாத்திடுவோம் என வலியுறுத்தினோம். ஆனால் அது நடக்கவில்லை. எங்களை திட்டமிட்டு ஓரங்கட்டியுள்ளனர் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திகுமார் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகள் இடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக் கழகங்களின் மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்த கலந்துரையாடல் நேற்று ஐந்தாவது நாளாக நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஐந்து கட்சிகள் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டதை அடுத்து ஏனைய ஐந்து கட்சித் தலைவர்கள் ஜனாதிபதி வேட்பாளர்களிடம் முன்வைக்கப்படவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த கோரிக்கை ஆவணத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்நிலையில் கூட்டத்தை விட்டு வெளியேறிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது- நான் மக்களுக்கு எச்சரிக்கிறேன். இந்த ஐந்து கட்சிகளையும் நம்பி வரப்போகும் தேர்தலில் முடிவெடுத்தால் இனத்திற்கு கிடைக்ககூடிய பேரம் பேசி உரிமைகளை மட்டுமல்ல அன்றாட பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பங்களையும் நாம் கைவிடுவதாகவே அமையும். நாம் போலி ஒற்றுமையைக் காட்டி பதவிகளை பெற்று மக்களை ஏமாற்றத் தயாரில்லை. சிங்கள கட்சிகளும், சிங்க பேரினவாத தரப்புக்களும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கத் தயாராக இருந்த மரியாதையைக் கூட இந்தக் கட்சிகள் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்குத் தரவில்லை என்றார்.

07 அக்டோபர் 2019

களத்தில் சிவாஜிலிங்கம்,முதல் ஆளாக கட்டுப்பணம் செலுத்தினார்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக 2001ஆம் ஆண்டு, முதற் தடவையாக நாடாளுமன்ற உறுப்பினரான சிவாஜிலிங்கம், அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது. ரெலோ இயக்கத்தின் மூத்த உறுப்பினரான இவருக்கு 62 வயதாகிறது. நகர சபை உறுப்பினராகவும், வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும் இவர் பதவி வகித்துள்ளார். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், வடக்கு மாகாணத்துக்கு வெளியிலுள்ள குருணாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈழத் தமிழ் சுயாட்சிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் தலைவியுமான அனந்தி சசிதரன், சுயேட்சையாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்துக்காக கட்டுப்பணம் செலுத்தினார்.

06 அக்டோபர் 2019

கோத்தாவின் பாதுகாப்புடன் துமிந்த என் தந்தையை கொன்றார்!

துமிந்த-கோத்தா 
கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக்சவினுடைய கொலைப் படலத்தில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். ஜனநாயகமானதும் சுதந்திரமானதுமான நாட்டை ஐக்கிய தேசிய கட்சியால் மாத்திரமே கட்டியெழுப்ப முடியும். மஹிந்த - கோத்தா ஆட்சிக் காலத்தில் இவை இரண்டுமே காணப்படவில்லை. அவர்களது கொடுமையான ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் உள்ளடங்குகின்றேன். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் நாட்டின் நிலைமை எவ்வாறு இருந்தது என்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. மஹிந்த ராஜபக்ச பற்றி வீட்டுக்குள் கதைப்பதற்கும் மக்கள் பயந்தனர். சாதாரண மக்கள் மாத்திரமின்றி ஊடகங்களுக்கோ ஊடகவியலாளர்களுக்கோ எவ்வித சுதந்திரமும் காணப்படவில்லை. லசந்த விக்கிரமதுங்க மற்றும் பிரகீத் எக்னலிகொட உள்ளிட்டவர்களின் விவகாரம் இன்று நகைச்சுவை போன்றாகிவிட்டது. கோத்தபாய மற்றும் மஹிந்த ராஜபக்சவினுடைய கொலைப் படலத்தில் நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னுடைய தந்தையை துமிந்த சில்வா தான் கொலை செய்தார் என்பது உண்மை. அவர் தைரியமாகச் சென்று என்னுடைய தந்தையை கொலை செய்வதற்கு பாதுகாப்பு வழங்கியவர் கோத்தபாய ராஜபக்சவேயாவார் என்றும் அவர் கூறினார்.

02 அக்டோபர் 2019

தமிழர் தரப்பில் பொது வேட்பாளர் தொடர்பில் ஆலோசனை!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எவ்வகையான முடிவை எடுக்க வேண்டுமென்பது தொடர்பில், இரா. சம்பந்தனை வடக்கு - கிழக்கின் மதத் தலைவர்கள், பத்தி எழுத்தாளர்கள்,மற்றும் புத்திஜீவிகள் சிலர், இன்று நேரில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர். நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் கூடிய குறித்த குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து ஆராய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் பிரச்சினை தொடர்பில் இரண்டு முதன்மை வேட்பாளர்களும் எழுத்துமூல உத்தரவாதம் ஒன்றை தர மறுத்துள்ள நிலையில், தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும், ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் முடிவெடுத்திருந்தனர். அந்த சந்திப்பின் தொடர்ச்சியாகவே இன்றைய சந்திப்பு நடந்தது. தமிழ் மக்கள் பேரவை இந்த கலந்துரையாடல்களை முன்னெடுத்தது. இன்று, இரா.சம்பந்தனை சந்திக்க தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், தமிழ் மக்கள் பேரவையை சந்திக்க தான் விரும்பவில்லையென இரா.சம்பந்தன் குறிப்பிட்டு அந்த சந்திப்பை தவிர்த்து விட்டார். இதன்பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள சிவில் செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், பத்திரிகைகளில் அரசியல் கட்டுரைகள் எழுதுபவர்கள், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சிலர் இணைந்து, சிவில் சமூகமாக இந்த முன்னெடுப்புக்களை மேற்கொள்ள இரா.சம்பந்தனை சந்திக்க கோரியிருந்தனர். திருமலை ஆயரின் மூலமாக விடுக்கப்பட்ட இந்த கோரிக்கையை இரா.சம்பந்தன் ஏற்றுக்கொண்டார். திருமலை ஆயர் உள்ளிட்ட மதத்தலைவர்கள் ஏற்பாட்டாளர்களாக இந்த பேச்சுக்களில் பங்கேற்றனர். இன்று காலை கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்ததுள்ளது. இதன்போது, தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

23 செப்டம்பர் 2019

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடக அறிக்கை!

நீதிமன்ற தீர்ப்பை மீறி இந்து ஆலய வளாகத்தில் தகனம் செய்யப்பட்ட பௌத்த பிக்குவின் பூதவுடல்தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி
23-09-2019
ஊடக அறிக்கை.

புத்த பிக்குவின் உடல் சைவக் கோவிலின் வளாகத்தில் எரியூட்டப்பட்டமை, சட்டத்தரணி சுகாஸ் மற்றும் பொது மக்கள் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இடம்பெறவுள்ள கண்டனப் போராட்டத்திற்குப் பூரண ஆதரவு.
முல்லைத்தீவு மாவட்டம் நாயாற்றுப் பகுதியில் அமைந்துள்ள நீராவியடி பிள்ளையார் ஆலய வளவை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த புத்த கோவிலின் பிக்கு உயிரிழந்த நிலையில் இவரது உடலை பிள்ளையார் ஆலய வளவினுள் தகனம் செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிக்கு எதிராக ஆலய நிர்வாகத்தினால் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. எனினும் நீதிமன்ற உத்தரவை மீறி ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில் பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது. ஞனசாரதேரர் தலைமையிலான சிங்கள பௌத்த சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு முன்னிலையில் நீதி மன்றின் உத்தரவை மீறி பிள்ளையார் ஆலய தீர்த்தக் கேணிப் பகுதியில் தகனம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அவர்களது செயலைத் தடுப்பதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறக நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி தகனம் செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்களை குறித்த பொலிஸ் அதிகாரியும், பொலீசாரும் இணைந்து அச்சுறுத்தியதுடன், பிக்குகளின் அடாவடித்தனமான செயற்பாட்டிற்கும் உறுதுணையாகச் செயற்பட்டிருந்தனர். நீதி மன்ற உத்தரவை மீறி பிக்குவின் உடலைத் தகனம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோதமான நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு அங்கு திரண்டிருந்த தமிழ் மக்களுடன் இணைந்து சட்டத்தரணிகள் முயன்றபோது சட்டத்தரணி சுகாஸ் உட்பட நான்கு பேர் பிக்குகளினால் கடுமையாகத் தக்கப்பட்டுள்ளனர். சைவசமயத்தவர்களின் புனிதத் தலங்களில் ஒன்றான நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணியருகில் பிக்குவின் உடலம் எரிக்கப்பட்டமைக்கும், சட்டதரணி சுகாஸ் மற்றும் பொது மக்கள் மூவர் தாக்கப்பட்டமைக்கும் எமது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாளை செவ்வாய்க்கிழமை (24-09-2019) காலை 11.00 மணிக்கு முல்லைத்தீவு பழைய ஆஸ்ப்பத்திரியடி (உண்ணாப்பிலவு) முன்பாக ஒன்று கூடி பேரணியாக கச்சேரி செல்ல தமிழர் மரபுரிமைப் பேரவை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ள கண்டனப் போராட்டத்திற்குப் பூரண ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அனைத்துத் தமிழ் மக்களையும் மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி

மறு பிறப்பில் கூட ராஜபக்சக்கள் இருக்கும் இடத்தில் பிறந்து விடக்கூடாது!

