பக்கங்கள்

15 மார்ச் 2013

சசீந்தினியின் மரணமும் அதனால் எழுந்துள்ள குழப்பங்களும்!

புளியங்கூடலை சேர்ந்த திருநாவுக்கரசு தம்பதிகளின் மகள் சசீந்தினி அதே ஊரைச்சேர்ந்த திருஞானம் தம்பதிகளின் மகனான அருள்செல்வனை 2005ம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்.அருள்செல்வன் சுவிசில் வாழ்ந்து வருகின்றார்,சசீந்தினி தனது கணவரின் பெற்றோருடன் தமிழகத்தில் வாழ்ந்து வந்தார்.இந்நிலையில் கடந்தமாதம்(02.02.2013)சசீந்தினி மரணமடைந்தார்.
இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இணையங்களில் வெளி வந்த செய்தி புளியங்கூடல் மக்களிடையே சலசலப்பை உண்டு பண்ணியிருந்தது.இதை தொடர்ந்து முகநூல் ஊடாகவும் வாதப்பிரதி வாதங்கள் எழுந்ததினால் குழப்பம் அதிகரித்தது.இத்தகைய சூழ் நிலையில் இதற்கு பொறுப்புக்கூற வேண்டியவர் சசீந்தினியின் கணவர் அருள்செல்வனே என்பதால் புளியங்கூடல்.கொம் சார்பில் அவருடன் தொடர்புகளை ஏற்படுத்தினோம்.
இன்று உங்களுக்கு எதிராகவும் உங்கள் குடும்பத்தினருக்கு எதிராகவும் முன்வைக்கப்படும் கருத்துகள் குறித்து சொல்லமுடியுமா என கேட்டோம்.
சசீந்தினியின் பிரிவால் நான் மிகவும் மனமுடைந்து போயுள்ளேன்,இத்தகைய துயரமான சூழலில் மீண்டும் மீண்டும் வெந்த புண்ணில் வேல் பாச்சுவதுபோல் எம்மை சிலர் நோகடித்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்கள் உண்மையிலேயே சசீந்தினியின் மேல் உள்ள பாசத்தால் பேசுவதுபோல் தெரியவில்லை,எம்மீதுள்ள நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதே அவர்களின் நோக்கம் என்பது தெளிவாக புரிகிறது,சசீந்தினி எனது மனைவி,ஆகவே என்னை களங்கப்படுத்துவதும் சசீந்தினியை களங்கப் படுத்துவதும் ஒன்றெனவே நான் கருதுகிறேன்.எனது பெற்றோர் சசீந்தினியை கொடுமைப்படுத்தியதாக மனச்சாட்சியே இல்லாமல் அப்பட்டமான பொய்யை சொல்கிறார்கள்.சசீந்தினி இருக்கும்வரை அவர்களுக்கு நாங்கள் எல்லோரும் நல்லவர்களாக இருந்தோம்,இப்போ கெட்டவர்களாகி விட்டோம் என்றார் கடும் கோபத்துடன்.மேலும் தொடர்ந்து விபரித்தார் அவர்.
நானும் சசியும் இந்தியாவில் வாழ்வதென்றே தீர்மானித்திருந்தோம் அதனடிப்படையில் தான் நாம் வீட்டையும் சொந்தமாக வாங்கினோம்,சசீந்தினிக்கு குழந்தைகள் என்றால் கொள்ளைப்பிரியம்,அவர் புளியங்கூடலுக்கு சென்று வந்த பின்னர்தான் அந்த ஆசை மேலும் அதிகரித்தது.அவர் ஊரிலே உறவினர் ஒருவரின் குழந்தையை தூக்கியபோது நீ குழந்தையை தூக்கக்கூடாது என அவர்களால் தடுக்கப்பட்டிருக்கிறார்,மிகவும் மனம் உடைந்து போன சசி இதை எனக்கு சொல்லி அழுதார்,நானும் பிள்ளை ஒன்றை பெற்றெடுக்க வேண்டும் என ஆதங்கப்பட்டார்,எங்களால் பிள்ளையை பெற்றெடுக்க முடியாவிட்டால் ஒரு குழந்தையை தத்தெடுப்போம் என நான் கூறியபோதும் சசி அதை ஏற்கவில்லை.இதன் பின் நானும் சசியும் தமிழகத்தில் உள்ள சிறந்த மருத்துவர் ஒருவரை அணுகினோம்,அவர் எம் இருவரையும் பரிசோதித்து விட்டு எம்மிருவருக்கும் எந்தக் குறைபாடும் இல்லை என்றார்.பரிசோதனைக்குழாய் மூலம் குழந்தையை பெற்றெடுக்கலாம் என்றும் ஆலோசனை வழங்கினார்.