பக்கங்கள்

15 மார்ச் 2013

பாலச்சந்திரன் ஆவி…. உங்களை மன்னிக்காதுடா பாவி: டி.ராஜேந்தர்

 T Rajendhar Slams Sl Govt Centre The Killings Of Tamils இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் வலியுறுத்தினார். இலங்கை அரசை கண்டித்து லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் தலைமையில் வள்ளுவர் கோட்டம் அருகே இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது பேசிய டி. ராஜேந்தர், பாலசந்திரனை கொன்னீங்களடா பாவி; உங்க பாவங்களை மன்னிக்காதுடா ஆவி!, ராஜபக்சே நீ செய்த பாவமெல்லாம் நிக்குதய்யா லைனா; உன்ன தண்டிக்காம விடாது ஐநா!. இந்திய அரசே இலங்கைக்கு வால் பிடிக்காதே!, நம்மளவன் நடிக்கிறான்; அதான் சிங்களவன் அடிக்கிறான்! தமிழினமே தூங்காதே; ஈழத்தமிழர் இதயம் தாங்காதே! இரக்கமில்லா காங்கிரஸ் நெஞ்சம்; ஈழத்தமிழனுக்கு செஞ்சதடா வஞ்சம்! என்று முழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் டி. ராஜேந்தர் பேசியதாவது: ஈழத்தமிழர்களை கொன்று இலங்கையை ராஜபக்சே சுடுகாடு ஆக்கினார். அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி செம்மொழி மாநாடு நடத்தினார். இன்று ஆட்சியில் இல்லை, அதனால் டெசோ மாநாடு நடத்திக் கொண்டிருக்கிறார். ஆட்சியில் இருக்கும் போது அவர் ஒன்றும் செய்யவில்லை. எனவேதான் அனைவரும் அவரை இன்று சாடுகிறார்கள். ஈழப்போர் நடந்து கொண்டிருந்த போது மத்தியில் உங்கள் கட்சிக்கு அதிகாரம் தேவை என்று காங்கிரசுக்கு நமஸ்காரம் செய்து கொண்டிருந்தீர்கள். இன்று கண்கெட்ட பின், சூரிய நமஸ்காரம் செய்கிறீர்கள். காங்கிரஸை எதிர்த்து தி.மு.க.வை அண்ணா தொடங்கினார். அந்த எதிர்ப்பு இப்போது இல்லாமல் போனதால் தி.மு.க இன்று முடங்கி விட்டது. மக்களிடம் ஆதரவு இல்லாததால், டெசோ பந்த் பிசுபிசுத்து போனது. இலங்கையில் இப்போதுள்ள ஈழத்தமிழர்களையாவது காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு கருணாநிதி உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்க வேண்டும். இவ்வாறு டி.ராஜேந்தர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.