கொள்ளையர்கள் மற்றும் கொலைக்காரர்களான ராஜபக்சவினரிடம் தான் ஒரு போதும் சரணடையப் போவதில்லை எனவும் மறு ஜென்மத்தில் கூட ராஜபக்சவினர் பிறக்கும் இடங்களில் பிறக்கக் கூடாது எனவும் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார். அதேபோல தான் நன்றி கெட்ட ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவின் பெயரை உச்சரிக்க கூட விரும்பவில்லை எனவும் அவர் கூறினார். முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தமக்கு அரசியலை தொடருமாறு பிரதமர் அழைப்பு விடுத்தால், அந்த கட்சிக்கு தாம் செய்த தவறுகளை உணர்ந்து அனைத்து தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கான சந்தர்ப்பமாக இதை பயன் படுத்திக்கொள்வேன் எனவும்  தெரிவித்துள்ளார்.

22 செப்டம்பர் 2019

சர்ச்சைக்குரிய பிக்குவின் உடல் அடக்கத்திலும் சர்ச்சை!

புற்றுநோயினால் மரணமான பௌத்த பிக்குவின் உடலை நாளை காலை நீதிமன்றம் கூடி உத்தரவு பிறப்பிக்கும் வரை, பூமியில் புதைக்கவோ எரிக்கவோ முடியாது என முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதpவான் உத்தரவிட்டுள்ளார். முல்லைத்தீவு பழைய செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்து தங்கியிருந்த பௌத்த பிக்கு புற்றுநோய் காரணமாக நேற்று மகரகம வைத்தியசாலையில் மரணமடைந்தார். மரணமடைந்த பௌத்த பிக்குவின் சடலத்தை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்துக்கு கொண்டுவந்து இறுதிகிரியைகளை மேற்கொள்வதற்கு இராணுவம் மற்றும் கடற்படை நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்து பிள்ளையார் ஆலய நிர்வாகத்தினரால் நேற்று இரவு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் தடை கோரி முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சுதர்சன் முன்னிலையில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது . இதன்படி நாளை காலை 9 மணிக்கு விகாரை தரப்பினரையும் பிள்ளையார் ஆலய தரப்பினரையும் முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலையாகுமாறும் நாளையதினம் இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றால் கட்டளை ஒன்று ஆக்கும்வரை குறித்த பௌத்த பிக்குவின் உடலை பூமியில் புதைக்கவோ எரிக்கவோ முடியாது எனவும் - அதுவரையான காலப்பகுதியில் பிரதேசத்தில் அமைதியை ஏற்படுத்தும் விதமாக பொலிஸார் கடமையில் ஈடுபடவேண்டும் எனவும் முல்லைத்தீவு நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்தநிலையில் இறந்த பௌத்த பிக்குவின் சடலம் பழைய செம்மலை நீராவியடியில் ஆலய வளாகத்துக்குள் அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளது . சிங்கள மக்கள் சிங்கள மாணவர்கள் பொதுஜன பெரமுன கட்சியினர் உள்ளிட்டவர்கள் பௌத்த பிக்குவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பொலிஸார் ,விசேட அதிரடிப்படையினர் இணைந்து கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

18 செப்டம்பர் 2019

திலீபன் வழியில் வருகின்றோம்...!

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு, சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, அரசியல் கைதிகளை விடுதலை செய் ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து - வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிய நடைபயணம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணியால் ஏற்பாடு
செய்யபட்டுள்ளது. எதிர்வரும் 21.09.2019 சனிக்கிழமை காலை 8 மணிக்கு வவுனியா நகரசபை வாயிலில் அமைந்துள்ள பொங்கு தமிழ் தூபியிலிருந்து ஆரம்பமாகும் நடை பயணமானது, தியாக தீபத்தின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பயணத்துடன் யாழ்ப்
பாணத்தை சென்றடையும். அனைவரும் கலந்து கொண்டு இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்ற தியாகி திலீபனின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலுச்சேர்க்குமாறு நிகழ்வு ஏற்பாட்டு குழுவினர் கோரியுள்ளனர்.

14 செப்டம்பர் 2019

பின்லாந்து கல்விமுறை பற்றிய ஒரு பார்வை!

எப்படி தம் மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும், கல்வி அளிக்க வேண்டும் என்பதுதான் ஒரு நாட்டின் நோக்கமாக இருக்க வேண்டும். எப்படி மாணவர்களை வடிகட்ட வேண்டும் என்பதாக இருக்கக் கூடாது என்கிறார் சுவீடனில் நானோ தொழில்நுட்பம் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் விஜய் அசோகன். மாணவர்களின் திறனை மேம்படுத்துவது போலத்தான் பின்லாந்து கல்வி முறை உள்ளதே அன்றி மாணவர்களையே மதிப்பிடுவது போல இல்லை என்கிறார் பின்லாந்தில் பணியாற்றி வரும் செந்தில்கண்ணன். பின்லாந்து கல்வி முறை குறித்து பல நேர்மறையான கருத்துக்களை நாம் பெரிதும் கேட்டிருப்போம். சமீபத்தில் தமிழக கல்வியமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து கல்வி முறை குறித்து ஆராய அந்நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். செந்தில் கண்ணன் பின்லாந்தில் மாற்றுக் கல்விக்கான தளத்தில் செயலாற்றி வருகிறார். விஜய் அசோகன் தாய்மொழி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செயல்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கல்விக்காக கொண்டாடப்படும் பின்லாந்து கல்விமுறை குறித்தும், பள்ளி நுழைவுத் தேர்வுகள் குறித்தும் தங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.பின்லாந்து கல்வி முறை குறித்து பல கட்டுக்கதைகள் இந்தியாவில் உலவுகின்றன. குறிப்பாக இங்குத் தேர்வு இல்லை, ரேங்க் கார்ட் இல்லை என பலர் பல்வேறு விதமாக தங்களுக்கு பிடித்தபடி பேசி வருகிறார்கள். ஆனால், இவை அனைத்துமே பாதி உண்மைதான் என்கிறார் செந்தில்கண்ணன்."பின்லாந்து பள்ளிகளில் தேர்வு நடக்கும். ஆனால், அது மாணவர்களை மதிப்பிடுவது போல இருக்காது. ஒரு மாணவரை இன்னொரு மாணவரோடு ஒப்பிடுவதற்காக இருக்காது. ஒரு மாணவருக்கு என்ன சிறப்பாக வருகிறது, எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர் அறிந்து கொள்வதற்காகவே தேர்வுகள் நடத்தப்படும். அதே நேரம், ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண் அந்த மாணவருக்கு மட்டுமே சொல்லப்படும். எக்காரணத்தைக் கொண்டும் மற்ற மாணவர்களுக்குச் சொல்ல மாட்டார்கள். யாரையும் யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்பதில் மிக தெளிவாக இருப்பார்கள்" என்று பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் செந்தில்கண்ணன்.செந்தில்கண்ணன் பின்லாந்து கல்வி முறை குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். "பின்லாந்து கல்வி குறித்துப் பேசுபவர்கள் அது ஏதோ அதன் பாடத்திட்டத்தால் அந்நாடு சிறந்து விளங்குகிறது என்று எண்ணுகிறார்கள். இது தவறு. உண்மையில் பின்லாந்து கல்வியில் சிறந்து விளங்குவதற்கு காரணம் அந்நாட்டிற்கு உள்ள சமூக பிரக்ஞைதான். அவர்களுக்கு கல்வியின் நோக்கம் என்ன என்பது குறித்து தெளிவான புரிதல் இருக்கிறது" என்கிறார்.பின்லாந்து கல்வி முறை குறித்து விவரிக்கும் செந்தில் கண்ணன், "பின்லாந்தில் குழந்தைகளுக்கான டேகேர் பள்ளி ஒரு வயதிலேயே தொடங்கிவிடும். இதில் கட்டாயம் சேர்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. விருப்பம் இருந்தால் சேர்க்கலாம். அதுபோல இது இலவசமும் இல்லை. குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும். அரசு மானியமும் தருகிறது" என்கிறார். மேலும் அவர், "டே கேர் என்றவுடன் ஏதோவென்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது நம் ஊர் பால்வாடி போலத்தான். ஆனால், அதே நேரம் அங்குக் கற்பிக்கும் முறை மற்றும் கற்பிக்கப்படும் விஷயம் நம்மூர் பால்வாடி போல அல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையானதாகவும், சமூகத்திற்குத் தேவையானதாகவும் இருக்கும். அதாவது நடைப்பயிற்சி, நீச்சல், சாலை விதிகளை மதிப்பது, தனித்துவத்தை இழக்காமல் சமூகத்துடன் கலந்திருப்பது ஆகியவை போதனையாக அல்லாமல் நடைமுறை பயிற்சியாக கற்பிக்கப்படும்" என்று கூறுகிறார்."முறையான பள்ளியானது ஆறு வயதில்தான் அங்கு ஒரு குழந்தைக்கு தொடங்குகிறது. அந்தக் கல்வியும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள், தயக்கமற்று இருப்பது குறிப்பாக தற்சார்பு வாழ்க்கையை கற்பிப்பதாக உள்ளது. குறிப்பாக மாணவர்கள், தனக்கு என்ன தேவை? தனக்கு எதில் ஆர்வம் இருக்கிறது? என்பதை புரிந்துகொள்ள பின்லாந்து கல்வி முறை வழிவகை செய்கிறது. நுழைவுத் தேர்வு பின்லாந்து பள்ளிகளில் இருக்கிறது. ஆனால், மத்தியிலிருந்து ஒருவர் சொல்லி நடக்கும் பொதுவான நுழைவுத் தேர்வு இல்லை. ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கும் அங்கு நுழைவுத் தேர்வுகள் இல்லை. சில பள்ளிகளே தங்களுக்குத் தேவையான போது, ஏற்றவாறு பாகுபாடு இல்லாமல் நுழைவுத் தேர்வுகளை நடத்துவார்கள்" என்று தெரிவிக்கிறார்.சுவீடன் கல்வி முறையும் இப்படியானதாகவே உள்ளதாகக் கூறுகிறார் அங்கு பணிபுரியும் தமிழகத்தைச் சேர்ந்த யாசர்."நம் அன்றாட வாழ்வுக்கு என்ன தேவையோ அதைக் கற்பிக்கிறார்கள். அரசுக்கு மனு எழுதுவது எப்படி?, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவது, பருவநிலை மாற்றம் என்றால் என்ன? அது எப்படி நம் சாப்பாட்டுத் தட்டிலேயே தொடங்குகிறது. இவை அனைத்தையும் நடைமுறை பயிற்சியில் தொடக்கப்பள்ளியிலேயே கற்பிக்கிறார்கள். குறிப்பாக வாழ்க்கை குறித்து அவநம்பிக்கையை விதைக்காமல், வாழ்தல் குறித்த நம்பிக்கையையும், சக மனிதர்கள் மீது பாசத்தையும் ஏற்படுத்துவதாக இங்கு கல்வி உள்ளது" என்கிறார்.சீனா முதல் அமெரிக்கா வரை பல நாடுகளில் பணிநிமித்தமாக தங்கி இருக்கிறேன். எந்த நாடும் மாணவர்களை பள்ளி நோக்கி ஈர்க்க என்னவெல்லாம் செய்யலாமென யோசிக்கிறதே அன்றி அவர்களை பள்ளிக்கு வராமல் தடுப்பதற்காக செயலாற்றவில்லை என்கிறார். ஐரோப்பா கல்வியில் சிறந்து விளங்க காரணம். அவர்கள் தாய்மொழி கல்விக்கு முக்கியத்துவம் தருவதுதான் என்கிறார் விஜய் அசோகன்,மேலும் அவர், "தாய்மொழியில் கல்வி கிடைக்காததால்தான் பலர் பள்ளியைவிட்டு இடைநிற்கிறார்கள் என்கிறது யுனெஸ்கோ. உலகெங்கும் 40 சதவீத மாணவர்களுக்கு குறிப்பாக ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் தாய் மொழியில் கல்வி கிடைப்பது இல்லை. இதன் காரணமாக அவர்கள் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள்" என்று அவர் மேலும் கூறுகிறார்.

