பக்கங்கள்

18 மார்ச் 2013

யாழில் வெள்ளை தேள்!இந்தியப்படை கொண்டுவந்ததா?

இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் உயிரைக் கொல்லும் 'வெள்ளை தேள்கள்' எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. யாழ்ப்பாணத்துக்கு இந்திய அமைதிப் படை சென்ற காலத்தில்தான் இந்தியாவில் இருந்து இந்த வெள்ளை தேள்களும் கொண்டுவந்துவிடப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாணத்தில் எப்போதும் இல்லாத வகையில் வெள்ளை நிறத்திலான மிகவும் கொடிய விஷத்தைக் கொண்ட தேள்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த தேளினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால் இது எப்படி திடீரென வந்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிகமாக காணப்படக் கூடிய இந்த வெள்ளை தேள்களின் படையெடுப்பு குறித்து பல்வேறு கருத்துகள் வெளியாகி இருக்கின்றன. இலங்கையின் பேராதனைப் பல்கலைக் கழகப் பேராசிரியர் குலரத்ன கருத்து தெரிவிக்கையில், இந்திய அமைதி காக்கும் படையினர் இவற்றை கொண்டு வந்திருக்கலாம் எனக் கூறியிருப்பது சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது. மேலும் 1991-ஆம் ஆண்டு தான் முதல் முறையாக வெள்ளை தேள் கொட்டிய சம்பவம் யாழ்ப்பாணத்தில் பதிவானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்திய அமைதிப் படையினர் 'உயிரி ஆயுதமாக' வெள்ளைத் தேளை பயன்படுத்தினரா? என்ற சர்ச்சைக்கு இது விதை போட்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.