பக்கங்கள்

13 மார்ச் 2013

இலங்கைக்கு எதிராக மீண்டும் செய்தி வெளியிட்டது சனல் 4!

இலங்கையில் நடத்தப்பட உள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டை இரத்துச் செய்யும் நோக்கில், பிரித்தானியாவின் செனல் 4 தொலைக்காட்சி , இலங்கைக்கு எதிராக மற்றுமொரு குறுகிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் காரணமாக இப்படியான மாநாடு அங்கு நடத்தப்படக் கூடாது என அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பிரித்தானிய மகாராணி எலிசபெத் கலந்துகொள்வது நகைப்புக்குரியது எனவும் அதில் கூறப்பட்டது. இதனை தவிர பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர்களான டேவிட் மிலிபேண்ட், மெக்லம் ரிக்கின்ட் ஆகியோரின் கருத்துக்களும் செய்தியில் வெளியிடப்பட்டன. தனது தவறுகளை மறைக்க இலங்கைக்கு இந்த மாநாடு வாய்ப்பாக அமைந்து விடும் என மிலிபேண்ட் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.