பக்கங்கள்

06 பிப்ரவரி 2013

மண்டைதீவில் மணல் அகழ்வில் கடற்படை!

மண்டைதீவில் பாரிய கடற்படை முகாம் ஒன்று கடற்படையினரால் அமைக்கப்பட்டு வருகின்றது. இதற்காக கடற்படை ஓரமாக இரண்டு கிலோமீற்றர் தூரத்திற்கு கடற்படையினர் மணல் அகழ்வை மேற்கொண்டு வருகின்றனர். மண்டைதீவின் தெற்கு பிரதேசத்தில் இந்த மணல் அகழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தீவுப் பகுதியை அபிவிருத்தி செய்கின்றோமென்று தெரிவித்து தீவகத்தின் வளங்கள் தொடர்ச்சியாக சுரண்டப்பட்டு வருகின்றது. அப்பிரதேசத்தில் பொதுமக்கள் மண் அகழ்வதற்கு பிரதேச சபையும் பிரதேச செயலகமும் தடைவிதித்து வரும் நிலையில் கடற்படையினர் சுதந்திரமாக மணல் அகழ்வை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நடவடிக்கையை வடமாகாண ஆளுனரின் உத்தரவில் பிரதேச சபையும் பிரதேச செயலகமும் பாராமுகத்துடன் செயற்பட்டு வருகின்றன. மணலை அகழ்ந்து அமைக்கும் இந்த முகாம் அப்பகுதி மக்களுக்கு பல வகையிலும் அச்சுறுத்தலானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.