பக்கங்கள்

19 மார்ச் 2013

அமெரிக்கப் பிரேரணை தமிழர்களுக்கு ஏமாற்றம்!

US-SL-train-2சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள பிரேரணையின் திருத்தப்பட்ட இறுதி வரைவு தீர்மானம் ஐ.நா. மனித உரிமை கூட்டத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நான்காவது முறையாகவும் திருத்தப்பட்ட தீர்மானம், வலுவிழந்த நிலையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழின உணர்வாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த தீர்மானத்தில், தமிழர்கள் வாழும் பகுதியில் இராணுவத்தினரை உடனே அகற்ற வேண்டும், போரின் போது தமிழர்கள் பலர் காணாமல் போனது கவலை அளிக்கிறது. போர்க்குற்றம் ‌தொடர்பாக சிறிலங்கா அரசே விசாரணை நடத்த வேண்டும். எல்.எல்.ஆர்.சி. பரிந்துரைகளை முழுமையாக நிறைவேற்றும் திட்டம் இலங்கைக்கு இல்லை. தமிழர்களுக்கு வாழ்வாதாரம், நீதி ,நல்லிணக்கம் முழுமையாக செயல்படவில்லை. மக்கள் நலன் சார்ந்த அமைப்புகளை சிறிலங்கா அரசு வலுப்படுத்த வலியுறுத்தப்படும் என அந்த வரைவுத் தீர்மானத்தில் பல்வேறு விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதேவேளை சிறிலங்காவில் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற இனப் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு சர்வதேச அமைப்புக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், சர்வதேச விசாரணை என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சிறிலங்காவுக்கு எதிராக சர்வதேச விசாரணை அவசியம், தனி தமிழினதிற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து தழிழகம் முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ள இந்த நிலையில் அமெரிக்காவின் முடிவு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.