பக்கங்கள்

08 பிப்ரவரி 2013

அவர்களை எதிர்த்து அவர்களே போராட்டம் நடத்தி வருகிறார்கள்-திமுக குறித்து வைகோ‌ கருத்து

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் இந்திய வருகையை கண்டித்து திமுக போராட்டம் நடத்தி வருவது,அவர்களை எதிர்த்து அவர்களே போராட்டம் நடத்திக்கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். இலங்கை அதிபர் ராஜபக்சே,2 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற வைகோ உள்ளிட்ட அவரது கட்சியினர் கைது செய்யப்பட்டு பின் விடுதலையாயினர். இந்நிலையி்ல், டில்லியில் தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த வைகோவிடம், ராஜபக்சேவை கண்டித்து, சென்னையில் திமுக நடத்தும் போராட்டம் குறித்து கேட்டதற்கு, அவர்களை எதிர்த்து அவர்களே போராட்டம் நடத்தி வருகிறார்கள், ஏனெனில் அவர்கள் தானே குற்றவாளிகள் என்று வைகோ கூறினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து திமுக வெளியேறினால் அக்கட்சி பற்றி விமர்சிக்க மாட்டேன் என்று வைகோ கூறியதற்கு, தாங்கள் வெளியேறினால், அவர் உட்புகலாம் என்று நினைத்திருக்கிறாரோ என்று கருணாநிதி பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.