நன்றி:பிபிசி தமிழ்

12 செப்டம்பர் 2019

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு அணிதிரள்வீர்!


எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.  இது தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
எதிர்வரும் திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு யாழ் முற்றவெளியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள எழுக தமிழ் நிகழ்வில் தமிழர் அனைவரும் அணி திரள தமிழர் மரபுரிமைப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் தமிழர் மரபுரிமைப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது- தமிழர் தம் மரபுசார் வாழ்நிலங்கள் விளைபுலங்கள் வன்கவர்வு செய்யப்பட்டு தமிழர் மரபில் அந்நிலங்களிற்கு வழங்கப்பட்டு வந்த காரண இடுகுறி பெயர்கள் மாற்றப்பட்டு சிங்கள புனை பெயர்கள் இடப்பட்டு திட்டமிடப்பட்ட சிங்களக்குடியேற்றங்கள் கேட்பாரற்று மேற்கொள்ளப்பட்டு இதன் மூலம் இலங்கைத்தீவின் தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழரின் இனப்பரம்பல் கோலம் இன விகிதாசாரம் என்பவை திட்டமிடப்படடு சிதைக்கப்படுகின்றன. தமிழர்களின் தொன்மை வரலாற்றின் சாட்சிகளான வணக்கத்தலங்கள் தகர்க்கப்பட்டு பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதை தடுக்க முடியாத அரசியல் கையறு நிலையில் தமிழினம் தவிக்கின்றது. தமிழர் தாயகப் பிரதேசத்துடன் இணைந்த கடற்பரப்பில் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் சிங்கள மீனவர்களின் தான்தோன்றித்தனத்தை கட்டுப்படுத்தாது அதற்கு தூபமிடுவதாகவே அரசியந்திரம் செயற்பட்டு வருகின்றது. இதனால் தமிழ் மீனவர்களின் அன்றாட வாழ்வு வினாக்குறியாகியுள்ளது. அரசியல் கைதிகள் கேட்பாரற்று தசாப்தங்கள் கடந்தும் சிறைக்கூடங்களில் சித்திரவதைகளை அனுபவித்து வர இறுதி யுத்தத்தின் இனப்படுகொலைஞர்கள் தண்டனைகள் எதுவுமின்றி ஆட்சி பீடத்தின் அதிகாரக் கதிரைகளை அழகுபடுத்துகின்றனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்கள் 931 நாட்களைக் கடந்துவிட்ட போதும் காத்திரமான முடிவுகள் எதுவும் கிடைத்து விடாத கையறு நிலையில் இலங்கைத்தீவின் இரண்டாம் தரப் பிரஜைகளாக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பொன்றிற்கு உட்படுத்தப்பட்டு தான் வாழும் தன் மரபுசார் நிலத்தில் மெல்ல மெல்ல இல்லாமல் போய்க் கொண்டிருக்கின்ற அபாய நிலையின் விளிம்பில் தமிழினம் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. நிரந்தரமான, காத்திரமான அரசியல் தீர்வொன்று வழங்கப்பட்டாலன்றி இலங்கைத்தீவில் தமிழர்களின் இருப்பு வரிதாக்கப்பட்டு விடும் என்பது அரசியல் பொது .வெளியில் அனைவராலும் உணரப்பட்ட போதிலும் ஒரு தீர்வுத்திட்டம் தொடர்பில் போர் ஓய்ந்து போன கடந்த ஒரு தசாப்தம் ஆறப்போடல்கள், இளுத்தடிப்புக்கள் உடன் கடந்து போயிற்று. எனவே தமிழர்களாகிய நாம் அனைவரும் தமிழினம் வீழ்ந்து விடாது விழ விழ எழும் என்பதை சிங்கள பேரினவாத சக்திகளிற்கு உணர்த்தவும். தமிழ் இனத்தின் நிலையையும் கோரிக்கைகளையும் சர்வதேசத்திற்கு இடித்துரைக்கவும், அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழினம் இவ் எழுக தமிழில் ஒன்றுபட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

09 செப்டம்பர் 2019

யாழில் சஜித்தும் கூட்டமைப்பும் சந்திப்பு!

யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாசவுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, த.சித்தார்த்தன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் ஆகியோரும், சஜித் பிரேமதாசவுடன் அமைச்சர் எரான் விக்ரமரத்தினவும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பில் என்ன விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதென இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

13 ஆகஸ்ட் 2019

சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக இந்திய இணையத்தில் செய்தி!

இலங்கையில் அதிபர் தேர்தல் களை கட்டியுள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளார். இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். கோத்தபாய ராஜபக்சேவுக்கு அமெரிக்கா ஆதரவு தருவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கோத்தபாய ராஜபக்சேவை சந்திக்க இந்திய பிரதமர் மோடி மறுத்துவிட்டதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.மேலும் கோத்தபாய ராஜ்பக்சே அதிபரானால் நாடு அபிவிருத்தி அடையாது; நாசமாகிவிடும் என முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்சே குடும்பம் ஒரு கொலைகார கும்பல்; அவர்களை நான் ஒருபோதும் ஆதரிக்கப் போவது இல்லை என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.கோத்தபாயவை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச களமிறங்கக் கூடும் என கூறப்படுகிறது. நவம்பரில் நானே தேசத்தின் அதிபராவேன் என சஜித் பிரேமதாச கூறி வருகிறார். சிங்கள கட்சிகள் அதிபர் தேர்தலில் படுதீவிரமாக இருக்கும் நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவித்த பின்னர் நிலைப்பாட்டை அறிவிப்போம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.
பொதுவாக இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பது வழக்கம். அதனால் இம்முறையும் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இரா. சம்பந்தன் டெல்லி வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆகஸ்ட் 2019

அடுத்த ஜனாதிபதி ராஜபக்சக்கள் இல்லை-மங்கள!

