பக்கங்கள்

25 மார்ச் 2013

கள்ளனுக்கு நீதிபதி பதவியா- மன்னார் ஆயர்

கள்வனிடமே களவு தொடர்பில் விசாரணை நடாத்தக் கோருவது எந்த வகையில் நியாயமென மன்னார் மறைமாவட்ட பேராயர் ராயப்பு ஜோசப் ஆண்டகை கேள்வி எழுப்பியுள்ளார். ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால், வடக்கு மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்குக் கிழக்கில் காணப்படும் நிலைமைகள் குறித்து சர்வதேசத்திடம் எவ்வளவோ எடுத்துக் கூறியும், அனைத்துலக தலையீடு மிகவும் அவசியமானதொன்றாகக் காணப்படுவதாக விளக்கிக் கூறியும் அமெரிக்க தீர்மான வரைபில் இவை உள்ளடக்கப்படாமையானது, மிகுந்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாக ராயப்பு ஜோசப் ஆண்டகை கூறியுள்ளார். இதேவேளை, முதன் முதலாக உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான வலிகாமம் வடக்கு மயிலிட்டி பிரதேச மக்கள் இதுவரையில் மீளவும் குடியேறாத நிலையில் மீள்குடியேற்றம் குறித்து அமெரிக்காவின் தீர்மானத்தில் பாராட்டுதல் வெளியிடப்பட்டுள்ளமை வேதனை அளிப்பதாக வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் அருணாச்சலம் குணபாலசிங்கம் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.