பக்கங்கள்

01 மார்ச் 2013

ஐ.நா உரிய முறையில் கடமையாற்றவில்லை– நவனீதம்பிள்ளை

இலங்கை விவகாரகத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் கடமையாற்றத் தவறியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். குறிப்பாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்களை பாதுகாக்கும் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பங்களிப்பானது திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நவனீதம்பிள்ளை 2012ம் ஆண்டுக்கான அறிக்கையையும் சமர்ப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஐக்கிய நாடுகள் அமைப்பு உரிய முறையில் கடமையாற்றவில்லை என்ற குற்றச்சாட்டு, ஓர் எச்சரிக்கை சமிக்ஞையாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்ட மீளாய்வு அறிக்கையில், ஐக்கிய நாடுகள் அமைப்பு கடமை தவறியதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.