கோத்தபாய 
கோத்தபாய ராஜபக்சவின் வெள்ளைவான் கொடுங்கோல் ஆட்சி மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை அணிதிரட்டப் போவதாக ஸ்ரீலங்காவின் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ச அறிவிக்கப்பட்ட பின்னர்“ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார். தனது பொறுப்புகளை கைவிட்டுவிட்டு நாட்டைவிட்டு ஒருபோதும் தப்பியோடாத வலுவான வேட்பாளரை நிறுத்தி ஐக்கிய தேசிய கட்சி கோத்தபாய ராஜபக்சவை தோற்கடிக்கும். இந்த தேசத்தின் அடுத்த ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவோ அல்லது வேறு எந்த ராஜபக்சவோயில்லை, இலங்கையின் அடுத்த ஜனாதிபதி பல பத்திரிகையாளர்களினதும் அப்பாவிகளினதும் குருதிகளை தனது கைகளில் கொண்டுள்ள குற்றவாளியில்லை . இலங்கையின் அடுத்த ஜனாதிபதி இலங்கையில் பிறந்தவராகவும் இந்தநாட்டிலிருந்து தப்பியோடி இன்னொரு நாட்டிற்கு விசுவாசம் வெளியிடாதவராகவும் காணப்படுவார் . இலங்கையின் அடுத்த ஜனாதிபதி ஜனநாயகம் என்ற தளத்திலிருந்து நீதித்துறை பொதுச்சேவை மற்றும் ஏனைய சுயாதீன கட்டமைப்புகளை பாதுகாப்பதற்கு உறுதிபூண்டவராகவும் ஐக்கிய தேசிய கட்சியினாலும் அதன் கூட்டணிகளாலும் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டவராகவும் காணப்படுவார் . மகிந்த ராஜபக்ச எதிர்கட்சியில் பதவி வகித்த கடந்த நான்குவருட காலப்பகுதியில் எந்த பாடத்தையும் கற்கவில்லை,அவர் தனது குடும்பத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கினார் என்பதை உணரவில்லை, தான் நாட்டை அதிகளவிற்கு பயமுறுத்தினேன் என்பதை உணரவில்லை, தான் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு அச்சுறுத்தினேன் என கவலையடையவில்லை. பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச் செய்யப்பட்டமை குறித்தும் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை குறித்தும் கீத் நொயார் தாக்கப்பட்டமை குறித்தும் மகிந்த ராஜபக்ச கவலைப்படவில்லை எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

09 ஆகஸ்ட் 2019

இரு பண மலைகளுக்கு மத்தியில் ஜொலித்த தீபலட்சுமி!

கூடுதல் வாக்கு அதிமுக, திமுக என்ற இரு பெரும் பண மலைகளுக்கு மத்தியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி ஒளிர் விட்டு ஜொலித்தபடி ஸ்டெடியாக வாக்குகளை பெற்றார்! ஒரு சுற்றில் அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம் முன்னிலை வகித்தார் என்றால், அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இதனால் எந்த ஒரு மனநிலைமைக்கும் நம்மால் உடனே வர முடியவில்லை. இதற்கு நடுவில் நாம் தமிழர் உள்ளே புகுந்து டஃப் கொடுத்து, அதிமுக, திமுகவுக்கு கொஞ்ச நேரம் அள்ளு கிளப்பியதுதான் சூப்பர்! அமமுக, மநீம போன்ற கட்சிகளே போட்டியிடாத நிலையில், இரு ஜாம்பவான்களுக்கு நடுவில் ஜிகுஜிகுவென ஒளிர்விட்டு ஜொலித்தார் தீபலட்சுமி. தீபலட்சுமி வேலூரில், அதிமுக, திமுக இரு கட்சிகளின் மீதும் பணப்புகார் போன முறையும் வந்தது, இந்த முறையும் வந்தது. ஆனால் வெறும் கொள்கைகளை வைத்து வாக்கு கேட்டு வந்தவர்கள் நாம் தமிழர் கட்சியினர்! அந்த வகையில் இப்போது இவர் தோற்று விட்டாலும், அதிமுக, திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு நாம் தமிழர் வளர்ந்துள்ளதைதான் இது நமக்கு காட்டியது. நாம் தமிழர் கட்சி திமுகவும் சரி, அதிமுகவும் சரி வாக்காளர்களுக்கு அள்ளி அள்ளி பணம் கொடுத்தன. அதை இரு கட்சிகளும் மறுக்க முடியாது. ஆனால் ஒரு பைசா கூட கொடுக்காமல் கால் கடுக்க நடந்து தொண்டை வறள கத்தி வாக்குகளை சேகரித்த கட்சி நாம் தமிழர் கட்சி. இன்று திமுக, அதிமுகவின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கக் கூடிய அளவுக்கு அக்கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளதை மறுக்க முடியாது. கூடுதல் வாக்கு திமுகவுக்கு நகர்ப்புற வாக்குகள் கை கொடுத்தது போல நாம் தமிழர் கட்சிக்கும் நகர்ப்புற வாக்குகள் கூடுதலாக கிடைத்தன. ஆரம்பத்திலிருந்தே மெதுவாக முன்னேறி வந்த நாம் தமிழர் கட்சி தற்போது நகர்ப்புற வாக்குகள் எண்ணப்படும் நிலையில் கூடுதல் வாக்குகளையும் பெற்றது. சீமான் அடிக்கடி கூட்டத்தில் பேசும்போது சீமான் சொல்லுவார், "நான் ஒருத்தன் தொண்டை தண்ணி வற்ற கத்திட்டு இருக்கேனே.. மக்கள் இதை எப்போதான் புரிஞ்சிப்பீங்க?" என்பார். அவர் பேசிய பேச்சுக்களும், ஒரு கட்சி விடாமல் எல்லாரையும் நாக்கை பிடுங்கி கொள்கிற மாதிரி கேள்வி கேட்டதும் வீண் போகவில்லை. கடின உழைப்பு இந்த வேலூர் தேர்தலில் நாம் தமிழர் தோற்று இருந்தாலும் சரி, சீமானின் மதிப்பு மேலும் உயர்ந்துதான் தென்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசியலில் 3-வது இடத்தை பிடித்துள்ள நாம் தமிழர் கட்சி தொடர்ந்து, பத்து பைசா தராமல், அதே இடத்தைதான் தற்போதும் தக்க வைத்துள்ளது என்பது ஊர்ஜிதமாகி உள்ள. இது அத்தனையும் சீமான் என்ற ஒற்றை மனிதனின் கடின முயற்சியே என்பதை தமிழக மக்கள் மறுக்கவே மாட்டார்கள்.

19 ஜூலை 2019

தமிழ் தேசிய மக்கள் முன்னணி அனந்தி சசிதரன் சந்திப்பு

வட மாகாண முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையிலான ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்திற்கும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கூட்டமைப்பிற்கு மாற்றாக வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வீ. விக்கினேஸ்வரன் தலைமையில் தமிழ்த் தேசியக் மக்கள் முன்னணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, அனந்தி சசிதரன் மற்றும் பொ. ஐங்கரநேசன் ஆகியோர் தலைமையிலான கட்சி அல்லது அமைப்புக்களும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்கவுள்ளதாக பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் முதலமைச்சரின் புதிய மாற்று அணியில் சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியை இணைத்துக் கொள்ளக் கூடாது என்றும், அந்தக் கட்சியை இணைத்துக் கொண்டால் தாம் அந்தக் கூட்டுக்கு வரப்போவதில்லை எனவும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது. இதனால் புதிய அணி அமைப்பது தொடர்பான பேச்சுக்கள் பெரும் இழுபறிகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலைமையிலையே சுயாட்சிக் கழகத்தின் அனந்தி சசிதரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் திடீரென நேற்று பேச்சுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய கூட்டு அமைப்பது தொடர்பான இந்தச் சந்திப்பானது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தலைமையிலான மாற்று அணி தொடர்பில் அல்லது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பேசப்பட்டிருக்கலாம் என இணையம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

07 ஜூலை 2019

புலிகள் மீதான தடையை நீக்குமாறு அமெரிக்காவிடம் கோரிக்கை!

அமெரிக்காவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்க வெளியுறவு விவகாரங்களுக்கான செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை முதல் முறையாக சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய சந்தர்ப்பத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க செனட் சபை உறுப்பினர்கள், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தனர். மாறிவரும் தேசிய மற்றும் சர்வதேச அரசியல் நிலைமாற்றங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அதிக கவனம் செலுத்தப்பட்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினருமான க.துளசி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.அத்துடன், இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம், இலங்கையின் தென் பகுதியில் அரசியல் காய்நகர்த்தல்கள், அரசியலமைப்பின் பொறிமுறை மற்றும் தமிழர்களுக்கான சாத்தியப்பாடான தீர்வுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.தமிழர்களுக்கான தீர்வு முயற்சிகள் தொடர்பாக அரசியலமைப்பு பொறிமுறைகளில் தமக்கு ஏற்பட்டிருக்கும் நம்பிக்கையீனங்கள் குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக க.துளசி குறிப்பிடுகின்றார். இந்தியாவின் தலையீட்டில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்ட ஏற்பாட்டு நடைமுறைகள் மற்றும் புரையோடிப் போயிருக்கின்ற தமிழர்களின் இனப் பிரச்சனைகளுக்கான தீர்வு ஆகியன குறித்தும் அமெரிக்க பிரதிநிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அமெரிக்காவின் நலன்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் ஒருபோதும் குறுக்கிடவில்லை என சுட்டிக்காட்டியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், இந்த விடயத்தை கருத்தில் கொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றி:பிபிசி தமிழ்

21 ஜூன் 2019

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை இராஜினாமா செய்ய அழைக்கிறார் அங்கஜன்!


