பக்கங்கள்

21 மார்ச் 2013

இலங்கை யுத்தம் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்!

இலங்கை யுத்தம் தொடர்பில் இந்திய உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்இலங்கை யுத்தம் தொடாபில் இந்திய உச்ச நீதிமன்றில் மலேஷிய சட்டத்தரணியொருவர் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இலங்கை யுத்தத்தின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.இந்த உயிரிழப்புக்களுக்கு இந்தியா உதவிகளை வழங்கியதாகவும், இது தொடர்பில் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்த வேண்டுமெனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.பொதுமக்கள் நல மனுவொன்றே இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட மலேசிய சட்டத்தரணி ஏ. கணேசலிங்கத்தின் சார்பில் மஹாரியா என் கோ என்ற சட்டத்தரணிகள் நிறுவனத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இரு நாடுகள் கூட்டாக இணைந்து யுத்தம் நடத்திய போது பாரியளவில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால் அது தொடர்பில் விசாரணை நடாத்தும் உரிமையும் அதிகாரமும் மத்திய புலனாய்வுப் பிரிவிற்கு காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட சுயாதீன நிபுணர் குழு அறிக்கையில் இலங்கை யுத்தத்தின் பாரியளவு பொதுமக்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.