பக்கங்கள்

24 மார்ச் 2013

களமுனையில் நின்ற ஊடகவியலாளரே படங்களை விற்றுள்ளார்;அரசாங்கம் தகவல்

ed95e4480c316e2e75b570bda55aee36[1]ஊடகவியலாளர் ஒருவர் டொலர்களுக்கு ஆசைப்பட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டார் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் குருநாகலில் இடம்பெற்ற இராணுவ நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்டத்தில் நடைபெற்றதான மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பிலான புகைப்படங்கள் பல திடுக்கிடும் வகையில் வெளிவந்துள்ளன. இதனால் இலங்கைக்கு சர்வதேச நாடுகளினால் அழுத்தங்கள் பாரிய அளவில் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி களமுனைப் படங்களை வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களுக்கு வழங்கியவரைத் தாம் கண்டறிந்துள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய சிங்கள ஊடகம் ஒன்றைச் சேர்ந்த இவர், 2009ஆம் ஆண்டு மே மாதம் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற அனைத்து போர் நடவடிக்கைகளின் போதும் தொலைக்காட்சி ஒன்றின் சார்பில் முன்னரங்கப் பகுதியில் பணியாற்றியிருந்தார். எனினும் யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் இவர் இலங்கையில் இருந்து வெளியேறி, தற்போது தனது குடும்பத்துடன் மேற்குநாடு ஒன்றில் வசித்து வருகின்றார். இதேவேளை, குறித்த நபர் டொலர்களுக்கு ஆசைப்பட்டு புலம் பெயர் நாட்டில் உள்ள புலிகளிடம் நாட்டை காட்டிக் கொடுத்துள்ளார். இருப்பினும் இவரது கடந்த கால நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.