நீண்ட காலமாக போராடி வரும் கல்முனை வாழ் தமிழ் மக்களுடன் கைகோர்த்து அவர்களுக்காக தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறியத் தயார் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக போராடி வரும் கல்முனை வாழ் தமிழ் மக்களுடன் கைகோர்த்து அவர்களுக்காக தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தூக்கியெறியத் தயார் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். பதவிகளை மக்கள் வழங்குவது அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவேயன்றி பிரச்சினை வரும் போது வீர வசனம் பேசி விட்டு அதன் சொகுசுகளை அனுபவிக்கவல்ல. கல்முனை வாழ் தமிழ் மக்களுக்காக எனக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இப்போதே தூக்கியெறிந்து செல்லத் தயார் என்ற போதிலும் தனியொருவருடைய இராஜினமா எந்தவொரு பாரிய தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை என்ற வரலாற்று பூர்வ யதார்த்தத்தை அறிந்துள்னேன். எனவேதான் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒட்டு மொத்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்வதன் ஊடாக கல்முனை மக்களின் நீண்ட நாள் கனவான நனவாக்க, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்ந்த முடியும். இந்த வரலாற்று திருப்புமுனையை யதார்த்தமாக்க வடக்கு கிழக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயார் என்றால் அவர்களுடன் இணைந்து தமது இராஜினாமா கடிதத்தினையும் தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்க தாம் முன்னிற்பதாக உறுதியளித்துள்ளார் எனவே தமிழர்களின் ஒருமித்த பலத்தினை முழுதேசத்திற்கும் எடுத்துக் காட்டி வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஜனநாயகப்போரின் முதல் அத்தியாத்தை எழுதுவதற்கு அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் கைகோர்க்க வேண்டும் என அவர் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன், தமிழ் மக்களின் இறைமைகளை தொடர்ந்தும் அடகு வைக்காமல் மக்களின் போராட்டங்களோடு ஒன்றிணைந்து வெற்றிபெற செய்ய தமிழர் பிரதிநிதிகள் இராஜினாமா கடிதத்தை வழங்க முன்வரவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார். தமிழ் அரசியல் தலைமைகளின் பிரிவினால் கடந்த காலங்களில் பல மக்கள் போராட்டங்களை வெற்றி பெறச்செய்ய முடியாமல் போன யதார்த்தத்தை உணர்ந்து இதனை சிறந்த தருணமாக எண்ணி மக்களின் சாத்வீக போராட்டத்திற்கு பலம் சேர்க்க அனைத்து தமிழ் அரசியல் தலைமைகளும் தம்முடைய இந்த தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என அங்கஜன் ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

16 ஜூன் 2019

கஜேந்திரகுமார் இணைந்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை-விக்கினேஸ்வரன்!

கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே நாங்களும் விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். க.மு.தர்மராஜாவின் நினைவஞ்சலிக் கூட்டம் கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவிக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார். 'எனக்கும் கஜேந்திரகுமாருக்கும் இடையில் முரண்பாடு வந்திருக்கும் இந்த நேரத்தில் அவர் இல்லாதது தம்பி கஜனுக்கு ஆறுதல் தான். கட்டாயம் நான் கூறுவதை ஏற்குமாறு கஜனை வற்புறுத்தி இருப்பார் தர்மராஜா அவர்கள்! காரணம் இன்றைய நிலை அப்படி என்பதை நண்பர் தர்மராஜா நன்றாக அறிந்திருந்தவர். வடகிழக்கை துண்டாட, படையினரை நிரந்தரமாக வட கிழக்கில் வைத்திருக்க, தமிழ் பேசும் மக்களை பயங்கரவாதிகள் என்று சித்திரிக்கத் தொடர்ந்து வந்த மத்திய அரசாங்கங்கள் யாவுமே நடவடிக்கைகள் எடுத்து வந்துள்ளதை அவர் அறிந்திருந்தார். கடந்த 30 வருடகால யுத்தத்தில் இழந்தவற்றை விடவும் வடகிழக்கில் எமது இருப்புக்கான அடிப்படைகளை வேகமாக நாங்கள் இன்று இழந்து கொண்டிருக்கின்றோம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எமது அரசியல், சமூக, பொருளாதார அபிலாஷைகளுக்கான அடித்தளங்கள் திட்டமிட்ட வகையில் சிதைக்கப்பட்டு வருவதை நன்கறிநதிருந்தார். காணிகள் பற்றிய சட்ட அறிவைக் கொண்டிருந்த அவர் நிலம் போனால் எமது அடிப்படை நிலையே போய்விடும் என்பதைப் பலதடவைகள் கூறியும் வந்துள்ளார். நிலைமை கட்டுமீறிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை தமது அந்திமகாலத்தில் கூறி அங்கலாய்த்துக் கொண்டிருந்தவர் நண்பர் தர்மராஜா அவர்கள். பலமுள்ள கொள்கைப் பற்றுள்ள தமிழ்த் தலைவர்கள் சேர வேண்டியதன் அவசியத்தை அவர் அறிந்திருந்த காரணத்தால் எனக்கு சார்பாக தம்பி கஜனிடம் சிபார்சு செய்திருப்பார் என்று கூறுகின்றேன். கொள்கைப் பற்றுள்ள தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் சேர்ந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தை நண்பர் தர்மராஜா அறிந்திருந்ததால் கஜனிடமும், கஜனின் தாயாரிடமும், அவர் கட்சி அங்கத்தவர்களிடமும் பேசி நிலைமையை புரிய வைக்கக் கூடிய ஒருவராகவே அவர் இருந்தார். கீரியும் பாம்புமாக இருந்த தமிழ்த் தலைவர்கள் முன்னர் தமிழ் மக்கள் நலம் கருதி ஒன்று சேர்த்ததை அவர் மறந்திருக்கவில்லை. அவரின் மறைவு என்னைப் பலம் இழக்கச் செய்து விட்டது என்று கூறலாம். கஜேந்திரகுமார் மீது அவருக்கு அலாதியான பாசமும் மரியாதையும் இருந்தது. ‘இந்தப் பிள்ளை நல்லதொரு சட்டவல்லுநர் வாழ்க்கையைத் தியாகம் செய்துவிட்டு அரசியலில் ஈடுபட்டுள்ளது. அவருக்கு என்னதான் இல்லை? ஏன் தான் கட்சி அரசியலுக்குள் சென்று சீரழிகின்றாரோ தெரியவில்லை’ என்று கூறுவார். கஜேந்திரகுமார் தனது தந்தை போல் பாட்டனார் போல சட்டத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் கஜனின் அரசியல் பிடிவாதம் அவருக்கு ஆத்திரத்தை ஊட்டவில்லை. பாசத்தையே கூட்டியது. தொடர்ந்து கஜேந்திரகுமார் அரசியலில் நன்றாகச் செய்ய வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். நாங்களும் கஜேந்திரகுமார் அரசியலில் நல்ல இடத்தைப் பெற வேண்டும் என்றே விரும்புகின்றோம். நாங்கள் சேர்ந்தால் எம்மால் சாதிக்க முடியாதது ஒன்றில்லை என்பது எமது கருத்து.” என்று கூறினார். இந்த நிகழ்வில் கஜேந்திரகுமாரும் பங்கேற்றிருந்தார்.

15 ஜூன் 2019

கஜேந்திரகுமாருடன் இணைந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்கிறார் நீதியரசர்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் சேர்ந்து செயற்படுவோம் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாக, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். ' திரும்பவும் அவர்களுடன் சேர்ந்து இணங்கிப் போவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது, எனவே, இதுபற்றி எதுவும் சொல்ல முடியவில்லை. எந்த இடத்திலும் எவரையும் நான் குற்றம் கூறுவதாக இல்லை. முஸ்லிம் மக்களிடம் இருந்து நாம் கற்க வேண்டியது பல இருக்கின்றன. அதில் அவர்கள் அனைவரும் கூட்டாக விலகிய ஒற்றுமையும் ஒன்று, தங்களுக்குள் ஏராளமான பிரச்சினைகள் இருந்தாலும் தங்கள் சமூகத்தை பாதிக்கின்ற விடயம் வருகின்ற போது அவர்கள் ஒன்று சேர்வார்கள். இது இங்கு மட்டும் அல்ல, உலகம் முழுக்க காணகூடியதாக இருக்கிறது. தமிழர்களிடையே வேறுவிதமான குணம் காணப்படுகிறது. நாங்கள் மட்டும்தான் விடயங்களை தெரிந்தவர்கள் என்ற வகையில் ஒவ்வொருவரும் நடக்க முற்படுவதனால்தான், எங்களிடையே ஒற்றுமை தடைப்பட்டு இருக்கிறது. எனவே முஸ்லிம்களின் இந்தச் சம்பவத்தை வைத்துக் கொண்டு தமிழர்கள் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும், என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

09 ஜூன் 2019

புளியங்கூடல் மகாமாரி அம்பாள் வருடாந்த மகோற்சவ பெருவிழா!

புளியங்கூடல் செருத்தனைப்பதி சிறீ இராஜ மகாமாரியம்மன் வருடாந்த பெரும் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை(14.06.2019)ஆரம்பமாகி தொடர்ந்து பதினெட்டுத் தினங்கள் சிறப்புற நடைபெற உள்ளது.15ம் திருவிழாவான (28.06.2019)வெள்ளிக்கிழமை சப்பரத் திருவிழாவும்,16ம் திருவிழாவான சனிக்கிழமை (29.06.2019) தேர்த் திருவிழாவும் இடம்பெறும்,ஞாயிற்றுக்கிழமை(30.06.2019)தீர்த்தோற்சவமும் திங்கட்கிழமை(01.07.2019)பூங்காவனத் திருவிழாவும் இடம்பெற்று வருடாந்த பெருவிழா இனிதே நிறைவு பெறும்.

26 மே 2019

பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரை?இந்துவாக நடித்த இஸ்லாமியர் கைது!

