பக்கங்கள்

21 மார்ச் 2013

மகன் இல்லாமையினால் பெற்றோர், சகோதரிகள் கோப்பாய் பொலிஸாரால் கைது!

மகனை ஒப்படைக்கும் படி கூறி வீட்டுக்கு வந்த பொலிஸார் தேடி வந்த நபர் இல்லாத நிலையில் தந்தை, தாய் மற்றும் சகோதரிகளையும் கைது செய்து சென்ற சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு புன்னாலைக்கட்டுவன் பலாலி வீதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, பொறியியலாளர் ஒருவரின் வீட்டிற்கு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து வந்ததாக கூறி இரவு வந்தவர்கள் மகன் எங்கே என்று கேட்டுள்ளார்கள். தனது மகன் கொழும்பு சென்றுள்ளதாக தெரிவித்ததைத் தொடர்ந்து தாங்கள் அவரைக் கைது செய்ய வந்துள்ளதாக தெரிவித்தனர். அதனையடுத்து வீட்டில் பொலிஸாரை காவல் வைத்து விட்டு பொறுப்பதிகாரியாக வந்தவர் திரும்பிச் சென்றுள்ளார் மீண்டும் நள்ளிரவு வீடடுக்கு வந்த பொலிஸார் அவரது தந்தையான எஸ்.விநாயகமூர்த்தி வயது(62) கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார் மீண்டும் நேற்றுக் காலை வீட்டிற்க்கு வந்த பொலிஸார் தாயையும் சகோதரிகள் இருவரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றுள்ளார்கள். இவர் எதற்காக தேடப்படுகின்றார், அவரது குடும்பத்தினரது கைது தொடர்பில் காரணம் எதுவும் கூறப்படவில்லை. அத்துடன் சம்பவம் தொடர்பில் வெளியில் யாருக்கும் கூறக்கூடாது என்றும் அயலவர்களுக்கு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் விடுதலை செய்யப்படவில்லை என்பதுடன் கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்ட போதும் தகவல் எதுவும் அறியமுடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலதிக தகவல் எதனையும் அறியமுடியவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.