பக்கங்கள்

27 மார்ச் 2013

இன பேதத்தை தூண்டும் இலங்கைத் தூதரை கைது செய்-வைகோ

இந்தியாவுக்கு உள்ளே இனபேதத்தைத் தூண்டும் சிங்களத் தூதர் பிரசாத் கரியவாசத்தை,உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்! என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார். இலங்கையில் உள்ள 75 சதவிகித சிங்களவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று இந்தியாவிற்கான இலங்கைத்தூதர் பிரசாத் காரியவாஸம் பொய்யான பிரச்சாரம் செய்து வருகிறார். தனி ஈழம் கோரி தமிழ்நாட்டில் மாணவர்கள் போராடி வருவதற்கு ஆதரவாக வட மாநிலங்களிலும் மாணவர்கள் போரடி வருகின்றனர். இதனை முறியடிக்கும் விதமாகவும், இந்தியாவிற்குள் இன பேதத்தை தூண்டும் விதமாகவும் பிரசாத் கரியவாஸம் விஷமப் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனைத் தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கைத் தூதரை கைது செய்யவேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். வைகோ எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: இந்தியாவுக்கான இலங்கைத்தூதர் பிரசாத் கரியவாசம், தொடர்ந்து அத்துமீறிச் செயல்பட்டு வருகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, இப்போது, இந்தியாவுக்கு உள்ளே, தமிழர்களுக்கு எதிராக, இனபேதத்தைத் தூண்டும் வகையில், ஒரு கடிதத்தை எழுதி, மின் அஞ்சல் வழியாக, இந்திய ஊடகங்களுக்கு அனுப்பி உள்ளார். சிங்களர்கள், வட இந்தியர்களின் வழித்தோன்றல்கள்; எனவே, வட இந்திய மக்கள், பயங்கரவாதிகளான தமிழர்களை ஒடுக்கிய சிங்களர்களைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு உள்ளார். அவரது இந்தச் செயல், வரம்பு மீறியது. அண்மையில், இத்தாலியத் தூதருக்கு எதிராக உச்சநீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டது போல, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 (ஏ) ன்படி, பிரசாத் கரியவாசத்தை உடனே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டு உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.