பக்கங்கள்

22 மார்ச் 2013

இந்தியாவின் நடவடிக்கை அதிருப்தி என்கிறார் கோத்தபாய!

இந்தியாவின் நடவடிக்கை ஏமாற்றம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இந்தியா வெளியிட்ட அறிக்கை மற்றும் நடவடிக்கைகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகள் ஏமாற்றமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பட்டுள்ளார். சர்வதேச மனிதாபிமான நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இலங்கை அரசாங்கம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பிலான அறிக்கைகைய தயாரித்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.சர்வதேச மனிதாபிமான நிறுவனங்கள் இலங்கையின் நடவடிக்கையை வரவேற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.உள்நாட்டு அரசியல் அழுத்தம் காரணமாக மத்திய அரசாங்கம் சில தீர்மானங்களை எடுத்துள்ளமையை புரிந்து கொள்ள முடிவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க போதியளவு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அதனை இந்தியா ஏற்றுக் கொள்ளும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.