பக்கங்கள்

21 மார்ச் 2013

காக்கிகளின் நக்கல்:போராடும் மாணவர்கள் கொந்தளிப்பு!

சேலம் பழைய பேருந்து நிலையம் எதிரேயே உள்ளது சேலம் மத்திய தபால் நிலையம் .இங்கே குவிந்த இந்திய மாணவர் சங்கத்தின் மாணவர்கள் ரோட்டிலேயே அமர்ந்தனர். அரசு கலை கல்லூரி மாணவர் பகத்சிங் தலைமையில் திரண்ட மாணவர்கள் 'எங்கள் ரத்தம் தமிழ் ரத்தம் ஈழ ரத்தம் எங்கள் சொந்தம்' 'ராஜபக்சேவை போர் குற்றவாளியாக அறிவி' என முழங்கினர்...அருகேயே இருந்த சேலம் டவுன் காவல்நிலைய உடனடியாக அங்கே குவிந்தனர். 'வயசு பசங்க காலேஜ கட் அடிச்சமா,சினிமா,பார்டின்னு போனமான்னு இல்லாம இங்க வந்து போராடிகிட்டு என்ன பசங்க நீங்க' என சில காக்கிகள் அசால்ட்டாக பேச கொந்தளித்துவிட்டனர் மாணவர்கள். ஆய்வாளர் சூரியமூர்த்தி போராடிய மாணவர்களை பார்த்து 'அனுமதி வாங்காம செய்றீங்க இது அபன்ஸ்' என்க 'நாங்க முறைப்படி அனுமதி கேட்டோம் நீங்க தரல அதான் நாங்களா போராட உட்கார்ந்துட்டோம். எங்கள் ரத்த உறவுகள் அங்கே துடித்து கொண்டு இருக்கிறார்கள் இந்த முறையும் அவர்களை கைவிட்டால் எங்கள் மனசாட்சியே எங்களை அணுஅணுவாய் கொன்றுவிடும் எனவே நாங்கள் ஓயமாட்டோம்' என எழுச்சியாக பேச, அந்த சாலையை கடந்தவர்கள் நின்று மாணவர்களுக்கு ஆதரவாக 'ஏம்பா இந்த வேகாத வெயில்ல அவங்க போராடுறத பார்த்து நாமெல்லாம் சந்தோசபடனும் அதவிட்டுட்டு இப்படி இழுத்துட்டு போக கூடாது' என காவல்துரையிடமே துணிச்சலாக பேசினர். ஒரு பெரியவர் 'ஏப்பா உடனே பத்ரிக்கைகாரங்கள கூப்பிடுங்க இந்த பசங்கள ஏதாவது பண்ணிட போறாங்க நம்மளால முடில அந்த பசங்களாவது செய்யட்டும் ஆனா பத்ரமா இருந்தா தான் எதையும் செய்ய முடியும்' என்றார் அன்போடு.... மாணவர்கள் போராட்டம் அனைத்துதரப்பட்ட மக்களின் ஆதரவோடு வீரியமாக பரவி செல்கிறது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.