அதன் பின் முழுக்க முழுக்க சசியின் விருப்பத்திற்கு இணங்கியே நானும் ஒப்புக்கொண்டேன்,ஆனால் இப்போ நாம் வலுக்கட்டாயமாக சசிக்கு இப்படி செய்தோம் என்று இணையங்களில் எழுதுவது எத்தகைய அநாகரிக செயற்பாடு என்பதை நீங்களே புரிந்திருப்பீர்கள் என்றார் அருள்.இன்று முக நூலில் எமது குடும்பத்தை ஒதுக்கி வைக்க வேண்டும் என்று எழுதுபவர்கள் உண்மையிலேயே மக்களால் ஒதுக்கப்பட்ட ஒரு சிலர்தான்.மற்றும் ஒருவர் எமது தந்தையுடன் ஊரில் சிறு பிரச்சனைப்பட்டவர்,இவர்கள் எல்லாம் பழைய பகையை தீர்த்துக்கொள்ள சசீந்தினியின் மரணத்தை கையிலெடுத்திருக்கிறார்கள் என்றும் அருள் குமுறினார்.இருந்தபோதும் எனது மாமனாரில் இருக்கும் மரியாதை துளி கூடக்குறையவில்லை என்றும்,அவருடன் எமது குடும்பத்தார் தொடர்பு கொள்ள முயன்றபோதும் அவரிடம் தொலைபேசி கொடுக்கப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.சசியின் உடலை அவர்களிடம் கொடுப்பதில்லை என்றே முதலில் முடிவு செய்திருந்தேன்,பின்னர் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து யோசித்தபோது பெற்றவர்களின் வலி எனக்கு புரிந்தது,முழுக்க முழுக்க திருநா மாமாவிற்காகவே சசியின் உடலை ஒப்படைக்க இணங்கினேன் என்றும் அருள் சொன்னார்.இந்தியா வந்திருந்த சசியின் சகோதரி எனது தாயாரை கட்டி அழுதபோது எப்படியெல்லாம் சசியை அழகா பார்த்தீங்களே மாமி,இப்ப இப்படி எல்லோரையும் விட்டிற்று போய்ற்றாளே என்று சொல்லி அழுது விட்டு இப்போ கதையை மாற்றி விட்டதாவும் அவர் கலங்கினார்.நான் குற்றவாளி என்றால் எனக்கெதிராக அவர்கள் வழக்கு தாக்கல் செய்யட்டும்,நான் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராக தயாராக இருக்கிறேன்.பொய் சொல்லி வாழ்வதோ அல்லது அடுத்தவருக்கு துரோகம் செய்து வாழ்வதோ எனது பழக்கம் கிடையாது.நான் ஒரு நல்ல தாய் தந்தைக்கு பிள்ளையாக பிறந்தவன்,இன்று எனக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தினால் கூட பொறுத்துக்கொள்ளலாம் ஆனால் என்னை பெற்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் துன்பப்படுவதுதான் சகிக்க முடியவில்லை.நான் வெள்ளைக்காரியை திருமணம் செய்துள்ளதாக கூறுபவர்கள் அதை நிரூபிக்கட்டும்,நான் சுவிசில் திருமணம் செய்யவில்லை என்பதற்கான சான்றிதழை இங்கே எடுத்து வைத்திருக்கிறேன்.என் மீதும் என் குடும்பத்தார் மீதும் அபாண்டமாக குற்றம் சுமத்துவோர் மீது எத்தகைய  நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பில் சட்டவாளர்களுடன்  கூடி ஆலோசனை நடத்தி வருகிறேன் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.எங்கள் தொலைபேசி இலக்கங்களை பகிரங்கப்படுத்தி கேள்வி கேட்க சொல்பவர்கள் ஏன் தமது தொலைபேசி இலக்கங்களை வெளியிடுவதில்லை?உண்மையை அறிந்து கொள்ள விரும்பும் நீங்கள் இரு பகுதியினரையும் அல்லவா விசாரிக்க வேண்டும் என்று கேள்விக் கணையையும் தொடுத்தார் அருள்.அவரது கேள்வியில் நியாயம் இருப்பதாகவே பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.