Bildergebnis für பஞ்சாமிர்தத்தில்திருகோணமலை மூதூர் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் தமிழர் என கூறி ஆலய குருக்களுக்கு உதவியாளராக இருந்த முஸ்லிம் நபர் ஒருவரை மூதூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்­த­நபர் ஆல­யத்­துக்கு வரும் பக்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களை கலந்து கொடுத்­தாரா? என்று பக்­தர்கள் எழுப்­பிய சந்­தே­கத்­தை­ய­டுத்து அது தொடர்பில் ஆலய நிர்­வா­ச­பை­யி­னரை அழைத்து நேற்று மூதூர் பொலிஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ளதாக தெரியவருகிறது. இச்சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, ஏறா­வூரைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது சொந்தப் பெயரை மறைத்து சிவா என்ற தமிழ் பெயரில் கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தின் பூச­க­ருக்கு உத­வி­ய­ளா­ராக கடந்த 02 வரு­டங்­க­ளாக பணி­யாற்றி வந்­துள்ளார். இவர் பூஜையின் போது பக்­தர்­க­ளுக்கு வழங்கும் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரை­களைக் கலந்து கொடுத்து வந்­துள்­ள­தாக பக்­தர்கள் சிலர் சந்­தே­கங்­களை எழுப்­பி­யுள்­ளனர். இந்­நி­லையில் குறித்த நபர் கடை­யொன்றில் கைய­டக்க தொலை­பே­சிக்­கான அட்­டை­களை திருடி சேரு­வில பகு­தியில் விற்ற போதே கைது­செய்­யப்­பட்­டுள்ளார். இவரை மூதூர் பொலிஸார் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­திய போது மேற்­படி நபர் தமிழர் அல்லர் என்றும் முஸ்லிம் எனவும் போலி­யான பெயரில் அங்கு பணிபுரிந்­த­து­வந்­ததும் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது. அது­மட்­டு­மின்றி இவரை புல­னாய்வு பிரி­வினர் தொடர்ந்து அவ­தா­னித்து வந்த நிலையில், இவர் ஏறா­வூ­ருக்கு தனது தாயாரின் வீட்­டுக்கு சென்று அங்­குள்ள பள்­ளிக்கு தொழ சென்ற வேளையில் இவர் முஸ்லிம் நபர் என்­பது ஊர்­ஜி­த­மா­கி­யுள்­ளது. இதற்­கி­டையில் இவர் பற்­றிய ஒரு தகவல் முகப்­புத்­தக நூலில் வெளி­வந்த போது தான் தமிழர் தான் முஸ்லிம் அல்ல என மறுத்­து­ரைத்து தன்­மீது பொறாமை உள்­ள­வர்­களே இந்த முக­நூலை வெளி­யிட்­டுள்­ளார்கள் என தெரி­வித்­துள்ளார். அது­மட்­டு­மன்றி தனியார் நிறு­வ­ன­மொன்றில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றி முஸ்லிம் பெண் ஒரு­வரை திரு­மணம் முடித்­த­தற்­கா­கவே தான் ஊரை விட்டு ஒதுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­வித்­துள்ளார். இவர் தொடர்­பான மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்­காக மூதூர் பொலிஸார் ஆலய குருக்­க­ளையும் பரி­பா­லன சபை­யி­ன­ரையும் நேற்று சனிக்­கி­ழமை அழைத்து விசா­ர­ணை­களை செய்­துள்­ளனர். இதே­வேளை கிளி­வெட்டி முத்­து­மா­ரி­யம்மன் ஆல­யத்தில் குருக்­க­ளாக பணி­யாற்றி வரும் குருக்­க­ளுக்கு உத­வி­யா­ள­ராக குறித்த நபர் சேர்ந்து கடந்த 02 வரு­டங்­க­ளாக இந்த ஆல­யத்தில் பணி­யாற்றி வந்­துள்­ள­தோடு மேற்­படி குருக்­க­ளி­ட­மி­ருந்தே குறிக்­கப்­பட்ட பணத்தை சம்­ப­ள­மாக பெற்று வந்­துள்ளார் எனவும் ஆலய நிர்­வாக சபை­யினர் தெரி­வித்­துள்­ளனர். இவர் பஞ்­சா­மிர்­தத்தில் கருத்­தடை மாத்­தி­ரையை கலந்து விநி­யோ­கித்­துள்­ளாரா என்­பது தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை பொலிஸார் மேற்­கொண்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இதே­வேளை மூதூர் பொலி­ஸாரால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்­டி­ருக்கும் சிவா, என்று அழைக்­கப்­படும் குறித்த நபரின் உண்­மை­யான பெயர் புஹாரி முக­மது லாபீர் கான் என்றும் இவர் ஏறா­வூரை பிறப்­பி­ட­மாகக் கொண்­ட­வ­ரென்றும் ஏலவே மூன்று திரு­ம­ணங்கள் செய்­துள்ளார் எனவும் தெரிய வரு­கி­றது. மூத்த மனைவி ஓட்­ட­மா­வடி மீரா­வோடைச் சேர்ந்த அபுல் ஹாசன் சுபா­ஹனி என்றும் இரண்­டா­வது மனைவி மட்­டக்­க­ளப்பு கர­டி­ய­னாற்றைச் சேர்ந்த நல்­ல­தம்பி சாந்­தி­யென்ற தமிழ் பெண் என்றும் மூன்­றா­வ­தாக திரு­மணம் செய்­தவர் கல்முனையைச் சேர்ந்த ஏ.ஜே.எப்.சப்னா என்றும் தெரிய வருகிறது. இவர் ஏலவே கற்பழிப்பு மற்றும் ஜீவனாம்சம் வழங்காமை ஆகிய குற்றச்செயல்கள் காரணமாக நீதிமன்ற வழக்குக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் என்றும் இவரது கையடக்க தொலைபேசியை பரிசீலித்த போது ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சில தகவல்கள் கண்டறியப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

25 மே 2019

கொள்கையோடு போராடிய புலிகளோடு குண்டுதாரிகளை ஒப்பிடவேண்டாம்-ரவூப் ஹக்கீம்!

Ähnliches Fotoவிடுதலைப் புலிகள் தம் இனத்தின் விடுதலைக்காக தெளிவான கொள்கையுடன் போராடினார்கள். அதனால் தமிழ் மக்களும் அவர்களுக்கு ஆதரவளித்தார்கள் என்று தெரிவித்துள்ளார் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம். “தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைக் குண்டுதாரிகளுக்கும் இடையில் துளியளவும் ஒற்றுமையில்லை. ஈஸ்டர் ஞாயிறு தற்கொலைதாரிகள், யாரோ ஒருவனின் தேவைக்காக கொள்கையே இல்லாமல் அப்பாவி மக்களைக் கொலை செய்துள்ளார்கள். இது சுத்தப் பைத்தியக்காரத்தனம். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தை இலங்கையில் எவரும் ஏற்கவே மாட்டார்கள். இந்தத் தீவிரவாத இயக்கம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்” என்றார்.

23 மே 2019

வாக்கு எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் நாம் தமிழர் கட்சி!

லோக்சபா தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளை வாங்கியுள்ளது பிரதான கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தமிழ்த் தேசிய அரசியலை முன்வைத்து நாம் தமிழர் கட்சியை சீமான் நடத்தி வருகிறார். பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பல நூறு கோடி ரூபாய் தேர்தலுக்கு செலவு செய்கின்றனர். சீமானின் வியூகம் ஆனால் எளிய வீட்டுப் பிள்ளைகளை தேர்தல் களத்தில் நிற்க வைத்து பிரசாரம் செய்தார் சீமான். அவரது அரசியலை பிரிவினைவாதம் என முத்திரை குத்தி ஒதுக்கி வைத்தன பிரதான கட்சிகள். அரசியல் கட்சிகள் அதிர்ச்சி இம்முறை லோக்சபா தேர்தலில் நாம் தமிழர் கட்சி பெற்று வரும் வாக்குகள் அந்த அரசியல் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல தொகுதிகளில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சி வந்துள்ளது. நாம் தமிழர் 3-வது இடம் குறிப்பாக தேர்தலில் தீர்மானிக்கும் சக்திகள் என பேசப்பட்ட தினகரனின் அமமுக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் ஆகியவற்றைவிட நாம் தமிழர் கட்சி கூடுதல் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. தமிழகத்தில் புதிய அரசியல் சக்தியாக சீமான் விஸ்வரூபமெடுத்து வருகிறார் என்பதையே இன்றைய வாக்கு நிலவரம் வெளிப்படுத்துகிறது. சீமானின் பொதுக்கூட்ட பேச்சு சீமான் பொதுக்கூட்டங்களில் பேசும் போது, நாங்களும் ஒருநாள் அதிகாரத்துக்கு வருவோம்.. அப்ப வேடிக்கையை பாருங்க என குறிப்பிடுவார். சீமானின் பேச்சை வேடிக்கையாக எடுத்துக் கொண்டவர்கள் இப்போது கதிகலங்கியிருப்பார்கள். கனவு மெய்ப்படுகிறது!

01 மே 2019

நாட்டில் சுபீட்ஷம் ஏற்பட மீண்டும் பிரபாகரன் வரவேண்டுமா என்கிறார் தேரர்!

