பக்கங்கள்

06 மார்ச் 2013

வெனிசுலா அதிபர் ஹுயுகோ சாவேஸ் மரணம்!

venezulaபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் சவேஸ் இன்று காலையில் மரணமடைந்தார். புற்றுநோய் பாதிப்பிற்குள்ளான வெனிசுலா அதிபர் ஹுயுகோ சாவேஸூக்கு (வயது 58), கடந்த டிசம்பர் மாதம் கியூபாவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து நாடு திரும்பிய அவர் ஈர்‌‌னஸ்டோ கிராமத்தில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்‌ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலையில் மரணமடைந்தார். சாவேஸ் மரணமடைந்த செய்தியை துணை அதிபர் நிக்கோலஸ் அந்நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியின் மூலம் தெரிவித்தார். கடந்த 2011-ம் ஆண்டு ஜுன் மாதம் முதல் இதுவரை 4 முறை கியூபா சென்று புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தார். 14ஆண்டுகளாக வெனிசுலா நாட்டை ஆண்டு வந்த சாவேஸ் மறைவிற்கு தென்அமெரிக்க நாட்டு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். புரட்சியாளரான சாவேஸ் கடந்த 1971-ம் ஆண்டு ராணுவ வீரராக வாழ்க்கையை துவக்கினார். ஐக்கிய சோஷியலிஸ்ட் கட்சியின் தலைவரான இவர் 1999ம் ஆண்டு வெனிசுலா நாட்டின் அதிபராக பொறுப்பேற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.