பக்கங்கள்

06 மார்ச் 2013

கொழும்பில் இடம்பெற இருந்த போராட்டம் இடைநிறுத்தம்!

காணாமல் போனோர் மற்றும் தடுப்பில் உள்ளவர்களின் உறவினர்கள் பங்கேற்பில் கொழும்பில் இன்று (06) இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்ட பேரணி கைவிடப்பட்டுள்ளது. வட கிழக்கில் இருந்தும், நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்தும் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களது மற்றும் விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போர்களது குடும்ப உறுப்பினர்கள் இந்த பேரணி ஒன்றுகூடலில் கலந்துகொள்ளவிருந்தனர். இவர்கள் யாழ்பபாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கு வருவதற்கு நேற்று மாலை வவுனியாவில் கூடியவேளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இவர்களை தடுத்து நிறுத்தி வவுனியா நகரசபை மைதானத்தில் தடுத்து வைத்துள்ளனர். இதில் முதியவர்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் அடங்குவதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளருமாகிய மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் வவுனியா அரச அதிகாரி அலுவலகத்தில் மகஜர் ஒன்றை கையளிக்க தயாராகி வரும் நிலையில் வவுனியா நகரத்தில் ஆயுதம் ஏந்திய படையினர் மற்றும் நீர்த்தாரை வாகனங்களுடன் பொலிஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.