Ähnliches Fotoதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா? கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா? என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். நான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன். அந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் பெற்றுள்ளேன். அதன்போது என்னை எவரும் விரல் நீட்டி பேசியதில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை. தற்போது உள்ள அரசியல் தலைமைகள், தமிழ் தலைமைகள் உள்ளிட்ட பலர் என்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். யுத்தக்காலத்தில் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 2000 சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவற்றை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பல முறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது தமிழ் மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் இது இனத்துவேசம் என என்மீது குற்றம் சுமத்தினர். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புனானை பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கான திறந்தவெளி பல்கலைக்கழகம் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் அமைக்கப்படுகின்றது. தமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ் மக்களுக்கு வழங்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எவ்வாறு அரசாங்கம் அனுமதி கொடுத்தது. தமிழர்களின் பிரதிநிதி என கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இதனை நிறுத்த முடியுமா? புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா? கிழக்கு பறிபோயிருக்குமா?எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் நிலவுவதற்கு எதிர்காலத்தில் பிரபாகரனே மீண்டும் வரவேண்டுமா என எண்ணத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

30 ஏப்ரல் 2019

யாழில் போராளிகளிடம் உதவி கோரியது படைத்தரப்பு

இலங்கைதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைத் தலைமையகத்தில் நடந்த இந்த சந்திப்பில் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து பிறகு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட போராளிகள் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் இலங்கை இராணுவத்தின் 512ஆவது படைபிரிவின் இராணுவ உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இச் சந்திப்பின் போது உரையாற்றிய 512 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மிலிந்த, "இன்றைய சூழ்நிலை காரணமாக நான் உங்களை சந்திப்பதற்காக அழைத்துள்ளேன். நீங்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நான் உங்களை அழைத்து சந்திக்க வேண்டிய தேவை இல்லை. எனினும் அண்மையில் நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல் தொடர்பில் சந்திக்கவேண்டியுள்ளது. குறிப்பாக நான் யாழ்ப்பாணத்திலுள்ள சர்வமத பிரதிநிதிகள்,வர்த்தக சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளேன். அதன் பின்னர் உங்களை அழைத்துள்ளேன். தற்போது நாட்டில் உள்ள நிலைமை யாழ்ப்பாணத்திலும் இடம்பெறாமல் இருக்க வேண்டுமென்பதே எனது நோக்கம். எனவே யாழ்ப்பாண மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவருக்கும் உள்ளது" என்று தெரிவித்தார். "வெளி மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு வருவோர் தொடர்பில் அவதானமாக இருந்தால் கொழும்பில் நடந்த தாக்குதல் போல் யாழ்ப்பாணத்தில் இடம் பெறாமல் தடுக்க முடியும். எனவே வெளி மாவட்டத்திலிருந்து வருவோர் தொடர்பில் எமக்கு தகவல் தருவதன் மூலம் அனைத்து குற்றச் செயல்களையும் இல்லாதொழிக்க முடியும்" என்றும் அவர் தெரிவித்தார். இதன் போது கருத்துத் தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் "நாங்களும் மக்களுக்காகத்தான் போராடினோம் எச் சந்தர்ப்பத்திலும் மக்களைக் கொலை செய்ய நாம் முயற்சித்திருக்கவில்லை" எனவும் தெரிவித்திருந்தனர். இதேவேளை இச் சந்திப்பு தொடர்பில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடக பேச்சாளர் துளசி பிபிசி தமிழிடம் தெரிவிக்கையில், நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் முன்னாள் போராளிகளை இணைத்துகொள்வது, அது தொடர்பில் துப்புகளை வழங்குவதற்கு போராளிகள் நாங்கள் தாயாரில்லை. ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்பது இராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளோடு சம்பந்தப்பட்ட விடயம். எங்களை குற்றவாளிகளாக நினைத்து நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு புனர்வாழ்வுக்குட்படுத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பின்னர் நாங்கள் தற்பொழுது சமூகமயப்படுதப்பட்டுள்ளோம். நாங்கள் தற்பொழுது சாதாரண வாழ்கையையே வாழ்ந்து வருகின்றோம்.தீவிரவாத அச்சுறுத்தலிலிருந்து நாட்டினை பாதுகாத்து கொள்ளும் பொறுப்பு இலங்கை அரசாங்கம் மற்றும் அவற்றின் பாதுகாப்பு படையிடமே உள்ளது. இதனை அவர்கள் முன்னாள் போராளிகளிடமிருந்து எதிர்பார்க்க முடியாது. இலங்கை இராணுவம் நாட்டினை பாதுகாக்கின்ற வேலையை செய்தால் நல்லது. அரசியல் செய்கின்ற வேலையை நிறுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார்.

நன்றி:பிபிசி தமிழ்

27 ஏப்ரல் 2019

சாய்ந்தமருதில் 15 உடல்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது!

வீடுஇலங்கை சாய்ந்தமருதுவில் நேற்று இரவு நிகழ்ந்த வெடிப்பு சம்பவத்தில் 15 சடலங்களை கண்டெடுத்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதில் ஆறு சடலங்கள் தற்கொலை குண்டுதாரிகளின் உடல்களாக இருக்கலாம் என்று போலிஸார் சந்தேகிக்கின்றனர். தெமடகொடவில் நடந்தது போல, பாதுகாப்பு பிரிவினர் இவர்களது இடத்தினுள் நுழைய முயன்றபோது, குண்டை வெடிக்க வைத்து தங்கள் குடும்பத்தினரோடு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. நேற்று, சந்தேக நபர் ஒருவரை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில், அவர் குண்டொன்றை வெடிக்கச் செய்து கொண்டதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.இந்த சந்தர்ப்பத்தில் மூன்று வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியதாகவும் பாதுகாப்பு பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அம்பாறை மாவட்டத்தில் கல்முனை போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் பாதுகாப்பு பிரிவின் மீது சில தரப்பினரால் நேற்று இரவு துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்பு பிரிவினரும் பதில் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. கல்முனை, சாய்ந்தமருது மற்றும் சவலக்கடை பகுதிகளில் போலீஸ் ஊரடங்கு நிலைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேர சோதனைகளில் மேலும் 20 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாய்ந்தமருது மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் தற்போது பாரிய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக போலீஸார் குறிப்பிடுகின்றனர். இந்நிலையில், வெடி சம்பவம் மற்றும் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்த இடத்துக்கு அருகே வசித்து வந்த மக்கள், தங்களது வீடுகளை விட்டு வெளியேறி அருகில் உள்ள பள்ளி ஒன்றில் தஞ்சம் அடைந்துள்ளனர். தற்போது அப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளனர். சாய்ந்தமருது பிரதேசத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அந்த மருத்துவமனை தரப்பில் உறுதிப்படுத்தியுள்ளனர்.இலங்கை முழுவதும் ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெறும் பிரார்த்தனைகள், மறு உத்தரவு வரும்வரை ரத்து செய்யப்படுவதாக கத்தோலிக்க தேவாலயம் அறிவித்துள்ளது. கொழும்புவின் பேராயர் மால்கோம் ரஞ்சித் கூறுகையில், மேலும் தாக்குதல் நடைபெறலாம் என்று எச்சரிக்கும் சில கசியவிடப்பட்ட ஆவணங்களை பார்த்ததாக தெரிவித்தார். தாக்குதல்கள் குறித்து முன்னரே எச்சரிக்காத அரசாங்கம், தங்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக நினைப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது, பெருந்தொகையான ஆயுதங்கள், வெடிப் பொருட்களை தயாரிக்கும் வேதிப்பொருட்கள், வயர்கள், சுலோகங்களுடனான கொடிகளும் மீட்கப்பட்டுள்ளன. சம்மாந்துறையிலுள்ள செந்நெல் கிராமம் எனும் பகுதிலுள்ள வீடொன்றிலிருந்தே, இந்தப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சம்மாந்துறை போலீஸார் தெரிவித்தனர். சோதனை நடவடிக்கைகளின்போது ஐஎஸ் சின்னத்துடனான கறுப்பு திரை மற்றும் கறுப்பு உடை உள்ளிட்ட பல பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவர், வீட்டை வாடகைக்குப் பெற்றிருந்ததாகவும் போலீஸார் கூறினர். ஐ.எஸ் அமைப்பினரின் கொடியும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளது. கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள சஹ்ரான் என்பவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி:பிபிசி தமிழ்

21 ஏப்ரல் 2019

கொழும்பு உட்பட பல இடங்களில் குண்டுகள் வெடிப்பு பலர் பலி!

இலங்கையில் தேவாலயத்தில் குண்டுவெடிப்புஇலங்கை தலைநகர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் ஞாயிறு காலை ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதுவரை இதில் 24 பேர் உயிரிழந்திருப்பதாக கொழும்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு, ஷாங்ரி லா நட்சத்திர விடுதி, கிங்ஸ்பரி நட்சத்திர விடுதி, சின்னமான் கிராண்ட் நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்திருப்பது தற்போதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.கொழும்பு கொச்சிக்கடையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலரும் காயமடைந்துள்ளனர். இதுவரை குறைந்தது 80 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஒருவர் தெரிவித்தார் என்று ஏஎப்பி செய்தி முகமை கூறுகிறது. காயமடைந்த பலரும் மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். ஈஸ்டர் பண்டிகையை ஒட்டி தேவாலயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர்.இந்த குண்டு வெடிப்பில் தேவாலயத்தின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளது. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் சம்பவ இடங்களில் மீட்பு மற்றும் உதவிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அதே போல குண்டு செயலிழக்கும் பிரிவினர் மற்றும் விசேஷ அதிரடிப்படையினர் உள்ளிட்ட சில பாதுகாப்பு பிரிவுகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர்.இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு யாரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. இதில் சில வெளிநாட்டவர்களும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கொழும்புவில் உள்ள இந்திய உயர் ஆணையருடன் தொடர்பில் இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்வீட் செய்துள்ளார்.

நன்றி:பிபிசி தமிழ்

18 ஏப்ரல் 2019

விக்கினேஸ்வரன் பொய்யுரைக்கிறார்-கஜேந்திரன்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சீனத் தூதுவரை நள்ளிரவில் சந்தித்தனர் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட கருத்து உண்மைக்குப் புறம்பானது என்று அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சீனத் தரப்பினரை இரகசியமாகச் சந்தித்தது என உண்மைக்குப் புறம்பான பொய்க் கருத்தொன்றைக் கூறியிருக்கின்றார் விக்கி.அது தொடர்பாக எங்களது ஆழ்ந்த கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறோம். விக்னேஸ்வரன் ஐயா வயதில் மூத்த ஒருவர். 40 ஆண்டு காலத்துக்கு மேலாக நீதித்துறையில் இருந்திருக்கின்றார். அதனைவிட அவர் ஒரு ஆன்மீகவாதி. அவருடைய முகத்தில் திருநீறும் பொட்டும் எப்போதும் இருக்கும். ஆகையால் அப்படிப்பட்டவர்கள் ஒரு போதும் மனச்சாட்சிக்கு மாறாக பொய் சொல்ல மாட்டார்கள் என்பது தான் மக்களுடைய நம்பிக்கை.அப்படியிருக்கின்ற போது நாங்கள் சீனத் தூதுவரை இரவில் ஒளித்துச் சந்தித்திருக்கிறோம் என்ற சாரப்பட ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம். அப்படிச் சொல்லியிருப்பது ஒரு அப்பட்டமான பொய். ஏனெனில் அப்படியான ஒரு சம்பவம் நடைபெறவில்லை. விக்னேஸ்வரன் தான் கொண்டு செல்கின்ற பிழையான அரசியலை மக்கள் மட்டத்திலே நியாயப்படுத்துவதற்காக எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சொல்லிச் சேறு பூசுவதற்கு முயற்சிக்கின்ற நடவடிக்கைகளைக் கைவிடவேண்டும் என்று நான் மிகவும் வினயமாகக் கேட்டுக் கொள்கின்றேன். இந்தியாவின் எடுபிடிகளாக இருக்கின்ற சுரேஷ் பிரேமச்சந்திரனையும் அவரைப் போன்ற சிலரையும் ஒருங்கிணைத்துக் கொண்டு தமிழ்த் தேசிய அரசியலை ஒற்றையாட்சிக்குள் முடக்குகின்ற பாதைக்குள் கொண்டு செல்ல முற்படுகின்றாரா என்ற கேள்வியொன்று வலுவாக எழுந்து கொண்டிருக்கின்றது. அப்படிப்பட்ட இடத்தில் தனது அந்தப் போக்கை நியாயப்படுத்தவதற்கு தனக்குப் பக்கத்திலே சரியாகச் செயற்படுகின்ற தரப்பு இருந்தால் அது தனக்கு இடைஞ்சல் என்பதால், எங்கள் மீது ஒரு பொய்யான குற்றச்சாட்டைச் சொல்லி சேறு பூச முற்படுவதாகத் தான் நாங்கள் கருதுகின்றோம். இந்த பொய்யான பரப்புரைச் செயற்பாடுகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்.அவர் தன்னுடைய அரசியலுக்காக அந்தப் பொய்களைச் சொல்லப் போகின்றார் என்று சொன்னால் தயவு செய்து பொட்டு வைப்பதையும் திருநீறு பூசுவதையும் தவிர்த்து விட்டுச் சாக்கடை அரசியலில் தாராளமாகப் பொய்களைக் கூறிக்கொண்டு அரசியலைச் செய்யட்டும். எங்களைப் பொறுத்தவரை எந்தவொரு இராஜதந்திரியும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று கேட்டால் நாங்கள் அவர்களைச் சந்திப்போம்.எங்களுக்கு யாரைச் சந்திப்பதிலும் எந்தவிதமான தயக்கமும் இல்லை. பயமும் இல்லை. யாரைச் சந்தித்தாலும் அதனை வெளிப்படுத்துவதிலும் எங்களுக்கு எந்தவிதமான தயக்கங்களும் இல்லை. இதுவரை இந்தியத் தூதரகங்களையும் ஐரோப்பியத் தூதரகங்களையும் பல தடவைகள் சந்தித்திருக்கிறோம். ஆனால், இதுவரை சீனத் தூதுவர்களைச் சந்திக்கவில்லை. ஆயினும், எதிர்காலத்தில் அவர்களும் எங்களைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பிச் சந்திக்கக் கேட்டால் நிச்சயமாக நாங்கள் சந்திப்போம். ஆனால், சந்தித்துவிட்டு நாங்கள் அதனை ஒளித்து மறைக்கவேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. அதனை விக்னேஸ்வரன் ஐயா தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். இதுவரை அவரோடு நெருங்கிப் பழகிய அரசியல்வாதிகள் ஐந்து சதத்துக்கும் நேர்மையில்லாத அடிப்படைத் தார்மீக அறமற்றவர்களாக இருக்கலாம்.அவர்களை வைத்துக் கொண்டு நாங்களும் அப்படித்தான் என்ற எண்ணத்தோடு கருத்துக்களைக் கூறுவதை விக்னேஸ்வரன் ஐயா தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

16 ஏப்ரல் 2019

குப்பிளானில் மூவரை பலி எடுத்த மின்னல்!

யாழ்ப்பாணம்- குப்பிளானில இன்று பிற்பகல், மின்னல் தாக்கி தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்த சகோதரர்கள் இருவர் உள்ளிட்ட மூன்று பேர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று மதியத்துக்குப் பின்னர், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இதன்போதே சுன்னாகம் குப்பிளான்,மயிலங்காடு பகுதியில் மின்னல் தாக்கிய இந்தச் சம்பவம் இடம்பெற்றது. புகையிலைத் தோட்டத்தில் நான்கு பேர் வேலை செய்து கொண்டிருந்தனர். ஒருவர் மதிய உணவு எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். ஏனையோர் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்தது, இதனால், அவர்கள் அருகில் இருந்த தென்னை மரத்திற்கு கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டிலில் ஒதுங்கியுள்ளனர். இதன் போது இடி மின்னல் அந்தத் தென்னை மரத்தின் மீது விழுந்ததில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உணவு எடுக்கச் சென்றவர் திரும்பி வந்த போதே மூன்று பேரும் மின்னல் தாக்கி இறந்தமை தெரியவந்துள்ளது. சகோதரர்களான திருநாவுக்கரசு கண்ணன் (வயது- 48), கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

15 ஏப்ரல் 2019

வேலணையில் தங்கியிருந்த கனடா பிரஜை விபத்தில் மரணம்!

பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கனடாவில் இருந்து வந்த ஒருவர், சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். கனடா பிரஜாவுரிமை பெற்றவரான செல்லப்பா சுந்தரேஸ்வரன் (வயது 66) என்பவரே உயிரிழந்தவராவார்.குறித்த நபர் கடந்த மாதம் மனைவி பிள்ளைகளுடன் இலங்கை வந்து, வேலணையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். கடந்த 28 ஆம் திகதி விசுவமடுவில் உள்ள தனது காணியை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு திரும்பும் வழியில் பூநகரி பகுதியில் மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோர கால்வாய்க்குள் விழுந்து விபத்திற்குள்ளானது. இதில் குறித்த நபர் காயமடைந்தார்.குறித்த விபத்தில் படுகாயமடைந்தவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு பூநகரி வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

14 ஏப்ரல் 2019

வவுனியாவில் இன்றும் தொடர்ந்தது உறவுகளின் போராட்டம்!

புதுவருட தினமான இன்று, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். வவுனியா வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு முன்பாக 785 ஆவது நாளாக சுழற்சி முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் அவர்களது போராட்ட தளத்திற்கு முன்னால் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமிழ், சிங்கள புத்தாண்டை தமிழ், சிங்கள தலைவர்கள், அரசியல்வாதிகள் கொண்டாடி வருவதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எமது பிள்ளைகள் எம்மிடம் வராமையால் நாம் வீதியோரத்தில் எமது பிள்ளைகளுக்காக கண்ணீருடன் ஏங்கிக் கொண்டிருக்கின்றோம். அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் என்பன தலையிட்டே எமது பிள்ளைகளை மீட்டுத் தர முடியும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கொடிகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

02 ஏப்ரல் 2019

கலப்பு பொறிமுறை பற்றி பேசினால் விக்னேஸ்வரனை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம்!

சுமந்திரனுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் வித்தியாசம் இல்லை என்றும், கலப்பு விசாரணைப் பொறிமுறையை சி.வி.விக்னேஸ்வரன் தொடா்ந்தும் வலியுறுத்தினால், அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளா் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், எச்சரித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “ஸ்ரீலங்கா அரசு தொடா்புபடும் எந்தவொரு விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை தராது. கலப்பு பொறிமுறை என்றால் கூட அதில், இலங்கை அரசு தொடர்புபடும் என்பதனால் அந்த விசாரணைப் பொறிமுறையும் தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுத்தராது. அதனால் நாம் 2015 ஆம் ஆண்டிலிருந்தே சர்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் ஊடாக மேற்கொள்ளப்படல் வேண்டுமென வலியுறுத்தி வந்துள்ளோம். இந்நிலையில் நீதியரசர் சிவி.விக்னேஸ்வரன் கலப்புப் பொறிமுறை பற்றிய பேச்சை ஆரம்பித்துள்ளார். மேலும் அதனை அமைக்கலாமா? இல்லையா? என்ற விவாதத்தினுள் பொறுப்புக்கூறல் விவகாரத்தினை கொண்டுவர முயல்கின்றார். ஸ்ரீலங்கா அரசு சம்பந்தப்படும் கலப்பு பொறிமுறையை அவர் தொடர்ந்து வலியுறுத்துவாராக இருப்பின் அவரை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவோம் என்றார்.